Tuesday, August 24, 2010

பதிவுலகில் நான்...

இந்த "பதிவுலகில் நான்...." தொடர் பதிவை எழுத புதுகை தென்றல் மற்றும் LK கூப்பிட்டு இருக்காங்க...(ஏண்டா கூப்ட்டோம்னு இப்போ பீல் பண்றதா என்னோட கனவுல வந்து சொன்னாங்க...)

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அப்பாவி தங்கமணி


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஒரு வகைல உண்மை பெயர் தான் அதுவும்... அதாவது தமிழ் இலக்கண படி சொல்றதுன்னா (கொஞ்சம் ஓவரா இருக்கோ...ஹி ஹி ஹி) குணப்பெயர்னு சொல்லலாம்... (ஒகே ஒகே... நோ டென்ஷன்....உண்மைய ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்... வேணும்னா ஜெலுசில் வாங்கி அனுப்பறேன்...ஹி ஹி ஹி)

இந்த பேரு வெக்க என்ன காரணமா... மறுபடியும் சொல்லி வெறுபேத்தறேன்னு திட்டாதீங்க... கேட்ட கேள்விக்கு தான் பதில் சொல்றேன்... என்னை represent பண்றா மாதிரி இருக்கணும்னு அப்பாவியா ஒரு பேரு செலக்ட் பண்ணினேன்... போதுங்களா...


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

Actually... you know... நான் ப்ளாக் எழுத வரலன்னா பெரிய டாக்டர் ஆகி இருப்பேன்... யு நோ... பைலட் சீட் கூட கெடைச்சது... நான் தான் அதை வேற ஒருத்தருக்கு விட்டு குடுத்துட்டேன்... இப்படி எல்லாம் நம்ம சினிமா ஹீரோயன்ஸ் மாதிரி டயலாக் பேசணுன்னு எனக்கும் ஆசையாதாங்க இருக்கு... பட் யு சி... நான் என்ன எப்படின்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்... ஹும்... என்ன இருந்தாலும் ஒரு நல்ல டாக்டர இந்த உலகம் இழந்துடுசுங்கறது மறுக்க முடியாத உண்மை... (ஹி ஹி ஹி)

சரிங்க கேட்ட கேள்விக்கு போவோம். காலு கை எல்லாம் எடுத்து வெக்கலீங்க... பேனா தான் எடுத்து வெச்சேன்... ச்சே அது கூட தப்பு... கி போர்டு தான் எடுத்து வெச்சேன்... (இந்த கேள்விய ஆரம்பிச்சு வெச்சவர் நொந்து போய் இருப்பார் ....ஹையோ ஹையோ)

நான் வலைபதிவு ஆரம்பிச்சத பத்தி போன கொஞ்ச நாள் முன்னாடி தான் "Serendipity ..." ங்கற தலைப்புல ரம்பம் போட்டேன்... மறுபடியும் எழுதினா கொலை மிரட்டல் வந்தாலும் வரும்.... வேண்டாமே...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் ஆகறதுக்கா...... என்ன செஞ்சேன்...? ம்ம்ம்... ஆங்... அந்த ரகசியத்த உங்க கிட்ட மட்டும் சொல்றேன்... காத இப்படி குடுங்க... நோ நோ... கம்மல் எல்லாம் திருடிக்க மாட்டேன்... ஒரு பேச்சுக்கு தான்...

அதாவது டுபாகூர் ஜோசியர் "ஜோக்கண்ணா" ஒரு வெற்றி ரகசியம் சொன்னார்... அவர் சொன்னது என்னனா... "கொஞ்சம் உன் பேச்சை கொறச்சா போதும்" னு... ஆனா சாப்டாம கூட இருக்கலாம்... பேசாம முடியுமோ... அதனால செய்யல... பிரபலமும் ஆகல...ஹும்... வேற ஏதாவது பேசிட்டே செய்யற மாதிரி ஐடியா தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்...

அந்த ஜோசியர் இன்னொன்னு கூட சொன்னார் "நீ பதிவே போடாம இருந்தா இன்னும் பிரபலமாகும்"னு .... அதையும் நான் இன்னும் ட்ரை பண்ணி பாக்கல... அப்புறம் நாட்டு மக்களுக்கு நல்லது கெட்டது (!!!) புரியாம போய்டும் பாருங்க..... ஹி ஹி ஹி


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

கொஞ்சம் ஓவராவே சொந்த கதை சோக கதை சொல்லுவேன்... இனிமே கொறச்சுக்கணும்னு ஒரு எண்ணம் இருக்கு... (ரெம்ப சந்தோஷம்னு யாரோ சொல்றது தெளிவா கேக்குது...)

ஏன் சொந்த கதை சொல்றன்னு கேட்டா... தனியா பொலம்பினா வேற ஏதோ பேராம்.. அதை விட இது மேல்னு தான் உங்க உயிர வாங்குறேன்... ஹா ஹா ஹா

சொந்த விசயம் சொன்னதுல விளைவுன்னு பாத்தா நான் ஒரு காமெடி பீஸ்னு நெறைய பேரு முடிவே பண்ணிட்டாங்க... ஒண்ணும் பண்றதுகில்ல... சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்டாச்சு...

(இந்த இமேஜை எப்படி மாத்தறதுன்னு யாராச்சும் ஐடியா சொன்னா அவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு...ஹி ஹி ஹி)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஊட்டில ஒரு எஸ்டேட்... கொடைக்கானல்ல ஒரு பங்களா... குளுமணாலில (ச்சே ரெம்ப கஷ்டமான ஸ்பெல்லிங்...) ஒரு பனி மலை... அப்புறம் நெறைய சொத்து எல்லாம் ப்ளாக் அண்ட் வைட்ல ப்ளாக் எழுதி சம்பாரிச்ச காசுல வாங்கி போட்டு இருக்கேன்...

ஹையோ ஹையோ...  ஒரே காமெடிங்க இந்த கேள்விய கண்டுபிடிச்சவருக்கு
 
சம்பாதிக்கறதா... நம்ம பதிவெல்லாம் மக்கள் படிக்கறதே பெரிய விசயம்,... இந்த கேள்வி எல்லாம் அவங்க காதுல விழுந்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க... ஹும்...

ஆனா நெறைய நண்பர்களை சம்பாரிச்சுட்டேன்... அதுவேணா உண்மையான சம்பாத்தியம்...

காசு என்னங்க காசு... இன்னிக்கி வரும் நாளைக்கி போகும்... (அப்படின்னா என்னனு தான் புரியல...எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் சொல்றேன்... ஹி ஹி ஹி)


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நல்லா கேட்டீங்க கேள்வி... இந்த ஒன்ன வெச்சே முடியல... இன்னொன்னு வேறயா... அந்த தப்ப மட்டும் நான் செய்யவே மாட்டேன்... (இன்னொன்னு இருந்தா ஆபீஸ் டைம் இல்லாம ஓவர் டைம் தான் பாக்கணும் போங்க...ஹி ஹி ஹி )

ஒன்னே ஒண்ணு தான்... கண்ணே கண்ணு தான்... அப்பாவி தங்கமணி தான்... அது தமிழ் மட்டும் தான்...

தமிழ் வலைபதிவா... அப்புறம் ஏன் ஆங்கில வார்த்தை எல்லாம் வருதுன்னு நீங்க கேக்கலாம் ...அதெல்லாம் உங்களுக்கு புரியனுங்கர நல்ல எண்ணத்துல தான்.... என்னங் நான் சொல்றது...

"நீர் வார் கண்ணே எம்முன் வந்தோய், யாரையோ நீ மடக்கொடியோ" னு நான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினாப்ல செந்தமிழ்ல செய்யுள் நடைல எழுதினா எல்லாம் தெறிச்சு ஓடிர மாடீங்களா... அதான் உங்களுக்காகத்தான்... ஹும்....நம்ம நல்ல மனச யாரு புரிஞ்சுக்கறா...


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஏனுங்க? இல்ல ஏனுங்ககறேன்...? இந்த கேள்விய ஆரம்பிச்சு வெச்சவர் பயங்கரமான ஆளா இருப்பார் போல இருக்கே... "சும்மாவே ரங்கமணிகள் எதிர்ப்பு பிரசாரம் செய்யறையா நீ"னு அப்போ அப்போ மிரட்டல் எல்லாம் வருது

ஏன் சொல்லலைன்னு நீங்க அக்கறையா கேக்கறது புரியுது?... சொல்லி உங்களை எல்லாம் மனசு கஷ்டபட வெக்க வேண்டாமேன்னு தான்... (அப்பாவி இப்படியே maintain பண்ணு... மிரட்டல் எல்லாம் வருதுன்னு சொன்னாத்தான் பெரிய பதிவர்னு நெனப்பாங்கன்னு டுபாகூர் ஜோசியர் சொன்னருல்ல...ஹி ஹி ஹி)

கோபம் எல்லாம் யார் மேலயும் இல்லிங்க... அவங்க அவங்களுக்கு தோணுறத எழுதறாங்க... எழுத்து சுதந்திரம் உள்ள உலகம் இது... அவங்க எழுதறது பிடிக்கலைனா கமெண்ட் போடாம பேசாம வந்துறதுதேன்... என்னத்துக்கு கோவம் எல்லாம்...அப்புறம் BP வரும்... பின்னாடியே ஹார்ட் அட்டாக் வரும்... வம்ப பாரு.... அப்புறம் எப்படி ப்ளாக் எழுதி மத்தவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வெக்கறது... ஹையோ ஹையோ

பொறமை இல்ல... admire பண்ணி இருக்கேன் சிலர் எழுத்தை பாத்து... அது பெரிய லிஸ்ட்... இங்க போட்டா இன்னிக்கி முடியாது... (என்கிட்டயேவா...ஹி ஹி ஹி)


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இதையும் "Serendipity .." லையே சொன்னேன்.. ஆஷானு ஒரு பதிவர்... அவங்க போட்ட கமெண்ட்...இதோ...

//இதுக்கெல்லாம அழுவாங்க?
அவரில்லே அழுவனும்..சரி சரி கண்ணே தொடைச்சிக்கொங்க..
எவ்ளோவோ பண்ணிட்டோம் இதே பண்ண மாட்டோமா? //

சூப்பர் மொதல் கமெண்ட் இல்லங்க... ஆனா.. என்னமோ அந்த அம்மணி அதுக்கப்புறம் நம்ம பக்கமே வருலீங்க... ரெம்ப பயந்துடாங்களோ என்னமோ.. ஹும்...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தெரியவேண்டியது தெரியகூடாதது எல்லாமும் ரெம்பவே ஏற்கனவே ஒளறிட்டேன்... இதுக்கு மேலயும் சொன்னா... படிக்கறவங்க என்னோட சுய சரிதையே எழுதற அளவுக்கு மேட்டர் தேறிடும்... வேண்டாம்... நீங்களும் பாவம் நானும் பாவம்.. விட்ருவோம்... ஹா ஹா ஹா

பின்னூசி குறிப்பு:
பத்து வரில கேள்வி கேட்டா பத்து வரில தான் பதில் சொல்லணும்னு எந்த கண்டிஷன்ம் இல்லாத காரணத்தினால் ஸ்கூல்ல பக்கம் பக்கமா பதில் எழுதியே மார்க் வாங்கின technique ஏ இங்கயும் யூஸ் பண்ணி இருக்கேன்... டென்ஷன் ஆகாம இந்த பின்னூசி குறிப்பு வரைக்கும் படிச்ச லட்சோப லச்சம் ரசிகர் பெருமக்களுக்கு (ஒகே ஒகே ஒண்ணு ரெண்டு பேருக்கு) நன்றி நன்றி நன்றி

இந்த தொடர்பதிவு ஒரு பெரிய சுத்து ஏற்கனவே வந்துடுச்சு.. யாரை மாட்டி விடறதுன்னு தெரியல... எல்லாரும் எழுதிட்ட மாதிரி தான் இருக்கு... நானும் ஒரு பத்து இருபது ப்ளாக் போய் பாத்தேன்... எல்லாரும் எழுதியாச்சு... அதனால் எழுதாதவங்க எழுதிடுங்கப்பா... நன்றிங்க அப்புறம் பாக்கலாம்...

...
....

62 பேரு சொல்லி இருக்காக:

Anonymous said...

ஹாஹா.. சூப்பர்..

//(இந்த இமேஜை எப்படி மாத்தறதுன்னு யாராச்சும் ஐடியா சொன்னா அவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு...ஹி ஹி ஹி)//

ஓகே. முதல்ல பிளாக்கர்.காம் போய், சைன் இன் ஆகி, எடிட் ப்ரோபைல் போயி, சேஞ் ப்ரோபைல் பிக்சர் போயி இமேஜ மாத்திக்குங்க ஓகே? எங்க ஆயிரம் பொற்காசு?

Anonymous said...

நாந்தான் பர்ஸ்ட்டா? வட எனக்குத்தான்... (பெயர் இல்லன்னா அனுப்ப மாட்டிங்களோ?

Mahi said...

நான் செகண்ட்..பெயரோடு வந்திருக்கேன்,வடை எனக்கே எனக்கு!:)

sriram said...

பின்னூட்ட உலகில் நான்..
வேணாம் ஏற்கெனவே நான் டெம்ப்ளெட் பின்னூட்டங்கள் மட்டும் போடுறதா கழகக் கண்மணிகள் காண்டுல இருக்காங்க - இந்த ஆட்டத்துக்கு நா வல்ல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

மூணாவதா வந்தாலும், ஊரு மற்றும் பேரோட வந்திருக்கேன் அதனால வடை எனக்கா??
மஹி - இதெல்லாம் போங்காட்டம் - பேரோட வந்தாலும் வராட்டாலும் மொதோ வந்தவங்களுக்குத்தான் வடை.
ரெண்டாவதா வந்த ஒங்களுக்கு அ.த. மணி அவங்க கையால பண்ண இட்லி தருவாங்க - என்சாய்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sandhya said...

புவனா எப்போதும் போல கலக்கல் பதிவு ..ஏன் எதுக்குமே புடி கொடுக்கமா எழுதினே என்ன எஸ்கேப் ஆ ஹி ஹி ஹி ..எல்லா பதில்களும் சூப்பர் ஒ சூப்பர் ..

"கோபம் எல்லாம் யார் மேலயும் இல்லிங்க... அவங்க அவங்களுக்கு தோணுறத எழுதறாங்க... எழுத்து சுதந்திரம் உள்ள உலகம் இது... அவங்க எழுதறது பிடிக்கலைனா கமெண்ட் போடாம பேசாம வந்துறதுதேன்... என்னத்துக்கு கோவம் எல்லாம்...அப்புறம் BP வரும்... பின்னாடியே ஹார்ட் அட்டாக் வரும்... வம்ப பாரு.... அப்புறம் எப்படி ப்ளாக் எழுதி மத்தவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வெக்கறது... ஹையோ ஹையோ "

இந்த பதில் ரொம்ப பிடிச்சிருக்கு ..

சௌந்தர் said...

அவங்க எழுதறது பிடிக்கலைனா கமெண்ட் போடாம பேசாம வந்துறதுதேன்... ///

ஓஹ கமெண்ட் போடலை என்றால் புடிக்க வில்லை அர்த்தமா எல்லோரும் பாருங்கள் இவங்க யாருக்கு எல்லாம் கமெண்ட் போடலையோ அவங்க பதிவு புடிக்க வில்லையாம்....எப்புடி நாங்க மாட்டி விட்டோம்

நசரேயன் said...

//ஒரு நல்ல டாக்டர இந்த உலகம் இழந்துடுசுங்கறது மறுக்க முடியாத உண்மை//

நோயாளிகள் தப்பிச்சிட்டாங்க ன்னு இருக்கணும்

நசரேயன் said...

//உங்களுக்கு புரியனுங்கர நல்ல எண்ணத்துல தான்//

தமிழ் வார்த்தை தெரியலைன்னு சொல்லமா சமாளிப்பா ?

பத்மா said...

சூப்பர் தங்கமணி..ரொம்ப சிரிப்பாணியா
எழுதி இருக்கீங்க

நசரேயன் said...

//சூப்பர் மொதல் கமெண்ட் இல்லங்க... ஆனா.. என்னமோ அந்த அம்மணி அதுக்கப்புறம் நம்ம பக்கமே வருலீங்க..//

எம்புட்டு நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிப்பாங்க

Ahamed irshad said...

Super..Good Post

Krishnaveni said...

Interesting answers thangam. looks really nice. enjoyed and laughed a lot. mind voice konjam kammiya irukku:) keep writing

sriram said...

//mind voice konjam kammiya irukku:)//

கிருஷ்ணவேணி.. ஏன் சொந்த செலவில சூன்யம் வச்சிக்கறீங்க??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Jey said...

தங்கஅம்மனி... வழக்கம் போல,,லுல்லு...காமெடி..சுவாரஸ்யம்...வீட்ல எப்படிங்க...ரங்ஸ கேட்டதா சொல்லிருங்க.

Anonymous said...

Nee etha elluthum pothu Rangamanikku aani athigamma? eanna mind voice kammiya irukku

பத்மநாபன் said...

பத்துக்கேள்வியிலும் மொத்தி, கடைசில பின்னூசியிலும் குத்திட்டிங்களே.....

அட அசத்தல் ஜோக்கா எழுதனத சொன்னனுங்க .

Rajaram said...

We would missed the receipe for Idly, without your blog.. You got lot of fan's this receipe alone...

சுசி said...

எல்லாமே அசத்தல் பதில்கள்..

நீங்க அப்பாவியா??

உங்க ஆத்துக்கார சீக்கிரம் ப்ளாக் எழுத சொல்ணும் :)

Mrs.Menagasathia said...

interesting answers..

சே.குமார் said...

ஹா... ஹா... சூப்பர்..!

ஹேமா said...

கொஞ்சம் நகைச்சுவையோடான மனம் திறந்த பதில்கள் தங்கமணி.

சின்ன அம்மிணி said...

நல்ல நகைச்சுவை அசத்தல் பதில்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான யதார்த்தமாக நகைச்சுவையாக சொல்லிருக்கீங்க புவனா மேடம். என்னுடைய வாழ்த்துகள்

மின்மினி said...

பதில்கள் அருமை.

அமைதிச்சாரல் said...

ஜூப்பரேய்ய்!!!!

பத்துக்கேள்விகளோட, கேக்காத பதினொண்ணாவது கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லிட்டீங்க. அதான், ப்ளாக் எழுதவரலைன்னா என்னவாகியிருப்பீங்கன்னு....

வெறும்பய said...

அடப் பாவமே இப்படி கூட மொக்க போடலாமா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதுல மனசாட்சி ரொம்ப குறைவா பேசி இருக்கு..உங்களுக்கு பதிலா அ து பேச்சை குறைக்கும்முயற்சியில் இருக்கோ..

புதுகைத் தென்றல் said...

இதுல மனசாட்சி ரொம்ப குறைவா பேசி இருக்கு..உங்களுக்கு பதிலா அ து பேச்சை குறைக்கும்முயற்சியில் இருக்கோ.. //

ஆமாம்பா என்னாச்சு???!!!

தொடர்ந்ததுக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

//நான் ப்ளாக் எழுத வரலன்னா பெரிய டாக்டர் ஆகி இருப்பேன்... //

எத்தனையோ லட்ச நோயாளிகள், இந்தக் காரணதுக்காகவே, பதிவுலகுக்குக் கோயில் கட்டப் போறாங்களாம்!!

பின்ன, பேசியே கொன்னுருக்க மாட்டீங்க அவங்களை?

பதிவுலகில் பாபு said...

ரொம்ப கலகலப்பா எழுதியிருக்கீங்க.. எல்லா பதிலுமே நல்லாயிருக்கு..

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா
//நான் ப்ளாக் எழுத வரலன்னா பெரிய டாக்டர் ஆகி இருப்பேன்... //

எத்தனையோ லட்ச நோயாளிகள், இந்தக் காரணதுக்காகவே, பதிவுலகுக்குக் கோயில் கட்டப் போறாங்களாம்!!

பின்ன, பேசியே கொன்னுருக்க மாட்டீங்க அவங்களை? //


பெரிய ரிப்பீடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

VELU.G said...

பத்து கேள்விக்கு சும்மா பட்டு பட்டுன்னு பதில பினனீட்டீங்க

ஸ்ரீராம். said...

அவங்க எழுதறது பிடிக்கலைனா கமெண்ட் போடாம பேசாம வந்துறதுதேன்...//

ஓ....புரியுது..!

//நான் ப்ளாக் எழுத வரலன்னா பெரிய டாக்டர் ஆகி இருப்பேன்...//

பி எல் படிச்சுட்டுதானே..!!

நகைச்சுவையைக் கலந்து அழகா எழுதி இருக்கீங்க

சின்ன அம்மிணி said...

//(ஏண்டா கூப்ட்டோம்னு இப்போ பீல் பண்றதா என்னோட கனவுல வந்து சொன்னாங்க...)//

மைண்ட் வாய்ஸ் என்ன ஆச்சு

Gayathri said...

super..rombha nagaichuvayaa irukku..padichu nalla sirichen...kavalai marakka udhaviyamaykku nadri akkaa

கோவை ஆவி said...

மைன்ட் வாய்ஸ் மிஸ்ஸிங்???

ரொம்ப நல்லா இருந்தது.. சிரிக்கவும் வச்சுது.. சிந்திக்கவும் வச்சுது...

//இந்த தொடர்பதிவு ஒரு பெரிய சுத்து ஏற்கனவே வந்துடுச்சு.. யாரை மாட்டி விடறதுன்னு தெரியல... எல்லாரும் எழுதிட்ட மாதிரி தான் இருக்கு... நானும் ஒரு பத்து இருபது ப்ளாக் போய் பாத்தேன்... எல்லாரும் எழுதியாச்சு... //

ஒரு வேளை இருபத்தியோராவது ப்ளாக்குக்குள்ள பாத்திருந்த கிடைச்சிருப்பாங்களோ என்னவோ???

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அந்த காலத்து அரசு கஎள்வி பதில் படிக்கறா மாதிரி இருந்தது....

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா -//ஓகே. முதல்ல பிளாக்கர்.காம் போய், சைன் இன் ஆகி, எடிட் ப்ரோபைல் போயி, சேஞ் ப்ரோபைல் பிக்சர் போயி இமேஜ மாத்திக்குங்க ஓகே? எங்க ஆயிரம் பொற்காசு?//

ஆஹா... நீங்க என்னை விட பெரிய அப்பாவியா இருப்பீங்க போல இருக்கே... பேரு சொல்லாம எப்படிங்க வடை அப்புறம் பொற்காசு எல்லாம் அனுப்பறது... (ஹி ஹி ஹி... என்கிட்டயேவா...?). நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ஒகேபா... வடை பாதி பாதி பிரிச்சு வெச்சுகோங்க சரியா...ஹா ஹா ஹா ... தேங்க்ஸ் மகி

அப்பாவி தங்கமணி said...

@ பாஸ்டன் Sriram - வாங்க பாஸ்... உங்க கமெண்ட் பாத்ததுல ரெம்ப சந்தோஷம்... அதுவும் template இல்லாம வேற கமெண்ட் போட்டதுல டபுள் சந்தோஷம்... ஆமாங்க நீங்க ஊரு பேரோட வந்து இருக்கறதால ஸ்பெஷல் மசால் வடை ஆர்டர் பண்ணி இருக்கேன்... பெற்று கொள்ளவும்... நன்றிங்க

//ரெண்டாவதா வந்த ஒங்களுக்கு அ.த. மணி அவங்க கையால பண்ண இட்லி தருவாங்க - என்சாய்//

ஏன் பாஸ் இந்த கொலை வெறி? ப்ளாக்க்கு வர்ற ஒண்ணு ரெண்டு பேரும் காண போய்டுவாங்க போல இருக்கே இட்லினு சொன்னா... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா. பிடி குடுக்காம எழுதறது தானே நம்ம பழக்கம்...ஹா ஹா ஹா

@ சௌந்தர் - அடப்பாவமே... ஏனுங்க... எதாச்சும் பிரச்சனைனா பேசி தீத்துக்கலாம். இப்படி எல்லாம் கோத்து விடறது சரி இல்ல...ஹா ஹா ஹா... நீங்க என்னை விட பெரிய அடபாவியா இருப்பீங்க போல இருக்கே...

@ நசரேயன் - ஹி ஹி ஹி... இந்த சமாளிப்பு எல்லாம் கண்டுக்க கூடாது சார்..

அப்பாவி தங்கமணி said...

@ பத்மா - தேங்க்ஸ் பத்மா...

@ Ahamed irshad - தேங்க்ஸ் அஹமத்

@ Krishnaveni - ஹா ஹா ஹா... mindvoice கொஞ்சம் ரெஸ்ட்ல இருக்கு வேணி... வராம இருக்கற வரை எனக்கு safe ... ஹா ஹா ஹா .... தேங்க்ஸ் வேணி

அப்பாவி தங்கமணி said...

@ பாஸ்டன் sriram - //கிருஷ்ணவேணி.. ஏன் சொந்த செலவில சூன்யம் வச்சிக்கறீங்க??//
ஹி ஹி ஹி...

@ Jey - தேங்க்ஸ் ஜெய்... வீட்டுலயும் இப்படியே தான்ங்க... ஹா ஹா ஹா... கேட்டதா சொல்லணுமா... கண்டிப்பா சொல்றேன் அவர்கிட்ட

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - mindvoice கொஞ்சம் ரெஸ்ட்ல இருக்குங்க... வந்தா அப்புறம் சர வெடி தான்... ஹா ஹா ஹா

@ பத்மநாபன் - நன்றிங்க... குத்திடீங்கனதும் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்... நாம யாரையும் கொலை செய்யலயேனு... ஹி ஹி ஹி... நன்றிங்க

@ Rajaram - ha ha ha .. thats so cool.... ofcourse, many of the bloggers know me for my idli post only...hats off to idli... ha ha ha... thanks

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - தேங்க்ஸ் சுசி... ஆமாம்பா நானும் உங்கள மாதிரியே அப்பாவி தான் ... (இப்போ டீல் ஒகே வா? ஹா ஹா ஹா) அவர் ப்ளாக் எழுதறதா... வேண்டாம் சாமி...

@ Mrs.மேனகசதியா - thanksங்க

@ சே.குமார் - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - நன்றிங்க ஹேமா

@ சின்ன அம்மணி - தேங்க்ஸ்ங்க அம்மணி

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ரெம்ப நன்றிங்க ஸ்டார்ஜன் சார்...

அப்பாவி தங்கமணி said...

@ மின்மினி - தேங்க்ஸ் மின்மினி

@ அமைதிச்சாரல் - ஹா ஹா ஹா... எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் அக்கோவ்

@ வெறும்பய - ஹி ஹி ஹி...இன்னும் கூட மொக்கை போடலாம்... ஒரு கோச்சிங் க்ளாஸ் எடுக்கலாம்னு இருக்கேன்... join பண்ணிக்கரீங்களா... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹா ஹா ஹா...அப்படி தான் போல இருக்குங்க... நன்றிங்க

@ புதுகை தென்றல் - மனசாட்சி ரெஸ்ட்ல இருக்குங்க... வராத வரைக்கும் நல்லது...ஹா ஹா ஹா... தொடரும் வாய்ப்புக்கு நன்றி

@ ஹுஸைனம்மா - //பின்ன, பேசியே கொன்னுருக்க மாட்டீங்க அவங்களை? //
அப்படி இல்லிங்க ஹுஸைனம்மா ... மருந்து மாத்திரை எதுவும் வேண்டாம்.. .பேசியே எல்லா நோயும் பயந்து ஓடற மாதிரி செஞ்சுட மாட்டேனா... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பதிவுலகில் பாபு - நன்றிங்க பாபு

@ ஜெய்லானி - எத்தனை பெரிய repeat போட்டாலும் அது எல்லாம் செல்லாது... ஹா ஹா ஹா

@ VELU.G - நன்றிங்க வேலு

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - //ஓ....புரியுது..!//
ஐயோ... அப்படி எல்லாம் இல்லைங்க... நானே ஒரு அப்பாவி....

//பி எல் படிச்சுட்டுதானே..!!//
ஹி ஹி ஹி.. எப்படி இப்படி கரெக்ட்ஆ கண்டு பிடிச்சீங்க... ஹா ஹா ஹா

@ சின்ன அம்மணி - //மைண்ட் வாய்ஸ் என்ன ஆச்சு //
அடப்பாவமே... நான் ப்ளாக் பக்கம் வரலேனா கூட விசாரிக்க ஆள் இல்ல... இந்த mindvoice க்கு வந்த நேரத்த பாருங்க... ஹும்... அது vacation போய் இருக்குங்க அம்மணி...

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி... என்னப்பா ஆச்சு?

@ கோவை ஆவி - //மைன்ட் வாய்ஸ் மிஸ்ஸிங்???//
நீங்களுமா... நான் கூட தான் ஒரு வாரம் ப்ளாக் பக்கம் வராம மிஸ் ஆனேன்... யாரும் கண்டுகல... ஹும்... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா ஹா... நன்றிங்க... இருபத்தியோராவது ப்ளாக்குக்குள்ள போகாம விட்டுட்டேனே...

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி - ரெம்ப நன்றிங்க... குமுதம்ல வரும் இல்லைங்களா?

அபி அப்பா said...

மைண்ட் வாய்ஸ்க்கு ஜுரமா? லாஸ் ஆஃப் பே ல இருக்குதா?

நல்லா இருக்கு தங்கைமணி!

priya.r said...

அவங்க சிரிஞ் வைத்து நோயை குணப்படுதறாங்க
நீங்க சிரிக்க வைத்து குணப்படுத்துவதால் நீங்களும்
டாக்டர் தான் . ஹ ஹா
நல்ல பகிர்வுங்க தங்க மணி

ராதை said...

:) :) :) :) :) :)

Priya said...

பதில்கள் அனைத்தும் யதார்த்தமா இருக்கு... நைஸ்!

Jaleela Kamal said...

ரொம்ப கலகலப்பா இருக்கு.

இந்த் தொடர்பதிவுக்கா என்னை அழைத்தீர்கள், என் பெயரை குறிப்பிடலையே, பரவாயில்லை ஏற்கனவே மின்மினியும் அழைத்து இருக்காங்க , பதிவு ரெடி செய்து வைத்தாச்சு இரண்டொரு நாளில் போடுவேன்.

Jaleela Kamal said...

சினிமா நடிகை கிட்ட பேட்டி எடுத்த மாதிரி இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - மைண்ட் வாய்ஸ்க்கு கொஞ்ச நாள் லீவ் குடுத்துட்டேன் அபி அப்பா... நன்றிங்க

@ priya.r - ஆஹா... உடனே டி.ராஜேந்தர் அவர்களுக்கு உங்க ஹெல்ப் வேணும்னு நியூஸ் வந்தது... இதான் மேட்டரா? கலக்கறீங்க ப்ரியா... ஹா ஹா ஹா

@ ராதை - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா

@ Jaleela Kamal - ஹாய் ஜலீலா, நான் உங்களை கூப்பிட்டது "கடவுளும் நானும்" தொடர் பதிவுக்கு... நேரம் கெடைக்கறப்ப எழுதுங்க... ரெம்ப நன்றிங்க

DrPKandaswamyPhD said...

கதை நல்லா திகிலா போகுது.

அப்பாவி தங்கமணி said...

@ DrPKandaswamyPhD - thanks a lot

Post a Comment