Friday, August 06, 2010

கடவுளும் நானும்....


"கடவுளும் நீயுமா? அந்த கடவுள கூட உன்கிட்ட இருந்து காப்பாத்த முடியலையா... மீ எஸ்கேப்" என தலைப்பை பாத்து தலை தெறிக்க ஓடியவர்கள் போக அஞ்சா நெஞ்சுடன் மிச்சத்தையும் படிக்கும் மீதம் உள்ள தோழிகளே தோழர்களே... பொது மக்களே பிரைவேட் மக்களே... ஒகே ஒகே... மீ ஸ்டாப் மொக்கை நௌ...

இந்த தொடர் பதிவை சுசி கூப்பிட்டது... அது ஆச்சுங்க ரெண்டு மாசம்... நானும் எழுதணும் எழுதணும்னு நெனச்சுட்டே இருக்கேன்... முடியல... ரெம்ப பிஸினு எல்லாம் தப்பு கணக்கு போட்டுட வேண்டாம்... அது அதுக்கு ஒரு நேரம் வரணுமல்ல...

அதுவும் சாமிய பத்தி எழுதறதுக்கு சாமி வரம் தரனுமல்ல...

எனக்கு கடவுள் நம்பிக்கை பிளஸ் பயம் எப்பவும் உண்டுங்க... ஆனா ஸ்கூல் காலேஜ் நாட்கள்ல எல்லாம் ரெம்ப சீரியஸ்னஸ் இருந்ததில்ல

அதுவும் ஒரு ஜாலி ஜோலி மாதிரி இருப்பேன்... நாத்திகம் எல்லாம் இல்ல... பொறுப்பா யோசிக்கற வயசு இருக்கலைன்னு சொல்லலாம்

எங்க வீட்டுல ஜாதி மதம் பிரிச்சு பேசுற பழக்கம் எப்பவும் இருந்ததில்ல... எல்லாமும் சமம்னு தான் கேட்டு வளந்தோம்

நான் என் கிறிஸ்டியன் பிரெண்ட்ஸ் கூட சர்ச் கூட போவேன் சில சமயம்... அம்மா எதுவும் சொன்னதில்ல

அதே போல எனக்கு முஸ்லிம் பிரெண்ட்ஸ்ம் உண்டு. வித்தியாசமா பாக்க தெரியாது எப்பவும்

இசை மேல உள்ள ஆசைல... பெரிய பி. சுசீலா எல்லாம் இல்லிங்க... என்னமோ ஒரு இஷ்டம்... ஈர்ப்பு... அந்த ஆசைல அம்மா பாட்டி கூட மார்கழி பஜனை எல்லாம் போவேன்... விடிய காலைல என்னை எழுப்பி கூட்டிட்டு போறதுக்குள்ள ரெம்ப கஷ்டபடுவாங்க... I'm not a morning person... ஆனா விட்டுட்டு போனாலும் சண்டை போடுவேன்

அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் போவேன்... அதுல ஒரு ரகசியம் உண்டு...

எங்க ஊரு பெருமாள் கோவில்ல மார்கழி மாசம் பஜனைல ஒரு நாள் "பூதலத்தை ஓர் அடி அளந்து ரூபமான பொற்" அப்படின்னு தொடங்கி "ராம ராம ராமனே" னு முடியற நாலு வரி பாடல், இப்படி முப்பது பாடல் வரும். அது எனக்கு ரெம்ப பிடிக்கும், முழு மனப்பாடம் கூட. அது என்ன தொகுப்புனு எனக்கு மறந்து போச்சு... யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்

எங்க விட்டேன்... ஆங்... இந்த முப்பது பாட்டு ஒரு நாள்.. இன்னொரு நாள் வேற என்னமோ ஒரு தொகுப்பு, ராமாயணம் பத்தி தான் இப்போ ஞாபகம் இல்ல...டச் விட்டு போச்சு... அது எனக்கு எவ்ளோ ட்ரை பண்ணியும் மனப்பாடம் ஆகல... அது ரெம்ப ராகம் எல்லாம் இருக்காது...சும்மா செய்யுள் மாதிரி படிப்பாங்க... அது வர்ற அன்னைக்கி கட் அடிச்சுடுவேன்...

இப்போ நெனச்சா ரெம்ப சின்ன புள்ளதனமா இருக்கு... நான் தான் சொன்னனே.. அப்போ அவ்ளோ தான் தெரியும்...

அப்புறம் முக்கியமா கோவில் போக இஷ்டபட்டது பிரண்ட்ஸ் கசின்ஸ் கூட நல்லா அரட்டை அடிக்கலாம்னு ஒரு ஆசைல கூட... உண்மைய ஒத்துக்கணும் இல்லையா... அப்போ அவ்ளோ தான் தெரியும்...

ஆனா சாமி கும்பிடரப்ப சின்சியரா கும்பிடுவோம்... அப்புறம் தான் விளையாட்டு எல்லாம்

அதுவும் எங்க ஊர்ல ஒரு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உண்டு... அங்க பிரதோஷம் அன்னிக்கி நாங்க எங்க ஏரியால ஒரு பெரிய டீனேஜ் பெண்கள் கேங் இருந்தோம். ஒரு பத்து பேரு சேந்து தான் போவோம்...

என் தங்கை விரதம் எல்லாம் கூட இருப்பா. நந்தி காதுல எல்லாம் சொல்லுவா. எனக்கு அவ்ளோ எல்லாம் முடியாது. ஒரு நேரம் சாப்பிடலைனாலே அட்மிட் பண்ண வேண்டிய கேஸ் மாதிரி ஆய்டுவேன். So, சும்மா சாமி கும்பிடுவேன்... எனக்கு வேண்டிக்க கூட தோணினதில்லை

எங்க அம்மா கேப்பாங்க... ரெம்ப மும்மரமா கும்பிட்டுட்டு இருந்தியே, கோவில்ல என்ன வேண்டினேனு. ஒண்ணும் இல்ல சும்மா கும்பிட்டேன்னு சொன்னா சிரிப்பாங்க

ஆனா என்னோட உடன் பிறப்பு இருக்கே... ஒரு பெரிய நாப்பது பக்க புக் மாதிரி ஒப்பிப்பா... மாத்ஸ் எக்ஸாம் ஆரம்பிச்சு மாங்காய் ஊறுகா வரைக்கும் சொல்லுவா... சாமி ஊரை விட்டே ஓடிடும்னு அவளை நாங்க கிண்டல் பண்ணுவோம்

ஆனா எனக்கு கூட்டம் அவ்ளோ பிடிக்காது... பொதுவா கூட்டம் இல்லாதப்ப தான் கோவில் போக பிடிக்கும்

பொங்கல் பண்டிகை, ஆடி வெள்ளி, பௌர்ணமி பூஜை, கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி எல்லாம் எங்க வீட்டுல ரெம்ப நல்லா செய்வாங்க ... பாட்டி தாத்தானு கூட்டு குடும்பமா இருந்ததால எல்லாம் முறைப்படி நடக்கும்

அப்படி பாத்தே வளந்ததுனாலையோ என்னமோ இப்போவும் அந்த ஈடுபாடு உண்டு

இங்க வந்தப்புறம் முடியறப்ப வெள்ளிகிழமை கோவில் போறதுண்டு. அப்புறம் கார்த்திகை மாசம் அய்யப்பன் பஜனை மிஸ் பண்ணாம போவேன்... என்னமோ ஒரு இஷ்டம் அதை கேக்கறதுல

வீட்டுல இப்பவும் எல்லா பண்டிகையும் இங்க கெடைக்கற பொருட்கள் வெச்சு முடிஞ்ச வரை நல்லா செய்வோம்

இவ்ளோ தான் "கடவுளும் நானும்"

ஆத்திகம் நாத்திகம் பத்தி நெறைய பேச்சுக்கள் விவாதங்கள் நான் கேட்டு இருக்கேன்

எனக்கு பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்ச ஒண்ணு சொல்லி முடிச்சுக்கறேன்

நான் அப்போ எட்டாவது படிச்சுட்டு இருந்தேன்... எங்க க்ளாஸ் மிஸ் அமிர்தம்னு அவங்க பேரு. அவங்க சொன்னாங்க ஒரு முறை "நீ கடவுள் இருக்குனு நம்பறயோ இல்லியோ... உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ. சில பேருக்கு அது கடவுள். சிலருக்கு தன்னோட குரு... சிலருக்கு தன்னோட மனசாட்சி. எதுவானாலும் அதுக்கு நீ பயப்படனும். ஒரு தப்பான காரியம் செய்ய போறப்ப அந்த சக்தி உன்னை தண்டிச்சுடும் அப்படின்னு உனக்கு உறுத்தனும். அது தான் உன்னை வழி நடத்தனும் " இப்படி சொன்னாங்க

எனக்கு அந்த எனக்கு மேல இருக்கற சக்தி "கடவுள்" தான். எப்பவும் பயமும் பக்தியும் உண்டு

அந்த வார்த்தைகள் அவங்களுக்கு கூட மறந்து போய் இருக்கலாம்... எனக்கு இன்னும் மறக்கல...

எப்ப ஆத்திகம் நாத்திகம் பத்தி கேட்டாலும் இந்த வார்த்தைகள் கண் முன்னாலே எனக்கு வரும்

இப்போ உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்... அவ்ளோ தான்

சரிங்க...அப்புறம் பாப்போம்... நன்றி

ஓ.. தொடர் பதிவு... யாரைக்கூப்பிட தொடர...

ம்... இதோ இவங்கள கூப்பிடறேன்... என்னை போல லேட் பண்ணாம சீக்கரம் போட்டுடுங்க...மிக்க நன்றி
கீதா சாம்பசிவம்

ஜலீலா

VGR

Mahi

LK

பத்மநாபன்

தமிழ் உதயம்

தேனம்மைலக்ஷ்மன்

Krishnaveni

சௌந்தர்....

78 பேரு சொல்லி இருக்காக:

ஜெய்லானி said...

ஐ வடை எனக்குதான்

ஜெய்லானி said...

கடவுள் சப்ஜக்டில் நே கமெண்டஸ் அப்புரம் சாமி கண்ணை குத்திடும் சோ..

:-)

LK said...

பொங்கல் வாங்கி சாப்பிடத் தான மார்கழி மாத பஜனை போன ?? உண்மைய சொல்லு ?

//எனக்கு அந்த எனக்கு மேல இருக்கற சக்தி "கடவுள்" தான். எப்பவும் பயமும் பக்தியும் உண்டு///

உண்மையே

வெறும்பய said...

கமெண்ட்ஸ் போட பயமா இருக்குங்க ...
இருங்க கோவிலுக்கு போய் 100 தேங்கா உடச்சிட்டு வரேன்...

V.Radhakrishnan said...

//எங்க ஊரு பெருமாள் கோவில்ல மார்கழி மாசம் பஜனைல ஒரு நாள் "பூதலத்தை ஓர் அடி அளந்து ரூபமான பொற்" அப்படின்னு தொடங்கி "ராம ராம ராமனே" னு முடியற நாலு வரி பாடல், இப்படி முப்பது பாடல் வரும். அது எனக்கு ரெம்ப பிடிக்கும், முழு மனப்பாடம் கூட. அது என்ன தொகுப்புனு எனக்கு மறந்து போச்சு... யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்//

தேடி விடுவோம். எளிமையான வேண்டுதல். எதிர்மாறான தங்கை. அருமையான ஆசிரியர். கடவுள் நன்றாகவே இருக்கிறார்.

Mahi said...

:)
மாட்டிகிட்டேனே!

அடுத்த மொக்கைக்கு சான்ஸ் குடுத்ததுக்கு நன்றிங்கோ.அதே சிவன் கோயிலுக்கு:) நானும் பல பிரதோஷத்துக்கு வந்திருக்கேன்.அடையாளம் தெரியாமயே அப்பாவிங்க ரெண்டுபேரும்(ஹிஹி,நம்ம ரெண்டுபேரும்தான்) பாத்துகிட்டிருப்போமோ? :)))))

kavisiva said...

பாட்டு பாடறதுக்காக பஜனைக்கு போனேன்னு சொன்னது பொய்தானே! பொங்கல் வாங்கி சாப்பிடத்தானே போனீங்க :). மைண்ட் வாய்ஸ் இதைச் சொன்னதும் அது வாயை கட்டி வச்சுட்டீங்களோ?!

kavisiva said...

//உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ. சில பேருக்கு அது கடவுள்//

எனக்கு அது கடவுள் :)

V.Radhakrishnan said...

ராம ஸ்தோத்திரம். கண்டுபிடித்தாகிவிட்டது.

ஸ்ரீ ராம ஸ்தோத்திரம்

TERROR-PANDIYAN(VAS) said...

//உடன் பிறப்பு இருக்கே... ஒரு பெரிய நாப்பது பக்க புக் மாதிரி ஒப்பிப்பா... மாத்ஸ் எக்ஸாம் ஆரம்பிச்சு மாங்காய் ஊறுகா வரைக்கும் சொல்லுவா... சாமி ஊரை விட்டே ஓடிடும்னு அவளை நாங்க கிண்டல் பண்ணுவோம்//

நல்ல நக்கல்..

//"நீ கடவுள் இருக்குனு நம்பறயோ இல்லியோ... உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ.//

நல்ல கருத்து. ஓட்டு போட்டாச்சி.

வழிப்போக்கன் said...

//ஆனா சாமி கும்பிடரப்ப சின்சியரா கும்பிடுவோம்...//

சின்சியர் தங்கமணி....சின்சியர் சிகாமணி...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அப்பாவி தங்க மணி அசத்தல் .. கடவுளைப் பத்தி நான் நினைச்சது எல்லாம் நீங்களே எழுதிட்டு கூப்பிட்டா நான் என்ன எழுதுறதாம்.. பேசாமா ரிப்பீட்டுன்னு போடவா..:)))

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ கடவுள் இருக்குனு நம்பறயோ இல்லியோ... உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ. சில பேருக்கு அது கடவுள். சிலருக்கு தன்னோட குரு... சிலருக்கு தன்னோட மனசாட்சி. எதுவானாலும் அதுக்கு நீ பயப்படனும். ஒரு தப்பான காரியம் செய்ய போறப்ப அந்த சக்தி உன்னை தண்டிச்சுடும் அப்படின்னு உனக்கு உறுத்தனும். அது தான் உன்னை வழி நடத்தனும் ..//

ம்ம் சரியாத்தான் சொல்லியிருக்காங்க...!

//So, சும்மா சாமி கும்பிடுவேன்//

அது சரி

Rajaram said...

Kadavul yenbathu oru sakthi, oru nambikkai -- romba romba sariyana statement.. Ade pola, bakthi oru feeling (anubavam).. Unless we feel that internally, we cant realize the sakthi..

Jey said...

மார்கழி மசம், விடிகாலைல கோவில்ல கிடைக்கிற சர்க்கரைபொங்கல் + சுண்டல் காம்பினேசன் இருக்கே.... அட அட அட...., அதுகத்தானே போனீங்க..., சும்மா எங்க காதுல பாட்டுபாட போனேனு பூ சுத்தக்கூடாது..

LK said...

பிரபலப் பதிவர் அப்பாவி தங்கமணி வாழ்க

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - எஸ் வடை உங்களுக்கே... ஹா ஹா அஹ... சாமி கிட்ட அவ்ளோ பயமா... ஒகே ஒகே... நல்லது தான்...என்னோட போஸ்ட் தப்பிச்சது...இதுலயும் டவுட் கேபீங்களோனு பயந்துட்டு இருந்தேன்...

தமிழ் உதயம் said...

அடுத்த வியாழக்கிழமை, நீங்க அழைத்த தொடர்பதிவு வந்துடும். அதுக்கு முன் இன்னொரு தொடர்பதிவு, நண்பர் நாடோடி அழைத்தது. அத முடிச்சிடுறேன்.

அப்பாவி தங்கமணி said...

@ LK - அடப்பாவி... என்னைய நம்பவே மாட்டியோ? நெஜமா பஜனை தான்... பொங்கலோட அருமை எல்லாம் அப்போ தெரியல... அடிக்கடி வீட்டுல கெடைச்சதால்...

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - ஹா ஹா ஹா...குட் குட் இனிமே சாமி போஸ்ட் தான் போடணும் போல

@ V.Radhakrishnan - ரெம்ப நன்றிங்க ... லிங்க் குடுத்ததுக்கு கோடி நன்றி.. இந்த தொகுதிய நான் ரெம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... பிரிண்ட் பண்ணிட்டேன்... மீண்டும் மீண்டும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - எஸ் எஸ்... மாட்டிகிட்டீங்க... இதை தான் எழுதி வெச்சி ஒரு வாரம் ஆச்சு... அப்போவே மாட்டிகிட்டீங்க... ஆஹா... நீங்களும் வந்து இருக்கீங்களா அந்த கோவிலுக்கு... சூப்பர்... அனேகமா லைன்ல ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் நின்னு இருப்போம்னு நினைக்கிறேன்... நன்றிங்க
//அப்பாவிங்க ரெண்டுபேரும்(ஹிஹி,நம்ம ரெண்டுபேரும்தான்)//
சூப்பர் சூப்பர் சூப்பர்...மகி வாழ்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ kavisiva - ஹா ஹா ஹா... ஏன் என்மேல இவ்ளோ நம்பிக்கை உங்களுக்கு? மைண்ட் வாய்ஸ் vacation போய் இருக்கு... நான் கட்டி எல்லாம் போடல... ஹா ஹா ஹா. தேங்க்ஸ் கவி

@ TERROR-PANDIYAN(VAS) - ஹா ஹா ஹா ... ரெம்ப நன்றி

பத்மநாபன் said...

சொக்கலிங்கேஸ்வரர் கோவிலத்தானே சொல்லிறிங்க . பிரதோஷக்கூட்டம் எகிறுமே..கோவையில் இருக்கும் பொழுது தங்கமணி ரெகுலர் அட்டெண்டன்ஸ் ,நாம அப்பப்ப .

எங்க சுத்துனாலும்``நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு `` இதுதான் முத்தாய்ப்பான முடிவு.

தொடர் அழைப்புக்கு நன்றி.

அப்பாவி தங்கமணி said...

@ //வழிப்போக்கன் - சின்சியர் தங்கமணி....சின்சியர் சிகாமணி... //
வாவ்....நன்றிங்க... பேசாம என்னோட ப்ளாக் லோகோவா இதை வெக்கலாமானு யோசிக்கறேன்... ஹா ஹா ஹா

@ தேனம்மை லெக்ஷ்மணன் - நன்றிங்க .. தேனக்கா இதெல்லாம் அநியாயம்... கமெண்ட் repeat போட்டது போய் இப்போ போஸ்ட் repeat ஆ? நோ நோ நோ... பெரிய போஸ்ட் போடுங்க...

அப்பாவி தங்கமணி said...

@ ப்ரியமுடன் வசந்த் - தேங்க்ஸ்ங்க வசந்த்

@ Rajaram - தேங்க்ஸ்ங்க ராஜாராம்

அப்பாவி தங்கமணி said...

@ Jey - அடபாவிங்களா...இந்த உலகமே நமக்கு எதிராத்தான் இருக்கா... ஹும்... ஒண்ணும் செய்ய முடியாது... நல்லா கூட்டணி...வாழ்க வளமுடன்... ஹா ஹா ஹா

@// LK - பிரபலப் பதிவர் அப்பாவி தங்கமணி வாழ்க//
அடப்பாவி... ஏன் இந்த கொலை வெறி?

அப்பாவி தங்கமணி said...

@ தமிழ் உதயம் - ரெம்ப நன்றிங்க என்னோட அழைப்பை ஏற்றதுக்கு

@ பத்மநாபன் - ஆமாங்க நம்ம சொக்கலிங்கேஸ்வரர் கோவிலே தான்... மறக்க முடியாத கோவில்... ஓ... உங்க தங்கமணியும் போவாங்களா... பாத்திருக்கவும் வாய்ப்பு இருக்கு... சூப்பர்... ரெம்ப நன்றிங்க...

சே.குமார் said...

அடேங்கப்பா இவ்வளவு நடந்துச்சா.... சொல்லவேயில்லை...
நல்ல பகிர்வுங்க.

sandhya said...

"எனக்கு கடவுள் நம்பிக்கை பிளஸ் பயம் எப்பவும் உண்டுங்க... ஆனா ஸ்கூல் காலேஜ் நாட்கள்ல எல்லாம் ரெம்ப சீரியஸ்னஸ் இருந்ததில்ல

எனக்கு அந்த எனக்கு மேல இருக்கற சக்தி "கடவுள்" தான். எப்பவும் பயமும் பக்தியும் உண்டு"

புவனா பதிவு எப்போதும் போல் ரொம்ப அருமையா இருந்தது ..மேலே சொன்னா வரிகள் எனக்கும் மேட்ச் ஆகும் ..பகிர்வுக்கு நன்றி

Krishnaveni said...

Aaa haaaaaa....ennayum sethu maatti vittutteengalaaaaaaaaaaaaaaaa, naan samayale ippaththaan kaththukkaren, saamiyappaththi ezhutharathukku kuduththu vachchirukkanum, i'll try my level best to write about god, bhuvana. Thanks for inviting....devine post, great

Gayathri said...

அக்கா அருமையான கருத்து..ஒரு சக்தி இல்லாமல் எதுவுமே உருவாகாது..அதான் கடவுள்..கருத்தை மிக எளிமையாய்..எதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்...நன்றி அக்கா மிகவும் ரசித்தேன்..

Mahi said...

புவனா,நீங்களும் திரு.பத்மநாபனும்தான் ஒரே ஊர் போலருக்கே.நான் நினைச்சது வேற கோயிலுங்க.:)

நசரேயன் said...

//ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் போவேன்.//

ஏன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் சாப்பாடு போடுவாங்களா ?

ஹேமா said...

இப்பிடி ஒரு தொடரும் வலம் வருதா ...ஐயோ !
ஆனா உங்க கடவுள் பற்றிய கருத்துக்க்ள் அருமை.

சுசி said...

//எனக்கு அந்த எனக்கு மேல இருக்கற சக்தி "கடவுள்" தான். எப்பவும் பயமும் பக்தியும் உண்டு
//

இதேதான் புவனா நம்ம கொள்கையும்.

சாமி குத்தம் ஆகுறத்துக்குள்ள எழுதி முடிச்சிட்டிங்க :)

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - அதானுங்க இப்ப சொல்லிடனுங்க... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க குமார்

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா

@ Krishnaveni - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் வேணி... சூப்பர்... எழுதுங்க... waiting to read

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி...

@ Mahi - மகி நாம எல்லாரும் ஒரே ஊரு தான் அம்மணி... குசும்பு நகர் கோவை... நான் கொஞ்சம் அந்த பக்கம் நீங்க கொஞ்சம் இந்த பக்கம்னு நினைக்கிறேன்... ரைட்ஆ?

@ நசரேயன் - இதுக்கு தான் பதிவை முழுசா படிச்சு அப்புறம் கமெண்ட் போடனுங்கறது... மறுபடி படிங்க... ஏன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் போறேன்னு அதுலயே இருக்குங்கோ... (அப்பவெல்லாம் சாப்பாடு பிரச்சனை இல்லை சார்...அம்மா சமயல்... இப்போ தான் அந்த பிரச்சனை எல்லாம்... நம்ம சமையல் ஆச்சே...)

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - தேங்க்ஸ்ங்க ஹேமா

@ சுசி - தேங்க்ஸ் சுசி... ஆஹா தப்பிச்சேன் போங்க...

சின்ன அம்மிணி said...

நானெல்லாம் பொங்கலும் சுண்டலும் வாங்கி சாப்பிடறதுக்காகவே கோயிலுக்கு போவேன் :)

அமைதி அப்பா said...

எங்க வீட்டுல ஜாதி மதம் பிரிச்சு பேசுற பழக்கம் எப்பவும் இருந்ததில்ல... எல்லாமும் சமம்னு தான் கேட்டு வளந்தோம்//

உங்கள் குடும்பத்தினருக்கு எனது பாராட்டுக்கள்.

//அந்த வார்த்தைகள் அவங்களுக்கு கூட மறந்து போய் இருக்கலாம்... எனக்கு இன்னும் மறக்கல...//

உண்மைதான். சொல்பவர்கள் மறந்துவிடுவார்கள், கேட்பவர்கள் நீண்ட நாட்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள்.

நல்ல பகிர்வு.

siva said...

enga oru kovila pulisadam,aprm thair sadam appram sundal apram konjam kesari aprm konjondu panjamirtham..(athila 2,3 valapalathai thavaira ethum erukathu)

but enta thairsadam erukono basha erukum..
oru 2,3vati vangi saptu varuven epothum prodosathil..appram..............varata.

epothum pola semai mookai akkovv....

siva said...

குசும்பு நகர் கோவை... ---sorry konjam thirithikanum..mokkai nagar appavi..eppudi..eruku matcha..

Kousalya said...

//எங்க வீட்டுல ஜாதி மதம் பிரிச்சு பேசுற பழக்கம் எப்பவும் இருந்ததில்ல... எல்லாமும் சமம்னு தான் கேட்டு வளந்தோம்//

கேட்க சந்தோசமா இருக்கு தோழி....நல்ல குடும்பம்.....ஒரு பல்கலை கழகம்....

vanathy said...

தங்ஸ், நல்லா இருக்கு. அருமையான கருத்துக்கள். மைன்ட் வாய்ஸ் vacation போன படியால் நிம்மதியாக சாமி ( நீங்கள் சாமி கும்பிட்ட கதையை ) கும்பிட்டோம்.

ஹையோ! நம்ம எல்கேயும் மகியும் மாட்டியாச்சா???ம்ம்ம் வெரிகுட்.

அப்பாதுரை said...

உங்க பதிவைப் படிக்குறப்ப என் முதல் தங்கை-அவளுடைய கேங்க் நினைவுக்கு வருது. குரோம்பேட்டை ந்யூகாலனியில் அக்கிரமம் பண்ணுவாங்க. கடவுளை யார் காப்பாத்தினாங்கனு தெரியலை.
நீங்க தேடுற பாடல் திவ்வியபிரபந்தத்துல இருக்கலாம். மூன்றாம் ஆயிரத்துல இந்த மாதிரி பாட்டுக்கள் வரும். கண்டுபிடிச்சீங்கன்னா சொல்லுங்க.

ஸ்ரீராம். said...

ஹேமா சொன்னது…
இப்பிடி ஒரு தொடரும் வலம் வருதா ...ஐயோ !//

ஹேமாவின் பயம் புரிகிறது!

அப்பாதுரை சொன்னது
நீங்க தேடுற பாடல் திவ்வியபிரபந்தத்துல இருக்கலாம். மூன்றாம் ஆயிரத்துல இந்த மாதிரி பாட்டுக்கள் வரும். கண்டுபிடிச்சீங்கன்னா சொல்லுங்க"//

எல்லாம் படிச்சி வச்சிருப்பார்... ஆனால் அல்லது அதனாலேயே கடவுளை சந்தேகப் படுவார்!

நல்ல பதிவு...

sriya said...

could i have link mp3 of that rama stothram

சௌந்தர் said...

உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது தொடர்கிறேன்...நன்றி...

LK said...

/// நம்ம எல்கேயும் மகியும் மாட்டியாச்சா???ம்ம்ம் வெரிகு//

neenga enkitta maatta poreenga

asiya omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

vanathy said...

எல்கே,

//neenga enkitta maatta poreenga//
நீங்கள் விடுமுறையில் போறீங்க என்று நினைத்து அறியாமல்/தெரியாமல் சொல்லிபோட்டேன். ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்கோ.

priya.r said...

நல்ல பதிவு.மார்கழி மாத அதிகாலையை நினைவு படுத்தியதற்கு நன்றி .!

உங்கள் பதிவை படித்து முடித்தவுடன் இந்த பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது பா !


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தாகோவிந்தா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா.,

r.v.saravanan said...

கடவுள் சப்ஜக்டில் நே கமெண்டஸ்

repeat

vgr said...

bala pada thalaipai reverse il potta mari iruku :O thalaipu.

but nandraga ezhudi irukireergal.

அமைதிச்சாரல் said...

// "நீ கடவுள் இருக்குனு நம்பறயோ இல்லியோ... உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ. சில பேருக்கு அது கடவுள். சிலருக்கு தன்னோட குரு... சிலருக்கு தன்னோட மனசாட்சி. எதுவானாலும் அதுக்கு நீ பயப்படனும். ஒரு தப்பான காரியம் செய்ய போறப்ப அந்த சக்தி உன்னை தண்டிச்சுடும் அப்படின்னு உனக்கு உறுத்தனும். அது தான் உன்னை வழி நடத்தனும் "//

அவ்வளவேதாங்க.. அப்புறம் கோயில்ல சாப்ட்ட பொங்கல் டேஸ்ட்டைப்பத்தி ஒண்ணுமே சொல்லல :-)))

Vijay said...

சுவாரஸ்யம் :)

\\ உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ. \\
முற்றிலும் உண்மை :)

sandhya said...

புவனா நலம் தானே ?எப்போதும் நான் பதிவு போட்ட நீங்க வந்து கமெண்ட் போடுவிங்க ரெண்டு பதிவில் உங்க கமெண்ட் இல்லாமல் அதின் அழகே போய் விட்டது ..வீட்டில் எல்லோரும் நலம் தானே ?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அன்புள்ள தங்கமணி மேடம்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

siva said...

எப்போதும் நான் பதிவு போட்ட நீங்க வந்து கமெண்ட் போடுவிங்க ரெண்டு பதிவில் உங்க கமெண்ட் இல்லாமல் அதின் அழகே போய் விட்டது"

haha ethu nalla idea va erukkey...appavi akka inamuma entha orru ungalai nambikitu erukku?????

siva said...

அப்புறம் கோயில்ல சாப்ட்ட பொங்கல் டேஸ்ட்டைப்பத்தி ஒண்ணுமே சொல்லல :-)))
----adutha padivil vilavariga villakapadangaludan tharappadum..

siva said...

கடவுள் சப்ஜக்டில் நே கமெண்டஸ்
--appuram eppadi evloooooooo comments vanthchunu enaku theria venum sami...????

எஸ்.கே said...

//"நீ கடவுள் இருக்குனு நம்பறயோ இல்லியோ... உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... அதுக்கு நீ என்ன பேரு வேணும்னாலும் வெச்சுக்கோ. சில பேருக்கு அது கடவுள். சிலருக்கு தன்னோட குரு... சிலருக்கு தன்னோட மனசாட்சி. எதுவானாலும் அதுக்கு நீ பயப்படனும். ஒரு தப்பான காரியம் செய்ய போறப்ப அந்த சக்தி உன்னை தண்டிச்சுடும் அப்படின்னு உனக்கு உறுத்தனும். அது தான் உன்னை வழி நடத்தனும் " //

இதைதான் நானும் நம்பறேன்!

VELAN said...

Kadavul visayathula nan writer sujatha mathiri.

Thenral said...

emmadhamum sammadham!Onre kulam oruvane devan!!!

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மிணி - ஆஹா... நீங்க ரெம்ப நல்லவங்க... இவ்ளோ honest ஆ இருக்க கூடாது ஆனாலும்... ஹா ஹா அஹ

@ அமைதி அப்பா - ரெம்ப நன்றிங்க... முதல் வருகைக்கும் மிக்க நன்றி

@ siva - ஹா ஹா ஹா... சிவா ரெம்ப ரசிச்சு பிரசாதம் சாப்பிட்டு இருக்கீங்க போல... சூப்பர்... மொக்கை நகர் அப்பாவியா... எத்தனையோ பாத்துட்டோம் இதெல்லாம் ஒரு மேட்டர்ஆ? ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ Kousalya - ரெம்ப நன்றிங்க கௌசல்யா

@ vanathy - ஹா ஹா ஹா... ஆமாங்க mindvoice தொல்ல இல்லாம நிம்மதியா எழுதினேன்... தேங்க்ஸ் வாணி...

@ அப்பாதுரை - ஹா ஹா ஹா... பெண்கள் gang சேந்தா அப்படி தான் போல இருக்கு... அந்த பாடல் "ஸ்ரீ ராம ஸ்தோத்ரம்"னு லிங்க் கெடைச்சதுங்க .... ரெம்ப நன்றி... லிங்க் அப்டேட் பண்ணிடறேன் பதிவுல... தேங்க்ஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ஓ.. அப்படிங்களா... அந்த விசயம் தெரியாதே... நன்றிங்க

@ sriya - Hi Sriya, I will try to find it. I just got a link of the script... will update that on blog... thanks for your first visit

@ சௌந்தர் - நன்றிங்க சௌந்தர்

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஹா ஹா ஹா.. வாணிய சிக்க விடு...சூப்பர்

@ asiya omar - விருதுக்கு ரெம்ப நன்றிங்க ஆசியா...

@ Vanathy - ஹா ஹா ஹா... அந்த பயம் இருக்கட்டும் வாணி ...

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - நன்றிங்க ப்ரியா... தேன் போன்ற பாடல் "குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா"... ரெம்ப நன்றிங்க ப்ரியா ஞாபகபடுத்தினதுக்கு ...

@ r.v.saravanan - அவ்ளோ பயமா... அது சரி... நன்றிங்க சரவணன்

@ vgr - நன்றிங்க VGR ... தொடர் எழுதுங்க...

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் அக்கா... அதெல்லாம் தனி ஈமெயில்ல சொல்றேன்... சபைல சொன்னா கண்ணு பட்டுடும் பாருங்க... ஹி ஹி ஹி

@ Vijay - நன்றிங்க விஜய்... முதல் வருகைக்கும் கருத்துக்கும்

@ sandhya - அடடா... எப்படி உங்க பதிவ மிஸ் பண்ணினேன்? இப்போவே பாக்குறேன்பா? தேங்க்ஸ் சந்த்யா... you made my day (-:

அப்பாவி தங்கமணி said...

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ரெம்ப நன்றிங்க விருதுக்கும் வருகைக்கும்

@ siva - சிவா தம்பி... ஏன் இந்த கொலை வெறி? உலகம் எப்பவும் நம்மள நம்பும்... அதுக்கெல்லாம் முகராசி வேணும் யு நோ... ஹா ஹா ஹா

@ siva - அடடா... டவுட் தனபால்னு உங்க பேரை மாத்திடலாம் போல இருக்கே .... இதெல்லாம் ரகசியம்.... சொல்ல மாட்டேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - ரெம்ப நன்றிங்க எஸ்.கே வருகைக்கும் கருத்துக்கும்

@ VELAN - அது எப்படின்னு சொல்லுங்களேன்... நிஜமாவே தெரியாமதான் கேக்கறேன்... கிண்டல் எல்லாம் இல்லை... வருகைக்கு நன்றிங்க

@ Thenral - சரியா சொன்னீங்க தென்றல்... சூப்பர்... நன்றிங்க

Ananthi said...

///ஒரு நேரம் சாப்பிடலைனாலே அட்மிட் பண்ண வேண்டிய கேஸ் மாதிரி ஆய்டுவேன்///

ஹிஹிஹி.... அய்யய்யோ....ஒழுங்கா சாப்பிட்டு உடம்ப தேத்துங்க..!

///நீ கடவுள் இருக்குனு நம்பறயோ இல்லியோ... உனக்கு மேல ஒரு சக்தி இருக்கு... ///

எனக்கும் அதே கருத்து தாங்க.. பதிவு நல்லா இருக்குங்க...!
தொடர் பதிவு ஸ்பெஷலிஸ்ட் ஆய்ட்டீங்க...!

:-)))

கோவை ஆவி said...

அமிர்தம் மிஸ்ஸோட கான்செப்ட் தான் என் கான்செப்ட் - ம். நல்ல பதிவு. ( நீங்களும் கோவையை சேர்ந்தவர் என்றறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ஹி ஹி ஹி...நீங்க நெனைக்கற மாதிரி இல்லப்பா... பசி தாங்கா பாவை தான்.. அவ்ளோ தான் மேட்டர்... தேங்க்ஸ் ஆனந்தி

@ கோவை ஆவி - நன்றிங்க... எனக்கும் கோவை மக்கள் நெறைய பேரை ப்ளோக்ல தெரிஞ்சுகரதுல சந்தோஷம்... நன்றி

தனி காட்டு ராஜா said...

அடக் கடவுளே .....

அப்பாவி தங்கமணி said...

தனி காட்டு ராஜா - ha ha ha...what happened?

Thenammai Lakshmanan said...

இதப்பார்க்கலியா தங்கம்ஸ் :)

http://honeylaksh.blogspot.in/2010/12/blog-post_04.html

Post a Comment