Wednesday, December 08, 2010

அமெரிக்கா...வேலைக்காரி... மற்றும் பின்ன அறிவிப்பு...
இப்படி பின் நவீனத்துவம் ரேஞ்சுல எல்லாரும் வெக்கற மாதிரி கசாமுசான்னு தலைப்பு வெச்சு போஸ்ட் போடணும்னு ரெம்ப நாள் ஆசை எனக்கு ... அதான் போட்டுட்டேன்... ஹி ஹி ஹி...

மைண்ட்வாய்ஸ் : தலைப்பு வெச்ச சரி... உள்ள என்ன இருக்கு... அத சொல்லு

நான் : ஏய் மைண்ட்வாய்ஸ் ஒரு விசயம் நல்லா புரிஞ்சுக்கோ.... கமெண்ட் விடறது ரெம்ப சுலபம்... போஸ்ட் எழுதி பாரு அப்ப தெரியும் கஷ்டம்

மைண்ட்வாய்ஸ் : நீ எழுதலைன்னு இங்க யாரு உண்ணாவிரதம் இருக்கா

நான் : என்ன இப்படி சொல்லிட்ட... நான் போஸ்ட் போடலைனா மக்களுக்கு நல்லது கெட்டது எப்படி புரியும்

மைண்ட்வாய்ஸ் : ஹா ஹா ஹா ஹா ஹா

நான் : ஏய் எதுக்கு சிரிச்ச

மைண்ட்வாய்ஸ் : இல்ல வேண்டாம் விடு... சொன்னா நீ ரெம்ப வருத்தபடுவ

நான் : பரவால... ஒழுங்கா சொல்லு

மைண்ட்வாய்ஸ் : அது வேற ஒண்ணுமில்ல... நீ எழுதினா தானே மக்களுக்கு கெட்டது எதுன்னு புரிஞ்சு மத்த நல்ல ப்ளாக் பாப்பாங்கன்னு நீயே ஒத்துகிட்டது நெனச்சு சிரிச்சேன்...

நான் : யேஏஏஏஏஏ...

மைண்ட்வாய்ஸ் : ஹா ஹா ஹா... (என மைண்ட்வாய்ஸ் எஸ்கேப் ஆய்டுச்சு...)

அத விடுங்க... அது பேசினதெல்லாம் ஒண்ணும் மனசுல வெச்சுக்கதீங்க மக்களே...

சரி மேட்டர்க்கு போவோம்...
____________________________________________________________

மொதல்ல தலைப்புல "அமெரிக்கா..." னு இருக்கே...அதுக்கு விளக்கம்

இது என்னோட சொந்த அனுபவம் இல்ல... என்னோட பிரெண்ட் அவங்க பிரெண்ட்க்கு நடந்ததா சொன்ன ஒரு காமெடி எபிசோடு...

என் பிரெண்ட்க்கு பிரெண்ட் (பேரு என்னனு தெரியல) Canada ல இருந்து இந்தியாக்கு vacation போனாங்களாம்... போனவங்க கோயம்புத்தூர்ல ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் போய் இருக்காங்க

அங்க சர்வீஸ்க்கு இருந்த ஆள் நெறைய சாரீஸ் எல்லாம் எடுத்து காட்டி இருக்கான். இவங்க "என்ன விலை இவ்ளோ இருக்கு? offer ஒன்னுமில்லையா? விலை கம்மில இல்லையா?"னு கொஸ்டின் மேல கொஸ்டின் போட்டு இருக்காங்க, ஒண்ணும் செலக்ட் பண்ணாமியே

அதுக்கு அந்த கடை ஆள் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி "நீங்க அமெரிக்கால இருந்து வரீங்களா?"

என்ன கொடும சார் இது? விடு ஜூட்...

நம்ம ஊர பொறுத்த வரை அமெரிக்கான அமெரிக்கா மட்டும் தான்...அமெரிக்கா கண்டத்துல இருக்கற கனடா மற்றும் உள்ள நாடுகெல்லாம் கணக்குலேயே வர்றதில்ல...

இதை வெறும் காமெடி எபிசோடா சிரிச்சுட்டு மட்டும் ஒதுக்க முடியலங்க...

நெஜமாவே இந்த வாட்டி ஊருக்கு போனப்ப பணபுழக்கம் ரெம்ப ஜாஸ்தி ஆகி இருக்கறத பாக்க முடிஞ்சுது, நான் மூணு வருஷம் கழிச்சு போறதால அப்படி தோனுச்சானு தெரியல

இங்க வந்த புதுசுல எதை வாங்கணும்னாலும் multiplied by 32 (அப்போ கனடா டாலர் = 32 இந்தியன் ரூபாய்) போட்டு போட்டு யோசிப்போம்... இப்போ நிலைமை தலைகீழ்

நெஜமாவே இந்தியால ஷாப்பிங் போனப்ப எல்லாம் divided by 43 போட்டு போட்டு கனடாலையே வாங்கிக்கலாம் போல இருக்கேனு தோணற மாதிரி இருந்தது போங்க

எனக்கு புரிஞ்ச வரைக்கும் (தப்புனா திருத்துங்க) ஊருல இருக்கற விலைவாசிக்கு ஒரு குடும்பத்தோட மாத வருமானம் 30000 ரூபாய் இருந்தாதான் கொஞ்சம் ஸ்டாண்டர்ட் லைப் ஸ்டைல் இருக்கும்னு தோணுச்சு

அப்படி மாசம் 30000 சம்பாதிக்கற மக்கள் தொகை 20% னே வெச்சுக்கலாம் அதிகபட்சம், மிச்சம் 80% இருக்கறவங்களோட நிலை என்ன?

ஒரு மொழம் மல்லிகை பூ முப்பது ரூபா, என்ன கொடுமைங்க இது?

Globalisation, MNC வரவுகள் தான் இதுக்கு காரணம்னு முழுசா சொல்ல முடியல... அதுவும் ஒரு காரணம் தான், வேற நெறைய காரணங்கள் இருக்கு

முக்கியமா... இன்னைக்கி இந்தியால மார்க்கெட் Sellers Market ஆ இருக்கு... விக்கறவன் என்ன விலை வெச்சாலும் கேள்வி கேக்காம வாங்கற ஆட்கள் எண்ணிக்கைல கூடி இருக்காங்க

அதுக்கு அதிக சம்பளம் குடுக்கற MNC கள் தானே காரணம்னு நீங்க கேக்கலாம்... அது எப்படிங்க... காசு இருந்தா செலவு பண்ணனும்னு இருக்கா... இந்த மனப்பான்மை தான் மாறனும். அதை விட்டுட்டு எல்லாம் இந்த IT கம்பெனிகாரன் பண்றது தான்னு சொல்றது சரி இல்ல...
 
பேரம் பேசறது indecentனு நினைக்கற மனப்பான்மை இருக்கு. This attitude has to change...

நான் ஸ்கூல் காலேஜ் படிச்ச நாட்கள்லயெல்லாம் இந்தியாலேயே எங்கயாச்சும் வெளியூர் போறப்ப ரெம்ப பேரம் பேசினா "உங்களுக்கு கோயம்புத்தூரா?" னு நக்கலா கேள்வி வரும்... இப்ப பாருங்க நெலமைய...

முன்னியெல்லாம் ஒரு கடைல விலை கேட்டுட்டு "இவ்ளோ விலையானு" நீங்க நகந்தா... "இருங்கம்மா பாருங்க அப்புறம் விலை பேசுவோம்" சொல்வான்

ஆனா இப்போ "நீ இல்லேனா வேற ஒருத்தன் வாங்குவான் போ"ங்கற மனநிலை தான் விக்கறவங்ககிட்ட இருக்கு

அதை விட பெரிய கொடுமை என்னனா விலை ஜாஸ்தி இருக்கற பொருள் தான் நல்ல பொருள்னு ஒரு கொடுமையான impression வேற நெறைய பேரு மனசுல இருக்கு... அது விக்கரவனுக்கு விலை ஏத்த இன்னும் வசதியா போச்சு... விலை கூடின பொருட்கள மட்டும் தான் வாங்கறது ஒரு prestige value வா வேற சிலர் பாக்கறாங்க... ரெம்ப கொடுமைங்க இதெல்லாம்

நீங்க கனடால எல்லாம் பேரம் பேசி தான் வாங்குவீங்களானு நீங்க கேக்கலாம்? நிச்சயமா... furniture appliances ல இருந்து துணி கடைல கூட பேரம் பேசுவேன் நான்

நான் மட்டுமில்ல... இங்க பெரும்பான்மையான மக்கள் அத்தியாவிசிய பொருட்கள் தவிர மத்ததை நல்ல டீல் இருக்கற சமயம் மட்டும் தான் வாங்கறாங்க

ஆனா டீல் இருக்குதுங்கரதுக்காகவே வேண்டாதத வாங்கி வீட்டை நெறைசுக்கற அரை லூசுகளும் சிலர் உண்டு...but exceptions are not examples...right?

Economicsல சொல்வாங்க "when a market is not ruled by consumers, the economy will not flourish" னு... அது 200% கரெக்ட் statement

நீ ஒருத்தி பேசி என்ன மாத்த போறேன்னு சிலர் நினைக்கலாம்... every pebble makes a difference...that's all I can think...
 
ஒரு கனேடிய டாலர்க்கு 2003ல 32 இந்தியா ரூபாய் குடுத்தா போதும்... இப்ப 43  ரூபா தரணும்... ஏன் இப்படி? இது ஒரு வரில பதில் சொல்ற கேள்வி இல்ல தான்... ஆனா இந்த மாற்றம் எப்படி நல்லதாகும்?

இது நல்லதுன்னு வாதிக்கற சிலர் நெறைய interpretations சொல்றாங்க. அதுல ஒண்ணு இங்க... இது போல டாலர் ரேட் கூடும் போது டாலர்ல சம்பாதிக்கறவன் இந்தியால property வாங்குவான்... இதனால இந்தியாவுக்கு அந்நிய செலவாணி வருதில்ல நல்லது தானேனு... this is also called literal meaning...

அமெரிக்கா / கனடாகாரன் இந்தியால property வாங்கினா இந்தியாவோட தனி மனிதனுக்கு இதுல என்ன லாபம்... I don't see any direct or indirect relationship to this theory...

கேட்டா per capita income கூடுமல்லனு சொல்லுவாங்க...

அது என்ன per capita income , அது கூடினா என்ன லாபம்னா... In simple terms, Per capita income is defined as Total Income for the country divided by Total Population... அதாவது நாட்டோட மொத்த வருமானம் வகுத்தல் மக்கள் தொகை... அது கூடினா என்ன லாபம்னா வெளி உலகத்துல நாட்டோட மதிப்பு உயரும்...

இன்னும் தெளிவா சொன்னா... மும்பைல 43 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்புள்ள வீடு கட்டுற அம்பானியும், 43 பில்லியன்க்கு எத்தனை சைபர்னு கூட தெரியாத நம்ம அம்பாசமுத்திரம் அம்பானியும் ஒரே கணக்கு இந்த calculationக்கு

என்ன கொடும சார் இது?

ஏன் இப்படி சொல்றாங்கன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு உதாரணத்தோட சொல்றேன்

ஒரு வீட்டுல நாலு பசங்க இருக்காங்க. அதுல ஒரு பையன் நல்ல சம்பாத்தியம், கார் பங்களானு வாங்கறான் அவன் பேருல தான் எல்லா சொத்தும். மத்த மூணு பசங்களும் அதே வீட்டுல தான் இருக்காங்க, பெருசா வேலை வசதினு இல்லை

ஆனா அந்த குடும்பத்த பத்தி பொதுவா வெளிய விசாரிச்சா என்ன சொல்வாங்க. "அவங்களுக்கு என்ன, கார் இருக்கு பங்களா இருக்கு நிலபுலன் இருக்கு... கோடீஸ்வரங்கய்யா...பெரிய பார்ட்டி" னு சொல்லுவாங்க... ஆனா தனி மனித ஈடு பத்தி அங்கே சொல்லபடலை

அதே தான் நாட்டுலயும் நடக்குது... statistics படி இந்தியாவோட per capita income 2009 க்கு US$ 1032... அதாவது அம்பானி / அம்பாசமுத்திரம் அம்பானி எல்லாருக்கும் அதே தான்...

ஏன் இந்த per capita வுக்கு இவ்ளோ முக்கியத்துவம்னு நீங்க கேக்கலாம்... அதை வெச்சு தானே MNCல இருந்து எல்லாமும் உள்ளே வரும்,  அமெரிக்கால இருந்து எல்லா நாடும் ஒப்பந்தம் போடும், அதாவது குடும்ப சொத்த பாத்து அந்த சம்பாத்தியம் இல்லாத மூணு பசங்கள்ள ஒருத்தனுக்கு பெரிய எடத்து பொண்ணை கட்டி குடுக்கற மாதிரி தான்...

இதுக்கு மேல நான் பேசினா கிளாஸ் ரெம்ப போர் டீச்சர்னு சொல்லுவாங்க... சரி விடுங்க...

என்னாச்சு அப்பாவி... சும்மா ஹி ஹி ஹா ஹானு பதிவு போட்டுட்டு  போறத உட்டுட்டுனு கேக்கறீங்களா? சும்மா தோணுச்சுங்க சொன்னேன்... அவ்ளோ தான்... சத்தியமா நான் அரசியலுக்கெல்லாம் போக போறதில்ல... ஹா ஹா ஹா
____________________________________________________________

அமெரிக்கா...வேலைக்காரி... மற்றும் பின்ன அறிவிப்பு...னு தலைப்பு வெச்சுட்டு ஒரு விஷயம் பத்தி எழுதவே பதிவு இழுத்துடுச்சு... மிச்சத்த அடுத்த போஸ்ட்ல எழுதறேன்... டாட்டா... பை பை...

மைண்ட்வாய்ஸ் : எப்படி எல்லாம் போஸ்ட் எண்ணிகைய கூட்டுரதுனு நீ ஒரு கோச்சிங் க்ளாஸ் போட்டா வாழ்க்கைல எங்கயோ போய்டுவ அப்பாவி தங்கமணி

அப்பாவி : ஏய் இன்னும் போலயா நீ... உன்ன... (என அப்பாவி ஆயுதம் தேட மைண்ட்வைஸ் எஸ்கேப்...)

...

76 பேரு சொல்லி இருக்காக:

Arul Senapathi said...

As usual kalakkals.

There are various school of thoughts on this 'per capita income'. However, nothing will apply to 'common man'.

பிரதீபா said...

அக்கோய், கரண்டு ஷாக்கு அடிச்ச மாதிரி இப்படி எழுதற மாதிரி ஆய்டிச்சே.. என்னமோ போங்க !! (ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளர் போஸ்டு உங்களுக்கு தர்றதா சொன்னாங்களா? ) :)
ம்ம், அப்புறம்.. கோயமுத்தூருல எதுக்கு மல்லிப்பூ வாங்கறீங்க? கனகாம்பரம் வாங்கினா சீப்பா முடிஞ்சிருக்கும் இல்ல? :)

Krishnaveni said...

nice post, you are so energetic in writing posts after coming from india, great

philosophy prabhakaran said...

செம கலக்கல்... பின்நவீனத்துவம் அப்படின்னா என்னங்க...???

Mahi said...

:)

Useful post Bhuvana!

Porkodi (பொற்கொடி) said...

ஆமா அப்பாவி நானும் 3 வருஷம் கழிச்சு 3 வாரம் போறோம் அதுனால 6 ஊர் சுத்த வேண்டியதை கூட ஷாப்பிங் செஞ்சு மனசை தேத்திக்கலாம்னு நினைச்சு போனா.. கடவுளே ஒவ்வொண்ணும் தீயா விலை இங்கயே அதே அல்லது கொஞ்சம் கம்மியா தான் இருக்கும் சுத்தமா ஸ்பாயில் ஆகிடுச்சு ட்ரிப். இதெல்லாம் ஒரு நீளமான பதிவுன்னு மீதிக்கு தொடரும் வேறயா.. ஹைய்யோ ஹைய்யோ.

எஸ்.கே said...

//பின்ன அறிவிப்பு// அதான் பேர்லேயே இருக்கே! பின்னம் பின்னமா பிரிச்சு கொஞ்சம் கொஞ்சமா போடுங்க!:-)

இருந்தாலும் உங்கள் பதிவு ரொம்ப நல்லாவே இருந்தது!

Porkodi (பொற்கொடி) said...

//பின்நவீனத்துவம் அப்படின்னா என்னங்க...??? //

ஃபிலாசஃபி சார் நீங்க ப்லாக் உலகத்துக்கு புதுசா?

Balaji saravana said...

per capita income க்கு ஒரு எளிமையான உதாரணம் செம சூப்பர். எகனாமிக்ஸ் தெரியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு கூட சுலபமா புரியுது :)

//but exceptions are not examples...right? //
ரைட் ரைட் :)

//பிரதீபா சொன்னது…
அப்புறம்.. கோயமுத்தூருல எதுக்கு மல்லிப்பூ வாங்கறீங்க? கனகாம்பரம் வாங்கினா சீப்பா முடிஞ்சிருக்கும் இல்ல? :) //

ஆமா.. எதுக்கு கனகாம்பரம் கூட வாங்கணும், வாழைப்பழமே "சீப்"பா வாங்கிருக்கலாம்ல ;)

LK said...

அப்பாவி, உருப்படியா ஒரு பதிவு போட்டு இருக்க. அதற்க்கு வாழ்த்துக்கள். இந்த தனி நபர் வருமானம் அது இதெல்லாம் விட்டுது. இன்னிக்கு மக்களுக்கு கொஞ்சம் மோகம் ஆட்டுவிக்குது. குறிப்பிட்ட இடத்தில எடுத்தால்தான் சிறப்பு நல்லா இருக்கும் அப்படின்னு ..

இதுக்கு காரணம் டி வி. அதன் மூலம்தான் தேவையற்ற மக்களை மனம் மாற வைக்கும் விளம்பரங்கள் வருகுது.

on lighter side , கோவை எப்பவும் காஸ்ட்லி நகரம் அம்மணி

அமைதிச்சாரல் said...

அப்பாவி,.. எங்கூர்லயும் மல்லிப்பூ முழம் அறுபதுரூபாய் விக்குது. ஏன்னா, அது மதுரைலேர்ந்து ஃப்ளைட் புடிச்சு வருதாம்.

தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் வாங்குறது குறைஞ்சுடுச்சு. இப்பல்லாம், சும்மா ஒரு பெருமைக்காகவே வேண்டாததையெல்லாம் வாங்கி வீட்டுல வெச்சுக்கிறாங்க.

முனியாண்டி said...

very useful post

vinu said...

Economicsல சொல்வாங்க "when a market is not ruled by consumers, the economy will not flourish" னு... அது 200% கரெக்ட் statement

நீ ஒருத்தி பேசி என்ன மாத்த போறேன்னு சிலர் நினைக்கலாம்... every pebble makes a difference...that's all I can think...


[ithukkuthaan ithukkuthaa padicha pullainga sagavaasam vachukkatheaaanu sonnean kettiyaa kettiyaa kettiyaaa]
athu onnum illaingooov ennoda mind voiceungoov neenga onnum thappaa eduththukkaatheenga, appaaala pathivu superungoooo, superungoooo superoooooooooooooooooooooooooo superungoooooooooooooooow

[inimea nee intha pakkam varuve varuve varuve]

naanum coimbatore thaan paaa appudiyellam illay, inga business trend onnu irruku, neenga carula poi, designer sarries, perfumed and konjam modern lokkula poi mallipoovu keattaa oru rateuu ithuvea konjam simpleaaa poi rate kettaaa oru rate avaolu thaan, appuram ippa sameeba kaalangalil konjam vaalkaitharam, matrum moolaporulgain vilayum athigarichuttathunaala ellaa porutkalin vilaiyum konjam uyarnthu irruku.

siva said...

meeeeeeeeeeee
the firstu...

அனாமிகா துவாரகன் said...

வாட் ஹாப்பின்ட்(டு) டூ அடப்பாவி. உருப்படியா ஒரு போஸ்ட் போட்டிருக்கா அதுதேன் இங்க புயல் மழை அடிக்குது. ஹா ஹா ஹா.

அப்புறம், மல்லிகைப்பூ 60 ரூபாவா? WHATTTTTT??!!?? =(

வெறும்பய said...

நல்ல பதிவு சகோதரி..

நான்கு வருடங்களுக்கு முன் சென்னையில் இருக்கும் பொது 250 ரூபாய் இருந்தால் ஒரு வாரம் பைக்குக்கு பெட்ரோல், சாப்பாடு செலவு என கவலையில்லாம ஒட்டியிருக்கேன். ஆனா இந்த வருஷம் போனப்போ 500 ஒரு மணி நேரத்தை தாண்டல..

பஸ் ஸ்டாண்ட்ல ஒரு டி குடிச்சிட்டு 12 ரூபாய் குடித்து வந்தேன்.. எல்லாம் மாறி போச்சு.. ஊருக்கு போய் பொழப்பு நடத்தனுமின்னாலே பயமா இருக்கு...

கல்பனா said...

செம கலக்கல்,....,

asiya omar said...

அருமையான பகிர்வு.நீங்க அப்பாவியா?மைண்ட் வாய்ஸ்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு அ.த. :) மக்களுக்கு தொலைக்காட்சி பார்த்துப் பார்த்து மோகம் அதிகமாகி விட்டது. விலைவாசி ஏறிவிட்டது.

மேலும் ஒரு விஷயம்.: 1990 வருடமே கோயம்புத்தூரில் ஒரு முழம் மல்லிகைப்பூ 10 ரூபாய் விற்றது.... அதனால 20 வருடத்தில் 15 ரூபாய் தான் ஏறி இருக்கிறது என்று திருப்திபட வேண்டும் போல இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

முன்னாடி மைன்ட்வாய்ஸ்ல கலாய்ச்ச நீங்களா இவ்ளோ சீரியஸா எழுதினது?! கலக்கல் கட்டுரை. :)

middleclassmadhavi said...

உங்கள் கருத்துக்களை பேரமே பேசாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் (நான் இந்தியாவில் இருக்கிறேன்!)

நாகராஜசோழன் MA said...

எல்லாம் விளம்பர மோகம். என்று தணியுமோ இந்த மோகம். நல்ல பகிர்வு.

sakthi said...

அருமையான கட்டுரை
மைன்ட் வாய்ஸ் கிரேட்!!!

sakthi said...

அமெரிக்கா...வேலைக்காரி... மற்றும் பின்ன அறிவிப்பு...னு தலைப்பு வெச்சுட்டு ஒரு விஷயம் பத்தி எழுதவே பதிவு இழுத்துடுச்சு... மிச்சத்த அடுத்த போஸ்ட்ல எழுதறேன்... டாட்டா... பை பை...

காத்திருக்கின்றோம் ::))

Arun Prasath said...

புரிஞ்ச மாறியும் இருக்கு.... புரியாத மாறியும் இருக்கு

புதுகைத் தென்றல் said...

சொல்வது கரெக்தான். நானும் ரொம்பவே கஷ்டபட்டிருக்கேன். பேரம் பேசினால் நாம மட்டமான ஆளுன்னு நினைக்கறாங்க. இருப்பதையெல்லாம் அள்ளிக்கொடுத்திட்டு வந்திர முடியுமா. நீங்க சொன்னப்ல மனப்பான்மை மாறனும்.. நடக்குமா என்பது கேள்விக்குறி தான். :(((

ஜெய்லானி said...

ஆஆஆஆ...வந்துட்டீங்களாஆஆஆஆ தெரியாமப்போச்சே.

வெளிநாட்டில இருப்பவங்களுக்கும் ,ஊரிலேயே இருப்பவங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அழகா சொல்லிட்டீங்க

நாம எது எடுத்தாலும் முதல்ல மனசு லோக்கல் கரன்சி வேலிவேஷனைத்தான் பார்க்கும்..அதுதான் நமது இங்கும் அங்கும் உள்ள தெரிஞ்சே நடக்கும் முட்டாள்தனம்..

எல்லாமே நாலு மடங்கு விலையில் ஓடுது ..நானும் நினைக்கிறேன் பேசாமே சீனாவில குடியோறிடலாமான்னு ஹி..ஹி...

ஹுஸைனம்மா said...

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விடுமுறைக்குச் சென்று வரும் எல்லாரிடமிருந்தும் இப்படி ஒரு அதிர்ச்சிப் பதிவு தவறாமல் வருகிறது. (நானும் எழுதினேனே!) அடுத்ததா, போக்குவரத்து, பள்ளிகள், சுகாதாரம் பற்றியும் எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்.

சீக்கிரம் இந்தியா போய் செட்டிலாகணும்னு ஒரு ஆசை இருந்துகிட்டே இருந்துது. இந்த வாட்டி இந்தியா போய்ட்டு வந்தபிறகு, அந்த ஆசை கொஞ்சம் தேஞ்சுபோயிடுச்சு!!

பதிவு அருமை, ஆனா அந்த மைண்ட் வாய்ஸ் உரையாடல் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்துறமாதிரி ஒரு ஃபீலிங். அது இல்லேன்னாலும் ரொம்ப சீரியஸ் புலம்பல் பதிவா ஆகிருக்கும்.

ஹுஸைனம்மா said...

அப்புறம் இன்னொரு விஷயம், “மற்றும்” & “பின்ன” - ரெண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தான்!!

பத்மநாபன் said...

பொருளாதாரத்தை இப்படி பிரிச்சு மேயறிங்களே...அப்பாவிக்குள்ளே ஒரு பெரிய பொ.மேதையே இருக்காங்க அப்பப்ப எடுத்துவிடுஙக ...

விலை விஷயத்தில நம்மூருகளுக்குள்ளேயே வித்தியாசம் நெறையா இருக்கு ... கோவையைவிட சென்னை மலிவா இருக்கு .... குறிப்பா துணிகளும் மல்லிப்பூவும் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யம்மாடி கணக்கெல்லாம் நல்லா போடறீங்க..:)

Gayathri said...

அக்கா.நீங்க விஜய காந்த்ரசிகையா ? இப்படி கணக்குல பின்றீங்க !

நீங்க சொல்றது நெஜமாவே உண்மைதான்
நம்ம ஊருல விலைவாசி ஏறி போச்சுதான்

மக்கள் ரொம்பவே தவிக்கிறாங்க

இதெல்லாம் செயற்கையா ஏற்ற படுகிரமாதிரி எனக்கு தோணுது

வார்த்தை said...

//இப்படி பின் நவீனத்துவம் ரேஞ்சுல எல்லாரும் வெக்கற மாதிரி கசாமுசான்னு தலைப்பு வெச்சு போஸ்ட் போடணும்னு ரெம்ப நாள் ஆசை எனக்கு ... அதான் போட்டுட்டேன்//

குரு வக்கிர பெயர்ச்சின்னு பேப்பர்ல போட்டிருந்தான் .......அது எங்களுக்கு தானா... ?

வார்த்தை said...

//மைண்ட்வாய்ஸ் : அது வேற ஒண்ணுமில்ல... நீ எழுதினா தானே மக்களுக்கு கெட்டது எதுன்னு புரிஞ்சு மத்த நல்ல ப்ளாக் பாப்பாங்கன்னு நீயே ஒத்துகிட்டது நெனச்சு சிரிச்சேன்...//

ஹா...ஹா...ஹா... சபாஷ் மைன்ட் வாய்ஸ் சரியாக சொன்னாய் ...... நீ என் இனமடா...

SenthilMohan said...

உங்களுக்குள்ள இப்படி ஒரு பொருளாதார அறிவா? நான் நம்ப மாட்டேன். இத எங்கிருந்து சுட்டீங்க?

வார்த்தை said...

i used to tell to my friends that business is a legally permitted, socially accepted, action of cheating....
i'm glad at least now many people (here in the country) agree with my opinion.
the cost of living appears very ugly, over here.
one kg onion is 45 rupees (which was cultivated within 100 kms radius) while one kg kashmir apple (cultivated in JK, himachal pradesh etc) is 40 rupees.
the price of brinjal has increased by 250% in a year. its a dream to buy a kg of vegetable below 10 rupees.
at present it is clearly evident that those who are outside india can better settle overseas itself.
govt takes care of its staff with increased pay scale, those in business fix their own prices, those who can cheat, steal or demand bribe easily manage.
and for the rest, who dont or cannot want to cheat, steal or involve in bribery, life sucks.
Pity us who cant get out of this deteriorating hell...

துளசி கோபால் said...

அப்பாவி பேசும் பேச்சா இது?????

அம்மாடியோவ்!!!!!

வேலைக்காரி 'Bபிட்'டை சீக்கிரம் போடுங்க.

எங்கூர்லே வேலைக்கு ஆள் வச்சுக் கட்டுபடி ஆகாது:(

Jaleela Kamal said...

ம்ம்ம்ம் ஊருக்குப்போய் வந்தாலே இப்படி தான. அமைதிச்சாரல் மலிக்கை பூ மதுரையிலிருந்து வருவதால் 60 ருபாயா? அப்ப இங்கு 5 திர்ஹம் கொடுத்தே வாங்கி கொள்ள்லாம் போல

அப்பாவி தங்க மணி தலைப்ப என்ன வோன்னு நினைச்சிட்டேன்
துபாய் வேலக்காரி ய பற்றி பதிவு போட யோசித்து வைத்ட்து இருந்தே அதுக்க்குள் ஒரு அமெரிக்க வேலைக்காரியாஆஆஆஅ

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ஒரு வடை மூன்று ரூபாய் (சாதாரண கடையில்) சொல்றாங்க.
வடை சுலபமாக காசு கம்மியா கிடைக்கிறது பதிவுலகில் தான்.

தெய்வசுகந்தி said...

இப்படித்தான் ஒவ்வொரு முறை இந்தியா போகும்போது வாங்க ஒரு பெரிய list டோட போவேன். வெலையைப்பாத்து பாதி வாங்காமயே வந்துருவேன். 2 வருஷத்துக்கு ஒரு முறை போகும் போது நல்லாவே வித்தியாசம் தெரியுது. நானும் எல்லா shoppingகும் கோயம்புத்தூர்லதான். அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்!

vgr said...

Enna pannanam nu puriala...capitalistic society a irunda paravalanu thonudu.

இது நல்லதுன்னு வாதிக்கற சிலர் நெறைய interpretations சொல்றாங்க. அதுல ஒண்ணு இங்க... இது போல டாலர் ரேட் கூடும் போது டாலர்ல சம்பாதிக்கறவன் இந்தியால property வாங்குவான்...

Kizhichan...evan vanguran? America layum Canada layum Bungalow vangi pottu, Patio vum Garden um Sun room um than katikaran..Ketta en pasangaluku thirumba poga vendam...avangalala adjust pannika mudiyadu india la ngran...

In general, we have become selfish...poduthuvama ellarum yosika thodangina edavadu therum nu nenakren....

Thalaivar paduthala solra mari "Richer gets richer..poorer gets poorer" than. I hate that its true.

Good post! Dint expect from you. Nalla iruku..neraya ezhudunga inda mari..

Lakshmi said...

அப்பாவி, நீங்களா? உங்கபதிவைப்படிக்கிரவங்களா??!!!!!!!!!!!!

சுரேகா.. said...

நல்லா எழுதியிருக்கீங்க! நிறைய விஷயஞானம் இருந்தால்தான் நகைச்சுவை செய்யமுடியும்! நீங்க... கலக்குறீங்க!.. வாழ்த்துக்கள் !

சுசி said...

அசத்தல் புவனா.

Harini Sree said...

appa appa intha maari post podarathu thayir saathuku oorugai maari ubayogama irukku! :) Ithaye follow pannunga

sriram said...

அமெரிக்காவைப் பார், ரஷ்யாவைப் பார் என்றெல்லாம் நம்ம நாட்டு அரசியல் வியாதிகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க இல்ல, அதான் வியாபாரிகள் எல்லாம் டாலர் ரேஞ்சுக்கு விலையை வச்சிட்டாங்க.

நான் அடிக்கடி நண்பர்களிடம் வியக்கும் விஷயம் இது. இந்தியாவில் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்கள் எப்படி சமாளிக்கராங்கன்னு தெரியல

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடுபாண்டி said...

அக்கா 3 தடவை கிள்ளி கிள்ளி பாத்துண்டேன், அமைதியான ஒரு இட்லி மாமிக்கு உள்ள இப்படி ஒரு அமர்தியாசென் இருப்பார்னு எதிர்பார்க்கவே இல்லை. நல்ல ரசிச்சு படிச்சேன்பா. (மைண்ட் வாய்ஸ் வாய்ல திரட்டிப்பாலை உருட்டி போடனும்..:) ) இதுக்கு நடுல //Good post! Dint expect from you//நு அமைதியா கலாய்ச்ச VGR அண்ணாச்சிக்கு ஒரு சலாம்!!..;)

My days(Gops) said...

neeenga romba economics padichiteenga pola, illa captian fan'ah irupeeenga pola.. edhu epadioh,

idhelaam naamah india'la irundhu irundha yosichi irupomah? thanks to canada :)

//ஒரு குடும்பத்தோட மாத வருமானம் 30000 ரூபாய் இருந்தாதான் கொஞ்சம் ஸ்டாண்டர்ட் லைப் ஸ்டைல் இருக்கும்னு தோணுச்சு //

idhula house rent ilaama thaaney? chennai'la minium 50000 venum :)..

vgr said...

illa thakkudu...kalaikala...unmayaga paritinen..

சே.குமார் said...

செம கலக்கல்

சிவகுமாரன் said...

ரொம்ப சரியா சொன்னீங்க. முன்னேயெல்லாம் காய்கறி வாங்கின கருவேப்பிலை இனாம தருவாங்க. இப்போ கேட்ட கேவலமா பார்க்குறாங்க. நீங்க சொல்ற மாத்ரி மாதம் 30000 வாங்கினா குடும்பத்தை ஓட்டலாம் அவ்வளவு தான்,.சொந்த வீடெல்லாம் நெனைச்சு பாக்க முடியாது. மைண்ட் வாய்ஸ்ஐ கட்டி தீனி போட்டு வளக்குறீங்களா ?

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - தேங்க்ஸ் அருள்

@ பிரதீபா - ஹா ஹா...என் ப்ளாக்ல உங்க மொதல் கமெண்ட்ஏ கலக்கலா இருக்கே பிரதீபா... சூப்பர்... கனகாம்பரத்த என் உடன் பிறப்பு "கேனாம்பரம்"னு சொல்லும்...சோ அது எப்பவும் வாங்கரதில்லீங்கோ...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...எல்லாம் ஊர் உறவை பார்த்த energy தான்...

அப்பாவி தங்கமணி said...

@ Philosophy Prabhakaran - நன்றிங்க...பின் நவீனத்துவம்னா...வேண்டாம் விடுங்க தனி போஸ்டே போடறேன் அதை பத்தி...இதான் வம்பை விலை குடுத்து வாங்கறது... ஹா ஹா...

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ பொற்கொடி - ஹா ஹா...ஆமாம் கொடி...எஸ் எஸ் இன்னும் ரெண்டு போஸ்ட் இழுத்தாலும் ஆச்சிரியாபடறதுக்கு இல்ல.. ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - நன்றிங்க எஸ்.கே

@ Balaji Saravana - நன்றிங்க பாலாஜி. ஹா ஹா...சூப்பர் கமெண்ட்...அதை விட சீப்பே (தலை சீவறது) வாங்கி இருந்தா இன்னும் சீப்பா முடிஞ்சு தான் இருக்கும்...ஹா ஹா

@ LK - அடடா...வசிஷ்டர் வாயால...ஒகே ஒகே...ஹலோ என்னது சந்தடி சாக்குல எங்க ஊரை கலாய்குற...இரு இரு அம்மணிகிட்ட போட்டு தரேன்

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - flight புடிச்சு வந்தா அத விலை சரி தாங்க...கோவைல அந்த விலை கொஞ்சம் ஓவர்... சரியா சொன்னீங்க...நன்றிங்க

@ முனியாண்டி - வாவ்...கமெண்ட் after long time thanks...

@ vinu - ஹா ஹா ...நோ டென்ஷன் நோ டென்ஷன்... ஆஹா இப்படி ஒரு பிசினஸ் மேட்டர் எல்லாம் இருக்கா..அது சரி...thanks

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஊரே படிச்சப்புறம் வந்து கமெண்ட் போட்டுட்டு என்ன மீ தி first ... யு தி லாஸ்ட்...

@ அனாமிகா - ஏய்...நக்கலா இருக்கா உனக்கு? எஸ் எஸ் விலை வாசி எல்லாம் ஏறிதான் போச்சு அம்மணி...

@ வெறும்பய - சரியா சொன்னீங்க பிரதர்...காலம் மாறி போச்சு...

அப்பாவி தங்கமணி said...

@ கல்பனா - நன்றிங்க கல்பனா

@ asiya omar - எஸ் எஸ்...மீ அப்பாவி ஒன்லி... தேங்க்ஸ்ங்க ஆசியா

@ வெங்கட் நாகராஜ் - தொலைக்காட்சி பாத்து மோகம்ங்கறது உண்மை தாங்க... ஆனா இது ஓவர் தான்... 1990 ல மொழம் பத்து ரூபாயா...எதாச்சும் பண்டிகை நாட்கள்ல அப்படி இருந்துருக்கும்... பொதுவா அவ்ளோ குடுத்தா நினைவில்லைங்க...

அப்பாவி தங்கமணி said...

@ நான் ஆதவன் - நன்றிங்க ஆதவன்...

@ middleclassmadhavi - ஹா ஹா...சூப்பர் மாதவி...

@ நாகராஜசோழன் MA - சரியா சொன்னீங்க...நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ sakthi - தேங்க்ஸ் சக்தி...காத்து இருக்கீங்களா...உங்களுக்கு பெரிய மனசு தான் போங்க..ஹஹா

@ Arun Prasanth - அது சரி...

@ புதுகை தென்றல் - தேங்க்ஸ் அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - என்னது காந்தி செத்துட்டாரா கேக்கற மாதிரி இருக்கே? நான் வந்து போஸ்ட் போட்டு மாசமாச்சு போங்க... ஐயோ பாவம் சீனா உட்டுடுங்க ஜெய்லானி...ஹா ஹா

@ ஹுஸைனம்மா - தேங்க்ஸ் அக்கா...

//அப்புறம் இன்னொரு விஷயம், “மற்றும்” & “பின்ன” - ரெண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தான்!! //

எப்போ இருந்து என் போஸ்ட் எல்லாம் நீங்க இவ்ளோ டீப்பா படிக்க ஆரம்பிச்சீங்க...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஆஹா...அது சரி...நன்றிங்க அண்ணா

@ முத்துலட்சுமி - ஹி ஹி...அப்ப அப்ப போடறது தான் கணக்கும்... நன்றி

@ Gayathri - ஹா ஹா...தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ வார்த்தை - வார்த்தை இப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா? ஹா ஹா

@ SenthilMohan - அடபாவிங்களா? என்ன கொடும சார் இது? இதை வெச்சே போஸ்ட் போடறேன்...உங்கள பழி வாங்க எனக்கு வேற வழி தெரியல...ஹா ஹா

@ வார்த்தை - nice கமெண்ட்...தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ துளசி கோபால் - நன்றிங்க

@ Jaleela Kamal - ஆமாங்க விலை வாசி எங்கயோ போயிட்டு இருக்கு...சீக்ரம் அடுத்த போஸ்ட் போடறேன் ...நன்றி

@ கமெண்ட் மட்டும் போடறவன் - ஹா ஹா...கரெக்ட்ஆ சொன்னீங்க...இங்க மட்டும் தான் வடை ப்ரீ...

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - ஓ...நீங்களும் கோவையா? நம்ம ஊருல வாங்கி கட்டுபடி ஆகாதுங்க...அப்படி இருக்கு நிலைமை...நன்றி

@ VGR - நன்றி நன்றி நன்றி //Good post! Dint expect from you // ஆஹா மரண கலாய்ப்பு...ஹா ஹா..ஜஸ்ட் கிட்டிங்

@ Lakshmi - ஹா ஹா...நன்றிங்க அம்மா

அப்பாவி தங்கமணி said...

@ சுரேகா - நன்றிங்க

@ சுசி - தேங்க்ஸ் சுசி

@ Harini Sree - தேங்க்ஸ் ஹரிணி...ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?

அப்பாவி தங்கமணி said...

@ sriram - நன்றிங்க

@ தக்குடு - ஹா ஹா... நேரம் தான்...எல்லாரும் இப்படி ஆள் ஆளுக்கு கலாய்க்கறீங்க... இரு இரு அடுத்த போஸ்ட் போடுவ இல்ல அப்ப கவனிச்சுகறேன்...

@ My days(Gops) - ஆஹா...என்ன அதிசியம்...எங்க ப்ளாக் பக்கமெல்லாம் வழி தெரிஞ்சுருக்கே...என்ன சார் லாங் லீவ்ல போயிட்டீங்களா? ஹா ஹா...தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ VGR - தேங்க்ஸ் அ லாட்

@ சே.குமார் - நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ சிவகுமாரன் - ஆமாங்க....நம்ம ஊரு விலை வாசி அப்படி தான் இருக்கு... மைண்ட்வாஸை நான் எங்கிங்க வளக்கறேன்...தான் தோன்றியா வளருது...ஹா ஹா...நன்றி

Dubukku said...

//அப்பாவி, நீங்களா? உங்கபதிவைப்படிக்கிரவங்களா??!!!!!!!!!!!//

repeatuuuuuuu

அப்பாவி தங்கமணி said...

@ Dubukku - what a surprise? Thanks

Malar Gandhi said...

Yeah...been to India recently...I cudnt afford much of shopping, either. Prices are too high - garments or furniture...you name it....even veggies and groceries are skyrocketing,there. And our people judge' when I decide not to buy few things- considering the fact 'its not worth it':(

அப்பாவி தங்கமணி said...

@ Malar Gandhi - Thanks Malar

LK said...

//ந்தியாவில் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்கள் எப்படி சமாளிக்கராங்கன்னு தெரியல//

இன்னிக்கு தேதியில் இருவது கைல வந்தாலே சமாளிக்க முடியலை

அப்பாவி தங்கமணி said...

@ LK - well said Karthik... things are like that only...

இராஜராஜேஸ்வரி said...

இங்க வந்த புதுசுல எதை வாங்கணும்னாலும் multiplied by 32 (அப்போ கனடா டாலர் = 32 இந்தியன் ரூபாய்) போட்டு போட்டு யோசிப்போம்..//
உண்மை.

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - Thank you :)

Post a Comment