Friday, September 10, 2010

அதே கண்கள்... (பகுதி 9)

பகுதி 1 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 2 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 3 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 4 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 5 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 6 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி 7 படிக்க - இங்கே கிளிக்கவும்
பகுதி  8 படிக்க - இங்கே கிளிக்கவும்

"ஒகே... ஜஸ்ட் ஒன் வீக்... அதுக்கு மேல இல்ல... நம்ம ரெண்டு பேரு தவிர யாருக்கும் இதை பத்தி சொல்ல கூடாது சரியா... " என சுமேதா கூற

"தேங்க்ஸ் தேங்க்ஸ் ரெம்ப தேங்க்ஸ் சுமி" என உற்சாகமாய் சிரித்தான் அருண்

நண்பனின் சந்தோஷம் சுமேதாவையும் சந்தோசப்படுத்தியது ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ உறுத்தலாய் உணர்ந்தாள்

சரி விளையாட்டுக்கு தானே என தன்னையே சமாதானம் செய்து கொண்டாள், விதி தனக்கு காட்ட இருக்கும் விளையாட்டை உணராமல்
__________________________________

அடுத்த நாள் சுமேதாவை தேடி வந்த அருண் "சுமி... இன்னிக்கி அனிதா எனக்கு பிடிச்ச ப்ளூ கலர் டிரஸ்ல வந்திருக்கா? நல்ல சகுனம். இன்னைக்கே நம்ம டிராமாவை ஸ்டார்ட் பண்ணிடலாமா?" என உற்சாகமாய் கேட்க

"ஹா ஹா ஹா... நூத்து கெழவி மாதிரி சகுனம் எல்லாம் பாக்றே... கொஞ்சம் விட்டா ஒரு பாமிலி ஜோசியர் வெச்சுப்ப போல இருக்கே..." என கேலி செய்ய

"என்ன செய்யறது? காதல்ல ஜெய்க்க பாமிலி ஜோசியர் என்ன பாமிலி கோவிலே கட்டணும்னாலும் செஞ்சு தானே ஆகணும்" என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற சத்தமாய் சிரித்தாள் சுமேதா

"சிரிச்சது போதும்...அவ லைப்ரரிக்கு பின்னாடி இருக்கிற லான்ல உக்காந்துட்டு இருக்கா... சீக்கரம் வா..." எனவும்

"ஒகே ஒகே...வரேன்... டிராமா ஸ்கிரிப்ட் ஒண்ணும் தரலியே"

"என்ன கிண்டலா?" என அருண் முறைக்க

"டென்ஷன் ஆகாதே அருண்... சொதப்பாம இருக்கணுமே... அதான் கேட்டேன்"

"வெரி சிம்பிள்... சும்மா அவ கண்ணுக்கு தெரியல தூரத்துல உக்காந்து எதாச்சும் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசற மாதிரி நடிக்கணும்... "

"ஸ்வீட் நத்திங்க்ஸ்னா?" என சுமேதா வேண்டுமென்றே கேட்க

"ஐயோ கடவுளே... உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் ரெம்ப பாவம்" என வருத்தமாய் கூற

"ஹா ஹா ஹா... உன் சாமியார் காதலிய விடவா நான் மோசம்" என சுமேதா சிரித்து கொண்டே கேட்க அருண் முறைத்தான்

"சரி சரி... டென்ஷன் ஆகாதே அருண்... லெட்ஸ் கோ... பத்து நிமிஷம் தான் இன்னிக்கி கால்ஷீட்... க்ளாஸ்க்கு போகணும் ஒகேவா?"

"சரி சரி... ரெம்ப பந்தா பண்ணாதே நட" என இருவரும் அனிதா இருந்த இடத்திற்கு வந்தனர்

அனிதா ஏதோ புத்தகத்தை மும்முமரமாய் படித்து கொண்டு இருந்தாள்

சுமேதாவும் அருணும் பேசினால் அனிதாவுக்கு கேட்கும் தூரத்தில் அமர்ந்தனர்

"சுமி இந்த ட்ரெஸ் உனக்கு ரெம்ப அழகா இருக்கு" என்றான் அருண் சற்று சத்தமாய்

சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அனிதா ஒரு கணம் அவர்களையே பார்த்தவள் மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள்

"அப்படியா... தேங்க்ஸ். உனக்கு கூட இந்த செக்கட் ஷர்ட் நல்லா இருக்கு அருண்" என்றாள் சுமேதா

"ஆனா சுடிதார் விட உனக்கு சாரி ரெம்ப அழகா இருக்கும்... உன்னை மொதல் மொதலா உங்க காலேஜ் பங்சன்ல பாத்தப்ப கட்டி இருந்தியே அதை போல" எனவும் சுமேதா அவனை பார்த்து முறைத்தாள்

அருண் அடிக்குரலில் "நீ இல்ல அனிதா" என்றான்

கல்லூரி விழா அன்று அனிதாவும் புடவை கட்டி இருந்தது நினைவு வர சுமேதா சிரித்தவாறே "ஒகே ஒகே ரெம்ப ஐஸ் வெக்காதே அருண்... இப்பவே ஒரே கோல்ட்" என நடிப்பை தும்முவது போல் செய்ய

"ஐயோ... கோல்டா... ? என்ன ஆச்சு? நட இப்பவே டாக்டர் கிட்ட போலாம்" என பதற

"அடச்சே... கோல்டுக்கெல்லாம் டாக்டர்கிட்டயா?" என கேலி செய்ய

"என்ன சுமி இப்படி சொல்ற? உனக்கு எதாச்சும் ஒண்ணுனா என்னால தாங்க முடியாது தெரியுமா?" என சொல்ல அதே நேரம் அனிதா எழுந்து சென்றாள்

அவள் போவதை பார்த்த சுமேதா "என்ன அருண்? உன் ஆளு செம டென்ஷன் ஆய்ட்டா போல இருக்கே?"

"நான் தான் சொன்னேனே சுமி... ஒன் வீக்ல கண்டிப்பா அவளை வழிக்கு கொண்டு வந்துடுவேன்"

"சரி சரி... நான் க்ளாஸ்க்கு போறேன்... டைம் ஆச்சு... நீ ஓவரா ட்ரீம் அடிக்காம கொஞ்சம் படிக்கற வேலையும் பாரு" என சுமேதா கிளம்பினாள்
__________________________

இப்படி அந்த வாரத்தில் எல்லா நாளும் அனிதாவின் கண் முன் ஏதோ சாக்கிட்டு அருணும் சுமேதாவும் நெருக்கமாய் வலம் வந்தனர்

அதற்கு அடுத்த வாரம் அனிதா கல்லூரிக்கு வரவில்லை

அருண் தினமும் வந்து அனிதா வந்தாளா என கேட்டு கொண்டே இருந்தான்

சுமேதாவிற்கே அவனை காண பாவமாய் இருந்தது

அனிதாவின் வகுப்பு தோழிகளிடம் கேட்க அவர்கள் எதுவும் தெரியாது என்றனர்

அவள் யாருடனும் நெருங்கி பழகும் குணம் இல்லாததால் அவள் வீடு எங்கே என்று கூட யாருக்கும் தெரியவில்லை

கல்லூரி அலுவலகத்தில் முயன்றும் அப்படி எல்லாம் முகவரி தர இயலாது என்று கூறி விட்டனர்

சோகமாய் இருந்த அருணுக்கு ஆறுதல் சொன்னாள் சுமேதா

"கவலைப்படாதே அருண்... எதாச்சும் பாமிலி பங்க்சனா இருக்கும்... நெக்ஸ்ட் வீக் வந்துடுவா"

"இல்ல சுமி... எனக்கு ரெம்ப பயமா இருக்கு"

"என்ன அருண் சொல்ற?"

"ஒருவேள நாம இப்படி க்ளோசா இருக்கறதை எதாச்சும் சீரியஸா எடுத்துட்டு தப்பா எதாச்சும்... "என நிறுத்த

"என்ன அருண் ஒளர்ற? அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காது"

"ஒருவேள அப்படி இருந்தா"

"என்ன அருண் இப்படி பயப்படுத்தற? நீ தான் இந்த பைத்தியகாரத்தனமா ஐடியா குடுத்த... நான் அப்பவே இந்த மாதிரி எதாச்சும் வம்பாய்டுமோனு தான் வேண்டான்னு சொன்னேன். இப்போ என்னையும் சேத்து டென்சன் பண்ற"

"இல்ல சுமி... அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது... என்னோட காதல் உண்மைனா கண்டிப்பா ஜெய்க்கும்" என்றான் உறுதியாய்

அவன் உறுதியை கண்டு சுமேதாவும் மகிழ்ந்தாள்

அதற்கு அடுத்த இரண்டு வாரமும் அனிதா கல்லூரிக்கு வரவில்லை

அருணும் அனிதாவை பற்றி அதன் பின் எதுவும் விசாரிக்கவில்லை. ஆனால் முகத்தில் வருத்தம் நிலைத்து இருந்தது

ஒருவேளை பேசி மனதை வருத்தி கொள்ள வேண்டாம் என இருக்கிறானோ என சுமேதாவும் எதுவும் கேட்கவில்லை
_____________________________

"சுமேதாக்கா.. " என்றபடி தன்னை பார்த்து ஓடி வந்த முதலாண்டு மாணவி கீதாவை பார்த்ததும் நின்றாள் சுமேதா

"என்ன கீதா? ஏன் இப்படி ஓடி வர்ற?"

"அக்கா... அந்த அனிதாவை பத்தி கேட்டுட்டு இருந்தீங்க இல்ல... நேத்து அவங்க வீட்டுல இருந்து வந்து டி.சி வாங்கிட்டு போய்ட்டாங்களாம்"

"என்ன சொல்ற கீதா? என்ன ஆச்சாம் அவளுக்கு?" என அதிர்ச்சியானாள் சுமேதா

"என்னனு தெரியலக்கா? எங்க க்ளாஸ் ரெப் தீபா ஹெச்.ஓ.டி மேம் எதுக்கோ கூப்ட்டாங்கன்னு அவங்க ரூமுக்கு போனா... அப்போ நம்ம சுதா மேடம் கிட்ட ஹெச்.ஓ.டி பேசிட்டு இருந்ததை கேட்டாளாம்"

"ஓ... ச்சே என்ன ஆச்சுனு தெரியலயே?"

"சரிக்கா... நான் க்ளாஸ் போறேன்" என கீதா சென்றாள்

இதை எப்படி அருணிடம் கூறுவது என சுமேதா யோசனையுடன் இருந்தாள்

அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே அருண் வந்தான்

"ஹாய் அருண்... உனக்கு நூறாய்சு... இப்போ தான் உன்னை நெனச்சேன்... நீயே வந்துட்டே" என்று இலகுவாய் பேச முயன்றவளை பார்த்து பெருமூச்சு விட்டான்

"என்ன அருண்? நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்ல மாட்டேங்கற"

"என்ன பேசறது? நூறு ஆய்சு யாருக்கு வேணும்? மனசுக்கு பிடிச்சவளோட ஒரு நாள் வாழ்ந்தாலும் போதுமே..." என ஏக்கமாய் கூற இப்படி வெறுத்து பேசுபவனிடம் அனிதா பற்றிய விசயத்தை எப்படி கூறுவது என தயங்கினாள்

அவள் தயக்கத்தை புரிந்தவன் போல் "என்ன சுமி.. என்ன விசயம்? ஏதோ சொல்ல வந்து தயங்கற மாதிரி இருக்க" என ஆர்வமாய் கேட்க அவளுக்கு அவனை பார்க்கவே பாவமாய் இருந்தது

அனிதாவை பற்றி நல்ல தகவல் ஏதும் சொல்வேனோ என ஆர்வமாய் கேட்பவனிடம் அவள் இனி வர மாட்டாள் என எப்படி கூறுவது என தவித்து போனாள்

இருந்தாலும் மறைத்து என்ன பயன், என்றேனும் தெரியவேண்டியது தானே என தோன்ற

"அருண் ஒரு விசயம்... நீ டென்ஷன் ஆகாதே" என பீடிகை போட

"சொல்லு சுமி... என்ன?"

"அது வந்து... அனிதா... அனிதாவோட வீட்டுல இருந்து வந்து டி.சி வாங்கிட்டு போய்டாங்களாம்" என கூற அதிர்ச்சியாய் அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் எழுந்தான்

"அருண்... எங்க போற... இரு"

"எதுக்கு?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்க

"அருண் டோன்ட் லூஸ் ஹார்ட்... விசாரிச்சு பாக்கலாம்..."

"வேண்டாம் விடு"

"அருண் உன்னோட வருத்தம் எனக்கு புரியுது"

"இல்ல உனக்கு புரியாது சுமி"

"என்ன அருண் இது? ஏன் இப்படி பேசற?"

"நான் தப்பா சொல்லல சுமி... இந்த வேதனைய அனுபவிக்கரவனுக்கு மட்டும் தான் அது புரியும்"

"அப்படி எல்லாம்..." என்றவளை பேச விடாமல்

"காதலிச்சு பின்னாடி பிரச்னைகளால காதல் தோத்து போறத விட இப்படி மனசு விட்டு பேசாத காதலிகிட்ட மாட்டிக்கற என்னை போல தவிக்கறவங்க நெலம ரெம்ப கொடும சுமி"

"ஏன் இப்படி விரக்தியா பேசற அருண்? காதல்ல தோத்து போனவங்க எல்லாம் ஒடஞ்சு போய்ட்டா உலகத்துல பாதி பேர் இப்படி தான் அலையணும்"

"வேற என்ன செய்யறது?"

"அருண்... அட்வைஸ் பண்றேன்னு நெனைக்காதே... காதல் மட்டுமே வாழ்க்கை இல்ல... எல்லா காதலும் கல்யாணத்துல முடியறதில்ல. உனக்குன்னு ஒருத்தி நிச்சியம் இருப்பா"

"ஹும்... " என விரக்தியாய் சிரித்தவன் "ஒருவேளை நாம போட்ட டிராமா தான் என்னோட காதலுக்கு எமன் ஆய்டுச்சோனு தோணுது சுமி"

"ச்சே ச்சே.. .என்ன அருண் இது? அவளுக்காக தானே இதை செஞ்சே... அதை புரிஞ்சுக்கலைனா என்ன செய்யறது?"

"அப்போ காதலுக்காக போட்ட இந்த டிராமா தப்பில்லைன்னு சொல்றியா?"

"நிச்சியமா இல்ல அருண்... உன்னை புரிஞ்சுக்காததால நஷ்டம் அவளுக்கு தான்... உயிரா நேசிக்கற உன்னை மிஸ் பண்ணிட்டாளே" என்று அவனுக்கு ஆறுதலாய் பேசினாள்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் அதற்கு பின் கூறியதை கேட்டு சுமேதா அப்படியே சிலையானாள்

(தொடரும்...)

 
...

31 பேரு சொல்லி இருக்காக:

சௌந்தர் said...

படிச்சிட்டு வரேன் மிரட்டுனா தான் பயப்படறாங்க

நசரேயன் said...

மொத வெட்டா ?

சௌந்தர் said...

சுமேதா அப்படியே சிலையானாள்////

நாங்களும் தான் இன்னும் வேற வழி காத்து இருக்கிறேன்

முனியாண்டி said...

ஏதோ ஒரு கொக்கி போடுருக்கது மாதரி தெரியுது... அவன் காதல் சொல்வானா இவளிடம் பாக்கலாம்.... Waiting for next post....I know you will change the track. Let see

என்னது நானு யாரா? said...

சுமேதாவை மடக்க தானே இந்த ட்ராமா எல்லாம்...???

அவன் வெற்றி அடைஞ்சிட்டான்னு தோனுதுங்கோ...

சரிதானே.. அப்பாவி அக்கா?

ஜெய்லானி said...

2010 லவ் ஸ்டோரி நல்லா இருக்கு ..!!

Arul Senapathi said...

Too many twists. But liking the story flow.

Thanks

Krishnaveni said...

Kadai nallaa flowvaa pogumpothu, thodarum pottachchaa, next episode please......

பத்மநாபன் said...

வெளயாட்டு வெனயாகும்கிறது இதுதான்.
டி.சிவாங்கற அளவுக்கு அருண் என்ன பண்ணினான் ?
இதுல எதோ முடிச்சு இருக்குது..

அருண், சுமேதா, அனிதா, சுரேஷ், கணேஷ், சூர்யா, எல்லாரும் சிக்கலில் .ஸோ இன்னமும் 10 எபிசொட் போகலாம். பின்னல்களை சரிபண்ண.

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குப்பா. அனேகமா எல்லா டிராமாவும் சுமிக்காக போட்டதாத்தானிருக்கும் கரெக்டா :-)))

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - ஆமாம் பின்ன மிரட்டினா பயப்படாம எப்படி? நான் தான் அப்பாவி ஆச்சே... ஹா ஹா ஹா

@ நசரேயன் - இல்ல சார்... ரெண்டாவது வெட்டு

@ சௌந்தர் - தேங்க்ஸ்ங்க நெக்ஸ்ட் போஸ்ட் திங்கக்கிழமை போட்டுடறேன்

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஆஹா... அப்படி இருக்குமா? பாப்போம் பாப்போம்... தேங்க்ஸ்ங்க

@ என்னது நானு யாரா? - ம்...டிராமாவா? அப்படியா சொல்றீங்க? தெரியலயே வசந்த்.. இருங்க கேட்டு சொல்றேன்... ஹா ஹா அஹ... தேங்க்ஸ்

@ ஜெய்லானி - ஆஹா... என்ன சார் கதை தலைப்பையே மாத்தறீங்க

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ் அருள்...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... சீக்கரம் போட்டுடறேன்

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - என்ன முடிச்சு? நானும் தேடிட்டே இருக்கேன்... இன்னும் பத்து எபிசோட்... ஆஹா... நீங்க எனக்கு கொல மிரட்டல் வர வெச்சுடுவீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க

@ அமைதிச்சாரல் - ம்... அப்படியும் இருக்கலாம்.. .இல்லாமையும் இருக்கலாம்... குழப்பறேனோ... ஹா ஹா ஹா... திங்ககிழமை நெக்ஸ்ட் போட்டுடறேன்...தேங்க்ஸ்ங்க

Gayathri said...

aahaa enna ithu iththanai suspense...thaangala akka

சுசி said...

ஏன் புவனா.. இப்டி எங்களையும் சிலையா அலைய விடறிங்க.. அடுத்து என்ன??

Guna said...

kalakkuringa ponga... bayangara fast-a post poduringa, athai vida unga story romba viru viruppa poguthu...

சின்ன அம்மிணி said...

சரி அடுத்தது :)

கோவை ஆவி said...

//சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் அதற்கு பின் கூறியதை கேட்டு சுமேதா அப்படியே சிலையானாள்//

அந்த சிலையை எங்க ஊருக்கு அனுப்பி வச்சிடுங்க.. அகில உலக சுமேதா ரசிகர் மன்றம் சிகாகோவில் ஆரம்பிக்கறதா இருக்கோம்..

தங்கமணி அப்பாவியா இல்லையான்னு தெரியாது, ஆனா சுமேதா ரொம்ப அப்பாவியா இருக்கா!!

ஸ்ரீராம். said...

அதானே....அதேதானே அருண் சொன்னான்....? நான் நினைக்கறது கரெக்ட்தானே புவனா? இதுல இன்னொரு ஃப்ளாஷ் பேக் போக மாட்டீங்கன்னு நம்பி...அடுத்த பகுதி படிக்க வரேன் அப்புறம்...!!

வெறும்பய said...

அடுத்தது.. என்ன..!! எப்போ..!!!

LK said...

unaku sepetember end varaikumthan time athukulla itha mudikkara

sandhya said...

சுமேதா மட்டுமா சிலையானா நானும் தான் இப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா எழுதினா பெர்மனென்ட் சிலையா போயிடுவேன் .என்று பயமா இருக்கு ..

நல்லா இருக்கு பா மீதி சீக்ரமா போட்டா நல்லா இருக்கும்

கோவை2தில்லி said...

அடுத்தது சீக்கிரம் போடுங்க. சுமிய கரெக்ட் பண்ணத்தான் இந்த ட்ராமா என்று நினைக்கிறேன்.

சே.குமார் said...

ஏதோ ஒரு கொக்கி போடுருக்கது மாதரி தெரியுது...

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ சுசி - ஹா ஹா தேங்க்ஸ் சுசி... இன்னைக்கே நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்

@ Guna - ரெம்ப நன்றிங்க குணா...

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மணி - அடுத்தது இன்னைக்கே...

@ கோவை ஆவி - ஹா ஹா ஹா... சுமேதா ரசிகர் மன்றமா? சூப்பர்... முன்னாடி வேற ஒரு தொடர்கதைல வந்த காயத்ரிங்கற கேரக்டர்க்கு ஒருத்தர் ரசிகர் மன்றம் தோன்றினார்... இப்போ ஆளே காணோம்... ரசிகர் மன்ற வேலைல பிஸி போல இருக்கு... இப்போ நீங்களா...ஹா ஹா ஹா... சுமேதா அப்பாவியா? பாப்போம் பாப்போம்... நன்றிங்க ஆனந்த்

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ரெம்ப நம்பறீங்க என்னை... ஹா ஹா அஹ... தேங்க்ஸ்ங்க

@ வெறும்பய - அடுத்து ஏதோ இப்போ... போட்டுட்டேன் படிங்க... நன்றிங்க

@ LK - அடப்பாவி நான் கதைல வர்ற கேரக்டர்ஐ மெரட்டினா நீ என்னை மெரட்டறையா... அப்புறம் வில்லன் பேரு கார்த்தினு வெச்சுடுவேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - ஹா ஹா ஹா... நீங்க சிலை எல்லாம் ஆக மாட்டீங்க சந்த்யா... தேங்க்ஸ்பா... இன்னைக்கே நெக்ஸ்ட் பார்ட் போட்டுடறேன்

@ கோவை2தில்லி - அப்படியா ? பாப்போம்... தேங்க்ஸ்ங்க... இன்னைக்கே நெக்ஸ்ட் பார்ட் ரிலீஸ்

@ சே.குமார் - கொக்கி தான் நெக்ஸ்ட் பார்ட் பாருங்க... தேங்க்ஸ்ங்க குமார்

Ananthi said...

எதுக்கு சிலையானா...??? ஆஹா.. உங்க லொள்ளுக்கு அளவே இல்லப்பா..
நல்லா வேலை.. அடுத்த பதிவு... போட்டுட்டீங்க.. இதோ வரேன் :-))
நல்லா எழுதுறீங்க..பா... சூப்பர்..

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - வாங்க வாங்க... தேங்க்ஸ் ஆனந்தி

Post a Comment