Wednesday, October 13, 2010

அதே கண்கள்... (பகுதி 18)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

வரவேற்பறையில் எங்கும் பேனா சிக்காமல் போக மேலே தங்கள் அறைக்கு சென்றாள்

சூர்யாவின் கப்போர்டில் இருக்குமோ என எண்ணியவள்  "என் பொருட்களை ஏன் கலைக்கிறாய்" என கோபம் கொள்வானோ என ஒரு கணம் தயங்கியவள், இல்லையென்றால் மட்டுமென்ன கொஞ்சவா செய்கிறான் என அவன் கப்போர்டை திறக்க முயல அது பூட்டி இருந்ததை கண்டு ஆச்சிர்யமானாள்

பூட்டி வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறதென பார்க்கும் ஆர்வம் தலை தூக்க, ஒரு வழியாய் டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த சாவி கொத்தில் இதற்கான சாவியை  கண்டுபிடித்து திறந்தாள்

அதில் சிறிய டிராயர் போன்ற அமைப்பு  இருந்ததை பார்த்து அதில் பேனா போன்ற பொருட்கள் இருக்குமென யூகித்து அதை திறந்தவள் அதிர்ச்சியில் மயங்கி விடாமல் இருக்க அதன் கதவை பற்றிக்கொண்டாள்...

தன் கண்களால் கண்டதை இன்னும் நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி கொண்டு பார்த்தாள்

தன் அன்னை தொலைபேசியில் காத்திருக்கிறாள் என்பது கூட மறந்து போனவளாய், உடலின் பலம் மொத்தமும் வடிந்தது போல் நிற்க கூட இயலாமல் கட்டிலில் அமர்ந்தாள்

சற்று நேரம் பெரிய மூச்சுகளை எடுத்து தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டவள் மீண்டும் எழுந்து வந்து கப்போர்டின் அருகே நின்றாள்.

அங்கு இருந்த அனிதாவின் சிரித்த முகம் அவளை பார்த்து கேலி செய்வது போல் இருந்தது

"அனிதாவின் போட்டோ  எப்படி இங்கே? ஒருவேள அனிதா இவரோட காதலியோ... ஐயோ கடவுளே... வேண்டாம்... என்னால தாங்க முடியாது" என்றவளின் கண்களில் நீர் கட்டுப்படாமல் வழிந்தது

"இன்னிக்கி வந்ததும் கேட்டுட வேண்டியது தான்" என தீர்மானித்தாள். ஆனால் அடுத்த கணமே அவள் மனம் மாறியது

"ஆம் அவள் என் காதலி தான் என்று அவன் கூறிவிட்டால்...அதன் பின் என்ன செய்ய இயலும்... " என மனம் பதறியது

சில நிமிடங்கள் வெறித்து பார்த்தவள் மடங்கி அமர்ந்து சத்தமாய் அழுதாள். வீட்டில் யாரும் இல்லாத தனிமை அவள் உணர்வுகளின் வடிகாலுக்கு உதவியது

"இல்லை... அது தன்னால் இயலாது. அவன் மனதில் வேறு ஒரு பெண் என்பதை அவன் வாயால் கேட்கும் சக்தி தனக்கில்லை" என எண்ணத்தை மாற்றினாள்

"பேசாமல் தான் இதை பார்த்ததே மறந்து இன்று போலவே இருந்து விட்டால் என்ன" என எண்ணினாள்

"ஆனால் காலம் முழுக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டு என்ன வாழ்க்கை இது" என அவள் மனம் கசந்தது

"அனிதா தான் காதலி என்றால் அவளை மணம் செய்யாமல் தன்னை ஏன் மணந்தான். ஒரு வேளை அனிதாவுக்கு ஏதேனும்... " என மனம் பதற "அதற்கு தன்னை ஏன் பழி வாங்க வேண்டும்..." என நினைத்த நொடி அருணின் நினைவு வந்தது

"பாவி அவன் தான் அனிதாவை ஏதேனும் செய்து விட்டானோ. தன்னையே மிரட்டியவன் ஆயிற்றே. அவன் நாடகத்தை நம்பி இருவரையும் தான் இணைக்க முயன்றது சூர்யாவிற்கு தெரிந்திருக்குமோ. அதனால் தான் என்னை தண்டிக்கிராரோ?" என பலதையும் எண்ணி மனம் குழம்பினாள்

"எப்படி இருந்தாலும் அனிதாவிற்கு என்ன ஆனது என்பதை சூர்யா அறியாமல் கண்டுபிடிக்கவேண்டும். அதன் பின் தான் தன் வாழ்வை பற்றிய தீர்மானத்தை எடுக்க இயலும்" என முடிவுக்கு வந்தாள்

எந்த சூழ்நிலையிலும் சூர்யாவை விட்டு பிரிவதை அவள் மனம் ஏற்க மறுத்தது. அவன் தன்னை பழுதாய் வெறுத்த போதும் ஏன் மனம் அவனையே நாடுகிறது என சுய பச்சாதாபம் மேலிட அழுதாள்

எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ அழைப்பு மணி சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். அத்தை மாமா தான் வந்துவிட்டார்கள் என புரிந்தவள் அவசரமாய் கப்போர்டை சாத்தி சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு கீழே வந்தாள்

அதற்குள் அழைப்பு மணி பல முறை ஒலித்தது. கதவை திறந்தவள் அங்கு சூர்யாவை எதிர்பாராததால் திணறிப்போனாள்

"நீங்க... ஏன்?" என பதற

"ஏன்... என் வீட்டுக்கு வர்றதுக்கு உன்கிட்ட  பெர்மிசன் வாங்கனுமா" என கேலியாய் கேட்டான்

"இல்ல வெளிய போன அத்தை மாமா தான் வந்துட்டாங்கன்னு..." என தடுமாறியவளை யோசனையாய் ஏறிட்டான்

"ஏன் கண்ணு செவந்துருக்கு? யாரும் வீட்டுல இல்லைன்னு சுகமான தூக்கமோ... " என கேலி போல் கேட்க

"ஆமா... " என சமாளித்தாள்

"நல்ல கனவுல நான் தொந்தரவு பண்ணிட்டனோ" என ஏளனமாய் கேட்க

"இல்ல... " என என்ன பேசுவதென தெரியாமல் அவள் விழிக்க

"வழி விடு... " என அவளை இடித்து தள்ளாத குறையாய் உள்ளே வந்தவனின் கண்களில் முதலில் பட்டது கீழே எடுத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி தான்

என்ன இது என்பது போல் அவளை பார்க்க "ஓ... அம்மா பேசிட்டு இருந்தாங்க" என்றாள் அப்போது தான் நினைவு வந்தவள் போல்

விரைந்து சென்று பேசியை எடுத்து காதுக்கு கொடுத்தவன் எந்த சத்தமும் இல்லாமல் போக "சொல்ற பொய்ய கரெக்டா சொல்லு" என்றான் இறுகிய முகத்துடன்

"இல்லங்க... நெஜமாவே அம்மாதான் பேசினாங்க. நான்..." அவளை இடைமறித்தவன்

"ஏய்... கொஞ்சம் முன்னாடி தூங்கிட்டு இருந்தேன்ன... இப்ப அம்மா போன் பேசினாங்கன்னு கதை விடற... என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல..." என கர்ஜிக்க

"இல்ல... " என நிறுத்தினாள். தூங்கவில்லை என்றால் அழுததால் கண் சிவந்தது என்றோ அதற்கான காரணத்தையோ கூற இயலுமா என மௌனம் காத்தாள்

"என்ன? ஏன் நிறுத்திட்ட? உன் வேஷம் கலைஞ்சுடும்னா?" என ஆவேசமாய் நெருங்கியவன் அவள் கழுத்தை நெரிப்பது போல் பற்ற அவள் இருந்த மனநிலையில் துவண்டு போனாள்

"கொன்னுடுங்க... . இப்படி தினம் தினம் சாகரத விட ஒரேடியா போய்டறேன்" என அவள் கதற அவன் பிடி தளர்ந்தது

கிட்டத்தட்ட ஒரு மாதமாய் தனக்கு சரியாய் வாயாடி தன் கோபத்தை வெல்ல முயன்றவள் இன்று மொத்த தைரியமும் வடிய கதறியதை காண சகியாமல் வெளியேறினான் சூர்யா
___________________________________________

அதற்கு பின் சில நாட்கள் அமைதியாய் சென்றது. இருவரும் பேசுவது கூட குறைந்து போனது. எப்போதும் சூர்யா விலகி விலகி போனாலும் சுமேதா தான் வலிய வந்து வம்பு செய்வாள்

இப்போது ஏதோ யோசனையில் அவள் எப்போதும் அமைதியாய் இருந்தாள். அவள் மீது வெறுப்பும் கோபமும் இருந்த போதும் சூர்யாவிற்கு சுமேதாவின் அமைதி வேதனையை அளித்தது

அதற்கான காரணம் புரியாமல் அவளிடம் கேட்கவும் இயலாமல் தவித்தான். அவளே சொல்லட்டுமென மௌனமானான்

சுமேதாவோ அனிதாவை பற்றி அறிந்து கொள்ள முயன்றாள். அதன் முதல் கட்டமாய் அருணை தொடர்பு கொள்ள முயன்றாள். அந்த செல் நம்பர் உபயோகத்தில் இல்லை என அறிந்தாள்

கணேஷ் மூலம் அருணை கண்டுபிடித்தால் என்ன என தோன்ற கணேசின் எண்ணுக்கு அழைத்தாள். அழைப்பு சென்று கொண்டே இருந்ததே ஒழிய எடுக்கவில்லை

பொறுமை இழந்தவள் கணேஷின் வீட்டிற்கு தொடர்பு கொண்டாள்

"ஹலோ..." என கணேஷின் அம்மா குரல் கேட்க

"ஹலோ அத்தை நான் சுமேதா பேசறேன்"  என்றாள்

"அடடா சுமிகண்ணு..  நல்ல இருக்கியாமா? கணேஷ் எல்லா விசியமும் சொன்னான். மனசுக்கு கஷ்டமா போச்சு... இப்ப எல்லாம் சரிதானேம்மா?" என உண்மையான அன்பு வழியும் குரலில் கேட்க

"இப்ப எதுவும் பிரச்சனை இல்ல அத்த... நல்லா இருக்கேன்" என கூறும் போதே தன்னையும் அறியாமல் அவள் கண்களில் நீர் வழிந்தது

"அப்புறம்மா... உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?"

"நல்லா இருக்காங்க அத்தை. கணேஷ் இருக்காரா அத்த?"

"இல்லமா, அவன் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருக்கான். நீ செல்லுக்கு கூப்பிட்டு பாரேன்"

"செல்லுக்கு கூப்ட்டேன் அத்த, எடுக்கல... அதான் வீட்டு நம்பர்க்கு கூப்ட்டேன்"

"சில சமயம் வெளியூர் போனா போன் சரியா எடுக்காதுன்னுவான். வீட்டுக்கு கூப்ட்டானா பேச சொல்றேன் கண்ணு"

"சரிங்க அத்த ... கண்டிப்பா பேச சொல்லுங்க... ஒகே வெச்சுடறேன்" என பேசியை அணைத்து விட்டு திரும்பியவள் அங்கு சூர்யா கண்களில் கோபம் வழிய நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தாள்

என்ன பேசுவதென புரியாமல் அவள் விழிக்க "சபாஷ்... நான் கூட உன்ன என்னமோன்னு நெனச்சேன்... " என ஏளனமாய் சிரிக்க

"ஐயோ... நீங்க என்னை தப்பாவே புரிஞ்சுக்கறீங்க சூர்யா....நான்..." என அவள் பேச முயல

"ஆமா... ஆமா... தப்பாத்தான் புரிஞ்சுட்டேன். கொஞ்ச நாளா நீ அமைதியா இருந்தத பாத்து கொஞ்சம் திருந்திட்டயோனு தப்பாத்தான் புரிஞ்சுட்டேன்"

"இல்லங்க... ப்ளீஸ்... "

"ஏய்... வாய மூடு... ஒண்ணுக்கு ரெண்டா ஆள் ரெடியா வெச்சுருக்க. அருண் இல்லேனா கணேஷ் கரெக்டா? நீ இவ்ளோ கேவலமா இருப்பேன்னு நான் நெனக்கல" என அவன்  தன் பெண்மையையே  அசிங்கபடுத்தி பேச அதற்கு மேல் பொறுக்க இயலாதவளாய்

"நிறுத்துங்க சூர்யா... என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆமா, நான் யார்கூட போனா உங்களுக்கு என்ன? அதை கேக்க நீங்க யாரு..." என கூறிய கணம் இடியாய் அவன் கை அவள் கன்னத்தில் இறங்கியது    

அதை எதிர்பாராத சுமேதா வலியில் கண்ணில் நீர் வழிய உறைந்தாள். அந்த கணம் சூர்யாவின் கண்களில் அவள் கண்டது வெறுப்பை  தவிர வேறில்லை என்பது அவளுக்கு தெளிவாய் புரிந்தது

மனதில் இத்தனை வெறுப்பை கொண்டிருப்பவன் என்றேனும் தன் மனதை புரிந்து கொள்வான் என நினைப்பது முட்டாள்தனம் என்பதை அந்த கணம் உணர்ந்தாள்

இனி தன் வாழ்வில் அவனுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை தீர்மானித்தாள்

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)

...

87 பேரு சொல்லி இருக்காக:

Arul Senapathi said...

Honestly, can't predict the ending even now.
Good going.

Thanks

Mahi said...

ம்ம்ம்..முன்னாலயே யாரோ அனிதா மேட்டரை கெஸ் பண்ணிருந்தாங்கன்னு நினைக்கிறேன்.

இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி புவனா!

LK said...

இது சரிப் படாது ... வீட்டுக்கு ஆட்டோ அனுப்பறேன்

Nithu Bala said...

nalla suspense-sa kondu porenka..seikiram adutha part podunka..

Guna said...

Sindhubath mathiri la poguthu........

அனாமிகா துவாரகன் said...

ரமணி சந்திரன் உங்ககிட்ட தோத்துடுவாங்க. அவ்ளோ அழுகாட்சி இருக்கு. ஹூக்கும். புவனாக்கான்னா, வெடிச்சிரிப்பு இருக்க வேணும். இப்படியா ஆட்ட போடுவீங்க. எனக்கு வாரும் டென்ஷனுக்கு என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியல்ல.

இப்படிக்கு,
தலைவர், உபதலைவர், செயலாளர் & பொருளாளர்.
அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளை

Today I am coming with my id and title. ha ha

வெறும்பய said...

சீரியல் கணக்கா போய்கிட்டே இருக்கே... ஆனா நல்லாயிருக்கு...

ஸ்ரீராம். said...

மெகா சீரியலா...ஆஹா..

LK..
உங்கள் வலைப் பக்கங்களைத் திறக்க முடியவில்லையே...ஏன்?

அன்னு said...

//இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்//

என்ன புவனா ஆசையா எல்லா பாகமும் இருக்கும்னு படிச்சா 18 வரைதான் இருக்கு? மீதி காணம்...????? (ஹி ஹி ஹி...ஒரு ஆர்வக்கோளாறுதேன்)

தியாவின் பேனா said...

ஆ............................................................ஹா

சௌந்தர் said...

என கூறிய கணம் இடியாய் அவன் கை அவள் கன்னத்தில் இறங்கியது////

என்ன தைரியம் அவனுக்கு....பாவம் சுமி :)

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

போதும் முடியல

அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளை
நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்வேன்,

Anonymous said...

ஏன் இப்பிடி பண்ணறிங்க புவனா ...
சந்த்யா

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். - கனடா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ அமெரிக்கா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ இங்கிலாந்து கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ போலாந்து கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ ஜெர்மனி கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ பிரான்ஸ் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ கியூபா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ பிரேசில் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ பெல்ஜியம் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ யுகோஸ்லாவியா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ அர்ஜென்டினா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ பாகிஸ்தான் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ இந்தியா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ சிங்கப்பூர் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ க‌ட்டார் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ அபுதாபி கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ லிபியா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ செச்னியா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ டுபாய் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ ரஸ்யா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ Switerzland கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ நியூசிலாந்து கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ வக்கா வக்கா ஆபிரிக்கா கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ஆர்டிக் கிளை மெம்பர்.

Anonymous said...

போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ அன்டார்டிக்கா கிளை மெம்பர்.

Anonymous said...

போரும்டி புவனா. அப்பாவிகளை விட்டுடு.

Anonymous said...

அடிபாவி அக்கா. இந்த கதை ஜூன்ல தொடங்கினது. 5 மாசமா இழுதடிக்கிறீங்களா? யாரங்கே. இந்த புவ்புவ்புவனாக்காவை சன்டீவி கிட்ட அறிமுகப்படுத்துங்க.
- Ana

மார்கண்டேயன் said...

நல்ல வேளங்க, முடிச்சிடுவீகலோன்னு நெனச்சேன், அப்பாடா, தொடரும்ன்னு பாத்தவொடனே தான் மனசுக்கு நிம்மதியாச்சு . . . உங்களால முடிஞ்ச நல்ல விஷயம், ஒரே ஆள்கிட்ட இருந்து ஒரே கமேண்ட பல தடவ வரவச்சது தான் . . .

ஜெய்ச்சிட்ட தாயி

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

புவனா அக்கா,நீங்க இந்த கதையை முடிக்கலேன்னா கூட பரவாயில்லை இப்படியே நிறுத்திக்குவோம்,
பாருங்க எத்தனை பேரு உண்ணும் விரதம் இருக்காங்கனு எனவே அவர்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்,
இப்படிக்கு உண்ணும் விரதம் - குவைத் கிளை.

எஸ்.கே said...

தொடர் அருமையா செல்லுதுங்க! வாழ்த்துக்கள்!

Anonymous said...

@ மார்கண்டேயன்,

// உங்களால முடிஞ்ச நல்ல விஷயம், ஒரே ஆள்கிட்ட இருந்து ஒரே கமேண்ட பல தடவ வரவச்சது தான் . . .
//

யோவ். இன்னாயா? உலகமெல்லாம் இருக்கற எங்க ஆளுங்கள கூப்டு எவ்ளோ கஷ்டப்பட்டு காமன்ட் போட வைச்சிருக்கோம். இவரு என்ன்டான்னா ஒரே ஒருத்தன் போட்டிருக்கான்னு சொல்றாரு. எடுடா ஆட்டோவ. இன்னைக்கு ரத்தம் பாக்காம விடமாட்டோம் சொல்லிட்டேன்

Anonymous said...

@ காமன்ட் மட்டும் போடறவன்,
தம்பி உங்க ஊரை மறந்திட்டேன். மன்னிச்சுக்கோ சரியா. இனியாவது இந்த இட்லி மாமி திருந்தறாளோனு பாப்போம்.

Gayathri said...

நானும் எல் கே அண்ணா கட்சிதான்...ஆட்டோ வேணாம் ஆனா சுமோ இல்லான ஹம்மர் அனுப்ப படும் அப்படியும் இப்படி சுமியை படித்ததினால் ராணுவம் அனுப்ப படும் என்று பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்

ரஜின் said...

சகோ....,என் சேர்ல சீட் பெல்ட் இல்ல சகோ..ஆர்வத்ல ஸஸ்பென்ஸ் தாங்காம சீட் நுனிக்கு வந்து கிழ விழப்பாத்துடேன்னா பாத்துகோங்களே.

பரவாஇல்லை...இப்புடி பல ஆபத்துக்கள தாண்டி உங்க ப்ளாக்க படிக்க ஒரு சகோ இருக்குரத நெனச்சு நீங்க பெரும பட்டுக்க வேண்டியதுதா...(கொஞ்சம் ஓவரா இருக்கோ..)

keep it up... nice

LK said...

@ஸ்ரீராம் அண்ணா

இப்பப் பாருங்க

மோகன்ஜி said...

ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க!நடத்துங்க!!

பத்மநாபன் said...

இப்ப தான் கதையே ஆரம்பிச்சாம் மாதிரி இருக்கு..அதுக்குள்ள முடிக்கச்சொல்லி போராட்டமா.... கண்டுக்காம போய்ட்டே இருங்க.. தமிழ் வலையுலகில் ``அதே கண்கள்`` சாதனை படைக்கட்டும்....

தக்குடு மாதிரி ரசிகர்களை ஈசியா தேத்திற்லாம்..என்ன அங்கங்க படங்கள போடணும்...

அமைதிச்சாரல் said...

சஸ்பென்ஸ் திலகமே.. சீக்கிரம் ஒடைங்க :-))))

அமைதிச்சாரல் said...

அழுவாச்சி ரொம்ப கூடுதலா இருக்கு.. கொஞ்சம் குறைச்சுக்கப்டாதா :-)))

vgr said...

Anitha nu correeccita sonena.....epppudiii :)

ana Mega Seriel kandippa!!!!

producer pudinga...sun tv noon 1-1.30 slot nichayam. oru 1678 episode ottalam :)

vinu said...

இனி தன் வாழ்வில் அவனுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை தீர்மானித்தாள்

appudeena inthaa storykku sad enddaa illa sweet endaa?

தக்குடுபாண்டி said...

//பெயரில்லா சொன்னது…
போதும் முடியல. அதே கண்கள் தொடரை முடிக்கச் சொல்லி உண்ணும் விரதம் இருக்கும் அணி,
ஆஸ்ரேலிய கிளையுடன் நானும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்கிறேன். ‍ க‌ட்டார் கிளை மெம்பர்.
// yavandaa avan? yenga idly mamikku savaal vidarthu??..:)) LOL

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்...

@ Mahi - எஸ் எஸ்... சிலர் கெஸ் பண்ணிட்டாங்க மகி even with my efforts... ஹா அஹ ஹா... தேங்க்ஸ் மகி

@ LK - ஆட்டோ எல்லாம் இங்க இல்லையே... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடறேன்

@ Guna - ஹா ஹா ... அப்படியா? அவ்ளோ பெருசால்லாம் போகாதுங்க குணா... பயப்படவேண்டாம்... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - வாம்மா மின்னல்... சிரிக்க பதிவு போட்டா மட்டும் நீ வந்து படிக்கற மாதிரி தான்... ஹலோ மேடம்... இது அழுகாச்சி இல்ல... நாங்க எல்லாம் (including ரமணிச்சந்திரன்) எழுதறதுக்கு பேரு அழுகாச்சி இல்ல ஆத்தா... காதல் கதைகள்... உன்னை போல ஸ்கூல் பொண்ணுகெல்லாம் இது புரியாது... (ஹா ஹா ஹா)... உண்ணும் விரதமா...நல்லது தான் ஸ்டார்ட் immediately ...ஹா ஹா ஹா

//Today I am coming with my id and title. ha ha //
முகமூடி என்ன ஆச்சு... தொலஞ்சு போச்சா? ஹா ஹா அஹ...

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க... உங்கள போல நல்லவங்களுக்கு தான் இது நல்லா இருக்குனு புரியுது (அனாமிகா - நோட் திஸ்... ஹா ஹா அஹ )

@ ஸ்ரீராம் - மெகா சீரியல் இல்லிங்க... தொடர் கதை... ஆஹா...

//LK..
உங்கள் வலைப் பக்கங்களைத் திறக்க முடியவில்லையே...ஏன்? //
என்னை திட்டிடனதால ப்ளாக் கடவுள் குடுத்த பணிஷ்மன்ட் அது LK க்கு...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ஹா ஹா ஹ... சூப்பர்... நீங்க என்னை விட பெரிய ஆள் போல இருக்கே அன்னு... ஹா ஹா அஹ

@ தியாவின் பேனா - என்ன ஆச்சுங்க தியா? பயந்துட்டீங்களா / சந்தோசமா / அதிர்ச்சியா ஒண்ணும் புரியலியே... ஹா ஹா ஹா

@ சௌந்தர் - //என்ன தைரியம் அவனுக்கு....பாவம் சுமி :)// அதானே பாருங்க சௌந்தர்... சீக்கரம் ஒரு லாயரை பாக்கணும்... நான் சுமி கட்சி தான் உங்கள போல... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ஆஹா... நீங்க கமெண்ட் மட்டும் தான் போடுவீங்கன்னு பாத்தா உண்ணா விரதமெல்லாம் இருப்பீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - அடடா அம்பது கமெண்ட்க்கு மேல விழுந்துருக்கே சூப்பர், அப்படின்னு சந்தோசமா வந்து பாத்தா எல்லாம் இந்த அனாமிகா ச்சே... சாரி... tongue slip... Anonymous கமெண்ட் தானா? உண்மைய சொல்லணும்னா இந்த உண்ணும்விரத போராட்டம் பத்தி கேட்டதுல எனக்கு ரெம்ப சந்தோஷம்...

ஏன்னு கேக்கறீங்களா? லேட்டஸ்ட்ஆ வந்த World Health Organization ரிப்போர்ட் படி உலகத்துல 50 % மக்கள் குறைந்த எடை பிரச்சனையால பாதிக்கபட்டு இருக்காங்களாம்... so நீங்க எல்லாம் இப்படி உண்ணும்விரதம் இருந்து உடம்பை தேத்தி நோய் நொடி இல்லாம நல்லா இருக்கறது நல்லது தானே...

அதுக்கு என்னோட "அதே கண்கள்" கதை ஒரு காரணமா இருக்கறதை நினைக்கறப்ப என்னோட கண்கள்ல ஆனந்த கண்ணீர் வருவதை தடுக்க இயலவில்லை... ஒகே ஒகே... பரிசு பாராட்டு எல்லாம் எதிர்பாத்து நான் எதுவும் செய்யறதில்ல

உங்க எல்லாரோட நல்லதுக்காகவும் இந்த தொடர் நான் மொதலே எழுத நினைச்சத விட இன்னும் ரெண்டு எபிசொட் அதிகமா எழுதறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்

(சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்துட்டியே அனாமிகா - மைண்ட்வாய்ஸ்)

கனடா கிளை, அமெரிக்கா கிளை , இங்கிலாந்து கிளை , போலாந்து கிளை , ஜெர்மனி கிளை, பிரான்ஸ் கிளை , கியூபா கிளை , பிரேசில் கிளை , பெல்ஜியம் கிளை , யுகோஸ்லாவியா கிளை, அர்ஜென்டினா கிளை, பாகிஸ்தான் கிளை , இந்தியா கிளை, சிங்கப்பூர் கிளை , க‌ட்டார் கிளை , அபுதாபி கிளை , லிபியா கிளை, செச்னியா கிளை , டுபாய் கிளை , ரஸ்யா கிளை , Switerzland கிளை , நியூசிலாந்து கிளை , ‍ வக்கா வக்கா ஆபிரிக்கா கிளை , ‍ஆர்டிக் கிளை , அன்டார்டிக்கா கிளை

எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள் உங்க உண்ணும்விரத போராட்டம் நல்லபடியா நடக்க

(என்கிட்டயேவா... இப்ப என்ன பண்ணுவ? இப்ப என்ன பண்ணுவ? ஹா ஹா ஹா... இனிமே யாராச்சும் போராட்டம் கீராட்டம்னு சொல்லுவீங்க...ஹா ஹா அஹ)

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - //போரும்டி புவனா. அப்பாவிகளை விட்டுடு// உங்க பேர ஊரு எல்லாம் சொல்லுங்க, அப்புறம் விடறதா வேண்டாமான்னு யோசிக்கறேன்... ஹா ஹா ஹா

@ அனாமிகா - அட சன் டிவியா... ஆஹா... சூப்பர்... உன்னோட நல்ல மனச நான் புரிஞ்சுக்கலையே அனாமிகா இவ்ளோ நாளா.. தேங்க்ஸ் தேங்க்ஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ மார்கண்டேயன் - ச்சே... hats off to you மார்கண்டேயன் சார்... இதான் இதான் optimistic approach ... என்ன நடந்தாலும் அதுல என்ன நல்லதுன்னு தேடற அன்னபறவை குணம் தான் எனக்கும்... சூப்பர் சூப்பர்... ஹா ஹா ஹா...

//ஜெய்ச்சிட்ட தாயி//
நன்றி நன்றி நன்றி (அனாமிகா - நோட் திஸ் டூ... ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன்
// பாருங்க எத்தனை பேரு உண்ணும் விரதம் இருக்காங்கனு எனவே அவர்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் //

அதே தான்... அதே தான்...அதை கருத்தில் கொண்டு தான் இன்னும் ரெண்டு எபிசொட் எக்ஸ்ட்ரா எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டேன்... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா -
//யோவ். இன்னாயா? உலகமெல்லாம் இருக்கற எங்க ஆளுங்கள கூப்டு எவ்ளோ கஷ்டப்பட்டு காமன்ட் போட வைச்சிருக்கோம். இவரு என்ன்டான்னா ஒரே ஒருத்தன் போட்டிருக்கான்னு சொல்றாரு. எடுடா ஆட்டோவ. இன்னைக்கு ரத்தம் பாக்காம விடமாட்டோம் சொல்லிட்டேன்//

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல... ஹா ஹா ஹா

@ பெயரில்லா -
// தம்பி உங்க ஊரை மறந்திட்டேன். மன்னிச்சுக்கோ சரியா. இனியாவது இந்த இட்லி மாமி திருந்தறாளோனு பாப்போம்//
dont keep high hopes... ha ha ha

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஹா ஹா ... நீ எல்.கே கட்சியா? அப்ப எனக்கு எதிர்கட்சி... ஹா ஹா ஹா... சுமிக்காக சுமோவா.. ஆஹா... என்ன ஒரு ரைமிங் இல்ல? ராணுவமா... ? அது சரி... ஹா ஹா ஹா

@ ரஜின் - ஹா ஹா ஹா... கண்டிப்பா பல ஆபத்துக்கள தாண்டி என் ப்ளாக்க படிக்க ஒரு சகோ இருக்குரத நெனச்சு நான் பெரும பட்டுக்க வேண்டியதுதான்... நன்றி நன்றி நன்றி... (நான் எழுதறத விட நீங்க சொல்றதெல்லாம் ஓவரே இல்ல எப்பவும்...ஹா ஹா ஹா). தேங்க்ஸ் ரஜின்

அப்பாவி தங்கமணி said...

@ LK - இப்ப என்ன? (ஹி ஹி)

@ மோகன்ஜி - முடிவு என்னனு புரியாம தான் நடத்தறேன்... நடத்திட்டே இருக்கேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஆஹா...இதுக்கு தான் அண்ணன் தம்பி சப்போர்ட் வேணுங்கறது... நன்றி நன்றி நன்றி...

//தக்குடு மாதிரி ரசிகர்களை ஈசியா தேத்திற்லாம்..என்ன அங்கங்க படங்கள போடணும்... //
ரெம்ப அநியாயம் தான்... என்ன செய்யறது? கல்லிடை தேவதைகள் படம் சிக்குதானு தேடிட்டே இருக்கேன் அண்ணா... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - சிரிக்க சொல்லி பதிவு போட்டா... ஏன் இப்ப கொல்றேன்னு கேக்கறேங்க? சரி அழுகவாச்சும் வெக்கலாம்னு போட்டா இப்படி சொல்றீங்க? உங்கள என்ன செய்யலாம்? இருங்க என்னோட மைண்ட்வாய்ஸ்ஐ ரெண்டு நாளைக்கு அனுப்பி வெக்கறேன் உங்க வீட்டுக்கு... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ VGR - ஆமா ஆமா... sherlock holmes தோத்தார் போங்க... ஹா ஹா ஹா

//producer pudinga...sun tv noon 1-1.30 slot nichayam. oru 1678 episode ottalam :) //

புடிச்சுட்டா போச்சு... உங்களுக்கு சூரிய குடும்பத்துல ஆள் யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க...ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ vinu -
//appudeena inthaa storykku sad enddaa illa sweet endaa?//

அதான் கதையே... இப்படி ஒரே கேள்வியா கேட்டா நான் எப்படி நாலு எபிசொட் இழுக்கறது... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் வினு

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு -
// yavandaa avan? yenga idly mamikku savaal vidarthu??..:)) LOL

ஆஹா... என்ன இது? என் கண்ணையே என்னால நம்ப முடியலியே? யு supporting மீ... ஆஹா... உங்க பாலைவனத்துல மழை கொட்ட போறது இன்னைக்கி...தம்பியுடையான் படைக்கஞ்சான்னு நானும் இனி சொல்லிக்கலாம் போல இருக்கே...
(நீ சப்போர்ட் பண்றியா வாருரயானே புரியலியே... ஹா ஹா ஹா )

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

யக்கோவ் நீங்க எழுதுங்க வேண்டாம்னு சொல்லலை ஆனால் இடையில் கொஞ்சம் இட்லி கதை மாதிரியும் பதிவு போடுங்க, அது முப்பது பாகம் வந்தாலும் எங்களுக்கு ஓகே,அழுகாச்சி வேண்டாம் என்று கூறிக்கொண்டு என்னுடைய உண்ணும் விரதத்தை முடிக்கிறேன்.

அப்பாதுரை said...

இப்பத்தான் பத்து சேப்டர் வரைக்கும் படிச்சு முடிச்சேன். சுவையா போகுது. need to catch up fast.
உங்க பேரு புவனாவா? தங்கமணினு இல்லே நெனச்சேன்?

அப்பாதுரை said...

//அதுக்கு என்னோட "அதே கண்கள்" கதை ஒரு காரணமா இருக்கறதை நினைக்கறப்ப என்னோட கண்கள்ல ஆனந்த கண்ணீர் வருவதை தடுக்க இயலவில்லை...

i am your fan.

கோவை ஆவி said...

சுமேதாவை இனியும் கொடுமைப்படுத்தினால் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் - இப்படிக்கு சுமேதா ரசிகர் மன்றம் சிகாகோ கிளை .

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - இட்லி கதை மாதிரியா... ஏனுங்க இப்படி சொந்த செலவுல சூனியம் வெச்சுகறீங்க... ஹா ஹா அஹ... ஜஸ்ட் கிட்டிங்.... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - நன்றிங்க

//உங்க பேரு புவனாவா? தங்கமணினு இல்லே நெனச்சேன்?//
தங்கமணிங்கறது generalised term ங்க... புவனா அப்பா அம்மா வெச்ச பேருங்க...

//i am your fan. //
thanks a lot

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - என்னங்க ஆனந்த் நீங்களும் எதாச்சும் போராட்டதுல குதிக்க போறீங்களா... ஹா ஹா ஹா... ஒகே ஒகே... உங்க request ஐ சூர்யாகிட்ட சொல்லிடறேன்...அவங்க பிரச்சனைல நாம தலையிட முடியுமா சொல்லுங்க... ஹா ஹா அஹ. (தேங்க்ஸ் ஆனந்த்)

ஜெய்லானி said...

இப்பதான் ’மெட்டிஒலி’ மாதிரி அழுவாச்சி சீரியலா மாறி சாரி தொடரா வருது.!! :-)

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - you will receive a parcel tomorrow... (ha ha ha)

அப்பாதுரை said...

//தங்கமணிங்கறது generalised term ங்க...

விடுங்க... நான் இருக்கிற இடம் புதுச்சேரினா ஜோக் இருக்கிற இடம் புதுடில்லி..!

மார்கண்டேயன் said...

//யோவ். இன்னாயா? உலகமெல்லாம் இருக்கற எங்க ஆளுங்கள கூப்டு எவ்ளோ கஷ்டப்பட்டு காமன்ட் போட வைச்சிருக்கோம். இவரு என்ன்டான்னா ஒரே ஒருத்தன் போட்டிருக்கான்னு சொல்றாரு. எடுடா ஆட்டோவ. இன்னைக்கு ரத்தம் பாக்காம விடமாட்டோம் சொல்லிட்டேன்//

சாமியோவ், தொடர தொடர்ந்து தொடர்ந்து 'கண்ணு கட்டிர்ச்சுங்கோவ்', அதனால யாரு எழுதுனாகன்னு தெரியலிங்கோவ், நாங்களும் எத்தன நாளுக்கு தான் அடி வாங்குனாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது . . .

தாயி, ஒரு கும்பலு கோரமா திரியிது தாயி, முடிச்சிடு முடிச்சிடு (மணிரத்னம் பாணியில் வாசிக்கவும்)

Ananthi said...

இது உங்களுக்கே நல்ல இருக்காங்க...???
சூப்பரா இருக்குப்பா.... :-))

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - ha ha..thanks

@ மார்கண்டேயன் - ha ha

@ Ananthi - thanks Ananthi

Post a Comment