Tuesday, August 31, 2010

கேயாஸ் தியரியும் தங்கமணியும்... (தங்கமணி ரங்கமணி கலாட்டா)

தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்


"என்னங்க... நாளைக்கு நீங்க ஆபீஸ் லீவ் போடுங்க"

"ஏம்மா நீ உங்க அம்மா வீட்டுக்கு போறியா? ட்ரெயின் ஏத்தி விடணுமா?" என ஆர்வம் போங்க கேட்க

ஒண்ணும் பேசாம தங்கமணி மொறச்சதுலையே அது இல்ல மேட்டர்னு தெரிஞ்சு போச்சு... ஹும்... அததுக்கு ஒரு குடுப்பினை வேணும்னு நெனச்சுட்டே ரங்கமணி திரு திருனு முழிச்சார் எப்படி அம்மணிய தாஜா பண்றதுன்னு

"அ... அது... நீ சந்தோசமா லீவ் போடுங்கன்னு சொன்னியா... அ... அதான் நான் தப்பா புரிஞ்சுட்டேன்"

"தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டினு சொல்றாப்ல எப்படா இவ ஒழிவானே காத்துட்டு இருங்க" என சண்டைக்கு தயாரானார் தங்க்ஸ்

"ச்சே ச்சே... அப்படி இல்ல... அது சரி எதுக்கு லீவ் போட சொன்ன"

அதை பற்றி அக்கறை போல் கேட்டதும் தங்க்ஸ் கோபம் மறைந்து குஷியாய் சொல்ல தொடங்கினார்

"அது... எங்க ஏஞ்சல்ஸ் கிளப் மெம்பெர்ஸ் எல்லாம் சேந்து நாளைக்கி ஆடி தள்ளுபடி ஷாப்பிங் போறோம்... பாப்பாவை அந்த கூட்டத்துல கூட்டிட்டு போக முடியாது. அவ ஸ்கூல்ல இருந்து ரெண்டு மணிக்கு வந்துடுவா... அதுக்கு தான் உங்கள லீவ் போட சொன்னேன்"

"அடிப்பாவி... இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல"

"என்ன ஓவர்? ஷாப்பிங் போறது தப்பா?"

"அது எல்லாம் இருக்கட்டும்... நான் அன்னைக்கே சொன்னேனல்ல... மொதல்ல இந்த அபார்ட்மென்ட் லேடீஸ் கிளப் பேரை மாத்துங்கன்னு... ஏஞ்சல்ஸ் கிளப்னு வெச்சு ஏன் இப்படி கொல்றீங்க?"

"ஆமா... தம் அடிக்கறதுக்காக நீங்க ஜென்டில்மன்ஸ் கிளப் வெச்சுருக்கறது விட ஒண்ணும் மோசமில்ல"

"அது... வேற... அதை விடு... ஆடி முடிஞ்சு ஆவணியே வந்தாச்சு... ஏற்கனவே போன மாசம் போய் அந்த சாயம் போன சாரி ஒண்ணு தண்டமா வாங்கிட்டு வந்தியே... இன்னும் என்ன?"

"ஐயோ... உங்களுக்கு ரசனையே இல்ல... அது டல் பினிஷ் ஸ்டோன் வாஷ் சாரி... இப்ப அதான் பேஷன்... அதை போய் சாயம் போன சாரீனு... ச்சே ச்சே..."

"சரி பேச்சை மாத்தாதே.... இப்ப தான் ஆடி முடிஞ்சு போச்சே... இன்னும் என்ன?"

"அது... நம்ம ஐஸ்வர்யா இல்ல..."

"யாரு...நம்ம ரோபோ கதாநாயகியா?" என வழிய

"கருமம்... அலையாதீங்க... மூணாவது ப்ளோர் ஐஸ்வர்யா அனந்தகிருஷ்ணன்"

"ஓ... வீணா போன ஐடியா எல்லாம் சொல்லுமே அந்த பொண்ணா"

"அவ அளவுக்கு மூளை இல்லைன்னு உங்களுக்கு பொறாமை"

"ஹையோ ஹயோ...நல்லா ஜோக் அடிக்கற தங்கம்"

"இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்"

"ஓ... கோவத்துல கூட நல்லது கெட்டதுன்னு இருக்கா...ஹி ஹி ஹி"

"சகிக்கல... நீங்க நாளைக்கி லீவ் போட போறீங்களா இல்லையா?"

"மாசம் மாசம் ஷாப்பிங் போனா பட்ஜெட்ல துண்டு இல்ல ஜமுக்காளமே விழும்... இதுல லீவ் வேற போட்டா கிழிஞ்சது பொழப்பு"

"கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலைனு அந்த காலத்துலேயே சொல்லி இருக்காங்க. இப்ப அனுபவிக்காம பின்ன கெழவி ஆனப்புறமா விதவிதமா கட்ட முடியும்"

"நீ கெழவி ஆனாலும் அழகா தான் இருப்பே தங்கம்" என ஐஸ் வெக்க

"இந்த ஐஸ் எல்லாம் வேண்டாம்... சொல்றத கேளுங்க.  ஐஸ்வர்யா சொன்னா... இப்ப ஆடி சேல் எல்லாம் முடிஞ்சு மிச்சம் இருக்கற ஸ்டாக் எல்லாம் இன்னும் சீப்பா போட்டு இருப்பாங்களாம்... இப்ப வாங்கினா ரெம்ப லாபம்னு... சூப்பர் ஐடியா இல்லிங்க... எங்க கிளப்ல அவளுக்கு ஐடியா ஐஸ்வர்யானு பட்ட பேரே வந்துடுச்சு... எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கராளோ" என சிலாகிக்க

"ஹா ஹா ஹா...ஹா ஹா ஹா"

"எதுக்கு இப்ப மறை கழண்ட மாதிரி சிரிக்கறீங்க?"

"ஆடி சேலே ஒரு குப்பை கழிச்சு விடற தந்திரம் தான்... அதுலயும் கழிஞ்சதுன்னா... குப்பைல குப்பை... இது ஒரு ஐடியா... இதுக்கு பட்டம் வேற... எனக்கு என்னமோ அந்த ஐஸ்வர்யா கடைகாரனுக கிட்ட கமிஷன் வாங்கிட்டு ஆள் பிடிச்சு குடுக்கறானு தோணுது"

"உங்க புத்தி வேற எப்படி போகும்"

_________________________________

"அப்பப்பா அப்பப்பா.. என்ன கூட்டம் என்ன கூட்டம்" என்றபடியே உள்ளே வந்தார் தங்கமணி

"என்ன தங்கம் ஷாப்பிங் எல்லாம் பலமா இருக்கும் போலேயே"

"ஆமாங்க... என்ன சீப் தெரியுமா"

"குவாலிட்டி தானே... அது சீப்னு தெரிஞ்சுது தான்"

"உங்க கிட்ட பேச முடியாது"

"அது சரி கொழந்தை எங்க... துணி வாங்கற ஜோர்ல புள்ளைய எங்க விட்ட" என பதற

"ம்... உங்கள விட பாப்பா மேல எனக்கு ரெம்ப அக்கறை இருக்கு... அவள ஐஸ்வர்யா வீட்டுல விட்டுட்டு போனேன்... ம்... அவளுக்கு வாய்ச்சவர் சொன்னதும் மறு பேச்சு பேசாம லீவ் போட்டுட்டு பிள்ளைகள பாத்துகறார்" என பெருமூச்சு விட

"தங்கம்... அந்த ஆளுக்கு தாசில்தார் ஆபீஸ் உத்தியோகம்... கவர்ன்மென்ட் சம்மன் ஒண்ணும் வராது ஒரு நாள் போகலைனா... என் கதை அப்படியா"

"எதாச்சும் சாக்கு சொல்லுங்க...அதை விடுங்க... இந்த சாரீஸ் எல்லாம் பாருங்க எவ்ளோ அழகு தெரியுமா... விலையும் ரெம்ப கம்மி... இதோ இந்த மெரூன் கலர் கிரேப் சில்க் சாரி வெறும் மூந்நூறு தான்... அடக்க விலையே ஐநூறு தெரியுமா..."

"எங்க இப்படி குடு பாக்கலாம்... "என சேலையை விரித்தவர் கண்ணில் ஒரு பெரிய ஓட்டை தென்பட்டது

"என்ன தங்கம் இது... சாரில கூட இப்பவெல்லாம் ஜன்னல் கதவு இருக்கா" என நக்கலாய் கேட்க

"ஐயோ... என்ன இது... நான் கவனிக்கலையே... சரி விடுங்க... அதை சரி பண்ணிக்கலாம்... இதை பாருங்க உங்களுக்கு தான் ஷர்ட்... ப்ளூ கலர் அழகா இருக்கில்ல"

"நல்லாத்தான் இருக்கு... என்ன இது... காலர் கிட்ட வெளுத்து போய் இருக்கே... ஏதோ செவப்பு சாயம் வேற பட்டு இருக்கு"

"எதாச்சும் கொற சொல்லிட்டே இருங்க... "

"அட உள்ளத தானே சொல்றேன்"

"எல்லாம் உங்களால தான்"

"அடிப்பாவி அந்த கடை எந்த திசைன்னு கூட எனக்கு தெரியாது... நான் காரணமா" என திகைக்க

"பின்ன... நீங்க லீவ் போட்டுட்டு வீட்டுல இருந்துருந்தா... பாப்பா என்ன பண்றாளோ... சாப்டாளோனு கவலை இல்லாம நிதானமா பாத்து வாங்கி இருப்பேன்... இந்த டென்ஷன்ல சரியா கவனிக்கல"

"அடப்பாவமே... என்ன கொடும கடவுளே இது... எங்க இருந்து எங்க லிங்க் பண்றாங்க இந்த தங்கமணிக. இது உனக்கே அநியாயமா தோணலையா தங்கம்"

"என்ன அநியாயம்? தசாவதாரம்ல கமல் கேயாஸ் தியரினு சொல்வாரே கேட்டதில்ல... அதான் இது. எல்லாம் உங்களால தான்" னு சொல்லிட்டு தங்க்ஸ் எஸ்கேப் ஆய்ட்டாங்க

ரங்க்ஸ் என்ன ஆனாரா? கமல்ஹாசன்க்கு ஒரு பத்து பக்க கண்டன மடல் எழுதிட்டு இருக்கார்... ஹா ஹா ஹா... அவர் "வலி" தனி "வலி"... ஹா ஹா ஹா


தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்
...

64 பேரு சொல்லி இருக்காக:

RVS said...

நல்லா இருந்துச்சு... எங்கேயுமே இலக்கு ரங்கமணிகள் தான். ;-)) ;-))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தியரியை இவ்ளோ
அழகா விளக்கிட்டீங்க..இதுக்கு பத்து
அவதாரமெலாம் கமல் எடுத்து ஹ்ம்..வேஸ்ட்..

சுசி said...

ஹஹாஹா.. என்ன ஒரு நடை.. அதுக்கு படமும் சூப்பரா இருக்கு புவனா.

விட்டுப் போன அதே கண்ணையும் படிச்சிட்டேம்பா. இப்பிடியா வந்து தொடரும்னு சொல்விங்க.. சீக்கிரம் தொடருங்கப்பா :)

அமைதிச்சாரல் said...

உங்கூர்லயும் ஆடித்தள்ளுபடியா :-)))).

priya.r said...

நல்ல பகிர்வு !
தங்க்ஸ் கிட்ட கத்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கும்போல இருக்கே!

ஷாப்பிங் லில் கூட ரங்க்ச்சை மறக்காமல் அவருக்கும் சர்ட் எடுத்து கிட்டு வந்த
தங்க்சின் பெருந் தன்மையையும்;பரந்த மனப்பான்மையையும் ரங்கஸ் எப்போ தான்
புரிந்து கொள்வாரோ !!
சரி பாப்பாவுக்கு கௌன்?!


வழக்கம் போல சிரிப்பு தான் ! ஹ ஹா

Raveen said...

நல்லா எழுதிருக்கீங்க :)
"தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி" ரொம்ப நல்லா இருக்கு:) நீங்களே யோசிச்சதா????

சே.குமார் said...

ஹஹாஹா.. என்ன ஒரு நடை.. அதுக்கு படமும் சூப்பரா இருக்கு.

DREAMER said...

ஹாஹா... நல்லாயிருக்குங்க... நகைச்சுவையான நடையில் எழுதுவதும் ஒரு கிஃப்ட்தான்... யூ ஆர் கிஃப்டட்...

-
DREAMER

அபி அப்பா said...

ஆடி வந்தா தள்ளுபடி! அப்ப ஆடாம வந்தா? என்னவோ போங்கப்பா:-))

Arul Senapathi said...

Very nice.

Really enjoyed the story.

Thanks

Krishnaveni said...

Nicely written Thangamani Rangamani story, linking theory.......very beautiful, keep writing

நசரேயன் said...

நான் உங்களுக்கு பத்து பக்கம் கண்டன மடல் எழுதிகிட்டு இருக்கேன்

vinu said...

தசாவதாரம்ல கமல் கேயாஸ் தியரினு சொல்வாரே கேட்டதில்ல... அதான் இது. எல்லாம் உங்களால தான்


ithai naaanum vazimozigirean

வேங்கை said...

ஹ்ம்ம் நல்லா தான இருக்கு

புன்னகை

kavisiva said...

அங்கயும் ஆடித் தள்ளுபடியா?!
கூட்டத்துல துணிகளை செலக்ட் பண்றது எம்பூட்டு கஷ்டம்னு இந்த ரங்க மணிகளுக்கு புரியுதா? அதுலயும் ஓட்டை உடைசல்னு குறை கண்டு புடிக்கறதே வேலையா போச்சு . என்ன ஒரு ஓட்டை இருந்தா அதுவும் டிசைனர் வேர்னு சொல்லிட மாட்டோமா என்ன?

அன்னு said...

எங்க வட்டாரத்துல ஒரு வசனம் சொல்லுவாங்க!, அந்த 'பலா' இந்த 'பலா' ஹாஜி தலை மேலன்னு. அதான் இங்க ரங்கமணிக்கு போல. 'பலா'(balaa not palaa) அப்படின்னா...உருதுல குப்பை / குறைன்னு அர்த்தம்!! ரங்கமணி அதைத்தான் மனசுல சொல்லிகிறாப்புல தோணுது!! :)

என்னது நானு யாரா? said...

//மொதல்ல இந்த அபார்ட்மென்ட் லேடீஸ் கிளப் பேரை மாத்துங்கன்னு... ஏஞ்சல்ஸ் கிளப்னு வெச்சு ஏன் இப்படி கொல்றீங்க?"//

கண்டிப்பா பேரை மாத்தனும் இது ஏஞ்சல்ஸ் கிளப்பில்ல, டெவில்ஸ் கிளப்னு முழுசா படிச்சபின்னாடி தானே தெரியுது. என்ன ஒரு வில்லதனம்! வாங்கும் போது பாத்து வாங்காம, அப்பாவி ரங்கமணி மேலேயே பழியை போடறதா?

அப்பாவி ஆண்களே ஒன்று சேருங்கள்! புரட்சி செய்வோம், வாருங்கள்!

நண்பர்களே! மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

http://uravukaaran.blogspot.com

நண்பர்களே! நீங்கள் என் பதிவுகளை படித்து பயன் அடைய, உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

வெறும்பய said...

Very nice.

Thenral said...

Aahaa!Avlo periya chaos theorya evlo easya engalukku vilakkitingale!:)

சௌந்தர் said...

ரங்க்ஸ் என்ன ஆனாரா? கமல்ஹாசன்க்கு ஒரு பத்து பக்க கண்டன மடல் எழுதிட்டு இருக்கார்..///

எழுதி முடித்து விட்டாரா இல்லையா

vinu said...

"நீ கெழவி ஆனாலும் அழகா தான் இருப்பே தங்கம்"


ithulla eathaavathu ull kuththu irrukkaaaaaaaa

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

இதுக்குமேல சிரிக்க முடியலைங்க

பாவங்க ரங்கமனி

பத்மநாபன் said...

கேயாஸ் தியரிக்கு இப்படி ஒரு நகைச்சுவை சரமா...தூள் அம்மணி...சந்தடி சாக்குல அக்டோபர் லீவுல கிராஸ்கட் ரோட்ல கலக்குறதற்கு உங்க ரங்ஸ்கிட்ட அடி போட்டு வெச்சாச்சு போல..நடத்துங்க..

kunthavai said...

ha...ha... nicely written Bhuvana.

இதப்படிச்சிட்டு அப்பாவி தங்கமணிக்க பெயரை 'அடப்பாவி தங்கமணி'ன்னு மாத்தணும்ன்னு கொடி பிடிக்க போறாங்களாம்.

ஹுஸைனம்மா said...

தங்கமணி எப்படி அறிவுபூர்வமா சிந்திக்கிறாங்க பாருங்க (உங்கள மாதிரியே!!) இப்படி ஒரு அறிவு ஜீவி பொண்டாட்டியா கிடைச்சதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்! (எதைன்னு கேக்கப்படாது!!)

ஜெய்லானி said...

எப்ப போயி ஏமாந்தீங்க நீங்க ..ஹி..ஹி.. அச்சர சுத்தமா சொல்றீங்க...!!!

பதிவுலகில் பாபு said...

நல்ல நகைச்சுவையோட எழுதியிருக்கீங்க..

நல்லாயிருக்கு..

drbalas said...

நல்ல நடை....நல்ல சுவை....
அனுபவம் பாதி, கற்பனை பாதியாக இருக்குமோ

vanathy said...

super!

அப்பாவி தங்கமணி said...

@ RVS - ச்சே ச்சே... உண்மைய தானேங்க சொல்றோம்... ஹா ஹா ஹா

@ முத்துலட்சுமி - ஹி ஹி ஹி... ரெம்ப புகழ்றீங்க போங்க... (இப்படியே மெயின்டைன் பண்ணு அப்பாவி)

@ சுசி - தேங்க்ஸ் சுசி... அதே கண்கள் சீக்கரம் போட்டுடறேன் சுசி

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ச்சே ச்சே... இது கற்பனை கதை மட்டுமே... சொந்த கதை இல்லீங்கோ...

@ priya.r - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் ப்ரியா... எல்லாம் உங்க கிட்ட எல்லாம் இருந்து கத்துகிட்டது தான்...ஹா ஹா ஹா... கரெக்ட்ஆ சொன்னீங்க... தங்கமணி நல்லா பொண்ணு தான் போல இருக்கு... பாப்பாவுக்கு கௌன் இல்லாமயா?

@ Raveen - தேங்க்ஸ்ங்க... ஐயோ நான் எழுதலைங்க... யாரோ எழுதி வெச்சுட்டு போன பழமொழி

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ Dreamer - நன்றிங்க... உங்கள போல த்ரில்லர் எழுத முடியுமா? அதான் இப்படி மொக்கை போட்டு ஓட்றேன்... ஹா ஹா ஹா

@ அபி அப்பா - அபி அப்பாஆஆ...... நானே ஒரு மரண கடினா நீங்க எண்ணை மிஞ்சுவீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ் அருள்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...எப்பவும் போல தேங்க்ஸ் போர் யுவர் என்குரகேமென்ட்

@ நசரேயன் - ஹா ஹா ஹா... எழுதி முடிச்சுடீங்களா?

அப்பாவி தங்கமணி said...

@ vinu - தேங்க்ஸ் வினு...

@ வேங்கை - நன்றிங்க

@ kavisiva - இங்கெல்லாம் ஒரு தள்ளுபடியும் இல்லிங்க... இது கற்பனை கதை பா... நம்புங்க... கரெக்டா சொனீங்க கவி... ஹா ஹா அஹ தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ஹாய் வாங்க அன்னு... என்னப்பா ரெம்ப நாளா ஆளே காணோம்... ஐ... சூப்பர் வட்டார வழக்கு எல்லாம் சொல்றீங்க... தேங்க்ஸ்...

@ என்னது நானு யாரா? - ஆஹா... உங்க பேரே ரெம்ப வித்தியாசமா இருக்கே... கலக்கறீங்க போல... ச்சே ச்சே... டெவில்ஸ் கிளப் எல்லாம் இல்லிங்க... எவ்ளோ அறிவு பூர்வமா கேயாஸ் தியரி பத்தி எல்லாம் சொல்றாங்க நம்ம தங்கமணி... புரட்சியா? செய்ங்க செய்ங்க...ஹா ஹா ஹா... முதல் வருகைக்கு நன்றிங்க

@ வெறும்பய - தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ Thenral - தேங்க்ஸ் தென்றல்... இந்த கமெண்ட்ல உள்குத்து எதுவும் இல்லியே... ஹா ஹா ஹா

@ சௌந்தர் - தெரியலைங்க... அதை அந்த தங்கமணி கிட்ட தான் கேக்கணும்... ஹா ஹா ஹா

@ vinu - அதான் தெரியலைங்க வினு... இந்த ரங்க்ஸ்க என்னிக்கி straight ஆ பேசி இருக்காங்க... ஹா அ ஹா

அப்பாவி தங்கமணி said...

@ VELU.G - நன்றிங்க வேலு... ச்சே ச்சே... தங்கமணி தாங்க பாவம்... ஹா ஹா ஹா

@ பத்மநாபன் - ஆஹா... இப்படி உண்மை எல்லாம் புட்டு புட்டு வெச்சு ஊர்காரர்னு அப்ப அப்ப ப்ரூவ் பண்ணிடறீங்களே... ஹா ஹா ஹா... எந்த அளவுக்கு வொர்க் ஆகுதுன்னு அப்புறம் சொல்றேங்க...நன்றிங்க

@ kunthavai - தேங்க்ஸ் குந்தவை. கொடி எல்லாம் பிடிக்க மாட்டாங்க குந்தவை... தங்கமணிக எல்லாரும் அப்பாவிக தான்னு எல்லாருக்கும் தான் தெரியுமே... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹி ஹி ஹி.. இதுல உள்குத்து எதுவும் இல்லியே... ஹா ஹா ஹா

@ ஜெய்லானி - ச்சே ச்சே... இது எல்லாம் கற்பனை பாஸ்... சொந்த கதைனா சொந்த கதைன்னு சொல்லிடுவேனே... என்னை பத்தி தெரியாதா? ஹா ஹா ஹா

@ பதிவுலகில் பாபு - ரெம்ப நன்றிங்க பாபு

அப்பாவி தங்கமணி said...

@ drbalas - ச்சே ச்சே... முழுக்க கற்பனை தாங்க... சொந்த கதைனா சொந்த கதைன்னு சொல்லிடுவேனே...நன்றிங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும்

@ vanathy - தேங்க்ஸ் வாணி

Ananthi said...

அடடா. சூப்பர் தள்ளுபடி போல இருக்கே... என்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.. :-)))

Jey said...

நல்ல சுவாரஸ்யம். டயலாக் ஓரியண்டட் சூப்பரா எழுதுரீங்க...

ஜெய்லானி said...

@@@Ananthi
அடடா. சூப்பர் தள்ளுபடி போல இருக்கே... என்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.. :-))) //

இதுக்குதான் கதையை படிகாம கமெண்ட் போடக்கூடாதுங்கிறது ஹி...ஹி...

Ananthi said...

@@@ஜெய்லானி

//இதுக்குதான் கதையை படிகாம கமெண்ட் போடக்கூடாதுங்கிறது ஹி...ஹி... //

ஹலோ.. சில பல டேமேஜ் இருந்தாலும், என் தோஸ்த் தள்ளுபடி விலையில் எவ்ளோ சமத்தா ஷாப்பிங் பண்ணியிருக்காங்க.. அதனால அவங்க கூட ஷாப்பிங் போகலாம்னு பார்த்தா.. உங்களுக்கு என்ன பிரச்சன???

@@@தோஸ்த்
இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டீங்களாப்பா???

அஹமது இர்ஷாத் said...

நல்லா எழுதியிருக்குறீங்க தங்கமணி..

kggouthaman said...

// ஏம்மா நீ உங்க அம்மா வீட்டுக்கு போறியா? ட்ரெயின் ஏத்தி விடணுமா?"//

// அவர் "வலி" தனி "வலி".//
அது எப்படிங்க ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையை அப்படியே மெயின்டைன் பண்ணுறீங்க?
ரியலி வெரி கிரேட்!

ராம்சுரேஷ் said...

எந்த பட்டாம்பூச்சி எங்கே சிறகசைச்சாலும் பூகம்பம் மட்டும் ஒரே இடத்துல வருதே, இதை எப்படி கேயாஸ் தியரின்னு சொல்ல முடியும்?

ஜெய்லானி said...

//ஹலோ.. சில பல டேமேஜ் இருந்தாலும், என் தோஸ்த் தள்ளுபடி விலையில் எவ்ளோ சமத்தா ஷாப்பிங் பண்ணியிருக்காங்க..//

ஹா..ஹா.. நான் அடிச்ச கிண்டல விட ஓவரா இருக்கே...பாத்தீங்களா சீடை மாமீ...

Bala said...

"தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டினு.." காந்திமதி டச் :DDDD

கல்யாணம் பண்ற ஆசையே போயிரும் போல இருக்கே !!! :)

கோவை2தில்லி said...

சூப்பரா இருக்குங்க. சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குதுங்க.

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ஹா ஹா ஹா... ஆனந்தி மேடம்... இது நிஜமில்லை கதை... ஹா ஹா ஹா

@ Jey - நன்றிங்க ஜெய்

@ ஜெய்லானி - சமயம் கெடைச்சதும் இப்படி எல்லாம் வார கூடாது... பாவம் ஆனந்தி ... ஏதோ கிருஷ்ண ஜெயந்தி பிஸில கமெண்ட் போட்டுடாங்க போல... (ஹா ஹா அஹ)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - அதானே... என்ன ஜெய்லானி இது? கேட்டுட்டேன் ஆனந்தி... ஒகேவா? (ஒகே ஒகே... சீடை வெச்சு தான் அடிக்க கூடாது... ஜஸ்ட் கிட்டிங்... )

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க அஹமத்

@ kggouthaman - ரெம்ப நன்றிங்க... எல்லாம் உங்கள போல encourage செய்யறதால தான் எழுத வருது... நன்றி மீண்டும்

அப்பாவி தங்கமணி said...

@ ராம்சுரேஷ் - தங்கமணி சொல்றதை எல்லாம் ஆராய கூடாதுங்க... சிரிக்க மட்டுமே... ஹா ஹா ஹா... (இப்படி கிராஸ் கொஸ்டின் எல்லாம் கேட்டா நான் பயந்துடுவேன் சார்... ஹா ஹா ஹா) முதல் வருகைக்கு மிக்க நன்றி

@ ஜெய்லானி - ஐயோ... சீடை ரகசியம் சீக்ரட்டாதான் இருக்கணும்.. இல்லேனா உங்களுக்கு பார்சல் வரும்.. ஒகே வா... (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ Bala - அடப்பாவமே...நான் சிநேகா ரேஞ்சுல யோசிச்சா இப்படி காந்திமதில கொண்டு வந்து விட்டுடீங்களே பிரதர்... ஞாயமா இது ஞாயமா? ஹா ஹா ஹா....
//கல்யாணம் பண்ற ஆசையே போயிரும் போல இருக்கே//
அப்பாடா ஒரு பொண்ணு தப்பிச்சா... ஹா ஹா அஹ

@ கோவை2தில்லி - ரெம்ப நன்றிங்க ஊர்காரரே

Ananthi said...

ச ச.. அப்படி எல்லாம் இல்லப்பா..
புல் பதிவும் படித்தேன்... அதிலும்.. உங்களுக்கே உள்ள ஸ்டைல்-ல உள்ள சைடு கமெண்ட்ஸ் ரொம்பவும் ரசித்தேன்.. ஜெய் சொல்றத நம்பி நீங்களுமா....??? அவ்வவ்வ்வ்வ்
கதை கேரக்டர்-கு தான் கமெண்ட்..... :-)))
(இது கதை அல்ல நிஜம்... அளவுக்கு பீல் பண்ணி கமெண்ட் போட்டேன்...)

இந்த ஜெய்-கு நம்ம கிட்ட வம்பு இழுக்கலன்னா தூக்கம் வராது போல இருக்கே??
grrrrrrrrrrr


@@ஜெய்லானி
இருந்தாலும் உங்களுக்கு இந்த குசும்பு வேலை வேண்டாம்.... :-)))

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ச்சே ச்சே... ஜெய் சொல்றதெல்லாம் நான் நம்புவேனா ஆனந்தி? சும்மா ஜோக்குக்கு தான் நானும் சொன்னேன்... ஹா ஹா ஹா (ஜெய்லானி எதிர்ப்பு கழகம் வேணா ஆரம்பிச்சுடலாமா? ஹா ஹா ஹா)

Gayathri said...

ஹா ஹா சம காமெடி சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது…
ரொம்பவே ரசிச்சேன் அக்கா கலைக்கலா இருக்கு

sandhya said...

புவனா நான் எழுதின கமெண்ட் எங்கே போச்சு காணுமே ?

Rajaram said...

A Day in Rangamani's life -- Ippadidan yeppovum nadakkudu...Yedukku thittu kedaikkum, yeppa kathuvanga puriyave mattengudu.. idukku oru theorem illa formula kandu pidikanum

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆடித்தள்ளுபடிலே எல்லாமே உதவாகரை உருபடிகள் இல்லை. ஆடித்தள்ளுபடிலே வந்த இந்த பதிவே அதுக்கு சாட்சி

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ sandhya - கமெண்ட் எங்க போச்சு? தெரியலியே சந்த்யா... இது ஒண்ணு தான் இருக்கே

@ Rajaram - ஹ ஹ ஹ... பார்முலாவா? கண்டுபிடிங்க எங்களுக்கும் சௌரியமா தான் இருக்கும் டீல் பண்ண ... ஹ ஹ ஹ

@ தி. ரா. ச.(T.R.C.) - நன்றிங்க...

Jaleela Kamal said...

சரியான காமடியா விஷியத்த சொல்லிட்டீங்க்
நிறைய பதிவு இங்கு இன்னும் படிக்கல.

வரேன் நேரம் கிடைக்கும் போது

தொடர் பதிவு கூப்பிட்டீங்களே எழ்திட்டேன் பார்க்க்கலையா?

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal - தேங்க்ஸ்ங்க ஜலீலா.. ஓ தொடர் பதிவு போட்டுடீங்களா... இதோ இப்பவே பாக்குறேன்... தேங்க்ஸ்ங்க

அமைதி அப்பா said...

'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள். அது உண்மைதான்!

அப்பாவி தங்கமணி said...

@ அமைதி அப்பா - ஹா ஹா ஹா... நன்றிங்க

Post a Comment