Friday, December 03, 2010

எனக்கும் ஒரு ரோஸ்ட்... (ஹா ஹா ஹா)


நன்றி முதலில்:
"ஊருக்கு போறேன்" போஸ்ட்ல நெறைய வோட்டு போட்டுடீங்களேனு பீல் பண்ணினதுக்கு சேத்து வெச்சு "வந்தேன் வந்தேன்" போஸ்ட்லயும் வோட்டை அள்ளி விட்டதுக்கு நன்றி நன்றி நன்றி எல்லாருக்கும்

சரி போஸ்ட்க்கு போவோம்...
 
நான் ஊருக்கு போன சமயம் நெறைய காமெடி கலாட்டா எல்லாம் நடந்துச்சு...

(நீ போன டிராஜடிய சமாளிக்க இதெல்லாம் வேணும் தானே - Mindvoice)

நடந்த எல்லா காமெடிலயும் இதான் டாப்பு...
ஏன்னா எங்களுக்கு வெச்சான் ஒருத்தன் ஆப்பு...
ச்சே... என்னதிது டி.ஆர் வாடை வீசுது வர வர...சரி விடுங்க

தீபாவளி ஷாப்பிங் போன அன்னிக்கி வடகோவை அண்ணபூர்ணால சாப்பிட போனோம்

நாங்க தான் பெரிய குடும்பமாச்சே... ஒரு டேபிள் எல்லாம் பத்தலை...

நான் / அம்மா / தங்கை / பாட்டி (அரட்டை அடிக்க சௌகரியமா) ஒரு டேபிள்லயும், ரங்க்ஸ் / தங்கை கணவர் / எங்க அப்பா ஒரு டேபிள்லயும் ஒரு வழியா எடம் பிடிச்சோம், அவ்ளோ கூட்டம் பண்டிகை சமயம்ங்கறதால

சாப்பிட்டு முடிக்கவும் பில் வந்தது, எங்கப்பா பில் கட்ட போறதுக்கு முந்தி என் தங்கை கணவர் "ஒரு நிமிஷம் பில் குடுங்க மாமா, சரி பாத்துடலாம்"னு சொன்னாரு, அவருக்கு என்ன அனுபவமோ தெரியல

ரெண்டு டேபிள்க்கும் தனி தனி பில் போட்டு இருந்தான், எங்க டேபிள் பில் சரியா இருந்தது

அவங்க டேபிள் பில்ல ஒரு ரோஸ்ட், ஒரு ஊத்தாப்பம், ஒரு பரோட்டா, ஒரு காபி எல்லாம் எக்ஸ்ட்ராவா இருந்தது. இது எல்லாமும் இவங்க ஆர்டர் பண்ணின items தான், ஆனா ஒரு ஒரு எண்ணிக்கை கூட இருந்தது

அப்புறம் சர்வர கூப்பிட்டு விசாரிச்சா "உங்க டேபிள்ல நாலு பேரு சாப்பிட்டதுக்கு இதான் பில்லு"னு போட்டான் ஒரு போடு

என்னாது?னு ஒரு லுக்கு விட்டாரு எங்க டாடி... அப்புறம் தான் மேட்டர் புரிஞ்சது

இவங்க மூணு பேரு உக்காந்திருந்த டேபிள்ல ஒருத்தன் கூட்டத்துல வேற இடம் இல்லைன்னு சொல்லி அந்த நாலாவது ஆளா உக்காந்து ரெம்ப விவரமா இவங்க ஆர்டர் பண்றதையே தானும் கேட்டு சாப்ட்டுட்டு கம்பி நீட்டிட்டான்...

அப்புறம் சர்வர் அதுக்கு பொறுப்பு ஏத்துட்டு பணம் குடுத்தது தனி கதை

அந்த நிமிஷம் டென்ஷன் ஆனாலும், அப்புறம் இதை நெனச்சு நெனச்சு சிரிச்சது தனி காமெடி ட்ராக்...

வெளிய வந்து வண்டில ஏறினப்புரம் இவரும் (ரங்க்ஸ்) அவரும் (தங்கையோட ரங்க்ஸ்) சொன்ன டயலாக்ஸ் தான் சூப்பர்...ஹா ஹா ஹா

தங்கையோட ரங்க்ஸ்: அவன் நம்ம டேபிள்ல உக்காறதுக்கு முன்னாடி பெர்மிசன் எல்லாம் கேட்டான்.. .ரெம்ப நல்லவன்னு நம்பிட்டமே...

தங்கை: அவனுக்கு தெரிஞ்சுருக்கு உங்கள பத்தி நல்லா...

(நானும் தங்கையும் சிரிப்போ சிரிப்பு)

ரங்க்ஸ்: அவன் என்ன ஸ்டைலா ஆர்டர் பண்ணினான் தெரியுமா... ரஜினி "நான் ஒரு தடவ சொன்னா..." டயலாக்க்கு ஸ்டைலா ஒரு விரல் தூக்குவாரே அதே மாதிரி சொன்னான் "எனக்கும் ஒரு ரோஸ்ட்"னு... ச்சே ஒரு போட்டோ எடுத்து இருக்கணும் அவன..மிஸ் பண்ணிட்டேன்...

நான்: ம்... போட்டோ எடுத்து வீட்டுல மாட்டி தான் வெக்கணும் நீங்க ஏமாந்த கதைய சொல்ல... ஹா ஹா ஹா

ரங்க்ஸ்: அவன் அவசரம் அவசரமா சாப்பிடரப்பவே நான் யோசிச்சேன்...

நான்: இப்ப சொல்லுங்க எல்லாத்தையும்...

தங்கையோட ரங்க்ஸ்: அவன் நாம ஆர்டர் பண்ணின ஐட்டத்தயே ஆர்டர் பண்ணினப்ப கூட சந்தேகம் வராம போச்சே

ரங்க்ஸ்: நம்ம ஆர்டர் பண்ணின அதே மாதிரி Syncronizedஆ வேற ஆர்டர் பண்ணினானே... பயங்கரமான பிரைன் உள்ள திருடன் தான்

நான்: இதெல்லாம் நல்லாத்தான் கவனிச்சு இருக்கீங்க... ஏமாத்தினத தான் கோட்டை விட்டுடீங்க...

தங்கையோட ரங்க்ஸ்: நல்லாத்தான் இருந்தான்... கடைசீல "அண்ணன் குடுப்பாரு"னு கை காட்டிட்டு போய்ட்டான் பாவி... ஹும்...

(குடும்பம் மொத்தமும் சிரிப்போ சிரிப்பு...)

ஜோக்ஸ் அபார்ட்... ஊர்ல எப்படி எல்லாம் நூதன முறைல திருட்டு ஆரம்பிச்சுருக்கு பாருங்க... கொடுமைடா சாமி

இதுல முக்கிய பங்கு சினிமாவுக்குனு எனக்கு தோணுது. ஆனா சினிமால வர்ற நல்ல விசியங்கள எத்தன பேரு செயல்படுத்தி பாக்குறாங்க

இந்த மாதிரி ஐடியாஸ் மட்டும் நல்லா யூஸ் பண்ணிக்கறாங்க

"ஐயன்" படத்துல சூர்யா வைரம் கடத்திட்டு வர்ற சீன் பாத்தப்ப எனக்கு இதை எவனும் செயல் படுத்தி பாத்தா என்ன ஆகும்னு பயமா இருந்தது... ஒருவேள ஏற்கனவே நிஜத்துல நடந்ததோ என்னமோ. எனக்கு தெரியல...

நேரடியா கைல இருந்து பைய திருடிட்டு போற திருடன்கிட்ட இருந்து தற்காத்துக்க தான் நமக்கு சின்னதுல இருந்து சொல்லி தர்றாங்க

இந்த மாதிரி நூதன முறைகள் எல்லாம் ரெம்ப புதுசாதான் இருக்கு

இப்படி எல்லாம் நடக்குது பாத்து பத்திரமா இருங்கனு சொல்ல தான் இந்த பதிவு... முக்கியமா பண்டிகை சமயங்கள்ல

கெளரவம் பாக்காம சில விசயங்கள நாம கடைபிடிக்கறது கூட இந்த மாதிரி ஏமாற்று வலைல இருந்து தப்பிக்க உதவும், அவற்றில் எனக்கு தோணின சில:-

1. ஹோட்டல்ல சாப்பிட்டா பில் சரி பாக்கறதை நெறைய பேரு செய்யறதில்ல (நானும் தான்). அதை கண்டிப்பா செய்யணும்

2. பெரிய கடைகள்ல இப்பவெல்லாம் வேற வேற ப்ளோர்ல பொருள் செலக்ட் பண்ணி Pay பண்ணிட்டு கீழ ப்ளோர்ல வந்து ஒண்ணா சேந்து வாங்கிக்கறது பழக்கமா இருக்கு. கண்டிப்பா கவர் பிரிச்சு செக் பண்ணனும் கடைய விட்டு வெளிய வர்றதுக்கு முந்தி

3, இப்ப நூறு ரூபா நோட்டும் ஐநூறு ரூபா நோட்டும் ஒரே கலர்ல இருக்கு, நெறைய பேரு மாத்தி குடுக்கறதை நானே இந்த முறை பாத்தேன், கொஞ்சம் கவனம் ப்ளீஸ்

4. இப்ப இருக்கற முக்கியமான ஒரு பிரச்சனை பிள்ளைகள் கடத்தப்படறது, ஷாப்பிங் பிசில எப்பவும் பிள்ளைகள் மேல ஒரு கண்ணு இருக்கறது அவசியம்

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான், ஒத்துக்கறேன்

ஆனா நாம கவனமா இருக்கறதால சில திருட்டுகள தவிர்க்க முடிஞ்சா அது பண விரயத்த மட்டுமில்ல மன நிம்மதியையும் குடுக்கும்

அன்னபூர்ணால நாங்க ஏமாற இருந்தது பெரிய பணம் இல்லை தான், ஆனா கிடைச்சது ஒரு நல்ல அனுபவம், சிரிக்கவும் சிந்திக்கவும், ofcourse பதிவெழுதவும்... ஹா ஹா ஹா

Yet more stories to come from India trip...no escapes possible...ha ha

...

63 பேரு சொல்லி இருக்காக:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்... சகோதரம்...

Krishnaveni said...

interesting story at annapoorna, ஹோட்டல்ல சாப்பிட்டா பில் சரி பாக்கறதை நெறைய பேரு செய்யறதில்ல (நானும் தான்). அதை கண்டிப்பா செய்யணும் very true, and we have to check bills at grocery stores as well

Arul Senapathi said...

funny story but important lesson.

பதிவுலகில் பாபு said...

ஹோட்டல் மேட்டர்.. நகைச்சுவை.. ஆனாலும் நீங்க சொன்னமாதிரி எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க.. உஷாராத்தான் இருக்கனும்..

Gayathri said...

எப்படி எல்லாம் இருக்காங்க கொடுமைதான் போங்க

எஸ்.கே said...

சுவாரசியம்!

ஐடியா சூப்பர்! (திருடற ஐடியா இல்லீங்க! அந்த 4 பாயிண்ட்ஸ்)

இருந்தாலும்

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான்!

எஸ்.கே said...

இந்த மைண்ட்வாய்ஸ் எல்லோருக்குமே இருக்குதுங்க!

பத்மநாபன் said...

உண்மையிலேயே இது புதுசா இருக்கு ...வடிவேலு படத்துல பர்ஸ வச்சு ஏமாத்தறதக்கு டபுளா வருவாங்க...இந்த மெத்தட்ல் சிங்கிளா வந்து ஏமாத்தி இருக்கிறானே.... மாட்டுனா பாத்துக்கலாம் ன்னு ரயில் டிக்கெட்ல பண்ற மாதிரி இதுலேயும் ஆரம்பிச்சுட்டாங்க...

கோவை ஆவி said...

Wow!!! I'm still wondering the brilliance of the person who planned well..

Bhuvana, you have written this in an excellent way!! I was laughing for a while!!

தாராபுரத்தான் said...

அப்பாவியா இருக்க வேண்டாம்...அப்படிங்கிறீங்க.

LK said...

அந்த வைர கடத்தல், நிஜத்தில் நடப்பதை தான் அயன் படத்தில் காமிச்சாங்க..


எனக்கு என்னவோ அந்த டயலாக் எல்லாம் உன் ரங்க்ஸ்/ உன் தங்கை ரங்க்ஸ் சொன்ன மாதிரி தெரியலை. உன்னோட கற்பனை குதிரை தறிகெட்டு ஓடியதன் விளைவு

Ananthi said...

ஹா ஹா ஹா..

உண்மையில் பயனுள்ள பதிவுப்பா... பயபுள்ளைங்க எப்படி எல்லாம் திருட்டு வேலை பண்ணுது..
ஹ்ம்ம்ம்..

அடுத்த முறை இந்தியா போகும் போது சொல்லிட்டு போங்க....உங்க குடும்பத்து கூட, செலவே செய்யாம சாப்பிடலாம் போல இருக்கே..!! :-))))

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா இப்படி எல்லாம் கூட நடக்குதா!!!! பயங்கர ப்ளானா இருக்கே!! :O

உங்களால இதுல எதையும் ஊகிச்சுருக்க முடியாது, ஹோட்டல்ல சாப்பிட்டாலும் நாமளும் கஷ்டப்பட்டு உழைச்ச காசு தான், ஒரு தடவை பட்டா தான் சர்வருக்கும் நினைவில் இருக்கும்னாலும், இவை எல்லாம் சர்வருக்கும் பொருந்துமே!! முழுக்க அந்த சர்வரே கட்டினது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு அ.த.. ஒரு வேளை முதலாளிகிட்ட எடுத்து சொல்லியோ இல்ல ஆளுக்கு பாதி காசோ போட்டிருக்கலாமோ?

☀நான் ஆதவன்☀ said...

:) அடுத்து எப்ப ஊருக்கு போவீங்க, எந்தெந்த ஹோட்டலுக்கு எல்லாம் சாப்பிட போவீங்கன்னு முன்னாடியே ஒரு பதிவா போட்டீங்கன்னா எங்களுக்கு வசதியா இருக்கும் :))

sakthi said...

அட இப்படி கூட நடக்குதா சக்தி பீ கேர்புல் எனக்கு நானே சொல்லிக்கிட்டேனுங்க...

வெறும்பய said...

சிரிக்க வைத்ததுடன்.. சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்...

Prasanna said...

ஹா ஹா.. அந்த மர்ம மனிதர் கொத்து பரோட்டா சாப்டு இருந்தா இப்படி தப்பு பண்ணியிருக்க மாட்டார் (ஒரு விளம்பரம்?)..

//ஐயன்//
திருவள்ளுவர் பத்திய படமா :)

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு உங்க அனுபவம். ஆனா அந்த சர்வர்தான் பாவம், அவரோட ஒரு நாள் சம்பளமே போயிருக்குமே! அவரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும் போல. இது போல எத்தனை பயபுள்ளக கிளம்பி இருக்கோ தெரியலையே

நீச்சல்காரன் said...

அனுபவம் புதுமை

கோவை2தில்லி said...

அன்னபூர்ணா ல பேமிலி தோசை சாப்பிட்ட அனுபவத்தை எழுதுவீங்கன்னு பார்த்தா இப்படி ஆகிப் போச்சா. ஜாக்கிரதையா இருக்கணும்னு தெரிஞ்சிகிட்டோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அடுத்த முறை இந்தியா போகும் போது சொல்லிட்டு போங்க....உங்க குடும்பத்து கூட, செலவே செய்யாம சாப்பிடலாம் போல இருக்கே..!! :-))))//

\\:) அடுத்து எப்ப ஊருக்கு போவீங்க, எந்தெந்த ஹோட்டலுக்கு எல்லாம் சாப்பிட போவீங்கன்னு முன்னாடியே ஒரு பதிவா போட்டீங்கன்னா எங்களுக்கு வசதியா இருக்கும் :)//
இதெயெல்லாம் வழிமொழியிறேன் நான் :))))

மோகன்ஜி said...

நல்லா போட்டீங்க பதிவு. அடுத்தமுறை உங்க தங்கையோட ரங்க்ஸ் ஹோட்டலுக்கு போகும் போது எனக்கு ஒரு போன் போட்டுட்டீங்கன்னா போதும்.எனக்கு அன்னபூர்ணா ரோஸ்டுன்னா ரொம்ப இஷ்டங்க!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உணவகம் பற்றிய நகைச்சுவை கலக்கல் தல . இனி பார்த்து சுதானமாகத்தான் இருக்கணும்போல !? பகிர்வுக்கு நன்றி

kavisiva said...

வந்துட்டீங்களா?!

இப்போ டெய்லி ஒருவாட்டியாவது இதைச் சொல்லி ரங்ஸை ஓட்டுவீங்களே :)

எப்படீல்லாம் ஏமாத்துறாய்ங்க! நாமதான் கவனமா இருக்கணும்.

வார்த்தை said...

:)

தெய்வசுகந்தி said...

ஹா ஹா ஹா!!

வல்லிசிம்ஹன் said...

இட்டிலி போயி தோசை வந்திடுத்தா தங்கMமணி:)

இந்த ஏமாத்து வேலை வேற நடக்குதா. தான்க்ஸ் பா.
உஷாரா இருந்துக்கறோம்.

Lakshmi said...

காமெடியாவும் இருக்கு படிப்பினையும் இருக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எப்பவும் உசாரா இருக்கணும்.. சிலசமயங்களில் எதிர்பாராதது நடந்து முடிந்தபின் வருத்தம்தான் வரும். நல்ல பகிர்வு புவனா மேடம்.. ஊரெல்லாம் எப்படி இருக்குது..

சே.குமார் said...

நகைச்சுவை...
எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க...
உஷாராத்தான் இருக்கனும்...

kalps said...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான், ஒத்துக்கறேன் // ஹா ஹா ஹா!

உண்மை ....

Harini Sree said...

எப்பவும் பில்ட் அப் பயங்கரமா இருக்கும் கடசீல கதை சப்புன்னு போய்டும் இந்த வாட்டி கதைக்கு எத பில்ட் அப். நெஜமாவே உபயோகமான பதிவு.

ராதை/Radhai said...

அந்த சர்வர நினைச்சா தான் கொஞ்சம் கவலையா இருக்கு. நிஜமாவே கூட்டமாக உள்ள ஹோட்டல்களில் அதைக் கண்டு பிடிக்கிறது கஷ்டம் தான்....அதுவும் ஒரே ஐடெம் ஆர்டர் பண்ணும்போது. சிரிக்கத் தோன்றவில்லை :(

ஹுஸைனம்மா said...

//"ஐயன்" படத்துல சூர்யா வைரம் கடத்திட்டு வர்ற சீன் பாத்தப்ப எனக்கு இதை எவனும் செயல் படுத்தி பாத்தா என்ன ஆகும்னு பயமா இருந்தது... //

நெசமாவே ரொம்ப அப்பாவியா இருப்பீங்க போல!! இதெல்லாம் காலங்காலமா நடந்துகிட்டுத்தான் இருக்கு.

ஆனாலும், அந்த ஆள் ஆர்டர் பண்ணும்போது தோணலைன்னாலும், சாப்பிட்டும்போது கூடவா தோணலை உங்க ரங்க்ஸ்களுக்கு?? இதுக்குப் பேரு அப்பாவித்தனம்னு சொல்லமுடியாது. மொத்த ஹோட்டல்ல உங்களைத் தேடி வந்து உங்க ரங்க்ஸ்கள்கிட்ட உக்காந்திருக்கான்னா, அவங்ககிட்ட சம்திங் ஸ்பெஷல் இருந்திருக்கணும்!! :-)))))))))))

ஸ்ரீராம். said...

இட்லி, தோசை என்று எல்லாத்துலயும் இப்படி ஏதாவது ஒரு அனுபவம் கூடிகிட்டே போகுது உங்களுக்கு.

தக்குடுபாண்டி said...

நல்ல காமெடிதான் போங்கோ!! இட்லில உங்களுக்கு கண்டம் இருக்கர்துனால நீங்களாவது கொஞ்சம் ஜாக்ரதையா இருந்துருக்கலாம்....:PP(தோசை இட்லியோட சின்னதம்பி ஆச்சே)

vgr said...

Vandacha...good..good...inime 1 milli second ku oru line kanaka ezhudi thalla thana poreenga...

btw...romba late ayiduchu...neenga illadadala solla mudiala...kadai padichu mudithen....enda kadaya..? adan thodarum potte konneengale...super kadai....mudithatharku vazhthukal.

sriram said...

//இந்த மாதிரி ஏமாற்று வலைல இருந்து தப்பிக்க
1
2
3
4//

இதையெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு பக்கத்திலேயே ஒக்காந்துகோங்க, பின்னால வர்ற சந்ததியினர் படிச்சு பயன் பெறுவார்கள். ஏதாவது சந்தேகம் வந்தா உங்க
கிட்ட கேட்டு தெளிவடைவார்கள்.

//Yet more stories to come from India trip...no escapes possible//

உங்க இட்லிகளையே பாத்துட்டோம், ஓட்டல் இட்லிகளை பாக்க மாட்டோமா?? நீங்க நடத்துங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Jaleela Kamal said...

சரியான் காமடியும் அதில் நலல் மெசேஜும் ம்ம்ம் கலக்குங்க இப்பட்டி அப்பாவியா இருந்து கொண்டே கலக்குங்குஙக்

geetha santhanam said...

shopping bill எல்லாம் சரிபார்த்தீங்களா? உங்க செலவுல தீபாவளி கொண்டாடியிருக்கப் போறாரு!

அமைதிச்சாரல் said...

தங்க்ஸெல்லாம் கிட்டே இல்லேன்னா ரங்க்ஸுகளுக்கு ஒலகமே மறந்துடுது போலிருக்கு.. எனக்கென்னவோ, ரங்க்ஸுகளெல்லாம் அந்த சந்தோஷத்தை பார்ட்டி கொடுத்து கொண்டாடுனதுமாதிரி தோணுது. :-)))))

அப்பாவி தங்கமணி said...

@ ம,தி.சுதா - நன்றி

@ Krishnaveni - கரெக்ட்ஆ சொன்னீங்க வேணி... தேங்க்ஸ்

@ Arul Senapathi - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ பதிவுலகில் பாபு - ஆமாங்க ரெம்ப உஷாராதான் இருக்கணும்...

@ Gayathri - ஆமாம் காயத்ரி...தேங்க்ஸ்

@ எஸ்.கே - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஹா ஹா... கரெக்ட் தான்... நன்றிங்க

@ கோவை ஆவி - தேங்க்ஸ் ஆனந்த்... நம்ம ஊரு ஆளாச்சே அந்த திருடன்... brilliance க்கு கொறைச்சலாவா இருக்கும்... ஹா ஹா

@ தாராபுரத்தான் - ஆமாங்க... அதே அதே

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஓ...அப்படியா... எனக்கு தெரியாது சாரே...why why why.... எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும் மிஸ்டர் கார்த்திக்...அதென்ன நான் என்ன சொன்னாலும் உனக்கு ஒரு சந்தேகம்... எதாச்சும் ஆன்லைன் lie detector இருந்தா தூக்கிட்டு வா... ஒரு முடிவு பாத்துடுவோம் today...

For your kind information... கோயம்புத்தூர்காரங்களுக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி தானுங்க... உங்க வீட்டு அம்மணிகிட்ட கேட்டு பாருங்க... இவரும் அவரும் சேந்தா அங்க ஒரு காமெடி தர்பாரே நடக்கும்கறது நாங்க (நானும் தங்கையும்) அனுபவத்தில் கண்ட உண்மை...இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா... (ஆஹா... இந்த நக்கீரர் rouse அநியாயமா போச்சு வர வர...ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ஆஹா...நானே சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறேன் போல இருக்கே...ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - கொடி, கரெக்ட்ஆ சொன்னீங்க. ஆனா அந்த நேரம் டென்ஷன்ல அது தோணவே இல்லப்பா... அதுவும் அந்த சர்வர் தான் அந்த ஆளை கூட்டிட்டு வந்து உக்கார வெச்சான் (அப்புறம் அந்த ஆள் ரெம்ப டீசண்டா பெர்மிசன் கேட்டுட்டு உக்காந்ததெல்லாம் தனி கதை). வீட்டுக்கு வந்தப்புறம் எங்களுக்கும் தோணுச்சு...பேசாம விட்டு இருக்கலாம்னு...

அப்பாவி தங்கமணி said...

@ நான் ஆதவன் - ஹா ஹா...அது சரி...

@ sakthi - ஆமாங்க நம்ம ஊர்ல தான்...ஹா ஹா

@ வெறும்பய - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ Prasanna -ஹா ஹா சூப்பர் விளம்பரம்... ஐயன்... பிரசன்னா வாழ்க்கை வரலாறாம்... தெரியாதா? ஹா ஹா

@ வெங்கட் நாகராஜ் - ஆமாம் அவர் பாவம் தான்...

@ நீச்சல்காரன் - ரெம்ப புதுமை தான்

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்

@ முத்துலெட்சுமி - ஹா ஹா ஹா

@ மோகன்ஜி - ஹா ஹா... அவர் இப்ப இந்தியால இல்லீங்க...போறப்ப சொல்றேன்... ஹா

அப்பாவி தங்கமணி said...

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - ஆமாங்க நன்றி

@ kavisiva - வந்துட்டேன் கவிதா... ஹா ஹா ஹா...ஐடியா குடுத்ததுக்கு தேங்க்ஸ்... ஆமாங்க கவனமா தான் இருக்கணும்

@ வார்த்தை - தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - ஹி ஹி ஹி

@ வல்லிசிம்ஹன் - ஆமாங்க இட்லி போய் சைதோ தான்... உசாராதான் இருக்கனுங்க

@ Lakshmi - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ஆமாங்க... ஊர் சூப்பரா இருக்குங்க...

@ சே.குமார் - ஆமாங்க...என்னை மாதிரி அப்பாவியா இருந்தா வம்பு தான்

@ kalps - தேங்க்ஸ் கல்ப்ஸ்... என்னோட பெஸ்ட் பிரெண்ட் நீண்ட வருட தோழி பேரு கல்பனா...அவளை கல்ப்ஸ்னு தான் கூப்பிடுவேன்... அவ ஞாபகம் வந்துடுச்சு உங்க பேர் பாத்து... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ Harini Shree - ஆஹா இத்தனை நாளா என்னோட பதிவு பத்தி இப்படி ஒரு அபிப்ராயம் இருந்ததா ஹரிணிக்கு...ஹும்... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் ஹரிணி...

@ ராதை - ஹாய் ராதை, அந்த ஆளை கூட்டிட்டு வந்து உக்கார வெச்சதே அந்த சர்வர் தான்... அப்புறம் அவன் ரெம்ப ஜென்டில்மேன் மாதிரி permission கேட்டுட்டு உக்காந்ததேல்லாம் தனி கதை... அந்த நிமிச டென்ஷன்ல அந்த சர்வர் மேல கோவம் தான் வந்தது... அப்புறம் வீட்டுக்கு வந்து யோசிச்சப்ப நாமளே குடுத்து இருக்கலாம்னு தோணுச்சு...

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா -
//தேடி வந்து உங்க ரங்க்ஸ்கள்கிட்ட உக்காந்திருக்கான்னா, அவங்ககிட்ட சம்திங் ஸ்பெஷல் இருந்திருக்கணும்//
ஆஹா...நான் இந்த கோணத்துல யோசிக்கலையே.. பாத்தீங்களா இதுக்கு தான் உங்கள போல பெரியவங்ககிட்ட ஆலோசனை கேக்கனுங்கறது... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்...ஹா ஹா ஹா

@ ஸ்ரீராம் - பாருங்க என் கதைய... ஹும்...

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஹா ஹா... தோசை இட்லிக்கு சின்ன தம்பி...அப்ப சப்பாத்தி என்ன அத்த பொண்ணா...ஹா ஹா அஹ (எப்படி எப்படி...எப்படி உன்னால மட்டும் இப்படி எல்லாம்...முடியல...)

@ vgr - ஹா ஹா... அவ்ளோ கொடுமை பண்ற எண்ணமில்லை... கதை படிச்சாச்சா...தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ பாஸ்டன் sriram - நாட்டாமையே சொன்னப்புறம் அபில் ஏது? கல்வெட்டுல பதிச்சுடுவோம்..... ஹா ஹா ஹ... நடத்தறோம் நடத்தறோம்...

@ Jaleela Kamal - நன்றிங்க ஜலீலா (எஸ் எஸ் மீ ஆல்வேஸ் அப்பாவி)

அப்பாவி தங்கமணி said...

@ geetha santhanam - போன வாரம் எல்லாம் செக் பண்ணினோம்... உண்மையாங்க... அனுபவம் அப்படி...ஹும்...

@ அமைதிச்சாரல் - அமைதி அக்கோவ்... நீங்க எங்கயோ போயிட்டீக... உடனே ஒரு விசாரண கமிஷன் போட்டு விசாரிக்க வேண்டியது தான்... என்ன தான் சொல்லுங்க? சீனியர் சீனியர் தான்... நாங்க ஜூனியர்க ஜூனியர்க தான்... ஹா ஹா ஹா

தக்குடுபாண்டி said...

//அப்ப சப்பாத்தி என்ன அத்த பொண்ணா// சப்பாத்தி அத்தை பொண்ணு கிடையாது, அது நார்தின்டியன் பிகர்....:)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடுபாண்டி- y y y...y brother? me escape...

Pravy said...

அநியாயம்!! :( அதே ஐடெம் சாப்ட்டா..No of items remains the same.. பல பேர் அத மட்டும் தான் சரி பார்ப்பாங்க.. என்ன ஒரு வில்லத்தனம்!! :O
ஒரு பிரபலமான சூப்பர் மார்க்கெட்-ல நடந்தது இது.. ஒரு சோப்பு தனியா 35 ரூபா ஆனா அதையே OFFER-ன்னு போட்டு மூணு சோப்பு 115 ரூபா-ன்னு போட்டு விக்கறாங்க.. இந்த கொடுமைய எங்க போய் சொல்றது..
Also we have to check if the MRP and the bill price are same.. Mostly people check the items and the total amount..

அப்பாவி தங்கமணி said...

@ Pravy - ha ha...well said... most don't check MRP either... soup offer sema comedy thaan... and people buy it too I guess...ha ha... thanks Pravy...:)

Post a Comment