Monday, October 11, 2010

அதே கண்கள்... (பகுதி 17)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"சூர்யா ப்ளீஸ்... நீங்க என்னை பத்தி தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க"

"உன்னை பத்தி ரெம்ப தெளிவா புரிஞ்சுட்டேன்...அதுவரைக்கும் போதும்"

"சூர்யா... அருண் விசயம் தெரிஞ்சு தானே இப்படி நடந்துக்கறீங்க... என் மேல எந்த தப்பும் இல்ல... ப்ளீஸ் நம்புங்க" என்றவளை இமைக்காமல் பார்த்தான்

அந்த பார்வையில் எதையும் புரிந்து கொள்ள இயலாமல் தவித்தாள் சுமேதா

"சூர்யா ப்ளீஸ் நம்புங்க என்மேல எந்த தப்புமில்ல. அருண் தான் என் பின்னால சுத்தினான்..."

"ஆமா நீ பெரிய ரதி. உன் பின்னாலே ஊரே தான் சுத்தி இருக்கும்" என்றான் கோபம் விலகாமல்

"ஐயோ... நான் எப்படி புரிய வெக்கறது உங்களுக்கு. வேணும்னா என்னோட கசின் கணேஷ்கிட்ட கேட்டு பாருங்க. அவருக்கு எல்லாம் தெரியும்"

"வேலிக்கி ஓனான் சாட்சி" என ஏளனமாய் சிரித்தான்

"ப்ளீஸ் சூர்யா. தப்பா புரிஞ்சுகிட்டு நம்ம வாழ்கையே நாசம் பண்ணிடாதீங்க ப்ளீஸ்"

"ஏய் இங்க பாரு... நம்ம வாழ்க்கைனு என்னையும் சேக்காத"

"அப்ப ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"உன்னோட சுய ரூபம் தெரியாத யாரோ ஒருத்தன் பாதிக்க படக்கூடாதுன்னு  தான்" சிறிதும் பிடிகொடுக்காமல் அவன் பேச

"சூர்யா  ப்ளீஸ். சத்தியமா என் மேல எந்த தப்புமில்ல நம்புங்க"

"நம்பறதா? உன்னையா? ஹும்... " என ஏளனமாய் ஒரு பார்வை பார்க்க அதை தாங்க முடியாமல் சுமேதாவின் கண்களில் நீர் துளிர்த்தது

அங்கு நிற்க பிடிக்காமல் விலகினான் சூர்யா. அவனை விலக விடாமல் கதவை அடைத்து நின்றாள் சுமேதா

"ஏய் வழி விடு "

"முடியாது... என் பக்க ஞாயத்த நீங்க புரிஞ்சுக்கற வரை  நான் விட போறதில்ல"

"ஏய் நிறுத்துடி... சும்மா வேஷம் போடாத"

"நான் என்ன வேஷம் போட்டேன்... அதை சொல்லுங்க"

"எல்லாமே வேஷம் தானே...தனியா சொல்ல என்ன இருக்கு? இப்ப பேசறது கூட வேஷம் தான்" என்றான் இரக்கமில்லாமல்

"உங்க மோட்டிவ் என்னை சித்ரவதை பண்றது தான்னா அதுக்கான காரணம் தெரிஞ்சுக்கற உரிமை எனக்கு இருக்கு. நீங்க இப்ப பேசறத பாத்தா அது அருண் பிரச்சனை இல்லைன்னு தோணுது" என்றவளை ஆச்சிர்யமாய் பார்த்தான்

"ரெம்ப புத்திசாலி தான், ஒத்துக்கறேன். அப்ப நீயே கண்டுபிடி... இல்ல இல்ல... உண்மைய ஒத்துக்கோ"

"மனசால கூட நான் யாருக்கும் எந்த துரோகமும் நினைச்சதில்ல...ப்ளீஸ்ங்க... தயவு செய்து சொல்லுங்க"

"சபாஷ்... நீ பேசாம சினிமால நடிக்க போகலாம். ஆஸ்கார் நிச்சியம்" என கேலி போல் கூற

"இங்க பாருங்க, தூக்கு தண்டனை கைதிக்கு கூட தான் எதுக்காக தண்டிக்கப்படறோம்னு தெரிஞ்சு தான் சாகறான். இது அதை விட கொடூரம்" என விசும்பியவளை கண நேரம் இமைக்காமல் பார்த்தான்

அவள் முகத்தில் தெரிந்த வேதனை தன்னை அசைப்பதை உணர்ந்தவனுக்கு அந்த உணர்வு கோபமாய் உருமாறியது

"இந்த நீலி கண்ணீர் எல்லாம் என்கிட்ட செல்லாது. இனி காலம் பூரா இந்த வேதனை தான் உனக்கு" என உரைத்தவனின் கண்களில் தெரிந்த கோபம் அவளை பலவீனமாக்க அந்த தருணத்தை பயன்படுத்தி அவளை கதவை விட்டு விலக்கி பால்கனிக்குள் சென்று வெளிப்பக்கம் தாளிட்டு கொண்டான் சூர்யா

அவனின் இந்த செய்கை அவளுக்கு மனதில் இருந்த நம்பிக்கையை முற்றிலும் குலைத்தது. ஏதோ தவறான புரிதல் பேசினால் சரியாகிவிடுமென சற்று முன் வரை நம்பிக்கையாய் இருந்தவளுக்கு மிக பெரிய ஏமாற்றமானது

எதுவும் வேண்டாம் என உதறிவிட்டு சென்று விட்டாலென்ன என ஒரு கணம் தோன்றியது. திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் பெண்கள் இல்லையா என தோன்றிய நேரம் வசந்தமாய் இருந்த அந்த மூன்று மாத காலம் கண் முன் வந்தது

திருமணம் முடிவாகி இவன் தான் உனக்கானவன் என மனதில் பதிந்து மனம் ஒருமித்து சந்தோசித்த அந்த மூன்று மாத அழகிய நினைவுகள் அவளை வெளியேற விடாமல் தடுத்தது

ஆனால் அது எல்லாம் கூட அவளை திருமணம் செய்ய தான் நடத்திய நாடகத்தின் ஒரு பகுதி என்கிறானே என சோர்ந்தாள்

இருந்த போதும் அந்த மூன்று மாத கால சந்திப்புகளில் அவன் கண்களில் தான் கண்டது நிச்சியம் உண்மையான நேசம் தான் என நம்பியது அவள் மனம். அப்படி இல்லை என்றாலும் தான் அவனை மனதில் வரித்தது நிஜம் தானே

அது நிஜமென்றால் அவனை விட்டு விலகுவது என்றாலும் கூட தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை அவனுக்கு உணர்த்திய பின் தான் விலக வேண்டும் என தீர்மானித்தாள் சுமேதா
__________________________________

மறுநாள் காலை எழுந்த சூர்யா நேற்று பேசிய பேச்சில் வீட்டை விட்டே சென்றிருப்பாளென  எண்ணியவாறே அறைக்குள் வந்தான்

அங்கு அவளை காணாமல் கீழே சென்று பார்க்கலாமா என தோன்றிய கணம் காபி ட்ரேயுடன் அறைக்குள் நுழைந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்

இயல்பிலேயே நல்ல நிறம், அழகிய பெரிய கண்கள், நீண்ட கூந்தல் என  பார்ப்பவரை இன்னொரு முறை பார்க்க தூண்டும் அழகு தான் சுமேதா

இன்று புதுமலர் போல் தலை குளித்து, ஈர கூந்தலை தளர பின்னி, பூச்சூடி, அவள் நிறத்தை எடுத்து காட்டும் பொன் மஞ்சள் நிற சேலையில் தேவதையாய் நின்றவளை இமைக்க மறந்து பார்த்தான்

அந்த பார்வையில் பழைய சூர்யாவை கண்டு கொண்ட சுமேதா புன்னகை முகத்துடன் "காபி" என அவன் முன் கோப்பையை நீட்ட அப்போது தான் கனவில் இருந்து விழித்தவன் போல் தன் உணர்வை மறைக்க முயன்று முகத்தில் அலட்சியத்தை கொண்டு வர முயன்றான்

சட்டென மாறிய அவனது முகபாவம் அவளுக்கு வேதனையை தர "காபி" என்றாள் மீண்டும் பார்வை தாழ்த்தியபடி

அவளுடன் கோப்பையை பெற்று கொள்ளாமல் விலகியவனை "கோபம் என்மேல தான. காபி உங்க அம்மா போட்டது தான்" என்றாள்

நேற்று போல் அவள் குரலில் நடுக்கமோ வேதனையோ இல்லாமல் ஏதோ தீர்மானித்தவளை போல் இருந்ததை கண்டுகொண்டான் சூர்யா

அவளின் தோற்றத்தில் ஒரு கணம் மயங்கி நின்ற தன் மீதே அவனுக்கு கோபம் பொங்கியது. அது அவள் மீதும் பாய்ந்தது

அவள் பக்கம் திரும்பியவன் "என்ன? அழுது சாதிக்க முடியாதத அலங்காரம் பண்ணி மயக்கி சாதிக்கலாம்னு முடிவு பண்ணிட்டயா" என கேலியும் கோபமும் கலந்த அவன் வார்த்தையில் அவள் கண்கள் நிறைந்தது

ஒரு கணம், ஒரே கணம் தான். பின் சுதாரித்து கொண்டாள்

"அவ்ளோ கேவலமா எங்க அம்மா என்னை வளர்க்கலை" என்றாள் பட்டென

அதை எதிர்பாராத சூர்யா தன் கோபத்தை காட்ட எதுவும் பேசத் தெரியாமல் அவள் கையில் இருந்த காபி கோப்பையை பறித்து தரையில் வீசினான்

"என்மேல இருக்கற கோபத்த அது மேல ஏன் காட்டுறீங்க?"

"ஏன்னா... நீ எனக்கு அதை விட அற்பமானவ" என அவளை வேதனை படுத்தவென்றே பேசினான்

அதை புரிந்து கொண்டவள் தன் உணர்வை வெளிக்காட்டாது சிதறிய கோப்பையை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்
__________________________________

அன்று மாலை மகளை பார்க்கவென சுமேதாவின் பெற்றோர் மற்றும் அவள் அண்ணன் எல்லோரும் வந்திருக்க சுமேதா மிகவும் மகிழ்வாய் இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள முயன்றாள்

அதிசயமாய் அன்று சூர்யாவும் நேரத்திலேயே அலுவலகம் விட்டு வந்து விட உண்மையிலேயே அவள் மனம் மிகவும் சந்தோசமானது

"என்ன சுமி? இங்க வந்து ரெண்டே நாளுல ரெண்டு கிலோ வெயிட் ஏறிட்ட போல இருக்கே. என்ன சூர்யா? போற போக்க பாத்தா வீட்டு கதவெல்லாம் பெரிசாக்கணும் போல இருக்கே" என அவள் அண்ணன் சுரேஷ் கேலி பேச

"போண்ணா நீ... பாரும்மா இந்த அண்ணன" என அவள் அன்னை தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள். எல்லோரும் அதை ரசித்து சிரித்தனர்

அப்போது அவளை கண்ட சூர்யா, பெற்றவள் அருகில் சிறு பிள்ளை போல் நிற்கும் இவளா தன் கோபத்திற்கு ஈடு கொடுத்து போராடுபவள் என நம்ப இயலாமல் பார்த்தான்

அவள் சிரித்த முகத்தில் ஒரு கணம் தன்னை மறந்து மனம் நெகிழ நோக்க அதே நேரம் சுமேதாவும் அவனை கண்ணோடு காண அவன் முகம் பாறையாய் இறுகியது

எதற்கு இநத கண்ணாமூச்சி ஆட்டமென புரியாமல் குழம்பினாள் சுமேதா

இப்படியே கோபமும் தாபமுமாய் ஒரு மாதம் கழிந்தது. தன் ஒவ்வொரு செய்கையிலும் அவளை தான் வெறுப்பதை பதிவு செய்ய முயன்றான் சூர்யா

அதை தன் அன்பான பார்வையால் / அணுகுமுறையால் தோற்கடித்தாள் சுமேதா. அது சூர்யாவின் கோபத்தை மேலும் அதிகமாக்கியது
_________________________________

அன்று பெரியவர்கள் இருவரும் ஏதோ நண்பர் வீட்டிற்கு சென்றிருக்க சூர்யாவும் அலுவலகம் சென்று விட ஏதோ புத்தகத்தை வைத்து கொண்டு நேரத்தை கொல்ல முயன்று கொண்டு இருந்தாள் சுமேதா

அதே நேரம் டெலிபோன் மணி அடித்தது

"ஹலோ"

"சுமி..." என பரிச்சயமான குரல் கேட்க

"சொல்லுமா... அப்பா அண்ணா எல்லாரும் ஆபீஸ் போயாச்சா?" என பெற்றவளின் குரல் கேட்ட மகிழ்ச்சி தெரிந்தது அவள் உற்சாகமான குரலில்
 
"ரெண்டு பெரும் கெளம்பியாச்சு சுமி. மாபிள்ள ஆபீஸ் போய்ட்டாரா?"

"ம்... கெளம்பிட்டாருமா"

"அத்த, மாமா?"

"யாரோ மாமாவோட பிரெண்ட்க்கு ஒடம்பு சரி இல்லைன்னு பாக்க போனாங்க அம்மா"

"சுமி... இப்படி இவங்க ரெண்டு பெரும் கிளம்பினப்புறம் தனியா இருக்கறப்ப தான் தோணும், இன்னும் கொஞ்ச நாள் உன்னை நம்ம வீட்டுலையே கல்யாணம் பண்ணாம கூட வெச்சுட்டு இருந்துருக்கணும்னு. படிச்சு முடிச்சதும் அனுப்பியாச்சு" என பெற்றவள் ஆதங்கமாய் கூற

"அப்படி செஞ்சிருந்தா என் வாழ்க்கை கூட நல்லா இருந்துருக்கும்மா" என வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கி கொண்டாள்

மகள் பதில் எதுவும் பேசாமல் போக அவள் மனம் வேதனையுற பேசி விட்டோமோ என பதறிய அவள் அன்னை  "சுமிம்மா... சும்மா மனசுக்கு பட்டத சொன்னேன்டா... வேற ஒண்ணுமில்ல...ஆனா அப்படி நெனச்சுருந்தா இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளைய தவற விட்டுருப்போமே" என மகளின் மனதிற்கு இதமாய் பேச முயன்றாள்

கண்களில் துளிர்த்த நீரை சுண்டியவள் "ஆமாம்மா" என குரலில் மகிழ்ச்சியை காட்ட முயன்றாள்

சற்று நேரம் ஏதேதோ பேசினார்கள் அன்னையும் மகளும்

திடீரென நினைவு வந்தது போல் "சுமி... சொல்ல மறந்துட்டனே. உன் பிரெண்ட் திவ்யா போன் பண்ணி இருந்தா. அவளுக்கு கல்யாணமாம் இன்னும் ரெண்டு மாசத்துல. உன்கிட்ட பேசணும்னு நம்பர் கூட வாங்கினா. பேசினாளா?" என கேட்க

"இல்லையேம்மா... ச்சே... எனக்கு இப்பவே அவகிட்ட பேசணும் போல இருக்கு" என்றாள் உற்ற தோழியின் நினைவில்

"பேசேன் சுமி" எனவும்

"என்கிட்ட அவ நம்பர் இல்லமா இப்போ" என்றாள் வருத்ததுடன்

"இரு இரு... அவ ஏதோ செல்போன் நம்பர் குடுத்தா. இங்க தானே வெச்சேன். இதோ கிடைச்சுடுச்சு, எழுதிக்கரயா" எனவும்

"ஒரு நிமிஷம் இரும்மா... பேப்பர் பேனா ஒண்ணும் பக்கத்துல இல்ல. எடுத்துட்டு வரேன்" என தொலைபேசியை  கீழே வைத்து விட்டு சென்றாள்

வரவேற்பறையில் எங்கும் பேனா சிக்காமல் போக மேலே தங்கள் அறைக்கு சென்றாள்

சூர்யாவின் கப்போர்டில் இருக்குமோ என எண்ணியவள்  "என் பொருட்களை ஏன் கலைக்கிறாய்" என கோபம் கொள்வானோ என ஒரு கணம் தயங்கியவள், இல்லை என்றால் மட்டுமென்ன கொஞ்சவா செய்கிறான் என அவன் கப்போர்டை திறக்க முயல அது பூட்டி இருந்ததை கண்டு ஆச்சிர்யமானாள்

பூட்டி வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறதென பார்க்கும் ஆர்வம் தலை தூக்க, ஒரு வழியாய் டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த சாவி கொத்தில் இதற்கான சாவியை கண்டுபிடித்து திறந்தாள்

அதில் சிறிய டிராயர் போன்ற அமைப்பு  இருந்ததை பார்த்து அதில் பேனா போன்ற பொருட்கள் இருக்குமென யூகித்து அதை திறந்தவள், அதிர்ச்சியில் மயங்கி விடாமல் இருக்க அதன் கதவை பற்றிக்கொண்டாள்...

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

....

36 பேரு சொல்லி இருக்காக:

LK said...

seekiram seekiram nalla olunga perusa potruka

சௌந்தர் said...

ரொம்ப நல்லா போகுது ஏன் இந்த பொண்ணுக்கு அடி கடி மயக்கம் வருதே எதாவது உடம்பு சரி இல்லையா? டாக்டர் கிட்ட கூப்பிட்டு போங்க

Venkatesh said...

கதையினை சுவாரஸ்யத்தை கூட்டுவதில் உங்கள மிஞ்ச யாரும் இல்லை, தங்கமணி அவர்களே!!!. சீக்கிரம் என்ன ரகசியம் என்று சொல்லிவிடுங்கள்.

BalajiVenkat said...

ATM ... Inum orey oru episode thaan ungaluku... Athukum mela suspence vacheenga ... Policela puduchu kodhuduven antha sumiya kadathinathu neenga thaannu ... Becareful.....

Arul Senapathi said...

Now, it is speeding. Awesome.

Is Bhavana's picture giving clues about the story?


Thanks

மார்கண்டேயன் said...

தொடர்ந்து, தொடர்ந்து தொடர வைக்கிறீங்களே, இதுதாங்க உங்களைப் பலர் பின்தொடர்வதற்கு காரணம் . . .

வாழ்த்துகள், சுவை குன்றாமல் தொடர்வதற்கு,

இதுக்காக, இன்னும் ஒரு பத்து

தொ

ரு
ம்

போடலாம்னு நெனச்சீங்க . . .வேற என்ன தொடர்ந்து படிக்க வேண்டியது தான், ஏன்னா மொத இருந்து படிச்சிட்டோம்ல . . . வேற வழி ???

மோகன்ஜி said...

நல்லாப் போய்கிட்டிருக்கு..எப்பிடிங்க இவ்வளவு நீளமாய் பொறுமையுடன் டைப் பண்றீங்க.அந்த ரகசியத்தை சொல்லுங்களேன்..
சரளமான எழுத்து நடை உங்களுடையது.

ஹுஸைனம்மா said...

It is good that u r not near me. Otherwise I donno what could've happened for stretching the suspense indefinitely... :-(

Mrs.Menagasathia said...

super bhuvana,very interesting...i'm waiting for next post...

அமைதிச்சாரல் said...

It is such a nice suspence bhuvi :-)

கோவை ஆவி said...

//அதில் சிறிய டிராயர் போன்ற அமைப்பு இருந்ததை பார்த்து அதில் பேனா போன்ற பொருட்கள் இருக்குமென யூகித்து அதை திறந்தவள், அதிர்ச்சியில் மயங்கி விடாமல் இருக்க அதன் கதவை பற்றிக்கொண்டாள்...//


ரத்தம் சொட்டச் சொட்ட அருணோட தலை இருந்துச்சா? (ஹா ஹா ஹா )

Gayathri said...

enna kodumai akka ithu ippadi suspense kuduthu..thodaruma? nallathu..akka sekram mudinga akka..ennala tension thaanga mudiala

பத்மநாபன் said...

சூர்யா கதை பெரிய கதையல்லா இருக்கு..ஒரு முடிவோடத்தான் இருப்பான் போல...

டிராயர்க்குள் இருந்தது பழைய சினிமா மாதிரி கைத்துப்பாக்கின்னு சொல்லீராதிங்க..நடு சினிமா மாதிரி வேறு பெண்ணின் படம் ன்னு சொல்ல போறிங்களா...இல்ல புதுப்படம் மாதிரி ...சரி சஸ்பென்ஸ் கதையிலேயே வரட்டும்.......

ரஜின் said...

சகோதரி தங்கமணி அவர்களே.நான் தங்களின் வளைபூவின் தொடர் வாசகன்.ரங்கமணிகளை அதான் எங்களை பற்றி,தாங்கள் எழுதிய பல பதிவுகளை படித்தவன் ஏனோ,இந்த அதே கண்கள் தொடர்பதிவை மட்டும் தொடாமல் விட்டிருந்தேன்..எதார்த்தமாக் இன்று 17வது பாகத்தில் கை பட்டுவிட,ஆர்வம் தொற்றிக்கொண்டது...
அவ்ளோதா...இன்னக்கே..1-17ஐயும் படிச்சு முடிச்சுட்டேன்..நான் 6மணிக்கு மேல பிஸிங்கரதால,நான் பிரியா இருக்குர இந்த 9.00 டு 5.00 அ யூஸ்புல்லா யூஸ்பன்னிக்கிட்டேன்..என்னமோ தெர்ல,என் மேனேஜர் மட்டும் என்ன க்ராஸ் பண்ணும் போதெல்லாம்,அவர் கண்ணுல கொல வெறி தெரிஞ்சது.என்னவா இருக்கும்????நாந்தா "ஒன்னுமே" பண்ணலியே????
ஒரு எடத்துல கூட நிக்காம வெறித்தனமா படிச்சாச்சு..இன்னக்கே அந்த 26வது பதிவையும் போட்டுடீங்கன்னா...நல்லா இருக்கும்..என்னடா 26அ கேக்குரானேன்னு நெனக்கிறீங்களா?உங்க அறிவுதிறன பாக்கும் போது கண்டிப்பா நீங்க கணக்குல புலியாத்தா இருக்கனும்.26வது பதிவ போடனும்னா,நீங்க கேப்ப கண்டிப்ப புல்லப் பண்ணிருவீங்கன்னு ஒரு நம்பிக்க தா...
ஒருவேல "3அ 3ஆல பெருக்கினா 3ன்னு" உங்க மேத்ஸ் டீச்சர் சொல்லி குடுத்து இருந்தா?ஸாரி...

சரி வந்தன்னைக்கே ரெம்ப பேசுரேன்னு நெனைக்கிறேன்...
நன்றி...

pin குறிப்பு...
ஆனா ஒரு இடத்துல கூட கதைல நீங்க இட்லி சுடல(அதாவது சொதப்பல)..பரவாஇல்ல.சுமியவாவது நல்ல இட்லி(நெஜ இட்லிய - கதைலயாவது........) சுட வச்சுருங்க...இல்லானா ஒரு அரிசி பருப்பு சாதமாவது........???(ஹ்ம்...நா என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பன்றேன்னு சொல்ர உங்க மைண்ட் வாய்ஸ கேச் பண்ணிட்டேன்.ஆனா யார்ட்டையும் சொல்ல மாட்டேன்)

அப்பாவி தங்கமணி said...

@ LK - தேங்க்ஸ் சாரே...

@ சௌந்தர் - நல்லா டாக்டர் யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க சௌந்தர்... ஹா ஹா ஹா

@ Venkatesh - ரெம்ப நன்றிங்க வெங்கடேஷ்... you always got a way to say it...thanks

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat- ஹா ஹா ஹா.... எந்த ஊரு போலீஸ்?

@ Arul Senapathi- ஹா ஹா அஹ... எப்படி எல்லாம் யோசிக்கறீங்க அருள்? சூப்பர்... அப்படி கூட clue குடுக்கலாமா... ஐடியாவுக்கு தேங்க்ஸ்ங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ மார்கண்டேயன் - ரெம்ப நன்றிங்க மார்கண்டேயன்...

//வேற என்ன தொடர்ந்து படிக்க வேண்டியது தான், ஏன்னா மொத இருந்து படிச்சிட்டோம்ல . . . வேற வழி ???//

அதானே... வேற வழி... இதுதான் இடுக்கண் வருங்கால் நகுக போல இருக்கு... சூப்பர்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ மோகன்ஜி - நன்றிங்க மோகன்ஜி

//எப்பிடிங்க இவ்வளவு நீளமாய் பொறுமையுடன் டைப் பண்றீங்க.அந்த ரகசியத்தை சொல்லுங்களேன்..//

நெஜமா கைல தாங்க டைப் பண்றேன்... (நோ கல்லு ப்ளீஸ்...)

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹா அஹ அஹ... எஸ்கேப்...

@ Mrs.Menagasathia - தேங்க்ஸ்ங்க மேனகா

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - கடவுளே... ஏன் ஆனந்த் இப்படி எல்லாம்? யெப்பா சாமி...மீ எஸ்கேப்... (ஹா ஹா)

@ Gayathri - ஹா ஹா ஹா... நோ டென்ஷன் காயத்ரி... சீக்கரம் போடறேன்... தேங்க்ஸ்மா

@ பத்மநாபன் - ஹா ஹா ஹா..சூப்பர் கற்பனை திறன் உங்களுக்கு... ம்ம்ம் ...என்ன சொல்லலாம்னு நானும் யோசிச்சுட்டு தான் இருக்கேன்... நாளைக்கு சொல்றேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ரஜின் -
//சகோதரி தங்கமணி அவர்களே.நான் தங்களின் வளைபூவின் தொடர் வாசகன்//
வாவ்... ரெம்ப நன்றிங்க

//அவ்ளோதா...இன்னக்கே..1-17ஐயும் படிச்சு முடிச்சுட்டேன்..//
ரெம்ப பொறுமை தான் உங்களுக்கு... தேங்க்ஸ் அ லாட்

//நான் 6மணிக்கு மேல பிஸிங்கரதால,நான் பிரியா இருக்குர இந்த 9.00 டு 5.00 அ யூஸ்புல்லா யூஸ்பன்னிக்கிட்டேன்//
Join the club...ha ha ha

//என்னமோ தெர்ல,என் மேனேஜர் மட்டும் என்ன க்ராஸ் பண்ணும் போதெல்லாம்,அவர் கண்ணுல கொல வெறி தெரிஞ்சது.என்னவா இருக்கும்//
ஹா ஹா அஹ... அவர் கிட்டயே கேளுங்க என்னனு... அப்புறம் கொல வெறி தெரியாது... கொலையே தெரியும்... ஹா ஹா அஹ...மீ எஸ்கேப்..

//ஒருவேல "3அ 3ஆல பெருக்கினா 3ன்னு" உங்க மேத்ஸ் டீச்சர் சொல்லி குடுத்து இருந்தா?ஸாரி...//
அப்போ 3அ 3ஆல பெருக்கினா 3 இல்லையா? ச்சே ச்சே... இவ்ளோ நாளா அப்படி தான் நெனச்சுட்டு இருக்கேன்...

//ஆனா ஒரு இடத்துல கூட கதைல நீங்க இட்லி சுடல(அதாவது சொதப்பல)
இல்லானா ஒரு அரிசி பருப்பு சாதமாவது........???.//
ஆஹா...நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுச்சு போல இருக்கே...மீ எஸ்கேப்...ஹா ஹா ஹா


Thanks for reading my blog through...

தக்குடுபாண்டி said...

அந்த படம் பதிவுக்கே பொட்டு வெச்ச மாதிரி இருக்கு!! இதை மாதிரி எல்லா பதிவுக்கும் லட்சணமா ஒரு போட்டோ போடவும்.

என்றும் வம்புடன்,
தக்குடு

ஜெய்லானி said...

பீப்பி குறைய ஏதாவது மாத்திரை ஸ்பெஷலா இருக்கா..? இதை படிச்சிட்டு கடைசியில ஓரேடியா ஏறுதே..அதான் கேட்டேன் ....!!!

vgr said...

en ma ippadi....oru alave illaya? mudikara enname illaya? vasagargalai suspense vaithe kollum ennama?

But i am guessing...gotta do something with that kanama pona fake girl frd of that arun character in college, who pbly really loved him..and she was surya's frd/relative or something.

analum idu romba over...nanum grp mudichapram padikalam nu...3/4 posts ku wait panna....epodume...

"Apo ennachuna..." nu oru adirchilaye mudikeereengale...:)

seekaram mudinga mudinga nu vazhthi vazhthi en key brd ke valikudu :)

Mahi said...

சஸ்பென்ஸ் எகிறிட்டே போகுதே? சூப்பர் ட்விஸ்ட் புவனா!! என்னன்னு நான் கெஸ் பண்ணல..நீங்க சொல்லறவரைக்குக் வெயிட் பண்ணறேன்.

/பீப்பி குறைய ஏதாவது மாத்திரை ஸ்பெஷலா இருக்கா..?/ஜெய் அண்ணா.. :)))))))))))) நான் குழந்தைங்க ஊதும் பீப்பி-ன்னு நினைச்சிட்டேன் ஒரு நிமிஷம்!! B.P.-ஆ?? ஓக்கே,ஓக்கே,இப்ப புரிஞ்சது.ஹிஹி!

அன்னு said...

ஏனுங்கம்மணி, ஹீரோவையே வில்லனாக்கி, வில்லனா இருக்க வேண்டியவனையெல்லாம் நண்பனாகவும், அண்ணனாகவும் ஆக்கி குழப்புறது பத்தாம கேணிவனம் கதைக்கு வேற டிப்பு குடுக்கறீங்களாங் குழப்பா? வாணாம்....நல்லால்ல!! :)

vinu said...

innum oru 17 eppisode pottengannaaaa naan roamba romba rombaaaaaaaaaaaaaaa santhoosappaduvamungoooooooooooo

ஸ்ரீராம். said...

அடுத்த பகுத்திக்கு காத்திருக்கிறேன்...

சே.குமார் said...

தொடரட்டும்....
நல்லாத்தான் போகுது... அடுத்த பகுதி எப்ப வருமுன்னு கேக்க வைக்குது.

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - பதிவ படின்னா போட்டோவ பாத்து கமெண்ட் போடறது கண்டிக்கத்தக்கது.... கதைய படிச்சு கமெண்ட் போடுங்க சார்

@ ஜெய்லானி - BP குறையனும்னா என்னோட பழைய பதிவுகள படிங்க... ஹா ஹா ஹா

@ VGR - ஹா ஹா ஹா... ரெம்ப டென்ஷன் ஆய்ட்டீங்க போல இருக்கே சார்... சீக்கரம் முடிக்கறேன்

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி... சீக்கரம் போட்டுடறேன்... BP குறைய தங்கமணியின் 75 பதிவுகளையும் படிக்கவும்... ஹா ஹா ஹா

@ அன்னு - ஹா ஹா ஹா... கேணிவனத்துல என்னோட கமெண்ட் பாத்துட்டீங்களா? ஹா ஹா ஹா...என்னங்க அன்னு ஹரிஷ் சார் எழுதற ஸ்பீட்க்கு என்னோட ஐடியா எல்லாம் எந்த மூலைக்கு... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ vinu - அதுகென்ன போட்டா போச்சு... ஹா ஹா ஹா

@ ஸ்ரீராம் - இன்னைக்கே போட்டுடறேங்க... நன்றி

@ சே.குமார் - நன்றிங்க... இன்னைக்கே அடுத்த பார்ட் போட்டுடறேன்...

Ananthi said...

இப்போ எனக்கு மயக்கம் வந்திரும் போல இருக்கு...!!
திரும்பவும் சஸ்பென்ஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ha ha... doctor reference venumaa?

Ananthi said...

Aduththa paakam podunga.. pa.. Adhu pothum :D :D

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ha ha... tomorrow for sure I will post and escape...ha ha

Post a Comment