Monday, October 04, 2010

அதே கண்கள்... (பகுதி 15)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

சுமார் இரவு பதினொரு மணிக்கு தான் சூர்யா வந்தான்

சுமேதா வந்திருக்கிறாள், மேலே அறையில் இருக்கிறாள் என அவன் அன்னை கூற சூர்யா அதை எதிர்பார்க்காததால் விரைந்து தனதறைக்கு சென்றான்

அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தவள் போல் சுமேதா கதவருகிலேயே நின்றாள்

அவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தியவள் "ஏன் இப்படி செஞ்சீங்க?" என கேட்க அதை எதிர்பாராத சூர்யா திகைப்புடன் அவளை பார்த்தான்

"என்ன? என்ன சொல்ற?" என திகைப்பை மறைத்து சமாளித்து கேட்க

"நான் என்ன தப்பு பண்ணினேன்... விரும்பி தானே என்ன பெண் பார்க்க வந்து நிச்சியம் செஞ்சீங்க... அப்புறம் ஏன்..." என அதற்கு மேல் பேச முடியாமல் விசும்பினாள்

சூர்யா எதுவும் பேசாமல் மௌனமாய் நின்றிருந்தான்

"சொல்லுங்க சூர்யா... ஏன் இப்படி செஞ்சீங்க?"

"என்ன செஞ்சேன்? என்ன? எனக்கு ஒண்ணும் புரியல?" என்றான் இன்னும் சமாளித்து

"இதுக்கு மேல ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க சூர்யா ப்ளீஸ்... நான் ஏற்கனவே ரெம்ப மனசு வெறுத்து போய் இருக்கேன்"

"சம்மந்தமில்லாம என்னென்னமோ பேசற நீ"

"நான் சம்மந்தமில்லாம பேசறேனா? சரி நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க... அன்னிக்கி செல்போன் எடுக்க கார்க்கு போனீங்க... அப்புறம் எங்க போனீங்க?"

"அதான் ஸ்டேஷன்ல உங்க அண்ணன் சொன்னாரே உன்கிட்ட... நான் திரும்பி வந்து பாத்தப்ப உன்னை ரூம்ல காணோம்"

"அப்படியா... அப்போ நான் காணாம போனது பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது, அப்படி தானே"

"ஆமா, தெரியாது" என்றான் தீர்மானமாய்

"என்னை நீங்க அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல தான் பாத்தீங்க இல்லையா?"

"ஆமா"

"அப்படின்னா... நான் காணாம தொலஞ்சு போன காட்டுக்குள்ள உங்க மோதிரம் எப்படி வந்தது?"

"என்ன?" என்றவனின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது

"இதோ நம்ம நிச்சியதார்த்ததுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் உங்க அம்மா வாங்கின மோதிரம்... ரெண்டும் ஒரே போல 'S' னு லெட்டர் போட்ட மோதிரம்... இது உங்க மோதிரம் தானே"

"இந்த மாதிரி மோதிரம் உலகத்துல வேற யாருகிட்டயும் இருக்காதா? உன்னை கடத்தினவன் அதே போல மோதிரம் வெச்சுருந்தானோ என்னமோ" என்றான் ஏளனமாய்

"கடத்தினவனா? என்னை யாரும் கடத்தினதா நான் இது வரைக்கும் சொல்லலியே... உங்களுக்கு எப்படி தெரியும்?" என கேட்க திருடனுக்கு தேள் கொட்டியது போல் விழித்தான் சூர்யா

"சொல்லுங்க சூர்யா... உங்களுக்கு எப்படி தெரியும் நான் கடத்தப்பட்டேன்னு?"

"அது...அது..." என விழிக்க

"ஒரு விசயம் யோசிச்சீங்களா சூர்யா. நீங்க கார்ல செல்போன் எடுக்க போறேன்னு போனப்புறம் கொஞ்ச நேரத்துல கதவு தட்டற சத்தம் கேட்டு நான் திறக்க அங்க கருப்பு டிரஸ் போட்டுட்டு முகத்தை மறைக்க முகமூடி கொள்ளைக்காரன் போல மாஸ்க் போட்டுட்டு ஒரு ஆள் நிக்கறப்ப ஒரு பொண்ணு நான் எப்படி கத்தி ஊரை கூட்டாம பேசாம நிப்பேன்... அதை யோசிச்சீங்களா?"

அவன் பதில் பேசாமல் நின்றான்

"அது நீங்க தான்னு எனக்கு தெரியும்... கார்ல இருந்து இறங்கரப்ப என்னோட செல்போன் சீட்டுக்கு அடில விழுந்துடுச்சு... அதை எடுக்க குனிஞ்சப்ப சீட்டுக்கு கீழ அந்த மாஸ்க் இருந்ததை நான் பாத்தேன்... அப்ப அது எதுக்குன்னு யோசிக்க தோணல... அதை வெச்சு மட்டும் நீங்கன்னு நான் முடிவு பண்ணலை... மாஸ்க் போட்டு இருந்தாலும் உங்க கண்கள் தெளிவா தெரிஞ்சுது... உங்க கண்களை எப்படி எனக்கு அடையாளம் தெரியாம போகும்?" என வேதனையுடன் கேட்க

"அப்படியா... நான்னு தெரிஞ்சு ஏன் பேசாம இருந்த? என்ன கத விடற?"

"கதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல... உங்கள காப்பாத்ததான் போலீஸ் ஸ்டேஷன்ல கதை சொன்னேன்... இப்ப சொல்றது சத்தியம்... நான் அப்போ பேசாம இருந்ததுக்கு காரணம் நீங்க சும்மா என்கிட்ட பயம் காட்டறதுக்கு விளையாடறீங்கன்னு நெனச்சேன்... என்ன விளையாட்டு இதுனு நான் கேக்க வர்றப்ப நீங்க என் வாய்ல பிளாஸ்டர் மாதிரி ஏதோ போட்டு பேச முடியாம செஞ்சுட்டீங்க"

"நீ சினிமாவுக்கு கதை எழுத போலாம்... ரெம்ப நல்லா ஸ்க்ரீன்ப்ளே சொல்ற" என்றான் ஏளனமாய்

"மனசாட்சி இல்லாம பேசாதீங்க... அப்படி என் வாய கட்டினப்ப கூட உங்கள பத்தி என்னால தப்பா நெனக்க முடியல... இன்னும் விளையாட்டு தொடருது போலன்னு தான் நெனச்சேன். ஆனா கண்ணுக்கு துணி கட்டி கையை பின்னாடி கட்டி ஏதோ ஸ்டெப்ஸ்ல மாதிரி எறக்கி கூட்டிட்டு போனப்ப தான் கொஞ்சம் பயம் வந்தது... நான் தப்பா புரிஞ்சுட்டேன் போல இருக்கு... அது நீங்க இல்லைன்னு நெனச்சு கத்த முயற்சி பண்ணினேன் முடியல... "

என்னமோ சொல் என்பது போன்ற பாவனையுடனே இருந்தான் சூர்யா

"அப்புறம் ஏதோ வண்டில ஏத்தி கொஞ்ச நேரம் டிரைவ் பண்ணி அப்புறம் எறக்கி விட்டு கண் கட்டை மட்டும் கழட்டி என்னை ஒரு மரத்துல வெச்சு கட்டினீங்க... அப்போ கைல க்ளௌஸ் போட்டுட்டே மரத்துல காட்ட முடியாம நீங்க கைல போட்டுருந்த க்ளௌஸ்ஐ கழட்டினப்ப தான் உங்க மோதிரம் என் கண்ணுலபட்டது... அப்ப தான் ஏதோ விபாரீதம்னு எனக்கு தோணுச்சு. நான் திமிறினேன்... என்னை மரத்துல வெச்சு கட்ற போராட்டத்துல தான் உங்க மோதிரத்த அங்க விட்டுடீங்க... எல்லாம் சரியா சொன்னேனா சூர்யா?" என கேட்க பதில் பேசாமல் நின்றான்

"ஒரு ராத்திரி முழுக்க இருட்டுல நடு காட்டுல ஒரு ஒரு நிமிசமும் ஏதோ மிருகம் சத்தம் கேக்கறப்பவெல்லாம் பயந்து செத்து செத்து பொழச்சு... காலை சுத்தி ஒரு பாம்பு... என்ன நெனச்சதோ என்னை கடிக்கல... ஐயோ கடவுளே" என ஒரு கணம் அந்த நினைவில் உடல் நடுங்கியவள்

"காலைல காட்டுக்குள்ள சுள்ளி பொறுக்க வந்த மலைஜாதி பொண்ணுங்க பாத்து காப்பாத்தலைனா என் கதி என்ன? என்னை கொல்லணும்னு நெனைக்கற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன் சூர்யா... இனியும் உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு தான் நடிக்க போறீங்களா?" என்றவள் பொங்கிய அழுகையை கட்டுப்படுத்த வெகு பிரயத்தனப்பட்டாள்

"நான் ஏண்டி நடிக்கணும்? தப்பு செஞ்ச நீதான் உண்மைய மறைக்க ஒண்ணும் தெரியாத மாதிரி நான் என்ன செஞ்சேன் நான் என்ன செஞ்சேன்னு அழுது நடிக்கற. தப்பே செய்யாத நான் ஏண்டி நடிக்கணும்... ஆமா நான் தான் உன்னை காட்டுல கொண்டு போய் கட்டி போட்டேன்... இப்ப என்ன செய்ய போற... என்னை போலீஸ்ல புடிச்சு குடுக்க போறியா... தாராளமா செய்... ஐ டோன்ட் கேர்" என வெறி பிடித்தவன் போல் கத்தினான் சூர்யா

அது மட்டும் ஏசி செய்யப்பட்ட அறையாய் இல்லாமல் இருந்திருந்தால் அவன் போட்ட சத்தத்திற்கு நிச்சியம் அவன் பெற்றோர் மேலே ஏறி வந்து என்னவென விசாரித்திருப்பார்கள்

திருமணம் நிச்சியமாகி மூன்று மாதகாலம் அன்பே வடிவாய் முகம் காட்டிய சூர்யாவின் இன்னொரு முகத்தை கண்ட சுமேதா பயத்தில் உறைந்து போனாள்

அவள் பதில் கூறாமல் திகைத்து நிற்க "சொல்லுடி... என்னை போலீஸ்ல புடிச்சு குடுக்க போறியா...இந்தா போன்... கூப்பிடு... " என அவள் கையில் செல்பேசியை திணித்தான்

"போலீஸ்ல சொல்லணும்னு நெனச்சுருந்தா அன்னைக்கே சொல்லி இருப்பேனே சூர்யா"

"ஓ... நீ இப்படி சொல்றதை கேட்டதும் கல்லானாலும் கணவன்னு நெனைக்கற பத்தினி நீன்னு நான் நம்பி என்னை மன்னிச்சுடும்மானு கெஞ்சுவேன்னு டிராமா போட்றியோ"

"டிராமா போட்டது நான் இல்ல நீங்க தான்... விரும்பி கல்யாணம் செஞ்சுக்கற மாதிரி நடிச்சு கொல்ல துணிஞ்ச நீங்க தான் டிராமா போட்டது"

"ஆமா டிராமா போட்டேன்... நீ நடு காட்டுல கண்ணுல தெரியறதை எல்லாம் பாத்து பயந்து நடுங்கி சித்ரவதைபட்டு சாகணும்னு தான் கண்ணுல கட்டி இருந்ததை மட்டும் எடுத்தேன்..." என்றவனின் வார்த்தைகள் உயிர் வதையாய் கொல்ல

"அப்படி கொடுமையா நான் சாகணும்னு நீங்க நெனைக்கற அளவுக்கு நான் என்ன பாவம் பண்ணினேன் சொல்லுங்க... ப்ளீஸ் சொல்லுங்க சூர்யா" என சுமேதா கெஞ்ச

"கெஞ்சுடி கெஞ்சு நல்லா கெஞ்சு... இன்னும் நல்லா அழுதுட்டே கெஞ்சு... நான் கண்குளிர பாக்கணும்... கெஞ்சு" என சூர்யா சிரிக்க அவனின் இநத கொடூர முகத்தை காண இயலாமல் கண் மூடினாள் சுமேதா

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)


...

36 பேரு சொல்லி இருக்காக:

Arul Senapathi said...

OMG!

It is getting cruel now.

Well done anyways.

Thanks

என்னது நானு யாரா? said...

பேசின் பிட்ரிஜ் தாண்டி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி மெதுவா வண்டி வந்துக்கிட்டுப் போல இருக்கு! எல்லோருக்கும் இப்பவே டாட்டா சொல்லிட்டுப் பெட்டிகளை கையில தூக்கிட்டு இறங்க ரெடி ஆகிற மாதிரி ஒரு ஃபீலிங்க் வருது அப்பாவி அக்கா!

Gayathri said...

aahaa akkaa enna ippadi poguthu..nenga nejamave cinemakku kadhai ezhudhalaam

Guna said...

Kalakkal, next part-la flashback-a ?

தக்குடுபாண்டி said...

//"நீ சினிமாவுக்கு கதை எழுத போலாம்... ரெம்ப நல்லா ஸ்க்ரீன்ப்ளே சொல்ற// ...:) no comments idly mami avargaley!!..:)

Nithu Bala said...

Superb..waiting for the next part..

Mahi said...

கதை முடிவை நோக்கி படுவேகமாகப் போகுது.சீக்கிரம் அடுத்த பார்ட்டையும் ரிலீஸ் பண்ணுங்க புவனா!

நசரேயன் said...

//என சூர்யா சிரிக்க அவனின் இநத கொடூர முகத்தை காண இயலாமல் கண் மூடினாள் //

உங்க இட்லிய சாப்பிட்ட முகம் மாதிரி இருக்குன்னு சொன்னவே போதுமே

ஹேமா said...

இதை ஒரு புத்தகமா ஆக்கிடுங்க தங்கமணி.சிலரது ரசனைக்கு விரும்பிய கதை.தொடருங்கள்.

Krishnaveni said...

oh! romba bayama irukkae

siva said...

:)

LK said...

ஒழுங்கா இன்னும் ரெண்டே பகுதில முடிக்கற

Anonymous said...

இது இன்னுமா முடியல? அப்பாவி தங்கமணி டவுன் டவுன்.

//LK சொன்னது…
ஒழுங்கா இன்னும் ரெண்டே பகுதில முடிக்கற //
இல்லேன்னா கார்த்தி சார் பண்ணற முறுக்கு அனுப்பி வைச்சுடுவோம்.

//நசரேயன் சொன்னது…
//என சூர்யா சிரிக்க அவனின் இநத கொடூர முகத்தை காண இயலாமல் கண் மூடினாள் //

உங்க இட்லிய சாப்பிட்ட முகம் மாதிரி இருக்குன்னு சொன்னவே போதுமே //
க்ளாஸ் மாமு. ஹா ஹா ஹா. சிரிச்சு வயிறு வலிக்குது.

- Ana

Kousalya said...

//ஹேமா சொன்னது…
இதை ஒரு புத்தகமா ஆக்கிடுங்க தங்கமணி.//

ஹேமா சொன்னது தான் என் விருப்பமும்....!! அருமையா இருக்கிறது தோழி.

ஹுஸைனம்மா said...

கோவம் கோவமா வருது - சூர்யா மேல இல்லை, உங்க மேல!! இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே??!! :-((

மார்கண்டேயன் said...

தாயி, ஏதோ 'நெடுந்தொடருக்கு' அச்சாரம் வாங்கிர்ப்பீங்க போல, எப்டியும் ஒரு, ஒரு வருசம் இழுத்துடுங்க

Anonymous said...

super ..waiting for the next part ..thanks bhuvana .
sandhya

கோவை ஆவி said...

இந்த சூர்யா யாரு? - அனிதாவோட கசின் பிரதரா? ( அங்க ஒரு loose end இருக்கு)

நல்லா கொண்டு போறீங்க புவனா!!

அன்னு said...

Hmm....Increasing suspense...I think you had a resolution to finish this by this September....haven't you?

vanathy said...

super. continue....

மோகன்ஜி said...

கலக்குறீங்க!

Venkatesh said...

என்ன ஒரு கொடூரம்!.... அடுத்த பதிவு எப்போ தங்கமணி அவர்களே?

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்

@ என்னது நானு யாரா? - ஆஹா... எனக்கு பேசின் பிரிஜ் எல்லாம் தெரியாதுங்கோ... வடகோவை மேம்பாலம் தான் தெரியும்... ஹா ஹா ஹ... தேங்க்ஸ் வசந்த்

@ Gayathri - சினிமாவுக்கு கதை எழுதறதா... அது சரி... அது ஏற்கனவே பாவமா இருக்கு... விட்டுடுவோம் காயத்ரி... தேங்க்ஸ்பா

அப்பாவி தங்கமணி said...

@ Guna - நெக்ஸ்ட் பார்ட் என்னனு நீங்களே பாருங்க... இப்ப போடறேன்

@ தக்குடு - இதுக்கு நீ கமெண்ட்ஏ சொல்லி இருக்கலாம் கல்லிடை கலக்கல் பாண்டி... ஹா ஹா அஹ (அட இநத பேரு நல்லா இருக்கே)

@ Nithu Bala - ஸூர்... இன்னிக்கி போட்டுடறேன் நித்து

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - இதோ இன்னைக்கே போட்டுட்டேன் மகி... தேங்க்ஸ்

@ நசரேயன் - ஹா ஹா ... அதெல்லாம் உங்களுக்கே புரியுமேன்னு தான் தனியா சொல்லல... (என்கிட்டயேவா?...ஹா ஹா அஹ)

@ ஹேமா - //சிலரது ரசனைக்கு// ரெம்ப சரியா சொன்னீங்க... அப்படி செஞ்சா விடாம எல்லாரையும் கொடுமைப்படுத்த முடியாதே... ஜஸ்ட் கிட்டிங்... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - ஆஹா... உங்களுக்கே பயமா வேணி... தேங்க்ஸ்

@ siva - (:

@ LK - அடப்பாவி எப்பபாரு இப்படி மெரட்டிட்டே இருக்கே... இரு இரு திவ்யாகிட்ட சொல்லி தர்றேன்... (இப்பவெல்லாம் அப்பாக்கள் தான் கொழந்தைகள பாத்து பயந்துகறதா ஒரு நியூஸ் வந்தது... ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - என்னமா இன்னும் "பெயரில்லா" தானா? கார்த்தி சார் முறுக்கு வேற செய்வாரா? ஆஹா எனக்கு தெரியாதே... என் இட்லிய பத்தி சொன்னா போதுமே... ஒரே ஆனந்தம் தான் இல்ல... ஏய்......................டெண்சன்ஸ் ஆப் இந்தியா

@ Kousalya - ரெம்ப நன்றிங்க கௌசல்யா

@ ஹுஸைனம்மா - ஐயோ சூர்யா அப்படி செய்யறதுக்கு நான் என்ன செய்யட்டும்... நான் பாவம் அப்பாவி யு நோ... (ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@ மார்கண்டேயன் - ஹா ஹா ஹா... ஒரு வருஷம் எல்லாம் தாங்காதுங்க சார்... அப்புறம் ப்ளாக்ஐ கொன்னுடுவாங்க எல்லாரும் சேந்து

@ sandhya - ரெம்ப தேங்க்ஸ் சந்த்யா

@ கோவை ஆவி - அப்படியா... நல்ல ஐடியா தான்... வேற என்ன எல்லாம் possibillities னு யோசிச்சு பாருங்க ஆனந்த்... தேங்க்ஸ் அ லாட்

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - resolution? september? ஐயோ நான் இப்போ சொன்னேன்... சீக்கரம் முடிக்கறேனு தானே சொன்னேன்... (but you see still 11 more months to september I say... ha ha ah... just kidding...will finish too Annu... thanks for reading it through)

@ vanathy - தேங்க்ஸ் வாணி

அப்பாவி தங்கமணி said...

@ மோகன்ஜி - நன்றிங்க

@ Venkatesh - இதோ இன்னிக்கி போட்டுடறேன்ங்க... நன்றிங்க

Venkatesh said...

அடடா சஸ்பென்ஸ் தாங்க முடியலடா சாமீ !!!

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா சொன்னது…

கோவம் கோவமா வருது - சூர்யா மேல இல்லை, உங்க மேல!! இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே??!! :-(( /

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - ha ha...will post next part soon Venkatesh

@ ஜெய்லானி- ahaa...repeataaaa? super...

Ananthi said...
This comment has been removed by the author.
Ananthi said...

Suspense nalla irukku paa :-))

அப்பாவி தங்கமணி said...

Thanks Ananthi

Post a Comment