Monday, October 18, 2010

அதே கண்கள்... (பகுதி 20)


எல்லோருக்கும் போக்கு காட்டி விட்டு மொட்டை மாடிக்கு சென்று கீழே குதிக்க முயன்ற கணம் "அனிதா... " என்ற குரலில் நின்றாள்

குரல் வந்த திசையில் அருண் நிற்பதை கண்டவள் ஓடி சென்று அவன் கைகளை பற்றி கொண்டாள். "அருண்... அருண் ப்ளீஸ்... என்னை கூட்டிட்டு போய்டுங்க... இவங்க என்ன கொன்னுடுவாங்க... எனக்கு பயமா இருக்கு" என அழ எதுவும் புரியாமல் திகைத்தான் அருண்   

"அனிதா என்ன ஆச்சு உனக்கு? அனிதா" என அவளை விலக்கி நிறுத்த முயன்றான். அவளோ, அவனை விட்டால் தனக்கு வேறு வழியில்லை என்பது போல் அவன் கைகளை இறுக பற்றி அவன் தோளில் தலை சாய்த்து நின்றாள்

அனிதாவின் பின்னோடு ஓடி வந்த டாக்டர் மற்றும் செவிலியர் அவளின் இந்த செய்கையில் திகைத்து நின்றனர்
______________________________________________

அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான் சூர்யா. டெலிபோன் மணி அடிக்க நிதானமாய் வந்து எடுத்தான்

எதிர்முனையில் சொன்ன செய்தியில் பதறினான். அவன் பதட்டத்தை கண்ட சுமேதா என்னவோ என பயந்து "என்னாச்சு..." என்றபடியே அவனருகில் வந்தாள்

அவள் இருப்பை கூட மறந்தவன் போல் "என்ன டாக்டர் சொல்றீங்க? இப்ப அனிதா எப்படி இருக்கா?" என கண்களில் நீர் துளிர்க்க கேட்டான் சூர்யா

அனிதாவின் பெயரை கேட்டதும் சுமேதாவின் முகம் மாறியது... "ஐயோ என்னாச்சு... சொல்லுங்க ப்ளீஸ்" என அவன்  கையை பற்றி உலுக்க அவளை உதறினான் சூர்யா

"நான் இப்பவே வரேன் டாக்டர்... ப்ளீஸ்... இன்னொரு தரம் இப்படி நடக்காம பாத்துக்கோங்க டாக்டர்" என தொலைபேசியை கீழே வைத்தவன் உடனே அலுவலகத்துக்கு அழைத்து இன்று தான் வர இயலாது என தெரிவித்தான்

தன் அறைக்கு சென்று ஒரு பெட்டியை  எடுத்து கொண்டவன் வேகமாய் கீழே வர படிகளின் முடிவில் நின்றிருந்த சுமேதாவை பொருட்படுத்தாமல் விலகினான்

கதவின் அருகில் வந்து அவனை மறித்து நின்றாள் சுமேதா. "என்னாச்சு சொல்லுங்க... அனிதாவுக்கு என்னாச்சு?"என கேட்க

"அவளை பத்தி உனக்கென்ன தெரியும்...வழி விடு" என கத்தினான்

"எதுவும் தெரியாது... உங்க காப்போர்ட்ல அவ போட்டோ பாத்து எதுவும் புரியாம மேல தெரிஞ்சுக்கணும்னு தான் கணேசையும் அருணையும் தேடினேன்... நீங்க அதையும் தப்பாதான் புரிஞ்சுக்கிட்டீங்க" என்றவளை ஒரு கணம் எதுவும் பேசாமல் பார்த்தான்

"வழி விடு" என்றான் எதுவும் காதில் விழாதது போல்

"முடியாது... அனிதாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்னு சொல்லுங்க... அவளுக்கு என்ன ஆச்சு? எனக்கு தெரியணும்"

"எதையும் உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல" என அவளை கீழே தள்ள முயன்றான்

"ஏன்...? அவ உங்க காதலியா?" என கோபமாய் கேட்க

"ஏய்............." என அவளை அடிக்க கை ஓங்கினான். சுமேதாவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை அடிக்கவிடாமல் தடுத்தது "ஒழுங்கா வழி விடு" என கத்தினான்

"அப்ப நீங்க போற எடத்துக்கு நானும் வரேன்... " என கதவு திறந்து வெளியேறினாள். அவன் எதுவும் பேசாமல் வெளியே வர, அவசரமாய் வீட்டை பூட்டி விட்டு வந்து காரில் ஏறினாள்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. சுமேதா தான் ஆரம்பித்தாள் "ப்ளீஸ் சொல்லுங்க... உங்களுக்கும் அனிதாவுக்கும் என்ன உறவு?"

"நீ நெனக்கரமாதிரி எந்த உறவும் இல்ல" என்றான் உணர்ச்சியற்ற குரலில்

"ப்ளீஸ்... சொல்லுங்க" எனவும், அவளும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமென நினைத்தானோ என்னமோ

"அவ என் சித்தி பொண்ணு... "

"என்ன....?" என்றாள் ஆச்சிர்யமாய், உடனே  "என்னாச்சு அவளுக்கு..." என பதறினாள்

"செய்யறதையும் செஞ்சுட்டு என்னனு வேற கேக்கறையா?" என கோபமாய் கேட்க

"எனக்கு எதுவும் புரியல சூர்யா... ப்ளீஸ் சொல்லுங்க" என கெஞ்சலாய் கேட்க அதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவன் போல்

"ஒம்பது வயசுல வீட்டுக்கு திருட வந்த ஒரு கும்பலால தன்னோட அம்மா அப்பா அக்கா எல்லாரும் கொல்ல பட்டத பாத்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த அதிர்சசியிலேயே நடை பிணமா இருந்தா... அப்ப இருந்தே அவ எங்க வீட்டுல தான் வளந்தா... எனக்கு அவ மேல உயிர்..." என்றவன் வேதனையில் முகம் சுருங்க அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தினான்

அவன் முகத்தில் இருந்த வேதனையை பார்த்தவள் எதுவும் பேசவில்லை, அவனே தொடரட்டுமென அமைதிகாத்தாள்

"கொஞ்ச கொஞ்சமா பழசெல்லாம்  மறந்து நிம்மதியா இருந்தோம் எல்லாரும். ஆனாலும் சின்ன வயசுலேயே ஏற்பட்ட அந்த அதிர்ச்சியால அவ ரெம்ப பயந்த சுபாவமாவே இருந்தா" என்றவன் காரை ஓரமாய் நிறுத்தினான்

பின் சீட்டில் இருந்த சூட்கேசில் இருந்து ஒரு டைரியை எடுத்து "இது அனிதா எழுதின கடைசி டைரி... போன வருஷ டைரி... நீயே படிச்சுக்கோ.. நீ பண்ணின பாவம் என்னனு புரியும்" என்றான் உணர்ச்சியற்ற குரலில். பின் எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்

சுமேதா டைரியை திறக்க முதல் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படம் அதன் மேல் "மை ஸ்வீட் அண்ணா" என்று எழுதப்பட்டிருந்தது  அனிதாவின் கையெழுத்தில்

//ஜனவரி முதல் நாள்: இன்னிக்கி ஒரே ஜாலி, அண்ணா புல் டே வீட்டுலையே இருந்தான்... அண்ணாதான் இந்த டைரி எனக்கு குடுத்தான். கடவுளே, எப்பவும் போல இந்த நியூ இயர் அன்னைக்கும் எனக்கு ஒரே ஒரு விஷ் தான். எனக்கு அடுத்த ஜென்மத்துலயும் இதே அண்ணா வேணும் ப்ளீஸ்....// என்பதோடு முடிக்கப்பட்டிருந்தது 

அடுத்த வந்த பல பக்கங்கள் பெரும்பாலும் சூர்யாவை பற்றியதே. சிலது அவள் பள்ளியை பற்றியும் +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர வேண்டுமென்பது பற்றியும் எழுதி இருந்தாள்.அதன் பின் சில பக்கங்கள் காலியாய் இருந்தன

//ஜூன் 28ம்  நாள்: ரெம்ப நாள் கழிச்சு டைரி எழுதறேன் இன்னைக்கி. எக்ஸாம் பிஸி, லீவ்னு அப்படியே ஓடி போச்சு. இன்னிக்கி மொதல் மொதலா காலேஜ் போனேன். ரெம்ப பயமா இருந்தது. ராக்கிங் எல்லாம் பண்ணினாங்க. அத்தன பயத்துலையும் ஒரு சந்தோஷம் ஒரு அக்காவ பாத்ததுல. அவங்க பேரு சுமேதானு அவங்க பிரெண்ட்ஸ் கூப்பிட்டப்ப தெரிஞ்சுகிட்டேன். என் அக்கா உயிரோட இருந்திருந்தா இப்படி தான் இருந்துருப்பானு ஏனோ தோணுது. அவங்கள பாக்கவே அடிக்கடி சீனியர் க்ளாஸ் பக்கம் போய் இன்னிக்கி நெறைய ராக்கிங்ல மாட்டினேன்... இருந்தாலும் ஒகே. அவங்கள பாத்துல ஹாப்பி//

இதை படித்ததும் சுமேதாவின் கண்கள் நிறைந்தது. அடுத்த வந்த பக்கங்கள் பலவும் சூர்யாவுக்கு இணையாய் தன்னை பற்றியும் அனிதா எழுதி இருந்ததை ஆச்சிர்யமாய் படித்தாள் சுமேதா

தான் அணிந்து வந்த உடைகள் பற்றியும் தன் எல்லோரிடமும் பழகும் விதம் பற்றியும் நிறைய எழுதி இருந்தாள். அனிதா தன்னை இவ்வளவு கவனித்தாள் என்பதே சுமேதாவிற்கு இன்னும் நம்ப இயலாமல் இருந்தது. அவளை போய் அருண் பேச்சை கேட்டு வருத்தினோமே என தன் மீதே கோபம் வந்தது

அதை பற்றி என்ன எழுதி இருக்கிறாள் என அரிய பக்கங்களை வேகமாய் புரட்டினாள்

//டிசம்பர் 5 : இன்னிக்கி எனக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு ரெம்ப பிடிச்ச சுமி அக்கா என்னை அழ வெச்சுட்டாங்க. யாரோ ஒருத்தர்கிட்ட போய்  ஐ லவ் யு சொல்ல சொல்லி ராக் பண்ணினாங்க. எனக்கு என் அக்கா அப்படி செஞ்சது மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு. அக்கா ஏன் இப்படி செஞ்சாங்கன்னு தெரியல... ஆனாலும் ஐ லவ் அக்கா... ஐ லவ் மை சுமி அக்கா//

இதை படித்ததும் சுமேதா டைரியை மடி மீது வைத்து விட்டு கைகளால் முகம் பொத்தி விசும்பினாள்

அவளை திரும்பி பார்த்த சூர்யா தன்னையும் அறியாமல் அவளை நோக்கி நகர்ந்த கைகளை கட்டுப்படுத்தினான். எதுவும் பேசாமல் மீண்டும் சாலையில் கவனம் செலுத்தினான்

மீண்டும் டைரியை எடுத்து படிக்கலானாள் சுமேதா

// டிசம்பர் 6 : இன்னிக்கி காலேஜ் விட்டு வெளிய வர்றப்ப யாரோ ரெண்டு பேரு வந்து "அருண்கிட்ட மட்டும் தான் ஐ லவ் யு சொல்லுவியா எங்ககிட்ட சொல்ல மாட்டியானு" மெரட்டினாங்க. அதுக்குள்ள அண்ணா என்னை கூட்டிட்டு போக வந்துட்டாரு, தப்பிச்சுட்டேன்... ஆனா ரெம்ப பயமா இருக்கு. அண்ணாகிட்ட கூட சொல்லல//

//டிசம்பர் 10 : இன்னிக்கி எனக்கு ரெம்ப மூட் அவுட். சுமி அக்கா அந்த அருண லவ் பண்றாங்க போல இருக்கு. அக்காவுக்கு இன்னும் பெட்டரா மாப்பிள்ளை இருக்கணும்னு எனக்கு தோணுது. ஆனா சொல்ல பயமா இருக்கு. லைப்ரரி பின்னாடி பார்க்ல ரெண்டு பெரும் பேசிட்டு இருந்தாங்க. எனக்கு பிடிக்கல, நான் எழுந்து போயிட்டேன்//

//டிசம்பர் 13 : இன்னிக்கி அந்த ரெண்டு பேரு மறுபடியும் வந்து மெரட்டினாங்க காலேஜ்குள்ளேயே. எனக்கு காலேஜ் போகவே பயமா இருக்கு. அதுல ஒருத்தன் ரவுடி மாதிரி இருக்கான்... ரெம்ப பயமா இருக்கு//

அதன் பின் வந்த பக்கங்கள் எல்லாம் காலியாய் இருந்தன. முன்னும் பின்னும் திருப்பு பார்த்தாள்

"அதுக்கு மேல எழுதற நெலமைல அவ இல்ல..." என்ற சூர்யாவின் குரலில் அதிர்ச்சியானாள் சுமேதா

"என்ன சொல்றீங்க? என்ன ஆச்சு அனிதாவுக்கு? ப்ளீஸ் சொல்லுங்க" என அழுது கொண்டே சுமேதா கேட்க அவளை  உணர்ச்சியற்ற பார்வையுடன் ஏறிட்டான்

"டிசம்பர் 13  தான் அவ கடைசியா எழுதினது. அதுக்கு அடுத்த நாள் அந்த ரெண்டு பேர் மறுபடியும் அவள மெரட்டி இருக்காங்க. அதுல ஒருத்தன் கத்திய காட்டினதும் அனிதா ரெம்ப பயந்துட்டா. சின்ன வயசுல கண் முன்னாடி பாத்த கொடூரம் நினைவு வந்ததோ என்னமோ ஹிஸ்டீரியா வந்தவ போல கத்திட்டே வீட்டுக்கு வந்தா அன்னைக்கி. நாங்க எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்லல. நிலைமை கட்டுகடங்காம போனப்ப தான் டாக்டர்கிட்ட போனோம். இதெல்லாம் கூட டாக்டர் அவ ட்ரீட்மென்ட் அப்போ அவ வாயால சொல்ல வெச்சு தான் நாங்க தெரிஞ்சுகிட்டோம்" என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை

சற்று நேரம் சுமேதாவிற்க்கும் பேச இயலவில்லை. தான் செய்த ஒரு சிறு விளையாட்டுத்தனமான தவறு ஒரு பெண்ணின் வாழ்வையே சூரையாடிவிட்டதே என குற்ற உணர்வில் குறுகி போனாள்

"அவங்கள கண்டுபிடிக்க முடியலையா?" என அவள் மெதுவாய் கேட்க

"இந்த விஷயம் / அவ டைரி எல்லாமும் அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூணு மாசம் கழிச்சு தான் எனக்கு தெரியும். அப்புறம் விசாரிச்சப்ப  அந்த ரெண்டு பேர் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் இல்ல... சும்மா ஊர் சுத்தற ராஸ்கல்ஸ்னு  தெரிஞ்சுது. காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் போர்வைல உள்ள வந்து கலாட்டா செய்யற ரவுடிக. அனிதாவோட விசயம் தெரிஞ்சு ஊரை விட்டே ஓடிட்டாங்க" இதை கூறிய போது அவன் கைகள் ஸ்டீரிங் மீது இறுகியதை கவனித்தாள் சுமேதா

மீண்டும் அவனே தொடர்ந்தான் "உன்னை பத்தி அவ டைரில படிச்சப்ப நீ தான் இதை ஆரம்பிச்சு வெச்சவங்கர கோபத்துல அப்பவே உன்னை தேடி பிடிச்சு கொல்லணும்னு தோணுச்சு. ஆனா அனிதா குணமாகறவரை நான் ஜெயிலுக்கு போகக் கூடாதுன்னு கட்டுபடுத்திகிட்டேன். அப்போ தான் தரகர் மூலமா உன்னோட போட்டோ வந்தது. கடவுளே குடுத்த சந்தர்ப்பம்னு நெனச்சு சம்மதம் சொன்னேன்"

பாறையை இறுகி இருந்த அவன் முகத்தை பார்க்க பயமாய் இருந்தது. அவன் தன்னை தவறாய் நினைப்பதை ஏற்க இயலாமல் தவித்தாள்

"சூர்யா நான்..." என சுமேதா ஏதோ சொல்ல முயல "பேசாதே" என்பது போல்  கை உயர்த்தினான். அதற்கு மேல் பேச தைரியமின்றி ஜன்னல்  வெளியே பார்ப்பது போல் முகம் திருப்பி மௌனமாய் கண்ணீர் உகுத்தாள்


(தொடரும்...)

...

45 பேரு சொல்லி இருக்காக:

Arul Senapathi said...

Now, it is getting closer.

அன்னு said...

யப்பா....ஒரு வழியா குகையோட மறுவாசல் தெரியுதுப்பா சாமீ...தொடர் எங்கே தொடர்கதையாகிடுமோன்னெ இருந்தேன்...எப்படியோ ஒரு க்ளூ கிடச்சதே...இனி முடிஞ்சிரும்தானே?? (அது வேற இதுக்காகவே மறுபடியும் கதையை தொடர்ந்திடப் போறீங்க!!)

Porkodi (பொற்கொடி) said...

ஏற்கனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?

LK said...

no comments

ஸ்ரீராம். said...

புதிய கோணத்தில் திரும்புகிறது கதை. ம்.. அடுத்த பகுதி எப்போ...இன்னும் பனிரெண்டு மணி நேரத்தில்தானே...!

கோவை ஆவி said...

கதை நல்லா போகுது... அது சரி, இந்த த்ரிஷா பொண்ணு இப்படி பயப்படுதே ஏன்??

அமைதிச்சாரல் said...

அடப்போங்கப்பா.. கடைசியில பழிவாங்குற கதையா :-))))))

Porkodi (பொற்கொடி) said...

//கடைசியில பழிவாங்குற கதையா :-)))))) //

இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், வேற என்னவா இருக்கும்னு நீங்க இத்தன நாளா எதிர்ப்பாத்தீங்க??! இன்றில் இருந்து உண்மையான அப்பாவி பட்டம் அமைதிச்சாரலுக்கு அளிக்கப்படுகிறது. :)))

அன்னு said...

//கதை நல்லா போகுது... அது சரி, இந்த த்ரிஷா பொண்ணு இப்படி பயப்படுதே ஏன்?? //
கதையாசிரியர் வீட்டு இட்டிலியை பாத்திருக்கும் வேறென்ன..ஹி ஹி ஹி ...

அன்னு said...

//
//கடைசியில பழிவாங்குற கதையா :-)))))) //

இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், வேற என்னவா இருக்கும்னு நீங்க இத்தன நாளா எதிர்ப்பாத்தீங்க??! இன்றில் இருந்து உண்மையான அப்பாவி பட்டம் அமைதிச்சாரலுக்கு அளிக்கப்படுகிறது. :)))
//
repeatttttttttttt!!!!
:))

எஸ்.கே said...

படம் மாதிரி இருக்கு! செல்லுங்கள்!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அனிதாவை சீக்கிரம் குணப்படுத்திடுங்க ரொம்ப பாவம் அந்த பொண்ணு

Anonymous said...

hmmmm..sandhya

சே.குமார் said...

subam poda nerunkiyachchinnu theriyuthu...

aduththa thodar readyyaa irukka...

vinu said...

ok arun weds anithaa marriage invitationai marakkama post pannidunga

Gayathri said...

nalla irukku akka

ஹுஸைனம்மா said...

இந்த திரிஸாப் பொண்ணு எப்படி திகிலோடப் பாக்குதோ, அதேபோலத்தான் நானும் உங்க(ளை) பதிவைப் பாத்துகிட்டு இருக்கேன்! அடுத்ததுலயாவது முடிச்சுடுங்க ப்ளீஸ்!! இல்ல.... ஒரே போடுதான்!!

அமைதிச்சாரல்க்காவ், இம்புட்டு அப்பாவியா நீங்க?? ;-))

மார்கண்டேயன் said...

தொடரும் . . . அதானப் பாத்தேன் . . . அப்பாடி, இப்பத்தேன் நிம்மதியா இருக்கு

சௌந்தர் said...

இந்த கதைய படித்து பார்த்து திரிஷா இப்படி பயந்து போய் இருக்காங்க

ஜெய்லானி said...

மாமீ....!! எங்களை பார்த்தா ( அட்லீஸ்ட் என்னை பார்த்தாவது )) பாவமா தெரியலையா...?..இப்பிடி அநியயத்துக்கு சஸ்பென்ஸ் வச்சி கொல்றீங்களே..!! 2025 லையாவது முடியுமா...அவ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நசரேயன் said...

//அடுத்ததுலயாவது முடிச்சுடுங்க ப்ளீஸ்!! இல்ல....
ஒரே போடுதான்!!//

கண்டிப்பா நடக்கும்

பத்மநாபன் said...

கதை வண்டியை அப்படியே ஊட்டி மலையிலே திருப்பற மாதிரி ஒரு திருப்பு திருப்பிட்டிங்க ... இனி வண்டி கல்லாறு வந்து மறுபடியும் ஊட்டி போகணும்.. கடைசில கதை பூரா நல்லவங்களா மாறீடுவாங்க போல..
படத்தை பத்தி ஒன்னும் சொல்லல........

LK said...

சண் டீவில சொல்லி உனக்கு மெகாத் தொடர் சான்ஸ் வாங்கித் தரேன். சீக்கிரம் முடி

LK said...

////அடுத்ததுலயாவது முடிச்சுடுங்க ப்ளீஸ்!! இல்ல....
ஒரே போடுதான்!!////

nanum varen vetratukku

அனாமிகா துவாரகன் said...

//கதை நல்லா போகுது... அது சரி, இந்த த்ரிஷா பொண்ணு இப்படி பயப்படுதே ஏன்?? //
கதையாசிரியர் வீட்டு இட்டிலியை பாத்திருக்கும் வேறென்ன..ஹி ஹி ஹி ...

சண் டீவில சொல்லி உனக்கு மெகாத் தொடர் சான்ஸ் வாங்கித் தரேன். சீக்கிரம் முடி

//அடுத்ததுலயாவது முடிச்சுடுங்க ப்ளீஸ்!! இல்ல....
ஒரே போடுதான்!!//

கண்டிப்பா நடக்கும்

//மாமீ....!! எங்களை பார்த்தா ( அட்லீஸ்ட் என்னை பார்த்தாவது )) பாவமா தெரியலையா...?..இப்பிடி அநியயத்துக்கு சஸ்பென்ஸ் வச்சி கொல்றீங்களே..!! 2025 லையாவது முடியுமா...அவ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. //


//இந்த திரிஸாப் பொண்ணு எப்படி திகிலோடப் பாக்குதோ, அதேபோலத்தான் நானும் உங்க(ளை) பதிவைப் பாத்துகிட்டு இருக்கேன்! அடுத்ததுலயாவது முடிச்சுடுங்க ப்ளீஸ்!! இல்ல.... ஒரே போடுதான்!!//

//யப்பா....ஒரு வழியா குகையோட மறுவாசல் தெரியுதுப்பா சாமீ...தொடர் எங்கே தொடர்கதையாகிடுமோன்னெ இருந்தேன்...எப்படியோ ஒரு க்ளூ கிடச்சதே...இனி முடிஞ்சிரும்தானே?? (அது வேற இதுக்காகவே மறுபடியும் கதையை தொடர்ந்திடப் போறீங்க!!) /

REPEATTTTTTTTTUUUUU 2 ALL.. ha ha haaaaaaahaaaaaaaa ha ha

அமைதிச்சாரல் said...

@ போர்க்கொடி,
அன்னு,
ஹுஸைனம்மா,

அடப்பாவியக்காவோட கதையை தொடர்ந்து படிச்சப்புறமும் ஓரளவு தெளிவா இருக்கோமே,நாமெல்லோருமே உண்மையான அப்பாவிகள்தானே :-))))).. புவி அடிக்க வர்றதுக்குள்ள வுடு ஜூட்ட்ட்ட் :-))

ரஜின் said...

ஆகா...ஓகோ...கதை அரும்மையா பொகுது..சகோ உங்களுக்கு பெரிய்ய எதிர்காலம் இருக்கு...இந்த கதைய மட்டும்,நம்ம கலாநிதிட்ட சொன்னா,ஒரு 200 கோடில்ல ஒரு படம் எடுத்துரமாட்டாரு?ம்ம்..படத்தோட பேரு என்னவா இருக்கும்?...எந்திரன்'னு பேர் வச்சதால படம் அனியாயத்துக்கு ஓடுது...so..அதேமாரி ஒரு பேர்தா இதுக்கு சூட் ஆகும்....ஆ..ஆ...இந்த கதைய உறுவாக்க எந்திரமா ஒழச்ச நீங்க பெண் பதிவரா இருக்குரதால,sentiment அ "எந்திரி"(அட ஒக்காருங்க.எந்திரிக்க சொல்லல.அது படம் பேரு)வச்சா,பிச்சுக்கிட்டு ஓடாது....

இப்டியெல்லா கலாய்ச்சா ஒரு வேல,கதைய முடிச்சுருவீங்கன்னு ஒரு நப்பாசதா...

(just for kidding)

ரஜின்

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi- எஸ் இட் இஸ்

@ அன்னு - //இனி முடிஞ்சிரும்தானே??//
அப்படி தான் நானும் நினைக்கிறேன் அன்னு... ஹா ஹ ஹா

@ பொற்கொடி - என்னாது... வாய்க்கா தகறாரா? சொல்லவே இல்ல... என்ன பஞ்சாயத்து?

அப்பாவி தங்கமணி said...

@ LK - தேங்க்ஸ் for நோ கமெண்ட்ஸ் ...ஹா ஹா ஹா

@ ஸ்ரீராம் - இல்லிங்க... இன்னிக்கி தான்

@ கோவை ஆவி - தேங்க்ஸ்... நீங்க வருவீங்கன்னு சொன்னேன்... அதான் அந்த பொண்ணு ஒரே பயம்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - கடசீல இல்லீங்க... மொதல்ல இருந்தே அதான்... ஹா ஹா ஹா

@ பொற்கொடி - என்ன பொற்கொடி பண்றது... எல்லாரும் உன்னை மாதிரியே terror ஆ இருக்க முடியுமா என்ன? ஹி ஹி ஹி ... அமைதி அக்கா என்னை போலவே அப்பாவிதான்

@ அன்னு - //கதையாசிரியர் வீட்டு இட்டிலியை பாத்திருக்கும் வேறென்ன..ஹி ஹி ஹி ...//'
இருங்க இப்பவே பார்சல் அனுப்பறேன் உங்க வீட்டுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - வாட் வாட் ரிபீட்....

@ எஸ்.கே - நன்றிங்க

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - சரிங்க நீங்க சொன்னதை டாக்டர் கிட்ட சொல்லிடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ சந்த்யா - ம்ம்ம்

@ சே.குமார் - அடுத்த தொடரா? ஏனுங்க... பட்ட காயமெல்லாம் ஆற வேண்டாமா சொல்லுங்க.. கொஞ்சம் பொறுத்து தான் அடுத்த கதை...ஹா ஹா ஹா

@ vinu - சரிங்கண்ணா...

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ ஹுஸைனம்மா - ஒரே போடா... மீ எஸ்கேப்... எஸ் எஸ்... நானும் அமைதி அக்காவும் அப்பாவிக தான்

@ மார்கண்டேயன் - ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - உங்க கிட்ட சொன்னாங்களா... என்கிட்ட வேற மாதிரி சொன்னாங்களே... ஹா ஹா ஹா

@ ஜெய்லானி - உங்களை பாத்தா...அதுவும் பர்டிகுலரா உங்கள பாத்தா பாவமாவே இல்ல... ஹா ஹா அஹ

@ நசரேயன் - ஐயோ.. என்னாது? எல்லாரும் கொட்டு சேருறீங்க... மீ எஸ்கேப்

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஹா ஹா ஹா

@ LK - மொதல்ல contract கண்ணுல காட்டு அப்புறம் முடிக்கறேன் ...ஹா ஹா ஹா

@ LK - இன்னும் எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க?... ஹ்ம்ம்ம்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஆத்தா உன்னை போஸ்ட் படின்னா கமெண்ட் படிச்சு கமெண்ட் போடுறா... உன்ன... இரு பார்சல் அனுப்பறேன்

@ அமைதிச்சாரல் - அடப்பாவி... உங்கள தான் சொன்னேன் அக்கோவ்... நான் எல்லார்கிட்டயும் அமைதி அக்கா பேருகேத்தாப்ல அமைதி சொல்லிட்டு இருக்கேன்... நீங்க என்னன்னா...கர்ர்ர்ரர்ர்ர்ர்

@ ரஜின் - "எந்திரி": சூப்பர் ....ஹா ஹா ஹா..
//இப்டியெல்லா கலாய்ச்சா ஒரு வேல,கதைய முடிச்சுருவீங்கன்னு ஒரு நப்பாசதா...//
ச்சே ச்சே... இதுகெல்லாம் அசருற ஆளா னானு... ஹா ஹா அஹ

Ananthi said...

ரொம்ப நல்லா போகுதுப்பா...
எனக்கு ஒரு சந்தோசம்... லேட்டா வந்ததால....
4 , 5 பதிவு மொத்தமா படிக்க முடிஞ்சதே.... :-))

அனாமிகா துவாரகன் said...

//ஆத்தா உன்னை போஸ்ட் படின்னா கமெண்ட் படிச்சு கமெண்ட் போடுறா... உன்ன... இரு பார்சல் அனுப்பறேன்//

ரமணி சந்திரன் கதை நானும் படிச்சிருக்கேன். அவங்களோட ரொம்ப பழைய கதைகள் படிச்சதில்லை. புதிசில ஆல்மோஸ்ட் எல்லாம் படிச்சிருக்கேன். அப்படி அதில என்ன தான் இருக்குனு பாக்கறதுக்காக படிச்சிருக்கேன். ஒரே இழுவை. உங்கள மாதிரியே (ஹா ஹா. டென்ஷனாகிட்டீங்களா) உங்க இட்லி பயம் எல்லாம் நமக்கு இனி இல்லை. ரொம்ப நாளைக்கப்புறம் நானே செய்த சாப்பாட்டையே சாப்பிட்டேனாம். அப்புறம் வேற எதுக்கு பயம். ஹா ஹா ஹா.

அப்புறம், புதுசா வந்திருக்கற புரொபசர சைட் அடிக்கறதுக்கே எனக்கு டைம்மில்ல. இதில உங்க புளொக் படிப்பாங்களா? ஏதோ காமன்ட்ஸ் மட்டுமாவது படிக்கறேன்னு சந்தோசப்படுவீங்களா? இல்ல புலம்புவீங்களா? ஹா ஹா ஹா.

ஐயாம் ரீடிங்க் யுவர் புளொக். இல்லேன்னா அழுகாட்சி காவியம்னு எனக்கு எப்படி தெரியும். வலிச்சாலும் வலிக்காத மாதிரி எத்தனை நாளைக்குத் தான் நடிக்கறது. இப்ப மரியாதையா ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு பார்ட் போட்டு முடிக்கறீங்களா? இல்லேன்னா நானே பிளைட் எடுத்து T.Dot (உங்க ஊர் அது தானே) க்கு வரட்டுமா? என்னப் பத்தி உங்களுக்குத் தெரியல்ல. உரு எடுத்து ஆடினேன்னு வையுங்க. தாங்க மாட்டீங்க.

அனாமிகா துவாரகன் said...

Soda Please.

Ananthi said...

//அனாமிகா துவாரகன் "அதே கண்கள்... (பகுதி 20)" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

Soda Please.///

ha ha ha :-))

அனாமிகா துவாரகன் said...

@ Ananthi,

ஹி ஹி. இவங்க கதை படிக்கறதுக்கு எங்களுக்கு பொறுமைக்கான நோபல் பரிசு கொடுக்கணும். ஸப்பா.

Ananthi said...

///ஹி ஹி. இவங்க கதை படிக்கறதுக்கு எங்களுக்கு பொறுமைக்கான நோபல் பரிசு கொடுக்கணும். ஸப்பா. ///

புவன்ஸ் ரெண்டு பேரையும் அடிக்க போறாங்க...
வாங்க ஓடிருவோம்... :-)))

siva said...

சற்று தாமதம்
இப்போதுதான் கதை சூடு பிடித்து உள்ளது
நீங்க எழுதின பார்ட்டில இதுதான் பெஸ்ட் இருங்க அடுத்த பகுதி படிடுவிடு வரேன்

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - இப்படி ஒரு டீலிங்ஆ? சூப்பர்... தேங்க்ஸ்ங்க ஆனந்தி

@ அனாமிகா - வேணும்னு எங்க RC கதை படிச்சு என்ஜாய் பண்ணிட்டு ரெம்ப act விடக்கூடாது அம்மணி... ஹா ஹா

//இல்லேன்னா நானே பிளைட் எடுத்து T.Dot (உங்க ஊர் அது தானே) க்கு வரட்டுமா?//
அதென்ன புது ஊர்... ஹா ஹா... சோடா பார்சல்ல வரும்

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ஆமாம் ஆனந்தி... இந்த பொண்ணு செம ரகளை பார்ட்டி

@ siva - நன்றிங்க

Post a Comment