Wednesday, November 24, 2010

வந்தேன் வந்தேன்...


நானே நானே
வந்தேனேனே
வந்ததுமே
ப்ளாக்கினேனே

கமெண்ட்ஸ் பாத்து
கந்தல் ஆனேன்
கண்ணீருல
கரைஞ்சு போனேன்

இன்ட்லி வோட்டு
பாத்து பாத்து
இதயம் கனத்து
போச்சுனேனே

ஹ்ம்ம்... இப்படி எல்லாருமா சேந்து பொலம்ப விட்டுடீங்களே... ஹ்ம்ம்... எதுக்கா? ஏன் கேக்க மாட்டீங்க?

ப்ளாக் ஆரம்பிச்சு நான் உசுர குடுத்து எழுதின 87 போஸ்ட்ல ஒன்ணத்துக்காச்சும் இத்தன வோட்டு விழுந்துருக்கா? நான் ஊருக்கு போறேன்னு சொன்ன போஸ்ட்க்கு 42 வோட்டு.... என்ன கொடும சார் / மேடம் இது?

இருங்க இருங்க எல்லாரையும் எழுதியே பழி வாங்குறேன்... இதுக்கெல்லாம் பயந்து போறவளா நானு... கொங்கு நாட்டு சிங்கி'ல (சிங்கம் female எபக்ட்க்கு சொல்றது)....ஒகே ஒகே... கூல் கூல்னு யாரோ சொல்றீங்க... அதனால விட்டுடறேன்... ஹ்ம்ம்... (ஹி ஹி ஹி)

நானே ஊருக்கு போயிட்டு திரும்ப வந்து, எல்லாரையும் பிரிஞ்ச சோகத்த மறக்க ப்ளாக் பக்கம் நம்ம மக்கள் இருக்காக நமக்குனு வந்தா, இந்த அக்கபோரு ஞாயமா உறவுகளே...

தக்குடுக்கு சொன்னது தான் எல்லாருக்கும் "Elephant க்கு ஒரு காலம் வந்தா cat க்கு ஒரு காலம் வருமுங்கோ..." ஆமாம் சொல்லிட்டேன்... ஹ்ம்ம்

சரி பொலம்பல் போதும் மேட்டர்க்கு போவோம்...

பயம் வேண்டாம், பயண கட்டுரை எல்லாம் போட்டு கொல்ற எண்ணமில்ல... போனமா வந்தமான்னு சுருக்கமா சொல்லிடறேன்.. (டேமேஜ் அப்படி...ஹ்ம்ம்...)

சரிங்க... இங்க இருந்து கெளம்பி நேரா துபாய் போனோமா. நேரானா நேரா இல்ல... flight அப்படி இப்படி வளைஞ்சு நெளிஞ்சு தான் போய் இருக்கும், அதை பத்தி விவரம் எல்லாம் நீங்க பைலட்கிட்ட தான் கேக்கணும்

என்னை ஓட்ட விட்டுருந்தா நான் நேராவே கூட்டிட்டு போய் இருப்பேன், ஆனா எங்கேனு எல்லாம் கேக்க கூடாது. கிட்டத்தட்ட பதினாலு மணிநேரம் flight, அதான் பெரிய கொடுமை

ரங்க்ஸ் சில வருஷம் அந்த ஊர்ல இருந்ததால துபாய்ல இருந்த அவரோட நட்பு வட்டத்தை சந்திச்சோம். அப்படியே ஹுஸைனம்மா / காயத்ரி / ஜெய்லானி எல்லார்கிட்டயும் சொல்லி ஒரு துபாய் பதிவர் சந்திப்பு போட்டுடனும்னு தான் துடித்தது மனம்

ஆனா ரெண்டு நாளுல இவரோட நட்பு அளாவலுக்கே போதலை, எல்லாரையும் ரெம்ப நாள் கழிச்சு பாத்ததுல எனக்கும் ரெம்ப சந்தோசமாவும் இருந்தது

நாங்க அங்க இருந்தப்ப இருந்ததுக்கு துபாய் ரெம்பவே மாறிபோச்சு இந்த ஏழு வருசத்துல. புதுசா மெட்ரோ ரயில், உலகத்தின் உயரமான கட்டிடம், Palm பீச், நெறைய புது கட்டிடங்கள் எல்லாம் முடிஞ்ச வரை பாத்தோம்

அப்புறம் இந்தியா போனோம், சென்னை ஏர்போர்ட்ல சாலமன் பாப்பையாவை பாத்தோம், கூட ராஜாவும் இருந்தாரு. ஏதோ தீபாவளி பட்டிமன்றம் போல இருக்குனு நெனச்சுட்டோம். ஏன் தொந்தரவு பண்ணனும்னு பேசலை

உண்மைய சொல்லணும்னா எப்படா கோயம்புத்தூர் போய் சேருவோம்ங்கற அவசரத்துல வேற எதுலயும் கவனம் பதியல

என்னோட அவசரத்துக்கு ஏத்தாப்ல, சென்னைல Flight ஏறி உக்காந்து சீட் பெல்ட் கூட போட்டப்புறம் கோயம்புத்தூர்ல லேண்டிங் பண்றதுக்கு தகுந்த சிதோஸ்னம் இல்லைனு அப்படியே உக்கார வெச்சுட்டான்

செம எரிச்சலா போச்சு, என்ன பண்ண முடியும்? இதென்ன 102A டவுன் பஸ்சா? நிறுத்துயா நான் எறங்கி வேற வண்டி ஏறிக்கறேன்னு சொல்றதுக்கு, பேசாம ஒரு மணிநேரம் நொந்து போய் இருந்தோம்

ஒரு வழியா கோயம்புத்தூர் போய் சேந்தோம், ஒண்ணரை வயசு குழந்தையா பாத்த என் தங்கை மகள் என்னை அந்நியமா பார்ப்பாளோனு பயந்து போய் இருந்தேன், ஆனா என்னை பாத்ததும் ஓடி வந்து கட்டிக்கிட்டா... ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு அந்த நிமிஷம்...

அம்மா அப்பா அத்தை மாமா உறவு மக்கள்னு அப்படியே அன்பு வெள்ளத்துல மெதந்துட்டு இருந்தோம் அன்னிக்கி பூராவும்

ஸ்டாண்டர்ட்ஆ ஒரு அஞ்சு கேள்வி எல்லாரும் கேட்டாங்க எப்பவும் போல

- எத்தனை நாள் இருப்ப?
- அங்க ரெம்ப குளிரா?
- எப்ப ஊருக்கே வந்து செட்டில் ஆகற?
- ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி இருக்கு?
- சமையல் எல்லாம் ஒழுங்கா செஞ்சுகறையா? (இதான் கொஞ்சம் டெரர் கிளப்பின கேள்வினு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல)

மறுநாள் அப்பா தீபாவளி பர்சேஸ் போகணும்னு கூட்டிட்டு போயிட்டாரு. RMKV கடை புதுசா கோவைல போட்டு இருக்கான், எல்லாம் அங்கேயே வாங்கிக்கலாம்னு எல்லாரும் சொல்ல அங்கே போனோம்

போற வழில வடகோவை அன்னபூர்ணால ஒரு சுவாரஷ்யமான சம்பவம் நடந்தது, அதை தனி பதிவா போடறேன் (ஹா ஹா ஹ). அப்புறம் ஜவுளி எல்லாம் முடிச்சு வீடு வந்து சேந்தப்ப கிட்டத்தட்ட நைட் மணி பத்து

ஷாப்பிங் என்னமோ கொஞ்சம் தான் (அதை பில் கட்டின எங்க அப்பாகிட்ட கேட்டாதான் தெரியும்), ஆனா டிராபிக் மகா கொடுமைடா சாமி

இருபது கிலோ மீட்டர் தூரத்த ரெண்டு மணி பயணம் செஞ்சோம். சில இடங்கள்ல நான் கண்ணை மூடி உக்காந்துட்டேன். எதிர்புறம் / சைடுல வர்ற டிராபிக் பாத்தா ரெம்ப பயமா இருந்தது

இதே ஊர்ல தான் எத்தனை வருஷம் ஸ்கூல் காலேஜ்னு பஸ்ல போய் இருக்கேன். அப்பவெல்லாம் இவ்ளோ கார் / டூ வீலர் கிடையாது. மக்கள் தொகையும் கூடி போன மாதிரி தோணுது

எந்த கடைல பாத்தாலும் பீகாரிஸ், அஸ்ஸாமிஸ், நேபாளிஸ் வேலைக்கு இருக்காங்க. இது தான் நான் பார்த்த பெரிய மாற்றம் ஊர்ல

அப்புறம் சில வருசங்களுக்கு பிறகு குடும்பத்துல எல்லாரும் சேந்து கொண்டாடின தீபாவளி மறக்க முடியாத ஒரு நிகழ்வு

நெறைய போட்டோ வீடியோனு சேமிச்சுட்டு வந்திருக்கேன், அதானே இனி மறுபடி எல்லாரையும் பாக்கற வரை டானிக்

நெறைய உறவுகளை சந்திச்சேன். நெறைய பேரு நேரம் குறைவுங்கர சூழ்நிலைய புரிஞ்சுட்டு அவங்களே வந்து பாத்துட்டு போனாங்க. அது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது

வர முடியாத நிலைல இருக்கற வயோதிக உறவுகளை நாங்க போய் பாத்தோம், அதில் நாங்க போன முறை பாத்த சில உறவுகள் இப்ப இல்ல. மனசுக்கு ரெம்ப வேதனை தந்த நேரம் அது

இந்த முறை பாத்த சிலரை மறுபடியும் பார்போமானு மனசுல தோணினதை மறுக்க முடியல. பணத்துக்காக வாழுற இந்த நாடோடி வாழ்கையின் மிச்சம் அதான்னு கொஞ்சம் வெறுப்பா உணர்ந்த தருணம் அது

முதல் வாரம் இப்படி ஓடி போச்சு. அப்புறம் ரெண்டாவது வாரம் வழக்கம் போல காய்ச்சல், சளி, infection. ஆனா கேக்கறதுக்கு முன்ன மிளகு ரசமும், அம்மாவின் தைலம் தடவலும் இன்னும் கொஞ்சம் நாள் படுத்து இருப்போம்னு தோண வெச்சது நிஜம், பொய் சொல்ல விரும்பலை

இனிமே ஊருக்கு போறப்ப செய்ய வேண்டிய லிஸ்ட்ல ரெண்டு நாளாச்சும் காய்ச்சல் வந்து கவனிப்பை அனுபவிக்கணும்ங்கறதை லிஸ்ட்ல சேத்துப்பேனு நினைக்கிறேன்... ஹா ஹா

மூணாவது வாரம், அதாவது கடைசி வாரம் கொஞ்சம் ஷாப்பிங், டெய்லர்கிட்ட அலைஞ்சது (அந்த கொடுமைய மட்டும் தனி பதிவா போடறேன் பின்ன), பாக்கிங் அப்படி இப்படினு ஓடி போச்சு

இத்தனைக்கு நடுவுலயும் குலதெய்வ கோவில் விசிட், அம்மா மற்றும்               அம்மா(மாமியார்) உனக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் பாத்து பாத்து செஞ்சத ருசிச்சது, நண்பர்கள் விசிட் அடிச்சது, தங்கையோட விடிய விடிய அரட்டை, அவ வாண்டுக பேச்சுல சின்ன வயசு எங்க நாட்கள அசை போட்டது இப்படி நெறைய நெறைய

எழுதினா எழுதிட்டே இருப்பேன், ஆனா பாவம் நீங்க, வேண்டாம் விட்டுடறேன்... ஹா ஹா

இது தான் நீ சுருக்கமா சொல்ற அழகானு நீங்க திட்டறது புரியுது... என்ன செய்ய? அப்படியே வள வளனு பேசியே வளந்துட்டோம்... ஹி ஹி ஹி

வேற என்ன சொல்லல... இப்ப ஒரே சோக ராகம் தான் பாடிட்டு இருக்கேன்... மறுபடி எப்படா ஊருக்கு போவோம்னு அதே தோணிட்டு இருக்கு... போயிட்டு வந்து கொஞ்ச நாள் இப்படி தான் எப்பவும்... அப்புறம் நிதர்சனத்துக்கு பழகிடுவோம்... வேற வழி...

ஒகே... கொஞ்சம் மூட் சரி ஆனப்புறம் மெதுவா தனி தனி பதிவா ஊர்ல நடந்த சில காமெடி மற்றும் டிராஜடி நிகழ்வுகளை எழுதறேன்...

இன்னுமா... னு யாருங்க அங்க மயங்கி விழறது...ஹா ஹா... இது வெறும் சாம்பிள் தான் யு சி... ஹா ஹா ஹா...

முடிவல்ல ஆரம்பம்... ஹா ஹா ஹா...

(இன்னுமா திருந்தல இவ...ஹ்ம்ம்... - மைண்ட்வாய்ஸ்)...

104 பேரு சொல்லி இருக்காக:

தெய்வசுகந்தி said...

வாங்க தங்கமணி!! அப்பறமா வந்து படிச்சுட்டு சொல்றேன்.

தெய்வசுகந்தி said...

வட எனக்கா!

Gopi Ramamoorthy said...

நல்லா புலம்புறீங்க. அப்பாவி தங்கமணி - பேர்ல லாஜிக் இடிக்குதே! ஏற்கனவே இதை பஸ்ல ஒரு வாட்டி சொல்லி இருக்கேனோ?

ராமலக்ஷ்மி said...

பாட்டு நல்லாருக்கு:))! பதிவும்.

நசரேயன் said...

இவ்வளவு நாளா நாங்க நிம்மதியா இருந்தோம் .. இனிமேல ரெம்ப கஷ்டம் தான்

Krishnaveni said...

Welcome back Thangam. Nice post. Hope you are enjoying heavy snow or rain at your place

அன்னு said...

வாங்க வாங்க...ஆஹா அதுக்குள்ள வந்துட்டீங்களா? என்ன இது?? வலையுலகத்துக்கு அதுக்குள்ள விடிவுகாலம்னு யோசிச்சது தப்பா போச்சே... :))

அன்னு said...

//கோவை அன்னபூர்ணால ஒரு சுவாரஷ்யமான சம்பவம் நடந்தது, அதை தனி பதிவா போடறேன்//

இதிலென்ன பெரிய ரகசியம்? அங்கத்து இட்டிலியும் உங்க இட்டிலி மாதிரியே இருந்ததுன்னு அண்ணன் சொல்லியிருப்பார்...அதானே...அந்த நிலைலதான் கோவை இருக்கு :)

மோகன்ஜி said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கன்னு உண்ம ஐயாவே சந்தோஷப் படுகிறேன் மேடம்! வடகோவை அன்னபூர்ணாவை ஞாபகப் படுத்திட்டீங்க! நான் கோவையில் இருந்த நாட்களையெல்லாம் நினைக்க வச்சுட்டீங்க.
துணிஞ்சு பயணக் கட்டுரை எழுதுங்க சொல்றேன்! படிக்க நானாச்சு!

dineshkumar said...

வாங்க வாங்க ஆமாம் தீபாவளி பலகாரம்லாம் இல்லையா

யாதவன் said...

அருமை வாழ்த்துகள்

asiya omar said...

அருமையான பகிர்வு.வாங்க,வாங்க மைண்ட்வாய்ஸ் காணோமேன்னு பார்த்தால் முடிவுல போட்டு அசத்திட்டீங்க,எனக்கு கோவையை நினைவு படுத்தி விட்டுட்டீங்க,TNAU விட்டு வந்து 20 வருடமாகிறது.

S.Menaga said...

welcome back bhuvana!!

பத்மநாபன் said...

நல்வரவு..... எங்க? வலையுலகத்துக்குத்தான் ....

கோவையை கோடிட்டு காட்டியதற்கு மகிழ்ச்சி நன்றி..

அன்னபூர்ணா சாம்பார் வடையை நினவு படுத்தியதற்கும் நன்றி...

Arun said...

கொங்கு நாட்டு சிங்கியே நல்லா பொலம்பறீங்க sorry எழுதறீங்க

Nithu Bala said...

Welcome Back:-) nalla irundhathu pathivu...பணத்துக்காக வாழுற இந்த நாடோடி வாழ்கையின் மிச்சம் அதான்னு கொஞ்சம் வெறுப்பா உணர்ந்த தருணம் அது// Unmaya varthaikal..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வந்தாச்சா....யப்பாடி என்னாவொரு புலம்பல்.. என்ன ஒண்ணு படிக்க படிக்க படிச்சிக்கிட்டே இருக்கலாம் போல‌... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Balaji saravana said...

//"சிங்கி" (சிங்கம் female எபக்ட்க்கு சொல்றது )//
இதுக்கு இப்படிக் கூட விளக்கம் சொல்லலாமா? # டவுட்டு :))

LK said...

//ங்கத்து இட்டிலியும் உங்க இட்டிலி மாதிரியே இருந்ததுன்னு அண்ணன் சொல்லியிருப்பார்./

athe aathe

டம்பி மேவீ said...

wellcome. nice post

BalajiVenkat said...

Welcome back....

LK said...

rangs ,nalla idli saptaara illaiyaa ?

அனாமிகா துவாரகன் said...

@அன்னு,
//வாங்க வாங்க...ஆஹா அதுக்குள்ள வந்துட்டீங்களா? என்ன இது?? வலையுலகத்துக்கு அதுக்குள்ள விடிவுகாலம்னு யோசிச்சது தப்பா போச்சே... :))//

இதுக்கு நானே பரவாயில்லக்கா.

அனாமிகா துவாரகன் said...

//இதிலென்ன பெரிய ரகசியம்? அங்கத்து இட்டிலியும் உங்க இட்டிலி மாதிரியே இருந்ததுன்னு அண்ணன் சொல்லியிருப்பார்...அதானே...அந்த நிலைலதான் கோவை இருக்கு :) //

ஹே யாரது இந்த அன்னு? நம்ம இட்லி மாமிய இப்படி கலாய்க்கிறது. எடு பிளைட்ட.


போய் ஒரு பராட்டு விழா நடத்த தேன். ஹா ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

என்ன கேள்வி கார்த்தி சார். கோவிந்த் மாமா நன்னா சாப்பிட்டிருப்பார். இனி இன்னொரு மூணு வருசத்துக்கு இவங்க சாப்பாட்ட கொட்டிக்கணுமே.

இப்பெல்லாம் எதாவது மனசுக்கு கஷ்டமா நடந்தா, நான் அழுவதே இல்லை. உடனேயே கோவிந்த் மாமாவை நினைச்சுப்பேன். அவர விடவா எனக்கு கஷ்டம் வந்திடுச்சுன்னு நினைச்சுப்பேனா, அப்படியே கவலை ஓடிப்போய்டும். ஹா ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

இவங்க வந்திட்டாங்கன்னு எல்லாரும் கவலை பட்டுட்டு எதுக்கு பிளஸ் ஓட்டு போடறீங்க. போய் எல்லோரும் இரண்டு இரண்டு போலி மைனஸ் ஓட்டு போடுங்க. =))

அனாமிகா துவாரகன் said...

என்ன தான் சொன்னாலும், நான் உங்கள் கொஞ்சம் அப்பப்போ (நோட் திஸ் பொயின்ட் யுவர் ஒனர்: கொஞ்சமே தான் அதுவும் அப்பப்போ. எப்பவும் இல்லை) மிஸ் பண்ணினேன்க்கா.

Arul Senapathi said...

Welcome Back.

siva said...

பல தீவிர வாதிகளால்
தேடப்பட்டு வந்த
அப்பாவி தங்கமணி
அவர்கள் மீண்டும்
வந்துவிட்டார்...

ரணகள படுத்த ஆயுதம்
இந்தியாவில இருந்து கொண்டு வந்து உள்ளார்
அனைவரும் மிக ஜாக்கிரதையாக இருக்கும்படி
அகில உலக அப்பாவி தங்கமணி
ரசிகர் மன்றம் கேட்டுகொள்கிறது..

siva said...

சாரி தீவிர வாசர்கர்கள் அப்டின்னு போடணும்
மறந்துவிட்டேன்

எங்கனம்
அ.உ .அ.த.ர ம...
(அகில உலக அப்பாவி தங்கமணி ரசிகர் மன்றம் )

siva said...

ப்ளாக் ஆரம்பிச்சு நான் உசுர குடுத்து எழுதின 87 போஸ்ட்ல ஒன்ணத்துக்காச்சும் இத்தன வோட்டு விழுந்துருக்கா? நான் ஊருக்கு போறேன்னு சொன்ன போஸ்ட்க்கு 42 வோட்டு.... என்ன கொடும சார் / மேடம் இது? ////

angathan nama rasigargal evlo paasama erukkanganu..puricikanum.

anboda vilipaadu ethu...

வெறும்பய said...

வாங்க வாங்க...

சுந்தரா said...

வாங்க புவனா...வந்ததுமே பாட்டுப்பாடி அசத்திட்டீங்க :)

//இந்த முறை பாத்த சிலரை மறுபடியும் பார்போமானு மனசுல தோணினதை மறுக்க முடியல. பணத்துக்காக வாழுற இந்த நாடோடி வாழ்கையின் மிச்சம் அதான்னு கொஞ்சம் வெறுப்பா உணர்ந்த தருணம் அது //

வலிக்கிற நிஜம்.

பதிவுலகில் பாபு said...

////ப்ளாக் ஆரம்பிச்சு நான் உசுர குடுத்து எழுதின 87 போஸ்ட்ல ஒன்ணத்துக்காச்சும் இத்தன வோட்டு விழுந்துருக்கா? நான் ஊருக்கு போறேன்னு சொன்ன போஸ்ட்க்கு 42 வோட்டு.... என்ன கொடும சார் / மேடம் இது? ////

ஹா ஹா ஹா..

VELU.G said...

வாங்க வாங்க ஊர் பயணமெல்லாம் சுகமா அமைஞ்சதுக்கு வாழ்த்துக்கள்

உங்க பதிவு படிக்காமா ரொம்ப நாள் ஏங்கி போய்ட்டோம் ( ஐயோ அடிக்காதீங்க அடிக்காதீங்க எவன்டாது பேசிட்டிருக்கும் போது அடிக்கிறது பேச்சு பேச்சோடதான்இருக்கனும் சொல்லிப்புட்டேன்)

நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

சௌந்தர் said...

அப்புறம் இந்தியா போனோம், சென்னை ஏர்போர்ட்ல சாலமன் பாப்பையாவை பாத்தோம், கூட ராஜாவும் இருந்தாரு. ஏதோ தீபாவளி பட்டிமன்றம் போல இருக்குனு நெனச்சுட்டோம். ஏன் தொந்தரவு பண்ணனும்னு பேசலை ////

நல்ல வேளை பேசலை பேசி இருந்தா பட்டிமன்றம் கேன்சல் ஆகி இருக்கும்

சௌந்தர் said...

ஓஹ இது ட்ரைலர் தானே suuuu இதுக்கே தல சுத்துது இன்னும் எத்தனை பதிவு apppaaaaaaaaaaaaaaaa முடியாது டா சாமீ...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
இந்த முறை பாத்த சிலரை மறுபடியும் பார்போமானு மனசுல தோணினதை மறுக்க முடியல. பணத்துக்காக வாழுற இந்த நாடோடி வாழ்கையின் மிச்சம் அதான்னு கொஞ்சம் வெறுப்பா உணர்ந்த தருணம் அது
//
நானும் உணர்ந்த நிதர்சனம்..........

ஹுஸைனம்மா said...

இவ்வளவு ஷார்ட் லீவா? பாவம். (நாங்க).

ஆனா ரொம்ப மோசம் நீங்க. துபாய்ல் ரெண்டு நாள் இருந்த பிறகும் தகவல் சொல்ல. ஃபோன்லயாவது பேசிருக்கலாம்.

பரவால்ல. வந்தவுடனே உற்சாகமாப் பதிவு போட்டது சந்தோஷமாருக்கு.

Madhavan Srinivasagopalan said...

வருக.. வணக்கம்,

//இதே ஊர்ல தான் எத்தனை வருஷம் ஸ்கூல் காலேஜ்னு பஸ்ல போய் இருக்கேன். அப்பவெல்லாம் இவ்ளோ கார் / டூ வீலர் கிடையாது. //

ஞாயமான வார்த்தை..

//மக்கள் தொகையும் கூடி போன மாதிரி தோணுது //

கிண்டல்.. ம்ம்ம்ம்.. ஒக்கே ஒக்கே


//ப்ளாக் ஆரம்பிச்சு நான் உசுர குடுத்து எழுதின 87 போஸ்ட்ல ஒன்ணத்துக்காச்சும் இத்தன வோட்டு விழுந்துருக்கா? நான் ஊருக்கு போறேன்னு சொன்ன போஸ்ட்க்கு 42 வோட்டு.//

எப்படி இருந்த நா, நீங்க ஊருக்குபோனதுக்கபுரம் நல்லா ஆடி, செஞ்சுரிய கிராஸ் பண்ணிட்டேன்.... நீங்க போனாதுகப்புரம் இந்த மாதிரி நல்லதுலாம் நடந்துதுச்சி.. அதான்..

வேங்கை said...

ஓட்டு போட்டாச்சுங்க புலம்பாதிங்க !!!!!!!!!

பாலாஜி சங்கர் said...

சுவாரஸ்யமாக இருந்தது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போகும்போது மைன்ட் வாய்ஸை இங்கயே விட்டுட்டு ப்போயிட்டீங்களா.. என்ன

அது திருந்திடுச்சே :)

Prasanna said...

ஹா ஹா ஹா
Good Joke ;)

Anu said...

Neenga ellama orae borae erunthathu.. Thanks for coming.. waiting to see your posts..

sakthi said...

வாங்க வாங்க நம்ம ஊர் புகழை நல்லாத்தான் பாடறீங்க நடத்துங்க !!!!

எஸ்.கே said...

ரொம்ப நல்லா இருந்தது!

தி. ரா. ச.(T.R.C.) said...

சமையல் எல்லாம் ஒழுங்கா செஞ்சுகறையா? (இதான் கொஞ்சம் டெரர் கிளப்பின கேள்வினு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல

this question was addressed to rangamani. you have no right to claim credit for this

பிரியமுடன் ரமேஷ் said...

வாங்க...


//பணத்துக்காக வாழுற இந்த நாடோடி வாழ்கையின் மிச்சம் அதான்னு கொஞ்சம் வெறுப்பா உணர்ந்த தருணம் அது

Touching

Gayathri said...

நீங்க ஊருக்கு போனதால :

ப்ளாக்கூர் வேருச்சொடி போச்சு,

எல் கே குஜராத் போவாதாக முடிவெடுத்து விட்டார்,

நான் எழுதுவதையே நிறுத்தி இருந்தேன்,

சந்தியா மாமியோ ஆன்லைன் வருவதையே விட்டு விட்டார்...

இனி எங்களை இப்படி வதைகாதீர்

சுசி said...

நான் ஊருக்கு போய் வந்தா மாதிரி இருக்கு புவனா..

திரும்பி வரும்போது ஃப்ளைட்ல இருக்கும்போது வருமே ஒரு அழுகை.. ஆவ்வ்வ்வ்..

வெங்கட் நாகராஜ் said...

Welcome back!

jeyashrisuresh said...

thats a nice post. enjoyed reading every line. Welcome back. waiting for more stories

Lakshmi said...

நானும் உங்ககூடவே உங்க ஊருக்கு வந்ததுபோல இருந்ததௌ.

கோவை ஆவி said...

அப்பாவி தங்கமணி அவர்களே!

உங்க பாட்டை பஞ்ச தந்திரம் (வந்தேன் வந்தேன்..) ஸ்டைலில் பாடியபோது Perfect ஆ மேட்ச் ஆச்சு.. அருமையான துவக்கம்.. ரொம்ப நாள் One -Day விளையாடாத சச்சின் திரும்ப வந்து செஞ்சுரி போட்ட மாதிரி.

ஊருக்கு போறேன்னு சொன்ன போஸ்ட்க்கு 42 வோட்டு கிடைச்சுதுன்னு தப்பா நினைச்சுகாதீங்க.. உங்கள இப்பதான் எல்லோருமா சேர்ந்து "நட்சத்திர பதிவரா" உயர்த்திருக்கோம்.

//சென்னை ஏர்போர்ட்ல சாலமன் பாப்பையாவை பாத்தோம்//

அவர் உங்கள பாத்தாரா???


//இதென்ன 102A டவுன் பஸ்சா//

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சீட் சரியல்ல, ரோடு சரியில்லேன்னு குறை சொல்லிட்டு இருந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்திருக்குமே..


//ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு அந்த நிமிஷம்...//

அழரதுக்குன்னு தனியா ஆள் வச்சிருந்தீங்களா??// பணத்துக்காக வாழுற இந்த நாடோடி வாழ்கையின் மிச்சம் அதான்னு கொஞ்சம் வெறுப்பா உணர்ந்த தருணம் அது //

இது வெளிநாட்டில் வாழும் நம்மைப் போன்ற எல்லோருக்கும் வரமிருந்து கிடைத்த சாபம்..//எழுதினா எழுதிட்டே இருப்பேன், ஆனா பாவம் நீங்க, வேண்டாம் விட்டுடறேன்... ஹா ஹா //
நீங்க பாட்டுக்கு ஜாலியா ஊருக்கு போயிட்டீங்க.. இங்க உங்க பதிவுகள் வராம மரத்துல இருந்து இலைகள் கொட்டிப் போச்சு, வானம் கண்ணீர் சிந்திக்கிட்டே இருக்கு, புதுசா தமிழ் படங்கள் எதுவும் வெளிவரல.. மொத்தத்துல பதிவுலகமே ஸ்தம்பிச்சுப் போச்சு.. (ஆ..யார்ரா அது.. கல் எறியறது..)

//முடிவல்ல ஆரம்பம்...//
ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணை கட்டுதே!!!

கோவை ஆவி said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

அடேடே....ஊர்லேருந்து வந்தாச்சா...

கோவை ஆவி said...
This comment has been removed by the author.
பிரதீபா said...

அன்னபூர்ணா வெண்பொங்கல் சாப்பிட்டீங்களா? ஒரு வாட்டியாச்சும்? ஹ்ம்ம்மம்ம்ம்ம்

anu said...

Very nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good article

திவா said...

//ஒண்ணரை வயசு குழந்தையா பாத்த என் தங்கை மகள் என்னை அந்நியமா பார்ப்பாளோனு பயந்து போய் இருந்தேன், ஆனா என்னை பாத்ததும் ஓடி வந்து கட்டிக்கிட்டா... ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு அந்த நிமிஷம்...//

டச்சிங்ஸ்? :-))))))
உண்மைதான், குழந்தைங்க அடையாளம் கண்டுண்டா அவ்வளோ சந்தோஷம் இருக்கும்!

ரஜின் said...

ம்ம்...கொங்கு நாட்டு சிங்கி'யா..கொஞம் ஓவராத்தா போகுது...அப்போ இனிமே சிங்கமணின்னு கூப்டலாமா?
அப்ரோ///
என்னது துபாய் வந்தீங்களா?..ளா? ளா? ளா?..
நாங்கள்லா இங்க எதுக்கு இருக்கோம்..துபாய முன்னேத்தாம,என் தாய் மண்ண மிதிக்க மாட்டேன்ன்னு,எ மாமியார் மேல சத்தியம் பண்ணிட்டுல வந்துருக்கேன்..அடுத்தமாசம் ஊருக்கு போரேன்.அது வேர விஷயம்.test பண்ணனும்ல,சத்தியம் வேல செய்தா இல்லையான்னு..
மற்றபடி,திரும்பவும்,தங்களது மேலான சிங்கி பதிவுகளை படித்தாகவேண்டிய கட்டாயத்திற்கு இவ்வளவு சீக்கிரம் வருவோம்ன்னு,கனவுலையும் நினைக்கலை...
)just kidding(
அன்புடன்
ரஜின்

r.v.saravanan said...

பாட்டு நல்லாருக்கு

☀நான் ஆதவன்☀ said...

துபாய் வந்திட்டு ஒன்னும் சொல்லாம போயிட்டீங்களே... சொல்லியிருந்தா பிரமாண்ட விழாவே ஏற்பாடு பண்ணியிருக்கலாமே! :)

Harini Sree said...

welcome back! ooruku pona appa vazhi anupa vara mudiyala athaan vantha appa varaverkkaren! :D

Mahi said...

வெல்கம் பேக் புவனா! :)

LK said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - ஆமாங்கோ...உங்களுக்கே வடை... நன்றி

@ Gopi Ramamoorthy - பேர்ல லாஜிக் இடிக்குதா... என்னங்க நீங்க நான் போடற போஸ்ட்லையே யாரும் லாஜிக் தேடுறதில்ல... நீங்க பேருல எல்லாம் தேடலாமோ... அதுவும் நான் அப்பாவி வேற... மீ எஸ்கேப்...

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க லக்ஷ்மி

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - ஹா ஹா... விடாது அப்பாவி தான்... நோ டவுட்...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... ஸ்னோ இன்னும் நெறைய வரலங்க... கொஞ்சம் கொஞ்சம் தான்....மழை தான் விடறாப்ல காணோம்... உங்க ஊர்ல எப்படி?

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு -

என்னாது? அதுக்குள்ள வந்துட்டீங்களாவா? என்னைய காணமுன்னு எல்லாரும் ரெம்ப வருத்தப்பட்டு இருப்பீங்கன்னு அப்பன் ஆத்தாள கூட விட்டுபோட்டு ஓடோடி வந்தா... ஹும்... நல்ல வரவேற்ப்பு தான்... அன்னு ப்ருடஸ்....டௌன் டௌன்

அன்னபூர்ணால நாங்க இட்லியே சாப்பிடல.....என் இட்லி தவிர வேற இட்லி சாப்டேன்னு எங்க ஆத்துகாரர் தர்ணா தெரியுமோ... ஹா ஹா ஹா... அன்னபூர்ணால நடந்தது வேற கதை... அப்புறம் சொல்றேன்...

அப்பாவி தங்கமணி said...

@ மோகன்ஜி - ரெம்ப நன்றிங்க மோகன்ஜி... நல்ல இந்த அன்னுவுகெல்லாம் கேக்கறா மாதிரி சத்தமா சொல்லுங்க... நன்றி நன்றி நன்றி

@ dineshkumar - பலகாரம் பார்சல்ல வரும்... போஸ்ட் மட்டும் தானுங்க ப்ளாக்ல வரும்... ஹி ஹி

@ யாதவன் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ asiya omar - ஆஹா... இருபது வருசமாச்சா ஊரு உட்டு வந்து... ஹும்... பாவம் தான் நீங்க... நன்றி

@ S.Menaga - தேங்க்ஸ் மேனகா

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

அப்பாவி தங்கமணி said...

@ Arun - ஹா ஹா... தேங்க்ஸ்

@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Balaji saravana - விளக்கம் எப்படி வேணா சொல்லாம்ங்க... காசா பணமா... ஹா ஹா

@ LK - படுபாவி...

@ டம்பி மேவீ - தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - தேங்க்ஸ்

@ LK - அப்படினா என்ன?

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் -

நீ தான் ஆள் வெச்சு சொல்றியோனு எனக்கு டவுட் இருக்கு... பூனைய மடில கட்டிட்டு சகுனம் பாத்தா இந்த அழகு தான்... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்....

அடிப்பாவி... என்ன ஒரு கம்பாரிசன்... எனக்கு ஒரு சமயம் கிடைக்காமையா போய்டும்... அப்ப வெச்சுக்கறேன் கச்சேரி... என்னாது மைனஸ் வோட்டா? உன்னை என்ன பண்ணினா தகும்...

ஹஹா ஹா... அப்படி வா வழிக்கு... you missed me...ha ha ha (thanks...)

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - Thanks Arul

@ siva - எல்லாம் நேரம் தான்... உங்கள பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து deselect பண்றேன்...

@ வெறும்பய - வரேங்க... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ சுந்தரா - நன்றிங்க சுந்தரா

@ பதிவுலகில் பாபு - நீங்களும் அதுல ஒண்ணா? வெரி bad ...

@ VELU.G - ஹா ஹா... நன்றிங்க... (அடி பலமோ... )

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - ஹா ஹா ஹா... சூப்பர் thought .......

@ வழிப்போக்கன் - யோகேஷ் - நன்றிங்க

@ ஹுஸைனம்மா - நாடு நாடா எதிரிக இருக்காங்கப்பு... பாவம் தங்கமணி நீ... இப்படியும் சொல்லி போட்டு பேசறதா போன்ல... ஜஸ்ட் கிட்டிங்... சாரி அக்கா சுத்தமா நேரமே இருக்கல... அடுத்த முறை கண்டிப்பா மீட் பண்ணுவோம்... (இருங்க இருங்க ஊர் எல்லாம் காலி பண்ணாதீங்க... ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ Madhavan Srinivasagopalan - நன்றிங்க... century க்கு வாழ்த்துக்கள்... நான் இல்லைனா இவ்ளோ நல்லதெல்லாம் நடக்குதா ஊர்லா... ஹி ஹி ஹி

@ வேங்கை - ஹி ஹி ... நன்றி

@ பாலாஜி சங்கர் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹா ஹா... சூப்பர்

@ Prasanna - தேங்க்ஸ்

@ Anu - தேங்க்ஸ் அனு நீங்களாச்சும் உண்மைய சொன்னதுக்கு...

அப்பாவி தங்கமணி said...

@ Sakthi - ஹா ஹா,...தேங்க்ஸ்ங்க

@ எஸ்.கே - நன்றிங்க

@ தி. ரா. ச.(T.R.C.) - அடப்பாவமே... திரும்பின பக்கமெல்லாம் எதிரிகளா... பாவம் தான் நான்...

அப்பாவி தங்கமணி said...

@ பிரியமுடன் ரமேஷ் - நன்றிங்க

@ Gayathri - ஆஹா... ஆஹா... இதுவல்லாவோ வரவேற்ப்பு... நன்றி நன்றி நன்றி.... இதுக்காகவே சீக்கரம் நீ சொன்ன மாதிரி கதை சீக்கரம் ஸ்டார்ட் பண்றேன் Gayathri...

@ சுசி - தேங்க்ஸ் சுசி... Yes yes அந்த flight அழுகை எல்லாம் கட் பண்ணிட்டேன்... ம்...

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - தேங்க்ஸ்ங்க

@ jeyashrisuresh - தேங்க்ஸ் ஜெயஸ்ரீ...

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - ஹா ஹா... நன்றிங்க ஆனந்த்... ஆஹா... இதான் நட்சத்திர பதிவரா... அது சரி... ஹா ஹா... நான் தான் அவர பாத்தேன்... ஹி ஹி...அழறதுக்கு தனியா ஆள் கெடச்சா சொல்லுங்க...என்னாது? பதிவுலகமே ஸ்தம்பிச்சுப் போச்சா... என்ன இருந்தாலும் ஊர்காரர்கறதுக்காக இவ்ளோ கூடாது... ஜஸ்ட் கிட்டிங்.... ஹா ஹா... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்

@ ஸ்ரீராம் - வந்தே ஆச்சுங்க... நன்றிங்க

@ பிரதீபா - எங்கிங்க அதுக்கு நேரம்... ஏதோ சாப்டோம்... இப்ப தோணுது... ஹும்... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ anu - தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்

@ திவா - ஆமாங்க...ஒரே ஆனந்த கண்ணீர் ஆய்டுச்சு... நன்றிங்க

@ ரஜின் - ஹா ஹா... சிங்கமணி....வேண்டாம் வேண்டாம்... தங்கமணியே நல்லாத்தான் இருக்குங்க... ஆஹா... நீங்க துபாய்லயா இருக்கீங்க சொல்லவே இல்ல... (இந்த மெசேஜ் உங்க வீட்டு மேடம்க்கு forward செய்யப்படும்... ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ r.v.saravanan - நன்றிங்க

@ ☀நான் ஆதவன்☀ - ஆஹா... விஷயம் தெரியாம போச்சே... ஹா ஹா... நன்றிங்க

@ Harini Sree - ஓ... நன்றிங்க மேடம்... உங்களுக்கு இருக்கற வேலைல இப்ப வந்ததே பெரிய மேட்டர்... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ LK - Thanks for the award LK

அனாமிகா துவாரகன் said...

இதுக்கு 42 ஓட்டா? என்ன ஆச்சு இந்த மகாசனங்களுக்கு. சை.. ஃபீலிங்கஸ் (வசூல் ராஜா கமல் டோன்ட படியுங்க)

நான் ஒரு மைனஸ் ஓட்டு போட்டு ஆரம்பிச்சு வச்சிருக்கேன். எல்லோரும் மருவாதையா போய் ஒன்னொன்னாவது போடுங்கோ.

(நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ் அடிப்பாவி அக்கா)

அனாமிகா துவாரகன் said...

கல்லு மாதிரி இட்லி வருதா. இதை மாதிரி வெட்டி பொரிச்சாவது கோவிந்த் மாமாவை ஏமாத்துங்கோ. பாவம் அவரு.

http://www.talimpu.com/2010/12/02/fried-idli/

அமைதிச்சாரல் said...

//flight அப்படி இப்படி வளைஞ்சு நெளிஞ்சு தான் போய் இருக்கும்//

வளைஞ்சு நெளிஞ்ச ஃப்ளைட்ல எல்லாம் ஏங்க பயணம் செய்யறீங்க.. டவுட்ட்ட்ட்டு :-))

புதுகைத் தென்றல் said...

welcome back

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - My first enemy...........yeiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ha ha ha...super doubt... ha ha ha... kettu solren answer

@ புதுகைத் தென்றல் - thanks akka

siva said...

95

siva said...

96..

siva said...

97..

siva said...

98...

siva said...

99

siva said...

hey 100.....

me the 100....

அப்பாவி தங்கமணி said...

siva - adapaavi...

priya.r said...

நல்ல பதிவு
நிறைய தடவை இந்த பதிவை படித்து கண்கள் கலங்கி
பின்னூட்டம் போட முடியாமல் வந்து சென்று இருக்கிறேன்
மனம் ஒன்றி கூடவே பயணித்த மாதிரி ஒரு உணர்வை இந்த
பதிவு கொடுக்கிறது புவனா .................

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - Thanks Priya Akka...:)

priya.r said...

Appuram!

Post a Comment