Tuesday, September 14, 2010

அதே கண்கள்... (பகுதி 11)


இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

"சார்... இந்த ஆளு... இப்ப தான் சார்... அஞ்சு நிமிஷம் முன்னாடி நம்ம ஹோட்டல்ல ரூம் போட்டாரு... ரூம் நம்பர் பதினாலு சார். உள்ள தான் இருக்காரு"

"வாட்?" என அதிர்ந்த இன்ஸ்பெக்டர் உடனே ரூம் நோக்கி ஓட கணேஷ் சூர்யா சுரேஷ் மூவரும் பின்னே சென்றனர்

கதவு தடதடவென தட்டப்பட கதவை திறந்த அருண் இன்ஸ்பெக்டரை பார்த்து பதட்டமானான்

பின்னே வந்த மூவரையும் கண்டு மேலும் அதிர்ந்தான்

உள்ளே வந்த வேகத்தில் இன்ஸ்பெக்டர் அருணின் சட்டை காலரை பற்றி "அந்த பொண்ண எங்க வெச்சுருக்க...சொல்லு? சுமேதா எங்க?"

"ஐயோ... சுமி...சுமிக்கு என்ன ஆச்சு? ஐயோ... சொல்லுங்க சார்... சுமிக்கு என்ன ஆச்சு?" என பதற

"டேய் டேய்... இந்த நடிப்பெல்லாம் வேற யாராச்சும் ஏமாந்தவன்கிட்ட வெச்சுக்க... இப்ப ஒழுங்கா உண்மைய சொல்லு"

"சார்... சத்தியமா சொல்றேன்... எனக்கு ஒண்ணும் தெரியாது..."

"அப்ப இந்த ஊர்ல உனக்கு என்னடா வேல"

"சுமிய பாக்க வந்தேன்" தயக்கம் சிறிதுமின்றி கூறினான்

"பாத்தீங்களா சார்... எவ்ளோ திமிரா பேசறான்னு" என சுரேஷ் அவன் கன்னத்தில் அறைந்தான்

"சுரேஷ் ஜஸ்ட் ஸ்டே அவுட் ஆப் இட்" என இன்ஸ்பெக்டர் ஆணை போல் சொல்ல சுரேஷ் விலகி நின்றான்

"டேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு... இல்லேனா கொன்னுடுவேன்"

எதுவும் பேசாமல் சிரித்தான் அருண்

"என்ன திமிரா?" என இன்ஸ்பெக்டர் அறைய

"இல்ல சார்.... " என்றான் விரக்தியாய்

"டேய்..."

"சுமி... சுமிக்கு என்னாச்சு சார்... ப்ளீஸ் சொல்லுங்க சார்" என கெஞ்சினான்

"நீ இதுக்கெல்லாம் சரி வர மாட்டே... வா லாடம் கட்டறேன்"

"என்ன வேணும்னாலும் செய்ங்க சார்... சுமி எங்க ப்ளீஸ் சொல்லுங்க..." என்றவன் கணேசை கண்டதும் "சார் நீங்க தான அன்னிக்கி வந்து என்னை மெரட்டிட்டு போனீங்க... சொல்லுங்க சார்... சுமி எங்க சார்?" என கண்களில் நீர் வழிய கேட்க இன்ஸ்பெக்டர் அவன் கையில் விலங்கை மாட்டி

"நடடா ஸ்டேஷன்க்கு நான் சொல்றேன்... எங்கன்னு" என இழுத்து சென்றார்

சுரேஷின் முன்கோபத்தை கண் கூடாக பார்த்ததால் அவர்கள் மூவரையும் வெளியே இருக்கும் படி பணித்தார் இன்ஸ்பெக்டர்

ஸ்டேஷன் சென்று எத்தனை அடி அடித்தும் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான் அருண்

"ஒழுங்கா சொல்லு... சுமேதவை நீ காதலிச்சையா இல்லையா" என இன்ஸ்பெக்டர் முட்டியில் லத்தியால் தட்ட வலியில் உயிரே போனது

"என் உயிருக்கும் மேல சார்" என்றான்

"டேய்... " என இன்ஸ்பெக்டர் லத்தியை ஒங்க

"சார்... இதுக்கு மேல அடிச்சா நான் செத்துடுவேன் சார்... உடம்புல மனசுல எதுலயும் தெம்பில்ல சார்... எனக்கு சாகறது பத்தி கவலை இல்ல சார்... கடைசியா ஒரு தரம் சுமிய பாக்கணும் சார்... அதுவரைக்கும் எனக்கு உயிர் பிச்சை குடுங்க சார்" என அருண் விசும்ப

"ஒண்ணு இவன் நல்ல நடிகனா இருக்கணும் இல்லைனா இவன் சொல்றது உண்மையா இருக்கணும்" என இன்ஸ்பெக்டர் குழம்பினார்

"சரி... நடந்த எல்லாத்தையும் ஒண்ணு விடாம ஒழுங்கா சொல்லு... எதாச்சும் மறைச்சேன்னு சந்தேகம் வந்தா கூட விட்டு வெக்க மாட்டேன்" என இன்ஸ்பெக்டர் அவன் பேசினால் ஏதேனும் க்ளு கிடைக்குமோ என பேச செய்தார்

"சுமிய மொதல் மொதலா பாத்தப்பவே எனக்கே பொறந்தவனு தோணுச்சு சார்... பாத்த உடனே ஒருத்தர் மேல அவ்ளோ ஆசை எப்படி வரும்னு நானே ஆச்சிர்யப்பட்டேன் சார்... " என சிறிது நேரம் ஏதோ நினைத்து மௌனமானான்

"ம்... மேல சொல்லு" என இன்ஸ்பெக்டர் கூற

"ம்... அப்புறம் அவளுக்கு காதல்ல விருப்பம் இல்லைன்னு என் பிரெண்ட்ஸ் சொன்னதை கேட்டு பயந்து எப்படியும் அவ வேணுங்கற ஆசைல வேற ஒரு பொண்ணு மேல ஆசை பட்றதா சொல்லி அதுக்கு அவ உதவிய கேட்டேன்

அப்பவே நீ எப்படிடா வேற ஒருத்திய லவ் பண்ணலாம்னு கேப்பானு ஒரு நப்பாசை. அது நடக்கல. சரின்னு நானும் நடிச்சேன். ஆனா சீக்கரமே அவ கிட்ட உண்மைய சொல்லிட்டேன். ரெம்ப கோபபட்டா. அதெல்லாம் கூட நான் தாங்கிட்டேன்... ஆனா கடைசீல இனிமே பேசினா கண்ணுலபடாம போய்டுவேன்னு சொன்னா சார் "என விசும்பினான்

"ம்... மேல சொல்லு"

"என்னால முடியல சார்... "என அந்த நிகழ்வுகளை விவரிக்க தொடங்கினான்
________________________________________

தன்னை பற்றி தவறாக பேசிய போது கூட விடாமல் கெஞ்சியவன் "கண்ணுலபடாம போய்டுவேன்" என்ற வார்த்தையில் திகைத்து நின்றான் அருண்

அவளை காணாமல் ஒரு நாளும் தன்னால் இயலாது என்பதை உணர்ந்தே இருந்தான். விடுமுறை நாளில் கூட அவள் வீடு இருக்கும் தெருவில் இருக்கும் ஒரு நண்பனின் வீட்டிற்க்கு சென்று அவள் அறியாமல் அவளை காண்பான்

அப்படிபட்டவன் "கண்ணுலபடாம போய்டுவேன்" என்றதை எப்படி தாங்குவான். சுமேதா எந்த அளவிற்கு இரக்க குணமும் நல்ல மனமும் கொண்டவளோ அதே அளவிற்கு கோபமும் பிடிவாதமும் கொண்டவள் என்பதை இத்தனை நாளில் அவளை பற்றி அறிந்தே இருந்தான்

அவளை காணாமல் தவிப்பதை விட தூரத்தில் இருந்தேனும் பார்க்க முடிந்தால் போதுமென மௌனமானான். நிச்சியம் ஒரு நாள் அவள் தன் காதலை புரிந்து கொள்வாள் என நம்பினான்

அவளே கூறினாளே ஒரு வேளை நேரடியாய் காதலை கூறி இருந்தால் கூட ஏற்றிருப்பேனென. அவள் மனதில் சிறிதேனும் பாதிப்பை தான் ஏற்படுத்தியதால் தானே அவள் அப்படி கூறினாள் என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்

அவள் மனம் மாறும் நாளுக்காக ஒரு ஒரு நாளும் காத்திருந்தான்
____________________________________

தினமும் அவள் கல்லூரிக்கு வரும் நேரம் கல்லூரி வாசலிலேயே தன் நண்பர்களுடன் பேசி கொண்டு இருப்பான். அவள் கண் மறையும் வரை கண்ணால் பார்த்து மனதில் நிரப்பி கொண்டு அங்கிருந்து சென்று விடுவான். அவளுடன் எதுவும் பேசக் கூட முயற்சிக்கவில்லை

அவளுக்கு அவன் செய்கை எரிச்சல் அளித்த போதும் பேசாமல் கூட இருப்பவனிடம் என்னவென கோபம் கொள்வது என கண்டும் காணாதது போல் இருந்தாள்

அவளால் அவன் செய்த மடத்தனத்தை ஜீரணிக்க இயலவில்லை. என்ன தான் காரணம் சொன்ன போதும் அவள் கோபம் சற்றும் குறையவில்லை

தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதை தன் சுயமரியாதைக்கு கிடைத்த ஒரு அடியாய், அதற்கு காரணமான அவனை அடியோடு வெறுத்தாள்
____________________________________

அன்று எப்போதும் போல் கல்லூரிக்கு வந்து காத்திருந்தவன் சுமேதா வராமல் தவித்து போனான் அருண்

அவள் வகுப்பு தோழிகளிடம் கேட்க "தெரியவில்லை" என்றனர். அன்று முழுவதும் எதுவும் செய்ய இயலாமல் அவள் வீடு இருந்த தெருவிலேயே சுற்றி கொண்டு இருந்தான்

அவள் வெளியே வராமல் போக உடம்புக்கு ஏதேனும் சரி இல்லையோ என பயந்தான்

அடுத்த நாளும் அவள் கல்லூரிக்கு வராமல் போக தான் தினமும் இப்படி வந்து பார்ப்பது பிடிக்காமல் சொன்னது போல் கண்ணில்படாமல் போய் விட்டாளோ என பதறினான்

அந்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தி அவள் தோழி மூலம் வந்தது

சுமேதாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக அறிந்ததும் அவளுக்கு தன் தந்தை என்றால் உயிர் என ஒரு முறை சுமேதா கூறியது நினைவுவர எப்படி துடித்திருப்பாளோ என தவித்தான் அருண்

உடனே அவளை காண வேண்டும் போல் துடித்தான். ஆனால் அவளை நேரில் கண்டதும் காணாமலே இருந்திருக்கலாமோ என எண்ணினான்
____________________________________

அருண் சென்ற போது சுமேதாவின் தந்தைக்கு பைபாஸ் சர்ஜரி நடந்து கொண்டு இருந்தது. ஆபரேஷன் தியேட்டர் முன் இருந்த இருக்கையில் இருந்த சுமேதாவை கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவனுக்கு

அழுது அழுது கண்கள் சிவந்து முகம் வீங்கி, கண்களில் நீர் வழிய அமர்ந்து இருந்தவளை கண்டவனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல தோன்றியது

அவளை உரிமையோடு தன் தோளில் சாய்த்து கொண்டு ஆறுதல் கூற துடித்தான். தான் வந்ததை கூட உணர முடியாமல் துக்கத்தில் இருப்பவளிடம் என்ன பேசுவதென புரியாமல் விழித்தான்

அவள் சாயலில் இருந்த அவன் அவள் அண்ணனாக இருக்க வேண்டுமென யூகித்தான். அருண் சுமேதவை பார்த்து கொண்டு நிற்பதை அப்போது தான் கவனித்த சுரேஷ் அருணை நோக்கி வந்தான்

"நீங்க....?" என புரியாமல் பார்க்க

"ம்... நான் சுமேதாவோட க்ளாஸ்மேட் .. விஷயம் கேள்விபட்டேன்...அதான்" என தடுமாறினான் அருண்

மற்றொரு சமயமென்றால் அருணின் தடுமாற்றத்தில் சந்தேகம் கொண்டு தீர விசாரித்திருப்பான் சுரேஷ். அன்றிருந்த மனநிலையில் அவனுக்கு எதுவும் மனதில் பதியவில்லை

சுமேதாவிடன் அவனை அழைத்து சென்றான் சுரேஷ். அவனை கண்டதும் தன் துக்கத்தையும் மீறி கோபம் கிளம்பியது சுமேதாவிற்கு. தன் அண்ணனின் முன்கோபம் பற்றி அறிந்ததால் மௌனம் காத்தாள்

ஏன் வந்தாய் என்பது போன்ற ஒரு பார்வை அருண் மேல் வீசினாள். அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான்

"பயப்படாத சுமேதா... இப்ப இந்த சர்ஜரி ரெம்ப சகஜம் ஆய்டுச்சு... சீக்கரம் சரி ஆய்டும்" என கூற அவள் எதுவும் பேசாமல் கண்களை மூடி சாய்ந்தாள்

அருண் சங்கடமாய் சுரேஷை பார்க்க "சாரி... அவ மூட் அவுட்ல இருக்கா" என வருத்தம் தெரிவித்தான் சுரேஷ்

"இட்ஸ் ஒகே... சுமேதவோட அம்மா...?" என கேள்வியாய் நோக்க

"அப்பாவுக்கு இப்படி ஆனதும் அம்மா ரெம்ப பயந்துட்டாங்க... அதிர்ச்சில மயங்கிட்டாங்க. ரூம்ல மெடிசன் குடுத்து தூங்க வெச்சு இருக்கோம்" என கூற

"ஓ...சாரி... சரிங்க நான் கிளம்பறேன்" என விடைபெற்றான்

ஆனால் அங்கிருந்து செல்ல மனமின்றி மறைந்து நின்று வெகுநேரம் சுமேதாவை பார்த்து கொண்டே இருந்தான்
_____________________________________

சுமேதாவின் தந்தைக்கு ஆபரேஷன் நல்லபடியாய் முடிந்து அவள் கல்லூரிக்கு வரும் வரை தினமும் மாலையில் சிறிது நேரம் மருத்துவமனையில் மறைந்து நின்று அவளை பார்த்து வந்தான்

ஒரு வழியாய் சுமேதாவின் தந்தை குணமடைந்து அவள் கல்லூரிக்கு வந்த முதல் நாள் அவள் வருகைக்காக காத்திருந்தான் அருண். எப்போதும் போல் வாசலில் நண்பர்களுடன் நிற்காமல் அவள் வகுப்பிற்கு செல்லும் வழியில் நின்றிருந்தான்

அவளை தூரத்தே கண்டதுமே வெகு நாட்களுக்கு பின் அருண் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவள் அருகில் வர வர படபடப்பு அதிகமானது

தோழிகள் இருவருடன் பேசிக்கொண்டே வந்தவள் அவனை கண்டதும் காணாதது போல் நடக்க "சுமி..." என்றழைத்தான்

இப்போது அவள் தோழிகள் "பேசிட்டு வா... " என்று கூறிவிட்டு முன்னே நடக்க அவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள் சுமேதா

"சுமி ப்ளீஸ்... கோபப்படாதே... நான் எதுவும் கேக்கல... உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசினா போதும்... நான் கூட எதுவும் பேசல... உன்னோட குரலை கேட்டா போதும்... நான் போய்டறேன்... " என ஏக்கமாய் பார்க்க

"இப்ப என்ன புது டிராமா எதாச்சுமா? இதுல நீ மட்டும் தானா... இல்ல வேற யாரையாச்சும் ஏமாத்தி இன்வால்வ் பண்ணி இருக்கியா?" என ஏளனமாய் கேட்க

"சுமி ப்ளீஸ்... "

"ஸ்டாப் இட் அருண்... உனக்கென்ன பைத்தியமா"

"ஆமா உன்மேல பைத்தியம்"

"ச்சே... விருப்பம் இல்லைன்னு சொன்னபுறமும் எதுக்கு இப்படி தொந்தரவு பண்ற?"

"இல்ல சுமி... உன்னையே நீ ஏமாதிக்கற... உன் மனசுல எனக்கு எடம் இருக்கு"

"வாட் த ஹெல்? நான் உன்னை வெறுக்கறேன்... உலகத்துல நான் வெறுக்கற ஒரே ஜீவன் நீ தான் போதுமா"

"சுமி... வேண்டாம்...வார்த்தைகள கொட்டாத... பின்னாடி நீயே வருத்தப்படுவ"

"என்ன மெரட்டறையா? என்னை என்ன செய்வ... கொன்னுடுவயா? சொல்லு கொன்னுடுவயா?" என கோபத்தில் கத்த

"என்ன சுமி இது? உன்ன கொன்னுட்டு எனக்கு என்ன இருக்கு வாழ?"

"ச்சே... உன்னோட வசனம் கேட்டு கேட்டு வெறுத்து போச்சு... அதை எங்க திருடினயோ"

"நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ... பின்னாடி நீயே வருத்தப்படுவனு நான் சொன்னது நாம ஒண்ணு சேந்தபுரம் இப்படி என்னை பேசினதுக்காக நீ வேதனை படகூடாதுங்கற அர்த்ததுல தான்... "

"அப்படி வேற ஒரு எண்ணம் இருக்கா... கனவுல கூட அது நடக்காது... "

"ஏன் சுமி இப்படி எல்லாம் பேசற? அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல உன்னை அப்படி பாத்ததுல இருந்து மனசே சரி இல்ல சுமி... உன்கிட்ட பேசணும்னு ஒரே தவிப்பா இருக்குடா ப்ளீஸ்" என உரிமையாய் அவள் கையை பற்றினான்

ஏற்கனவே அவனை கண்டதும் கோபத்தில் இருந்த சுமேதா உரிமை உள்ளவன் போல் பேசியதும் தன் கையை பற்றியதும் கோபத்திற்கு மேலும் தூபம் போட சுற்றுப்புறத்தையும் மறந்து தன் ஐந்து விரல்களும் அவன் கன்னத்தில் பதிய ஓங்கி அறைந்தாள்

அதை சற்றும் எதிர்பாராத அருண் நிலைகுலைந்து போனான். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க அவமானத்தில் செய்வதறியாது தலை குனிந்தான்

சுமேதா எப்போதும் எல்லோரிடமும் நட்புடனும் அன்புடனும் இருப்பது மட்டுமே பார்த்து பழகிய எல்லோரும் அவளின் இந்த கோபத்தை நம்ப முடியாமல் பார்த்தனர். அவளுக்கே அந்த செய்கை வேதனையை அளித்தது

ஆனால் அவனை அடித்ததற்காக அவள் வேதனை படவில்லை. அவன் செய்கைக்கு இது தான் சரியான தண்டனை என நினைத்தாள்

தன் அமைதியான இயல்பே மீற செய்யும் அளவுக்கு நடந்து கொண்ட அவன் மேல் முன்னெப்போதையும் விட கோபமும் வெறுப்பும் அதிகமானது. தன் வாழ்வில் இப்படி ஒருவனை சந்திக்காமலே இருந்திருக்கலாமென தோன்றியது அந்த கணம் தான்

"என்ன சுமேதா இது?" என தனக்காக வக்காலத்து வாங்கிய தன் நண்பர்களை தடுத்தான் அருண். எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்றான்

அந்த சம்பவத்திற்கு பின் சுமேதாவின் முன் அருண் வரவில்லை. எல்லார் முன்னிலும் அவள் அடித்தததால் அவள் கல்லூரிக்குள் வரவும் தயக்கமாய் இருந்தது

அப்படியும் மனம் தாங்காமல் ஓரிருமுறை வந்த போது அங்கு இருந்தவர்களின் ஏளன பார்வை கொல்வதாய் இருந்தது. அதையெல்லாம் கூட துச்சமாய் மதிக்க தயாராய் இருந்தான் அவள் கடைக்கண் பார்வை பட்டால் போதுமென

ஆனால் அவளோ அவனை கண்டாலே ஏதோ அசிங்கத்தை மிதித்தது போல் முகம் சுளித்தாள். அவனை கட்டோடு வெறுக்கிறாள் என்பதை உணர்ந்தான். ஆனாலும் முழு நம்பிக்கை இழக்கவில்லை அவன் காதல் கொண்ட மனம்

தன் காதல் உண்மையென்றால் ஜெய்க்கும் என சுமேதாவிடம் முன்பொருமுறை கூறியதை இப்போது தனக்கு தானே கூறிக்கொண்டான்

இப்படியே சில மாதங்கள் ஓடின. கல்லூரி இறுதி தேர்வுகளும் முடிந்தது. அப்போது தான் மிகவும் தவித்து போனான்

கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்த வரை திருட்டுத்தனமாகவேனும் அவளை கண்டு ஆறுதல் கொண்டிருந்தவன் கல்லூரி முடிந்த பின் அவளை காண முடியாமல் சோர்ந்து போனான்

அந்த சமயத்தில் இடியாய் வந்த ஒரு செய்தி அவனை புரட்டி போட்டது

அருண் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளும் சீட்டு கட்டு வீடாய் சரிந்தது அந்த செய்தியை கேட்ட நொடி...

எதற்கும் கலங்காதவன் வாய் விட்டு கதறினான்

அப்போது தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தான்

இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

...

39 பேரு சொல்லி இருக்காக:

நசரேயன் said...

//என்னால முடியல சார்... //

எங்களாலையும் தான்

நசரேயன் said...

//விபரீதமான முடிவை எடுத்தான் //

அது என்ன ?

Porkodi (பொற்கொடி) said...

padichachu, waiting for next part! orediya lasta comment solren :)

முனியாண்டி said...

It's too good....you are very good writer.

சௌந்தர் said...

அப்போது தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தான்///

அது சரி


ரொம்ப நல்லா எழுதுறிங்க

அமைதிச்சாரல் said...

அருமையா இருக்குப்பா.. நெஜமாவே.

BalajiVenkat said...

//அருமையா இருக்குப்பா.. நெஜமாவே. //// lols...

but really it is good.... :)

மார்கண்டேயன் said...

ம்ம் . . . இன்னும் எத்தன பார்த்து போதறதா உத்தேசம் ?

மார்கண்டேயன் said...

பார்த்து போதறதா = பார்ட்டு போடறதா

:)

Gayathri said...

aaha thirunbha suspensa?? sekram adutha pagam podunga

சே.குமார் said...

அருமையா இருக்கு.
நீளத்தைக் குறைத்து இட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Krishnaveni said...

looks you are a good writer, keep going

பத்மநாபன் said...

கதை சொல்லும் பாங்கு அசத்தல்.....சரி அப்ப,அது யாரா இருக்கும்..ஒரே கன்பியுசன் ஆயிருச்சே... அதுதான் வெற்றி...அசத்துங்க....

Arul Senapathi said...

Thanks for publishing the next chapter so soon.

Yes, now we have read it.

Next please.

Thanks
Arul

சுசி said...

என்ன முடிவு?? சீக்க்க்க்கிரம் சொல்லுங்க புவனா..

சின்ன அம்மிணி said...

அடுத்தது சீக்கிரம்

என்னது நானு யாரா? said...

அக்கா! அதிகமா வேகம் இப்போத் தான் கதையில வருது. தூள் கலப்புங்க!

ஸ்ரீராம். said...

ம்....

sandhya said...

புவனா சூப்பர் .கதை இந்த வரஷம் முடியுமா இல்லையா ?முடியாத பக்ஷத்தில் நானும் எதா விபிரீத முடிவு எடுக்க வேண்டியதா வரும் சொல்லிட்டேன் ஹூம் .

கோவை2தில்லி said...

அருமையாக இருக்கிறது. பதிவு நீளத்தை குறைத்து போட்டால் நன்றாக இருக்கும்.

மகி said...

நான் சொன்னன்ல?சொன்னன்ல?:)
ம்ம்..இப்ப சுமேதா எங்கே போனாங்க? சீக்கிரம் சொல்லுங்க புவனா!

Porkodi (பொற்கொடி) said...

//பதிவு நீளத்தை குறைத்து போட்டால் நன்றாக இருக்கும்.//

விடிஞ்சது வெள்ளாமை.. ஏங்க நீங்க வேற?

vgr said...

ahhhhhhhhhhhhhhhhhhhhhhhh.....part 11 ellam vanduruke..kandippa mudichurupeenga endra nanmbikai yil ore moochil 6,7,8,9,10,11 nu ella part ayum padichaaaaaaaaaaaaaa.....

ippadi panneenteengale.....seekram mudichupodungo....

kadaya padikarchey nalla iruku....ana cinema va yosichu pakren.....writing is so good illaya....u can tell a lot...

waiting for part 12...............

vinu said...

super super suuuuuuuuuuuuuuuuuuuuper

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - ஹா ஹா ஹா... என்ன முடிவுன்னு அடுத்த பார்ட்ல பாருங்க... தேங்க்ஸ்

@ பொற்கொடி - ஹாய் கொடி... வாங்க வாங்க... ஆஹா இப்படி எல்லாரும் லாஸ்ட்ல சொல்றேன் லாஸ்ட்ல சொல்றேன்னா இப்படி எழுதறது... அப்பப்ப நாலு வார்த்த சொன்னா தானே ஆகும்... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் கொடி

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி ௦- தேங்க்ஸ்ங்க

@ சௌந்தர் - தேங்க்ஸ்ங்க சௌந்தர்

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - ஆஹா வராதவங்கெல்லாம் வந்துருகீக... வாங்க வாங்க... தேங்க்ஸ் பாலாஜி

@ மார்கண்டேயன் - அதாங்க எனக்கும் தெரியல... எழுத எழுத வந்துட்டே இருக்கு... ஹா ஹா அஹ.. தேங்க்ஸ்ங்க

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி... சீக்கரம் போட்டுடறேன்

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - தேங்க்ஸ்ங்க குமார்... நீளத்த கொறச்சு போட்டா கொலை மிரட்டல் வருதே... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்

@ Krishnaveni - தேங்க்ஸ் அ லாட் வேணி

@ பத்மநாபன் - யாரா இருக்கும்... ? நானும் தேடிட்டே இருக்கேன், கண்டுபிடிச்சதும் சொல்லிடறேன்... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ் அருள்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்

@ சுசி - சீக்கரம் சொல்றேன் சுசி... தேங்க்ஸ் பா

@ சின்ன அம்மணி - ஆஹா... நன்றி நன்றி உங்கள் ஆர்வத்துக்கு... சீக்கரம் போட்டுடறேன்

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - தேங்க்ஸ்ங்க...

@ ஸ்ரீராம் - ம்... நன்றிங்க

@ sandhya - ஹா ஹா ஹா... சூப்பர் கொஸ்டின் சந்த்யா... கதை இந்த வருஷம் முடியணும்... சுமேதா கிடைச்சா முடிஞ்சுடும்... ஆஹா... நீங்க விபரீத முடிவெல்லாம் வேண்டாம் மேடம்... நான் சீக்கரம் போடறேன்... தேங்க்ஸ் சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்ங்க... பதிவு நீளத்தை குறைச்சு போட்டா கொலை மிரட்டல் வருதே... உங்க நம்பர் குடுத்துடட்டுமா... ? ஹா ஹா ஹா...

@ மகி - எஸ் எஸ்... நீங்க சொன்னீங்க... சூப்பர் மகி... சீக்கரம் சொல்றேன் மகி... தேங்க்ஸ்மா

@ பொற்கொடி - // விடிஞ்சது வெள்ளாமை.. ஏங்க நீங்க வேற?// ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ஹா ஹா ஹா... ஏமாந்துட்டீங்களா? சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்... தேங்க்ஸ்

@ vinu - தேங்க்ஸ்ங்க வினு

ஜெய்லானி said...

சூப்பர் லவ் ஸ்டோரி..!!

திவா said...

ரொம்ப இழுக்குது!

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - thank you

@ திவா - பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்... சீக்கரம் முடிக்க முயற்சிக்கறேன்... நன்றிங்க

அஹமது இர்ஷாத் said...

நல்ல கதை..

அப்பாவி தங்கமணி said...

@ அஹமது இர்ஷாத் - தேங்க்ஸ்ங்க அஹமது

Ananthi said...

சூப்பர்.. ஓகே.. அடுத்த பாகம் படிக்க போறேன்.. :)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - yes yes..thank you

Post a Comment