Thursday, October 28, 2010

அவள் பறந்து போனாளே... (டாட்டா... பை பை...)எவள் பறந்தா? எங்க பறந்தா?

அந்த "அவள்" வேற யாருமில்ல...சாட்சாத் இந்த அப்பாவி தான்... ஹி ஹி ஹி

எங்க பறந்தானு கேக்கறீங்களா? Actually, sorry there is a gramatical error in that statement

அவள் பறந்து போனாளேனு past tense ல சொன்னது தப்பு... actually it is future tense... இனிமே தான் பறந்து போக போறேன்... எங்கயா?

எல்லாம் நம்ம தாய் நாட்டுக்கு தான்... மூன்று வருடங்களுக்கு பின் என் இந்திய மண்ணில் காலடி தடம் பதிக்க போகும் அந்த தருணத்தை...

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... இவ போற flight ஐ எவனும் ஹைஜாக் பண்ணினா கோடி புண்ணியமா போகும் அவனுக்கு - மைண்ட்வாய்ஸ்)

ஏய்... மைண்ட்வாய்ஸ் நான் ஊருக்கு போயிட்டு வந்து உன்னை டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்... ரெம்ப நோசை நுழைக்கர நீ வர வர...

(ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே - மைண்ட்வாய்ஸ்)

அத உடுங்க... ஊருக்கு போறத நெனச்சாலே flight ஏறாமலே பறக்கற மாதிரி தான் இருக்கு போங்க...

பெரிய லிஸ்ட் போட்டு வெச்சுருக்கேன், என்னவெல்லாம் செய்யணும்னு... பாப்போம் எவ்ளோ நடக்குதுன்னு

- லிஸ்ட்ல மொதல் விஷயம் அம்மாகிட்ட மூணு வருஷ கதை பேசணும்... என்னதான் போன்ல பேசினாலும் நேர்ல பேசறாப்ல வருமா  

- பாட்டி கையால உருட்டி தர்ற கலந்த சாதம் சாப்பிடணும் 

- தங்கையோட மூணு வருஷம் போடாம விட்ட சண்டையெல்லாம் போடணும்...ஹா ஹா ஹா

- என் உடன்பிறப்பு சின்னதுல பண்ணின ரகளை எல்லாம் அவ நாலு வயசு வாண்டுகிட்ட சொல்லி குடுத்து அதையெல்லாம் ரிபீட் பண்ண சொல்லணும்... இதெப்படி இருக்கு? ஹா ஹா அஹ  

- நானும் தங்கையும் சேந்து முடிஞ்ச வரை எங்க அப்பா/தாத்தாகிட்ட வம்பு இழுக்கணும் like gold old days...

- டெய்லி மூணு மொழம் மல்லி/முல்லைனு பூ வாங்கி தல நெறைய வெச்சுக்கணும்  

- சொந்தம் பந்தம் ஊரு உறவு நட்பு எல்லாரோடையும் வாய் வலிக்க பேசணும்  

- அப்புறம் அம்மா கை மணத்தில் மல்லிகை பூ இட்லி சாப்பிடணும்  

- கரண்ட் எப்படியும் போகும்... அப்ப மொட்டை மாடி நிலா வெளிச்சத்துல அம்மா மடில தல வெச்சுட்டு நானும் தங்கையும் ஸ்வீட் non-sense பேசணும், பாட்டுக்கு பாட்டு விளையாடணும்  

- கைல அம்மா குடுக்கற காபி டம்ளர் வெச்சுட்டு பின் கட்டு படில உக்காந்துட்டு வேற எதை பத்தியும் யோசிக்காம எந்த இலக்கும் இல்லாம ரோட்டை வேடிக்கை பாக்கணும், பக்கத்து வீட்டு அக்கா கூட அரட்டை அடிக்கணும் 

- அதிகாலை எட்டு மணிக்கே (!!!) எந்திரிச்சு எங்க வீட்டு கேட் முன்னாடி ஸ்கூல் பஸ்க்கு நிக்கற குட்டி வாண்டுகள பாத்து மலரும் நினைவுகள அசை போடணும் 

- இந்த கருமம் பிடிச்ச ஸ்வெட்டர் / விண்டர் டிரஸ் எல்லாம் மறந்து தினமும் ஆசை தீர புடவை கட்டிட்டு  வீட்டு பக்கத்துல இருக்கற கோவில் எல்லாம் போய் பாக்கணும்  

- எங்க ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஒரு முறை போய் பாக்கணும்  

- எல்லாத்தையும் போட்டோ வீடியோனு பதிவு செஞ்சு வெச்சுக்கணும்  

- அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் ருசிக்கணும், Hot chips ல நேந்திரம் சிப்ஸ் வாங்கி கொரிக்கணும்  

- நெறைய ரமணிச்சந்திரன் புக்ஸ் வாங்கணும்...மத்த புக்ஸ்ம் கூட வாங்கணும்  

- கிராஸ் கட் ரோடு, டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம் எல்லா பக்கமும் கடை கடையா ஏறி எறங்கி கொஞ்சமா(!!!) ஷாப்பிங் செய்யணும், எங்க ஊரு டவுன் பஸ்ல போகணும்  

- இங்க இருக்கறப்ப ரங்க்ஸ் ஓவர் பிஸி act குடுக்கறதுக்கெல்லாம் சேத்து வெச்சு அங்க போய் பிஸியா கண்டுக்காம பழி வாங்கணும்... ஹா ஹா ஹா (ஜஸ்ட் கிட்டிங்....) 

இப்படி லிஸ்ட் போட்டுட்டே போனா.... இன்னிக்கி முடியாது.. அவ்ளோ இருக்கு... பாவம் நீங்க... விட்டுடறேன்...

(அப்பாவி உன் கருணையே கருணை - மைண்ட்வாய்ஸ்)

கடைசியா ஒன்னே ஒண்ணு... என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செஞ்சு இன்னும் மூணு வருசத்துக்கு தாக்கு பிடிக்கற மாதிரி வேண்டிய நினைவுகள சேமிச்சுட்டு வரணும்...

ஏர்போர்ட்ல கண்ண கசக்கி அம்மாவ அழ வெக்காம flight ஏறி திரும்பி வரணும்... அவ்ளோ தான்...

சரிங்க... டாட்டா பாய் பாய்... ஒரு மாசம் கழிச்சு பாக்கலாம்... அச்சச்சோ... என்னதிது... அழவெல்லாம் கூடாது... ஒரே மாசம்... இப்படி போய்டும் கண்ணமூடி தெரக்கராப்ல... வந்துடறேன்... சரியா

(ஹும்... நெனப்ப பாருங்க இவளுக்கு... நாமெல்லாம் ஆனந்த கண்ணீர் விடறோம்னு புரியாம ஓவர் பில்ட் அப் பண்ணுது - மைண்ட்வாய்ஸ்)

டாட்டா... சி யு....
 
(விடுதலை விடுதலை விடுதலைனு ஏதோ பாட்டு கேக்குதே... என்னோட பிரமையோ... என்னமோ போங்க... ஹா ஹா அஹ)

கடைசியா ஒரு விஷயம், அக்டோபர் 12th தேதி தினத்தந்தில வந்த "கோவை விமான நிலையத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்... போலீஸ் படை குவிப்பு" னு வந்த அந்த நியூஸ்க்கும் நான் ஊருக்கு போறதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்றேன்... (உள்ளூர நடுங்கியபடியே... ஹும்... )

இது நெஜமாவே தினதந்தில வந்த நியூஸ்... எனகென்னமோ என் ப்ளாக் படிச்ச யாரோட சதியோ இதுனு யோசனையாவே இருக்கு? ஹும்... கடவுளே... ஒழுங்கா திரும்பி வந்து சேந்தா உனக்கு தேங்காய் ஒடைக்கிறேன்...

அப்படி வராம போனா என்னோட ப்ளாக்ஐ யாருக்கு உயில் எழுதி வெக்கறதுன்னு நான் தீவிரமா யோசிச்சப்ப, ஐயோ வேண்டாம் ஐயோ வேண்டாம்னு யாரோ கத்தற சத்தம் கேட்டது... சரி உடுங்க... பொது சொத்தாவே இருந்துட்டு போகட்டும்... ஹும்

Happy Deppavali to all of you!!!

ஒகே Bye Bye...

கடைசியா ஒரு விஷயம்...

(டாட்டா... பை பை சொல்லி ஏழு மணி நேரமாச்சு... இவ கெளம்ப மாட்டா... இந்த ஜென்மத்துல... - மைண்ட்வாய்ஸ்)

அப்பாவியின் அப்பாலஜி:
கடந்த ரெண்டு மூணு வரமா உங்க ப்ளாக் பக்கமெல்லாம் அதிகம் வர முடியல... தப்பா நெனைக்க வேண்டாம். ஊருக்கு போறதால ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி அதிகம்... அதுவுமில்லாம கொஞ்சம் நேரம் கிடைச்சப்ப கூட கர்ம சிரத்தையா "அதே கண்கள்..." எழுதவே சரியா போச்சு. முடிக்காம ஊருக்கு போனா உங்க சாபத்துல flight ஏ வெடிச்சுடுமோனு ஒரு பயம் தான்... சரிங்க ஊரு போயிட்டு வந்து உங்க ப்ளாக்ல விட்டதெல்லாம் படிச்சு பக்கம் பக்கமா கமெண்ட் போட்டு உயிரை வாங்குவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்... (தக்குடு இப்பவே காத தூரம் ஓடற மாதிரி இருக்கே... ஹா ஹா)

ஒகே... ஒகே... ஐ வில் ஸ்டாப் நௌ... நெஜமாவே டாட்டா... பை பை...  

மாவடுவும் மல்லிகையும்  
மணக்கும் பருப்புபொடியும் 
அதிரசமும் அச்சுமுறுக்கும்
அத்தனையும் வேணுமுன்னு 
அம்மாகிட்ட ஆசையசொன்னேன்  
அவளுந்தான் உருகிப்போனா....

என்னவாங்கி வரட்டுமுன்னு  
என்தாய நானும்கேக்க 
என்புள்ள நீவந்தாபோதும் 
'எனகென்ன வேணுமடி' னா

அம்மா...
குடுக்கத்தான் தெரியுமுனக்கு 
கேக்கத்தான் தெரியுமெனக்கு...
....

86 பேரு சொல்லி இருக்காக:

தக்குடுபாண்டி said...

ரமணிசந்திரன் புக்ஸ் எல்லாம் படிச்சிட்டு வந்து மறுபடியும் "அதே காதுகள்" நு ஒரு 50 Part போடனும் இல்லையா??..:PP

ஜெய்லானி said...

கதை முடிவை ஒரு மாதிரி சீக்கிரமா முடிச்சப்பவே சந்தேகமா இருந்துச்சி ..இது அப்பாவியின் கதை மாதிரி இல்லையேன்னு ..!!

ஓக்கே பை...திரும்ப வந்து அதே கைகள்..அதே தலைகள்..அதே மூக்கு ..இப்பிடி நிறைய தொடர் போடுங்க ...தக்குடுவின் ஆசையையும் நிறைவேத்துங்க ..!! :-))

ப்ரியமுடன் வசந்த் said...

விடுமுறைப்பயணம் சிறக்க வாழ்த்துகள்!

கோயமுத்தூரை காப்பாற்ற புதுசா யாராச்சும் வானத்துல இருந்து குதிச்சு வாங்கோ!

அன்னு said...

ஹெ ஹே....ஜாலீ......புவனா நல்லபடியா போயிட்டு வாங்க. விளையாட்டுக்காகவும் போற நேரத்துல அபசகுனமா பேசறது நல்லதில்லை. அதனால் பதிவை கொஞ்சம் எடிட் பண்ணிட்டு அப்புறம் நல்ல பிள்ளையா போயிட்டு வாங்க. தப்பி தவறி கூட கௌரிசங்கர்ல சாம்பார் பழைய மாதிரியே இருக்கும்னு போயிடாதீங்க. அதுக்கு அண்ணா சிலை முன்னாடி இருக்கற ஹாட் கிச்சன் நல்லா இருக்கு. பழைய நீலகிரீஸ் இல்ல இப்ப. சாஃப்ட்வேர் கலாசாரம் வேற அந்த ரோட்டை நாம இருக்கறது கோவையா சென்னை அண்ணா சாலையான்னு கேக்க வைக்கும். ஆஹா... நீங்க ஊருக்கு போறப்ப எங்கப்பா அம்மா மக்காவில் இருக்காங்க. இல்லைன்னா என் அப்பாவையும் உங்களையும் சந்திக்க வச்சு ஒரு 'ஹிந்தியில் அளவளாவல்'னு ஒரு பதிவு தேத்தலாம். ஹி ஹி ஹி...ஆஹா...இப்பதான் பிப்ரவரில ஊர்லருந்து வந்தேன்...அப்ப்டின்னாலும் யாரவது ஊருக்கு போறாங்கன்னா பொறாமையா இருக்கு. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. அங்க அம்மா செஞ்சு தர பட்சணம், சாப்பாடு எல்லாத்தையும் அப்பப்ப அப்லோடு பண்ணுங்க ப்ளாகுல. திரும்பி வர்றப்ப அம்மாவை அழுக விடாம ஒரு காரியமாவது உருப்படியா செஞ்சுட்டு வாங்க. :))

if you get more votes on this post, i think people really are waiting for a break from you ha ha....I am also voting one like :)

Ravi said...
This comment has been removed by the author.
ராவி said...

Happy Journey and enjoy the trip. ஊருக்கு போய் வந்து ஒரு தொடர் ஸ்டார்ட் பண்ணுங்க

vinu said...

welcome home vanthathum theariyappaduththungal ooril irrunthaal kandippaaga santhikka mayaTrchikkureann

Gayathri said...

happy journey akka have a nice time

Mahi said...

ஹேவ் எ சேஃப்&நைஸ் ட்ரிப் புவனா! ஊர்ல தீபாவளியா? என்ஜாய்,என்ஜாய்!(ச்சே,ச்சே காதுல புகையெல்லாம் வரவே இல்லைங்க.:))

கடைசி கவிதை சூப்பர்!
/அம்மா...
குடுக்கத்தான் தெரியுமுனக்கு
கேக்கத்தான் தெரியுமெனக்கு.../ டச்சிங் லைன்ஸ்!! எனக்கும் அம்மா ஞாபகம் வந்துருச்சு.அழுகாச்சு வரதுக்குள்ள வேற எங்கையாச்சும் கவனத்தத் திருப்பறேன். :)

நல்லபடியா போயிட்டு வாங்க புவனா!

vanathy said...

தங்ஸ், நல்லபடியா போய்ட்டு வாங்க. வரும் போது அப்படியே இந்த மைன்ட் வாய்சை ஊரிலை விட்டுட்டு வந்திடுங்க. உங்க தம்பி ( அதாங்க எல்கே ) யை கேட்டதாக சொல்லவும். மீண்டும் சந்திப்போம்.

Mrs.Menagasathia said...

Have a happy n safe journey bhuvana!!

Krishnaveni said...

Have a nice time with family and friends, have a safe journey.
இந்த கருமம் பிடிச்ச ஸ்வெட்டர் / விண்டர் டிரஸ் எல்லாம் மறந்து தினமும் ஆசை தீர புடவை கட்டிட்டு வீட்டு பக்கத்துல இருக்கற கோவில் எல்லாம் போய் பாக்கணும்
very true, very true.....:)))))))))))

பத்மநாபன் said...

இனிய தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள்..கோவை தென்றலும் கூடவே வருடும் தமிழும் சிறுவாணியாய் இனிக்க செய்யட்டும் ...

siva said...

i am really very sad..

sari paathu poitu vaanga..

LK said...

bye bye bye

BalajiVenkat said...

Tata bye bye .....

Nithu Bala said...

Have a great trip..enjoy well..Diwali wishes to you..

Anonymous said...

//ஓக்கே பை...திரும்ப வந்து அதே கைகள்..அதே தலைகள்..அதே மூக்கு ..இப்பிடி நிறைய தொடர் போடுங்க ...தக்குடுவின் ஆசையையும் நிறைவேத்துங்க ..!! :-)) //

REPEATTTTTTTTTTTTTTUUUUUUUUUUUUUUUU

//புவனா நல்லபடியா போயிட்டு வாங்க. விளையாட்டுக்காகவும் போற நேரத்துல அபசகுனமா பேசறது நல்லதில்லை. அதனால் பதிவை கொஞ்சம் எடிட் பண்ணிட்டு அப்புறம் நல்ல பிள்ளையா போயிட்டு வாங்க//
Even I felt awkward. Mariyathaya maathittu pookka.

Don't forget to learn "How to make Idli?" this time from amma.

I got lot to tell you and you have to leave now. Hukkum...

Check your mails time to time. (This is not a request. it is an ORDER. ha ha ha)

- Ana

Anonymous said...

//if you get more votes on this post, i think people really are waiting for a break from you ha ha....I am also voting one like :) /
I am going to create (at least 25 fake accounts) few fake accounts and vote this article. ha ha ha

Madhavan said...

Happy journey, Happy diwali, Karthigai etc.

nice post.. last 'kavithai' is very very nice, reflects the fact

தெய்வசுகந்தி said...

have a safe journey!!!!!!! காதுல புகையோடதான் சொல்லறேன்:-)!

Anonymous said...

ஹேய்,, எப்ப கோவை வர்றீங்க? நான் இப்ப கோவைலதான் இருக்கேன்

சின்னம்மணி

சி.பி.செந்தில்குமார் said...

- அதிகாலை எட்டு மணிக்கே (!!!) எந்திரிச்சு

இது ரொம்ப ஓவர்

சி.பி.செந்தில்குமார் said...

அப்போ பதிவுக்கு தடாவா?

விஜி said...

ஹேய் கோவையா? வாங்க வாங்க :))

விஜி said...

அன்னபூர்னாவில சாம்பார் வேண்டாம் பாப்பனாய்க்கன் பாளையம் கிருஷ்னா டிபன் ஹவுஸ் போலாம் வாங்க, :))

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

நீங்க சொல்லாம விட்டது
நம்ம ஊரு ரயிலில் போகனும்
நம்ம ஊரு ஆறு ,அருவியில் குளிக்கணும் .
தெரு திண்ணையில் உக்காந்து வெட்டிக்கதை(புரளி ) பேசணும்.
நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் ஊர்ல எவ்வளவு மிஸ் பண்றோம்னு புரியுது.
ஓகே நல்லபடியா போயிட்டு வாங்க, வரும் போது குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு வாங்க

வித்யா said...

Bon Voyage..

அலைகள் பாலா said...

டா டா

SenthilMohan said...

இட்லி & அரிசீம்பருப்பு சாதம் எப்படி செய்றதுன்னு அம்மாகிட்ட கேட்டு நோட்ல எழுதிட்டு வர்றது. இதையும் உங்க லிஸ்ட்ல சேத்துக்கோங்க்கா.
அப்புறம் ஒருவழியா அதேகண்கள் தொட...................ர் கதைய முடிச்சுட்டீங்க போலிருக்கு. இன்னும் முழுசா படிச்சு முடிக்கல.. முடிச்சுட்டு அதப் பத்திப் பேசிக்கலாம். அப்புறமென்ன...வழக்கம் போல உங்கள் பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் அப்படின்னு சொல்லிட்டு Bye. Happy Journey.

Kousalya said...

//என் உடன்பிறப்பு சின்னதுல பண்ணின ரகளை எல்லாம் அவ நாலு வயசு வாண்டுகிட்ட சொல்லி குடுத்து அதையெல்லாம் ரிபீட் பண்ண சொல்லணும்..//

உங்க நல்ல குணம் வேறு யாருக்கும் வராது தோழி...!
:))
உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்....

HAPPY JOURNEY.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\அங்க போய் பிஸியா கண்டுக்காம பழி வாங்கணும்..//

இங்க தான் அப்பாவி நிக்கிறீங்க..:)
ஆல் த பெஸ்ட்

அப்ப்றம் மூணுவருசத்துக்கு மேட்டர் தேத்திட்டு வந்து எவ்ளோ போஸ்ட் போடப்போறாங்களோன்னு எல்லாரும் த்ரி(கி)லா இருக்காங்களாம் தெரியுமா?

vasan said...

கவிதை கிளாஸ். சொந்த‌மா? சுட்ட‌தா?
ஜாங்கிரி, பிசிரில்லாம‌ல் சுத்த‌மா வ‌ந்தா
க‌டையின‌ வாங்குனதா?ன்னு கேட்கிற‌மாதிரி!!

சுசி said...

// ஊருக்கு போறத நெனச்சாலே flight ஏறாமலே பறக்கற மாதிரி தான் இருக்கு போங்க...//

சரியா சொன்னிங்க புவனா.

சந்தோஷமா போய்ட்டு நல்லா என் ஜாய் பண்ணிட்டு வாங்க.

உங்க பயணம் இனிதாய் அமையட்டும்.

பிரசன்னா said...

ஹலோ? லாப்டாப், ஐ பாட், ப்ளே ஸ்டேஷன், சாக்லேட் இதெல்லாம் வாங்கிட்டு வரத லிஸ்ட்ல சேருங்க.. இல்ல வரவே வராதீங்க (மைன்ட் வாய்ஸ்)

Anonymous said...

//மாவடுவும் மல்லிகையும்
மணக்கும் பருப்புபொடியும்
அதிரசமும் அச்சுமுறுக்கும்
அத்தனையும் வேணுமுன்னு
அம்மாகிட்ட ஆசையசொன்னேன்
அவளுந்தான் உருகிப்போனா....

என்னவாங்கி வரட்டுமுன்னு
என்தாய நானும்கேக்க
என்புள்ள நீவந்தாபோதும்
'எனகென்ன வேணுமடி' னா

அம்மா...
குடுக்கத்தான் தெரியுமுனக்கு
கேக்கத்தான் தெரியுமெனக்கு...//

படிக்கும் போதே கண்ணுல தண்ணி வந்திடுச்சு...

பதிவுலகில் பாபு said...

Happy Journey..

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பயணம் சிறக்கவும், அத்தனை ஆசைகளும் நிறைவேறவும் வாழ்த்துக்கள். கூடவே தீபாவளி வாழ்த்துக்களும்.

V.Radhakrishnan said...

பயணம் சிறக்கட்டும். சந்தோசமா போய்ட்டு சந்தோசமா வாங்க.

Arul Senapathi said...

Have a nice and safe Journey!!!

Don't forget few other things in CBE when you are there such as a movie at KG, Krishna Sweets Snacks, Gandhipuram Roadside masala paal(milk) etc.

வெறும்பய said...

Happy journey..

கோவை ஆவி said...

Happy journey..

சே.குமார் said...

விடுமுறைப் பயணம் சிறக்க வாழ்த்துகள்!

சந்தோஷமான பதிவில் சில சங்கடமான வார்த்தைகள்...

வேண்டாமே... நீக்கி விடலாமே...

சௌந்தர் said...

நல்லவேளை அடுத்து எதாவது தொடர் பதிவு ஏதும் போட போறாங்க பயந்தேன் நிம்மதி போயிட்டு வாங்க

Kasu Sobhana said...

பயணம் இனிதாய் அமைய, பட்டியலிட்ட ஆசைகள் எல்லாம் நிறைவேற, இனிய மகிழ்ச்சிகரமான தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு, எங்கள் வாழ்த்துக்கள். கோணியம்மனையும், மருதமலை மாமணியையும் தரிசித்து வாருங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

thkkutu god saved you

தாராபுரத்தான் said...

அம்மாவை பார்க்கிறதும் பிறந்த நாட்டை பார்கிறதும் ஒண்ணுதாங்க..வாங்க வாங்க

ஸ்ரீராம். said...

//"அப்புறம் அம்மா கை மணத்தில் மல்லிகை பூ இட்லி சாப்பிடணும்"//

இதுல உங்கள் ஏக்கம் தெரிகிறது. பாவம். அப்புறம் ஒரு சந்தேகம். மல்லிப்பூவை மாவு அரைக்கும்போது சேர்த்து அரைத்து விடுவீர்களா அல்லது கொத்துமல்லி போடறாமாதிரி இட்லி மாவு மேல தூவுவீங்களான்னு சொல்லிட்டுப் போங்க...

கவிதை டச்சிங்...

ஊர்ப்பயண, தீபாவளி, கார்த்திகை வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

தலைப்பை பார்த்ததும், என்னவோன்னு நினைச்சு.. பதறியடிச்சு ஓடியாந்தேன்.(உங்க கதையை படிச்சுட்டு ரொம்பவேல்ல கலாய்ச்சுருக்கோம் :-))))ஊருக்கு வர்றீங்களா??.. வாங்க.. வாங்க. அனேகமா, கல்யாணத்துக்கப்புறம் இதான், ஊர்ல உங்க முதல் தீபாவளி இல்லியா?.

கவிதை டச்சிங்பா :-))

Elam said...

மாவடுவும் மல்லிகையும்
மணக்கும் பருப்புபொடியும்
அதிரசமும் அச்சுமுறுக்கும்
அத்தனையும் வேணுமுன்னு
அம்மாகிட்ட ஆசையசொன்னேன்
அவளுந்தான் உருகிப்போனா....

என்னவாங்கி வரட்டுமுன்னு
என்தாய நானும்கேக்க
என்புள்ள நீவந்தாபோதும்
'எனகென்ன வேணுமடி' னா

அம்மா...
குடுக்கத்தான் தெரியுமுனக்கு
கேக்கத்தான் தெரியுமெனக்கு...
- கவிதை chanceless.... happy Journey.

ஹுஸைனம்மா said...

நல்லபடியா போய்ட்டு வாங்க. நல்லதே நினைங்க.. ஏன் இப்படி ஃபிளைட்.. அது இதுன்னுகிட்டு? யாரும் அப்படி நிச்சயமா நினைக்க மாட்டோம்..

எல்லா ஆசைகளும் நல்லபடியா நிறைவேறி, சந்தோஷமா வாங்க.. அப்புறம், 3 வருஷம் கழிச்சுப் போறதினால, இந்தியாவைப் பாத்து ஷாக் ஆகிடாதீங்க!!! :-))))))

geetha santhanam said...

happy journey. enjoy your holidays.--

sreeja said...

Happy Journey,Bhuvana...
Unga aasai (ennudaiyathum )ellam niraivera vazhthukkal

ஸாதிகா said...

உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.அம்மாவைப்பற்றி அசத்தலான கவிதை பாடி விட்டீர்கள்.

புதுகைத் தென்றல் said...

சாரிப்பா வேலையில் பிசியா இருந்ததால தாமதமா வந்து என்னோட வாழ்த்தை சொல்லிடறேன். நல்லா ஆனந்தமா எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

RAZIN ABDUL RAHMAN said...

பறந்து போய் குடுமத்தினருடன் (இட்லி சுட்டு..ஸாரி)தீபாவளி கொண்டாடும் சகோ அப்பாவி அவர்களே.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்

sriram said...

//ஒரு மாசம் கழிச்சு பாக்கலாம்//
Tears in my eyes, ஒரே ஒரு மாசம்தானா, அநன்யா மாதிரி நாலஞ்சு மாசத்துக்கு Vacation போகலாமே??
நாங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்..

சரி ஆறுதல் சொல்ல பயணக் கட்டுரையெல்லாம் போடமாட்டேன்னு சொல்லுங்க.. :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கோவை2தில்லி said...

எனக்கும் டவுன் பஸ்ஸில் பாட்டு கேட்டுக் கொண்டே போக ரொம்ப பிடிக்கும். அன்னபூர்ணா ஹோட்டல் , மல்லிகைப்பூ, ஆஹா……………….. நானும் உங்கள் கட்சி தான்.உங்களுடைய அனைத்து ஆசைகளும் நிச்சயமாக நிறைவேறும். என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..அருமை....


ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

அப்பாதுரை said...

ஒரு வழியா கதையைப் படிச்சு முடிச்சேங்க. முடிச்சதுக்கு பாராட்டுக்கள்... ஐ மீன்... தொடர்ந்து எழுதி முடிச்சதுக்குனு சொல்ல வரேன் - உங்க கமிட்மென்ட்டுக்கு பாராட்டுக்கள். கற்பனைக்கும் ஜே. (ஒரு பக்கத்துல ட்ரீட்மென்ட் எழுதி ராதிகாவுக்கு அனுப்புங்க - தமிழ் டிவி மெடீரியல்)

இந்தியா போய்ட்டு வாங்க... எஞ்சாய் தங்கமணி.. அட உங்க கிட்டயே சொல்றனே இதை?!

தக்குடுபாண்டி said...

அடராமா!! இப்போதான் பாத்தேன், நம்ப அடப்பாவி அக்கா ஊருக்கு போய்ட்டு வரேன்னு போஸ்ட் போட்டா வரலாறு காணாத அளவுக்கு இட்லில மன்னிக்கவும் இன்ட்லில 41 லைக் எல்லாரும் போட்ருக்காளே!! இட்லி மாமி எல்லாரையும் புழிய புழிய அழ விட்டதோட எபக்டுதான் இது!!...:)

என்றும் வம்புடன்,
தக்குடு

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - "அதே காதுகள்" அட... இந்த தலைப்பு கூட நல்லா இருக்கே... எழுதிட்டா போச்சு... சொந்த செலவுல சூனியம் வேணுமா உனக்கு... ஹா ஹா ஹா..

@ ஜெய்லானி - ஹா ஹா... உங்க எல்லார் ஆசை போல எழுதிடறேன்... நோ ப்ராப்ளம்

@ ப்ரியமுடன் வசந்த் - நன்றிங்க... கோயமுத்தூரை காப்பாத்த கடவுள் சிருஸ்ட்டிச்ச ஜென்மாவே நான் தானேங்க...ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - என்ன ஜாலி எனக்கு ஜாலியா? இல்ல நான் போனதால உங்களுக்கு ஜாலியா? தெளிவா சொல்லலைனா இட்லி பார்சல் நிச்சியம் அன்னு. ஹா ஹா ஹா... உங்க கமெண்ட் பாக்கறதுக்கு முன்னாடியே கெளம்பிட்டேன்பா... சாரி போஸ்ட் எடிட் பண்ண முடியல... ஆமாங்க ஊரு ரெம்ப மாறி போச்சு விரிவா ஒரு போஸ்ட் போடறேன்... அடடா ஹிந்தி அளவளாவல் மிஸ் பண்ணிட்டனே...

//if you get more votes on this post, i think people really are waiting for a break from you ha ha....I am also voting one like :) //
இப்ப என் பெரிய கடுப்பே இதான்... இருங்க உங்களை எல்லாம் எழுதியே பழி வாங்கறேன்...ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ராவி - நன்றிங்க ராவி

@ vinu - நன்றிங்க வினு. ஊர்ல போய் ஈமெயில் பாக்க கூட இல்லிங்க... யாரையும் அதிகம் மீட் பண்ண கூட முடியல... மூணு வாரம் ஓடி போய்டுச்சு... ஹ்ம்ம்...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ஹா ஹா... காதுல புகை வந்தே தீரும்னு எனக்கு தெரியுமே... ஹா ஹா... தேங்க்ஸ் மகி

@ vanathy - தேங்க்ஸ் வானதி... மைண்ட்வாய்ஸ் விடாது கருப்பு மாதிரி கூடவே வந்துடுச்சு வானதி... அதுகென்ன பாஸ்போர்ட்ஆ விசாவா? ஹ்ம்ம்...ப்ளாக் நண்பர்கள் யாரையும் மீட் பண்ண முடியல இந்த முறை

@ Mrs.Menagasathia - தேங்க்ஸ் மேனகா

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

@ siva - நம்பிட்டோம்...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ LK - சரி சரி .. இத்தனை bye அநியாயமா இல்ல உனக்கு?ஹா ஹா

@ BalajiVenkat - தேங்க்ஸ்

@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து... உங்களுக்கு ஹாப்பி தீவாளி Belated

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - உன்னோட ரிபீட் ஒழிக... சாரி இப்போ தான் பாக்றேன்... சரி விடு.. .பத்திரமா வந்துட்டேன் சரி தானே...
//Don't forget to learn "How to make Idli?" this time from அம்மா//
ஆமா பழகிட்டாலும்... ஹா ஹா
//I got lot to tell you and you have to leave now. Hukkum... //
வந்துட்டேன்... இப்போ சொல்லுங்க அம்மணி
//Check your mails time to time. (This is not a request. it is an ORDER. ha ha ha)//
டைம் டு டைம்ஆ? ஒரு தரம் கூட ஈமெயில் பாக்கலை அம்மணி? அப்படியே பாத்து இருந்தாலும்... என்னமோ நீங்க தினம் பத்து ஈமெயில் அனுப்பின மாதிரி தான்... ஏய்.....................
//I am going to create (at least 25 fake accounts) few fake accounts and vote this article. ha ha ha //
அடிப்பாவி... இந்த கொடுமையா கேக்க ஆளே இல்லையா...?

அப்பாவி தங்கமணி said...

@ Madhavan - தேங்க்ஸ்ங்க மாதவன்...

@ தெய்வசுகந்தி - ஹா ஹா... நானே மூணு வருஷம் கழிச்சு போறேன்... உங்களுக்கு காதுல புகையா? மீ பாவம் யு நோ? ஹா ஹா... தேங்க்ஸ் அக்கா

@ சின்னஅம்மணி - வந்துட்டு போயாச்சுங்க அம்மணி? உங்க மெசேஜ் மொதலே பாக்கலப்பா சாரி... ஊர்ல ஈமெயில் செக் பண்ண நேரமே இருக்கல... missed யு...

அப்பாவி தங்கமணி said...

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா... எஸ் எஸ்.,.. ஈமெயில்லே பாக்கலே நீங்க வேற...ஹ்ம்ம்...

@ விஜி - தேங்க்ஸ்ங்க விஜி... அடடா உங்க கமெண்ட் மொதலே பாத்து இருக்கலாம்... மிஸ் பண்ணிட்டேன்... ஒகே அடுத்த முறை பாப்பனாய்க்கன் பாளையம் கிருஷ்னா டிபன் ஹவுஸ் போவோம்... தேங்க்ஸ்ங்க விஜி

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ஆஹா... நெறைய ஐடியா மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கே... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ வித்யா - தேங்க்ஸ்ங்க வித்யா

@ அலைகள் பாலா - தேங்க்ஸ்ங்க பாலா

@ SenthilMohan - ஆஹா.. நேரம் தான்... ஆமா தொடர் முடிச்சுட்டேன் போன போகுதுன்னு... நன்றி வாழ்த்துகளுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ Kousalya - ஹா ஹா... நன்றி தோழி...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹா ஹா... நீங்க தான் என்னை நல்லா புரிஞ்சு வெச்சு இருக்கீங்க... தேங்க்ஸ்... ஹா ஹா

@ vasan - சொந்த சரக்கு தாங்க... சுடறது கொஞ்சம் கஷ்டம் எனக்கு... அதுக்கு தனி திறமை வேணும் பாருங்க... அது இல்லையே நமக்கு...ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - தேங்க்ஸ் சுசி

@ பிரசன்னா - ஹா ஹா... எல்லாம் வாங்கி அனுப்பிட்டேன் கெடச்சதா... ?

@ பெயரில்லா - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ பதிவுலகில் பாபு - தேங்க்ஸ்ங்க பாபு

@ வெங்கட் நாகராஜ் - ரெம்ப நன்றிங்க வெங்கட்

@ V.Radhakrishnan - சந்தோசமா போறது சுலபம் சந்தோசமா திரும்பி வர்றது தான் கஷ்டம்... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க அருள்... நெறைய ஊர் சுத்த முடியல...டைம்ஏ பத்தலை...

@ வெறும்பய - தேங்க்ஸ்ங்க

@ கோவை ஆவி - நன்றிங்க ஆனந்த்

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்...மன்னிக்கணும்... இப்போ தான் இந்த கமெண்ட்ஸ் எல்லாம் பாக்கறேன்... எல்லோரின் அக்கறையும் மனம் நெகிழ செய்கிறது... மிக்க நன்றி மீண்டும்

@ சௌந்தர் - இருங்க இருங்க உடனே ஆரம்பிக்கறேன்

@ Kasu Shobana - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ தி. ரா. ச.(T.R.C.) - ஆஹா... திரும்பின பக்கமெல்லாம் எதிரிக போல இருக்கே... ஹா ஹா

@ தாராபுரத்தான் - சரியா சொன்னீங்க... ரெம்ப நன்றிங்க

@ ஸ்ரீராம் - ஹா ஹா...அடடா இந்த மல்லிகை பூ டவுட் எனக்கு வராம போச்சே... அம்மா கிட்ட போன்ல கேட்டு சொல்றேன்ங்க...ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ஆமாங்க கல்யாணம் பின்ன இதான் முதல் தீவாளி இன் இந்தியா... ஒரே ஜமாயசுட்டோம்... நன்றிங்க அக்கா

@ Elam - ரெம்ப நன்றிங்க

@ ஹுஸைனம்மா - சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அக்கா... எல்லாரோட அக்கறையும் கேக்க ரெம்ப சந்தோசமா இருக்கு... இதோ பத்திரமா வந்துட்டேன் பாருங்க... நன்றிங்க அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ Geetha Santhanam - நன்றிங்க கீதா

@ sreeja - ரெம்ப நன்றிங்க ஸ்ரீஜா

@ ஸாதிகா - ரெம்ப நன்றிங்க ஸாதிகா

அப்பாவி தங்கமணி said...

@ புதுகை தென்றல் - ரெம்ப நன்றிங்க அக்கா

@ RAZIN ABDUL RAHMAN - ரெம்ப நன்றிங்க ரஜின்

@ பாஸ்டன் sriram - ஆஹா... Tears in my eyesனு பாத்து ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் தப்பு கணக்கு போட்டுட்டனே....அவ்வ்வ்.... ஹா ஹா... பயண கட்டுரை இல்லாமயா? கண்டிப்பா போடுவேன்... வேற எப்படி இந்த மாதிரி கமெண்ட்க்கெல்லாம் பழி வாங்கரதாம்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - ரெம்ப நன்றிங்க தோழி

@ ஆர்.ராமமூர்த்தி - நன்றிங்க

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க பொறுமையா கதைய படிச்சதுக்கு... ரெம்ப நன்றி என்ஜாய் சொன்னதுக்கும் (எனக்கேவா? ஹா ஹா...)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - அடப்பாவி... உன்ன? என்ன பண்ணலாம்? வெயிட் வெயிட்... elephant க்கு ஒரு காலம் வந்தா cat க்கு ஒரு காலம் வராமயா போகும்... ஹ்ம்ம்ம்.... (அப்பாவி உனக்கு எதிரி வெளில இல்ல... ஹ்ம்ம்....)

//இட்லில மன்னிக்கவும் இன்ட்லில//
இதுகெல்லாம் எதுகை மோனை நல்லா வருமே... சும்மா சொல்ல கூடாது... வம்பு பண்ணவும் தனி திறமை வேணும்... மீ எஸ்கேப்... ஹா ஹா

அனாமிகா துவாரகன் said...

//ஒரு மாசம் கழிச்சு பாக்கலாம்//
சரியான அழுகுணி ஆட்டம் ஆடறேக்கா. ஒரு மாசம்னு சொல்லிட்டு 24 நாளுல வந்து இப்படியா அலப்பற பண்ணுவீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ். ஹா ஹா ஹா. என்னாலேயே சிரிப்பை அடக்க முடியல்ல.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

தங்கமணி எப்ப வந்தீங்க.. அதுக்குள்ள திரும்ப ஊர் போயாச்சா.. என்ஜாய் பண்ணிங்களா..:))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் - என்ன ஒரு பாசம்? என்ன ஒரு அன்பு? அடிப்பாவி...

அப்பாவி தங்கமணி said...

@ தேனம்மை லெக்ஷ்மணன் - ஆமாங்க அக்கா... அதுக்குள்ள லீவ் முடிஞ்சு போச்சு...ஹ்ம்ம்... என்ன செய்ய? பொழப்ப பாக்கணுமே... திரும்ப வந்தாச்சு... என்ஜாய் தான், பொறந்த ஊராச்சே... இப்ப தான் ஊருக்கு போன கதை புது பதிவு போட்டு இருக்கேன் பாருங்க... நன்றிங்க

Post a Comment