Friday, September 24, 2010

உருகுதே மருகுதே...


குழந்தைகள வெளிய அழைச்சுட்டு போய் ரெம்ப நாள் ஆச்சு... எப்ப பாரு ஆபீஸ் வேலைன்னு இயந்தரதனமா போச்சு வாழ்க்கை...

இன்னிக்கி கண்டிப்பா வெளிய கூட்டிட்டு போகணும்னு நெனச்சுட்டே ஆபீஸ்க்கு கெளம்பிட்டு இருந்தேன். இப்பவே பசங்க கிட்ட இதை சொல்லி சந்தோசப்படுத்தணும்னு தோண

"அனும்மா கார்த்தி பையா...இங்க வாங்க"

"என்ன டாடி?" னு ரெண்டு பேரும் வந்து நிற்க

"ஈவினிங் ரெடியா இருங்க... மூவி போயிட்டு ஹோட்டல் போயிட்டு வரலாம்"

"ஹேய்..... ஜாலி... " னு பசங்க சந்தோசமா குதிச்சுட்டு போகவும் கீதா ரூம்குள்ள வந்தா... என்னோட சகதர்மிணி

"என்னங்க ரெண்டும் ஒரே குஷியா கத்திட்டு போகுது... என்ன சொன்னிங்க?"

"ம்... சாயங்காலம் சினிமா போலாம்னு சொன்னேன்"

"என்ன திடீர்னு...?"

"ஏன்.... திடீர்னு சினிமா போக கூடாதா... நோட்டீஸ் எதுனா குடுக்கணுமா இந்த வீட்டு மகாராணி கிட்ட" என்றவன் அப்படியே அவளை அருகில் இழுத்தேன்

"கிண்டலா... விடுங்க என்னை... என்ன இது காலங்காத்தால... பசங்க வந்துட போறாங்க"

"கீது... " என கெஞ்சலாய் அழைக்க

"ம்... " என அவளும் இளகினாள்

"இந்த டை கொஞ்சம் கட்டி விடேன்" என கேட்க

"இன்னும் சின்ன கொழந்தையா... டை கூட கட்டி விடணுமா?" என சலித்த போதும் சந்தோசமாய் கட்டி விட்டாள்

"கீது... "

"ம்..."

"நீ மட்டும் எப்படி பன்னண்டு வருசத்துக்கு முன்னாடி நம்ம கல்யாணத்தன்னைக்கி பாத்தா மாதிரி அப்படியே இருக்கே"

"ஹச் ... " என வேண்டுமென்றே தும்முவது போல் பாவனை செய்தாள் சிரித்தவாறே

"ஏய்... நான் ஒண்ணும் ஐஸ் வெக்கல... நெஜமா... பதினொரு வயசுல ஒரு பொண்ணும்... ஒம்பது வயசுல ஒரு பையனும் இருக்காங்கன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க"

"ம்ம்ம் .... என் வீட்டுகாரர் என்னை சந்தோசமா வெச்சுட்டு இருக்கார்... அதனால கவலை இல்லாம வயசு ஏறாம இருக்கேன்... போதுமா" என என் மோவாயை பிடித்தவாறே கொஞ்சலாய் சொல்ல

"ம்... அப்படியா... அந்த வீட்டுகாரருக்கு ஒண்ணும் சன்மானம் இல்லையா அதுக்கு" என அவளை அணைக்க

"ஐயோ... ஆபீஸ்க்கு நேரமாச்சு உங்களுக்கு... விடுங்க... டிபன் சாப்பிட வாங்க... " என விடுவித்துக்கொண்டு சென்றாள் கீதா... மறுநிமிடமே மறுபடியும் வந்தாள்

"என்ன செல்லம் மனசு கேக்கலையா... சன்மானம் குடுக்க வந்தியா... "என நான் கண்ணடித்து கேட்க

"ம்க்கும்... நெனப்பு தான் உங்களுக்கு... நான் வந்தது வேற ஒண்ணு சொல்றதுக்கு ... மாமா பிரஷர் மாத்திரை தீர போகுதுன்னு சொல்லிட்டு இருந்தார். கொஞ்சம் வாங்கிட்டு வந்துடறீங்களா?"

"டாக்டர் குடுத்த prescription எடுத்து வெய்யி கீத்து... சாயங்காலம் வெளிய போறப்ப வாங்கிடலாம்"

"சரிங்க" என்றவள் "ஏங்க... ராத்திரி தலை வலிக்குதுன்னு சொன்னீங்களே... இப்ப சரி ஆய்டுச்சா"

"உன் கை பட்டும் சரி ஆகாம போகுமா" என அவள் கையை பற்ற முயல

"மறுபடியும் ஆரம்பிச்சுடீங்களா... நான் போறேன்" என விலகினாள்

அன்பான மனைவி, அறிவான பிள்ளைகள், நல்ல வேலை, நல்லது கெட்டது எடுத்து சொல்ல அம்மா அப்பா எங்களுடனே இருக்க இதற்கு மேல் என்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு அப்படின்னு என்னை பாத்தே சில நேரம் நான் பொறாமை பட்ரதுண்டு. விசித்ரம் தான் இல்லையா இந்த தற்பொறாமை


***********************************************************

ஆபீஸ் போய் கார் நிறுத்திட்டு உள்ளே போக உடன் பணிபுரியும் பலர் வரவேற்பரையிலேயே இருந்தனர்

என்னை பார்த்ததும் ஹெட் கிளெர்க் முகுந்தன் முன்னே வந்தார் "சங்கர் சார்...விசயம் தெரியுமா... நம்ம கோபாலக்ருஷ்ணன் இறந்துட்டார் பாவம்"

"யாரு டெஸ்பாட்ச்ல இருந்தவரா?"

"ஆமாம் சார்..."

"அட பாவமே ... சின்ன வயசு தானே முகுந்தன் ... ரெண்டு நாள் முன்னாடி கூட ஏதோ கையெழுத்து வாங்கணும்னு பாக்க வந்தாரே... நல்லாதானே இருந்தார்"

"ஆமா சார்.. நேத்து தான் முடியலைன்னு சிக் லீவ் போட்டு இருக்கார்... ரெம்ப நாளா தலைவலி இருந்துட்டே இருந்துருக்கு... இவரு அதை சீரியஸா எடுத்துக்காம தானே மாத்திரை போட்டுட்டு இருந்துருக்கார்... நேத்து ரெம்ப முடியாம மயக்கம் போட்டு ஹாஸ்பிடல் கொண்டு போய் இருக்காங்க... பிரைன் டியுமராம்... கடைசி நிமிசத்துல பாத்து காப்பாத்த முடியல... "

"ச்சே... கொடும தான் போங்க..."

"பாடி சொந்த ஊருக்கு எடுத்துட்டு போய்ட்டாங்களாம் கொஞ்ச நேரம் முந்தி... மதியத்துக்கு மேல தான் தகணமாம். இங்க இருந்து மூணு மணி நேரம் ட்ராவல்னு சொல்றாங்க சார்... ஆபீஸ் ஸ்டாப் எல்லாம் கம்பெனி பஸ்லையே போயிட்டு வர ஏற்பாடு பண்ணி இருக்கார் நம்ம எம்.டி. எப்படியும் திரும்பி வர நைட் ஆய்டும்னு நினைக்கிறேன்"

"ஓ... அப்படியா... சரிங்க முகுந்தன் நான் வீட்டுல வர நேரமாகும்னு ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்"

"செய்ங்க சங்கர் சார்..."

***********************************************************

"ச்சே... இப்படி அல்பாயுசுல போய்ட்டானே... "

"என்ன செய்ய? விதி... சாகற வயசா... ரெண்டு பெண் கொழந்தைங்க பத்து வயசு ஒண்ணு... ஏழு ஒண்ணு..."

"கோபாலோட மனைவி பெருசா படிக்க கூட இல்ல போல இருக்கு... பூர்வீக சொத்தும் பெருசா இல்ல... என்ன செய்ய போறாங்களோ தெரியல. டாக்டர்ஸ் சொன்னாங்களாம் மொதலே காட்டி இருந்தா சரி பண்ணி இருக்கலாம்னு"

"இதுக்கு தான் சொல்றது... எதானாலும் நாமளே வைத்தியம் பண்ண கூடாது... "

"வாஸ்துவம் தான்... யாரு கேக்கறா?"

"அந்த பொண்ணு பாவம் இன்னும் சின்ன வயசா இருக்கு... ரெம்ப சின்னதுலையே கல்யாணம் பண்ணிடாங்க போல இருக்கு"

"ஆமாம்... பதினெட்டுலையே கல்யாணமாம்"

"ஆபீஸ்ல பணம் வருமோ?"

"பெருசா ஒண்ணும் இருக்காது போல இருக்கு... அதுக்கு இதுக்குன்னு லோன் எல்லாம் போட்டு எடுத்துட்டான் போல இருக்கு... பிரைவேட் தானே... கவர்ன்மென்ட்னாலும் பென்ஷன் ஆச்சும் வரும்... என்ன செய்யுமோ அந்த பொண்ணு. பாத்தா ரெம்ப வெவரமாவும் தெரியல"

இறுதி சடங்கிற்கு வந்திருந்த பலரின் பேச்சும் இப்படியே இருந்தது

அதை கேட்டு கொண்டிருந்த எனக்கு மனதை ஏதோ அழுத்துவது போல் இருந்தது. முகுந்தனும் அதே சொன்னார்

***********************************************************

வீடு வந்து சேரும் போது மணி பத்து. கீதா முன் வெராண்டாவில் காத்திருந்தாள்

என் சோர்ந்த முகத்தை பார்த்து எதுவும் கேட்காமல் "ஹீட்டர் போட்டுருக்கேன். மொதல்ல குளிச்சுட்டு வாங்க. தோசை ரெடி பண்றேன்" என்றவளை

"வேண்டாம் கீதா எனக்கு பசி இல்ல... நீ போய் படு... நான் குளிச்சுட்டு வந்து படுத்துக்கறேன்"

"நீங்க வெளிய சரியா சாப்பிட மாட்டீங்கன்னு தெரியும். அப்புறம் தலை வலி தான் வரும். சூடா ரெண்டே ரெண்டு தோசை. நானும் சாப்பிடாம வெயிட் பண்றேன்... ப்ளீஸ்" என்றவளை கோபமாய் பார்த்தேன்

"எத்தனை வாட்டி சொல்றது நேரத்துக்கு சாப்பிடுன்னு... மணி பத்து ஆச்சு" என கடிந்து கொண்டதும்

"உங்களுக்கு மட்டும் இன்னும் ஆறு மணியா" என சிரித்து கொண்டே கேட்க அதற்கு மேல் மறுத்து பேச முடியவில்லை என்னால்

சூடாக தோசை சுவையாக சட்னி இருந்த போதும் ஏனோ தொண்டையில் இறங்கவில்லை

"என்னங்க ஆச்சு... எப்படி இறந்தார்? ஆக்சிடண்ட்ஆ?"

"இல்ல... ஒடம்புக்கு ஏதோ.... " தெளிவாக சொல்ல ஏதோ தடுத்தது

"அம்மா அப்பா பசங்க எல்லாம் தூங்கியாச்சா" என்று வேண்டுமென்றே பேச்சை மாற்றினேன்

"ம்" என்றாள்

எனது முகத்தை பார்த்து கீதாவும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை

நான் எழுந்து கொள்ள போக "ரெண்டு தானே வெச்சுடீங்க. இன்னொரு தோசை" என்றவளிடம்

"இல்ல போதும்... " என எழுந்து கொண்டேன்

நான் எதுவும் பேசாமல் படுத்து கொண்டு இருக்க "என்னங்க தலை வலிக்குதா?"

"இல்ல கீதா... ஒண்ணுமில்ல... நீ தூங்கு" என அவள் கையை விலக்கினேன்

"உங்களுக்கு அவர் ரெம்ப நெருக்கமா?"

"யாரு?" என்றேன் ஏதோ சிந்தனையில்

"அதான்... இன்னிக்கி போயிட்டு வந்தீங்களே? அவர்..."

"இல்ல... நெருக்கம்னு இல்ல... தெரியும்...அவ்ளோ தான்" என நான் தனிச்சையாய் என் நெற்றி பொட்டில் அழுத்தி கொள்ள

"தைலம் போட்டு விடவா... இப்பவெல்லாம் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருது... டாக்டர் கிட்ட காட்டணுங்க" என்றாள் நேரம் காலம் புரியாமல்

"கொஞ்சம் தொணதொணக்காம சும்மா இருக்கியா?" என சற்று கோபமாய் கூற முகம் சுருங்க முதுகு காட்டி படுத்தாள்

எனக்கும் இப்போது அந்த அமைதி தான் தேவையாய் இருந்தது

எனக்குள் பல எண்ணங்கள் சுழன்று சுழன்று கொன்று கொண்டு இருந்தது

கீதா கூறும் முன்பே இன்று மதியமே எனது தலை வலி பற்றி டாக்டரிடம் காட்ட வேண்டும் என முடிவு செய்து இருந்தேன்

கோபாலகிருஷ்ணன் போல் தனக்கும் ஒரு வேளை விபரீதமாய் ஏதேனும் இருந்தால் என்ற சந்தேகமே எனது இந்த அமைதியின்மைக்கு காரணம். கீதாவிடம் காட்டிய கோபம் கூட அதன் வெளிப்பாடே... அவளிடம் இதை எல்லாம் சொல்லி திகிலூட்ட மனம் வரவில்லை

வெகு நேரம் தூங்காமல் விடியும் நேரத்தில் சற்று கண்ணயர்ந்தேன்

***********************************************************

பிள்ளைகளின் சத்தம் கேட்டு கண் விழித்தேன்

இன்னும் ஸ்கூல்க்கு போகலையா என சுவர் கடிகாரத்தை பார்த்தவன் அதன் கீழ் இருந்த நாட்காட்டி "ஞாயிறு" என காட்ட "ஓ... விடுமுறை அல்லவா" என்று எனக்கு நானே கூறி கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன்

பல் விளக்க வாஷ்பேசின் முன் நிற்க எனது சிவந்த கண்கள் சரியாக உறங்காததை கூறியது. அதன் தொடர்ச்சியாய் நேற்றைய நிகழ்வுகள் மீண்டும் சோர்வடைய செய்தது

முன் வாசலில் பிள்ளைகள் விளையாடி கொண்டு இருக்க அம்மாவும் அப்பாவும் போர்டிகோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்

என்னை பார்த்ததும் அம்மா "வா சங்கர்... ராத்திரி நேரம் கழிச்சு தான் வந்தியா?"

"ஆமாம்மா... " என்றேன் சோர்வை

"ரெம்ப சோர்வா இருக்கியேப்பா... சரியா தூங்கலையா?"

"இல்லமா... கொஞ்சம் டையார்ட்... அதான்"

"சாவித்திரி அவனுக்கு காபி எடுத்துட்டு வாயேன்... கீதா ஏதோ வேலையா இருக்கா போல" என அப்பா அம்மாவிடம் கூறி முடிக்கும் முன் கீதா காபியுடன் வெளியே வந்தாள்

காபியை கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றாள். அவள் முகத்தில் நேற்று நான் காட்டிய கோபத்தின் வலி இன்னும் தெரிந்தது

"அனும்மா...கார்த்தி கண்ணா... " என பிள்ளைகளை அழைக்க ஒரு நிமிடம் விளையாட்டை நிறுத்தி என்னை திரும்பி பார்த்தவர்கள் ஒன்றும் பேசாமல் மீண்டும் விளையாட்டை தொடர்ந்தனர்

"ஏய்... அனு" என நான் மீண்டும் அழைக்க

"நேத்து சினிமா கூட்டிட்டு போறேன்னுட்டு போகலைனு ரெண்டத்துக்கும் கோவம் உன் மேல... ஒரே ரகளை நேத்து அவங்க அம்மாகிட்ட" என அப்பா கூற... ச்சே... இப்படி சுத்தமாய் மறந்து போனேனே என எனக்கு என் மீதே கோபமானது

ஒரு வழியாய் சிறிது நேரம் பிள்ளைகளுடன் விளையாடி சமரசம் செய்து இன்று அழைத்து போவதாக சொல்ல சமாதானம் ஆனார்கள்

காபி டம்ளர் வைக்க உள்ளே போனவன் கீதா அருகில் சென்று "கோபமா இன்னும்?" என கேட்க

"இல்ல" என்றாள் முகம் மாறாமல்

"சாரிடா... கொஞ்சம் டையார்டா இருந்தது... அதான்..." என அவள் கைகளை பற்றிக்கொள்ள என் முகத்தை பார்த்தவள் மனம் இளக

"ம்... பரவால்ல... ஆனாலும் இப்பவெல்லாம் உங்களுக்கு மூக்குக்கு மேல கோவம் வருது ஒண்ணும் இல்லாததுக்கு கூட" என கூறியவளின் முகத்தில் புன்னகையை காண நிம்மதி ஆனேன்

ஒரு சின்ன கோபத்திற்கே முகம் வாடுபவள் எனக்கு ஏதேனும் என்றால் என்ன செய்வாள்... எப்படி தாங்குவாள்... பிள்ளைகளை எப்படி வளர்ப்பாள்... அப்பா அம்மாவின் நிலைமை என்ன... இதுவே சிந்தனையாய் ஓடியது மனதில்

***********************************************************

பிள்ளைகளை அழைத்து கொண்டு சினிமாவுக்கு சென்றோம்... அம்மா அப்பா சொந்த ஊருக்கு அல்லது ஏதேனும் கோவிலுக்கு தவிர எங்கும் வெளியே வர விருப்பபடுவதில்லை

ஆரம்பத்தில் வற்புறுத்திய பிள்ளைகளும் இப்போது தொந்தரவு செய்வதில்லை

விடுமுறை நாள் என்பதால் தியேட்டரில் நல்ல கூட்டம். பிள்ளைகளின் சந்தோசத்தை காண மிகவும் மகிழ்வாய் இருந்தது

கீதாவிற்கு சினிமா பார்ப்பதில் பெரிய விருப்பம் எப்போதும் இருந்ததில்லை. அவளுக்கு நானும் பிள்ளைகளும் தான் உலகம்

சினிமா தொடங்கியதும் சிறிது நேரத்திற்கு மேல் என் மனம் அதில் லயிக்கவில்லை. மெல்லிய வெளிச்சத்தில் கீதாவின் கவலையற்ற முகத்தை பார்த்ததும் ஏனோ என்னையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்த்தது

"கீத்து..." என அழைக்க

"ம்... " என்றாள் திரையில் இருந்து கண்ணை எடுக்காமலே

"கீத்து... " என மறுபடியும் அழைக்க

"என்னப்பா... சினிமா பாக்கற மூட் இல்லையா இன்னிக்கி?" என ஆதரவாய் என் கைகளை பற்றினாள்

எனக்கும் அது வேண்டும் போல் இருந்தது. சில நொடிகள் எதுவும் பேசாமல் அவளை பார்த்து கொண்டே இருந்தேன்

"வீட்டுக்கு போய் அத்தைகிட்ட சொல்லி எனக்கு சுத்தி போட சொல்லணும்... இப்படி கண்ணெடுக்காம பாத்தா பயமா இருக்கு " என வேடிக்கையாய் பயந்தவள் போல் என்னை சீண்ட நான் ஒன்றும் பேசாமல் அவள் கைகளை இன்னும் இறுக்கமாய் கோர்த்து கொண்டேன்

அவள் நிம்மதியாய் என் தோளில் சாய்ந்து கொண்டாள்

"கீத்து... நீ ஏன் மேல படிக்க கூடாது?" என நான் கேட்க

"என்ன விளையாடறீங்களா?"

"ஏய்... நீயே ஒரு வாட்டி கேட்டியே? டீச்சர் ட்ரைனிங் படிக்கணும்னு ஆசையா இருக்குனு"

"அது... அப்போ அனு கூட பிறக்கறதுக்கு முந்தி... வீட்டுல போர் அடிக்குதுன்னு கேட்டேன். ஓ... கேட்டதெல்லாம் பன்னெண்டு வருஷம் கழிச்சு தான் கெடைக்குமா?" என அவள் சிரித்து கொண்டே கிண்டல் செய்தாள் என் மன போராட்டம் புரியாமல்

"இல்லடா... இப்ப அனு கார்த்தி பெருசாய்ட்டாங்கல்ல... இருக்கற நேரத்த உபயோகமா.... " என நான் முடிக்கும் முன்

"வேண்டாம்பா... ரெண்டு பேரும் வேலைக்கி போயிட்டா நிச்சியம் பிள்ளைகள இப்ப பாத்துகற மாதிரி முடியாது... அத்தை மாமாவுக்கும் இப்ப அதிக கவனம் வேணும்... எனக்கு இப்படி இருக்கறது பிடிச்சுருக்கு, சந்தோசமா இருக்கேன்... வேற பேசுங்க" என அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள்

***********************************************************

மறுநாள் அலுவலகம் சென்று சில முக்கிய வேலைகளை முடித்ததும் சற்று ஓய்வு கிடைக்க மனம் மீண்டும் அதே பிரச்னையில் வந்து நின்றது

இதை பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள முடியுமா என ஆர்வம் தலைதூக்க கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன்

"பிரைன் டயுமர் சிம்டம்ஸ்" என கூகுளில் டைப் செய்ய அது பல விவரகளை திரையில் துப்பியது

எதுவும் மனதிற்கு சந்தோசத்தை தரவில்லை

சிம்டம்ஸ் என கொடுக்கபட்டு இருந்ததை ஒரு பட்டியல் போல ஒரு பேப்பரில் எழுதினேன். எல்லாமும் எனக்கு இருப்பது போலவே தோன்றியது

அடிக்கடி தலைவலி - இருக்கே

அடிக்கடி கோவம் மூட் swings - நேத்து கீதா கூட சொன்னாளே அடிக்கடி கோவம் வருதுன்னு

கண் பார்வையில் தடுமாற்றம் - ஆமா... பவர் ஏதேனும் ப்ராப்ளம் இருக்குமோனு ஐ டாக்டர்கிட்ட போனேனே போன மாசம்

கை கால் வலி - இருக்கு... இப்பவெல்லாம் ரெம்ப சோர்வா இருக்கே

மறதி - ஆமா... சனிக்கிழமை கூட பிள்ளைகள சினிமா கூட்டிட்டு போறதா சொன்னதை மறந்தேனே..

ஐயோ...எனக்கு தலை சுத்துவது போல் இருக்கு இப்போ

உடனே என் நண்பன் ஒருவனிடன் வேறு ஒருவருக்கு வேண்டும் என கேட்டு நியூராலஜிஸ்ட் ஒருவரின் முகவரி வாங்கினேன்

அன்று மாலையே டாக்டரை சந்திக்க அனுமதி கிடைத்தது. ஒரு மணி நேரம் ஆபீசில் பர்மிசன் போட்டு விட்டு கிளம்பினேன்

டாக்டர் கிருஷ்ணகுமார், நியூராலஜிஸ்ட் என்ற பெயர் பலகை வரவேற்றது

"உக்காருங்க மிஸ்டர் சங்கர்...என்ன ப்ராப்ளம்?" என டாக்டர் நேரே விசியத்துக்கு போக

"அடிக்கடி தலைவலி வருது டாக்டர்... நான் ஐ டாக்டர்கிட்ட பாத்தேன்... பவர் எதுவும் ப்ராப்ளம் இல்லைன்னு சொன்னார்" என அந்த ரிப்போர்ட்களை காட்டினேன்

"ம்... அடிக்கடினா...தினமும் இருக்கா... ஒத்தை தலைவலி மாதிரியா?"

"தினமும் இல்லை டாக்டர் வாரத்துல ரெண்டு மூணு தரம்... சில சமயம் ஒத்தை தலை வலி மாதிரி... சில சமயம் ரெண்டு பக்கமும்"

"ம்... மெடிசன் எதாச்சும் எடுக்கறீங்களா அதுக்கு?"

"சும்மா...தைலம்... ரெம்ப முடியாதப்ப சாரிடான் போடுவேன்..."

"ஐ சி... எவ்ளோ நாளா இப்படி இருக்கு?"

"கிட்டத்தட்ட ஆறு மாசமா?"

"ஒகே... ரெம்ப நேரம் கம்ப்யூட்டர்ல இருக்கற மாதிரி வேலையா?"

"இல்ல சார்... நான் ப்ரொடக்சன் மேனேஜர். பாப்ரிகேசன் இண்டஸ்ட்ரி. அதிகபட்சம் ஒன் ஆர் டூ அவர்ஸ் தான் கம்ப்யூட்டர்ல இருப்பேன் ஒரு நாளைக்கி"

"தட்ஸ் நாட் பாட்... ஞாபக மறதி இல்ல அடிக்கடி மயக்கம் மாதிரி இருக்கா"

"ம்... சில சமயம்... கோவம் எல்லாம் கூட அதிகமா இப்போ... என்னமோ அடிக்கடி சோர்வா... "என நான் கூறிக்கொண்டே போக

"ஒகே ஒகே... இப்ப சில டெஸ்ட்ஸ் மட்டும் இங்க பண்ணலாம்" என அவரிடம் இருந்த சில மெசின்களை கொண்டு ஏதோ பரிசோதனைகள் எல்லாம் செய்தார்

"என்ன ப்ராப்ளம் டாக்டர்?" என நான் பொறுமையின்றி கேட்க

"ம்... மேலோட்டமா எதுவும் சொல்ல முடியல... எதுக்கும் ஒரு CT ஸ்கேன் எடுத்துடுங்க. ஒரு வாரம் கழிச்சு வந்து என்னை பாருங்க" என்றார்

அங்கேயே ஸ்கேன் சென்ட்டர் இருக்க ஸ்கேன் எடுத்துவிட்டு கிளம்பினேன்

ஒண்ணும் பிரச்சனை இல்லையென்றால் எதற்கு CT எடுக்க சொல்வார். ஏதேனும் இருக்குமோ... நான் நினைத்தது போல் பிரைன் டயுமர் தானோ... கடவுளே... என்ன செய்வேன்?

நான் இன்டர்நெட்ல் பார்த்தது போல் எல்லா கேள்வியும் டாக்டர் கூட கேட்டாரே... கீத்து என்ன செய்ய போற நீ?

ஏதேதோ யோசனையில் இருக்க என் செல்பேசி அலறியது. வீட்டில் இருந்து தான் போன்

இப்போது பேசினால் அழுதுவிடுவேன் போல் மனநிலையில் இருந்ததால் பேசியை அணைத்து வைத்தேன்

வெகு நேரம் பூங்காவில் அமர்ந்து இருந்து விட்டு இருட்டிய பின் வீட்டுக்கு கிளம்பினேன்

***********************************************************

போர்டிகோவில் அம்மா அப்பா கீதா அனு கார்த்தி எல்லாரும் கவலையுடன் அமர்ந்து இருந்தனர். இப்போதே கவலைப்பட கற்று கொள்ளட்டும் என தோன்றியது எனக்கு

என்னை பார்த்ததும் "ஐ அப்பா வந்தாச்சு" என ஓடி வந்து என்னை கட்டி கொண்டாள் அனு. கண்களில் துளிர்க்க முயன்ற நீரை கட்டுப்படுத்தினேன்

"என்னப்பா என்ன ஆச்சு? நேரமாகும்னா போன் பண்ணிடுவியே?" என அம்மா பதட்டமாய் கேட்டாள்

"இல்லம்மா... கொஞ்சம் வேலை... பிஸில போன் பண்ண மறந்துட்டேன்" என்று சமாளித்தேன்

"கீதா போன் பண்ணி கூட எடுக்கலயாமே"

"ஆமாம்மா... போன் ஆபீஸ்ல வெச்சுட்டேன்... பாக்டரிகுள்ள இருந்தேன்... பாக்கல" என சரளமாய் பொய் சொன்னேன்

"சரிப்பா... போய் முகம் கழுவு... சாப்பிடலாம்... பிள்ளைகளும் சாப்டாம காத்துட்டு இருக்கு" என்றார் அப்பா

கீதா எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்

அனுவும் கார்த்தியும் பள்ளி கதைகளை கூறி கொண்டே இருக்க உண்டு முடித்தோம்

சற்று நேரத்தில் பிள்ளைகளை படுக்க அழைத்து சென்றனர் அப்பாவும் அம்மாவும்

நானும் அறையில் சென்று படுத்து கொண்டேன்

சற்று நேரம் கழித்து கீதாவின் காலடி ஓசை கேட்டும் நான் தூங்குவது போல் பாவனையுடன் கண் மூடி படுத்திருந்தேன். இன்று அவளிடம் அதிகம் பேசினால் என்னையும் அறியாமல் ஏதேனும் உளறி விடுவேனோ என பயமாய் இருந்தது

வந்தவள் என் மார்பில் முகம் வைத்து படுத்தாள். அதற்கு மேல் நடிக்க இயலாமல் ஆதரவாய் அவளை அணைத்து கொண்டேன்

சற்று நேரத்தில் அவள் விசும்பும் ஒலி கேட்க "ஏய்... என்னம்மா... என்ன ஆச்சு?"என நான் பதற

"இனிமே இப்படி போன் பண்ணாம இருக்காதீங்கப்பா... நான் போன் பண்ணியும் எடுக்கலைனதும்..." என பேச முடியாமல் விசும்பினாள்

"ஏய்... என்னடா இது? வேலைல முன்ன பின்ன நேரமாகறது சகஜம் தானே"

"ஆனா நீங்க எப்பவும் போன் பண்ணி சொல்லிடுவீங்க...ரெம்ப பயந்துட்டேன்பா" என அழுதாள்

எனக்கும் பாரம் கூடிப்போனது போல் தோன்றியது... ஒரு நாள் சொல்லாமல் நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததற்கு இப்படி துடிப்பவள் என்ன செய்வாளோ "ஐயோ" என மனம் அலறியது

மனதை திடப்படுத்தி கொண்டு "என்ன கீத்துமா இது? இவ்ளோ தைரியம் இல்லாம இருந்தா எப்படி?"

"எப்படிங்க தைரியமா இருக்க முடியும்? உங்களுக்கு என்ன ஆச்சோனு... உங்கள கண்ணுல பாக்கற வரை... உயிரே இல்லப்பா"

"கீதா... அப்படி ஒருவேள எனக்கு எதாச்சும் ஆய்ட்டா என்ன செய்வ?" என என்னையும் அறியாமல் வார்த்தைகளை விட்டேன்

ஒரு கணம் கூட யோசிக்காமல் "நானும் உங்ககிட்டயே வந்துடுவேன்" என அவள் கூற என் இயலாமையால் கோபம் வந்தது

அவளை உதறி நகர்த்திவிட்டு எழுந்து அமர்ந்தேன்

"என்ன ஆச்சு?" என கேட்டவளிடம்

"உனக்கென்ன பைத்தியமா?" என்றேன் கோபமாய்

"நான் என்ன செஞ்சேன்?"

"பின்ன நானும் உங்ககிட்டயே வந்துடுவேன்னு சொல்ற"

"அப்புறம்... நீங்க இல்லாம எனக்கு என்ன இருக்கு?"

"ஏன் அனு கார்த்தி அம்மா அப்பா எல்லாரும்... " என நான் முடிக்கும் முன்

"ப்ளீஸ்... இப்படி பேசாதீங்க... ப்ளீஸ்...கெஞ்சி கேக்கறேன் " என என் மார்பில் சாய்ந்து அழுதாள். அப்படியே அழுது ஓய்ந்து உறங்கினாள்

எனக்கு தான் இனி தூக்கமே கிடையாதே, கடைசி உறக்கம் வரை. கடவுளே, நான் என்ன செய்வேன்... கீதா கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன் என கத்தவேண்டும் போல் இருந்தது

வெறும் பேச்சையே தாங்காதவள் நிஜம் சுடும் போது என்ன செய்வாள் என மனம் பதறியது

***********************************************************

சிக்கனமாய் அழகாய் குடும்பம் நடத்துவதில் கீதாவிற்கு நிகர் அவளே. ஆனால் வரவு என்ன, சேமிப்பு என்ன என இது வரை எதுவும் கேட்டதில்லை என்னிடம்

அது வேறு என் மனதை உறுத்தியது. கணக்கு போட்டு பார்த்தேன்

வீடு சொந்த வீடு தான் வாடகை போன்ற பிரச்சனைகள் இல்லை

வேறு கடன்கள் கூட எதுவும் இல்லை. ஆனால் வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதி பிள்ளைகளின் பள்ளி கட்டணம் / அன்றாட செலவுகள் போக பெரிதாக சேமிப்பு எதுவும் இல்லை

இன்சூரன்ஸ் பணம் இரண்டு லட்சம் வந்தாலும் எத்தனை நாளைக்கி. பிள்ளைகளின் எதிர்கால செலவுகள். ஐயோ, கீதா ஏன் நிதர்சனத்தை புரிந்து கொள்ள மறுக்கிறாள் என அவள் மேல் கோபம் வந்தது

***********************************************************

மறுநாள் இரவு அவளிடம் இன்சூரன்ஸ் பற்றியும் பேங்க் பாஸ் புக் போன்றவற்றையும் காட்டி விளக்கினேன்

"இப்ப எதுக்கு இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க?"என கலக்கமாய் கேட்டவளிடம்

"இல்ல கீத்து... எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கணும்..."

"இவ்வளவு நாள் இல்லாம இப்ப ஏன்..." என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போனாள்

"கீதா ப்ளீஸ்... எல்லாத்தையும் எமோசனலா மட்டும் பாக்காம கொஞ்சம் பிராக்டிகலா யோசி" என நான் சற்று கடுமையாய் கூற நான் சற்றும் எதிர்பாராதவிதமாய் சட்டென என் சட்டை காலரை பற்றினாள் கீதா

"உண்மைய சொல்லுங்க... என்கிட்ட எதையோ மறைக்கறீங்க... உண்மைய சொல்லுங்க... " அவள் முகத்தில் அப்படி ஒரு தீவிரத்தை அதற்கு முன் நான் கண்டதில்லை

"இல்ல கீதா... நான்... " என நான் சாமாளிக்க

"இல்ல... என்னமோ இருக்கு... என் தலைல கை வெச்சு சொல்லுங்க...." என என் கையை எடுத்து தன் தலையில் வைத்தாள்

"கீதா என்ன பைத்தியகாரத்தனம் இது... விடு" என் நான் விலக முயல

"இப்ப நீங்க சொல்ல போறீங்களா இல்லையா?" என என் கையை இன்னும் இறுக பற்றினாள்

"கீத்து ப்ளீஸ்... விடு..."

"சொல்லலேனா நான் செத்துருவேன்" எனவும்

"இல்லைனாலும் நான் கொஞ்ச நாளுல செத்துருவேண்டி. என்ன செய்ய முடியும் உன்னால? சத்தியவானுக்கு போராடின சாவித்திரி மாதிரி போராட போறியா?" என்னால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகள் சிதறின

அடுத்த கணம் உணர்வற்று கீழே சரிந்தாள் கீதா

"கீதா.. கீதா... " என நான் கத்த அவளிடம் அசைவில்லை

கதவு தட்டும் ஓசை கேட்டது "என்ன சங்கர்? ஏன் சத்தம் போடற? என்னாப்பா ஆச்சு" அம்மாவின் பதட்டமான குரல் கேட்டது

"அம்மா... கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க" எனவும் அம்மா தண்ணி தம்ளருடன் உள்ளே வர அப்பா பின்னோடு வந்தார்

முகத்தில் நீர் பட உணர்வுக்கு வந்த கீதா கண்ணை திறந்து பார்த்தவள் அப்பா அம்மா இருப்பதை பார்த்து மௌனமானாள்

"என்னப்பா ஆச்சு? என்ன கீதா...என்ன செய்யுது?" என அம்மா பதற கீதா பேச திராணியின்றி விழிக்க

"என்னனு தெரியலம்மா... பேசிட்டு இருந்தா திடீர்னு கண்ணை இருட்டிட்டு வருதுன்னு..." என நான் சமாளித்தேன்

"இதுக்கு தான் இந்த விரதம் எல்லாம் வேண்டாம்னு சொல்றது... இப்படி ஒடம்ப கெடுத்துக்கற... " என அம்மா கீதாவிடம் கடிந்து கொண்டாள்

"சரி சாவித்திரி... காலைல பேசிக்கலாம்... ரெஸ்ட் எடுக்கட்டும்" என அப்பா அம்மாவை அழைத்து கொண்டு சென்றார்

அவர்கள் சென்றதும் நான் கதவை சாத்தினேன்

"கீத்து..." எங்கோ வெறித்த பார்வை

"கீத்து ப்ளீஸ்... என்னை பாரு...." என அவள் கன்னத்தில் தட்ட விழி விரித்து என்னை பார்த்தவள் என் மார்பில் முகம் புதைத்து அழுதாள்

"ப்ளீஸ் அழாத... சொன்னா கேளு" சற்று நேரம் அழுது ஓய்ந்தவள்

"ப்ளீஸ்பா... இதெல்லாம் சும்மா... சும்மா சொன்னேன்னு சொல்லுங்கப்பா"

"கீதா... இன்னும் எதுவும் என்னால நிச்சியமா சொல்ல முடியலடா"

"என்னப்பா சொல்றீங்க... எனக்கு ஒண்ணும் புரியல"

இனியும் மறைப்பதில் பயனில்லை என தோன்ற நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் கூறினேன்

அதன் பின் சற்று சமாதானம் ஆனவள் "இல்ல... நிச்சியம் அப்படி எதுவும் இருக்காது... " என தானே டாக்டர் போல் கூறினாள்

"என்னோட பிரார்த்தனையும் அதுதாம்மா"

"எப்ப மறுபடியும் டாக்டர்கிட்ட போகணும்?"

"அடுத்த திங்கள்"

"நானும் வர்றேன்"

"இல்லடா...நான்..."

"ப்ளீஸ்... நானும் வரேன்... " என்றாள் தீர்மானமாய்

***********************************************************

என்னிடம் "எதுவும் இருக்காது" என தைரியம் சொல்லும் கீதா நான் உறங்கியதாய் நினைத்து இரவெல்லாம் அழுவதும் சமாதானம் செய்ய வழி அறியாமல் நான் மௌனமாய் இருப்பதுமாய் அடுத்த ஒரு வாரமும் என் வாழ்வின் மிக நீண்ட ஒரு வாரம் ஆனது

அன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அம்மா அப்பாவிடம் ஆபிஸ் நண்பரின் வீட்டு விசேஷம் என பொய் உரைத்துவிட்டு இருவரும் டாக்டரை பார்க்க சென்றோம்

"வாங்க... ப்ளீஸ் சிட்...இவங்க உங்க மிசஸா?" என கீதாவை பார்த்து டாக்டர் கேட்க

"எஸ் டாக்டர்" என்றேன் நான்

"ஒகே"

"டாக்டர் ஸ்கேன் ரிசல்ட்ஸ்...? " என் குரலில் இருந்த நடுக்கம் அவருக்கு என் நிலையை உணர்த்தி இருக்க வேண்டும்

"நத்திங் டு வொர்ரி... " என டாக்டர் கூற மகிழ்ச்சியில் என் கண்களில் நீர் வழிந்தது... கீதா கட்டுப்படுத்த இயலாமல் அழுதாள்

"என்னாச்சு... ஏன் இப்ப ரெண்டு பேரும் அழறீங்க?"

"இல்ல டாக்டர்... இந்த சிம்டம்ஸ் எல்லாம் பாத்து பிரைன் டயுமரோனு... " என நான் தயங்க

"ஓ காட்... உங்க மனைவியையும் சேத்து பயப்படுத்திடீங்களா?" என டாக்டர் சிரித்து கொண்டே கேட்க

"இல்ல டாக்டர் இன்டர்நெட்ல கூட அப்படி தான்..."

"இன்னிக்கி படிச்சவங்க நெறைய பேரு பண்ற தப்பை தான் நீங்களும் செஞ்சு இருக்கீங்க மிஸ்டர் சங்கர். இன்டர்நெட் இஸ் அ பெஸ்ட் மீடியம் பார் இன்பர்மேசன் , ஐ அக்ரீ... ஆனா அது டாக்டர் இல்ல... "

"சாரி டாக்டர்..."

"இட்ஸ் ஆல்ரைட்... நீங்க பரவால்ல இன்டர்நெட்ல சிம்டம்ஸ் மட்டும் பாத்துட்டு என்கிட்ட வந்தீங்க... நெறைய பேரு அதுல போட்டு இருக்கற ட்ரீட்மென்ட் மெத்தட்ஸ் எல்லாம் ட்ரை பண்றாங்க... எங்களுக்கு வேற சஜசன் சொல்றாங்க" என டாக்டர் சிரித்தார்

"அது ரிலையபிள் இல்லையா டாக்டர்?" என நான் இன்னும் சந்தேகமாய் கேட்க

"மிஸ்டர் சங்கர்... இன்டர்நெட்ல யாரு வேணும்னாலும் எது வேணும்னாலும் போஸ்ட் பண்ணலாம்... அதுல நெறைய நல்ல விசியங்களும் ரெம்ப அரிய தகவல்களும் இருக்கு... ஆனா முழுசா தெரியாம நோய்களை பத்தி அவங்க நெனைக்கறதை எழுதரவங்களும் இருக்காங்க... நல்லதை மட்டும் எடுத்துட்டு வேண்டாததை விட்டுடணும்"

"தேங்க்ஸ் டாக்டர்... ஆனா எனக்கு ஏன் அடிக்கடி தலைவலி?"

"ஐ எம் கமிங் டு தட்... அது ஒரு சின்ன சைனஸ் இன்பெக்சன்... மெடிசின்ஸ் எழுதி தர்றேன் ஒன் மன்த்க்கு ... அதுலயே சரி ஆய்டணும்... இல்லேனா அப்புறம் வாங்க... ஒகே...ஆல் கிளியர்" என டாக்டர் சிரித்து கொண்டே கேட்க

"தேங்க்ஸ் டாக்டர்... தேங்க்ஸ் அ லாட்" என நான் எழுந்தேன்

வெளியே வந்ததும் பொது இடம் என்று கூட பாராமல் கீதாவை அணைத்து கொண்டேன்

அவளும் அசையாமல் நின்றாள். வழியில் சென்ற ஓரிருவர் எங்களை வித்தியாசமாய் பார்க்க நாங்கள் கவலையின்றி நின்றிருந்தோம்

"வா கீதா... எங்காச்சும் கொஞ்ச தூரம் டிரைவ் போலாம்" என சிறு பிள்ளை போல் அவள் கைகளை பற்றி கொண்டு ஓடினேன் காரை நோக்கி

காரில் சென்று அமர்ந்ததும் "சொல்லு கீத்து எங்க போலாம்..?"

"ம்... மொதல்ல கோவில் போலாம்"

"ஏய்..." என நான் முறைக்க

"ப்ளீஸ்பா... போன உயிர் திரும்பி கெடச்ச மாதிரி இருக்கு... இன்னும் எவ்ளோ வேண்டுதல் விரதம் எல்லாம் இருக்கு தெரியுமா" என மகிழ்வுடன் கீதா கூற நான் அவளை அணைத்து கொண்டேன்

என்னை பொறுத்த வரை இது எனக்கு மறுஜென்மம் மனதளவில்... மனதிற்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன்...

இனி இயந்திரம் போல் வாழாமல் வாழ்வை அனுபவித்து வாழணும் என. அதில் முதல் தீர்மானம் இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் ஐந்து மணிக்கு மேல் ஆபிசில் இருக்க போவதில்லை... ஞாயிறு முழுவதும் குடும்பத்துடன் மட்டும் என்பதே

வாழ்வின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்த கடவுள் ஆடிய திருவிளையாடலாகவே எனக்கு இது தோன்றியது....


....

75 பேரு சொல்லி இருக்காக:

Gayathri said...

aahaa enakkum padapadanu aaypochu..rombha edhaarthamaa irukku akka super

Guna said...

Toooooo Good.. Very practical

ராமலக்ஷ்மி said...

//நெறைய பேரு அதுல போட்டு இருக்கற ட்ரீட்மென்ட் மெத்தட்ஸ் எல்லாம் ட்ரை பண்றாங்க... எங்களுக்கு வேற சஜசன் சொல்றாங்க" என டாக்டர் சிரித்தார்//

இந்த நெட் படுத்தும் பாடு இருக்கிறதே. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கதை புவனா!

Anonymous said...

Excellent narration about the feeling of 40+ bread winner of the family. It is not an imaginary story, really I saw some friends around me mixed their transition symptoms of age with some other grave illness.

அண்ணன்.

நசரேயன் said...

நல்லா இருக்கு

சௌந்தர் said...

ரொம்ப நல்ல கதை நல்ல விழிப்புணர்வு

முனியாண்டி said...

It's very good writing and eye opener.

தெய்வசுகந்தி said...

super!!!!!!

priya.r said...

superppa !

Thanks for the nice story bhuvana

r.v.saravanan said...

நல்ல விழிப்புணர்வு கதை

Mrs.Menagasathia said...

wowww very nice story!!

LK said...

புவனா, செம உயிரோட்டம் கதையில் கலக்கிட்ட .. வாழ்த்துக்கள்

அநன்யா மஹாதேவன் said...

நான் சொல்லித்தான் இந்த கதையை நீ எழுதினேன்னு வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்.. நானும் யார் கிட்டேயும் சொல்லலை.. சிஷ்யைக்கு புகழ் கிடைச்சா குருவுக்கு பெருமை தானே? ஹீஹீ.. யாருய்யா அது என் ஜிமெயிலுக்கு கல்லெல்லாம் அனுப்பற்து? ரெம்ம்ம்ப மோஸம்!

மோகன்ஜி said...

ஒரு அன்பு நிறைந்த தாம்பத்தியத்தின் ரசமான நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறீர்கள்! இன்டர்நெட்டைக் குடைந்து கொண்டு எல்லா சுகவீனமும் தமக்கிருப்பது போல் பாவனை செய்தபடி கை தேர்ந்த டாக்டர்களையே குழப்பும் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி! இன்னும் எழுதுங்கள்

drbalas said...

கதை போல இல்லை. நான் அன்றாடம் பார்க்கும் நிகழ்வாகவே இருந்தது. வாழ்த்துக்கள்

என்னது நானு யாரா? said...

அப்பாவி அக்கா! சாவு என்பது எப்போதும் தூர விலகியே இருக்க வேண்டிய ஒன்று என்றும், அது நம்மைத் தொடவேக் கூடாது என்பதுப் போன்றும் ஏன் கதையை அமைத்தீர்கள்?

சாவும் வாழ்வோடு சேர்ந்தது தான் என்கின்ற நிதர்சன உண்மை, நமக்கு எல்லோருக்குமே தெரிந்தது தானே?

வாழ்வையும், சாவையும் பிரிக்கவே முடியாது. ஒரு விதையின் சாவுத் தான் ஒரு செடியின் ஜனனம்; ஒரு மலரின் சாவு ஒரு விதையின் பிறப்பு; ஒரு மரத்தின் சாவு தான் கன்றின் பிறப்பும்; வள்ர்ப்பும்.

சாவு என்பது துயரம் நிறைந்த விஷயம் அல்ல.

இயற்கை, எப்போதும், சாவின் மூலம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. கீதாவின் பாத்திரம், பக்குவபட்டவளாக இன்றைய காலத்தைப் புரிந்துக்கொண்ட மங்கையாக படைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

எல்லோருமே சாவிற்குப் பயப்படுவதைப் பார்த்தால் எனக்கு அச்சமாக இருக்கிறது. அது நம்முடைய வீட்டு வாசலையும் எட்டிப்பார்க்கத் தான் போகிறது. அது எந்த தருணத்தில், எந்த ரூபத்தில் என்று யாருக்கும் தெரியாது.

அதனால் வாழ்வினுடைய நெருங்கிய சொந்தம் தான் சாவு என்று அறிந்துக் கொண்டு எதுவரினும் கலங்க மாட்டேன் என்று வாழ்வை நடத்துவது தானே சரியாக இருக்கும். அதுவும் இந்த காலத்தில்!

அப்படி யாராகிலும் பக்குவபட்ட மனநிலையில் இருப்பதாக கதையைச் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

வேங்கை said...

அட நல்லா இருக்குங்க

அலைகள் பாலா said...

///"மிஸ்டர் சங்கர்... இன்டர்நெட்ல யாரு வேணும்னாலும் எது வேணும்னாலும் போஸ்ட் பண்ணலாம்... அதுல நெறைய நல்ல விசியங்களும் ரெம்ப அரிய தகவல்களும் இருக்கு... ஆனா முழுசா தெரியாம நோய்களை பத்தி அவங்க நெனைக்கறதை எழுதரவங்களும் இருக்காங்க... நல்லதை மட்டும் எடுத்துட்டு வேண்டாததை விட்டுடணும்"
////

இப்படி ஒரு பதிவ படிச்சுட்டு சந்தோசத்துல என்ன செய்யன்னே தெரியல. ஹய்யோ!!! இதே மாதிரி ஒரு புனைவு நான் ரெடி பண்ணி வச்சுருந்தேன். ஆனா நான் எழுத நினைச்சத விட சூப்பரா எழுதி இருக்கீங்க. நிஜமாவே. இந்த பதிவு லிங்க்க என் ப்ளாக் ல போட்டுக்கலாமா? நான் டைப் பண்ற வேலைய குறைச்சுட்டிங்க. எல்லாரும் படிக்க வேண்டிய பதிவு.

அன்னு said...

சூப்பர் புவனா.

எங்களுக்கு ரொம்ப நட்பான ஒரு டாக்டர் இருக்கார். அவரையும் விடாம, அவர் ஹாஸ்பிடல்லயே ஒரு தடவை கிட்னி ஸ்டோன்ஸ்க்காக போயிருந்தேன். வாய சும்மா வெக்காம இன்டர்னெட்ல பாத்ததெல்லாம் வச்சு அவரை கேள்வி கேக்க..அவர் பதிலே தரலை. வெறுமனே ஒரியாக்காரரை பாத்து, வீட்டுல இன்டர்னெட் இருக்கா இருந்தா கட் பண்ணிடுன்னுட்டார். :))

ஆனாலும் எச்சரிக்கையா இருப்பதும், பக்குவமான மனதிருப்பதும் தேவையான ஒன்று!!

sriram said...

அருமையா இருக்கு புவனா.. கதைன்னு சொல்லத் தோணலை அவ்வளவு இயல்பா இருக்கு, வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சுந்தரா said...

கதை ரொம்ப நல்லாருக்கு புவனா.

இப்பல்லாம்,ரெண்டு தும்மல் கூடுதலா போட்டுட்டாக்கூட இன்டர்நெட்ல போயிதான் மருத்துவம் தேடுறாங்க.

சுசி said...

நல்ல கதை புவனா.

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஆஹா...கேரக்டர் கூட ஒன்றி போய்ட்ட போல இருக்கே... ஜஸ்ட் கிட்டிங் ...தேங்க்ஸ்மா

@ Guna - ரெம்ப நன்றிங்க குணா

@ ராமலக்ஷ்மி - சரியா சொன்னிங்க... தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ அண்ணன் - ரெம்ப நன்றிங்க அண்ணா... நானும் இதை போல் ஆட்களை பாத்துருக்கேன்... அதன் பாதிப்பு தான் இந்த பதிவு

@ நசரேயன் - வாவ்... உங்க கிட்ட வாங்கற முதல் பாசிடிவ் கமெண்ட் இது... ஜஸ்ட் கிட்டிங் ... தேங்க்ஸ்ங்க

@ சௌந்தர் - நன்றிங்க சௌந்தர்

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ரெம்ப நன்றிங்க

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்ங்க சுகந்தி

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ r.v.saravanan - நன்றிங்க சரவணன்

@ Mrs.Menagasathia - ரெம்ப நன்றிங்க மேனகா

@ LK - ஆஹா... இதை தான் வசிஷ்டர் வாயால "பிரம்மாரிஷி" பட்டம்னு சொல்றதோ... ஹா ஹா ... ஜஸ்ட் கிட்டிங் ... தேங்க்ஸ் அ லாட் கார்த்தி

அப்பாவி தங்கமணி said...

@ அனன்யா - ஆஹா... ஐ மிஸ் யுவர் கமெண்ட்ஸ் சோ மச் அனன்யா... சாரி சாரி குருவே சரணம்.... ரகசியம் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் சரியா...ஹா ஹா.. தேங்க்ஸ் மா

@ மோகன்ஜி - ரெம்ப நன்றிங்க மோகன்ஜி...கிரேட் வோர்ட்ஸ்

@ drbalas - ரெம்ப நன்றிங்க... வருகைக்கும் வாழ்த்துக்கும்

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - ஹாய் வசந்த்...மொதல்ல தேங்க்ஸ்... மனசுல பட்டதை சொன்னதுக்கு... நீங்க சொல்றது ரெம்ப சரி... ஆனா சராசரியான மனுசனால அப்படி சாவை இயல்பா எடுத்துக்க முடியும்னு எனக்கு தோணல...

உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கலாம்...இறப்பு / இழப்பு இந்த வார்த்தைகளே எனக்கும் நடுக்கம் தர கூடியவை ... என்னை சாராத யாரோட சாவை பத்தி கேட்டாலும் கூட...

நீங்க சொல்ற மாதிரி மனபக்குவம் கெடைக்கறது ஒரு வரம்... லட்சத்துல இல்ல இல்ல கோடில ஒருத்தருக்கு இருக்கலாம்னுகறது என்னோட அனுமானம்

இந்த கதைல வர்ற கீதா ஒரு சராசரியான மிடில் க்ளாஸ் ஹவுஸ் wife ... நிச்சியம் அந்த பக்குவம் இந்த காலத்து பொண்ணாவே இருந்தாலும் இருக்க சாத்தியம் இல்ல... அதுலயும் கணவன்னு வர்றப்ப 17 th century பொண்ணும் சரி 27
th பொண்ணும் சரி ஒரே போல தான் இருப்பாங்க... மத்த உறவுகள் முக்கியமில்லைன்னு நான் சொல்ல வரல...

நீங்க நெறைய பக்குவபட்ட பெர்சன்னு நினைக்கிறேன்...அதான் அந்த கோணத்துல யோசிக்கறீங்க... hats off to your thoughts... thanks again for your comment...really thought provoking... thanks

அப்பாவி தங்கமணி said...

@ வேங்கை - நன்றிங்க வேங்கை

@ அலைகள் பாலா - வாங்க பாலா... ரெம்ப நன்றிங்க... எனக்கும் இது போல நெறைய வாட்டி நடந்து இருக்கு... நான் எதாச்சும் எழுதி வெச்சுட்டு அடுத்த போஸ்ட் போடாலாம்னு இருக்கறப்ப அதே போல வேற யாராச்சும் போடுவாங்க... ரெம்ப ஆச்சிர்யமா இருக்கும்... சேனல் ஆப் தாட்ஸ் பிரபஞ்சத்துல சுத்தி சுத்தி நெறைய பேருக்கு ஒரே போல இருக்கு போலன்னு நெனச்சுப்பேன்... தாராளமா உங்க ப்ளாக்ல என் லிங்க் போடலாம்... நோ அப்ஜக்சன்... ரெம்ப நன்றிங்க

@ அன்னு - ஹா ஹா ...நானும் சில சமயம் அப்படி தான் ஆய்டுவேங்க அன்னு... you're not alone...thanks paa

அப்பாவி தங்கமணி said...

@ Boston Sriram - Wow...thats the best comment ever I received from you Mr. Sriram... I'm not kidding...thanks a lot for saying that

@ சுந்தரா - சரியா சொன்னீங்க சுந்தரா... நன்றிங்க

@ சுசி - தேங்க்ஸ் சுசி

siva said...

:)

Ananthi said...

வாவ்... உண்மையில் ரசித்துப் படித்தேன்..
உருகுதே, மருகுதே....தலைப்பிற்கு ஏற்ற அருமையான கதை....
எஸ், இருக்கும் வரை..வாழ்வை அனுபவித்து சந்தோசமா வாழனும்..
புவனா.. எப்படிங்க.. இவ்ளோ அழகா கோர்வையா எழுதுறீங்க.. ?
அருமை.... வாழ்த்துக்கள்..

அமைதிச்சாரல் said...

சூப்பர் அப்பாவி.. நல்ல ஃப்ளோ.

நீங்க சொல்றதுமாதிரி, மருத்துவத்துக்கும்கூட வலையில் விழுற ஆட்கள் நிறையவே இருக்காங்க :-)))

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_23.html

வடிவேலன் ஆர். said...

சான்ஸே இல்ல என் கண்ல தண்ணி வந்துடுச்சு தோழி சூப்பர்வ் நல்லாயிருக்குங்க தொடர்ந்து இது மாதிரி நல்ல கதையா எழுதுங்க ஆண்டவன் என்றும் உங்களுடன் துணையிருப்பான்

ஸ்ரீராம். said...

பிரமாதம் புவனா...

க.பாலாசி said...

ரொம்ப ரொம்ப இயல்பான எழுத்தோட கருத்தாகவும் சொல்லியிருக்கீங்க....

//நெறைய பேரு அதுல போட்டு இருக்கற ட்ரீட்மென்ட் மெத்தட்ஸ் எல்லாம் ட்ரை பண்றாங்க...//

அந்தக்கொடுமைய என்னன்னு சொல்றதுங்க.. ஆனாலும் சில மருத்துவ விசயங்கள்ல பயனுள்ளததான் இருக்கு.

Denzil said...

வாசகனை ரிலேட் செய்ய வைக்கும் எந்த படைப்பும் அவனை பாதிக்கும். அப்படி என்னைப் பாதிக்க வைத்த ஒரு கதை. நல்லா எழுதுரீங்க. வித்தியாசமான கருக்கள்ல இதே மாதிரி நிறைய எழுதுங்க!

கோவை2தில்லி said...

ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

தக்குடுபாண்டி said...

திருஷ்டி சுத்தி போடுங்கோ அக்கா!! அருமையான நடை & யதார்த்தமான கதாபாத்திர உரையாடல்கள். பெரிய கதை படிக்கரமாதிரியான ஒரு அலுப்பே தெரியலை!...:)

kggouthaman said...

நான் சாதாரணமாக நீண்ட பதிவுகளைப் பார்த்தால், கொட்டாவி விட்டபடி அப்பால விலகிடுவேன். ஆனால் இந்தக் கதையை அப்படி விட முடியாமல், ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் படித்தேன். உடல்நிலை சரி இல்லாத நேரங்களில், சங்கர் எண்ணங்கள்தான் பெரும்பாலும் தலை தூக்கும். அது டாக்டர் கன்சல்டேஷன் வரையிலும் போகாது! மறுநாள் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்ட உடனேயே சரியாகிவிடும்!

Maayavan said...

அருமையான கதை அப்பாவி...
பகிர்ந்தமைக்கு நன்றி........!!!!!!!!!!!!

பத்மா said...

கலக்குறீங்க தங்கமணி ...
கதைக்கு கதையும் ஆச்சு ..செய்திக்கு செய்தியும் ஆச்சு

sriram said...

அன்பின் புவனா..
அதென்ன புதுசா Mr. மரியாதையெல்லாம்?? வழக்கம்போலவே, பாஸ்டன் என்றோ, நாட்டாமை என்றோ பதில் விளிக்கலாம் / கலாய்க்கலாம்.

இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, என் கமெண்ட், தக்குடுவின் கமெண்ட், பெயரில்லா / மோகன்ஜி / drbalas இன்னும் சிலரின் கமெண்டுகளைப் பாருங்க - உங்க Target Audience இன் டேஸ்டை ஒத்து இருந்ததால் இத்தனை பாராட்டு - வாழ்த்துக்கள்.

குழு சேர்த்துக் கொண்டு எது எழுதினாலும் சூப்பர்னு கமெண்ட் போடுவது, ஓட்டு போட்டு மகுடத்தில் ஏற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது மாதிரி நெறய எழுதுங்க, கை வலிக்கும் வரை வாழ்த்தி டைப்பறேன்...

என்றென்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருந்தது தங்க்ஸ்.. நான் எதிர்பார்த்த முடிவு தான்.. சைனசும் சேர்த்து :) நீங்க வேற மாதிரி முடிச்சிருந்தாலும் அந்த சோகத்துக்காக எனக்குப் பிடிச்சிருக்கும்..

பயப்படற நெறைய பேருக்கு வெறும் சைனசோட போயிடுது தான்.. ஆனா கொஞ்சமே கொஞ்சம் பேருக்கு உண்மையாவே இருந்துடுது :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேட்டதெல்லாம் பன்னெண்டு வருஷம் கழிச்சு தான் கெடைக்குமா?"//

ithu enga veetula nadakkura oru uraiyadal padichathum epada enga veetukkulla etti patheengannu :)

okey super kathai.. ellaarukkum thevaiyana kathaiyum kuda.. thanks appavi

Mahi said...

நல்ல கதை புவனா!யதார்த்தமா இருக்கு.

கோவை ஆவி said...

எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம்ங்கிற
உண்மையும் புரிஞ்சிடிச்சி.. அதனால கொஞ்சம் சீக்கிரமா "அதே கண்கள்" மற்ற பகுதிகளையும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- இப்படிக்கு சுமேதா ரசிகர் மன்றம், சிகாகோ கிளை..

ஹேமா said...

கதை இயல்பா உண்ர்வோட இருக்கு தங்கமணி.
என்ன....நீளமா இருக்கு.ஆனால் கதை சுவாரஸ்யமா இருக்கிறபடியா சோர்வில்லை வாசிக்க !

சே.குமார் said...

அருமை...
கதை போலில்லாமல் எதார்த்தமாய்...

படிக்கும் போது கண் கலங்கிவிட்டது.
வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. நானும் அப்பப்ப இப்படி கற்பனைக் குதிரையைத் தட்டி விடறதுனாலயோ என்னவோ முடிவு சைனஸாத்தான் இருக்கும்னு தோணுச்சு; ஆனா நீங்க மரணபயத்தை விவரிச்சுருந்தது நல்லாருந்துது.

Matangi Mawley said...

superb superb!!! semma flow... avalo beautiful-a, ethaarthamaa irunthathu!!

brill!

Thenral said...

Fantastic moral!!!Nice narration!!!

அப்பாவி தங்கமணி said...

@ siva - smileys rejected ... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ரெம்ப நன்றிங்க...
//எப்படிங்க.. இவ்ளோ அழகா கோர்வையா எழுதுறீங்க.. ?//
எல்லாம் உங்க ட்ரைனிங் தான்ங்க... கரெக்ட்ஆ?

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க சாரல்... ஆமாங்க அப்படி தான் ஆகி போச்சு

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - நன்றி நன்றி நன்றி டு தி பவர் ஆப் infinity ...

அப்பாவி தங்கமணி said...

@ வடிவேலன் ஆர். - ரெம்ப நன்றிங்க... உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க

@ க.பாலாசி - ரெம்ப நன்றிங்க பாலாசி... ஆமாங்க நெறைய பேர் அப்படி தான் இருக்காங்க...

@ Denzil - ரெம்ப நன்றிங்க டென்சில்...

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - ரெம்ப தேங்க்ஸ்ங்க

@ தக்குடுபாண்டி - தேங்க்ஸ் தக்குடு... கிரேட் words ... தேங்க்ஸ்

@ kggouthaman - ரெம்ப நன்றிங்க... பொறுமையா பெரிய பதிவ படிச்சதுக்கும்

அப்பாவி தங்கமணி said...

@ Maayavan - ரெம்ப நன்றிங்க மாயவன்

@ பத்மா - ஆமாங்க பத்மா டூ இன் ஒன்... தேங்க்ஸ்ங்க பத்மா

அப்பாவி தங்கமணி said...

@ Boston Sriram - அது வேற ஒண்ணுமில்லைங்க... உங்க கமெண்ட் பாத்து Happy ஆகி reply போடறப்ப Peter விட்டதுல ஒரு flowல Mr. எல்லாம் வந்துச்சு... எப்பவும் நீங்க நம்ம கழக கண்மணிகளுக்கு நாட்டாமை தான்... இப்ப ஒகே தானே பாஸ்... நிச்சியமா அப்பப்போ இந்த மாதிரி உருப்படியாவும் எழுதறேன்... Thanks a lot again

அப்பாவி தங்கமணி said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - கரெக்ட்தாங்க நீங்க சொல்றது.. கவனமா டாக்டர் கிட்ட செக்அப் பண்ணிக்கறது தான் எப்பவும் safe ... தேங்க்ஸ்ங்க பதிவ படிச்சதுக்கு

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹா ஹா ஹா...அச்சச்சோ நான் எட்டி எல்லாம் பாக்கலை... வீட்டுக்கு வீடு வாசப்படினு நினைக்கிறேன்... ரெம்ப நன்றிங்க பொறுமையா படிச்சதுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ரெம்ப நன்றிங்க மகி

@ கோவை ஆவி - ஹா ஹா ஹா... சூப்பர் ஆனந்த்... சிகாகோ கிளைல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க... சீக்கரம் அடுத்த பார்ட் போட்டுடறேன்... Thanks for asking

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க ஹேமா

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்...

//படிக்கும் போது கண் கலங்கிவிட்டது//

இது தான் எழுத்துக்கு கிடைக்கும் வாழ்த்து... நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஆஹா... நீங்களும் same blood ஆ? அதான் முடிவு guess பண்ணிட்டீங்க... நன்றிங்க

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி... நீங்க இப்படி சொல்லி கேக்கறது ரெம்ப சந்தோசமா இருக்குங்க... ரெம்ப நன்றி மீண்டும்

@ Thenral - ரெம்ப நன்றிங்க தென்றல்

அப்பாதுரை said...

உணர்வு தெறிக்கும் நடை. நல்ல கதை. கரு.

/இதுக்கு தான் இந்த விரதம் எல்லாம் வேண்டாம்னு சொல்றது/ :-)

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

உணர்வுப்பூர்வமான எழுத்து.பல இடங்களில் கண்கள் பனிக்கச் செய்கிறது.வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்....

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க

@ H.ரஜின் அப்துல் ரஹ்மான் - ரெம்ப நன்றிங்க

ராதை/Radhai said...

சொல்ல வேண்டியது எல்லாத்தையும் எல்லாரும் சொல்லிட்டாங்க அக்கா ;-)

கதையோட முடிவு பாதி படிக்கிறப்பவே தெரிஞ்சதுனாலும் ரொம்ப விறுவிறுப்பா எதார்த்தமா எழுதிருக்கீங்க.

இது கதைமாதிரியே தெரியலக்கா. நிஜம் தான். இது மாதிரி நடந்துகிட்டே இருக்கு...இன்னும்

அப்பாவி தங்கமணி said...

@ ராதை/Radhai - ரெம்ப நன்றிங்க ராதை

Elam said...

Super story !!!

அப்பாவி தங்கமணி said...

@ Elam - Thank you

kunthavai said...

கதையை முதல்லே guess பண்ணிட்டேன் என்றாலும்.. எழுதிய நடை ரெம்ப நல்லா இருக்கு புவன்னா. வாழ்த்துக்கள். நானுமே சில சமயங்களில் பயந்ததுன்டு.

அப்பாவி தங்கமணி said...

@ kunthavai - Thanks a lot Kunthavai

Post a Comment