Sunday, September 12, 2010

அதே கண்கள்... (பகுதி 10)

...

இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்


"ஹும்... " என விரக்தியாய் சிரித்தவன் "ஒருவேளை நாம போட்ட டிராமா தான் என்னோட காதலுக்கு எமன் ஆய்டுச்சோனு தோணுது சுமி"

"ச்சே ச்சே.. .என்ன அருண் இது? அவளுக்காக தானே இதை செஞ்சே... அதை புரிஞ்சுக்கலைனா என்ன செய்யறது?"

"அப்போ காதலுக்காக போட்ட இந்த டிராமா தப்பில்லைன்னு சொல்றியா?"

"நிச்சியமா இல்ல அருண்... உன்னை புரிஞ்சுக்காததால நஷ்டம் அவளுக்கு தான்... உயிரா நேசிக்கற உன்னை மிஸ் பண்ணிட்டாளே" என்று அவனுக்கு ஆறுதலாய் பேசினாள்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் "ஐ லவ் யு சுமி" என்றான்

சுமேதா ஒரு கணம் அப்படியே சிலையானாள். சுமேதா தான் ஏதேனும் கனவு காண்கிறோமோ என ஒரு கணம் தலையை உலுக்கி கொண்டாள்

அதை புரிந்தவன் போல "இல்ல சுமி... இது கனவு இல்ல... நிஜம் தான்" என்று அவள் கைகளை பற்றினான்

"ஆர் யு மேட்... என்ன ஒளர்ற அருண்?" என அவன் கைகளை உதறினாள் சுமி

"ஒளரல... இதான் நிஜம்... ஐ லவ் யு... லவ் அட் பர்ஸ்ட் சைட்... அதை நான் நம்பினதே இல்ல... நானே அதை அனுபவிச்ச வரைக்கும்"

"காதல் தோல்வில உனக்கு பைத்தியம் எதாச்சும் பிடிச்சுடுச்சா?" என சுமேதா கோபமாய் பேச

"இல்ல சுமி... நான் விரும்பினது உன்னை தான்... உன்னை மட்டும் தான்" என மீண்டும் அவள் கையை பற்றினான்

"ச்சே... " என உதறிவிட்டு எழுந்தாள்

"சுமி ப்ளீஸ்... கோபப்படமா நான் சொல்றத கேளு"

"அருண் ப்ளீஸ்.... ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை சைட்... உன்னை பாக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு"

"சுமி ப்ளீஸ்... இப்படி சொல்லாத... இந்த வார்த்தைகள கேக்கற சக்தி எனக்கில்ல"

"ஒருத்தி இல்லைனதும் அடுத்த நிமிசமே இன்னொருத்திய நினைக்கறவன்கிட்ட வேற எப்படி பேசணும்... ச்சே... உன்னை எவ்ளோ உயர்வா நெனச்சேன்... சச் அ சீப் பெர்சன் யு ஆர்... உன்னோட காதலை நான் எவ்ளோ உண்மைன்னு நம்பினேன்... ச்சே" என வெறுப்பாய் வார்த்தைகளை கொட்ட

"சுமி ப்ளீஸ்... என்னை என்ன வேணா சொல்லு... நான் உன்மேல வெச்சுருக்கற காதலை தப்பா பேசாதே"

அவன் பேசுவது காதில் விழாதது போல் விலகி சென்றாள் சுமேதா

அதற்குள் சுமேதாவிற்கு வகுப்புகள் துவங்க வேறு வழியின்றி அருண் அங்கிருந்து சென்றான்

_____________________________

அடுத்த சில நாட்கள் எவ்வளவு முயன்றும் அருணுடன் பேச மறுத்தாள் சுமேதா. அவன் சொல்வதை காது கொடுத்து கேட்கவும் இல்லை

அன்று நூலக வாயிலில் அவளை வழிமறித்தவன் "சுமி ப்ளீஸ்...எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடு... ப்ளீஸ்... ஜஸ்ட் ஒன் சான்ஸ் டு எக்ஸ்ப்ளெயின் எவரிதிங்... அப்புறம் நீயே புரிஞ்சுப்ப"

எதுவும் பேசாமல் அவள் விலக "சுமி... இப்ப நீ நான் பேசறத கேக்கலைனா என்னை உயிரோட பாக்க மாட்ட"

"என்ன மெரட்டறையா?" என சுமி கோபமாய் கேட்க

"எனக்கு வேற வழி தெரியலயே" என அருண் கண்ணீருடன் கூற சுற்றி இருந்த சிலர் வேடிக்கை பார்க்க

"எதுக்கு இப்ப சீன் க்ரியேட் பண்ற அருண்?" என்றாள் கோபம் சற்றும் குறையாமல்

"ஜஸ்ட் ஒன் சான்ஸ்... நான் நடந்த உண்மைய சொல்றேன்... அப்புறம் உன் இஷ்டம்... தொந்தரவு பண்ண மாட்டேன்... ப்ளீஸ்" என கெஞ்ச எல்லோருக்கும் வேடிக்கை பொருளாய் ஆவதில் இருந்து தப்பிக்க

"சரி... உனக்கு அஞ்சு நிமிஷம் டைம்.. அதுக்குள்ள சொல்றதை சொல்லு"

"இங்க வேண்டாம்... பின்னாடி லான்க்கு போய்டலாம் ப்ளீஸ் சுமி" என கெஞ்ச அவளுக்கும் இங்கு எல்லோர் முன்னிலும் நிற்க விருப்பமின்றி நூலகத்திற்கு பின்புறமிருந்த புல்வெளியை நோக்கி நடந்தாள்

அங்கு இருந்த மரபென்ச்சில் அமர்ந்தவள் "சொல்" என்பது போல் அவனை பார்த்தாள்

"சுமி... உன்னை மொதல் மொதலா காலேஜ் பங்சன்ல பாத்தப்பவே உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்"

"ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் ஆல் திஸ் நான்சென்ஸ்... சொல்ல வந்ததை சொல்லு"

"ஒகே... உன் க்ளாஸ்ல படிக்கற என்னோட பிரெண்ட்ஸ்கிட்ட உன்னை பத்தி காஸுவலா விசாரிச்சப்ப என் பிரெண்ட்ஸ் கிண்டலா சொல்ற மாதிரி உன்னை பத்தி சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க. உனக்கு காதல்ல எல்லாம் பெருசா விருப்பம் இல்லை, என்னை விட அழகான திறமையான அந்தஸ்துல மேல இருக்கறவங்க காதலை கூட நீ நிராகரிச்சதை சொன்னாங்க"

"ரெண்டு நிமிஷம் முடிஞ்சுது" என்றாள் உணர்ச்சியற்ற குரலில்

"ப்ளீஸ்... ஐ நீட் டு ஜஸ்டிபை மைஸெல்ப்... எல்லாம் சொன்னாதானே புரியும் சுமி" என கெஞ்சலாய் பார்க்க சொல்லு என்பது போல் பேசாமல் இருந்தாள்

"உன்னை பத்தி தெரிஞ்சுகிட்டதும் நேரா என்னோட காதலை சொன்னா நீ ஒத்துக்க மாட்டே, உன்னோட மனசுல எனக்கு ஒரு இடத்த ஏற்படுத்தணும். நீயே என்னை விரும்பற மாதிரி செஞ்சு அப்புறம் என்னோட காதலை சொன்னா நீ மறுக்க மாட்டேனு தான் இப்படி டிராமா பண்ணினேன்"

"அதுக்கு அனிதாவை எதுக்கு பலி ஆக்கின?"

"ஐயோ இல்ல...அவ கிட்ட நான் பேசினது கூட இல்ல. அந்த பொண்ணு ரெம்ப பயந்த சுபாவம்னு காலேஜ் பங்சன் அன்னைக்கே புரிஞ்சுகிட்டேன். அதான் அவளை லவ் பண்றதா உன்கிட்ட பொய் சொன்னேன். நீயா எதாச்சும் கேட்டா கூட அவ பயந்துகிட்டு சொல்ல மாட்டான்னு தான் அவ பேரை யூஸ் பண்ணினேன்... மத்தபடி அவ முகத்த கூட நான் ஒழுங்கா பாத்ததில்ல. இந்த டிராமா மூலமா ஒண்ணு நான் உன் மனசுல இருந்தா தெரிஞ்சுக்கலாம். இல்லைனா உண்மைய சொல்லி அப்புறம் என்னோட காதலை உன்கிட்ட சொல்றதா இருந்தேன் சுமி... இது தான் நடந்தது"

"அப்போ அனிதா எழுதினதா சொன்ன அந்த கவிதை?"

"அது... அவ அன்னிக்கி பயத்துல நோட்டை தவற விட்டுட்டு போனது மட்டும் தான் நிஜம். அவ எழுதினா மாதிரி நானே தான் அந்த கவிதையை அதுல எழுதினேன் உன்னை இந்த டிராமாவுக்கு சம்மதிக்க வெக்க"

"வாட் அ சீட்டர்... ச்சே" என சுமேதா கோபமாய் எழ

"ப்ளீஸ் சுமி... நான் சொல்றத கேளு"

"இன்னும் என்ன கேக்கணும்... பொய் தவிர எதுவும் பேச முடியாத உன்னை எந்த பொண்ணும் நம்ப மாட்டா"

"சுமி ப்ளீஸ்... நான் சொன்ன பொய்யெல்லாம் உன் மேல உள்ள காதலால தானே... அதையேன் புரிஞ்சுக்க மாட்டேங்கற"

"உன்னோட விளக்கம் எனக்கு தேவை இல்ல...லீவ் மீ அலோன்"

"ப்ளீஸ் சுமி.. நீயே சொன்னியே அன்னைக்கி காதலுக்காக டிராமா போட்டதுல தப்பில.... உன்னை புரிஞ்சுக்காததால நஷ்டம் அவளுக்கு தான்... உயிரா நேசிக்கற உன்னை மிஸ் பண்ணிட்டாளேனு நீ தானே சொன்னே சுமி"

"அது உன்னோட காதலை உண்மைன்னு நம்பி நொந்து போய் இருக்கற உன்னோட மனசுக்கு ஆறுதல் சொல்றதா நெனச்சு மனிதாபிமானத்தோட நான் சொன்னது... பொண்ணுங்க மனச விளையாட்டு பொம்மையா நெனைக்கற உனக்கு அந்த வார்த்தைகள் கேக்கற தகுதி கூட இல்ல"

"சுமி ப்ளீஸ்... நான் வந்த வழி தப்பா இருக்கலாம்... ஆனா நான் உன்னை நேசிக்கறது சத்தியம் சுமி... நீ இல்லாத லைப் என்னால கற்பனை கூட பண்ண முடியல"

"ஜஸ்ட் கட் யுவர் டிராமாஸ் அருண்... ச்சே"

"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்... ஜஸ்ட் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் சுமி ப்ளீஸ்"

"ஒருவேள நீ நேரடியா உன்னோட காதலை சொல்லி இருந்தா கூட என் மனசுல மாற்றம் வந்து இருக்கலாம்... இப்படி ஒரு குறுக்குபுத்தி இருக்கற உன்னோட பழகினதை நெனச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு... ச்சே ... இனி என்னோட பேச முயற்சி பண்ணாதே... அப்புறம் அனிதாவை மாதிரி நானும் கண்ணுலபடாம போய்டுவேன்" என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் விடுவிடுவென நடந்தாள்

நீண்ட நேரம் பேசியதில் மூச்சு வாங்க நின்றாள் சுமேதா


"இரு சுமி... தண்ணி எடுத்துட்டு வரேன்" என உள்ளே சென்றான் கணேஷ்

பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த சுமேதா "இனி என்ன செய்ய போகிறோம்" என கண்களில் நீர் வழிய நின்றாள்

கணேஷ் கொடுத்த நீரை பருகியவள் மீண்டும் பழைய கதையை சொல்ல வாயெடுக்க கணேஷ் தடுத்தான்

"சுமி... அத்தை லஞ்ச் ரெடி ஆய்டுச்சுனு சாப்பிட வர சொன்னாங்க. நீ காலைலயும் சரியா சாப்பிடலைன்னு வருத்தப்பட்டாங்க. வா மொதல்ல சாப்பிடு... அப்புறம் பேசலாம்"

"வேண்டாம் கணேஷ், எனக்கு பசியே மறந்து போச்சு. என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு" என கலங்க

"சுமி இங்க பாரு.... வயத்த காய போடறது எதுக்கான தீர்வும் இல்ல... இன்னும் பலவீனமாக்கி சின்ன பிரச்சனை கூட பெருசா தெரியும்... வா சாப்பிட்டு வந்து பேசுவோம்... கண்டிப்பா தீர்வு இல்லாத பிரச்சனை இருக்க முடியாது" என்றவனின் பேச்சில் சற்று நம்பிக்கை பெற்றவளாய் முழு மகிழ்ச்சி இல்லையென்றாலும் ஏதோ நிம்மதி ஆனாள்

இரண்டு நாளில் இன்று தான் மகள் ஒழுங்காக சாப்பிடுகிறாள் என நிம்மதி உற்றாள் சுமேதாவின் அன்னை

உண்டு முடித்து சற்று இளைப்பாறிய பின் "நீங்க மதியம் கொஞ்சம் தூங்குவீங்க இல்லையா அத்த... நீங்க படுத்துகோங்க... இங்க புழுக்கமா இருக்கு... நாங்க பின்னாடி உக்காரறோம்" என கணேஷ் சொல்ல

"சரிப்பா... எனக்கு இந்நேரத்துக்கு கொஞ்சம் சாஞ்சா தான் சரி வரும்... நீங்க பேசிட்டு இருங்க" என எழுந்து சென்றாள்

பின் பக்கம் ஊஞ்சலில் வந்து அமர்ந்ததும் மீண்டும் பழைய நிகழ்வுகளை கூறினாள் சுமேதா

"அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அருண் என்கிட்ட நேரடியா பேசல. டெய்லி காலைல எங்க காலேஜ் வருவான், என்னை பாத்ததும் போய்டுவான். என்கிட்ட வம்பு பண்ணாத வரை எப்படியோ தொலையட்டும்னு நானும் கண்டுக்கல கணேஷ்"

"கரெக்ட் தான்... "

"அப்புறம் கொஞ்ச மாசம் முன்னாடி எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து சர்ஜரி பண்ணினப்ப ஹாஸ்பிடல் வந்து பாத்தான். நான் பேசக்கூட இல்ல. அப்புறம் அப்பாவுக்கு சரியானப்புறம் நான் காலேஜ் போன அன்னிக்கி தேவை இல்லாம வந்து என்ன என்னமோ பேசினான். ஒரு கட்டத்துல என்னால கோபத்தை கட்டுப்படுத்த முடியாம அறைஞ்சுட்டேன்"

"என்னது?" என அதிர்ந்தான் கணேஷ்

"ஆமா கணேஷ்... பொறுமையோட எல்லைக்கே கொண்டு போய்ட்டான் பாவி"

"உனக்கு கோபம் வரும்னே என்னால நம்ப முடியல சுமி" என கணேஷ் வியப்பாய் கூற

"அதான்... அதான் என்னால தாங்க முடியல... என்னோட இயல்பே மாத்தற மாதிரி இருந்த அவனோட செய்கை அவன் மேல இருந்த கோபத்தை வெறுப்பா மாத்திடுச்சு"

"ம்... அப்புறம் என்ன மெரட்டினானா?"

"இல்ல கணேஷ்... என் கண்ணு முன்னாடியே அதிகம் வர்ல... ஒண்ணு ரெண்டு வாட்டி பாத்தப்பவும் நான் கண்டுகல. அவனும் பேச முயற்சிக்கல. அப்புறம் ரெண்டு நாள் முன்னாடி தான்... " என அதுவரை சாதாரணமாய் பேசி கொண்டு இருந்தவள் விசும்பினாள்

"சுமி... ப்ளீஸ் அழாத... " என சமாதானம் செய்தான் கணேஷ்

"ம்...  ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணி நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். இல்லைனா அனிதாவை ஏமாத்தறதுக்குன்னு நாம போட்ட டிராமா அப்போ நாம லவ்வர்ஸ் மாதிரி பேசினதெல்லாம் ஆடியோ ரெகார்ட் பண்ணி வெச்சு இருக்கேன். அப்புறம் போட்டோஸ் கூட இருக்கு நாம சேந்து க்ளோசா இருக்கற மாதிரி ... எல்லாத்தையும் உன் கல்யாணதன்னைக்கி கொண்டு வந்து குடும்ப மானத்த வாங்கிடுவேன்னு மெரட்டறான்" என மீண்டும் விசும்பினாள்

"சுமி ப்ளீஸ்... அழாத.... இந்த மாதிரி கோழைத்தனமா போன்ல மெரட்டறவன் எல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டான். அவனை நான் பாத்துக்கறேன்... அவன் டீடைல்ஸ் சொல்லு" என எல்லா விவரங்களையும் பெற்று கொண்டு சென்றான் கணேஷ்

சுமேதா சொன்னதை இன்ஸ்பெக்டரிடம் கணேஷ் கூறி முடிக்க இன்னும் நம்பாத பார்வை பார்த்தார் இன்ஸ்பெக்டர்

"சரி கணேஷ்... அப்புறம் நீங்க போய் அந்த அருணை பாத்தீங்களா?"

"அன்னைக்கு சாயங்காலமே பாத்தேன் சார்... மெரட்டிட்டு வந்தேன்... பயந்த மாதிரி தான் இருந்தான்... ஆதாரம் எல்லாம் குடுன்னு கேட்டதுக்கு அப்படி எதுவும் இல்லை சும்மா சொன்னேன்னு சொன்னான்"

"சரி அதோட அவன் சாப்ட்டர் முடிஞ்சதல்ல... என்ன பிரச்சனை?" என இன்ஸ்பெக்டர் குழப்பமாய் பார்க்க

"என்கிட்ட பயந்த மாதிரி நடிச்சவன் அடுத்த நாள் சுமி கிராஸ் கட் ரோடுல ஏதோ ஷாப்பிங் போனப்ப அங்க அவளை பாலோவ் பண்ணி இருக்கான்...
ஆனா எதுவும் பேசல. எதாச்சும் திட்டம் போடரானோனு சுமி ரெம்ப டிஸ்டர்ப் ஆய்ட்டா. சுமேதா எனக்கு அங்க இருந்து மெசேஜ் பண்ணினா.

அதுக்கப்புறம் நாங்க பேசினது இதான்" என அந்த உரையாடல் பற்றி கூறினான்

"ஹலோ......நான் சுமேதா பேசறேன்"

"சுமி உன்னோட டெக்ஸ்ட் மெசேஜ் பாத்தேன்...  நீ ஒண்ணும் கவலை படாதே அவனை நான் க்ளோசா வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். நீ அவனை இனிமே எங்கயாச்சும் பாத்தா பயந்த மாதிரி காட்டாதே. அவனுக்கு நாமளே தைரியம் குடுத்த மாதிரி ஆய்டும்"

"ம்...ஒகே...அப்படியே செய்யறேன்"

"சுமி... ஏன் குரல் இப்படி குரல் நடுங்குது? நான் தான் பயபடவேண்டாம்னு சொல்றேன்ல?"

"ஆனா....கொஞ்சம் பயமா இருக்கு"

"நான் பாத்துக்கறேன்னு சொல்றேன்ல"

"ம்... உன்ன தான் நம்பி இருக்கேன்...."

"சரி... போய் நிம்மதியா சூர்யா கூட டூயட் பாடு" என கேலி செய்தான் கணேஷ் சூழ்நிலையை இலகுவாக்க முயன்று

"ஒகே வெச்சுடறேன்" என்றாள் சுமேதா

இதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் இல்ல சார்... ஆனா என்னதான் சுமிக்கு தைரியம் சொல்லி இருந்தாலும் கல்யாணதன்னைக்கி நான் தான் ரெம்ப பயந்து போய் இருந்தேன்... கல்யாணத்த கூட ரசிக்கற மூட்ல இல்ல... ஆனா கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா நடந்தது"

"ம்..."

"அதுக்கப்புறம் நேத்து நைட் தான் சுமி எனக்கு போன் பண்ணினா. கல்யாணதன்னைக்கி நைட் யாரோ போன் பண்ணி உன்னோட ரகசியம் எல்லாம் தெரியும்னு மெரட்டினதா சொன்னா....அது அவனோட குரல் இல்லைன்னு சொன்னா... ஆனா அவன் பல குரல்ல பேசறவன்னும் சொன்னா


அப்புறம் நேத்து காலைல சாய்பாபா கோவில் சிக்னல்கிட்ட அவனை பாத்ததா சொன்னா. அவனும் பாத்துட்டு ரெம்ப அதிர்ச்சியானதா சொன்னா. அப்புறம் நேத்து நைட் மாப்பிள்ளை செல்போன் எடுக்க கார்க்கு போனப்ப எதோச்சையா இவ ஜன்னல்ல வெளிய பாக்க இவங்க தங்கி இருந்த ஹோட்டல் முன்னாடி நின்னுட்டு இருந்தானாம்... அதை பாத்துட்டு பயந்து தான் சுமி போன் பண்ணினா. உடனே கிளம்பி வந்தேன்... நெறைய முறை ட்ரை பண்ணியும் சுமிய ரீச் பண்ண முடியல சார்...இதான் நடந்தது"

"உங்கள நம்பலாமா?" என இன்ஸ்பெக்டர் இன்னும் சந்தேகம் தீராமல் கேட்க

"இன்ஸ்பெக்டர் எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல... அதுவும் இல்லாம நான் மொதலே சொன்னா மாதிரி அவ எனக்கு தங்கை மாதிரி... அவள கண்டுபிடிக்க என்னால ஆன உதவிய செய்ய தான் நான் முயற்சி செய்வேன்" என அவ்வளவு தான் என்பது போல் மௌனமானான்

"ஒகே.... உங்களுக்கு அந்த ஆளை அடையாளம் தெரியும் இல்லையா... "

"தெரியும் சார்... அவனோட போட்டோ சுமி அடையாளத்துக்கு குடுத்தது என்னோட செல்போன்ல இருக்கு இதோ"

"ஓ... தட்ஸ் கிரேட்... லெட்ஸ் மூவ்"

"எங்க சார்?"

"வாங்க சொல்றேன்" என வெளியே சென்றார் இன்ஸ்பெக்டர்

மதிய வெய்யில் மண்டையை பிளக்க ஸ்டேஷன் முன் இருந்த இளநீர் கடையில் எல்லோருக்கும் இளநீர் சொன்னார்

அங்கு அமர்ந்து இருந்த சுரேஷும் சூர்யாவும் இன்ஸ்பெக்டரை பார்த்ததும் பதட்டமாய் எழுந்தனர்

"என்ன சார் ஆச்சு? உண்மைய சொல்லிட்டானா?" என கேட்டு முடிக்கும் முன் கணேஷும் பின்னோடு வர "இவனை எதுக்கு சார் வெளிய விட்டீங்க?" என சுரேஷ் அவனை தாக்க முயல

"ஸ்டாப் இட் சுரேஷ். லெட் மீ எக்ஸ்ப்ளெயின். கணேஷ்கிட்ட பேசினதுல புதுசா ஒரு க்ளு கிடைச்சு இருக்கு. உங்க தங்கையை ஒரு தலையா காதலிச்ச அருண். அவன் வேலையா இருக்கலாம்னு தோணுது"

"என்ன சார் சொல்றீங்க?"

"எஸ்... அவனை ஊட்டில பாத்து பயந்து தான் உங்க சிஸ்டர் கணேஷ்க்கு போன் பண்ணி இருக்காங்க"

"ஓ"

"மிஸ்டர் சூர்யா... இங்க பாருங்க இந்த ஆளை நீங்க இங்க எங்கயாச்சும் பாத்தீங்களா?" என இன்ஸ்பெக்டர் கணேசின் செல்போனில் இருந்த போட்டோவை காட்டி கேட்க இல்லை என்று தலையசைத்தான் சூர்யா

ஆனால் அவன் முகத்தில் குழப்பம் மிகுந்து இருந்ததை இன்ஸ்பெக்டர் கவனித்தார். திருமணமான ஒரு நாளில் இவ்வளவு பிரச்சனைகள் என்றால் என்ன செய்வான் பாவம் என அவன் மேல் பரிதாபம் தோன்றியது இன்ஸ்பெக்டருக்கு

"ஒகே... ஏற்கனவே இந்த போட்டோவை செக்போஸ்ட்க்கு அனுப்பிட்டேன். ஆளை பாத்தா பிடிச்சு வெக்க சொல்லி ஆர்டர் போட்டாச்சு. வாங்க மொதல்ல ஹோட்டல்ல விசாரிச்சுட்டு அப்புறம் என்ன செய்யறதுன்னு பாப்போம்"

மூவரும் இன்ஸ்பெக்டர் பின் சென்றனர்

_________________________________________

ஹோட்டல் சென்று ஜீப்பை நிறுத்தி விட்டு இன்ஸ்பெக்டர் உள்ளே செல்ல "வாங்க சார்" என பவ்யமாய் வரவேற்றான் வரவேற்பு பணியில் இருந்த கண்ணன்

"ம்.... யோவ்... இந்த போட்டோல இருகரவன இந்த பக்கம் எங்கயாச்சும் பாத்தியா?"

"சார்... இந்த ஆளு... இப்ப தான் சார்... அஞ்சு நிமிஷம் முன்னாடி நம்ம ஹோட்டல்ல ரூம் போட்டாரு... ரூம் நம்பர் பதினாலு சார். உள்ள தான் இருக்காரு"

"வாட்?" என அதிர்ந்த இன்ஸ்பெக்டர் உடனே ரூம் நோக்கி ஓட கணேஷ் சூர்யா சுரேஷ் மூவரும் பின்னே சென்றனர்

கதவு தடதடவென தட்டப்பட கதவை திறந்த அருண் இன்ஸ்பெக்டரை பார்த்து பதட்டமானான்

(தொடரும்...)

...

37 பேரு சொல்லி இருக்காக:

Maayavan said...

ஐ..!!
வட எனக்கு...!!

நசரேயன் said...

தங்கமணி அக்கா என்ன இது தினமும் ஒரு பகுதியா ?

நசரேயன் said...

இதில இருந்த தெரியுது .. உங்களுக்கு எவ்வளவு வேலைப் பளுன்னு

நசரேயன் said...

//நீண்ட நேரம் பேசியதில் மூச்சு வாங்க நின்றாள் சுமேதா //

படிச்ச எங்களுக்கும் தான்

//"இரு சுமி... தண்ணி எடுத்துட்டு வரேன்"//

பெப்சி தான் வேணும்

//"இனி என்ன செய்ய போகிறோம்"//

கதை ஆசிரியைகிட்ட தான் கேட்கணும்

என்னது நானு யாரா? said...

அப்பாவி அக்கா! கதை விருவிருன்னு போகுது. ராஜேஷ்குமார் நாவல் படிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்க் வருது.

சூப்பரு! அடுத்த பகுது எப்போ வரும்னு காக்க வைச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்!!

மகி said...

ம்ம்..கதை படுவேகமா போகுது புவனா! கலக்குங்க. :)

Matangi Mawley said...

superubbu.... :) exciting....

பத்மநாபன் said...

நிறைய திருப்பங்கள்...அருண் பையன் இப்படி பண்ணுவான்னு எதிர்ப்பார்க்கலை.. வகையாத்தான் மாட்டியிருக்கிறான் ...போலிஸ் கிட்ட இனி என்ன கதை சொல்ல போறானோ.... அது சரி நிங்களே தட்டறதா , இல்லை டைப்படிக்கன்னு நாலஞ்சு ஆள் வச்சிருக்கிங்களா..படிக்கறதுக்கே மூச்சு வாங்குதே...எப்படி இவ்வளவு வேகமாக .. வாழ்த்துக்கள்..

Gayathri said...

aahaa akkaa enna ithu twistku mela twist??

yaarana thangamani akkaakku oru jug juice kudungappaa

ஹேமா said...

இன்னும் இருக்கா தங்கமணி !தொடருங்கள்.

Guna said...

Super ponga....kathaiyum, neenga post podura speed-um.

கோவை ஆவி said...

அருண் கண்டிப்பா இதை செய்திருக்க முடியாது. ஏன்னா, அவளைக் கடத்தீட்டு மறுபடியும் அதே ஹோட்டல்லே தங்க மாட்டான். எனக்கென்னமோ சூர்யா மேல தான் மைல்டா டவுட் இருக்கு!! ( இதை என்னோட துப்பறியும் மூளை கண்டிபிடிச்சு சொல்லிச்சுப்பா!!)

இந்த வாரம் செம ஸ்பீடு.. கீப் இட் அப்!!

சின்ன அம்மிணி said...

இந்த எபிசோட் செம. அருமையா இருக்கு

முனியாண்டி said...

வாரவாரம் ஒரு டுவிஸ்ட் கலக்குங்க...புதுச யாரும் கதையில் வராமல் இருந்தால் சரி

அமைதிச்சாரல் said...

அப்ப.. டிராமாதானா :-)))

இந்தப்பகுதி எனக்கு பிடிச்சிருக்கே....

sandhya said...

சூப்பர்...மீதிக்கு வெய்டிங் ..இது போல அடுத்த பதிவும் சீக்ரமா போட மறக்காதிங்க ..நன்றி

சௌந்தர் said...

இது வரை சூப்பர் தொடரும்...

ஸ்ரீராம். said...

அப்போ அவனும் இல்லையா? அடுத்த ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்...ரைட்?

கோவை2தில்லி said...

பயங்கர த்ரில்லிங்கா போகுது. ஒன்று நினைத்தால் வேற மாதிரி இருக்கே. சூப்பர்.

சுசி said...

லவ்வ சொல்வாருன்னு எதிர்பார்த்தேன்.

மீதி எல்லாம் உங்க ஸ்டைல்ல அசத்திட்டிங்க புவனா :))

Krishnaveni said...

full speedula poguthu....very nice story writing, great

Arul Senapathi said...

It is going fast now. Amazing!!!

Ananthi said...

நெஜமாவே சூப்பர்ப்பா... ஆஹா.. அருண் ஏன் டென்ஷன் ஆகிறான்...? ஆஹா..அடுத்த பதிவு எப்போ...???
சீக்கிரமா.....சொல்லுங்கப்பா.. :-)))

அனாமிகா துவாரகன் said...

Soda Please. Sappa.

Venkatesh said...

சூப்பர், அடுத்த பகுதிக்காக வைடிங்

Ramki said...

Story sema superaa povuthu, egarly waiting for Next Part

அப்பாவி தங்கமணி said...

@ Maayavan - வடை உங்களுக்கே... சரி போஸ்ட் பத்தி சொல்லலியே... முதல் வருகைக்கு நன்றிங்க மாயவன்

@ நசரேயன் - எஸ் எஸ்... என்ன கொடும இது? போஸ்ட் போடலைனாலும் மெரட்டறீங்க... போட்டா "வேலை பளு"னு கிண்டல்... கர்ர்ர்ரர்.... பெப்சி பார்சல்ல வரும்... பெப்சி குடிச்சுட்டு அப்புறம் வந்து தெம்பா அடுத்த பார்ட் படிங்க இப்போ... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - ஆஹா... ராஜேஷ்குமார் நாவலா? ரெம்ப நன்றிங்க... இப்படி எல்லாம் சொன்னா அப்புறம் எனக்கு கால் தரைல நிக்காது... ஹா ஹா ஹா... அடுத்த பகுதி இன்னிக்கி போட்டுடறேன்

@ மகி - நன்றிங்க மகி

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்க... ஆஹா... டைப் அடிக்க ஆளா... அப்புறம் எங்க வீட்டுகாரர் என்னை அடிக்க ஆள் தேடிடுவார்... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி போஸ்ட்க்கும் ஜூஸ்க்கும்... எஸ் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் தான்... ஹா ஹா ஹா

@ ஹேமா - ஆமாங்க ஹேமா... இன்னும் இருக்கு... நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ Guna - ரெம்ப நன்றிங்க குணா...

@ கோவை ஆவி - உங்க துப்பறியும் மூளை சரியானு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணனும்... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் ஆனந்த்

@ சின்ன அம்மணி - தேங்க்ஸ்ங்க அம்மணி

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஹா ஹா அஹ... புது characters ஆ? introduce பண்ணிட்டா போச்சு.. உங்க ஆசைய ஏன் கெடுக்கணும்... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க அமைதிஅக்கோவ்

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா... இதோ இன்னிக்கி போட்டுடறேன்

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - தேங்க்ஸ்ங்க சௌந்தர்

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா...ரெம்ப வெறுத்துடீங்க போல இருக்கே ஸ்ரீராம் சார்... ஹா ஹா ஹா... நன்றிங்க...

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ சுசி ௦- தேங்க்ஸ் சுசி...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்

அப்பாவி தங்கமணி said...

@ ஆனந்தி - தேங்க்ஸ் ஆனந்தி... சீக்கரம் சொல்லிடறேன்... இதோ இன்னிக்கி நெக்ஸ்ட் பார்ட் ரிலீஸ்

@ அனாமிகா - ஹேய்...வெல்கம் வெல்கம்... சோடா பார்சல்ல வருது மேடம்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - தேங்க்ஸ்ங்க வெங்கடேஷ்... உங்களுக்கு பிடிச்ச ஸ்டைல்ல ஸ்டோரி போகுது இல்லையா இப்போ... இன்னிக்கி நெக்ஸ்ட் பார்ட் ரிலீஸ்

@ Ramki - தேங்க்ஸ்ங்க ராம்கி... இன்னைக்கே நெக்ஸ்ட் பார்ட் ரிலீஸ்

ஜெய்லானி said...

நல்ல சஸ்பென்ஸ் + லவ் ஸ்டோரி சூப்பர் ...!!!

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - Thank you

Post a Comment