Wednesday, September 22, 2010

அதே கண்கள்... (பகுதி 13)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

கணேஷ் சென்றதும் கதவை அடைத்த அருண் பெட்டியில் இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான்

பின் சுமியும் அவனும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்தான். வாக்மேன் எடுத்து காதில் பொருத்தி சுமியும் அவனும் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் வசனங்களை ரசித்தான்

அதற்குள் அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்....

தன் கையில் இருந்த சுமேதாவின் புகைப்படத்துடன் ஏதோ நேரில் உள்ளவர்களுடன் பேசுவது போல் பேசினான்

"சுமி... உன் கசின் கணேஷ் என்ன சொன்னார்னு கேட்டியா? கேக்க ஆள் இல்லாம போய்டுவனு சொன்னார்... இப்ப மட்டும் எனக்கு கேக்க யாரு இருக்கா சுமி. உனக்காக என்னை வந்து மிரட்ட கணேஷ் மாதிரி எனக்கு யாராச்சும் இருந்திருந்தா உங்க அம்மா அப்பா கிட்ட வந்து பொண்ணு கேக்க வெச்சிருப்பேன் சுமி... இப்ப என்ன செய்யட்டும்?" என்றவன் ஏதோ அவளின் பதிலுக்கு காத்திருப்பது போல் சற்று நேரம் மௌனமாய் இருந்தான்

மறுபடியும் பேசினான் "சுமி... போலீஸ்கிட்ட போவேன்னு சொன்னதுக்கு பயந்துட்டதா அவர் நெனச்சுருக்கலாம். ஆனா நீ ரெம்ப அழுதேன்னு அவர் சொன்னதை என்னால தாங்க முடியல சுமி. அதான் வேண்டான்னு விட்டுட்டேன். நீ வேணும்னு நான் நெனச்சது உன்னோட சேந்து சந்தோசமா வாழத்தானே... ஆனா நீ அழறியாமே... வேண்டாம் சுமி... எதுவும் வேண்டாம்..." என்றவன் ஏதோ தீர்மானித்தவன் போல் எழுந்தான்

சற்று நேரம் ஜன்னல் கம்பியை பற்றி கொண்டு நின்றவன் மீண்டும் வந்து பெற்றவர்களின் புகைப்படத்தை எடுத்தான்

"அம்மா அப்பா... நானும் உங்கிட்ட வந்துடறேன்... ஆனா இன்னும் கொஞ்ச நாள்... மூணு மாசம்... சுமிக்கு கல்யாணமான அடுத்த நாள் நான் உங்ககிட்ட வந்துடறேன். அதுவரைக்கும் அவளுக்கு தெரியாம எந்த தொந்தரவும் தராம சும்மா அவள கண்ணால பாத்தா போதும்" என்றான்

______________________________

அதன் பின் அவன் சுமி எங்கே சென்றாலும் அவள் அறியாமல் பின் தொடர்ந்தான். ஒரு வார்த்தை கூட பேச முயலவில்லை

வெறுமனே அவளை பார்த்து கொண்டு இருப்பான்

அவள் வீட்டுக்கு சென்றதும் தானும் சென்று வீட்டில் அடைந்து கொள்வான்

அம்மா அப்பா விட்டு சென்ற பணம் அவனுக்கு அன்றாட தேவைகளுக்கு தாராளமாய் இருந்தது

தனக்கு பின் தன் பணம் மற்றும் பாங்கில் அம்மாவின் சில நகைகள் ஊரில் உள்ள வீடு எல்லாமும் கோவையில் பிரபலமான ஒரு அநாதை விடுதிக்கு சேர வேண்டுமென ஒரு கடிதம் எழுதி தன் பெட்டியில் பத்திரப்படுத்தினான்

தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், தனியே இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை அதனால் மரணத்தை தேடி போகிறேன் என ஒரு கடிதம் எழுதி வைத்து கொண்டான் தயாராய்

அப்படி ஒரு கடிதத்தை எழுதியதும் ஏனோ சுமியின் குரலை கேட்க வேண்டும் போல் கட்டுப்படுத்த முடியாத ஆசை எழ அவளுக்கு பொது தொலைபேசியில் இருந்து அழைத்தான்

"ஹலோ" என்றாள் சுமி உற்சாகமாய்

தான் என்று தெரிந்தால் இந்த உற்சாகம் வாடி விடுமே என அமைதியாய் இருந்தான்

சற்று நேரம் ஹலோ ஹலோ என்றவள் துண்டித்து விட்டாள்

அதற்கு பின் போன் செய்வதை விட்டுவிட்டான்

அன்றும் வழக்கம் போல் சுமேதவை பின் தொடர்ந்து சென்றவன் அவள் கிராஸ் கட் ரோடு அருகில் ஒரு கடையில் நின்று கொண்டு இருப்பதை எதிர்புறம் ஒரு நடைபாதை கடை அருகில் நின்று பார்த்து கொண்டு இருந்தான்

சட்டென சுமேதா தன்னை கண்டுவிட அங்கு இருந்து விலக வேண்டுமென அறிவு உணர்த்திய போதும் கால்கள் நகர மறுத்தன அவனுக்கு

அவள் ஐந்தடி தொலைவில் வந்தவுடன் அவள் முகத்தில் இருந்த பயம் அவனை வேதனை படுத்த அது தான் விலகி விட வேண்டும் என்ற உணர்வை தர அந்த இடத்தை விட்டு அகன்றான்

அவள் தன்னை கண்டதும் பயம் கொண்டது அவனுக்கு வேதனை அளித்தது. அதன் பின் அவளை வெகு தொலைவில் இருந்தே பார்த்தான்

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் பெற்றோரின் புகைப்படத்தையும் சுமேதாவின் புகைப்படத்தையும் அவர்கள் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் பேச்சுகளையும் கேட்டு கொண்டே இருந்தான்
___________________________

அன்று சுமேதாவின் திருமண நாள். முடிந்த வரை தன் தோற்றத்தை தாடி மீசை என மாற்றி கொண்டு ஏதோ வயதானவன் போன்ற தோற்றத்துடன் ஒரு மூலையில் நின்று அவளை மணகோலத்தில் ரசித்தான் அருண்

ஆனால் தாலி கட்டும் நேரம் அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகும் வைபவத்தை காணும் மனபலம் இன்றி அங்கிருந்து வெளியேறினான்

அதற்கு மறுநாள் உயிரை போக்கி கொள்ளும் எண்ணத்துடன் வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைத்து விட்டு புகைப்படங்கள் ஆடியோ காசெட் எல்லாவற்றையும் எரித்தான்

போலீஸ் தன் உடலை கை பற்றும் போது அவர்களுக்கு சுமேதவை பற்றி எந்த தடயமும் சிக்க கூடாதென கவனமாய் செய்தான்

கடைசியாய் திட்டத்தை வகுத்தான். தன் பெற்றோரின் கல்லறைக்கு சென்று விட்டு வந்து இரவு வரை வெளியே சுற்றி விட்டு எதாவது ஒரு பூங்காவில் இருந்து பின் தூக்கமாதிரைகளை உண்பதென முடிவு செய்து முன்பே எழுதிய கடிதம் எல்லாம் பத்திரமாய் எடுத்து வைத்தான்

காலை பெற்றோரின் கல்லறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்த போது சாய்பாபா கோவில் சிக்னலில் சுமேதாவும் அவள் கணவனும் காரில் இருப்பதை பார்த்தான்

சாகும் போது கடைசி ஆசையாய் இன்னும் சற்று நேரம் அவளை பார்க்க மனம் தவித்தது

அவள் அறியாமல் பின் தொடர்ந்தான். அவர்கள் கார் கொங்குநாடு கல்லூரி பக்கம் நிற்க அருண் எதிரில் இருந்த கடையில் ஒதுங்கினான்

பின் சூர்யாவின் வீடு வரை பின் தொடர்ந்து அங்கு இருந்த ஒரு சிறிய பூங்காவில் மறைந்து கொண்டான்

சில மணி நேரங்களுக்கு பின் அவர்கள் மீண்டும் வெளிய செல்ல அவர்களை பின் தொடர்ந்தவன் ஊட்டியில் அவர்கள் தங்கவந்த ஓட்டல் வரை வந்தான்

வந்தவன் ஊட்டியில் இருக்கும் வரை அவளை பார்த்து இருந்து விட்டு பின் சாவதென முடிவை மாற்றினான்

அவர்கள் உள்ளே சென்று பதிமூணாம் எண் அறை என வரவேற்பாளர் சொல்வதை கேட்டவன் சுமியும் சூர்யாவும் உள்ளே சென்றதும் தானும் ஹோட்டல் உள்ளே சென்றான்

"எனக்கு ஒரு ரூம் வேணும்" என்றான் அருண்

"இல்ல சார்... இப்ப தான் கடைசியா இருந்த ரூம் ஒரு கபில்க்கு குடுத்தேன்"

"ப்ளீஸ்... எவ்வளவுன்னாலும் ஒகே... ப்ளீஸ்"

"இல்ல சார்... இருந்தா தர மாட்டேனா... ஒண்ணு பண்ணுங்க நீங்க நாளைக்கி மதியம் வாங்க... ஒரு ரூம் காலி ஆகும்" என கூற

"ஒகே... தேங்க்ஸ்" என வெளியே வந்தவன் அங்கிருந்து செல்ல மனமின்றி சற்று நேரம் நின்று விட்டு பின் ஏதோ பார்க்கில் சென்று உறங்கினான்

மறுநாள் மதியம் சொன்னது போல் அந்த ஹோட்டலுக்கு வந்தான் அருண். அவனுக்கு பதினாலாம் எண் அறை கிடைக்க மிகவும் மகிழ்ந்தான் சுமி பதிமூணாம் எண் அறை என்பது தெரிந்ததால்

அவன் அறைக்கு சென்று உடை மாற்ற எண்ணிய நொடி அறை கதவு படபடவென தட்டப்பட திறந்தவன் அந்த போலீஸ் உடையில் ஒருவர் நிற்பதை பார்த்து அதிர்ந்தான்

____________________________________

"இதான் சார் நடந்தது" என அருண் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான்

"நீ சொல்றது உண்மைன்னு எப்படி நம்பறது?" என இன்ஸ்பெக்டர் இன்னும் சந்தேகமாய் பார்க்க

"சார்... இங்க பாருங்க சார்... என்னோட பாக்கெட்ல தூக்க மாத்திரை... அந்த என்னோட பேக் இருக்கே அதை எடுத்து பாருங்க... நான் தற்கொலை செய்துக்க போறேன்னு எழுதி வெச்ச லெட்டர் எல்லாம் இருக்கு" என அருண் கூற எல்லாவற்றையும் பார்த்த இன்ஸ்பெக்டர் இன்னும் கூட சந்தேகம் விலகாமல் பார்த்தார்

"இது எல்லாம் சரி தான்... ஒருவேளை நீ சுமேதாவை பழி வாங்கிட்டு சாகற முடிவுல இதை எல்லாம் வெச்சுருக்கயோனு எனக்கு சந்தேகமா இருக்கு... நீயே சொன்னியே நெறைய டிராமா ப்ளாக்மெயில் எல்லாம் செஞ்சதா"

"சார்... என்னை நம்புங்க சார்... நான் உண்மைய தான் சொல்றேன்"

"ஆனா..." என இன்ஸ்பெக்டர் ஏதோ கூறும் முன்

"அவன் உண்மை தான் சொல்றான் சார்" என ஒரு குரல் கேட்க இருவரும் திரும்பி பார்க்க... அங்கே...

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்
(தொடரும்...)

...

40 பேரு சொல்லி இருக்காக:

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

தக்குடுபாண்டி said...

//"அவன் உண்மை தான் சொல்றான் சார்" என ஒரு குரல் கேட்க // சுமேதா அங்க வந்தா கரெக்டா??...:)

Gayathri said...

அக்கா தாங்க முடியல..பாவம்கா அருண்..அழுதுடுவேன் போல இருக்கு..சீக்ரம் நல்ல முடிவா சொலுங்க..இப்போ அருணா சந்தோஷ பட வைகரமாதிரி கதைய மத்தரீன்களா இல்லை சுமோ அனுப்பவா...ஹாஹா

முனியாண்டி said...

கதை முடிவை நோக்கி நகர்வதுபோல் உள்ளது காத்திருக்கிறோம் முடிவைத் தெரிய. அப்பாவி கடைசியில அப்பாவியா எல்லாரும் நல்லவங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க...பாக்கலாம்.

சுசி said...

தயவு செஞ்சு அங்க நின்னது சுமேதான்னு சொல்லிடாதிங்க புவனா.. பாவம் நான் :))

அன்னு said...

அங்கே சுமேதாதான்னே நின்னுட்டிருக்கா... ஹே...எங்களுக்கேவா...எவ்ளோ கதை படிச்சிருக்கோம், படத்துல பாத்திருக்கோம். (ஒடனே இதுக்காகவே கதையெல்லாம் மாத்தக்கூடாது....வேணாம்...அப்பொறம் அழுதுருவேன்!!)

Arul Senapathi said...

Well, what can i say? As usual, thrilling.
Can't wait for the next chapter.

Thanks

என்னது நானு யாரா? said...

மாட்டுவண்டியில போய், பின்பு, குதிரை வண்டியில போய், பின்பு, பஸ்ல போய், பின்பு, ட்ரைன்ல போய், பின்பு, ஏரோப்ளைன்ல போய், பின்பு இப்போ ராக்கெட்ல போய்ட்டு இருக்கோமா? அட என்ன வேகம்பா!

LK said...

அப்பாடி முடிய போகுதா ??

ஸ்ரீராம். said...

இங்க கதை முடியாதுன்னு நினைக்கிறேன். அங்கே நிற்கப் போறது சூர்யா, எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லிட்டு நான்தான் நாடகமாடினேன்னு சொல்லி ஒரு ஃப்ளாஷ் பேக் சொல்லப் போறார்... !

siva said...

:)

Elangovan said...

ஹலோ... எப்போ அடுத்த பார்ட்?
சொல்லாம போனதுக்கு அடுத்தபகுதி போடற வரைக்கும் தங்கமணி ஸ்பெஷல் இட்லிதான் சாபிடனும்.. :)

அலைகள் பாலா said...

உரிமையா கேக்குறேன். இன்னைக்கு நைட்குள்ள அடுத்த பார்ட் போட முடியுமா? முடியாதா?

சௌந்தர் said...

சுமேதாவிற்கு ஒன்றும் ஆகி இருக்காது

Anonymous said...

super buvanaa ..thanks for sharing ..sandhya

Anonymous said...

kathai romba thilling aa iruku..
next part eppo

சே.குமார் said...

Super... Kathai viraivil mudiyum endru ninakkirean...

arumaiya vanthirukku.

திவா said...

வோட் சூரியாவுக்கே!

கோவை2தில்லி said...

அருண் அப்பாவியா? இல்லை நீங்க அப்பாவியா? திரில் தாங்கல. சீக்கிரம் முடிங்க.

மாதேவி said...

ஃப்ளாஷ் பேக்..இருக்கா ? :)

அமைதிச்சாரல் said...

யம்மாடி.. அடுத்த ஃப்ளாஷ்பேக் வரப்போவுதா. கொசுவத்தி நிறையவே ஸ்டாக் வெச்சிருக்கீங்க போலிருக்கு :-)))))))

Krishnaveni said...

suspense mela suspense aa irukae

Nithu Bala said...

Wow! adutha part eppo poduveenka??

தியாவின் பேனா said...

சூப்பர்

pinkyrose said...

ஒரே சஸ்பென்ஸ்..... போங்கக்கா :)

Priya said...

As usual... கலக்குங்க‌!தொடருங்கள்!

அப்பாவி தங்கமணி said...

@ தமிழினி - மிக்க நன்றி

@ தக்குடுபாண்டி - ம்ம்... மே பி...என்கிட்டயேவா? ஹா ஹா ஹா

@ Gayathri - ஹா ஹா ஹா...சுமோ எல்லாம் வேண்டாம் தாயே... சீக்கரம் போட்டுடறேன்... தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஹா ஹா ஹா... ஏங்க இப்படி என்னை வில்லி ஆக்கறீங்க... ? நான் அப்பாவி தானே.. யு ஆல் நோ தட்... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்...

@ சுசி - ஆஹா... யாரு சுசி பாவமா? அதுக்கு புவனா பாவம்னு சொன்னா கூட நம்பலாம் யு சி... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் சுசி

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ம்... அப்படியா? சுமேதாவா? ம்ம்ம் ... பாப்போம்... ஹா ஹா ஹா...
//ஒடனே இதுக்காகவே கதையெல்லாம் மாத்தக்கூடாது....//
என்னை பத்தி நல்லா தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க அன்னு... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - ஆஹா... ராக்கெட்ஆ? நன்றி நன்றி நன்றிங்க வசந்த்

@ LK - ம்... இருக்கலாம்... ஹா ஹா ஹா...என்னை வம்பிழுத்தா இப்படி தான் பழி வாங்குவேன்... ஹா ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்...

@ ஸ்ரீராம் - இன்னொரு ப்ளாஷ்பாக்? ஐ... நல்ல ஐடியாவா இருக்கே... தேங்க்ஸ் பார் தி டிப்... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ siva - இனிமே ஜஸ்ட் smiley கமெண்ட்ஸ் எல்லாம் என் ப்ளாக் block பண்ற மாதிரி செட்டிங்க்ஸ் மாற போகுது...ஹா ஹா ஹா... சும்மா smiley போட்டா நல்லா இருக்கா திட்டறீங்கலானே புரியல... ஹா ஹா ஹா

@ Elangovan - ஆஹா...என்னங்க இப்படி எல்லாம் பனிஷ்மென்ட்ஆ? பாவம் இந்த அப்பாவி... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்... தேங்க்ஸ் அ லாட்

அப்பாவி தங்கமணி said...

@ அலைகள் பாலா - நீங்க உரிமையா கேக்கறீங்கன்னு எங்க மேனேஜர்கிட்ட சொல்லி கதை எழுத அரை நாள் லீவ் வேணும்னு கேட்டேன்ங்க... என் கதை காலினு சொல்லிட்டார்... சோ எழுத முடியலைங்க... ஹா ஹா ஹா... சீக்கரமா போட்டுடறேங்க பாலா... ரெம்ப நன்றிங்க

@ சௌந்தர் - ம்.. அப்படின்னு சொல்றீங்களா? ம்ம்.. இருந்த விசாரிச்சு சொல்றேன்.. ஹா ஹா ... நன்றிங்க சௌந்தர்

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - ஹை சந்த்யா... ரெம்ப நன்றிங்கப்பா... நெக்ஸ்ட் பார்ட் சீக்கரம் போட்டுடறேன்

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்... நானும் சீக்கரம் முடியனும்னு தான் வேண்டிக்கறேன்.. முடியல... ஹா ஹா .. நன்றிங்க

@ திவா - vote சூர்யாவுக்கா? வேட்டு சூர்யாவுக்கா? சரியா புரியலைங்க... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - நான் தான் அப்பாவி நம்பர் ஒன்... அருண் வேணும்னா அப்பாவி நம்பர் டூ னு வெச்சுக்கலாம்... ஹா ஹா அஹ... சீக்கரம் முடிக்கறேன்ங்க... தேங்க்ஸ்

@ மாதேவி - ம்ம்ம் ..இன்னுமா? தெரியலயே... கதை ஓட ஓட என்ன வருதோ அதே...நன்றிங்க

@ அமைதிச்சாரல் - ஹா ஹா... ஆமாங்க ஓவர் ஸ்டாக் ஆகி போச்சு... இப்ப தான் ரிலீஸ் ஆகுது எல்லாம்...ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ Nithu Bala - தேங்க்ஸ்ங்க பாலா.. சீக்கரம் போட்டுடறேன்..

@ தியாவின் பேனா - தேங்க்ஸ்ங்க தியா... முதல் வருகைக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ pinkyrose - ஹை பிங்கி... தேங்க்ஸ்...போங்கக்காவா? எங்க போறது? உங்க ப்ளாக் பக்கம் போலாம்னு பாத்தா அந்த பேஜ் லிங்க் வர மாட்டேங்குது... என்ன ப்ளாக் ஐடி மாத்திடீங்களா என்ன? என்னப்பா சொல்றதில்லையா? புது லிங்க் குடுங்க... தேங்க்ஸ் பிங்கி

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா

vgr said...

theriyume...innum mudinjurukadunu...irundalum oru asai la...mudinjurukomu nambi....padichen...

ezhundunga ezhundunga...seekrame kadai end prapthirasthu :)

Ananthi said...

யாரு யாரு ஐயோ யாருப்பா அது???
ஸூஊஊஊ ...முடியல...
செம சூப்பர்... சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்கப்பா.. :-))))
நல்லா இருக்கு..

கோவை ஆவி said...

என்னங்க, சுமேதா குன்னூர் வரைக்கும் போய் சினிமா பாத்துட்டு வந்தாங்களா??

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ஹா ஹா... சரிங்க முடிச்சுடறேன்... உங்க ஆசிர்வாதம் பலிக்கட்டும்.. Thank you

@ Ananthi - ஹா ஹா... சீக்கரம் போட்டுடறேன் ஆனந்தி... தேங்க்ஸ்ங்க

@ கோவை ஆவி - ஹா ஹா ஹ... வாங்க ஆனந்த்... சுமேதா எங்க போனாங்கன்னு கேட்டு சொல்றேன் இருங்க... தேங்க்ஸ்ங்க

Post a Comment