Saturday, July 17, 2010

Serendipity...Mindvoice - என்னது? சொரண்டிட்டு போய்டாங்களா? ஐயோ.... யாரு? என்ன ஆச்சு?

அப்பாவி - ஆண்டவா... வர வர இந்த mindvoice தொல்லை ரெம்ப ஓவரா போய்டுச்சு... எந்த அளவுக்கு ஓவர்னா... நான் பதிவுக்கு டைட்டில் எழுதிட்டு மூச்சு விடறதுகுள்ள கமெண்ட் போடற அளவுக்கு ஓவரா போச்சு...

Mindvoice - கம் டு தி பாயிண்ட் அப்பாவி... சொரண்டிட்டு போய்டாங்கன்னு எதுக்கு சொன்ன?

அப்பாவி - அடக்கொடுமையே... அண்ணாமலை படத்துல ஜனகராஜ் சொன்ன "நாசமாநீபோனியா" மாதிரி இருக்கு உன்னோட ஒளறல்

Mindvoice - ஹி ஹி ஹி

அப்பாவி - போதும் போதும் ரெம்ப அசடு வழியுது... சரி சரி நான் என்னோட ப்ளாக் friends கூட நெறைய பேச வேண்டி இருக்கு... நீ மொதல்ல எடத்த காலி பண்ணு

Mindvoice - ப்ளீஸ் ப்ளீஸ், நானும் அப்படியே ஒரு ஓரமா மூலைல இருந்துக்கரனே..

அப்பாவி - மூலைல இருந்துக்கறேனுவ...அப்புறம் முந்திரி கொட்டை மாதிரி முன்னாடி முன்னாடி வந்து கமெண்ட் அடிப்ப... இருக்கற கொஞ்ச நஞ்ச இமேஜையும் காலி பண்ணுவ...

Mindvoice - இமேஜா... ஹையோ ஹையோ... உனக்கு எப்ப பாரு ஒரே ஜோக் தான்...

அப்பாவி - பாத்தியா ... இதை தான் சொன்னேன்... அதெல்லாம் சரி வராது... இப்ப நீ எடத்த காலி பண்ண போறியா இல்ல நான் இட்லி செய்யட்டுமா...

Mindvoice - (மின்னலென மறைகிறார்...)

அப்பாவி - அப்பாடா... தொலஞ்சது... சரி இனி மேட்டர்க்கு போவோம்

Serendipity னா அந்த ஞானசூனியம்  Mindvoice சொன்ன மாதிரி "சொரண்டிட்டு போய்டாங்களா" எல்லாம் இல்லிங்க

இந்த வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு மொதலே தெரியும்னாலும் சமீபத்துல ஆனந்தவிகடன்ல "ஹாய் மதன்" பகுதில இந்த வார்த்தைக்கு கவிதையா ஒரு விளக்கம் பாத்தப்ப அதை ஏன் ஒரு தொடர் பதிவா நான் ஆரம்பிக்கக்கூடாதுன்னு தோணுச்சு

உனக்கு மட்டும் ஏன் இப்படி விபரீதமா தோணுதுனெல்லாம் கேட்டா நான் அப்புறம் அழுதுடுவேன் ஆமா... ஹும்...

சரி, அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னனா...

Mindvoice - மக்களே, எல்லாரும் போயிட்டு நாளைக்கி வாங்க... இந்த பொண்ணு எப்படியும் இன்னிக்கி அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லாது... இப்படியே மொக்கை போட்டுட்டே தான் இருக்கும்...

அப்பாவி - நீ ஆரம்பிச்சு வெச்ச பதிவு தானே... அப்படி தன் இருக்கும்...

Mindvoice - நான் ஆரம்பிச்சதால தான் மொக்கையாச்சும் போடற... இல்லைனா ஹையோ ஹையோ...

அப்பாவி - இந்த பூரிக்கட்டை எங்க?

Mindvoice - ஐ... எனக்கு பூரி சுட்டு தர போறியா?

அப்பாவி - இல்ல... உன்னையே நாலு தட்டு தட்டி பூரி மாதிரி வீங்க வெக்கலாம்னு இருக்கேன்...

Mindvoice - மீ எஸ்கேப்... (இனி உங்கள இவ கிட்ட இருந்து அந்த ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது...ஹி ஹி ஹி)

அப்பாவி - அதை கண்டுக்காதீங்க... எங்க விட்டேன்? ஆங்.... அந்த வார்த்தைக்கு ஹாய் மதன் குடுத்து இருந்த அர்த்தம் என்னனா "எதிர்பாராமல் நிகழ்ந்த மகிழ்ச்சியான விபத்து"

சொல்றதுக்கே அழகா இருக்கு இல்லைங்களா... நான் சொன்ன மாதிரி அப்படியே கவிதை மாதிரி அழகான விளக்கம் தானே

சரி, விசியத்துக்கு போவோம்...

இப்போ... என்னோட வாழ்க்கைல "எதிர்பாராம நடந்த மகிழ்ச்சியான விபத்து" என்னனு சொல்றேன்

வேற என்னங்க? ப்ளாக் எழுத வந்தது தான்...நீங்க வேற ஏதோ சொல்வேன்னு நெனச்சீங்கன்னு எனக்கு தெரியும்... ஹா ஹா ஹா... நீங்க நெனைக்கறதயே நான் சொன்னா என்ன ஸ்வாரஷ்யம் இருக்கு...

எப்பவும் யாரும் எதிர்பாக்காதாதா சொல்றது செய்யறது தான் இந்த அப்பாவியோட trademark ... ஹி ஹி ஹி

ஒகே ஒகே டென்ஷன் ஆகாதீங்க...

இந்த ப்ளாக் எழுத வந்த விபத்து பத்தி சொல்லணும்னா.... இந்த சரித்திரம் பதிமூணாம் நூற்றாண்டுல எல்லாம் தொடங்கலைங்க... ஏன்னா என்னோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவோட கொள்ளுதாத்தாவே அப்போ பொறக்கல .... ஹி ஹி ஹி... வொய் டென்ஷன்... நோ டென்ஷன்...

enough மொக்கை... மீ going டு மேட்டர்...

2009 தொடக்கம் வரைக்கும் எனக்கு ப்ளாக்னா என்னனே தெரியாது (தெரியாமையே இருந்து இருக்கலாம்னு நீங்க பீல் பண்றது எனக்கு புரியுது... ஆனா விதி யார விட்டது...)

ஒரு நாள் நல்ல பேய் மழை அப்படினெல்லாம் ஆரம்பிக்கறதுக்கு இதென்ன terror ஸ்டோரியா?... நோ நோ... இது ஒரு தேவதை பத்தின கதை... ஹி ஹி... நான் தான் அது... ஒகே ஒகே... மீ ஸ்டாப் நௌ...

Casual ஆ ஒரு நாள் பொழுது போகாம.... ஒகே ஒகே ஒத்துக்கறேன் வெட்டியா இருந்தப்ப...  எதாச்சும் படிக்கலாம்னு கூகிள் ஆண்டவர் கிட்ட வேண்டிட்டு (தேடிட்டு) இருந்தப்ப ஒரு சூப்பர் ப்ளாக் லிங்க் கெடைச்சது...

அவங்களை உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கலாம்... அவங்க பேரு "இம்சை அரசி". பேரு பாத்ததும் செம catchy யா இருந்ததா... உள்ள போனேன்...

உண்மைய சொல்லணும்னா அது ப்ளாக்னு கூட எனக்கு தெரியாது... என்னமோ பத்திரிக்கை வெப்சைட்னு நெனச்சேன்...

தொடர்ந்து அவங்க பதிவுகள படிச்சுட்டு இருந்தேன். ரெம்ப நல்லா ஹாஸ்யமா இன்னும் பல விதமாவும் பதிவுகள் எழுதுவாங்க...

இதுல பெரிய கொடுமை என்னன்னா... அதுல கமெண்ட் போடறவங்களோட பேரை கிளிக் பண்ணினா அவங்க ப்ளாக்கு போலாம்னு கூட தெரியாதுங்கர அளவுக்கு நான் அப்பாவி

Mindvoice - அது அப்பாவிதனம் இல்ல கண்ணு... அறியாமை... மேல் மாடி காலிங்கறதை கூட எவ்ளோ அழகா சமாளிக்கறா பாருங்க...

அப்பாவி - Just ignore mindvoice ... இப்படி இம்சை அக்கா பதிவை மட்டும் படிச்சுட்டு சந்தோசமா இருந்த நேரத்துல... யாரு கண்ணு பட்டுச்சோ அவங்க பதிவு போடறதை ரெம்ப கொறச்சுட்டாங்க

Mindvoice - நீ படிக்க ஆரம்பிச்ச ராசி பாரேன்... ஹி ஹி ஹி

அப்பாவி - இட்லி தட்டு எங்க... இங்க தானே வெச்சேன்...

Mindvoice - (மறுபடியும் எஸ்கேப்...)

அப்பாவி - படிக்க பதிவு இல்லாம நொந்து போய் இருந்தப்ப தான் கமெண்ட்ல இருந்து மத்த ப்ளாக் லிங்க் புடிக்கலாம்ங்கறதை கண்டுபிடிச்சேன்... Necessity is the mother of invention னு சும்மாவா சொன்னாங்க...

Mindvoice (இனி கொஞ்ச நேரத்துக்கு அப்பாவிக்கு கேட்காத குரலில் ...) - என்ன கொடும சார் இது... என்னமோ தாமஸ் ஆல்வா எடிசன் ரேஞ்சுக்கு பேசறாளே...

அப்பாவி - அப்படியே மத்தவங்க ப்ளாக் எல்லாம் படிச்சுட்டு இருந்தப்ப ஒரு நாள்... ரங்க்ஸ்யுடைய friend ஒருத்தர் பொட்டி தட்டுறவர் தான்... அவர் கிட்ட இருந்து ரங்க்ஸ்க்கு ஒரு ஈமெயில் வந்தது

அதுல கவிதை எல்லாம் இருந்தது... எனக்கு இது எல்லாம் ரெம்ப பிடிக்கும்னு ரங்க்ஸ்க்கு தெரியும்... அதனால எனக்கு forward பண்ணினார்

"உங்க friend blogger ஆ?" னு ரங்க்ஸ் கிட்ட கேட்டேன்

"என்னது...?" னு வழக்கம் போல ஒரு indifferent லுக் குடுத்தார்

அப்புறம் நான் அவர்கிட்ட ப்ளாக் பத்தி எல்லாம் உப்பு புளி போட்டு விளக்கி சொன்னப்புறம் "நீயே ஏன் இப்படி ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது?" அப்படின்னு இதுக்கு வித்திட்டவர் சாட்சாத் ரங்க்ஸ் தான்...

Mindvoice - என்ன அழகா பழிய அவர் மேல போடறா பாருங்க... தக்குடு சொல்றாப்ல என்னா ஒரு வில்லத்தனம்? ஒரு வேளை இவ தொல்லை இல்லாம கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு அப்படி engage பண்ணி விட்டாரோ என்னமோ... மனுஷன் ரெம்ப வெவரம் தான் போல...

அப்பாவி - உடனே... நானும் பிளாக்கர் ஹெல்ப் எல்லாம் ஒரு நாள் பூரா படிச்சு ப்ளாக் ஆரம்பிச்சேன்...

ஆரம்பிச்சு... "எனது முதல் பதிவு..." னு ஒரு கவிதை மே 28 2009 அன்னிக்கி எழுதி கடைய தெறந்து வெச்சுட்டு ஈ ஓட்டிட்டு இருந்தேன்... யாருமே வர்ல... ஹும்... ஒரே பீலிங்ஆ போச்சு...

(தமிழ்மணம்) பட்டை கிராம்பு எல்லாம் சேக்கணும்னு அப்போ எனக்கு தெரியாது...

சரி... போ... நம்ம இலக்கிய சேவை இந்த உலகத்துக்கு வேணாம் போல, உருப்படியா வீட்டுல ரங்க்ஸ்க்கு எலுமிச்ச சேவையாச்சும் செய்வோம்னு போயிட்டேன்...

மறுபடியும் ஒரு அல்ப ஆசை...

டிசம்பர் 30 2009 "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்" னு ஒரு பதிவு... அதுக்கு ஈ மட்டுமில்ல கொசு கரப்பு எல்லாம் ஓட்டினது தான் மிச்சம்... ஒரு கமெண்ட் வர்ல... சீ சீ இந்த பழம் புளிக்கும்னு ஓடிட்டேன்...

ஆனாலும் என்ன காரணம்னு தெரிஞ்சுக்கணும்னு மத்த ப்ளாக் எல்லாம் போய் விடிய விடிய படிச்சேன் ...

Mindvoice - பத்தாங்க்ளாஸ் எக்ஸாம்க்கு கூட இப்படி படிச்சு இருக்க மாட்டான்னு நெனக்கறேன்...

அப்பாவி - அப்படி தேடி தேடி படிச்சுட்டு இருந்தப்ப திடீர்னு ஒரு வெளிச்சம்...


Mindvoice - யாருப்பா ஹெட் லைட் போட்டது

அப்பாவி - அதாவது... ஒரு உண்மை புரிஞ்சதுன்னு சொல்ல வந்தேன்... அதை தான் symbolic ஆ அப்படி சொனேன்.. ஹி ஹி ஹி

Mindvoice - இவ சும்மா சொன்னாலே புரியாது... இதுல symbolic chimpanzepolic வேற... கஷ்டம் கஷ்டம்
 
அப்பாவி -  அந்த உண்மை என்னனா, சும்மா தத்துவம், தத்து பித்து கவிதை மட்டும் எழுதினா கல்லா கட்ட முடியாது... சிரிக்க வெக்கற மாதிரி ஹாஸ்ய பதிவுகள் தான் மக்களை ஈர்க்கும்னு புரிஞ்சது... அதுலயும் நம்ம வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் இன்னும் சிறப்புன்னு புரிஞ்சது...

நமக்கு தான் ஹாஸ்யம் கூட பொறந்ததாச்சே...

Mindvoice - தான் ஒரு காமெடி பீஸ்ங்கறதை எப்படி polished ஆ ஒத்துக்கறா பாருங்க...சத்தமா சொன்னா என்னை கொன்னே போடுவா... ஹி ஹி ஹி

அப்பாவி - அப்புறம் தான் "புதுசா கட்டிகிட்ட ஜோடியா இருந்தப்ப..." நடந்த ஒரு கிட்சன் காமெடிய எடுத்து உட்டேன்... February 22 2010 ... அப்புறம் ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தரம் refresh பண்ணி பண்ணி கமெண்ட் வந்துச்சா... கமெண்ட் வந்துச்சா... கமெண்ட் வந்துச்சா னு பாத்து பாத்து F5 button தேஞ்சு போனது தான் மிச்சம்...

ரங்க்ஸ் வேற ஒரே கிண்டல் "கமெண்ட் போட்டா காக்கா ஒண்ணும் தூக்கிட்டு போகாது. அப்புறம் பாக்கலாம். வந்து மொதல்ல டிபன் பண்ணும்மா"னு சொல்ற அளவுக்கு ஆகி போச்சு என்னோட நெலம

பதிவு போட்ட ரெண்டாவது நாள் Ashaனு ஒரு பதிவர் ஒரு கமெண்ட் போடாங்க... சொன்னா நம்ப மாட்டீங்க... எத்தனை வாட்டி அந்த கமெண்ட்ஐ நான் படிச்சேன்னு எனக்கே ஞாபகம் இல்ல... அத்தனை வாட்டி படிச்சேன்

ஆனா... என்ன காரணமோ அவங்க அதுக்கப்புறம் இந்த பக்கமே காணோம்

Mindvoice - மனுஷன் ஒரு வாட்டி தான் கெணத்துல விழுவான், மறுபடி மறுபடி செய்வாங்களா...ஹா ஹா ஹா

ரங்க்ஸ் கிட்ட ஒரே பெருமை "பாத்தீங்களா... கமெண்ட் வந்துடுச்சு"னு பந்தா பண்ணினேன்

அதுக்கு ரங்க்ஸ் "என்னமோ சாஹித்யா அகாடமி விருது வாங்கின ரேஞ்சுக்கு நீ பீல் பண்றது சரியா படல..."னு கிண்டல்

எனக்கு காதே கேக்கல அதெல்லாம்... அந்த போஸ்ட்க்கு மொத்தம் 11 கமெண்ட் வந்தது...

என்னை பொறுத்த வரை அது தான் நான் ப்ளாக் ஆரம்பிச்ச நாள்னு கணக்கு...அதுக்கப்புறம் நெறைய பதிவுகள் போட்டாச்சு...

இந்த ப்ளாக் மூலமா நெறைய நண்பர்கள் கெடைச்சு இருக்காங்க...

நல்லா எழுதினா பாராட்றதும்... சரி இல்லைனா "என்ன இது?"னு திருத்தறதும் சந்தோசமான பகிர்வுகள்...

அதுக்கு இந்த நேரத்துல உங்க எல்லாருக்கும் "ரெம்ப ரெம்ப நன்றி"

பதிவை முடிக்கறதுக்கு முன்னாடி ஒரு கொசுறு தகவல்

இந்த Serendipity ங்கற வார்த்தைய நான் மொதல்ல கேட்டது அந்த பேருல ஒரு இங்கிலீஷ் படம் பாத்தப்ப தான்...அந்த படம் ஒரு ஸ்வாரஷ்யம்...

ஒரு ஆண் ஒரு பொண்ண சந்திக்கறான்... கண்டதும் காதல் மாதிரின்னு வெச்சுகொங்களேன். மறுபடியும் எப்போ பாக்கலாம்னு கேக்கறான், போன் நம்பர் கேக்கறான். அந்த பொண்ணு கொஞ்சம் பிகு பண்றா. பக்கத்துல இருந்த ஒரு கடைல என்னமோ பொருள் வாங்கிட்டு அதுக்கு குடுக்கற காசுல தன்னோட போன் நம்பர் எழுதி குடுத்துட்டு ஹீரோ கிட்ட சொல்றா "நாம சந்திக்கணும்னு விதி இருந்தா இந்த டாலர் நோட்டு உன்னோட கைக்கு கெடைக்கும்...அப்போ நீ எனக்கு போன் பண்ணு... நாம சந்திப்போம்"னு சொல்லிட்டு போய்டறா... அந்த பணம் அவன் கைல கெடைக்குதா அவர்கள் இணைகிறார்களா அதான் மிச்ச கதை...

என்னங்க எங்கயோ கேட்ட மாதிரி இருக்கோ... வேற எங்க... இத்தன அழகான fantasy கதைய நம்ம தமிழ் directors விட்டுடுவாங்களா என்ன... ஹா ஹா ஹா

2001 ம் வருஷம் வந்த இந்த ஆங்கில படம் 2003 ம் வருஷம் "ஜே ஜே..." ங்கற பேர்ல தமிழ்ல வந்தது... மாதவன் / அமோகா நடிச்சது... ஒரு வேளை இதை முறையா காப்பிரைட்ஸ் வாங்கியும் எடுத்து இருக்கலாம்... எனக்கு முழு விவரம் தெரியல... அதனால நான் கிண்டல் பண்றது ஞாயம் இல்ல Sorry... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க

(இந்த இங்கிலீஷ் டு தமிழ் காப்பி படங்கள் பத்தியே ஒரு பதிவு எழுதி வெச்சு இருக்கேன்... அதுல இன்னொரு ஸ்வாரஷ்யம் தமிழ் டு இங்கிலீஷ் ஆன படம் ஒண்ணும் பாத்தேன்...அதை அப்புறம் சொல்றேன்...)

ஓ... இது தொடர் பதிவு இல்ல... மறந்தே போயிட்டேன்... யாரையாச்சும் தொடர கூப்பிடணும் இல்லையா...

நான் தொடர் பதிவு எழுதினாலும் யாரையும் தொடர கூப்பிடறது இல்லைன்னு என்மேல ஒரு சிலர் FIR போட்டதா மேலிடத்து தகவல் வந்தது... ஹி ஹி ஹி

அதனால இப்போ கூப்பிடபோறேன்... யாரை கூப்பிடறது? ஹும்... ஒரு வித்தியாசமான முறைல ஆள் புடிச்சா என்னனு தோணுது...

Mindvoice - புள்ள புடிக்கற ரேஞ்சுலியே பேசறாளே...

அப்பாவி - அதனால புதுசா ஒரு ஐடியா தோணுது... என்னோட முதல் தொடர் பதிவான "பொண்ணு பாக்க போறோம்" ல மொதல் அஞ்சு கமெண்ட் போட்டவங்கள இதுக்கு தொடர கூப்பிடலாம்னு இருக்கேன்... என்ன? எப்படி என்னோட ஐடியா?

Mindvoice - எப்படி இப்படி எல்லாம்? கமெண்ட் போட்டுட்டே யோசிப்பாளோ.... ஹும்...

ஒகே... முதல் தொடர் பதிவுக்கு மொதல் அஞ்சு கமெண்ட் போட்டவங்க இவங்க தான்:-

சட்டு புட்டுன்னு தொடர் பதிவை போடுங்கப்பா... தலைப்பு "என்னுடைய வாழ்வில் எதிர்பாராமல் நிகழ்ந்த மகிழ்ச்சியான விபத்து"

1 . பொற்கொடி (மொதல் நாலு கமெண்ட்ம் அம்மணி தான் ... ஆனாலும் ஒரு என்ட்ரி தன் இந்த நேரத்துல கணக்கு... ஹா ஹா ஹா)

2 . புதுகை தென்றல்

3 . தாராபுரத்தான்

4 . பத்மா

5 . அனன்யா மகாதேவன்

பொதுமன்னிப்பு கோரிக்கை:
1 . அனன்யா அழைத்த "பிடித்த ஐந்து பாடகர்கள்" தொடர் பதிவு (ஆமாங்க ரெம்ப நாள் ஆச்சு...சாரி அனன்யா)

2 . சுசி அழைத்த "கடவுளும் நானும்" தொடர் பதிவு (இதுவும் கூட நாளாச்சுங்க...சாரி சுசி)

3 . சுசி அழைத்த recent தொடர் பதிவு "அப்பாவியின் ஆர்டர்"

இது மூணும் சீக்கரம் போட்டுடறேன்... அதுவரை பொருத்தருள்க... லேட் பண்றதுக்கு பொது மன்னிப்பும் கேட்டுக்கறேன்

Mindvoice - பதிவு போட்டதுக்கப்புறம் சொல்ல வேண்டிய "பொருத்தருள்க" வை இப்போ எதுக்கு சொல்றா...ஹா ஹா ஹா...

அப்பாவி - ஏய் mindvoice நீ இன்னும் இங்கதான் இருக்கியா...? பூரி கட்டை இட்லி தட்டு ரெண்டும் எடுக்கறேன் இரு...

Mindvoice - ஐயயோ... சத்தமா சிரிச்சுட்டேன் போல இருக்கு... அப்பாவிக்கு நான் இருக்கற இடம் தெரிஞ்சு போச்சு... என்னை நான் காப்பாத்திக்கறேன்... உங்கள நீங்க காப்பாத்திகொங்க... மீ ஜூட்....

அப்பாவி - டாட்டா... bye bye ... அப்புறம் பாக்கலாமா...

எல்லாரும் ஒரே குரலில் - பாக்கவே வேண்டாம்............... ஆளை உடு தாயே... (எஸ்கேப்................)

55 பேரு சொல்லி இருக்காக:

LK said...

me the escapeee

soundr said...

முடியல.
அழுதுருவேன்....
அவ்வ்வ்வ்


http://vaarththai.wordpress.com

மகி said...

3வது கமெண்ட்டைப் போட்டேன்னு வருங்காலத்துல எதாவது தொடர்பதிவுக்கு இழுத்துடாதீங்க தங்க்ஸ்!! ;) :)

மைண்ட்வாய்ஸ் ஒரு உண்மைவிளம்பியா இருக்கே,ரொம்ப நல்ல மைண்ட் வாய்ஸ்ங்க உங்களுக்கு!

வித்யா said...

சொரண்டிட்டு போய்ட்டாங்களா - ROTFL

நான் கூட அப்படி ஒரு தமிழ் டு இங்கிலீஷ் படம் பார்த்தேன். ஏதோ parents னு வரும். குழந்தையும் தெய்வமும் படம்ன்னு அம்மா சொன்னாங்க.

பத்மா said...

மாட்டிகிட்டேனே
கொஞ்சம் யோசிச்சு எழுதணும் தங்கமணி ..எனக்கு கொஞ்சம் லக் கம்மி ..பாக்கலாம் .முயற்சி பண்றேன்

Karthick Chidambaram said...

aaga kilampitaangayaaa .....

பிரசன்னா said...

// மே 28 2009 அன்னிக்கி எழுதி //

ஓ அப்போ நீங்க மிக மூத்த பதிவர்னு சொல்லுங்க..

நசரேயன் said...

உங்க தொல்லையும், மைன்ட் வாய்ஸ் தொல்லையும் தாங்கமுடியலை

Krishnaveni said...

nice job...great

சின்ன அம்மிணி said...

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
நசரேயனுக்கு ரிப்பீட்டு :)

தாராபுரத்தான் said...

இதுவே எதிர்பாராமல்(பதிவு போட மொக்கை கிடைக்காமல் திணறி கொண்டிருந்த வேளையில்)நடந்த மகிழ்ச்சியான விபத்துத்தான் தாயே..தம் கட்றேன்..

manasu said...

Mind voice கொஞ்சம் குறைச்சுக்கலாம். ரொம்ப மொக்கையா இருக்கு.

siva said...

:)

கோவை குமரன் said...

:))

kavisiva said...

நல்லா சொரண்டிட்டீங்க அப்பாவி :).
உங்களைவிட எனக்கு உங்க மைண்ட் வாய்ஸைத்தான் புடிச்சிருக்கு :)))

Kasu Sobhana said...

குழந்தையும் தெய்வமும் படம் தான் காபி. ஒரிஜினல் ஆங்கிலப் படம், Parent trap. இது கருத்துரைக்கு கருத்துரை. பதிவுக்கான கருத்துரை. பலே, பலே பேஷ் பேஷ். மொத்தம் ஆறு இடங்களில் வாய்விட்டு சிரித்தேன். வெரி எக்செலேன்ட்.

kggouthaman said...

The dictionary meaning of the word 'serendipity' reads as follows:
Good luck in making unexpected and fortunate discoveries.
Ref : wordweb.
இதை மொழி பெயர்த்தால் இப்படி வரும் என்று நினைக்கின்றேன்:
எதிர்பாராத வகையில், செல்வவளமுடைய கண்டுபிடிப்புகளை செய்கின்ற நல்லதிர்ஷ்டம்.
(accidental discovery என்று எழுதியதை யாரோ விபத்தோடு சம்பந்தப்படுத்தி விட்டார்கள் என்று தோன்றுகிறது)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

"மைன்ட் வாய்ஸ் மகாதேவி" வாழ்க!!!!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இப்படியே போயிட்டிருந்தா இதுக்கு என்னதான் முடிவு
மைன்ட் வாய்ஸ் மகாதேவி?

ஜெய்லானி said...

//இப்படி இம்சை அக்கா பதிவை மட்டும் படிச்சுட்டு சந்தோசமா இருந்த நேரத்துல... யாரு கண்ணு பட்டுச்சோ அவங்க பதிவு போடறதை ரெம்ப கொறச்சுட்டாங்க//

//ஆனா... என்ன காரணமோ அவங்க அதுக்கப்புறம் இந்த பக்கமே காணோம்//


இட்லி மாமி என்னோட எதிரியோட பிளாக் அட்ரஸ் தரேன் கொஞ்சநாள் படிங்களேன் கத்தி இன்றி ஒரு கொல பண்னனும் அதான் ..பிளீஸ்..பிளீஸ்..பிளீஸ்

ஜெய்லானி said...

நல்லா சொரண்டி புட்டீங்க எங்களை ..அவ்வ்வ்வ்வ்.

Gayathri said...

எத்தனை நாளா எழுதறீங்க அப்பா...சீனியர் நிங்க...
அருமையா இருக்கு..உங்க மைண்டு வாய்ஸ் நல்ல வேலை செய்யுது...அதுக்கு என் வாழ்த்துக்கள்.நான் முதல் முதலில் படித்த தமிழ் பதிவு பற்றிய எண்ணங்களை கண்டுபிடித்தது நண்பர் ஆதவனின் குப்பைத்தொட்டியில் தான்..அதே காலகட்டத்தில் தான் என் மாமி சந்தியா அவர்களும் வலைபதிவு துவங்கினார்..எனக்கும் ஆசை வந்து தொற்றிக்கொண்டது...இப்ப எல்லாரையும்..அறு அறுன்னு அருக்கறேன்..

முடிஞ்சா என் புது பதிவு படிச்சுட்டு..அப்படியே புதிய வாக்கெடுப்பு நடக்குது.வோட் போடுங்க...

ஹேமா said...

அழகா பொறுமையா புளொக் தொடங்கின கதை சொல்லிட்டீங்க.உங்க அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.எப்பிடித்தான் இவ்ளோ பொறுமையா நிறைய எழுதுறீங்களோ !

ப்ரியமுடன் வசந்த் said...

//சும்மா தத்துவம், தத்து பித்து கவிதை மட்டும் எழுதினா கல்லா கட்ட முடியாது... சிரிக்க வெக்கற மாதிரி ஹாஸ்ய பதிவுகள் தான் மக்களை ஈர்க்கும்னு புரிஞ்சது... அதுலயும் நம்ம வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் இன்னும் சிறப்புன்னு புரிஞ்சது...

நமக்கு தான் ஹாஸ்யம் கூட பொறந்ததாச்சே...
//

அவ்ளோதாங்க இது புரியாம எனக்கு ஓட்டு வரலை கமெண்டு வரலைன்னு பொலம்புறவங்க பாடு பொலம்பல்தான்..புரிஞ்சுட்டவங்க பிரகாசிக்கலாம்..

மத்தவங்க ஆயிரம் தடவை மொக்கைன்னு சொன்னாலும் நீங்க உங்க பாட்டுல எழுதுங்க ஹாஸ்யம் உங்களுக்கு நல்லாவே வருது....

மனுஷன் ஆயிரம் டென்சனோட சரி ரிலாக்ஸா ப்லாக் படிக்கலாம்ன்னு வந்தா ஒரே தத்துவம் கித்துவம்ன்னு பொலம்புறாங்க முடியல .... இதுமாதிரி சின்னதா புன்னகை தரும் பதிவுகள் நலம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மாவே உங்க மைன்ட் வாய்ஸ் தொல்லை ஓவரா இருக்கு..பதிவை படிக்கிறதா வேணாமா..

\\ம்கி சொன்னது…

3வது கமெண்ட்டைப் போட்டேன்னு வருங்காலத்துல எதாவது தொடர்பதிவுக்கு இழுத்துடாதீங்க தங்க்ஸ்!! ;) :)// இது கலக்கல் கமெண்ட்

பின்னூட்டம் போட்டு மாட்டிக்கிறது நாமே தானா.. :)

அபி அப்பா said...

உங்க மைண்ட்வாய்ஸ் எழுதின பதிவு நல்லா இருந்துச்சு. ஆமா நீங்க ஏன் கூட கூட பேசுறீங்க:-))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹாஹ்ஹா.. மைண்ட் வாய்ஸ் பதிவோட மெயின் மேட்டர்ல இருந்து நம்மள அப்பப்ப ட்ராக் மாத்திப்போடுது (அதுதான அதோட நோக்கம் :)) ).. அதனாலேயே - மைண்ட் வாய்ஸ் வாழ்க..

Anonymous said...

தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு

http://bit.ly/bJHGXf

Thenral said...

Nalla irukke!Neenga bloggeraana kadhai!Idhan mattera?Haasyamaa ezhudinaa hit kodukkalaama!Enakku kooda ungala thavira followers-e serala.Naanum feb-10la blog aarambichen.Naduvula vitutu ippo continue panrenna athukku neengalum unga aadharavumthan kaaranamungo...!:)

pinkyrose said...

அப்பாவி ஹ்ய்யொ உங்கள விட உங்க மைண்ட் வாய்ஸ் தாங்க முடியல..

மத்த பதிவர்கள்....

ம்ம்ம் ஆரம்பிங்க உங்க கச்சேரிய...

vgr said...

padichu mudikardu kulla podum podum nu ayiduchu ;)

ana unga 'blog arambitha kadai' nalla irundadu:) Good one.

அப்பாவி தங்கமணி said...

@ LK - யு cant எஸ்கேப்...ஹா ஹா ஹா

@ soundr - ஒகே ஒகே...அழாதீங்க...

@ மகி - ஹா ஹா ஹா...அவ்ளோ பயமா மகி... mindvoice நல்லதா...அது சரி

@ வித்யா - தேங்க்ஸ் வித்யா...அது parent trap னு நினைக்கிறேன்....

அப்பாவி தங்கமணி said...

@ பத்மா - ஹா ஹா ஹா.. தேங்க்ஸ் பத்மா...மெதுவா யோசிச்சு எழுதுங்....

@ Karthik Chidambaram - ஹா ஹா ஆஹா

@ பிரசன்னா - அடப்பாவமே.... அதெல்லாம் இல்ல இளைய பதிவர் தான்

@ நசரேயன் - ஹா ஹா அஹ.... என்ன செய்ய?

அப்பாவி தங்கமணி said...

@ krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ சின்ன அம்மணி - ஹா ஹா ஹா... எப்பவாச்சும் சிக்காமையா போவீங்க...

@ தாராபுரத்தான் - ஓ...நீங்க அப்படி வரீங்களா... கலக்குங்க

@ manasu - அப்படிங்களா...நன்றிங்க சொன்னதுக்கு... இனிமே குறைச்சுகறேன்

அப்பாவி தங்கமணி said...

@ siva - :)

@ கோவை குமரன் - :))

@ kavisiva - ஆஹா....வர வர mindvoice க்கு ஆதரவு கூடிட்டே போகுதே...வெரி bad

@ Kasu Sobhana - ஓ...really ? தேங்க்ஸ் ஷோபனா

அப்பாவி தங்கமணி said...

@ kggouthaman - ரெம்ப நன்றிங்க dictionary பாத்து சொன்னதுக்கு

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு - ஹா ஹா அஹ... அதாங்க எனக்கும் புரியல... இந்த mindvoice ஐ கொஞ்சம் அதட்டி வெக்கணும்..ஹா ஹா ஹா

@ ஜெய்லானி - ஆஹா... நம்மள எப்படி எல்லாம் யூஸ் பண்ணிக்கறாங்க...ஹும்.... ஹா ஹா ஹா

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி... நீங்க அறுக்கவெல்லாம் இல்ல...நல்லா சிரிக்க வெக்கறீங்க... கண்டிப்பா உங்க பதிவு பாக்குறேன்

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - தேங்க்ஸ் ஹேமா...

@ ப்ரியமுடன் வசந்த் - இதுக்கு "மொக்கை பதிவு"ன்னு நீங்க நேரடியாவே திட்டி இருக்கலாம்... ஹா ஹா அஹ... ஜஸ்ட் கிட்டிங்

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹா ஹா ஹா... mindvoice ஐ கொஞ்சம் மெரட்டி வெக்கறேன்... ஹா ஹா அஹ... ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் எல்லாரும் மாட்டி தானே ஆகணும்

@ அபி அப்பா - ஆஹா... இப்படி வாரிடீங்களே...ஹும்....

அப்பாவி தங்கமணி said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - ஆஹா... என்னங்க ஆள் ஆளுக்கு mindvoice ஐ புகழ்றீங்க... ஒண்ணும் சரி இல்ல

@ Thenral - நன்றிங்க தென்றல்

@ pinkyrose - ஹா ஹா ஹா... தேங்க்ஸ்

@ VGR - அவ்ளோ பெருசாவா இருக்கு பதிவு... ஹும்... இனிமே சின்னதா போடறேன்... தேங்க்ஸ்ங்க...

Priya said...

உங்களை விட மைன்ட்வாய்ஸ்தான் உண்மையை பேசுது:)) சோ ரொம்ப ரசிச்சு படிச்சேன்!

அமைதிச்சாரல் said...

உங்க மைன்ட் வாய்சுக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு கொடுத்திடுங்க. நல்லாவே இருக்கு:-))

LK said...

athe kangal engaaaaaaa.. next athu varala un blog irukkathu sollitten

தக்குடுபாண்டி said...

//"கமெண்ட் போட்டா காக்கா ஒண்ணும் தூக்கிட்டு போகாது. அப்புறம் பாக்கலாம். வந்து மொதல்ல டிபன் பண்ணும்மா"// LOL...:) unga rangu kalakkaraar akka....:)

அப்பாவி தங்கமணி said...

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா

@ அமைதிச்சாரல் - ஹா ஹா ஹா ... தனி ப்ளாக்ஆ? அது சரி... தேங்க்ஸ் சாரல்

@ LK - அதே கண்கள் thursday வரும்... ஆஹா... இப்படி மெரட்டினா எப்படி சார்?

@ தக்குடு - ஹும்....என்னை தவிர எல்லாரும் கலக்கறாங்க தான்... ஹா ஹா ஹா

Ananthi said...

முழு பதிவும் படிச்சேன்.. உங்களை பதிவுலகிற்கு வர தூண்டிய, உங்கள் ரங்க்ஸ்-க்கு நன்றி.. :-))

கலக்கல்.. பதிவு.. இன்னும் சிரிப்பா வருதுப்பா..!! :-))))

Ananthi said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

vanathy said...

தங்ஸ், மைன்ட் வாய்ஸை குறைச்சு இருக்கலாம். தொடர்ந்து படிக்கும் போது இடையில் தடங்கல் ஏற்படுகிறது.
பாவம் Asha. எங்காவது காசி யாத்திரை போயிருப்பார்.
எல்லாம் சொன்னீங்கள் ஆனால் உங்கள் பெயர் காரணம் மட்டும் சொல்லவேயில்லை.
அது உங்கள் குலதெய்வம் பெயரா??? okay. NO more questions!!!

sandhya said...

புவனா நீங்களும் உங்க mind voice உம் அடிக்கற லூட்டி இருக்கி அப்பாடா சொரண்டி புடிங்களை ...சூப்பர் நல்லா இருந்தது உங்க ப்ளாக் உலக சரிதம்

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/07/blog-post_21.html

இப்ப நான் மாட்டி விட்டிருக்கேனே!!

Nasrin said...

Very nice keep it up
I visited ur blog very recently and i thought of reading the posts little by little. But i read all the posts in one sitting. It was so interesting

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ஹா ஹா ஹா தேங்க்ஸ் ஆனந்தி... உங்க நன்றிய அவர்கிட்ட சொல்லிடறேன்... பரிசுக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க ஆனந்தி

@ vanathy - எனக்கே இப்போ அப்படி தான் தோணுது... இனிமே mindvoice ஐ வெரட்டி விட்டுடறேன் வானதி... பெயர் காரணம்னு நீங்க கேட்ட முஹுர்த்தம் அந்த கேள்வி இருக்கற ஒரு தொடர் பதிவை புதுகை அக்கா கூப்பிட்டு இருக்காங்க...அதுல சொல்லிடறேன்... நன்றி வானதி

@ sandhya - ஹா ஹா ஹா தேங்க்ஸ் சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ புதுகைத் தென்றல் - ஆஹா மாட்டி விட்டீங்களா...ஹா ஹா அஹ...சீக்ரம் போடறேன் அக்கா

@ Nasrin - Thanks a lot Nasrin...thats a great compliment to receive... thanks for stopping by

sriram said...

நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

rotfl @ boston.. arambichutingla ayya? :P

appavi, idhanaa thodar padhivu? thanks for inviting, viraivil podaren.. erkanave koopta tagse inum potta paadillai.. :D

Porkodi (பொற்கொடி) said...

appavi, unga FB wall thorandhu viduganna "ha ha ha" nu sirichutu poringa.. enna sorladhu??? unga privacy settings poi parunga, "Enable friends to write on wall" - enable pannunga.. eksi!!! FB thorandhu vidunga nu bloggerla koova vendi iruku!

அப்பாவி தங்கமணி said...

@ Boston sriram - தேங்க்ஸ்ங்க.... (ஆஹா... மறுபடியும் template கமெண்ட் ஸ்டார்ட் ஆய்டுச்சா...ஹும்...)

@ பொற்கொடி - அதான் கொடி நானும் நொந்து போயிட்டேன்... template கமெண்ட் ஸ்டார்ட் மீசிக் ஆய்டுச்சு.... சீக்கரம் தொடர் பதிவு போடுங்க. எக்கோவ்.... நான் FB ல ரெண்டு வாரம் முன்னாடியே செட்டிங் மாத்திட்டனே... எப்போ மறுபடி செக் பண்ணினேன்... enable ஆகி தான் இருக்கு...இப்ப ட்ரை பண்ணி பாருங்க (இந்தியா ப்ளாக் உலகில் முதல் முறையாக FB மெசேஜ்ஐ ப்ளாக்ல் போட்ட சிங்கி கொடி அக்கா வாழ்க வாழ்க ஹி ஹி ஹி)

Post a Comment