Wednesday, September 08, 2010

அதே கண்கள்... (பகுதி 8)


பகுதி 1 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 2 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 3 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 4 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 5 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 6 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி  7 படிக்க - இங்கே கிளிக்கவும்

முன் குறிப்பு:  என்னாச்சு இந்த அப்பாவிக்கு? மூணு நாள் முன்னாடி தானே பார்ட் 7 போட்டா. எப்படியும் மூணு வாரம் கழிச்சு தான் அடுத்த பார்ட் வரும்னு எதிர்ப்பார்த்தோமே அப்படின்னு நீங்க சொல்றது தெளிவா கேக்குது எனக்கு... ஹி ஹி ஹி

எஸ்... இது தான் என்னோட செப்டம்பர் ரெசல்யூசன்... இந்த கதைய கடகடன்னு எழுதறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்... இந்த அப்பாவி  ஒரு முடிவெடுத்துட்டா அப்புறம் அவ பேச்சை அவளே கேக்க மாட்டா... (ஒகே... கல்லு முட்டை தக்காளி எல்லாம் வர்றதுக்குள்ள மீ எஸ்கேப்... )
 
Lets goto the story....
 
"அப்படியா... அப்போ நான் வாழ்நாள் பூரா சிரிச்சுட்டே இருக்க ஒரு ஐடியா இருக்கு... அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும். செய்வியா?" என சிரித்து கொண்டே அருண் கேட்க
 
"என்ன? சொல்லு... உன்னோட பர்த்டேவை மறந்ததுக்கு பிராயசித்தமா என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்" என்றாள் சுமேதாவும் உற்சாகமாய்

"சுமி... நான் உங்க டிபார்ட்மென்ட்ல பர்ஸ்ட் இயர் படிக்கற அனிதாவை விரும்பறேன். நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"ஏய்... அருண்...நீ சொல்றது... " என்ற சுமேதாவின் விழிகள் ஆச்சிர்யத்தில் விரிந்தது

"நிஜம் தான் சுமி. மொதல் மொதலா அவள இண்டர்காலேஜ் மீட்ல பாத்தப்பவே என்னமோ... சம்திங்... ஐயம் ஜஸ்ட் லாஸ்ட்... " என உணர்ச்சி பொங்க கூற சுமேதாவால் இன்னும் நம்ப முடியாமல் இருந்தது

"ஆனா... நீ அவ கூட பேசி நான் பாத்ததே இல்லையே அருண்...எப்படி? நீயுன்னு இல்ல... யார் கூடவும் பேசாம ஒதுங்கி ஒதுங்கி போவாளே... சாமியார்னு பட்டப் பேரே இருக்காமே அவளுக்கு" என இன்னும் ஆச்சிர்யம் விலகாமல் சுமேதா கேட்க

"அதான் பிரச்சனை சுமி. அதுக்கு தான் உன் ஹெல்ப் வேணும்" என அருண் கூற

"என்ன சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியல... இதுல நான் என்ன...?"

"பக்கத்துல போனாலே ஓடறா... பட் அவளுக்கு என்மேல இண்டரெஸ்ட் இருக்குனு எனக்கு தெரியும் "

"அடப்பாவி ஒன் சைடு லவ்வுக்கா இவ்ளோ பில்ட் அப் குடுத்த... நான் கூட ஏதோ கல்யாணம் வரை வந்தாச்சு போல, அதுக்கு தான் ஹெல்ப் கேக்கறேன்னு நெனச்சேன்"

"ஒன் சைடு லவ்வுனா என்ன கேவலமா?" என அருண் கோபமாய் பேச

"அப்படி இல்ல அருண்... உன்னை ஹர்ட் பண்ணுனும்னு அப்படி சொல்லல... அவளுக்கு இஷ்டம் இல்லாதப்ப நாம என்ன செய்ய.... "என்றவளை இடைமறித்த அருண்

"இல்ல சுமி... அவளுக்கு என்மேல விருப்பம் இருக்கு. எனக்கு தெரியும். ஆனா அவளோட கூச்ச சுபாவம் அவளை பேச விட மாட்டேங்குது"

"சரி ... நான் என்ன ஹெல்ப் பண்றது... தூது போக சொல்றியா?"

"அது... இல்ல... "

"பின்ன"

"அவ உன்னோட ஜூனியர்... பர்ஸ்ட் இயர் தானே... அவளை என்கிட்ட ஐ லவ் யு சொல்ல சொல்லி ராக்கிங் பண்ணனும். அப்புறம் அவளை என் வழிக்கு கொண்டு வர்றதை நான் பாத்துக்கறேன்"

"ஏய்... விளையாடறயா?" என சுமேதா முறைக்க

"என்ன சுமி... ஒரு சின்ன ஹெல்ப் தானே"

"ராக்கிங் எல்லாம் எப்பவோ முடிஞ்சுது. காலேஜ் ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு"

"ப்ளீஸ் சுமி... அவ உன்னோட ஜூனியர் தானே... எனக்காக... இந்த ஹெல்ப் என்னோட பர்த்டேக்கு நீ தர்ற கிப்ட்னு நெனச்சுக்கோ... நாங்க ஒண்ணு சேந்தபுரம் அவளே உனக்கு இதுக்கு தேங்க்ஸ் சொல்ல போறா பாரு" என கெஞ்சவும் வேறு வழியின்றி ஒத்துகொண்டாள் சுமேதா

"சரி.. ஜஸ்ட் திஸ் ஒன்ஸ்... இன்னொரு வாட்டி இந்த மாதிரி லூசுத்தனமா எதாச்சும் ஐடியா கொண்டு வந்தா உன்னோட பேசவே மாட்டேன்"

"நிச்சியமா இல்ல... ஜஸ்ட் திஸ் ஒன்ஸ்... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் அ லாட் சுமி..." என்றவன் சட்டென முகம் மலர "சுமி அனிதா வர்றா... அங்க பாரு...அவள கூப்பிடு.. நான் அந்த மரத்துகிட்ட போய் நிக்கறேன்... அவள அங்க வந்து என்கிட்ட ஐ லவ் யு சொல்ல சொல்லு" என்றவன் சுமேதாவின் பதிலுக்கு காத்திருக்காமல் சென்றான்

"ஏய் அனிதா... இங்க வா?" என சுமி அழைக்க

"சொல்லுங்கக்கா... "என அனிதா பாவமாய் கேட்க

"ம்... நீ பர்ஸ்ட் இயர் தானே... நான் உன்னை இதுவரைக்கும் ராக் பண்ணவே இல்ல... அதுக்கு தான் கூப்ட்டேன்" என முடிந்த வரை முகத்தை சீரியஸ்யாய்  வைத்து கொள்ள முயன்றாள் சுமேதா

அனிதா எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றாள்

"அனிதா... அங்க பாரு.. அங்க மரத்துகிட்ட நிக்கற அந்த ப்ளூ ஷர்ட் பையன் கிட்ட போய் ஐ லவ் யு சொல்லிட்டு வா" என சுமேதா கூற அனிதா இன்னும் குனிந்த தலை நிமிராமல் நின்றாள்

"ஏய் சொல்றது காதுல விழலயா" என கோபமாய் பேச முயன்றாள் தன் இயல்புக்கு மாறாய்

"அக்கா ப்ளீஸ்... வேற எதாச்சும் சொல்லுங்க... செய்யறேன்... ப்ளீஸ்" என அனிதா கெஞ்ச சுமேதாவுக்கு சந்தேகம் வந்தது

ஒரு வேளை அருண் சொல்வது போல் இல்லையோ... அவன் தான் தவறாக அனிதாவை பற்றி புரிந்து கொண்டு இருக்கிறானோ என தோன்ற அவள் திரும்பி அருணை பார்க்க "ப்ளீஸ் ப்ளீஸ்" என வாயசைவில் கெஞ்சினான்

சரி இன்னும் ஒரு முயற்சி செய்யலாம் என தோன்ற "இங்க பாரு அனிதா... இன்னிக்கி நீ இதை செய்யாம இங்க இருந்து போக முடியாது... இப்பவே நான் சொல்றத செய்யலைனா இனிமே தினமும் ராக்கிங் தான்" என சுமேதா மிரட்ட சற்று நேரம் பேசாமல் நின்றிருந்த அனிதா தப்பிக்க வேறு வழி அறியாமல் அருணிடம் சென்று அவன் முகத்தை கூட பாராமல் "ஐ லவ் யு" என கூறினாள்

அவள் எதிர்பாராமல் சட்டென அவள் கைகளை பற்றிய அருண் "இன்னொருவாட்டி சொல்லு" என கேட்க

"ப்ளீஸ் விடுங்க... ப்ளீஸ்" என அழ அங்கு வந்த மற்ற மாணவர்கள் அவளை பார்த்து சத்தமாய் சிரிக்க அவள் அழுது கொண்டே ஓடினாள்

சுமியிடம் வந்த அருண் "தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் அ மில்லியன் சுமி... இந்த உதவிய நான் மறக்கவே மாட்டேன்... எங்க மொதல் கொழந்தைக்கு உன்னோட பேரு தான்"

"ஆணா பொறந்தா கூட சுமேதானு பேரு வெப்பியா... " என்ற சுமேதா கலகலவென சிரிக்க

"ஏன்? சுமன்னு வெச்சுட்டு போறேன்" என அருணும் சேர்ந்து நகைக்க

"ரெம்பத்தான் ஸ்பீடா போற அருண்" என கேலி செய்தாள் சுமேதா

"காதல்னு வந்துட்டா ஸ்பீடா இருக்கணும் சுமி... இல்லேனா நாம மிசஸ்ஆ வரணும்னு நெனைக்கரவங்களை மிஸ் பண்ணிடுவோம்"

"அடேயப்பா... லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் டயலாக் எல்லாம் கலக்கற அருண்"

"சுமி... எப்படியோ அவளை ஐ லவ் யு சொல்ல வெச்சாச்சு. ஆனா இந்த பசங்க வந்து சிரிச்சு அவளை மூட் அவுட் பண்ணிடாங்க அதுக்குள்ள... இல்லேனா ஒழுங்கா பேசி கன்வின்ஸ் பண்ணி இருப்பேன் இன்னிக்கி"

"நீ எதுக்கு எங்க காலேஜ்க்கு அடிக்கடி வர்றேன்னு நான் கூட யோசிப்பேன்... இப்ப தான் புரியுது... " என்ற சுமேதாவின் கேலி கூட அவனுக்கு சந்தோசமே அளித்தது

அதன் பின் இரண்டு நாட்கள் அருண் சுமேதாவின் காலேஜ் பக்கமே வரவில்லை. அன்று வந்தவனின் முகத்தில் பழைய சுரத்தே இல்லாமல் என்னமோ போல் இருந்தான் என்பதை அவனை பார்த்த உடனே சுமி உணர்ந்தாள்

"என்னாச்சு அருண்? ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ரெண்டு நாளா ஆளே காணோம்"

"ப்ச்... வாழ்க்கையே வெறுத்து போச்சு சுமி...ச்சே... " என சலித்து கொள்ள

"என்ன அருண் இது? அன்னிக்கி ஒரே சந்தோசமா போன... என்ன ஆச்சு இப்போ?"

"என்ன சுமி சொல்றது? நான் பாத்தா ஓடறா... நான் பாக்காத மாதிரி நின்னா திருட்டுத்தனமா பாக்கறா... என்னை பத்தி உருகி உருகி கவிதை எழுதறா... போய் பேசினா மட்டும் ஓட்டம் தான்"

"என்ன சொல்ற? கவிதையா?" என சுமி ஆர்வமாய் கேட்க

"ம்... இங்க பாரு... அவளோட நோட் புக்"

"இது எப்படி உன்கிட்ட?"

"அன்னிக்கி ஐ லவ் யு சொல்லிட்டு பயந்து ஓடினாளே அப்ப தவற விட்டுட்டு போயிட்டா... தவற விட்டுட்டு போனாளா இல்ல வேணும்னே நான் பாக்கணும்னு விட்டுட்டு போனாளானு புரியல... "

"அடேயப்பா... என்ன அழகா கவிதை எழுதி இருக்கா? பாத்தா பூனை மாதிரி இருக்கா... பயங்கரமான ஆளு தான் உன் ஆளு" என சுமேதா கேலி செய்ய

"என்ன எழுதி என்ன செய்யறது... மனசு விட்டு பேசினாதானே ஆகும்" என அருண் சலித்து கொள்ள

"இந்த நோட்டை குடு நானே போய் அவ கிட்ட கேக்கறேன்.. .கவிதை எழுதறதுக்கு இருக்கற தைரியம் மனசுல இருக்கறதை நேர்ல சொல்ல இல்லையான்னு கேக்கறேன்"

"வேண்டாம் சுமி... இதை உன்கிட்ட காட்டினேன்னு தெரிஞ்சா அவ பீல் பண்ணுவா இல்ல... என்ன இருந்தாலும் திஸ் இஸ் சம்திங் பர்சனல்" என அருண் கூற

"நெஜமாவே அனிதா ரெம்ப லக்கி தான் அருண்... சீக்கரம் அவ தயக்கம் போகத்தான் போகுது பாரு..." என சமாதானமாய் சுமேதா பேச

"இல்ல சுமி... இன்னும் பத்து வருஷம் ஆனாலும் அவ இப்படியே தான் இருப்பா... எதாச்சும் செஞ்சே ஆகணும்... இல்லேனா அவ என்னை விட்டு போய்டுவாளோனு பயமா இருக்கு" என கண்களில் நீர் துளிர்க்க அருண் கூற இயல்பிலேயே இளகிய மனம் படைத்த சுமேதா மனம் நெகிழ

"என்ன அருண் இது? இதுக்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆகற... வேணும்னா இன்னொரு வாட்டி அன்னிக்கி போல ராக்கிங் பண்ணட்டுமா?" என கேட்க

"வேண்டாம் சுமி... இனி அந்த ஐடியா சரி வராது... வேற எதாச்சும் அவளா என்கிட்ட வர்ற மாதிரி எதாச்சும் செய்யணும்"

"அது எப்படி..."

"ஒரு ஐடியா இருக்கு.... ஆனா நீ சொன்னா திட்டுவ..."

"என்ன ஐடியா?"

"அது.... கோபப்படமாட்டேனு சொல்லு... அப்புறம் சொல்றேன்"

"கோபப்படாத மாதிரி சொல்லு.."

"பாத்தியா...சரி.. வேண்டாம் விடு... நான் கிளம்பறேன்"

"ஏய்... அருண்...சரி சொல்லு... என்ன?"

"அது... சும்மா அவளை சீண்டறதுக்காக... அவ மனசுல இருக்கறத சொல்ல வெக்கறதுகாக... நீ என்னை லவ் பண்ற மாதிரி நடிக்கணும்... "

"வாட்?" என அதிர்ந்த சுமேதா... "ஆர் யு மேட்?" என சீறினாள்

"பாத்தியா... இதுக்கு தான் சொல்லலைன்னு சொன்னேன்..."

"என்ன அருண் இது? அர்த்தம் இல்லாத பேச்சு... நான் உன்னை லவ் பண்றமாதிரி நடிக்கறதுக்கும் அவ உன்கிட்ட அவ மனசுல இருக்கறத சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்"

"இல்ல சுமி... யாருக்கும் தான் விரும்பின ஒரு பொருள் தன்கிட்ட இருக்கறப்ப விட இன்னொருத்தர் கைக்கு போயிடுமோனு பயம் வர்றப்ப தான் ஆவேசம் வரும்... உண்மையும் வெளிய வரும்"

"சுத்த நான்சென்ஸ் இது... ரெம்ப சினிமா பாத்து ஒளராத"

"இல்ல சுமி... ஜஸ்ட் ஒன் வீக் நடிப்போம்... அப்பவும் அவ எறங்கி வரலைனா ஐ வில் கிவ் அப்" என கூற

"நோ வே... இந்த பைத்தியக்காரதனத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்"

"ஒகே... பாய்" என அவள் முகத்தை கூட பாராமல் கூறி விட்டு சென்றான் அருண்

சுமேதாவும் ஒன்றிரண்டு நாளில் அருண் தானே புரிந்து கொள்வான் என மௌனமாய் இருந்தாள்

அதன் பின் கிட்டதட்ட ஒரு வாரம் அருண் சுமேதாவின் கண்ணிலேயே படவில்லை. சுமேதா அவன் நண்பர்களிடம் கேட்க அவர்களும் பார்க்கவில்லை என கூறினர்

அன்று வந்தவன் சுமேதாவிடம் பேசாமல் நேராக தன் நண்பர்களிடம் சென்று பேசிவிட்டு சென்றது சுமேதாவின் மனதிற்கு வேதனை அளித்தது

அடுத்து வந்த சில நாட்களும் அதே போல் நடக்க அன்று பொறுமை இழந்த சுமேதா "ஏய் அருண்... என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல... நீ சொல்றதை கேக்கலைனா உடனே மௌன விரதமா... இதான் உன் பிரெண்ட்ஷிப்பா" என கோபமாய் கேட்க

"பிரெண்ட்க்கு ஹெல்ப் பண்ண மனசில்லாத உன் பிரெண்ட்ஷிப் மட்டும் ரெம்ப கிரேட்ஆ?" என அவன் திருப்பி கேட்க

"ப்ளீஸ் அருண்... சொல்றத புரிஞ்சுக்கோ"

"நல்லா புரிஞ்சுட்டேன் சுமி... எல்லாம் வெளி வேஷம்... என் காதல் தோத்தா உனக்கு என்ன நஷ்டம்? நீ எதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"அருண்... ஏன் இப்படி எல்லாம் பேசற? எனக்கு பிடிக்காத ஒண்ணை எப்படி செய்ய முடியும்"

"ஏன்? நடிப்புக்காக காதலிக்கற அளவுக்கு கூட என்னை பிடிக்கலையா... நான் அவ்ளோ மோசமாவா இருக்கேன்"

"ஐயோ அருண்... திஸ் இஸ் நாட் அபௌட் இட்... "

"இட்ஸ் ஒகே... லீவ் இட்" என அவன் வருத்தமாய் நகர

"ஒகே... ஜஸ்ட் ஒன் வீக்... அதுக்கு மேல இல்ல... நம்ம ரெண்டு பேரு தவிர யாருக்கும் இதை பத்தி சொல்ல கூடாது சரியா... " என சுமேதா கூற

"தேங்க்ஸ் தேங்க்ஸ் ரெம்ப தேங்க்ஸ் சுமி" என உற்சாகமாய் சிரித்தான் அருண்

நண்பனின் சந்தோஷம் சுமேதாவையும் சந்தோசப்படுத்தியது. ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ உறுத்தலாய் உணர்ந்தாள்

சரி விளையாட்டுக்கு தானே என தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்,  விதி தனக்கு காட்ட இருக்கும் விளையாட்டை உணராமல்

(தொடரும்...)

...

36 பேரு சொல்லி இருக்காக:

vinu said...

me firstuuuuuuuuuuuuuuuuuuuuu

vinu said...

my guess is right arun loves anitha but when i read the last line of this episode now little bit start worrying.................

Mahi said...

அனிதா அருணை லவ் பண்ணல..சுமேதாவும் லவ் பண்ணல,கரெக்ட்டாஆஆஆ?;)

லவ் ஸ்டோரிலயே ஒரு ட்விஸ்ட்ட கொண்டுவந்துட்டீங்க அப்பாவி!ம்ம்..இன்ட்ரஸ்டிங்!!!

முனியாண்டி said...

உங்களால் ஆபீசுக்கு அரைமணி நேரம் லேட். நல்ல இருக்கு கதையில் பல திருப்பங்கள்.

என்னது நானு யாரா? said...

ஒரு கை தேர்ந்த கதையாசிரியரா இருக்கீங்க அப்பாவி அக்கா! கதையில இத்தனை திருப்பங்களா?

வேகமா வேற போகுது கதை! கதை போகிற வேகத்தில எங்களை எங்கேயும் தூக்கி எரிஞ்சிட மாட்டீங்கள் இல்ல?

Arul Senapathi said...

Very nice flow. It is getting more interesting now.

When can we expect the next chapter?

Thanks

தமிழ் உதயம் said...

என்னது நானு யாரா? சொன்னது…

வேகமா வேற போகுது கதை! கதை போகிற வேகத்தில எங்களை எங்கேயும் தூக்கி எரிஞ்சிட மாட்டீங்கள் இல்ல?///

நல்லா பாராட்டிட்டார். நானும் வழிமொழிகிறேன்.

ஹேமா said...

வாசிக்கிறேன்...வாசிக்கிறேன்...வாசிக்கிறேன்.
தொடருங்கள் தோழி.

Gayathri said...

aaahaa suththi suththi suspenseaa...mmm love layum suspense

சுசி said...

அச்சச்சோ.. கதை இப்டிகா திரும்பிடிச்சே..

அடுத்தது எப்போ??

ஜெய்லானி said...

இதை பார்த்தா ”வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா”ன்னு பாடனும் போல இருக்கு ...!!! அதே கதை அதே கண்கள் வித்தியாசம்..சூப்பர் ..சீக்கிரமே போடுங்க ..ஆவலை கிளப்புது...!!

நசரேயன் said...

ம்ம்ம்

நசரேயன் said...

//அப்போ நான் வாழ்நாள் பூரா சிரிச்சுட்டே இருக்க ஒரு
ஐடியா இருக்கு//

கீழ்பாக்கத்திலே சேரணுமா ?

Krishnaveni said...

nalla twistaa irukkae, mmm... next post tomorrow morning... right?

ஸ்ரீராம். said...

சத்தியமா புது பார்ட்னு தெரியாமல் கமெண்ட் உருட்டிப் பார்த்து விட்டு என்னது அடுத்த பகுதியா என்று அதிர்ந்து படித்தேன். சுறு சுறுன்னு ஆயிட்டீங்களே...சப்பாஷ்...இளமையின் இயல்பான விபரீத ஆட்டங்களை அழகைச் சொல்லியுள்ளீர்கள். மாயச் சுழலில் சிக்கும் சுமிக்கு அனுதாபங்கள்.

Porkodi (பொற்கொடி) said...

arun loves sumedha, but tried bringing in anitha to make sumedha tell the truth.. but, that didnt work out, so now he is tricking her into this love drama. unfortunately, anitha is truly in love with arun, and cant stand the love drama and commits suicide........ hello, enga collegela nadakadha love storya neenga ezhudha poringa appavi? :P seekram nextu partu varattum!

வெறும்பய said...

அடுத்தது எப்போ??

sandhya said...

புவனா கதை நல்லா போகுது ஆனா இந்த சஸ்பென்ஸ் ஏன் ?பாவம் சூர்யா சுமேதாக்கு என்ன ஆச்சுன்னு கஷ்டபெடற இல்லையா அப்போ மீதி கதை சீக்ரமா எழுதிரின்களா ப்ளீஸ்

கோவை2தில்லி said...

ரொம்ப நல்லா போகுது. இது ஒண்ணு தான் படித்தேன். கூடிய சீக்கிரம் எல்லா பார்ட் ஐயும் படித்து விடுகிறேன்.

சே.குமார் said...

அப்பாவியா எப்படி கதை சொல்றீங்க.
நல்லா போகுது கதை....
வேகமாக வளரட்டும்.

சுந்தரா said...

இன்றுதான் இந்தப்பகுதியைப் படித்தேன்.

விறுவிறுப்பா இருக்குது.

மத்தப்பகுதிகளையும் படிச்சிட்டுவரேன்...

நீங்க தொடருங்க.

கோவை ஆவி said...

புவனா, உங்க resolution க்கு முதல் பாராட்டு!! அப்புறம் கதை ரோலர் கோஸ்டர் ரைடு போன பீலிங் கொடுத்துச்சு.. எவ்வளவு டுவிஸ்டு, எவ்வளவு டேனு (Turn ).. கலக்கறீங்க அம்மணி!!
எப்பிடி.. நாங்கதான் சொன்னோம்லே சுமேதா நல்ல பொண்ணுன்னு!!

அப்பாவி தங்கமணி said...

@ vinu - எஸ் யு தி பர்ஸ்ட்...
//my guess is right arun loves anitha but when i read the last line of this episode now little bit start worrying................. //
ஹா ஹா ஹா... mission accomplished by making you worrying... ஒகே ஒகே நோ டென்ஷன்... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் வினு

@ Mahi - ம்ம்ம்... இருக்கலாம்... இல்லாமையும் இருக்கலாம்... ஹி ஹி ஹி... விசு படம் பாத்தா மாதிரி இருக்கோ... தேங்க்ஸ் மகி

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஆஹா... ஆபீஸ்க்கு லேட்டா போன புண்ணியம் எனக்கா... குட் குட்... தேங்க்ஸ்ங்க

@ என்னது நானு யாரா? - நன்றிங்க வசந்த். ச்சே ச்சே யாராச்சும் தூக்க மாட்டேன்... தேங்க்ஸ்ங்க

@ Arul Senapathi - தேங்க்ஸ் அருள்... வெரி சூன் அடுத்த பார்ட் போட்டுடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ தமிழ் உதயம் - தேங்க்ஸ்ங்க

@ ஹேமா - தேங்க்ஸ்ங்க ஹேமா

@ Gayathri - எஸ் எஸ்.. லவ்லையும் சஸ்பென்ஸ்... தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - ஆமா அப்படிக்கா தான் திரும்பிடுச்சு கதை... அடுத்து சீக்கரம் போட்டுடறேன்... தேங்க்ஸ் சுசி

@ ஜெய்லானி - தேங்க்ஸ்ங்க ஜெய்லானி... சீக்கரம் போட்டுடறேன்

@ நசரேயன் - //கீழ்பாக்கத்திலே சேரணுமா ?// அவங்க அவங்களுக்கு இதுல சேர விருப்பமோ அதை சொல்றீங்க போல இருக்கு... ஹா ஹா ஹா...சரி சரி நோ டென்ஷன்...சாரி ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... நெக்ஸ்ட் போஸ்ட் வெள்ளிக்கிழமை...

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹ... பாத்தீங்களா நீங்க எதிர்பாராதப்ப நெக்ஸ்ட் பார்ட் போட்டுட்டேன்... தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - ஆத்தா மகமாயி உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லியா... இப்படி கடகடன்னு கொட்டுறீங்க... பட் நீங்க சொல்ற ஐடியா கூட சூப்பர்... நான் ஏற்கனவே எழுதிட்டேன் பட் சொல்ல மாட்டேனே... ஹா ஹா ஹா... (வில்லி சிரிப்பு)... சீக்கரம் நீங்க ஒரு கதை ஸ்டார்ட் பண்ணுங்க கொடி... மிஸ் இட் சோ மச்...

@ வெறும்பய - அடுத்தது வெள்ளிக்கிழமை

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்பா

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்ங்க

@ சே.குமார் - நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ சுந்தரா - வாங்க சுந்தரா... ரெம்ப நாள் ஆச்சுங்க... சௌக்கியமா? நன்றிங்க

@ கோவை ஆவி ௦- தேங்க்ஸ்ங்க ஆனந்த்... ம்ம்... சுமேதா நல்ல பொண்ணா? ம்ம்... இன்னும் முழுசா படிச்சுட்டு அப்புறம் சொல்லுங்க... என்ன குழப்பிட்டேனா? ஹா ஹா ஹா

பத்மநாபன் said...

கதையில் ட்விஸ்டெல்லாம் வைக்கிறிர்கள்....அருண் வழியாகத்தான் சுமேதாவிற்கு இடைஞ்சலா என திசை திருப்பி உள்ளீர்கள் .. பார்ப்போம் ..திரில்லோடு ரொமான்ஸும் வரிகளில் நன்றாக வெளிப்படுகிறது...

அமைதிச்சாரல் said...

கிர்ர்ர்ருனு போகுது கதை :-)))))))

சௌந்தர் said...

எல்லோறோம் வாங்க அப்பாவி வீட்டுக்கு போய் போராட்டம் பண்ணுவோம் இவங்க கதை சொல்லிட்டே வருவாங்க, கதை நல்லா போகும் போது தொடரும் போடுவாங்க, இதுக்கு பெயர் தான் அப்பாவியா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்க... பாப்போம் எப்படி போகுதுன்னு..

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க

@ சௌந்தர் - ஆஹா போராட்டமா... நான் அப்பாவிங்க... போராட்டமெல்லாம் பயம் பயம் எனக்கு... இன்னைக்கே நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்... தேங்க்ஸ்

Ananthi said...

ஆஹா.. சூப்பர் இன்டரஸ்டிங்காக போகுது... :-)))

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - Thanks Ananthi

Post a Comment