Monday, September 06, 2010

அதே கண்கள்... (பகுதி 7)

பகுதி 1 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 2 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 3 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 4 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 5 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 6 படிக்க - இங்கே கிளிக்கவும்

"சார்...அது வந்து" என கணேஷ் தயக்கத்துடன் சூர்யாவை பார்க்க

"தயவு செஞ்சு சொல்லுங்க... ப்ளீஸ்...எதுவா இருந்தாலும் பரவாஇல்ல" என்றான் சூர்யா மனதை திடப்படுத்தியவனாய்

"நேத்து... சுமி எனக்கு போன் பண்ணினது நிஜம் தான்... ஆனா"

"டேய்... இப்ப நீ சொல்றயா... இல்ல... "என சுரேஷ் முன்னேற இன்ஸ்பெக்டர் சுரேஷை முறைத்தார்

அடுத்து கணேஷ் கூறிய செய்தி எல்லார் முகத்தையும் வெளிற செய்தது...

"சுமி வாழ்க்கைல வந்த ஒரு காதல் தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம்"

"டேய் ராஸ்கல் நீ தப்பிக்கறதுக்கு என் தங்கச்சி பத்தி தப்பா சொல்றியா?" என சுரேஷ் பாய

"சுரேஷ் ப்ளீஸ்... நான் சொல்றத நம்பு... சுமி தான் இதை என்கிட்ட சொன்னா"

"உங்கிட்டியே சொன்னவ என்கிட்ட எப்படிடா சொல்லாம இருப்பா? உனக்கு சுமிய கல்யாணம் பண்ண நாங்க ஒத்துகலைன்னு அவள என்னமோ செஞ்சுட்ட நீ, உண்மைய சொல்லு" என எகிறினான்

"சுமி உன்கிட்ட சொல்லாததுக்கு உன்னோட இந்த முன்கோபம் தான் காரணம்"

"டேய்... " என மறுபடியும் சுரேஷ் கணேசை அறைந்தான்

"மிஸ்டர் சுரேஷ்... கெட் அவுட் ஆப் ஹியர்... எதுக்கு இப்படி அராஜகம் பண்றீங்க" என இன்ஸ்பெக்டர் கோபமாய் பேச

"சார்... ப்ளீஸ்...அவன் பொய் சொல்றான்... சுமிய அவன் என்னமோ செஞ்சுட்டான்... அவனை நாலு தட்டு தட்டினா தான் சொல்லுவான்...அது... " என்றவனை இடைமறித்த இன்ஸ்பெக்டர்

"ஜஸ்ட் ஸ்டாப் இட் சுரேஷ்... சஸ்பெக்ட்ஸ்ஐ எப்படி ஹாண்டல் பண்ணனும்னு நீங்க எனக்கு சொல்லி தர வேண்டாம்"

"இன்ஸ்பெக்டர் ப்ளீஸ்...டோன்ட் மிஸ்டேக் மீ... சுமிக்கு என்ன ஆச்சோனு பயமா இருக்கு..அதான்" என குரல் பிசிற கூற

"ஐ அண்டர்ஸ்டாண்ட் மிஸ்டர் சுரேஷ்... ஜஸ்ட் காம் டௌன்... மிஸ்டர் சூர்யா சுரேஷை கொஞ்ச நேரம் வெளிய கூட்டிட்டு போங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

வெளியே சென்று அங்கு இருந்த திண்ணையில் அமர்ந்தனர் இருவரும்

"கணேஷ் சொல்றத நம்பி நீங்க சுமிய தப்பா நெனைச்சுடாதீங்க சூர்யா... அவளால அதை தாங்க முடியாது... என் தங்கைய பத்தி எனக்கு நல்லா தெரியும்... இப்படி எதுவும் இருக்காது?" என சுரேஷ் கூற

"என்ன சுரேஷ் இது? சுமி உங்க தங்கைனா எனக்கு மனைவி, என்னில் பாதி... அவகிட்ட நீங்க வெச்சு இருக்கற நம்பிகையை விட எனக்கு நெறைய நம்பிக்கை இருக்கு" என சூர்யா கூற

"ரெம்ப நன்றி சூர்யா" என அவன் கைகளை பற்றி கொண்டான் சுரேஷ்

சற்று நேரம் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கினர் இருவரும்

"சுரேஷ்... சுமிக்கு எதுவும் ஆகாது தானே" ஏதோ நினைவில் கண்களில் நீர் துளிர்க்க சூர்யா கேட்டதும் சுரேஷும் உடைந்து போனான் 
 
ஆனாலும் சமாளித்து கொண்டு "யாருக்காக இல்லைனாலும் உங்களோட இந்த அன்புக்காக சுமி பத்திரமா நம்ம கிட்ட வந்துடுவா சூர்யா... எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று சமாதானம் சொன்னான் சுரேஷ்

அதே நேரம் கணேசை பல கேள்விகளால் குடைந்து கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர்

"இங்க பாருங்க கணேஷ்... உங்களுக்கு தெரிஞ்சத மறைக்காம சொல்றது ஒண்ணு தான் இப்ப நல்லது... இல்லேன்னா உண்மைய வரவெக்க நாங்க வேற வழிகளை கையாள வேண்டி இருக்கும்"

"இன்ஸ்பெக்டர் நான் எனக்கு தெரிஞ்சத மறைக்க மாட்டேன்... சொல்லிடறேன்... சின்னதுல இருந்தே சுமிய நான் ஒரு சகோதரியாதான் பாத்தேன்... என்கிட்ட எல்லாமும் பேசுவா சுரேஷ்கிட்ட போலவே. மூணு மாசம் முன்னாடி சுமிக்கு கல்யாணம் முடிவு ஆன ஒரு வாரம் கழிச்சு நான் சுமி வீட்டுக்கு போய் இருந்தேன்... அப்போ..." என அந்த நிகழ்வை விவரிக்க தொடங்கினான்

____________________________

"வா கணேஷ்... எங்க ஒரு வாரமா ஆளே காணோம்" என சுமேதாவின் அம்மா சுசிலா அன்புடன் கேட்க

"கொஞ்ச வேலையா இருந்தேன் அத்த..."

"கணேஷ்... ஒரு விசயம்"

"என்ன அத்த ... சொல்லுங்க?"

"உனக்கு சுமிய கேட்டு நாங்க வேணாம்னு சொன்னதுல உனக்கு வருத்தம் இருந்தா எங்களை மன்னிச்சுடுப்பா"

"என்ன அத்த நீங்க... அதை நான் எப்பவோ மறந்தாச்சு... நான் அப்பவே உங்க கிட்ட சொன்னேன் இல்லையா, அம்மா அப்படி வந்து கேட்டதுல எனக்கு உடன்பாடு இல்லைன்னு"

"சொன்ன... ஆன சுமி கல்யாணம் நிச்சியம் ஆகி இந்த ஒரு வாரமா நீ வீட்டு பக்கமே வராததால... "

"ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்த... நெஜமாவே வேலை அதிகம்... அதான் மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்தன்னைக்கு கூட வர முடியல...அது சரி... மாமா ஆபீஸ் போயாச்சா?" என்று பேச்சை மாற்றினான்

"ம்... மாமா சுரேஷ் ரெண்டு பெரும் போயாச்சு..."

"சுமிக்கு காலேஜ் எல்லாம் முடிஞ்சதல்ல... கல்யாண பொண்ணு எங்க சத்தமே காணோம்?"

"பின்னாடி தோட்டத்துல உக்காந்துட்டு என்னமோ புக் படிச்சுட்டு இருந்தா... போய் பாரு... நீங்க பேசிட்டு இருங்க... நான் லஞ்ச் ரெடி பண்றேன்... சாப்ட்டுட்டு அப்புறம் போவியாம்"

"சரிங்க அத்த" என்றவன் சுமேதாவை தேடி சென்றான்

தோட்டத்து ஊஞ்சலில் முதுகு காட்டி அமர்ந்து இருந்தவளை பயம் காட்ட எண்ணி பூனை பாதம் வைத்து அருகில் சென்று "பே... " என கத்தினான் கணேஷ்

"ஐயோ...அம்மா... " என அலறி எழுந்தவள் கண்களில் நீர் வழிய நின்றாள்

அவள் கண்ணீராய் பார்த்து பதறியவன் "ஏய் சுமி.. என்னதிது... நான் எப்பவும் இப்படி பயம் காட்டினா... உன்னோட 'பே' க்கு ஒரு 'பெப்பே' னு சொல்லி சிரிப்ப.. இன்னிக்கி என்ன ஆச்சு உனக்கு?" என கணேஷ் அக்கறையாய் கேட்க அதற்கு மேல் தாங்கமாட்டாமல் முகம் பொத்தி அழுதாள்

"ஏய் சுமி... என்ன ஆச்சுனு சொல்லு? உனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலையா?"

"அதெல்லாம் இல்ல" என்றவள் மீண்டும் அழுதாள்

"இப்படி அழுதா என்ன அர்த்தம், ஒழுங்கா சொல்லு"

"அது... கணேஷ் ப்ளீஸ் இதை யார் கிட்டயும் சொல்லிடாதே... முக்கியமா எங்க அண்ணன் கிட்ட. அவன் முன்கோபம் உனக்கு தெரியுமல்ல"

இதை கேட்டதும் விசயம் ஏதேதும் விபரீதமாய் இருக்குமோ என பயந்தான் கணேஷ்

"மொதல்ல சொல்லு சுமி..."

"அது... " என்றவள் ஒரு கணம் சுற்றிலும் பார்வை செலுத்திவிட்டு சன்னமான குரலில் அந்த நிகழ்வுகளை சொல்ல தொடங்கினாள் சுமேதா

(பிளாஷ்பாக்குள்ள பிளாஷ்பாக்...தமிழ் சினிமா மாதிரி ஆய்டுச்சு... சாரி ரீடர்ஸ்... கொஞ்சம் பொறுத்துகோங்க)

கவலை இல்லாத சுதந்திர பறவைகளாய் எங்கும் நிறைந்து இருந்தனர் மாணவ மாணவிகள் அந்த கல்லூரி வளாகம் முழுக்க... இண்டர்காலேஜ் மீட் விழா துவங்கியது

"ஹலோ குட்மார்னிங் எவ்ரிபடி... இட்ஸ் அ ப்ளசர் டு வெல்கம் யு ஆல் அட் திஸ் கிரேட் ஈவன்ட்.." என கல்லூரி மாணவ தலைவி பேசிக்கொண்டே போக கூட்டத்தில் இருந்த மற்ற கல்லூரி மாணவர்கள்  எல்லாம் வேண்டுமென்றே "தமிழ் தமிழ்... தமிழ்ல பேசு... இல்லேன்னா எறங்கி போ" என கத்தத்துவங்க வடநாட்டை சேர்ந்த அந்த மாணவி ரீனா திருதிருவென விழிக்க உதவிக்கு வந்தாள் அவள் தோழி சுமேதா

"எல்லாருக்கும் வணக்கம். டியர் பிரெண்ட்ஸ், நம்ம தலைவி ரீனா நார்த் இந்தியன் பொண்ணு. அவங்களுக்கு தமிழ் தெரியாது. கொஞ்சம் பொறுத்துகோங்க"

"அப்ப நீயே பேசு... உனக்கு தமிழ் நல்லா தானே வருது... " என ஒரு மாணவன் கூட்டத்தில் இருந்து கத்த

"அது... எப்படி... அவங்க தான்..." என சுமேதா ஏதோ சொல்ல தொடங்க மாணவர்கள் வேண்டுமென்றே ஆரவாரம் செய்தனர்

"தமிழ்நாட்டுல தமிழ்ல பேசசொல்றது ஒரு தப்பா.. என்ன கொடும சார் இது..." என ஆசிரியர்கள் இருந்த பக்கம் மாணவர்கள குரல் கொடுக்க பிரின்சிபால் அவசரமாய் மாணவர் தலைவியை அழைத்து சுமேதாவையே பேசசொல்லி ஆணையிட்டார்

ஒரு கணம் பயந்த சுமேதா பின் சுதாரித்து கொண்டாள். ரீனா ஆங்கிலத்தில் எழுதி வைத்து இருந்த குறிப்புகளை பார்த்து தானும் கொஞ்சம் சேர்த்து அழகு தமிழில் எல்லாரையும் கட்டி போட்டாள்

சுமேதா தான் அந்த கல்லூரியின் கல்சுரல்ஸ் செக்ரட்டரி, அவளுக்கு மேடை பேச்சு புதிதல்ல எனபதால் பிரச்சனை எதுவும் இன்றி விழா அழகாய் நடைபெற்றது

பல போட்டிகள் நடைபெற்றன. அதில் பாட்டு போட்டியும் ஒன்று

"இப்போது பாட்டு போட்டி துவங்குகிறது. முதலில் பாட போவது பி.பி.எம் முதலாம் ஆண்டு மாணவி அனிதா" என சுமேதா அழைக்க அனிதா வரவில்லை

"அனிதா... மேடைக்கு வாங்க" என சுமேதா மறுபடி அழைக்க அனிதாவை அவள் தோழிகள் இருவர் இழுத்து வராத குறையாய் அழைத்து வந்தனர்

மேடைக்கு வந்த அனிதா திருதிருவென விழித்தாள். சுமேதாவிடம் "அக்கா நான் பேரே குடுக்கல... யாரோ வேணும்னே என் பேரை..." கண்களில் நீர் பனிக்க கூற அதற்குள் மாணவர்கள் கத்தத்துவங்க

"பரவால்ல எதாச்சும் பாடி சமாளி அனிதா... பசங்க சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க"

"இல்லக்கா... எனக்கு ஸ்டேஜ்னா ரெம்ப பயம்... எனக்கு சினிமா பாட்டும் அதிகம் தெரியாது"

"அனிதா டென்ஷன் பண்ணாதே... எல்லாரும் இங்கயே பாக்குறாங்க... சீக்கரம் எதாச்சும் ஒண்ணு பாடி தொலை... நான் உன் பக்கத்துலையே நிக்கறேன்" என சுமேதா டென்சனில் கோபமாய் பேச அந்த கோபத்திற்கு பயந்தோ என்னமோ பாட தொடங்கினாள் அனிதா

"குறையொன்றும் இல்லை... மறைமூர்த்தி கண்ணா... குறையொன்றும் இல்லை கண்ணா..." என அனிதா பாடத்துவங்க "ஊ... ஊ... கண்ணா... கிருஷ்ணா... கோவிந்தா... "என மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய அனிதா அழுது கொண்டே நகர்ந்தாள்

அவளை பற்றி நிறுத்திய சுமேதா மாணவர்களை பார்த்து கோபமாய் "டியர் பிரெண்ட்ஸ். நீங்க செய்யறது உங்களுக்கே சரின்னு தோணுதா? தமிழ்ல பேசணும்னு கேட்டப்ப சந்தோசப்பட்டேன். அப்படி தமிழ் பற்று இருக்கற உங்களுக்கு இந்த அழகான பாட்டை ரசிக்க தெரியலன்னா யாருக்கும் ரசனையே இல்லைன்னு தான் அர்த்தம். ராக் & ராப் தான் உங்கள பொறுத்த வரை இசையா? அதை தப்புன்னு சொல்லல... நானும் கேப்பேன். ஆனா நம்ம பாரம்பரியமிக்க கர்நாடக சங்கீதத்துல இருக்கற ஆன்மா வேற எதுலயும் இல்ல. இந்த பாட்டு மூதறிஞர் ராஜாஜி எழுதி எம்.எஸ் அம்மாவால ஐ.நா சபைல பாடப்பட்ட அற்புதமான வரலாற்று சிறப்பு மிக்க பாடல். நான் இவ்ளோ சொன்னபுறமும் உங்களுக்கு இந்த பாட்டு வேண்டாம்னா நான் அனிதாவை அனுப்பிடறேன்" என சுமேதா பேசி நிறுத்த சில நொடிகள் அங்கு அமைதி நிலவியது

சட்டென ஒரு மாணவன் எழுந்து "அனிதா... நீங்க பாடுங்க... நாங்க கேக்கறோம்" என கூற மற்ற மாணவர்களும் ஆமோதிக்க "எல்லாருக்கும் ரெம்ப நன்றி" என்று கூறி விட்டு "அனிதா நீ பாடு" என்றாள் சுமேதா

எங்கும் அமைதி நிலவ அனிதாவின் தேன் குழைந்த அந்த குரலில் எல்லோரும் கண்டுண்டனர். எல்லாரும் எதிர்பார்த்தது போல் பாட்டு போட்டியில் முதல் பரிசு அனிதாவே பெற்றாள்

அடுத்து வந்த பல போட்டிகளில் அரசு கலை கல்லூரி மாணவன் அருண் தான் வெற்றி பெற்றான். அழகும் திறமையும் நிறைந்த அருணை பல பெண்களின் கண்கள் மொய்த்து. ஆனால் அவன் கண்ணுக்கு ஒரு பெண் மட்டுமே தெரிந்தாள்

விழாவின் இறுதியில் அரசு கலை கல்லூரி தான் அதிக புள்ளிகள் பெற்று கோப்பை வென்றது. கோப்பையை பெற மேடைக்கு வந்த அருண் சுமேதாவிடமிருந்து மைக்கை வாங்கி "டியர் பிரெண்ட்ஸ். இன்னிக்கி நாங்க எல்லாரும் உங்க காலேஜ்க்கு வந்து ரெம்ப என்ஜாய் பண்ணினோம். எல்லா ப்ரோக்ராமும் ரெம்ப நல்லா இருந்தது. முக்கியமா அனிதாவோட பாட்டு இன்னும் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு. காம்பெயர் பண்ணின சுமேதா சொன்ன மாதிரி நம்ம பாரம்பரியமிக்க கர்நாடக சங்கீதத்துல இருக்கற ஆன்மா வேற எதுலயும் இல்ல. தேங்க்ஸ் டு ஆல். பாய்... சி யு நெக்ஸ்ட் இயர்" என விடை பெற்றான்

அருணின் பேச்சை கேட்ட சுமேதா அவனை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள்

அதன் பின் அருண் அடிக்கடி தன் பள்ளி கால நண்பர்களை காண என ஏதேனும் சாக்கிட்டு அந்த கல்லூரிக்கு வந்தான்

அருணின் பள்ளிகால நண்பர்கள் சிலர் சுமேதாவின் வகுப்பில் இருந்தனர். எனவே அடிக்கடி சுமேதாவும் அவனை சந்திக்க நேர்ந்தது. அருணின் சிரிக்க சிரிக்க பேசும் இயல்பும் அனைவரையும் மதிக்கும் குணமும் விரைவிலேயே பல தோழிகளை அந்த கல்லூரியில் பெற்று தந்தது, அதில் சுமேதாவும் ஒருத்தி, ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது அவர்களின் நட்பு 

சிறுவயதில் இருந்தே தன் அண்ணன் சுரேஷின் நண்பர்களுடன் தோழமையாய் பழகியதால் அவளுக்கு ஆண்கள் பெண்கள் என்று நட்பில் பிரித்து பார்க்கும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.

ஆனால் தனக்கென ஒரு வரையறை வகுத்து கொண்டு எல்லாரிடமும் ஒரே போல் இருப்பாள். சுமேதாவின் பெற்றோரும் மகளை பற்றி நன்கு அறிந்து இருந்ததால் முழு சுதந்திரம் கொடுத்து இருந்தனர்

அன்று கல்லூரிக்கு வந்த அருண் நேரே சுமேதாவை தேடி வந்தான்

"ஹாய் அருண்... என்ன காலங்காத்தால இங்க? காலேஜ் போகலையா?"

"இன்னைக்கு ஒரு முக்கியமா ஆளோட பிறந்த நாள்... அதான் இங்க வந்தேன்"

"யாருக்கு? ரமேஷுக்கா?"

"இல்ல..."

"ஆனந்த் பர்த்டே லாஸ்ட் மன்த் தான் வந்தது... ஒரு வேளை குணாவா... இல்ல இல்ல அவனுது முடிஞ்சுது... வேற யாரு... நீயே சொல்லு"

"ஏன்... ரமேஷ் ஆனந்த் குணா இவங்களுக்கு மட்டும் தன் பர்த்டே வருமா... எனக்கெல்லாம் வராதா?" என கோபமாய் கேட்க

"ஓ...சோ சாரி அருண்... எனக்கு நெஜமா தெரியாது... உன்ன கொஞ்ச நாளா தானே தெரியும்"

"ஒருத்தரை எத்தனை நாளா தெரியும்கறது முக்கியமில்ல அவங்களை பத்தி எவ்வளவு தெரிஞ்சு வெச்சு இருக்கோம்கறது தான் முக்கியம்" என மீண்டும் கோபமாய் பேசி முகம் திருப்ப சுமேதாவுக்கு மிகவும் வருத்தம் ஆனது

"சாரி அருண்... தப்பு தான்... தெரிஞ்சுக்காதது தப்பு தான்... சரி என்ன பணிஷ்மன்ட்னு சொல்லு... தோப்புகரணம் போடணுமா? எண்ணிக்கோ போடறேன்... " என அவள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு தன் காதில் கைகளை பற்றி தோப்புகரணம் போடத்துவங்க அதற்கு மேல் அடக்க முடியாமல் சிரித்து விட்டான் அருண்

"அப்பாடா... ஒரு வழியா சிரிச்சுட்டே... எப்பவும் சிரிச்சுட்டே இருப்பியா? நீ கோபபட்டா பாக்கவே சகிக்கலை அருண்... " என்றவளை யோசனையாய் பார்த்தான் அருண்

"அப்படியா... அப்போ நான் வாழ்நாள் பூரா சிரிச்சுட்டே இருக்க ஒரு ஐடியா இருக்கு... அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும். செய்வியா?" என சிரித்து கொண்டே கேட்க

"என்ன? சொல்லு... உன்னோட பர்த்டேவை மறந்ததுக்கு பிராயசித்தமா என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்" என்றாள் அவளும் உற்சாகமாய்

அவன் என்னவென கூறியதும் சுமேதாவின் விழிகள் விரிந்தது

அது...

அடுத்த பகுதி - பகுதி 8 படிக்க - இங்கே கிளிக்கவும்


(தொடரும்...)


...

42 பேரு சொல்லி இருக்காக:

Anonymous said...

அது??????? வேற என்ன. கட்டிக்கிறியான்னு கேட்டிருப்பான். நாம் யாரு. ஹி ஹி.
Ana

என்னது நானு யாரா? said...

கதை சுறுசுறுப்பா போகுது..சஸ்பென்ஸ் தாங்க முடியல.. சீக்கிரமா.. அடுத்த பகுதியை போடுங்க அப்பாவி அக்கா...

------------------------------------------

நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

அன்பு அப்பாவி அக்கா! நீங்களும் கட்டாயம் வரணும்.

படிச்சி பாத்து உங்க கருத்தை சொல்லுங்க!
--------------------------------------------

கோவை ஆவி said...

ஐயய்யோ!!! என்னங்க டிராக் மாறி போகுது??
சுமேதா மேல எங்களுக்கும் நம்பிக்கை இருக்குப்பா!!!

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!!!

sandhya said...

புவனா கதை நல்லா போகுது ஆனா இப்பிடி இழுத்திட்டு இருந்தா நான் என்ன செய்வேன் ...மீதி கதை சீக்ரமா போடறிங்களா ப்ளீஸ் ..

vinu said...

naannum attendance pottukarean

vinu said...

Arun loves anitha ! right?!

kunthavai said...

hm.... interesting...continue..

sakthi said...

நல்ல விறுவிறுப்பு அருமையாக கொண்டு போறீங்க ஆவலோடு காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்கு

சௌந்தர் said...

கதை வேறு பக்கம் போகிறது அங்க என்ன நடந்தது

வெறும்பய said...

நல்ல விறுவிறுப்பு...காத்திருக்கிறேன்

பத்மநாபன் said...

ஃப்ளாஷ் பேக்கிங் டெக்னிக் நன்றாக வேலை செய்கிறது. கதை விறுவிறுப்பாக கொண்டு போகிறீர்கள். கணேஷை அடுத்து அருணை கதை மையம் கொண்டுள்ளது..அடுத்து அருண் ஃப்ளாஷ் பேக் ஆரம்பிப்பான் என்று நினைக்கிறேன்.

சின்ன அம்மிணி said...

ok, next part pls

Guna said...

Nalla irukkunga, Adutha part vegama podunga

Gayathri said...

kadhai nallaa irukku. irunga mundhaya partsum padichutu varen

சுசி said...

வர வர த்ரில் கூடிட்டே போகுதே புவனா..

ஜெய்லானி said...

எப்படியும் இந்த கதையை இந்த வருஷ கடைசிக்குள்ள முடிச்சிடுவீங்களா சீடை மாமீ..!!ஓவர் திரிலிங்கா இருக்கே ..அடிக்கடி சஸ்பென்ஸ் தாங்கல .

Krishnaveni said...

interesting story, keep going

முனியாண்டி said...

உங்களுடைய அதே கண்கள் எல்லா பகுதியும் படித்தேன். உண்மையை சொன்னால் அரண்டு போனேன் கதையினால் அல்ல உங்கள் எழுத்து அதன் எளிமை, கதை ஓட்டத்தின் தெளிவு, கதையை பாதிக்காது உரையாடல், தேவையான வர்ணனை கதையை பதிக்காத எழுத்தாளர் குறிக்கீடு உதரணமாக
//சட்டென மேகம் கறுக்க சிறிது தூறல் விழ இருட்ட தொடங்கியது வானம்.... பின்னால் வரபோகும் விபரீதத்தை உணர்த்துவது போல்..//
தற்குறிப்பேற்றணி மிக அருமை மதுரைக்கு கோவலன் கண்ணகி வரும்போது ஆடிய மின்கொடி வரதே என்று ஆடியதாக சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் ஞாபகம் வந்தது.

காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு

vanathy said...

தங்ஸ், நல்ல விறுவிறுப்பா போகிறது. தொடருங்க..

ஹுஸைனம்மா said...

ரொம்ம்ம்ம்ம்ம்ப இழுக்குறீங்க.. சஸ்பென்ஸ் தாளல..

சே.குமார் said...

நல்ல விறுவிறுப்பு...காத்திருக்கிறேன்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - கடவுளே கடவுளே... யாராச்சும் சீக்கரமா இந்த பொண்ணை மாட்டி விடுங்கப்பா... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா ஹா

@ என்னது நானு யாரா? - நன்றிங்க... சூப்பரா இருக்கு உங்க ப்ளாக்... கலக்கறீங்க... தூள்...

@ கோவை ஆவி - வாங்க ஊர்காரரே. ட்ராக் மாறுதுங்க... எஸ்... சுமேதா மேல அவ்ளோ நம்பிக்கையா பாப்போம்... ஸூர்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா... சீக்கரம் போடறேன்பா... நெஜமாவே

@ vinu - எஸ் மிஸ்ஆ? ஒகே... ஒகே... டீச்சர்ஸ் டேனதும் ஸ்கூல் அட்டெண்டன்ஸ் எல்லாம் ஞாபகமா வந்துடுச்சுங்களா வினு... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... அருண் லவ்ஸ் அனிதாவா? ம்... தெரியலையே சார்... கேட்டு பாக்கறேன்...

@ kunthavai - தேங்க்ஸ் குந்தவை

அப்பாவி தங்கமணி said...

@ sakthi - தேங்க்ஸ் சக்தி... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்

@ சௌந்தர் - அங்க என்ன நடந்ததுன்னு அடுத்த பார்ட்ல் காண்க... சரி சரி... நோ டென்ஷன்... சீக்கரம் போட்டுடறேன்...

@ வெறும்பய - நன்றிங்க... சீக்கரம் போட்டுடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - வாங்கண்ணா... ரெம்ப நன்றிங்க... கணேஷ் ப்ளாஷ்பாக்கா? இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ சின்ன அம்மணி - சீக்கரம் போட்டுடறேன்.. .தேங்க்ஸ்ங்க அம்மணி

@ Guna - வாங்க குணா... ரெம்ப நாள் கழிச்சு கமெண்ட்... நன்றி... சரிங்க படிச்சுட்டு சொல்லுங்க... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - ஆமா சுசி... தேங்க்ஸ்

@ ஜெய்லானி - கர்ர்ர்ரர்ர்ர்.. வாட் சீடை? வாட் மாமி? கர்ர்ர்ரர்ர்ர்.. நீங்க இப்படி சொன்னதுகாகவே கதை சீக்கரம் போட போடறேன் நெக்ஸ்ட் பார்ட்... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ரெம்ப நன்றிங்க. தற்குறிப்பேற்றணி எல்லாம் சொல்லி "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" கண்ணகி கோவலன் கதை எல்லாம் சொல்லி சந்தோசப்படுத்திடீங்க. மீண்டும் நன்றி... சீக்கரம் அடுத்த பகுதி போட்டுடறேன்... நன்றி

@ vanathy - தேங்க்ஸ் வாணி...

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - சஸ்பென்ஸ்னா இழுக்கதானே செய்யணும் ஹுஸைனம்மா... ஹா ஹா ஹா

@ சே.குமார் - நன்றிங்க குமார்

ஸ்ரீராம். said...

த்ரில் கதையிலிருந்து காதல் கதைக்கு மாறி உள்ளது. பத்மநாபன் கொடுத்த ஐடியா வெல்லாம் எடுத்துக்காதீங்க ப்ளீஸ்...@

கிருஷ் said...

கதை செம்ம சூப்பரா போவுது அடுத்த பகுதிக்காக வெய்டிங் :)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

தங்க்ஸ் தொடரா.. கலக்குறீங்க போங்க.. சுறுகதை எழுதவே டயர்டா இருக்கும்மா..:))

பத்மநாபன் said...

//த்ரில் கதையிலிருந்து காதல் கதைக்கு மாறி உள்ளது. பத்மநாபன் கொடுத்த ஐடியா வெல்லாம் எடுத்துக்காதீங்க ப்ளீஸ்...@ //

ஸ்ரீ... அம்மணி கதைக்குள்ள எவ்வளவு ஃப்ளாஷ் பேக் பார்த்துட்டோம் , இன்னமும் ஒன்னு பார்க்க மாட்டமா என்ன?

pinkyrose said...

இப்போதைக்கு முடிக்கிர மாதிரி ஐடியா இல்ல போல

pinkyrose said...

அப்பாவி பத்திரமா இருங்க என்னொட நெக்ஸ்ட் போஸ்ட்ல நீங்க மாட்னீங்க

Riyas said...

கதை நல்லாயிருக்குங்க..

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா... எல்லார் ஐடியாவும் யூஸ் பண்றதுதாங்க... உங்களுக்கும் எதாச்சும் ஐடியா தோணினா சொல்லுங்களேன்... ஹா ஹா ஹா

@ கிருஷ் - தேங்க்ஸ் கிருஷ்... சீக்கரம் போட்டுடறேன் அடுத்த பார்ட்

@ தேனம்மை லெக்ஷ்மணன் - thanks akka

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஹா ஹா ஹா... உங்களுக்கு மனதைரியம் ரெம்ப ஜாஸ்தி தான் போங்க... தேங்க்ஸ்ங்க

@ pinkyrose - ஹா ஹா ஹா... காணாம போன பொண்ணை கண்டுபிடிச்சா தானே பிங்கி முடிக்க முடியும்... உங்களுக்கு எதாச்சும் துப்பு கெடைச்சா சொல்லுங்க... ஹா ஹா அஹ... (ஆஹா அடுத்த போஸ்ட்ல நான் தானா... மீ எஸ்கேப்...)

@Riyas - தேங்க்ஸ் ரியாஸ்

நசரேயன் said...

//பிளாஷ்பாக்குள்ள பிளாஷ்பாக்//

இன்செப்சன் படம் பாத்தீங்களோ ?

Anonymous said...

//@ அனாமிகா - கடவுளே கடவுளே... யாராச்சும் சீக்கரமா இந்த பொண்ணை மாட்டி விடுங்கப்பா... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா ஹா //

Hello Madam,
I will get you........
Ana

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - அந்த இன்செப்சன் படம் பத்தி நானும் கேள்விப்பட்டேன்... இன்னும் பாக்கலைங்க... ஹா ஹஹா

@ அனாமிகா - y டென்ஷன் நோ டென்ஷன் அனாமிகா.. ஹா ஹா ஹா

Ananthi said...

ஹையா.. நா என்ன சொன்னானு கேக்க மாட்டனே... அடுத்த பதிவில் போய் படிக்கிறேன்..


டாடா... :-)) நல்லா இருக்குப்பா... ;-)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ஹா ஹா ஹா... Thanks Ananthi

Post a Comment