Monday, December 06, 2010

சிந்துபைரவி... (சிறுகதை)


"மேடம் உங்களுக்கு தான் போன். CM லைன்ல" என என் செக்ரட்டரி அஞ்சலி பதட்டமாய் வர

"குடு... " என வாங்கினேன் அதை விட பதட்டமாய்

மறுமுனையில் "ஹலோ சிந்து. எப்படிமா இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் சார்"

"உங்க புத்தகத்துக்கு சாகித்யா அகாடமி விருது குடுத்துருக்கறதா பேப்பர்ல பாத்தேன். பாராட்டுக்கள்"

"ரெம்ப நன்றிங்க சார். நீங்க கூப்பிட்டதுல ரெம்ப ரெம்ப சந்தோஷம் சார்"

"சரிம்மா. அப்புறம் பேசுவோம்"

"தேங்க்ஸ் சார்" என பேசியை அணைத்து அஞ்சலியிடம் கொடுத்தேன்

"மேடம், CM ஏ கூப்ட்டு பேசி இருக்காருன்னு நெனைக்கரப்ப ரெம்ப சந்தோசமா இருக்கு மேடம்" என அஞ்சலி மகிழ்ச்சி காட்ட

"ஆமாம் அஞ்சலி. எனக்கும் சந்தோசமாத்தான் இருக்கு"

"இந்த சின்ன வயசுல இவ்ளோ பெரிய அவார்ட் யாரும் வாங்கினதில்லைன்னு எல்லா பேப்பர்லயும் ரெம்ப புகழ்ந்து எழுதி இருக்காங்க மேடம்" என அவள் கூற அதே நேரம் மறுபடியும் தொலைபேசி அலறியது

எனக்கு தான் என அஞ்சலி கூற மகிழ்வோடு பேசினேன். மேலும் மேலும் வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருந்தன

"சரி அஞ்சலி இனி யாராச்சும் போன் பண்ணினா நீயே பேசிடு. நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடு. காலைல இருந்து போன் அட்டென்ட் பண்ணி பண்ணி ஒரே அலுப்பா இருக்கு"

சரி மேடம் என அஞ்சலி விலக எனக்கு மனதில் இருந்த உற்சாகத்தில் அப்படியே பறக்க வேணும் போல தோன்றியது

அதை தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் பாராட்டு விழாக்களும் மாலை மரியாதைகளுமாகவே இருந்தது

அன்று மிகவும் அலுப்பாய் இருந்தது. ஆனாலும் விடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன

"ஐயோ போதும்... எனக்கு இந்த விருது பாராட்டு ஒண்ணும் வேண்டாம். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க" என வாய் விட்டு கத்திய அதே நிமிடம்

"ஏய் சனியனே... எந்திரி மொதல்ல... பத்து மணி வரைக்கும் வயசு பொண்ணு தூங்கினா வெளங்கிடும் வீடு" என அம்மாவின் கத்தலில் நான்  ஒன்றும் புரியாமல் விழிக்க

"என்னடி முழிக்கற? விடிய விடிய ப்ளாக் எழுதறேன்னு உக்காந்துட்டு விடியரப்ப தூங்க வேண்டியது. அப்புறம் விருது வேண்டாம் பாராட்டு வேண்டாம்னு கனவு கண்டுட்டு கத்த வேண்டியது. எந்திரிச்சு போய் குளி மொதல்ல. காலேஜ் லீவ் விட்டா இதே பொழப்பா போச்சு...ச்சே" எனவும்

அடச்சே... எல்லாம் கனவா... ஹும்...அதானே எனக்காவது "சாகித்யா அகாடமி விருதாவது"...சரி கனவுலயாச்சும் வாங்குவோம் என நினைத்து கொண்ட சிந்து, அம்மா பைரவி மறுபடியும் திட்டும் முன் இடத்தை காலி செய்தாள்

அப்பாவி நோட்ஸ்:
ஐ... நான் கூட ஒரு பக்க கதை எழுதிட்டனே... ஹா ஹா... சக்சஸ்...

அப்புறம் சினேஹா படம் போட்டதுக்கும் இந்த போஸ்ட்க்கும் என்ன சம்மந்தம்னு உங்களுக்கு ஒரு டவுட் வரலாம்... வரலாம் என்ன... வரும்... உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா?

அது ஒரு விட்ட குறை தொட்ட குறைங்க...

அது என்னன்னா? "சிந்துபைரவி" படத்தோட ரியல் ஹீரோயன் யாரு? சுஹாஷினி (மணிரத்தினம்). சினேஹாவோட ரியல் பேரு என்ன? சுஹாஷினி... இதான் அந்த விட்ட குறை தொட்ட குறை... Righto? (ஒகே ஒகே... ப்ளட் பிரஷர் செக் பண்ற machine ஸ்டாக் இல்ல... ஸ்டாக் வந்தப்புறம் ஆளுக்கு ஒண்ணு ப்ரீயா தரப்படும் சரிங்களா... அதுவரைக்கும் bye bye)


...

61 பேரு சொல்லி இருக்காக:

Krishnaveni said...

Top class story, in the beginning i saw your build up, phone call from CM. AT THE END.......super flap.......dream, nice.....continue

ப்ரியமுடன் வசந்த் said...

//அது என்னன்னா? "சிந்துபைரவி" படத்தோட ரியல் ஹீரோயன் யாரு? சுஹாஷினி (மணிரத்தினம்). சினேஹாவோட ரியல் பேரு என்ன? சுஹாஷினி...//

முடியல அழுதுடுவேன்! ஆவ்வ்வ்

நான் எறிஞ்ச கல்லு அமெரிக்காவுக்கு வந்துட்டே இருக்கு மேடம்! (ஆனாலும் அது நீங்க சுடற இட்லியவிட வெயிட் கம்மிதான் டோண்ட் வொர்ரி)

ப்ரியமுடன் வசந்த் said...

எங்கள் தானைத்தலைவி சினேகாவை சுஹாசினியோட ஒப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்!

இன்னும் எதுவெல்லாம் கொண்டு எறியப்போறாங்களோ சினேகாவின் ரசிகபெருமக்கள் எதுக்கும் சாக்கிரதையாவே இருங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேன்மைதாங்கிய அப்பாவி தங்கமணி அவர்களுக்கு,

தங்கள் பதிவினைப் படித்து அளவில்லாப் பேரின்பம் அடைந்தேன். கருத்துச் செறிவும் பொருட் செறிவும் மிகுந்த இந்தக் கதையின் பின்னவீனத்துவ சொல்லாடல்களும், கதை மாந்தர்களின் உணர்வுகளை எடுத்தாளும் காட்சியமைப்பும் கண்டு பேருவகையுற்றேன். தங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்,
பன்னிக்குட்டி ராம்சாமி!

எஸ்.கே said...

கதை அருமை!
நான் படிக்க ஆரம்பிச்சப்ப சிறுகதைன்றதை கவனிக்கலை அனுபவத்தை எழுதறீங்கன்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சு அப்புறம் சந்தேகப்பட்டு மீண்டும் தலைப்பை பார்த்தேன் அப்புறம் இது கதைன்னு புரிஞ்சு படிக்க ஆரம்பிச்சேன், முடியறப்ப மீண்டும் இது உண்மையோன்னு சந்தேகம் வந்துடுச்சு!:-)

பத்மநாபன் said...

சஸ்பென்ஸ் கதையாவே எழுதீட்டிங்க... கொஞ்சம் சொந்த கதை மாதிரியும் தெரியுது...
காரணத்தை வளச்சு வளச்சு சொன்னாலும் , படத்தை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்திட்டீங்க...

Nithu Bala said...

"ஏய் சனியனே... எந்திரி மொதல்ல... பத்து மணி வரைக்கும் வயசு பொண்ணு தூங்கினா வெளங்கிடும் வீடு"// ஊருக்கு போனப்போ அம்மா உங்களை எப்படி எழுப்பினாங்க அப்படின்னு இப்போ புரிந்துவிட்டது:-)
கதை அருமை...

sriram said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மேன்மைதாங்கிய அப்பாவி தங்கமணி அவர்களுக்கு,

தங்கள் பதிவினைப் படித்து அளவில்லாப் பேரின்பம் அடைந்தேன். கருத்துச் செறிவும் பொருட் செறிவும் மிகுந்த இந்தக் கதையின் பின்னவீனத்துவ சொல்லாடல்களும், கதை மாந்தர்களின் உணர்வுகளை எடுத்தாளும் காட்சியமைப்பும் கண்டு பேருவகையுற்றேன். தங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்,
பன்னிக்குட்டி ராம்சாமி! //

அன்பின் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே..
என்ன ஒரு அருமையான பின்னூட்டம், உங்க பின்னூட்டத்தை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்..

பதிவுலக பாஷைல சொன்னா - கன்னா பின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

அ(ட)ப்பாவி தங்கமணி அக்கா..

எல்லாம் புரிஞ்சுது ஆனா, //வயசு பொண்ணு தூங்கினா வெளங்கிடும்// இதுல வயசுப் பொண்ணுங்கறது யாரு? உங்க பொண்ணா??
ரிட்டயர் ஆகுற ஸ்கூல் ட்ச்சர் வயசாகுது, இன்னும் படிக்கற பொண்ணு மாதிரி நெனப்புதான்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

இந்த கதையைப் படிச்சவங்களுக்கு தான் விருது கொடுக்கணும்

நசரேயன் said...

//அன்பின் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே..
என்ன ஒரு அருமையான பின்னூட்டம், உங்க பின்னூட்டத்தை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.. //

நானும்

LK said...

அப்பாவி , இந்த மாதிரி ஒரு கதையை எழுதினதுக்கு தண்டனையா உன் இட்லியை தினமும் காலை மாலை , மதியம் என மூன்று வேளையும் ஒரு வாரத்திற்கு நீயே சாப்பிடனும்

வெறும்பய said...

கதை நல்ல தான் இருக்கு.. ப்ளாக் எழுதினா இந்த மாதிரி கனவு கண்டுகிட்டே இருக்க வேண்டியது தானோ...

அமைதிச்சாரல் said...

ப்ளாக்ன்னு வந்ததுமே நாங்கல்லாம் உஷாராயிட்டோம்ல.. எழுப்பினது உங்க ரங்கமணிதானே?? ச்சும்மா சொல்லுங்க :-)))))))

தெய்வசுகந்தி said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

ம்.... :)

middleclassmadhavi said...

கதையை விட அருமையான பின்னூட்டங்கள் எழுத வைத்ததில் you are really great!!

☀நான் ஆதவன்☀ said...

ஆஸ்பிட்டல் போய் பிபி செக் பண்ணனும் :)

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

"சிந்து" பைரவி
எதை சிந்தனும்னு சொல்லவே இல்லை.

நா.மணிவண்ணன் said...

சினேஹாவிற்க்காக கதையை படித்தேன் கடைசியில் ஐயையோ முடியல

ஹுஸைனம்மா said...

’சிறுகதை’ தலைப்புலயே சந்தோஷ செய்தி சொல்லிட்டதால, வேற எந்த அதிர்ச்சியும் மனசைப் பாதிக்கலை!!

Gopi Ramamoorthy said...

:)

சே.குமார் said...

கதை அருமை!

SenthilMohan said...

மேதகு அண்ணன் பன்னிக்குட்டியின் பின்னூட்டத்தையும், பெரியண்ணன் போஸ்டன் அண்ணாச்சி அவர்களது இரண்டாவது பின்னூட்டத்தையும் வழிமொழிகிறேன். :)

SenthilMohan said...

யக்கோவ்... அதே கண்கள் தொடரப் படிச்சுட்டு உங்களுக்கு பின்னூட்டமே போடக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனா வரலாற்றுல சில தகவல்களைப் பதிவு பண்ணியே ஆகணும்கிரதால மேற்கண்ட பின்னூட்டம். ஏன்னா வரலாறு ரொம்ப,ரொம்ப முக்கியம்.

தக்குடுபாண்டி said...

இது சிறுகதை மாதிரி இல்லையே அடப்பாவி அக்காவோட சொந்தகதை மாதிரினா இருக்கு!!..:)) சினேகா போட்டோ உங்க ரங்குவுக்காகவும் தக்குடுவுக்காகவும் போட்டேள்னு நினைச்சேன்!!..;P

Gayathri said...

என்னமோ சீரியஸ் கதை எழுதரீங்கன்னு டென்ஷன் ஆய்டேன். நல்ல வேலை இது சீரியஸ் கதையட்டும் இல்லை..சுப்பர். தொடருங்கள்

பதிவுலகில் பாபு said...

:-)

கோவை2தில்லி said...

நல்லாருக்கு.

பிரியமுடன் ரமேஷ் said...

//"என்னடி முழிக்கற? விடிய விடிய ப்ளாக் எழுதறேன்னு உக்காந்துட்டு விடியரப்ப தூங்க வேண்டியது. அப்புறம் விருது வேண்டாம் பாராட்டு வேண்டாம்னு கனவு கண்டுட்டு கத்த வேண்டியது. எந்திரிச்சு போய் குளி மொதல்ல. காலேஜ் லீவ் விட்டா இதே பொழப்பா போச்சு...ச்சே"

ஹ ஹ ஹ.. செம... உண்மைலயே பிளாக்கர்ஸ் எல்லாம் பாதி பேர் இப்படித்தான் பிளாக் அடிக்ட்ஸாதான் இருக்காங்க...

பிரியமுடன் ரமேஷ் said...

@ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

எங்கள் தானைத்தலைவி சினேகாவை சுஹாசினியோட ஒப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்!

இன்னும் எதுவெல்லாம் கொண்டு எறியப்போறாங்களோ சினேகாவின் ரசிகபெருமக்கள் எதுக்கும் சாக்கிரதையாவே இருங்க! //

சினேகாவா நினைச்சா நீங்க அவ்லோ அருமையா கவிதை எழுதரீங்க...

வார்த்தை said...

ஏதேதோ பிளைட்டுக்கெல்லாம் குண்டு வைக்குறானுங்க, கடத்துறாங்க....

இந்த அம்மா வந்த பிளைட் குறஞ்ச பட்சம் கிராஷ் லாண்டிங்காவது ஆகியிருக்கலாம்.

latha said...

very nice story

வார்த்தை said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
//மேன்மைதாங்கிய அப்பாவி தங்கமணி அவர்களுக்கு,

தங்கள் பதிவினைப் படித்து அளவில்லாப் பேரின்பம் அடைந்தேன். கருத்துச் செறிவும் பொருட் செறிவும் மிகுந்த இந்தக் கதையின் பின்னவீனத்துவ சொல்லாடல்களும், கதை மாந்தர்களின் உணர்வுகளை எடுத்தாளும் காட்சியமைப்பும் கண்டு பேருவகையுற்றேன். தங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்,
பன்னிக்குட்டி ராம்சாமி!//

:)))))))) ROFL

பன்னிகுட்டி உங்க அட்ரஸ் கொடுங்க, இந்த பின்னூட்டத்துக்கே உங்களுக்கு ஒரு crate carlsberg
அனுப்புறேன்.....

vgr said...

AT, Kadaiyellam super...well Done!!

enga anda sneha padatha pottu...pinnadiye aduku oru mokkai reason vera....inda mari arumaya ezhuda koodiya thiramai irukara neengallam...ida mari cinema karanga padatha podatheenga please!!!

Anda photo illamale 1000 per padikum blog allavo...edarku adu?

Gopi Ramamoorthy said...

:)

Balaji saravana said...

"சிந்துபைரவி" ங்கறது சிறு கதை
அப்போ "அப்பாவி நோட்ஸ்" ங்கறது குறுங்கதையா யா யா ( எதிரொலி )
உங்க கதை படிச்சதுனால வந்த எபெக்ட் :)

அனாமிகா துவாரகன் said...

//ஏதேதோ பிளைட்டுக்கெல்லாம் குண்டு வைக்குறானுங்க, கடத்துறாங்க....

இந்த அம்மா வந்த பிளைட் குறஞ்ச பட்சம் கிராஷ் லாண்டிங்காவது ஆகியிருக்கலாம்.//

ஏன்க்கா.. ஏன் இப்படி இவங்கெல்லாம் சொல்றாங்க. ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆச்சு. ஹா ஹா ஹா.

இதுக்கு நான் எவ்ளோவோ பரவாயில்லை. என்னைப் போய் முதல் எனுமின்னு சொல்லிட்டீங்களே. சை. (ஃபீலிங்க்ஸ்)

அனாமிகா துவாரகன் said...

நான் நிலத்தில் உருண்டு உருண்டு சிரிக்கறேன். வார்த்தையோட கொமன்ட் படிச்சு. ஹையோ ஹையோ.

sakthi said...

தங்கமணி கதை சிறுகதையாய் இருப்பினும் கருத்து செறிவு அபாரம் அற்புதம் பிச்சுட்டீங்க பிச்சு ::)))

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - ஹா ஹா... தேங்க்ஸ் வேணி...

அப்பாவி தங்கமணி said...

@ ப்ரியமுடன் வசந்த் - ஹா ஹா...நோ டென்ஷன் நோ டென்ஷன்... கல்லு எல்லாம் வேண்டாங்க... பாவம் இந்த அப்பாவி... அடடா நீங்க சினேஹா விசிறியா எனக்கு தெரியாதே... (என்னை பொறுத்த வரை சுஹாஷினி சினேஹாவ விட அழகு... மீ எஸ்கேப்)

அப்பாவி தங்கமணி said...

@ பன்னிகுட்டி ராமசாமி - ஏனுங்கணா இந்த கொல வெறி? சும்மாவே நமக்கு எதிரிக கூட்டம் எக்க சக்கம்... இப்ப உங்க கமெண்ட்ஐ ரிபீட் போட ஒரு கூட்டமே வரும் பாருங்க... ஆனாலும் உங்க கமெண்ட் சூப்பர்ங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - உங்களுக்கு கோயம்புத்தூரா? இல்ல அப்படியே நம்ம ஊரு குசும்பு தெரியுதேன்னு கேட்டேன்... ஹா ஹா... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - என்னங்கண்ணா நீங்களே இப்படி சொன்னா எப்படி? சொந்த கதையெல்லாம் இல்லீங்க... கற்பனை கற்பனை கற்பனை மட்டுமே... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Nithu Bala - ஹா ஹா ஹா... ச்சே ச்சே... எங்க அம்மா தூங்கற கொழந்தைய (நானே தான்) எழுப்பவே மாட்டாங்க... அந்த வேலை எல்லாம் செய்ய என் உடன் பிறப்பு போதுமே... இது முற்றிலும் கற்பனை கதைங்கோ...

அப்பாவி தங்கமணி said...

@ பாஸ்டன் sriram -
ஆஹா... உங்களுக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சுடுச்சே. இருங்க எனக்கு கிடைக்காமயா போகும்... வட்டியும் மொதலுமா கமெண்ட் போடறேன்... ஹா ஹா ஹா...

//ரிட்டயர் ஆகுற ஸ்கூல் ட்ச்சர் வயசாகுது, இன்னும் படிக்கற பொண்ணு மாதிரி நெனப்புதான் //
இத்தனை நாளும் என்னையும் கொடி தங்கச்சியையும் அக்கானு கூப்ட்டு கொடுமப்படுத்தினத பொறுத்துகிட்டோம்... ஆனா இப்ப தமிழ்மணம் முகப்பு பக்கத்துலையே உங்க பயோ-டேட்டாவ புட்டு புட்டு வெச்சபுறமும் இது அநியாயமா இல்லையா பாஸ்... ஹா ஹா ஹா... இப்ப என்ன சொல்லுவீங்க?

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - உங்களுக்கு முதல் விருது குடுத்துட்டா போச்சா... அதுக்கா பஞ்சம்... ஹா ஹா ஹா (இந்த வழிமொழியர கமெண்ட் எல்லாம் பில்ட்டர் பண்ண சாப்ட்வேர் யாராச்சும் கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்...)

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஐயோ வேண்டாம்...ஆள விடு... ஹா ஹா

@ வெறும்பய - அதே அதே...ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ச்சே ச்சே... இது முழுக்க முழுக்க கற்பனை கதைங்க... அட நம்புங்கப்பா... ஹும்...

@ தெய்வசுகந்தி - ஹா ஹா அஹ

@ வெங்கட் நாகராஜ் - எஸ் எஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ middleclassmadhavi - தேங்க்ஸ் மாதவி... புகழ்ரீங்களா திட்டறீங்களானே புரியலியே... ஹா ஹா

@ நான் ஆதவன் - பண்ணுங்க பண்ணுங்க...ஹா ஹா

@ கமெண்ட் மட்டும் போடறவன் - நீங்க கமெண்ட் மட்டும் தானே போடுவீங்க... கொஸ்டின் எல்லாம் கேட்டா எப்படி...ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ நா.மணிவண்ணன் - ஹா ஹா ஹா... சூப்பர்

@ ஹுஸைனம்மா - எத்தனை வலிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கறீங்களே... நீங்க ரெம்ப நல்லவங்க அக்கா... ஹா ஹா அஹ

@ Gopi Ramamoorthy - ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - தேங்க்ஸ்ங்க குமார்

@ SenthilMohan - என்னங்க தம்பி இந்த பக்கமே காணோம்...அத்தன பிசிங்களா? நீங்க சொன்னது எனக்கு காதுலையே விழலியே... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - சொந்த கதை போட்டா நெஜமாவானு கேக்க வேண்டியது...என்னத்துக்கு வம்புனு கற்பனை பண்ணி எழுதினா சொந்த கதைங்க வேண்டியது...இரு பார்சல் அனுப்பறேன்... ஹா ஹா

@ Gayathri - காயத்ரி தான்பா நல்ல பொண்ணு... தேங்க்ஸ் காயத்ரி

@ பதிவுலகில் பாபு - தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - நன்றிங்க ஊர்க்கார அம்மணி

@ ப்ரியமுடன் ரமேஷ் - சரியா சொன்னீங்க ரமேஷ்... நல்லா கேளுங்க இந்த வசந்த்கிட்ட? ஹா ஹா ஹா

@ வார்த்தை - ஏனுங்க இந்த கொல வெறி? அடுத்த வாட்டி ஊருக்கு போறப்ப யார்கிட்டயும் சொல்லாமத்தான் போகணும் போல...

அப்பாவி தங்கமணி said...

@ Latha - தேங்க்ஸ்ங்க லதா

@ வார்த்தை - அடபாவிங்களா...நமக்கு ஊர் பூரா எதிரிக ஜாஸ்தி ஆகிட்டே போறாங்களே... ஹும்...

அப்பாவி தங்கமணி said...

@ VGR - தேங்க்ஸ்ங்க VGR ... To be honest, didn't select that picture to attract people... but if it created such an opinion, I will be careful going forward...thanks for your honest opinion and concern...very many thanks again vgr...

அப்பாவி தங்கமணி said...

@ Balaji Saravana -ஹா ஹா...சூப்பர் எதிரொலி... ஹா அஹ

@ அனாமிகா - என்னடா இன்னும் காணோமேனு பாத்தேன்... சிரி சிரி...எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமையா போகும்...அப்ப வெக்கறேன் ஆப்பு... ஹா ஹா

@ sakthi - ஹா ஹா... சரி சரி...நேரடியாவே திட்டுங்க தோழி... ஹா ஹா

SenthilMohan said...

ரொம்ப பிஸி இல்லீங்க. Officeல ப்ளாக் access cut பண்ணிட்டாங்க. அதான். :(

Harini Sree said...

kathai arumai!

அப்பாவி தங்கமணி said...

@ Senthil Mohan - oh...okay...ha ha

@ Harini - thanks Harini

Post a Comment