Friday, August 13, 2010

அதே கண்கள்... (பகுதி 5 )


பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சூர்யா பதறியவனாய் "என்ன சார்... என்ன கேஸ்? ப்ளீஸ் டெல் மீ" என்றான்

"மிஸ்டர் சூர்யா ... அந்த 13 ம் நம்பர் ரூம்ல கடந்த மூணு மாசத்துல மூணு பேரு மர்மமான முறைல இறந்து போய் இருக்காங்க... அதுக்கு என்ன காரணம்னு இன்னும் investigation நடந்துட்டு இருக்கு...இது தெரியாம நீங்க அந்த ரூம்ல தங்கி இருக்கீங்க... பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... நியூஸ் எல்லாம் பாக்கறதில்லையா?"

"ஐயோ... என்ன சார் சொல்றீங்க... ? நான் இந்த ஊர் இல்ல... இந்த நியூஸ் நான் எதுலயும் பாக்கலையே... ஐயோ... இப்ப என்ன செய்வேன்...சுமி... எங்க இருக்க நீ" என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு தயாரானான்

"காம் டௌன் மிஸ்டர் சூர்யா... லெட்ஸ் ஹோப் நத்திங் பாட் happened " என மனித நேயத்துடன் அவனை சமாதானம் செய்தார் அந்த காவல் துறை அதிகாரி

"சார் ப்ளீஸ்... என் மனைவிய கண்டுபிடிச்சு குடுங்க"

"ஸூர்... எவ்ளோ நேரமா உங்க மனைவிய காணோம்"

"கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் சார்"

"வாட்... இவ்ளோ நேரம் என்ன செஞ்சீங்க?"

"பக்கத்துல எங்கயாச்சும் போய் இருப்பான்னு எல்லா எடமும் தேடினேன் சார்"

"ஒகே...மொதல்ல ஹோட்டல்ல ஒரு ரவுண்டு பாத்துட்டு இந்த ஏரியால ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடலாம்... அனேகமா பக்கத்துல எங்கயாச்சும் போய் இருந்தாலும் இருப்பாங்க... "

"சார் நான் இந்த ஏரியா பூரா பாத்துட்டேன் சார்... சின்ன சின்ன சந்து கூட நடந்து போய் பாத்தேன்... எங்கயும் காணோம் சார்... பயமா இருக்கு சார்" என கலங்கினான் சூர்யா

"நீங்க பாத்து இருந்தாலும் இட்ஸ் மை டூட்டி... நீங்களும் என்னோட வரணும்"

"ஸூர் சார்..." என்ற சூர்யா இன்ஸ்பெக்டர் உடன் சென்றான்

ஒரு மணி நேரத்திற்கும் மேல் அந்த ஏரியா முழுக்க தேடியும் சுமேதாவை எங்கும் காணவில்லை.

"சார்... எனக்கு ரெம்ப பயமா இருக்கு... சுமி ரெம்ப பயந்த சுபாவம்... இந்த எடத்துக்கெல்லாம் தனியா வந்தே இருக்க மாட்டா" என்றான் சூர்யா

"அப்படி நிச்சியமா சொல்ல முடியாது... நீங்க ஊட்டிக்கு வந்ததுல இருந்து என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

சூர்யா நடந்தது ஒன்று விடாமல் கூறினான்

"ஒகே... நீங்க இருந்த ரூம்ல எதாச்சும் தடயம் கெடைக்குதான்னு பாப்போம்..."

"சார் ப்ளீஸ்... அந்த மூணு கேஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... ?" என்றான் சூர்யா

"அது... மொதல் கேஸ் உங்கள போல ஒரு யெங் கபில் தான்... அவங்க ஹோட்டல்க்கு வந்த ரெண்டு நாளுல மனைவி கொலை செய்யபட்டு இருந்தாங்க. இன்னொரு கேஸ் ஒரு பிசினஸ்மேன். அடுத்தது ஒரு பாமிலி...அவங்க சின்ன கொழந்த கொலை செய்யப்பட்டு கிடந்தது"

"ஐயோ என்ன சார் சொல்றீங்க" என சூர்யா பதற

"அப்படி எதுவும் ஆகி இருக்காது... லெட்ஸ் பி பாசிடிவ்"

"இங்க ஆவி நடமாட்டம் இருக்கறதா அந்த ஆளு கண்ணன் வேற பயமுறுத்தினான் சார்"

"புல் ஷிட் ... நீங்க படிச்சவர் தானே... இந்த மூட நம்பிக்கை கதைகள் எல்லாம் நம்பறீங்களா?" என கடிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர்

"நாம பயத்துல இருக்கறப்ப என்ன சொன்னாலும் நம்பற மனநிலை தான் இருக்கு சார்... ப்ளீஸ் சார்... சுமேதாவ எப்படியாச்சும் கண்டுபிடிங்க ப்ளீஸ்..."

"கண்டிப்பா.." என்றவர் கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்து விபரம் கூறி செக்க்போஸ்ட்ல் எல்லாம் பார்க்க சொல்லிவிட்டு ஹோட்டல் நோக்கி ஜீப்பை செலுத்தினார்

___________________

"சூர்யா... இந்த ரூம்ல உங்க பொருள் ஏதாவது மிஸ் ஆனா மாதிரி தெரியுதா?"

"இல்ல சார்... நாங்க கொண்டு வந்ததே இந்த ரெண்டு சூட்கேஸ் தான்.... அது அப்படியே இருக்கு"

"சூட்கேஸ் ஓபன் கூட பண்ணல போல இருக்கே. நீங்க கார்க்கு செல்போன் எடுக்க போனப்ப உங்க மனைவி குளிக்க போக போறதா சொன்னதா சொன்னீங்க இல்லையா?"

"எஸ் சார்"

"ஆனா சூட்கேஸ் பூட்டு கூட திறக்கலியே"

அப்போது தான் அதை கவனித்தான் சூர்யா....

"ஒருவேளை...குளிக்க போறதுக்கு முன்னாடியே அவ கடத்தப்பட்டு இருப்பாளோ?"

"கடத்தல் தான்னு எப்படி உறுதியா சொல்றீங்க சூர்யா?" என்றார் இன்ஸ்பெக்டர் போலீஸ் பார்வையுடன்

"என்ன சார் இது? என்னை குற்றவாளி மாதிரி விசாரிக்கறீங்க?"

"அது எங்க டூட்டி மிஸ்டர் சூர்யா...சொல்லுங்க... உங்களுக்கு யாரு மேலயாச்சும் சந்தேகம் இருக்கா... உங்களுக்கோ உங்க மனைவிக்கோ வேண்டாதவங்க யாராச்சும் இருக்காங்களா?"

"அப்படி யாரும் இல்ல சார்..."

"உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ வருஷம் ஆச்சு..."

"எங்களுக்கு நேத்து தான் கல்யாணம் ஆச்சு சார்... "

ஒரு நிமிடம் திகைத்த இன்ஸ்பெக்டர் "ஒ... ஐ சி... இந்த பர்சனல் கேள்வி கேக்கறதுக்கு மன்னிக்கணும்"

"கேளுங்க சார்"

"உங்களுக்கு.... முதல் இரவு நடந்ததா..."

"அது... அது வந்து..." என சூர்யா தடுமாற

"சூர்யா.. ஐ நோ திஸ் இஸ் என் எம்பாரசிங் கொஸ்டின்... பட் இந்த கேஸ்க்கு வேண்டியதால தான் கேக்கறேன்...."

"இல்ல சார்... அவ ரெம்ப டயர்ட்ஆ இருந்தா... அதனால கம்பெல் பண்ணல"

"நீங்க உண்மைய சொல்ல வேண்டியது ரெம்ப முக்கியம் மிஸ்டர் சூர்யா... இல்லேனா உங்க மனைவிய என்னால கண்டுபிடிக்க முடியாது... உங்களுக்குள்ள எதாச்சும் பிரச்சனையா"

"ஐயோ இல்ல சார்... அப்படி எதுவும் இல்ல..."

"ஒகே... நான் இப்ப கேக்கபோற கேள்வி உங்கள கோபப்படுத்தலாம்... ஆனா தவிர்க்க முடியாது...உங்க மனைவிக்கு திருமணத்துக்கு முன்னாடி காதல் ஏதாவது....." இன்ஸ்பெக்டர் முடிக்கும் முன்

"இன்ஸ்பெக்டர்... வரம்பு மீறுறீங்க..." என பாய்ந்தான் சூர்யா

"சூர்யா... நீங்க விசாரணைக்கு ஒத்துழைக்கலைனா என்னால ஒண்ணும் பண்ண முடியாது"

"சாரி இன்ஸ்பெக்டர்... என்னோட சுமேதா அப்படிபட்டவ இல்ல"

"கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆச்சுனு சொன்னீங்க...இவ்ளோ நம்பிக்கையா? அதுவும் இல்லாம காதலிக்கறது கொலை குற்றம் இல்லையே மிஸ்டர் சூர்யா"

"சார்... எங்களுக்கு கல்யாணம் முடிவாகி மூணு மாசம் கழிச்சு தான் கல்யாணம் ஆச்சு... இந்த மூணு மாசத்துல நான் சுமேதாவ சந்திக்காம இருந்த நாட்கள் ரெம்ப கம்மி... அவளும் என்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணிகிட்டானு எனக்கு நிச்சியமா தெரியும்...அதுல எந்த சந்தேகமும் இல்ல..."

"ஒகே... ஆனா... கல்யாணம் ஆன மறுநாள் உங்க மனைவி காணாம போய் இருக்காங்கன்னா சட்டரீதியா முதல் சந்தேகம் உங்க மேல தான் வரும்..."

"இன்ஸ்பெக்டர்... அந்த மூணு கேஸ்ஐ நீங்க கண்டுபிடிச்சு இருந்தா ஒருவேளை இப்படி ஒரு விபரீதம் நடக்காமையே இருந்து இருக்கும்... உங்க டிபார்ட்மென்ட் டுட்டியை ஒழுங்கா செய்யாம என்மேல தப்பு கண்டுபிடிக்க பாக்கறீங்களா... இப்படி தான் எல்லா கேஸ்யையும் திசை திருப்பி ஈஸியா கேஸ்ஐ க்ளோஸ் பண்ணுவீங்க போல இருக்கு"" என கோபமானான் சூர்யா

"மிஸ்டர்... எங்க டூட்டிய நாங்க செஞ்சுட்டு தான் இருக்கோம்... உங்க அட்வைஸ் எனக்கு தேவை இல்ல... நான் சட்டப்படி உள்ளத சொன்னேன்... வரதட்சணை பிரச்சனயோங்கர கோணத்துல தான் முதல் விசாரணை இருக்கும். உண்மைய சொல்லுங்க எதாச்சும் பிரச்சனையா உங்க ரெண்டு பேருக்குள்ள" என மறுபடியும் மிரட்டும் தொனியில் கேட்டார் இன்ஸ்பெக்டர்

"இன்ஸ்பெக்டர்... நீங்க ஏன் இப்படி பேசறீங்கன்னு எனக்கு புரியுது... இந்த கேள்விக்கு நான் பயந்து உளறினா என் மேல தான் தப்புங்கற கோணத்துல விசாரிக்க தானே" என சூர்யா கேட்க அவனது மடக்கிய பேச்சில் மௌனமானார் இன்ஸ்பெக்டர்

"இன்ஸ்பெக்டர்... நீங்க என்னை சந்தேகப்பட்டு நேரத்த விரயம் பண்ணிடாதீங்க... அப்படி எதுவும் இல்ல சார்... ப்ளீஸ்... நம்புங்க... என்னோட சுமேதா என்ன விதமான ஆபத்துல இருக்கானு தெரியல... இப்படி நேரத்த வேஸ்ட் பண்றது ரிஸ்க் சார் " என கண்கள் பனிக்க கூற

"ஒகே மிஸ்டர் சூர்யா... உங்க மனைவி மேல உங்களுக்கு இருக்கற நம்பிகைய பாராட்டுறேன்... உங்க மனைவி செல்போன்க்கு மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்க ஒரு முறை"

Switched off என்றே பதில் வந்தது

"நீங்க சொல்ற மாதிரி கடத்தபட்டு இருந்தா, அதுக்கு ஒரு மோடிவ் இருக்கணும்... பணம் அல்லது பகை அல்லது.... பெண்"

"என்ன சார் சொல்றீங்க?"

"பணமா இருக்கும்னு எனக்கு தோணல...அப்படி இருந்தா இந்த பேட்டிகள் உடைக்கப்பட்டு இருக்கணும்... பகை எதுவும் இல்லைன்னு நீங்க சொல்றீங்க... ஒருவேளை... உங்க மனைவி நெறைய நகை போட்டு இருந்தாங்களா... நேத்து தான் கல்யாணமாச்சுனு சொன்னீங்க இல்ல..."

"இல்ல சார்...சுமிக்கு நகைல ரெம்ப இண்டரெஸ்ட் இல்ல... ஒரு செயின் மட்டும் தான் போட்டு இருந்தா... அப்புறம் தாலி... அவ்ளோ தான்..."

"எதுக்கும் உங்க மாமனார் வீட்டுக்கு ஒரு போன் பண்ணி பாருங்களேன். அங்க எதுனா போன் பண்ணினாங்களான்னு"

"சார்....இந்த நேரத்துல... போன் பண்ணி காணோம்னு சொன்னா... என்ன சார் நெனைப்பாங்க? ரெம்ப பயந்துடுவாங்க சார்"

"மிஸ்டர் சூர்யா... இப்ப உங்க கெளரவம் முக்கியமா... இல்ல உங்க மனைவிய கண்டுபிடிக்கறது முக்கியமா?"

"சார்..."

"அப்போ உங்ககிட்ட தான் ஏதோ தப்புனு எனக்கு சந்தேகம் வருது"

"ஐயோ... என்ன சார் இது? ப்ளாக்மெயில் பண்றீங்க... இதோ இப்பவே பேசறேன்..."

சுமேதாவின் வீட்டு தொலைபேசி அந்த அகால நேரத்தில் அலறியது

தொலைபேசியை எடுத்த சுமேதாவின் அன்னை விசியம் கேள்விபட்டதும் அங்கேயே மயங்கி விழுந்தாள்

அவளது அண்ணன் முதலில் அதிர்ச்சியில் பேச மறந்து, சுமேதா அங்கே அழைக்கவில்லை என்பதை உரைத்து உடனே தான் கிளம்பி வருவதாகவும் கூறினான்

___________________

ஸ்டேஷன்க்கு அழைத்து சென்று இரவு முழுவதும் சூர்யாவை பல கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்தார் இன்ஸ்பெக்டர். அவருக்கு சூர்யாவின் மேல் இருந்த சந்தேகம் விலகவில்லை

சுமேதாவின் அண்ணன் வந்து சேர்ந்தான்

"சுமி எங்க சூர்யா?" என கோபமாய் கேட்க, அவன் கோபத்தை தவிப்பு என புரிந்துகொண்ட சூர்யா நடந்ததை எல்லாம் கூற தொடங்கினான்

அதை கேட்கும் பொறுமை அற்ற சுரேஷ் "டேய்... உண்மைய சொல்லுடா...என் தங்கச்சிய என்ன பண்ணின... ? உன்ன சும்மா விட மாட்டேன்" என சூர்யாவின் சட்டையை பிடிக்க

"சுரேஷ்...என்ன ஒளர்ரீங்க... சுமி காணாம போனதுல உங்கள விட பாதிக்கபட்டவன் நான் தான். பைத்தியகாரதனமா பேசாதீங்க" என எகிற

"ஸ்டாப் இட் ஐ சே... உங்க மாமன் மச்சான் சண்டை எல்லாம் வீட்டுல போய் வெச்சுகோங்க... இது போலீஸ் ஸ்டேஷன்... ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட்ருவேன் ஆமா" என இன்ஸ்பெக்டர் எகிறினார்

சுரேஷ்டமும் விசாரணை செய்யப்பட்டது

காலை கதிரவன் கவலை இன்றி விடிய... அங்கு இருந்தவர்களின் முகத்தில் மட்டும் கவலை கொட்டி கிடந்தது

"சூர்யா... சுமேதா செல் போன் நம்பர் சொல்லுங்க... அந்த நம்பர்ல இருந்து கடைசியா கால் எதாச்சும் போய் இருக்கானு ட்ராக் பண்ணனும்.. "

சூர்யா செல் போன் எண்ணை கூற...உடனே கண்ட்ரோல் ரூமிற்கு ஆணை பறந்தது

சற்று நேரத்தில் தொலைநகலில் (fax ) சுமேதாவின் செல் போன் ட்ராக்கிங் ரிப்போர்ட் வந்தது

நேற்று இரண்டு அழைப்புகள் அந்த போன்இல் இருந்து சென்று இருந்தன... இரண்டும் ஒரே எண்ணுக்கு. அதுவும் இரவு சூர்யா கார்க்கு செல் போன் எடுக்க போனதாக சொல்லப்பட்ட அந்த நேரத்தில் செய்யப்பட்டு இருந்தது

சூர்யாவிடம் அந்த ரிப்போர்ட்ஐ குடுத்து அந்த நம்பர் பரிச்சியமானதா என கேட்க... இல்லை என தலை அசைத்தான்... அவன் முகம் வெளுத்ததை இன்ஸ்பெக்டர் கவனிக்க தவறவில்லை... யாருக்கு பேசி இருப்பாள் அதுவும் தான் சென்ற உடனே என அவன் முகம் மாறியது

சுரேஷ் அந்த செல் போன் எண்ணை பார்த்ததும் அதிர்ச்சியானான்

"சுரேஷ்...சொல்லுங்க... இந்த நம்பர் யாருன்னு தெரியுமா?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"இது... இந்த நம்பர்க்கு எதுக்கு சுமி போன் பண்ணினா... அதுவும் அந்த நேரத்துல... ..." என உளறினான் சுரேஷ்

"சுரேஷ் ப்ளீஸ்... டெல் மீ... யாரு இது..." என சூர்யா பதற

"அது...வந்து....அது...."

அடுத்த பகுதி - பகுதி 6 படிக்க - இங்கே கிளிக்கவும்


(தொடரும்...)


...

43 பேரு சொல்லி இருக்காக:

நசரேயன் said...

மொத வெட்டா ?

நசரேயன் said...

//ஆவி நடமாட்டம் இருக்கறதா //

உங்க இட்லி ஆவியா இருக்குமோ ?

நசரேயன் said...
This comment has been removed by the author.
சுசி said...

புவனாஆஆஆஆஆஆஆ..

இது ரொம்ப அநியாயம் சொல்ட்டேன்..

சீக்கிரமே தொடருங்கப்பா.. :))

Mahi said...

நல்ல சஸ்பென்ஸா போகுது கதை! நேர்ல பாக்கிற மாதிரியே சொல்றீங்க போங்க.:)

/சீக்கிரமே தொடருங்கப்பா.. :)) /ரிப்பீட்டு!

சின்ன அம்மிணி said...

இவ்வளவு கேப் விடறீங்க அடுத்த பகுதிக்கு :(

ஜெய்லானி said...

அ(ட)ப்பாவி இது என்ன திடீருன்னு தொடரும் .. நல்லா ஸ்பீடா போகுது கதை...
லேட் பண்ணாம போடுங்க. இல்லாட்டி நா உங்க மேலதான் சந்தேகப்படுவேன்.

siva said...

இது ரொம்ப அநியாயம் சொல்ட்டேன்..

--reppeatu...
nanum ungamelathan உங்க மேலதான் சந்தேகப்படுவேன். repeatu..

(தொடரும்...)

siva said...

T.V serial pola javvnunnnnnnu eluthukitu ponengana avlothan choliputen

APPAVI THANGAMANI DOWN DOWN.
APPAVI THANGAMANI DOWN DOWN.
APPAVI THANGAMANI DOWN DOWN..

siva said...

(தொடரும்...)
APPAVI THANGAMANI DOWN DOWN.
APPAVI THANGAMANI DOWN DOWN.
APPAVI THANGAMANI DOWN DOWN..
APPAVI THANGAMANI DOWN DOWN.
APPAVI THANGAMANI DOWN DOWN.
APPAVI THANGAMANI DOWN DOWN..
.(தொடரும்...)
.......
VARATA...

LK said...

sundaykulla adutha post varanum illatti .....

பத்மநாபன் said...

வசன நடை நன்றாக கை கூடி வருகிறது..பரபரப்பு வசமாக பில்டப் ஆகிவிட்டது.. சூர்யா பாவம்..நான் போன பதிவுல சொன்னத ஞாபகம்வச்சுக்கங்க.வில்லனுக்கு நினைவு படுத்திருங்க..

Arul Senapathi said...

Very nice flow.
It's getting more and more interesting now.
When can we expect the next chapter?

Thanks

வெறும்பய said...

/சீக்கிரமே தொடருங்க.. :)) /ரிப்பீட்டு!

கோவை ஆவி said...

இன்றுதான் இந்த தொடரை படிக்க ஆரம்பித்தேன். மர்மக் கதை போல் மிகவும் விறுவிறுப்பாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் சென்றது. எல்லா பகுதிகளையும் ஒரு மூச்சில் படித்துவிட்டேன்..
கதையின் களம் கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் என்பதால் நேரில் நின்று பார்க்கும் உணர்வு ஏற்பட்டதை தவிர்க்க இயலவில்லை.. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நல்ல சஸ்பென்ஸ் தொடரை படித்த திருப்தி கிடைத்தது. பின்னூட்டத்தை பலமுறை எடிட் செய்தும் நீளத்தை குறைக்க முடியவில்லை. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் எதிர்பாத்துக் காத்திருக்கிறோம் - ஆவி குடும்பத்தினர்!!!

ஸ்ரீராம். said...

சுரேஷ் யாரைப் பற்றி சொல்றார்னு இன்னும் ஒரு மாசம் கழிச்சி அடுத்த பதிவுல பார்த்துகிட்டாப் போகுது....இல்லையா?

Jey said...

நீளமான பதிவா போட்டு சீக்கிரம் முடிங்க...

சௌந்தர் said...

பதிவு நீளமா இருந்தாலும் சூப்பரா போகுது சீக்கிரம் தொடருங்க.....

யாரோ ஒருவன் said...

வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை

sandhya said...

ஒ புவனா என்ன இது இப்பிடி சஸ்பென்ஸ் வெச்சா எனா அர்த்தம் ..சீக்ரமா மீதி கதை போடுவீங்களா ப்ளீஸ் ..

asiya omar said...

அய்யோ செம சஸ்பென்ஸ் ,சீக்கிரம் எழுதுங்க,இல்ல நானும் ஊட்டிக்கு கிளம்பி போயிடுவேன்.

தமிழ் உதயம் said...

நாவலாசிரியர் அப்பாவிதங்கமணி என்று தான் உங்களை அழைக்க வேண்டும்

Ananthi said...

அடடா.. இப்படி முக்கியமான கட்டத்தில் டிவி சீரியல் மாதிரி தொடரும்.... போட்டீங்களே..

ப்ளீஸ்... சீக்கிரம் தொடருங்க.. சூப்பரா எழுதுறீங்கப்பா.. நல்ல திறமை உங்களுக்கு.. வாழ்த்துக்கள்..!!

vanathy said...

தங்ஸ், நல்லா இருக்குபா. ஆவி, பேய்ன்னு சொல்லாதீங்க. நான் பயந்தசுபாவம்.

சே.குமார் said...

சூப்பரா போகுது சீக்கிரம் தொடருங்க..!

Krishnaveni said...

romba mukkiyamaana edaththula thodaruma???????? ithu romba aniyaayam bhuvana.......excellent writing talent, keep it up

LK said...

indiraku aduthap paguthi varanum... vera ethavathu post eluthinal blog hijack seyyappadum

அமைதிச்சாரல் said...

அடுத்தபகுதி எப்ப?????????

Thenral said...

Neenga pesama serial direct pannalaam.Virurupaaga selgirathu.But mudiva seekiram sollunga.Ple........ase.Aavala irukku!

Akila said...

mmmm, romba nalla iruku....waiting for next one...

http://www.akilaskitchen.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - ஆமாங்க மொத வெட்டு தான்...ஹி ஹி ஹி... இட்லி ஆவி அங்கேயெல்லாம் போகல...

@ சுசி - சீக்கரமா தொடருறேன் சுசி... தேங்க்ஸ்

@ Mahi - தேங்க்ஸ் சுசி... ஐயோ நேர்ல எல்லாம் இப்படி பாத்தா அப்புறம் நீங்க என்னை ICU ல இல்ல பாக்கணும்... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் மகி

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மணி - என்னங்க செய்ய...ஆணி ஓவர்... (நம்புங்கப்பா...)

@ ஜெய்லானி - திடீர்னு எல்லாம் தொடரும் இல்லிங்க.. .மொதல் பகுதில இருந்தே தொடரும் தான்... ஹி ஹி ஹி... (ஜெய்லானிக்கே சுடு தண்ணியா...ஹி ஹி ஹி) அடப்பாவமே இந்த அப்பாவி மேல சந்தேகப்படலாமோ... பாவம் அப்பாவி...

@ siva - சிவா... என்ன இன்னிக்கி repeat day வா? அடப்பாவமே கமெண்ட்க்கு தொடருமா... ப்ளாக் தாங்காது சாமி... இவ்ளோ டௌன் டௌன் ஆ? ஏன் இந்த கொலை வெறி?

அப்பாவி தங்கமணி said...

@ LK - அடப்பாவமே இப்படி ஆள் ஆளுக்கு மெரட்டுறாங்களே .... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா?

@ பத்மநாபன் - நன்றிங்க... கண்டிப்பா வில்லன்கிட்ட நீங்க சொன்னதை சொல்லிடறேன்...

@ Arul Senapathi - தேங்க்ஸ் அருள்... சீக்ரம் அடுத்த பார்ட் போட்டுடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - கண்டிப்பா... நன்றிங்க

@ கோவை ஆவி- ரெம்ப நன்றிங்க... இப்படி ஆவி குடும்பத்தினர்னு போட்டு பயபடுத்தறீங்களே... ஏற்கனவே கதைல ஆவி இருக்குமோனு எல்லாரும் பயந்து போய் இருக்கோம்... ஹா ஹா ஹா... ஆமாங்க என்ன இருந்தாலும் நம்ம ஊரு எடம் பத்தி படிச்ச ஒரு தனி சந்தோஷம் தான்... தேங்க்ஸ் again

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா... நீங்க தான் சார் என்னை பத்தி நல்லா புரிஞ்சு வெச்சு இருக்கீங்க... ஹா ஹா ஹா... மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Jey - சரிங்க... சீக்கரம் போடுறேன்... நன்றிங்க ஜெய்

@ சௌந்தர் - அடப்பாவமே... என்ன கொடும சார் இது? போன வாட்டி பதிவு சின்னதா இருக்குனு ஆள் ஆளுக்கு காச்சி எடுத்தீங்கன்னு பெருசா போட்டா இப்ப பெருசா இருக்கா... என்ன கொடும சார் இது? (ஹா ஹா ஹா)

@ யாரோ ஒருவன் - கண்டிப்பா வாசிக்கறேங்க... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா... சீக்கரம் போடறேன் பா...

@ asiya omar - ஹா ஹா ஹா... ஊட்டிக்கு போறீங்களா... எனக்கும் ஒரு டிக்கெட் போடுங்க ப்ளீஸ்... ஹா ஹா ஹா... சீக்கரம் போடறேங்க... நன்றி

@ தமிழ் உதயம் - ஆஹா... பெரிய பாராட்டுங்க இது... அப்புறம் பறக்க ஆரம்பிச்சுடுவேன்... ஹா ஹா ஹா... ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ஹி ஹி ஹி... இப்படி முக்கியமான கட்டத்துல தொடரும் போட்டாதானே எல்லாரும் டென்ஷன் ஆவாங்க... ஹி ஹி ஹி... அதான்... என்னா ஒரு வில்லத்தனம்னு எல்லாம் சொல்ல கூடாது ஆமா சொல்லிட்டேன்? தேங்க்ஸ் ஆனந்தி

@ vanathy - ஹா ஹா ஹா... என்ன அம்மணி? இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? தேங்க்ஸ் பா

@ சே.குமார் - நன்றிங்க... சீக்கரம் தொடருறேன்

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - ஹா ஹா ஹா... அப்ப தானே சஸ்பென்ஸ் இருக்கும் வேணி... தேங்க்ஸ் வேணி

@ LK - ஏன் இந்த கொலை வெறி மிஸ்டர் கார்த்திக்? (மீ எஸ்கேப்...ஹா ஹா ஹா... )

@ அமைதிச்சாரல் - இந்த பகுதி எப்படி இருக்குனு நீங்க சொன்னா தான் அடுத்த பகுதி... (ஹா ஹா ஹா... இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க? )

அப்பாவி தங்கமணி said...

@ Thenral - சீரியல்ஆ? பண்ணிட்டா போச்சு... நீங்க தயாரிக்கறதா இருந்தா நான் டைரக்ட் பண்ண ரெடி... இருங்க இருங்க ஓடாதீங்க... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் தென்றல் சீக்ரம் போடறேங்க நெக்ஸ்ட் பார்ட்

@ Akila - தேங்க்ஸ் அகிலா

siva said...

39comenthan erukku..40tha erukatumey...oru coments....

Venkatesh said...

சஸ்பென்ச கொண்டு போறீங்க, அடுத்த பகுதிகாக வைடிங்!!!

vgr said...

Nalla iruku...lets see whats gonna happen next...

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஒகே... உங்க ஆசைய கெடுப்பானே... 40 ஆவே இருக்கட்டும் கமெண்ட்... ஹா ஹா ஹா

@ Venkatesh - தேங்க்ஸ்ங்க வெங்கடேஷ்

@ vgr - தேங்க்ஸ் வ்க்ர்

Post a Comment