Thursday, August 26, 2010

அதே கண்கள்... (பகுதி 6)
பகுதி 1 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 2 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 3 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 4 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 5 படிக்க - இங்கே கிளிக்கவும்
 
சுரேஷ் அந்த செல் போன் எண்ணை பார்த்ததும் அதிர்ச்சியானான்

"சுரேஷ்...சொல்லுங்க... இந்த நம்பர் யாருன்னு தெரியுமா?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"இது... இந்த நம்பர்க்கு எதுக்கு சுமி போன் பண்ணினா... அதுவும் அந்த நேரத்துல... ..." என உளறினான் சுரேஷ்

"சுரேஷ் ப்ளீஸ்... டெல் மீ... யாரு இது..." என சூர்யா பதற

"அது...வந்து....அது...."

"சுரேஷ் ப்ளீஸ் சொல்லுங்க" என சூர்யா கெஞ்ச

"இது என் கசின் கணேஷோட நம்பர்"

"கசின்னா? எப்படி உறவு?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"எங்க அத்தை மகன்" என்றான் சுரேஷ்

சூர்யாவிற்கு ஏதோ நெருடியது

"சரி... உங்க கசின் நம்பர்க்கு இப்ப ட்ரை பண்ணி பாருங்க... சுமேதா அவர்கிட்ட எதாச்சும் சொல்லி இருக்கலாம் இல்லையா" என இன்ஸ்பெக்டர் கூற சுரேஷ் தன் அலை பேசியில் இருந்து கணேஷிற்கு அழைத்தான்

சில நொடிகளுக்கு பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மறுபடியும் அழைத்தான்... இந்த முறை எடுத்ததும் துண்டிக்கப்பட்டது. மறுபடியும் அழைக்க "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது உபயோகத்தில் இல்லை" என கூறியது

சுரேஷ் சூர்யா இருவரின் முகமும் வெளிறியது

"உங்க கசின் பாமிலி கூட உங்க உறவு எப்படி... பாமிலி ப்ரோப்ளம் எதாச்சும்?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"இல்ல இன்ஸ்பெக்டர் அப்படி எதுவும் இல்ல" என்றான் சுரேஷ் நடுக்கத்துடன்

அனுபவம் வாய்ந்த இன்ஸ்பெக்டர்க்கு அவன் ஏதோ மறைப்பது போல் தோன்ற

"மிஸ்டர் சுரேஷ் நீங்க எதாச்சும் விசயம் மறைச்சா அது கூட உங்க சிஸ்டர்க்கு ஆபத்தா முடியலாம்... அதுக்கு மேல உங்க இஷ்டம்" என்றார்

"இல்ல சார்...அது"...என ஏதோ கூற வர அதற்குள் சுரேஷின் செல் போன் அலறியது. கணேஷ் தான் அழைக்கிறான் என கூறவும் "பேசுங்க...ஸ்பீக்கர்ல போடுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

"ஹலோ" என்றான்

"ஹலோ... சுரேஷ்... போன் பண்ணி இருந்தியா? சாரி சிக்னல் சரியா இல்ல... அதான் கட் ஆய்டுச்சு" என்றான் கணேஷ்

"கணேஷ்...நீ இப்ப எங்க இருக்க?"

"நான்... ஏன் கேக்கற?" என தயங்கினான்

போன் ஸ்பிக்கரில் போட்டு இருந்ததால் அதை கேட்ட இன்ஸ்பெக்டர்

"எதுவும் கூற வேண்டாம்... எங்கேன்னு கேளுங்க" என இன்ஸ்பெக்டர் ஜாடை செய்தார்

"சொல்லு... எங்க இருக்க கணேஷ்?"

"இங்க... KG தியேட்டர் பக்கத்துல... ஏன் ?" என்றான் மறுபடியும் கேள்வியாய்

பேசியை தாழ்த்தி வைத்து... என்ன செய்யணும் என இன்ஸ்பெக்டரிடம் கேட்டான் சுரேஷ்

"சுமேதா போன் செஞ்சாங்களான்னு கேளுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

"கணேஷ்... சுமி உனக்கு போன் பண்ணினாளா நேத்து?"

"...." பதில் வராமல் போக

"ஹலோ... கணேஷ் லைன்ல இருக்கியா? சுமி போன் பண்ணினாளானு கேட்டேன்" என்றான் சற்று கடுமையாய்

"...இல்ல... பண்ண...ல" என்றான் கணேஷ் நடுங்கிய குரலில்

இன்ஸ்பெக்டர்க்கு ஏதோ சந்தேகம் வர "அப்படியே பேச்சு குடுங்க... மேட்டர் சொல்ல வேண்டாம்... இந்த கால் எங்க இருந்து வருதுன்னு ட்ரேஸ் பண்ணலாம்..." என ஒரு பேப்பரில் எழுதி சுரேஷின் முன் வைத்தார் இன்ஸ்பெக்டர்

"வேற ஒண்ணும் இல்ல கணேஷ்... ஊட்டி போய் சேந்ததும் போனே காணோம்... அவ போன் கூட ரீச் ஆகல அதான் உனக்கு எதுனா கூப்டாளோனு கேக்கலானு..."

"இல்..ல...பேச..ல... "என்றவனின் குரலில் இன்னும் நடுக்கம் இருந்தது

"ஓ... அப்புறம் என்ன இன்னைக்கி KG தியேட்டர் பக்கம் மார்னிங் ஷோவா" என இயல்பாய் பேசுவது போல் பேசினான் சுரேஷ்

"அது... சும்மா.... பிரெண்ட்ஸ் பாக்கலான்னு... வந்...தேன்" என தடுமாறினான்

"இன்னிக்கி வேலைக்கி லீவா?"

"ஆமாம்..."

"ஒகே... அப்புறம் வேற என்ன?" என பேச்சை வளர்க்க முயன்றான்

"வேற... என்ன... ஒண்ணு...மில்ல... " என்றவனின் பேச்சில் இன்னும் நடுக்கம் குறையவில்லை

அதற்குள் கட்டை விரலை உயர்த்தி காட்டினார் இன்ஸ்பெக்டர்... போதும் என சொல்வது போல்

"சரி கணேஷ் அப்புறம் பேசறேன்..." என துண்டித்தான்

"என்னாச்சு இன்ஸ்பெக்டர்?" என சூர்யா பதற

"நான் சந்தேகப்பட்டது சரி தான்... உங்க கசின்கிட்ட ஏதோ தப்பு இருக்கு... இப்ப அவர் பேசினது ஊட்டில இருந்து தான்... பொட்டானிகல் கார்டன் பக்கத்துல இருக்கற டவர் பக்கத்துல காட்டுது" "நானே அங்க போய் பாக்கறேன் இன்ஸ்பெக்டர்... ஏன் இங்க இருந்துட்டு பொய் சொன்னடானு நாலு அரை விட்டு கேக்கறேன்" என கோபமாய் பேசினான் சுரேஷ்

"சுரேஷ்... அவசரப்பட்டு காரியத்த கெடுத்துடாதீங்க.. லெட்ஸ் மூவ் வைஸ்... நாம எல்லாரும் ஒண்ணாவே போகலாம்... முருகேசன் ஜீப் எடுங்க" என உத்தரவிட்டார்

ஜீப்பில் பலத்த மௌனம் நிலவியது... அந்த மௌனத்தை கலைத்தார் இன்ஸ்பெக்டர்

"சுரேஷ்... நான் இப்ப கேக்கற கேள்விக்கு நீங்க மறைக்காம உண்மைய சொல்லணும்" என இன்ஸ்பெக்டர் கேட்க

"கண்டிப்பா சார்" என்றான்

"உங்க கசின்க்கும் உங்க சிஸ்டர்க்கும் எதாச்சும்..." என இன்ஸ்பெக்டர் இழுக்க

"சார்... அது" என சுரேஷ் தயக்கமாய் சூர்யாவை பார்க்க

"ப்ளீஸ் சுரேஷ்... எதுவா இருந்தாலும் சொல்லுங்க... என்னை பத்தி யோசிக்க வேண்டாம்... இப்ப நாம லேட் பண்ற ஒரு ஒரு நிமிசமும் ரிஸ்க்" என சூர்யா கூற

"ஐயம் சாரி சூர்யா... உங்கள புரிஞ்சுக்காம... வந்ததும் என்ன என்னமோ பேசிட்டேன்...சாரி" என மன்னிப்பு கேட்க

"இதெல்லாம் அப்புறம்... மொதல்ல என்ன ப்ராப்ளம்னு சொல்லுங்க" என்றான் சூர்யா

"அது... மொதல்ல கணேஷ்க்கு சுமிய கல்யாணம் பண்றதா ஒரு பேச்சு வந்தது ... ஆனா?" என இழுக்க

"ஆனா... என்ன சொல்லுங்க" என இன்ஸ்பெக்டர் கேட்க

"எங்களுக்கு அதுல இஷ்டம் இல்ல... கணேஷ் பெரிய வேலைல எதுவும் இல்ல...அதோட சுமி அளவுக்கு படிக்கவும் இல்ல... கொஞ்சம் வசதி குறைந்த குடும்பம்... அதோட சொந்தத்துல பண்றது சரி இல்லைன்னு எல்லாருக்கும் ஒரு உறுத்தல் வேற. அதனால அந்த பேச்சு அப்படியே நின்னுடுச்சு"

"இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சது மொதல்ல யாரு... கணேஷ் வீட்லையா?"

"ஆமாம் இன்ஸ்பெக்டர் எங்க அத்தை கணேஷோட அம்மா தான் வந்து சுமிய பொண்ணு கேட்டாங்க"

"உங்க சிஸ்டர் மனசுல ஏதாவது"

"அப்படி எல்லாம் இல்ல சார்" என அவசரமாய் சொன்னான் சுரேஷ்

"ஆர் யு ஸூர். இல்லைன்னு கண்டிப்பா சொல்றீங்களா? நான் நல்ல மோடிவ்ல தான் கேக்கறேன்... ப்ளீஸ் பீ பிரான்க் சுரேஷ்" என இன்ஸ்பெக்டர் அழுத்தமாய் கேட்க

"அப்படி இருக்கும்னு தோணல சார்... " என்றவனின் குரலில் இப்போது ஸ்ருதி குறைந்து ஒலித்தது

சூர்யாவின் நிலை தான் பாவமாய் இருந்தது... மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது...

சுமி மனதில் இப்படி ஒரு ரகசியமா... இருக்காது... அப்படி இருந்தா மனசார என்கிட்ட பழகி இருக்க முடியுமா... ஆனா அவ கல்யாணம் ஆனதுல இருந்து இயல்பா இல்லியே... அவளோட ஒதுக்கத்தை அசதினு நான் தப்பு கணக்கு போட்டுடனோ... ச்சே... இல்ல என் சுமி அப்படி இல்ல... இப்படி மாற்றி மாற்றி யோசித்து கொண்டு இருந்தான் சூர்யா

அவனது யோசனையை இன்ஸ்பெக்டரின் குரல் கலைத்தது

"சூர்யா... இப்ப உங்க டர்ன்... மறைக்காம சொல்லுங்க... சுமேதாவோட நடவடிக்கைல உங்களுக்கு எதாச்சும் சந்தேகம் இருந்ததா"

"இல்ல சார்... ஆனா... கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தானு இப்ப தோணுது... மத்தபடி... என்கிட்ட அன்பா தான் இருந்தா சார்" என சொல்ல

"ஒகே... " என்ற இன்ஸ்பெக்டர் "முருகேசன்... ஜீப்பை இங்கயே நிறுத்துங்க... பொட்டனிக்கல் கார்டன்க்கு பக்கத்துல வந்தாச்சு இல்ல... " என்றவர் சுரேஷிடம் திரும்பி

"இப்ப உங்க கசின்க்கு போன் பண்ணுங்க சுரேஷ்... எதாவது பேச்சு குடுங்க... " என்றார்

போன் ஒரு ரிங் போனதுமே எடுத்தான் கணேஷ்

"ஹலோ... சொல்லு சுரேஷ்"

"ம்... கணேஷ்... கல்யாணத்துக்கு பண்ணின ஸ்வீட்ஸ் எல்லாம் நெறைய மிச்சம் ஆய்டுச்சு... உனக்கு தெரிஞ்ச ஆர்பநேஜ் எதுனா கேக்கலாம்னு கூப்ட்டேன்"

"அது... அப்படி எதுவும் தெரியாது... சுரேஷ்" கணேசின் குரல் நடுங்கியது... அடிக்கடி பேசும் வழக்கம் இருவருக்கும் உண்டு என்ற போதும்... இப்படி ஆலோசனை எல்லாம் கேட்கும் அளவுக்கு இல்லை என்பதால் கணேசிற்கு ஏதோ சந்தேகம் வர

"சரி சுரேஷ்... நான் கொஞ்சம்... வேலை இருக்கு... அப்புறம் பேசறேன்" என துண்டிக்க போக

"ஆங்...கணேஷ்... எங்க இருக்க? இன்னும் KG தியட்டர் பக்கத்துல தானா" எனவும்

"ம்... ஆ... மா" எனவும்

அதற்குள் அவனை அந்த மரத்தின் அடியில் பார்த்துவிட்ட சுரேஷ் விரைந்து அருகில் சென்று சட்டை காலரை பிடித்தான் "கோயம்புத்தூர்ல இருக்கறவன் எப்படிடா ஊட்டில இருந்து போன் பேசுவ" என கன்னத்தில் அறைய

"சுரேஷ்... ப்ளீஸ் நான் சொல்றத கேளு"

"என்னடா கேக்கணும்... ராஸ்கல்... என்னடா பாவம் பண்ணினோம் நாங்க உனக்கு... சுமிய என்ன செஞ்ச..சொல்லு... ஒழுங்கா சொல்லு" என அடிக்க

"சுரேஷ்... ப்ளீஸ் காம் டௌன்... என்ன சொல்றான்னு கேப்போம்" என இன்ஸ்பெக்டர் தடுத்தார்

"கணேஷ்... ஒழுங்கா உண்மைய சொல்லுங்க... சுமேதா எங்க?"

"ஐயோ.. என்ன இன்ஸ்பெக்டர் சொல்றீங்க? சுமிய காணமா?" என கேட்க

"இவன் வழிக்கு வர மாட்டான் சார்... " என சுரேஷ் மறுபடியும் அவனை அடிக்க பாய

"சுரேஷ் ப்ளீஸ்... கொஞ்சம் பொறுமையா இருங்க... இப்ப கோபபடறதுல நமக்கு தான் நஷ்டம்... ப்ளீஸ் கணேஷ்... உங்கள எதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க" என அவனை கிட்டத்தட்ட கெஞ்சினான் சூர்யா

"நிஜமா எனக்கு எதுவும் தெரியாது... "

"எதுவும் தெரியாம எதுக்கு KG தியேட்டர் பக்கத்துல இருக்கேன்னு பொய் சொன்ன"

"அது... சுரேஷ்... வந்து... "

"இப்ப நீ சொல்லலைனா... மவனே உன்னை கொலை செய்ய கூட தயங்க மாட்டேன்" என சுரேஷ் கணேசின் கழுத்தை நெரிக்கக் சூர்யா மற்றும் இன்ஸ்பெக்டர் வந்து சுரேஷை இழுத்து பிடித்தனர்

"முருகேசன்... கணேச ஜீப்ல ஏத்துங்க... ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்"

எல்லாரும் ஸ்டேஷன் வந்து சேர்ந்தனர்

"இங்க பாருங்க மிஸ்டர் கணேஷ்... எங்க பொறுமையா சோதிக்காதீங்க... நேத்து சுமேதா உங்களுக்கு போன் பண்ணினது எங்களுக்கு தெரியும்... அவங்க போன் ரிப்போர்ட்ல கண்டு பிடிச்சுட்டோம்... தேவை இல்லாம எங்களை வயலண்டா நடக்க வெக்காதீங்க... கம் அவுட்... உண்மைய சொல்லுங்க"

"சார்...அது வந்து" என கணேஷ் தயக்கத்துடன் சூர்யாவை பார்க்க

"தயவு செஞ்சு சொல்லுங்க... ப்ளீஸ்...எதுவா இருந்தாலும் பரவாஇல்ல" என்றான் சூர்யா மனதை திடப்படுத்தியவனாய்

"நேத்து... சுமி எனக்கு போன் பண்ணினது நிஜம் தான்... ஆனா"

"டேய்... இப்ப நீ சொல்றயா... இல்ல... "என சுரேஷ் முன்னேற இன்ஸ்பெக்டர் சுரேஷை முறைத்தார்

அடுத்த கணேஷ் கூறிய செய்தி எல்லார் முகத்தையும் வெளிற செய்தது...

அது...


30 பேரு சொல்லி இருக்காக:

Krishnaveni said...

aaha...nallaa flowaa pogumpothu, speed breaker pottutteengalaa, thriller story super. eagerly expecting the rest.....

Mahi said...

நல்லா த்ரில்லா போகுது கதை..அடுத்த பார்ட் சீக்கிரமா போடுங்க அப்பாவி!:)

நசரேயன் said...

ம்ம்ம்

அமைதிச்சாரல் said...

கதை விறுவிறுப்பா போகுது.

கடைசியில இருக்கிற பென்சில் ட்ராயிங் நீங்க செஞ்சதா??.சும்மா கேட்டேன் ;-))))

Jey said...

நல்லாத்தான் போய்ட்டிருக்கு...

பத்மநாபன் said...

கதை சுறுசுறுப்பா போகுது..இவ்வளவு ஈசியா கணேஷ் மாட்டிக்கிட்டானே..சுமேதா என்ன ஆனாள்? சஸ்பென்ஸ் களை கட்டுது.

வெறும்பய said...

கதை விறுவிறுப்பா நல்லாத்தான் போய்ட்டிருக்கு...

sakthi said...

நல்ல நடை

சௌந்தர் said...

நல்ல போகுது அதுக்குள்ள தொடரும் வந்து விட்டது

சே.குமார் said...

கதை விறுவிறுப்பா போகுது.

sandhya said...

பகவானே ஏன் புவனா இப்பிடி சஸ்பென்சா பாதியில் கதை ஸ்டாப் பண்ணறீங்க ...தயவு செஞ்சு மீதி கதை சீக்ரமா எழுதுங்க இல்லேனா உங்க மேலே கேஸ் போடுவேன் ஹூம் சொல்லிட்டேன் ..

கோவை ஆவி said...

ஆகா! அடுத்த கொக்கி போட்டுட்டாங்கப்பா!!! வேக வேகமா மலை ஏறி உச்சிக்கு வந்ததும் மறுபடியும் அடுத்த மலைக்கு போற ரோட்டைப் பாத்த பீலிங்..

ஆனா Super ஆ போய்கிட்டு இருக்கு!! "தொடர்"ந்து எழுதுங்க..

Porkodi (பொற்கொடி) said...

//ஆகா! அடுத்த கொக்கி போட்டுட்டாங்கப்பா!!! வேக வேகமா மலை ஏறி உச்சிக்கு வந்ததும் மறுபடியும் அடுத்த மலைக்கு போற ரோட்டைப் பாத்த பீலிங்..//

adhe adhe.

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... நீங்க தான் first கமெண்ட்... தேங்க்ஸ்...

@ Mahi - சீக்கரம் போட்டுடறேன் மகி... தேங்க்ஸ்ங்க

@ நசரேயன் - ம்ம்...(என்ன சார் அர்த்தம்...?ஹா ஹா ஹா )

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க... பென்சில் drawing ...நானா? ஹா ஹா ஹா சூப்பர் காமெடி தான் போங்க... ஸ்கேல் வெச்சு கோடு போட்டாலே ஒழுங்கா விழாது... அவ்ளோ திறமைசாலி தான்... இதுல drawing எங்க... ஹா ஹா ஹா... எல்லாம் கூகிள்ல சுட்டது தானுங்க

@ Jey - நன்றிங்க ஜெய்

@ பத்மநாபன் - ஆமாங்க ஈஸியா மாட்டிகிட்டான் கணேஷ்... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - நன்றிங்க

@ Sakthi - நன்றிங்க

@ சௌந்தர் - நன்றிங்க... சீக்கரம் அடுத்த பார்ட் போடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ sandhya - ஐயோ... கேஸ் எல்லாம் வேண்டாம் சந்த்யா... சீக்கரம் போட்டுடறேன்... நெஜமா...தேங்க்ஸ் சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - ஹா ஹா ஹா .. நல்ல வர்ணனை நீங்க சொன்னது... நன்றிங்க... சீக்கரம் அடுத்த பார்ட் போடறேன்...

@ பொற்கொடி - வாங்க கொடி... எங்க ஆளே காணோம்... இப்படி காபி பண்ணி போடற கமெண்ட் எல்லாம் செல்லாது...நீங்களே கமெண்ட் போடணும்... ஹா ஹா ஹா ... தேங்க்ஸ் கொடி

Arul Senapathi said...

Very nice flow. Can't wait to read the next chapter soon.

DrPKandaswamyPhD said...

புக் மார்க்குல போட்டு வச்சிருக்கேன். எல்லாப் பதிவையும் சாவகாசமாப் படிக்கணும்.

உங்க பதிவுகளை மேலோட்டமா பார்த்ததில அப்படியொண்ணும் நீங்க அப்பாவி மாதிரி தெரியலயே?

உள்ளூருங்கறதாலயும், என்னுடைய வயசு காரணமாகவும் கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டேன். வருத்தமாயிருந்தா சொல்லுங்க. மாப்பு கேட்டுக்கிறேன்.

ஸ்ரீராம். said...

எங்க தொடரும் போடணும்னு சரியா தெரிஞ்சி வச்சிருக்கீங்க... அதுதான் எங்களுக்கு கஷ்டம்! ம்...பார்ப்போம், காத்திருக்கிறோம்...

வல்லிசிம்ஹன் said...

இப்பதான் தொடர்னு பார்க்கிறேன். கொஞ்சம் லேட். ஏதொ த்ரில்லர் பார்க்கிற மாதிரி இருக்கு. வாழ்த்துகள் மா.

ஹுஸைனம்மா said...

சீக்கிரம் முடிங்க; தாஅங்க முடியலை த்ரில்!!

Venkatesh said...

நல்ல இருக்குங்க, சஸ்பென்சு தாங்க முடியல, ப்ளீஸ் அடுத்த பகுதிக்காக வைடிங்.

குந்தவை said...

பயங்கரமா எழுதுரீங்க புவனா. ஆனா சஸ்பென்ஸ் எல்லாம் ரெம்ப தாங்கமாட்டோம் அதனால ஒழுங்கா சீக்கிரமா அடுத்த பாகத்தை எழுதுங்க.

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - நன்றிங்க அருள்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்

@ DrPKandaswamyPhD - ரெம்ப சந்தோசங்க... நம்புங்க நான் அப்பாவியே தான்... நம்பிக்கை இல்லீனா நம்ம ப்ளாக் பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு பாருங்க.... ஹா ஹா ஹா... ச்சே ச்சே வருத்தம் எல்லாம் எதுவும் இல்லைங்க.... தாராளமா சொல்லலாம்.. நன்றி

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா... நன்றிங்க... சீக்கரம் அடுத்த பார்ட் போட்டுடறேன்

அப்பாவி தங்கமணி said...

@ வல்லிசிம்ஹன் - ரெம்ப நன்றிங்க

@ ஹுஸைனம்மா - சீக்கரம் முடிக்கறேன்... சுமேதா கெடைக்கணுமே அது வரை தேடி தானே ஆகணும் ஹுஸைனம்மா... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - நன்றிங்க வெங்கடேஷ்... சீக்கரம் போட்டுடறேன்

@ குந்தவை - ஹாய் குந்தவை... வாங்க வாங்க... ஊருக்கு போயிட்டு வந்தாச்சா... நன்றிங்க... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்...

vinu said...

y pa y y yyyyyyyyyyyyyyyyyyyyyy?


all crime story writters doing the sameeeeeeeeeeeeeeenaan unga koooooda do dodo dododododo

அப்பாவி தங்கமணி said...

@ vinu - why vinu yyyyyyyyyyy tension? சஸ்பென்ஸ் இல்லைனா அப்புறம் என்ன திர்ல்லர்... டூ எல்லாம் வேண்டாம்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்... ஹா ஹா ஹா... thanks vinu

Post a Comment