Saturday, October 23, 2010

அதே கண்கள்... (பகுதி 22)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

"சூர்யா... அருண் இங்க கொஞ்ச நாள் அனிதா கூட தங்கினா அவ சீக்கிரம் குணமாகற வாய்ப்பு இருக்குங்கறது என்னோட தியரி... ஏன்னா அவ புரிஞ்சுக்கற ஒரே குரல் அருணோடது  தான்.  அருண்கிட்ட நான் ஏற்கனவே கேட்டுட்டேன். அவருக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னார். இதுக்கு அவளோட கார்டியன்ங்கற முறைல உங்க சம்மதம் தான் வேணும்" என டாக்டர் கூற சூர்யா அருணை புதிதாய் பார்ப்பதை போல் பார்த்தான்

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த அருண் அப்போது பேசினான்  "சூர்யா, தெரிஞ்சோ தெரியாமலோ அனிதாவோட நிலைமைக்கு நானும் ஒரு காரணமாயட்டேன். இதுல வேண்டானு மறுத்த சுமேதாவையும் சம்மந்தப்படுத்தி கஷ்டப்படுத்திட்டேன். அந்த தவறுக்கு ஒரு பிராயச்சித்தம் செய்ய இந்த வாய்ப்பை எனக்கு குடுங்க சூர்யா ப்ளீஸ். சுமேதா நீ அவர்கிட்ட சொல்லு ப்ளீஸ்" என கெஞ்சலாய் இருவரையும் பார்த்தான் அருண்

சுமேதா என்ன சொல்வது என புரியாமல் சூர்யாவை பார்க்க அவன் பார்வை  சுமேதாவின் முகத்தில் பதிந்தது, அவள் கருத்தை படிக்க முயல்வது போல்  

பிறகும் சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க "உங்களுக்கு விருப்பம் இல்லைனா நாங்க கட்டாயப்படுத்த முடியாது சூர்யா... ஆனா என்னோட அனுமானம் சரின்னா அருணோட உதவி நிச்சியம் அனிதாவுக்கு அவசியம்னு தான் சொல்லுவேன்" என டாக்டர் கூற

"ஒகே டாக்டர்... அவ நல்லதுக்குன்னா எனக்கு ஆட்சேபனை இல்ல" என்றான் சூர்யா பெருமூச்சோடு 

"தட்ஸ் குட்... அருண் இங்க விசிட்டர்ஸ் ரூம்ல ஸ்டே பண்றதுக்கு உங்களுக்கு பாஸ் குடுக்க சொல்றேன். நீங்க வெளிய நர்ஸ்கிட்ட வாங்கிகோங்க" எனவும்

"ஒகே டாக்டர்... நாங்க கிளம்பறோம்" என சூர்யா விடை பெற மற்ற எல்லோரும் கூட வெளியே வந்தனர்
_______________________________________________

வெளியே சற்று இருட்ட தொடங்கி இருந்தது

"கணேஷ் நீங்க ஊருக்கு தானே வரீங்க. வாங்க எங்களோடயே போய்டலாம்" என சூர்யா அழைக்க

"காலைல இருந்து டிரைவ் பண்ணி இருக்கீங்களே சூர்யா. தங்கிட்டு நாளைக்கி போனா என்ன? நான் ட்ரெயின்ல புக் பண்ணிட்டேன் நைட்க்கு" எனவும்

அப்படி செய்தால் என்ன என நினைத்தவன் சுமேதாவை பார்க்க அவளது உணர்ச்சி துடைத்த  முகம் அவனுக்கு எதையோ உணர்த்த

"இல்ல கணேஷ்... யார் கிட்டயும் சொல்லல இங்க வர்றத பத்தி. ஆபீஸ்லயும் முக்கியமா ஒரு மீட்டிங் இருக்கு நாளைக்கி. கிளம்பறது தான் பெட்டர்... எனக்கு டிரைவிங் ஒண்ணும் கஷ்டமில்ல... நீங்களும் வாங்க...ட்ரெயின் எதுக்கு" என அன்பு கட்டளை போல கூற அதற்கு மேல் மறுக்க இயலாமல் சரி என்றான் கணேஷ்

அருணும் அவர்களுடன் கார் வரை வந்தான். யாரும் எதுவும் பேசிக்கொள்ள முயலாமல் மௌனமாய் இருக்க அருண் தான் அந்த மௌனத்தை உடைத்தான்

"சுமேதா, நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும். உன் மனச புரிஞ்சுக்காம ரெம்ப கஷ்டபடித்திட்டேன். ஐ அம் ரியல்லி சாரி. சூர்யா நீங்களும் என்னை மன்னிச்சுடுங்க" என அருண் உண்மையான வருத்ததோடு கூற

"இட்ஸ் ஒகே... " என சூர்யா சுமேதா இருவரும் ஒரே குரலில் கூறவும் கணேஷ் அதை பற்றி கூறி சிரிக்க, சூர்யா சுமேதாவும் உடன் முறுவலித்தனர். இறுக்கம் தளர சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்

சுமேதாவின் முகத்தில் இன்னும் இறுக்கமாய் ஏதோ யோசனையோடு இருக்க அதை சோர்வு என நினைத்து கொண்ட கணேஷ்

"என்ன சுமி பசிக்குதா? சாப்ட்டுட்டு கிளம்பிடலாமே சூர்யா. நடுவுல மறுபடியும் நிறுத்த வேண்டாமே" என கேட்க

"சரி கணேஷ்... இங்க பக்கத்துல ஏதோ கடை இருக்கும் பாத்திருக்கேன்... " எனவும்

"இங்க உள்ளே கான்டீன் கூட நல்லாத்தான் இருக்குங்க சூர்யா" என அருண் கூற சரியென கான்டீன் சென்றனர்

"எனக்கு எதுவும் வேண்டாம்... நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க" என சுமேதா மறுக்க

"கொஞ்சமாச்சும் சாப்பிடு... காலைல இருந்து ஒண்ணும் சாப்பிடலை தானே" என சூர்யா அவள் பதிலை எதிர்பாராமல் அவளுக்கும் சேர்த்து தருவித்தான்

கட்டாயப்படுத்தி சிறிது உண்ணவும் செய்வித்தான். அவன் செய்கையை கண்ட அருண் கணேஷ் இருவரும் நிறைந்த மனதோடு முறுவலித்தனர்

கிளம்பும் முன் அருணின் கைகளை பற்றி கொண்ட சூர்யா "அருண்... அனிதா எனக்கு உயிர். உங்கள நம்பி ஒப்படைச்சுட்டு போறேன்... பத்திரமா பாத்துப்பீங்கன்னு நம்பறேன்" என கண்கள் பனிக்க கூற

"நிச்சியமாங்க... அனிதாவ பத்தி நீங்க இனி கவலை பட வேண்டாம்... பழைய அனிதாவ உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்... " என அருண் வாக்கு போல் கூற நிம்மதியாய் விடை பெற்றான் சூர்யா
__________________________________________________

தான் சற்று உறங்க வேண்டும் என சுமேதா பின் இருக்கையில் ஏறிக்கொள்ள கணேஷ் காரில் முன் பக்கம் அமர்ந்து கொண்டான்

ஆனால் தன் அருகில் அமர்வதை தவிர்க்கவே அப்படி செய்கிறாள் என்பதை சூர்யா புரிந்து கொண்டான். ஆனாலும் கணேஷ் முன் எதுவும் பேச இயலாமல் மௌனமானான்

சுமேதாவின் மனதில் மிக பெரிய போராட்டம் நடந்து கொண்டு இருந்ததை சூர்யா அறியவில்லை

அதே போல் சூர்யாவின் மனதில் தோன்றி இருந்த மாற்றத்தையும் சுமேதா அறியவில்லை

ஆரம்பம் முதலே அவள் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததால் தான் திருமணம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது என்பதை சூர்யா இப்போது புரிந்து கொண்டான்

அப்படி இல்லாமல் வெறும் பழி வாங்கலுக்காக மட்டும் வாழ்வையே சோதிக்கும் எண்ணம் எப்படி சாத்தியம் என நினைத்தான்

அதிலும் அருண் கூறியதில் இருந்து அவள் மேல் எதுவும் தவறு இல்லை  என்பது புரிந்தது  முதல் அவளிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்கும் தருணத்திற்காய் காத்திருந்தான் சூர்யா       

ஒருவரை பற்றி ஒருவர் அறியாமலே தவிப்பு மிகுந்த நெஞ்சோடு நேரத்தை கொன்று கொண்டு இருந்தனர்

சுமேதா முன்பே தீர்மானித்தது போல் ஊருக்கு சென்றதும் அவனை விட்டு விலகி விட வேண்டுமென்ற முடிவோடு அதை செயல்படுத்தும் முறை பற்றி யோசித்து கொண்டிருந்தாள்

இப்படி செய்வது என தீர்மானிப்பது வேறு, அதை செயல்படுத்தும் நேரம் நெருங்கும் போது தான் அதன் வேதனை அவளுக்கு மலை போல் பாரமாய் மனதை அழுத்தியது

அம்மா அப்பாவிடம் என்ன சொல்வது... அண்ணாவை எப்படி சமாதானம் செய்வது என மனதில் சிந்தனை ஓடியது

எல்லாவற்றிற்கும் மேலாய் தான் எப்படி இந்த பிரிவை ஏற்று கொள்ள போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கியது

அவன் அவளை ஒரு பொருட்டாக கூட நினையாமல் வெறுத்த போதும் அவளால் அவனை மனதை விட்டு விலக்க இயலவில்லை, ஒரு தலை காதல் போலும் என நினைவே அவள் கண்களில் நீர் பெருக செய்தது

அதே நேரம் சூர்யா ஏதோ நினைத்தவன் போல் காரின் ரியர் வியு கண்ணாடி வழியாய்  பின் சீட்டில் இருந்த சுமேதவை பார்க்க அவள் கண்களை துடைத்து கொள்வதை பார்த்தவனுக்கு மனம் வேதனையில் தவித்தது

கணேஷ் சொன்னது போல் அங்கேயே தங்கி இருக்க வேண்டுமோ அல்லது கணேசை ட்ரெயின்ல் செல்ல அனுமதித்துவிட்டு,  தனிமை தருணத்தில் தன் மனமாற்றத்தை அவளுக்கு உடனேயே வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ என குற்ற உணர்வில் மருகினான்

எத்தனை நாட்கள் அவள் இப்படி தவித்திருப்பாள் என்பது மனதிற்கு  உறைக்க இன்னும் வேதனையானது

இவர்களுக்குள் உள்ள போராட்டம் புரியாத கணேஷ் "சூர்யா நீங்க நெஜமாவே கிரேட் தான்... இந்த காலத்துல கூட பிறந்த சொந்தங்களையே உதறி தள்ளுற மனுசங்க இருக்கறப்ப உங்க சித்தி பொண்ணுக்காக இவ்ளோ அக்கறை எடுத்துக்கறது பெரிய விஷயம்... எங்க சுமி ரெம்ப லக்கி தான்" என பெருமை போல் கூற

கணேசிற்கு கூறும் பதிலில் தன் மனதை தன் மனதில் பதிந்தவளுக்கு புரிய வைக்க இயலுமா என யோசித்தான் சூர்யா

"இதுல என்ன இருக்குங்க கணேஷ். அனிதா என் கூட பிறக்கலையே தவிர அவ என் தங்கை தான். அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியறதில்ல... அதான் அருண் மேல கூட அவ்ளோ கோவம் வந்தது அங்க அவரை பாத்தப்ப. ஆனா உண்மை புரிஞ்சதும் கோபம் போய்டுச்சு" என கூறியவன் உட்பொருளாய் சுமேதாவிடம் உண்மை அறிந்த பின் உன்னிடமும் கோபம் இல்லை என கூற முயன்றான்

ஆனால் அது அவள் கருத்தில் பதியவில்லை. //அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியறதில்ல... அதான் அருண் மேல கூட அவ்ளோ கோவம் வந்தது // என்றது மட்டுமே பற்றி கொண்டாள்

மீண்டும் அவளை கண்ணாடியில் பார்த்தவன் அவளிடம் எந்த மறுதலிப்பும் இல்லாமல் போக மீண்டும் கணேசிடம் திரும்பி "ஆனா நீங்க சொன்னது போல உங்க சுமி லக்கியா இல்லையானு எனக்கு தெரியாது. நான் ரெம்ப லக்கி" என சந்தோசமாய் சிரித்தான் சூர்யா

"என்ன சுமி... சூர்யா சொல்றதை கேட்டியா?" என கணேஷ் கேலி போல் சிரிக்க சுமேதா உறங்குவது போல் கண்களை மூடி கொண்டாள்

அவளிடமிருந்து பதில் வராமல் போக திரும்பி பார்த்த கணேஷ் "தூங்கிட்டா போல இருக்கு" என்றான் சற்று மெல்லிய குரலில்

ஆனால் அவள் உறங்கவில்லை என்பதை சூர்யா உணர்ந்தே இருந்தான். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே, அதன் பின் உன்னை எப்போதும் அழ விட மாட்டேன் கண்மணி என மனதிற்குள் கூறி கொண்டான் சூர்யா

நான் ரெம்ப லக்கி என சூர்யா கூறியதை கேட்ட போதும் கூட "இதுவும் அவன் நாடகத்தில் ஒரு பகுதி போல" என தனக்குள்ளே கூறி கொண்டாள் சுமேதா

அது தான் விசித்திரமான மனித மனம் போலும். ஒன்றின் மீது பிடிப்பும் நம்பிக்கையும் உள்ள வரை சிறு துரும்பை கூட பற்றி படர எண்ணும் மனம் அந்த பிடிப்பு தளர்ந்து போனால் எதையும் சமாதானமாய் ஏற்க மறுக்கிறது

சில மணி நேர பயணத்திற்கு பின் காபி சாப்பிடலாம் என கணேஷ் கூற சூர்யாவிற்கு விரைவில் இல்லம் செல்லவே மனம் பறந்தது

விரைவில் தன் மனமாற்றத்தை தன்னவளுக்கு உணர்த்த மனம் பரபரத்தது, அதிலும் அவள் வாடிய முகம் அந்த வேகத்தை இன்னும் கூட்டியது

இருந்தாலும் கணேசை மறுக்க இயலாமல் வழியில் ஒரு இடத்தில் நிறுத்தினான் சூர்யா. சுமேதாவை எழுப்ப முயல அவள் நிஜமாகவே நல்ல உறக்கத்தில் இருந்தாள்

"எனக்கும் சேத்து வாங்கிட்டு வந்துடுங்க கணேஷ்.. நான் சுமி கூட இருக்கேன்" என சூர்யா கூற கணேஷ் சரியென சென்றான்

கணேஷ் அகன்றதும்  சூர்யா பின் பக்கம் திரும்பி சுமியை எழுப்ப முயன்றான். எத்தனை நாள் தூங்காத தூக்கமோ என்பது போல் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தவளை விழி அகலாமல் பார்த்தான்

மானசீகமாய் அவளிடம் மன்னிப்பு கேட்டான். கணேஷ் வருவதற்குள் அவளிடம் ஒரு வார்த்தையேனும் பேசிவிட  துடித்த  மனதை  கட்டுபடுத்தினான்

அப்படி ஒரு வார்த்தையில் பேசி அவள் மனகாயத்தை ஆற்ற  இயலாது  என்பதை அவளை ஜென்ம ஜென்மமாய் அறிந்தவன் போல் உணர்ந்தான்

ஒருவழியாய் கணேஷ் திரும்பி வர அவர்கள் பயணம் தொடர்ந்தது

வழியில் நல்ல டிராபிக் இருக்க அவர்கள் வந்து சேர நினைத்ததை விட மிகவும் தாமதம் ஆனது

கோவையை சமீபிக்க சில மணித்துளிகள் இருக்கும் போது சுமி விழித்தாள், வெய்யில் கண்ணாடி வழியே ஊடுருவி கண்களை கூச செய்தது

அவளை பார்க்காமலே அவள் விழித்ததை உணர்ந்தவன் போல் சட்டென திரும்பி "நல்ல தூக்கமா சுமி?" என்றான் சூர்யா

அவன் கவனிப்பான் என எதிர்பாராதவள் அதிர்ந்தாள், சுதாரித்து "ம்... " என்றாள் ஒற்றை வார்த்தையாய் சோம்பல் போல

"என்ன சுமி? கஷ்டப்பட்டு டிரைவ் பண்றது சூர்யா. அவர் இவ்ளோ பிரிஸ்கா இருக்கார், நீ இந்த தூக்கம் தூங்கற?" என கணேஷ் கேலி செய்ய என்ன பேசுவதென தெரியாமல் முறுவலித்தாள்

அப்போது அவள் பார்வை தன்னையும் அறியாமல் சூர்யாவின் முகத்தில் பதிந்தது

அவன் முகத்தில் இதுவரை இருந்த  இறுக்கம் தளர்ந்து தெளிவாய், இன்னும் சொல்லப்போனால் சற்று சந்தோஷம் பரவி இருந்ததை அவள் உணர்ந்தாள்

இப்போது எல்லா புதிர்களும் விடுபட்டுவிட தான் அவனை விட்டு விலக போகிறேன் என்பதால் தான் அவன் முகத்தில் இந்த தெளிவோ என அவள் பேதை மனம் வாடியது

அவள் தன்னை கண்ணெடுக்காமல் பார்ப்பதை உணர்ந்து  கணேஷ்  பேசுவது எதுவும் மனதில் பதியாமல் இருந்தான் சூர்யா

ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த இயலாமல் கார் சிக்னலில் நின்ற போது அவளை திரும்பி பாத்தான், ஆழமாய் அவள் கண்களை ஊடுருவ முயன்றான்

அவன் பார்வையின் கூர்மையை தாங்க இயலாமல் அவள் முகம் வேறு புறம் திரும்பியது

அவன் பார்வைக்கான அர்த்தத்தை தேட முயன்றாள். எதுவும் புலப்படாமல் மௌனமானாள்
சூர்யாவிற்கோ அந்த கணமே அவளை கைகளில் ஏந்தி கொள்ள மனம் தவித்தது. அதே நேரம் சூர்யாவின் செல்போன் அலறியது

"ஹலோ... "


"...."

"எஸ்... சொல்லு பிரகாஷ்"

"...."

"ஆமா இன்னிக்கி ஆபீஸ் வரேன்..."

"...."

"இல்ல... கொஞ்ச லேட்டா வரேன்..."

"..."

"இல்ல பிரகாஷ்... மேனேஜ் பண்ணு எப்படியாச்சும்... கொஞ்ச நேரம்..."

"...."

எதிர்முனையில் உள்ளவர் என்ன கூறினாரோ சூர்யாவின் குரலில் சற்று முன் இருந்த அமைதி காணாமல் போக "ஒகே... I will be there as soon as possible" என சற்று சலிப்பு கலந்த குரலில் கூறினான்

கோபமாய் அவன் செல்போனை கீழே வீசுவது போல் வைக்க "என்னாச்சு சூர்யா? எனி ப்ராப்ளம்?" என கணேஷ் பதட்டமாய் கேட்க

"இல்ல கணேஷ்... கொஞ்சம் அவசரமா ஆபீஸ் போகணும்... யு. எஸ் ல இருந்து clients வர்றாங்க இன்னைக்கி... நேத்து எதிர்பாராம லீவ் எடுக்க எடுத்ததால  முடிக்க வேண்டிய வேலை எல்லாம் பெண்டிங்... அதான்... " என்றவன் திரும்பி சுமேதாவை பாவமாய் பார்க்க, அவள் தன் முகத்தை தாழ்த்தி அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்

"சூர்யா... அப்படினா ஒண்ணு பண்ணலாம்... எங்க வீட்டுக்கு இன்னும் பத்து நிமிசத்துல போய்டலாம் தானே. சுமிய இங்க விட்டுட்டு போங்க. நான் வீட்டுல டிராப் பண்ணிடறேன்... நீங்க உங்க வீட்டுக்கு போயிட்டு அப்புறம் மறுபடி இந்த பக்கம் உங்க ஆபீஸ் வரணும்னா ரெம்ப டைம் ஆய்டும்... நீ என்ன சுமி சொல்ற?" என கணேஷ் கேட்க

"ம்.. சரி... நான் இங்கயே இறங்கிக்கறேன்..." என்றாள் சூர்யாவின் பார்வை தவிர்த்து

அது தான் நல்லது என அவளுக்கும் தோன்றியது.  மீண்டும் அவனை  தனியே  சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லதென அவளுக்கு தோன்றியது

அப்படி பேச நேர்ந்தால் தன் உறுதி தளர்ந்து விடுமோ என பயந்தாள்

அது மட்டுமில்லாமல்  அவன் முன் போல் ஏதேனும் கோபமாய் பேசினால்  தான் இன்றுள்ள மனநிலையில் தன்னால் தாங்கவும் இயலாது என உணர்ந்தாள்      

சூர்யாவோ ஒரு பத்து நிமிடமேனும் அவளுடன் தனியே பேச வேண்டும் போல் துடித்தான். ஆனால் வேறு வழி இல்லாமல் கணேஷ் சொன்னது போல் சுமேதாவை கணேஷ் வீட்டில் விட்டு விட்டு கிளம்பினான்

கிளம்பும் முன், "சுமி... "என அழைத்தவன் "நான்.... நான் சீக்கரம் வர ட்ரை பண்றேன்... நீ ரெஸ்ட் எடு" என்றான் சூர்யா, ஏதோ சொல்ல வந்து ஏதோ சொல்வது போல்

அவள் சரி என்பது போல் தலை அசைத்தாள். அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றை படிக்க முயன்று தோற்றாள் சுமேதா
_________________________________________________________________

கணேஷின் அன்னை வற்புறுத்தியும் அங்கு நீண்ட நேரம் தங்க மறுத்து விட்டாள் சுமேதா

வீட்டில் எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதென கூறி உடனே கணேசை அவள் வீட்டில் கொண்டு விட செய்தாள்

கணேஷ் கிளம்பியதும் சற்று ஆசுவாசபடுத்தியவள் அடுத்து செய்ய வேண்டியதென்னவென திட்டமிட்டாள்

முதலில் தங்கள் அறைக்கு சென்று சூர்யா சில நாட்களுக்கு முன் கோபமாய் அவள் முகத்தில் வீசிய டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்திட்டாள்

பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்தினாள். தனது பொருட்கள் சிலவற்றை எடுத்து ஒரு பெட்டியில் வைத்தாள்

மேஜை மீது இருந்த அவனது புகைப்படத்தை எடுத்தவள் அதற்கு மேல் கட்டுபடுத்த இயலாமல் கதறினாள்

சற்று நேரம் அழுது ஓய்ந்தவள், அந்த புகைப்படத்தையும் தன் பொருட்களோடு வைத்தாள்

ஏதோ நினைத்தவள் போல் அனிதாவின் புகைப்படத்தையும் எடுத்து கொண்டாள்

இரவு சாப்பிட்டது, அதுவும் அவன் வற்புறுத்தலில் சிறிது மட்டுமே சாப்பிட்டதால் உடலும் மனதோடு சோர்வுற ஏதேனும் உண்டாலொழிய தன்னால் திடமாய் செயல்பட இயலாது என்பதை உணர்ந்தவள் போல் உண்டாள்

அந்த கணம் சூர்யா ஏதேனும் சாப்பிட்டானோ என மனதில் தோன்ற, மீண்டும் மனம் சோர்ந்தது

இனி அவன் வாழ்வில் தான் ஒரு அங்கமாய் தான் இருக்கபோவதில்லை என்ற நினைவே, அவளை பலவீனப்படுத்தியது

இங்கு தனியாய் இன்னும் சற்று நேரம் இருந்தால் தானே மனம் மாறிவிடக்கூடும் என தோன்ற விரைந்து தன் பொருட்களை சேகரித்து கொண்டு கிளம்பினாள்

கிளம்பும் முன் டைவர்ஸ் பேப்பர்களை மேஜை மீது வைத்தவள் அதன் மேல் ஒரு குறிப்பையும் எழுதி வைத்தாள் "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை... முடிந்தால் மன்னிக்கவும்... - சுமேதா"

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்


(தொடரும்...)

...

32 பேரு சொல்லி இருக்காக:

எஸ்.கே said...

நன்றாக உள்ளது! தொடரட்டும்! இனிதே முடியட்டும்!

ஜெய்லானி said...

//து தான் விசித்திரமான மனித மனம் போலும். ஒன்றின் மீது பிடிப்பும் நம்பிக்கையும் உள்ள வரை சிறு துரும்பை கூட பற்றி படர எண்ணும் மனம் அந்த பிடிப்பு தளர்ந்து போனால் எதையும் சமாதானமாய் ஏற்க மறுக்கிறது //

????.....!!!!! :-))))

சௌந்தர் said...

எல்லா கதையில் வருவதை போல தான் இருக்கு எப்படியே ரெண்டு பேரும் சேர போறாங்க :)

Gayathri said...

அக்கா நல்ல முடிவா போடுங்க...டைவர்ஸ் லாம் வேணாம்...என்ன கொடுமை...ரொமான்ஸ் கதை எழுதுவீங்கன்னு பாத்தா..கிரைம் , சயின்ஸ் பிக்சன் ன்னு எங்கயோ போய் இப்படி டிராஜிடிக்கு போயிண்டு இருக்கே...ரூட்ட்ட மாத்துங்க

Anonymous said...

nallaarukku ..thanks..sandhya

அமைதிச்சாரல் said...

சரி, அப்புறம்...

ரஜின் said...

nice...சகோ..அடுத்த பகுதில,சுபம் போடுவீங்கன்னு நெனைக்கிரேன்,,கதை போரதபாத்தா அப்டித்தா தெரியுது.க்ளைமாக்ஸ்ல ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கும்னு நெனைக்கிறேன்.அப்டியே இருந்தா நல்லா இருக்கும்..
ஏதோ சொல்ல வந்தவன் சொல்லாமல் விடை பெறுகிறேன்,

நன்றி

Arul Senapathi said...

Very Nice again.

I can see the ending very close.
Please end it with a happy ending.

Thanks

Nithu Bala said...

Nandraka irukirathu..

மார்கண்டேயன் said...

என்னாது, தொடர முடிக்க போறீங்களா ?

வேணாம், நல்லால்ல, வுட்டுடு . . .

அழுதுடுவேன்

LK said...

அப்படி சீக்கிரமா முடிக்கற வழிய பாரு

மோகன்ஜி said...

காயத்ரி சொன்னாப்புல டைவர்ஸ்லாம் வேணாம்.. நல்ல கார்டா போடுங்க!

Matangi Mawley said...

aiyo... "kaavya thanamaana" KB type mudivellaam venaam.... happy-yaa vey irukkattum!!!

வெறும்பய said...

என்னங்க இவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீங்க...

vinu said...

வெறும்பய சொன்னது…
என்னங்க இவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீங்க...


eampaaa eaaaan unakku intha kolaiveri avan avan inga eppadaa hero heroine seruvaangannu irrukku itulla innum 22 episode ungalukku keakkutho?


emma thangamani neenga nalla irrupeenga unga pullai kutti ellam roamba kaalam santhosamaa irruppanga, thayavu senju avangalai[sumethaa & ganesh] searhu vachudunngaaa

சே.குமார் said...

கதை நல்லா இருக்கு.... அடுத்த பகுதி வரும் வரை சுமேதா - சூர்யா மனனிலையில்தான் நாங்களும்...

என்னது நானு யாரா? said...

நான் ஜெய்பூர் போய் வந்தப்பின்னாடியும் கதை முடியலையா? கல்கியோட ஆவி ஏதாவது உங்க உள்ள புகுந்திடுச்சா என்ன? எப்படியோ போங்க! 5 மார்க் கேள்விக்கு பக்கம் பக்கமா எழுதி கிழிக்கிற மாணவியை மாதிரியே நீங்களும்....

இது நல்லா இல்லை...இன்னும் எத்தனை பகுதிகள்ல முடிக்கிறதா இருக்கீங்க! அதையாவது சொன்னீங்கன்னா நாங்க சந்தோஷப்படுவோம் இல்லை!!!

ஸ்ரீராம். said...

முதலில் தொடரும் போடற இடத்தைப் படிச்சிட்டு அப்புறம் தொடரலாமான்னு நினைச்சேன். நல்லபடியாத் தொடர்ந்து சஸ்பென்ஸ் மெய்ன்டென் பண்றீங்க. "பேதை மனம் வாடியது, கண்ணீரைக் கட்டுப் படுத்த முயன்றாள்" போன்ற பழைய பாணி வரிகள் மட்டும் பெண் பலவீனத்தைக் காட்டுவதாகப் படுகிறது! பதிவுலக வரலாற்றில் நீண்ட தொடர். ஐம்பது பதிவுகளுக்கு முன்னால் முடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்...!

siva said...

இது நல்லா இல்லை...இன்னும் எத்தனை பகுதிகள்ல முடிக்கிறதா இருக்கீங்க! அதையாவது சொன்னீங்கன்னா நாங்க சந்தோஷப்படுவோம் இல்லை!!!
--athavathu silver jupple..25vathu pativoda supam podrvanga kavalapadthenga...anney

ஸ்ரீராம். said...

சூர்யா சூர்யா என்று சொல்லிக் கொண்டு படத்துல அவர் தம்பி கார்த்திக் படம் போட்டுள்ளீர்களே...!!

அன்னு said...

தங்ஸு....பாவம்பா சூர்யா, கொஞ்சூண்டு அவனுக்கு டைம் குடுத்தீங்கன்னா பையன் இனி சுமேதாவை தலை மேல தூக்கி வச்சுக்குவான்....அப்பப்ப ஒரு 'தொடரும்' போட்டு அவனை கொலைகாரனாக்கிடாதீங்க!!

தக்குடுபாண்டி said...

ஒரு வழியா கதையை முடிக்கலாம்னு நம்ப இட்லி மாமிக்கு இப்பையாவது தோணினதே! ரெம்ப சந்தோஷம்...:) முடிவு சுபமா இருக்கனும் அக்கா! சொல்லிட்டேன் ஆமா!

Krishnaveni said...

very nice flow, interesting story....aduththa post seekiram podunga bhuvana

The Kid said...

நீங்க ரொம்ப தெளிவா எழுதறீங்க. படிகர்துக்கு நல்லா இருக்கு .

நீங்க http://zeole.com/chennai க்கு வந்து ஒரு முறை எழுதணும் ...

zeole.com என்னோட ஒரு முயற்சி தான் ... அதுல ஒவ்வொரு country/city ஆக தனித்தனியாக arrange செய்து இருக்கோம்.

zeole.com/chennai ல , ஒரு 100 readers வருவாங்க . உங்க எழுத்து பல வாசகர்கள் பார்க்க வைப்பு உள்ளது.

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - நன்றிங்க

@ ஜெய்லானி - வாய் விட்டு திட்டரவங்கள பாத்தா கூட எனக்கு பயமில்ல... இப்படி என்னமோ புரியாத மொழில சொல்லி பயபடுத்தாதீங்க அண்ணே...(ஹா ஹா)

@ சௌந்தர் - அப்படியா... பார்ப்போம்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஹா ஹா... ஒகே ஒகே...

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா

@ அமைதிச்சாரல் - அப்புறம்... விழுப்புரம்...

அப்பாவி தங்கமணி said...

@ ரஜின் - ஹா ஹா... சொல்ல வந்தத சொல்லிட்டு போங்க...நன்றி

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்

@ Nithu Bala - நன்றிங்க நித்து

அப்பாவி தங்கமணி said...

@ மார்கண்டேயன் - என்ன விளையாடறீங்களா? முடிக்கலைனா இப்ப முடிக்கறனு கேக்கறது, முடிக்கறேன்னா என்னது முடிக்கரீங்களா?னு சொல்றீங்க.. இருங்க உங்களுக்கு இட்லி பார்சல் அனுப்பறேன்... (ஹா ஹா)

@ LK - சரிங்கண்ணா...

@ மோகன்ஜி - சரிங்க... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Matangi Mawley - ஹா ஹா... இந்த காமெடி பேசி KB அளவுக்கெல்லாம் கொண்டு போறதுக்கு முதல் நன்றி... ஜஸ்ட் கிட்டிங்...

@ வெறும்பய - ஆஹா... ஏனுங்க? ஏன்? இதுக்கு மேலயும் முடிக்காம இருந்தா கொலை மிரட்டல் வரும் போல இருக்கு

@ vinu - ஹா ஹா... நோ டென்ஷன் வினு... நோ டென்ஷன்... அது சரி... நீங்க நெஜமாவே கதைய படிச்சீங்களா பிரதர்..... நீங்க சொல்றீங்கன்னு சுமேதாவ கணேஷ் கூட சேத்து வெச்சா அவ ஆத்துகாரர் சூர்யா உங்க மேல தான் கேஸ் போடுவார்... ஒகேவா... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ சே. குமார் - ஓ... அதே மனநிலையிலா... ஒகே ஒகே

@ என்னது நானு யாரா? - ஏனுங்க? நீங்க ஜெய்பூர் போயிட்டு வந்தா கதை முடிக்கறேன்னு நானு வாக்கு எதுவும் குடுக்குலையே... ஹா ஹா...

@ ஸ்ரீராம் - ஹா ஹா... அம்பது பதிவா? கொலை மிரட்டல் நிச்சியம்... ஹா ஹா...நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ siva - தேங்க்ஸ்

@ ஸ்ரீராம் - "அண்ணனென்ன தம்பியென்ன"னு சூப்பர் ஸ்டார் பட பாட்டு ஞாபகம் வந்ததுங்க... அதான் தம்பிய போட்டுட்டேன்... (ஹா ஹா)

@ அன்னு - ஹா ஹா... சூர்யாவுக்கு டைம் குடுத்துட்டா போச்சு... தேங்க்ஸ் அன்னு

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - சரிங்கண்ணே... நன்றிங்கோ...

@ Krishnaveni - தேங்க்ஸ்ங்க வேணி... இன்னைக்கே போட்டுடறேன் நெக்ஸ்ட் பார்ட்

@ The Kid - தேங்க்ஸ்

Post a Comment