Wednesday, August 04, 2010

பாட்டி...பச்சப்புள்ளயா நான் அழுக
பலநாள் நீ கண்முழிச்ச
அம்மாகிட்ட தூங்குன நெனவு
அங்கொன்னும் இங்கொன்னும் தான்

பள்ளிக்கி நான் போகயில
பகல் உணவு சொமந்துவந்த
பள்ளிவிட்டு வர்ற நேரம்
பால்சாதமும் கலந்து வெப்ப

கண்டிப்பும் கவனிப்பும்
கணக்காதான் வெச்சுக்குவ
அன்னிக்கி கசந்த நெல்லிக்கனி
இன்னிக்கி எனக்கு இனிக்கிறதே

குமரியா ஆன பின்னும்
குழந்தையா கொஞ்சி மகிழ்ந்த
கல்லூரி மொத நாளில்
கால்கடுக்க கூட வந்த

விடாம நீஎன்ன கவனிக்க
வேறவேல உனக்கில்லயானு
வள்ளுன்னு எரிஞ்சு விழுவேன்
வேறென்ன செய்யனு நீசிரிப்ப

பாக்கறவங்க கிட்டயெல்லாம்
பேத்தி புராணம் பேசிதீப்ப
பேசஉனக்கு சலிக்கலயானு
பலநாளு கேலி செய்வேன்

நாடுவிட்டு நான் வருகயில
நலிஞ்சுதான் நீயும் நின்ன
உன்ன அப்படி பாத்ததில்ல
உள்ளமெல்லாம் உருகி போச்சு

வருஷம் பல ஓடிபோச்சு
வயோதிகமும் கூடி போச்சு
நேத்து ஊருக்கு பேசயில
நடுங்குனஉன் குரல கேட்டு
மனசெல்லாம் பதறி போச்சு
பழசெல்லாம் கண்முன்ன ஆடுச்சு

என்னாச்சுன்னு நான் கேக்க
எம்பது வயசு ஆச்சில்ல
எந்தமருந்தும் கேக்குறதில்ல
எல்லாம் இனி அப்படிதான்னு
சாதாரணமா நீ சொல்ல
சகலமும் நடுங்கி போச்சு

தோழியின் பாட்டி தவறினப்ப
வயசாச்சேனு ஆறுதல் சொன்னேன்
உன் அத்திமத்த நெனக்கவும்தான்
உள்ளத்துல பலமில்ல பாட்டி

என்னைய நீ சீராட்டி வளத்த
என்புள்ளைய நீ பாக்கவேணாமா
உம்மடில பிள்ளய போட்டு
உன்பொக்கவாய் சிரிப்ப பாக்கவேணும்

இன்னும் கொஞ்ச காலம்
இருக்கத்தான் வேணும் நீயும்
உன்ன நான் சீராட்ட
உரிய சமயம் எனக்குவேணும்

கடவுள் கிட்ட கேக்குறதெல்லாம்
கழிச்சுக்கோ என்ஆயுசுல பத்து
என் பாட்டிக்கி குடுத்துடுஅத
எப்பவும் வணங்குவேன் உன்ன...


...

45 பேரு சொல்லி இருக்காக:

பத்மநாபன் said...

பாட்டி உங்களை எப்படி தாலாட்டி, சீராட்டி வளர்த்துள்ளார்கள் என்பதும், பாட்டியிடம் உங்கள் பாசமும் அழகான கவிதையாகி இருக்கிறது.

ஜீவி said...

பொத்தி பொத்தி வைச்சிருந்த பாசம் மலர்ந்து மணக்கிற கவிதை! அற்புதமாய் வந்திருக்கு.. வாழ்த்துக்கள்.

priya.r said...

நல்லதொரு பதிவு .படிக்கும் ஒவ்வொருவரும் தாய்வழி தந்தைவழி பாட்டிம்மாக்களை நினைக்காமல் இருக்க முடியாது .

வாழ்வியல் கவிதை எனலாம் .சற்று கண்கலங்கி விட்டேன்.

உங்கள் ஆசைப்படி அனைத்தும் நடக்க இறைநிலை அருள் புரியட்டும் புவனா!

Mahi said...

lucky you Buvana! உங்க ஆசைப்படியே பாட்டி ஆரோக்கியமா,இன்னும் பலவருஷம் இருப்பாங்க.டோன்ட் வொரி!

எனக்கு பாட்டி-தாத்தா உறவை அனுபவிக்க குடுத்துவைக்கலை.நான் பிறக்கும்போதே ரெண்டு சைடு தாத்தா-பாட்டிகளும் இல்லை.இருந்த ஒண்ணுவிட்ட பாட்டியும் எனக்கு நினைவு தெரியுமுன்னே இறந்துட்டாங்க.

பழையநினைவுகளை அசைபோடுவதே ஒரு சுகம்..உங்க கவிதையப்படிக்கையில் அதை அனுபவிக்கமுடியுது!:)

Jey said...

இப்போதெல்லாம், பாட்டிகள் இல்லாத வீடுகள் அதிகமாகிவிட்டது அம்மணி.

அபி அப்பா said...

அட புவனா! கும்மியடிக்க பரபரன்னு உள்ளங்கை தேச்சுகிட்டு இங்க வந்தா இப்படி போட்டு தாக்கிட்டீங்களே!

கவலைவேண்டாம். உங்க பிள்ளையை உங்க பாட்டி கொஞ்சாம போகமாட்டாங்க. அதுக்காக பத்து வயசு அக்ரிமெண்ட் எல்லாம் வேண்டாம். கூல் கூல்....

வேண்டுமானா சொல்லுங்க நட்ராஜை அழைச்சுட்டு போறேன். அவனை கொஞ்சிட்டு உங்க பிள்ளைக்கு வச்சிருக்கும் பத்து சவரனை போட்டு விட சொல்லுங்க. டீலா நோ டீலா?

இராமசாமி கண்ணண் said...

நல்ல கவிதை.

Krishnaveni said...

Excellent kavidai bhuvana, enakku enga paatti nyabagam vanthuruchchu. we pray god for her healthy and long life....apt picture, nice one

ஜெய்லானி said...

//என்புள்ளைய நீ பாக்கவேணாமா
உம்மடில பிள்ளய போட்டு
உன்பொக்கவாய் சிரிப்ப பாக்கவேணும் //

மனசை தொட்ட வரிகள்

ஹேமா said...

பாட்டி....மனம் கலங்க வைக்கும் வாழ்வியல் கவிதை.அத்தனையும் பாசம் !

சே.குமார் said...

பாட்டியின் பாசம் கவிதையாய் அழகாய் விரிகிறது.

வார்த்தைகள் அருமை.

படங்கள் எங்கு இருந்து கிடைக்கின்றன. மிகவும் அருமை.

க(வி)தை உணர்த்தும் படம்.

தக்குடுபாண்டி said...

//என்னைய நீ சீராட்டி வளத்த
என்புள்ளைய நீ பாக்கவேணாமா
உம்மடில பிள்ளய போட்டு
உன்பொக்கவாய் சிரிப்ப பாக்கவேணும் // ...:))) very soon! it will happen. ummachi will bless you! okvaa!!..:))

சுசி said...

//கடவுள் கிட்ட கேக்குறதெல்லாம்
கழிச்சுக்கோ என்ஆயுசுல பத்து
என் பாட்டிக்கி குடுத்துடுஅத
எப்பவும் வணங்குவேன் உன்ன... //

புவனா.. வார்த்தை வரல..

2004 லவும், 2008 லவும் எங்கள விட்டுப் போன ரெண்டு பாட்டிங்களும்தான் நினைவு வராங்க..

பிள்ளையார் கிட்ட நானும் வேண்டிக்கிறேன்பா.. பாட்டிய கேட்டதா சொல்லுங்க.

Anonymous said...

Hi, First time commenting. Couldn't control as I have the same relationship with my patti. Very touching. Just had my baby shower(married for 10 years) My patti's exact words if you got pregnant 9 years ago, i'll be in US to help you. Though she is 77 years old with lot of complications, still thinks about us. They relationship between patti and grand-daughters are so special.

மார்கண்டேயன் said...

தந்தை வழிப் பாட்டி இல்லை, இருந்திருந்தால் ஒரு வேளை . . . இப்படித்தான் இருந்திருக்குமோ . . .
பை த வே, மீ தி ஒன நாட் பஸ்து . . . சோ ப்ரம் நவ் ஆன்வர்ட்ஸ் ஸ்டார்ட் மீசிக்கு . . . ஓகே

வெறும்பய said...

வார்த்தைகள் அருமை.

LK said...

புவஸ்

நீயா எழுதின ? அருமை....

அமைதிச்சாரல் said...

மனசுல பெரீய்ய்ய கல்லா தூக்கி வெச்சிட்டீங்கப்பா..

உங்கள் எல்லா ஆசைகளும் நிறைவேற கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்..

புதுகைத் தென்றல் said...

என்னை வளர்த்த தாயான என் அம்மம்மாவுக்காக நானும் இறைவனை எப்பவும் வேண்டிப்பேன். உங்க வார்த்தைகளில் படிச்சபோது அது ஞாபகம் வந்தது. அருமை.

சௌந்தர் said...

பாட்டி பாசம் கவிதை ரொம்ப அருமை

sandhya said...

"கடவுள் கிட்ட கேக்குறதெல்லாம்
கழிச்சுக்கோ என்ஆயுசுல பத்து
என் பாட்டிக்கி குடுத்துடுஅத
எப்பவும் வணங்குவேன் உன்ன... "

கவிதை ரொம்ப அருமை புவனா ...உங்க பாட்டி ஆரோகியமா ரொம்ப நாள் வாழ நான் வாழ்த்துகிறேன் ..

வார்த்தை said...

இந்த மாதிரி கவிதையெல்லாம் இன்னும் கொஞ்சம் காலம் தான் எழுதி ஆறுதல் பட முடியும்.
என்ன செய்யிறது, தாத்தா பாட்டியெல்லாம் "museum collection" ஆகிட்டாங்க...

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க

@ ஜீவி - மிக்க நன்றிங்க ஜீவி

@ priya.r - ஆமாங்க ப்ரியா பாட்டிகள் ஸ்பெஷல் தான் நம்ம எல்லார் வாழ்விலும். ரெம்ப நன்றிங்க உங்க வாழ்த்துக்கு

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ரெம்ப நன்றிங்க மகி, நல்ல வார்த்தை சொன்னதுக்கு. ஆமாங்க அது ஒரு தனி சுகம் தான்

@ Jey - வாஸ்துவம் ஜெய். அந்த பிள்ளைகள் குடுத்து வெச்சது அவ்ளோ தான்...

@ அபி அப்பா - நன்றிங்க அபி அப்பா.. அதுகென்ன நடராஜ்க்கு குடுத்துட்டா போச்சு... ஹா ஹா ஹா...டீல்...

அப்பாவி தங்கமணி said...

@ இராமசாமி கண்ணண் - ரெம்ப நன்றிங்க கண்ணன்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... உங்க வேண்டுதலுக்கு மிக்க நன்றி

@ ஜெய்லானி - நன்றிங்க ஜெய்லானி

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - நன்றிங்க ஹேமா

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார். படங்கள் வழக்கம் போல் கூகிள் தான். நன்றி கூகிள்

@ தக்குடு - தேங்க்ஸ் தக்குடு

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - ரெம்ப நன்றி சுசி. உங்க எல்லார் வேண்டுதலும் எங்க பாட்டிக்கு ஆயுச குடுக்கட்டும்...

@ பெயரில்லா - Thanks a lot for your comment. Yes grandma is always special for all of us. Very happy to hear about your baby shower. Congrats. Well said, grandmas always think about us even with their old age complications. Thanks for your kind words again

@ மார்கண்டேயன் - தந்தை வழி பாட்டின்னு இல்லைங்க. நாம வளர்ற பருவத்துல எந்த பாட்டி கூட அதிகம் இருக்கோமோ அவங்க கிட்ட இந்த ஒட்டுதல் தன்னாலே வந்துடும்னு நினைக்கிறேன்... (ஒகே ஸ்டார்ட் மீசிக்... நன்றி...)

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க

@ LK - தேங்க்ஸ் கார்த்திக். நான் தான் எழுதினேன்... நன்றி

@ அமைதிச்சாரல் - ரெம்ப நன்றிங்க அக்கா. உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும்

அப்பாவி தங்கமணி said...

@ புதுகைத் தென்றல் - ரெம்ப நன்றிங்க புதுகை அக்கா

@ சௌந்தர் - ரெம்ப நன்றிங்க சௌந்தர்

@ sandhya - ரெம்ப நன்றி சந்த்யா. உங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப ரெம்ப நன்றி

@ வார்த்தை - வாஸ்துவம்தாங்க... இது மாறனும்... இல்லேனா அடுத்த தலைமுறைக்கு இது என்னனே தெரியாம போய்டும்... நன்றிங்க...

Gayathri said...

" கடவுள் கிட்ட கேக்குறதெல்லாம்
கழிச்சுக்கோ என்ஆயுசுல பத்து
என் பாட்டிக்கி குடுத்துடுஅத
எப்பவும் வணங்குவேன் உன்ன... " நெஞ்சை தொட்டது...உங்கள் ஆயுளும் உங்கள் பாட்டியின் ஆயுளும் நீண்டு இருக்க இறைவனை வேண்டுகிறேன்...
என் பட்டிய ரொம்ப மிஸ் பண்றேன் இப்போ அவங்க இல்லை..ஆனா எப்போவும் என் மனசுல வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்..அருமையான பகிர்வு அக்கா

TERROR-PANDIYAN(VAS) said...

கவிதை நல்ல இருக்கு... நாளைக்கு வந்து detail கமெண்ட் போடறேன்...

siva said...

ENTRIN SONGS ONNUMEY PURILA APPAVI..நாளைக்கு வந்து detail கமெண்ட் போடறேன்...

siva said...

ENNATHU
APPAVI THANGAMANI PATTI AITANGALA?????

Bala said...

மிக அருமையான வரிகள் அக்கா...

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ரெம்ப நன்றி காயத்ரி...

@ TERROR-PANDIYAN(VAS) - வாங்க பாண்டியன்.. நன்றி

@ Siva - ஹா ஹா ஹா... எப்பவும் ஜோக் தானா...

@ Bala - தேங்க்ஸ் பாலா

அறிவிலி said...

nice one.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

இதப் படிச்சவுடன் எங்க தாத்தா, பாட்டி ஞாபகம் வந்தது என் முத மாச சம்பளத்தில பல்லு போன எங்க தாத்தா, பாட்டிக்கு நான் ஒண்ணு வாங்கிண்டு போனேன். அவங்க வாய் நிறைய..ரொம்ப பெருமையா ஸ்ரீதர் வாங்கிண்டு வந்தான் பாரு..என்று ரொம்ப நாள் சொல்லிக்கிட்டு இருந்தாங்க..என்ன வாங்கிண்டு போனேன் தெரியுமா?

கட்டி..கட்டியா கல்கண்டு!!!

sambasivam6geetha said...

பாட்டி நல்லா இருக்காங்களே, ரொம்ப நன்றி அழைப்புக்கு. சீக்கிரம் எழுதறேன். கவிதை கூட எழுத வருமா? கொஞ்சம் பொறாமையாவே இருக்கே! :))))))))))

அப்பாவி தங்கமணி said...

@ அறிவிலி - ரெம்ப நன்றிங்க

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி - நிச்சியமா நாம என்ன வாங்கிட்டு போனாலும் அவங்க உபயோகிக்க முடியாதா பொருளா இருந்தாலும் நாம வாங்கிட்டு வந்த சந்தோஷம் தான் அவங்களுக்கு பெருசு...
(ஆனாலும் நீங்க ரெம்ப அநியாயமா பல்லு போன தாத்தா பாட்டிக்கு கல்கண்டு வாங்கிட்டு போய் இருக்கீங்க... ஹா ஹா ஹா)

@ sambasivam6geetha - ரெம்ப நன்றிங்க மாமி.
//கொஞ்சம் பொறாமையாவே இருக்கே//
ஆஹா... உங்கள போல கண்ணன் கதை எழுத என்னால முடியுமா என்ன...

Ananthi said...

அடடா... புவனா... ரொம்ப அருமைங்க...
எனக்கும் என் பாட்டி நினைப்பு வந்திருச்சு...!!

பாசத்தை உணர்த்தும் வரிகள்..!

லேட்டா வந்ததுக்கு சாரி தோஸ்த்.... :-)))

siva said...

"
எனக்கும் என் பாட்டி நினைப்பு வந்திருச்சு...!!"andava eankum sethu ponna enga patti ninappu vantchu..
en pattiya vachu pala nall leave potu eruken..eppokoda patti sethupochunu cholithan leave podanum...

முனியாண்டி said...

பல நினைவுகளை அசைப்போட வைத்தாது. மிகவும் அனுபவித்து எழுதியது போல் நிறையே உண்மைகளை என்னுள் கிளறியது.

வேங்கை said...

நல்லா இருக்கு.............................
உங்க பாட்டி உங்கள தங்க மணி nu கூபிடுவாங்கள

உங்க கவிதைய விட உங்க பாட்டிய புடிச்சுருக்கு (ஹ ஹ ஹ)

சீக்கிரம் உங்க பாட்டிய பாப்பீங்க

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - நன்றி ஆனந்தி (ச்சே ச்சே... why சாரி அண்ட் ஆல்)

@ siva - அடப்பாவி... இப்படி எல்லாம் ப்ராட்தனம் செய்யரதுண்டா... ரெம்ப அநியாயம்

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ரெம்ப நன்றிங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும்

@ வேங்கை - நன்றிங்க... பாட்டி எப்பவும் "சாமி" தான் சொல்லுவாங்க... பேரு எல்லாம் சொல்றதில்ல... நன்றிங்க

Post a Comment