Friday, October 15, 2010

அதே கண்கள்... (பகுதி 19)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"நிறுத்துங்க சூர்யா... என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆமா, நான் யார்கூட போனா உங்களுக்கு என்ன? அதை கேக்க நீங்க யாரு..." என கூறிய கணம் இடியாய் அவன் கை அவள் கன்னத்தில் இறங்கியது    

அதை எதிர்பாராத சுமேதா வலியில் கண்ணில் நீர் வழிய உறைந்தாள். அந்த கணம் சூர்யாவின் கண்களில் அவள் கண்டது வெறுப்பை  தவிர வேறில்லை என்பது அவளுக்கு தெளிவாய் புரிந்தது

மனதில் இத்தனை வெறுப்பை கொண்டிருப்பவன் என்றேனும் தன் மனதை புரிந்து கொள்வான் என நினைப்பது முட்டாள்தனம் என்பதை அந்த கணம் உணர்ந்தாள்

இனி தன் வாழ்வில் அவனுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை தீர்மானித்தாள்

அனிதாவிற்கு என்ன ஆனது என்பதை அறிவது முக்கியம். அவளுக்கு அருணால் ஏதேனும் ஆகி இருந்தால் அதில் தனக்கும் ஒரு வகையில் பங்குண்டு

அதற்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தத்தை செய்து விட்டு தன் வழியே செல்ல வேண்டியது தான் என முடிவு செய்தாள்

கணேசின் அழைப்பிற்கு கூட காத்திருக்கும் பொறுமையின்றி மறுநாள் அருணின் இருப்பிடத்திற்கு சென்று பார்ப்பதென முடிவு செய்தாள்
_________________________________________

அன்று அதன் பின் சுமேதா சூர்யாவை நேரே பார்ப்பதை கூட தவிர்த்தாள்.  மறுநாள் சூர்யா அலுவலகம் கிளம்பி செல்லும் வரை அதிகம் அவன் கண்ணில் கூட படாமல் ஏதோ வேலையாய்  இருப்பதை போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்

சூர்யா கிளம்பிய பின் தன் தோழியை சந்திக்க போவதாய் சூர்யாவின் அன்னையிடம் கூறி விட்டு கிளம்பினாள் சுமேதா

அதே நேரம் அலுவலகத்தில் வேலையில் மனம் பதியாமல் சூர்யாவின் மனம் அலைபாய்ந்தது. என்ன இருந்தாலும் அவளை கை நீட்டி அடித்தது தவறென குற்ற உணர்வில் தவித்தான்

தன்னை யார் என்று கேட்டதை அவனால் ஏற்று கொள்ள இயலவில்லை. தன்னை விட வேறு யார் அவளுக்கு முக்கியமாய் இருக்க இயலும் என  மனதில் தோன்றிய கணம் அதிர்ந்தான்

என்ன இது? தான் அவளை திருமணம் செய்த நோக்கம் என்ன, ஏன் இநத தடுமாற்றம் இப்போது என தன் மேலேயே கோபம் வந்தது

அவள் செய்த பாவத்திற்கு அனுபவிக்கிறாள், நன்றாக அழட்டும், என்னை அழ வைத்ததற்கு இன்னும் அனுபவிக்க வேண்டுமென நினைத்தான்

எல்லாம் ஒரு கணம் தான். மீண்டும் அவள் தான் அடித்ததை தாங்காமல் கன்னத்தில் கை தாங்கி கண்களில் நீர் வழிய நின்ற காட்சியே கண் முன் வந்தது

அன்று காலை தன்னை பார்ப்பதை கூட தவிர்த்தாளே, என்னை மிருகம் என வெறுத்தே விட்டாளோ என வேதனை அடைந்தான்

அதே நேரம் சுமேதா காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள். ஒருமுறை மற்ற நண்பர்களுடன் அருணின் வீட்டிற்கு வந்திருக்கிறாள்

பஸ் நிலையத்தில் இறங்கி ஆர்.வீ  ஹோட்டல் செல்லும் வழியில் நடந்து சென்ற நினைவு இருந்தது. ஒருவழியாய் அருணின் வீட்டை கண்டுபிடித்து அருகில் செல்ல வீடு பூட்டி இருந்தது

பக்கத்து வீட்டில் இருந்தவர் அருண் வெகு நாட்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து சென்று விட்டான் என்று கூறிய செய்தி அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது

என்ன ஆயிற்றோ என்ற யோசனையுடன் மீண்டும் பஸ் நிலையம் நோக்கி நடக்க துவங்கிய நேரம் அவளை உரசுவது போல் ஒரு கார் வந்து நின்றது

அவள் அதிர்ந்து நகர கார் கதவை திறந்த சூர்யா "ஏறு வண்டில...." என்றான்

அவனை எதிர்பாராத அதிர்ச்சியில் "நீங்க... " என அவள் தடுமாற

"மொதல்ல வண்டில ஏறு..." என்றான் மிரட்டும் குரலில். அதற்கு மேல் நிற்க இயலாமல் உள்ளே அமர்ந்தாள்

அவள் அமர்ந்த கணம் கார் சீறி பாய்ந்தது. அவள் நடந்ததை கூற முயல "பேசாத... எதுவும் பேசி என்னை மிருகமாக்கிடாத...." என கத்தினான்

அவன் கண்களில் தெரிந்த கோபம் அவளை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தது. நேரே தன் வீட்டிற்கு சென்றான். உள்ளே செல்லாமல் கேட்டின் வெளியே நிறுத்தினான்

"எறங்கு... " என்றான் கோபம் சற்றும் குறையாமல் 

"சூர்யா ப்ளீஸ்... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..." என்றவளை கை பிடித்து காரின் வெளியே இழுத்தான்

"அம்மா அப்பா இருக்காங்கன்னு பாக்கறேன்... இல்லேனா இப்பவே வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் கொன்னு போட்டுடுவேன்..." தீவிரமாய் ஒலித்தது அவன் குரல், சொல்வதை செய்வேன் என்பது போல்

மீண்டும் அவன் கொடூர முகத்தை கண்டதும் சகலமும் அடங்க மௌனமானாள் சுமேதா

"நான் நைட் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நீ எங்கயாச்சும் வெளிய போனேன்னு தெரிஞ்சா அப்புறம் உயிரோட இருக்க மாட்டே..." என மிரட்டி விட்டு வேகமாய் காரில் கிளம்பினான்

அவன் கோபம் அவளுக்கு பழகியது தானென்றாலும் தன்னை அவன் இழிவாய் நினைப்பதை அவளால் ஏற்று கொள்ள இயலவில்லை

தன் பக்க ஞாயத்தை சொல்ல கூட ஒரு வாய்ப்பு தராமல் தண்டிப்பது வேதனை அளித்தது சுமேதாவிற்கு
____________________________________________

அன்று இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான் சூர்யா. வீடு மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல தன் அன்னை வரவேற்பறையில் இருப்பாள் என அவன் எதிர்பாராததால் "அம்மா...இன்னும் தூங்கலையா நீ..." என தயக்கமாய் நின்றான்

"இல்ல... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சூர்யா அதான் வெயிட் பண்றேன்" என்றார். தன் அம்மாவின் கண்களில் இருந்த தீவிரத்தை கண்டவன் சுமேதா ஏதேனும் கூறி இருப்பாளோ என அதிர்ந்தான்

"அம்மா எனக்கு டையர்ட்ஆ இருக்கு... மார்னிங் பேசலாமே..." என தவிர்க்க முயன்றான்

"இல்ல சூர்யா... இப்ப பேசணும்... காலைல நேரத்துலையே நானும் அப்பாவும் ஊருக்கு போறோம். தாத்தா பாட்டிய பாத்து நாளாச்சு. போய் ஒரு வாரம் இருந்துட்டு வரலாம்னு இருக்கோம்" எனவும்

"சரிம்மா... என்ன பேசணும்? சொல்லு" என்று சோபாவில் அமர்ந்தான்

"உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சன" என நேரடியாய் தாக்க சூர்யா தடுமாறினான்

"பிரச்சனையா...? என்ன? அப்படி ஒண்ணும் இல்லையே" என சமாளித்தான்

"இநத விசியத்துல மட்டும் ரெண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை தான். அவள கேட்டாலும் இதே தான் சொல்றா... ஆனா ஏதோ பிரச்சனைன்னு மட்டும் எனக்கு நிச்சியமா புரியுது" எனவும் அவளும் எதுவும் கூறவில்லை என்றறிந்ததும் நிம்மதியாய் மூச்சு விட்டான் சூர்யா

"இல்லம்மா அப்படி எதுவும் இல்ல..." என எழுந்து உள்ளே செல்ல முயல

"ஒரு நிமிஷம் சூர்யா... நான் புத்தி சொல்ற வயசெல்லாம் நீ கடந்தாச்சு. கணவன் மனைவிக்குள்ள சின்ன சின்ன பிரச்சனைகள் வர்றது சகஜம் தான். எதுவா இருந்தாலும் அப்பப்ப  பேசி தீத்துடணும். அனுபவபட்டவ சொல்றேன். அதுக்கு மேல உன் விருப்பம்" என்று விட்டு தன் அறைக்குள் சென்றார்

சற்று நேரம் யோசனையாய் நின்ற சூர்யா தன் அறைக்கு சென்றான்.அறை இருளில் மூழ்கி இருக்க விளக்கை உயிர்ப்பித்தான்

வெளிச்சம் கண்டு சுமேதா பதறி எழ அதுவரை மறைந்திருந்த கோபம் அவளை பார்த்ததும் மீண்டும் தலை எடுத்தது அவனுள்

"என்ன? நல்லா கனவுல உன் காதலனோட டூயட் பாடிட்டு இருந்தத கெடுத்துடேனோ?" என ஏளன பார்வை பார்க்க

"சூர்யா ப்ளீஸ்...நான் சொல்றத ஒரு நிமிஷம் காது குடுத்து கேளுங்க" என கெஞ்ச

"நிறுத்து... கேட்ட வரைக்கும் போதும்... நேத்து உன்கிட்ட அப்படி மிருகத்தனமா நடந்துக்கிட்டதுக்கு என் மேலேயே எனக்கு கோவம் இருந்தது. மனசு கேக்காம உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு தான் இன்னிக்கி காலைல ஆபீஸ்ல இருந்து போன் பண்ணினேன்... நீ வெளிய போய் இருக்கேன்னு அம்மா சொன்னதுமே நீ அவன பாக்க தான் போய் இருப்பேன்னு தெரிஞ்சு தான் அங்க வந்தேன்... என் யூகம் பொய்க்கல" என கோபம் துளியும் குறையாமல் அவளை குற்றவாளி கூண்டில் நிறுத்தினான்

"கண்ணால் காண்பதும் பொய்..." என அவள் தன் நிலையை விளக்க முயல

"பேசாத... என்னை கொலகாரனாக்கிடாத...  கணேஷ் லைன்ல கிடைக்கிலைனதும் அடுத்தது அவன் தானே... இல்ல வேற ஆப்சன்ஸ் ஏதும் இருக்கா இன்னும் எனக்கு தெரியாம..."

"ஐயோ... கடவுளே..." என அவள் கதற, அவள் கதறல் அவனை சிறிதும் அசைக்கவில்லை

"என்கிட்ட இருந்து போகணும்கறது தானே உன் விருப்பம்... போ... எவன் கூட வேணும்னாலும் போ... இந்தா டைவர்ஸ் பேப்பர்ஸ்... இதுல கையெழுத்து போடு... விவாகரத்து வந்ததும் எப்படியோ போய் தொல. ஆனா இந்த வீட்டுல இருக்கற வரை எங்க குடும்ப கெளரவம் போகறத பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்..." என இரக்கமின்றி வார்த்தைகளை கொட்டினான்

சுமேதா சிலையாய் சமைந்தாள். இவனிடம் இனி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்தாள். தன்னை வேசியாய் சித்தரித்து பேசுபவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது.

மனதில் கடுகளவேனும் அன்பிருந்தால் நிச்சியம் அவனால் இப்படி பேச இயலுமா? அன்பும் காதலும் ஒரு பக்கமாய் இருந்து சாதிக்கபோவதென்ன என உடைந்து போனாள்

இப்படி இருப்பவனிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என தீர்மானித்தாள். அவன் சொல்வது போல் விவாகரத்து பெற்று விலகுவது தான் சரி என முடிவுக்கு வந்தாள்

அவன் பெற்றவர்கள் ஊருக்கு சென்று திரும்பி வந்ததும் அவர்களிடம் ஒரு வார்த்தை கூறி விட்டு விலகுவது என தீர்மானித்தாள்.அதற்குள் அனிதாவை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டுமென நினைத்தாள்

அந்த இரவு இருவரும் ஒரு நொடியும் கண் மூடவில்லை

சூர்யாவின் நிலைமை இன்னும் மோசமாய் இருந்தது. தன்னை விட்டு விலகும் எண்ணத்தில் தானே இன்னொருவனை தேடிப்போனாள் என்பதை அவனால் தாங்க இயலவில்லை

தான் விவாகரத்தை பற்றி கூறிய போது மறுத்து பேசாமல் நின்றாளே. அவள் மனதில் நான் இருந்தால் ஏன் இந்த மௌனம்

தான் முன்பு நினைத்தது போல் அவள் சரியானவள் அல்ல. என்னை அப்படி நம்ப செய்ய அவள் நடத்திய நாடகம் தான் அது. அவளின் பல நாடகங்களில் இதுவும் ஒன்று

இவளால் எனக்கு நேர்ந்த துன்பத்தை எல்லாம் கூட மறந்து  இவளை என் மனதில் இருத்த முயன்றேனே என தன் மீதே கோபம் கொண்டான்

மறுநாள் காலை சூர்யாவின் பெற்றோர் வெளியூர் கிளம்ப அதன் பின் இரண்டு நாட்கள் அந்த வீட்டில் மௌனமே ஆட்சி செய்தது
___________________________________________

அதே நேரம் சென்னையின் புகழ் பெற்ற அந்த மருத்துவமனையில் ஒரு நோயாளி யார் கைகளிலும் சிக்காமல் படிகளில் தாவி ஏறி கொண்டிருக்க மருத்துவமனை பணியாட்கள் பிடிக்க முயன்று கொண்டிருந்தனர்

"ஏய் நில்லு... சொன்னா கேளு... சரி நீ மருந்து சாப்பிட வேண்டாம் நில்லு" என பணியாள் கத்தி கொண்டே வர அந்த நோயாளியின் காதில் எதுவும் விழுந்ததாய் தெரியவில்லை

எல்லோருக்கும் போக்கு காட்டி விட்டு மொட்டை மாடிக்கு சென்று கீழே குதிக்க முயன்ற கணம் "அனிதா... " என்ற குரலில் நின்றாள்

குரல் வந்த திசையில் அருண் நிற்பதை கண்டவள் ஓடி சென்று அவன் கைகளை பற்றி கொண்டாள். "அருண்... அருண் ப்ளீஸ்... என்னை கூட்டிட்டு போய்டுங்க... இவங்க என்ன கொன்னுடுவாங்க... எனக்கு பயமா இருக்கு" என அழ எதுவும் புரியாமல் திகைத்தான் அருண்    

49 பேரு சொல்லி இருக்காக:

அன்னு said...

ஆஹா...ஒரு முடிவோடதான் கதை தொடர்ற மாதிரி இருக்கு. யக்கா...ஒரு வேளை இப்பல்லாம் உங்க இட்லிய நீங்களே சாப்பிடறீங்களோ??

மகி said...

ஒண்ணுமே புரியல ஒலகத்திலே! :):)
எங்கெங்கேயோ போகுதே கதை? சீக்கிரம் தொடருங்க புவனா!

Porkodi (பொற்கொடி) said...

கதைல வந்ததுக்கே அனிதாவுக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுன்னா, படிக்கற எங்க கதி என்ன? இதை சொல்றதுக்காக என்னோட 10 வருச தவத்தை ஒரு நிமிஷம் கலைச்சுக்குறேன், இட்ஸ் ஓகே.

அன்னு said...

//கதைல வந்ததுக்கே அனிதாவுக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுன்னா, படிக்கற எங்க கதி என்ன? //

repeattttttttttttttttttttttttt :))

Gayathri said...

ayyo akka purialaye

Anonymous said...

//ஒரு வேளை இப்பல்லாம் உங்க இட்லிய நீங்களே சாப்பிடறீங்களோ?? //

//கதைல வந்ததுக்கே அனிதாவுக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுன்னா, படிக்கற எங்க கதி என்ன? இதை சொல்றதுக்காக என்னோட 10 வருச தவத்தை ஒரு நிமிஷம் கலைச்சுக்குறேன், இட்ஸ் ஓகே. //

repeattttttttttttttttttttttttt :))

- Ana

BalajiVenkat said...

Naan ninaitha mathiri thaan irukku ..... Hahaha naan oralavukku kandupuduchiten...... :P

கோவை ஆவி said...

//"கண்ணால் காண்பதும் பொய்..." என அவள் தன் நிலையை விளக்க முயல

-- ஏங்க, டென்சனா ஒரு மனுஷன் பேசும்போது குறள் எல்லாம் சொல்லிட்டு இருந்தா எப்படி?

//"நிறுத்துங்க சூர்யா... என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு...

-- சுமேதா மட்டும் இல்லை வாசகர்களும் இதே டயலாக் தான் சொல்றாங்க..

அடுத்த கதையிலாவது சுமேதாவுக்கு ஒரு நல்ல ஜாலி ரோல் கொடுங்க... அழுது அழுது அவங்க வீட்டு பக்கத்து கடைலே "டிஷ்ஷு" தீர்ந்ததுதான் மிச்சம்...

LK said...

முடியலை. கடைசி பகுதி போட்டுட்டு சொல்லு நான் வரேன்

siva said...

எனக்கு பயமா இருக்கு" ப்ளீஸ்
எனக்கு பயமா இருக்கு" எனக்கு பயமா இருக்கு" எனக்கு பயமா இருக்கு" எனக்கு பயமா இருக்கு" எனக்கு பயமா இருக்கு" எனக்கு பயமா இருக்கு" எனக்கு பயமா இருக்கு" எனக்கு பயமா இருக்கு"..

entha thodarai epo mudippenga????

siva said...

நிறுத்துங்க.... ப்ளீஸ்
பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு..............

siva said...

Vasargala meethu...
மனதில் கடுகளவேனும் அன்பிருந்தால்...
நிறுத்துங்க.... ...........ப்ளீஸ் entha thodarai..

niruthidrathengaa...supera poikitu erukku..

appavi valga..

பத்மநாபன் said...

அனிதா - அருண் கதைக்குள் மீள் வருகை -புது முடிச்சு
யார் கை காட்டுனாலும் நிற்காம வண்டி பறக்குது....

தக்குடு ஆல்ஸோ ஹேப்பி....

அமைதிச்சாரல் said...

அப்பாவி வாழ்க... வேறென்னத்தை சொல்ல :-)))))
கதை சூப்பரா வேகம் பிடிக்குது..

LK said...

//கதை சூப்பரா வேகம் பிடிக்குது.. //
engaaa megath todar tothirum. appavi down down

சௌந்தர் said...

ஒரு நோயாளி யார் கைகளிலும் சிக்காமல் படிகளில் தாவி ஏறி கொண்டிருக்க மருத்துவமனை பணியாட்கள் பிடிக்க முயன்று கொண்டிருந்தனர்

"ஏய் நில்லு... சொன்னா கேளு... சரி நீ மருந்து சாப்பிட வேண்டாம் நில்லு" என பணியாள் கத்தி கொண்டே வர அந்த நோயாளியின் காதில் எதுவும் விழுந்ததாய் தெரியவில்லை////

அட அது நான் தான் :(

Arul Senapathi said...

Enge Sellum Indha Pathai?

Interesting.

ஸ்ரீராம். said...

பழிவாங்க நினைத்த சூர்யா மனசுல சுமேதா மேல ஈரம்...ரைட்டு...கடைசியில எப்படியும் இணையப் போறாங்க... இன்னொரு ஃப்ளேஷ் பேக்குக்குப் பின்னால் அருணே நேராக வந்து சொல்லலாம். அனிதாவும் வந்து உண்மையை சூர்யாவிடம் சொல்லலாம்... இடையில் இன்னொரு புது கேரக்டர் புகலாம்...அதற்கொரு ஃபிளாஷ்பேக் வரலாம் ...அப்பாவி...எப்போங்க இவிங்களை சேர்த்து வைப்பீங்க...நான் சீரியலே பார்க்கறதில்லை ...அதுலயும் அழுவாச்சியா இருந்தா ...!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

இந்த தொடர் முடியும் வரை இவங்க ப்ளாக்கில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்,என்னுடன் சேர்ந்து சிவாவும்,LK,மற்றும் பெயரில்லாவும் வெளிநடப்பு செய்வார்கள்,கடைசி பாகம் வரும் போது சொல்லி அனுப்புங்க

LK said...

//இந்த தொடர் முடியும் வரை இவங்க ப்ளாக்கில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்,என்னுடன் சேர்ந்து சிவாவும்,LK,மற்றும் பெயரில்லாவும் வெளிநடப்பு செய்வார்கள்,கடைசி பாகம் வரும் போது சொல்லி அனுப்புங்க //

+1000000000000

Anonymous said...

pothum intha sothanai seekramaa mudingaa please ...sandhya

SenthilMohan said...

புவிக்கா... எல்லாத்தொடரையும் ஒரேமுட்டா படிக்கோனும்னு தான், இந்தப் பக்கம் வர்றத கொஞ்சம் pause பண்ணி வெச்சிருக்கேன். நீங்க என்னடான்னா, மைக் கெடச்ச ஒன்றியப்பேச்சாளர் மாதிரி நீட்டி முழக்கீட்டு இருப்பீங்க போலிருக்கு. கல்கியோட பொன்னியின் செல்வன் தொடர் முடிஞ்சிருச்சுன்னு சொன்ன உடனே எல்லாரும் லெட்டர் எழுதுனாங்கலாம். ஏன்யா சீக்கிரம் முடிச்சுட்டீங்கன்னு. உங்களுக்கு அந்த மாதிரி லெட்டர் வேணும்னா சொல்லுங்க. நான் ஒன்னுக்கு பத்தா அனுப்பி வெக்குறேன். அப்டியே உங்க தள வாசிக சிகாமணிகளிடம் சொல்லி ஆளுக்கு பத்து, பத்து லெட்டெர அனுப்ப சொல்றேன். சீக்கிரம் முடிச்சு வைங்கக்கா. Book போடுற idea எதுனா இருக்கா?

எஸ்.கே said...

தொடரட்டும். தொடரட்டும். வாழ்த்துக்கள்!

அன்னு said...

//நீங்க என்னடான்னா, மைக் கெடச்ச ஒன்றியப்பேச்சாளர் மாதிரி நீட்டி முழக்கீட்டு இருப்பீங்க போலிருக்கு.//

இதுக்கு கன்னா பின்னான்னு ரிப்பீட்டு!!
:))))))))))))))

தக்குடுபாண்டி said...

@ பத்மனாபன் சார்- ஹலோ பத்மனாபன் சார்! தக்குடுவோட தலையை எதுக்கு உருட்டரீங்க? நாம ரெண்டு பேரும் எதுக்கு வரோம்னு இட்லி மாமிக்கு தெரியும்..:P

@ இட்லி மாமி - தக்குடுவோட விண்ணப்பத்தை நிறைவேற்றியதற்கு ஒரு சலாம்!!..:) அப்பிடியே அடுத்த பகுதில நம்ப வித்யா பாலன்,ஐஸ் குட்டி,ஸ்ரேயா அந்த மாதிரி.........ஹலோ

மார்கண்டேயன் said...

அடப்பாவி, அப்பாவின்னு நெனச்சது எம்பூட்டு தப்பா இருக்கு . . .

ஒன்னு புரிஞ்சிரிச்சு,

அரசியல்வாதிகள ஊழல் பண்றத நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன், எத்தியோப்பியால வெயில் அடிக்கிறது நிக்கட்டும், நான் நிப்பாட்டுறேன் ... ன்னு 'நாயகன்' பாணியில சொல்றீக,

ம்ம் நடக்கட்டும்,

அதெல்லாம் கெடக்கட்டும், இப்டி தொடறதுக்கு அம்பது கோடி அச்சாரம் வாங்குனீகளே, அதுல எங்கள மாதிரி தொடர்ந்து வாசிச்சவங்களுக்கு பங்கிருக்கா, இல்லையான்னு மட்டும் தெளிவா சொல்லிடு தாயி . . .

ஜெய்லானி said...

இதெல்லாம் நல்லதில்லை சொல்லிட்டேன் ஆமா..!! ....!! (( எனக்குதான் ))

மோகன்ஜி said...

:))))))

siva said...

இந்த தொடர் முடியும் வரை இவங்க ப்ளாக்கில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்,என்னுடன் சேர்ந்து சிவாவும்,LK,மற்றும் பெயரில்லாவும் வெளிநடப்பு செய்வார்கள்,கடைசி பாகம் வரும் போது சொல்லி அனுப்புங்க
////

என்னுடைய முழு அதரவு உண்டு
அப்பாவி டௌன் x 10000

vinu said...

thinathandhi chindubaath is < athae kangal

பத்மநாபன் said...

@தக்குடுத்தம்பி //எதுக்கு உருட்டரீங்க?//செல்லத்தம்பிய சும்மா கிள்ளிப்பார்த்தேன்....

//நாம ரெண்டு பேரும்//செட்டுல சேர்த்துக்கிட்டதுக்கு மகிழ்ச்சி.

ஐசுக்குட்டி :)))) கோரிக்கை நிறைவேற்ற ``அதேகண்கள்`` ரசிகர் மன்றம் பரிந்துரைக்கிறது

ஈரோடு தங்கதுரை said...

இப்போதுதான் முதல் முறை உங்க வலைப்பக்கம் வருகிறேன். நல்ல வரிகள் ...! கதையும் அருமை. வாழ்த்துக்கள். !

http://erodethangadurai.blogspot.com/

Krishnaveni said...

Excellent writing style bhuvana, keep going

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - எஸ் எஸ்... பின்ன முடிவில்லாம ஒரு கதை இருக்க முடியுமா சொல்லுங்க அன்னு... ஹா ஹா ஹா... (இட்லி வந்தா சாப்பிடலாம் தான்... ஹும்...)

@ மகி - எங்கயோ போகுதா... இல்லையே இங்கயே தானே இருக்கு மகி... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - அடிப்பாவி... இதுக்கா உன் தவத்தை கலைத்தாய்... பிடி இந்த துர்வாசியின் சாபத்தை...அடுத்த ஜென்மத்திலும் போற்கொடியாய் ச்சே ச்சே... பொற்கொடியாய் பிறந்து... இதே அதே கண்கள் கதையை தமிழ் பாடத்தில் மனப்பாட பகுதியை படித்து இன்புற சபிக்கிறேன்... (ஹா ஹா அஹ... என்கிட்டயேவா....?)

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - என்னத்த ரிபீட்டு... இருங்க உங்களுக்கும் ஒரு சாபம் ரெடி பண்றேன்... ஹா ஹா ஹா

@ Gayathri - என்னாது புரியலியா? அடிப்பாவி... தமிழ்ல தானே எழுதறேன்...அதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம... ஹும்...

@ அனாமிகா - சொந்த ஐடில வா...அப்ப தான் பதில் சொல்வேன்... (ஹா ஹா ஹா )

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - குட் குட் தேங்க்ஸ் சார்

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி -
//ஏங்க, டென்சனா ஒரு மனுஷன் பேசும்போது குறள் எல்லாம் சொல்லிட்டு இருந்தா எப்படி?//
ஆனந்த் தெய்வமே... யாருங்க அண்ணா உங்க தமிழ் வாத்தியார்... அது குரல் இல்லைங்ண்ணா பழமொழிங்க... மீ எஸ்கேப்...

//சுமேதா மட்டும் இல்லை வாசகர்களும் இதே டயலாக் தான் சொல்றாங்க.. //
இல்லையே.. என் காதுல அதெல்லாம் விழவே இல்லையே சார்

//அடுத்த கதையிலாவது சுமேதாவுக்கு ஒரு நல்ல ஜாலி ரோல் கொடுங்க... அழுது அழுது அவங்க வீட்டு பக்கத்து கடைலே "டிஷ்ஷு" தீர்ந்ததுதான் மிச்சம்//
அப்பாடா... tissue கம்பனி காரனுக்கு குடுத்த வாக்க காப்பத்தியாச்சு... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ LK - சரிங்க சாரே...

@ siva - என்ன பயம்? என்ன பொறுமை? என்ன எல்லை?

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - எஸ் எஸ்... வண்டி நிறுத்தறதா இல்லைங்கண்ணா... என்னைக்காச்சும் நம்மூரு மக்கள் முன் வெச்ச காலை பின் வெச்ச சரித்தரம் இருக்கா சொல்லுங்க? ஹா ஹா அஹ.. தக்குடு ஆல்ஸோ ஹேப்பியா... இல்ல பக்கத்துக்கு இலை பாயசமா?ஹா ஹா ஹா

@ அமைதிச்சாரல் - தட்ஸ் குட் அக்கோவ்... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ LK - நன்றி நன்றி நன்றி

@ சௌந்தர் - ஓ... நீங்க தானா அது... சொல்லவே இல்ல .... ஹா ஹா ஹா

@ Arul Senapathi - தேங்க்ஸ் அருள்

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ஹா ஹா... நன்றிங்க

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - கோஷ்டி ஒழிக ஒழிக

@ LK - -100000000000000000000000000

அப்பாவி தங்கமணி said...

@ சந்த்யா - ஒகே சந்த்யா...தேங்க்ஸ்

@ SenthilMohan - ஹா ஹா ஹா... புக் போடுற ஐடியா இருக்கு... சும்மா இப்படி விடறது...

@ எஸ்.கே - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - இருங்க இருங்க வெக்கறேன் ஆப்பு

@ தக்குடு - ஹா ஹா ஹா... அடப்பாவி... என் ப்ளாக்ஐ என்னமோ நேயர் விருப்பம் ஸ்டைல்ல மாத்திட்டியே...ஹும்...சரி சரி

@ மார்கண்டேயன் - எஸ் எஸ்....எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன்...அதே தான்...ஹா ஹா ஹா... அம்பது கோடி அச்சாரமா.... பேசுங்க பேசுங்க

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - ஹா ஹா ஹா

@ மோகன்ஜி - :))))))

@ siva - //அப்பாவி டௌன் x 10000 // - நன்றி நன்றி நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ஹா ஹா ஹா

@ பத்மநாபன் - அண்ணி நம்பர் கண்டிப்பா வேணும்...ஹா ஹா ஹா

@ ஈரோடு தங்கதுரை - ரெம்ப நன்றிங்க... முதல் வருகைக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - Thanks a lot Veni... I guessed you will like it... thanks

Ananthi said...

ஆஹா... முடியல... சரி நானும் விடறதா இல்ல...
இன்னிக்கு எல்லா பதிவும் படிச்சுட்டு சொல்றேன்.. :)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ha ha... sollunga sollunga

Post a Comment