Wednesday, October 27, 2010

அதே கண்கள்... (இறுதி பகுதி)இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

கார் சற்று ஓட தொடங்கியதும் "நான் நான்..." என சுமேதா ஏதோ கூற தடுமாற

"நீ...நீ... எதுவும் பேச வேண்டாம்... வீட்டுல போய் பேசிக்கலாம்" என சூர்யா அவள் தவிப்பை ரசித்து சிரித்து கொண்டே கூறினான்

"நான்... வீட்டுக்கு வர்ல..." என்றாள் சுமேதா கோபமாய்

"சரி... வீட்டுக்கு வேண்டாம்... வேற என்ன போலாம் சொல்லு... எங்கயாச்சும் வெளியூர் போலாமா?" என்றான் மென்மையாய்  அவள்  கைகளை  அழுத்தியவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "ஏன்... என்னை கொல பண்ண வேற வெளியூர்ல புதுசா எதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?" கோபம்  சற்றும் குறையாத குரலில் சுமேதா கேட்க,  அப்படி  ஒரு கேள்வியை  எதிர்பாராத  சூர்யா ஒரு கணம் செயல்பட இயலாதவன் போல் காரை அவசரமாய் நிறுத்தினான்

அந்த அதிர்வில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள தன்னையும் அறியாமல் அவன் கையை பற்றியவள் அவசரமாய் விலகினாள்

சூர்யா இன்னும் அவள் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளி வர இயலாமல் அவளையே வேதனையோடு பார்த்தான்

அவன் கண்களில் தெரிந்த வேதனை தன்னை அசைத்த போதும் அதை தன் கண்களில் அவன் கண்டுகொள்வானோ என பயந்தவளாய் முகத்தை வேறு புறம் திருப்பினாள் சுமேதா

அதற்கு மேல் வீட்டிற்கு வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. கார் நின்றதும் தான், வீட்டிற்கு வந்திருப்பதை உணர்ந்த சுமேதா "நான்... போகணும்..." என்றாள் அவன் முகத்தை கூட பாராமல்

"போ...நான் தடுக்கல... அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும் சுமி" என அவன் குரல் நிதானமாய் ஒலித்தது

"எனக்கு... எதுவும் கேக்க வேண்டாம்..." என சுமேதா வெளியே கேட்  பக்கம்  நடந்தாள்

அவள் முன் வந்து மறித்தவன் "உள்ள வா.... உன்கிட்ட பேசணும் ப்ளீஸ்..." என்றான் அவள் கண்களை நேராய் பார்த்து

"வழி விடுங்க நான் போகணும்" என அவனை மீறி செல்ல முயன்றாள்

சட்டென அவள் கைகளை தன் கரங்களுக்குள் சிறை பிடித்தான் சூர்யா

அவன் தொடுகை தன்னை பலமிழக்க செய்வதை உணர்ந்தவள் அவன் பிடியில் இருந்து விடுவித்து கொள்ள போராடினாள்

என்ன செய்தாலும் உன்னை விடுவதாய் இல்லை என முடிவு செய்தவன் போல் சூர்யா இன்னும் தன் பிடியை இறுக்கினான்

இயலாமை கோபத்தை கிளற, அவன் பிடியை தளர செய்ய ஒரே ஆயுதமாய் தன் பேச்சை பயன்படுத்த எண்ணினாள் சுமேதா

"இப்ப என்ன? யாரும் இல்லாதப்ப என்னை கொன்னு எங்கயாச்சும் கொண்டு போய் போட போறீங்களா? உங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். நானே எங்கயாச்சும் போய் விழுந்துடறேன்" என்றாள்

அவள் வார்த்தை மனதை வேதனையுற செய்த போதும் தன்னை பலவீனபடுத்தி தன்னை விட்டு விலகவே அப்படி செய்கிறாள் என்பதை உணர்ந்த சூர்யா பேச்சை மாற்றும் எண்ணமாய்

"தனியா கொல தான் செய்யணும்னு இல்ல சுமி... இன்னும்...." என மையலாய் புன்னகையுடன் நோக்கியவனை இடைமறித்தாள்

"போதும் நிறுத்துங்க... விடுங்க நான் போகணும்" என்றாள் தீர்மானமாய்

"நீயே வீட்டுக்குள்ள வர்றயா? இல்ல நான் தூக்கிட்டு போகணுமா?" என தான் அதற்கும் தயார் என்பது போல் அவளை தூக்க தயாராவது போல் பாவனையுடன் நெருங்கினான் சூர்யா சிறு முறுவலோடு

அவன் கோபத்தை கூட தாங்கி நின்று பழகியவள் இப்போது அவன் நெருக்கத்தை தாங்க இயலாமல் "விடுங்க வரேன்... "  என்றாள்

அவளை விடுவிக்க மனமில்லாத போதும் அவள் பிடிவாதத்தை உணந்தவனாய் விலகி நின்றான்

சுமி எதுவும் பேசாமல் வீட்டினுள் சென்றாள்
 
உள்ளே சென்றதுமே "நான் தான் டைவர்ஸ் பேப்பர்ஸ் எல்லாம் சைன் பண்ணிட்டனே... இன்னும் என்ன வேணும்?" என எங்கோ பார்த்து கொண்டு சுமேதா கேட்க

"நீ தான் வேணும்..." என்ற சூர்யா அதற்கு மேல் விலகி நிற்க இயலாமல்  அருகில் சென்று அவள்  முகத்தை கைகளில் ஏந்தினான்

அவன் பார்வையை நேரே சந்திக்க இயலாமல் அவனை விட்டு விலகியவள்

"நான்... நான்... இங்க இருக்க மாட்டேன்... நான் உங்களுக்கு தேவை இல்ல" என்றவளின் குரலில் கோபம் மிகுந்து இருந்ததை உணர்ந்தான் சூர்யா

"சுமி ப்ளீஸ்... அப்படி சொல்லாத... நான் பண்ணினது தப்பு தான்... மன்னிக்கவே முடியாத தப்பு தான்... ஆனா அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாம் சுமி..." என உணர்ச்சி மேலிட கூற

"இதுவும் உங்க டிராமால ஒரு பகுதியா...?" என இரக்கமில்லாமல் அவள் குரல் வெளிப்பட்டது

சற்று நேரம் அவன் எதுவும் பேசவில்லை. திரும்பி அவனை பார்த்தவள் அவன் துயரம் நிறைந்த முகம் மனதை பிசைய பார்வையை விலக்கினாள்

"சுமி... உன் கோபம் நியாமானது தான்... அதுக்கு காலம் பூரா நான் மன்னிப்பு கேக்க தயார். ஆனா எனக்கு நீ வேணும்" என அவள் அருகில் வர அவனருகில் தன் உறுதி தளர்வதை உணர்ந்தவள் விலகி சென்றாள்

"சுமி...நான் சொல்ல வேண்டியத சொல்லி முடிச்சுடறேன்... அதுக்கு மேல உன் விருப்பம்" என அவன் நிறுத்த அவள் பதிலேதும் பேசாமல் நின்றாள்

மீண்டும் அவனே தொடர்ந்தான் "ஆரம்பத்துல அனிதாவோட இந்த நிலைமைக்கு காரணமான அந்த ரெண்டு பேரை கண்டுபிடிக்க முடியாம போனப்ப, இதை ஆரம்பிச்சு வெச்சது நீ தான்னு அது ஒண்ணு தான் மனசுல இருந்தது. நான் பொய் சொல்ல விரும்பல... உன்னோட போட்டோவ தரகர் கொண்டு வந்தப்ப கல்யாணம் நிச்சியம் மட்டும் பண்ணி அப்புறம் விலகிடனும்... அப்படி தான் உன்னை பழி வாங்கணும்னு மட்டும் தான் எண்ணம் இருந்தது. ஆனா உன்னோட பழக ஆரம்பிச்சப்புறம் என்னையும் அறியாம எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்னு தோண ஆரம்பிச்சது" என்றவனை நம்பாமல் ஏறிட்டாள்

"ஆனா அப்போ அதை வாய் விட்டு சொல்லவோ மனசால ஏத்துக்கவோ முடியல சுமி... உன்மேல என் கவனம் பதிய பதிய என்னை இப்படி அடிமைப்படுத்தறேனு அதுக்கும் உன் மேல கோவம் தான் வந்தது. ஆனாலும் கல்யாணத்த நிறுத்த மனசு வரல. அனிதாவோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போச்சு. நம்ம கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அனிதாவ பாக்க போனப்ப அவ என்னை கூட அடையாளம் தெரியாம கத்தினது தாங்க முடியல... அந்த கோபம் மொத்தமா உன்மேல தான் திரும்புச்சு... அப்ப தான் நான்...." என சொல்ல வந்ததை சொல்ல இயலாமல் சூர்யா நிறுத்த

"என்னை கொல்லனும்னு முடிவு பண்ணினீங்களா?" என வேதனை நிறைந்த குரலில் சுமேதா அவனை நேருக்கு நேராய் பார்த்து கேட்டாள்

அவளின் வேதனை நிறைந்த குரலும் கலங்கிய கண்களும் அவன் குற்ற உணர்வை மேலும் கூட்ட கட்டுப்படுத்த இயலாமல் அவள் கைகளை பற்றி தன் நெஞ்சோடு வைத்து கொண்டான் சூர்யா

"சுமி... ப்ளீஸ்... நான்...  நான் ஒரு ஒரு நாளும் நெனச்சு நெனைச்சு என்னையே வெறுக்கற ஒரு விஷயம் அது"

அவன் சொன்ன  சமாதானத்தை  ஏற்க  இயலாதவள்  போல்  அவன்  கையை  உதறியவள் "எப்படி சூர்யா? நெஜமாவே உங்க மனசுல நான் சின்ன பாதிப்பயாச்சும் ஏற்படுத்தி இருந்தா என்னை... என்னை... அந்த நடு காட்டுல... " என்றவள் அதற்கு மேல பேச இயலாமல் அந்த பயங்கரமான நினைவில் தடுமாற

"சுமி..." என பதறியபடியே விரைந்து அவளை தன்னோடு அணைத்தான்

"நோ... என்னை தொடாதீங்க" என விலகினாள் சுமேதா

அவள் விலகியது பொறுக்காமல் "ப்ளீஸ்டா... சாரி சுமி...ப்ளீஸ்... சத்தியமா சொல்றேன்... அதை நெனச்சு உன்னை விட அதிகமா வேதனை படறவன் நான் தான் சுமி..." என தன்னிலையை அவளுக்கு புரிய வைக்க முயன்றான்

ஆனாலும் சற்றும் சமாதானமாகாத சுமேதா "இதை நான் நம்பனுமா?"  என்பது போல் ஒரு பார்வை பார்க்க

"நான் சொல்ல வந்தத சொல்லி முடிச்சுடறேன் சுமி... அந்த நிமிச கோபத்துல வேகத்துல உன்னை அப்படி தனியா விட்டுட்டு வந்துட்டு உனக்கு எதுவும் ஆகி இருக்க கூடாதுன்னு என்னோட இன்னொரு மனசு ஏங்கினது எனக்கு தான் தெரியும் சுமி... அந்த நாள் எனக்குள்ள இருந்த மிருகம் என்னை பலவீனமாக்கிடுச்சு... "

"ஒருவேள நான் செந்திருந்தா..." என சுமேதா  கேட்க ஒருகணமும் தாமதியாமல் "நான் அதுக்கப்புறம் உயிரோட இருந்துருப்பேனு தோணல" என்றான் சூர்யா

"ஹும்...அதான் திரும்பி வந்ததும் அவ்ளோ நல்லா பாத்துகிட்டீங்களா?" என ஏளனம் போல் கேட்டாள்

ஏளனத்தையும் மீறி அவள் குரலில் இருந்த வேதனையை உணர்ந்தவன் தன் மனதை மறைக்காமல் எடுத்துரைத்து அவள் வேதனையை போக்க எண்ணினான்

"திரும்பி வந்தப்ப மொதல்ல உன்னை face பண்ற தைரியம் எனக்கு இருக்கல சுமி... உனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு புரிஞ்சப்ப நீ இனி என்னை முழு மனசோட நேசிக்க மாட்டேன்னு மனசுல ஒரு எண்ணம் வந்தது. என்னால அதை தாங்க முடியல...

உன்னை இனி இழந்துடுவேங்கர எண்ணமே என்னை பைத்தியமாக்கிடுச்சு. எப்படி என்னை உனக்கு புரிய வெக்கறதுன்னு புரியாம தவிச்சுட்டேன் சுமி. எல்லா உண்மையும் சொன்னா அந்த நிமிசமே நீ என்னை விட்டு போய்டுவயோனு பயம்

நீ கணேஷ்கிட்ட பேச முயற்சி பண்ணினப்ப, அருணை தேடி போனப்பவெல்லாம் நீ என்னை விட்டு விலகறயோனு... அதான் கோபமா வெளிப்பட்டது சுமி... சத்தியமா அதான் உண்மைடா... ப்ளீஸ் என்னை நம்பும்மா ப்ளீஸ்..." என அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன்

"நீ அனிதாவ பத்தி தெரிஞ்சுக்க தான் அருணை தேடினேனு சொன்னப்ப அனிதாவ பாக்க போகனுங்கற அந்த பதட்டத்துலயும் என் மனசுல ஏற்பட்ட சந்தோஷம் உனக்கு புரியாது சுமி..."

சட்டென அவன் கையை விலக்கியவள் "அப்போ... என்னை அருண் கூட வேற விதமா தப்பாவும் யோசிச்சு இருக்கீங்க இல்லையா?" என கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு சுமேதா கேட்க

"ஐயோ... இல்லடா... நான் பண்ற கொடுமை தாங்காம... ஒருவேள..." என சூர்யா தடுமாற

"அவன்கிட்ட போய்டுவேன்னு நெனச்சீங்க இல்ல?" என அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்,  தன்னை எப்படி அவன் அவ்வாறு நினைக்கலாம் என தாங்காமல்

"ப்ளீஸ் சுமி...அப்படி பாக்காத...  என்னோட நெலமைல இருந்து ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு... ஏன் நீ நெனைக்கலையா? அனிதா உங்க காதலியான்னு கேக்கலையா? என் மேல உள்ள அன்புனால தானே அப்படி கேட்ட... ப்ளீஸ்டா என்னை நம்பு... ஐ லவ் யு சுமி... எனக்கு நீ வேணும்மா" என்றவனின் குரலில் இருந்த அன்பும் காதலும் அவள் பிடிவாதத்தை தகர்க்க அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவள் கண்ணீர் அணை மீறியது

அவள் அழுவதை காண சகியாமல் அவளை தன்னோடு அணைத்தவன் "ப்ளீஸ் சுமி... அழாதடா ப்ளீஸ்... ப்ளீஸ்...ப்ளீஸ்..." என சூர்யா அவளை  சமாதானப்படுத்த  முயல  அவள் அழுகை மேலும் வலுத்ததே ஒழிய குறையவில்லை

"எ...என்னால... தா... தாங்க முடியல.... " என கதறினாள். துக்கம் தீரும் வரை அழுது ஓயட்டும், இனி எப்போதும் அவள் கண்ணில் நீர் வர தான் காரணமாய் இருக்க கூடாது என உறுதி பூண்டவன் போல் ஆதரவாய் அவளை அணைத்து நின்றான்

கதறல் தேம்பலாகி கேவலில் தொடங்கி விசும்பலில் வந்து நின்றது

"என்னால இன்னும் நடந்ததெல்லாம் நெனச்சா, தாங்க முடியல சூர்யா" என அவள் விசும்ப

"சாரிடா ப்ளீஸ்... நடந்த எதையாச்சும் மாத்த முடியும்னா அதுக்காக என்ன விலை குடுக்கவும் நான் தயார் சுமி... என்னை நம்புமா ப்ளீஸ்..." என ஆதரவாய் அவளை தன் மார்போடு அணைத்தான்

மெல்ல அவளை விலக்கி முகத்தை பார்த்தவன் அவளின் அழுது சிவந்த கண்களில் இதழ் பதித்தான். மீண்டும் தன்னோடு அணைத்து கொண்டான்

தனக்கும் அதுவே சம்மதம் என்பது போல் அவன் அணைப்பில் அசையாமல் நின்றாள் சுமேதா

அதற்கு பின் எதுவும் பேசக்கூட வேண்டியதில்லை என்பது போல் இருவரும் மௌனமாய் இருந்தனர்

சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல செய்திகளை சொல்வதை இருவரும் அந்த கணம் அனுபவப்பூர்வமாய் உணர்ந்து நின்றனர்

திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் "அனிதாவ பத்தி அத்தை கூட என்கிட்ட எதுவும் பேசினதில்லயே... ஏன்?" என கேட்க

"அவள பத்தி பேசினாலே நான் ரெம்ப அப்செட் ஆய்டுவேன், சரியா சாப்டாம தூங்காம இருப்பேன்னு அந்த பேச்சே வீட்டுல இருக்காது சுமி. அம்மாவுக்கும் அவ மேல உயிர். அவளுக்கு எங்க யாரையும் அடையாளம் தெரியாம எங்களை பாத்தாலே பயந்து கத்தினப்ப அம்மாவால தாங்க முடியல. அவளுக்கு குணமாகற வரை பாக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என வருத்தம் மேலிட கூற

"என்னாலையே அவளை அப்படி பாக்க முடியல... சாரிப்பா... " என சுமேதா நிஜமான வருத்ததோடு கூற

"இனி பழச பத்தி பேச வேண்டாம் சுமி... அனிதா குணமாகி வர்றப்ப உன்னை அவ அண்ணியா பத்தா சந்தோசத்துல குதிக்க போறா பாரேன்" என தங்கையின் அன்பை நினைவு கூர்ந்தான்

"ம்... நானும் அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்" என்றாள் சுமேதா

"சுமி... அனிதா மனசுல அருணோட பிம்பம் அப்படி பதிஞ்சு போய் இருக்குன்னா அதுக்கு என்ன காரணம்னு உன்னால யூகிக்க முடியுதா?" என சூர்யா அர்த்தத்துடன் அவளை பார்க்க

"அவ மனசுல அருண் முக்கியமான எடத்துல இருக்கான்னு தோணுது. அருணும் அனிதா மாதிரியே சின்ன வயசுலேயே பெத்தவங்கள இழந்து அன்புக்கு ஏங்கினவன்...அதான் நான் நட்பா காட்டின அன்ப கூட..." என தயக்கமாய் நிறுத்த

"எனக்கு புரியுது சுமி... ஆனா நாம நேத்து பாத்த அருண் பழைய அருண் இல்ல. நல்ல மாற்றம் தெரியுது... ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்கும்னா அருண் தான் இந்த வீட்டு மாப்பிள்ளை" என மகிழ்வோடு கூற

"எனக்கும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தப்ப அப்படிதாங்க தோணுச்சு" என தானும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள் சுமேதா

"ஆஹா... இதான் made for each other போல இருக்கே" என அவன் சிரிக்க அவளும் அவன் சிரிப்பில் கலந்தாள்

அதற்கு பின் வெகு நேரம் இருவரும் ஏதேதோ பேசி ஒருவர் மேல் மற்றவர் கொண்ட அன்பை ஏதோ ஒரு விதமாய் பறைசாற்றி கொண்டிருந்தனர்

"சுமி... நான் விலகி விலகி போனப்பவெல்லாம் என் கோபத்த கூட பொருட்படுத்தாம இருந்த நீ... இப்ப... எப்படி சுமி உனக்கு மனசு வந்தது... மொத்தமா போறேன்னு எழுதி வெச்சுட்டு போக... ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு அதை படிச்சப்ப" என அவன் நெகிழ

"நீங்க கோபபட்டப்ப அதுக்கு என்ன காரணம்னு தேடுச்சு மனசு. ஆனா அமைதியானப்ப பயம் வந்துடுச்சு. ஒருவேள போ வெளியனு சொல்லிடுவீங்களோனு பயம். அதை தாங்கற சக்தி எனக்கில்ல. அதான் நானே விலகிடனும்னு... சாரிங்க... அந்த நிமிச வேகத்துல அப்படி எழுதிட்டேன்" என கூற அவள் குரலில் தெறித்த வேதனை தாங்காமல் பேச்சை மாற்றும் எண்ணத்துடன்

"அது சரி... உங்க அம்மாகிட்ட ஒரு வாரம் அங்க தங்க போறதா சொன்னயாமே... அப்புறம் என்ன செய்யறதா உத்தேசம் இருந்தது மேடம்க்கு" என கேலி போல் கேட்க

"ம்... உண்மைய சொல்லணும்னா... அதுக்குள்ள நீங்களே வந்து கூப்ட்டுட்டு போய்டுவீங்கன்னு ஒரு பேராசை... உள்மனசுல..." என்றவளின் குரலில் தன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் காதலும் வெளிப்பட

"அது பேராசை இல்லடா கண்மணி... அன்பு மேல உள்ள நம்பிக்கை" என அவள் நெற்றியில் இதழ் பதித்தான் சூர்யா

திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் சுமேதா "ஐயோ... அத்த மாமா வர்ற நேரமாச்சே... " என அவனிடமிருந்து தன்னை விலக்கி கொள்ள முயல

"ப்ளீஸ் சுமி... என்னை விடு நகராத" என அணைத்தான், ஒருகணமும் அவளை விட்டு பிரிய மனமில்லாதவன் போல்

"அத்த மாமா... " என அவள் தொடங்க

"அவங்க இன்னைக்கி வரல..." என சூர்யா கூற, அவள் தலை உயர்த்தி கேள்வியாய் நோக்க அவன் விஷமமாய் சிரித்தான்

"பொய் சொன்னீங்களா?" என பொய் கோபம் காட்ட

"அது தான் நான் உன்கிட்ட சொல்ற / சொன்ன கடைசி பொய்... இனி வாழ்நாள் முழுக்க உன்கிட்ட உண்மை தவிர வேற எதுவும் பேச மாட்டேன்... இது என் காதல் தேவதை உன் மீது ஆணை" என ஏதோ வசனம் போல் சூர்யா பேச சுமேதா வாய் விட்டு சிரித்தாள்

அவள் சிரிப்பை மனதார ரசித்தவன் "இந்த சிரிப்ப பாத்து எவ்ளோ நாளாச்சு சுமி... இனி எப்பவும் நீ சிரிச்சுட்டே இருக்கணும்...." என அன்பு ததும்ப கூற

"எப்பவும் சிரிச்சுட்டே இருந்தா அதுக்கு பேரு பைத்தியம்" என அவள் கேலி செய்ய

"அது தெரிஞ்சுது தானே..." என அவனும் வம்பு செய்ய

"என்னது?" என அவள் செல்லமாய் அடிக்க, அந்த மெல்லிய கைகளை பற்றி அவள் விரல்களில் இதழ் பதித்தான் சூர்யா

தன் சிவந்த முகத்தை மறைக்க அவன் மார்பில் முகம் புதைத்தாள் சுமேதா

ஊடலின் ஆதாரம்
உரிமையின் ஸ்வீகாரம்
உரிமையற்ற உறவுகளில்
ஊடல் ஊடுவதில்லை

ஊடலற்ற காதல்
உயிரற்ற உடல்
ஊடலின் பின்னானநேசம்
உயிர்நிறைக்கும் சுவாசம்

உயிர்நிறைக்கும் சுவாசமாய்
உள்ளம்புதையும் நேசமாய்
உன்னில்என்றும் கலந்திருப்பேன்
உயிராய்என்னில் சுமந்திருப்பேன்!!!

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

முற்றும்)

...

63 பேரு சொல்லி இருக்காக:

அன்னு said...

நண்பேண்டா(டி)...!!!
:))

Porkodi (பொற்கொடி) said...

avvvvvvvvvvvvvvv!!!!!!

Porkodi (பொற்கொடி) said...

ஒரு வழியா கதை முடிஞ்சதா...! :) இந்த அழகுல என்னை ஒரு 10 எபிசோட் நிம்மதியா எழுத வுடலை!!! நான் சென்ஸ்.

சரி, கதை பத்தி சொல்லணும்னா, இதை எழுத அரம்பிக்கும் போது நீங்க எந்த அளவு யோசிச்சு வெச்சுருந்தீங்க தெரியல, ஆனா வழக்கமான ஒரு ஸ்டோரிலைன்ல உங்க எழுத்தை முயற்சி பண்ணலாம்ங்கறது தைரியமான மேட்டர் தான். :) எனக்கு கதைன்னு பெரிசா பிடிக்கல, ஆனா உங்க எழுத்துல படிக்க வெக்கற ஒரு 'இது' இருக்கு. ;) கதை ஏன் பிடிக்கலன்னா, ரொம்ப க்ளிஷே, சினிமாத்தனமா இருந்தது. அவங்க சீரியசா பேசும் போது கூட எனக்கு சிரிப்பா வந்துது.. :P அது தான் உங்க இன்டென்ஷனா இருக்கலாம்! அடுத்த‌ க‌தை உங்க‌ எழுத்து ந‌ட‌லை இன்னும் எதார்த்த‌மாவோ இல்ல‌ க்ரிஸ்பாவோ எதிர் பாத்துட்டு இருக்கேன்! இவ்ளோ சின்சிய‌ரா 24 எபிசோட் எழுதுன‌ உங்க‌ பொறுமை சான்சே இல்ல‌.

Porkodi (பொற்கொடி) said...

இன்னொரு விஷயம், ட்விஸ்ட் வெக்கலாம், அதுக்காக மெனக்கெட்டு இத்தனை கேரக்டர் உருவாக்கி எபிசோடுக்கு எபிசோட் இவ்ளோ இவிஸ்ட் தேவையில்லங்கறது என்னோட தாழ்மையான அபிப்ராயம். ஊருக்கு தான் உபதேசம், என்னை எல்லாம் ஃபாலோ பண்ண சொல்லக்கூதாது ஆமா!

நசரேயன் said...

//அவங்க சீரியசா பேசும் போது கூட எனக்கு சிரிப்பா
வந்துது.//

அப்ப இது சிரிப்பு கதை இல்லையா ?

நசரேயன் said...

//சின்சிய‌ரா 24 எபிசோட் எழுதுன‌ உங்க‌ பொறுமை
சான்சே இல்ல‌//

கண்டிப்பா

நசரேயன் said...

சொந்தமா பின்னூட்டம் போட நேரமில்லன்னு மேல நகல் எடுத்து போட்டு இருக்கேன்

Arul Senapathi said...

Even though expected, awesome ending.

Very nicely narrated from the beginning.

You have a style to write. Keep it up.

thanks

Gayathri said...

hai akka jollya mudichutenga super thanks a lot..sekram adutha story start pannunga

Super nalla irundhuthu adhe kangal

supero super

தக்குடுபாண்டி said...

ssssssapaadi! oruvaliyaa mudinjathudaa saami!!...:) vanthavaalukku ellaam vote of thanks sollarthukku namba keedi vanthurukkaanga poolarukku!!,,,:)

அமைதிச்சாரல் said...

கதையும்,முடிவும் வழக்கமானதா இருந்தாலும்.. உங்க நடையில் இருக்கிற ஒரு இது!!.. அது எதுன்னு தெரியல, தொடர்ந்து படிக்க வெச்சுடுச்சுப்பா :-)). சூப்பரேய்..

உங்க மைண்ட் வாய்சுக்கு லீவு கொடுத்து அனுப்பிட்டீங்களா.. காணவே காணோம் :-)

அன்னு said...

புவனா,

சொல்ல மறந்துட்டேன்... கதை முடிவை பார்த்தவுடனே, கதைய படிச்ச அதே கண்களெல்லாம் இப்படி ஆயிடுச்சு!!

http://bit.ly/biwM0T

:)))

Guna said...

Nice Bhuvana, 24 Episodes kalakkal-a ezhuthi mudichitinga.

Guna said...

நீங்க ஏன் ஒரு Mega Serialக்கு கதை எழுதக் கூடாது ?

No No, ithukku ellam unarchivasapattu aanandha kaneer ellam vida koodathu.

Krishnaveni said...

Nice story, very good flow, positive ending looks beautiful

Nithu Bala said...

:-) Lovely ending...thanks for the story..

Mrs.Menagasathia said...

nice story bhuvana...lovely ending!!

அலைகள் பாலா said...

ஐ ஜாலி கதைக்கு சுபம். ஆனா கிளைமாக்ஸ்ல போலிஸ் வரலயே.. ஹா ஹா ஹா

நல்லா இருக்கு. ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணிருக்கிங்க. வாழ்துக்கள்

siva said...

meeeeeeeeeeeeeethe first..yaaaaaahooooooooo

siva said...

erunga poi padichitu vare............

hey last part......happy devali .....

siva said...

entha muduv pidikka villai??

where is arun and anitha?

siva said...

naan cholavanthathai porkodi akka cholitanga

இன்னும் எதார்த்த‌மாவோ இல்ல‌ க்ரிஸ்பாவோ எதிர் பாத்துட்டு இருக்கேன்! இவ்ளோ சின்சிய‌ரா 24 எபிசோட் எழுதுன‌ உங்க‌ பொறுமை சான்சே இல்ல‌.
repeatu.....

siva said...

hai akka jollya mudichutenga super thanks a lot..sekram adutha story start pannunga
????//// y y y entha kola veri...

akka neenga poi rest eduthutu vaanga...

ஸ்ரீராம். said...

நிறைய ரமணி சந்திரன், லக்ஷ்மி கதை எல்லாம் படிசுருக்கீங்களோ? ஒரு பொண்ணை எவ்வளவு அழ விட்டு அன்புங்கற பேர்ல அவன் கிட்ட கெஞ்ச வச்சு...எப்படியோ சுபமா முடிச்சுட்டீங்க. உங்க நடை நல்லா இருந்தது. எல்லா எபிசோடுமே சுவாரஸ்யமா படிக்க வச்சீங்க. இன்னும் ஒரு பகுதி இழுத்து 25 பகுதி என்று இழுத்திருக்கக் கூடாதோ... மொத்தத்துல நல்லா இருந்தது அ.த.

LK said...

//நிறைய ரமணி சந்திரன், லக்ஷ்மி கதை எல்லாம் படிசுருக்கீங்களோ///

athe athe

அனாமிகா துவாரகன் said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…

ஒரு வழியா கதை முடிஞ்சதா...! :)

சரி, கதை பத்தி சொல்லணும்னா, இதை எழுத அரம்பிக்கும் போது நீங்க எந்த அளவு யோசிச்சு வெச்சுருந்தீங்க தெரியல, ஆனா வழக்கமான ஒரு ஸ்டோரிலைன்ல உங்க எழுத்தை முயற்சி பண்ணலாம்ங்கறது தைரியமான மேட்டர் தான். :) எனக்கு கதைன்னு பெரிசா பிடிக்கல, ஆனா உங்க எழுத்துல படிக்க வெக்கற ஒரு 'இது' இருக்கு. ;) கதை ஏன் பிடிக்கலன்னா, ரொம்ப க்ளிஷே, சினிமாத்தனமா இருந்தது. அவங்க சீரியசா பேசும் போது கூட எனக்கு சிரிப்பா வந்துது.. :P அது தான் உங்க இன்டென்ஷனா இருக்கலாம்! அடுத்த‌ க‌தை உங்க‌ எழுத்து ந‌ட‌லை இன்னும் எதார்த்த‌மாவோ இல்ல‌ க்ரிஸ்பாவோ எதிர் பாத்துட்டு இருக்கேன்! இவ்ளோ சின்சிய‌ரா 24 எபிசோட் எழுதுன‌ உங்க‌ பொறுமை சான்சே இல்ல‌.

இன்னொரு விஷயம், ட்விஸ்ட் வெக்கலாம், அதுக்காக மெனக்கெட்டு இத்தனை கேரக்டர் உருவாக்கி எபிசோடுக்கு எபிசோட் இவ்ளோ இவிஸ்ட் தேவையில்லங்கறது என்னோட தாழ்மையான அபிப்ராயம்.!//

REPEATTTTTTTTTTTUUUUU (Infinity Times)

சுசி said...

அழகா முடிச்சிருக்கிங்க.

பாராட்டுக்கள் புவனா.

வெறும்பய said...

இந்த கதை முடிஞ்சு போச்சு.. அடுத்த ப்ராஜெக்ட் என்ன.. மெகா சீரியலா...

மாதேவி said...

இனிய முடிவு.

BalajiVenkat said...

you didnt explained what happened in Ooty.... the kiling sequence.... atha vachu inumoru episode kooda potttu quarter century aduchirukalam....

im repeating porkodi's words once again...

to be frank i lost the enthu of the story after 20th part, as i got the storyline where it will travel next...

but I have to accept that, its actually a very good attempt and scored 100% for what ever you have done....

பத்மநாபன் said...

பாராட்டுக்கள்..கதை என்ன எழுதினாலும் அதில் எதாவது குறை இருக்கும் ..கதையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எழுத்து நடையை மட்டும் பார்த்த வகையில் உங்கள் உழைப்பு சலாம் போடவைக்கிறது..
வசன எழுத்து பாணி அழகாக வருகிறது..
கதையை அவ்வப்பொழுது யோசித்து எழுதியதும் ஒரு புதுமை..அதனால் தான் கரடியும் நிறைய பாத்திரங்களும் கதையை நிரப்பின. கால் சென்சுரி போடுவீர்கள் என எதிர்ப்பார்த்தேன் ..இதே பெரிய விஷயம்..நண்பர்கள் திட்டுவது போல் திட்டினாலும் கதையையும் படித்தே வந்துள்ளார்கள்.

கடைசியில் சுமியை சிரிக்கவைத்து சூர்யாவோடு சேர்த்தும் விட்டீர்கள்...
’உ’ கவிதை அருமை ....

வாழ்த்துக்கள்..

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ஹையா முடிஞ்சிடுச்சு. "டம்,டாமல்,டுமீல்" வெடி போட்டு கொண்டாடுறோம்.
அனிதாவ சீக்கிரம் குணப்படுத்திட்டு எங்களுக்கு தகவல் சொல்லுங்க பாவம் அந்த பொண்ணு.

Anonymous said...

appaada oru vazhiya kathai subhamaa mudichiteenga ..romba nantri bhuvana ..
unga thozhi sandhya

சௌந்தர் said...

இத்தனை தொடர் எழுதுவதற்கு தனி திறமை வேண்டும் வாழ்த்துக்கள் அனைத்து பகுதியும் நல்லா இருந்தது

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஐயோ! இனி மைன்ட் வாய்ஸ் மகாதேவி அட்டகாசம் தாங்கமுடியாதே.

kunthavai said...

வாழ்த்துக்கள் புவனா. உங்கள் எழுத்து ரசிக்கும் படியாக இருந்தது.

ஹுஸைனம்மா said...

அச்சச்சோ, அதுக்குள்ள கதை முடிஞ்சுடுச்சா? இனி இதைக் கொண்டாடி ஒரு பாயாசம் செய்ற பதிவு போடுவாங்களே!! எப்டி தப்பிக்க??

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

கதையை சுபமாய் முடித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா சொன்னது…

அச்சச்சோ, அதுக்குள்ள கதை முடிஞ்சுடுச்சா? இனி இதைக் கொண்டாடி ஒரு பாயாசம் செய்ற பதிவு போடுவாங்களே!! எப்டி தப்பிக்க?? //

ஹா....ஹா..ஹா....ஹா...ஹா.. ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

vinu said...

naaaaaaaaaaan potta commentai kaanavillaingooooooooooo

vinu said...

அதற்கும் தயார் என்பது போல் அவளை தூக்க தயாராவது போல் பாவனையுடன் நெருங்கினான் சூர்யா சிறு முறுவலோடு '''cuuuuuuuuuute notations paaaaaaaa,

i enjoyedddddddddddd a lotttttttt.

கோவை ஆவி said...

வாழ்த்துகள் புவனா!! நல்ல முயற்சி!!

எல்லா கேரக்டருக்கும் ஒரு குணாதிசயத்தை கொடுத்து அதை கடைசி வரை மெயின்டெயின் பண்ணியிருக்கீங்க!! ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு திருப்பத்தை வைத்து அருமையாக எழுதியிருந்தீர்கள்..

சில வாசகர்கள் முற்றும் போட்டதற்கு நன்றி தெரிவித்திருந்தாலும் ஒவ்வொரு பாகம் வெளியிட்ட பின்னும் அடுத்த பாகம் எப்போது வருமென்று வெயிட் பண்ணியதை யாராலும் மறுக்க முடியாது

அதிலும் சுமேதாவை ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதை நம்ப மனம் மறுக்கிறது. அவ்வளவு இயல்பான பாத்திரப் படைப்பு!! எளிய நடையில் கதை சொல்லிய விதமும் அருமை!! ( இடையில் இழையோடிய மெல்லிய சோகம் சலிப்பு தட்டியது என்னவோ உண்மை. ஆனால் அது கதையின் ஓட்டத்திற்கு தேவையான ஒன்று)

சீரியசான கதையில் மைண்ட் வாய்ஸை எதிர்பார்க்க கூடாது என்றாலும் அதுக்கு ஒரு கேரக்டர் கொடுத்திருக்கலாம் (ஹி ஹி ஹி ) அடுத்த கதை ஒரு நல்ல நகைச்சுவை கதையாக இருக்கட்டும் என்பது எங்கள் வேண்டுகோள்!!

அது சரி, பெரியதாக கமென்ட் போட்டதற்கு பரிசாக இட்லி அனுப்பிட மாட்டீங்களே!! (கேசரின்னா ஒகே!!)

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ரெம்ப சினிமா பாக்கறீங்க... ஹா ஹா.... தேங்க்ஸ்

@ பொற்கொடி - வாங்க அம்மணி... உங்க கதை எல்லாம் பெரிய லெவல் அம்மணி... நான் ஏதோ ஆளில்லாத கடைல டீ ஆத்திட்டு இருக்கேன்... கதை பத்தி உண்மையான விமர்சனம் குடுத்ததுக்கு ரெம்ப தேங்க்ஸ்... ஒரு follow up போஸ்ட் அப்புறம் போடறேன் in detail ... நன்றி மீண்டும்

@ நசரேயன் - இப்படி காபி பண்ணி போடற கமெண்ட் எல்லாம் செல்லாது சார்... சொந்த கமெண்ட் போடுங்க...

மோகன்ஜி said...

உங்கள் கதையில் வசனங்கள் தான் பலம்..
ரொம்பவே பொறுமை உங்களுக்கு..
உங்களின் அடுத்த பத்து பதிவும்,குட்டிகுட்டியா, குழந்தைகளுக்கு வார்க்கிற தோசைகள் போல எழுதி அசத்துங்க! வாழ்த்துக்கள் தங்கமணி மேடம்!

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - Thanks for the encouraging words, thanks for reading it thru...

@ Gayathri - அடுத்த ஸ்டோரியா... கொஞ்சம் வாங்கின அடியெல்லாம் ஆறட்டும் அம்மணி... ஹா ஹா... தேங்க்ஸ்மா...

@ தக்குடு - எஸ் எஸ்... சியாட்டில்ல இருந்து airforce one பிடிச்சு வந்து சிறப்புரை ஆற்றிய நம்ம சியாட்டில் சிங்காரி அவர்களுக்கு மிக்க நன்றி... ரெம்ப நாளாச்சு இந்த பேரு சொல்லி கூப்ட்டு... ஹ ஹா...மீ எஸ்கேப்...

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கா... மைண்ட்வாய்ஸ் வந்துட்டே இருக்கே... நாளைக்கு ப்ளாக் வந்து பாருங்க... ஹா ஹா

@ அன்னு - ஹா ஹா... பாப்பா சூப்பர்

@ Guna - ரெம்ப நன்றிங்க... மெகா சீரியலா? ஏங்க உங்க பெருந்தன்மைக்கு ஒரு அளவே இல்லையா? (ஆனந்த கண்ணீருடன்... ) ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - Thanks a lot... I know we RC fans like these kind of stories... thanks for reading it thru...

@ Nithu Bala - Thanks a lot Nithu

@ Mrs.Menagasathia - very many thanks Menaga

அப்பாவி தங்கமணி said...

@ அலைகள் பாலா - போலீஸ் உங்க கிட்ட பிஸியா ஏதோ விசாரணையாம்... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நன்றிங்க பாலா

@ siva - என்னாது? இவ்ளோ லேட்டா வந்தா மீ தி பர்ஸ்ட்ஆ? வாட் இஸ் திஸ்? அருண் அண்ட் அனிதா பின்னாடி பஸ்ல வராங்க சார்... ஹா ஹா... சரிங்க ரெஸ்ட் எடுக்க தான் போறேன்... பை பை

@ ஸ்ரீராம் - நன்றிங்க... நெறைய புக்ஸ் படிக்கறது தான்... கண்டதும் (கண்டது இல்ல) படித்தால் பண்டிதனாகலாம்னு ஒரு ஆசை தான்... ரமணி சந்திரன், லக்ஷ்மி எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள்... அவங்க நடை கொஞ்சம் வருவதை தவிர்க்க இயலுவதில்லை... நன்றி மீண்டும்

அப்பாவி தங்கமணி said...

@ LK - எனக்கு எதிரி வெளில இல்ல...

@ அனாமிகா - காபி அடிச்ச கமெண்ட் கணக்கில்ல... சொந்தமா எழுது

@ சுசி - நன்றிங்க சுசி

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - அடுத்த ப்ராஜெக்ட் உங்களுக்கு இட்லி செஞ்சு அனுப்பறது தான்.. ஹா ஹா

@ மாதேவி - நன்றிங்க மாதேவி

@ Balaji Venkat - அதை எல்லாம் மொதலே எக்ஸ்ப்ளெயின் பண்ணியாச்சு பாலாஜி... போய் பாருங்க பழைய எபிசொட்ல... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் -
//நண்பர்கள் திட்டுவது போல் திட்டினாலும் கதையையும் படித்தே வந்துள்ளார்கள்//

நான் சொல்லணும்னு நெனச்சத நீங்க சொல்லிட்டீங்க அண்ணா... ரெம்ப நன்றி... ரெம்ப நன்றி உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு...

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடறவன் - ஹா ஹா... சொல்றேன் சொல்றேன்... நன்றி

@ sandhya - ரெம்ப நன்றி சந்த்யா

@ சௌந்தர் - ரெம்ப நன்றிங்க சௌந்தர்

அப்பாவி தங்கமணி said...

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு. - எனக்கும் அதே கவலை தாங்க... அதை தொரத்தி விட்டுடலாம்... டோன்ட் வொர்ரி.. ஹா ஹா

@ kunthavai - ரெம்ப நன்றிங்க குந்தவை

@ ஹுஸைனம்மா - உங்க கவலை உங்களுக்கு... ஹா ஹா... எனக்கும் பாயசம் பிடிக்காது...சோ நோ பாயசம் பதிவு... டோன்ட் வொர்ரி அக்கா.. ஆனா வேற ரெசிபி போட்டாலும் போடுவேன்... சொல்றாதுகில்ல... ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க

@ கோவை2 தில்லி - நன்றிங்க

@ ஜெய்லானி - இருங்க உங்களுக்கு செஞ்சே அனுப்பறேன்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Vinu - காக்கா தூக்கிட்டு போயிடுச்சா... ஹா ஹா... தேங்க்ஸ் வினு

@ கோவை ஆவி - ரெம்ப நன்றிங்க ஆனந்த். சுமேதாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுடுவீங்க போல இருக்கே... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்... மைண்ட்வாய்ஸ் வரணுமா? உங்க விதி... காப்பாத்த முடியாது...ஹா ஹா... இட்லி எல்லாம் அனுப்ப மாட்டேன்.. .டோன்ட் வொர்ரி... (எனக்கே இட்லிக்கு வழிய காணோம்... ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ மோகன்ஜி - Thanks a lot Mohanji

//ரொம்பவே பொறுமை உங்களுக்கு..//
I will make Rangs read this comment... ha ha

திவா said...

//ssssssapaadi! oruvaliyaa mudinjathudaa saami!!...:) //

ரிப்பீட்டு!

:-)))
ரொம்ப மெகா சீரியல்ஸ் பாத்து இருக்கீங்க! சிம்பிளா ஒரு ப்லாட், பிரச்சினை தீர்வுன்னு இரூந்தா நல்லா இருக்கும். ஒரு காதல் கதை மாதிரி ஆரம்பிச்சு, ஹூ டன் இட் மாதிரி கொண்டுப்போய் பில்ட் பண்ணி அப்புறம் யாருன்னு தெரிஞ்சப்பறம் .... இவ்வளோ இழுக்கக்கூடாது.

சே.குமார் said...

கதையை இழுத்திருந்தாலும் முடிவு விரைவாக முடிக்க நினைத்தது போல் தெரிகிறது... இருந்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

கதை நல்லாயிருந்தது. கதாபாத்திரங்கள் அதிகம் என்று நினைக்கிறென்.

அப்பாவி தங்கமணி said...

@ திவா - Thanks for the tips

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க Kumar

kadar said...
This comment has been removed by a blog administrator.
அப்பாவி தங்கமணி said...
This comment has been removed by the author.
Anonymous said...

தரகர் கொடுத்த சுமேதாவின் படத்தைப் பார்த்த சூரியாவிற்கு அது தான் சுமேதா என்று எப்படித் தெரியும்.

Post a Comment