Wednesday, September 29, 2010

கேசரி காலட்சேபம்...


முன்குறிப்பு:
இது என்னோட 75 வது பதிவு... இது வரைக்கும் நான் எழுதின 74 மொக்கை பதிவுகளையும் மிகுந்த சகிப்பு தன்மையோட படிச்சு கல்லு முட்டை தக்காளி எல்லாம் வீசாம பெரிய மனசோட ஆதரவு தந்த பதிவுலக நண்பர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி

என்னது? "ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ தங்கமணி" பட்டமா? ஐயோ அதெல்லாம் இப்பவே வேண்டாங்க. சரி சரி உங்க மனசு நோகாம இருக்க சும்மா சிம்பிளா "75 பதிவு கண்ட இனிய தங்கமணி" பட்டம் வேணும்னா வாங்கிக்கறேன்... அதுவும் உங்களுக்காக தான்... ஒகே? ஒகே...75 பதிவுக்கே இந்த அலப்பறைனு யாருங்க இப்படி எல்லாம் திட்டறது... ச்சே... பாவங்க இந்த அப்பாவி...

(இன்னுமா இந்த உலகம் இவள நம்புது - மைண்ட்வாய்ஸ்)

சரிங்க பதிவுக்கு போலாமா?

(போ போ... வேண்டாம்னா நிறுத்தவா போற? ஹும்... - மைண்ட்வாய்ஸ்)

கதா காலட்சேபம் கேள்விப்பட்டு இருக்கோம் இதென்ன கேசரி காலட்சேபம்னு நீங்க யோசிக்கறது தெரியுது... அது என்னனு விலாவாரியா சொல்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு உண்மைய பகிர்ந்துக்க விரும்பறேன்

(அப்போ இவ்ளோ நேரம் பொய்யவா பகிர்ந்துட்ட - மைண்ட்வாய்ஸ்)

மைண்ட்வாய்ஸ், வேண்டாம் நல்ல நாளும் அதுவுமா என்கிட்ட வாங்கிக்க போற சொல்லிட்டேன்...

அதை கண்டுக்காதீங்க ... அந்த உண்மை என்னன்னா... எனக்கு இந்த ஊர்ல ஒரு பட்ட பேரு இருக்கு... எனக்கு ரெம்ப பிடிச்ச பட்டபேரு... அது வேற ஒண்ணுமில்ல "கேசரி புவனா"... இதான் அந்த பட்டப்பேரு

இது நீங்க வெச்ச "இட்லிமாமி" மாதிரி "வஞ்சப்புகழ்ச்சிஅணி" பட்டம் இல்ல... நெஜமாவே நான் கேசரி ஸ்பெசலிஸ்ட் தெரியுமா?

எந்த அளவுக்கு ஸ்பெசலிஸ்ட்னா இங்க எங்க பிரெண்ட்ஸ் சர்கிள்ள யாரு வீட்டுல என்ன விஷேஷம்னாலும் ஸ்வீட் என்னோட கேசரி தான் வேணும்னு கேப்பாங்க

நம்பமாட்டீங்களே? தெரியுமே உங்கள பத்தி... ஹும்... என்னை பத்தி நெகட்டிவா ஒரு விசயம் சொன்னா மட்டும் "ஆமா ஆமா... ரைட்டு...ரிப்பீட்டு" னு நூறு கமெண்ட் போடற இந்த உலகம் ஒரு நல்ல விசயம் சொன்னா மட்டும் ஏன் தான் ஒத்துக்க மாட்டேங்குதோ...? ஹும்

நல்லதுக்கு காலமில்லைன்னு இதைத்தான் சொல்றாங்களோ...

இப்ப இதை நீங்க நம்பலைனா நான் சொன்ன இட்லி கதையும் நம்ப கூடாது which makes me an இட்லி expert... if you believe what I say now, it makes me a கேசரி expert...எது பெட்டர்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... (அப்பாவி நீ எங்கயோ போய்ட்ட... ஹா ஹா ஹா... வெச்சேனா செக்கு? இப்ப என்ன பண்ணுவீங்க... இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா)

(ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல... முடியல... சாதாரணமா போஸ்ட்ல அங்க அங்க குழப்புவா .. இப்ப குழப்பறதுக்குன்னே ஒரு போஸ்ட் போட்டு இருக்கா போல - மைண்ட்வாய்ஸ்)

சரி போஸ்ட்க்கு போவோம்...

இது 75 வது போஸ்ட்டுங்கறதால உங்களுக்கு எல்லாம் ஸ்வீட் குடுத்து கொண்டாடலாம்னு கேசரி எப்படி செய்யறதுன்னு என்னோட ஸ்டைல்ல சொல்ல போறேன்... ஒகே... கவனமா கேட்டுக்கணும்...

பேப்பர் பேனா எல்லாம் எடுத்து ரெடியா வெச்சுகோங்க... ரெடியா... ஒகே ஸ்டார்ட். கேமரா ஏக்சன்....

தேவையான பொருட்கள்:

1 . எங்க அம்மா சீதனமா குடுத்த அளவு டம்ளர்:
இதான் டாப் சீக்ரட் ஆப் திஸ் ரெசிபி... ஒகே...

புரியலையா... எனக்கு எல்லா சமையலும் இந்த டம்ளர் அளவு வெச்சு தான் செய்ய முடியும்... இந்த டம்ளர் தொலஞ்சு போனா அனேகமா கொலை பட்டினி தான்

அதனால துப்பாக்கி முனைல நிக்க வெச்சு கேட்டாலும் இந்த டம்ளர் நான் தர மாட்டேன்

நீங்க உங்க அம்மா குடுத்த டம்ளரை எடுத்துகோங்க... குத்துமதிப்பா சரியாதான் இருக்கும்... குத்துக்கு என்ன மதிப்புனெல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா ஜெய்லானி சமையல் க்ளாஸ்ல சேத்து உட்ருவேன்.... ஆமா சொல்லிட்டேன்

ஒகே அடுத்தது

2 . வெள்ளை ரவை:
இது சிம்பிள்... எல்லாருக்கும் கெடைக்க கூடிய ஒரு பொருள்... இது ஒரு டம்ளர் எடுத்துக்கோங்க... ஒரு டம்ளர்னு சொல்றது ஒரு டம்ளர் தலை தட்டி எடுத்துக்கணும்

ரவைய எடுக்கறதுக்கு என் தலைய எதுக்கு தட்டணும்னு நீங்க கேள்வி கேக்கரீங்கன்னா நீங்க சமையல் ரூம் பக்கம் சாப்பிட மட்டும் தான் போவீங்கன்னு முடிவு பண்ணிடலாம்

(எப்படி இவ்ளோ கரெக்டா இப்படி ஒரு டவுட் வரும்னு கெஸ் பண்றேன்னா... இதே கேள்விய கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அம்மாகிட்ட கேட்டு திட்டு வாங்கி இருக்கேன்...  அந்த அனுபவம் தான்... ஹி ஹி ஹி...)

சரி சரி... அப்படி தெரியாதவங்களுக்கும் சொல்லிடறேன்... தலை தட்டி எடுன்னு சொன்னா நம்ம தலைய தட்டரதில்ல...

டம்ளர்க்கு தலை எது? அதோட விளிம்பு... டம்ளர்ல ரவைய எடுக்கறப்ப விளிம்பு தாண்டி குவிச்ச மாதிரி இல்லாம விளிம்போட அளவு வரை மட்டும் வெச்சுட்டு மிச்ச ரவைய ரவை டப்பாலையே தட்டி விட்டுடணும்... இதான் தலை தட்டி எடுக்கறது... மனசிலாயோ?

3 . வெள்ளை சர்க்கரை:
பின்ன சர்க்கரை என்ன கறுப்பாவா இருக்கும்னு கேட்டா? எஸ்... பிரவுன் சுகர் கூட இருக்கே... ஐயயோ நீங்க நெனைக்கற மாதிரி அந்த பிரவுன் சுகர் இல்ல... வெல்லம் இருக்கில்லையா அது... ஆனா இந்த ரெசிபிக்கு வேண்டியது வெல்லம் இல்லை வெள்ளை சர்க்கரை, எங்க ஊர்ல அஸ்கானு சொல்லுவோம்... உங்க ஊர்ல வேற சொலவடை இருக்கானு செக் பண்ணிக்கோங்க...

அளவு இரண்டு டம்ளர் (ரவைய போலவே இதுவும் தலை தட்டி தான்)

4 . கேசரி பவுடர்:
PhotoCopy எடுக்கறதை Xerox னும், வனஸ்பதியை டால்டானும் Brand Monopolyயா சொல்ற மாதிரி Foodcolour ஐ கேசரி பவுடர்னே சொல்லி பழகிட்டோம் நாம...

ஆனா கேசரி பவுடர்னு சொல்றதை Brand Monopolyனு சொல்ல முடியாது அதுக்கு வேற ஒரு டெர்ம் இருக்கு... அது இங்க இருக்கு....தொண்டைல... வெளிய வர மாட்டேங்குது... ம்... என்னதது...

(சரி சரி உன் இங்கிலிபீச் பெருமை போதும்... பாயிண்ட்க்கு வா - மைண்ட்வாய்ஸ்)

(இதை நடிகர் விஜய் ஸ்டைலில் படிக்கவும்) ஏய் மைண்ட்வாய்ஸ், யார பாத்து... யார பாத்து என்ன வார்த்த சொன்ன...

(இதை சிவாஜி கணேசன் அவர்கள் ஸ்டைலில் கட்டபொம்மன் வசனம் போல் படிக்கவும்) கொங்கு தமிழில் கொஞ்சி மகிழும் எம் குல செந்தமிழ் நாட்டு தமிழச்சியை பார்த்து என்ன வார்த்தை சொன்னாய்...

(இதை நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் படிக்கவும்) மைண்ட்வாய்ஸ், இப்ப சொல்றேன் கேளு... நான் புகுந்த மொழி ஆங்கிலமா இருக்கலாம் ஆனா பொறந்த மொழி தமிழ்... தமிழ்... தமிழ்... (echo effect )

(இதை உலக நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்) இதோ சொல்கிறேன் கேள்... ஆங்கிலம் என்ன பெரிய ஆங்கிலம்? இதற்கு நம் தமிழ் இலக்கணத்தில் அருமையான ஒரு பெயருண்டு தெரியுமா? "ஆகுபெயர்"

"ஆகுபெயர் எனப்படுவது ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது)"

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் FoodColour என்ற இயற்பெயர் அதனோடு தொடர்புடைய கேசரிக்கு அதிக பயன்பாடு ஆகி அதாகவே ஆகி வருவது
(கமல் சார் மூச்சு வாங்க வசனம் பேசினதால தண்ணி குடிக்க போய்ட்டார்)

இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என் இனிய எதிரி மைண்ட்வாய்ஸ்

(அப்பாவி தங்கமே... போதுமாத்தா.... தெரியாம ஒரு வார்த்த சொல்லி போட்டேன்... ஆள உடு - மைண்ட்வாய்ஸ்)

ம்... அந்த பயம் இருக்கட்டும்

ச்சே... இந்த மைண்ட்வாய்ஸ் பண்ணின ரகளைல கேசரி பவுடர் எவ்ளோ அளவுன்னு சொல்ல மறந்துட்டேன். கேசரி பவுடர் ஒரு சிட்டிகை...

சிட்டிகைனா "சிட்டில இருந்து ஒரு Guy" வந்து அளந்து குடுத்துட்டு போவார்னு literal மீனிங் எல்லாம் எடுத்துக்ககூடாது... (ஹி ஹி ஹி நான் ஒரு காலத்துல இப்படி தான் இருந்தேன்... அதான் என்னை போல் ஒருத்தி இல்ல இல்ல நெறைய பேர் இருப்பீங்களோனு தோணுச்சு... ஹா ஹா ஹா)

இந்த சிட்டிகைனா என்னனு எனக்கும் ரெம்ப நாள் புரியாம இருந்தது... ஈஸியா புரியராப்ல சொல்லணும்னா, "யாரங்கே" அப்படின்னு அந்த காலத்துல ராஜா சொடுக்கு போட்டு கூப்பிட கட்ட விரலையும் நடுவிரலையும் சேத்து பிடிக்கற மாதிரி வெச்சுட்டு சொல்வாரே.... அந்த இரண்டு விரலோட பிடில எவ்ளோ எடுக்க முடியுமோ அதான் சிட்டிகை...

ராஜா விரலுக்கு நாங்க எங்க போறதுன்னு எடக்கு மடக்கா பேசினீங்க அப்புறம் ரெசிபி தப்பு தப்பா சொல்லி குடுத்துடுவேன்... அந்த உதாரணத்துக்கு ராஜா விரல் உங்களுக்கு உங்க விரல் தான் அளவு... சம்ஜே? (எனக்கும் ஹிந்தி தெரியும்... சம்ஜே?... ஹா ஹா ஹா)

அடுத்தது

5 . ஏலக்காய் பொடி - அதுவும் ஒரு சிட்டிகை தான்

6 . தண்ணீர் - மூணு டம்ளர்

7 . சமையல் எண்ணை:-
அரை மேஜை கரண்டி அளவு (உங்க வீட்டு மேஜைல என்ன கரண்டி இருக்கோ அது... )

எங்க வீட்டுல மேஜை இல்ல... மேஜைல கரண்டி இல்லைனு சொல்றவங்க  வேற எங்க கரண்டிய வெச்சுருக்கீங்களோ அங்க இருந்து எடுத்துக்கோங்க... ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல...

(நாம சொல்ல வேண்டிய டயலாக் இவ ஏன் சொல்றா? - மைண்ட்வாய்ஸ்)
 
அதுக்காக மாவு கரண்டி போல பெரிய குழிகரண்டி இல்ல... அத்தனை எண்ணை போட்டா அப்புறம் கொலஸ்ட்ரால் வந்துடும்...அப்புறம் இந்த அப்பாவி மேல பழி போட்டுடாதீங்கப்பா...

8 . நெய் - ஒண்ணரை மேஜை கரண்டி அளவு

9 . உடைத்த முந்திரி - 10 நம்பர் (கடைல உடைக்காம இருந்தா வாங்கி உடைச்சுகோங்க... இதெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்...)

10 . உலர்ந்த திராட்சை - 10 நம்பர் (அடிப்பாவி திராட்சை முந்திரி எல்லாம் கூடவா எண்ணி எண்ணி போடுவனு நீங்க திட்டறது கேக்குது)

எனக்கு இந்த "சும்மா கைல ஒரு இத்தன போடு அத்தன போடு" எல்லாம் சரி வராது... எல்லாம் அளந்து அளந்து எண்ணி எண்ணி போட்டத்தான் சரி வரும்... இல்லைனா "கேசரி"க்கு பதிலா "ரிசகே" ஆய்டும்... ஹும்... என் கஷ்டம் எனக்கு

ஒகே... வேண்டிய பொருட்கள் லிஸ்ட் எல்லாம் பாத்தாச்சு.. இனி செய்முறை...

(ஸ்ஸ்ஸ்ப்பா.... இந்த பத்து பக்க கட்டுரைய படிச்சு புரிஞ்சு செய்யற நேரம் ஒரெட்டு கடைக்கு போய் வாங்கிட்டு வந்துடலாம்... இல்ல சொந்தபந்தம் வீட்டுக்கு போய் கேட்டு வாங்கி சாப்ட்டுட்டு வந்துடலாம் - மைண்ட்வாய்ஸ்)

செய்முறை:

1 . மொதல்ல Gas ஐ பத்தவெக்கணும் (எதுக்கும் சொல்லிடுவோம்... நீ அதை சொல்லலியேனு கேக்கற ஆளுங்களும் உண்டே... ஹா ஹா ஹா)

2 . அப்புறம் ஒரு வாணலில அரை மேஜை கரண்டி எண்ணை, அரை மேஜை கரண்டி நெய் விட்டு சூடானதும் ரவைய அதுல போட்டு கை விடாம அதாவது நிறுத்தாம வறுக்கணும். கொஞ்சம் Gas Flame கம்மி பண்ணிக்கறது நல்லது. ரவை கருகிடாம பொன்னிறமா வறுத்து எடுத்து ஒரு தட்டுல போட்டு ஆற விட்டுடுங்க

3 . இப்போ அந்த வாணலி காலி ஆய்டும் இல்லையா... அதுல மூணு டம்ளர் தண்ணி விட்டு தண்ணி கொஞ்சம் இளம் சூடானதும் அதுலயே ரெண்டு டம்ளர் சர்க்கரை போட்டு கொஞ்சம் கரையற வரை கலக்கிவிடணும்

4 . தண்ணி & சர்க்கரை நல்லா மிக்ஸ் ஆகி கொஞ்சம் சூடானதும் அதுல கேசரி பவுடர் ஏலக்காய் பொடி எல்லாம் சேர்க்கணும்

5 . தண்ணி நல்லா கொதிச்சதும் Gas Flame கால்வாசில வெச்சுட்டு ரவைய கொஞ்ச கொஞ்சமா போட்டு கட்டி ஆகாம கலக்கணும். Gas Flame கால்வாசில வெச்சா எப்படி ரவை குக் ஆகும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம் (ஏன்னா எனக்கு வந்தது ஆரம்பத்துல...). நாம ஏற்கனவே ரவைய வறுத்துட்டதால அதுலயே முக்கால் பதம் குக் ஆகி இருக்கும்

6 . ரவை எல்லாம் போட்டு முடிச்சதும் கலக்கிகிட்டே இருக்கணும்... இல்லேனா கட்டி தட்டிடும். ரெம்ப கெட்டியாக விடாம கொஞ்சம் 75 % செமி சாலிட் பதத்துல இருக்கறப்பவே கேஸை அணைச்சுடுங்க. ரெம்ப கெட்டி ஆகவிட்டா ஆறினப்புறம் இன்னும் கெட்டியாகி பசவு இல்லாம ரெம்ப ட்ரை ஆகிடும்

7 . அப்புறம் ஒரு சின்ன வாணலில மீதம் இருக்கற ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை போட்டு முந்திரி பொன்னிறமா வந்ததும் அந்த நெய்யோட கேசரில கொட்டி நல்லா ஈவனா கலக்கிடுங்க

அவ்ளோ தான் கேசரி ரெடி... சாப்பிட நீங்க ரெடியா?

இது ரெம்ப ஈஸியான ஸ்வீட்... நீ செய்யறதுல இருந்தே அது ஈஸின்னு தெரியுதுன்னு சொல்றீங்களோ...

உண்மைய சொல்லணும்னா என்னவர் வேணும்னு கேட்டு சாப்பிடற ஒரே ஸ்வீட் இதான்... சோ ஒழுங்கா செஞ்சு பழகிட்டேன்... ஹும்... நம்ம நல்ல மனச யாரு புரிஞ்சுக்கறா...ஹும்...

நல்லவேளை அவருக்கு பிடிச்ச ஸ்வீட் ஈஸியா செய்யற மாதிரி இருக்கு... கிரேட் எஸ்கேப்... ஹா ஹா ஹா

என்னோட ப்ளாக்ல கூட ஒரு சமையல் குறிப்பு போட்டுட்டேன் வெற்றிகரமா... ஹே.......... சக்சஸ்... சக்சஸ்... சக்சஸ்...

அது சரி... நீ மேல போட்டுருக்கற படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு சந்தேகம் கேக்கற "டவுட் தனபால்" களுக்கு ஒரு விளக்கம் இதோ...

அதாங்க அந்த "சிட்டிகை" பத்தி விளக்கினப்ப மகராஜா "யாரங்கே" னு கூப்பிடற மாதிரினு ஒரு வரி சொன்னேனே அதான் இது (வெச்சோம்ல லிங்க்கு...ஹா ஹா ஹா.. கரெக்டான படம் சிக்கலைனா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு... ஹா ஹா ஹா)
 
ஒகேங்க... இதோ தட்டு நெறைய கேசரி இருக்கு... சண்டை போட்டுக்காம எல்லாரும் share பண்ணி சாப்பிடுங்க...Bye Bye... சி யு லேட்டர்... Happy Kesari Eating... ஹி ஹி ஹி
 
...

88 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

நான் தான் பர்ஸ்ட்டு!!:)

Mahi said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..முடீல புவனா,முடீல! இப்பதான் செய்முறைக்கு வந்திருக்கேன். பத்துப் பொருளைப் பத்தியும் நீங்க 'வெளக்கி'கழுவுனத படிச்சு,சிரிச்சு....முடீல!! இருங்க,மிச்சத்தையும் பாத்துட்டுவரேன். :))))))))))

Mahi said...

/கை விடாம அதாவது நிறுத்தாம வறுக்கணும்./என்னது இது சின்னப்புள்ளதனமா..இதெல்லாம் சொல்லணுமா எங்களுக்கு? உஷாரா கப்போர்ட் கரண்டி(எங்கூட்ல மேஜைல கரண்டி வைக்கிறதில்லீங்கோ) வச்சுதான வறுப்போம்??

ஸ்டாப்..ஸ்டாப்..ஸ்டெப் 4லயே நான் குழம்பிட்டேனே! சக்கரைக்குள்ள ரவையப் போட்டா வேகாது,முறுகிப்போயிரும்னு எங்கம்மா சொன்னாங்களே? நீங்க உல்டாவா சொல்றீங்க புவனா?? (இது காமெடி டவுட்டு இல்ல,நெசமாத்தேன் கேக்கறேன்.)

sriram said...

கேசரி போட்டோ நல்லா இருந்தது.. மத்தபடி நீங்க சொன்னா மாதிரியெல்லாம் கேசரி பண்ணி ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை..

அம்பிக்கு பிடிச்ச கேசரி பத்தி இப்போ பதிவு போட்டதில் ஏதாவது உள்குத்து இருக்கோ??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Mahi said...

கேசரி படத்தப் பாத்ததும் டவுட்டெல்லாம் தெளிவாயிருச்சு.ரெம்ப க்ளியராயிட்டேன்.[டவுட்டு கேட்டா க்ளாஸுன்னு சொல்லிருக்கீங்க? இதுக்கப்புறமும் டவுட்டுன்னு சொல்லுவமா?ஹிஹி]

எவ்வளோ கஷ்டமான ஸ்வீட்டை இப்பூடி ஈஸியா சொல்லிக் குடுத்திட்டீங்களே புவனா? அ.த.இட்லி போல உங்க கேசரியின் புகழும் வாழ்க,வளர்க!

உஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா! தாங்கமுடீல!(இங்க வெயில் கொஞ்சம் அதிகம்..அதான் தாங்கமுடீலன்னு சொன்னேன்,வேற ஒண்ணுமே இல்ல)

/அம்பிக்கு பிடிச்ச கேசரி பத்தி இப்போ பதிவு போட்டதில் ஏதாவது உள்குத்து இருக்கோ??/ரிப்பீட்டு! ரங்கமணியண்ணாவுக்கு பிறந்தநாளோ? ;)

Nithu Bala said...

75-thavathu pathivukku vazhthukal:-) உஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா! தாங்கமுடீல!(இங்க வெயில் கொஞ்சம் அதிகம்..அதான் தாங்கமுடீலன்னு சொன்னேன்,வேற ஒண்ணுமே இல்ல)
(repeat, repeat, repeat!!!)

Rajaram said...

Kesari parka nalla irukku...

தெய்வசுகந்தி said...

75க்கு வாழ்த்துக்கள்!!(வயசு இல்லீங்க பதிவுதான்) //ஸ்டாப்..ஸ்டாப்..ஸ்டெப் 4லயே நான் குழம்பிட்டேனே! சக்கரைக்குள்ள ரவையப் போட்டா வேகாது,முறுகிப்போயிரும்னு எங்கம்மா சொன்னாங்களே? நீங்க உல்டாவா சொல்றீங்க புவனா?? (இது காமெடி டவுட்டு இல்ல,நெசமாத்தேன் கேக்கறேன்.)// அதேதான் நானும் கேக்கறேன்! (நெசமாவேதான்)

Gayathri said...

மொதல்ல உங்க எழுபத்தி ஐந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

ஆத்தா சரியாத்தான் பேரு வச்சுருக்கிங்க " காலட்சேபம் " முன்னு..ஒரு கேசரி கிண்ட நீங்க போட்ட இந்த பதிவ படிக்கரதுக்குள்லவே நான் நாலு முறை கேசரி கிண்டிடுவேன் போல இருக்கு..

இப்படி ஒரு சமையல் குறிப்பை என் அம்மா இல்லை உங்கம்மா இல்லை யார் அம்மாவும் சொல்லவே முடியாது தெய்வமே..மறந்து போன ஆகுபெயர் , ராஜா கை , குறிப்பா தலைய தட்டி போடு இதெல்லாம் படிச்சு படிச்சு சிரிச்சேன்..வழியெல்லாம் கொஞ்ச நேரம் மறந்தே போனேன்...
எப்புடித்தான் இப்புடி யோசிக்குறீங்க?? இது ரூம் எடுத்து யோசிக்குரமாதிரி இல்லை..வீடு காட்டி யோசிக்கறீங்க !!!
உங்கள் இந்த கேசரி குறிப்பு நாளை கல்வெட்டிலும் , இன்டர்நெட்டிலும் பொரிக்க பட்டு வரும் தலை முறைக்கு பயனுள்ள வரப்ப்ரசதமாக இருக்கபோகிறது...அப்புடியே தங்கமணி பதிவுக்கு
கம்மென்ட் போட்ட காயத்ரின்னு என் பெயரும் அந்த கல்வெட்டில் ஒரு மூலையில் இடம் பெறட்டும்..
ஹா ஹா ஹா

Serious such a wonderful humorous post sis....

Maayavan said...

//
தண்ணீர் - மூணு டம்ளர்
//

தலைய தட்டி எடுக்கணுமா?? இல்லை தட்டாம எடுக்கணுமா??
கேசரி செய்றத்துக்கு முன்னாலயே doubt கேட்டுடனும்

kavisiva said...

அடடா இந்த கதாகாலட்சேபத்தை படிச்சு முடிக்கரதுக்குள்ள பத்து பேருக்கு விருந்தே சமைச்சுடலாமே :)

எனக்கொ ஒரு டவுட்டுங்கோ! சர்க்கரையை முதலிலேயே சேர்த்துட்டா ரவை முறுகிப் போயிடுமே! ஒருவேளை அதுவும் நல்லா இருக்குமோ!

LK said...

//பாஸ்டன் ஸ்ரீராம் //

thala enga poiteenga ivlo naalaa

என்னது நானு யாரா? said...

கலாட்சேபம் அருமையாக நகைசுவை தூக்கலோடு சொல்லி கலக்கிட்டீங்கப்பா!

அப்பாவி அக்கோ...ய்! சூப்பரு! 75வது பதிவு Special Edition-ஆ?

ஸ்வீட்டா இருக்குது பதிவு! சூப்பரு!

சேட்டைக்காரன் said...

எழுபத்தி ஐந்தாவது இடுகைக்கு வாழ்த்துகள்!
நல்லாக் கிண்டினீங்க கேசரி! :-))

மதுரை பாண்டி said...

இப்டிப்பட்ட ஒரு சமையல் குறிப்ப , நான் இது வரைக்கும் படிச்சது இல்ல... கடைசில கேசரி ஒழுங்கா வந்த சந்தோஷம் தான்...

மதுரை பாண்டி said...

எப்ப சதம் அடிக்க போறீங்க!!!

ambi said...

//இப்படி ஒரு சமையல் குறிப்பை என் அம்மா இல்லை உங்கம்மா இல்லை யார் அம்மாவும் சொல்லவே முடியாது தெய்வமே//

ROTFL :))))

போட்டோ சூப்பர், நெஜமா நீங்க பண்ணதா..?

பாஸ்டன், எதுக்கு இந்த நாரதர் வேலை..? என் பிறந்த நாள் டிசம்பர்ல.. :P

அலைகள் பாலா said...

அக்கா நான் ஒன்னு சொல்லவா? இதுல ரவைக்கு பதிலா மைதா போட்டா போஸ்டர் ஓட்ட சூப்பர் பசை ரெடி. ஹா ஹா ஹா. ஜஸ்ட் கிட்டிங்.

ஸ்வீட் போஸ்ட்.

ஹுஸைனம்மா said...

//அலைகள் பாலா சொன்னது…
அக்கா நான் ஒன்னு சொல்லவா? இதுல ரவைக்கு பதிலா மைதா போட்டா போஸ்டர் ஓட்ட சூப்பர் பசை ரெடி. //

போட்டு, அதை இந்த தங்கமணி வாயில போட்டு வைக்கணும். எப்பா, என்னா பேச்சு, என்னா வள வள!! உங்க வூட்டுக்காரருக்கு சிலை வைக்கணும், அவர் பொறுமைக்கு!!

ஏன் நீங்க அரசியல்ல குதிக்கக்கூடாது? வைகோவுக்கு வாரிசா வர அளவு “பேச்சாற்றல்” இருக்கு உங்ககிட்ட!!

ஹுஸைனம்மா said...

//சக்கரைக்குள்ள ரவையப் போட்டா வேகாது, முறுகிப்போயிரும்னு//

அப்படியா? எங்க ஊர்ல எல்லாரும் அப்பிடித்தான் செய்வாங்க. ஆனா, ரவை வெந்ததும் கடைசியில சீனியைப் போட்டா இன்னும் டேஸ்டா, வாயில போட்டா வழுக்கிகிட்டுப் போற மாதிரி இருக்கும். அதோட, சீனி அளவும் கொஞ்சம் குறைச்சுக்கலாம். நான் இப்பிடித்தான் செய்வேன்.

ஹுஸைனம்மா said...

எனக்கு இப்பத்த்தான் புரியுது, ஏன் உங்க ஃப்ரண்ட்ஸ் பார்ட்டில உங்ககிட்ட கேசரி செஞ்சு எடுத்துட்டு வரச்சொல்றாங்கன்னு. கேசரி செய்ய அனுப்பிட்டா, உங்க காலட்சேபங்களிலிருந்து தப்பிச்சுக்கலாமே, அதான்.

(Only jokes, no feelings of India, ok?)

kggouthaman said...

அ த - எப்பிடிங்க? எப்பூடிங்க? ஒவ்வொரு பதிவுலேயும் இந்தக் கலக்கு கலக்குறீங்க? எங்க வீட்டுத் தங்கமணியும், சர்க்கரையை பிறகு சேர்ப்பதே நல்லது என்று சொல்கிறார். நீங்க சொன்ன வழியில் ஒருமுறை செய்து பார்க்கின்றேன் என்று சொல்லியிருக்கிறார். அதை சாப்பிட்டுப் பார்த்தபின், என் கருத்துரை ...
(தொடரும்)

சே.குமார் said...

எப்பூடி இப்படியெல்லாம்..?
75க்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

இட்லி போச்சு..கேசரி வந்தது ...படம் எங்கே கூகிளில் சுட்டதா?!!

திவா said...

75 ஆ? போனாப்போறது எழுபத்து அஞ்சு கண்ட ஏடிஎம் ன்னு பட்டம் கொடுக்கறேன்.
கேசரி ரெசிபி சரியான்னு அம்பி சொல்லலியே? அம்பி சொன்னாத்தான் நம்புவோம்!
ராஜாவோட விரல்கள் நீங்க சொன்ன மாதிரி இல்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது கேசரி இம்புட்டு ஈசியா? இது நம்மளுக்கு சரிப்பட்டு வராது, டேய் மண்டையா, அந்த போன்டா வாயன் கடைல போயி எல்லாருக்கும் கேசரி வாங்கிட்டு வா!

Madhavan said...

அஃபீஷியலா 73 பதிவுதான் காட்டுது.. எப்படி 75 ஆகும் ?
கணக்குல நாங்க 'tamarindu' தெரியுமா ?

asiya omar said...

அப்பாடா முடியலை,கேசரி புவனா,ஏன் இந்தப்பேருன்னு இப்ப தான் தெரியுது.75 க்கு வாழ்த்துக்கள்.

மார்கண்டேயன் said...

தாயீ, கிண்டிட்டே தாயீ,

//1 . மொதல்ல Gas ஐ பத்தவெக்கணும் (எதுக்கும் சொல்லிடுவோம்... நீ அதை சொல்லலியேனு கேக்கற ஆளுங்களும் உண்டே... ஹா ஹா ஹா)//

நீங்க சொன்ன மாதிரியே, லைட்டர் Gas ஐ பத்த வச்சேன், கேசரி செய்ய முடியலே . . .

பொறவு, வெல்டிங் Gas ஐ பத்த வச்சேன், கேசரி செய்ய முடியலே . . .

எப்பா, (Gasu) கேசு, (Gas) கேசுன்னு சொல்றீகளே, அது என்ன கேசு(Gas)ன்னு சொன்னா புண்ணியமாப் போவும்,

ஆயிரமிருந்தாலும், நாங்கல்லாம், அத (அதாங்க அப்பாவி தங்கமணி) புவனா வோட followers ஆக்கும்,

DREAMER said...

75ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

சத்தியமா இவ்வளவு ஜாலியான ஒரு சமையல் குறிப்பு படிச்சதேயில்லைங்க! நானும் கோப்பரகேசரி, வீரகேசரி-ன்னு எத்தனையோ கேள்விப்பட்டிருக்கேன். நீங்க சொல்லி கொடுத்த இந்த கேசரிதான் எல்லாத்துக்கும் டாப்...

-
DREAMER

Kousalya said...

சிரிச்சு முடியல தோழி....விரைவில் நூறை தொட அன்பான வாழ்த்துக்கள்..

priya.r said...

வாழ்த்துக்கள் புவனா
75 வது பதிவுக்கு நாங்க உங்களுக்கு ஸ்வீட்ஸ் கொடுகலாம்னு நினைத்தா நீங்களே தந்து
ஆட்சிரிய பட வைத்து விட்டீர்கள்!!
பார்த்தீர்களா ! நீங்க நல்லா ஸ்வீட்ஸ் செய்வீர்கள் என்று நான் தான் இந்த பதிவு வருவதற்கு
முன்பே உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்தேனாக்கும்!!
பாருங்க தங்கம் ! எங்களாலே நேரில் வந்து, சாப்பிட தூண்டும் அருமையான கேசரியை ஷேர் செய்துக்க முடியாது சோ எனக்கொரு கேசரி ஸ்வீட் பார்சல் ப்ளீஸ் !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அளவு செய்முறை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் ரிசகே தான் செய்வது வழக்கம். அதாவது எதையும் என் மெத்தட்ல கைக்குவந்த அளவுக்கு போட்டு எப்படியோ ரிசகே செய்து கேசரியா
இறக்கிடுவேனாக்கும்..அதும் இப்ப கிண்டாமலே ஓவன் ல செய்ற முறைய கத்துக்கிட்டு ..டகால்ன்னன ஒரு கேசரி இறக்கிடுவேன்.. அதையும் சிலர் சாப்பிட்டு எப்படி செய்தேன்னு கேட்டுட்டாங்க.. ( இப்படியும் செய்வாங்களானு அவங்க மைண்ட்வாய்ஸ் சவுண்ட் விடுமா இருக்கும்.)

நல்லா வந்திருக்கு ரெசிபி.. நான் நம்பரேன் நீங்க நல்லா கேசரி செய்வீங்க (கேவலமா இட்லி செய்வீங்க)ன்னு ..:))

ஹேமா said...

கேசரி ரொம்ப இனிக்குது.அப்புறம் சீனிவருத்தம்தான்.
என்றாலும் வாழ்த்துகள் தோழி.

Priya said...

ரொம்ப நாளா கேசரி எப்படி பண்ணுறதுன்னு ஒரு டவுட் இருந்திச்சி. அப்பாடா.. இன்னைக்கு உங்களால என் சந்தேகங்கள் எல்லாம் ஓடியே போச்சி! வாழ்க புவனா, இல்ல வாழ்க 'கேசரி புவனா'!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

பத்து முந்திரி பத்து திராட்சை போட்டீங்க ஆனா படத்துல அஞ்சுதான் இருக்கு.

பத்மநாபன் said...

யக்கா.... (பாடம் சொல்லித்தரவிகள அக்கான்னு தானே கூப்படோனும்- இது என்ர மைண்டு வாய்சு )

நானே கிண்டி கேசரி செய்யற அளவுக்கு பாடத்தை பக்குவமா சொல்லிக்குடுத்திட்டிங்க..... படமும்
அருமையா புடிச்சு போட்டுட்டிங்க....

அக்டோபர்ல ஊருபக்கம் வந்த படத்துல போட்ட மாதிரி கேசரி கிடைக்கும்னு சொல்றிங்க....

எழுவத்தஞ்சு,நூறாகி, நூறு ஆயிரமா பெருக வாழ்த்துதல்கள் நெறய....

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - எஸ் எஸ் நீங்க தான் பர்ஸ்ட்... ஹா ஹா ஹா... பொறுமையா படிங்க அம்மணி... சரி சரி கப்போர்ட் கரண்டி... (ஹா ஹா ஹா). சர்க்கரைகுள்ள ரவைய போட்டா முருகித்தான் போகும்... அதுக்கு தான் மொதலே ரவைய நெய் விட்டு வறுத்து கொஞ்சம் moist பண்றது... அப்போ ஒண்ணும் ஆகாது... அதுவும் இல்லாம லோ flame ல வெச்சு கொஞ்ச கொஞ்சமா போடறப்ப ஒண்ணும் பிரச்சனை இல்ல... நான் எப்பவுமே இப்படி தன் செய்வேன் மகி.. .comes out really nice ..அட நெசமாத்தான்ப்பா...

அப்பாவி தங்கமணி said...

@ Boston Sriram - அட கடவுளே நம்மள எப்பவும் ஒரு காமெடி பிஸாவே பாக்குறாங்களே... பாஸ்... நெஜமாவே இது சூப்பர் ரெசிபி... நான் சொல்றது நம்பிக்கை இல்லைனா யாராச்சும்கிட்ட ரெபர் பண்ணி பாருங்க.. இல்லேனா இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க... ஆஹா... நாட்டாமை தீர்ப்பு தான் சொல்லணும்... கலகம் இல்ல... உள்குத்து உளுந்து குத்து எதுவும் இல்லைங்ண்ணா... ஹா ஹா ஹா..

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - மகியாத்தா... அந்த பயம் எப்பவும் இருக்கட்டும்... ஹா ஹா ஹா... நன்றி நன்றி நன்றி...

@ Nithu Bala - ஹலோ... ரிபீட்ஸ் எல்லாம் நாட் allowed ... ஹா ஹா ஹா

@ Rajaram - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - ஹா ஹா... வயசு இல்லைன்னு சொன்னது நன்றிங்கோ... சர்க்கரைகுள்ள ரவைய போட்டா முருகித்தான் போகும்... அதுக்கு தான் மொதலே ரவைய நெய் விட்டு வறுத்து கொஞ்சம் moist பண்றது... அப்போ ஒண்ணும் ஆகாது... அதுவும் இல்லாம லோ flame ல வெச்சு கொஞ்ச கொஞ்சமா போடறப்ப ஒண்ணும் பிரச்சனை இல்ல... நான் எப்பவுமே இப்படி தன் செய்வேன்.. .comes out really nice ..

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஹா ஹா ஹா... கேசரின்னா சும்மாவா? டைம் ஆகத்தான் செய்யும்... விளக்கமா போட்டாத்தானே தப்பில்லாம வரும்... என்ன நான் சொல்றது? வீடு கட்டி யோசிக்கறேனா? ஹா ஹா ஹா... கண்டிப்பா கண்டிப்பா உன் பெயரும் இடம் பெரும் காயத்ரி கல்வெட்டில்... (கல்லடி விழுந்தாலும் ஷேர் பண்ணிக்கணும் சரியா... ஹா ஹா ஹா) தேங்க்ஸ் காயத்ரி

@ Maayavan - தண்ணிய தலைய தட்டினா வம்பாய்டும்... சோ தட்ட வேண்டாம்... ஹா ஹா ஹா... (என்கிட்டயேவா?)

அப்பாவி தங்கமணி said...

@ Kavisiva - ஹா ஹா ஹா... பின்ன, கேசரினா சும்மாவா? ஆஹா... எனக்கு தான் எப்பவும் டவுட் வரும்... இன்னைகென்ன எல்லாருக்கும் வருது... ஹ்ம்ம்... சர்க்கரைகுள்ள ரவைய போட்டா முருகித்தான் போகும்... அதுக்கு தான் மொதலே ரவைய நெய் விட்டு வறுத்து கொஞ்சம் moist பண்றது... அப்போ ஒண்ணும் ஆகாது... அதுவும் இல்லாம லோ flame ல வெச்சு கொஞ்ச கொஞ்சமா போடறப்ப ஒண்ணும் பிரச்சனை இல்ல... நான் எப்பவுமே இப்படி தன் செய்வேன்... comes out really nice .

அப்பாவி தங்கமணி said...

@ LK - கார்த்தி... கேசரி எப்படி இருக்குனு ஒரு வார்த்த... ஒரு வார்த்த சொல்ல காணோமே... ஹ்ம்ம்...

@ என்னது நானு யாரா? - தேங்க்ஸ்ங்க வசந்த்

அப்பாவி தங்கமணி said...

@ சேட்டைக்காரன் - ஹா ஹா ஹா.. நன்றிங்க

@ மதுரை பாண்டி - ஹா ஹா ஹா... வந்ததுனாலதானே இந்த போஸ்ட் ... சதம் இன்னும் 25 போஸ்ட் போட்டப்புறமுங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ambi - வாங்க வாங்க... முதல் வருகைக்கு நன்றி. போட்டோல இருக்கறது கூகிள்ல சுட்டது... நான் செஞ்சப்ப போட்டோ எடுத்ததில்ல... அடுத்த முறை எடுத்து போட்டுடறேன்... உங்கள கமெண்ட் போடவெக்க கேசரியால தான் முடியும் போல இருக்கே... ஹா ஹா ஹா... நீங்களும் டிசம்பர்ஆ? ஆஹா... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ அலைகள் பாலா - அட இது நல்லா ஐடியாவா இருக்கே... எல்லாம் சொல்லிட்டு ஜஸ்ட் கிட்டிங்ஆ? அதும் எனக்கேவா? ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - நீங்க கூட எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டீங்களா ஹுஸைனம்மா... சாப்டாம கூட இருக்கலாம்... பேசாம எப்படி... சான்சே இல்ல போங்க... அவருக்கு சிலையா? நேரம் தான்... அவரும் Mechanical Engineer தான்... இப்ப சொல்லுங்க சிலை வெக்க வேண்டியது எனக்கா அவருக்கா? ஹா ஹா ஹா... அரசியல்ல குதிக்க நான் ரெடி... நான் குதிக்க அதுல ஏற்கனவே இருக்கரவங்கெல்லாம் வெளிய தெரிச்சுடுவாங்களே... பாவம் பொழச்சு போகட்டும் விடுங்க... ஹா ஹா ஹா

@ ஹுஸைனம்மா -கரெக்ட் கரெக்ட்... எனக்கும் இப்படி செஞ்சா தான் சரியா வருது... ஹா ஹா ஹா... நோ ஜோக்ஸ் ஒன்லி feelings of இந்தியா... ஹா ஹா ஹா... (ஆஹா இதுக்கு தான் என்னைய செய்ய சொல்றாங்களா... இந்த உண்மைய புரிய வெச்சதுக்கு நன்றிங்கோ... இனிமே கவனிச்சுகறேன் அவங்கள )

அப்பாவி தங்கமணி said...

@ kggouthaman- ஆஹா... செய்முறை எல்லாம் experiment பண்ணிட்டு தான் கமெண்ட்ஆ? மீ எஸ்கேப்... சும்மா சொன்னேன்.. நெஜமாவே இந்த முறை சரியா வரும்... நான் பலவாட்டி செஞ்சாச்சு... சோ கேரண்டீ உண்டு... நன்றிங்க

@ சே.குமார் - நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா... எஸ் எஸ் அது போய் இது வந்தது... ஆமாங்க படம் கூகிள்ல சுட்டது தான்... நான் போன வாரம் செஞ்சப்ப இந்த போஸ்ட் எண்ணம் இல்லை... சோ படம் எடுத்து வெக்கலை... அடுத்த முறை செய்யறப்ப எடுத்து போடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ திவா - ஆஹா... சூப்பர் பட்டம்... நன்றிங்க... அம்பி அவர் தான் சொல்லணும்... கேசரிக்கு வேற யாரும் பெஸ்ட் ஜட்ஜா இருக்க முடியாது...

//ராஜாவோட விரல்கள் நீங்க சொன்ன மாதிரி இல்லையே? //
அது நான் எழுதினப்ப அப்படி தான் வெச்சுட்டு இருந்தார்... எவ்ளோ நேரம் அப்படியே இருப்பார் சொல்லுங்க... பாவம் விரல் வலி வந்துடாது... அதான் மாத்திட்டார்... (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி - ஹா ஹா ஹா... கடை கேசரி இது போல வராதுங்க... இதே ட்ரை பண்ணி பாருங்க...

@ Madhavan - 73 இந்த வருஷம் அதாவது 2010 ... போன வருஷ tab பாருங்க பேருக்கு ரெண்டு பதிவு அதுல இருக்குங்கோ... (ஆஹா... அலெர்ட் தங்கமணி அலெர்ட்...)

அப்பாவி தங்கமணி said...

@ asiya omar - ஹா ஹா... நன்றிங்க ஆசியா...

@ மார்கண்டேயன் - ஹா ஹா ஹா... ஆஹா... என்கிட்டயேவா? சூப்பர்... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ DREAMER - நன்றிங்க DREAMER . ஹா ஹா ஹா...ரெம்ப நன்றிங்க

@ Kousalya - ரெம்ப நன்றிங்க கௌசல்யா

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியா. நீங்க ஸ்வீட் குடுக்கறதுக்கு முன்னாடி நான் முந்திகிட்டேன் பாத்தீங்களா... ஹா ஹா அஹ... எஸ் எஸ்... எல்லாம் உங்க கமெண்ட் முஹுர்த்தம் தான்... ஹா ஹா அஹ... பார்சல் அனுப்பிட்டா போச்சு... (இதை தான் வம்பை கமெண்ட் குடுத்து வாங்கறதுன்னு சொல்றதோ... ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஆஹா... நீங்க பெரிய ஆள் போல இருக்கே... ஓவன்ல கேசரியா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அக்கோவ்... நாங்களும் தெரிஞ்சுக்குவோமே... என்னடா ஒரு கணம் பாராட்டராங்கன்னு பாத்தா தொப்புன்னு (கேவலமா இட்லி செய்வீங்கன்னு) போட்டுட்டாகளே... ஹ்ம்ம்... ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - ஹா ஹா ஹா... நன்றிங்க ஹேமா

@ Priya - ஆஹா... ப்ரியா... நீங்க நெஜமாவே ரெம்ப நல்லவங்கப்பா... ஹா ஹா அஹ... தேங்க்ஸ் ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ஆஹா... இப்படி ஒரு பேர நான் பாத்ததே இல்லிங்க... சூப்பர்... அது மீதி அஞ்சு முந்திரி திராட்சை உங்கூரு காக்கா தூக்கிட்டு போய்டுச்சு... ஹா ஹா ஹா

@ பத்மநாபன் - உங்க மைண்ட்வாய்ஸ்ம் ஆரம்பிச்சுடுச்சா? கஷ்டம் தான் போங்க... நன்றி நன்றி நன்றி

அன்னு said...

அப்பாவி, நீங்க என்னை அடப்பாவின்னு சொல்ற மாதிரி உங்க இட்லிக்கதைய ஃபேமஸ் காமினி கதைல இணைச்சுட்டேன்....பாத்தீங்களா?? --http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_29.html

கோச்சுக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஹி ஹி...:)) (தப்பா பட்டாலும் சொல்லுங்க...நோ டென்சன்!!)

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - Super தான் போங்க ...
கதை படிச்சேன் கலக்கல்... அந்த போட்டிக்கு நானும் யோசிச்சுட்டே இருக்கேன்... ஒண்ணும் சிக்க மாட்டேங்குது...உங்க கற்பனை கலக்கல்... நான் கோவிச்சுக்கவெல்லாம் மாட்டேன் அன்னு... ஹா ஹா ஹா.. Thank you

sriram said...

LK சொன்னது… //பாஸ்டன் ஸ்ரீராம் //
thala enga poiteenga ivlo naalaa //

இங்கயேதான் இருக்கேன் LK, புவனாவின் போன பதிவில Mr. மரியாதயெல்லாம் கெடச்சுது, பாக்கலயா??

//ambi சொன்னது…

பாஸ்டன், எதுக்கு இந்த நாரதர் வேலை..? என் பிறந்த நாள் டிசம்பர்ல//

இல்ல அம்பி .. கேசரின்னு சொன்னதும் உங்க ஞாபகம்தான் வருது, நானென்ன செய்ய??
டிசம்பருக்கு முன்னமே ஏதாவது நல்ல செய்தி இருக்கலாமில்லயா??

vanathy said...

தங்ஸ், நிசமாலுமே நீங்க செஞ்சதா? அஞ்சப்பரில் வாங்கினாப்போல தெரியுது. சும்மா டமாஷ், அம்மணி.
நல்லா இருக்கு கேசரி. எனக்கும் மிகவும் பிடிக்கும். ம்ம்ம்.. யம்மி.

congratulations!

siva said...

:)

siva said...

my special greetings.....

innum 1000 padivugal pottu

sirenjeevaiyai vaala vanangukirom..vallatha vayathillai...

திவா said...

அட கடவுளே நம்மள எப்பவும் ஒரு காமெடி பிஸாவே பாக்குறாங்களே... பாஸ்...//
comedy pizza? எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க!

BalajiVenkat said...

naan erkanavey kesari paniruken... rendu varusham munnadi... enga aathula enga periyappa panra kesari thaan chooper mathulam ok type thaan ...

neenga kesariya parcel panni anupinalum illa endha classla enna sethu vutttalum naan santheham ketkama inga irunthu navara maten aama... neenga potrukura kesari photo neenga sencha kesari thana...

அப்பாவி தங்கமணி said...

@ Boston Sriram -
//இங்கயேதான் இருக்கேன் LK, புவனாவின் போன பதிவில Mr. மரியாதயெல்லாம் கெடச்சுது, பாக்கலயா??//
அதானே நீ பாக்கலையா கார்த்திக்

//இல்ல அம்பி .. கேசரின்னு சொன்னதும் உங்க ஞாபகம்தான் வருது, நானென்ன செய்ய??
டிசம்பருக்கு முன்னமே ஏதாவது நல்ல செய்தி இருக்கலாமில்லயா?? //
கேசரினா அவர் தான்னு trademark ஆய்டுச்சு போல... கரெக்ட்

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - ஹை வாணி... இந்த படத்துல இருக்கறது நான் செஞ்சதில்ல... (நான் செஞ்சது போட்டா கண்ணு பட்டுடும் யு நோ...ஹா ஹா ஹா) தேங்க்ஸ் வானதி

@ Siva - தேங்க்ஸ்... 1000 பதிவெல்லாம் இந்த ப்ளாக் உலகம் தாங்காதுங்கோ.. ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ திவா - //comedy pizza? எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க! //
நான் சொல்லிடுவேன் திவாண்ணா... பாவம் மக்கள் பயந்துடுவாங்க... விட்டுடுவோம்... ஹா ஹா ஹா

@ BalajiVenkat - ஓ... பெரியப்பா கேசரியா?... சூப்பர்... இந்த படத்துல இருக்கறது நான் செஞ்சதில்ல... (நான் செஞ்சது போட்டா கண்ணு பட்டுடும் யு நோ...ஹி ஹி ஹி)

தக்குடுபாண்டி said...

//@ Boston Sriram - இல்ல அம்பி .. கேசரின்னு சொன்னதும் உங்க ஞாபகம்தான் வருது, நானென்ன செய்ய??
டிசம்பருக்கு முன்னமே ஏதாவது நல்ல செய்தி இருக்கலாமில்லயா??// ...:))

vinu said...

unga 75thukku ennoda 71st vaazthukkal

சௌந்தர் said...

இந்த பதிவை படித்து முடிப்பதுகுள்ளே கேசரி சாப்பிட்டு முடித்து விட்டேன் 75வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

என்னங்க இது, சக்கரை ஒரு டம்ளர் ரவா ஒரு டம்ளர் தண்ணி மூணு டம்ளர்... டம்ளர் வாங்க வச்சே போண்டி பண்ணிடுவீங்க போலிருக்கே?

இந்தி வேறயா? சமஞ்சு கயா சமஞ்சு கயா.. (நன்றி, பாக்யராஜ்)

Mahi said...

/அந்த பயம் எப்பவும் இருக்கட்டும்.../ கர்ர்ர்ர்ர்ர்ர்! கொஞ்சூண்டு எச்சரிக்கையா இருந்தா அதயப் போயி பயம்னு சொல்லிகிட்டு...

/நான் செஞ்சது போட்டா கண்ணு பட்டுடும் யு நோ.../ இதெல்லாம் ஏத்துக்கப்படாது.100 பதிவுகள் வரதுக்குள்ள உங்க கேசரி படம் வந்தாகணும். ஏனா 100வது பதிவு உங்களுடைய உலகப்புகழ் பெற்ற இட்லி ரெசிப்பி,ஓக்கே?

மோகன்ஜி said...

ஆஹா!எழுபத்திஞ்சு ஆயிடிச்சா..வாழ்த்துக்கள். ஏதோ ஒரு ஸ்பூன் கேசரி கிடைக்குமேன்னு உங்க பதிவுக்கு முன்னாடி கியூவிலே நின்னா.. ரொம்ப லேட்டுன்னு பாத்திரத்தை கவுத்துட்டீங்களோ. அழகான நகைச்சுவை பில்டப்பு..
எங்களுக்கெல்லாம் எப்போ 'அல்வா'குடுக்கப்போறீங்க புவனா?

LK said...

aatthaa en ippadilaam kodumai panra.. ithai padikakra tinmela அங்க கேசரி ரெடி பண்ணி சாப்பிட்டு விடுவேன்

Thenral said...

75th padhivuku vaazhthukkal!!!Yen intha kolaiveri????

Gayathri said...

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ...:))

@ vinu - நன்றிங்க வினு

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - ஹா ஹா ஹா... நன்றிங்க

@ அப்பாதுரை - ஹா ஹா ஹா... இது சூப்பர்...

அப்பாவி தங்கமணி said...

@ Mahi -
//கொஞ்சூண்டு எச்சரிக்கையா இருந்தா அதயப் போயி பயம்னு சொல்லிகிட்டு... //
சரி சரி கொஞ்சூண்டு நெறைய பயம் கரெட்டா? ஹா ஹா ஹா

//ஏனா 100வது பதிவு உங்களுடைய உலகப்புகழ் பெற்ற இட்லி ரெசிப்பி,ஓக்கே? //
இன்னுமா... ஏற்கனவே ரெம்ப அடி வாங்கிட்டா இந்த அப்பாவி... டோட்டல் டேமேஜ்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ மோகன்ஜி - ஹா ஹா அஹ... நன்றிங்க... அல்வா எல்லாம் நெல்லைகாரங்ககிட்ட தான் கேக்கணும்... நாங்க கொங்குநாடுங்கோ...

@ LK - ஹா ஹா அஹ... கேசரி பண்ணுவ சரி சாப்பிட முடியுமா... நல்லா யோசிச்சு சொல்லு... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Thenral - ஹா அஹ... நன்றிங்க... (கொல வெறி இல்லைனா எப்படி கடை கட்றது... ஹா ஹா ஹா)

@ Gayathri - தயவு செய்யாமையே வந்து படிச்சுட்டேன் ஆத்தா... சூப்பர்...

கோவை ஆவி said...
This comment has been removed by the author.
கோவை ஆவி said...

75 க்கு வாழ்த்துகள்!!
உங்க "காமெடி" கேசரி ரொம்ப நல்ல இருந்தது.. படிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சி!!

Ananthi said...

///குத்துக்கு என்ன மதிப்புனெல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா ஜெய்லானி சமையல் க்ளாஸ்ல சேத்து உட்ருவேன்.... ஆமா சொல்லிட்டேன் ///

ஹா ஹா ஹா.. இல்ல இல்ல... கேக்க மாட்டேன்.. :-)))
(நல்ல வேளை.. ஜஸ்ட் மிஸ்ஸு)

//ரவைய எடுக்கறதுக்கு என் தலைய எதுக்கு தட்டணும்னு நீங்க கேள்வி கேக்கரீங்கன்னா///

இல்லையே இல்லையே.. நா அப்படி கேக்க மாட்டேன் பா..
யார் தலைய தட்டனும்..?? ;-)))

//மகராஜா "யாரங்கே" னு கூப்பிடற மாதிரினு ஒரு வரி சொன்னேனே அதான் இது (வெச்சோம்ல லிங்க்கு...ஹா ஹா ஹா.. கரெக்டான படம் சிக்கலைனா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு... ஹா ஹா ஹா) ///

ஹா ஹா ஹா.. இது சூப்பர் மா.. :-)))
ரசிச்சு படிச்சேன். நல்லா இருக்குப்பா..

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - Very many thanks Ananth

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ha ha ha... ROFTL comments Ananthi

Post a Comment