Monday, October 25, 2010

அதே கண்கள்... (பகுதி 23)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

இங்கு தனியாய் இன்னும் சற்று நேரம் இருந்தால் தானே மனம் மாறிவிடக்கூடும் என தோன்ற விரைந்து தன் பொருட்களை சேகரித்து கொண்டு கிளம்பினாள் சுமேதா

கிளம்பும் முன் டைவர்ஸ் பேப்பர்களை மேஜை மீது வைத்தவள் அதன் மேல் ஒரு குறிப்பையும் எழுதி வைத்தாள் "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை ... முடிந்தால் மன்னிக்கவும்...  - சுமேதா"
______________________________________________________
 
அதே நேரம் அலுவலகத்தில் நிலைகொள்ளாமல் தவித்தான் சூர்யா

எப்போது சுமேதாவை காண்போமென்ற எண்ணமே அவனை முழுவதும் ஆக்ரமித்திருந்தது

உடனே அவள் குரலை கேட்க வேண்டுமென தோன்ற தன் வீட்டு எண்ணுக்கு அழைத்தான்

வெகு நேரம் மணி அடித்தும் சுமி எடுக்காமல் போக என்ன ஆனதோ என பதறினான்

ஒருவேளை கணேஷ் வீட்டிலேயே இருக்கிறாளோ, மிகவும் சோர்வாக வேறு இருந்தாளே என தோன்ற உடனே கணேசின் செல்போன் எண்ணுக்கு அழைத்தான்

"சொல்லுங்க சூர்யா..."

"கணேஷ்... ம்... சுமி இருக்காளா...? சும்மா... பேசலான்னு தான்" என தடுமாற

"சுமிய அப்பவே வீட்டுல டிராப் பண்ணிட்டனே சூர்யா... அம்மா இருன்னு எவ்வளவு சொல்லியும் கேக்கல... " என கணேஷ் கூற பதறிய மனதை கட்டுபடுத்திய சூர்யா

"ஒகே கணேஷ் நான் வீட்டுக்கு கூப்பிட்டு பாக்கறேன்" என சமாளித்து பேசியை துண்டித்தான்

என்ன ஆனது, எங்கு போனாள் என எதுவும் அனுமானிக்க இயலாமல் யாரை கேட்பது என எதுவும் தோன்றாமல் சற்று நேரம் மௌனமானான் சூர்யா

"ஏதேனும் தவறாய் முடிவு எடுத்து இருப்பாளோ" என தோன்றிய கணம் இதயம் சற்று நின்று இயங்கியது

"இல்லை, அப்படி செய்யும் கோழை இல்லை என் சுமி... " என உடனே தன்னை தானே சமாதானம் செய்து கொள்ள முயன்றான்

"வேண்டுமென்றே தன் மேல் உள்ள கோபத்தில் வீட்டில் தொலைபேசி எடுக்காமல் இருக்கிறாளென" மனதை அமைதிப்படுத்த முயன்றான்

அடுத்த கணமே இரவு கார் கண்ணாடியில் தெரிந்த அந்த வேதனை நிறைந்த முகம் கண் முன் வர உடனே அவளை பார்த்தால் தவிர தன்னால் மூச்சு விடவும் இயலாது என நினைத்தான்

ஆனால் அலுவலக வேலைகள் அவனை நகரவும் விடாமல் தடுத்தன. இன்னும் சற்று நேரம் பாப்போம் என வேலையில் கவனத்தை செலுத்த முயன்றான்
_____________________________________________

மகள் பெட்டியுடன் வீட்டினுள் நுழைந்ததை கண்ட சுமேதாவின் அன்னை துணுக்குற்றாள்

"என்ன சுமி? என்ன இந்த நேரத்துல தனியா? அதுவும் பெட்டி எல்லாம்" என பதற என்ன சொல்வதென புரியாமல் ஒரு கணம் சுமேதா விழித்தாள்

எப்படியும் சொல்ல வேண்டியது தானே என பேச தொடங்கியவள் பெற்றவளின் உடல் நிலை பற்றிய கவனம் வர, அண்ணனும் அப்பாவும் அருகில் இருக்க கூறுவது தான் சரியென மௌனமானாள்

"அது வந்தும்மா... ஒரு வாரம் இங்க இருக்கலாம்னு... ரெம்ப நாள் ஆச்சே நம்ம வீட்டுல ரெண்டு நாள் சேந்த மாதிரி இருந்து... என்னோட ட்ரெஸ் எல்லாம் அங்க இருந்தது... அதான் பெட்டி... "என ஏதோ சமாளித்தாள்

மகள் தன்னுடன் ஒரு வாரம் இருக்கபோகிறாளென்ற சந்தோசத்தில் பெற்றவளுக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை

"அப்படியா... இப்பவாச்சும் மாப்பிளைக்கு உன்னை அனுப்ப மனசு வந்ததே... " என பெற்றவள் மகிழ

"என்னை மொத்தமா அனுப்பணும்னு தானேமா இவ்ளோ நாளா போராடினாரு" என மனதில் தோன்றிய வார்த்தைகளை விழுங்கினாள் சுமேதா

"சரி சுமி... நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா... நான் உனக்கு பிடிச்ச காரக்கொழம்பு செய்யறேன் இன்னிக்கி" என அவள் அம்மா அன்பு மேலிட உரைக்க அது தன்னை பலவீனமாக்குவதை உணர்ந்த சுமேதா அந்த இடத்தை விட்டு அகன்றாள்

தன் அறைக்கு சென்றவள் சற்று மனதை நிலைபடுத்த முயன்றாள். அதே நேரம் அன்னை அழைக்கும் குரல் கேட்க வெளியே வந்தாள்

"இருங்க மாபிள்ள... சுமிகிட்ட குடுக்கறேன்..." என அவள் கையில் தொலைபேசியை கொடுத்துவிட்டு அவள் அன்னை நகர என்ன செய்வதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

பொறுமை இழந்த சூர்யா "சுமி...சுமி... லைன்ல இருக்கியா... சுமி" மீண்டும் மீண்டும் அழைக்க அவன் குரலை ஒரு முறை கேட்கும் ஆவல் தூண்ட "ம்..." என்றாள் மெதுவாய்

"என்ன சுமி இது? அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம்ல... வீட்டுல நீ போன் எடுக்காம.. எங்க போனயோனு...." என அந்த கணத்தின் நினைவில் பேச இயலாமல் நிறுத்த அவன் குரலில் தெறித்த உணர்வுகள் தன்னை தாக்குவதை உணர்ந்த சுமேதா

"நான் வெச்சுடறேன்..." எனவும்

"சுமி... ப்ளீஸ் ப்ளீஸ்... " என அவசரமாய் தடுத்தான்

"என்ன? சொல்லுங்க" என முற்றிலும் உணர்ச்சி துடைத்த குரலில் சுமேதா கேட்க அவள் குரலில் தெரிந்த மாற்றத்தை புரிந்து கொண்டவன் போல்

"சுமி... நான் உன்கிட்ட நெறைய பேசணும்டா..."

"வேண்டாம்...எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்..." என அவனை இடைமறித்தாள்

"சுமி ப்ளீஸ்... "

"குட் பை..." என துண்டித்தாள்

அவள் தன்னிடம் பேச மறுத்தபோதும் அவள் தாய் வீட்டில் தான் பத்திரமாய் இருக்கிறாளென அறிந்ததும் சற்று நிம்மதியானான் சூர்யா

அதன் பின் நடு இரவு வரை வேலை நகர விடாமல் பிடித்தது

ஒரு வழியாய் எல்லாம் முடித்து நாளை தான் அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லாதபடி எல்லாம் முடித்துவிட்டு கிளம்பினான் சூர்யா

"நேரே அவள் அம்மா வீட்டுக்கு இப்போது சென்றால் என்ன?" என தோன்றியது சூர்யாவிற்கு

ஆனால் நடு இரவில் சென்று கதவை தட்ட என்னமோ போல் தோன்ற, அதுவும் இல்லாமல் அவளிடம் நிறைய தனிமையில் பேச வேண்டியதும் உறைக்க காலையில் செல்வதே சரியென முடிவு செய்தான்
______________________________________________
தன் வீட்டுக்குள் நுழைந்த அந்த கணமே சுமி இல்லாத வெறுமையை அவன் மனம் உணர்ந்தது

தன் அறைக்கு சென்றவன் அங்கு மேஜை மேல் இருந்த டைவர்ஸ் பத்திரம் கண்ணில் பட துவண்டு போனான்

அதற்கும் மேலாய் அவளது குறிப்பு அவனது மனதை மொத்தமாய் கொன்றது "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை... முடிந்தால் மன்னிக்கவும்... - சுமேதா"

சுமேதாவின் அழகிய கையெழுத்தை கண்டதும், தன்னையும் அறியாமல் அவன் விரல்கள் அந்த எழுத்தை வருட, பின் தன் மார்போடு அணைத்து கொண்டான்

தான் விலகி சென்றபோதெல்லாம் தன் மனதை கொள்ளை கொள்ள முயன்றவள் இப்போது தான் மொத்தமாய் அவளிடம் சரணடைந்தபின் இப்படி விலகி செல்கிறாளே என வேதனைப்பட்டான்

அவளை தான் ஊட்டியில் வைத்து கொல்ல முயன்றேன் என்று அறிந்த பின்னும் மனதில் அத்தனை அன்பை தேக்கி கொண்டிருந்தவள், எத்தனை வேதனை ஆட்கொண்டிருந்தால் இப்படி விலகி செல்ல முடிவு செய்திருப்பாள் என தோன்ற, அதற்கு காரணமான தன் மீதே கோபமாய் வந்தது சூர்யாவிற்கு

ஒரு கணமும் கண் மூட இயலவில்லை அவனுக்கு

முந்தின தினம் உறங்காமல் நீண்ட நேரம் பயணித்து அன்று நாள் முழுவதும் வேலை நெரித்தும் கூட உறக்கம் அவனை தழுவவில்லை

தன் மனதில் நிறைந்திருப்பவளை கண்ணில் காணும் வரை உறக்கத்தை கூட தழுவ விட மாட்டேன் என்பது போல் பிடிவாதமாய் நேரத்தை கொல்ல முயன்றான்

முதல் முறையாய் தங்கள் திருமண ஆல்பத்தை ஆசையோடு பார்த்தான்

அதில் உலகின் சந்தோஷம் மொத்தமும் தனக்கே சொந்தம் என்பது போல் மகிழ்வாய் சுமேதா சூர்யாவை பார்த்து கொண்டிருந்த ஒரு புகைப்படம் அவன் கண்களை நிறைத்தது

எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் தன்னை மணந்திருப்பாள்... தான் செய்ததென்ன... ச்சே... என தன்னையே வெறுத்தான் அந்த கணம்

ஒரு வழியாய் ஜன்னல் வழியே மெதுவாய் விடியல் கண்ணுக்கு புலப்பட, அன்று தங்கள் வாழ்விலும் விடியலாய் இருக்குமென்ற நம்பிக்கையோடு எழுந்தான் சூர்யா
_______________________________________________________

"ஹாய் சுரேஷ்" என சூர்யா சுமேதாவின் அம்மா வீட்டினுள் நுழைய, அந்த காலை நேரத்தில் சூர்யாவை அங்கு எதிர்பாராத சுமேதாவின் அண்ணன் சுரேஷ் ஆச்சிர்யமாய் நோக்கியவன்

"வாங்க சூர்யா உள்ள வாங்க" என மகிழ்வோடு அழைத்தான்

"நீங்க ஆபீஸ் கெளம்பற நேரத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்..சாரி சுரேஷ்"

"ஐயோ... என்னங்க சூர்யா இது... நம்ம வீட்டுக்கு நீங்க வர்றதுக்கு... என்ன இது..." என்றவன் "அம்மா.. சூர்யா வந்திருக்காரு"என உள்நோக்கி குரல் கொடுத்தான்

"வாங்க மாபிள்ள..." என்றபடி சுமேதாவின் பெற்றோர் வெளியே வர அவர்களிடம் சம்பிரதாயமாய் வாய் பேசிய போதும் சூர்யாவின் கண்கள் சுமேதாவை தேடியது

அதை புரிந்து கொண்ட சுரேஷ் "சுமி எங்கம்மா?" என தன் அன்னையிடம் கேட்க

"இங்க தானே இருந்தா... இருங்க கூப்பிடறேன்... " என உள்ளே சென்றார்

சூர்யா மனதை அமைதிபடுத்த முயன்று தோற்று தவித்தான்

அதே நேரம் தன் அன்னையுடன் சுமேதா வரவேற்பறைக்கு வர "நேரத்துலையே எழுதுட்டயா சுமி?" என என்னமோ அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் இயல்பாய் கேட்டான் சூர்யா

"ம்... " என்றவள் அதற்கு மேல் என்ன பேசுவதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

"சரி மாபிள்ள... நீங்க பேசிட்டு இருங்க... நான் டிபன் ரெடி பண்றேன்... " என அவள் அன்னை உள்ளே சென்றார்

சுமேதாவும் அவள் அன்னையின் பின்னோடு செல்ல அவளுடன் தனியே பேச இயலாமல் பொறுமையை இழுத்து பிடித்தான் சூர்யா

காலை உணவு ஆன பின் சற்று நேரம் பேசி கொண்டிருந்தவன் "சரி சுமி... டைம் ஆச்சு... போலாமா?" என அவளை பார்த்து கேட்க,  என்ன சொல்வதென புரியாமல் விழித்தவள்

"நான்... என் பிரெண்ட் திவ்யா கல்யாணத்துக்கு..." என ஏதோ கூற வர

"ஆமா... சொல்லிட்டு இருந்தெல்ல... ம்...ரெண்டு பேருமே போலாம்... கிப்ட் எதாச்சும் வாங்கனுமா?" என எல்லாம் அறிந்தவன் போல் பேசி கொண்டே போனான்

"இல்ல... நான்..."

"ஓ... கிப்ட் வாங்கிட்டயா? ஒகே சுமி... டைம் ஆச்சு கெளம்பலாம்" என கடிகாரத்தை பார்த்து கொண்டே கூறினான், அவளுக்கு பேசவே அவகாசம் தராமல்

"என்ன சுமி... ஒரு வாரம் இருக்கேன்னு பெட்டி எல்லாம் தூக்கிட்டு வந்த..." என அவள் அன்னை குற்றம் சாட்டுவது போல் கூற அப்படியா என்பது போல் அவளை பார்த்தான் சூர்யா

"அது..." என சுமேதா ஏதோ கூற விழைய

"அது...அது வந்து அத்த... அம்மா அப்பா ஊர்ல இருந்து அடுத்த வாரம் தான் வர்றதா இருந்தது... அதான் சுமி இங்க இருக்கட்டும்னு நெனச்சேன்... ஆனா அவங்க இன்னைக்கே வராங்க... அதான்...  அப்புறம் நெக்ஸ்ட் வீக் கொண்டு வந்து விடறேன் அத்த" என சூர்யா அவளுக்கும் சேர்த்து பேச அதற்கு மேல் மறுக்க இயலாமல்

"சரி சுமி... அடுத்த தரம் வரப்பவாச்சும் சேந்த மாதிரி ஒரு வாரம் இருக்கறாப்ல வா சரியா" என மகளுக்கு மனமின்றி விடை கொடுத்தாள் அன்னை

அதற்கு மேல் என்ன செய்வதென எதுவும் புரியாமல் அவனுடன் கிளம்பினாள் சுமேதா

கார் சற்று ஓட தொடங்கியதும் "நான் நான்..." என சுமேதா ஏதோ கூற தடுமாற

"நீ...நீ... எதுவும் பேச வேண்டாம்... வீட்டுல போய் பேசிக்கலாம்" என சூர்யா அவள் தவிப்பை ரசித்து சிரித்து கொண்டே கூறினான்

"நான்... வீட்டுக்கு வர்ல..." என்றாள் சுமேதா கோபமாய்

"சரி... வீட்டுக்கு வேண்டாம்... வேற என்ன போலாம் சொல்லு... எங்கயாச்சும் வெளியூர் போலாமா?" என்றான் மென்மையாய் அவள் கைகளை அழுத்தியவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "ஏன்... என்னை கொல பண்ண வேற வெளியூர்ல புதுசா எதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?" கோபம் சற்றும் குறையாத குரலில் சுமேதா கேட்க, அப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத சூர்யா ஒரு கணம் செயல்பட இயலாதவன் போல் காரை அவசரமாய் நிறுத்தினான்

அந்த அதிர்வில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள தன்னையும் அறியாமல் அவன் கையை பற்றியவள் அவசரமாய் விலகினாள்

சூர்யா இன்னும் அவள் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளி வர இயலாமல் அவளையே வேதனையோடு பார்த்தான்

குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்      

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)


....

50 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

வாவ்!! கதை முடியும் தருணம்!! :):)

Krishnaveni said...

rendu perayum sethu vachchu seekiram subam podunga bhuvana

Nithu Bala said...

mudiya pokuthunu nenaicha varuthama irukku...adutha thodara udanadiya arambinka :-)

LK said...

புண்ணியமா போகும் சீக்கிரம் முடி

ஸ்ரீராம். said...

ஓ...அதுக்குள்ள அடுத்த பகுதி, புதன் கிழமை முடிவு வேற....போங்க புவனா நான் சொல்றதை கேட்க மாட்டேன்னுட்டீங்க...ஒட்டினால் விலகறதும் விலகினால் ஒட்டறதும் தம்பதிகளுக்குள்ள சகஜம் இல்லையா?

எஸ்.கே said...

முடியப்போகுதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஃபினிஷிங் இனிமையா இருக்கட்டும்!

siva said...

குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்

ம்--HEY JOLLY...
WE LIKE THESE LINES VERY MUCH.....
குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்

ம்--HEY JOLLY...
WE LIKE THESE LINES VERY MUCH.....
குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்

ம்--HEY JOLLY...
WE LIKE THESE LINES VERY MUCH.....
குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்

ம்--HEY JOLLY...
WE LIKE THESE LINES VERY MUCH.....
குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்

ம்--HEY JOLLY...
WE LIKE THESE LINES VERY MUCH.....
குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்

ம்--HEY JOLLY...
WE LIKE THESE LINES VERY MUCH.....

siva said...

அப்பாவி (இட்லி கடை தங்கமணி )
எப்போ பாரு கமெடிபண்ணிக்கிட்டு ....
ஹுக்ம் ..ஹெலோ இருங்க இருபத்து நான்குதான் வந்து இருக்கு சோ
இருபத்து ஐந்து வரை போடுங்க

நாங்க உங்கள்கு சில்வர் ஜூப்லி கொண்டலாம்னு இருக்கோம் ..ப்ளீஸ் தொடரை நிறுத்ததீங்க

கோவை ஆவி said...

மௌனராகம் படத்தை நிறைய வாட்டி பாத்தீங்களோ !!!

அனாமிகா துவாரகன் said...

//குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும் //

YAAAAAAAAAAAAHHHHHHHHHHHHHOOOOOOOOOOOOO

Gayathri said...

mm nalla irukku...waiting

nimoshini said...

exelent??!! wow!! story super.. i like this story very mach?! its touching my heart... sweet love momonts......

வெங்கட் நாகராஜ் said...

புதன் கிழமைக்கு வெயிட்டிங்....

vinu said...

குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்


ennathu adutha puthan kizamai varaikkum wait pannanumaa, athukku munnadiyeaa blackla internetla veliyida eathaavathu vazi irrukka, oooooooo picturee internet printuthaaneee he he he konjam unrchivasappattteaan....

ippudiyellam posukkunnu mudivu edukka koodathhu thayavu senchuu athukku munnadiyeaa podavum naama venumnaa sevaaykizamaikku puthaan kizamainnu pearai maathiralaaam

evlavoo pannittom ungalukkaaga ithai paanaa maattomaa

அமைதிச்சாரல் said...

அப்பாடா.. தொடர் முடியப்போவுதே,கடவுளை வேண்டிக்கிட்டது வீண்போகலை :-)))))

ஏம்ப்பா.. இன்னொரு எபிசோட் இழுத்திருந்தா சில்வர் ஜூப்ளி கொண்டாடியிருக்கலாமேன்னு சொல்ல நினைச்சேன்.. சொந்த செலவில் சூனியம் எதுக்குன்னு சொல்லாமலே போறேன் :-)))))

வெறும்பய said...

அப்போ முடிஞ்சிருமா....(சத்தியமா வருத்தம் தான்)

சௌந்தர் said...

அப்படா தொடர் முடிய போகுது நல்லது

Anonymous said...

OMG mudiya porathaa romba nantri thangame ...with love sandhya

siva said...

//அப்பாடா.. தொடர் முடியப்போவுதே,கடவுளை வேண்டிக்கிட்டது வீண்போகலை :-)))))//

unga thodarai mudikka kadavulaiey koopida vendi erukkey:)))

hilo madam please 25pativu podunga please...ethu ungal anbana,terror vaasagarkalin miratalana vendukol...///

siva said...

YAAAAAAAAAAAAHHHHHHHHHHHHHOOOOOOOOOOOOO//////

evlo santhosathai paaren...hahahaha..

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ஹைய்யா ஜாலி முடிய போகுது.
திரும்ப அதே மூக்கு,அதே வாய்,அதே கைகள் அப்படின்னு ஆரம்பிச்சிராதேங்க அக்கா.
வேற எதாவது ஜாலிஆ எழுதுங்க உங்க mindvoice போட்டு.

Abhi said...

நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் !

ரஜின் said...

பரவாயில்லயே சகோ...நான் மெயில்ல அனுப்புன க்ளைமேக்ஸ் அப்படியே எழுதீர்க்கீங்க...பேலன்ஸ் இன்னக்கி நைட்டுக்குள்ள அனுப்பீர்ரேன்..நீங்க வேர புதன் கிழமைன்னு,பயபுள்ளைகளுக்கு வாக்கு குடுத்துடீங்க...

கதை முடிக்கும்போது எண்ட் கார்ட்ல என் பேர் வரனும்..இல்லன்னா,,,இந்தக் கத என்னோடதுன்னு கோர்ட்ல கேஸுகள போட்டுருவேன்..ஆமா....இப்போல்லா இதுதா ஃபேஷன்...
--------------
கிண்டல்களை தாண்டி..இந்த கதையை அதிகம் விரும்பும் நபராக நான் இருக்கிரேன்.கதைகளை இப்போதுதான் படிக்கிறேன்..நல்ல உணர்வை தருகின்றன...

நன்றி...தொடருங்கள்....

வாழ்த்துக்கள்.

ரஜின் said...

ஆ...சொல்ல மறந்துட்டேன்...அந்த பிக்சர் செலக்ஸன் சூப்பர்...சிச்சுவ்வேஷன்னுக்கு தகுந்த மாறி சரியா பொருந்துது....சமையல்கட்டுல உக்காந்து யோசிப்பீங்களோ????

நல்லா இருக்கு,,,,,

ஹுஸைனம்மா said...

என்னங்க, எல்லாரும் இப்படி ‘ஹை, ஜாலி’ங்கிற ரேஞ்சிலயே கமெண்டிருக்காங்க? சே, இங்கிதமேயில்லை யாருக்கும். என் கமெண்ட் பாருங்க:

//புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி //
பிழைச்சீங்க... இல்லை இல்லை நாங்க பிழைச்சோம்!! ஹுர்ர்ர்ர்ரே!! ;-)))

அன்னு said...

இதெல்லாம் ரொம்ப ஓவர் திரையிலதான் ரெண்டரை மணி நேரத்தை இழுக்கணும்னு சென்டிமெண்ட்டா ஃபோட்டோ, தூங்காத கண்ணுன்னு இழுப்பாங்க... நீங்க என்னடான்னா அதைவிட இழுக்கறீங்க...ஏதாவது போட்டியில இருக்கறீங்களா எவ்ளோ தூரம் இழுக்கறதுன்னு? யம்மா தாயீ மெகா தொடர் மாதிரி யெல்லாம் இழுக்காதீங்க...சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டு அடுத்த கதைய ஆரம்பிப்பீங்களா...அத வுட்டுட்டு...

சுசி said...

முடிய போதேன்னு கவலையா இருந்தாலும் இத்தனை நாள் தொடரும் போட்ட கோவமும் இருக்கு புவனா.

அடுத்த கதை மொத்தமா எழுதிட்டு பப்ளிஷ் பண்ணிடுங்க.. என் தாழ்மையான வேண்டுகோள்.

இல்லேன்னா படிக்காம இருந்துட்டு முற்றும் பார்த்ததும்தான் படிப்பேன்.

:))

Arul Senapathi said...

As usual awesome.

So, is it ending with 25th episode?

Kalakkuringa!!!

பத்மநாபன் said...

கடைசி வரைக்கும் திருப்பம் திருப்பமாக வந்த, கதை கடைசிப்பகுதிக்கும் ஒரு சஸ்பென்ஸ் வைத்தது அருமை.. ரசிகர்களின் ஏகோபித்த ( கோபித்த அல்ல ) ஆதரவில் இன்னமும் தொடரலாம்..

சரி..சீரியஸ் ..25 வரைக்கும் போயிடுங்க ..

அப்பாதுரை said...

மூச்சு விடாம எழுதுறீங்களே?
(பதினஞ்சு கூட இன்னும் படிச்சு முடிக்கலே. அதுக்குள்ளே முடியப் போகுதே)

வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

எல்கே உங்க தீவிர வாசகர்.
>>>புண்ணியமா போகும் சீக்கிரம் முடி

அப்பாதுரை said...

ஏதேது... புதன் கிழமை முடிச்சுறதா பிராமிஸ் பண்ண வச்சுருவாங்க போலிருக்கே உங்களை?
>>>அப்படா தொடர் முடிய போகுது
>>>mudiya porathaa romba nantri thangame

கமல் said...

அருமை நண்பரே பாசத்தின் போராட்டம் அதில் கதை நகரும் விதம் அருமை...

நன்றி தொடர்கிறேன்...

LK said...

//எல்கே உங்க தீவிர வாசகர்.
>>>புண்ணியமா போகும் சீக்கிரம் முடி ///

hihi

என்னது நானு யாரா? said...

எல்லா பகுதிகளும் அருமையா எழுதி இருக்கீங்க! ஒரு மன நிறைவு வருது! கதை முடிவை ஆவளுடன் எதிர் பார்க்கிறேன். அதில சூர்யாவிற்கு சரியான சூடுக் கொடுக்கப்படணும்னு எதிர்பார்க்கிறேன்.

அட இன்னைக்குத் தானே புதன் கிழமை! அப்போ இன்னைக்கா முடிக்க போறீங்க! ரொம்ப நல்லது. படிக்க ஆவலா காத்திருக்கேன்.

ஈரோடு தங்கதுரை said...

அப்பாவி யார் என்று பார்க்கத்தான் உங்க பக்கம் வந்தேன் ... ! உங்க கதைய படிப்பவர்கள் சொன்ன கமெண்ட்ஸ் படித்தவுடனே எனக்கு புரிந்து விட்டது...... உங்க கதை ஆகா ... பேஸ் பேஸ்.. பிரமாதம், சூப்பர்,அருமை, என்று இருக்கும் ...!

நான் முழுசா படித்துவிட்டு சொல்கிறேன்.

கோவை2தில்லி said...

புதன்கிழமைக்காக சின்சியரா வெயிட்டிங்!!!!!!!

மார்கண்டேயன் said...

//குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்//

நாட்டாம, தீர்ப்ப மாத்திச் சொல்லு . . .

இருபத்தி நாலு பகுதியெல்லாம் ஒத்துக்க மாட்டோம்

கண்டிப்பா, இருபத்தஞ்சி பகுதி வந்தே தீரனும்,

நல்ல வேள இட்லி பார்சல்லருந்து தப்பிச்சாச்சு

அப்பாவி தங்கமணி said...

Hello All,

I will reply to all your comments tomorrow, SORRY........

I will post the last part now....

Thanks for reading it thru...

Thanks,
Appavi

அப்பாவி தங்கமணி said...

@ மகி - ஆமாம் மகி... நன்றி

@ Krishnaveni - சரிங்க வேணி... தேங்க்ஸ்

@ Nithu Bala - ஹா ஹா... நெஜமாவா சொல்றீங்க நித்து... எல்லாரும் சேந்து உங்கள தொரத்த போறாங்க இப்போ.... ஜஸ்ட் கிட்டிங்....தேங்க்ஸ் அ லாட்...

அப்பாவி தங்கமணி said...

@ LK - கதை முடிச்சாவெல்லாம் புண்ணியம்னு எனக்கும் யாருமே சொல்லி தரலியே... ஹா அஹ

@ ஸ்ரீராம் - ஹா ஹா... எல்லாம் காரணமாத்தான் சீக்கரம் முடிச்சேங்க.... அது என்னனு என்னோட ப்ளாக்ல நாளைக்கு பாருங்க... இங்கயும் சஸ்பென்ஸ்... ஹா ஹா

@ எஸ்.கே - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஹா ஹா... ரெம்ப சந்தோச பட வேண்டாம்... சீக்கரம் இன்னொன்னு ஆரம்பிக்கறேன் இருங்க...

@ siva - //நாங்க உங்கள்கு சில்வர் ஜூப்லி கொண்டலாம்னு இருக்கோம் ..ப்ளீஸ் தொடரை நிறுத்ததீங்க//
என்ன கிண்டலா? இருங்க பார்சல் அனுப்பறேன்...

@ கோவை ஆவி - மத்த படங்களும் நெறைய வாட்டி பாத்திருக்கேன்... ha ha

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஜிமெயில் / hotmail எல்லாம் இல்லையா...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ nimoshini - தேங்க்ஸ் நிமொஷினி... முதல் வருகைக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - தேங்க்ஸ்ங்க

@ vinu - ஹா ஹா ஹ... black ல சினிமா பாத்தே ரெம்ப பழக்கம் போல இருக்கே... ஹா ஹா... எனக்காக கிழமை எல்லாம் மாத்தறேன்னு சொன்னதுக்கு நன்றி... ஹா ஹா

@ அமைதிச்சாரல் - ஹா ஹா... வேணும்னே தான் 24 ல முடிச்சேன்... எல்லாரும் 25 இழுப்பேன்னு நெனச்சுருபீங்க... அதையே நான் செஞ்சா என்ன த்ரில் இருக்கு சொல்லுங்க.. ஒகே ஒகே... நோ டென்ஷன்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - நம்பிட்டோம்.... ஹா ஹா

@ சௌந்தர் - ஆமாங்க நன்றி

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ஹா ஹா... ஜாலியாவா? எழுத்திட்டா போச்சு... நன்றிங்க

@ Abhi - நன்றிங்க

@ ரஜின் - ஹா ஹா... சரிங்க நீங்க அனுப்பறதே அப்படியே போட்டுட்டேன்... எண்டு கார்டுல உங்க பேரு போட முயற்சி செஞ்சேன்... பிளாக்கர் பில்ட்டர் பண்ணிடுச்சு... ஹா ஹா... மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ ரஜின் - சமையல் கட்டுல உக்காந்து இதெல்லாம் யோசிச்சா அவ்ளோ தான் கதை... சாப்பிட வேண்டாமா நாங்க... சும்மாவே ததிங்கினதோம் தான்... இதுல... ஹா ஹா... நன்றிங்க

@ஹுஸைனம்மா - இதுக்கு அவங்களே பரவால்ல.... இருங்க உங்களுக்கு பார்சல் அனுப்பறேன்... ஹா ஹா

@ அன்னு - சரிங்க மேடம்.. இதோ முடிச்சுட்டேன்...

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - ஆஹா... கோபம் எல்லாம் ஒடம்புக்கு நல்லதில்லைங்க அம்மணி... ஹா ஹா... மொத்தமா பப்ளிஷ் பண்ணினா அப்புறம் என் பொழப்பு... ஹா ஹா... இந்த முடிவெல்லாம் ரெம்ப தப்பு, ஆமா சொல்லிட்டேன்... ஹா ஹா... திட்டிட்டே கடைசி வரை விடமா படிச்சதுக்கு நன்றிங்கோ

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்

@ பத்மநாபன் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க... ஹா ஹா.... ஆமாங்க ஒரே பாச மழையாத்தான் இருக்கு... ஹா ஹா

@ கமல் - ரெம்ப நன்றிங்க

@ LK - ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - ஆஹா... சூர்யா மேல என்னங்க கோபம் உங்களுக்கு... ஹா ஹா... பாவம்... பொழச்சு போகட்டும்... நன்றிங்க

@ ஈரோடு தங்கதுரை - அப்பாவி நானே தானுங்க... ஹா ஹா... நன்றிங்க

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்ங்க

Post a Comment