Monday, September 20, 2010

அதே கண்கள்... (பகுதி 12)இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

இப்படியே சில மாதங்கள் ஓடின. கல்லூரி இறுதி தேர்வுகளும் முடிந்தது. அப்போது தான் மிகவும் தவித்து போனான் அருண்

கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்த வரை திருட்டுத்தனமாகவேனும் சுமேதாவை கண்டு ஆறுதல் கொண்டிருந்தவன் கல்லூரி முடிந்த பின் அவளை காண முடியாமல் சோர்ந்து போனான்

அந்த சமயத்தில் இடியாய் வந்த ஒரு செய்தி அவனை புரட்டி போட்டது

அருண் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளும் சீட்டு கட்டு வீடாய் சரிந்தது அந்த செய்தியை கேட்ட நொடி...

எதற்கும் கலங்காதவன் வாய் விட்டு கதறினான். தன் பெற்றவர்களை இழந்த போது கூட இப்படி கலங்கவில்லை

பதிமூன்று வயதில் ஒரு விபத்தில் பெற்றவர்களை இழந்து மாமா வீட்டில் தஞ்சம் புகுந்தான்

என்னதான் அத்தையும் மாமாவும் அருமையாய் பார்த்து கொண்டாலும் தங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் உரிமையாய் கோபித்து கொள்வதும் தான் தவறே செய்தாலும் தட்டி கேட்காததும் அவனை விலக்கி வைத்தது

ஒன்பதாம் வகுப்பு வந்ததும் பிடிவாதம் பிடித்து விடுதியில் சேர்ந்தான். அன்று முதல் தனிமை வாழ்க்கைக்கு தன்னை பழக்கி கொண்டான்

சுமேதவை காணும் வரை தான் ஒரு அனாதை என்ற எண்ணமே அவன் மனதில் இருந்தது. அவளை கண்டதும் இவள் தான் இனி தனக்கு எல்லாம் என மனதில் பதிந்து கொண்டான்

தனக்கு மனைவியாய் மட்டுமின்றி தன் அன்னை விட்டு சென்ற இடத்தையும் நிரப்பி தன் அர்த்தமற்ற வாழ்கையை முழுமைப்படுத்துவாள் என நம்பினான்

இதையெல்லாம் அவளிடம் கூற அவனை ஏதோ தடுத்தது. அனுதாபம் தேட பொய் சொல்கிறேன் என்று கூட நினைப்பாளோ என அச்சமாய் இருந்தது

என்றேனும் ஒரு நாள் சுமேதா தன்னை புரிந்து கொள்வாள். அவள் மீது தான் கொண்ட காதலை உணர்ந்து தன் சிறிய தவறுகளை மன்னிப்பாள் என அவன் கட்டி இருந்த மனக்கோட்டை நண்பன் ஒருவன் மூலம் சுமேதாவிற்கு திருமணம் முடிவான செய்தி வந்த போது சுக்கு நூறாய் உடைந்தது

அப்போது தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தான்

_______________________________________

சுமேதா கிட்டத்தட்ட அருணை மறந்தே போனாள்

அன்று கல்லூரியில் எல்லோர் முன்னிலையிலும் அவனை அடித்த பின் ஓரிருமுறை தவிர அவள் கண்ணில் கூட அவன் படவில்லை என்பதால் நிம்மதியானாள்

அதற்குள் இறுதி தேர்வுகளும் அருகில் வர அதில் கவனம் செலுத்தியவள் அருணை மறந்தே போனாள் எனலாம்

தேர்வுகள் முடிந்து இரண்டாவது வாரம் சூர்யா அவளை பெண் பார்க்க வந்தான். முதலில் இப்போது திருமணம் வேண்டாம் இப்போது தானே தேர்வு முடிந்தது என்றவள் சூர்யாவின் புகைப்படத்தை பார்த்ததும் மனம் மாறினாள்

முதலில் போட்டோவை காட்டி அவளுக்கு பிடித்து இருக்கிறது என அறிந்த பின்னே அவள் பெற்றோர் சூர்யாவின் வீட்டினரை அழைத்து இருந்தனர்

நேரில் பார்க்க இன்னும் கம்பீரமான ஆண்மகனாய் இருந்தான் சூர்யா. வீட்டிற்கு ஒரே பிள்ளை. நல்ல படிப்பு, பண்பு, அந்தஸ்து, வேலை, நல்ல குடும்பம் எல்லாம் தீர விசாரித்த பின்பே பெண் பார்க்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது

முதல் பார்வையிலேயே சுமேதாவின் வீட்டில் எல்லாருக்கும் சூர்யாவை பிடித்து போனது. அதே போல் தான் சுமேதவையும் அவர்கள் எல்லோருக்கும் பிடித்து போனது, முக்கியமாக சூர்யாவிற்கு

சூர்யாவின் அன்னை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். திருமணமே வேண்டாமென கூறி வந்த பிள்ளை சுமேதாவின் புகைப்படத்தை பார்த்ததுமே சம்மதம் சொன்னதில் மிகவும் மகிழ்ந்தார்

வீணான ஆடம்பரம் விரும்பாத இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் பிடித்து போன பின் காலம் தாழ்த்தல் எதற்கென அந்த பெண் பார்க்கும் வைபவத்தையே நிச்சியதார்த்த விழவாக்கினர்

இதை யூகித்தோ என்னமோ சூர்யாவின் அன்னை சூர்யா சுமேதா இருவருக்கும் "எஸ்" என்ற எழுத்தை கொண்ட மோதிரங்களை வாங்கி இருந்தார்... சுமேதாவின் விரல் அளவு தெரியாததால் அவளுக்கு அட்ஜஸ்டபள் வகை மோதிரம் என எல்லாம் அழகாக திட்டமிட்டு செய்து இருந்தார்

சூர்யா சுமேதாவின் பட்டு விரல்களில்  மோதிரம் அணிவிக்க அவனின் பார்வையின் ஆழத்தை தாங்கமாட்டாமல் தலைகுனிந்தாள். தானும் அவன் விரலில் மோதிரம் அணிவித்தாள்

அதன் பின் சுமேதாவிற்கு உலகமே மறந்து போனது. எப்போதும் சூர்யாவுடன் செல்போன் பேச்சுகளும் அவனுடன் தான் வாழப்போகும் அழகிய வாழ்வை பற்றிய கற்பனைகளுமாகவே பொழுது கழிந்தது

அன்று நிச்சியம் முடிந்த ஐந்தாவது நாள். அவள் செல்போன் ஏனோ காலை முதலே வேலை நிறுத்தம் செய்ய அதை சரி செய்து வரும்படி தன் அண்ணனிடம் கொடுத்தாள்

"ஒரு நாளைக்கி இருபத்திநாலு மணிநேரமும் அதை வேலை வாங்கினா அது என்ன செய்யும் பாவம்... அதான் இன்னிக்கி ஸ்டரைக் பண்ணுது போல... சரி விடு சுமி... இன்னிக்கி ஒரு நாள் சூர்யா நிம்மதியா இருக்கட்டும்" என தங்கையை சீண்டினான் சுரேஷ்

"என்னண்ணா நீ? போ... " என தங்கை முகம் சுருங்க, தாங்கமாட்டாதவனாய்

"ஒகே ஒகே... சும்மா வம்புக்கு சொன்னேன் சுமி... கண்டிப்பா சரி பண்ணிட்டு வரேன்... இன்னிக்கி வேணும்னா என்னோட போன் யூஸ் பண்ணிக்கறையா" என சுரேஷ்  அன்புடன் தங்கையை பார்க்க

"இல்லண்ணா வேண்டாம்... உனக்கு அபீசியல் கால்ஸ் எல்லாம் வரும் இதுல... ஒரு நாள் தானே... இட்ஸ் ஒகே" எனவும்

"சரிடா... நான் கெளம்பறேன். அம்மா அப்பா கோவில் போய்ட்டாங்க இல்ல... கதவை சாத்திக்கோ... பெல் அடிச்சா பாத்துட்டு தெற" என சுரேஷ் எச்சரிக்க

"ஐயோ...அண்ணா... எனக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்... நீ இன்னும் என்னை மூணு வயசு கொழந்தை மாதிரி ட்ரீட் பண்ற" என பெருமையாய் சலித்துகொள்ள

"என் சுமி எனக்கு எப்பவும் கொழந்தை தான்.... ஒகேடா பாய்" என சுரேஷ் கிளம்ப கதவை சாத்திவிட்டு உள்ளே வர அதே நேரம் வீட்டு தொலைபேசி அலறியது

சூர்யா தான் செல்போனுக்கு முயற்சித்துவிட்டு இதற்கு அழைக்கிரானென தீர்மானமாய் விரைந்து தொலைபேசியை எடுத்த சுமேதா அதே வேகத்தில் "சூர்யா... செல்போன்க்கு ட்ரை பண்ணி பாத்துட்டு இதுக்கு கூப்பிடறீங்க கரெக்டா... எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா உங்க சுமி" என காதல் வழிய பேச எதிர்முனையில் பதில் வராமல் போக

"ஹலோ... ஹலோ...சூர்யா..." என தவிப்பாய் அழைக்க

அவளின் அந்த தவிப்பு எதிர்முனையில் இருந்தவனை கொன்று குழியில் போட்டது. அது வேறு யாருமல்ல, அருண் தான்

தனக்காக இருக்க வேண்டிய இந்த தவிப்பு இன்று வேறு ஒருவனுக்காக என்பதை அவனால் தாங்க இயலவில்லை

அதிலும் "உங்க சுமி" என அவள் கூறியது அருண் மனதை குத்தி கிழித்தது. எத்தனை நாட்கள் அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை இது போல் வராதா என ஏங்கி இருப்பேன் என தவித்தான்

சற்று நேரம் தான் சூர்யா போல் பேசி இன்னும் கொஞ்சம் அவளின் அன்பு வழியும் குரலை கேட்க வேண்டும் போல் மனம் துடித்தது

அடுத்த கணம் அந்த யோசனையை உதறினான். ஒரு தரம் விளையாட்டாய் சொன்ன பொய் இன்னும் கொன்று கொண்டு இருக்கிறது. மீண்டும் அதே தவறை செய்ய தைரியம் வரவில்லை

வெகு நேரம் எதிர்முனையில் பதில் வராமல் போக சுமேதாவிற்கு குழப்பம் ஆனது. ஒருவேளை சூர்யா வேண்டுமென்றே தவிக்கவிடுகிறாரா இல்லை வேறு யாரேனும் போன் செய்து தான் உளறி விட்டோமா என தடுமாறினாள்

"ஹலோ... யாருங்க லைன்ல?" என சாதாரண குரலில் பேச சற்று முன் அவள் குரலில் இருந்த அந்த குழைவும் காதலும் இல்லாததை உணர்ந்தான் அருண்

அது சூர்யாவிற்கு மட்டுமே சொந்தமோ என அந்த முகமறியா ஆணின் மீது கோபம் கொப்பளித்தது

இன்னும் பேசுவது தானென தெரிந்தால் இந்த சாதாரண குரலில் கூட கடுமை ஏறி விடும் என்பதை நினைக்க வேதனையில் கண்களில் நீர் துளிர்த்தது

ஆனால் வேறு வழியில்லை பேசியே ஆக வேண்டும். இனியும் தாமதித்தால் சுமி என்னை விட்டு வர முடியாத தூரத்திற்கு சென்று விடுவாள் என உணர்ந்தவன் "ஹலோ சுமி" என்றான்

சுமேதா குரலை கேட்டதுமே அருண் என்பதை அறிந்து கொண்டாள். பலநாள் பேசாத போதும் அவன் குரல் மற்ற எல்லோரின் குரலில் இருந்து மாறுபட்டு ஒரிருமுறை பேசியவர்களே அடையாளம் காண கூடிய தனித்தன்மை வாய்ந்த குரல் என்பதால் சுமேதா அருண் என்பதை அறிந்து கொண்டாள்

கோபம் வந்த போதும் அதனை அடக்கியவள் "சொல்லு அருண்" என்றாள் சாதாரணமாய்

இதை எதிர்பாராத அருண் அவள் தன்னை திருமணம் செய்ய சம்மதித்ததர்க்கு இணையாய் மகிழ்ந்தான்

"சுமி... என்னோட வாய்ஸ்... எப்படி நீ... கேட்டதும்" என உணர்ச்சி குவியலாய் தடுமாற ஒளிந்திருந்த கோபம் முன்னே வந்தது சுமேதாவிற்கு

"இங்க பாரு அருண்... உன்னோட கதை கேக்க எனக்கு நேரமில்ல... எதுக்கு போன் பண்ணின...அதை சொல்லு..." என கடுமையாய் பேச முகம் வாடினான் அருண்

"சுமி...உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்குனு கேள்விபட்டேன் உண்மையா?" என இன்னும் நம்ப முடியாமல் கேட்டான்

"ஆமா... உண்மை தான்"

"சுமி... என்ன சுமி இப்படி சொல்ற? நான் உன்மேல உயிரையே வெச்சுருக்கேன்னு உனக்கு தெரியாதா? என்கிட்ட இல்லாதது அந்த சூர்யாகிட்ட என்ன இருக்கு?" என கோபமும் வருத்தமுமாய் கேட்க

"சட் அப்... அவர் பேரை சொல்ற தகுதி கூட உனக்கில்ல... போனை வெய்யி"

"சுமி ப்ளீஸ் நான் சொல்றத கேளு"

"முடியாது"

"சுமி... அப்புறம் நீ ரெம்ப வருத்தப்பட வேண்டி இருக்கும்" என்றான் குரலில் கடுமை ஏற்ற முயன்று

அவள் பதில் கூறாமல் தொலைபேசியை வைத்தாள். கோபத்தில் முகம் சிவந்தது சுமேதாவிற்கு

மறுபடியும் தொலைபேசி அலற அடித்து ஓய்ந்தது

மறுபடியும் அலற ஒரு வேளை சூர்யாவாக இருந்தால் என மனம் கேளாமல் எடுத்து "ஹலோ" என்றாள் சாதாரணமாய்

"சுமி... போன் வெச்சுடாதே... அப்புறம் காலம் பூரா நீ அழ வேண்டி இருக்கும்... உன்னோட சூர்யா உனக்கு கெடைக்க மாட்டார்" என எங்கு தொட்டால் வலிக்குமோ அங்கு தொட்டான் அருண்

"அருண் ப்ளீஸ்... வேண்டாம்...அவருக்கு எதாச்சும் ஆச்சுன்னா... அப்புறம்... அப்புறம் நான்... "என சுமேதா விசும்ப அவள் அழுவதை பொறுக்க முடியாமல் அதே சமயம் இளக்கம் காட்டினால் போனை வைத்துவிடுவாளென தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டான்

"அழுது என்னை இளக வெக்கலாம்னு தப்பு கணக்கு போடாதே. அந்த காலம் எல்லாம் முடிஞ்சுது. ஒழுங்கா நான் சொல்றதை குறுக்க பேசாம கேளு"

"...." எதிர்முனையில் பதில் வராமல் போக

"ஹலோ... லைன்ல இருக்கியா இல்லையா?" என அதட்டலாய் கேட்க

"ம்... " என்றாள் சுமேதா அழுகையை அடக்க முயன்றபடி

"இங்க பாரு... மூணு நாள் டைம் தர்றேன்... அதுக்குள்ள என்னை தேடி நீ வரணும்... என்னை கல்யாணம் பண்ணிக்கணும்... இல்லேனா அனிதாவை ஏமாத்தறதுக்குன்னு நாம போட்ட டிராமா அப்போ நாம லவ்வர்ஸ் மாதிரி பேசினதெல்லாம் ஆடியோ ரெகார்ட் பண்ணி வெச்சு இருக்கேன். அப்புறம் போட்டோஸ் கூட இருக்கு நாம சேந்து க்ளோசா இருக்கற மாதிரி ... எல்லாத்தையும் உன் கல்யாணதன்னைக்கி கொண்டு வந்து குடும்ப மானத்த வாங்கிடுவேன். அது மட்டுமில்ல... சூர்யாவும் உனக்கு கெடைக்க மாட்டான். அவன் மானமும் சேந்து தான் போகும்... " என பேசிக்கொண்டே போனவனை இடைமறித்தாள்

"அருண் ப்ளீஸ்... உன்னை நம்பி உனக்கு உதவின்னு செஞ்சதுக்கு இது தான் நீ செய்யற கை மாறா?" என விசும்ப இதற்கு மேலும் பேசினால் தன் பலவீனம் வெளிபட்டுவிடுமென

"நான் வெக்கறேன்... மூணு நாள் டைம் மறந்துடாதே" என அவள் பதிலை எதிர்பாராமல் துண்டித்தான்

போன் வெச்சதும் அவன் மேலேயே கோபம் பொங்கியது. இந்த வாய் தானே பேசி சுமிய அழ வெச்சது என ஓங்கி தன்னை தானே அடித்து கொண்டான்

அடுத்த வந்த நாட்கள் நத்தையாய் நகர்ந்தது அருணுக்கு. சுமேதாவிடம் பேச துடித்த இதயத்தை அடக்கினான். பொறு இன்னும் இரு நாட்கள் மட்டுமே... அப்புறம் உனக்கே உனக்காய் அவள் என சமாதானம் செய்து கொண்டான்
__________________________________

அடுத்த நாள் மாலை நான்கு மணி. வீட்டின் கதவு தட்டப்பட "இந்த நேரத்துல யாரு?" என நினைத்துகொண்டே "ஒரு வேளை சுமியா" என நினைத்தவன் முகம் மலர அடுத்த கணம் கதவை திறந்தான்

அங்கே நின்றிருந்தவனை இதற்கு முன் பார்த்தது போல் இல்லை

"யார் நீங்க? என்ன வேணும்?"

வந்தவன் பதில் கூறாமல் அருணை அளவெடுப்பது போல் பார்த்தான்

"ஹலோ... யார் சார் நீங்க?" என மறுபடியும் கேட்க

"கொஞ்சம் பேசணும்... உள்ள வரலாமா?"

"நீங்க....?" என தயங்க

"சுமிய பத்தி பேசணும்... உள்ள வரலாமா இல்ல போகட்டுமா?" என கோபமாய் கேட்க

சுமி என்றதும் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல் வழி விட்டான்

வந்தவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தி தாளிட்டான்

"கதவை....ஏன்?" என அருண் தடுக்க முயல

"அதான் பேசணும்னு சொன்னனே" என கடுமையாய் கூற எதுவும் பேசாமல் அமர்ந்தான் அருண்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை

அருண் இவன் யாராய் இருக்கும் என மண்டையை உடைத்து கொண்டான்

ஒரு வேளை இவன் தான் மாப்பிள்ளையோ, சுமி கட்சிக்காரன் காலில் விழுவதே மேல் என சொல்லி விட்டாளோ... ச்சே ச்சே இருக்காது... இவன் சுமிக்கு பொருத்தமானவன் அல்ல... இவனிடம் மயங்கி என்னை ஒதுக்கும் அளவுக்கு தோன்றவில்லை என தனக்குள் பேசிக்கொண்டான்

"என் பேரு கணேஷ்" என வந்தவன் தான் துவங்கினான்

இவன் சூர்யா இல்லையா என ஏனோ மனம் ஏமாற்றம் ஆனது அருணுக்கு. இவனென்றால் நீ சுமிக்கு பொருத்தமில்லை என வாதாட நினைத்தானோ என்னமோ, முகம் வாடியது

"நான் சுமியோட கசின்" என அவனே பேசிக்கொண்டு இருந்தான்

"நான் எதுக்கு வந்து இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்" என்று மரியாதையோடு பேசினான்

"சொல்லுங்க" என்றான் அருண்

"நீங்க சுமிய மெரட்டினதா சொன்னா அது உண்மையா?"

"என் சுமி பொய் சொல்ல மாட்டா" என "என்" என்பதற்கு அழுத்தம் கொடுத்தான் அருண். அதை கணேஷ் கவனிக்க தவறவில்லை

"சந்தோஷம்... ஆனா அவ உங்க சுமி இல்ல... சூர்யாவுக்கு நிச்சியம் செய்யப்பட்ட சுமி"

"இல்ல... அவள மொதல்ல விரும்பினது நான்"

"கரெக்டா சொன்னீங்க... நீங்க மட்டும் தான் விரும்பினீங்க... சுமி மனசுல நீங்க இல்ல"

"நோ... நோ ... " என கத்திய அருண் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்

"அருண்... சொல்றதை கேளுங்க... உங்க உணர்வுகள் எனக்கு புரியுது... எனக்கு காலேஜ் நாட்கள்ல ஒரு காதல் இருந்தது... அதுல தோத்தும் போனேன்..." என்றவனை கனிவுடன் பார்த்தான் அருண்

"அப்படினா இந்த கஷ்டம் உங்களுக்கு புரியுதல்ல. நீங்களே ஏன் ஹெல்ப் பண்ண கூடாது...நாங்க சேரரதுக்கு" என சிறுபிள்ளை போல் கேட்டான்

"என்ன புரியாம பேசறீங்க அருண்? சுமியும் உங்களை லவ் பண்ற மாதிரி இருந்தா யாரை எதுத்து வேணும்னாலும் நான் ஹெல்ப் பண்ண தயார். ஆனா அவளுக்கு விருப்பம் இல்லைங்கரப்ப என்ன செய்ய?"

"எனக்கு அதை பத்தி கவலை இல்ல... எனக்கு அவ வேணும்"

"அருண்... உனக்கென்ன பைத்தியமா?" என ஒருமைக்கு தாவினான் கணேஷ்

"எஸ்... சுமி மேல பைத்தியம்"

"அருண்... உனக்கு தேவை கல்யாணம் இல்ல... நல்ல ட்ரீட்மென்ட்... ரியலி யு நீட் ஹெல்ப்"

"தேவை இல்ல"

"சுமிய கொழந்தைல இருந்த பாக்கறவன் நான்... அவ இவ்ளோ அழுது ஒரு நாள் கூட நான் பாத்ததில்ல... நீ எல்லாம்... ச்சே... இங்க பாரு ஒழுங்கா அந்த ஆடியோ கசெட்ஸ் போட்டோஸ் எல்லாம் குடு... இல்லைனா நான் போலீஸ்கிட்ட போவேன் " என்றதும் முகம் மாறினான் அருண்

"வேண்டாம்... நீங்க யாருகிட்டயும் போக வேண்டாம்... அப்படி எந்த காசெட்டும் இல்ல... போட்டோவும் இல்ல... சுமிய மிரட்ட தான் சும்மா அப்படி சொன்னேன்" என்றான் அருண்

"உன்னை நம்பலாமா? இப்ப என்னை சமாளிக்க எதாச்சும் சொல்லிட்டு அப்புறம் வேண்டாத வேலை செஞ்சா நடக்கறதே வேற" என கணேஷ் அவன் காலரை பற்றி உலுக்க

"என்னால சுமிக்கு எந்த தொந்தரவும் வராது சார்... நம்புங்க" என்றவன் இனி என்ன என்பது போல் எழுந்து நின்றான்

"ஒகே... நான் உன்னை வாட்ச் பண்ணிட்டே தான் இருப்பேன்... எதாச்சும் சந்தேகம் வந்தா... அப்புறம் கேக்க ஆள் இல்லாம போய்டுவ" என்றவனை உணர்ச்சி அற்ற பார்வை பார்த்தான் அருண்

கணேஷ் சென்றதும் கதவை அடைத்தவன் பெட்டியில் இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான்

பின் சுமியும் அவனும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்தான். வாக்மேன் எடுத்து காதில் பொருத்தி சுமியும் அவனும் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் வசனங்களை ரசித்தான்

அதற்குள்  அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்....

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

45 பேரு சொல்லி இருக்காக:

நசரேயன் said...

//அதற்குள் அவன் ஒரு முடிவுக்கு
வந்திருந்தான்....//

முடிஞ்சி போச்சா ?!!!!!!!!!!!!!

Guna said...

As usual kalakkal, nalla viruviruppa pogutuhu...

முனியாண்டி said...

எனக்கென்னமோ அப்பாவி ஒரு முடிவோடதான் இந்த தொடர தொடங்கின மாதரி தெரியுது... திருப்பங்கள் மேல் திருப்பங்கள்.... முடிவில் ஒரு முடுச்சு... நல்ல இருங்க... எங்கள எல்லாம் தவிக்கவிட்டு... எப்ப அடுத்த பதிவு... காத்திருக்கிறேன்... ஒண்ணுமே புரியல ஒலகத்துலே... எல்லாருமே நல்லவங்கன்னா...அப்ப சுமி எங்க? புரியலேயப்பா ? Confusion... full of confusion.

Mahi said...

குழப்பறீங்களே புவனா????
கதைல வில்லனா வரது யாரு? சீக்கிரமா அடுத்த பார்ட்டைப் போடுங்கப்பா!
/எனக்கென்னமோ அப்பாவி ஒரு முடிவோடதான் இந்த தொடர தொடங்கின மாதரி தெரியுது.../ரிப்பீட்டு!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

Arul Senapathi said...

Awesome. But, can't predict the ending yet.

Krishnaveni said...

mmm.......interesting

siva said...

:)

அன்னு said...

மறுபடியும் இன்டெர்வல்லா !! புவனா... நான் வேணா வீட்டுக்கே அஞ்சப்பரையோ அல்லது ரேவதி சண்முகத்தையோ கொணாந்த்து விடறேன்...இந்த தொடரை இன்டெர்வல் இல்லாம கொஞ்சம் போடு தாயி....உங்காத்துக்காரருக்கு புண்ணியமா போவும்!!.

vanathy said...

தங்ஸ், கதை கன்னித்தீவு போல தொடர்ந்து போயிட்டே இருக்கே. எப்ப முடிவு சொல்லப் போறீங்க??

LK said...

நல்லள இழுத்துகிட்டு போற மெகாத் தொடர் கணக்கா...

Elangovan said...

சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க...
மெகா சீரியல்ல அடுத்த பகுதி வரும்னு தெரியும்... நீங்க அதையும் சொல்லமட்டேங்கிறீங்க... இனிமேல் அடுத்த பகுதி எப்போ வரும்னு சொல்லிட்டு தொடரும் போடுங்க...

என்னது நானு யாரா? said...

ஜோர் ஜோர் அப்பாவி அக்கா! எத்தனை எத்தனை திருப்பங்கள்.

திருப்பதி மலைக்கு போகிற பாதையில உட்கார்ந்து யோசிச்சி எழுதினீங்களா இந்த கதையை....

பதில் சொல்லுங்க அக்கா! பதில் சொல்லுங்க...

கோவை ஆவி said...

பாவங்க அருண்!! ரொம்ப நல்லவனா தான் தெரியறான்.. இன்னும் வெளிச்சத்துக்கு வராத ஒரே நபர் சூர்யா தான்! (இன்னும் அவர் மேல கொஞ்சம் டவுட் இருக்கு). என்னங்க நீங்க, விருமாண்டி ஸ்டைல்ல கொண்டு போறீங்க!!
அதெல்லாம் சரி, சுமேதாவுக்கு மட்டும் ஏதாவது ஆயிருக்கட்டும், அப்புறம் பேசிக்கறோம்!!

சௌந்தர் said...

எல்லா விஷயத்திற்கும் சூர்யா தான் காரணம்

கோவை ஆவி said...

சுமேதா நல்ல பொண்ணு, சூர்யா நல்லவன், கணேஷ்கிட்ட குழப்பம் இல்லை. அருண் அப்பாவி.. இந்த சிச்சுவேஷன்லே சுமிக்கு என்ன ஆயிருக்கும்னு "ஆவி"யோட பார்வையில பார்த்தப்போ..

// "ஒருவேள கார்ல வெச்சுட்டேன்னு நினைக்கிறேன்... சரி உன்னோட போன்ல ஊருக்கு பேசிக்கலாம். அப்புறம் எடுத்துக்கலாம்" எனவும்

"என்னோட போன் பாட்டரி ஏற்கனவே கத்திகிட்டே இருக்கு பாருங்க... சார்ஜர் கொண்டு வர மறந்துட்டேன். அஞ்சு நிமிஷம் கூட பேச முடியாது.. பேசாம நீங்க காருக்கு போய் உங்க போன் எடுத்துட்டு வந்துடுங்க. அதுக்குள்ள நான் ஒரு குளியல் போடறேன்... " //

செல்போனை எடுப்பதற்காக சென்ற சூர்யா, காரிலிருந்து அதை எடுத்த பின் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான். அதற்குள் குளித்துவிட்டு வெளியே வந்த சுமி, இனிமையான இயற்கை காற்றை சுவாசிப்பதற்காக பால்கனிக்கு சென்றாள். காற்றின் ஸ்பரிசத்தில் அவளை அறியாமல் நின்றிருந்த வேளையில் அவள் கையிலிருந்த திருமண மோதிரம் தவறி விழ, அதை பிடிப்பதற்காக அவள் முயல, கால் தடுமாறி ஊட்டி மலை பள்ளத் தாக்கில் விழ... இவை அனைத்தையும் இரு கண்கள் பார்த்துக்க் கொண்டிருந்தது!!!

யாதவன் said...

சுப்பெர கதையை கொண்ண்டுபோகிரிங்க
மனசில என்ன படுதோ அத சொளிடனும் அனுதாபம் பாபாங்க எண்டு நினைக்ககூடா

Thenral said...

Nalla irukunga!Seekiram climaxa sollunga!Suspense thaangala!

Gayathri said...

aaha akka ippo pottu kozhappareengale..yar andha thideervillan?? aruna patha paavama iruku..seekram adutha paart podunga

வி.என்.தங்கமணி, said...

appaavi, intha ilu ilukkareenga... konjam surukki sollunga please.

Anonymous said...

புவனா கதை நல்லா போகுது சீக்ரமா முடிச்சா நல்லா இருக்கும் பா ..(நான் உங்க தோழி சந்தியா தான் )

கோவை2தில்லி said...

நல்லாயிருந்தது. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அடப்பாவி.. உன்னை அப்பாவின்னு நினைச்சு வந்தேன். திரில்லர் எழுதி இருக்கியேம்மா தங்கமணி..

சுசி said...

இருந்தாலும் இவ்ளோ சஸ்பென்ஸ் தாங்காது புவனா..

யோசிக்காம சட்டு புட்டுன்னு முடிவ சொல்லுங்க :))

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - இல்லிங்க... இன்னும் முடியல... முடியும் ஆனா முடியாது போலன்னு சொல்லலாம்... ஒகே கல்லெல்லாம் வேண்டாம்.. மீ எஸ்கேப்...

@ Guna - நன்றிங்க குணா

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஆமாங்க முடிவோட தான் எழுதிட்டே இருக்கேன்... ஆனா முடியத்தான் மாட்டேங்குது... ஹா ஹா அஹ... சீக்கரம் confusion எல்லாம் தீர்க்கப்படும்... நன்றிங்க

@ Mahi - வில்லன் யாரு? அதான்பா கதையே... சட்டு புட்டுன்னு சொன்னா லாஜிக் இல்லாம போய்டுமே மகி... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ siva - அப்படின்னா? translation ப்ளீஸ்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ஹா ஹா ஹா...அனுப்புங்க அனுப்புங்க... அஞ்சப்பரை அனுப்புங்க ஆனா மொதல்ல அந்த ஹிந்தி பொண்ணை தூக்க சொல்லுங்க... ஆஹா... அதென்ன //உங்காத்துக்காரருக்கு புண்ணியமா போவும்// புண்ணியம் கஷ்டப்பட்டு எழுதற எனக்கோ இல்ல அதை விட கஷ்டப்பட்டு படிக்கற உங்களுக்கோ இல்ல சேரணும்... ஹா ஹா ஹா

@ vanathy - ஐயோ... கன்னித்தீவு எல்லாம் இல்லப்பா? முடிவு சீக்கரம் சொல்லிடறேன்ப்பா...

அப்பாவி தங்கமணி said...

@ LK - எஸ் எஸ்... உன்னையெல்லாம் பழி வாங்க இதானே வழி... ஹா ஹா ஹா...

@ Elangovan - ஹா ஹா ஹா ... அடுத்த பகுதி புதன் ரிலீஸ்... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - ஹா ஹா ஹா... திருப்பதி மலைக்கு போற பாதைல உக்காந்து எழுத முடியாதுங்க வசந்த்... சிறுத்தை எல்லாம் வருதாம் இப்போ... அது நம்மள பாத்து ஓடிடும்கறது தனி கதை... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - அருண் பாவமா? ஒகே... அப்போ சுமேதா எங்க? சூர்யா கூட பாவமாதான் தெரியறான் எனக்கு... பாப்போம்... ஆஹா... விருமாண்டி ஸ்டைல் எல்லாம் இல்லிங்க... என்னங்க இது நீங்க தான் விருமாண்டி படம் பாத்த ஸ்டைல்ல மெரட்டுறீங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - என்னங்க இப்படி சொல்றீங்க? ம்ம்ம்... அவன் என்ன பண்ணினான்? எனக்கே புரியல... பாப்போம்... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - ஆஹா...எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? சூப்பர்... honestly impressed... ha ha ha ... thanks Anand

அப்பாவி தங்கமணி said...

@ யாதவன் - நன்றிங்க யாதவன்... முதல் வருகைக்கும் நன்றி

@ Thenral - சரிங்க... சீக்கரம் சொல்றேன்.. நன்றிங்க

@ Gayathri - ஆஹா.. எல்லாருக்கும் அருண் பாவமா இருக்கா? ம்ம்ம்... சொல்றேன் சொல்றேன்.. தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ வி.என்.தங்கமணி - கட் short பண்ணினா லாஜிக் இடிக்குதுங்க... flow வும் not so in sync...thanks for visiting my blog

@ sandhya - ஹேய் சந்த்யா... வாங்கப்பா... தேங்க்ஸ்ங்க... சீக்கரம் முடிக்கறேன்...

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்ங்க... சீக்கரம் போடுறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ தேனம்மை லெக்ஷ்மணன் - அக்கா அக்கா நான் அப்பாவிதானுங்க அக்கா... ஏதோ ஏமாந்து போய் இந்த கதைல சிக்கிட்டனுங்க்கா... அது என்னை உட மாட்டேங்குது... நானும் அதை உட மாட்டேங்குறேன்... இப்படி போகுது பொழப்பு... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ சுசி - சஸ்பென்ஸ் இல்லாம என்னப்பா த்ரில்லர்? (அப்படின்னு நானே சொல்லிக்கறது தான்). சீக்கரம் சொல்றேன் சுசி... தேங்க்ஸ்ங்க

திவா said...

ஏடிஎம் ப்ளாஷ்பேக் ல்லாம் இப்படி ஜவ்வு மாதிரி இழுக்கக்கூடாது. கதையை வேற மாதிரி சொல்லிக் கொண்டு போயிருக்கலாம்ன்னு தோணுது!

தக்குடுபாண்டி said...

பில்டப்பு குடுக்கர்துல அடப்பாவி தங்கமணியை யாரும் அடிச்சுக்குக்க முடியாதுன்னு நிரூபிக்கும் இன்னோரு அத்தியாயம்னு சொல்லலாம். பிரமாதமா கொண்டு போறேள் இட்லி மாமி (அதாவது அக்கா!)...:)

Venkatesh said...

அப்பா முடியலட சாமீ.....

ஸ்ரீராம். said...

"இந்தத் தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்"

ஏங்க... அங்க 'க்ளிக்'கினா இனிமே வரப்போற பகுதிகளையும் படிச்சுடலாமாங்க..?

priya.r said...

//பெயரில்லா சொன்னது…

புவனா கதை நல்லா போகுது சீக்ரமா முடிச்சா நல்லா இருக்கும் பா ..(நான் உங்க தோழி சந்தியா தான் )
@ சந்தியா //

சந்தியா .,
என்னப்பா .,இப்படி ஆகி விட்டது .........
ரொம்ப வருத்தபட்டேன் தோழி....

ப்ளாக் தான் பார்க்க முடியவில்லை ;உங்களுக்கு அனுப்பும் மெயிலும் return ஆகிறதுப்பா
உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கும்,சிறந்த குணத்துக்கும் எல்லாம் நல்ல படியாக நடக்கும் சந்தியா.,

ஏன் புவனா.,
சந்தியாவுக்கு அவரின் ப்ளாக் திரும்ப கிடைக்க என்ன செய்ய வேண்டும் ;ஏதாவது வழிவகை கண்டிப்பாக இருக்கும்பா
நானும் விசாரிக்கிறேன் ;நீங்களும் விசாரித்து சொல்லுங்கபா
நீங்கள் குறிப்பிடுவது போல ஒவ்வொரு மாதமும் பேகப் எடுத்து கொள்வது தான் தற்காலிக தீர்வு
கருத்து பரிமாறி கொள்ள உதவியதற்கு எனது நன்றிகள் புவனா.

Elangovan said...

இன்னைக்கு புதன் தானே?

அப்பாவி தங்கமணி said...

@ திவா - வாங்க சார்... ரெம்ப இழுக்கறேனா? சுருக்க ட்ரை பண்ணி பாத்தேன், சரியா லாஜிக் வரலைங்க...அதான் அப்படியே விட்டுட்டேன்... நன்றிங்க

@ தக்குடு - தேங்க்ஸ் தக்குடு...

@ Venkatesh - ஹா ஹா ...என்ன ஆச்சுங்க வெங்கடேஷ்?

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - //ஏங்க... அங்க 'க்ளிக்'கினா இனிமே வரப்போற பகுதிகளையும் படிச்சுடலாமாங்க..? // ஹா ஹா ஹா... இது நல்லா இருக்கே... எதாச்சும் magic அப்படி நடந்தா நல்லாத்தான் இருக்கும்... நன்றிங்க

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியா... எஸ்... சந்த்யா ப்ளாக் நெனச்சா கஷ்டமாத்தான் இருக்கு... அது ஒண்ணும் பண்ண முடியாது போல இருக்கு ப்ரியா... நானும் என் பிரெண்ட்ஸ்கிட்ட கேட்டு பாத்தேன்...

@ Elangovan - //இன்னைக்கு புதன் தானே?// எஸ் எஸ் புதன்தாங்க... இதோ இப்ப போட்டுடறேன்... Thank you

Ananthi said...

ஆஹா..பிக்சர், ஆடியோ எல்லாம் வச்சிருக்கானா??
அப்புறம் என்ன ஆச்சு......??

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - எஸ் எஸ்... எல்லாம் இருக்கு... அப்புறம் அடுத்த பார்ட் பாருங்க... தேங்க்ஸ்ங்க

Post a Comment