Thursday, September 16, 2010

என்ன கொடும சார்/மேடம் இது?

என்ன கொடும சார்/மேடம் இது?

ஹும்... என்னமோ சொல்லுவாங்களே... பட்ட காலிலே படும்... கெட்ட குடியே கெடும்னு... ஹும்... அப்படித்தான் ஆகி போச்சு இந்த அப்பாவி தங்கமணியோட கதை

(ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... தங்கமணி செம டென்ஷன் ஆய்டுச்சு... ஒரே சந்தோஷம் எனக்கு - மைண்ட்வாய்ஸ்)

எல்லாம் நேரம் தான்... இந்த மைண்ட்வாய்ஸ் எல்லாம் என்னை பாத்து சிரிக்கற மாதிரி ஆகி போச்சு என் நெலமை

அப்படி என்னதான் ஆச்சு சொல்லும்மா? னு ஒருத்தர் ரெண்டு பேர் ஆறுதலா கேக்கறீங்க.... ரெம்ப நன்றிங்க... சொல்றேன் சொல்றேன்...

நடந்த விசியத்த சொல்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ளாஷ்பாக்

(அடக்கொடுமையே... இன்னுமா இவ திருந்தல... - மைண்ட்வாய்ஸ்)

அது என்னனு கேட்டீங்கன்னா... ஒரு நிமிஷம்... எங்க வெச்சேன்? இங்க தான இருந்தது... ம்...

என்ன தேடறேனா? என்னங்க இது, மேட்டர் இல்லாம கூட போஸ்ட் தேத்தலாம், கொசுவத்தி இல்லாம ப்ளாஷ்பாக் சொல்ல முடியுமா?

ஆங்... இதோ கிடைச்சுடுச்சு... ஒகே... ஐ அம் ரெடி டு கோ பாக் டு ப்ளாஷ்பாக்....


(கஷ்டம் கஷ்டம்... இவளுக்கு நடந்த கொடுமைய சொல்றேன்னு சொல்லிட்டு நம்மள கொடுமப்படுத்தராளே பாவி... - மைண்ட்வாய்ஸ்)

கொஞ்ச நாளைக்கி முன்னாடி அதாவது சரியா சொல்லணும்னா... சரி விடுங்க, ஆகஸ்ட் தொடக்கத்துல என்னோட ஈமெயில் இன்பாக்ஸ்ல " Anjappar Chettinad August Specials " அப்படின்னு சப்ஜக்ட் போட்டு ஒரு ஈமெயில் இருந்தது

மொதல்ல பாத்துட்டு ஏதோ ஸ்காம்னு நெனச்சு டெலீட் பண்ணலாம்னு போனேன்... ஆனா விதி விரல்ல உக்காந்துட்டு சல்சா டான்ஸ் ஆடறப்ப அப்படி டெலீட் பண்ண விட்டுடுமா என்ன? ஹும்...

என்ன தான் இருக்கும் அந்த ஈமெயில்லனு ஒரு ஆர்வம் தோண ஓபன் பண்ணி பாத்தேன்

//அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்...// அப்படினெல்லாம் என்னோட தொடர்கதைல தொடரும் போட்டு உங்கள டென்ஷன் பண்ணுவேனே அது அப்படியே நடந்தது... அந்த அதிர்ச்சியில் உறைந்தவள் நான் தான்

(சரி சரி பில்ட் அப் போதும்... மேட்டர்க்கு வா - மைண்ட்வாய்ஸ்)

அந்த ஈமெயில்ல என்ன இருந்ததுன்னு நீங்களே பாருங்க... ஹும்... ஹும்... (விசும்பல்....)

//Dear Customers,

We would like to bring to your notice our specials for the month of August
Idlie special - $0.35 each
Minimum 10 pieces
Takeout Only

Mondays
Kothu Roti - $4.99
(Chicken, Veg and Egg)
Dine-in Only

Wednesdays
Naan and Butter Chicken Or Paneer Butter Masala - $4.99
Dine-in Only //

இப்படி ஒரு ஒரு நாளும் என்ன ஸ்பெஷல் மெனு என்ன Offer இந்த மாசம்னு போட்டு இருந்தது...

என்னோட அதிர்ச்சிக்கு என்ன காரணம்னு என்னை பத்தி தெரிஞ்சவங்களுக்கு இப்ப புரிஞ்சுருக்கும்

எஸ்...அதே அதே... இட்லி தான்... இட்லியே தான் அதுக்கு காரணம்... இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் அப்படினு நீங்க கேக்கரீங்கன்னா நீங்க என்னோட "இட்லியும் நானும்" போஸ்ட்ஐ படிக்கலைன்னு அர்த்தம்... இப்ப படிங்க... அப்ப தான் என் பீலிங்க்ஸ் உங்களுக்கு புரியும்

(ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... இவ விளம்பரத்துக்கு ஒரு அளவில்லையா... முருகா உனக்கு கண்ணில்லையா... காப்பாத்து - மைண்ட்வாய்ஸ்)

மொதல்ல இந்த ஈமெயில் பாத்ததும் யாரோ வேணும்னே என்னை டீஸ் பண்றதுக்கு ஏதோ விளையாடராங்கன்னு ஒரு சந்தேகம்... அந்த சந்தேகத்தோட மொதல் Victim... வேற யாரு? none other than ரங்க்ஸ்...

அவர்கிட்ட கேட்டதும் ஒரே சிரிப்பு... எனக்கு சந்தேகம் உறுதி ஆய்டுச்சு... செம டென்ஷன் ஆகி திட்டலாம்னு தயாரானேன்

"ஈமெயில் ஐடி நல்லா பாரு... அஞ்சப்பர்ல இருந்து தான் வந்திருக்கு... எனக்கு ஹேக் பண்ணவெல்லாம் தெரியாது" னார்

"அப்புறம் ஏன் சிரிச்சீங்க?" னு டிடக்டிவ் ஏஜென்ட் மாதிரி பாயிண்ட்டை புடிச்சேன்... அப்பாவியா கொக்கா?

"அது... " மறுபடியும் சிரிப்பு "நீ இட்லிய பாத்து டென்ஷன் ஆனதை பாத்து... ஹா ஹா அஹ... சிரிச்சேன்" னார்

"ச்சே..." னு எனக்கு ஒரே பீலிங்க்ஸ் ஆய்டுச்சு

"ஆனா எப்படி என்னோட ஈமெயில் ஐடி இவங்களுக்கு கெடைச்சு இருக்கும்" னு கேக்க அதுக்கப்புறம் ரங்க்ஸ் சொன்னது தான் என்னோட நிஜமான டென்ஷன்க்கு காரணம்

"அது... அன்னிக்கி நாம அஞ்சப்பர் போனப்ப... subscribe to mailing list னு இருந்த நோட்ல உன்னோட ஈமெயில் ஐடி எழுதினேன்..." னார்

"ஏன்... ? வேணும்னா உங்க ஐடி எழுதி இருக்கலாமே.. ஏன் என்னோட ஐடி?" னு கேக்க

"யார் யாருக்கு வேணுமோ அவங்களுக்கு தானேமா ஈமெயில் வரணும்" னு போட்டாரே ஒரு போடு... நான் கப்சிப்...ஹும்... வீக்னெஸ் நம்ம பக்கம் இருக்கே... ஹும்...

இதெல்லாம் கூட போனா போகட்டும்னு மனச தேத்திகிட்டேன்...

அதுக்கு அப்புறம் நடந்தது தான் எனக்கு இழைக்கபட்ட அநீதி...ஹும்...

சில வாரங்களுக்கு முன்னாடி பிரெண்ட்ஸ் எல்லாரையும் வீட்டுக்கு டின்னர்க்கு கூப்பிட்டு இருந்தோம், சும்மா ரெம்ப நாளாச்சேனு

மத்ததெல்லாம் நானே செஞ்சுக்கறேன்... இட்லி மட்டும் அஞ்சப்பர்ல அந்த Offer பத்தி கூட ஈமெயில் வந்ததே அவங்ககிட்ட ஆர்டர் பண்ணிக்கலாம்னு சொன்னேன்... ரங்க்ஸ்ம் சரின்னார்

அது என்னமோங்க அதிசியம் யாராச்சும் கெஸ்ட் வீட்டுக்கு வர்றாங்கன்னா அன்னிக்கி ரங்க்ஸ்க்கு கண்டிப்பா முக்கியமா ஆபீஸ்ல வேலை வந்துடும் அது சண்டே ஆனா கூட... எல்லா ரங்க்ஸ்களும் இப்படி தான்னு நினைக்கிறேன்... ஹும்...

சரி மேட்டர்க்கு போவோம்...

அன்னிக்கி அவர் ஆபீஸ் போறப்ப "நீ அஞ்சப்பர்க்கு போன் பண்ணி இட்லி ஆர்டர் பண்ணிடு... நான் ஈவினிங் வர்றப்ப பிக் அப் பண்ணிட்டு வர்றேன்" னு சொன்னார்

நானும் போன் பண்ணி அம்பது இட்லி வேணும்னு ஆர்டர் பண்ணினேன்

மத்த சமையல் எல்லாம் முடிச்சுட்டு அப்பாடானு போய் உக்காந்தா இவர்கிட்ட இருந்து போன்...

"நீ நம்ம ஏரியால இருக்கற அஞ்சப்பர்ல தானே ஆர்டர் பண்ணினே?" னு கேட்டார் (இங்க கொஞ்ச தூரத்துல இன்னொரு அஞ்சப்பர் பிரான்ச் இருக்கு)

"ஆமாம் நம்ம ஏரியால இருக்கறதுல தான்"னேன்

"இங்க இட்லி ஆர்டர் வரவே இல்லைன்னு சொல்றாங்கன்னு" தலைல கல்லை போட்டார்

(ஹி ஹி ஹி... அதுக்கு உன் இட்லிய போட்டார்னு சொல்லி இருக்கலாம் - மைண்ட்வாய்ஸ்)

"ஐயோ... கடவுளே... நான் Order பண்ணினேனே... பதினொரு மணி போல போன் பண்ணினேன்..." னு அழுகாத கொறையா சொன்னேன்

"யாரு கிட்ட பேசின?"னார்

"ஒரு நார்த் இந்தியன் பொண்ணு இருக்குமே.. வாய்ஸ் அந்த பொண்ணு மாதிரி தான் இருந்தது... இங்கிலீஷ்ல தான் பேசுச்சு" னேன்

"இல்லமா... அப்படி ஆர்டர் எதுவும் இல்லையாம்"னார்

"நீங்க அவங்க போன்ல செக் பண்ண சொல்லுங்க... நம்ம நம்பர் இன்கமிங் கால்ஸ்ல இருக்கா இல்லையானு" னு எனக்கு பிரஷர் எகிறிடுச்சு

கொஞ்ச நேரம் சத்தமே காணோம்... அப்புறம் சொன்னார்

"அவங்க நீ 50 இடியாப்பம் தான் ஆர்டர் பண்ணினேன்னு அதை எடுத்து வெச்சு இருக்காங்க... இப்ப இட்லி செய்யனும்னா இன்னும் ஒன் அவர் வெயிட் பண்ண சொல்றாங்க.. என்ன செய்யட்டும்"

"ஐயோ... நான் இட்லி தான் ஆர்டர் பண்ணினேன்... அந்த தமிழ் தெரியாத ஜென்மத்தை எல்லாம் எதுக்கு தமிழ் கடைல வேலைக்கு வெச்சுருக்கான்னு  திட்டிட்டு வாங்க"

"சரி... சரி... திட்டிக்கலாம்... இட்லி வெயிட் பண்ணி வாங்கிட்டு வரவா"

"ஐயோ.. ஒன் அவரா? எல்லாரும் வந்துடுவாங்க... " என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போக

"சரி சரி... டென்ஷன் ஆகாத... நான் வேற எங்காச்சும் ட்ரை பண்றேன்" னுட்டு வேற ஒரு கடைல வாங்கிட்டு வந்தார்

வீட்டுக்கு வந்தவர் சிரிச்சுகிட்டே ஒரு டயலாக் சொன்னார் பாருங்க, அதான் இந்த போஸ்ட்க்கு காரணம்... என்ன சொன்னாரா? இதோ...

"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி,  போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" னு சொல்லிட்டு ஆள் கொஞ்ச நேரம் எஸ்கேப்...

நான் என்ன செஞ்சேனா? வேற என்ன கொஞ்ச நேரம் இந்த கோஷம் தான் போட்டுட்டு இருந்தேன்...

இட்லி டௌன் டௌன்
ஹிந்திக்காரி டௌன் டௌன்
அஞ்சப்பர் டௌன் டௌன்

என்ன கொடுமங்க இது? அந்த ஹிந்திகார பொண்ணு தப்பா ஆர்டர் எடுத்ததுக்கு என்னை இப்படி பொலம்ப விட்டுடாங்களே... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா... ஹும்...


...

83 பேரு சொல்லி இருக்காக:

முனியாண்டி said...

இருந்தாலும் பயங்கர பில்டப்பு ... நல்ல இருந்தது உங்க இட்லி (கதை)... அப்புறம் இடிப்பும் எப்படி இருந்தாது .... எல்லாம் அரிசு மாவுல செஞ்சது தான

பிரவின்குமார் said...

ஹ...ஹா...ஹா.. பதிவு இரசிக்கும்படியாகவும், யதார்த்தம் நிறைந்த நகைச்சுவையாகவும் அருமையாக உள்ளது. கலக்குங்க...!!!

தமிழ் உதயம் said...

என்ன கொடுமங்க இது? அந்த ஹிந்திகார பொண்ணு தப்பா ஆர்டர் எடுத்ததுக்கு என்னை இப்படி பொலம்ப விட்டுடாங்களே... //


என்னா பண்றது. உங்களுக்கு நேரம் சரியில்ல.

Porkodi (பொற்கொடி) said...

கடைசில அவசர்த்துல வந்த அந்த கடை இட்லி எப்புடி இருந்துதுன்னு சொல்லலியே?

sandhya said...

"இட்லி டௌன் டௌன்
ஹிந்திக்காரி டௌன் டௌன்
அஞ்சப்பர் டௌன் டௌன்"ஆமா டௌன் டௌன் ..என் இனிய தோழிக்கு டென்ஷன் கொடுத்த எல்லோரும் டௌன் டௌன் தான் .

எப்போதும் போல கலக்கல் பதிவு தான் தோழி ..

அப்புறம் இந்த கதை எல்லாம் வேண்டா எனக்கு அதே கண்கள் தான் வேணம் ...அடுத்த பதிவு சீக்ரமா போடுங்க ப்ளீஸ்

அமைதி அப்பா said...

"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" னு சொல்லிட்டு ஆள் கொஞ்ச நேரம் எஸ்கேப்.../

நல்லா ரசித்தேன், நன்றி.

kavisiva said...

அப்பாவி எங்க போனாலும் இந்த இட்லி உங்களை விடாம துரத்துதே! நீங்க "விடாது இட்லி"ன்னு தொடர்கதை எழுதலாம் :)

இட்லி ஆர்டர் பண்ணக் கூடவா தெரியாது :)

மகி said...

ஹா..ஹாஹ்..ஹா! சூப்பர் காமெடி புவனா. நானும் அதேதான் கேக்கிறேன்,உங்களுக்கு ஆர்டர் பண்ண கூடவா தெரியாது? ஹிஹ்ஹிஹி!

பேசுனது ஹிந்திக்காரம்மான்னு தெரிஞ்சதுமே ஒண்ணுக்கு நாலு தடவ, நான் என்ன ஆர்டர் பண்ணேன்-னு சொல்லு பாப்போம்-னு கேட்டிருக்க வேணாமா நீங்க?

என்னது,ஏதோ கும்மியடிக்கிற மாதிரி சவுண்டு வருதேன்னு,கமெண்ட் போட்டவங்க எல்லாரும் பாக்கிறாங்க பாருங்க..அது ஒண்ணுமில்லீங்க..நானு,தங்ஸ்-ன் மைண்ட்வாய்ஸு,ரங்கமணி அண்ணா எல்லாருமா சேர்ந்துதான் கும்மியடிக்கிறோம்.எங்களுடன் சேர விருப்பம் உள்ளவங்க,தாராளமா சேந்துக்கலாம்,அனுமதி இலவசம்!!
:)))))))))

Nithu Bala said...

:-)) nalla irukku pathivu...

சௌந்தர் said...

மைண்ட்வாய்ஸ் மைண்ட்வாய்ஸ் வருதே யாருங்க இந்த மைண்ட்வாய்ஸ்

kavisiva said...

அப்பாவி அப்படியே நம்ம பக்கத்துக்கு ஒரு விசிட் அடிங்க. அங்கயும் உங்க இட்லியும் மைண்ட்வாய்சும் உங்களை கவுத்திடுச்சு :)

தக்குடுபாண்டி said...

இட்லி மாமி ஒரு போஸ்ட் தேத்தர்துக்கு எவ்ளோ அலப்பறை பண்ண வேண்டி இருக்குடா முருகா!! (இது என்னோட real voice தான்).....:))

அபி அப்பா said...

அதான் இந்திகார பொண்ணாச்சே, தமிழ்ல இட்லின்னு சொன்னா புரியுமா? இந்தில சொல்லியிருக்கனும், அட்லீஸ்ட் இங்கிலீஷ்லயாவது சொல்லிருக்கனும்... என்னவோ போங்க இட்லிக்கு உங்களுக்கும் விஜய்க்கும் அஜீத்க்கும் உள்ள மாதிரி ராசியாகிடுச்சு, பார்த்து சூதனமா நடந்துகுங்க:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன ஒரு கேள்வி? என்ன ஒரு கேள்வி

அவருக்கு இவ்ளோ தைரியம் எப்பலேர்ந்து வந்தது..

அன்னு said...

//"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" //
ஹ ஹ ஹா ஹி ஹி ஹீ ஹு ஹு ஹூ....என்னாலே உங்களை அந்த இடத்துல நினைச்சி கூட பாக்க முடியலே...வயிறு வெடிச்சிரக்கூடாதேன்னு இத்தோட ஸ்டாப்பிங்கு!

அது சரி, அந்த ஹிந்திக்கார பொண்ணுகிட்ட ஹிந்தில பேசினீங்களா இல்ல இங்கிலீஷிலா? அப்பா அடுத்த பதிவும் (இட்லி மாதிரி) சூடா இருக்குன்னு சொல்லுங்க. ஆனாலும் பாவம் புவனா...இப்படி கடைல விக்கிற இட்லியும் உங்க மண வாழ்க்கைல விளையாடும்னு யார்தான் எதிர்பார்ப்பா சொல்லுங்க.

Elangovan said...

"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது"

விவிசி - விழுந்து விழுந்து சிரிக்கின்றேன் (ROFL)...

ரொம்ப நாளா உங்களுக்கு கமெண்ட் போடணும்னு நினைச்சி இன்னைக்குதான் நிறைவேருச்சி...

உங்களோட கொங்கு தமிழ் எனக்கு பிடிச்சிருக்கு... உங்க பதிவ படிக்கும்போது என்னோட கோயம்புத்தூர் பிரண்ட்ஸ் பேசற மாதிரியே ஒரு பீலிங்... அதுக்காகவே நான் அடிக்கடி உங்க பக்கம் வந்து போறேன்..

அமைதிச்சாரல் said...

ஒரு தடவை நீங்களே இட்லி செஞ்சு கொண்டுபோயி அந்தப்பொண்ணை சாப்பிட வையுங்க. அப்புறம் அந்தப்பொண்ணு ஜென்மத்துக்கும் இட்லியை மறக்காது :-))))))

என்னது நானு யாரா? said...

//"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது"//

ஒரே தமாஷ் தான் போங்கோ! உங்க விதி அப்படி இருக்கு.

இட்லி விநாயகர்ன்னு சக்திவாய்ந்த விநாயகர் கோயில் புதுசா கட்டி இருக்காங்களாம். அங்கே வேணும்னா ஏதாவது விரதம் இருந்து பரிகாரம் செய்து பாருங்க! அங்கே இட்லி சட்டி (பூ சட்டிக்கு பதிலா)தூக்கிட்டு கோயிலை சுத்தி வர்றது விஷேஷமாம்.

108 முறை சுத்தி வந்தீங்கன்னா தோஷம் தீருதாம்பா!

இந்த பரிகாரத்தை உடனே செய்யுங்க! இட்லியால வந்த தோஷம் தீர்றதுக்கு வாய்ப்பு இருக்கு! இதெல்லாம் அந்த இட்லி சனீஸ்வரனால வர்ற தோஷமாம.

இப்பத்தான் பஞ்சாங்கத்தை பார்த்தேன்

sriram said...

பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் சொன்னது…

ஒரு தடவை நீங்களே இட்லி செஞ்சு கொண்டுபோயி அந்தப்பொண்ணை சாப்பிட வையுங்க. அப்புறம் அந்தப்பொண்ணு ஜென்மத்துக்கும் இட்லியை மறக்காது :-)))))) //

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

DREAMER said...

கலக்கல் கலகல பதிவு... நகைச்சுவை உணர்வுடன் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது...

-
DREAMER

DREAMER said...

கலக்கல் கலகல பதிவு... நகைச்சுவை உணர்வுடன் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது...

-
DREAMER

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

கொடுத்துவச்ச ரங்கமணி!!!
அஞ்சப்பர் இட்லி,
மைண்ட்வாய்ஸ் மகாதேவி,
ஹிந்திக்காரி.
கலக்குங்க தங்கமணி!!

சுசி said...

ஆல் ரங்கமணிஸ் இப்டித்தான் போல புவனா..

நாங்க வந்தா இட்லியே தர வேணாம் சொல்லிட்டேன்.

நசரேயன் said...

//பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி//

தல இதிலே ஏதும் உள்குத்து இல்லையே

சின்ன அம்மிணி said...

//அது என்னமோங்க அதிசியம் யாராச்சும் கெஸ்ட் வீட்டுக்கு வர்றாங்கன்னா அன்னிக்கி ரங்க்ஸ்க்கு கண்டிப்பா முக்கியமா ஆபீஸ்ல வேலை வந்துடும் அது சண்டே ஆனா கூட..//

அதை சொல்லுங்க. வீட்ல இருந்தா வெலை செய்ய சொல்லிடுவேனாம். வீட்டுக்கு வீடு வாசப்படி

ஸ்ரீராம். said...

இட்லியோட சேர்ந்து இடியாப்பமும் வில்லனாகுதா...?

//"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" னு சொல்லிட்டு ஆள் கொஞ்ச நேரம் எஸ்கேப்..."//

இட்லின்னு சொல்லிப் பாருங்க...சரியா சொல்ல வருதான்னு... ஒரு வேலை இல்டின்னு வருதான்னு செக் பண்ணிக்கோங்க...!!:))

சேட்டைக்காரன் said...

ஆனா பாவன்னாங்கா! (அய்யோ பாவம்-னு சொன்னேன்!)

என்ன கோபமிருந்தாலும் இட்லி டௌண் டௌண்னு மட்டும் சொல்லாதீங்க! அதை வச்சு நானும் ரெண்டு பதிவு போட்டிருக்கேன். நீங்களும் போட்டிருக்கீங்க! அது ரோனா பாவன்னாங்க!

ராவி said...

Mississauga (இதை கரெக்டா சொல்லுறவங்களுக்கு 1000 பொற்காசுகள் பரிசளிக்கப்படும்!!!!!) இல இருக்கற அஞ்சப்பர் தானே சொல்லுறிங்க. நான் அங்கே போனப்ப தமிழ் நாட்டில இருந்து வந்தவங்களும் ஈழத்தில் இருந்து வந்தவங்களும் தானே work பண்ணினாங்க. உங்களுக்காகவே ஒரு நார்த் இந்தியனை recruit பண்ணி இருப்பங்களோ?

Venkatesh said...

இட்லில எவ்ளோ மேட்டர் இருக்கு பாருங்க.

kggouthaman said...

அ த : ஹலோ அஞ்சப்பரா?
நார்த் இந்தியன் பெண்மணி: ஆமாம். உங்களக்கு என்னோ வேணும?
அ த : இப்போ அம்பது இட்லி ஆர்டர் பண்ணினா எப்போ கிடைக்கும்?
நா இ பெ : இட்லி எப்போ வேணும?
அ த : இட்லி இப்பவே வேணும.
நா இ பெ : ஓஹோ இடி ஆப்பமே ஓணுமா?
அ த : ஆமாம் இப்பமே ஓணும் (ஹி ஹி எனக்கும் உன்னைப் போல தமிழ் பேசத் தெரியும்மே!)
நா இ பெ : சரிங்கோ, பார்சல் கட்டி வேச்சிடறேன்.
அ த : நான் இப்ப என்ன ஆர்டர் பண்ணினேன் சொல்லுங்க பாப்பம்?
நா இ பெ : ஆமாம் கரிக்ட் ... அதெல்லாம் கரீக்டா பார்சல் கட்டி அனுப்பிவிடுவோம். கவலைப் படாதீங்கோ. (வேறொரு தொலைபேசியில்) அலோ அஞ்சப்பர் ... இட்லிதானே? இருக்கே! வாங்க, எப்போ வேணாலும் வாங்க...
அ த : அப்பாடி! இட்லி ஆர்டர் பண்ணியாச்சு.
(இட்லி இடியாப்பம் ஆன கதை!)

VELU.G said...

ஏங்க அது குஷ்பு இட்லிங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் கடைசில என்னதான் சாப்புட்டீங்க?

மதுரை பாண்டி said...

இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா //

நான் இருக்கிறேன்!!!
(இவன் யாருடா புதுசா!!! -- மைன்ட் வாய்ஸ்)
அஞ்சப்பர் டௌன்!!
அஞ்சப்பர் டௌன்!!

எனக்கும் ஒரு 50 இட்லி பார்சல்!!!

drbalas said...

அது சரிங்க..! ஐம்பது இட்லியோ..! இடியாப்பமோ..! ஒரே ஆள் இந்த கட்டு கட்டுனீங்கனா நாட்டுல உணவு பஞ்சம் வராம என்ன செய்யும்

ஹேமா said...

இட்லி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு தங்கமணி.எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ் !

priya.r said...

// என் சோக கதைய கேளு ப்ளாக் குலமே...//
தலைப்பும் பதிவும் நல்லா இருக்குங்க !

ஹ ஹா ! கேட்கறது மட்டும் எங்க வேலை இல்லைங்க !
அந்த ஹிந்தி பெண்ணை கண்டு பிடித்து ,அவங்களை
தங்கமணி பிராண்ட் இட்லி சாப்பிட வைத்து
இட்டிலியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாமல்
செய்து விடுவோம் !
என்ன சொல்லறீங்க !!

SenthilMohan said...

என்னது உங்களுக்கு ஆர்டர் பண்ணக் கூடத் தெரியாதா?

SenthilMohan said...

என்னது உங்களுக்கு idly ஆர்டர் பண்ணக் கூடத் தெரியாதா?

Mrs.Menagasathia said...

sema comedy appavi akka...

LK said...

நீ விட்டாலும் இட்லி உன்னை விடாது ...

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஹா ஹா ஹா... இடியாப்பம் வாங்கலை... ஆர்டர் கான்சல்... எல்லாம் அரிசி பாவும் தான் கரெக்ட்... வேற வேற அச்சுல... அவ்ளோ தான் தேங்க்ஸ்ங்க...

@ பிரவின்குமார் - ரெம்ப நன்றிங்க பிரவீன்குமார்... முதல் வருகைக்கும் நன்றி

@ தமிழ் உதயம் - கரெக்டா சொன்னீங்க... எனக்கு நேரம் சரி இல்லை... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - அந்த வேற கடை இட்லி ஒகே தான்... (நான் செய்யற இட்லிக்கு மோசமில்லை...)

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா... நீங்களாச்சும் எனக்கு சப்போர்ட் பண்றீங்களே... "அதே கண்கள்" சீக்கரம் போடறேன் சந்த்யா... கேட்டதுக்கு ரெம்ப தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ அமைதி அப்பா - நன்றிங்க

@ kavisiva - பாருங்க "விடாது இட்லி" தான் ஆகி போச்சு... தொடர் எழுத ஐடியா குடுத்ததுக்கு நன்றிங்கோ... ஹா ஹா ஹா... ஒகே ஒகே... நோ டென்ஷன்

அப்பாவி தங்கமணி said...

@ மகி - மகீ டௌன் டௌன்னு நானும் சொல்லுவேன் இனி... என்னது கும்மியா? நம்ம ஊரு அம்மணியா இருந்துட்டு இதென்ன ஞாயங்கறேன்... இதுல //எங்களுடன் சேர விருப்பம் உள்ளவங்க,தாராளமா சேந்துக்கலாம்,அனுமதி இலவசம்// னு வேற போஸ்டர் ஓட்டுறீங்களே... ஞாயமா இது ஞாயமா? மகீ டௌன் டௌன்........................

@ Nithu Bala - தேங்க்ஸ்ங்க Nithu

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - ஹா ஹா ஹா... மைண்ட்வாய்ஸ் தெரியாதா உங்களுக்கு...அப்பாடா நான் பொழச்சேன்... அது வேற ஒண்ணுமில்லங்க... மனசாட்சி தான்... கொஞ்சம் மாடர்ன் பேரு வெச்சுட்டேன்

@ kavisiva - அடப்பாவி... அநியாயத்துக்கு என்னை மைண்ட்வாய்ஸ் கூட மோத விட்டுருகீங்க போல... ஹா ஹா ஹா

@ தக்குடு - உன்னோட ரியல் வாய்ஸ் டௌன் டௌன்... ஹா ஹா ஹா... எனக்கு சப்போர்ட் பண்ணலைனா இட்லி பார்சல் வரும் சொல்லிட்டேன்...

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - அபி அப்பா... என்ன கொடுமை இது? உலகத்துல இருக்கற எல்லா மொழிலையும் இட்லிய "இட்லி" னு தன் சொல்லணும்... பின்ன "தோசை" னா சொல்ல முடியும்... கீதா மாமி டயலாக் தான் வருது இப்போ... கர்ர்ரர்ர்ர்ர்.................. ஹா ஹா அஹ...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - அதானே... பாருங்க மேடம்... யாருக்கும் நம்ம மேல பயம் இல்லாம போய்டுச்சு... ஹும்...

@ அன்னு - என்ன என்ன இல்ல என்னங்கறேன்? ஆனாலும் இவ்ளோ சிரிப்பா.. டு மச் ஐ சே... என்னோட பொலம்பல் எவ்ளோ சிரிப்புமா உங்களுக்கு... ஹும்... இட்லி என் மணவாழ்கைல ரெம்ப தான் விளையாடுது... ஹும்...

அப்பாவி தங்கமணி said...

@ Elangovan - ஹா ஹா அஹ... வாங்க இளங்கோவன்... முதல் வருகைக்கு நன்றிங்க... கொங்கு தமிழா? நெஜமாவே எனக்கு அந்த ஸ்லாங் இருக்கா என்ன? இது வரைக்கும் யாரும் சொல்லாத ஒரு கமெண்ட்... ரெம்ப சந்தோஷம் எனக்கு.. .எங்க ஊரை சம்மந்தபடுத்தி சொன்னதுக்கு... ரெம்ப நன்றி மீண்டும்

@ அமைதிச்சாரல் - garrrrrrrrrrrrrrrr.... அமைதி அக்கா டௌன் டௌன் டௌன் டௌன்...

@ என்னது நானு யாரா? - வாங்க சார் வாங்க... எப்போலிருந்து இந்த ஜோசியர் தொழில் எல்லாம்... ஹா ஹா ஹா... சூப்பர் பரிகாரம் செஞ்சுடறேன்... அப்புறமாச்சும் தீருதானு பாப்போம் தோஷம்... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ sriram - இப்படி எல்லாம் கமெண்ட் போட்டா அடுத்த போஸ்ட் "என்ன கொடும ஸ்ரீராம் சார்" னு தான் வரும் சொல்லிட்டேன்... இதுல என்னங்க "பயன்"... கொஞ்சம் சொல்லுங்க சார்... ஹா ஹா அஹ... ப்ளீஸ் ப்ளீஸ் template கமெண்ட் மாத்துங்க தல...

@ ஜெய்லானி - நெனச்சேன்... என்னடா இன்னும் ரிபீட் வரலியே இதுக்குன்னு... ரிபீட் கமெண்ட் எல்லாம் செல்லாது... நீங்களே கமெண்ட் போட்டா தான் செல்லும்... ஹா ஹா ஹா

@ DREAMER - தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு. - ரெம்ப நன்றிங்க... கொடுத்துவச்ச ரங்கமணினு நெஜமாவே தானே சொன்னீங்க... ரெம்ப நன்றிங்க.

@ சுசி - ஹா ஹா ஹா... உங்களுக்கெல்லாம் இட்லி தருவேனா சுசி... வேற ஸ்பெஷல் மெனு தான்... ஹா ஹா அஹ

@ நசரேயன் - ச்சே ச்சே... அதெல்லாம் இல்லிங்க... அவர் ரெம்ப நல்லவருங்க... அப்படி தான் சொன்னாங்கங்க... மீ எஸ்கேப்...

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மணி - கரெக்ட்ங்க அம்மணி... எல்லாம் கேக்க ஆள் இல்லாம போச்சு.. ஹும்...

@ ஸ்ரீராம் - இடியாப்பம் எல்லாம் வில்லன் இல்லிங்க... எப்பவும் இட்லி தான் வில்லன் வில்லி எல்லாம்...
//இட்லின்னு சொல்லிப் பாருங்க...சரியா சொல்ல வருதான்னு... //
அடப்பாவமே... மொத்த உலகமும் நமக்கு எதிரா இருக்கே... ஹும்... (ஹா ஹா அஹ... இட்லி சொல்லவெல்லாம் நல்லாத்தான் வருதுங்க சொல்லி பாத்துட்டேன்... ஹா ஹா ஹா)

@ சேட்டைக்காரன் - உங்களுக்கு பாவம் கூட "பாவனா"வாத்தான் வருது பாவனா நீங்க... ச்சே ... பாவம் நீங்க... ஹா ஹா அஹ... சூப்பர்... நீங்களும் இட்லி பதிவா... இப்பவே பாக்குறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ ராவி - ஹா ஹா அஹ... எஸ் எஸ் 10000 பொற்காசு கூட குடுக்கலாம்ங்க ரவி... ஆனா அந்த அஞ்சப்பர் இருக்கற சிட்டி "Mississauga" இல்ல "Brampton"... அது Mississauga பார்டர்னு வேணா சொல்லலாம்... இல்லிங்க ஒரு நார்த் இந்தியன் பொண்ணு இருக்கு இப்போ... நீங்க வீக் டயஸ்ல போறதில்லைன்னு நினைக்கிறேன்...

@ Venkatesh - ஆமாங்க டூ மச் மேட்டர் தான் இட்லில... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ kggouthaman - ஹா ஹா ஹா... சூப்பர் கற்பனை... இதை நீங்க ஒரு போஸ்ட்ஆவே போடலாம் போல... ஆனா அந்த ஹிந்தி ஜென்மம் ரெம்ப புரிஞ்ச மாதிரி தான் சொல்லுச்சு... இப்படி ஆப்பு வெக்கும்னு நினைக்கல... ஹா ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ VELU.G - இல்லீங்ண்ணா... அஞ்சப்பர் இட்லி... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ பன்னிக்குட்டி ராம்சாமி - வேற கடைல இட்லி வாங்கிட்டு வந்தாருங்க... முதல் வருகைக்கு நன்றிங்க

@ மதுரை பாண்டி - நன்றிங்ண்ணா... எனக்கு சப்போர்ட் பண்ணினதுக்கு... முதல் வருகைக்கும் நன்றி... உங்களுக்கு பார்சல் சொல்லிட்டேன்... இடியாப்பம் வந்தா நான் பொறுப்பில்ல... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ drbalas - வாங்க டாக்டர் சார்... ஐயோ அத்தனையும் எனகில்லிங்க... ஊட்டுக்கு வர்ற விருந்தாளிகளுகுங்க... ஆஹா டாக்டர் பாயிண்ட்யை புடிக்கறாரே... ஹா ஹா ஹா... நன்றிங்க முதல் வருகைக்கு

@ ஹேமா - ஆஹா... உங்களுக்கு நெஜமாவே எதையும் தாங்கும் இதயம் போல இருக்கு.. .இதோ பார்சல் அனுப்பிடறேன்... ஹா ஹா ஹா... நன்றிங்க

@ priya.r - ஆஹா ப்ரியா என்ன தோழி நீங்களுமா? வெரி bad வெரி bad ... இருங்க ஊருக்கு வர்றப்ப இட்லி செஞ்சு உங்கள பழி வாங்கறேன் மொதல்ல... ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan - வாங்க பிரதர் என்ன ரெம்ப நாளா ஆளே காணோம் இந்த பக்கம்... எனக்கு ஆர்டர் பண்ண தெரியும் அந்த ஹிந்தி ஜென்மத்துக்கு ஆர்டர் எடுக்க தெரியல... ஹா ஹா ஹா...

@ Mrs.Menagasathia - ஹா ஹா அஹ... நன்றிங்க

@ LK - வாங்க சார்... அதென்னமோ வாஸ்தவம் தான்... இட்லி விடாது போல இருக்கு... ஹா ஹா ஹா

Gayathri said...

ஹாஹா என்ன கொடுமை இது? கரெக்ட் தான் சில சமயம் நடப்பது எல்லாம் கடுப்ப இருக்கு..அதுவே கொசுவத்தி சுத்தும் பொழுது தமாஷ இருக்கும்.

Krishnaveni said...

Vidaathu Karuppu (Idly), unga idly black and white aa irunthathunnu neenga sonna nyabagam (idlyum naanu la)

ராதை/Radhai said...

ஐயையோ....(அஞ்சப்பர்) இட்லி போச்சே!! :-)

Elangovan said...

@அப்பாவி ஏனுங்க வாங்க போங்க அப்படின்னு எழுதினாதான் கொங்கு தமிழ்னு இல்ல... உங்களோட வார்த்தை உபயோகத்த வச்சுதான் சொல்றேன்... பொதுவா கோயம்புத்தூர் மக்கள் மட்டும் உபயோகிக்கிற வார்த்தைகள் உங்க பதிவுல பார்த்திருக்கேன்...
அப்புறம் இது முதல் வருகை எல்லாம் இல்ல கொஞ்ச நாளா உங்க பதிவ படிசிக்கிட்டுதான் வரேன்.... இதுதான் முதல் பின்னூட்டம்னு வேனா வச்சிக்கோங்க...
அப்புறம் எப்போ அதே கண்கள் அடுத்த பகுதி வரும்? ஒருநாளைக்கு லீவ் போட்டு எல்லா பகுதியையும் எழுதிடுங்களேன்? இல்லனா உங்களுக்கே இட்லி பார்சல் வரும்... அதுவும் தங்கமணி ஸ்பெசல் இட்லி...

vanathy said...

தங்ஸ், எனக்கென்னவோ உங்க மேலே தான் சந்தேகம். இட்லி மீது இருக்கிற கோபத்தால் இடியாப்பம் என்று ஆர்டர் செய்திருக்கிறீங்க. பாவம் அப்பாவி ஹிந்திக்காரி.

Ananthi said...

///"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" னு சொல்லிட்டு ஆள் கொஞ்ச நேரம் எஸ்கேப்...///

ஹா ஹா ஹா... சாரி-ப்பா.. சிரிப்பு அடக்க முடியல... :-))

//என்ன கொடுமங்க இது? அந்த ஹிந்திகார பொண்ணு தப்பா ஆர்டர் எடுத்ததுக்கு என்னை இப்படி பொலம்ப விட்டுடாங்களே... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா... ஹும்... ///

நா இருக்கேன் பா.. நீங்க ஒன்னும் கவலை படாதீங்க.... :-)))

////ஆனா விதி விரல்ல உக்காந்துட்டு சல்சா டான்ஸ் ஆடறப்ப அப்படி டெலீட் பண்ண விட்டுடுமா என்ன? ஹும்... ////

ஹா ஹா. இது தூள்...
ரொம்ப ரசிச்சு படிச்சேன்..

Anonymous said...

ஒரு தடவை நீங்களே இட்லி செஞ்சு கொண்டுபோயி அந்தப்பொண்ணை சாப்பிட வையுங்க. அப்புறம் அந்தப்பொண்ணு ஜென்மத்துக்கும் இட்லியை மறக்காது :-)))))) //

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் //

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

- Ana

மோகன்ஜி said...

அடடா! அசத்தலா இருக்குங்க இந்த பதிவு.. இட்லில இவ்வளவு குழப்பமா! ரசிச்சேங்க.. எங்க யானை கும்மிக்கு வந்து கௌரவப் படுத்தியதுக்கு நன்றி மேடம்!

சே.குமார் said...

ஒரே தமாஷ் தான் போங்கோ!

அசத்தலா இருக்குங்க.

Madhuram said...

(ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... இவ விளம்பரத்துக்கு ஒரு அளவில்லையா... முருகா உனக்கு கண்ணில்லையா... காப்பாத்து - மைண்ட்வாய்ஸ்)

Sariya varaadha idlikke ivvalavu vilamabaram na, namma akka mattum supera idli pannaangana namma nilama enna aaradhu? appavithangamanisidlis.blogspot.com ne thaniya aarambichiduvaanga nu ninaikiren.

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஆமாம் காயத்ரி அப்படி தான் ஆச்சு.. ஹா ஹா அஹ

@ Krishnaveni - ஹா ஹா ஹா... வேணி... தட்ஸ் அ குட் ஒன்... ஆமாம் ப்ளாக் & வைட் இட்லி எல்லாம் வந்தது தான்... ஹா ஹா ஹா

@ ராதை/Radhai - ஹா ஹா அஹ... எஸ் போயே போச்சு... இட்ஸ் கான்...

அப்பாவி தங்கமணி said...

@ Elangovan - ஓ.. ரெம்ப நன்றிங்க... லீவ் போட்டு பதிவு எழுதறதா... ஆஹா... நல்ல ஐடியாவா இருக்கே.. ஹா ஹா ஹா... இட்லி எல்லாம் வேண்டாம் எழுதிடறேன்...

@ vanathy - ஆஹா... உங்களுக்கும் என் மேல தான் சந்தேகமா? ஹும்... உலகம் மொத்தமும் உனக்கு எதிராத்தான் இருக்கு தங்கமணி... ஹா ஹா அஹ... தேங்க்ஸ் வாணி

@ Ananthi - சிரிப்ப அடக்க முடியலையா? இருங்க இருங்க மறுபடியும் பின் லேடன் தொடர் பதிவுக்கு கூப்பிடறேன் உங்கள... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் ஆனந்தி

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - அடிப்பாவி... ஏன் இந்த கொலை வெறி தாயே? மீ எஸ்கேப்... ஹா ஹா அஹ

@ மோகன்ஜி - நன்றிங்க மோகன்...

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ Madhuram - ஆஹா.. வாங்க மேடம்... என்ன ஆளே காணோம் ரெம்ப நாளா? ஹா ஹா ஹா... வாஸ்துவம் தான் எனக்கு மட்டும் இட்லி சரியா வரட்டும் அப்புறம் எல்லாத்தையும் ஒரு வழி பண்ணிடுவேன் ஆமா... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் மதுரம்

siva said...

ushhhhhhhhhhhhhhhhhhhhh..mudiyalla..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" னு சொல்லிட்டு ஆள் கொஞ்ச நேரம் எஸ்கேப்...//

இது தான் மெர்குரி பல்பு. நல்ல பகிர்வு. ரசித்தேன், சிரித்தேன். நன்றி சகோதரி

///"ஏம்மா... இட்லி செய்ய தெரியாது சரி, போனா போகட்டும்... ஆர்டர் பண்ண கூடவா தெரியாது" னு சொல்லிட்டு ஆள் கொஞ்ச நேரம் எஸ்கேப்...///

உங்களுக்கு இணையாக உங்க ரங்க்ஸும் இருக்கிறார் என்பதா அல்லது உங்களை மிஞ்சி விட்டார் என்று சொல்வதா?

சுந்தரா said...

மொத்தத்துல இட்லிக்கும் உங்களுக்கும் ஏழாம்பொருத்தம்தான் போல... :)

அப்பாதுரை said...

your writing demonstrates a great sense of humor!
அஞ்சப்பர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கா? நானா இருந்தா அங்கியே ஒரு போர்ஷன் கிச்சன் பக்கத்துல ஒரு ஓரமா எடுத்துட்டிருப்பேனே?

அப்பாதுரை said...

//கொசுவத்தி இல்லாம ப்ளாஷ்பாக் சொல்ல முடியுமா? //
classic!

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஒகே ஒகே... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - மெர்குரி பல்பு, இது புதுசா இருக்கே சார்... ஹா ஹா ஹா... நன்றிங்க...

//உங்களுக்கு இணையாக உங்க ரங்க்ஸும் இருக்கிறார் என்பதா அல்லது உங்களை மிஞ்சி விட்டார் என்று சொல்வதா?//
அதான் சஸ்பென்ஸ்... இங்கயுமானு திட்டபோறாங்க சிலர்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ சுந்தரா - ஆமாங்க ஏழாம் பொருத்தம் தான் எப்பவும்... நன்றிங்க

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க... அஞ்சப்பர்லையே போர்ஷன் பாக்குறதா... ஆஹா... நீங்க என்னை விட பெரிய planner போல இருக்கே... ஹா ஹா ஹா... நன்றிங்க

priya.r said...

//@ priya.r - ஆஹா ப்ரியா என்ன தோழி நீங்களுமா? வெரி bad வெரி bad ... இருங்க ஊருக்கு வர்றப்ப இட்லி செஞ்சு உங்கள பழி வாங்கறேன் மொதல்ல... ஹா ஹா ஹா//

அட்சோ அட்சோ ! புவனா! நான் எப்போவும் உங்க பக்கம் தானே ! என்னை, என்னை போய் ! இப்படி இப்படி சொல்லிட்டீங்களே !
ஊருக்கு வர்றப்ப இட்லி செஞ்சு வேற என்னைய பழி வாங்க போறீங்களா! ஏன் புவனா ! ஏன் இந்த கொலை வெறி !
நீங்க சொன்னா நம்புவீங்களோ என்னவோ !
இப்போ எல்லாம் கிருஷ்ணர் கையில் உள்ள விரலில் சக்கரம் இருப்பது போல
புவனாவின் கையில் உள்ள விரலில் இட்லி இருப்பது போல நினைவு வருகிறது
இவ்வளோ உங்கள் மேல பக்தி கலந்த தோழமையுடன் இருக்கின்ற என்னை போய் !என்னை போய் !
எப்பிடி புவனா உங்களால் இப்படி சொல்ல முடிந்தது !!
பெருமாளே !நீ தான் எல்லா அப்பாவி தங்கமணிகளையும் காப்பாத்தணும் !!

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ஹா ஹா ஹா... அந்த பயம்... என் இட்லி மேல அந்த பயம் இருக்கட்டும்... ஹா ஹா ஹா

//இப்போ எல்லாம் கிருஷ்ணர் கையில் உள்ள விரலில் சக்கரம் இருப்பது போல
புவனாவின் கையில் உள்ள விரலில் இட்லி இருப்பது போல நினைவு வருகிறது //
ச்சே... சான்சே இல்ல ப்ரியா... இப்படி யோசிக்க உங்களால மட்டும் தான் முடியும்.. ஹா ஹா ஹா... சிரிச்சுட்டே இருக்கேன் இன்னும். Thanks Priya

kunthavai said...

:)))) good Bhuvana.

அப்பாவி தங்கமணி said...

@ kunthavai - Thanks Kunthavai

Prakash Prakash said...

Excellent...All the Best...!!!!???

அப்பாவி தங்கமணி said...

@ Prakash Prakash - Thank you

Post a Comment