Monday, August 16, 2010

ப்ரியசகி...முன் குறிப்பு:
இந்த கவிதை எல்லாம் நீங்க மொதலே எங்கயோ படிச்சு இருக்கீங்க. எங்க யாருதுன்னு கரெக்ட்ஆ கண்டுபிடிங்க பாக்கலாம்? கண்டு பிடிச்சா... கண்டுபிடிச்சா... என்ன வெகுமதினு கேக்கறீங்களா? அது சஸ்பென்ஸ்...

கண்டுபிடிக்க முடியலைனா ஸ்க்ரோல் டௌன் டு எண்டு... இப்பவே இல்ல... எல்லா கவிதையும் படிச்சு முடிச்சப்புறம் தான்... இல்லேனா answer தானே மறஞ்சு போற மாதிரி செட்டிங்க்ஸ் செஞ்சு வெச்சு இருக்கேன்... ஆமா சொல்லிட்டேன்... (ஹி ஹி ஹி...)

ஒகே ஸ்டார்ட் ரீடிங்....

______________________________________

ப்ரியசகி...
சிந்தனை மழுங்கச்செயும் சிரிப்பும்
சிரிக்கவே மறக்கசெய்யும் கோபமும்
என்னையே இழக்கசெய்யும் அபிநயமும்
எந்த தேவதையிடம் கற்றாய்
கெஞ்சிகேட்கிறேன் சொல்லிவிடு
கொஞ்சமேனும் தூங்கவிடு...

கண்பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல
கனிவாய்பேசும் வார்த்தைகள்கூட
புரியத்தான் இல்லைஎனக்கு
புரியாத புதிரே
புத்தனாய் இருந்தஎன்னை
புதுமை பித்தனாக்கினாயே...
______________________________________

இனியவனே...
பேசிய வார்த்தைக்கெல்லாம்
புதுஅர்த்தம் தோன்றுவதேன்
பேசாத வார்த்தைகூட
பலஅர்த்தம் சொல்லுவதேன்

அருகில் நீவேண்டுமென
ஆதங்கம்எனை கொல்வதேன்
ஆயுள்எல்லாம் உனக்கேஎன
ஆசைமனம் சொல்வதேன்
______________________________________

கண்ணாளனே...
உன் ஒவ்வொரு அசைவும்
ஓராயிரம் சேதி சொல்கிறதே
உன் ஒவ்வொரு சொல்லும்
ஒன்றே பணியாய் கொல்கிறதே

பார்க்கும் இடமெல்லாம்
பாவிமனம் உனை தேடுகிறதே
பனியாய் நீ உருக
பாவை நான் கரைகிறேனே
______________________________________

மனதில் கள்ளம் புகுந்ததும்
மற்றதெல்லாம் துச்சமடி
உன்கண்ணில் காதல் கண்டதும்
உலகம் மொத்தம் உறைந்ததடி!!!

சிரிக்கும் உன் கண்களில்
சிறைவைத்தாயே என்னை
விடுதலை என்றுமே விரும்பாத
வித்தியாசமான கைதி நான்!!!

எண்ணம் பொருள் காட்சி
எல்லாம் நீயே ஆனாய்
என்னதவம் செய்தனை
எனது வரமாய் நீகிடைக்க!!!
______________________________________

நம்நட்புக்கு ஈடாய்
நான் எதையும்ஏற்றதில்லை
எதையும்நீ கேட்டநொடி
எப்படியேனும் பெற்றுதருவேன் - இன்று
என்நட்பையே கேட்கிறாயே
எப்படிதருவேன் சொல்லடி!!!
______________________________________

உன்கண்ணீருக்கு முன்
உடைந்துபோனது என்தவம்
உன்அருகாமையற்ற வாழ்வில்
உயிர்இருந்தும் நான்சவம்!!!

உனைகாணா நாட்கள்
உலகில் வாழாநாட்கள்
உன்குரல் கேளாகணங்கள்
உயிர்வதை க்ஷணங்கள்!!!

ஊன்உறக்கம் வேண்டேன்
உலகில் மற்றெதுவும்வேண்டேன்
உன்புன்னகை போதுமடி
உயிர்வாழ்வேன் நான்!!!
______________________________________

உயிர்போன வலியை
உயிரோடே உணர்ந்தேனடி
காலம் முழுமைக்கும்
கண்மணிஇது போதுமடி

காலன்தனை வென்று
கண்மலர்ந்திடு தேவதையே
கண்ணீரேஇனி வேண்டாமென
கண்ணீரில் கரைகிறேனடி
விரைந்துஎன்னிடம் வந்துவிடு
விதியைநீயும் வென்றுவிடு !!!
______________________________________

சொற்கள் நூறு
சொல்ல இயலாததை
சொல்லாமல் சொன்னது
செல்லமேஉன் ஸ்பரிசமொன்று
______________________________________

இரண்டு வருடங்கள்
இரும்புமனம் காட்டினேனே
எப்படி தவித்தாயோ
என்செல்லமே நீயும்
இரண்டு நிமிடம்கூட
இயலவில்லை எனக்கு
காதல் கொண்டமனதை
கட்டுப்படுத்த கரைகிறேனடி
______________________________________

ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைகண்டதும்
______________________________________

பிரியாவரம் வேண்டி
பிறவிபல காத்திருந்தேன்
பிரியமான உனைவேண்டி
பிறவிநூறு தவம்செய்தேன்
வரம்தந்த தேவதையே
வாழ்க்கைநீயே என்னவளே
பிரியமானவளே....
______________________________________

இப்ப கண்டுப்பிடிசீங்களா? அந்த கடைசி வரிய பாத்ததும் சிலர் கண்டுபிடிச்சு இருக்கலாம்... சிலர் confuse ஆகி இருக்கலாம்... சரி சரி நோ டென்ஷன்... நானே சொல்லிடறேன்... இது எல்லாமும் நான் சில மாதங்களுக்கு முன்ன எழுதின "பிரியமானவளே..." தொடர் கதைல அங்க அங்க வந்த கவிதைகள் (!!!) ....கரெக்ட்ஆ கண்டு பிடிச்சவங்களுக்கு பத்து மார்க்...

இப்ப உங்க reaction என்னனு எனக்கு நல்லா தெரியும்...
"இதெல்லாம் ஒரு பொழப்பு"
"இப்படீல்லமா ஒரு போஸ்ட் தேத்தனும்"
அப்படினெல்லாம் உங்களுக்கு தோணினா... இட் இஸ் நார்மல்... மனுசன்னா கோபம் வர்றது சகஜம் தானே... ஆனா மனசுக்குள்ளயே திட்டிக்கோங்க... பப்ளிக்ல வேண்டாமே... பாவமில்லையா அப்பாவி தங்கமணி

பின் குறிப்பு:
உண்மைய சொல்லணும்னா... இன்னிக்கி என்னமோ திடீர்னு ஒரு மாறுதலுக்கு என்னோட ப்ளாக்ஐ நானே படிச்சேன்... (ஏன் இந்த தற்கொலைனு நீங்க முணுமுணுக்கறது கேக்குது...)

அப்போ நான் எழுதின இந்த பழைய கதை படிச்சேனா... அந்த கவிதை எல்லாம் என்னமோ கொஞ்சம் நல்லா இருக்கறா மாதிரி தோணுச்சா... (அதை நாங்க சொல்லணும்னு சொல்றீங்களோ...ஹி ஹி ஹி)

அதை உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு தொகுத்து போட்டேன்... வேற ஒண்ணும் இல்ல...

மேல போட்டு இருக்கற வைரமுத்து படத்துக்கும் இந்த கவிதைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... சும்மா உங்கள குழப்பறதுக்கு தான்... ஹி ஹி ஹி... மீ எஸ்கேப்...

(இல்லேனா மட்டும் உன்னோட கொடுமை கிறுக்கல வைரமுத்துதுன்னு நாங்க நம்பிடுவோமா. என்ன கொடும சார் இது? நான் லீவுல போனதும் இவ கொடும ஓவர் ஆய்டுச்சு போல இருக்கே - mindvoice )

 டாட்டா Bye Bye ... சி யு....


....

56 பேரு சொல்லி இருக்காக:

ஜெய்லானி said...

இது எங்க கெட்ட நேரம் வேர என்ன சொல்ல

ஜெய்லானி said...

//"இதெல்லாம் ஒரு பொழப்பு"
"இப்படீல்லமா ஒரு போஸ்ட் தேத்தனும்"//

நீங்களே சொன்ன பிறகு நாங்க என்ன சொல்ல :-))))

ஜெய்லானி said...

// டாட்டா Bye Bye ... சி யு....//

ஆஹா ஹைக்கூ சூப்பர்..!!

ஜெய்லானி said...

//ஆனா மனசுக்குள்ளயே திட்டிக்கோங்க... பப்ளிக்ல வேண்டாமே... பாவமில்லையா அப்பாவி தங்கமணி //

நல்லா பாத்துக்கோங்க நா திட்டல ..கர்ர்ர்ர்ர்..

Mahi said...

நான் இன்னும் ப்ரியமானவளே படிக்கலீங்கோ!:) அதனால முதல் முறை இந்தக்கவிதைகளை படிக்கிறேன்..நன்றாக இருக்கு புவனா!

பி.கு.ஆனாலும்,இப்பூடி ஒரு போஸ்ட் தேத்தறதெல்லாம் அநியாயம்.வைரமுத்து படம் போட்டு குழப்பியதுக்கும் சேர்த்து ஒரு கர்ர்ர்ர்ர்!

நசரேயன் said...

நானும் மனசுக்குள்ளே திட்டிகிட்டேன்,இனிமேல தங்கமணி கடைப்பக்கம் போவியா .. போவியான்னு

பத்மநாபன் said...

ஆரம்ப பில்டப் லேயெ கண்டுபிடிச்சுட்டோமே யார்ன்னு? ,கவிதை படிக்காமலேயே ......

தொகுப்பாகவும் நன்றாக இருக்கிறது....

அமைதிச்சாரல் said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு :-)))))))

Krishnaveni said...

very nice kavidai, i knew.....it's yours....keep posting

அபி அப்பா said...

நல்லா இருக்கு கவிதை எல்லாம். ஆமா யார் எழுதினது இதல்லாம்:-))0

Jey said...

க்க்கக்கககர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஹுஸைனம்மா said...

”இந்த நட்டநடுராத்திரியில, தூங்கப்போமுன்னே இந்தப் பிளாக்கை ஓபன் பண்ணாதேன்னு எவ்வளவு சொன்னேன், கேட்டியா? இப்ப தலையில அடிச்சு என்ன பிரயோஜனம்?”

சொன்னது: என் மனசாட்சி.

:-(((

கோவை ஆவி said...

கவிதைகள் நன்றாக இருந்தன. அதைவிட பின் குறிப்பு நகைச்சுவையோடு கூடி நன்றாக இருந்தது.

Priya said...

போங்க புவனா, நான் இதெல்லாம் வைரமுத்து எழுதினதுன்னு நினைச்சுதான் படிச்சேன்(B'coz ப்ரியமானவளே சில பகுதி நான் படிக்கல). ஆனா உண்மையாவே ரொம்ப அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

திட்டுறதுன்னு ஆகிப்போச்சி.. நல்லாருக்குன்னே திட்டிருவோம்.. கவிதை அழகாக காதலி/காதலனின் தவிப்புகள் மனதை கொள்ளையடிக்கிறது..

///இரண்டு வருடங்கள்
இரும்புமனம் காட்டினேனே
எப்படி தவித்தாயோ
என்செல்லமே நீயும்
இரண்டு நிமிடம்கூட
இயலவில்லை எனக்கு
காதல் கொண்டமனதை
கட்டுப்படுத்த கரைகிறேனடி..///

வரிகளில் காதலின் தவிப்பு சுடுகிறது.. எல்லா வரிகளும் கவித்துவம்தான்..

ரொம்ப அழகான கவிதை..

திட்டியாச்சி போதுமா தங்கமணி மேடம்..

siva said...

nasama poga entha blog..appadinu nan thitalinga....matavanga thitinathai nan eppadi chluvennnnnnnnnn..

siva said...

neenga nalla erukavenum................

siva said...

eppadi kalam kathaleyey இந்தப் பிளாக்கை ஓபன் பண்ணாதேன்னு எவ்வளவு சொன்னேன், கேட்டியா? இப்ப தலையில அடிச்சு என்ன பிரயோஜனம்----repeatu..

enimey entha blog pakkam varuva???appdi ellam sapatham potten..hm pakalam..

siva said...

yeenga appavi ellarukum LEAVE POTU ORUKU PORANGA..NEENGA MATUM YEN BLOGUKU LEEVEY VIDAMATRENGAL....

NEENGA BLOGKU LEAVE VIDRENU MATUM ORU POSTING PODUNGA..EPPADIUM 200COMMENTS VILUM..
EPPUDI!!!!!

siva said...

20

siva said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு :-)))))))

EPPADI USUPETHI USUPETHITHAN eppo namalai ellam konukitu erukkanga..venam cholliputen...

ethu ellam nalla ellai..

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு. ஏற்கெனவே உங்கள் கவிதைகளை பாராட்டி இருக்கேன். அதுவும் பிரியமானவளே தொடரில் வந்தது தவிர தனியாய் ஒரு கவிதை இடுகை போட்ட பொழுது... தனி நடை என்று.. நினைவு இருக்கா?

சௌந்தர் said...

யாரும் கவிதை படிக்க வில்லை என்பதற்காக இப்படி ஒரு ஐடியாவா....

வெறும்பய said...

நல்லா இருக்கு..

தொகுப்பாகவும் நன்றாக இருக்கிறது....

SenthilMohan said...

இதெல்லாம் ஒரு பொழப்பு?
இப்டிஎல்லாமா ஒரு post தேத்துறது?
அதான் நாங்க எல்லாம் உங்க Blog-க Follow பண்றோம்ல. அப்புறம் எதுக்கு இந்த சுய விளம்பரம்?
நேரக் கொடுமைன்றது இது தானா?
இப்டியெல்லாம் நான் சத்தியமா நெனைக்கலீங்க்கா. நிஜமாத் தான் நம்புங்க. :)
ஏன் தெரியுமா? இதப் படிக்கும் போது Englishkaran படத்துல வர்ற ஒரு காமெடி நியாபகம் வந்துடுச்சு.
கல்யாணத்த நிறுத்த வடிவேலு ரசத்துல கரப்பான் பூச்சியப் போட்டுட்டு, சாப்பிடுறவன் கிட்டக் கேட்பாரு, "ஏண்டா ரசத்துல கரப்பான் பூச்சி விழுந்திருக்கு. பிரச்சினை பண்றா"ன்னு. அதுக்கு அவன் சொல்லுவான், "சாம்பார்ல பெருச்சாளி இருந்துச்சு. அதையே தூக்கிப் போட்டுட்டு தூறு வாரிகிட்டு இருக்கேன், நீ மோர ஊத்து, பூனை கீது குதிக்குதான்னு பாப்போம்" அப்படின்னு.
எவ்வளவோ படிச்சுட்டோம். இதப் படிக்க மாட்டமா? :)

ரமேஷ் said...

கவிதை எல்லாமே ரொம்ப நல்லா இருக்குங்க...அப்படியே நானும் ஒரு கவிதை எழுதி இருக்கேன்..இது என்னோட முதல் கவிதை...அதையும் பாருங்க...

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_06.html

வேங்கை said...

hi தங்கமணி

//ஊன்உறக்கம் வேண்டேன்//
வைரமுத்து sir எழுத்துப்பிழை செய்ய மாட்டாரே (ஹி ஹி ஹி)

* ஊண்

இப்பதான் first time படிக்குறேன் ரொம்ப நல்லா இருக்குங்க

தொடர்ந்து கவிதை எழுதவும்

வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு said...

ரொம்ப கலகலப்பா எழுதறீங்க.. வாழ்த்துக்கள்..

kavisiva said...

கவிதைகள் ரொம்ப நல்லாருக்கு அப்பாவி. ஆனா இப்படீல்லாம் போஸ்ட் தேத்தறது கொஞ்சம் இல்ல ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவேஏஏஏஏ ஓவர் :)

sandhya said...

புவனா அந்த கதை படிச்சிட்டு வந்து கமெண்ட் போடறேன் சரியா ..கவிதைகள் எல்லாமே சூப்பர்..வைரமுத்து சார் படம் பார்த்து இதெல்லாம் அவர் எழுதினது என்று தான் நினைத்தேன் ..நீங்க பெரிய கவிதாயனி தான் ...

சுசி said...

கதை படிக்கும்போது ரசிச்ச கவிதைகள்.. தொகுப்பாவும் நல்லாருக்கு புவனா :))))

க.பாலாசி said...

அட இதுகூட நல்லாதானுங்க இருக்கு... நல்ல கவிதைகள்...

siva said...

தொகுப்பாவும் நல்லாருக்கு புவனா :))))
EPPADIEY USUPUTHENGA.....

chumma thammasu..
nijama nalla erukka appavi akka..

சே.குமார் said...

அது சரி...
இப்படியும் கிளம்பிட்டாங்கய்யா...
இதை வச்சு ஒரு தொடர் பதிவு வராம இருந்தா சரி.
நடத்துங்க... நடத்துங்க உங்க காட்டுல மழை.
சும்மா சொல்லக்கூடாது உங்க கவிதை நல்லாயிருக்கு.

தக்குடுபாண்டி said...

இதெல்லாம் ஒரு பொழப்பு........:)

priya.r said...

கவிதை தொகுப்பு அருமை புவனா
எங்களை போன்ற புதியவர்களுக்கு
நீங்கள் மறுபடியும் பதிவாக போட்டதால்
தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது
வாழ்த்துக்கள் புவனா

siva said...

இதெல்லாம் ஒரு பொழப்பு........:)

ethuthan latest drendu...:))

புதுகைத் தென்றல் said...

வகை வகையா யோசிப்பீங்க போல!!!!

கோவை2தில்லி said...

ரொம்ப நல்லா இருந்தது. காமெடியா எழுதியிருக்கீங்க.

சின்ன அம்மிணி said...

சரி சரி. சுயவிளம்பரம் போதும். அதே கண்கள் அடுத்த பார்ட் போடுங்க :)

Matangi Mawley said...

kavitha yellaam nallaa irukkey! neengaley ezhuthinathaa?? wow! :) talent! super!

DREAMER said...

என்னதான் நீங்க வைரமுத்து படம் போட்டு குழப்பினாலும்... கவிதை நல்லாயிருக்கு... தொடருங்க.... 'ப்ரியாமானவளே' தொடரை இன்னும் படிக்கல... படிச்சிடுறேன்...

-
DREAMER

dineshkumar said...

வணக்கம்
நான் இன்னும் பிரியமானவளே படிக்கவில்லை கவிதைகள் எல்லாமே நல்லா இருக்கு.
//ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைகண்டதும்//
http://marumlogam.blogspot.com

Jey said...

அதிசயம்...ஆனால் உண்மை..., http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_23.html

படிக்கவும்...

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - ஹா ஹா ஹா... ரெம்ப டென்ஷன் ஆய்டீங்க போல இருக்கே... சூப்பர் ஹைக்கூவா... நன்றி நன்றி நன்றி

@ Mahi - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் மகி... குழப்பினா தானே ஒரு த்ரில் இருக்கும் மகி... என்ன நான் சொல்றது?

@ நசரேயன் - ஹா ஹா ஹா... சரி சரி... டென்ஷன் ஆகாதீங்க சார்...

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஹா ஹா ஹா... ஊர் காரர் நிரூபிக்கறீங்க பாருங்க... சூப்பர்... நன்றிங்க

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கோவ்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - இதெல்லாம் அநியாயம்... நான் தான்னு சொல்லியும் யார் எழுதினதா... கர்ர்ர்ரர்ர்ர்ர்

@ Jey - நோ டென்ஷன்,,, நோ டென்ஷன்

@ ஹுஸைனம்மா - அடடே வாங்கவாங்க... ஊர் எல்லாம் போயிட்டு வந்தாச்சா... என்னதிது மனசாட்சி இப்படி எல்லாம் பேசுது... அதை ஊர்லையே உட்டுட்டு வந்துடுங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - நன்றிங்க

@ Priya - ஆஹா... மிகபெரிய பாராட்டு ப்ரியா... ரெம்ப தேங்க்ஸ்ங்க...

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ஆஹா... இந்த திட்டு நல்லா இருக்கே... சூப்பர்... இனிமே இப்படியே திட்டுங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ siva - அடப்பாவி... கன்னா பின்னானு திட்டுறீங்களே... இது ஞாயமா சார்... நான் தான் சொன்னனே... மனசுக்குள்ளயே திட்டிகோங்கன்னு... ஒகே வா... நோ டென்ஷன் நோ டென்ஷன்

@ ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க... நல்லாவே நினைவு இருக்கு உங்க பாராட்டு

@ சௌந்தர் - ஆஹா... தொழில் ரகசியம் எல்லாம் மனசுக்குள்ள வெச்சுக்கணும்... இப்படி பப்ளிகா போட்டு உடைக்க கூடாது...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - நன்றிங்க

@ SenthilMohan - திட்ட வேண்டியதெல்லாம் மனசார திட்டிட்டு அப்புறம் "இப்டியெல்லாம் நான் சத்தியமா நெனைக்கலீங்க்கா" னு ஒரு டயலாக் வேற... என்ன கொடும செந்தில் இது?
//எவ்வளவோ படிச்சுட்டோம். இதப் படிக்க மாட்டமா? :)// ஐ லைக் திஸ் டீலிங்... ஹா ஹா ஹா

@ ரமேஷ் - கண்டிப்பா பாக்குறேங்க... ரெம்ப நன்றி உங்க வருகைக்கும் கமெண்ட்க்கும்

அப்பாவி தங்கமணி said...

@ வேங்கை - ஆஹா... சாரிங்க... கவனிக்கல...எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி...

@ பதிவுலகில் பாபு - ரெம்ப நன்றிங்க பாபு... முதல் வருகைக்கும் கருத்துக்கும்

@ kavisiva - ஹா அஹ ஹா... இதெல்லாம் ப்ளாக்ல சகஜமப்பா... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - ரெம்ப நன்றி சந்த்யா... அவர் எங்கே நான் எங்கே...

@ சுசி - நன்றிங்க சுசி

@ க.பாலாசி - ரெம்ப நன்றிங்க பாலாசி

அப்பாவி தங்கமணி said...

@ siva - why டென்ஷன் ... நோ டென்ஷன் பிரதர்... ஹா ஹா ஹா

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ தக்குடுபாண்டி - அடப்பாவி... ஏன் இந்த கொலை வெறி...? (அய்யாவு பொண்ணு மாணிக்கம் பொண்ணு எல்லாம் சௌக்கியமா...?)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - நன்றிங்க ப்ரியா

@ புதுகைத் தென்றல் - என்னங்க அக்கா செய்யறது... வேற எப்படி வியாபாரம் பண்ண... ஹா ஹா ஹா

@ கோவை2தில்லி - நன்றிங்க... முதல் வருகைக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மிணி - ஹி ஹி ஹி...கண்டுபிடிச்சுடீங்களா... ஒகே ஒகே... நமக்குள்ள இருக்கட்டுமுங்க அம்மணி... சீக்கரம் அடுத்த பார்ட் போட்டுடறேன்...

@ Matangi Mawley - ஆமாங்க... என்னோட சொந்த மூளை வெச்சு யோசிச்சு எழுதினது தான்... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் Matangi

@ DREAMER - நன்றிங்க... ரெம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்து இருக்கீங்க... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ dineshkumar - ரெம்ப நன்றிங்க தினேஷ் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

@ Jey - கண்டிப்பா படிக்கறேன் ஜெய்... நன்றி லிங்க் குடுத்ததுக்கு...

Post a Comment