Monday, September 27, 2010

அதே கண்கள்... (பகுதி 14)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"அவன் உண்மை தான் சொல்றான் சார்" என ஒரு குரல் கேட்க இருவரும் திரும்பி பார்க்க... அங்கே...

இன்ஸ்பெக்டரை மீறி ஓடினான் அருண்

"சுமி...சுமி...உனக்கு ஒண்ணும் ஆகலை தானே... " என அவள் கையை பற்ற போனவன் அருகில் நின்றிருந்த சூர்யாவை பார்த்து விலகினான்

"நீங்க...?" என இன்ஸ்பெக்டர் ஆச்சிர்யம் விலகாமல் கேட்க

"நா... நான்...தான்.... சு... சுமேதா... " என்றாள் நடுக்கத்துடன்

"என்ன நடந்தது? எங்க போனீங்க நேத்து நைட்ல இருந்து? உங்களை யாராச்சும் கடத்தினாங்களா?" என இன்ஸ்பெக்டர் கேள்வி மழை பொழிய சுமேதா பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னை நிதானபடுத்திக்கொள்ள முயன்றாள்

"இன்ஸ்பெக்டர் ப்ளீஸ்... சுமி ரெம்ப பயந்து போன மாதிரி இருக்கா... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்" என சுரேஷ் கூற சுமேதா அண்ணனின் தோளில் ஆதரவாய் சாய்ந்தாள்

"என்ன சுமி... ? தண்ணி குடிக்கறயா?" என கேட்க

"ம்..." என்றாள் முனகலாய்

நீர் அருந்திய பின் சற்று பலம் வந்தது போல் இருந்தது சுமேதாவிற்கு

"சொல்லுங்க சுமேதா... என்ன நடந்தது?" என்றார் இன்ஸ்பெக்டர் விடாமல்

அவள் இன்னும் மருண்ட விழிகளுடன் இருக்க "சுமி... ரிலாக்ஸ் பண்ணு... நேத்து நைட் சூர்யா செல் போன் எடுக்க கார்க்கு போயிட்டு திரும்பி வந்தப்ப நீ ரூம்ல இல்லைன்னு சொன்னார்... அந்த நேரத்துல என்ன நடந்தது... சொல்லுடா" என சுரேஷ் பரிவுடன் கேட்க அவள் சூர்யாவை திரும்பி பார்த்தாள்

சூர்யாவும் "சொல்லு சுமி...என்னாச்சு?" என கேட்க

"அது...அது..." என அவள் தடுமாற

"அருண் ஹோட்டல் வாசல்ல நிக்கறான்னு எனக்கு போன் பண்ணின.. அப்புறம் என்ன நடந்தது? அவன் எதாச்சும் தொந்தரவு செஞ்சானா?" என கணேஷ் அருணை பார்த்து கொண்டே சுமேதாவிடம் கேட்க

"இல்ல... இல்ல...அருண் எதுவும் பண்ணல" என்றாள் அவசரமாய்

"வேற என்ன நடந்தது?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"நான்... இவர் செல்போன் எடுக்க போய் கொஞ்ச நேரம் வரலைனதும் அருண் எதாச்சும் அவர்கிட்ட பேசிடுவானோனு பயந்து கீழ போனேன். முன் வாசல் வழியா போனா அருண் பாத்துடுவானோனு லிப்ட்ல போகாம ஸ்டெப்ஸ்ல எறங்கி பின்னாடி வழியா போனேன்... " என மூச்சு வாங்கினாள்

கணேஷ் தண்ணீர் எடுத்துத்தர பருகியவள் தொடர்ந்தாள்

"கீழ போனப்ப இவர் கார் பார்கிங்ல இல்ல... ஒருவேளை நான் பின்னாடி வழியா வந்தப்ப இவர் லிப்ட்ல போய் இருப்பாரோன்னு மொதல்ல தோணுச்சு... எதுக்கும் பக்கத்துல எங்கயாச்சும் இருக்காரோனு பாத்துட்டே வந்தேன்... அப்போ ஒரு இருபதடி தூரத்துல இவர் போட்டு இருந்த மாதிரியே ஒரு மெரூன் கலர் ஷர்ட் தெரிஞ்சுது. கூப்ட்டேன் திரும்பல... ஒருவேளை கேக்கலை போல இருக்குனு பின்னாடியே போனேன்... பக்கத்துல போய் பாத்தா அது இவர் இல்ல...வேற யாரோ... சரி ஹோட்டல்க்கு போலாம்னு திரும்பி ஒரு அஞ்சடி கூட வந்திருக்க மாட்டேன்.. அப்போ... அப்போ... " என உடல் நடுங்க கண்களை மூடி சுரேஷின் தோளில் சாய்ந்தாள்

சற்று நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பின் சுமேதாவே தொடர்ந்தாள்

"அப்போ... ஒரு பெரிய காட்டு நாய் மாதிரி ஒண்ணு... பக்கத்துல வந்தது... எனக்கு ரெம்ப ப... பயமாய்டுச்சு... பயந்து ஓட ஆரம்பிச்சேன்...வழில ஆள் நடமாட்டமே இல்ல... ரெம்ப தூரம் ஓடினேன்... நின்னு திரும்பி பாத்தா அந்த நாய காணோம்... ஆனா ஏதோ காட்டுக்குள்ள வந்துட்டேன்னு புரிஞ்சது. திரும்பி போக வழி தெரியல... கொஞ்சம் நேரம் அங்கேயே சுத்தி சுத்தி எதாச்சும் வழி தெரியுதான்னு பாத்தேன்... அதுக்குள்ள ஏதோ உறுமல் சத்தம்... ஏதோ மிருகம்னு பயந்து மரத்து மேல ஏறிட்டேன்... ஒரு கரடி... யானை... எல்லாம் வந்தது கொஞ்ச நேரத்துல... எனக்கு கீழ எறங்க ரெம்ப பயமா இருந்தது... களைச்சு போய் அப்படியே மரக்கிளைலையே தூங்கிட்டேன் போல இருக்கு... நல்லா வெளிச்சம் வந்தப்புறம் தான் நினைவு வந்தது... அப்புறம் தேடி தேடி ரோடு கண்டுபிடிச்சு வழில எல்லாம் விசாரிச்சு ஹோட்டல் வந்து சேந்தேன்... அந்த ஹோட்டல் ரிசப்னிஸ்ட் தான் என்னை நீங்க தேடுற விசயம் சொல்லி இங்க கொண்டு வந்து விட்டார்" என சொல்லி முடித்தவள் தண்ணி என ஜாடை காட்டினாள்

"இன்ஸ்பெக்டர் மத்த பார்மாலிடீஸ் எதாச்சும் இருந்தா நான் இருந்து முடிச்சுட்டு போறேன்... அவங்க போகட்டும்... ப்ளீஸ்" என கணேஷ் கூற சுமேதாவின் நிலை பார்த்து சரி என்றார் இன்ஸ்பெக்டர்

அதே நேரம் சுமேதாவின் பெற்றோரும் அங்கு வந்து சேர நடந்ததை சுருக்கமாய் அவர்களிடமும் கூறி சுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர் முதலில்

பின் தன் வண்டியை கணேஷை எடுத்து வர சொல்லிவிட்டு சுரேஷ் சூர்யாவுடன் சென்றான்
____________________________

சூர்யா ஆபீஸ் விசியமாய் அவசரமாய் வெளியூர் செல்லவேண்டுமென சுமேதாவை அவள் பெற்றோர் வீட்டிலேயே விட்டு சென்றான். சூர்யாவின் பெற்றோரும் வந்து பார்த்து விட்டு ஆறுதல் கூறி சென்றனர்

வீட்டுக்கு வந்த இந்த ஒரு வாரத்தில் சுமி அதிகம் யாருடனும் பேசவில்லை

அவள் அறையிலேயே அடைந்து கிடந்தாள். வீட்டில் உள்ளவர்கள் பேச முயன்ற போதும் தூக்கம் வருது என சென்று படுத்து கொண்டாள்

அன்று சுமேதாவின் அன்னை தன் மகனிடம் வருத்தத்துடன் கூறி கொண்டு இருந்தாள்

"சுமி சரியாவே சாப்பிடமாட்டேன்கறா சுரேஷ்..."

"அம்மா... சுமி ரெம்ப பயந்து போய் இருக்கா... இன்னும் அந்த அதிர்ச்சில இருந்து வெளிய வர்ல... கொஞ்ச டைம் ஆகும்"

"மாப்பிள்ளை இந்த நேரம் பாத்து வெளியூர் போயிட்டாரே... "

"என்னமா செய்யறது... கல்யாணத்துக்கு நெறைய லீவ் போட்டாரே... இன்னும் லீவ் எடுக்க முடியாதில்ல"

"அதில்ல... "

"அம்மா நீ தேவையில்லாம குழப்பிக்காதே" என சுரேஷ் ஆறுதலுடன் பேச

"அதில்ல கண்ணா... ஒருவேள மாப்பிள்ள சுமிய பத்தி தப்பா...எதாச்சும்..." என தயங்க

"அம்மா ப்ளீஸ்... சூர்யாவ பத்தி அப்படி பேசாதே...அவ காணோன்னதும் அவர் தவிச்ச தவிப்பை பக்கத்துல இருந்து பாத்தவன் நான்"

"இருந்தாலும் இவ இப்படி இருக்கறப்ப எப்படி விட்டுட்டு போக மனசு வரும்" என வருத்தமாய் கூற

"அம்மா நீ இன்னும் அந்த காலத்துலேயே இருக்க... கொஞ்சம் பிராக்டிகலா யோசிம்மா ப்ளீஸ்"

"ஆனா..."

"அம்மா... எனக்கும் இந்த உறுத்தல் இருந்ததும்மா... அதை ஊட்டில போலீஸ் ஸ்டேஷன்லயே சூர்யாகிட்ட கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா சுமி உங்க தங்கைனா எனக்கு மனைவி, என்னில் பாதி... அவகிட்ட நீங்க வெச்சு இருக்கற நம்பிகையை விட எனக்கு நெறைய நம்பிக்கை இருக்குனு சொன்னார்மா... அவரை போய் சந்தேகப்படறியே"

"ஐயோ சந்தேகம் இல்ல சுரேஷ்... என்னமோ மனசுக்கு கஷ்டமா..."

"அம்மா சுமிக்கு இப்ப கொஞ்சம் ரெஸ்ட் வேணும்னு நெனச்சு கூட அவர் இங்க விட்டுட்டு போய் இருக்கலாம்... இந்த அதிர்ச்சில இருந்து அவ வெளிய வரணும்னு விலகி இருக்கலாம் நெனைச்சு இருப்பார்னு எனக்கு தோணுது"

"சரிப்பா... நான் தான் சும்மா குழப்பிக்கறேன் நீ சொன்ன மாதிரி...எப்ப வெளியூர்ல இருந்து வரார்னு சொன்னாரா?"

"தெரியலம்மா....நானே அவர்கிட்ட பேசணும்னு நெனச்சுட்டு இருந்தேன்... இரு இப்பவே கூப்பிடறேன்" என்றவன் சூர்யாவின் அலைபேசிக்கு அழைத்தான்

"ஹலோ சூர்யா"

"அ... சொல்லுங்க சுரேஷ்"

"எப்படி இருக்கீங்க சூர்யா?"

"ம்... இருக்கேன்... நீங்க?" என என்னமோ போல் கூற சுமியை பிரிந்திருக்கும் சோகம் என புரிந்து கொண்டான் சுரேஷ்

"நல்லா இருக்கேன். அப்புறம் வொர்க் எப்படி போயிட்டு இருக்கு"

"ஒகே... போயிட்டு இருக்கு... "

" ஒகே... அப்புறம்... எப்ப கோயம்புத்தூர் வரீங்க?"

"அது... அனேகமா... நாளைக்கி வருவேன்னு நினைக்கிறேன்... சரியா தெரியல... நான் வந்துட்டு போன் பண்றேன்"

"ஒகே சூர்யா... டேக் கேர்... "

"ஒகே பாய்" என அழைப்பு துண்டிக்கப்பட்டது

"அம்மா உன் மாப்பிள்ளை நாளைக்கி ஊருக்கு வர்றாராம்... போதுமா" என தன் அன்னையிடம் சந்தோசமாய் உரைத்தான் சுரேஷ்

"அப்படியா... ரெம்ப சந்தோஷம்... லஞ்ச்க்கு வந்துடுவரா...சரியா கேட்டியா"

"அம்மா... அனேகமா நாளைக்கி வருவேன்னு தான் சொன்னார்... இன்னும் சரியா தெரியல வந்துட்டு கூப்பிடறேன்னார்"

"ஓ...அப்படியா" என சமாதானமாய் சென்றாள் அன்னை

சூர்யாவிடம் பேசியதற்கு பின் சுரேசிற்கு ஏதோ உறுத்தலாய் தோன்றியது. ஆனால் அதை அன்னையிடம் சொல்லி கலவரப்படுத்தவேண்டாமென மறைத்தான்

சுரேஷின் மனதில் பல சிந்தனைகள் ஓடியது

ஏனோ சூர்யா முன் போல் பேசாதது போல் தோன்றியது. அவர் சூழ்நிலை அங்கு என்னவோ என தன்னையே சமாதானம் செய்து கொண்டான்

சுமியை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என தோன்றிய மறுநொடியே... திருமணதிற்கு முன்பே மணிக்கணக்கில் பேசுபவர்கள் இப்போதும் அதை விட அதிகமாகத்தானே பேசுவார்கள். பிறகு தன்னிடம் தனியே அவளை பற்றி என்ன கேட்பார் என மனதை அமைதிப்படுத்த முயன்றான்

ஆனாலும் ஏதோ தொண்டையில் சிக்கிய முள்ளாய் உறுத்தியதை அவனால் மறுக்க முடியவில்லை
__________________________________

மறுநாள் சுரேஷிடம் வந்த சுமேதா "அண்ணா... என்னை அவர் வீட்டுல கொண்டு போய் விடு" என்றாள்

"சுமி...ஆனா... "என்று சுரேஷ் ஏதோ சொல்ல வர

"ப்ளீஸ்..." என வேதனை நிறைந்த முகத்துடன் கூற சூர்யாவின் நினைவில் இருக்கிறாள் என்பது புரிய அன்று சூர்யா வெளியூரில் இருந்து திரும்பி வருகிறான் என்பதும் நினைவு வர மறுப்பேதும் சொல்லாமல் அழைத்து சென்றான்
________________________________

சுமார் இரவு பதினொரு மணிக்கு தான் சூர்யா வந்தான்

சுமேதா வந்திருக்கிறாள், மேலே அறையில் இருக்கிறாள் என அவன் அன்னை கூற சூர்யா அதை எதிர்பார்க்காததால் விரைந்து தனதறைக்கு சென்றான்

அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தவள் போல் சுமேதா கதவருகிலேயே நின்றாள்

அவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தியவள் "ஏன் இப்படி செஞ்சீங்க?" என கேட்க அதை எதிர்பாராத சூர்யா திகைப்புடன் அவளை பார்த்தான்

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)
 
...

39 பேரு சொல்லி இருக்காக:

Arul Senapathi said...

What is this?
Another twist now in the story.
Anyways, going more interesting.

Thanks

சுசி said...

ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டா.. என்ன புவனா இது??

இது செம ட்விஸ்ட்டுப்பா..

Mahi said...

/பயந்து மரத்து மேல ஏறிட்டேன்.../அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அப்ப சூர்யாதேன் வில்லனா?

14=1+4=5 ன்னு வந்திருக்கு.
உங்க லக்கி நம்பர் என்னன்னு சொன்னா,இன்னும் எத்தன பார்ட் மீதி இருக்கும்னு புரிஞ்சிப்போம்.ஹிஹி

அன்னு said...

ஏனுங்கம்மணி...ஏதோ கதை நல்லா போகுதேன்னு எல்லாருமா சேர்ந்து மேல மேல எழுதச் சொன்னா என்னமோ கரடி யானைன்னு கத விடறீங்!! அட அது ஊட்டி தானா இல்ல டாப்சிலிப்பான்னு கேக்கறோமில்ல. இந்தா இதெல்லாம் சரிப்பட்டு வராது. இன்னும் நம்ம வீட்டு இட்டிலிய நீங்க பாத்ததுமில்ல...கேட்டதுமில்லைல்ல...ஒரு சாம்பிள் பாக்கறீங்களாங்?

அன்னு said...

i submitted t link to tamil manam. so that... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!! (க்ர்ர்ர்ர்ர்...)

Krishnaveni said...

ahaa, kadhai jet vegathula kelambiruchaaaaaa

siva said...

:(((((((((((((

so sad..

enimey entha blog vanthal entha thodar mudinthaal than varuven...

ethu appavi thangamani idlee methu sathiyam..

enaiya follow panravanga pannalam....

LK said...

இதில என்ன திருப்பம் இருக்கு ???

LK said...

//enimey entha blog vanthal entha thodar mudinthaal than varuven...//

அதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும் சரியா>>

ஸ்ரீராம். said...

அடப் பாவமே....சூர்ய மேல வேற ஒரு தப்பா? யானை கரடின்னு சொன்னப்பவே நினைச்சேன்...சுமி ஏதோ கரடி விடறா என்று...

என்னது நானு யாரா? said...

நல்லா போகுது கதை அப்பாவி அக்கா! ஒவ்வொரு முறையும் அடுத்த பகுதி எப்போ வரும்னு சொல்லிட்டீங்கன்னா எல்லோருக்குமே சௌகரியமா இருக்கும் இல்ல!

அக்கோய்...!என்ன நான் சொல்றது?

அனாமிகா துவாரகன் said...

I am proudly presenting the new mega-serial writer, Ms.Tank-a-mani. ha ha ha. So may twist acca. Finish it fast.

asiya omar said...

கதை தொடர்ந்து வந்து படிக்க முடியாமல் போய்விட்டது.நேரம் கிடைக்கும் பொழுது முழுவதையும் வாசிக்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

//அன்னு சொன்னது…
இந்தா இதெல்லாம் சரிப்பட்டு வராது. இன்னும் நம்ம வீட்டு இட்டிலிய நீங்க பாத்ததுமில்ல...கேட்டதுமில்லைல்ல...ஒரு சாம்பிள் பாக்கறீங்களாங்? //

ஆத்தீஈஈஈஈஈ... இன்னொரு இட்லிமணியா?? நாடு தாங்குமா? ஏற்கனவே நீங்க ”யோசிச்சு” கவிதை எழுதினதே இன்னும் ஜீரணமாகலை... இப்ப என்ன பண்ணப் போறீங்க.. நீங்களும் தொடர்கதையா..???!!!

எம்மா அப்பாவி தங்க்ஸ்... பாரும்மா உன் தொடர் செய்ற வேலைய!!

Guna said...

Karadi varuthu, Puli varuthu, Ambuli Mama padikkira mathiriye irukke !!!!

Guna said...

Surya thaan villan-a? Appo adutha part thaan last part-a??

Gayathri said...

aahaa enna akka ithu..ippadi yarayume vittu vaikka matengurele..super..seekram mudichuttu..andha priyamaanavale mari oru super romantic story podunga..indha tension thaangala

சே.குமார் said...

Kathai supera poguthu.

சௌந்தர் said...

கணேஷ் தண்ணீர் எடுத்துத்தர பருகியவள் தொடர்ந்தாள்////

இருங்க நான் தண்ணி குடித்து விட்டு வரேன்

சூர்யா என்ன செய்தார் காத்திருக்கவும் அடுத்த பதிவில்

Anonymous said...

என்ன புவனா இது எப்போ தான் முடிக்க போறீங்க இந்த சஸ்பென்ஸ் தாங்க முடியலே சாமி ...ப்ளீஸ் இந்த வர்ஷம் முடியறதுக்குள்ளே கதை முடிபீன்களா ?

அன்புடன் உங்க தோழி சந்தியா

மதுரை பாண்டி said...

nalla dhaan pogudhu kadhai!!!! interesting!!!

கோவை ஆவி said...

இந்த பாகம் கொஞ்சம் எதிர்பார்த்தது போலவே நகர்ந்தது. மேலும் சூர்யா மேல டவுட் இருந்ததனாலே பெரிய திருப்பம் இல்ல. சுமேதா திரும்பி வந்ததனாலே ஒரு திருப்தி..

ஜெய்லானி said...

அடங்கொக்கா மக்கா ...நான் லேட்டா வந்தாலும் இன்னும் கதை முடியற மாதிரி இல்லையே..!! விட்டுப்போன மொத்த கதையும் ஒரே மூச்சில படிச்சேன் ..இட்லி மாமீ இப்பிடி எங்களை அவஸ்தை படுத்தாதேள்..!!

தக்குடுபாண்டி said...

எப்புடி! போன வாரமே அது சுமிதான்னு யூகிச்சோம்ல!!..:)

பத்மநாபன் said...

மெகா தொடரில், இரண்டு ஸ்டேஷன் விட்டுட்டு மறுபடியும் ரயில் ஏறிட்டேன்...இன்னமும சஸ்பென்சாகவே போகிறதே...நல்லா மெயிண்டெயின் பண்றிங்க......

Venkatesh said...

ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டா?

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்

@ சுசி - தேங்க்ஸ் சுசி... ஒரே ட்விஸ்ட் தான் போங்க...

@ Mahi - ஹா ஹா ஹா... லக்கி நம்பர் என்னனு இன்னிக்கி லாட்டிரி வாங்கி பாத்துட்டு சொல்றேனுங்க அம்மணி... உங்க அப்ரோச் எனக்கு புடிச்சுருக்கு... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ஊட்டில கூட இதெல்லாம் உண்டுங்கோ... ஆஹா...இன்னொரு இட்லியா... மீ எஸ்கேப்... ஹா ஹா ஹா

@ அன்னு - நல்ல எண்ணம்... யாராச்சும் கேஸ் போட்டா உங்க அட்ரெஸ் தான் குடுப்பேன்... ஒகே வா...ஹா ஹா ஹா

@ Krishnaveni - கிளம்பிடுசுங்க கிளம்பிடுச்சு... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ siva - உங்க முடிவு எனக்கு புடிக்கல... தீர்ப்ப மாத்தி சொல்லுங்க... ஹா ஹா ஹா... இதுல follow பண்ண வேற ஆள் சேத்தறீங்களா... வெரி bad ... வெரி bad ...

@ LK - துபாய் குறுக்கு சந்துல இருக்கில்ல அந்த திருப்பம் தான்... ஹா ஹா அஹ... ஒகே ஒகே நோ டென்ஷன்... ச்சே...எப்படி இவ்ளோ கரெக்டா ஒரு வருஷம் ஆகும்னு சொல்ற... குட் குட்... ஹா ஹா ஹா

@ ஸ்ரீராம் - ஹா ஹா ... என்ன கரடினு பாத்துடுவோம்

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - அடுத்த பதிவு சீக்கரம் வருமுங்க... தேங்க்ஸ்ங்க வசந்த்

@ அனாமிகா துவாரகன் - ஹா ஹா ஹா... சூப்பர்... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்... வெல்கம் பாக் அம்மணி

@ asiya omar - முடியறப்ப வாசிங்க... நன்றிங்க ஆசியா

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹா ஹா அஹ... அந்த பயம் இருக்கட்டும்.. ஹா ஹா ஹா

@ Guna - அம்புலி மாமாவா சூர்யா மாமவானு அடுத்த பார்ட்ல சொல்லுங்க... ஹா ஹா ஹா

@ Gayathri - ஆஹா... பிரியமானவளே போலவா... கண்டிப்பா போட்டுடறேன்... நீயே வம்பை கேட்டு வாங்கிகறே... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ சௌந்தர் - ஹா ஹா ஹா... தண்ணி குடிச்சு முடிச்சாச்சா...? நன்றிங்க

@ சந்தியா- ஆஹா... உங்க பொறுமையவே சோதிச்சுடனா? அப்ப சீக்கரம் முடிச்சுட வேண்டியது தான் சந்த்யா.. .தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ மதுரை பாண்டி - தேங்க்ஸ்

@ கோவை ஆவி - தேங்க்ஸ்ங்க ஆனந்த்

@ ஜெய்லானி - ஹா ஹா ஹா.. .நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ஆ வந்தாலும் இப்போ முடியாதுங்கோ... சீக்கரம் முடிச்சுடறேன்... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - பின்ன? நீங்கெல்லாம் யாரு? ஹா ஹா அஹ

@ பத்மநாபன் - நன்றிங்க

@ Venkatesh - எஸ் எஸ்... நன்றிங்க

BalajiVenkat said...

Sssss Kanna kattuthey mega serial koodathungrathu mudinchudum pola intha amino intha kadhaiya twistu mela twista potty ... Kalyana seermurukka vida perusa poduvanga polarukkey .... Soda please.....

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - ha ha ha... kalyana seer murukku ellam nyabagapadutthi verupetthanumaa balaji idhukku... ha ha ha

siva said...

@ siva - உங்க முடிவு எனக்கு புடிக்கல... தீர்ப்ப மாத்தி சொல்லுங்க... ஹா ஹா ஹா... இதுல follow பண்ண வேற ஆள் சேத்தறீங்களா... வெரி bad ..//

...OK..Naan Mudivai maathi cholren..
neenga final part podara varikum..okva..
nanbargaley,padhivargalay,naam koduthai statement vaapas vangikolvom,..athuvariyil vilyil erunthu atharu tharvom enpathi arivithukolkorom..
epo happya???????appavi

அப்பாவி தங்கமணி said...

@ Siva - ha ha ha... this is a good deal...

vgr said...

adana pathen...ennada mudiyara mari irundudenu....

ana mari mari twist panrada patha....kadai title ku sambandam epo varum nu oru suspense vacheenga parunga....anga than...anga than ninneenga....

ana sincere request...adutha part oda mudichudunga please :)

Post a Comment