Monday, July 05, 2010

ரங்கமணிகள் - ஒரு ஆய்வு - க.மு Vs க.பி...


என்னதிது? கி.மு / கி.பி தெரியும், காமு சோமு தெரியும்,  டீ காபி கூட தெரியும், இது என்ன புதுசா க.மு Vs  க.பி னு மண்டைய பிச்சுக்கரீங்களா....

அதான்... அதான் வேணும் எனக்கு.... நாலு பேரை மண்டைய பிச்சுக்க வெச்சா அன்னைக்கி நான் நிம்மதியா தூங்குவேன்.... ஹி ஹி ஹி... ஒகே ஒகே நோ டென்ஷன்....

விசியத்துக்கு போவோம்.... க.மு Vs  க.பி னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு  முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி (!!!!?????) மாறி போய்டராங்கங்கறதை  இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு... ம்ம்ம்ம்.... மூச்சு வாங்குது போங்க...

இப்போ உங்க முகம் அப்படியே "வதனமோ சந்திர பிம்பமோ" னு சொல்லுற மாதிரி பிரகாசமாகுதா அப்போ நீங்க ஒரு "தங்கமணி", அதே கேப்டன் படத்துல வர்ற மாதிரி கண்ணு இன்ஸ்டன்ட்ஆ சிவக்க உதடு துடிக்க மொறைக்கரீங்களா அப்போ நீங்க ஒரு "ரங்கமணி"

எப்படி நம்ம கண்டுபிடிப்பு...? ஒகே ஒகே.... நோபல் பரிசு எல்லாம் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க.... சரி சரி ரெண்டு மட்டும் குடுங்க போதும்.... எங்க வீட்டு showcase ல அவ்ளோ தான் எடம் இருக்கு...

சரி, பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு நன்றி சொல்லிக்கறேன்.... எதுக்கா? இதுக்கெல்லாம் காரணம் வேணுமா என்ன? சும்மா போற போக்குல சொல்றது தான்

சரி சரி சொல்றேன்... இது என்னோட 50 வது பதிவு, நான் இத்தனை தூரம் வந்ததுக்கு நீங்க எல்லாரும் தான் காரணம் (அப்பாடா பழிய அவங்க மேல போட்டாச்சு... ஹா ஹா ஹா)

எனவே என்னோட கோடானு கோடி ரசிகர் பெருமக்களாகிய உங்களுக்கு... சரி சரி... நோ டென்ஷன்... Just tongue slip you know.... நான் என்ன சொல்ல வந்தேன்னா அந்த கோடில ஒண்ணு இந்த கோடில ஒண்ணுனு இருக்கற சில சக பதிவுலக நண்பர்களே... உங்க எல்லாருக்கும் நூறு ஆயிரம் லட்சம் கோடி நன்றி (அதுக்கு மேல counting தெரியலப்பா விடுங்க)

"அவங்க அவங்க ஆயிரம் ரெண்டாயிரம் பதிவுன்னு போட்டுட்டே சத்தமில்லாம இருக்காங்க உன் அலப்பறை பெரிய அலப்பறையா இருக்கேன்னு திட்டறீங்களா?". திட்டாதீங்கப்பா... ஏதோ உங்களை மாதிரி மலைகளுக்கு மத்தில ஒரு மடுவா இருந்துட்டு போறனே... ஒகே ஒகே... நோ பீலிங்க்ஸ்....ஒகே....ஒகே.... (ஆட்டோ எல்லாம் வேண்டாம்....நான் பதிவுக்கு போறேன்....)

********************************************

சிச்சுவேசன் ஒண்ணு - சுரேஷ்க்கு காய்ச்சல், ஆனாலும் Sincere சிகாமணியா பிசினஸ் விசியமா வெளியூர் போய் இருக்கார். அப்போ அவருக்கு போன் வருது

கல்யாணத்துக்கு முன் : "ஹலோ சொல்லு டார்லிங்.... இப்போ தானே பேசின. என்ன? ஓ...எனக்கு இப்போ ஒடம்புக்கு பரவாயில்லயானு கேக்க கூப்டியா.... உனக்கு என் மேல எவ்ளோ அன்பு.... நான் ரெம்ப லக்கி"

கல்யாணத்துக்கு பின் : "சொல்லு. என்ன? மீட்டிங்ல இருக்கேன்... ம்... சரி வெய்யி....வேலை இருக்கு.... அப்புறம் பேசறேன்" (மனதிற்குள் - வெளியூர் வந்தும் மனுசன நிம்மதியா விடாம...ச்சே....)

********************************************

சிச்சுவேசன் ரெண்டு - சுரேஷ்ம் சுந்தரியும் பீச்சில் அமர்ந்து இருக்கிறார்கள்

கல்யாணத்துக்கு முன்: "எப்படி சுந்தரி இப்படி கோர்வையா கதை சொல்ற மாதிரி அழகா பேசற? நீ பேசறதை கேக்கறதுக்கே ஆபீஸ் எப்படா முடியும்னு இருக்கு எனக்கு தினமும்"

கல்யாணத்துக்கு பின்: "ஏன் இப்படி தொணதொணக்கற? உனக்கே வாயே வலிக்காதா? ( மனதிற்குள் - இதுக்கு பேசாம நான் ஆபீஸ்ல உக்காந்து internet browse பண்ணிட்டாச்சும் இருக்கலாம்)

********************************************

சிச்சுவேசன் மூணு - சுரேஷ்ம் சுந்தரியும் கோவிலில். சுந்தரி ஒரு பெண்ணின் வளையலை காட்டி "அழகா இருக்கில்ல" னு சொல்றாங்க

கல்யாணத்துக்கு முன்: (மனதிற்குள்) "வாவ்.... காதலிக்க ஆரம்பிச்சு 100 வது நாளுக்கு என்ன கிப்ட் வாங்கறதுன்னு மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன்... வளையல் வாங்கி surprise ஆ அசத்தணும்"

கல்யாணத்துக்கு பின் : (மனதிற்குள்) "ஐயோ..... கல்யாண நாள் வேற வருதே... பர்சை காலி பண்ணாம விடாது போல இருக்கே. எப்பவும் போல காது கேக்காத மாதிரியே maintain பண்ணிக்கணும்.... அதான் நமக்கும் நல்லது நம்ம பர்சுக்கும் நல்லது"

********************************************

சிச்சுவேசன் நாலு - சுரேஷ்ம் சுந்தரியும் ஒரு உணவகத்தில். சுரேஷ் காளிப்ளவர் மஞ்சூரியனை ரசித்து சாப்பிட "உங்களுக்கு ரெம்ப பிடிச்சதா... இருங்க chef கிட்ட எப்படி செய்தாங்கன்னு கேட்டுட்டு வரேன்"

கல்யாணத்துக்கு முன்: "எனக்கு ஒண்ணு பிடிக்கிதுனதும் இவ்ளோ ஆசையா கத்துக்க நினைக்கிறியே... இதுக்காகவே எப்படி சமைச்சு போட்டாலும் சந்தோசமா சாப்பிடுவேன்"

கல்யாணத்துக்கு பின்: "போதும் போதும்....ஏன்? எனக்கு காளிப்ளவர் மஞ்சூரியன் புடிக்காம போகணுமா?"

********************************************

சிச்சுவேசன் அஞ்சு - சுரேஷ்க்கு அசைவம் பிடிக்காது என்றதும் தானும் அதை சாப்பிடபோவதில்லை என்கிறார் சுந்தரி

கல்யாணத்துக்கு முன்: "ஏம்மா? உனக்கு புடிச்ச எதையும் நீ எனக்காக தியாகம் பண்ண கூடாது. சரியா"

கல்யாணத்துக்கு பின்: "ஏன்? உனக்கு பிடிக்காத எதையாச்சும் என்னை விட சொல்ல போறியோ?" (இப்படி குதர்க்கமா யோசிக்கறது எல்லாம் ரங்கமணி போஸ்ட் குடுத்த அடுத்த நொடி வந்துடும் போல)

********************************************

சிச்சுவேசன் ஆறு - சுந்தரி புது புடவை கட்டி இருக்கிறார். "எப்படி இருக்கு?" னு சுரேஷ் கிட்ட கேக்கறாங்க

கல்யாணத்துக்கு முன்: "புடவை சுமார் தான்... ஆன நீ கட்டி இருக்கறதால அதுக்கு மவுசு கூடிப் போச்சு"

கல்யாணத்துக்கு பின்: "பொடவை எல்லாம் நல்லாத்தான் இருக்கு....."  (அதுக்கப்புறம் ஒரு "indifferent look " அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)

********************************************'

சிச்சுவேசன் ஏழு - சுந்தரி அவங்க தோழி கல்யாணத்துக்காக வெளியூர் போறதா சொல்றாங்க

கல்யாணத்துக்கு முன்: "என்னது ரெண்டு நாளா? சான்சே இல்ல... என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதும்மா. வேணும்னா நல்ல காஸ்ட்லி கிப்ட் வாங்கி அனுப்பிடலாம்"

கல்யாணத்துக்கு பின்: "அப்படியா.... பிரிண்ட்ஸ் எல்லாம் பாத்தா என்னை மறந்துடுவ இல்ல? வேணா இன்னும் ரெண்டு நாள் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாயேன்... உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்" (மனதிற்குள் - ஐ....தங்கமணி என்ஜாய்... உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....) "என்னமா நீ இன்னும் போலயா?"

********************************************'

ஏழுக்கு மேல எழுதினா ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கறதாவும் அதோட விளைவா ஆட்டோ இல்ல லாரியே வரும்னும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் வந்தபடியால் அப்பாவி தங்கமணி உங்களிடம் இருந்து விடை மற்றும் வடை பெறுகிறாள்....  எஸ்கேப்......

Disclaimer Statement: இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)

இப்படிக்கு,
முன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தாங்க்ஸ்

98 பேரு சொல்லி இருக்காக:

goma said...

சிச்சுவேசனுக்கான
பதில் எல்லாமே,’சிரிச்சு’வேசன்தான் [நீங்களா அப்பாவி?]

சுசி said...

லீவுல இருந்து செம ஃபார்ம்லதான் வந்திருக்கிங்க. ரொம்ப சிரிச்சேன் புவனா.

ஹேமா said...

உங்க எல்லா க.மு Vs க.பி சிச்சுவேசனும் 50 ஆவது பதிவில அசத்தல் தங்கமணி.வாழ்த்துகள் தோழி.

Krishnaveni said...

congrats on your 50th post....such a great post, happy blogging Bhuvana. laughed a lot, lovely write up

சின்ன அம்மிணி said...

சிச்சுவேஷன் ரெண்டு: க.பி. பீச்சுக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. வீட்லயே அந்த வசனம் பேசிடுவாங்க :)
50க்கு வாழ்த்துக்கள்

Karthick Chidambaram said...

supper pathivu. Ella situvationum super.

டம்பி மேவீ said...

எல்லாம் சரி ...யாருங்க அந்த சுரேஷும் சுந்தரியும் ...?????

டிஸ்கி - நான் சின்ன பையனுங்க ...நமக்கு இது ல எல்லாம் முன் பின் அனுபவம் இல்லைங்க .

LK said...

@ அடப்பாவி (இனி நோ அப்பாவி )

முதலில் ஐம்பதுக்கு ஒரு வாழ்த்துக்கள் மற்றும் பூச்செண்டு .

//(அதுக்கப்புறம் ஒரு "indifferent look " அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)//

நீ கட்டினா எந்த புடவையும் நல்லா இருக்காது ....இதுதான் அதற்கு அர்த்தம் ...

//இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல///

ப்ளாக் பொறுப்பல்ல . ஆனால் அதை எழுதியவர்தான் பொறுப்பு. எனவே அப்பாவி ரங்கமணிகள் சங்கம் சார்பாக உடனடியாக இரு ஆடோக்கள் உங்கள் புது வீட்டிற்கு விரைவில் வரும்

LK said...

@அம்மிணி
//சிச்சுவேஷன் ரெண்டு: க.பி. பீச்சுக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. வீட்லயே அந்த வசனம் பேசிடுவாங்க :)//

சொந்த அனுபவமோ ???

வெறும்பய said...

இப்படியெல்லாம் கூட நடக்குதா...

அமைதிச்சாரல் said...

50க்கு வாழ்த்துக்கள் தங்க்ஸ். உங்க செல்லப்பேரு சுந்தரியா!!... சொல்லவேயில்ல :-))))))))

LK said...

ennathu nan potta comment kanom

LK said...

@அடப்பாவி

இனி உன்னை அப்பாவின்னு கூப்பிட மாட்டேன். பாவம் உன் ரங்க்ஸ்..

// (அதுக்கப்புறம் ஒரு "indifferent look " அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)
/
புடவை நல்லாத்தான் இருக்கு.. ஆனா .....

@அம்மிணி

//சிச்சுவேஷன் ரெண்டு: க.பி. பீச்சுக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. வீட்லயே அந்த வசனம் பேசிடுவாங்க :)//
சொந்த அனுபவமா ??

@அடப்பாவி
நான் காலையில் போட்ட ரெண்டு கமன்ட் எங்க ????? டெலிட் பண்ணிட்டியா

வித்யா said...

50க்கு வாழ்த்துகள். பதிவு அட்டகாசம்.

அமைதிச்சாரல் said...

உங்க செல்லப்பேரு சுந்தரியா... சொல்லவேயில்ல :-))))))).

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

மொதல்ல போட்ட கமெண்டை காக்கா தூக்கிட்டு போயிடுச்சா அப்பாவியக்கா????......

அபி அப்பா said...

கல்யாணத்துக்கு முன்ன மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்திருக்காரு நம்ம சுரேஷ். க.பி வெவரம் எல்லாம் தெரிஞ்சு நல்ல முன்னேற்றம்.மஞ்சதண்ணி தெளிச்ச ஆடு மாதிரி ஆகிட்டாரு. என்ன ஒரு முன்னேற்றம் கோழியில் இருந்து ஆடு வரை டெவலப் ஆகிட்டாரு:-))

நியாயமா பார்த்தா சுரேஷ் தான் "அப்பாவிரங்கமணி" பட்டத்துக்கு சரியான ஆள். எப்பூடீ?

புதுகைத் தென்றல் said...

அல்லாமே சூப்பர்பா,

ஹஸ்பண்டாலஜிக்கு துணை பேராசிரியை கிடைச்சாச்சு. இந்த பதிவை நண்பர் ஆதிக்கு அனுப்பி வைக்கிறேன். அவர் வந்தாத்தான் களை கட்டும்.

kunthavai said...

வாழ்த்துக்கள்.

ஏன் இப்படி அனியாயத்துக்கு சிரிக்க வைக்கிறீங்க? நான் ஆபிஸில் லூசு மாதிரி சிரித்துக்கொண்டே இருந்தேன்.

அபி அப்பா said...

அய்யோ என் கமெண்ட் எங்க காணூம்?

Anonymous said...

அய்யோ என் பின்னூட்டம் எல்லாம் என்ன ஆச்சு?

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜோக்ஸ் கொஞ்சம் பழசுதான்னாலும் உங்கள் ஸ்டைலில் படிக்க சுவாரசியமாக இருந்தன. அதுவும் சிச்சுவேஷன் 4 நல்ல ஃபீல். களுக்குன்னு சிரிச்சுட்டேன். எல்லாவற்றையும் விட முதல் பகுதியில் வரிக்கு வரி சுயகலாய்ப்பு அட்டகாசம்.

அபி அப்பா said...

என் பின்னூட்டம் எங்கே?

பிரசன்னா said...
This comment has been removed by the author.
பிரசன்னா said...

Congrats for the 50 :)

க.முன்: வள வள வள
க.பின்:


.

கண்ணகி said...

ஹ..ஹா.ஹா...கலக்கலோ கலக்கல்.. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..

தனி காட்டு ராஜா said...

எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள்... உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள்.. அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்..
அட்லீஸ்ட் இந்தமாதிரி ஒரு சிரிப்பு பதிவுவாவது கிடைக்கும் ....

Venkatesh said...

தங்கமணி அவர்களே அனுபவத்தை அருமையாக எழுதி உள்ளீர்கள்!!!

manasu said...

சிச்சுவேசன் ஒண்ணு - சுரேஷ்க்கு காய்ச்சல்,ஆனாலும் சுந்தரி வாழை புதிய குலை தள்ளியிருப்பதைப் பார்க்க அம்மா வீட்டுக்கு போய்டாங்க.


கல்யாணம் ஆன புதிதில் - ஹலோ, என்ன்ப்பா இப்ப ஓகே வா? fridgeல தக்காளி குழ்ம்பும் வாழைப்பூ வடையும் இருக்கு எடுத்து சாபிடுங்க. காய்ச்சல்னு சாப்பிடாம இருக்காதிங்க, நல்லா சாப்பிட்டாதான் சரியாகும். ஒகே வா செல்லம். நா நைட்டுக்குள்ள வந்துருவேன்!

ஹலோ, என்ன...ஹும் சொல்லுங்க கேக்குது... இன்னைக்குதானே வந்திருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ரெண்டு நாள்ள வரேன். காய்ச்சலும் அதுவுமா கண்டத திங்காதிங்க, வயித்த பட்டினி போடுங்க அப்புறம் வந்ததுக்கு அப்புறம் நாந்தான் படனும். என்னது.... வேலைக்காரியும் வரலயா

(mind voice - ஐ நல்ல வேலைக்காரி சமயம் பார்த்து வராம இருந்திருக்கா அப்பதான் நம்ம அருமை புரியும்)

manasu said...

சிச்சுவேசன் மூணு - சுரேஷ்ம் சுந்தரியும் கோவிலில். சுரேஷ் ஒரு பெண்ணின் வளையலை காட்டி "அழகா இருக்கில்ல" னு சொல்றாங்க

கல்யாணம் ஆன புதிதில் - நல்லாதான் இருக்கு, இருந்தாலும் நீங்க போனவாரம் வாங்கிகொடுத்த சிங்கப்பூர் டிசைன் வளையால போல வராது. உஙக செலக் ஷன் எப்பவும் சூப்பர் தாங்க என்னைப் போல.

2 வருசத்திற்கு அப்புறம் - ஒரு முறைப்போட கண்ணு வளையல்ல இருக்க மாதிரி தெரியலயே...

(mind voice - அந்தப் பொண்ண ஜொள்ளுவடிய சைட் அடிச்சிட்டு என்னப் பார்த்ததும் வளையல் நல்லாருக்கில்லானு சாமாளிபிகேஷனா? வீட்டுக்கு வாங்க ரெண்டு நாள் உங்கள நாயா அலையவிடல ஏம்பேர் சுந்தரியில்ல.

manasu said...

சிச்சுவேசன் நாலு - சுரேஷ்ம் சுந்தரியும் ஒரு உணவகத்தில். சுரேஷ் காளிப்ளவர் மஞ்சூரியனை ரசித்து சாப்பிட

கல்யாணம் ஆன புதிதில் - "உங்களுக்கு ரெம்ப பிடிச்சதா... இருங்க chef கிட்ட எப்படி செய்தாங்கன்னு கேட்டுட்டு வரேன்"

2 வருசத்திற்கு அப்புறம் - ( mind voice - வளிச்சு வளிச்சு திங்கறத பாரு காணாதத கண்டமாதிரி..வாப்பூ வீட்ல 2 நாளைக்கு கோதும தோசயும் பொடியுமா வச்சு கொல்றேன் உன்ன.)

என்னங்க லேசா தலை வலிக்கிற மாதிரியிருக்கு, உடம்பு வேற கத கதன்னு இருக்கு 2 நாளைக்கு என்ன கஷ்டபடுத்தாதிங்க சமைக்க முடியாது என்னால.

( mind voice சுரேஷ் - நான் நல்லா சாப்ட்றத கண்டா உனக்கு நோவு வந்திருமே)எல்லாத்துக்கும் இப்படி எழுதிடே போலாம் ஆனா இப்பவே விரல்லாம் வலிக்குது

(உண்மைத்தமிழன் நீங்க உண்மையிலே பெரியா ஆளுங்க)

அதுனால மூணு போதும்.அப்புறம் பின்னூட்டம் இடுகையாயிடும்.

VELU.G said...

50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

எப்படிங்க நீங்க மட்டும் இப்படி உண்மைய பட்டு பட்டுன்னு கொட்டிபுடறீங்க

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)

வெண்ணிற இரவுகள்....! said...

nalla padhivu

sandhya said...

அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் .புவனா கலக்கிட்டேன் பா ரொம்ப நேரம் சிரிச்சிட்டேன் இனி தாங்காது நன்றி

Anonymous said...

:-)))))

sandhya said...

புவனா உங்க தங்கைக்கு குழந்தை பிறந்தாச்சா ..அம்மாவும் பாபாவும் நலம் தானே ?

SenthilMohan K Appaji said...

//*நாலு பேரை மண்டைய பிச்சுக்க வெச்சா அன்னைக்கி நான் நிம்மதியா தூங்குவேன்**/
4 பேரு மட்டுந்தானா?
நாயகன் நாயகி Name மட்டும் சுரேஷ்/சுந்தரி-ன்னு வெக்காம, ரங்கமணி/தங்கமணி-ன்னு வெச்சிருந்தீங்கன்னா இன்னும் ரொம்ப காமெடியா இருந்திருக்கும். Lover's conversation After/Before Marriage-னு ஒரு forward mail இருக்குது. அத அப்டியே தமிழ்ல translate பண்ணி, கொஞ்சம் உப்பு, மிளகா சேத்து, தங்கமணியோட flavor-ல ஒன்ன தேத்திடீங்க. நீங்க தேறிட்டீங்கக்கா.

வெங்கட் நாகராஜ் said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! பதிவு கலக்கல்!!

அறிவிலி said...

//உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....//

ரங்கமணிகளே பொங்கி எழுங்கள். நாமெல்லாம் பார்ட்டியும் கூத்துமாகவே இருப்பதுபோல் எழுதுவதெல்லாம் பெண்ணாதிக்க சிந்தனை.

pinkyrose said...

hai buvana, birth daya semmaya kondaatinga pola eluthla romba vaarureengalae! ;)

pinkyrose said...

apram en blog paartheengala?
epdinu sollungappa?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹாஹ்ஹா..

நசரேயன் said...

உங்களுக்கு அப்பாவி தங்கமணி பட்டம் கொடுத்தவங்க விலாசம் கிடைக்குமா ?

நசரேயன் said...

உங்களுக்கு அப்பாவி தங்கமணி பட்டம் கொடுத்தவங்க விலாசம் கிடைக்குமா ?

போன பின்னூட்டம் எங்கே?

அப்பாவி தங்கமணி said...

நம்ம அப்பாவி தங்கமணிகள் சங்கம் சார்பாக நம் பொதுக்குழுவின் மாதாந்திர கூட்டத்தில் முடிவு செய்த படி ரங்கமணிகளின் மறுமுகத்தை காட்டும் பதிவான "ரங்கமணிகள் - ஒரு ஆய்வு - க.மு Vs க.பி" என்ற பதிவு வெளியானதும் அதை பொறுக்காமல் சிலர் செய்த சதியால் இந்த பதிவுக்கு வந்த கமெண்ட்ஸ் எல்லாம் மாயமாய் போயின

இது யார் வேலை என்று CBI விசாரணை நடைபெற்று வரும் இந்த வேளையில் சில கமெண்ட்ஸ் தானே சரியான பதிந்துள்ளது... மற்றதும் அதே போல் ஆகும் என நெனைக்கிறோம்... அப்படி இல்லாத பட்சத்தில் அந்த கமெண்ட்ஸ் எல்லாமும் எனது ஈமெயில்லில் இருந்து எடுக்கப்பட்டு மறுபதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .... (சோடா ப்ளீஸ்....)

ஸ்ரீராம். said...

Interesting..

அநன்யா மஹாதேவன் said...

:P :P:P
noothukku nooru unmai bbhuvana..
rangsgalukku kalyanathukku munnaadi naama treasure, kalyanathukkappuram trash! :))

நாடோடிப் பையன் said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
I love this thangamani and rangamani ladai. It is so funny!

அனாமிகா துவாரகன் said...

I still support Rangamanis. Not Terror Thangs like Ananya acca and you.

Congrats on your 50th Post. Shall I post another set of Idli pics for your celebration. haaa haaa haaa haaa

தக்குடுபாண்டி said...

உங்க வீட்ல நடந்த விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கலக்கரேளே இட்லி மாமி!..:PP

தக்குடுபாண்டி said...

இந்த போஸ்டுக்கு ரங்கமணிகள் சங்கத்தோட 'போர்வாள்' பாஸ்டன் நாட்டாமை இன்னும் எட்டியே பாக்கலை போலருக்கு??....:)

என்றும் வம்புடன்,
தக்குடு

vanathy said...

சொந்த அனுபவமோ? நல்லா இருக்கு. இதைப் பார்த்துட்டு தான் நம்ம பின்னூட்ட புயல் அங்கே ஒரு சங்கம் ஆரம்பிச்சாரோ??????

vgr said...

adengappa...enna oru araichi...inda 7 situations kum reason theiyumo..."taken for granted than" k.mum ponnu sikkumo sikkadonu bayam...k.pin lifelong sikkidiche...adan :)

ide mari k.mun/k.pin wives kum ezhudavum :)

ஸாதிகா said...

என்னங்க..தங்கமணி..எப்படீங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க...!

அப்பாவி தங்கமணி said...

@ goma - ஹா ஹா ஹா...தேங்க்ஸ் கோமா... oh yes ofcourse, it is implied. தங்கமணினாலே அப்பாவி தானே... (உங்களையும் சேத்து தான்.. இப்போ டீல் ஒகேவா?)

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - தேங்க்ஸ் சுசி... ஹா ஹா ஹா

@ ஹேமா - தேங்க்ஸ்ங்க ஹேமா

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி. எல்லாம் நடக்கறது தானே எல்லா வீட்டுலயும்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மணி - ஓ... நீங்க அப்படி வரீங்களா? சூப்பர்ங்க அம்மணி(சொந்த அனுபவமுன்களா? ஹி ஹி ஹி) நன்றிங்க வாழ்த்துக்கு

@ Karthik Chidambaram - தேங்க்ஸ் கார்த்தி...

@ டம்பி மேவி - ஆஹா... இப்படி எல்லாம் அநியாத்துக்கு act விடாதீங்க சார்... பின் அனுபவம் பத்தி தெரியல... முன் அனுபவம் நீங்க தானுங்க சொல்லணும்

அப்பாவி தங்கமணி said...

@ LK - வாழ்த்துக்கு நன்றி பாஸ்... என்னது அடபாவியா....? ஏன் அடிக்கடி உன்னோட பேரை சொல்லிக்கற நீ? ஹி ஹி ஹி

//நீ கட்டினா எந்த புடவையும் நல்லா இருக்காது ....இதுதான் அதற்கு அர்த்தம் ...//
இரு இரு இதை அப்படியே ஊட்டு அம்மணிக்கி அனுப்பி விடறேன்...

//ப்ளாக் பொறுப்பல்ல . ஆனால் அதை எழுதியவர்தான் பொறுப்பு. எனவே அப்பாவி ரங்கமணிகள் சங்கம் சார்பாக உடனடியாக இரு ஆடோக்கள் உங்கள் புது வீட்டிற்கு விரைவில் வரும் //
ஹா ஹா ஹா... இந்த ஊர்ல ஆட்டோவே இல்லியே... என்ன பண்ணுவ என்ன பண்ணுவ.... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@// LK சொன்னது… @அம்மிணி
//சிச்சுவேஷன் ரெண்டு: க.பி. பீச்சுக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. வீட்லயே அந்த வசனம் பேசிடுவாங்க :)//சொந்த அனுபவமோ ??? //

என்ன செய்யறது... எல்லாம் உங்கள மாதிரி ரங்கமணிகள் பண்ற வேலை தான்... மாட்டினயா?

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - அட ஆமாங்ண்ணா... இதெல்லாம் சும்மா example ... இன்னும் எக்க சக்க கொடுமை எல்லாம் நடக்குதுங்க பிரதர்...ஹும்...

@ அமைதிச்சாரல் - வாழ்த்துக்கு நன்றிங்க... ஏனுங்க கூடவே ஒரு குண்டை தூக்கி போடுறீங்க... எனக்கு செல்ல பேரு எல்லாம் இல்லிங்க... என்னோட ஒரே பேரு அப்பாவி தானுங்க்கா...(ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ LK - நீ அநியாயமா என்னை மாதிரி அப்பாவிகளை திட்டுறதை தாங்க முடியாம ப்ளாக் பொங்கி எழுந்து எல்லாத்தையும் தூக்கிடுச்சு... ஹி ஹி ஹி

@ LK - //இனி உன்னை அப்பாவின்னு கூப்பிட மாட்டேன். பாவம் உன் ரங்க்ஸ்.. //
நீ கூப்பிடலைனாலும் நான் அப்பாவிங்கறது ஊர் அறிந்த உண்மை... உண்மை.... உண்மை...

அப்பாவி தங்கமணி said...

@ வித்யா - முதல் வருகைக்கி நன்றி வித்யா... வாழ்த்துக்கு நன்றிங்க

@ அமைதிச்சாரல் - போங்க அக்கா உங்களுக்கு எப்ப பாரு ஜோக் தான்.. ஹி ஹி ஹி

@ //அமைதிச்சாரல் சொன்னது… மொதல்ல போட்ட கமெண்டை காக்கா தூக்கிட்டு போயிடுச்சா அப்பாவியக்கா????...... //
இல்லைங்கோ... சில அடப்பாவி ரங்கமணிகளின் சதி இது ....

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - இது ரெம்ப அநியாயம்... நீங்க எங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணனும்... இல்லேனா இப்பவே உங்க வீட்டுக்கு இந்த கமெண்ட் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பப்படும்... அதுக்கு மேல உங்க இஷ்டம்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ புதுகைத் தென்றல் - ரெம்ப நன்றிங்க.... ஐ... நான் துணை பேராசிரியை... கேக்கவே ஜில்லுனு இருக்கு போங்க... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்... அனுப்புங்க அனுப்புங்க எல்லாரையும் அனுப்புங்க... நன்றிங்க... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ kunthavai - ஹி ஹி ஹி... நான் உண்மைய தானுங்க சொன்னேன்...
//நான் ஆபிஸில் லூசு மாதிரி சிரித்துக்கொண்டே இருந்தேன்//
இதெல்லாம் ஆபீஸ்ல சகஜமுங்க... ஹி ஹி ஹி

@ //அபி அப்பா - அய்யோ என் கமெண்ட் எங்க காணூம்? //
உங்க தங்கமணி ஆர்டர், தூக்க சொல்லிடாங்க....ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ஆதிமூலகிருஷ்ணன் - வாங்கண்ணா...வாங்க... புதுகை அக்கா உங்கள அனுப்பறேன்னு சொல்லிட்டு போனாக... ரெம்ப நன்றிங்க...

@ பிரசன்னா - தேங்க்ஸ் பிரசன்னா... என்ன சார் சொந்த அனுபவமா?

@ கண்ணகி ௦- தேங்க்ஸ் கண்ணகி... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ தனி காட்டு ராஜா - தனி காட்டு ராஜாவே... திருமணம் எல்லாம் ஆகி ஆச்சுங்க... அப்புறம் நான் தான் தங்கமணிங்க... அதுவும் அப்பாவி... ஹா ஹா ஹா

@ venkatesh - ரெம்ப நன்றிங்க வெங்கடேஷ்

@ mansu - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்... என்னதிது? கமெண்ட்லையே பதிவு போட்டுடீங்க... இது எல்லாம் ஒத்துக்க மாட்டோம்... தங்கமணிகள் தான் எப்பவும் அப்பாவிகள்... (ஆனாலும் ரெம்ப யோசிச்சு நல்லா கற்பனையா எழுதி இருக்கீங்க... ஹா ஹா அஹ)

அப்பாவி தங்கமணி said...

@ VELU.G - ரெம்ப நன்றிங்க... ஆஹா.. நீங்க ரெம்ப நல்லவருங்க... உண்மைன்னு ஒத்துகிட்டீங்களே... ஹா ஹா ஹா

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு. - தேங்க்ஸ்ங்க

@ வெண்ணிற இரவுகள்....! - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - ரெம்ப நன்றி சந்த்யா....தங்கைக்கு பாப்பா வந்தாச்சு... அம்மாவும் பாப்பாவும் நலம்... கேட்டதுல ரெம்ப சந்தோசங்க...

@ SenthilMohan K Appaji - இல்ல 400 பேரு மண்டை காஞ்சாலும் சந்தோஷம் தான்... ஓ அப்படியா... forward mail முடிஞ்சா அனுப்பி விடுங்க... இன்னும் நல்லா தேத்தலாம்

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

அப்பாவி தங்கமணி said...

@ Mrs.Menagasathia - ரெம்ப நன்றிங்க... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ அறிவிலி - ஆஹா...என்னங்கண்ணா ரெம்ப நாளா ஆளே காணோம்... ப்ளாக் ஆரம்பிச்சப்ப வந்தது... ஒரு தொடர் பதிவுக்கு கூப்ட்டேன்னு எஸ்கேப் ஆயடீங்களே... ஒகே ஒகே... நன்றிங்க மறு வருகைக்கு ... ஆனா ரங்கமணிகள் பொங்கினாலும் ஒண்ணும் பண்றதுகில்லைங்க....ஏன்னா நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை தவிர வேறில்லை...

//நாமெல்லாம் பார்ட்டியும் கூத்துமாகவே இருப்பதுபோல் எழுதுவதெல்லாம் பெண்ணாதிக்க சிந்தனை//
உண்மைய சொன்னா பெண்ணாதிக்க சிந்தனைனா எப்படிங்க பாஸ்? ஹையோ ஹையோ

அப்பாவி தங்கமணி said...

@ pinkyrose - ஹா ஹா ஹா தேங்க்ஸ் pinky ... உங்க ப்ளாக் நல்லா இருக்குங்க... நெறைய எழுதுங்க

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - சீரியஸ்னு பேரு வெச்சு இருந்தாலும் சிரிச்சுடீங்க... நன்றிங்க... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் -
//உங்களுக்கு அப்பாவி தங்கமணி பட்டம் கொடுத்தவங்க விலாசம் கிடைக்குமா ? //
அதெல்லாம் பிறவியிலேயே வர்றதுங்க... இதுக்கெல்லாம் விலாசம் கேட்டா எப்படிங்க...
//போன பின்னூட்டம் எங்கே? //
பொய் சொன்னா உங்க பின்னூட்டம் தானே மறைஞ்சு போயிடுமாம்... ஹா ஹா அஹ

@ ஸ்ரீராம்.- நன்றிங்க ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

@ அநன்யா மஹாதேவன் - வா வா வா... ஊருல எல்லாரும் சுகமா அம்மணி... நூத்துக்கு நூறு இல்ல நூத்துக்கு எறநூறு உண்மை... நன்றி நன்றி நன்றி..
//rangsgalukku kalyanathukku munnaadi naama treasure, kalyanathukkappuram trash! //
ஹா ஹா அஹ

@ நாடோடிப் பையன் - நன்றிங்க...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் - நீ சிக்கற வரைக்கும் இப்படி தான் பேசுவா... அப்புறம் வந்து "ஐயோ அக்கா காப்பாத்துங்க... டிப்ஸ் குடுங்க"னு வருவ இல்ல...அப்ப பேசிக்கறோம் உன்னை...வாழ்த்துக்கு நன்றிங்க அம்மணி... அம்மா தாயே... இட்லி வேண்டாம்...மீ எஸ்கேப்... ஹா ஹா ஹா

@ தக்குடுபாண்டி - என்னையும் உன்னை மாதிரியே அனுபவ பதிவர்னு நெனச்சா எப்படி தக்குடு? ஹா ஹா ஹா... பாஸ்டன் நாட்டாமை முக்கியமான வேலையா இருக்கார் போல...

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - சொந்த நொந்த அனுபவம்னும் சொல்லலாம்ங்க...
//இதைப் பார்த்துட்டு தான் நம்ம பின்னூட்ட புயல் அங்கே ஒரு சங்கம் ஆரம்பிச்சாரோ?????? // எஸ் எஸ்..அதே அதே... நன்றி வானதி

@ //vgr - adengappa...enna oru araichi...inda 7 situations kum reason theiyumo..."taken for granted than" k.mum ponnu sikkumo sikkadonu bayam...k.pin lifelong sikkidiche...adan :) //
well said vgr ... "taken for granted " the opt word ... ஹா ஹா ஹா
//ide mari k.mun/k.pin wives kum ezhudavum :) //
எங்களை பத்தி என்னங்க சொல்றது... நாங்களே ஐயோ பாவம்...

@ ஸாதிகா - ஹி ஹி ஹி... எல்லாம் அப்படி தானுங்க... ஹா ஹா ஹா

அனாமிகா துவாரகன் said...

//நீ சிக்கற வரைக்கும் இப்படி தான் பேசுவா... அப்புறம் வந்து "ஐயோ அக்கா காப்பாத்துங்க... டிப்ஸ் குடுங்க"னு வருவ இல்ல...அப்ப பேசிக்கறோம் உன்னை...//
வெவ்வெவே. ஐயாம் கோயிங் டு பிக்கம் எ நன். ஹா ஹா ஹா. இப்ப என்ன பண்ணுவேள். ஹா ஹா ஹா. ஓ ஹோ ஹோ. ஊ ஹூ ஹூ. காஹாக்காஹ.

Ana

thenammailakshmanan said...

ஏழுக்கு மேல எழுதினா ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கறதாவும் அதோட விளைவா ஆட்டோ இல்ல லாரியே வரும்னும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் வந்தபடியால் அப்பாவி தங்கமணி உங்களிடம் இருந்து விடை மற்றும் வடை பெறுகிறாள்.... எஸ்கேப்......//

ஹாஹாஹா இதுதான் ஹைலைட் தங்கமணி..:))

SenthilMohan said...

அக்கோவ், உங்கள மாதிரியே ஒருத்தரு. ஆனா அப்படியே Opposite-ட்டு. புரியலீங்ளா?
ஒரு ரங்கமணியோட Blog-அநேத்து இன்னொருத்தங்க Intro பண்ணிவிட்டாங்க. எனக்கென்னமோ உங்களுக்கு intro பண்ணி விடணும்னு தோணிச்சு. அவ்ளோதாங்க்கா... வேற உள்,வெளிக் குத்தெல்லாம் ஒன்னும் இல்லீங். நேரம் இருக்கும் போது போய்ப் பாருங்க. உங்கள மாதிரி தங்கமணிகளப் பத்தி கொஞ்சம் எழுதியிருக்கிறாரு.
Sample I
Sample II

பொறவு உங்க பொறந்த நாளன்னிக்கே உங்க ஊட்டு இன்னொரு அக்காவுக்கு(ஹூம்... என்னங்க்கா பண்றது. அவங்களுக்கும் நான் தம்பியாப் போயிட்டனுங்களே.) Delivery ஆயிட்டுதுங்களா? ஒரு வார்த்தை கூட சொல்லாம உட்டுட்டீங்ளேக்கா.

அப்பாவி தங்கமணி said...

@//அனாமிகா துவாரகன் சொன்னது… வெவ்வெவே. ஐயாம் கோயிங் டு பிக்கம் எ நன். ஹா ஹா ஹா. இப்ப என்ன பண்ணுவேள். ஹா ஹா ஹா. ஓ ஹோ ஹோ. ஊ ஹூ ஹூ. காஹாக்காஹ//
ஆத்தா மகமாயி... நீ நல்லா பேசினாலே புரியாது... இது என்ன language வெவ்வெவே ஹாக்காஹ... ஐயோ பயமா இருக்குங்க...யாராச்சும் காப்பாத்துங்க...

@ thenammailakshmanan - முதல் வருகைக்கு நன்றிங்க... ஹா ஹா ஹா

@ SenthilMohan - சூப்பர் லிங்க்... ஒரு பதிவு போட ஐடியா குடுத்ததுக்கு நன்றிங்கோ... ஹா ஹா ஹா... (மாட்டிகிட்டீங்களா...ஹா ஹா ஹா...ஹையோ ஹையோ...)

அனாமிகா துவாரகன் said...

வெவ்வெவேன்னா பழிப்பு காட்டறது. ஐ யாம் கோயிங் டு பிக்கம் எ நன்னா நான் கன்னியாத்ரியாக போகப்போறேன்னு அர்த்தம். மத்தது எல்லாம் நான் சிரிக்கற ஸ்டைல்.

SenthilMohan said...

//* அனாமிகா துவாரகன் சொன்னது.. ஐயாம் கோயிங் டு பிக்கம் எ நன்**/
ஒரு ரங்ஸ் esc....

வழிப்போக்கன் said...

சும்மா தங்கமணிகளும் ரங்கமணிகளும் சண்டை போட்டு காதிங்கப்பா.
- பிரமச்சாரி

BalajiVenkat said...

இந்த ஞாயிற்று கிழமை தான் நான் என் cousin ஒருத்தனுக்கும் அவன் wifekum ஒரு பஞ்சாயத்து வச்சேன்.. திடீர்னு பாத்தா இங்க அடப்பாவி தங்கமணி க மு / க பி அப்படின்னு ஒரு தலைப்புல விலாவரியா விவரிச்சுருகாங்க... என் cousin சொன்ன ஒரே வார்த்த இவங்க இப்படி இருக்கறதுல பாதிக்கப்படறது என் லைப் தான அப்படிங்கறது.... இவளவுகும் ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யணம் பண்ணவா எந்த சொல்றது...

actualla இந்த பின்னூட்டம் யார் சரி அப்படிங்கறதுக்காக போடல... but some thing is going on without mutual understanding... சில விஷயங்கள நான் வெளிப்படையா சொல்லி உங்க ஜாலி மூட கெடுத்துட்டேன் ... sorry for that ....

BalajiVenkat said...

but ivlo partha pinnadiyum ... kalyanamgrathu avlo easy illanu therincha pinnadiyum... en manasu (not only my manasu )kalyanam panika aasapdrathey yyyyyyy...... :P yaarachum ssnthegatha theerthu vaingolen.. im asking instead of the bachelors without hesitation..... :D

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - எல்லாம் மொதலே புரிஞ்சது சாமி... சும்மா உன்கிட்ட வம்பு பண்ணினேன்... ஹி ஹி ஹி... நீ Nun ஆக போறியா...சூப்பர்.... அப்படி ஒரு மனுஷன் எஸ்கேப்....

@ SenthilMohan - சூப்பர் செந்தில்... (ஒரு டவுட்.. நீங்க செந்தில்ஆ இல்ல மோகன்ஆ....ஒரு பேரை சொல்லுங்க பாஸ்...)

@ வழிப்போக்கன் - அடப்பாவமே... அப்பாவி மனைவி பத்தி கவிதை எல்லாம் எழுதறீங்க ... பிரம்மச்சாரி யா ...அது சரி...சண்டை எல்லாம் இல்லிங்க... சும்மா லுலுலாயி கலாட்டா தான்...

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - வேற்றுமை இருந்தா தான் வாழ்க்கை ருசிக்கும்... சொல்றதுக்கெல்லாம் சரி சரினு சொல்ற கணவன் அல்லது மனைவி இருந்தா சலிச்சு போய்டும்...இதான் உண்மை... வேற்றுமைக்கு சலிசுக்கறது எல்லாம் சும்மா இப்படி கிண்டல்க்கு தான்...
// சில விஷயங்கள நான் வெளிப்படையா சொல்லி உங்க ஜாலி மூட கெடுத்துட்டேன்//
அப்படி எல்லாம் இல்ல பாலாஜி... நெனச்சிட சொல்லத்தானே ப்ளாக்... நோ problem

//BalajiVenkat சொன்னது… but ivlo partha pinnadiyum ... kalyanamgrathu avlo easy illanu therincha pinnadiyum... en manasu (not only my manasu )kalyanam panika aasapdrathey yyyyyyy //

பாலாஜி - விசு ஒரு படத்துல சொல்லுவார் தெரியுமா... இந்த wife க கூட இருந்தாலும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம்னு ... அதான் மேட்டர்... ஒகே வா.. இன்னும் டவுட்னா LK அண்ணா பாஸ்டன் அண்ணா மாதிரி வயசான ரங்க்ஸ் கிட்ட கேட்டுக்கோ... ஹா ஹா அஹ

SenthilMohan said...

//*நீங்க செந்தில்ஆ இல்ல மோகன்ஆ**/
அடக் கொடுமையே. கலாய்க்குறதுக்கு ஒரு அளவுமுறை இல்லாம போச்சேடா மோகா. ஏங்க உங்கள மாதிரி தனித்தனியாவா போட்டிருக்கேன். செந்தில்மோகன்-ன்னு ஒண்ணாத்தான போட்டிருக்கேன். ஒரே பேருதான்.

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan - ஒகே ஒகே.... செந்தில்மோகன் ஒகே வா....ஹா ஹா ஹா

priya.r said...

குந்தவை சொன்னார் இந்த தங்கமணி ரொம்பவும் சிரிக்க வைக்கிறார் என்று .
நானும் அதை வழி மொழிகிறேன் !
நேரம் கிடைக்கும் போது எல்லாம் உங்களின் பழைய பதிவுகளை ஒன்று ஒன்றாக படித்து வருகிறேன் .
ரொம்ப தாமதமாக பின்னூட்டம் இடுவதால் கோபித்து கொள்ள மாட்டீர்களே!

அப்பாவி தங்கமணி said...

priya.r - ரெம்ப நன்றிங்க ப்ரியா... குந்தவை அக்காவுக்கும் தேங்க்ஸ்... ஊர்ல இருந்து வந்துட்டாங்களா? மெதுவா நேரம் கெடைக்கறப்ப படிங்க...உங்க கமெண்ட் பாத்ததுல ரெம்ப ரெம்ப சந்தோஷம் ப்ரியா...

//ரொம்ப தாமதமாக பின்னூட்டம் இடுவதால் கோபித்து கொள்ள மாட்டீர்களே!//
அச்சோ... இதுக்கெல்லாம் கோச்சுபாங்களா... நெவர்.... ரெம்ப ரெம்ப சந்தோஷம்...நன்றி ப்ரியா

priya.r said...

ஆஹா ! நாங்கள் தான் உங்களுக்கு நன்றிகள் சொல்ல வேண்டும்பா. பதிவு எழுதி இரசிக்க வைப்பது மட்டும் அல்லாமல் பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதி சந்தோஷ படுத்தியதற்கு எங்களது நன்றிகள்.

ஆமாம் குந்தவை கோடை விடுமுறையை இன்னும் கொண்டாடி கொண்டு தான் இருக்கிறார் .தினமும் அலைபேசியில் பேசி கொண்டு தான் இருக்கிறோம் .அவர் குவைத் திரும்ப இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன.
நேற்று பேசிக்கொண்டு இருந்தபோது பாட்டி,பேத்தி என்று பின்னூட்டம் எழுதியதை நினைவு கூர்ந்து சிரித்தார் .அவரின் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்க சொன்னார் புவனா! எனது வாழ்த்துகளும் கூட தான் !

மற்றபடி இன்று உங்களின் "பயணம்" படித்தேன் .SV கோவில் பற்றி படிக்கும் போது மேட்டுபாளையம் அருகில் உள்ள தென் திருப்பதி கோவில் நினைவுக்கு வந்தது.தரிசனம் செய்த போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் இனி வரும் அதன் தொடர்ச்சியில் எழுதுங்கள் .மருதாணி வைத்த கை கொள்ளை அழகு !
திருமண நாள் வாழ்த்துக்கள் புவனா .

//உங்க கமெண்ட் பாத்ததுல ரெம்ப ரெம்ப சந்தோஷம் ப்ரியா...//

எனக்கும் தான் ! நானும் (சொல்ல நினைத்தது) தான் ! :)

அப்பாவி தங்கமணி said...

@ Priya . r - நன்றிங்க ப்ரியா... குந்தவை பாட்டிய ரெம்ப ரெம்ப விசாரிச்சதா சொல்லுங்க... ஓ... மேட்டுபாளையம் தென் திருப்தி கோவிலா? நானும் நெறைய வாட்டி போய் இருக்கேன். நீங்களும் நம்ம ஊரு தானா? ரெம்ப சந்தோஷம்... திருமண நாள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ப்ரியா...

priya.r said...

ஆமாங்க புவனா.,கூடவே மொண்டி பாளையம் பெருமாள் கோவில் ,காரமடை ஸ்ரீரங்க நாதர் கோவிலையும் ஏகாதேசியான இன்று நினைவு கூர்வோம் !
//குந்தவை பாட்டிய ரெம்ப ரெம்ப விசாரிச்சதா சொல்லுங்க?/
சொல்லிவிட்டேன்பா! அவருக்கு ஒரே சந்தோசம் ;சிரிப்பும் கூட சேர்ந்து கொண்டது .,கூடுதலாக " பாட்டி" கவிதையை அவருக்கும் சமர்ப்பணம் செய்யும் திட்டம் இருப்பின் ,உங்கள் சார்பாக அதையும் கூட அவரிடம் சொல்லி விடுகிறேன் .போதுமா !

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப ரெம்ப நன்றிங்க ப்ரியா... ரெம்ப சந்தோஷம்பா...

கூகிள்சிறி .கொம் said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment