Wednesday, October 06, 2010

அதே கண்கள்... (பகுதி 16)

"ஆமா டிராமா போட்டேன்... நீ நடு காட்டுல கண்ணுல தெரியறதை எல்லாம் பாத்து பயந்து நடுங்கி சித்ரவதைபட்டு சாகணும்னு தான் கண்ணுல கட்டி இருந்ததை மட்டும் எடுத்தேன்..." என்றவனின் வார்த்தைகள் உயிர் வதையாய் கொல்ல

"அப்படி கொடுமையா நான் சாகணும்னு நீங்க நெனைக்கற அளவுக்கு நான் என்ன பாவம் பண்ணினேன் சொல்லுங்க... ப்ளீஸ் சொல்லுங்க சூர்யா" என சுமேதா கெஞ்ச

"கெஞ்சுடி கெஞ்சு நல்லா கெஞ்சு... இன்னும் நல்லா அழுதுட்டே கெஞ்சு... நான் கண்குளிர பாக்கணும்... கெஞ்சு" என சூர்யா சிரிக்க அவனின் இநத கொடூர முகத்தை காண இயலாமல் கண் மூடினாள் சுமேதா

"ப்ளீஸ் சூர்யா... போதும்... என்னால தாங்க முடியல... " என்றவள் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் வாய் விட்டு  கதறினாள்

சூர்யா தனக்கு எதுவும் சம்மந்தம் இல்லை என்பது போல எதுவும் பேசாமல் அறை  கதவை  சாத்திவிட்டு  பால்கனியில் சென்று அமர்ந்தான்

சுமேதா அழுது அழுது ஓய்ந்து உறங்கினாள் சோபாவில் அமர்ந்தவாறே
_____________________________________
மறுநாள் விழித்ததும் எல்லாம் கனவோ, அப்படி இருந்தால் நன்றாக  இருக்குமே  என  தோன்ற  சூர்யாவை தேடினாள் சுமேதா

பால்கனியில் அமர்ந்த வாக்கிலேயே  உறங்கி கொண்டு இருந்தவனை காண எதுவும் கனவல்ல என்பது புரிய சோர்ந்து போனாள்

பால்கனி கதவருகில் வந்து நின்றவள் இப்போது தான் செய்ய வேண்டியது என்னவென புரியாமல் உறங்கும் கணவனை கண்ணெடுக்காமல் பார்த்தாள்

நேற்று அத்தனை கொடூரமாய் பேசியது என் சூர்யா தானா, இப்படி குழந்தை போல் சாந்தமாய் உறங்கும் சூர்யா தானா என தன்னையே நம்ப இயலாமல் இமைக்க மறந்தும் நின்றாள்

மூடிய அவன் கண்களுக்குள் கரு விழி அசைய சுமேதா அந்த இடத்தை விட்டு அகன்றாள்
__________________________________________


சுமேதா சமையல் அறைக்குள் நுழைய "அடடே என்னமா இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து இருக்கலாமே சுமேதா" என சூர்யாவின் அன்னை கனிவுடன் உரைக்க

"இல்லங்க அத்தை, எப்பவும் நேரமே எழுந்து அப்படியே பழகிடுச்சு" என வலிய புன்னகைக்க முயன்றாள்

"நல்ல பழக்கம் தான் சுமி. என் புள்ளைக்கும் கொஞ்சம் இந்த பழக்கத்த சொல்லி குடு. வேலைக்கி போறன்னக்கி கூட தேவல. லீவானா அவ்ளோ தான், பத்தானாலும் எழுந்துக்க மாட்டான்" என தன் மகன் மீது புகார் வாசிக்க தனக்கு அத்தனை உரிமை உங்கள் பிள்ளையிடம் இல்லை என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கினாள்

நடந்ததை கூறி அவன் அன்னையை வேதனை அடைய செய்ய ஏனோ மனம் வரவில்லை

மருமகள் எதுவும் பேசாமல் குழப்பமான முகத்துடன் நிற்க "என்னமா? என்னாச்சு... வீட்டு ஞாபகமா?" என பெரியவள் கேட்க

தன் வாழ்வே கேள்விக்குறியாய் தோன்றியவளுக்கு பெற்றோரின் நினைவு கூட வரவில்லை என்பதை கூற இயலாமல் "இல்லைங்க அத்தை... ஒண்ணுமில்ல" என முறுவலித்தாள்

"சரிம்மா... இந்தா காபிய அவனுக்கு கொண்டு போய் குடு, உனக்கும் சேத்து மேலேயே எடுத்துட்டு போய்டு" என காபி கோப்பை அடங்கிய ட்ரேயை அவளிடம் கொடுத்தாள்
______________________________________

ஏதோ புலியின் குகைக்குள் நுழையும் மான் போல் மருள விழித்தபடி படி ஏறினாள் சுமேதா

நேற்று போல் இன்றும் கடுமையாய் பேசினால் தன் மனதிற்கு தாங்கும் சக்தி இருக்குமா என எண்ணிய கணம் இதயம் வேகமாய் துடித்தது

இயல்பில் நல்ல மனோதிடம் உள்ளவள் தான் என்ற போதும் தன் மனதில் எல்லாமாய் வரித்து கொண்டவனின் கோபமுகத்தை தாங்க இயலாமல் தடுமாறினாள்

அறைக்குள் சூர்யாவை காணாமல் பால்கனியில் காண ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பவன் போல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவனை காண மனதிற்குள் இரக்கம் சுரந்தது

அவன் அருகில் இருந்த காபி டேபிள் மீது ட்ரேயை வைத்தவள் தானும் ஒரு கோப்பையை எடுத்து கொண்டே அவனுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள்

அதை எதிர்பாராதவன் போல் ஒரு கணம் அதிர்ச்சியாய்  அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் எழுந்தான்

"காபி..." என அவள் கோப்பையை எடுத்து நீட்ட

"தேவையில்லை" என்ற பாவனையுடன் அங்கிருந்து விலகினான்

தாயை தொலைத்த பிள்ளை போன்ற அந்த தோற்றம் மனதை பிசைந்தது. என்னவென கேட்கவும் அச்சமாய் மௌனமானாள்

அவன் அலுவலகம் கிளம்பி செல்லும் வரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் பேச முயலவில்லை

"ஏண்டா இன்னிக்கி ஒரு நாள் லீவ் போட்டா என்ன?" என அவன் அன்னை கேட்க

"தினமும் சும்மா லீவ் போட முடியாதும்மா.. வேலை இருக்கு" என கிளம்பினான்

அவன் கிளம்பி சென்றதும் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தாள் சுமேதா. ஏன் இப்படி தோன்றுகிறது என யோசித்தவள் அவன் செல்லும் வரை நேற்று  போல் ஏதேனும் வேதனையுற பேசி விடுவானோ என்ற பயம் மனதில் இருந்ததே காரணம் என உணர்ந்தாள்

அதன் பின் அவன் பேசிய பேச்சுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியுமென தேட முயன்றாள்

யாருக்கும் மனதினில் கூட துரோகம் செய்யாத எனக்கு ஏன் இநத தண்டனை என மருகினாள். ஆனால் காரணமின்றி சூர்யா அப்படி நடந்து கொள்ள என்ன இருக்கிறது என புரியாமல் தவித்தாள்

தன் இருபது வருட வாழ்வின் ஒரு ஒரு நிகழ்வையும் மனதில் கொண்டு வந்து ஏதேனும் தன்னையும் அறியாமல் தவறு செய்தோமா  என அலசினாள். எதுவும் தோன்றாமல் அடுத்து என்ன செய்வதென தடுமாறினாள்

சட்டென ஒரு விசயம் மனதில் வர அதுவாய் இருக்குமோ என தோன்ற, அதுவாய் தான் இருக்கணும் என தீர்மானத்திற்கு வந்தாள்

மாலை சூர்யா வந்ததும் அதை பற்றி பேசி தெளிவு படுத்திட வேண்டுமென முடிவு செய்தாள்
______________________________________

மாலை அவன் வரவிற்காக ஆவலாய் காத்திருந்தவள் இரவு நெருங்கியும் வராமல் போக மனம் சோர்ந்தாள்

மருமகளின் முக வாட்டத்தை கண்ட சூர்யாவின் அன்னை "எப்பவும் இப்படி தான் சுமேதா. வேலைன்னு வந்துட்டா நேரம் காலம் தெரியாது இவனுக்கு"என மகனை குறை சொல்வது போல் சுமேதாவை சமாதானம் செய்ய முயன்றாள்

சுமேதா எதுவும் பேசாமல் நிற்க "போன் பண்ணி பாரேம்மா" என அவன் அன்னை கூற

"சரிங்க அத்தை" என தொலைபேசியை எடுத்து அவன் செல் எண்ணுக்கு அழைத்தாள்

அழைப்பு எடுக்க படாமலே நின்றது. மேலும் இரண்டு முறை முயன்று விட்டு பேசியை தாங்கியில் வைத்தாள்

அவளின் முகத்தில் இருந்தே அவன் பேசவில்லை என்பதை கண்டுகொண்ட சூர்யாவின் அன்னை "சில சமயம் எதாச்சும் மீட்டிங்ல இருந்தா போன் சைலண்ட்ல வெச்சுடுவாம்மா.. அவனே கூப்பிடுவான் பாரு கொஞ்ச நேரத்துல" என ஆறுதலாய் பேச முயன்றான்

சுமேதா சரி என்பது போல் தலை அசைத்து விட்டு மேலே உள்ள அறைக்கு சென்றாள்

சுமேதா அகன்றவுடன் சூர்யாவின் அன்னை தன் கணவரிடம் பிள்ளையை பற்றி புகார் வாசித்தார்

"என்ன புள்ளைங்க இவன். பாவம் இநத பொண்ணு, நம்ம வீடு அவளுக்கு புதுசு தானே இன்னும். கொஞ்ச நாளைகாச்சும் வேலை விட்டு நேரத்துல வருவோம்னு இருக்கா இவனுக்கு... ச்சே" என சலித்து கொள்ள

"அவன் கல்யாணத்துக்கு வேற லீவே போட்டானில்லையா ராதா. வேலை இருக்கும் போல, இல்லேனா வேணும்னேவா லேட்டா வருவான்"

"என்னமோ போங்க... இநத காலத்து பிள்ளைகள புரிஞ்சுக்கவே முடியல. மணி பத்தாச்சு, இன்னும் என்ன வேலையோ. சரிங்க, நான் பிரஷர் மாத்திர போட்டுட்டு படுக்கறேன். அவன் கிட்ட சாவி இருக்கு. நீங்க முழிச்சுட்டு இருக்க வேண்டாம்" என எழுந்து சென்றாள்
______________________________________

நேரம் பன்னிரண்டை நெருங்க தன்னையும் அறியாமல் கட்டிலில் உட்கார்ந்த வாக்கிலேயே சரிந்து உறங்க தொடங்கினாள் சுமேதா

ஒரு மணி போல் வீட்டிக்கு வந்தான் சூர்யா. வீடே இருளில் மூழ்கி இருக்க மேல் அறையில் மட்டும் வெளிச்சம் இருப்பதை கண்டு மெதுவாய் உள்ளே வந்தான்

உட்கார்ந்த நிலையிலேயே உறங்கி கொண்டிருந்த சுமேதாவை அருகில் சென்று  கண்ணெடுக்காமல் பார்த்தான்

ஏ சி குளிரில் உடல் குறுகி இருந்தவளுக்கு போர்வையை போர்த்தி விட தோன்றிய கணம் ஏதோ நினைவில் மனதில் கோபம் தலையெடுக்க அவளை விட்டு விலகினான்

குளியலறையில் தண்ணீர் விழும் சத்தத்தில் கண் விழித்தாள் சுமேதா. சூர்யா வந்துவிட்டான் என்பதை உணர்ந்தவள் அவனிடம் பேச தன்னை தயார் செய்து கொண்டாள்

அறைக்குள் வந்தவன் சுமேதா எழுந்து அமர்ந்து இருப்பதை பார்த்தும் பார்க்காதவன் போல் நகர "சாப்பிட எடுத்து வெக்கட்டுமா?" என சுமேதா பேச்சை தொடங்க

"வேண்டாம்" என்றான்

"சாப்ட்டீங்களா?"

"யாரோட அக்கறையும் எனக்கு தேவையில்ல" என்றான் அலட்சியமாய்

அவன் எதுவும் உண்ணவில்லையோ என மனதில் வேதனை தோன்ற இப்போது அதை விட முக்கியமாய் பேச வேண்டியது மனதில் தோன்ற "நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் சுமேதா

"உன்கிட்ட பேச எனக்கு எதுவுமில்ல" என்றான் விட்டேத்தியாய்

"சூர்யா... ப்ளீஸ்" என அவள் அவனருகில் வர

"ஏய்... ஸ்டாப் இட்... " என நேற்று கண்ட அதே கொடூர முகம் காட்டி தலையணை எடுத்து கொண்டு பால்கனி நோக்கி  சென்றான்

"சூர்யா ப்ளீஸ்... நீங்க என்னை பத்தி தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க"

"உன்னை பத்தி ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...அதுவரைக்கும் போதும்"

"சூர்யா... அருண் விசயம் தெரிஞ்சு தானே இப்படி நடந்துக்கறீங்க... என் மேல எந்த தப்பும் இல்ல... ப்ளீஸ் நம்புங்க" என்றவளை இமைக்காமல் பார்த்தான்

(தொடரும்...)

....

27 பேரு சொல்லி இருக்காக:

Arul Senapathi said...

Another Twist now as usual.

Let's wait for the next chapter to see what is going on.

Thanks

Gayathri said...

aahaa akka enakku tension thangala akka pesama sekrama itha mudichudunga nalla romance kadhaiya ezhudhuna...haahaaa

note : sumetha rombha paavam pottu ippadi vadhaikathel please...surya thalala nannaa kutti chamuthu husbandaa mathidungo

Krishnaveni said...

kadai romba interestingaa irukku Bhuvana, next post please.....

நசரேயன் said...

ம்ம்ம்

Mrs.Menagasathia said...

இன்னிக்குதான் எல்லா தொடரையும் படித்தேன் புவனா,ரொமப் நல்லா எழுதுறீங்க,பாராட்டுக்கள்!!

கோவை ஆவி said...

ரைட்டு! மறுபடியும் தொடருமா?? அப்போ சூர்யாவும் நல்லவன் தானோ??
கொளப்புராங்கப்பா!!

BalajiVenkat said...

Nadakattum nadakattum ... Yaravathu indha kadha mudinchodaney sollungo mothama paduchukiren namakku intha over suspenselam udambukku aagadhu.... :P

LK said...

nadakattum

siva said...

ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...
ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...
ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...

entha thodar eppo mudiathuuuuuuu....

நல்லா எழுதுறீங்க
பாராட்டுக்கள்!! (eppudi usupethinalum evanga thodra mudikkamatrangaley...)

siva said...

athan kongal padam alagaerukku.......

yaar antha kongal???

சௌந்தர் said...

நல்லா தொடருங்கள்........

Anonymous said...

//siva சொன்னது…

ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...
ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...
ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...

entha thodar eppo mudiathuuuuuuu....

நல்லா எழுதுறீங்க
பாராட்டுக்கள்!! (eppudi usupethinalum evanga thodra mudikkamatrangaley...)//

ha ha ha. We all should be awarded for the most patient people on the earth for reading this story. ha ha ha.

-Ana

Still The Anonymous. ha ha ha

அன்னு said...

yappaa...bayangara vegaththula pooguthu puvana....superaa ezutharinga. appa nalaikku next partaa? nadaththunga :))

Ananthi said...

சூப்பர்... அப்படியே.. ஒரு படம் பார்த்த உணர்வு வந்தது...
எனக்கு ரமணி சந்திரன் நாவல் என்றால் ரொம்ப பிடிக்கும்...
உங்கள் கதை எழுதும், திறனும் உண்மையில் அருமை..

ரசித்து படித்து தொடர்கிறேன்... :-))))

வித்யா said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_07.html

மார்கண்டேயன் said...

புவனா, நீங்க ஏன் கேள்விக்குறியோடவே தொடர்றீங்க ?

ஸ்ரீராம். said...

இப்போதைக்கு முடியாது என்பது மட்டுமில்லை, தப்பு ஒவ்வொருவர் மேலயும் மாறிகிட்டே இருக்கு... சூர்யா இப்படிப் பண்ணிய பிறகும் சுமேதாவால் அவனிடம் நம்பிக்கையாய் இருக்க முடிவது ஆச்சர்யம்தான்.

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi- தேங்க்ஸ்ங்க அருள்

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஹா ஹா ஹா... விட்டா சுமேதாவுக்கு லாயர் ஏற்பாடு பண்ணுவ போல இருக்கே காயத்ரி... சீக்கரம் முடிக்கறேன்... தேங்க்ஸ்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - ம்ம்ம்

@ Mrs.Menagasathia- ரெம்ப நன்றிங்க மேனகா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - எஸ் எஸ்...வாங்க ஆனந்த்... தேங்க்ஸ்

@ BalajiVenkat- சரிங்க சார் அப்புறம் வாங்கோ

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஓடட்டும்... ஹா ஹா அஹ

@ siva - ஹா ஹா ஹா... நன்றி... அந்த படம் யாரோ ஒரு வெள்ளகாரி அம்மணிது... விசாரிச்சு சொல்றேன்... ஆட்டோ அனுப்ப அட்ரெஸ் கேட்டா குடுத்துடறேன்

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - நன்றிங்க

@ அனாமிகா - அடிப்பாவி "பெயரில்லா" வாவும் எனக்கு எதிரி தானா?

@ அன்னு - சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடறேன்... தேங்க்ஸ் அன்னு

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - அட நீங்களும் நம்ம RC fan ஆ? naan ஆஸ்தான fan ...அவங்க புக்ஸ் அல்மோஸ்ட் எல்லாமும் இருக்கு என்கிட்ட ... தேங்க்ஸ் ஆனந்தி for your continued support

@ வித்யா - ரெம்ப ரெம்ப நன்றிங்க வித்யா... thats a great honor

@ ஸ்ரீராம் - நன்றிங்க

Ananthi said...

///@ Ananthi - அட நீங்களும் நம்ம RC fan ஆ? naan ஆஸ்தான fan ...அவங்க புக்ஸ் அல்மோஸ்ட் எல்லாமும் இருக்கு என்கிட்ட ... தேங்க்ஸ் ஆனந்தி for your continued சப்போர்ட்///

எஸ் எஸ்... மீ டூ.. லவ் ரமணி சந்திரன் புக்ஸ். :-)))
வாவ்... சூப்பர் அப்போ உங்க வீட்டுக்கு வந்துற வேண்டியது தான்..

ஜெய்லானி said...

தொடரோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ தொடர்.. ஆனா படிக்க நல்லா இருக்கு. :-))))) சஸ்பென்ஸ் திலகம் புவனா வாழ்க......வாழ்க.வாழ்க.....!!

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - you're most welcome madam

@ ஜெய்லானி - Thanks a lot Jeilaani

Post a Comment