Wednesday, October 20, 2010

அதே கண்கள்... (பகுதி 21)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

பாறையை இறுகி இருந்த அவன் முகத்தை பார்க்க பயமாய் இருந்தது. அவன் தன்னை தவறாய் நினைப்பதை ஏற்க இயலாமல் தவித்தாள் சுமேதா

"சூர்யா நான்..." என சுமேதா ஏதோ சொல்ல முயல "பேசாதே" என்பது போல் கை உயர்த்தினான். அதற்கு மேல் பேச தைரியமின்றி ஜன்னல் வெளியே பார்ப்பது போல் முகம் திருப்பி மௌனமாய் கண்ணீர் உகுத்தாள்

சூர்யா தன்னை விரும்பி மணந்தான் அதன் பின் ஏதோ மன வருத்தம் என்பது மட்டுமே தனக்கான ஆதாரமாய் கொண்டிருந்த சுமேதா தன்னை பழி வாங்கவே மணந்தான் என்ற உண்மை முகத்தில் அறைய நொறுங்கி போனாள்

என்னதான் அவனை விட்டு விலகுவதை பற்றி முன்னமே யோசித்த போதும் அதை எந்த அளவு செயல்படுத்த இயலும் என் அவளால் நினைக்க இயலவில்லை

ஆனாலும் அன்பு நேசம் எதுவும் சிறிதும் அற்று பழி வாங்க மட்டுமே மணந்தேன் என அவனே வாய் விட்டு கூறிய பின் இனி என்ன இருக்கிறது என மனம் வெறுத்தாள்

ஊருக்கு திரும்பிய பின் அவனை விட்டு மொத்தமாய் விலகி விட வேண்டுமென மனதிற்குள் தீர்மானித்தாள். அந்த தீர்மானம் மனதில் தோன்றியதும் தன்னையும் அறியாமல் அவளிடம் இருந்து ஒரு கேவல் வெளிப்பட்டது

அதை கண்ட சூர்யாவிற்கு வேதனை கொன்றது. அதற்காக தன்னையே அவன் வெறுத்தான் என்பதும் உண்மை

இயல்பில் யாரையும் மனம் நோக பேசும் பழக்கம் கூட இல்லாத சூர்யா அனிதாவின் மீது கொண்ட அன்பினால் சுமேதவை பழி வாங்க முடிவு செய்தான், அதுவும் சந்தர்ப்பம் திருமண தரகர் மூலமே வர

இந்த வேதனையை / கொடுமையை சுமேதா அனுபவிக்க வேண்டுமென்று அவளை மணந்தவன் இப்போது அவன் நினைத்தது நடக்கும் போது ஏன் தனக்கு இந்த வேதனை என குழம்பினான்

சுமேதவை விடவும் அழகிய திறமையான பல பெண்கள் அவன் வாழ்வில் வந்ததுண்டு. அவர்கள் யாரும் ஏற்படுத்தாத ஒரு பாதிப்பை இவள் ஏன்? என தன்னையே கேள்விகளால் துளைத்தான்

இருவரும் தத்தம் தவிப்புகளில் மூழ்கி இருக்க நேரம் விரைந்து கொண்டு இருந்தது, அவன் செலுத்தி வந்த வாகனத்தை போலவே...

சுமார் மாலை நான்கு மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தனர்
__________________________________________
மருத்துவமனையில் நுழைந்த சூர்யா நேரே டாக்டர் சங்கீதாவின் அறைக்குள் செல்ல முயன்றான்

"நில்லுங்க....யாரு நீங்க? டாக்டர பாக்க அப்ப்பாயன்ட்மென்ட் இருக்கா?" என ஒரு செவிலி பெண் தடுக்க

"இல்ல சிஸ்டர்... டாக்டர் தான் வர சொல்லி போன் பண்ணினாங்க... என் சிஸ்டர் இங்க ட்ரீட்மென்ட்ல இருக்கா... பேரு அனிதா... அனிதா வெங்கடராமன்"

"உங்க பேரு?"

"சூர்யா"

"அங்க வெயிட் பண்ணுங்க... மேடம்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என உள்ளே விரைந்தாள்

ஐந்து நிமிட காத்திருத்தலே பல யுகமாய் தோன்றியது சூர்யாவிற்கு. அனிதாவை கண்ணால் கண்டால் ஒழிய நிம்மதி இராது என அவன் மனம் துடித்தது

சுமேதா அந்த சூழலை கண்டதும் அனிதா இங்கு வர தானும் ஒரு காரணம் என்ற உறுத்தலில் வெடிக்க முயன்ற கண்ணீரை கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்தாள்

அனிதாவிற்கு இப்போது என்ன ஆனது என சூர்யாவிடமும் கேட்க தைரியம் அற்றவளாய் மௌனம் காத்தாள்

சற்று நேரத்தில் டாக்டர் தானே வெளிய வர சூர்யா வேகமாய் அவரை நோக்கி சென்றான், பின்னோடு சுமேதாவும்

"டாக்டர்... அனிதாவுக்கு இப்ப எப்படி இருக்கு?" என சூர்யா பதற

"ரிலாக்ஸ் சூர்யா... ஷி இஸ் ஆல்ரைட் நௌ... வாங்க நேர்லயே போய் பாக்கலாம்" என்றவள் சுமேதவை பார்த்து "இவங்க... "என கேள்வியாய் நோக்க

"ம்..." என தயங்கியவன் "என்னோட மனைவி" என உணர்ச்சியற்ற குரலில் முடித்தான்

"ஓ...வாவ்... கங்க்ராட்ஸ்... " என கை பற்றி வாழ்த்து சொன்னார் டாக்டர் சங்கீதா

மனைவி என அறிமுகம் செய்ய சூர்யா தயங்கியது சுமேதாவை உயிரோடே புதைத்ததை போல் வேதனையில் கண்ணீர் பெருக, சூழ்நிலை உணர்ந்து தன்னை கட்டுபடுத்திக்கொண்டாள் 

நினைத்து அழத்தான் இனி காலம் முழுதும் இருக்கிறதே என அதே நினைவில் மீண்டும் மீண்டும் துடித்து போனாள்
_________________________________________________
அகநோயாளிகள் பிரிவு (inpatient ward) என ஒளிர்ந்த ஒரு கதவை விலக்கி உள்ளே செல்ல அங்கு கண்ட காட்சியில் சூர்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது

அங்கு அருண் மடியில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருந்தாள் அனிதா

"டேய்... ராஸ்கல்... நீ இங்க என்னடா பண்ற... அனிதா வாழ்க்கைய கெடுத்த வரைக்கும் பத்தலையா?" என சூர்யா அருண் மீது பாய

"சூர்யா... என்ன இது? ப்ளீஸ் மூவ்" என கோபமாய் டாக்டர் அவனை விலக்க

"டாக்டர் இவன்..." என சூர்யா அருண் பற்றி கூற முயல

"ஐ நோ எவரிதிங் சூர்யா... காம் டௌன்..." என்றார் டாக்டர் அழுத்தமாய்

நடப்பது எதுவும் புரியாமல் சுமேதா விழிக்க அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான் கணேஷ்

"கணேஷ்...நீங்க எங்க இங்க?" என சூர்யா சுமேதா இருவரும் ஒரே குரலாய் அதிர்ச்சியில் இருந்து  விலகாமல் கேட்டனர்

அதே நேரம் அனிதா விழித்து எழ "அனி... அனிதா... எப்படிமா இருக்க?" என சூர்யா அவள் அருகில் செல்ல

"போ... போ... வேண்டாம்... ஐயோ... என்னை கொன்னுடாதே... போ... ப்ளீஸ்..." என சூர்யாவை தவிர்த்து அருண் பின் சென்று தன்னை மறைத்து கொண்டாள் அனிதா

தன் தங்கை யாரோ அந்நியன் போல் தன்னை கண்டு மிரண்டதில் சூர்யாவின் கண் நிறைந்தது. சுமேதாவாலும் அதை தாங்கி கொள்ள இயலவில்லை

அனிதாவின் டைரியை படித்து அவள் அண்ணனின் மேல் எத்தனை உயிராய் இருந்தாள் என அறிந்த பின் சூர்யாவின் வேதனையை அவளால் உணர முடிந்தது, அவன் தன்னை பழி வாங்க துடித்ததில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றியது இப்போது

அந்த சம்பவத்திற்கு பின் யாரை கண்டாலும் அனிதா இப்படி பயந்து கத்துவது தான் நடந்தது, அதிலும் ஆண்கள் என்றால் இன்னும் மோசம்

தங்கை தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதது புதியதில்லை என்றாலும் அவள் அருணை மிகவும் அறிந்தது போல் அவனிடம் பாதுகாப்பாய் உணர்ந்ததை பார்த்து புரிந்து கொள்ள இயலாமல் விழித்தான் சூர்யா

அதை உணர்ந்து கொண்ட டாக்டர் அனிதாவை பரிசோதித்து விட்டு  "சிஸ்டர் ஸ்லீபிங் டோஸ் குடுங்க...
பிரஷர் அதிகமா இருக்கு... ஷி சுட் ரெஸ்ட்... " என கூறி விட்டு எல்லோரையும் வெளியே போக சொன்னார் 

அருண் அனிதாவை விட்டு விலக முயல "ப்ளீஸ்... போகாத... ப்ளீஸ் அருண் போகாத" என அனிதா அவன் கைகளை இறுக பற்றி கொண்டு கத்த 

"எனக்கு பசிக்குதுமா... நான் சாப்பிடணும் தானே... அப்பதானே உனக்கு நெறைய கதை சொல்ல முடியும்...சரியா...  போய் சாப்ட்டுட்டு வந்துடறேன்...சரியா...நல்ல பொண்ணு தானே அனிதா" என ஐந்து வயது குழந்தையிடம் பேசுவது போல் அருண் சமாதானம் செய்ய முயன்றான்

நர்ஸ் உறங்குவதற்கான மாத்திரையை கொடுக்க அதை தூக்கி வீசினாள் அனிதா

பின்பு அருண் சமாதானம் செய்து மாத்திரை உண்ண செய்தான். அவளை உறங்க செய்து விட்டு எல்லோரும் டாக்டர் சங்கீதாவின் அறைக்கு வந்தனர்

என்ன நடக்கிறது என அறிந்து கொள்ள மனம் துடித்த போதும் டாக்டரே சொல்லட்டும் என சூர்யா மௌனமாய் கை கட்டி அமர்ந்திருந்தான்


"சூர்யா... இங்க நடக்கறதெல்லாம் பாத்து ரெம்ப குழம்பி போய் இருப்பீங்கன்னு எனக்கு புரியுது. ஐ வில் எக்ஸ்ப்ளெயின்" என டாக்டர் தொடர்ந்தார்

"இன்னிக்கி காலைல உங்க சிஸ்டர் அனிதா, நர்ஸ் அசந்த நேரம் வார்டு சாவி எடுத்து வெளிய தப்பிச்சு வந்துட்டா... மொட்டை மாடில போய் கீழ குதிக்க முயற்சி செஞ்சப்ப தெய்வாதீனமா அருண் அங்க இருந்தார்"

"அருண் இப்படி இங்க...?" என சுமேதா கேட்க

"அதை நான் சொல்றேன் டாக்டர்" என கணேஷ் இடைமறித்தான்

"ஊட்டில அந்த சம்பவம் நடந்தப்புறம் அருண் ரெம்ப டிஸ்டர்ப்டா இருந்தாரு. அங்கேயே தனியா விட்டுட்டு வந்தா நிச்சியம் தன் வாழ்கைய முடிசுப்பாருன்னு எனக்கு தோணுச்சு. அவருக்கு தேவை நல்ல கவுன்சலிங்னு தான் இங்க கொண்டு வந்து சேர்த்தேன். ஒரு மாசமா அருண் இங்கதான் இருக்காரு. Infact இன்னிக்கி அருண் டிஸ்சார்ஜ் ஆகற நாள், அதுக்கு தான் நான் இங்க வந்தேன்" என முடித்தான் கணேஷ்

"எஸ்...அண்ட் அருண் இஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட் நௌ.." என்றார் டாக்டர் சங்கீதா

"ஆனா பொறந்ததுல இருந்தே கூட இருக்கற என்னை கூட அடையாளம் தெரிஞ்சுக்காத  அனிதா... அருணை மட்டும் எப்படி டாக்டர்..." என சூர்யா வேதனையாய் கேட்க

"மொதல்ல நானும் இப்படி தான் ஆச்சிர்யப்பட்டேன் சூர்யா. அப்புறம் அருண்கிட்ட நடந்தது எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டதுக்கப்புறம் அனிதாவோட இந்த மாற்றம் எனக்கு புரியுது"

"எப்படி டாக்டர்..." என சூர்யா இன்னும் சமாதானமாகாமல் கேட்டான்

"சூர்யா, மனசு ரெம்பவும் சென்சிடிவான ஒரு பார்ட். அனிதா மனசுல சின்ன வயசுல பதிஞ்சு போன அந்த ரணம் அந்த பசங்க கத்தி காட்டி மெரட்டினப்ப  திரும்பவும் மேல வந்து அப்படி ஒரு சம்பவம் மறுபடியும் நடந்துடுமோங்கர பயத்துல அவ மனநிலை பாதிக்கப்பட்டதுனு உங்களுக்கு தெரியும். அதே போல அவ உள்மனசுல பதிஞ்சு போன ஒரு உருவம் தான் அருண்... அதுக்கு பேரு நட்பா, அன்பா, காதலா, அவ தான் சொல்லணும்..."

"டாக்டர்..." என அருண் உட்பட எல்லோரும் அதிர்ச்சியை காட்ட

"எஸ்... தன்னையும் அறியாம அருணோட உருவம் அவ மனசுல இருக்கு...."

"என்னால இதை நம்ப முடியல டாக்டர்...அவ டைரில கூட அருண் பத்தி  எதுவும் எழுதல... நான் அவ அண்ணன்... என்னை நினைவில்லையே... சில முறை மட்டுமே சந்திச்ச அருண் எப்படி...." என ஆதங்கமாய் சூர்யா கேட்க அவன் குரலில் தெறித்த வேதனையில் சுமேதாவின் கண்கள் நிறைந்தது

"சூர்யா... மனுசனோட மெமரி பத்தி சொல்றப்ப முக்கியமா ரெண்டு வகையா பிரிக்கலாம். Declarative Memory and Procedural Memory. இதுல declarative memory ங்கறது சம்பவங்கள் / நிகழ்வுகளை பதிவு செய்யறது. Procedural memory ங்கறது செய்முறைகள்னு சொல்லலாம். அது எப்பவும் மறக்கவே மறக்காது. அதனால தான் டிரைவிங், ஸ்விம்மிங் போல நாம கத்துகிட்ட விஷயங்கள் என்ன நடந்தாலும் மறக்காது, இது procedural மெமரில இருக்கறது..."

"ஆனா... "என சூர்யா இடைமறிக்க

"இருங்க நான் சொல்லி முடிச்சுடறேன்... அதுக்காக இந்த declarative memory ல இருக்கற எல்லாமும் மறந்து போய்டும்னு சொல்ல முடியாது. அதுலயும் சப்-கான்சியஸ் மைண்ட்ல பதியற விஷயங்கள் சில எப்பவும் மறக்காது. அனிதாவோட சப்-கான்சியஸ் மனசுல பதிஞ்ச சில விசயங்கள்ல ஒண்ணு அருணோட முகம்"

"டாக்டர்... ஆனா என்னை கூட...." என சூர்யா இடையில் பேச முயல

"உங்க ஆதங்கம் எனக்கு புரியுது சூர்யா. உங்களை கூட நினைவு இல்லாதப்ப அருண் எப்படினு கேக்கறீங்க. அதான் இப்ப என்னோட கேள்வியும். அனிதா மனசுல அருணுக்கு ஒரு தனிப்பட்ட இடம் இருக்கு அது மட்டும் என்னால சொல்ல முடியும். அதனால தான் அது சப்-கான்சியஸ் மைண்ட்ல பதிஞ்சு போய் இருக்கு. அது என்னனு அவளா சொன்னாத்தான் தெரியும். சில சமயம் வெளிப்படுத்தாம கட்டுப்படுத்தப்பட்ட விஷயங்கள் கூட இங்க பதியும்...  இதான் என்னோட அப்சர்வேஷன். Above all, human mind is very complicated Surya. It is far apart from theory we study and practices we do. Every case is different and everyday we're learning" என புன்னகையுடன் அவ்வளவு தான் என்பது போல் முடித்தார் டாக்டர்

அந்த கணம் தன்னையும் அறியாமல் சூர்யா சுமேதவை பார்த்தான். "உன் மனதில் என் இடம் என்ன?" என கேட்பது போல் இருந்தது அந்த பார்வை

யாரும் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க டாக்டர் மீண்டும் தொடர்ந்தார்

"சூர்யா... அருண் இங்க கொஞ்ச நாள் அனிதா கூட தங்கினா அவ சீக்கிரம் குணமாகற வாய்ப்பு இருக்குங்கறது என்னோட தியரி... ஏன்னா அனிதா புரிஞ்சுக்கற ஒரே குரல் இப்ப அருணோடது தான்... அருண்கிட்ட நான் ஏற்கனவே கேட்டுட்டேன். அவருக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னார். இதுக்கு அவளோட கார்டியன்ங்கற முறைல உங்க சம்மதம் தான் வேணும்" என டாக்டர் கூற சூர்யா அருணை புதிதாய் பார்ப்பதை போல் பார்த்தான்

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த அருண் அப்போது பேசினான் 

35 பேரு சொல்லி இருக்காக:

Gayathri said...

omg nalla poguthu...seekram adutha part podunga

மகி said...

ப்ரெசென்ட் புவனா! :)

Arul Senapathi said...

me too , present madam.

Porkodi (பொற்கொடி) said...

ennadhu thodaruma???????? :O

Krishnaveni said...

Thrillernu aarambichu, sciencekku vanthutteengalaa, nice roundup..... very good writing.....post please

எஸ்.கே said...

தொடரட்டும் தொடரட்டும்!!!

கோவை ஆவி said...

அனிதா குணமாகி திரும்பி வரணும்.. அனிதாவுக்கும் அருணுக்கும் மேரேஜ்.. சூர்யா தான் நல்லவன் தான்னு சுமேதாவுக்கு புரிய வைக்கணும்.. ஐயோ!! இன்னும் நாலஞ்சு பாகம் வரும் போலிருக்கே.... ( ஜஸ்ட் கிட்டிங்)

//"சூர்யா... மனுசனோட மெமரி பத்தி சொல்றப்ப முக்கியமா ரெண்டு வகையா பிரிக்கலாம். Declarative Memory and Procedural Memory.//

ஆஹா, போன பார்ட்டுல தமிழ் கிளாஸ், இப்போ சயின்ஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்களே!! அடுத்தது ஹிஸ்ட்ரியா??

LK said...

சொன்ன கேட்க மாட்டியா ??? அடுத்து உன் வீட்டுக்கு சுமோ கார்ல ஆள் அனுப்பவா ??

@அனா

எங்கமா இருக்க கொஞ்சம் வா இங்க சீக்கிரமா

ஸ்ரீராம். said...

நிதானமா யோசிச்சி நல்லா தான் எழுதிட்டு வர்றீங்க...தொடருங்கள்.

Ananthi said...

///மனைவி என அறிமுகம் செய்ய சூர்யா தயங்கியது சுமேதாவை உயிரோடே புதைத்ததை போல் வேதனையில் கண்ணீர் பெருக, சூழ்நிலை உணர்ந்து தன்னை கட்டுபடுத்திக்கொண்டாள்///

இந்த இடம் ரொம்ப உருக்கமா இருந்ததுப்பா...
செம பீலிங்க்ஸ்.. ;-))

ஒரு வழியா கிளைமாக்ஸ் வந்திரும் போல இருக்கு...
(ஏழு மலை ஆண்டவா..... ரெம்ப நன்றி :-)) )

அனாமிகா துவாரகன் said...

//சொன்ன கேட்க மாட்டியா ??? அடுத்து உன் வீட்டுக்கு சுமோ கார்ல ஆள் அனுப்பவா ??

@அனா

எங்கமா இருக்க கொஞ்சம் வா இங்க சீக்கிரமா //

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

சூமோ எல்லாம் சரிவராது கார்த்தி சார். பெரிய டம்பர் (அது தான் அந்த அசோக் லேலன்ட் லாரி) அனுப்பனும்.

இவங்களாவது இந்த கதையை முடிக்கறதாவது. எனக்கென்னவோ இன்னும் ஒரு 25 பார்ட் வரும் போல இருக்கு. பெட் கட்டறேன். (ரிவேர்ஸ் சைக்கொலஜி ட்ரை பண்ணறேன். இதுக்காகவே இவங்க இரண்டு பார்ட்ல முடிச்சிடுவாங்கனு ஒரு நப்பாசை தான்.) வில்லன் சிரிப்பு.

அனாமிகா துவாரகன் said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால், அங்க கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்னு சொல்றது ரொம்ப சரி. ரிலாக்ஸ் பண்ணுறதுக்குன்னு புளொக் படிக்க வந்தா, ............................................ நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க புவ்புவ்புவ்ன்னாக்கா

Anonymous said...

super ...waiting for d next part ...with love sandhya

அமைதிச்சாரல் said...

கலாநிதி மாறன் இதை படமா எடுத்தாக்கூட பரவால்லை.தேட்டர் பக்கம் தலைவெச்சு படுக்காம தப்பிச்சுடலாம். ஆனா, வெளம்பரம்போட்டே கொன்னுருவாரே.. அதை நினச்சாத்தான் பயமாருக்கு :-)))))))

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அதே கண்கள்னு பேரு வச்சுக்கிட்டு ஏன் அந்த பொண்ணு கண்ண மூடிகிட்டு இருக்கு வேற பொண்ணு போட்டோ கிடைக்கலையா,

வெறும்பய said...

கடந்த பாகம் இன்னும் படிக்கவில்லை.. படித்துவிட்டு வருகிறேன்..

சே.குமார் said...

Arun nayaganagivittar anithavirkku...

appuram enna seekkiram kalyana sappada poda vendiyathuthaney.

மார்கண்டேயன் said...

//வீட்டுக்கு சுமோ கார்ல ஆள் அனுப்பவா ??//,
//பெரிய டம்பர் அனுப்பனும்//

தொடர்கதை தொகயாளே (??!!??),

பார்த்தாயா உனக்கு வரவேற்ப்பை,

நீர் செல்ல வாகனமும், உம் அலுவலை கவனிக்க ஆட்களும் அனுப்புகிறாராம்,

இனி பதிவுகள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்பது ஐயம் திரிபுர அறிந்தோம் . . .

ஸ்ஸ் அப்பா . . . இதுக்கே கண்ணா கட்டுது . . .

எப்டிங்க இப்டி ?

ரங்கமணி சார் கொஞ்சம் என்னான்னு கேளுங்களேன் ??,

ஜெய்லானி said...

டாக்டர்...டாக்டர்..என்னன்வோ இங்கிலிபிஸ் ல சொல்றீங்களே டாக்டர் ..எனக்க்க்கு எதுவுமே புரியல டாக்டர்.. ஆனா கதை மட்டும் இப்ப முடியாதுன்னு புரியுது டாக்டர் ...:-)))
(( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும் ))

அன்னு said...

ஆனாலும் ஒரு கதைக்காக மூளையை கசக்கி பிழிஞ்சு, மூளையை பத்தின விவரங்களையும் சேகரிச்சு எழுதறதை நினச்சா ச்ச...புல்லரிக்குதுப்பா...

எப்படியோ நல்லா இருந்தா சரி புவனா.... :)) (நான் கதைல வர்றவங்களை சொன்னேன்....ஹிஹிஹி)

vinu said...

if my guess are right , this going to be over in the next, lets see................fantastic : i mean it!

தக்குடுபாண்டி said...

//அதுவரை எதுவும் பேசாமல் இருந்த அருண் அப்போது பேசினான் // suthhhhhhhhham...:)

Photo sellathu! sellathu!! .....:)

சௌந்தர் said...

ஜெய்லானி சொன்னது…
டாக்டர்...டாக்டர்..என்னன்வோ இங்கிலிபிஸ் ல சொல்றீங்களே டாக்டர் ..எனக்க்க்கு எதுவுமே புரியல டாக்டர்.. ஆனா கதை மட்டும் இப்ப முடியாதுன்னு புரியுது டாக்டர் ...:-)))
(( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும் )/////

@@@@ஜெய்லானி என்னால் சிரிப்பு அடக்க முடியலை ஜெய்

நானும் வந்தேன் படித்தேன்

siva said...

நினைத்து அழத்தான் இனி காலம் முழுதும் இருக்கிறதே
நினைத்து அழத்தான் இனி காலம் முழுதும் இருக்கிறதே--அப்பாவி தங்கமணி ப்ளாக்...//அவ்வவ் /

siva said...

எக்கோவ் மெய்யாலுமே சொல்றேங்க்கா...

செம செம செமைய இருக்கு..

வாவ்.கிரேட்

இ லைக் திஸ் போஸ்ட்...ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு...

உங்க direction நல்ல இருக்கு.

siva said...

no no please mudicirathenga....

atleast 25th post podunga...

சில்வர் ஜூப்லி எடுக்கலாம்னு இருக்கோம் ...

பத்மநாபன் said...

மெகா தொடருக்கே உரித்தான சம்பவங்களும் முடிச்சுகளுமாக பயணம் போய்க்கொண்டே இருக்கிறது..
சுமேதாவை சீக்கிரம் சிரிக்க வைத்துவிடுங்கள்...

அப்பாவி தங்கமணி said...

@ மகி - அட்டெண்டன்ஸ் நோடேட் மகி... ஹா ஹா

@ Arul Senapathi - ஹா ஹா ... தேங்க்ஸ் அருள்

@ பொற்கொடி - ஆமாங்க அம்மணி.... தொடரும்... நீங்க ஒரு கதை ஆரம்பிக்கற வரை தொடரும்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ எஸ்.கே - நன்றி நன்றி

@ கோவை ஆவி - கதை எல்லாம் நீங்களே சொல்லிட்டு நான் என்ன எழுதறது... ஹா ஹா ஹா... எஸ் எஸ்...அடுத்தது ஹிஸ்டரி க்ளாஸ் தான்... கோயம்புத்தூர் உருவான கதை...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஹா ஹா

@ ஸ்ரீராம் - நன்றிங்க

@ Ananthi - தேங்க்ஸ் ஆனந்தி... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - லாரி எல்லாம் ஏன் வேஸ்ட் பண்ற... நீ வரேன்னு சொல்லு போதும்... மீ எஸ்கேப்...

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா

@ அமைதிச்சாரல் - ஹா ஹா...ரெம்ப பாதிக்கபட்ட மாதிரி இருக்கே குரல்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - கதைய படிக்காம படம் மட்டும் பாக்குறவர்னு பேரை மாத்திகோங்க... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா

@ வெறும்பய - நன்றிங்க

@ சே.குமார் - போட்டுடலாம்... செலவு உங்களுது தான் ஒகே வா...ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ மார்கண்டேயன் - ஆஹா...என்னங்க வெண்பா எல்லாம் எழுதுறீங்க இந்த அப்பாவிக்கு... ரங்கமணி சார் ஒண்ணும் கேக்க மாட்டார்... ஏன்னா நான் ப்ளாக்ல பிஸியா இருந்தா தொல்லை இல்லைனு நிம்மதியா இருக்கார்...ஹா ஹா ஹா

@ ஜெய்லானி - ஹா ஹா அஹ... ரெம்ப பழைய படம் பாக்கறீங்கன்னு புரியுது... ஹா ஹா

@ அன்னு - தேங்க்ஸ் அன்னு... படிக்கறவங்களும் நல்லா இருந்தா சரின்னு தான் நானும் எழுதறேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ம்ம்ம்... இல்லையே சார்... இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... தேங்க்ஸ்

@ தக்குடு - இனிமே கதை படிச்சு கமெண்ட் போட்டா தான் உனக்கு பிடிச்ச போட்டோ போடுவேன்...

@ சௌந்தர் - என்னங்க சௌந்தர் இது.. .வந்தேன் வென்றேன் ரேஞ்சுக்கு சொல்றீங்க... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஹா ஹா

@ பத்மநாபன் - நன்றிங்க... உங்க வாய் முஹுர்த்தம் பலிக்கட்டும்...

Post a Comment