Thursday, October 07, 2010

ரங்கமணி - Is he a DOS or Windows?


தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும் 

"என்னங்க... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?" என உற்சாகமாய் வீட்டிற்குள் நுழைந்த தங்கமணியை பார்த்ததும் ஐயயோ என் பர்ஸுக்கு வந்த கேடு காலம் என்னவோ என பீதியுடன் பார்த்தார் ரங்கமணி

"என்னங்க நான் பேசிட்டே இருக்கேன். நீங்க இப்படி எதையோ பாத்து பயந்த மாதிரி முழிக்கறீங்க"

"நீ இருக்கறப்ப வேற எதை பாத்து நான் பயப்படபோறேன் தங்கம்"

"என்ன கிண்டலா?" என தங்கம் டென்ஷன் ஆக

"சரி சரி... என்னமோ சொல்ல வந்தியே அதை சொல்லு"

"ஆங்... அது... என் பிரெண்ட் அகிலா இருக்கால்ல..."

"யாரு... நம்ம கல்யாணத்துல ஒரு அம்பது ரூபா வால் கிளாக் பிரெசென்ட் பண்ணி அதுல நேரம் கூட பாக்க முடியாத படி மொத்தமா மறைச்சு "பெஸ்ட் காம்ப்ளிமண்ட்ஸ் - அகிலா" னு ஒரு அடி நீளத்துக்கு எழுதி இருந்தாளே, அந்த அலட்டல் அகிலா தானே"

"உங்களுக்கு என் பிரெண்ட்ஸ்னா எப்பவும் இளப்பம் தான்... "

"சரி சரி... இப்ப அவளுக்கு என்ன அதை சொல்லு"

"அவ புதுசா கம்ப்யூட்டர் சென்ட்டர் ஆரம்பிச்சு இருக்கா"

"அடக்கொடுமையே... கம்ப்யூட்டர்க்கு வந்த கஷ்டத்த பாரேன்" என ரங்க்ஸ் கூறவும் தங்க்ஸ் கன்னா பின்னா டென்ஷன் ஆனார்

"இப்ப நான் சொல்றத முழுசா கேக்க போறீங்களா இல்லையா"

"சொல்லு. கேக்கலைனா விடவா போற"

"அது அந்த கம்ப்யூட்டர் சென்ட்டர்ல ஒரு பேசிக் கிராஷ் கோர்ஸ் வருது. மத்தவங்களுக்குன்னா பீஸ் ரெண்டாயிரம் ரூபா. நான் அவ பிரெண்ட்ங்கறதால வெறும் ஆயிரம் தான். நம்ம அபார்ட்மென்ட் ஏஞ்சல் கிளப்ல இருந்து கூட என் பிரெண்ட்ஸ் எல்லாம் சேர போறாங்க. நானும் சேரலாம்னு இருக்கேன்"

"அட கொடுமையே. நான் நெனச்சா மாதிரியே என் பர்ஸுக்கு வேட்டு வந்துடுச்சா" என ரங்கமணி தலையில் கை வைத்து கொள்ள

"ஆமா. எனக்கு செய்யனும்னா மட்டும் அது தண்டம். நீங்க மட்டும் போன வருஷம் அது என்ன SAPயோ என்ன எழவோ? அதை 25 ஆயிரம் கட்டி படிக்கல. நான் ஏன்னு கேட்டேனா?"

"அடப்பாவி. அது படிக்காம உட்டுருந்தா இந்நேரம் வேலைய உட்டு தூக்கி இருப்பான் தெரியுமா"

"ஓ... நான் வீட்டுல தண்டமா இருக்கேன். எனக்கு எதுக்கு செலவு பண்ணனும்னு சொல்லாம சொல்றீங்க இல்ல" என தங்க்ஸ் தனது அஸ்திரத்தை பிரயோகித்தார்

"ச்சே.. ச்சே... அப்படி இல்ல தங்கம். பேசிக் கோர்ஸ்ல ஒண்ணும் பெருசா இருக்காது. நானே உனக்கு சொல்லி தரேன். அதுக்கு தான் சொன்னேன், சரியா" என தாஜா செய்ய முயல எதுவும் பலிக்காமல் இறுதியாக தங்கமணி கம்ப்யூட்டர் கோர்ஸ் சேருவதென ஒரு மனதாய்  (!!!) முடிவாகியது

*****************************************************************************

தங்கமணி கம்ப்யூட்டர் க்ளாஸ் சேர்ந்து ஒரு வாரம் ஆகிய நிலையில் ஒரு நாள்...

"என்னங்க அனுவுக்கு uniform போட்டு விடுங்க. ஸ்கூல் பஸ் வந்துடும். நான் கிரைண்டர்ல மாவு எடுத்துட்டு இருக்கேன்"

"கிரைண்டர் எல்லாம் அப்புறமா பகல்ல போட்டா என்னவாம்"

"பகல்ல கரண்ட் எங்க இருக்கு. ஜெனரேட்டர் வாங்கி குடுங்க. நான் பகல்லயே போட்டுக்கறேன்"

"எது சொன்னாலும் ஒரு செலவு சொல்லி என் வாய மூட கத்து வெச்சுருக்க"

"ஹ்க்கும்... உண்மைய தானே சொன்னேன். சரி சரி சீக்கரம் பாப்பாவுக்கு uniform போடுங்க" எனவும்

அதற்குள் தொலைபேசி அடிக்க "என்னங்க... அப்படியே போன் எடுத்து ஸ்பீக்கர்ல போட்டு பேசிட்டே பாப்பாவுக்கு uniform போடுங்க"

"ஏன் நீ மாவு எடுத்துட்டே அதை செய்யேன்"

"போன் உங்களுக்கு தான் இருக்கும். இந்நேரத்திக்கு எனக்கு யாரும் கூப்பிட மாட்டாங்க"

"ச்சே... ஒரு மனுஷன் எத்தன வேல தான் செய்யறது ஒரே நேரத்துல" என அலுத்து கொண்டே போனார் ரங்கமணி

சற்று நேரத்தில் தங்கமணியிடம் ஓடி வந்த அவள் செல்ல மகள் அனு "மம்மி டாடி uniform திருப்பி போட்டுட்டார்" என அழவும்

"என்னங்க இது. டிரஸ் உள்பக்கத்த வெளில வர்ராப்ல போட்டு இருக்கீங்க...இது கூட சொல்லி தரணுமா இந்த வயசுல உங்களுக்கு"

"போன் பேசிட்டே போட்டதுல ஏதோ மாறிடுச்சு. ஒரு மனுஷன் எத்தனை தான் செய்யறது" என ரங்கமணி கூற

"அகிலா சொன்னாப்ல நீங்கெல்லாம் DOS based system தான் இன்னும்" என தங்கமணி சத்தமாய் சிரித்தாள்

"என்னது? DOS based system ஆ? என்னென்னமோ ஒளர்ற"

"நான் ஒண்ணும் ஒளரல.. அது...ஹா ஹா அஹ" என தங்கமணி மீண்டும் அடக்க மாட்டாமல் சிரிக்க

"ஒண்ணு சொல்லிட்டு சிரி... இல்லேனா ரூம்குள்ள போய் ஒரு அரைமணிநேரம் சிரிச்சு முடிச்சுட்டு வா" எனவும்

"அது... நேத்து அகிலா சொன்னது எவ்ளோ கரெக்ட்னு நீங்க இன்னிக்கி நிரூபிச்சுட்டீங்க... அதான் சிரிப்பே அடக்க முடியல"

"அந்த அலட்டல்காரி என்ன சொன்னா என்னை பத்தி. அதை கேட்டு நீ சிரிக்க வேற செய்ற. என்னமோ DOS based system னு கொழப்பற"

"அகிலா சொன்னா Gents எல்லாம் DOS based system தானாம்.. அதாவது DOS ஒரு நேரத்துல ஒரு command தான் process பண்ணுமாம்... அது போல உங்களால மல்டி-டாஸ்கிங் செய்யவே முடியாதாம். நாங்க லேடீஸ் எல்லாம் advanced சிஸ்டம் விண்டோஸ் மாதிரியாம். ஒரே நேரத்துல எத்தன டாஸ்க் வேணும்னாலும் செய்வோம்னு சொன்னா" என மீண்டும் சிரிக்க

"அடிப்பாவிங்களா, கம்ப்யூட்டர் படிக்க போறேன்னு அங்கயும் எங்க மண்டைய தான் உருட்டரீங்களா"

"அவ சொன்னது சரி தானே. போன் பேசிட்டே Unifrom கரெக்ட்ஆ போட முடியலியே உங்களுக்கு" என தங்கமணி மடக்க

"இதை தான் வம்பை விலைக்கு வாங்கறதுன்னு சொல்றது போல. கம்ப்யூட்டர் க்ளாஸ்க்கு காசு கட்டுறதுமில்லாம புதுசு புதுசா நம்மள மடக்கரதுக்கு வேற கத்துட்டு வராங்க.. ஹும்" அப்படின்னு சொல்லிட்டு (மனசுக்குள்ள தான்) அதுக்கு மேல அங்க நின்னா வம்பாய்டும்னு ரங்கமணி எஸ்கேப் ஆய்ட்டார்

ஹா ஹா ஹா

குறிப்பு: 
நம்ம தங்கமணி ரங்கமணி கலாட்டாக்களை பத்தி வலைச்சரத்தில் நம்ம பதிவர் வித்யா சொல்லி இருக்காங்க... அவங்களுக்கு தங்கமணி ரங்கமணி சார்பாவும் நன்றி நன்றி நன்றி 

தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும் 


...

62 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

/Gents எல்லாம் DOS based system தானாம்.. /இல்ல..இல்ல..இல்ல! எங்க வீட்டு ரங்கமணி ஒரே நேரத்தில அஷ்டாவதானம் செய்வாரு புவனா! ஜெனரலைஸ் பண்ணாதீங்க.ஹிஹி

மகி said...

அதுக்காக நம்மள்லாம் விண்டோஸ் இல்லன்னு நான் சொல்லவே இல்ல! தாய்க்குலமே சண்டைக்கு வந்துராதீக!:):):)

anand said...

WinDOS!

நசரேயன் said...

//நீங்க இப்படி எதையோ பாத்து பயந்த மாதிரி முழிக்கறீங்க//

அதே கண்கள் படிச்சி இருப்பாரு

Anonymous said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

sriram said...

Windows is the most unreliable OS so far available.
அடிக்கடி க்ராஷ் ஆகும், எப்போ எப்படி பிஹேவ் பண்ணும்னு சொல்ல முடியாது.. அப்படின்னு சொல்றாங்களே அது உண்மையா??

காணாம போன கேடியக்கா இந்த பின்னூட்டம் படிச்சுட்டு கொதிச்சு எழுந்து வருவாங்க பாருங்களேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கோவை ஆவி said...

//யாரு... நம்ம கல்யாணத்துல ஒரு அம்பது ரூபா வால் கிளாக் பிரெசென்ட் பண்ணி அதுல நேரம் கூட பாக்க முடியாத படி மொத்தமா மறைச்சு "பெஸ்ட் காம்ப்ளிமண்ட்ஸ் - அகிலா" னு ஒரு அடி நீளத்துக்கு எழுதி இருந்தாளே, அந்த அலட்டல் அகிலா தானே"//

ஒரே நேரத்தில் கேள்விக்கு பதிலும் கொடுத்து, முன்னாடி நடந்த ஒரு விஷயத்த மெமரிலேர்ந்து எடுத்துவந்து நக்கலாக கமென்ட் அடித்த ரங்கமணியே சிறப்பாய் மல்டி-டாஸ்கிங் பண்ணியதாய் எனக்கு தோன்றுகிறது.

இப்பவும் DOS இருந்தாதான் விண்டோஸ் இன்ஸ்டால் பண்றது ஈசியாக்கும்!!!

Mahi said...

புவனா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

LK said...

நெகடிவ் வோட் போடலாமா ??

அன்னு said...

ஹி ஹி ஹி....சில சமயங்கள்ல ஒரியாக்காரருக்கு தமிழ் தெரிஞ்சா பரவாயில்லையேன்னு நினைப்பேன்.....இந்த பதிவைப் படிச்சதும் நினைச்சேன்....ஹி ஹி ஹி...அது சரி, தங்கமணி ரங்கமணி எல்லாம் பழைய அனுபவங்களா? சொல்லவே இல்ல?? இதே சாக்குல பெண்ணுரிமைய நிலை நாட்டிட்டீங்க புவன...கிரேட்!!

kavisiva said...

ஹா ஹா ஹா அப்பாவி எனக்கு சிரிப்பு தாங்கல :).

சௌந்தர் said...

"அடிப்பாவிங்களா, கம்ப்யூட்டர் படிக்க போறேன்னு அங்கயும் எங்க மண்டைய தான் உருட்டரீங்களா"///

அட டா உங்களுக்கு வேற உதாரணம் கிடைக்கவில்லையா

சௌந்தர் said...

kavisiva சொன்னது…
ஹா ஹா ஹா அப்பாவி எனக்கு சிரிப்பு தாங்கல :).///

அடுத்த ஆள் கிளம்பிட்டாங்க தாங்களை என்றால் விட்டு விடுங்கள்

சௌந்தர் said...

LK சொன்னது…
நெகடிவ் வோட் போடலாமா ??///

என்ன கேள்வி முதல் அதை செய்யுங்கள் இருங்க நான் நெகடிவ் வோட் போட்டு வரேன்

kggouthaman said...

// Gents எல்லாம் DOS based system தானாம்.. அதாவது DOS ஒரு நேரத்துல ஒரு command தான் process பண்ணுமாம்... அது போல உங்களால மல்டி-டாஸ்கிங் செய்யவே முடியாதாம். நாங்க லேடீஸ் எல்லாம் advanced சிஸ்டம் விண்டோஸ் மாதிரியாம். ஒரே நேரத்துல எத்தன டாஸ்க் வேணும்னாலும் செய்வோம்னு..//

உண்மைதான்... நானும் பிராக்டிகலாக இதைப் பார்த்திருக்கின்றேன்.

ராம்சுரேஷ் said...

விண்டோஸேதான் தங்கமணிகள். காரணங்கள் வருமாறு:


1. ஆபரேட்டிங் சிஸ்டமாக உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தல்.

2. நாம் எதுவும் செய்யாம சும்மா இருந்தாலும் “you have performed an illegal operation" என்று வசைபாடுதல்.

3. எந்த ப்ரோக்ராம் திறக்கணும்னாலும் ஆரம்பத்துலே இருந்து (Start) ஆரம்பித்தல்.

4. தனக்கு கம்பாடிபிளா இல்லாத எதையும் வீட்டுக்குள் விடாமல் இருத்தல்.

முக்கியமோ முக்கியமாக:
5. எங்கேயோ இருக்க பில் கேட்ஸை பணக்காரனாக்க இங்கே நம் காசைப் பிடுங்குதல்

நீங்க சொல்வது சரியே!

ஜெய்லானி said...

//"அடிப்பாவிங்களா, கம்ப்யூட்டர் படிக்க போறேன்னு அங்கயும் எங்க மண்டைய தான் உருட்டரீங்களா" //

ஹா...ஹா..ஹா...ஹா...ஹா....

Bala said...

yammadiov... ithu enna virusa vida bayangara thaakuthala irukku...

Gayathri said...

haha super comedy..

வேங்கை said...

ஹ ஹ ஹா

base ரொம்ப முக்கியங்க

இருந்தாலும் நல்லா இருக்கு

கமலேஷ் said...

சிரிச்சி வயிர வலிக்குது உங்களால..

vanathy said...

haha... very funny.

V.Radhakrishnan said...

ஹா ஹா! இப்படித்தான் பெண்கள் பலரும் நினைத்துக் கொண்டு ஒரு வேலை கூட உருப்படியாக செய்ய மாட்டேன்கிறார்கள். ;)

Rajaram said...

Ohoo.. adanaladaan Thangamani's (Windows) adikadi crash agarangala...moreover thangamani (windows) maintenance cost'm romba jaasti daan

அப்பாவி தங்கமணி said...

@ மகி - அநியாயம் இது... இப்படி சேம் சைடு கோல் போட்டுட்டீங்களே மகி... ஞாயமா இது? சரி உங்க ரங்கமணி ஒரு exception போல இருக்கு... மெஜாரிட்டி இப்படி தான்... இது உலகமறிந்த ரகசியம்... ரிசர்ச் பண்ணி எல்லாம் சொல்லி இருக்காங்களாம்... அதை போஸ்ட்ல போடாம விட்டுட்டேன் ச்சே... (ஹா ஹா ஹ)

அப்பாவி தங்கமணி said...

@ Anand - ஹா ஹா ஹா

@ நசரேயன் - //அதே கண்கள் படிச்சி இருப்பாரு/// அவர் உங்க ப்ளாக் பக்கம் தான் மெரண்டு போயிட்டாருன்னு நியூஸ் வந்ததே சார்

அப்பாவி தங்கமணி said...

@ Boston Sriram -
//Windows is the most unreliable OS so far available. அடிக்கடி க்ராஷ் ஆகும், எப்போ எப்படி பிஹேவ் பண்ணும்னு சொல்ல முடியாது.. அப்படின்னு சொல்றாங்களே அது உண்மையா?//

விண்டோஸ் அடிக்கடி கிராஷ் ஆகறதுக்கு கூட DOS தான் காரணம்னு நான் படிச்ச புக்ல போட்டு இருந்தது பாஸ்... அது நிஜமா?
(ஆஹா... இந்த TECH GEEKS / IT PROS எல்லாம் இங்க இருக்கறத மறந்துட்டனே... ஹா ஹா... )

//காணாம போன கேடியக்கா இந்த பின்னூட்டம் படிச்சுட்டு கொதிச்சு எழுந்து வருவாங்க பாருங்களேன்..//

அவங்க இமயமலை போய்டாங்க போல இருக்குங்க... சத்தமே காணோம்...

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி -
//ஒரே நேரத்தில் கேள்விக்கு பதிலும் கொடுத்து, முன்னாடி நடந்த ஒரு விஷயத்த மெமரிலேர்ந்து எடுத்துவந்து நக்கலாக கமென்ட் அடித்த ரங்கமணியே சிறப்பாய் மல்டி-டாஸ்கிங் பண்ணியதாய் எனக்கு தோன்றுகிறது//

ஆமாமா... தங்கமணி சைடுல யாரையாச்சும் கலாய்கறதுன்னா பிரைன் 200% வேலை செய்யும் தெரிஞ்சுது தானே... நாங்க சொல்றது மத்த டாஸ்க் எல்லாம்...

//இப்பவும் DOS இருந்தாதான் விண்டோஸ் இன்ஸ்டால் பண்றது ஈசியாக்கும்!!! //

Ofcourse, I can't agree more. But maintenance very difficult...ha ha ha...

அப்பாவி தங்கமணி said...

@ Mahi -

//புவனா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்//

வாவ்... ரெம்ப நன்றி மகி... இதோ வரேன்

அப்பாவி தங்கமணி said...

@ LK

//நெகடிவ் வோட் போடலாமா ?? //

போடலாம்... திவயம்மாவுக்கு நியூஸ் போகும்... ஒகேவா... (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு -
தேங்க்ஸ்ங்க அன்னு... அவருக்கு தமிழ் சொல்லி குடுத்துடுங்களேன்... நல்ல அரிய (!!!) கருத்துக்கள் எல்லாம் தெரிஞ்சுக்குவாரே... ஹா ஹா ஹா

//அது சரி, தங்கமணி ரங்கமணி எல்லாம் பழைய அனுபவங்களா? சொல்லவே இல்ல?//

ஆஹா... ஐயோ... சொந்த கதை எல்லாம் இல்லிங்க... முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே...


//இதே சாக்குல பெண்ணுரிமைய நிலை நாட்டிட்டீங்க புவன...கிரேட்!!//

எல்லாம் உங்கள போல தோழிகள் இருக்கற தைரியத்துல தான்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ //kavisiva சொன்னது… ஹா ஹா ஹா அப்பாவி எனக்கு சிரிப்பு தாங்கல :).//

ஹா ஹா அஹ... எனக்கும் தான்... தேங்க்ஸ் கவி

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர்
//அட டா உங்களுக்கு வேற உதாரணம் கிடைக்கவில்லையா //

நல்ல உதாரணம் நீங்களே சொல்லுங்க சார்... யூஸ் பண்ணிக்கறோம்... ஹா ஹா ஹா


//அடுத்த ஆள் கிளம்பிட்டாங்க தாங்களை என்றால் விட்டு விடுங்கள்//

நாங்க விடவெல்லாம் மாட்டோம்... ஸ்ட்ராங் சப்போர்ட் யு நோ... ஹா ஹா


//என்ன கேள்வி முதல் அதை செய்யுங்கள் இருங்க நான் நெகடிவ் வோட் போட்டு வரேன்//

ஹலோ சார்... உங்க கதை ஒகே...அவரு வீட்டுக்கு போகணும், அவரை ஏன் வம்புல கோத்து விடறீங்க? கார்த்தி இவங்க பேச்செல்லாம் கேட்டு சிக்கிக்காதே சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ kggouthaman -

//உண்மைதான்... நானும் பிராக்டிகலாக இதைப் பார்த்திருக்கின்றேன். //

ச்சே... நீங்க தான் சார் கிரேட்... கௌதமன் சார் வாழ்க வாழ்க

அப்பாவி தங்கமணி said...

@ ராம்சுரேஷ் -

//ஆபரேட்டிங் சிஸ்டமாக உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தல்.//

என்ன செய்யறது... வீட்டுல யாரோ ஒருத்தராச்சும் பிரைன் ஸ்டார்ம் பண்ணனுமே சார்...ஹா ஹா


//நாம் எதுவும் செய்யாம சும்மா இருந்தாலும் “you have performed an illegal operation" என்று வசைபாடுதல்.//

எதுவும் செய்யாம இருக்கறதை தான் அப்படி சொல்றோம்...கொஞ்சம் வீட்டு வேலைல ஹெல்ப் பண்ணுங்க... இந்த மெசேஜ் வராது.. ஹா ஹா அஹ


//எந்த ப்ரோக்ராம் திறக்கணும்னாலும் ஆரம்பத்துலே இருந்து (Start) ஆரம்பித்தல்//

என்ன செய்யறது... உங்களுக்கும் புரியணுமே ...ஹா ஹா ஹா


//தனக்கு கம்பாடிபிளா இல்லாத எதையும் வீட்டுக்குள் விடாமல் இருத்தல்.//

இல்லேனா பின்னாடி வம்பு வழக்குன்னு நீங்க அலைய கூடாதுன்னு ஒரு அக்கறை தான்... ஹா ஹா ஹா


//எங்கேயோ இருக்க பில் கேட்ஸை பணக்காரனாக்க இங்கே நம் காசைப் பிடுங்குதல்//

அப்படி சேத்து வெச்சு தானே கஷ்ட நேரத்துல உதவறோம்... ஹா ஹா


//நீங்க சொல்வது சரியே!//

எஸ் எஸ்...தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - ஹா ஹா அஹ... இது தான் பெஸ்ட்...

@ Bala - வாங்க பாலா...எஸ் எஸ்... பயங்கர தாக்குதல் தான்...

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ வேங்கை - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ கமலேஷ் -
//சிரிச்சி வயிர வலிக்குது உங்களால..//
ஆஹா... பெஸ்ட் காம்ப்ளிமன்ட்...நன்றி நன்றி நன்றிங்க கமலேஷ்

@ vanathy - தேங்க்ஸ் வாணி

அப்பாவி தங்கமணி said...

@ V.Radhakrishnan -
//ஹா ஹா! இப்படித்தான் பெண்கள் பலரும் நினைத்துக் கொண்டு ஒரு வேலை கூட உருப்படியாக செய்ய மாட்டேன்கிறார்கள். ;) //

அடப்பாவமே... இப்படி வேற ஒரு accusation ஆ எங்க மேல? எல்லாம் நேரம் தான்... உங்க வீட்டு அம்மணி நம்பர் குடுங்க சார்... கொஞ்சம் பேசணும்...ஹா ஹாஹா

அப்பாவி தங்கமணி said...

@ Rajaram -
//Ohoo.. adanaladaan Thangamani's (Windows) adikadi crash agarangala...moreover thangamani (windows) maintenance cost'm romba jaasti daan//

கிராஷ் ஆகறது கூட உங்களால தான்னு உங்களுக்கே தெரியுமே... maintenance காஸ்ட் ஜாஸ்தியா... எல்லாம் நேரம் தான்... (ஹா ஹா ஹா)

ஹுஸைனம்மா said...

இந்தப் பதிவுக்குப் பல + ஓட்டுகள் போடணும்கிறதுக்காகவே பல (போலி) ஐடிகள் உருவாக்கணும்னு தோணுது!! ச்சோ ச்சுவீட் ATM!!

பத்மநாபன் said...

டாஸ் டோஸோடு தலை தப்புச்சுதே...ஒன்னோன்னா செஞ்சாலும் உருப்படியா செய்யறது ரங்கர்கள் பாணி...அவங்கள திசை திருப்பி தடுமாற வைக்கறதே தங்கமணிகளின் பணி....

கோவை ஆவி said...

இந்த பதிவுல இருக்கற கான்செப்டை நான் ஒத்துக்க மாட்டேன். பட் நீங்க எழுதியிருந்த விதம் ரொம்ப நகைச்சுவையாவும், ரசிக்கும்படியும் இருந்தது.. நீங்க எப்பவுமே இப்படி தானா, இல்லே ரங்கமணி கிட்டேர்ந்து "acquire " பண்ணீட்டீங்களா??

தக்குடுபாண்டி said...

@ பாஸ்டன் நாட்டாமை - நம்ப கேடி அக்கா சியாட்டில் நகரம் முழுசும் மேடை மேடையா ஏறி ஒரே நாடகமா போட்டு தள்ளிகிட்டு இருக்காங்கலாம், அதனால நம்பளை எல்லாம் வந்து திட்டர்த்துக்கு கூட டைம் இல்லையாம் அவங்களுக்கு...:)

@ இட்லி மாமி - நம்ப நாட்டாமை சொன்னதை நான் வழிமொழிகிறேன்...:)

சே.குமார் said...

தங்கமணி - ரங்கமமி கலக்கல் காமெடி...
சரவெடி வச்ச மாதிரி ஹா....ஹா... ஹாஹா...

அமைதிச்சாரல் said...

//DOS ஒரு நேரத்துல ஒரு command தான் process பண்ணுமாம்..//

க்கும்.. அதைக்கூட ஒழுங்கா, உருப்படியா, தப்பில்லாம பண்ணத்தெரியாம முழிக்கிறத பார்க்கணுமே :-)))

r.v.saravanan said...

ஹா....ஹா... கலக்கல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த TECH GEEKS / IT PROS எல்லாம் இங்க இருக்கறத மறந்துட்டனே...////
அதானே.. பாருங்க கமெண்ட் எதிர் ஓட்டுன்னு இருக்காங்க.. ;))

இருந்தாலும் கிடைச்ச பாயிண்ட் வச்சி ரங்கமணிய கிண்டல் அடிக்கிறதெல்லாம் செம ..:)

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஆஹா... ஆஹா... ஆஹா... இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... தேங்க்ஸ்ங்க ஹுஸைனம்மா

@ பத்மநாபன் - அடுக்கு மொழில சொன்னா நாங்க ஒத்துப்போமா... அண்ணி ஈமெயில் ஐடி குடுங்க...அப்புறம் சொல்றோம் கதைய.... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - என்னாது? //ரங்கமணி கிட்டேர்ந்து "acquire " பண்ணீட்டீங்களா??// வா? ஏங்க... என்ன கொடுமைங்க இது? இதெல்லாம் இயற்கைக்கு எதிரான கேள்வி யு நோ... (ஹா ஹா ஹா)

@ தக்குடு - ஆஹா... மேடை நாடகமா? என்ன நடக்குது இங்க? கொடி... கொஞ்சம் எக்ஸ்ப்ளெயின் ப்ளீஸ்... நான் வழிமொழின்ஜாலும் இல்லைனாலும் ஞாயம் எங்க பக்கம் தான் சாரே...

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ அமைதிச்சாரல் - ஹா ஹா ஹா...நல்லா சொன்னீங்க அக்கா... சூப்பர்

@ r.v.saravanan - நன்றிங்க சரவணன்

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹா ஹா ஹா... நன்றிங்க அக்கா

தெய்வசுகந்தி said...

ஹா ஹா ஹா !

பத்மநாபன் said...

அப்ஸு..... அடுக்கு மொழின்னு சொன்னவுடனே நெனப்பு வந்தது ..

அகிலா டீச்சர் உண்மையிலே என்ன சொல்லிருப்பாங்கன்னா , ஜன்னல் வழியா ''மல்டி டாக்'' பண்ணறத பத்தி சொல்லிருப்பாங்க... ஜன்னல்ல பக்கத்து வீட்டு பரிமளா கிட்ட அரட்டை அடிச்சுட்டே , அந்த ஜன்னலுக்குள் ஜன்னல் வழியா அடுத்த விட்டு அன்னபூரணிகிட்டயும், சைடு ரூம் ஜன்னல் வழிய சைலஜா கிட்டயும் ,இந்த ஜன்னலுக்குள் ஜன்னலில் ஜான்வி கிட்டயும் ஒரே சமயத்துல ''மல்டி டாக்''' பண்றதுல கில்லாடிகள் தான் தங்கமணிகள் ..

வெட்டி அரட்டைன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு சண்டைக்கெல்லாம் வரக்கூடாது....ஆமா சொல்லிப்புட்டேன் ...மீறி வந்தா, தக்குடுகிட்ட சொல்லி மிச்ச மீதியும் எடுத்து விடச் சொல்லீருவேன்...

( தக்ஸ்..btw..கல்லிடையில் ஒட்டு கேட்டதல்லாம் ஞாபகம் இருக்கல்ல)

அப்பாதுரை said...

//"எது சொன்னாலும் ஒரு செலவு சொல்லி என் வாய மூட கத்து வெச்சுருக்க"

haaaaasyam.

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ் அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் -
//வெட்டி அரட்டைன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு சண்டைக்கெல்லாம் வரக்கூடாது....//

ச்சே ச்சே வெட்டி அரட்டை அண்ட் தங்கமணிஸ் doesn't go together... நாங்க எப்பவும் காரணமில்லாம அரட்டை அடிக்கறதில்ல யு நோ...

இதுல தக்குடு கூட்டு சதி வேற இருக்கா? தக்குடு வெயிட் அண்ட் சி...

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் -அண்ணா, அண்ணி நம்பர் கேட்டேனே... அதை பத்தி சத்தமே காணோமே... ஹா ஹா ஹா

பத்மநாபன் said...

மெளனம் சில இடத்துல தற்காப்பு ஆயுதம்..சொந்த செலவுல அடிவாங்கி மாவுகட்டு போட்டுக்க நான் தயாரா இல்லை... சரி இதுக்கெல்லாம் பயந்தா ஆகாது வச்சுக்கோங்க... தங்கமணிபத்மநாபன்@edhooru.com
( ok..ok. don't tension...ஒரிஜினல் id யை உங்க சொந்த மெயிலுக்கு அனுப்பி விடுகிறேன்.எப்படியும் pricol ஈஸ்வரன் கோவில்ல அரட்டை அடிச்சவங்களாத்தான் இருப்பீங்க )

Jaleela Kamal said...

செம்ம காமடி போங்க

அப்பாவி தங்கமணி said...

//பத்மநாபன் - மெளனம் சில இடத்துல தற்காப்பு ஆயுதம்..//

ha ha.. super email id...

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal - thank you

Post a Comment