Wednesday, September 29, 2010

கேசரி காலட்சேபம்...


முன்குறிப்பு:
இது என்னோட 75 வது பதிவு... இது வரைக்கும் நான் எழுதின 74 மொக்கை பதிவுகளையும் மிகுந்த சகிப்பு தன்மையோட படிச்சு கல்லு முட்டை தக்காளி எல்லாம் வீசாம பெரிய மனசோட ஆதரவு தந்த பதிவுலக நண்பர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி

என்னது? "ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ தங்கமணி" பட்டமா? ஐயோ அதெல்லாம் இப்பவே வேண்டாங்க. சரி சரி உங்க மனசு நோகாம இருக்க சும்மா சிம்பிளா "75 பதிவு கண்ட இனிய தங்கமணி" பட்டம் வேணும்னா வாங்கிக்கறேன்... அதுவும் உங்களுக்காக தான்... ஒகே? ஒகே...75 பதிவுக்கே இந்த அலப்பறைனு யாருங்க இப்படி எல்லாம் திட்டறது... ச்சே... பாவங்க இந்த அப்பாவி...

(இன்னுமா இந்த உலகம் இவள நம்புது - மைண்ட்வாய்ஸ்)

சரிங்க பதிவுக்கு போலாமா?

(போ போ... வேண்டாம்னா நிறுத்தவா போற? ஹும்... - மைண்ட்வாய்ஸ்)

கதா காலட்சேபம் கேள்விப்பட்டு இருக்கோம் இதென்ன கேசரி காலட்சேபம்னு நீங்க யோசிக்கறது தெரியுது... அது என்னனு விலாவாரியா சொல்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு உண்மைய பகிர்ந்துக்க விரும்பறேன்

(அப்போ இவ்ளோ நேரம் பொய்யவா பகிர்ந்துட்ட - மைண்ட்வாய்ஸ்)

மைண்ட்வாய்ஸ், வேண்டாம் நல்ல நாளும் அதுவுமா என்கிட்ட வாங்கிக்க போற சொல்லிட்டேன்...

அதை கண்டுக்காதீங்க ... அந்த உண்மை என்னன்னா... எனக்கு இந்த ஊர்ல ஒரு பட்ட பேரு இருக்கு... எனக்கு ரெம்ப பிடிச்ச பட்டபேரு... அது வேற ஒண்ணுமில்ல "கேசரி புவனா"... இதான் அந்த பட்டப்பேரு

இது நீங்க வெச்ச "இட்லிமாமி" மாதிரி "வஞ்சப்புகழ்ச்சிஅணி" பட்டம் இல்ல... நெஜமாவே நான் கேசரி ஸ்பெசலிஸ்ட் தெரியுமா?

எந்த அளவுக்கு ஸ்பெசலிஸ்ட்னா இங்க எங்க பிரெண்ட்ஸ் சர்கிள்ள யாரு வீட்டுல என்ன விஷேஷம்னாலும் ஸ்வீட் என்னோட கேசரி தான் வேணும்னு கேப்பாங்க

நம்பமாட்டீங்களே? தெரியுமே உங்கள பத்தி... ஹும்... என்னை பத்தி நெகட்டிவா ஒரு விசயம் சொன்னா மட்டும் "ஆமா ஆமா... ரைட்டு...ரிப்பீட்டு" னு நூறு கமெண்ட் போடற இந்த உலகம் ஒரு நல்ல விசயம் சொன்னா மட்டும் ஏன் தான் ஒத்துக்க மாட்டேங்குதோ...? ஹும்

நல்லதுக்கு காலமில்லைன்னு இதைத்தான் சொல்றாங்களோ...

இப்ப இதை நீங்க நம்பலைனா நான் சொன்ன இட்லி கதையும் நம்ப கூடாது which makes me an இட்லி expert... if you believe what I say now, it makes me a கேசரி expert...எது பெட்டர்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... (அப்பாவி நீ எங்கயோ போய்ட்ட... ஹா ஹா ஹா... வெச்சேனா செக்கு? இப்ப என்ன பண்ணுவீங்க... இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா)

(ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல... முடியல... சாதாரணமா போஸ்ட்ல அங்க அங்க குழப்புவா .. இப்ப குழப்பறதுக்குன்னே ஒரு போஸ்ட் போட்டு இருக்கா போல - மைண்ட்வாய்ஸ்)

சரி போஸ்ட்க்கு போவோம்...

இது 75 வது போஸ்ட்டுங்கறதால உங்களுக்கு எல்லாம் ஸ்வீட் குடுத்து கொண்டாடலாம்னு கேசரி எப்படி செய்யறதுன்னு என்னோட ஸ்டைல்ல சொல்ல போறேன்... ஒகே... கவனமா கேட்டுக்கணும்...

பேப்பர் பேனா எல்லாம் எடுத்து ரெடியா வெச்சுகோங்க... ரெடியா... ஒகே ஸ்டார்ட். கேமரா ஏக்சன்....

தேவையான பொருட்கள்:

1 . எங்க அம்மா சீதனமா குடுத்த அளவு டம்ளர்:
இதான் டாப் சீக்ரட் ஆப் திஸ் ரெசிபி... ஒகே...

புரியலையா... எனக்கு எல்லா சமையலும் இந்த டம்ளர் அளவு வெச்சு தான் செய்ய முடியும்... இந்த டம்ளர் தொலஞ்சு போனா அனேகமா கொலை பட்டினி தான்

அதனால துப்பாக்கி முனைல நிக்க வெச்சு கேட்டாலும் இந்த டம்ளர் நான் தர மாட்டேன்

நீங்க உங்க அம்மா குடுத்த டம்ளரை எடுத்துகோங்க... குத்துமதிப்பா சரியாதான் இருக்கும்... குத்துக்கு என்ன மதிப்புனெல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா ஜெய்லானி சமையல் க்ளாஸ்ல சேத்து உட்ருவேன்.... ஆமா சொல்லிட்டேன்

ஒகே அடுத்தது

2 . வெள்ளை ரவை:
இது சிம்பிள்... எல்லாருக்கும் கெடைக்க கூடிய ஒரு பொருள்... இது ஒரு டம்ளர் எடுத்துக்கோங்க... ஒரு டம்ளர்னு சொல்றது ஒரு டம்ளர் தலை தட்டி எடுத்துக்கணும்

ரவைய எடுக்கறதுக்கு என் தலைய எதுக்கு தட்டணும்னு நீங்க கேள்வி கேக்கரீங்கன்னா நீங்க சமையல் ரூம் பக்கம் சாப்பிட மட்டும் தான் போவீங்கன்னு முடிவு பண்ணிடலாம்

(எப்படி இவ்ளோ கரெக்டா இப்படி ஒரு டவுட் வரும்னு கெஸ் பண்றேன்னா... இதே கேள்விய கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அம்மாகிட்ட கேட்டு திட்டு வாங்கி இருக்கேன்...  அந்த அனுபவம் தான்... ஹி ஹி ஹி...)

சரி சரி... அப்படி தெரியாதவங்களுக்கும் சொல்லிடறேன்... தலை தட்டி எடுன்னு சொன்னா நம்ம தலைய தட்டரதில்ல...

டம்ளர்க்கு தலை எது? அதோட விளிம்பு... டம்ளர்ல ரவைய எடுக்கறப்ப விளிம்பு தாண்டி குவிச்ச மாதிரி இல்லாம விளிம்போட அளவு வரை மட்டும் வெச்சுட்டு மிச்ச ரவைய ரவை டப்பாலையே தட்டி விட்டுடணும்... இதான் தலை தட்டி எடுக்கறது... மனசிலாயோ?

3 . வெள்ளை சர்க்கரை:
பின்ன சர்க்கரை என்ன கறுப்பாவா இருக்கும்னு கேட்டா? எஸ்... பிரவுன் சுகர் கூட இருக்கே... ஐயயோ நீங்க நெனைக்கற மாதிரி அந்த பிரவுன் சுகர் இல்ல... வெல்லம் இருக்கில்லையா அது... ஆனா இந்த ரெசிபிக்கு வேண்டியது வெல்லம் இல்லை வெள்ளை சர்க்கரை, எங்க ஊர்ல அஸ்கானு சொல்லுவோம்... உங்க ஊர்ல வேற சொலவடை இருக்கானு செக் பண்ணிக்கோங்க...

அளவு இரண்டு டம்ளர் (ரவைய போலவே இதுவும் தலை தட்டி தான்)

4 . கேசரி பவுடர்:
PhotoCopy எடுக்கறதை Xerox னும், வனஸ்பதியை டால்டானும் Brand Monopolyயா சொல்ற மாதிரி Foodcolour ஐ கேசரி பவுடர்னே சொல்லி பழகிட்டோம் நாம...

ஆனா கேசரி பவுடர்னு சொல்றதை Brand Monopolyனு சொல்ல முடியாது அதுக்கு வேற ஒரு டெர்ம் இருக்கு... அது இங்க இருக்கு....தொண்டைல... வெளிய வர மாட்டேங்குது... ம்... என்னதது...

(சரி சரி உன் இங்கிலிபீச் பெருமை போதும்... பாயிண்ட்க்கு வா - மைண்ட்வாய்ஸ்)

(இதை நடிகர் விஜய் ஸ்டைலில் படிக்கவும்) ஏய் மைண்ட்வாய்ஸ், யார பாத்து... யார பாத்து என்ன வார்த்த சொன்ன...

(இதை சிவாஜி கணேசன் அவர்கள் ஸ்டைலில் கட்டபொம்மன் வசனம் போல் படிக்கவும்) கொங்கு தமிழில் கொஞ்சி மகிழும் எம் குல செந்தமிழ் நாட்டு தமிழச்சியை பார்த்து என்ன வார்த்தை சொன்னாய்...

(இதை நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் படிக்கவும்) மைண்ட்வாய்ஸ், இப்ப சொல்றேன் கேளு... நான் புகுந்த மொழி ஆங்கிலமா இருக்கலாம் ஆனா பொறந்த மொழி தமிழ்... தமிழ்... தமிழ்... (echo effect )

(இதை உலக நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்) இதோ சொல்கிறேன் கேள்... ஆங்கிலம் என்ன பெரிய ஆங்கிலம்? இதற்கு நம் தமிழ் இலக்கணத்தில் அருமையான ஒரு பெயருண்டு தெரியுமா? "ஆகுபெயர்"

"ஆகுபெயர் எனப்படுவது ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது)"

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் FoodColour என்ற இயற்பெயர் அதனோடு தொடர்புடைய கேசரிக்கு அதிக பயன்பாடு ஆகி அதாகவே ஆகி வருவது
(கமல் சார் மூச்சு வாங்க வசனம் பேசினதால தண்ணி குடிக்க போய்ட்டார்)

இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என் இனிய எதிரி மைண்ட்வாய்ஸ்

(அப்பாவி தங்கமே... போதுமாத்தா.... தெரியாம ஒரு வார்த்த சொல்லி போட்டேன்... ஆள உடு - மைண்ட்வாய்ஸ்)

ம்... அந்த பயம் இருக்கட்டும்

ச்சே... இந்த மைண்ட்வாய்ஸ் பண்ணின ரகளைல கேசரி பவுடர் எவ்ளோ அளவுன்னு சொல்ல மறந்துட்டேன். கேசரி பவுடர் ஒரு சிட்டிகை...

சிட்டிகைனா "சிட்டில இருந்து ஒரு Guy" வந்து அளந்து குடுத்துட்டு போவார்னு literal மீனிங் எல்லாம் எடுத்துக்ககூடாது... (ஹி ஹி ஹி நான் ஒரு காலத்துல இப்படி தான் இருந்தேன்... அதான் என்னை போல் ஒருத்தி இல்ல இல்ல நெறைய பேர் இருப்பீங்களோனு தோணுச்சு... ஹா ஹா ஹா)

இந்த சிட்டிகைனா என்னனு எனக்கும் ரெம்ப நாள் புரியாம இருந்தது... ஈஸியா புரியராப்ல சொல்லணும்னா, "யாரங்கே" அப்படின்னு அந்த காலத்துல ராஜா சொடுக்கு போட்டு கூப்பிட கட்ட விரலையும் நடுவிரலையும் சேத்து பிடிக்கற மாதிரி வெச்சுட்டு சொல்வாரே.... அந்த இரண்டு விரலோட பிடில எவ்ளோ எடுக்க முடியுமோ அதான் சிட்டிகை...

ராஜா விரலுக்கு நாங்க எங்க போறதுன்னு எடக்கு மடக்கா பேசினீங்க அப்புறம் ரெசிபி தப்பு தப்பா சொல்லி குடுத்துடுவேன்... அந்த உதாரணத்துக்கு ராஜா விரல் உங்களுக்கு உங்க விரல் தான் அளவு... சம்ஜே? (எனக்கும் ஹிந்தி தெரியும்... சம்ஜே?... ஹா ஹா ஹா)

அடுத்தது

5 . ஏலக்காய் பொடி - அதுவும் ஒரு சிட்டிகை தான்

6 . தண்ணீர் - மூணு டம்ளர்

7 . சமையல் எண்ணை:-
அரை மேஜை கரண்டி அளவு (உங்க வீட்டு மேஜைல என்ன கரண்டி இருக்கோ அது... )

எங்க வீட்டுல மேஜை இல்ல... மேஜைல கரண்டி இல்லைனு சொல்றவங்க  வேற எங்க கரண்டிய வெச்சுருக்கீங்களோ அங்க இருந்து எடுத்துக்கோங்க... ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல...

(நாம சொல்ல வேண்டிய டயலாக் இவ ஏன் சொல்றா? - மைண்ட்வாய்ஸ்)
 
அதுக்காக மாவு கரண்டி போல பெரிய குழிகரண்டி இல்ல... அத்தனை எண்ணை போட்டா அப்புறம் கொலஸ்ட்ரால் வந்துடும்...அப்புறம் இந்த அப்பாவி மேல பழி போட்டுடாதீங்கப்பா...

8 . நெய் - ஒண்ணரை மேஜை கரண்டி அளவு

9 . உடைத்த முந்திரி - 10 நம்பர் (கடைல உடைக்காம இருந்தா வாங்கி உடைச்சுகோங்க... இதெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்...)

10 . உலர்ந்த திராட்சை - 10 நம்பர் (அடிப்பாவி திராட்சை முந்திரி எல்லாம் கூடவா எண்ணி எண்ணி போடுவனு நீங்க திட்டறது கேக்குது)

எனக்கு இந்த "சும்மா கைல ஒரு இத்தன போடு அத்தன போடு" எல்லாம் சரி வராது... எல்லாம் அளந்து அளந்து எண்ணி எண்ணி போட்டத்தான் சரி வரும்... இல்லைனா "கேசரி"க்கு பதிலா "ரிசகே" ஆய்டும்... ஹும்... என் கஷ்டம் எனக்கு

ஒகே... வேண்டிய பொருட்கள் லிஸ்ட் எல்லாம் பாத்தாச்சு.. இனி செய்முறை...

(ஸ்ஸ்ஸ்ப்பா.... இந்த பத்து பக்க கட்டுரைய படிச்சு புரிஞ்சு செய்யற நேரம் ஒரெட்டு கடைக்கு போய் வாங்கிட்டு வந்துடலாம்... இல்ல சொந்தபந்தம் வீட்டுக்கு போய் கேட்டு வாங்கி சாப்ட்டுட்டு வந்துடலாம் - மைண்ட்வாய்ஸ்)

செய்முறை:

1 . மொதல்ல Gas ஐ பத்தவெக்கணும் (எதுக்கும் சொல்லிடுவோம்... நீ அதை சொல்லலியேனு கேக்கற ஆளுங்களும் உண்டே... ஹா ஹா ஹா)

2 . அப்புறம் ஒரு வாணலில அரை மேஜை கரண்டி எண்ணை, அரை மேஜை கரண்டி நெய் விட்டு சூடானதும் ரவைய அதுல போட்டு கை விடாம அதாவது நிறுத்தாம வறுக்கணும். கொஞ்சம் Gas Flame கம்மி பண்ணிக்கறது நல்லது. ரவை கருகிடாம பொன்னிறமா வறுத்து எடுத்து ஒரு தட்டுல போட்டு ஆற விட்டுடுங்க

3 . இப்போ அந்த வாணலி காலி ஆய்டும் இல்லையா... அதுல மூணு டம்ளர் தண்ணி விட்டு தண்ணி கொஞ்சம் இளம் சூடானதும் அதுலயே ரெண்டு டம்ளர் சர்க்கரை போட்டு கொஞ்சம் கரையற வரை கலக்கிவிடணும்

4 . தண்ணி & சர்க்கரை நல்லா மிக்ஸ் ஆகி கொஞ்சம் சூடானதும் அதுல கேசரி பவுடர் ஏலக்காய் பொடி எல்லாம் சேர்க்கணும்

5 . தண்ணி நல்லா கொதிச்சதும் Gas Flame கால்வாசில வெச்சுட்டு ரவைய கொஞ்ச கொஞ்சமா போட்டு கட்டி ஆகாம கலக்கணும். Gas Flame கால்வாசில வெச்சா எப்படி ரவை குக் ஆகும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம் (ஏன்னா எனக்கு வந்தது ஆரம்பத்துல...). நாம ஏற்கனவே ரவைய வறுத்துட்டதால அதுலயே முக்கால் பதம் குக் ஆகி இருக்கும்

6 . ரவை எல்லாம் போட்டு முடிச்சதும் கலக்கிகிட்டே இருக்கணும்... இல்லேனா கட்டி தட்டிடும். ரெம்ப கெட்டியாக விடாம கொஞ்சம் 75 % செமி சாலிட் பதத்துல இருக்கறப்பவே கேஸை அணைச்சுடுங்க. ரெம்ப கெட்டி ஆகவிட்டா ஆறினப்புறம் இன்னும் கெட்டியாகி பசவு இல்லாம ரெம்ப ட்ரை ஆகிடும்

7 . அப்புறம் ஒரு சின்ன வாணலில மீதம் இருக்கற ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை போட்டு முந்திரி பொன்னிறமா வந்ததும் அந்த நெய்யோட கேசரில கொட்டி நல்லா ஈவனா கலக்கிடுங்க

அவ்ளோ தான் கேசரி ரெடி... சாப்பிட நீங்க ரெடியா?

இது ரெம்ப ஈஸியான ஸ்வீட்... நீ செய்யறதுல இருந்தே அது ஈஸின்னு தெரியுதுன்னு சொல்றீங்களோ...

உண்மைய சொல்லணும்னா என்னவர் வேணும்னு கேட்டு சாப்பிடற ஒரே ஸ்வீட் இதான்... சோ ஒழுங்கா செஞ்சு பழகிட்டேன்... ஹும்... நம்ம நல்ல மனச யாரு புரிஞ்சுக்கறா...ஹும்...

நல்லவேளை அவருக்கு பிடிச்ச ஸ்வீட் ஈஸியா செய்யற மாதிரி இருக்கு... கிரேட் எஸ்கேப்... ஹா ஹா ஹா

என்னோட ப்ளாக்ல கூட ஒரு சமையல் குறிப்பு போட்டுட்டேன் வெற்றிகரமா... ஹே.......... சக்சஸ்... சக்சஸ்... சக்சஸ்...

அது சரி... நீ மேல போட்டுருக்கற படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு சந்தேகம் கேக்கற "டவுட் தனபால்" களுக்கு ஒரு விளக்கம் இதோ...

அதாங்க அந்த "சிட்டிகை" பத்தி விளக்கினப்ப மகராஜா "யாரங்கே" னு கூப்பிடற மாதிரினு ஒரு வரி சொன்னேனே அதான் இது (வெச்சோம்ல லிங்க்கு...ஹா ஹா ஹா.. கரெக்டான படம் சிக்கலைனா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு... ஹா ஹா ஹா)
 
ஒகேங்க... இதோ தட்டு நெறைய கேசரி இருக்கு... சண்டை போட்டுக்காம எல்லாரும் share பண்ணி சாப்பிடுங்க...Bye Bye... சி யு லேட்டர்... Happy Kesari Eating... ஹி ஹி ஹி
 
...

Monday, September 27, 2010

அதே கண்கள்... (பகுதி 14)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"அவன் உண்மை தான் சொல்றான் சார்" என ஒரு குரல் கேட்க இருவரும் திரும்பி பார்க்க... அங்கே...

இன்ஸ்பெக்டரை மீறி ஓடினான் அருண்

"சுமி...சுமி...உனக்கு ஒண்ணும் ஆகலை தானே... " என அவள் கையை பற்ற போனவன் அருகில் நின்றிருந்த சூர்யாவை பார்த்து விலகினான்

"நீங்க...?" என இன்ஸ்பெக்டர் ஆச்சிர்யம் விலகாமல் கேட்க

"நா... நான்...தான்.... சு... சுமேதா... " என்றாள் நடுக்கத்துடன்

"என்ன நடந்தது? எங்க போனீங்க நேத்து நைட்ல இருந்து? உங்களை யாராச்சும் கடத்தினாங்களா?" என இன்ஸ்பெக்டர் கேள்வி மழை பொழிய சுமேதா பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னை நிதானபடுத்திக்கொள்ள முயன்றாள்

"இன்ஸ்பெக்டர் ப்ளீஸ்... சுமி ரெம்ப பயந்து போன மாதிரி இருக்கா... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்" என சுரேஷ் கூற சுமேதா அண்ணனின் தோளில் ஆதரவாய் சாய்ந்தாள்

"என்ன சுமி... ? தண்ணி குடிக்கறயா?" என கேட்க

"ம்..." என்றாள் முனகலாய்

நீர் அருந்திய பின் சற்று பலம் வந்தது போல் இருந்தது சுமேதாவிற்கு

"சொல்லுங்க சுமேதா... என்ன நடந்தது?" என்றார் இன்ஸ்பெக்டர் விடாமல்

அவள் இன்னும் மருண்ட விழிகளுடன் இருக்க "சுமி... ரிலாக்ஸ் பண்ணு... நேத்து நைட் சூர்யா செல் போன் எடுக்க கார்க்கு போயிட்டு திரும்பி வந்தப்ப நீ ரூம்ல இல்லைன்னு சொன்னார்... அந்த நேரத்துல என்ன நடந்தது... சொல்லுடா" என சுரேஷ் பரிவுடன் கேட்க அவள் சூர்யாவை திரும்பி பார்த்தாள்

சூர்யாவும் "சொல்லு சுமி...என்னாச்சு?" என கேட்க

"அது...அது..." என அவள் தடுமாற

"அருண் ஹோட்டல் வாசல்ல நிக்கறான்னு எனக்கு போன் பண்ணின.. அப்புறம் என்ன நடந்தது? அவன் எதாச்சும் தொந்தரவு செஞ்சானா?" என கணேஷ் அருணை பார்த்து கொண்டே சுமேதாவிடம் கேட்க

"இல்ல... இல்ல...அருண் எதுவும் பண்ணல" என்றாள் அவசரமாய்

"வேற என்ன நடந்தது?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"நான்... இவர் செல்போன் எடுக்க போய் கொஞ்ச நேரம் வரலைனதும் அருண் எதாச்சும் அவர்கிட்ட பேசிடுவானோனு பயந்து கீழ போனேன். முன் வாசல் வழியா போனா அருண் பாத்துடுவானோனு லிப்ட்ல போகாம ஸ்டெப்ஸ்ல எறங்கி பின்னாடி வழியா போனேன்... " என மூச்சு வாங்கினாள்

கணேஷ் தண்ணீர் எடுத்துத்தர பருகியவள் தொடர்ந்தாள்

"கீழ போனப்ப இவர் கார் பார்கிங்ல இல்ல... ஒருவேளை நான் பின்னாடி வழியா வந்தப்ப இவர் லிப்ட்ல போய் இருப்பாரோன்னு மொதல்ல தோணுச்சு... எதுக்கும் பக்கத்துல எங்கயாச்சும் இருக்காரோனு பாத்துட்டே வந்தேன்... அப்போ ஒரு இருபதடி தூரத்துல இவர் போட்டு இருந்த மாதிரியே ஒரு மெரூன் கலர் ஷர்ட் தெரிஞ்சுது. கூப்ட்டேன் திரும்பல... ஒருவேளை கேக்கலை போல இருக்குனு பின்னாடியே போனேன்... பக்கத்துல போய் பாத்தா அது இவர் இல்ல...வேற யாரோ... சரி ஹோட்டல்க்கு போலாம்னு திரும்பி ஒரு அஞ்சடி கூட வந்திருக்க மாட்டேன்.. அப்போ... அப்போ... " என உடல் நடுங்க கண்களை மூடி சுரேஷின் தோளில் சாய்ந்தாள்

சற்று நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பின் சுமேதாவே தொடர்ந்தாள்

"அப்போ... ஒரு பெரிய காட்டு நாய் மாதிரி ஒண்ணு... பக்கத்துல வந்தது... எனக்கு ரெம்ப ப... பயமாய்டுச்சு... பயந்து ஓட ஆரம்பிச்சேன்...வழில ஆள் நடமாட்டமே இல்ல... ரெம்ப தூரம் ஓடினேன்... நின்னு திரும்பி பாத்தா அந்த நாய காணோம்... ஆனா ஏதோ காட்டுக்குள்ள வந்துட்டேன்னு புரிஞ்சது. திரும்பி போக வழி தெரியல... கொஞ்சம் நேரம் அங்கேயே சுத்தி சுத்தி எதாச்சும் வழி தெரியுதான்னு பாத்தேன்... அதுக்குள்ள ஏதோ உறுமல் சத்தம்... ஏதோ மிருகம்னு பயந்து மரத்து மேல ஏறிட்டேன்... ஒரு கரடி... யானை... எல்லாம் வந்தது கொஞ்ச நேரத்துல... எனக்கு கீழ எறங்க ரெம்ப பயமா இருந்தது... களைச்சு போய் அப்படியே மரக்கிளைலையே தூங்கிட்டேன் போல இருக்கு... நல்லா வெளிச்சம் வந்தப்புறம் தான் நினைவு வந்தது... அப்புறம் தேடி தேடி ரோடு கண்டுபிடிச்சு வழில எல்லாம் விசாரிச்சு ஹோட்டல் வந்து சேந்தேன்... அந்த ஹோட்டல் ரிசப்னிஸ்ட் தான் என்னை நீங்க தேடுற விசயம் சொல்லி இங்க கொண்டு வந்து விட்டார்" என சொல்லி முடித்தவள் தண்ணி என ஜாடை காட்டினாள்

"இன்ஸ்பெக்டர் மத்த பார்மாலிடீஸ் எதாச்சும் இருந்தா நான் இருந்து முடிச்சுட்டு போறேன்... அவங்க போகட்டும்... ப்ளீஸ்" என கணேஷ் கூற சுமேதாவின் நிலை பார்த்து சரி என்றார் இன்ஸ்பெக்டர்

அதே நேரம் சுமேதாவின் பெற்றோரும் அங்கு வந்து சேர நடந்ததை சுருக்கமாய் அவர்களிடமும் கூறி சுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர் முதலில்

பின் தன் வண்டியை கணேஷை எடுத்து வர சொல்லிவிட்டு சுரேஷ் சூர்யாவுடன் சென்றான்
____________________________

சூர்யா ஆபீஸ் விசியமாய் அவசரமாய் வெளியூர் செல்லவேண்டுமென சுமேதாவை அவள் பெற்றோர் வீட்டிலேயே விட்டு சென்றான். சூர்யாவின் பெற்றோரும் வந்து பார்த்து விட்டு ஆறுதல் கூறி சென்றனர்

வீட்டுக்கு வந்த இந்த ஒரு வாரத்தில் சுமி அதிகம் யாருடனும் பேசவில்லை

அவள் அறையிலேயே அடைந்து கிடந்தாள். வீட்டில் உள்ளவர்கள் பேச முயன்ற போதும் தூக்கம் வருது என சென்று படுத்து கொண்டாள்

அன்று சுமேதாவின் அன்னை தன் மகனிடம் வருத்தத்துடன் கூறி கொண்டு இருந்தாள்

"சுமி சரியாவே சாப்பிடமாட்டேன்கறா சுரேஷ்..."

"அம்மா... சுமி ரெம்ப பயந்து போய் இருக்கா... இன்னும் அந்த அதிர்ச்சில இருந்து வெளிய வர்ல... கொஞ்ச டைம் ஆகும்"

"மாப்பிள்ளை இந்த நேரம் பாத்து வெளியூர் போயிட்டாரே... "

"என்னமா செய்யறது... கல்யாணத்துக்கு நெறைய லீவ் போட்டாரே... இன்னும் லீவ் எடுக்க முடியாதில்ல"

"அதில்ல... "

"அம்மா நீ தேவையில்லாம குழப்பிக்காதே" என சுரேஷ் ஆறுதலுடன் பேச

"அதில்ல கண்ணா... ஒருவேள மாப்பிள்ள சுமிய பத்தி தப்பா...எதாச்சும்..." என தயங்க

"அம்மா ப்ளீஸ்... சூர்யாவ பத்தி அப்படி பேசாதே...அவ காணோன்னதும் அவர் தவிச்ச தவிப்பை பக்கத்துல இருந்து பாத்தவன் நான்"

"இருந்தாலும் இவ இப்படி இருக்கறப்ப எப்படி விட்டுட்டு போக மனசு வரும்" என வருத்தமாய் கூற

"அம்மா நீ இன்னும் அந்த காலத்துலேயே இருக்க... கொஞ்சம் பிராக்டிகலா யோசிம்மா ப்ளீஸ்"

"ஆனா..."

"அம்மா... எனக்கும் இந்த உறுத்தல் இருந்ததும்மா... அதை ஊட்டில போலீஸ் ஸ்டேஷன்லயே சூர்யாகிட்ட கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா சுமி உங்க தங்கைனா எனக்கு மனைவி, என்னில் பாதி... அவகிட்ட நீங்க வெச்சு இருக்கற நம்பிகையை விட எனக்கு நெறைய நம்பிக்கை இருக்குனு சொன்னார்மா... அவரை போய் சந்தேகப்படறியே"

"ஐயோ சந்தேகம் இல்ல சுரேஷ்... என்னமோ மனசுக்கு கஷ்டமா..."

"அம்மா சுமிக்கு இப்ப கொஞ்சம் ரெஸ்ட் வேணும்னு நெனச்சு கூட அவர் இங்க விட்டுட்டு போய் இருக்கலாம்... இந்த அதிர்ச்சில இருந்து அவ வெளிய வரணும்னு விலகி இருக்கலாம் நெனைச்சு இருப்பார்னு எனக்கு தோணுது"

"சரிப்பா... நான் தான் சும்மா குழப்பிக்கறேன் நீ சொன்ன மாதிரி...எப்ப வெளியூர்ல இருந்து வரார்னு சொன்னாரா?"

"தெரியலம்மா....நானே அவர்கிட்ட பேசணும்னு நெனச்சுட்டு இருந்தேன்... இரு இப்பவே கூப்பிடறேன்" என்றவன் சூர்யாவின் அலைபேசிக்கு அழைத்தான்

"ஹலோ சூர்யா"

"அ... சொல்லுங்க சுரேஷ்"

"எப்படி இருக்கீங்க சூர்யா?"

"ம்... இருக்கேன்... நீங்க?" என என்னமோ போல் கூற சுமியை பிரிந்திருக்கும் சோகம் என புரிந்து கொண்டான் சுரேஷ்

"நல்லா இருக்கேன். அப்புறம் வொர்க் எப்படி போயிட்டு இருக்கு"

"ஒகே... போயிட்டு இருக்கு... "

" ஒகே... அப்புறம்... எப்ப கோயம்புத்தூர் வரீங்க?"

"அது... அனேகமா... நாளைக்கி வருவேன்னு நினைக்கிறேன்... சரியா தெரியல... நான் வந்துட்டு போன் பண்றேன்"

"ஒகே சூர்யா... டேக் கேர்... "

"ஒகே பாய்" என அழைப்பு துண்டிக்கப்பட்டது

"அம்மா உன் மாப்பிள்ளை நாளைக்கி ஊருக்கு வர்றாராம்... போதுமா" என தன் அன்னையிடம் சந்தோசமாய் உரைத்தான் சுரேஷ்

"அப்படியா... ரெம்ப சந்தோஷம்... லஞ்ச்க்கு வந்துடுவரா...சரியா கேட்டியா"

"அம்மா... அனேகமா நாளைக்கி வருவேன்னு தான் சொன்னார்... இன்னும் சரியா தெரியல வந்துட்டு கூப்பிடறேன்னார்"

"ஓ...அப்படியா" என சமாதானமாய் சென்றாள் அன்னை

சூர்யாவிடம் பேசியதற்கு பின் சுரேசிற்கு ஏதோ உறுத்தலாய் தோன்றியது. ஆனால் அதை அன்னையிடம் சொல்லி கலவரப்படுத்தவேண்டாமென மறைத்தான்

சுரேஷின் மனதில் பல சிந்தனைகள் ஓடியது

ஏனோ சூர்யா முன் போல் பேசாதது போல் தோன்றியது. அவர் சூழ்நிலை அங்கு என்னவோ என தன்னையே சமாதானம் செய்து கொண்டான்

சுமியை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என தோன்றிய மறுநொடியே... திருமணதிற்கு முன்பே மணிக்கணக்கில் பேசுபவர்கள் இப்போதும் அதை விட அதிகமாகத்தானே பேசுவார்கள். பிறகு தன்னிடம் தனியே அவளை பற்றி என்ன கேட்பார் என மனதை அமைதிப்படுத்த முயன்றான்

ஆனாலும் ஏதோ தொண்டையில் சிக்கிய முள்ளாய் உறுத்தியதை அவனால் மறுக்க முடியவில்லை
__________________________________

மறுநாள் சுரேஷிடம் வந்த சுமேதா "அண்ணா... என்னை அவர் வீட்டுல கொண்டு போய் விடு" என்றாள்

"சுமி...ஆனா... "என்று சுரேஷ் ஏதோ சொல்ல வர

"ப்ளீஸ்..." என வேதனை நிறைந்த முகத்துடன் கூற சூர்யாவின் நினைவில் இருக்கிறாள் என்பது புரிய அன்று சூர்யா வெளியூரில் இருந்து திரும்பி வருகிறான் என்பதும் நினைவு வர மறுப்பேதும் சொல்லாமல் அழைத்து சென்றான்
________________________________

சுமார் இரவு பதினொரு மணிக்கு தான் சூர்யா வந்தான்

சுமேதா வந்திருக்கிறாள், மேலே அறையில் இருக்கிறாள் என அவன் அன்னை கூற சூர்யா அதை எதிர்பார்க்காததால் விரைந்து தனதறைக்கு சென்றான்

அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தவள் போல் சுமேதா கதவருகிலேயே நின்றாள்

அவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தியவள் "ஏன் இப்படி செஞ்சீங்க?" என கேட்க அதை எதிர்பாராத சூர்யா திகைப்புடன் அவளை பார்த்தான்

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)
 
...

Friday, September 24, 2010

உருகுதே மருகுதே...


குழந்தைகள வெளிய அழைச்சுட்டு போய் ரெம்ப நாள் ஆச்சு... எப்ப பாரு ஆபீஸ் வேலைன்னு இயந்தரதனமா போச்சு வாழ்க்கை...

இன்னிக்கி கண்டிப்பா வெளிய கூட்டிட்டு போகணும்னு நெனச்சுட்டே ஆபீஸ்க்கு கெளம்பிட்டு இருந்தேன். இப்பவே பசங்க கிட்ட இதை சொல்லி சந்தோசப்படுத்தணும்னு தோண

"அனும்மா கார்த்தி பையா...இங்க வாங்க"

"என்ன டாடி?" னு ரெண்டு பேரும் வந்து நிற்க

"ஈவினிங் ரெடியா இருங்க... மூவி போயிட்டு ஹோட்டல் போயிட்டு வரலாம்"

"ஹேய்..... ஜாலி... " னு பசங்க சந்தோசமா குதிச்சுட்டு போகவும் கீதா ரூம்குள்ள வந்தா... என்னோட சகதர்மிணி

"என்னங்க ரெண்டும் ஒரே குஷியா கத்திட்டு போகுது... என்ன சொன்னிங்க?"

"ம்... சாயங்காலம் சினிமா போலாம்னு சொன்னேன்"

"என்ன திடீர்னு...?"

"ஏன்.... திடீர்னு சினிமா போக கூடாதா... நோட்டீஸ் எதுனா குடுக்கணுமா இந்த வீட்டு மகாராணி கிட்ட" என்றவன் அப்படியே அவளை அருகில் இழுத்தேன்

"கிண்டலா... விடுங்க என்னை... என்ன இது காலங்காத்தால... பசங்க வந்துட போறாங்க"

"கீது... " என கெஞ்சலாய் அழைக்க

"ம்... " என அவளும் இளகினாள்

"இந்த டை கொஞ்சம் கட்டி விடேன்" என கேட்க

"இன்னும் சின்ன கொழந்தையா... டை கூட கட்டி விடணுமா?" என சலித்த போதும் சந்தோசமாய் கட்டி விட்டாள்

"கீது... "

"ம்..."

"நீ மட்டும் எப்படி பன்னண்டு வருசத்துக்கு முன்னாடி நம்ம கல்யாணத்தன்னைக்கி பாத்தா மாதிரி அப்படியே இருக்கே"

"ஹச் ... " என வேண்டுமென்றே தும்முவது போல் பாவனை செய்தாள் சிரித்தவாறே

"ஏய்... நான் ஒண்ணும் ஐஸ் வெக்கல... நெஜமா... பதினொரு வயசுல ஒரு பொண்ணும்... ஒம்பது வயசுல ஒரு பையனும் இருக்காங்கன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க"

"ம்ம்ம் .... என் வீட்டுகாரர் என்னை சந்தோசமா வெச்சுட்டு இருக்கார்... அதனால கவலை இல்லாம வயசு ஏறாம இருக்கேன்... போதுமா" என என் மோவாயை பிடித்தவாறே கொஞ்சலாய் சொல்ல

"ம்... அப்படியா... அந்த வீட்டுகாரருக்கு ஒண்ணும் சன்மானம் இல்லையா அதுக்கு" என அவளை அணைக்க

"ஐயோ... ஆபீஸ்க்கு நேரமாச்சு உங்களுக்கு... விடுங்க... டிபன் சாப்பிட வாங்க... " என விடுவித்துக்கொண்டு சென்றாள் கீதா... மறுநிமிடமே மறுபடியும் வந்தாள்

"என்ன செல்லம் மனசு கேக்கலையா... சன்மானம் குடுக்க வந்தியா... "என நான் கண்ணடித்து கேட்க

"ம்க்கும்... நெனப்பு தான் உங்களுக்கு... நான் வந்தது வேற ஒண்ணு சொல்றதுக்கு ... மாமா பிரஷர் மாத்திரை தீர போகுதுன்னு சொல்லிட்டு இருந்தார். கொஞ்சம் வாங்கிட்டு வந்துடறீங்களா?"

"டாக்டர் குடுத்த prescription எடுத்து வெய்யி கீத்து... சாயங்காலம் வெளிய போறப்ப வாங்கிடலாம்"

"சரிங்க" என்றவள் "ஏங்க... ராத்திரி தலை வலிக்குதுன்னு சொன்னீங்களே... இப்ப சரி ஆய்டுச்சா"

"உன் கை பட்டும் சரி ஆகாம போகுமா" என அவள் கையை பற்ற முயல

"மறுபடியும் ஆரம்பிச்சுடீங்களா... நான் போறேன்" என விலகினாள்

அன்பான மனைவி, அறிவான பிள்ளைகள், நல்ல வேலை, நல்லது கெட்டது எடுத்து சொல்ல அம்மா அப்பா எங்களுடனே இருக்க இதற்கு மேல் என்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு அப்படின்னு என்னை பாத்தே சில நேரம் நான் பொறாமை பட்ரதுண்டு. விசித்ரம் தான் இல்லையா இந்த தற்பொறாமை


***********************************************************

ஆபீஸ் போய் கார் நிறுத்திட்டு உள்ளே போக உடன் பணிபுரியும் பலர் வரவேற்பரையிலேயே இருந்தனர்

என்னை பார்த்ததும் ஹெட் கிளெர்க் முகுந்தன் முன்னே வந்தார் "சங்கர் சார்...விசயம் தெரியுமா... நம்ம கோபாலக்ருஷ்ணன் இறந்துட்டார் பாவம்"

"யாரு டெஸ்பாட்ச்ல இருந்தவரா?"

"ஆமாம் சார்..."

"அட பாவமே ... சின்ன வயசு தானே முகுந்தன் ... ரெண்டு நாள் முன்னாடி கூட ஏதோ கையெழுத்து வாங்கணும்னு பாக்க வந்தாரே... நல்லாதானே இருந்தார்"

"ஆமா சார்.. நேத்து தான் முடியலைன்னு சிக் லீவ் போட்டு இருக்கார்... ரெம்ப நாளா தலைவலி இருந்துட்டே இருந்துருக்கு... இவரு அதை சீரியஸா எடுத்துக்காம தானே மாத்திரை போட்டுட்டு இருந்துருக்கார்... நேத்து ரெம்ப முடியாம மயக்கம் போட்டு ஹாஸ்பிடல் கொண்டு போய் இருக்காங்க... பிரைன் டியுமராம்... கடைசி நிமிசத்துல பாத்து காப்பாத்த முடியல... "

"ச்சே... கொடும தான் போங்க..."

"பாடி சொந்த ஊருக்கு எடுத்துட்டு போய்ட்டாங்களாம் கொஞ்ச நேரம் முந்தி... மதியத்துக்கு மேல தான் தகணமாம். இங்க இருந்து மூணு மணி நேரம் ட்ராவல்னு சொல்றாங்க சார்... ஆபீஸ் ஸ்டாப் எல்லாம் கம்பெனி பஸ்லையே போயிட்டு வர ஏற்பாடு பண்ணி இருக்கார் நம்ம எம்.டி. எப்படியும் திரும்பி வர நைட் ஆய்டும்னு நினைக்கிறேன்"

"ஓ... அப்படியா... சரிங்க முகுந்தன் நான் வீட்டுல வர நேரமாகும்னு ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்"

"செய்ங்க சங்கர் சார்..."

***********************************************************

"ச்சே... இப்படி அல்பாயுசுல போய்ட்டானே... "

"என்ன செய்ய? விதி... சாகற வயசா... ரெண்டு பெண் கொழந்தைங்க பத்து வயசு ஒண்ணு... ஏழு ஒண்ணு..."

"கோபாலோட மனைவி பெருசா படிக்க கூட இல்ல போல இருக்கு... பூர்வீக சொத்தும் பெருசா இல்ல... என்ன செய்ய போறாங்களோ தெரியல. டாக்டர்ஸ் சொன்னாங்களாம் மொதலே காட்டி இருந்தா சரி பண்ணி இருக்கலாம்னு"

"இதுக்கு தான் சொல்றது... எதானாலும் நாமளே வைத்தியம் பண்ண கூடாது... "

"வாஸ்துவம் தான்... யாரு கேக்கறா?"

"அந்த பொண்ணு பாவம் இன்னும் சின்ன வயசா இருக்கு... ரெம்ப சின்னதுலையே கல்யாணம் பண்ணிடாங்க போல இருக்கு"

"ஆமாம்... பதினெட்டுலையே கல்யாணமாம்"

"ஆபீஸ்ல பணம் வருமோ?"

"பெருசா ஒண்ணும் இருக்காது போல இருக்கு... அதுக்கு இதுக்குன்னு லோன் எல்லாம் போட்டு எடுத்துட்டான் போல இருக்கு... பிரைவேட் தானே... கவர்ன்மென்ட்னாலும் பென்ஷன் ஆச்சும் வரும்... என்ன செய்யுமோ அந்த பொண்ணு. பாத்தா ரெம்ப வெவரமாவும் தெரியல"

இறுதி சடங்கிற்கு வந்திருந்த பலரின் பேச்சும் இப்படியே இருந்தது

அதை கேட்டு கொண்டிருந்த எனக்கு மனதை ஏதோ அழுத்துவது போல் இருந்தது. முகுந்தனும் அதே சொன்னார்

***********************************************************

வீடு வந்து சேரும் போது மணி பத்து. கீதா முன் வெராண்டாவில் காத்திருந்தாள்

என் சோர்ந்த முகத்தை பார்த்து எதுவும் கேட்காமல் "ஹீட்டர் போட்டுருக்கேன். மொதல்ல குளிச்சுட்டு வாங்க. தோசை ரெடி பண்றேன்" என்றவளை

"வேண்டாம் கீதா எனக்கு பசி இல்ல... நீ போய் படு... நான் குளிச்சுட்டு வந்து படுத்துக்கறேன்"

"நீங்க வெளிய சரியா சாப்பிட மாட்டீங்கன்னு தெரியும். அப்புறம் தலை வலி தான் வரும். சூடா ரெண்டே ரெண்டு தோசை. நானும் சாப்பிடாம வெயிட் பண்றேன்... ப்ளீஸ்" என்றவளை கோபமாய் பார்த்தேன்

"எத்தனை வாட்டி சொல்றது நேரத்துக்கு சாப்பிடுன்னு... மணி பத்து ஆச்சு" என கடிந்து கொண்டதும்

"உங்களுக்கு மட்டும் இன்னும் ஆறு மணியா" என சிரித்து கொண்டே கேட்க அதற்கு மேல் மறுத்து பேச முடியவில்லை என்னால்

சூடாக தோசை சுவையாக சட்னி இருந்த போதும் ஏனோ தொண்டையில் இறங்கவில்லை

"என்னங்க ஆச்சு... எப்படி இறந்தார்? ஆக்சிடண்ட்ஆ?"

"இல்ல... ஒடம்புக்கு ஏதோ.... " தெளிவாக சொல்ல ஏதோ தடுத்தது

"அம்மா அப்பா பசங்க எல்லாம் தூங்கியாச்சா" என்று வேண்டுமென்றே பேச்சை மாற்றினேன்

"ம்" என்றாள்

எனது முகத்தை பார்த்து கீதாவும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை

நான் எழுந்து கொள்ள போக "ரெண்டு தானே வெச்சுடீங்க. இன்னொரு தோசை" என்றவளிடம்

"இல்ல போதும்... " என எழுந்து கொண்டேன்

நான் எதுவும் பேசாமல் படுத்து கொண்டு இருக்க "என்னங்க தலை வலிக்குதா?"

"இல்ல கீதா... ஒண்ணுமில்ல... நீ தூங்கு" என அவள் கையை விலக்கினேன்

"உங்களுக்கு அவர் ரெம்ப நெருக்கமா?"

"யாரு?" என்றேன் ஏதோ சிந்தனையில்

"அதான்... இன்னிக்கி போயிட்டு வந்தீங்களே? அவர்..."

"இல்ல... நெருக்கம்னு இல்ல... தெரியும்...அவ்ளோ தான்" என நான் தனிச்சையாய் என் நெற்றி பொட்டில் அழுத்தி கொள்ள

"தைலம் போட்டு விடவா... இப்பவெல்லாம் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருது... டாக்டர் கிட்ட காட்டணுங்க" என்றாள் நேரம் காலம் புரியாமல்

"கொஞ்சம் தொணதொணக்காம சும்மா இருக்கியா?" என சற்று கோபமாய் கூற முகம் சுருங்க முதுகு காட்டி படுத்தாள்

எனக்கும் இப்போது அந்த அமைதி தான் தேவையாய் இருந்தது

எனக்குள் பல எண்ணங்கள் சுழன்று சுழன்று கொன்று கொண்டு இருந்தது

கீதா கூறும் முன்பே இன்று மதியமே எனது தலை வலி பற்றி டாக்டரிடம் காட்ட வேண்டும் என முடிவு செய்து இருந்தேன்

கோபாலகிருஷ்ணன் போல் தனக்கும் ஒரு வேளை விபரீதமாய் ஏதேனும் இருந்தால் என்ற சந்தேகமே எனது இந்த அமைதியின்மைக்கு காரணம். கீதாவிடம் காட்டிய கோபம் கூட அதன் வெளிப்பாடே... அவளிடம் இதை எல்லாம் சொல்லி திகிலூட்ட மனம் வரவில்லை

வெகு நேரம் தூங்காமல் விடியும் நேரத்தில் சற்று கண்ணயர்ந்தேன்

***********************************************************

பிள்ளைகளின் சத்தம் கேட்டு கண் விழித்தேன்

இன்னும் ஸ்கூல்க்கு போகலையா என சுவர் கடிகாரத்தை பார்த்தவன் அதன் கீழ் இருந்த நாட்காட்டி "ஞாயிறு" என காட்ட "ஓ... விடுமுறை அல்லவா" என்று எனக்கு நானே கூறி கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன்

பல் விளக்க வாஷ்பேசின் முன் நிற்க எனது சிவந்த கண்கள் சரியாக உறங்காததை கூறியது. அதன் தொடர்ச்சியாய் நேற்றைய நிகழ்வுகள் மீண்டும் சோர்வடைய செய்தது

முன் வாசலில் பிள்ளைகள் விளையாடி கொண்டு இருக்க அம்மாவும் அப்பாவும் போர்டிகோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்

என்னை பார்த்ததும் அம்மா "வா சங்கர்... ராத்திரி நேரம் கழிச்சு தான் வந்தியா?"

"ஆமாம்மா... " என்றேன் சோர்வை

"ரெம்ப சோர்வா இருக்கியேப்பா... சரியா தூங்கலையா?"

"இல்லமா... கொஞ்சம் டையார்ட்... அதான்"

"சாவித்திரி அவனுக்கு காபி எடுத்துட்டு வாயேன்... கீதா ஏதோ வேலையா இருக்கா போல" என அப்பா அம்மாவிடம் கூறி முடிக்கும் முன் கீதா காபியுடன் வெளியே வந்தாள்

காபியை கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றாள். அவள் முகத்தில் நேற்று நான் காட்டிய கோபத்தின் வலி இன்னும் தெரிந்தது

"அனும்மா...கார்த்தி கண்ணா... " என பிள்ளைகளை அழைக்க ஒரு நிமிடம் விளையாட்டை நிறுத்தி என்னை திரும்பி பார்த்தவர்கள் ஒன்றும் பேசாமல் மீண்டும் விளையாட்டை தொடர்ந்தனர்

"ஏய்... அனு" என நான் மீண்டும் அழைக்க

"நேத்து சினிமா கூட்டிட்டு போறேன்னுட்டு போகலைனு ரெண்டத்துக்கும் கோவம் உன் மேல... ஒரே ரகளை நேத்து அவங்க அம்மாகிட்ட" என அப்பா கூற... ச்சே... இப்படி சுத்தமாய் மறந்து போனேனே என எனக்கு என் மீதே கோபமானது

ஒரு வழியாய் சிறிது நேரம் பிள்ளைகளுடன் விளையாடி சமரசம் செய்து இன்று அழைத்து போவதாக சொல்ல சமாதானம் ஆனார்கள்

காபி டம்ளர் வைக்க உள்ளே போனவன் கீதா அருகில் சென்று "கோபமா இன்னும்?" என கேட்க

"இல்ல" என்றாள் முகம் மாறாமல்

"சாரிடா... கொஞ்சம் டையார்டா இருந்தது... அதான்..." என அவள் கைகளை பற்றிக்கொள்ள என் முகத்தை பார்த்தவள் மனம் இளக

"ம்... பரவால்ல... ஆனாலும் இப்பவெல்லாம் உங்களுக்கு மூக்குக்கு மேல கோவம் வருது ஒண்ணும் இல்லாததுக்கு கூட" என கூறியவளின் முகத்தில் புன்னகையை காண நிம்மதி ஆனேன்

ஒரு சின்ன கோபத்திற்கே முகம் வாடுபவள் எனக்கு ஏதேனும் என்றால் என்ன செய்வாள்... எப்படி தாங்குவாள்... பிள்ளைகளை எப்படி வளர்ப்பாள்... அப்பா அம்மாவின் நிலைமை என்ன... இதுவே சிந்தனையாய் ஓடியது மனதில்

***********************************************************

பிள்ளைகளை அழைத்து கொண்டு சினிமாவுக்கு சென்றோம்... அம்மா அப்பா சொந்த ஊருக்கு அல்லது ஏதேனும் கோவிலுக்கு தவிர எங்கும் வெளியே வர விருப்பபடுவதில்லை

ஆரம்பத்தில் வற்புறுத்திய பிள்ளைகளும் இப்போது தொந்தரவு செய்வதில்லை

விடுமுறை நாள் என்பதால் தியேட்டரில் நல்ல கூட்டம். பிள்ளைகளின் சந்தோசத்தை காண மிகவும் மகிழ்வாய் இருந்தது

கீதாவிற்கு சினிமா பார்ப்பதில் பெரிய விருப்பம் எப்போதும் இருந்ததில்லை. அவளுக்கு நானும் பிள்ளைகளும் தான் உலகம்

சினிமா தொடங்கியதும் சிறிது நேரத்திற்கு மேல் என் மனம் அதில் லயிக்கவில்லை. மெல்லிய வெளிச்சத்தில் கீதாவின் கவலையற்ற முகத்தை பார்த்ததும் ஏனோ என்னையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்த்தது

"கீத்து..." என அழைக்க

"ம்... " என்றாள் திரையில் இருந்து கண்ணை எடுக்காமலே

"கீத்து... " என மறுபடியும் அழைக்க

"என்னப்பா... சினிமா பாக்கற மூட் இல்லையா இன்னிக்கி?" என ஆதரவாய் என் கைகளை பற்றினாள்

எனக்கும் அது வேண்டும் போல் இருந்தது. சில நொடிகள் எதுவும் பேசாமல் அவளை பார்த்து கொண்டே இருந்தேன்

"வீட்டுக்கு போய் அத்தைகிட்ட சொல்லி எனக்கு சுத்தி போட சொல்லணும்... இப்படி கண்ணெடுக்காம பாத்தா பயமா இருக்கு " என வேடிக்கையாய் பயந்தவள் போல் என்னை சீண்ட நான் ஒன்றும் பேசாமல் அவள் கைகளை இன்னும் இறுக்கமாய் கோர்த்து கொண்டேன்

அவள் நிம்மதியாய் என் தோளில் சாய்ந்து கொண்டாள்

"கீத்து... நீ ஏன் மேல படிக்க கூடாது?" என நான் கேட்க

"என்ன விளையாடறீங்களா?"

"ஏய்... நீயே ஒரு வாட்டி கேட்டியே? டீச்சர் ட்ரைனிங் படிக்கணும்னு ஆசையா இருக்குனு"

"அது... அப்போ அனு கூட பிறக்கறதுக்கு முந்தி... வீட்டுல போர் அடிக்குதுன்னு கேட்டேன். ஓ... கேட்டதெல்லாம் பன்னெண்டு வருஷம் கழிச்சு தான் கெடைக்குமா?" என அவள் சிரித்து கொண்டே கிண்டல் செய்தாள் என் மன போராட்டம் புரியாமல்

"இல்லடா... இப்ப அனு கார்த்தி பெருசாய்ட்டாங்கல்ல... இருக்கற நேரத்த உபயோகமா.... " என நான் முடிக்கும் முன்

"வேண்டாம்பா... ரெண்டு பேரும் வேலைக்கி போயிட்டா நிச்சியம் பிள்ளைகள இப்ப பாத்துகற மாதிரி முடியாது... அத்தை மாமாவுக்கும் இப்ப அதிக கவனம் வேணும்... எனக்கு இப்படி இருக்கறது பிடிச்சுருக்கு, சந்தோசமா இருக்கேன்... வேற பேசுங்க" என அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள்

***********************************************************

மறுநாள் அலுவலகம் சென்று சில முக்கிய வேலைகளை முடித்ததும் சற்று ஓய்வு கிடைக்க மனம் மீண்டும் அதே பிரச்னையில் வந்து நின்றது

இதை பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள முடியுமா என ஆர்வம் தலைதூக்க கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன்

"பிரைன் டயுமர் சிம்டம்ஸ்" என கூகுளில் டைப் செய்ய அது பல விவரகளை திரையில் துப்பியது

எதுவும் மனதிற்கு சந்தோசத்தை தரவில்லை

சிம்டம்ஸ் என கொடுக்கபட்டு இருந்ததை ஒரு பட்டியல் போல ஒரு பேப்பரில் எழுதினேன். எல்லாமும் எனக்கு இருப்பது போலவே தோன்றியது

அடிக்கடி தலைவலி - இருக்கே

அடிக்கடி கோவம் மூட் swings - நேத்து கீதா கூட சொன்னாளே அடிக்கடி கோவம் வருதுன்னு

கண் பார்வையில் தடுமாற்றம் - ஆமா... பவர் ஏதேனும் ப்ராப்ளம் இருக்குமோனு ஐ டாக்டர்கிட்ட போனேனே போன மாசம்

கை கால் வலி - இருக்கு... இப்பவெல்லாம் ரெம்ப சோர்வா இருக்கே

மறதி - ஆமா... சனிக்கிழமை கூட பிள்ளைகள சினிமா கூட்டிட்டு போறதா சொன்னதை மறந்தேனே..

ஐயோ...எனக்கு தலை சுத்துவது போல் இருக்கு இப்போ

உடனே என் நண்பன் ஒருவனிடன் வேறு ஒருவருக்கு வேண்டும் என கேட்டு நியூராலஜிஸ்ட் ஒருவரின் முகவரி வாங்கினேன்

அன்று மாலையே டாக்டரை சந்திக்க அனுமதி கிடைத்தது. ஒரு மணி நேரம் ஆபீசில் பர்மிசன் போட்டு விட்டு கிளம்பினேன்

டாக்டர் கிருஷ்ணகுமார், நியூராலஜிஸ்ட் என்ற பெயர் பலகை வரவேற்றது

"உக்காருங்க மிஸ்டர் சங்கர்...என்ன ப்ராப்ளம்?" என டாக்டர் நேரே விசியத்துக்கு போக

"அடிக்கடி தலைவலி வருது டாக்டர்... நான் ஐ டாக்டர்கிட்ட பாத்தேன்... பவர் எதுவும் ப்ராப்ளம் இல்லைன்னு சொன்னார்" என அந்த ரிப்போர்ட்களை காட்டினேன்

"ம்... அடிக்கடினா...தினமும் இருக்கா... ஒத்தை தலைவலி மாதிரியா?"

"தினமும் இல்லை டாக்டர் வாரத்துல ரெண்டு மூணு தரம்... சில சமயம் ஒத்தை தலை வலி மாதிரி... சில சமயம் ரெண்டு பக்கமும்"

"ம்... மெடிசன் எதாச்சும் எடுக்கறீங்களா அதுக்கு?"

"சும்மா...தைலம்... ரெம்ப முடியாதப்ப சாரிடான் போடுவேன்..."

"ஐ சி... எவ்ளோ நாளா இப்படி இருக்கு?"

"கிட்டத்தட்ட ஆறு மாசமா?"

"ஒகே... ரெம்ப நேரம் கம்ப்யூட்டர்ல இருக்கற மாதிரி வேலையா?"

"இல்ல சார்... நான் ப்ரொடக்சன் மேனேஜர். பாப்ரிகேசன் இண்டஸ்ட்ரி. அதிகபட்சம் ஒன் ஆர் டூ அவர்ஸ் தான் கம்ப்யூட்டர்ல இருப்பேன் ஒரு நாளைக்கி"

"தட்ஸ் நாட் பாட்... ஞாபக மறதி இல்ல அடிக்கடி மயக்கம் மாதிரி இருக்கா"

"ம்... சில சமயம்... கோவம் எல்லாம் கூட அதிகமா இப்போ... என்னமோ அடிக்கடி சோர்வா... "என நான் கூறிக்கொண்டே போக

"ஒகே ஒகே... இப்ப சில டெஸ்ட்ஸ் மட்டும் இங்க பண்ணலாம்" என அவரிடம் இருந்த சில மெசின்களை கொண்டு ஏதோ பரிசோதனைகள் எல்லாம் செய்தார்

"என்ன ப்ராப்ளம் டாக்டர்?" என நான் பொறுமையின்றி கேட்க

"ம்... மேலோட்டமா எதுவும் சொல்ல முடியல... எதுக்கும் ஒரு CT ஸ்கேன் எடுத்துடுங்க. ஒரு வாரம் கழிச்சு வந்து என்னை பாருங்க" என்றார்

அங்கேயே ஸ்கேன் சென்ட்டர் இருக்க ஸ்கேன் எடுத்துவிட்டு கிளம்பினேன்

ஒண்ணும் பிரச்சனை இல்லையென்றால் எதற்கு CT எடுக்க சொல்வார். ஏதேனும் இருக்குமோ... நான் நினைத்தது போல் பிரைன் டயுமர் தானோ... கடவுளே... என்ன செய்வேன்?

நான் இன்டர்நெட்ல் பார்த்தது போல் எல்லா கேள்வியும் டாக்டர் கூட கேட்டாரே... கீத்து என்ன செய்ய போற நீ?

ஏதேதோ யோசனையில் இருக்க என் செல்பேசி அலறியது. வீட்டில் இருந்து தான் போன்

இப்போது பேசினால் அழுதுவிடுவேன் போல் மனநிலையில் இருந்ததால் பேசியை அணைத்து வைத்தேன்

வெகு நேரம் பூங்காவில் அமர்ந்து இருந்து விட்டு இருட்டிய பின் வீட்டுக்கு கிளம்பினேன்

***********************************************************

போர்டிகோவில் அம்மா அப்பா கீதா அனு கார்த்தி எல்லாரும் கவலையுடன் அமர்ந்து இருந்தனர். இப்போதே கவலைப்பட கற்று கொள்ளட்டும் என தோன்றியது எனக்கு

என்னை பார்த்ததும் "ஐ அப்பா வந்தாச்சு" என ஓடி வந்து என்னை கட்டி கொண்டாள் அனு. கண்களில் துளிர்க்க முயன்ற நீரை கட்டுப்படுத்தினேன்

"என்னப்பா என்ன ஆச்சு? நேரமாகும்னா போன் பண்ணிடுவியே?" என அம்மா பதட்டமாய் கேட்டாள்

"இல்லம்மா... கொஞ்சம் வேலை... பிஸில போன் பண்ண மறந்துட்டேன்" என்று சமாளித்தேன்

"கீதா போன் பண்ணி கூட எடுக்கலயாமே"

"ஆமாம்மா... போன் ஆபீஸ்ல வெச்சுட்டேன்... பாக்டரிகுள்ள இருந்தேன்... பாக்கல" என சரளமாய் பொய் சொன்னேன்

"சரிப்பா... போய் முகம் கழுவு... சாப்பிடலாம்... பிள்ளைகளும் சாப்டாம காத்துட்டு இருக்கு" என்றார் அப்பா

கீதா எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்

அனுவும் கார்த்தியும் பள்ளி கதைகளை கூறி கொண்டே இருக்க உண்டு முடித்தோம்

சற்று நேரத்தில் பிள்ளைகளை படுக்க அழைத்து சென்றனர் அப்பாவும் அம்மாவும்

நானும் அறையில் சென்று படுத்து கொண்டேன்

சற்று நேரம் கழித்து கீதாவின் காலடி ஓசை கேட்டும் நான் தூங்குவது போல் பாவனையுடன் கண் மூடி படுத்திருந்தேன். இன்று அவளிடம் அதிகம் பேசினால் என்னையும் அறியாமல் ஏதேனும் உளறி விடுவேனோ என பயமாய் இருந்தது

வந்தவள் என் மார்பில் முகம் வைத்து படுத்தாள். அதற்கு மேல் நடிக்க இயலாமல் ஆதரவாய் அவளை அணைத்து கொண்டேன்

சற்று நேரத்தில் அவள் விசும்பும் ஒலி கேட்க "ஏய்... என்னம்மா... என்ன ஆச்சு?"என நான் பதற

"இனிமே இப்படி போன் பண்ணாம இருக்காதீங்கப்பா... நான் போன் பண்ணியும் எடுக்கலைனதும்..." என பேச முடியாமல் விசும்பினாள்

"ஏய்... என்னடா இது? வேலைல முன்ன பின்ன நேரமாகறது சகஜம் தானே"

"ஆனா நீங்க எப்பவும் போன் பண்ணி சொல்லிடுவீங்க...ரெம்ப பயந்துட்டேன்பா" என அழுதாள்

எனக்கும் பாரம் கூடிப்போனது போல் தோன்றியது... ஒரு நாள் சொல்லாமல் நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததற்கு இப்படி துடிப்பவள் என்ன செய்வாளோ "ஐயோ" என மனம் அலறியது

மனதை திடப்படுத்தி கொண்டு "என்ன கீத்துமா இது? இவ்ளோ தைரியம் இல்லாம இருந்தா எப்படி?"

"எப்படிங்க தைரியமா இருக்க முடியும்? உங்களுக்கு என்ன ஆச்சோனு... உங்கள கண்ணுல பாக்கற வரை... உயிரே இல்லப்பா"

"கீதா... அப்படி ஒருவேள எனக்கு எதாச்சும் ஆய்ட்டா என்ன செய்வ?" என என்னையும் அறியாமல் வார்த்தைகளை விட்டேன்

ஒரு கணம் கூட யோசிக்காமல் "நானும் உங்ககிட்டயே வந்துடுவேன்" என அவள் கூற என் இயலாமையால் கோபம் வந்தது

அவளை உதறி நகர்த்திவிட்டு எழுந்து அமர்ந்தேன்

"என்ன ஆச்சு?" என கேட்டவளிடம்

"உனக்கென்ன பைத்தியமா?" என்றேன் கோபமாய்

"நான் என்ன செஞ்சேன்?"

"பின்ன நானும் உங்ககிட்டயே வந்துடுவேன்னு சொல்ற"

"அப்புறம்... நீங்க இல்லாம எனக்கு என்ன இருக்கு?"

"ஏன் அனு கார்த்தி அம்மா அப்பா எல்லாரும்... " என நான் முடிக்கும் முன்

"ப்ளீஸ்... இப்படி பேசாதீங்க... ப்ளீஸ்...கெஞ்சி கேக்கறேன் " என என் மார்பில் சாய்ந்து அழுதாள். அப்படியே அழுது ஓய்ந்து உறங்கினாள்

எனக்கு தான் இனி தூக்கமே கிடையாதே, கடைசி உறக்கம் வரை. கடவுளே, நான் என்ன செய்வேன்... கீதா கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன் என கத்தவேண்டும் போல் இருந்தது

வெறும் பேச்சையே தாங்காதவள் நிஜம் சுடும் போது என்ன செய்வாள் என மனம் பதறியது

***********************************************************

சிக்கனமாய் அழகாய் குடும்பம் நடத்துவதில் கீதாவிற்கு நிகர் அவளே. ஆனால் வரவு என்ன, சேமிப்பு என்ன என இது வரை எதுவும் கேட்டதில்லை என்னிடம்

அது வேறு என் மனதை உறுத்தியது. கணக்கு போட்டு பார்த்தேன்

வீடு சொந்த வீடு தான் வாடகை போன்ற பிரச்சனைகள் இல்லை

வேறு கடன்கள் கூட எதுவும் இல்லை. ஆனால் வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதி பிள்ளைகளின் பள்ளி கட்டணம் / அன்றாட செலவுகள் போக பெரிதாக சேமிப்பு எதுவும் இல்லை

இன்சூரன்ஸ் பணம் இரண்டு லட்சம் வந்தாலும் எத்தனை நாளைக்கி. பிள்ளைகளின் எதிர்கால செலவுகள். ஐயோ, கீதா ஏன் நிதர்சனத்தை புரிந்து கொள்ள மறுக்கிறாள் என அவள் மேல் கோபம் வந்தது

***********************************************************

மறுநாள் இரவு அவளிடம் இன்சூரன்ஸ் பற்றியும் பேங்க் பாஸ் புக் போன்றவற்றையும் காட்டி விளக்கினேன்

"இப்ப எதுக்கு இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க?"என கலக்கமாய் கேட்டவளிடம்

"இல்ல கீத்து... எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கணும்..."

"இவ்வளவு நாள் இல்லாம இப்ப ஏன்..." என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போனாள்

"கீதா ப்ளீஸ்... எல்லாத்தையும் எமோசனலா மட்டும் பாக்காம கொஞ்சம் பிராக்டிகலா யோசி" என நான் சற்று கடுமையாய் கூற நான் சற்றும் எதிர்பாராதவிதமாய் சட்டென என் சட்டை காலரை பற்றினாள் கீதா

"உண்மைய சொல்லுங்க... என்கிட்ட எதையோ மறைக்கறீங்க... உண்மைய சொல்லுங்க... " அவள் முகத்தில் அப்படி ஒரு தீவிரத்தை அதற்கு முன் நான் கண்டதில்லை

"இல்ல கீதா... நான்... " என நான் சாமாளிக்க

"இல்ல... என்னமோ இருக்கு... என் தலைல கை வெச்சு சொல்லுங்க...." என என் கையை எடுத்து தன் தலையில் வைத்தாள்

"கீதா என்ன பைத்தியகாரத்தனம் இது... விடு" என் நான் விலக முயல

"இப்ப நீங்க சொல்ல போறீங்களா இல்லையா?" என என் கையை இன்னும் இறுக பற்றினாள்

"கீத்து ப்ளீஸ்... விடு..."

"சொல்லலேனா நான் செத்துருவேன்" எனவும்

"இல்லைனாலும் நான் கொஞ்ச நாளுல செத்துருவேண்டி. என்ன செய்ய முடியும் உன்னால? சத்தியவானுக்கு போராடின சாவித்திரி மாதிரி போராட போறியா?" என்னால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகள் சிதறின

அடுத்த கணம் உணர்வற்று கீழே சரிந்தாள் கீதா

"கீதா.. கீதா... " என நான் கத்த அவளிடம் அசைவில்லை

கதவு தட்டும் ஓசை கேட்டது "என்ன சங்கர்? ஏன் சத்தம் போடற? என்னாப்பா ஆச்சு" அம்மாவின் பதட்டமான குரல் கேட்டது

"அம்மா... கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க" எனவும் அம்மா தண்ணி தம்ளருடன் உள்ளே வர அப்பா பின்னோடு வந்தார்

முகத்தில் நீர் பட உணர்வுக்கு வந்த கீதா கண்ணை திறந்து பார்த்தவள் அப்பா அம்மா இருப்பதை பார்த்து மௌனமானாள்

"என்னப்பா ஆச்சு? என்ன கீதா...என்ன செய்யுது?" என அம்மா பதற கீதா பேச திராணியின்றி விழிக்க

"என்னனு தெரியலம்மா... பேசிட்டு இருந்தா திடீர்னு கண்ணை இருட்டிட்டு வருதுன்னு..." என நான் சமாளித்தேன்

"இதுக்கு தான் இந்த விரதம் எல்லாம் வேண்டாம்னு சொல்றது... இப்படி ஒடம்ப கெடுத்துக்கற... " என அம்மா கீதாவிடம் கடிந்து கொண்டாள்

"சரி சாவித்திரி... காலைல பேசிக்கலாம்... ரெஸ்ட் எடுக்கட்டும்" என அப்பா அம்மாவை அழைத்து கொண்டு சென்றார்

அவர்கள் சென்றதும் நான் கதவை சாத்தினேன்

"கீத்து..." எங்கோ வெறித்த பார்வை

"கீத்து ப்ளீஸ்... என்னை பாரு...." என அவள் கன்னத்தில் தட்ட விழி விரித்து என்னை பார்த்தவள் என் மார்பில் முகம் புதைத்து அழுதாள்

"ப்ளீஸ் அழாத... சொன்னா கேளு" சற்று நேரம் அழுது ஓய்ந்தவள்

"ப்ளீஸ்பா... இதெல்லாம் சும்மா... சும்மா சொன்னேன்னு சொல்லுங்கப்பா"

"கீதா... இன்னும் எதுவும் என்னால நிச்சியமா சொல்ல முடியலடா"

"என்னப்பா சொல்றீங்க... எனக்கு ஒண்ணும் புரியல"

இனியும் மறைப்பதில் பயனில்லை என தோன்ற நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் கூறினேன்

அதன் பின் சற்று சமாதானம் ஆனவள் "இல்ல... நிச்சியம் அப்படி எதுவும் இருக்காது... " என தானே டாக்டர் போல் கூறினாள்

"என்னோட பிரார்த்தனையும் அதுதாம்மா"

"எப்ப மறுபடியும் டாக்டர்கிட்ட போகணும்?"

"அடுத்த திங்கள்"

"நானும் வர்றேன்"

"இல்லடா...நான்..."

"ப்ளீஸ்... நானும் வரேன்... " என்றாள் தீர்மானமாய்

***********************************************************

என்னிடம் "எதுவும் இருக்காது" என தைரியம் சொல்லும் கீதா நான் உறங்கியதாய் நினைத்து இரவெல்லாம் அழுவதும் சமாதானம் செய்ய வழி அறியாமல் நான் மௌனமாய் இருப்பதுமாய் அடுத்த ஒரு வாரமும் என் வாழ்வின் மிக நீண்ட ஒரு வாரம் ஆனது

அன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அம்மா அப்பாவிடம் ஆபிஸ் நண்பரின் வீட்டு விசேஷம் என பொய் உரைத்துவிட்டு இருவரும் டாக்டரை பார்க்க சென்றோம்

"வாங்க... ப்ளீஸ் சிட்...இவங்க உங்க மிசஸா?" என கீதாவை பார்த்து டாக்டர் கேட்க

"எஸ் டாக்டர்" என்றேன் நான்

"ஒகே"

"டாக்டர் ஸ்கேன் ரிசல்ட்ஸ்...? " என் குரலில் இருந்த நடுக்கம் அவருக்கு என் நிலையை உணர்த்தி இருக்க வேண்டும்

"நத்திங் டு வொர்ரி... " என டாக்டர் கூற மகிழ்ச்சியில் என் கண்களில் நீர் வழிந்தது... கீதா கட்டுப்படுத்த இயலாமல் அழுதாள்

"என்னாச்சு... ஏன் இப்ப ரெண்டு பேரும் அழறீங்க?"

"இல்ல டாக்டர்... இந்த சிம்டம்ஸ் எல்லாம் பாத்து பிரைன் டயுமரோனு... " என நான் தயங்க

"ஓ காட்... உங்க மனைவியையும் சேத்து பயப்படுத்திடீங்களா?" என டாக்டர் சிரித்து கொண்டே கேட்க

"இல்ல டாக்டர் இன்டர்நெட்ல கூட அப்படி தான்..."

"இன்னிக்கி படிச்சவங்க நெறைய பேரு பண்ற தப்பை தான் நீங்களும் செஞ்சு இருக்கீங்க மிஸ்டர் சங்கர். இன்டர்நெட் இஸ் அ பெஸ்ட் மீடியம் பார் இன்பர்மேசன் , ஐ அக்ரீ... ஆனா அது டாக்டர் இல்ல... "

"சாரி டாக்டர்..."

"இட்ஸ் ஆல்ரைட்... நீங்க பரவால்ல இன்டர்நெட்ல சிம்டம்ஸ் மட்டும் பாத்துட்டு என்கிட்ட வந்தீங்க... நெறைய பேரு அதுல போட்டு இருக்கற ட்ரீட்மென்ட் மெத்தட்ஸ் எல்லாம் ட்ரை பண்றாங்க... எங்களுக்கு வேற சஜசன் சொல்றாங்க" என டாக்டர் சிரித்தார்

"அது ரிலையபிள் இல்லையா டாக்டர்?" என நான் இன்னும் சந்தேகமாய் கேட்க

"மிஸ்டர் சங்கர்... இன்டர்நெட்ல யாரு வேணும்னாலும் எது வேணும்னாலும் போஸ்ட் பண்ணலாம்... அதுல நெறைய நல்ல விசியங்களும் ரெம்ப அரிய தகவல்களும் இருக்கு... ஆனா முழுசா தெரியாம நோய்களை பத்தி அவங்க நெனைக்கறதை எழுதரவங்களும் இருக்காங்க... நல்லதை மட்டும் எடுத்துட்டு வேண்டாததை விட்டுடணும்"

"தேங்க்ஸ் டாக்டர்... ஆனா எனக்கு ஏன் அடிக்கடி தலைவலி?"

"ஐ எம் கமிங் டு தட்... அது ஒரு சின்ன சைனஸ் இன்பெக்சன்... மெடிசின்ஸ் எழுதி தர்றேன் ஒன் மன்த்க்கு ... அதுலயே சரி ஆய்டணும்... இல்லேனா அப்புறம் வாங்க... ஒகே...ஆல் கிளியர்" என டாக்டர் சிரித்து கொண்டே கேட்க

"தேங்க்ஸ் டாக்டர்... தேங்க்ஸ் அ லாட்" என நான் எழுந்தேன்

வெளியே வந்ததும் பொது இடம் என்று கூட பாராமல் கீதாவை அணைத்து கொண்டேன்

அவளும் அசையாமல் நின்றாள். வழியில் சென்ற ஓரிருவர் எங்களை வித்தியாசமாய் பார்க்க நாங்கள் கவலையின்றி நின்றிருந்தோம்

"வா கீதா... எங்காச்சும் கொஞ்ச தூரம் டிரைவ் போலாம்" என சிறு பிள்ளை போல் அவள் கைகளை பற்றி கொண்டு ஓடினேன் காரை நோக்கி

காரில் சென்று அமர்ந்ததும் "சொல்லு கீத்து எங்க போலாம்..?"

"ம்... மொதல்ல கோவில் போலாம்"

"ஏய்..." என நான் முறைக்க

"ப்ளீஸ்பா... போன உயிர் திரும்பி கெடச்ச மாதிரி இருக்கு... இன்னும் எவ்ளோ வேண்டுதல் விரதம் எல்லாம் இருக்கு தெரியுமா" என மகிழ்வுடன் கீதா கூற நான் அவளை அணைத்து கொண்டேன்

என்னை பொறுத்த வரை இது எனக்கு மறுஜென்மம் மனதளவில்... மனதிற்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன்...

இனி இயந்திரம் போல் வாழாமல் வாழ்வை அனுபவித்து வாழணும் என. அதில் முதல் தீர்மானம் இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் ஐந்து மணிக்கு மேல் ஆபிசில் இருக்க போவதில்லை... ஞாயிறு முழுவதும் குடும்பத்துடன் மட்டும் என்பதே

வாழ்வின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்த கடவுள் ஆடிய திருவிளையாடலாகவே எனக்கு இது தோன்றியது....


....

Wednesday, September 22, 2010

அதே கண்கள்... (பகுதி 13)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

கணேஷ் சென்றதும் கதவை அடைத்த அருண் பெட்டியில் இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான்

பின் சுமியும் அவனும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்தான். வாக்மேன் எடுத்து காதில் பொருத்தி சுமியும் அவனும் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் வசனங்களை ரசித்தான்

அதற்குள் அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்....

தன் கையில் இருந்த சுமேதாவின் புகைப்படத்துடன் ஏதோ நேரில் உள்ளவர்களுடன் பேசுவது போல் பேசினான்

"சுமி... உன் கசின் கணேஷ் என்ன சொன்னார்னு கேட்டியா? கேக்க ஆள் இல்லாம போய்டுவனு சொன்னார்... இப்ப மட்டும் எனக்கு கேக்க யாரு இருக்கா சுமி. உனக்காக என்னை வந்து மிரட்ட கணேஷ் மாதிரி எனக்கு யாராச்சும் இருந்திருந்தா உங்க அம்மா அப்பா கிட்ட வந்து பொண்ணு கேக்க வெச்சிருப்பேன் சுமி... இப்ப என்ன செய்யட்டும்?" என்றவன் ஏதோ அவளின் பதிலுக்கு காத்திருப்பது போல் சற்று நேரம் மௌனமாய் இருந்தான்

மறுபடியும் பேசினான் "சுமி... போலீஸ்கிட்ட போவேன்னு சொன்னதுக்கு பயந்துட்டதா அவர் நெனச்சுருக்கலாம். ஆனா நீ ரெம்ப அழுதேன்னு அவர் சொன்னதை என்னால தாங்க முடியல சுமி. அதான் வேண்டான்னு விட்டுட்டேன். நீ வேணும்னு நான் நெனச்சது உன்னோட சேந்து சந்தோசமா வாழத்தானே... ஆனா நீ அழறியாமே... வேண்டாம் சுமி... எதுவும் வேண்டாம்..." என்றவன் ஏதோ தீர்மானித்தவன் போல் எழுந்தான்

சற்று நேரம் ஜன்னல் கம்பியை பற்றி கொண்டு நின்றவன் மீண்டும் வந்து பெற்றவர்களின் புகைப்படத்தை எடுத்தான்

"அம்மா அப்பா... நானும் உங்கிட்ட வந்துடறேன்... ஆனா இன்னும் கொஞ்ச நாள்... மூணு மாசம்... சுமிக்கு கல்யாணமான அடுத்த நாள் நான் உங்ககிட்ட வந்துடறேன். அதுவரைக்கும் அவளுக்கு தெரியாம எந்த தொந்தரவும் தராம சும்மா அவள கண்ணால பாத்தா போதும்" என்றான்

______________________________

அதன் பின் அவன் சுமி எங்கே சென்றாலும் அவள் அறியாமல் பின் தொடர்ந்தான். ஒரு வார்த்தை கூட பேச முயலவில்லை

வெறுமனே அவளை பார்த்து கொண்டு இருப்பான்

அவள் வீட்டுக்கு சென்றதும் தானும் சென்று வீட்டில் அடைந்து கொள்வான்

அம்மா அப்பா விட்டு சென்ற பணம் அவனுக்கு அன்றாட தேவைகளுக்கு தாராளமாய் இருந்தது

தனக்கு பின் தன் பணம் மற்றும் பாங்கில் அம்மாவின் சில நகைகள் ஊரில் உள்ள வீடு எல்லாமும் கோவையில் பிரபலமான ஒரு அநாதை விடுதிக்கு சேர வேண்டுமென ஒரு கடிதம் எழுதி தன் பெட்டியில் பத்திரப்படுத்தினான்

தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், தனியே இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை அதனால் மரணத்தை தேடி போகிறேன் என ஒரு கடிதம் எழுதி வைத்து கொண்டான் தயாராய்

அப்படி ஒரு கடிதத்தை எழுதியதும் ஏனோ சுமியின் குரலை கேட்க வேண்டும் போல் கட்டுப்படுத்த முடியாத ஆசை எழ அவளுக்கு பொது தொலைபேசியில் இருந்து அழைத்தான்

"ஹலோ" என்றாள் சுமி உற்சாகமாய்

தான் என்று தெரிந்தால் இந்த உற்சாகம் வாடி விடுமே என அமைதியாய் இருந்தான்

சற்று நேரம் ஹலோ ஹலோ என்றவள் துண்டித்து விட்டாள்

அதற்கு பின் போன் செய்வதை விட்டுவிட்டான்

அன்றும் வழக்கம் போல் சுமேதவை பின் தொடர்ந்து சென்றவன் அவள் கிராஸ் கட் ரோடு அருகில் ஒரு கடையில் நின்று கொண்டு இருப்பதை எதிர்புறம் ஒரு நடைபாதை கடை அருகில் நின்று பார்த்து கொண்டு இருந்தான்

சட்டென சுமேதா தன்னை கண்டுவிட அங்கு இருந்து விலக வேண்டுமென அறிவு உணர்த்திய போதும் கால்கள் நகர மறுத்தன அவனுக்கு

அவள் ஐந்தடி தொலைவில் வந்தவுடன் அவள் முகத்தில் இருந்த பயம் அவனை வேதனை படுத்த அது தான் விலகி விட வேண்டும் என்ற உணர்வை தர அந்த இடத்தை விட்டு அகன்றான்

அவள் தன்னை கண்டதும் பயம் கொண்டது அவனுக்கு வேதனை அளித்தது. அதன் பின் அவளை வெகு தொலைவில் இருந்தே பார்த்தான்

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் பெற்றோரின் புகைப்படத்தையும் சுமேதாவின் புகைப்படத்தையும் அவர்கள் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் பேச்சுகளையும் கேட்டு கொண்டே இருந்தான்
___________________________

அன்று சுமேதாவின் திருமண நாள். முடிந்த வரை தன் தோற்றத்தை தாடி மீசை என மாற்றி கொண்டு ஏதோ வயதானவன் போன்ற தோற்றத்துடன் ஒரு மூலையில் நின்று அவளை மணகோலத்தில் ரசித்தான் அருண்

ஆனால் தாலி கட்டும் நேரம் அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகும் வைபவத்தை காணும் மனபலம் இன்றி அங்கிருந்து வெளியேறினான்

அதற்கு மறுநாள் உயிரை போக்கி கொள்ளும் எண்ணத்துடன் வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைத்து விட்டு புகைப்படங்கள் ஆடியோ காசெட் எல்லாவற்றையும் எரித்தான்

போலீஸ் தன் உடலை கை பற்றும் போது அவர்களுக்கு சுமேதவை பற்றி எந்த தடயமும் சிக்க கூடாதென கவனமாய் செய்தான்

கடைசியாய் திட்டத்தை வகுத்தான். தன் பெற்றோரின் கல்லறைக்கு சென்று விட்டு வந்து இரவு வரை வெளியே சுற்றி விட்டு எதாவது ஒரு பூங்காவில் இருந்து பின் தூக்கமாதிரைகளை உண்பதென முடிவு செய்து முன்பே எழுதிய கடிதம் எல்லாம் பத்திரமாய் எடுத்து வைத்தான்

காலை பெற்றோரின் கல்லறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்த போது சாய்பாபா கோவில் சிக்னலில் சுமேதாவும் அவள் கணவனும் காரில் இருப்பதை பார்த்தான்

சாகும் போது கடைசி ஆசையாய் இன்னும் சற்று நேரம் அவளை பார்க்க மனம் தவித்தது

அவள் அறியாமல் பின் தொடர்ந்தான். அவர்கள் கார் கொங்குநாடு கல்லூரி பக்கம் நிற்க அருண் எதிரில் இருந்த கடையில் ஒதுங்கினான்

பின் சூர்யாவின் வீடு வரை பின் தொடர்ந்து அங்கு இருந்த ஒரு சிறிய பூங்காவில் மறைந்து கொண்டான்

சில மணி நேரங்களுக்கு பின் அவர்கள் மீண்டும் வெளிய செல்ல அவர்களை பின் தொடர்ந்தவன் ஊட்டியில் அவர்கள் தங்கவந்த ஓட்டல் வரை வந்தான்

வந்தவன் ஊட்டியில் இருக்கும் வரை அவளை பார்த்து இருந்து விட்டு பின் சாவதென முடிவை மாற்றினான்

அவர்கள் உள்ளே சென்று பதிமூணாம் எண் அறை என வரவேற்பாளர் சொல்வதை கேட்டவன் சுமியும் சூர்யாவும் உள்ளே சென்றதும் தானும் ஹோட்டல் உள்ளே சென்றான்

"எனக்கு ஒரு ரூம் வேணும்" என்றான் அருண்

"இல்ல சார்... இப்ப தான் கடைசியா இருந்த ரூம் ஒரு கபில்க்கு குடுத்தேன்"

"ப்ளீஸ்... எவ்வளவுன்னாலும் ஒகே... ப்ளீஸ்"

"இல்ல சார்... இருந்தா தர மாட்டேனா... ஒண்ணு பண்ணுங்க நீங்க நாளைக்கி மதியம் வாங்க... ஒரு ரூம் காலி ஆகும்" என கூற

"ஒகே... தேங்க்ஸ்" என வெளியே வந்தவன் அங்கிருந்து செல்ல மனமின்றி சற்று நேரம் நின்று விட்டு பின் ஏதோ பார்க்கில் சென்று உறங்கினான்

மறுநாள் மதியம் சொன்னது போல் அந்த ஹோட்டலுக்கு வந்தான் அருண். அவனுக்கு பதினாலாம் எண் அறை கிடைக்க மிகவும் மகிழ்ந்தான் சுமி பதிமூணாம் எண் அறை என்பது தெரிந்ததால்

அவன் அறைக்கு சென்று உடை மாற்ற எண்ணிய நொடி அறை கதவு படபடவென தட்டப்பட திறந்தவன் அந்த போலீஸ் உடையில் ஒருவர் நிற்பதை பார்த்து அதிர்ந்தான்

____________________________________

"இதான் சார் நடந்தது" என அருண் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான்

"நீ சொல்றது உண்மைன்னு எப்படி நம்பறது?" என இன்ஸ்பெக்டர் இன்னும் சந்தேகமாய் பார்க்க

"சார்... இங்க பாருங்க சார்... என்னோட பாக்கெட்ல தூக்க மாத்திரை... அந்த என்னோட பேக் இருக்கே அதை எடுத்து பாருங்க... நான் தற்கொலை செய்துக்க போறேன்னு எழுதி வெச்ச லெட்டர் எல்லாம் இருக்கு" என அருண் கூற எல்லாவற்றையும் பார்த்த இன்ஸ்பெக்டர் இன்னும் கூட சந்தேகம் விலகாமல் பார்த்தார்

"இது எல்லாம் சரி தான்... ஒருவேளை நீ சுமேதாவை பழி வாங்கிட்டு சாகற முடிவுல இதை எல்லாம் வெச்சுருக்கயோனு எனக்கு சந்தேகமா இருக்கு... நீயே சொன்னியே நெறைய டிராமா ப்ளாக்மெயில் எல்லாம் செஞ்சதா"

"சார்... என்னை நம்புங்க சார்... நான் உண்மைய தான் சொல்றேன்"

"ஆனா..." என இன்ஸ்பெக்டர் ஏதோ கூறும் முன்

"அவன் உண்மை தான் சொல்றான் சார்" என ஒரு குரல் கேட்க இருவரும் திரும்பி பார்க்க... அங்கே...

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்
(தொடரும்...)

...

Monday, September 20, 2010

அதே கண்கள்... (பகுதி 12)இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

இப்படியே சில மாதங்கள் ஓடின. கல்லூரி இறுதி தேர்வுகளும் முடிந்தது. அப்போது தான் மிகவும் தவித்து போனான் அருண்

கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்த வரை திருட்டுத்தனமாகவேனும் சுமேதாவை கண்டு ஆறுதல் கொண்டிருந்தவன் கல்லூரி முடிந்த பின் அவளை காண முடியாமல் சோர்ந்து போனான்

அந்த சமயத்தில் இடியாய் வந்த ஒரு செய்தி அவனை புரட்டி போட்டது

அருண் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளும் சீட்டு கட்டு வீடாய் சரிந்தது அந்த செய்தியை கேட்ட நொடி...

எதற்கும் கலங்காதவன் வாய் விட்டு கதறினான். தன் பெற்றவர்களை இழந்த போது கூட இப்படி கலங்கவில்லை

பதிமூன்று வயதில் ஒரு விபத்தில் பெற்றவர்களை இழந்து மாமா வீட்டில் தஞ்சம் புகுந்தான்

என்னதான் அத்தையும் மாமாவும் அருமையாய் பார்த்து கொண்டாலும் தங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் உரிமையாய் கோபித்து கொள்வதும் தான் தவறே செய்தாலும் தட்டி கேட்காததும் அவனை விலக்கி வைத்தது

ஒன்பதாம் வகுப்பு வந்ததும் பிடிவாதம் பிடித்து விடுதியில் சேர்ந்தான். அன்று முதல் தனிமை வாழ்க்கைக்கு தன்னை பழக்கி கொண்டான்

சுமேதவை காணும் வரை தான் ஒரு அனாதை என்ற எண்ணமே அவன் மனதில் இருந்தது. அவளை கண்டதும் இவள் தான் இனி தனக்கு எல்லாம் என மனதில் பதிந்து கொண்டான்

தனக்கு மனைவியாய் மட்டுமின்றி தன் அன்னை விட்டு சென்ற இடத்தையும் நிரப்பி தன் அர்த்தமற்ற வாழ்கையை முழுமைப்படுத்துவாள் என நம்பினான்

இதையெல்லாம் அவளிடம் கூற அவனை ஏதோ தடுத்தது. அனுதாபம் தேட பொய் சொல்கிறேன் என்று கூட நினைப்பாளோ என அச்சமாய் இருந்தது

என்றேனும் ஒரு நாள் சுமேதா தன்னை புரிந்து கொள்வாள். அவள் மீது தான் கொண்ட காதலை உணர்ந்து தன் சிறிய தவறுகளை மன்னிப்பாள் என அவன் கட்டி இருந்த மனக்கோட்டை நண்பன் ஒருவன் மூலம் சுமேதாவிற்கு திருமணம் முடிவான செய்தி வந்த போது சுக்கு நூறாய் உடைந்தது

அப்போது தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தான்

_______________________________________

சுமேதா கிட்டத்தட்ட அருணை மறந்தே போனாள்

அன்று கல்லூரியில் எல்லோர் முன்னிலையிலும் அவனை அடித்த பின் ஓரிருமுறை தவிர அவள் கண்ணில் கூட அவன் படவில்லை என்பதால் நிம்மதியானாள்

அதற்குள் இறுதி தேர்வுகளும் அருகில் வர அதில் கவனம் செலுத்தியவள் அருணை மறந்தே போனாள் எனலாம்

தேர்வுகள் முடிந்து இரண்டாவது வாரம் சூர்யா அவளை பெண் பார்க்க வந்தான். முதலில் இப்போது திருமணம் வேண்டாம் இப்போது தானே தேர்வு முடிந்தது என்றவள் சூர்யாவின் புகைப்படத்தை பார்த்ததும் மனம் மாறினாள்

முதலில் போட்டோவை காட்டி அவளுக்கு பிடித்து இருக்கிறது என அறிந்த பின்னே அவள் பெற்றோர் சூர்யாவின் வீட்டினரை அழைத்து இருந்தனர்

நேரில் பார்க்க இன்னும் கம்பீரமான ஆண்மகனாய் இருந்தான் சூர்யா. வீட்டிற்கு ஒரே பிள்ளை. நல்ல படிப்பு, பண்பு, அந்தஸ்து, வேலை, நல்ல குடும்பம் எல்லாம் தீர விசாரித்த பின்பே பெண் பார்க்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது

முதல் பார்வையிலேயே சுமேதாவின் வீட்டில் எல்லாருக்கும் சூர்யாவை பிடித்து போனது. அதே போல் தான் சுமேதவையும் அவர்கள் எல்லோருக்கும் பிடித்து போனது, முக்கியமாக சூர்யாவிற்கு

சூர்யாவின் அன்னை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். திருமணமே வேண்டாமென கூறி வந்த பிள்ளை சுமேதாவின் புகைப்படத்தை பார்த்ததுமே சம்மதம் சொன்னதில் மிகவும் மகிழ்ந்தார்

வீணான ஆடம்பரம் விரும்பாத இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் பிடித்து போன பின் காலம் தாழ்த்தல் எதற்கென அந்த பெண் பார்க்கும் வைபவத்தையே நிச்சியதார்த்த விழவாக்கினர்

இதை யூகித்தோ என்னமோ சூர்யாவின் அன்னை சூர்யா சுமேதா இருவருக்கும் "எஸ்" என்ற எழுத்தை கொண்ட மோதிரங்களை வாங்கி இருந்தார்... சுமேதாவின் விரல் அளவு தெரியாததால் அவளுக்கு அட்ஜஸ்டபள் வகை மோதிரம் என எல்லாம் அழகாக திட்டமிட்டு செய்து இருந்தார்

சூர்யா சுமேதாவின் பட்டு விரல்களில்  மோதிரம் அணிவிக்க அவனின் பார்வையின் ஆழத்தை தாங்கமாட்டாமல் தலைகுனிந்தாள். தானும் அவன் விரலில் மோதிரம் அணிவித்தாள்

அதன் பின் சுமேதாவிற்கு உலகமே மறந்து போனது. எப்போதும் சூர்யாவுடன் செல்போன் பேச்சுகளும் அவனுடன் தான் வாழப்போகும் அழகிய வாழ்வை பற்றிய கற்பனைகளுமாகவே பொழுது கழிந்தது

அன்று நிச்சியம் முடிந்த ஐந்தாவது நாள். அவள் செல்போன் ஏனோ காலை முதலே வேலை நிறுத்தம் செய்ய அதை சரி செய்து வரும்படி தன் அண்ணனிடம் கொடுத்தாள்

"ஒரு நாளைக்கி இருபத்திநாலு மணிநேரமும் அதை வேலை வாங்கினா அது என்ன செய்யும் பாவம்... அதான் இன்னிக்கி ஸ்டரைக் பண்ணுது போல... சரி விடு சுமி... இன்னிக்கி ஒரு நாள் சூர்யா நிம்மதியா இருக்கட்டும்" என தங்கையை சீண்டினான் சுரேஷ்

"என்னண்ணா நீ? போ... " என தங்கை முகம் சுருங்க, தாங்கமாட்டாதவனாய்

"ஒகே ஒகே... சும்மா வம்புக்கு சொன்னேன் சுமி... கண்டிப்பா சரி பண்ணிட்டு வரேன்... இன்னிக்கி வேணும்னா என்னோட போன் யூஸ் பண்ணிக்கறையா" என சுரேஷ்  அன்புடன் தங்கையை பார்க்க

"இல்லண்ணா வேண்டாம்... உனக்கு அபீசியல் கால்ஸ் எல்லாம் வரும் இதுல... ஒரு நாள் தானே... இட்ஸ் ஒகே" எனவும்

"சரிடா... நான் கெளம்பறேன். அம்மா அப்பா கோவில் போய்ட்டாங்க இல்ல... கதவை சாத்திக்கோ... பெல் அடிச்சா பாத்துட்டு தெற" என சுரேஷ் எச்சரிக்க

"ஐயோ...அண்ணா... எனக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்... நீ இன்னும் என்னை மூணு வயசு கொழந்தை மாதிரி ட்ரீட் பண்ற" என பெருமையாய் சலித்துகொள்ள

"என் சுமி எனக்கு எப்பவும் கொழந்தை தான்.... ஒகேடா பாய்" என சுரேஷ் கிளம்ப கதவை சாத்திவிட்டு உள்ளே வர அதே நேரம் வீட்டு தொலைபேசி அலறியது

சூர்யா தான் செல்போனுக்கு முயற்சித்துவிட்டு இதற்கு அழைக்கிரானென தீர்மானமாய் விரைந்து தொலைபேசியை எடுத்த சுமேதா அதே வேகத்தில் "சூர்யா... செல்போன்க்கு ட்ரை பண்ணி பாத்துட்டு இதுக்கு கூப்பிடறீங்க கரெக்டா... எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா உங்க சுமி" என காதல் வழிய பேச எதிர்முனையில் பதில் வராமல் போக

"ஹலோ... ஹலோ...சூர்யா..." என தவிப்பாய் அழைக்க

அவளின் அந்த தவிப்பு எதிர்முனையில் இருந்தவனை கொன்று குழியில் போட்டது. அது வேறு யாருமல்ல, அருண் தான்

தனக்காக இருக்க வேண்டிய இந்த தவிப்பு இன்று வேறு ஒருவனுக்காக என்பதை அவனால் தாங்க இயலவில்லை

அதிலும் "உங்க சுமி" என அவள் கூறியது அருண் மனதை குத்தி கிழித்தது. எத்தனை நாட்கள் அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை இது போல் வராதா என ஏங்கி இருப்பேன் என தவித்தான்

சற்று நேரம் தான் சூர்யா போல் பேசி இன்னும் கொஞ்சம் அவளின் அன்பு வழியும் குரலை கேட்க வேண்டும் போல் மனம் துடித்தது

அடுத்த கணம் அந்த யோசனையை உதறினான். ஒரு தரம் விளையாட்டாய் சொன்ன பொய் இன்னும் கொன்று கொண்டு இருக்கிறது. மீண்டும் அதே தவறை செய்ய தைரியம் வரவில்லை

வெகு நேரம் எதிர்முனையில் பதில் வராமல் போக சுமேதாவிற்கு குழப்பம் ஆனது. ஒருவேளை சூர்யா வேண்டுமென்றே தவிக்கவிடுகிறாரா இல்லை வேறு யாரேனும் போன் செய்து தான் உளறி விட்டோமா என தடுமாறினாள்

"ஹலோ... யாருங்க லைன்ல?" என சாதாரண குரலில் பேச சற்று முன் அவள் குரலில் இருந்த அந்த குழைவும் காதலும் இல்லாததை உணர்ந்தான் அருண்

அது சூர்யாவிற்கு மட்டுமே சொந்தமோ என அந்த முகமறியா ஆணின் மீது கோபம் கொப்பளித்தது

இன்னும் பேசுவது தானென தெரிந்தால் இந்த சாதாரண குரலில் கூட கடுமை ஏறி விடும் என்பதை நினைக்க வேதனையில் கண்களில் நீர் துளிர்த்தது

ஆனால் வேறு வழியில்லை பேசியே ஆக வேண்டும். இனியும் தாமதித்தால் சுமி என்னை விட்டு வர முடியாத தூரத்திற்கு சென்று விடுவாள் என உணர்ந்தவன் "ஹலோ சுமி" என்றான்

சுமேதா குரலை கேட்டதுமே அருண் என்பதை அறிந்து கொண்டாள். பலநாள் பேசாத போதும் அவன் குரல் மற்ற எல்லோரின் குரலில் இருந்து மாறுபட்டு ஒரிருமுறை பேசியவர்களே அடையாளம் காண கூடிய தனித்தன்மை வாய்ந்த குரல் என்பதால் சுமேதா அருண் என்பதை அறிந்து கொண்டாள்

கோபம் வந்த போதும் அதனை அடக்கியவள் "சொல்லு அருண்" என்றாள் சாதாரணமாய்

இதை எதிர்பாராத அருண் அவள் தன்னை திருமணம் செய்ய சம்மதித்ததர்க்கு இணையாய் மகிழ்ந்தான்

"சுமி... என்னோட வாய்ஸ்... எப்படி நீ... கேட்டதும்" என உணர்ச்சி குவியலாய் தடுமாற ஒளிந்திருந்த கோபம் முன்னே வந்தது சுமேதாவிற்கு

"இங்க பாரு அருண்... உன்னோட கதை கேக்க எனக்கு நேரமில்ல... எதுக்கு போன் பண்ணின...அதை சொல்லு..." என கடுமையாய் பேச முகம் வாடினான் அருண்

"சுமி...உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்குனு கேள்விபட்டேன் உண்மையா?" என இன்னும் நம்ப முடியாமல் கேட்டான்

"ஆமா... உண்மை தான்"

"சுமி... என்ன சுமி இப்படி சொல்ற? நான் உன்மேல உயிரையே வெச்சுருக்கேன்னு உனக்கு தெரியாதா? என்கிட்ட இல்லாதது அந்த சூர்யாகிட்ட என்ன இருக்கு?" என கோபமும் வருத்தமுமாய் கேட்க

"சட் அப்... அவர் பேரை சொல்ற தகுதி கூட உனக்கில்ல... போனை வெய்யி"

"சுமி ப்ளீஸ் நான் சொல்றத கேளு"

"முடியாது"

"சுமி... அப்புறம் நீ ரெம்ப வருத்தப்பட வேண்டி இருக்கும்" என்றான் குரலில் கடுமை ஏற்ற முயன்று

அவள் பதில் கூறாமல் தொலைபேசியை வைத்தாள். கோபத்தில் முகம் சிவந்தது சுமேதாவிற்கு

மறுபடியும் தொலைபேசி அலற அடித்து ஓய்ந்தது

மறுபடியும் அலற ஒரு வேளை சூர்யாவாக இருந்தால் என மனம் கேளாமல் எடுத்து "ஹலோ" என்றாள் சாதாரணமாய்

"சுமி... போன் வெச்சுடாதே... அப்புறம் காலம் பூரா நீ அழ வேண்டி இருக்கும்... உன்னோட சூர்யா உனக்கு கெடைக்க மாட்டார்" என எங்கு தொட்டால் வலிக்குமோ அங்கு தொட்டான் அருண்

"அருண் ப்ளீஸ்... வேண்டாம்...அவருக்கு எதாச்சும் ஆச்சுன்னா... அப்புறம்... அப்புறம் நான்... "என சுமேதா விசும்ப அவள் அழுவதை பொறுக்க முடியாமல் அதே சமயம் இளக்கம் காட்டினால் போனை வைத்துவிடுவாளென தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டான்

"அழுது என்னை இளக வெக்கலாம்னு தப்பு கணக்கு போடாதே. அந்த காலம் எல்லாம் முடிஞ்சுது. ஒழுங்கா நான் சொல்றதை குறுக்க பேசாம கேளு"

"...." எதிர்முனையில் பதில் வராமல் போக

"ஹலோ... லைன்ல இருக்கியா இல்லையா?" என அதட்டலாய் கேட்க

"ம்... " என்றாள் சுமேதா அழுகையை அடக்க முயன்றபடி

"இங்க பாரு... மூணு நாள் டைம் தர்றேன்... அதுக்குள்ள என்னை தேடி நீ வரணும்... என்னை கல்யாணம் பண்ணிக்கணும்... இல்லேனா அனிதாவை ஏமாத்தறதுக்குன்னு நாம போட்ட டிராமா அப்போ நாம லவ்வர்ஸ் மாதிரி பேசினதெல்லாம் ஆடியோ ரெகார்ட் பண்ணி வெச்சு இருக்கேன். அப்புறம் போட்டோஸ் கூட இருக்கு நாம சேந்து க்ளோசா இருக்கற மாதிரி ... எல்லாத்தையும் உன் கல்யாணதன்னைக்கி கொண்டு வந்து குடும்ப மானத்த வாங்கிடுவேன். அது மட்டுமில்ல... சூர்யாவும் உனக்கு கெடைக்க மாட்டான். அவன் மானமும் சேந்து தான் போகும்... " என பேசிக்கொண்டே போனவனை இடைமறித்தாள்

"அருண் ப்ளீஸ்... உன்னை நம்பி உனக்கு உதவின்னு செஞ்சதுக்கு இது தான் நீ செய்யற கை மாறா?" என விசும்ப இதற்கு மேலும் பேசினால் தன் பலவீனம் வெளிபட்டுவிடுமென

"நான் வெக்கறேன்... மூணு நாள் டைம் மறந்துடாதே" என அவள் பதிலை எதிர்பாராமல் துண்டித்தான்

போன் வெச்சதும் அவன் மேலேயே கோபம் பொங்கியது. இந்த வாய் தானே பேசி சுமிய அழ வெச்சது என ஓங்கி தன்னை தானே அடித்து கொண்டான்

அடுத்த வந்த நாட்கள் நத்தையாய் நகர்ந்தது அருணுக்கு. சுமேதாவிடம் பேச துடித்த இதயத்தை அடக்கினான். பொறு இன்னும் இரு நாட்கள் மட்டுமே... அப்புறம் உனக்கே உனக்காய் அவள் என சமாதானம் செய்து கொண்டான்
__________________________________

அடுத்த நாள் மாலை நான்கு மணி. வீட்டின் கதவு தட்டப்பட "இந்த நேரத்துல யாரு?" என நினைத்துகொண்டே "ஒரு வேளை சுமியா" என நினைத்தவன் முகம் மலர அடுத்த கணம் கதவை திறந்தான்

அங்கே நின்றிருந்தவனை இதற்கு முன் பார்த்தது போல் இல்லை

"யார் நீங்க? என்ன வேணும்?"

வந்தவன் பதில் கூறாமல் அருணை அளவெடுப்பது போல் பார்த்தான்

"ஹலோ... யார் சார் நீங்க?" என மறுபடியும் கேட்க

"கொஞ்சம் பேசணும்... உள்ள வரலாமா?"

"நீங்க....?" என தயங்க

"சுமிய பத்தி பேசணும்... உள்ள வரலாமா இல்ல போகட்டுமா?" என கோபமாய் கேட்க

சுமி என்றதும் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல் வழி விட்டான்

வந்தவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தி தாளிட்டான்

"கதவை....ஏன்?" என அருண் தடுக்க முயல

"அதான் பேசணும்னு சொன்னனே" என கடுமையாய் கூற எதுவும் பேசாமல் அமர்ந்தான் அருண்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை

அருண் இவன் யாராய் இருக்கும் என மண்டையை உடைத்து கொண்டான்

ஒரு வேளை இவன் தான் மாப்பிள்ளையோ, சுமி கட்சிக்காரன் காலில் விழுவதே மேல் என சொல்லி விட்டாளோ... ச்சே ச்சே இருக்காது... இவன் சுமிக்கு பொருத்தமானவன் அல்ல... இவனிடம் மயங்கி என்னை ஒதுக்கும் அளவுக்கு தோன்றவில்லை என தனக்குள் பேசிக்கொண்டான்

"என் பேரு கணேஷ்" என வந்தவன் தான் துவங்கினான்

இவன் சூர்யா இல்லையா என ஏனோ மனம் ஏமாற்றம் ஆனது அருணுக்கு. இவனென்றால் நீ சுமிக்கு பொருத்தமில்லை என வாதாட நினைத்தானோ என்னமோ, முகம் வாடியது

"நான் சுமியோட கசின்" என அவனே பேசிக்கொண்டு இருந்தான்

"நான் எதுக்கு வந்து இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்" என்று மரியாதையோடு பேசினான்

"சொல்லுங்க" என்றான் அருண்

"நீங்க சுமிய மெரட்டினதா சொன்னா அது உண்மையா?"

"என் சுமி பொய் சொல்ல மாட்டா" என "என்" என்பதற்கு அழுத்தம் கொடுத்தான் அருண். அதை கணேஷ் கவனிக்க தவறவில்லை

"சந்தோஷம்... ஆனா அவ உங்க சுமி இல்ல... சூர்யாவுக்கு நிச்சியம் செய்யப்பட்ட சுமி"

"இல்ல... அவள மொதல்ல விரும்பினது நான்"

"கரெக்டா சொன்னீங்க... நீங்க மட்டும் தான் விரும்பினீங்க... சுமி மனசுல நீங்க இல்ல"

"நோ... நோ ... " என கத்திய அருண் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்

"அருண்... சொல்றதை கேளுங்க... உங்க உணர்வுகள் எனக்கு புரியுது... எனக்கு காலேஜ் நாட்கள்ல ஒரு காதல் இருந்தது... அதுல தோத்தும் போனேன்..." என்றவனை கனிவுடன் பார்த்தான் அருண்

"அப்படினா இந்த கஷ்டம் உங்களுக்கு புரியுதல்ல. நீங்களே ஏன் ஹெல்ப் பண்ண கூடாது...நாங்க சேரரதுக்கு" என சிறுபிள்ளை போல் கேட்டான்

"என்ன புரியாம பேசறீங்க அருண்? சுமியும் உங்களை லவ் பண்ற மாதிரி இருந்தா யாரை எதுத்து வேணும்னாலும் நான் ஹெல்ப் பண்ண தயார். ஆனா அவளுக்கு விருப்பம் இல்லைங்கரப்ப என்ன செய்ய?"

"எனக்கு அதை பத்தி கவலை இல்ல... எனக்கு அவ வேணும்"

"அருண்... உனக்கென்ன பைத்தியமா?" என ஒருமைக்கு தாவினான் கணேஷ்

"எஸ்... சுமி மேல பைத்தியம்"

"அருண்... உனக்கு தேவை கல்யாணம் இல்ல... நல்ல ட்ரீட்மென்ட்... ரியலி யு நீட் ஹெல்ப்"

"தேவை இல்ல"

"சுமிய கொழந்தைல இருந்த பாக்கறவன் நான்... அவ இவ்ளோ அழுது ஒரு நாள் கூட நான் பாத்ததில்ல... நீ எல்லாம்... ச்சே... இங்க பாரு ஒழுங்கா அந்த ஆடியோ கசெட்ஸ் போட்டோஸ் எல்லாம் குடு... இல்லைனா நான் போலீஸ்கிட்ட போவேன் " என்றதும் முகம் மாறினான் அருண்

"வேண்டாம்... நீங்க யாருகிட்டயும் போக வேண்டாம்... அப்படி எந்த காசெட்டும் இல்ல... போட்டோவும் இல்ல... சுமிய மிரட்ட தான் சும்மா அப்படி சொன்னேன்" என்றான் அருண்

"உன்னை நம்பலாமா? இப்ப என்னை சமாளிக்க எதாச்சும் சொல்லிட்டு அப்புறம் வேண்டாத வேலை செஞ்சா நடக்கறதே வேற" என கணேஷ் அவன் காலரை பற்றி உலுக்க

"என்னால சுமிக்கு எந்த தொந்தரவும் வராது சார்... நம்புங்க" என்றவன் இனி என்ன என்பது போல் எழுந்து நின்றான்

"ஒகே... நான் உன்னை வாட்ச் பண்ணிட்டே தான் இருப்பேன்... எதாச்சும் சந்தேகம் வந்தா... அப்புறம் கேக்க ஆள் இல்லாம போய்டுவ" என்றவனை உணர்ச்சி அற்ற பார்வை பார்த்தான் அருண்

கணேஷ் சென்றதும் கதவை அடைத்தவன் பெட்டியில் இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான்

பின் சுமியும் அவனும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்தான். வாக்மேன் எடுத்து காதில் பொருத்தி சுமியும் அவனும் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் வசனங்களை ரசித்தான்

அதற்குள்  அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்....

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

Thursday, September 16, 2010

என்ன கொடும சார்/மேடம் இது?

என்ன கொடும சார்/மேடம் இது?

ஹும்... என்னமோ சொல்லுவாங்களே... பட்ட காலிலே படும்... கெட்ட குடியே கெடும்னு... ஹும்... அப்படித்தான் ஆகி போச்சு இந்த அப்பாவி தங்கமணியோட கதை

(ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... தங்கமணி செம டென்ஷன் ஆய்டுச்சு... ஒரே சந்தோஷம் எனக்கு - மைண்ட்வாய்ஸ்)

எல்லாம் நேரம் தான்... இந்த மைண்ட்வாய்ஸ் எல்லாம் என்னை பாத்து சிரிக்கற மாதிரி ஆகி போச்சு என் நெலமை

அப்படி என்னதான் ஆச்சு சொல்லும்மா? னு ஒருத்தர் ரெண்டு பேர் ஆறுதலா கேக்கறீங்க.... ரெம்ப நன்றிங்க... சொல்றேன் சொல்றேன்...

நடந்த விசியத்த சொல்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ளாஷ்பாக்

(அடக்கொடுமையே... இன்னுமா இவ திருந்தல... - மைண்ட்வாய்ஸ்)

அது என்னனு கேட்டீங்கன்னா... ஒரு நிமிஷம்... எங்க வெச்சேன்? இங்க தான இருந்தது... ம்...

என்ன தேடறேனா? என்னங்க இது, மேட்டர் இல்லாம கூட போஸ்ட் தேத்தலாம், கொசுவத்தி இல்லாம ப்ளாஷ்பாக் சொல்ல முடியுமா?

ஆங்... இதோ கிடைச்சுடுச்சு... ஒகே... ஐ அம் ரெடி டு கோ பாக் டு ப்ளாஷ்பாக்....


(கஷ்டம் கஷ்டம்... இவளுக்கு நடந்த கொடுமைய சொல்றேன்னு சொல்லிட்டு நம்மள கொடுமப்படுத்தராளே பாவி... - மைண்ட்வாய்ஸ்)

கொஞ்ச நாளைக்கி முன்னாடி அதாவது சரியா சொல்லணும்னா... சரி விடுங்க, ஆகஸ்ட் தொடக்கத்துல என்னோட ஈமெயில் இன்பாக்ஸ்ல " Anjappar Chettinad August Specials " அப்படின்னு சப்ஜக்ட் போட்டு ஒரு ஈமெயில் இருந்தது

மொதல்ல பாத்துட்டு ஏதோ ஸ்காம்னு நெனச்சு டெலீட் பண்ணலாம்னு போனேன்... ஆனா விதி விரல்ல உக்காந்துட்டு சல்சா டான்ஸ் ஆடறப்ப அப்படி டெலீட் பண்ண விட்டுடுமா என்ன? ஹும்...

என்ன தான் இருக்கும் அந்த ஈமெயில்லனு ஒரு ஆர்வம் தோண ஓபன் பண்ணி பாத்தேன்

//அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்...// அப்படினெல்லாம் என்னோட தொடர்கதைல தொடரும் போட்டு உங்கள டென்ஷன் பண்ணுவேனே அது அப்படியே நடந்தது... அந்த அதிர்ச்சியில் உறைந்தவள் நான் தான்

(சரி சரி பில்ட் அப் போதும்... மேட்டர்க்கு வா - மைண்ட்வாய்ஸ்)

அந்த ஈமெயில்ல என்ன இருந்ததுன்னு நீங்களே பாருங்க... ஹும்... ஹும்... (விசும்பல்....)

//Dear Customers,

We would like to bring to your notice our specials for the month of August
Idlie special - $0.35 each
Minimum 10 pieces
Takeout Only

Mondays
Kothu Roti - $4.99
(Chicken, Veg and Egg)
Dine-in Only

Wednesdays
Naan and Butter Chicken Or Paneer Butter Masala - $4.99
Dine-in Only //

இப்படி ஒரு ஒரு நாளும் என்ன ஸ்பெஷல் மெனு என்ன Offer இந்த மாசம்னு போட்டு இருந்தது...

என்னோட அதிர்ச்சிக்கு என்ன காரணம்னு என்னை பத்தி தெரிஞ்சவங்களுக்கு இப்ப புரிஞ்சுருக்கும்

எஸ்...அதே அதே... இட்லி தான்... இட்லியே தான் அதுக்கு காரணம்... இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் அப்படினு நீங்க கேக்கரீங்கன்னா நீங்க என்னோட "இட்லியும் நானும்" போஸ்ட்ஐ படிக்கலைன்னு அர்த்தம்... இப்ப படிங்க... அப்ப தான் என் பீலிங்க்ஸ் உங்களுக்கு புரியும்

(ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... இவ விளம்பரத்துக்கு ஒரு அளவில்லையா... முருகா உனக்கு கண்ணில்லையா... காப்பாத்து - மைண்ட்வாய்ஸ்)

மொதல்ல இந்த ஈமெயில் பாத்ததும் யாரோ வேணும்னே என்னை டீஸ் பண்றதுக்கு ஏதோ விளையாடராங்கன்னு ஒரு சந்தேகம்... அந்த சந்தேகத்தோட மொதல் Victim... வேற யாரு? none other than ரங்க்ஸ்...

அவர்கிட்ட கேட்டதும் ஒரே சிரிப்பு... எனக்கு சந்தேகம் உறுதி ஆய்டுச்சு... செம டென்ஷன் ஆகி திட்டலாம்னு தயாரானேன்

"ஈமெயில் ஐடி நல்லா பாரு... அஞ்சப்பர்ல இருந்து தான் வந்திருக்கு... எனக்கு ஹேக் பண்ணவெல்லாம் தெரியாது" னார்

"அப்புறம் ஏன் சிரிச்சீங்க?" னு டிடக்டிவ் ஏஜென்ட் மாதிரி பாயிண்ட்டை புடிச்சேன்... அப்பாவியா கொக்கா?

"அது... " மறுபடியும் சிரிப்பு "நீ இட்லிய பாத்து டென்ஷன் ஆனதை பாத்து... ஹா ஹா அஹ... சிரிச்சேன்" னார்

"ச்சே..." னு எனக்கு ஒரே பீலிங்க்ஸ் ஆய்டுச்சு

"ஆனா எப்படி என்னோட ஈமெயில் ஐடி இவங்களுக்கு கெடைச்சு இருக்கும்" னு கேக்க அதுக்கப்புறம் ரங்க்ஸ் சொன்னது தான் என்னோட நிஜமான டென்ஷன்க்கு காரணம்

"அது... அன்னிக்கி நாம அஞ்சப்பர் போனப்ப... subscribe to mailing list னு இருந்த நோட்ல உன்னோட ஈமெயில் ஐடி எழுதினேன்..." னார்

"ஏன்... ? வேணும்னா உங்க ஐடி எழுதி இருக்கலாமே.. ஏன் என்னோட ஐடி?" னு கேக்க

"யார் யாருக்கு வேணுமோ அவங்களுக்கு தானேமா ஈமெயில் வரணும்" னு போட்டாரே ஒரு போடு... நான் கப்சிப்...ஹும்... வீக்னெஸ் நம்ம பக்கம் இருக்கே... ஹும்...

இதெல்லாம் கூட போனா போகட்டும்னு மனச தேத்திகிட்டேன்...

அதுக்கு அப்புறம் நடந்தது தான் எனக்கு இழைக்கபட்ட அநீதி...ஹும்...

சில வாரங்களுக்கு முன்னாடி பிரெண்ட்ஸ் எல்லாரையும் வீட்டுக்கு டின்னர்க்கு கூப்பிட்டு இருந்தோம், சும்மா ரெம்ப நாளாச்சேனு

மத்ததெல்லாம் நானே செஞ்சுக்கறேன்... இட்லி மட்டும் அஞ்சப்பர்ல அந்த Offer பத்தி கூட ஈமெயில் வந்ததே அவங்ககிட்ட ஆர்டர் பண்ணிக்கலாம்னு சொன்னேன்... ரங்க்ஸ்ம் சரின்னார்

அது என்னமோங்க அதிசியம் யாராச்சும் கெஸ்ட் வீட்டுக்கு வர்றாங்கன்னா அன்னிக்கி ரங்க்ஸ்க்கு கண்டிப்பா முக்கியமா ஆபீஸ்ல வேலை வந்துடும் அது சண்டே ஆனா கூட... எல்லா ரங்க்ஸ்களும் இப்படி தான்னு நினைக்கிறேன்... ஹும்...

சரி மேட்டர்க்கு போவோம்...

அன்னிக்கி அவர் ஆபீஸ் போறப்ப "நீ அஞ்சப்பர்க்கு போன் பண்ணி இட்லி ஆர்டர் பண்ணிடு... நான் ஈவினிங் வர்றப்ப பிக் அப் பண்ணிட்டு வர்றேன்" னு சொன்னார்

நானும் போன் பண்ணி அம்பது இட்லி வேணும்னு ஆர்டர் பண்ணினேன்

மத்த சமையல் எல்லாம் முடிச்சுட்டு அப்பாடானு போய் உக்காந்தா இவர்கிட்ட இருந்து போன்...

"நீ நம்ம ஏரியால இருக்கற அஞ்சப்பர்ல தானே ஆர்டர் பண்ணினே?" னு கேட்டார் (இங்க கொஞ்ச தூரத்துல இன்னொரு அஞ்சப்பர் பிரான்ச் இருக்கு)

"ஆமாம் நம்ம ஏரியால இருக்கறதுல தான்"னேன்

"இங்க இட்லி ஆர்டர் வரவே இல்லைன்னு சொல்றாங்கன்னு" தலைல கல்லை போட்டார்

(ஹி ஹி ஹி... அதுக்கு உன் இட்லிய போட்டார்னு சொல்லி இருக்கலாம் - மைண்ட்வாய்ஸ்)

"ஐயோ... கடவுளே... நான் Order பண்ணினேனே... பதினொரு மணி போல போன் பண்ணினேன்..." னு அழுகாத கொறையா சொன்னேன்

"யாரு கிட்ட பேசின?"னார்

"ஒரு நார்த் இந்தியன் பொண்ணு இருக்குமே.. வாய்ஸ் அந்த பொண்ணு மாதிரி தான் இருந்தது... இங்கிலீஷ்ல தான் பேசுச்சு" னேன்

"இல்லமா... அப்படி ஆர்டர் எதுவும் இல்லையாம்"னார்

"நீங்க அவங்க போன்ல செக் பண்ண சொல்லுங்க... நம்ம நம்பர் இன்கமிங் கால்ஸ்ல இருக்கா இல்லையானு" னு எனக்கு பிரஷர் எகிறிடுச்சு

கொஞ்ச நேரம் சத்தமே காணோம்... அப்புறம் சொன்னார்

"அவங்க நீ 50 இடியாப்பம் தான் ஆர்டர் பண்ணினேன்னு அதை எடுத்து வெச்சு இருக்காங்க... இப்ப இட்லி செய்யனும்னா இன்னும் ஒன் அவர் வெயிட் பண்ண சொல்றாங்க.. என்ன செய்யட்டும்"

"ஐயோ... நான் இட்லி தான் ஆர்டர் பண்ணினேன்... அந்த தமிழ் தெரியாத ஜென்மத்தை எல்லாம் எதுக்கு தமிழ் கடைல வேலைக்கு வெச்சுருக்கான்னு  திட்டிட்டு வாங்க"

"சரி... சரி... திட்டிக்கலாம்... இட்லி வெயிட் பண்ணி வாங்கிட்டு வரவா"

"ஐயோ.. ஒன் அவரா? எல்லாரும் வந்துடுவாங்க... " என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போக

"சரி சரி... டென்ஷன் ஆகாத... நான் வேற எங்காச்சும் ட்ரை பண்றேன்" னுட்டு வேற ஒரு கடைல வாங்கிட்டு வந்தார்

வீட்டுக்கு வந்தவர் சிரிச்சுகிட்டே ஒரு டயலாக் சொன்னார் பாருங்க, அதான் இந்த போஸ்ட்க்கு காரணம்... என்ன சொன்னாரா? இதோ...

"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி,  போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" னு சொல்லிட்டு ஆள் கொஞ்ச நேரம் எஸ்கேப்...

நான் என்ன செஞ்சேனா? வேற என்ன கொஞ்ச நேரம் இந்த கோஷம் தான் போட்டுட்டு இருந்தேன்...

இட்லி டௌன் டௌன்
ஹிந்திக்காரி டௌன் டௌன்
அஞ்சப்பர் டௌன் டௌன்

என்ன கொடுமங்க இது? அந்த ஹிந்திகார பொண்ணு தப்பா ஆர்டர் எடுத்ததுக்கு என்னை இப்படி பொலம்ப விட்டுடாங்களே... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா... ஹும்...


...

Tuesday, September 14, 2010

அதே கண்கள்... (பகுதி 11)


இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

"சார்... இந்த ஆளு... இப்ப தான் சார்... அஞ்சு நிமிஷம் முன்னாடி நம்ம ஹோட்டல்ல ரூம் போட்டாரு... ரூம் நம்பர் பதினாலு சார். உள்ள தான் இருக்காரு"

"வாட்?" என அதிர்ந்த இன்ஸ்பெக்டர் உடனே ரூம் நோக்கி ஓட கணேஷ் சூர்யா சுரேஷ் மூவரும் பின்னே சென்றனர்

கதவு தடதடவென தட்டப்பட கதவை திறந்த அருண் இன்ஸ்பெக்டரை பார்த்து பதட்டமானான்

பின்னே வந்த மூவரையும் கண்டு மேலும் அதிர்ந்தான்

உள்ளே வந்த வேகத்தில் இன்ஸ்பெக்டர் அருணின் சட்டை காலரை பற்றி "அந்த பொண்ண எங்க வெச்சுருக்க...சொல்லு? சுமேதா எங்க?"

"ஐயோ... சுமி...சுமிக்கு என்ன ஆச்சு? ஐயோ... சொல்லுங்க சார்... சுமிக்கு என்ன ஆச்சு?" என பதற

"டேய் டேய்... இந்த நடிப்பெல்லாம் வேற யாராச்சும் ஏமாந்தவன்கிட்ட வெச்சுக்க... இப்ப ஒழுங்கா உண்மைய சொல்லு"

"சார்... சத்தியமா சொல்றேன்... எனக்கு ஒண்ணும் தெரியாது..."

"அப்ப இந்த ஊர்ல உனக்கு என்னடா வேல"

"சுமிய பாக்க வந்தேன்" தயக்கம் சிறிதுமின்றி கூறினான்

"பாத்தீங்களா சார்... எவ்ளோ திமிரா பேசறான்னு" என சுரேஷ் அவன் கன்னத்தில் அறைந்தான்

"சுரேஷ் ஜஸ்ட் ஸ்டே அவுட் ஆப் இட்" என இன்ஸ்பெக்டர் ஆணை போல் சொல்ல சுரேஷ் விலகி நின்றான்

"டேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு... இல்லேனா கொன்னுடுவேன்"

எதுவும் பேசாமல் சிரித்தான் அருண்

"என்ன திமிரா?" என இன்ஸ்பெக்டர் அறைய

"இல்ல சார்.... " என்றான் விரக்தியாய்

"டேய்..."

"சுமி... சுமிக்கு என்னாச்சு சார்... ப்ளீஸ் சொல்லுங்க சார்" என கெஞ்சினான்

"நீ இதுக்கெல்லாம் சரி வர மாட்டே... வா லாடம் கட்டறேன்"

"என்ன வேணும்னாலும் செய்ங்க சார்... சுமி எங்க ப்ளீஸ் சொல்லுங்க..." என்றவன் கணேசை கண்டதும் "சார் நீங்க தான அன்னிக்கி வந்து என்னை மெரட்டிட்டு போனீங்க... சொல்லுங்க சார்... சுமி எங்க சார்?" என கண்களில் நீர் வழிய கேட்க இன்ஸ்பெக்டர் அவன் கையில் விலங்கை மாட்டி

"நடடா ஸ்டேஷன்க்கு நான் சொல்றேன்... எங்கன்னு" என இழுத்து சென்றார்

சுரேஷின் முன்கோபத்தை கண் கூடாக பார்த்ததால் அவர்கள் மூவரையும் வெளியே இருக்கும் படி பணித்தார் இன்ஸ்பெக்டர்

ஸ்டேஷன் சென்று எத்தனை அடி அடித்தும் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான் அருண்

"ஒழுங்கா சொல்லு... சுமேதவை நீ காதலிச்சையா இல்லையா" என இன்ஸ்பெக்டர் முட்டியில் லத்தியால் தட்ட வலியில் உயிரே போனது

"என் உயிருக்கும் மேல சார்" என்றான்

"டேய்... " என இன்ஸ்பெக்டர் லத்தியை ஒங்க

"சார்... இதுக்கு மேல அடிச்சா நான் செத்துடுவேன் சார்... உடம்புல மனசுல எதுலயும் தெம்பில்ல சார்... எனக்கு சாகறது பத்தி கவலை இல்ல சார்... கடைசியா ஒரு தரம் சுமிய பாக்கணும் சார்... அதுவரைக்கும் எனக்கு உயிர் பிச்சை குடுங்க சார்" என அருண் விசும்ப

"ஒண்ணு இவன் நல்ல நடிகனா இருக்கணும் இல்லைனா இவன் சொல்றது உண்மையா இருக்கணும்" என இன்ஸ்பெக்டர் குழம்பினார்

"சரி... நடந்த எல்லாத்தையும் ஒண்ணு விடாம ஒழுங்கா சொல்லு... எதாச்சும் மறைச்சேன்னு சந்தேகம் வந்தா கூட விட்டு வெக்க மாட்டேன்" என இன்ஸ்பெக்டர் அவன் பேசினால் ஏதேனும் க்ளு கிடைக்குமோ என பேச செய்தார்

"சுமிய மொதல் மொதலா பாத்தப்பவே எனக்கே பொறந்தவனு தோணுச்சு சார்... பாத்த உடனே ஒருத்தர் மேல அவ்ளோ ஆசை எப்படி வரும்னு நானே ஆச்சிர்யப்பட்டேன் சார்... " என சிறிது நேரம் ஏதோ நினைத்து மௌனமானான்

"ம்... மேல சொல்லு" என இன்ஸ்பெக்டர் கூற

"ம்... அப்புறம் அவளுக்கு காதல்ல விருப்பம் இல்லைன்னு என் பிரெண்ட்ஸ் சொன்னதை கேட்டு பயந்து எப்படியும் அவ வேணுங்கற ஆசைல வேற ஒரு பொண்ணு மேல ஆசை பட்றதா சொல்லி அதுக்கு அவ உதவிய கேட்டேன்

அப்பவே நீ எப்படிடா வேற ஒருத்திய லவ் பண்ணலாம்னு கேப்பானு ஒரு நப்பாசை. அது நடக்கல. சரின்னு நானும் நடிச்சேன். ஆனா சீக்கரமே அவ கிட்ட உண்மைய சொல்லிட்டேன். ரெம்ப கோபபட்டா. அதெல்லாம் கூட நான் தாங்கிட்டேன்... ஆனா கடைசீல இனிமே பேசினா கண்ணுலபடாம போய்டுவேன்னு சொன்னா சார் "என விசும்பினான்

"ம்... மேல சொல்லு"

"என்னால முடியல சார்... "என அந்த நிகழ்வுகளை விவரிக்க தொடங்கினான்
________________________________________

தன்னை பற்றி தவறாக பேசிய போது கூட விடாமல் கெஞ்சியவன் "கண்ணுலபடாம போய்டுவேன்" என்ற வார்த்தையில் திகைத்து நின்றான் அருண்

அவளை காணாமல் ஒரு நாளும் தன்னால் இயலாது என்பதை உணர்ந்தே இருந்தான். விடுமுறை நாளில் கூட அவள் வீடு இருக்கும் தெருவில் இருக்கும் ஒரு நண்பனின் வீட்டிற்க்கு சென்று அவள் அறியாமல் அவளை காண்பான்

அப்படிபட்டவன் "கண்ணுலபடாம போய்டுவேன்" என்றதை எப்படி தாங்குவான். சுமேதா எந்த அளவிற்கு இரக்க குணமும் நல்ல மனமும் கொண்டவளோ அதே அளவிற்கு கோபமும் பிடிவாதமும் கொண்டவள் என்பதை இத்தனை நாளில் அவளை பற்றி அறிந்தே இருந்தான்

அவளை காணாமல் தவிப்பதை விட தூரத்தில் இருந்தேனும் பார்க்க முடிந்தால் போதுமென மௌனமானான். நிச்சியம் ஒரு நாள் அவள் தன் காதலை புரிந்து கொள்வாள் என நம்பினான்

அவளே கூறினாளே ஒரு வேளை நேரடியாய் காதலை கூறி இருந்தால் கூட ஏற்றிருப்பேனென. அவள் மனதில் சிறிதேனும் பாதிப்பை தான் ஏற்படுத்தியதால் தானே அவள் அப்படி கூறினாள் என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்

அவள் மனம் மாறும் நாளுக்காக ஒரு ஒரு நாளும் காத்திருந்தான்
____________________________________

தினமும் அவள் கல்லூரிக்கு வரும் நேரம் கல்லூரி வாசலிலேயே தன் நண்பர்களுடன் பேசி கொண்டு இருப்பான். அவள் கண் மறையும் வரை கண்ணால் பார்த்து மனதில் நிரப்பி கொண்டு அங்கிருந்து சென்று விடுவான். அவளுடன் எதுவும் பேசக் கூட முயற்சிக்கவில்லை

அவளுக்கு அவன் செய்கை எரிச்சல் அளித்த போதும் பேசாமல் கூட இருப்பவனிடம் என்னவென கோபம் கொள்வது என கண்டும் காணாதது போல் இருந்தாள்

அவளால் அவன் செய்த மடத்தனத்தை ஜீரணிக்க இயலவில்லை. என்ன தான் காரணம் சொன்ன போதும் அவள் கோபம் சற்றும் குறையவில்லை

தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதை தன் சுயமரியாதைக்கு கிடைத்த ஒரு அடியாய், அதற்கு காரணமான அவனை அடியோடு வெறுத்தாள்
____________________________________

அன்று எப்போதும் போல் கல்லூரிக்கு வந்து காத்திருந்தவன் சுமேதா வராமல் தவித்து போனான் அருண்

அவள் வகுப்பு தோழிகளிடம் கேட்க "தெரியவில்லை" என்றனர். அன்று முழுவதும் எதுவும் செய்ய இயலாமல் அவள் வீடு இருந்த தெருவிலேயே சுற்றி கொண்டு இருந்தான்

அவள் வெளியே வராமல் போக உடம்புக்கு ஏதேனும் சரி இல்லையோ என பயந்தான்

அடுத்த நாளும் அவள் கல்லூரிக்கு வராமல் போக தான் தினமும் இப்படி வந்து பார்ப்பது பிடிக்காமல் சொன்னது போல் கண்ணில்படாமல் போய் விட்டாளோ என பதறினான்

அந்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தி அவள் தோழி மூலம் வந்தது

சுமேதாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக அறிந்ததும் அவளுக்கு தன் தந்தை என்றால் உயிர் என ஒரு முறை சுமேதா கூறியது நினைவுவர எப்படி துடித்திருப்பாளோ என தவித்தான் அருண்

உடனே அவளை காண வேண்டும் போல் துடித்தான். ஆனால் அவளை நேரில் கண்டதும் காணாமலே இருந்திருக்கலாமோ என எண்ணினான்
____________________________________

அருண் சென்ற போது சுமேதாவின் தந்தைக்கு பைபாஸ் சர்ஜரி நடந்து கொண்டு இருந்தது. ஆபரேஷன் தியேட்டர் முன் இருந்த இருக்கையில் இருந்த சுமேதாவை கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவனுக்கு

அழுது அழுது கண்கள் சிவந்து முகம் வீங்கி, கண்களில் நீர் வழிய அமர்ந்து இருந்தவளை கண்டவனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல தோன்றியது

அவளை உரிமையோடு தன் தோளில் சாய்த்து கொண்டு ஆறுதல் கூற துடித்தான். தான் வந்ததை கூட உணர முடியாமல் துக்கத்தில் இருப்பவளிடம் என்ன பேசுவதென புரியாமல் விழித்தான்

அவள் சாயலில் இருந்த அவன் அவள் அண்ணனாக இருக்க வேண்டுமென யூகித்தான். அருண் சுமேதவை பார்த்து கொண்டு நிற்பதை அப்போது தான் கவனித்த சுரேஷ் அருணை நோக்கி வந்தான்

"நீங்க....?" என புரியாமல் பார்க்க

"ம்... நான் சுமேதாவோட க்ளாஸ்மேட் .. விஷயம் கேள்விபட்டேன்...அதான்" என தடுமாறினான் அருண்

மற்றொரு சமயமென்றால் அருணின் தடுமாற்றத்தில் சந்தேகம் கொண்டு தீர விசாரித்திருப்பான் சுரேஷ். அன்றிருந்த மனநிலையில் அவனுக்கு எதுவும் மனதில் பதியவில்லை

சுமேதாவிடன் அவனை அழைத்து சென்றான் சுரேஷ். அவனை கண்டதும் தன் துக்கத்தையும் மீறி கோபம் கிளம்பியது சுமேதாவிற்கு. தன் அண்ணனின் முன்கோபம் பற்றி அறிந்ததால் மௌனம் காத்தாள்

ஏன் வந்தாய் என்பது போன்ற ஒரு பார்வை அருண் மேல் வீசினாள். அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான்

"பயப்படாத சுமேதா... இப்ப இந்த சர்ஜரி ரெம்ப சகஜம் ஆய்டுச்சு... சீக்கரம் சரி ஆய்டும்" என கூற அவள் எதுவும் பேசாமல் கண்களை மூடி சாய்ந்தாள்

அருண் சங்கடமாய் சுரேஷை பார்க்க "சாரி... அவ மூட் அவுட்ல இருக்கா" என வருத்தம் தெரிவித்தான் சுரேஷ்

"இட்ஸ் ஒகே... சுமேதவோட அம்மா...?" என கேள்வியாய் நோக்க

"அப்பாவுக்கு இப்படி ஆனதும் அம்மா ரெம்ப பயந்துட்டாங்க... அதிர்ச்சில மயங்கிட்டாங்க. ரூம்ல மெடிசன் குடுத்து தூங்க வெச்சு இருக்கோம்" என கூற

"ஓ...சாரி... சரிங்க நான் கிளம்பறேன்" என விடைபெற்றான்

ஆனால் அங்கிருந்து செல்ல மனமின்றி மறைந்து நின்று வெகுநேரம் சுமேதாவை பார்த்து கொண்டே இருந்தான்
_____________________________________

சுமேதாவின் தந்தைக்கு ஆபரேஷன் நல்லபடியாய் முடிந்து அவள் கல்லூரிக்கு வரும் வரை தினமும் மாலையில் சிறிது நேரம் மருத்துவமனையில் மறைந்து நின்று அவளை பார்த்து வந்தான்

ஒரு வழியாய் சுமேதாவின் தந்தை குணமடைந்து அவள் கல்லூரிக்கு வந்த முதல் நாள் அவள் வருகைக்காக காத்திருந்தான் அருண். எப்போதும் போல் வாசலில் நண்பர்களுடன் நிற்காமல் அவள் வகுப்பிற்கு செல்லும் வழியில் நின்றிருந்தான்

அவளை தூரத்தே கண்டதுமே வெகு நாட்களுக்கு பின் அருண் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவள் அருகில் வர வர படபடப்பு அதிகமானது

தோழிகள் இருவருடன் பேசிக்கொண்டே வந்தவள் அவனை கண்டதும் காணாதது போல் நடக்க "சுமி..." என்றழைத்தான்

இப்போது அவள் தோழிகள் "பேசிட்டு வா... " என்று கூறிவிட்டு முன்னே நடக்க அவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள் சுமேதா

"சுமி ப்ளீஸ்... கோபப்படாதே... நான் எதுவும் கேக்கல... உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசினா போதும்... நான் கூட எதுவும் பேசல... உன்னோட குரலை கேட்டா போதும்... நான் போய்டறேன்... " என ஏக்கமாய் பார்க்க

"இப்ப என்ன புது டிராமா எதாச்சுமா? இதுல நீ மட்டும் தானா... இல்ல வேற யாரையாச்சும் ஏமாத்தி இன்வால்வ் பண்ணி இருக்கியா?" என ஏளனமாய் கேட்க

"சுமி ப்ளீஸ்... "

"ஸ்டாப் இட் அருண்... உனக்கென்ன பைத்தியமா"

"ஆமா உன்மேல பைத்தியம்"

"ச்சே... விருப்பம் இல்லைன்னு சொன்னபுறமும் எதுக்கு இப்படி தொந்தரவு பண்ற?"

"இல்ல சுமி... உன்னையே நீ ஏமாதிக்கற... உன் மனசுல எனக்கு எடம் இருக்கு"

"வாட் த ஹெல்? நான் உன்னை வெறுக்கறேன்... உலகத்துல நான் வெறுக்கற ஒரே ஜீவன் நீ தான் போதுமா"

"சுமி... வேண்டாம்...வார்த்தைகள கொட்டாத... பின்னாடி நீயே வருத்தப்படுவ"

"என்ன மெரட்டறையா? என்னை என்ன செய்வ... கொன்னுடுவயா? சொல்லு கொன்னுடுவயா?" என கோபத்தில் கத்த

"என்ன சுமி இது? உன்ன கொன்னுட்டு எனக்கு என்ன இருக்கு வாழ?"

"ச்சே... உன்னோட வசனம் கேட்டு கேட்டு வெறுத்து போச்சு... அதை எங்க திருடினயோ"

"நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ... பின்னாடி நீயே வருத்தப்படுவனு நான் சொன்னது நாம ஒண்ணு சேந்தபுரம் இப்படி என்னை பேசினதுக்காக நீ வேதனை படகூடாதுங்கற அர்த்ததுல தான்... "

"அப்படி வேற ஒரு எண்ணம் இருக்கா... கனவுல கூட அது நடக்காது... "

"ஏன் சுமி இப்படி எல்லாம் பேசற? அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல உன்னை அப்படி பாத்ததுல இருந்து மனசே சரி இல்ல சுமி... உன்கிட்ட பேசணும்னு ஒரே தவிப்பா இருக்குடா ப்ளீஸ்" என உரிமையாய் அவள் கையை பற்றினான்

ஏற்கனவே அவனை கண்டதும் கோபத்தில் இருந்த சுமேதா உரிமை உள்ளவன் போல் பேசியதும் தன் கையை பற்றியதும் கோபத்திற்கு மேலும் தூபம் போட சுற்றுப்புறத்தையும் மறந்து தன் ஐந்து விரல்களும் அவன் கன்னத்தில் பதிய ஓங்கி அறைந்தாள்

அதை சற்றும் எதிர்பாராத அருண் நிலைகுலைந்து போனான். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க அவமானத்தில் செய்வதறியாது தலை குனிந்தான்

சுமேதா எப்போதும் எல்லோரிடமும் நட்புடனும் அன்புடனும் இருப்பது மட்டுமே பார்த்து பழகிய எல்லோரும் அவளின் இந்த கோபத்தை நம்ப முடியாமல் பார்த்தனர். அவளுக்கே அந்த செய்கை வேதனையை அளித்தது

ஆனால் அவனை அடித்ததற்காக அவள் வேதனை படவில்லை. அவன் செய்கைக்கு இது தான் சரியான தண்டனை என நினைத்தாள்

தன் அமைதியான இயல்பே மீற செய்யும் அளவுக்கு நடந்து கொண்ட அவன் மேல் முன்னெப்போதையும் விட கோபமும் வெறுப்பும் அதிகமானது. தன் வாழ்வில் இப்படி ஒருவனை சந்திக்காமலே இருந்திருக்கலாமென தோன்றியது அந்த கணம் தான்

"என்ன சுமேதா இது?" என தனக்காக வக்காலத்து வாங்கிய தன் நண்பர்களை தடுத்தான் அருண். எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்றான்

அந்த சம்பவத்திற்கு பின் சுமேதாவின் முன் அருண் வரவில்லை. எல்லார் முன்னிலும் அவள் அடித்தததால் அவள் கல்லூரிக்குள் வரவும் தயக்கமாய் இருந்தது

அப்படியும் மனம் தாங்காமல் ஓரிருமுறை வந்த போது அங்கு இருந்தவர்களின் ஏளன பார்வை கொல்வதாய் இருந்தது. அதையெல்லாம் கூட துச்சமாய் மதிக்க தயாராய் இருந்தான் அவள் கடைக்கண் பார்வை பட்டால் போதுமென

ஆனால் அவளோ அவனை கண்டாலே ஏதோ அசிங்கத்தை மிதித்தது போல் முகம் சுளித்தாள். அவனை கட்டோடு வெறுக்கிறாள் என்பதை உணர்ந்தான். ஆனாலும் முழு நம்பிக்கை இழக்கவில்லை அவன் காதல் கொண்ட மனம்

தன் காதல் உண்மையென்றால் ஜெய்க்கும் என சுமேதாவிடம் முன்பொருமுறை கூறியதை இப்போது தனக்கு தானே கூறிக்கொண்டான்

இப்படியே சில மாதங்கள் ஓடின. கல்லூரி இறுதி தேர்வுகளும் முடிந்தது. அப்போது தான் மிகவும் தவித்து போனான்

கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்த வரை திருட்டுத்தனமாகவேனும் அவளை கண்டு ஆறுதல் கொண்டிருந்தவன் கல்லூரி முடிந்த பின் அவளை காண முடியாமல் சோர்ந்து போனான்

அந்த சமயத்தில் இடியாய் வந்த ஒரு செய்தி அவனை புரட்டி போட்டது

அருண் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளும் சீட்டு கட்டு வீடாய் சரிந்தது அந்த செய்தியை கேட்ட நொடி...

எதற்கும் கலங்காதவன் வாய் விட்டு கதறினான்

அப்போது தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தான்

இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

...

Sunday, September 12, 2010

அதே கண்கள்... (பகுதி 10)

...

இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்


"ஹும்... " என விரக்தியாய் சிரித்தவன் "ஒருவேளை நாம போட்ட டிராமா தான் என்னோட காதலுக்கு எமன் ஆய்டுச்சோனு தோணுது சுமி"

"ச்சே ச்சே.. .என்ன அருண் இது? அவளுக்காக தானே இதை செஞ்சே... அதை புரிஞ்சுக்கலைனா என்ன செய்யறது?"

"அப்போ காதலுக்காக போட்ட இந்த டிராமா தப்பில்லைன்னு சொல்றியா?"

"நிச்சியமா இல்ல அருண்... உன்னை புரிஞ்சுக்காததால நஷ்டம் அவளுக்கு தான்... உயிரா நேசிக்கற உன்னை மிஸ் பண்ணிட்டாளே" என்று அவனுக்கு ஆறுதலாய் பேசினாள்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் "ஐ லவ் யு சுமி" என்றான்

சுமேதா ஒரு கணம் அப்படியே சிலையானாள். சுமேதா தான் ஏதேனும் கனவு காண்கிறோமோ என ஒரு கணம் தலையை உலுக்கி கொண்டாள்

அதை புரிந்தவன் போல "இல்ல சுமி... இது கனவு இல்ல... நிஜம் தான்" என்று அவள் கைகளை பற்றினான்

"ஆர் யு மேட்... என்ன ஒளர்ற அருண்?" என அவன் கைகளை உதறினாள் சுமி

"ஒளரல... இதான் நிஜம்... ஐ லவ் யு... லவ் அட் பர்ஸ்ட் சைட்... அதை நான் நம்பினதே இல்ல... நானே அதை அனுபவிச்ச வரைக்கும்"

"காதல் தோல்வில உனக்கு பைத்தியம் எதாச்சும் பிடிச்சுடுச்சா?" என சுமேதா கோபமாய் பேச

"இல்ல சுமி... நான் விரும்பினது உன்னை தான்... உன்னை மட்டும் தான்" என மீண்டும் அவள் கையை பற்றினான்

"ச்சே... " என உதறிவிட்டு எழுந்தாள்

"சுமி ப்ளீஸ்... கோபப்படமா நான் சொல்றத கேளு"

"அருண் ப்ளீஸ்.... ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை சைட்... உன்னை பாக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு"

"சுமி ப்ளீஸ்... இப்படி சொல்லாத... இந்த வார்த்தைகள கேக்கற சக்தி எனக்கில்ல"

"ஒருத்தி இல்லைனதும் அடுத்த நிமிசமே இன்னொருத்திய நினைக்கறவன்கிட்ட வேற எப்படி பேசணும்... ச்சே... உன்னை எவ்ளோ உயர்வா நெனச்சேன்... சச் அ சீப் பெர்சன் யு ஆர்... உன்னோட காதலை நான் எவ்ளோ உண்மைன்னு நம்பினேன்... ச்சே" என வெறுப்பாய் வார்த்தைகளை கொட்ட

"சுமி ப்ளீஸ்... என்னை என்ன வேணா சொல்லு... நான் உன்மேல வெச்சுருக்கற காதலை தப்பா பேசாதே"

அவன் பேசுவது காதில் விழாதது போல் விலகி சென்றாள் சுமேதா

அதற்குள் சுமேதாவிற்கு வகுப்புகள் துவங்க வேறு வழியின்றி அருண் அங்கிருந்து சென்றான்

_____________________________

அடுத்த சில நாட்கள் எவ்வளவு முயன்றும் அருணுடன் பேச மறுத்தாள் சுமேதா. அவன் சொல்வதை காது கொடுத்து கேட்கவும் இல்லை

அன்று நூலக வாயிலில் அவளை வழிமறித்தவன் "சுமி ப்ளீஸ்...எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடு... ப்ளீஸ்... ஜஸ்ட் ஒன் சான்ஸ் டு எக்ஸ்ப்ளெயின் எவரிதிங்... அப்புறம் நீயே புரிஞ்சுப்ப"

எதுவும் பேசாமல் அவள் விலக "சுமி... இப்ப நீ நான் பேசறத கேக்கலைனா என்னை உயிரோட பாக்க மாட்ட"

"என்ன மெரட்டறையா?" என சுமி கோபமாய் கேட்க

"எனக்கு வேற வழி தெரியலயே" என அருண் கண்ணீருடன் கூற சுற்றி இருந்த சிலர் வேடிக்கை பார்க்க

"எதுக்கு இப்ப சீன் க்ரியேட் பண்ற அருண்?" என்றாள் கோபம் சற்றும் குறையாமல்

"ஜஸ்ட் ஒன் சான்ஸ்... நான் நடந்த உண்மைய சொல்றேன்... அப்புறம் உன் இஷ்டம்... தொந்தரவு பண்ண மாட்டேன்... ப்ளீஸ்" என கெஞ்ச எல்லோருக்கும் வேடிக்கை பொருளாய் ஆவதில் இருந்து தப்பிக்க

"சரி... உனக்கு அஞ்சு நிமிஷம் டைம்.. அதுக்குள்ள சொல்றதை சொல்லு"

"இங்க வேண்டாம்... பின்னாடி லான்க்கு போய்டலாம் ப்ளீஸ் சுமி" என கெஞ்ச அவளுக்கும் இங்கு எல்லோர் முன்னிலும் நிற்க விருப்பமின்றி நூலகத்திற்கு பின்புறமிருந்த புல்வெளியை நோக்கி நடந்தாள்

அங்கு இருந்த மரபென்ச்சில் அமர்ந்தவள் "சொல்" என்பது போல் அவனை பார்த்தாள்

"சுமி... உன்னை மொதல் மொதலா காலேஜ் பங்சன்ல பாத்தப்பவே உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்"

"ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் ஆல் திஸ் நான்சென்ஸ்... சொல்ல வந்ததை சொல்லு"

"ஒகே... உன் க்ளாஸ்ல படிக்கற என்னோட பிரெண்ட்ஸ்கிட்ட உன்னை பத்தி காஸுவலா விசாரிச்சப்ப என் பிரெண்ட்ஸ் கிண்டலா சொல்ற மாதிரி உன்னை பத்தி சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க. உனக்கு காதல்ல எல்லாம் பெருசா விருப்பம் இல்லை, என்னை விட அழகான திறமையான அந்தஸ்துல மேல இருக்கறவங்க காதலை கூட நீ நிராகரிச்சதை சொன்னாங்க"

"ரெண்டு நிமிஷம் முடிஞ்சுது" என்றாள் உணர்ச்சியற்ற குரலில்

"ப்ளீஸ்... ஐ நீட் டு ஜஸ்டிபை மைஸெல்ப்... எல்லாம் சொன்னாதானே புரியும் சுமி" என கெஞ்சலாய் பார்க்க சொல்லு என்பது போல் பேசாமல் இருந்தாள்

"உன்னை பத்தி தெரிஞ்சுகிட்டதும் நேரா என்னோட காதலை சொன்னா நீ ஒத்துக்க மாட்டே, உன்னோட மனசுல எனக்கு ஒரு இடத்த ஏற்படுத்தணும். நீயே என்னை விரும்பற மாதிரி செஞ்சு அப்புறம் என்னோட காதலை சொன்னா நீ மறுக்க மாட்டேனு தான் இப்படி டிராமா பண்ணினேன்"

"அதுக்கு அனிதாவை எதுக்கு பலி ஆக்கின?"

"ஐயோ இல்ல...அவ கிட்ட நான் பேசினது கூட இல்ல. அந்த பொண்ணு ரெம்ப பயந்த சுபாவம்னு காலேஜ் பங்சன் அன்னைக்கே புரிஞ்சுகிட்டேன். அதான் அவளை லவ் பண்றதா உன்கிட்ட பொய் சொன்னேன். நீயா எதாச்சும் கேட்டா கூட அவ பயந்துகிட்டு சொல்ல மாட்டான்னு தான் அவ பேரை யூஸ் பண்ணினேன்... மத்தபடி அவ முகத்த கூட நான் ஒழுங்கா பாத்ததில்ல. இந்த டிராமா மூலமா ஒண்ணு நான் உன் மனசுல இருந்தா தெரிஞ்சுக்கலாம். இல்லைனா உண்மைய சொல்லி அப்புறம் என்னோட காதலை உன்கிட்ட சொல்றதா இருந்தேன் சுமி... இது தான் நடந்தது"

"அப்போ அனிதா எழுதினதா சொன்ன அந்த கவிதை?"

"அது... அவ அன்னிக்கி பயத்துல நோட்டை தவற விட்டுட்டு போனது மட்டும் தான் நிஜம். அவ எழுதினா மாதிரி நானே தான் அந்த கவிதையை அதுல எழுதினேன் உன்னை இந்த டிராமாவுக்கு சம்மதிக்க வெக்க"

"வாட் அ சீட்டர்... ச்சே" என சுமேதா கோபமாய் எழ

"ப்ளீஸ் சுமி... நான் சொல்றத கேளு"

"இன்னும் என்ன கேக்கணும்... பொய் தவிர எதுவும் பேச முடியாத உன்னை எந்த பொண்ணும் நம்ப மாட்டா"

"சுமி ப்ளீஸ்... நான் சொன்ன பொய்யெல்லாம் உன் மேல உள்ள காதலால தானே... அதையேன் புரிஞ்சுக்க மாட்டேங்கற"

"உன்னோட விளக்கம் எனக்கு தேவை இல்ல...லீவ் மீ அலோன்"

"ப்ளீஸ் சுமி.. நீயே சொன்னியே அன்னைக்கி காதலுக்காக டிராமா போட்டதுல தப்பில.... உன்னை புரிஞ்சுக்காததால நஷ்டம் அவளுக்கு தான்... உயிரா நேசிக்கற உன்னை மிஸ் பண்ணிட்டாளேனு நீ தானே சொன்னே சுமி"

"அது உன்னோட காதலை உண்மைன்னு நம்பி நொந்து போய் இருக்கற உன்னோட மனசுக்கு ஆறுதல் சொல்றதா நெனச்சு மனிதாபிமானத்தோட நான் சொன்னது... பொண்ணுங்க மனச விளையாட்டு பொம்மையா நெனைக்கற உனக்கு அந்த வார்த்தைகள் கேக்கற தகுதி கூட இல்ல"

"சுமி ப்ளீஸ்... நான் வந்த வழி தப்பா இருக்கலாம்... ஆனா நான் உன்னை நேசிக்கறது சத்தியம் சுமி... நீ இல்லாத லைப் என்னால கற்பனை கூட பண்ண முடியல"

"ஜஸ்ட் கட் யுவர் டிராமாஸ் அருண்... ச்சே"

"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்... ஜஸ்ட் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் சுமி ப்ளீஸ்"

"ஒருவேள நீ நேரடியா உன்னோட காதலை சொல்லி இருந்தா கூட என் மனசுல மாற்றம் வந்து இருக்கலாம்... இப்படி ஒரு குறுக்குபுத்தி இருக்கற உன்னோட பழகினதை நெனச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு... ச்சே ... இனி என்னோட பேச முயற்சி பண்ணாதே... அப்புறம் அனிதாவை மாதிரி நானும் கண்ணுலபடாம போய்டுவேன்" என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் விடுவிடுவென நடந்தாள்

நீண்ட நேரம் பேசியதில் மூச்சு வாங்க நின்றாள் சுமேதா


"இரு சுமி... தண்ணி எடுத்துட்டு வரேன்" என உள்ளே சென்றான் கணேஷ்

பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த சுமேதா "இனி என்ன செய்ய போகிறோம்" என கண்களில் நீர் வழிய நின்றாள்

கணேஷ் கொடுத்த நீரை பருகியவள் மீண்டும் பழைய கதையை சொல்ல வாயெடுக்க கணேஷ் தடுத்தான்

"சுமி... அத்தை லஞ்ச் ரெடி ஆய்டுச்சுனு சாப்பிட வர சொன்னாங்க. நீ காலைலயும் சரியா சாப்பிடலைன்னு வருத்தப்பட்டாங்க. வா மொதல்ல சாப்பிடு... அப்புறம் பேசலாம்"

"வேண்டாம் கணேஷ், எனக்கு பசியே மறந்து போச்சு. என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு" என கலங்க

"சுமி இங்க பாரு.... வயத்த காய போடறது எதுக்கான தீர்வும் இல்ல... இன்னும் பலவீனமாக்கி சின்ன பிரச்சனை கூட பெருசா தெரியும்... வா சாப்பிட்டு வந்து பேசுவோம்... கண்டிப்பா தீர்வு இல்லாத பிரச்சனை இருக்க முடியாது" என்றவனின் பேச்சில் சற்று நம்பிக்கை பெற்றவளாய் முழு மகிழ்ச்சி இல்லையென்றாலும் ஏதோ நிம்மதி ஆனாள்

இரண்டு நாளில் இன்று தான் மகள் ஒழுங்காக சாப்பிடுகிறாள் என நிம்மதி உற்றாள் சுமேதாவின் அன்னை

உண்டு முடித்து சற்று இளைப்பாறிய பின் "நீங்க மதியம் கொஞ்சம் தூங்குவீங்க இல்லையா அத்த... நீங்க படுத்துகோங்க... இங்க புழுக்கமா இருக்கு... நாங்க பின்னாடி உக்காரறோம்" என கணேஷ் சொல்ல

"சரிப்பா... எனக்கு இந்நேரத்துக்கு கொஞ்சம் சாஞ்சா தான் சரி வரும்... நீங்க பேசிட்டு இருங்க" என எழுந்து சென்றாள்

பின் பக்கம் ஊஞ்சலில் வந்து அமர்ந்ததும் மீண்டும் பழைய நிகழ்வுகளை கூறினாள் சுமேதா

"அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அருண் என்கிட்ட நேரடியா பேசல. டெய்லி காலைல எங்க காலேஜ் வருவான், என்னை பாத்ததும் போய்டுவான். என்கிட்ட வம்பு பண்ணாத வரை எப்படியோ தொலையட்டும்னு நானும் கண்டுக்கல கணேஷ்"

"கரெக்ட் தான்... "

"அப்புறம் கொஞ்ச மாசம் முன்னாடி எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து சர்ஜரி பண்ணினப்ப ஹாஸ்பிடல் வந்து பாத்தான். நான் பேசக்கூட இல்ல. அப்புறம் அப்பாவுக்கு சரியானப்புறம் நான் காலேஜ் போன அன்னிக்கி தேவை இல்லாம வந்து என்ன என்னமோ பேசினான். ஒரு கட்டத்துல என்னால கோபத்தை கட்டுப்படுத்த முடியாம அறைஞ்சுட்டேன்"

"என்னது?" என அதிர்ந்தான் கணேஷ்

"ஆமா கணேஷ்... பொறுமையோட எல்லைக்கே கொண்டு போய்ட்டான் பாவி"

"உனக்கு கோபம் வரும்னே என்னால நம்ப முடியல சுமி" என கணேஷ் வியப்பாய் கூற

"அதான்... அதான் என்னால தாங்க முடியல... என்னோட இயல்பே மாத்தற மாதிரி இருந்த அவனோட செய்கை அவன் மேல இருந்த கோபத்தை வெறுப்பா மாத்திடுச்சு"

"ம்... அப்புறம் என்ன மெரட்டினானா?"

"இல்ல கணேஷ்... என் கண்ணு முன்னாடியே அதிகம் வர்ல... ஒண்ணு ரெண்டு வாட்டி பாத்தப்பவும் நான் கண்டுகல. அவனும் பேச முயற்சிக்கல. அப்புறம் ரெண்டு நாள் முன்னாடி தான்... " என அதுவரை சாதாரணமாய் பேசி கொண்டு இருந்தவள் விசும்பினாள்

"சுமி... ப்ளீஸ் அழாத... " என சமாதானம் செய்தான் கணேஷ்

"ம்...  ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணி நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். இல்லைனா அனிதாவை ஏமாத்தறதுக்குன்னு நாம போட்ட டிராமா அப்போ நாம லவ்வர்ஸ் மாதிரி பேசினதெல்லாம் ஆடியோ ரெகார்ட் பண்ணி வெச்சு இருக்கேன். அப்புறம் போட்டோஸ் கூட இருக்கு நாம சேந்து க்ளோசா இருக்கற மாதிரி ... எல்லாத்தையும் உன் கல்யாணதன்னைக்கி கொண்டு வந்து குடும்ப மானத்த வாங்கிடுவேன்னு மெரட்டறான்" என மீண்டும் விசும்பினாள்

"சுமி ப்ளீஸ்... அழாத.... இந்த மாதிரி கோழைத்தனமா போன்ல மெரட்டறவன் எல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டான். அவனை நான் பாத்துக்கறேன்... அவன் டீடைல்ஸ் சொல்லு" என எல்லா விவரங்களையும் பெற்று கொண்டு சென்றான் கணேஷ்

சுமேதா சொன்னதை இன்ஸ்பெக்டரிடம் கணேஷ் கூறி முடிக்க இன்னும் நம்பாத பார்வை பார்த்தார் இன்ஸ்பெக்டர்

"சரி கணேஷ்... அப்புறம் நீங்க போய் அந்த அருணை பாத்தீங்களா?"

"அன்னைக்கு சாயங்காலமே பாத்தேன் சார்... மெரட்டிட்டு வந்தேன்... பயந்த மாதிரி தான் இருந்தான்... ஆதாரம் எல்லாம் குடுன்னு கேட்டதுக்கு அப்படி எதுவும் இல்லை சும்மா சொன்னேன்னு சொன்னான்"

"சரி அதோட அவன் சாப்ட்டர் முடிஞ்சதல்ல... என்ன பிரச்சனை?" என இன்ஸ்பெக்டர் குழப்பமாய் பார்க்க

"என்கிட்ட பயந்த மாதிரி நடிச்சவன் அடுத்த நாள் சுமி கிராஸ் கட் ரோடுல ஏதோ ஷாப்பிங் போனப்ப அங்க அவளை பாலோவ் பண்ணி இருக்கான்...
ஆனா எதுவும் பேசல. எதாச்சும் திட்டம் போடரானோனு சுமி ரெம்ப டிஸ்டர்ப் ஆய்ட்டா. சுமேதா எனக்கு அங்க இருந்து மெசேஜ் பண்ணினா.

அதுக்கப்புறம் நாங்க பேசினது இதான்" என அந்த உரையாடல் பற்றி கூறினான்

"ஹலோ......நான் சுமேதா பேசறேன்"

"சுமி உன்னோட டெக்ஸ்ட் மெசேஜ் பாத்தேன்...  நீ ஒண்ணும் கவலை படாதே அவனை நான் க்ளோசா வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். நீ அவனை இனிமே எங்கயாச்சும் பாத்தா பயந்த மாதிரி காட்டாதே. அவனுக்கு நாமளே தைரியம் குடுத்த மாதிரி ஆய்டும்"

"ம்...ஒகே...அப்படியே செய்யறேன்"

"சுமி... ஏன் குரல் இப்படி குரல் நடுங்குது? நான் தான் பயபடவேண்டாம்னு சொல்றேன்ல?"

"ஆனா....கொஞ்சம் பயமா இருக்கு"

"நான் பாத்துக்கறேன்னு சொல்றேன்ல"

"ம்... உன்ன தான் நம்பி இருக்கேன்...."

"சரி... போய் நிம்மதியா சூர்யா கூட டூயட் பாடு" என கேலி செய்தான் கணேஷ் சூழ்நிலையை இலகுவாக்க முயன்று

"ஒகே வெச்சுடறேன்" என்றாள் சுமேதா

இதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் இல்ல சார்... ஆனா என்னதான் சுமிக்கு தைரியம் சொல்லி இருந்தாலும் கல்யாணதன்னைக்கி நான் தான் ரெம்ப பயந்து போய் இருந்தேன்... கல்யாணத்த கூட ரசிக்கற மூட்ல இல்ல... ஆனா கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா நடந்தது"

"ம்..."

"அதுக்கப்புறம் நேத்து நைட் தான் சுமி எனக்கு போன் பண்ணினா. கல்யாணதன்னைக்கி நைட் யாரோ போன் பண்ணி உன்னோட ரகசியம் எல்லாம் தெரியும்னு மெரட்டினதா சொன்னா....அது அவனோட குரல் இல்லைன்னு சொன்னா... ஆனா அவன் பல குரல்ல பேசறவன்னும் சொன்னா


அப்புறம் நேத்து காலைல சாய்பாபா கோவில் சிக்னல்கிட்ட அவனை பாத்ததா சொன்னா. அவனும் பாத்துட்டு ரெம்ப அதிர்ச்சியானதா சொன்னா. அப்புறம் நேத்து நைட் மாப்பிள்ளை செல்போன் எடுக்க கார்க்கு போனப்ப எதோச்சையா இவ ஜன்னல்ல வெளிய பாக்க இவங்க தங்கி இருந்த ஹோட்டல் முன்னாடி நின்னுட்டு இருந்தானாம்... அதை பாத்துட்டு பயந்து தான் சுமி போன் பண்ணினா. உடனே கிளம்பி வந்தேன்... நெறைய முறை ட்ரை பண்ணியும் சுமிய ரீச் பண்ண முடியல சார்...இதான் நடந்தது"

"உங்கள நம்பலாமா?" என இன்ஸ்பெக்டர் இன்னும் சந்தேகம் தீராமல் கேட்க

"இன்ஸ்பெக்டர் எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல... அதுவும் இல்லாம நான் மொதலே சொன்னா மாதிரி அவ எனக்கு தங்கை மாதிரி... அவள கண்டுபிடிக்க என்னால ஆன உதவிய செய்ய தான் நான் முயற்சி செய்வேன்" என அவ்வளவு தான் என்பது போல் மௌனமானான்

"ஒகே.... உங்களுக்கு அந்த ஆளை அடையாளம் தெரியும் இல்லையா... "

"தெரியும் சார்... அவனோட போட்டோ சுமி அடையாளத்துக்கு குடுத்தது என்னோட செல்போன்ல இருக்கு இதோ"

"ஓ... தட்ஸ் கிரேட்... லெட்ஸ் மூவ்"

"எங்க சார்?"

"வாங்க சொல்றேன்" என வெளியே சென்றார் இன்ஸ்பெக்டர்

மதிய வெய்யில் மண்டையை பிளக்க ஸ்டேஷன் முன் இருந்த இளநீர் கடையில் எல்லோருக்கும் இளநீர் சொன்னார்

அங்கு அமர்ந்து இருந்த சுரேஷும் சூர்யாவும் இன்ஸ்பெக்டரை பார்த்ததும் பதட்டமாய் எழுந்தனர்

"என்ன சார் ஆச்சு? உண்மைய சொல்லிட்டானா?" என கேட்டு முடிக்கும் முன் கணேஷும் பின்னோடு வர "இவனை எதுக்கு சார் வெளிய விட்டீங்க?" என சுரேஷ் அவனை தாக்க முயல

"ஸ்டாப் இட் சுரேஷ். லெட் மீ எக்ஸ்ப்ளெயின். கணேஷ்கிட்ட பேசினதுல புதுசா ஒரு க்ளு கிடைச்சு இருக்கு. உங்க தங்கையை ஒரு தலையா காதலிச்ச அருண். அவன் வேலையா இருக்கலாம்னு தோணுது"

"என்ன சார் சொல்றீங்க?"

"எஸ்... அவனை ஊட்டில பாத்து பயந்து தான் உங்க சிஸ்டர் கணேஷ்க்கு போன் பண்ணி இருக்காங்க"

"ஓ"

"மிஸ்டர் சூர்யா... இங்க பாருங்க இந்த ஆளை நீங்க இங்க எங்கயாச்சும் பாத்தீங்களா?" என இன்ஸ்பெக்டர் கணேசின் செல்போனில் இருந்த போட்டோவை காட்டி கேட்க இல்லை என்று தலையசைத்தான் சூர்யா

ஆனால் அவன் முகத்தில் குழப்பம் மிகுந்து இருந்ததை இன்ஸ்பெக்டர் கவனித்தார். திருமணமான ஒரு நாளில் இவ்வளவு பிரச்சனைகள் என்றால் என்ன செய்வான் பாவம் என அவன் மேல் பரிதாபம் தோன்றியது இன்ஸ்பெக்டருக்கு

"ஒகே... ஏற்கனவே இந்த போட்டோவை செக்போஸ்ட்க்கு அனுப்பிட்டேன். ஆளை பாத்தா பிடிச்சு வெக்க சொல்லி ஆர்டர் போட்டாச்சு. வாங்க மொதல்ல ஹோட்டல்ல விசாரிச்சுட்டு அப்புறம் என்ன செய்யறதுன்னு பாப்போம்"

மூவரும் இன்ஸ்பெக்டர் பின் சென்றனர்

_________________________________________

ஹோட்டல் சென்று ஜீப்பை நிறுத்தி விட்டு இன்ஸ்பெக்டர் உள்ளே செல்ல "வாங்க சார்" என பவ்யமாய் வரவேற்றான் வரவேற்பு பணியில் இருந்த கண்ணன்

"ம்.... யோவ்... இந்த போட்டோல இருகரவன இந்த பக்கம் எங்கயாச்சும் பாத்தியா?"

"சார்... இந்த ஆளு... இப்ப தான் சார்... அஞ்சு நிமிஷம் முன்னாடி நம்ம ஹோட்டல்ல ரூம் போட்டாரு... ரூம் நம்பர் பதினாலு சார். உள்ள தான் இருக்காரு"

"வாட்?" என அதிர்ந்த இன்ஸ்பெக்டர் உடனே ரூம் நோக்கி ஓட கணேஷ் சூர்யா சுரேஷ் மூவரும் பின்னே சென்றனர்

கதவு தடதடவென தட்டப்பட கதவை திறந்த அருண் இன்ஸ்பெக்டரை பார்த்து பதட்டமானான்

(தொடரும்...)

...