Monday, December 13, 2010

வேலைக்காரி & அறிவிப்பு (ஜில்லுனு ஒரு காதல்...)


இதென்ன கண்றாவி இப்படி ஒரு தலைப்புனு கேக்கறவங்க இதுக்கு முன்னாடி போஸ்ட் பாத்தீங்கன்னா புரியும்... பாக்கலைனாலும் புரியும்... (ஹி ஹி)

சரி சரி நோ டென்ஷன்... அது போன போஸ்ட்ல "அமெரிக்கா... வேலைக்காரி... மற்றும் பின்ன அறிவிப்பு... " னு தலைப்பு வெச்சேன்... ஆனா அதுல ஒரு விஷயம் பத்தி எழுதவே இடம் பத்தலை...

சோ அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்... மத்தபடி அந்த போஸ்ட்க்கும் இந்த போஸ்ட்க்கும் சம்மந்தம் உறவு பாத்தியதை ஒண்ணும் இல்லை...

(மைண்ட்வைஸ் : ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல)_______________________________________________________

ஒகே...போஸ்ட்க்கு போவோம்...

அறிவிப்பு என்னனா...

என்ன நீ வேலைக்காரி மேட்டர் சொல்லாம மொதல்ல அறிவிப்புக்கு போறேன்னு நீங்க கேக்கலாம்... அதுக்கு ஒரு காரணம் இருக்கு..

ஆனா நீங்க கோவப்படாம கேக்கணும்...

மைண்ட்வாய்ஸ் :சொல்லி தொல கேக்கறேன்...

அப்பாவி: அதாவது நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா... மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா...

மைண்ட்வாய்ஸ் :உன் மேட்டர்ம் வேண்டாம்.. நாங்க மேலோகதுக்கும் போக வேண்டாம்...ஆள உடு...

அப்பாவி: என்னதிது...நீ தானே கோவப்படமாட்டேனு சொன்ன...இப்ப கோவப்படறியே

மைண்ட்வாய்ஸ் : உன் ப்ளாக் படிச்சா கோவம் வராது அம்மணி... கொல வெறி தான் வரும்...

அப்பாவி: கூல் கூல்... சரி போஸ்ட்க்கு போவோம்...
________________________________

அறிவிப்பு என்னனா... நான் புதுசா ஒரு தொடர் கதை ஆரம்பிக்க போறேன்.... வெயிட் வெயிட்... ஓடாதீங்க...

நீங்க பயப்படுற மாதிரி இது டெர்ரர் கதை எல்லாம் இல்லை... ஜாலியான கதை... ஜில்லுனு ஒரு கதை...

கதை தலைப்பே "ஜில்லுனு ஒரு காதல்"... இப்ப ஒகேவா...

தமிழ் சினிமா டைரெக்டர்க தான் பாரின் போய் சினிமா எடுக்கணுமா... நாங்க எடுக்க கூடாதா... So, இந்த கதை நடக்கும் இடம் கனடா (Canada)... அவ்ளோ தான் இப்போ details ... மற்றதெல்லாம் ப்ளாக்(Blog) திரையில் காண்க...

Don't Worry...Trailer Trailer னு ஓட்டி கொடுமை எல்லாம் படுத்த மாட்டேன்... Straight ரிலீஸ் தான்... எப்போவா?

வர்ற செவ்வாய் முதல் ஒரு ஒரு செவ்வாய்க்கிழமையும் "ஜில்லுனு ஒரு காதல்" படிக்கலாம்...

உங்கள் அன்புக்கும் பேராதரவுக்கும் நன்றி நன்றி நன்றி...

Mindvoice : This is what we call over confidence

Appavi :  This is what we call கொலை செய்யும் கத்தி... (என அப்பாவி தாயாராய் வைத்திருந்த  ஆயுதம்  எடுக்க)

Mindvoice : Me escape...
 _________________________________________________________________

சரி அடுத்த டாபிக்... "வேலைக்காரி..."

நான் இந்தியால இருந்தப்ப, தீபாவளி முடிஞ்ச மறு நாள் வேலைக்கு வந்த எங்க வீட்டுல வேலை செய்யற அம்மாவுக்கும் எங்க மாமியாருக்கும் நடந்த சம்பாஷனை...

"என்ன சாவித்திரி... பண்டிகைக்கு ஓரம்பரை வருவாங்கன்னு சொன்ன... எல்லாம் வந்துட்டு போயாச்சா" இது எங்க மாமியார்

"அதை எனுங்கம்மா கேக்கறீங்க?"

"ஏன் என்னாச்சு?"

"நானே உங்ககிட்ட அடுத்த வாரம் ஒரு நாலு நாள் லீவ் வேணும்னு கேக்கணும்னு நெனச்சேன்" என அப்பாவியா சாவித்திரி அம்மா ஒரு லுக் விட

"லீவா எதுக்கு?" னு, இதென்னடா வம்புனு ஒரு லுக் விட்டாங்க எங்க மாமியார்

"அது... ஓரம்பரை யாரும் வருலிங்கம்மா... அவிக வந்தா நாலு பேருக்கு போக்குவரத்து செலவு...நான் போனா ஒருத்தி தானங்க"

சூப்பர் ரீசன்...இதுக்கு மேல என்ன பேச முடியும்னு எங்க மாமியார் "சரி சரி... பாத்திரம் கழுவிட்டு வெயில் அதிகமாறதுகுள்ள துணி தொவைச்சுடு"

"சின்னய்யாவும் அம்மாவும் (ரங்க்ஸ்ம் நானும்) இருக்கறதால கழுவற பாத்திரமும் ஜாஸ்திங்க துணி நாளைக்கு தொவைக்கிறேன்"

எங்க மாமியார் ஒண்ணுமே பேசல... நான் தான் டென்ஷன் ஆய்ட்டேன்...

"என்ன அம்மா இது... எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிட்ட plate... மிஞ்சி போனா ஒரு ரெண்டு பாத்திரம் கூட... இதை நானே கழுவி வெச்சு இருப்பேன்" னு எங்க மாமியார்கிட்ட நான் சொன்னதுக்கு

"ஆமா சாமி... இப்பவெல்லாம் வேலைக்கு வர்ற ஆளுக இப்படி தான்... திருப்பி பேசினா வேலைக்கு வர மாட்டாங்க நாளைக்கு... நான் வேற இப்ப சும்மா இருக்காம ஓரம்பர வரலியான்னு கேட்டு இப்ப பாரு நாலு நாள் லீவ் கேக்கறா" னு நொந்துட்டாங்க...

அதுக்கு ரங்க்ஸ் "ஹா ஹா...சொந்த செலவுல சூனியம்"னு கிண்டல் வேற அவங்க அம்மாவை... நேரம் தான்...

எங்க மாமியார் அதுக்கு அப்புறம் சொன்ன விளக்கம் தான் சூப்பர் "இப்பவெல்லாம் எல்லாம் இலவசம் இலவசம்ங்கறாங்க... யாருக்கும் வேலை செஞ்சு சம்பாதிக்கற எண்ணமில்ல... வீட்டு வேலைக்கு வர்ற ஆளுக கம்மி ஆகி போச்சு... அதனால இருக்கறவங்களுக்கு டிமாண்டு"

கொடுமைடா சாமி?
 
...

73 பேரு சொல்லி இருக்காக:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, கதை எங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓஹோ...அந்தக் கோட்டுக்கு கீழ இருக்கறதுதான் கதையா... நான் அதுவும் உங்க மைண்ட் வாய்ஸ்தான்னு நெனச்சுட்டேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்...சின்றாசு, கத முடிஞ்ச்சிடுச்சுடா, கட்றா வண்டிய.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போக முன்னாடி ஒரு சின்ன டவுட்டு, இது தொடர்கதைன்னு போட்டிருந்திங்க, இந்தக் கத முடிஞ்சிசுருச்சே, எப்படி தொடர்வீங்க?

sriram said...

//நான் புதுசா ஒரு தொடர் கதை ஆரம்பிக்க போறேன்//
புவனாக்கா, இதுக்கு நீங்க என்னை கனடாவுக்கு வரவச்சி நாலு அடி அடிச்சிருக்கலாம், வலி ஒரு நாள்ல போயிருக்கும்...
ஆண்டவன் நல்லவங்களைத்தான் சோதிப்பான்னு சொல்வாங்க. எங்களுக்கு வரும் சோதனைகளைப் பாக்கும்போது அது சரிதான்னு தோணுது..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//"ஜில்லுனு ஒரு காதல்"//

புவனாக்கா, இது சொந்தக் கதையா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

புவனாக்கா நான் சீரியஸா சொல்றேன், சிரிக்கக் கூடாது சரியா?

அதே கண்கள் தொடர்கதை படிச்சதிலிருந்து வேறெந்த கதையும் படிக்கப் பிடிக்கல, ஏன்னா அதைவிட சிறந்த கதை நான் இதுவரை பாக்கல. ரெண்டாவது தொடர்கதை முதலாவதை விட சூப்பரா இருக்கணும் என்ன?

மொத்தம் எத்தனை எபிசோடுன்னு சொல்லிட்டீங்கன்னா நான் இப்பவே பின்னூட்டங்களைத் தயார் பண்ணிடுவேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

பன்னிக்குட்டி சார் நாலு பின்னூட்டம் போட்டிருக்கிறார், நானும் நாலு குட்டி சே நாலு பின்னூட்டம் போட வேணாமா அதுக்காத்தான் இது..

என்னை ஜிமெயிலில் பாத்தா பிங் பண்ணுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Krishnaveni said...

waiting for jillunu oru.......story, keep posting

Porkodi (பொற்கொடி) said...

//அதே கண்கள் தொடர்கதை படிச்சதிலிருந்து வேறெந்த கதையும் படிக்கப் பிடிக்கல, ஏன்னா அதைவிட சிறந்த கதை நான் இதுவரை பாக்கல.//

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Porkodi (பொற்கொடி) said...

அ.த. அறிவிப்பை படிச்ச ஒடனேயே கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வர்றாப்புல ஆயிடுச்சு. பாஸ்டன் நீங்க போடற டெம்ப்ளேட் கமெண்டுக்கு ரெடி வேறயாக்கும், நானே உங்களுக்கு ப்ராக்ஸி போட்டுக்கறேன், போய் புள்ளக் குட்டியை படிக்க வைங்க பாஸ்!

Porkodi (பொற்கொடி) said...

//போக முன்னாடி ஒரு சின்ன டவுட்டு, இது தொடர்கதைன்னு போட்டிருந்திங்க, இந்தக் கத முடிஞ்சிசுருச்சே, எப்படி தொடர்வீங்க? //

பன்னிக்குட்டி ராம்சாமி!! உண்மைல நீங்க தாங்க அப்பாவி. யாரு ப்லாக்ல வந்து என்ன கொஸ்டின் ஹைய்யோ ஹைய்யோ!

philosophy prabhakaran said...

ம்ம்ம்... ஜில்லுனு ஒரு காதல் தலைப்பில் தொடர்கதையா... எழுதுங்க...

Porkodi (பொற்கொடி) said...

ஆனாலும் சின்ன பொண்ணு நாமல்லாம் இப்படி அப்படி எழுதினா தான் மெருகேற முடியும், பாஸ்டன் அங்கிளை கண்டுக்காதீங்க, நீங்க எழுதுங்க அப்பாவிக்கா, என்னோட ஃபுல் சப்போர்ட் உங்களுக்கு தான்.

சுசி said...

கை குடுங்க புவனா.. என் ரங்ஸ் வீட்டு வேலை செய்ய கஷ்டம்னா சொல்லு ஊர்ல இருந்து வீட்டு வேலைக்கு ஆள் இறக்கிடலாம்.. என்னை மட்டும் கேக்காதேங்கிறார்.. இதை அவரை முதல்ல படிக்க வைக்கணும் :))

vanathy said...

தொடர்கதையா... ஆரம்பிங்க. நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.

ஹேமா said...

கதை ஒண்ணு வருதா...வந்திரிச்சா !

Gopi Ramamoorthy said...

:)

ஸ்ரீராம். said...

"ஓரம்பர" என்றால் என்ன...?

நாங்கள் கூட ஒரு வேலைக்காரி பதிவு ட்யூ...!!

GEETHA ACHAL said...

தொடர்கதை எழுத வாழ்த்துகள்...உங்க மாமியார் மாதிரி தான் பலரும் இருக்காங்க...என்னத சொல்ல தவளை தான் வாயலே கெடும் மாதிரி தான்...

வெறும்பய said...

உங்கள் அன்புக்கும் பேராதரவுக்கும் நன்றி நன்றி நன்றி...

//

யாரு யாரு. யார்ல சொன்னது இப்படி..

தெய்வசுகந்தி said...

கதைக்கு waiting!!!

தங்கம்பழனி said...

உங்க மைண்ட் வாய்ஸ் படிச்சு.. எனக்கு இப்போ மைண்ட் வாய்ஸ் கேட்க ஆரம்பிச்சுடுச்சு.. கதை எப்போ ஆரம்பிக்கும்..? எப்படி ஆரம்பிக்கும்..?

எஸ்.கே said...

புது கதைக்கு வாழ்த்துக்கள்!

Arun Prasath said...

ஜில்லுனு டைட்டில் நல்லா தான் இருக்கு.... பாப்போம் கதை ஜில்லுனு இருக்கானு

middleclassmadhavi said...

மைன்ட் வாய்ஸ் நடுவில் மைன்ட் வைஸ் ஆனது ரொம்பப் பொருத்தம்!! :-)

ஹுஸைனம்மா said...

வேலைக்காரி.. ஸேம் பிளட்!! :-((((( நானும் இதப் பத்தி எழுதினேனே!!

ஐ.. தொடர்கதையா.. சூப்பர்!! ஆனா பாருங்க.. ஒரு ரெண்டு மாசம் நான் கொஞ்சம் பிஸி. பதிவுலகம் பக்கம் ரொம்ப வரமுடியாது. ஆனா, உங்க தொடர் முடிஞ்சதும் வந்து கண்டிப்பா எல்லாத்தையும் சேத்து வச்சு ஒரே நாள்ல படிச்சுடுவேன்!! (சே..சே.. ஒரு நாள் கஷ்டத்தோட போயிடுமேன்னு இல்லைங்க.. உங்க கதையப் படிக்க ஆரம்பிச்சா, பாதியில விடமுடியாது, சத்தியமா அதனாலத்தான்..) ;-))))))))

தக்குடுபாண்டி said...

//உங்கள் அன்புக்கும் பேராதரவுக்கும் நன்றி நன்றி நன்றி// ஹலோ இட்லி மாமி இங்க யாரு உங்களுக்கு இதெல்லாம் சொன்னது? சும்மா நீங்களே பில்டப்பு குடுத்துண்டு பழியை எங்க மேல போடாதீங்கோ!!..:)

நல்ல பதிவு! பகிர்வுக்கு நன்றி! (மறக்காம 'என்றும் அன்புடன்') போடும் பாஸ்டன் நாட்டாமைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, படிக்கப் போகும் நாங்க தான் பலிகிடா!..:) (மிச்சத்தை 'மின்னல்' அனாமிகா வந்து தொடருவார்கள்)..:)

Madhavan Srinivasagopalan said...

//கொடுமைடா சாமி? //

கலிகாலம் டோய்..

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

"ஜில்லுனு ஒரு காதல்" தொடர்கதையில் காதல் ரசம்,சாம்பார்,குழம்பு சொட்டனும்.
அப்படியே "ஜில்லுனு ஒரு இட்லி" எழுதுங்க.

சே.குமார் said...

ஜில்லுனு ஒரு காதல் தலைப்பில் தொடர்கதையா... எழுதுங்க... பார்ப்போம் கதை ஜில்லுனு இருக்கான்னு...

VELU.G said...

ஐயோ escape............

மறுபடியும் வர்றேன் நீங்க ஆரம்பிங்க

Gayathri said...

நேசம் தான் இப்போலாம் கம்ப்யூட்டர் வேளைக்கு சொடுக்கு போட்ட ஆயிரம் பேர் கிடைப்பாங்க ஆனா வீட்டு வேலை செய்ய நாமதான் தேடு தேடு தேடுன்னு தேடனும்....

ஹெல்பர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

sriram said...

//கமெண்ட் மட்டும் போடுறவன்// //"ஜில்லுனு ஒரு இட்லி"//
அருமையான பெயரய்யா உமது.. அ(ட)ப்பாவி தங்கமணிய “(பாறாங்)கல்லுன்னு ஒரு இட்லி” வேணா எழுதச் சொல்லலாம், ஜில்லுன்னு ஒரு இட்லி எழுதச் சொல்லலாமோ?

தக்குடு கோந்தே, நீதான் என்னை நல்லா புரிஞ்சு வச்சிண்டு இருக்கே, கழகத்தில என்னோட வாரிசா ஒன்னை அறிவிக்கலாம்னு இருக்கேன்.

//நானே உங்களுக்கு ப்ராக்ஸி போட்டுக்கறேன், போய் புள்ளக் குட்டியை படிக்க வைங்க பாஸ்// - உதவிக்கு நன்றி கேடியக்கா. இன்னும் பொறக்காத பிள்ளையை எங்கிருந்து படிக்க வைக்க?

//ஆனாலும் சின்ன பொண்ணு நாமல்லாம்// இது யாருன்னு புரியல, கொஞ்சம் விம்பார் போட்டு வெளக்கிணா நல்லாருக்கும். ஏன்னா புவனாக்கா உங்களுக்கு நாப்பது வயசுன்னு
சொல்றாங்க (http://wikimaniac.blogspot.com/2010/12/idhu-thevaiya.html), நீங்க அவங்களை அக்கான்னு சொல்றீங்க, படிக்கறவங்களுக்கு குழப்பம்
வருமா இல்லயா? ஒண்ணு மட்டும் புரியுது, இனிமே நான் உங்க ரெண்டு பேரையும் அக்கான்னு கூப்பிடாம Auntyன்னு கூப்பிடணும். அடப்பாவி Aunty & கேடி Aunty -
கேக்கவே எவ்வளவு நல்லா இருக்கு.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

புதுகைத் தென்றல் said...

கதைக்காக மீ த வெயிட்டிங்.

அப்புறம் இந்த வேலைக்காரம்மாவை செலக்ட் செஞ்சு அவங்களோட ”காலட்சேபம்” செய்ய காம்பரமைஸ் செஞ்சு செஞ்சு நொந்து நூடில்ஸாகிகிட்டு இருக்கும்போது இப்படி ஒரு மேட்டர் போடறீங்க.

அழகன் படத்துல “நாம வேற வீட்டுல பொறந்திருக்கலாம்னு”அந்த கண்ணாடிப்போட்ட குட்டிப்பையன் சொல்வது போல, நான் பல சமயம் பேசாம் ஸ்ரீலங்காவுலயே இருந்திருக்கலாம்னு நினைக்கற பலசமயங்களில் ஒண்ணு இந்த் வேலைக்காரம்மா சமாசாரமும்.

அது ஒரு பொற்காலம். :(((

அப்பாவி தங்கமணி said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி -
//எச்சூஸ் மி, கதை எங்க? //
அச்சச்சோ அண்ணனுக்கு மாலைகண்ணுனு தானே கேள்விப்பட்டோம்... இப்படி பட்ட பகல்லயே கண்ணு தெரிலயே சாமி...யாராச்சும் கவனிங்கப்பா...

//ஓஹோ...அந்தக் கோட்டுக்கு கீழ இருக்கறதுதான் கதையா... நான் அதுவும் உங்க மைண்ட் வாய்ஸ்தான்னு நெனச்சுட்டேன்....! //
மைண்ட்வாய்ஸ் பாத்து கொஞ்சம் எடம் உட்டுசுங்கன்னா...கொஞ்சமா எழுதிகிட்டனுங்க

//எலேய்...சின்றாசு, கத முடிஞ்ச்சிடுச்சுடா, கட்றா வண்டிய.....! //
அவிகளா நீங்க...சொல்லவே இல்ல

//போக முன்னாடி ஒரு சின்ன டவுட்டு, இது தொடர்கதைன்னு போட்டிருந்திங்க, இந்தக் கத முடிஞ்சிசுருச்சே, எப்படி தொடர்வீங்க?//
மறுவடி மறுவடி சொல்றனுன்னு பீல் பண்ணாதீங்கன்னா... நல்ல டாக்டரா பாருங்க... சீக்கரம் கண் பார்வை வந்துடுமுங்க... (அடுத்த செவ்வா கிழமை தொடருவனுங்க...)

அப்பாவி தங்கமணி said...

@ Sriram -
ஸ்ரீராம் அண்ணா...இனிமே இப்படி தான் கூப்பிட போறேன்...இனியும் என்னையும் கொடி Sisterம் அக்கானு சொன்னீங்க...அப்புறம் உங்க birth certificate publish ஆய்டும் கண்டிப்பா...

//இதுக்கு நீங்க என்னை கனடாவுக்கு வரவச்சி நாலு அடி அடிச்சிருக்கலாம்//
அதுக்கான ஏக போக உரிமைய அண்ணிக்கு குடுத்துட்டோம் பதினோரு வருஷம் முன்னாடியே...(ஹா ஹா ஹா)

//ஆண்டவன் நல்லவங்களைத்தான் சோதிப்பான்னு சொல்வாங்க. எங்களுக்கு வரும் சோதனைகளைப் பாக்கும்போது அது சரிதான்னு தோணுது//
எச்சூஸ் மி, who இஸ் தட் நல்லவங்க? ப்ளீஸ் clarify (ஹையோ ஹயோ...)

//புவனாக்கா, இது சொந்தக் கதையா?//
நான் தொழில் ரகசியம் வெளிய சொல்றதில்லைங்க அண்ணா

//புவனாக்கா நான் சீரியஸா சொல்றேன், சிரிக்கக் கூடாது சரியா?//
அய்யோ...சீரியசாவா...என்னாச்சு? (ஹி ஹி ஹி)

//அதே கண்கள் தொடர்கதை படிச்சதிலிருந்து வேறெந்த கதையும் படிக்கப் பிடிக்கல, ஏன்னா அதைவிட சிறந்த கதை நான் இதுவரை பாக்கல.//
இதுக்கு நேரடியாவே திட்டி இருக்கலாம்... அப்புறம் god promise எல்லாம் கேப்பேன் அந்த கதை படிசீங்களானு கண்டுபிடிக்க ஹா ஹா

//ரெண்டாவது தொடர்கதை முதலாவதை விட சூப்பரா இருக்கணும் என்ன?//
சரிங்க அண்ணா

//மொத்தம் எத்தனை எபிசோடுன்னு சொல்லிட்டீங்கன்னா நான் இப்பவே பின்னூட்டங்களைத் தயார் பண்ணிடுவேன்//
template கமெண்ட்ஸ் எல்லாம் பில்ட்டர் ஆகற மாதிரி ஒரு புது டெக்னிக் வருதாம்...அப்புறம் உங்க கமெண்ட் எப்படி வரும்... யோசிச்சு சொல்லுங்க

//என்னை ஜிமெயிலில் பாத்தா பிங் பண்ணுங்க//
ஆளே காணோம்... பிங் எங்க பண்றது...

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... நீங்க எல்லாம் இருக்கிற தைரியத்துல தான் ஆரம்பிக்கறேன்

அப்பாவி தங்கமணி said...

@ (porkodi) பொற்கொடி -
//!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! //
please check your keyboard settings kedi che...kodi...(ha ha)

என்னது கண்ணெல்லாம் இருட்டுதா... அச்சச்சோ...உலகம் பூரா இதே பிரச்சனையா...எங்க பாட்டி கூட நேத்து கண்ணு இருட்டிட்டு வருது கண்ணுன்னு சொன்னாங்க... (சும்மா ஒரு GK க்கு சொன்னேன்...)

அதானே பாஸ்டன் அண்ணா அநியாயம் தான் போங்க... இதுக்கு நீங்க proxy வேறயா...இதென்ன annual general meetingஆ? என்ன கொடும சார் இது?

//பன்னிக்குட்டி ராம்சாமி!! உண்மைல நீங்க தாங்க அப்பாவி. யாரு ப்லாக்ல வந்து என்ன கொஸ்டின் ஹைய்யோ ஹைய்யோ!//
அக்கோய்...அவர பத்தி தெரியாம அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துற வேண்டாம் சொல்லிட்டேன்...

//சின்ன பொண்ணு நாமல்லாம்//
இந்த ஒரு வார்த்த சொன்னியே...நீ வாழ்க...உன் குலம் வாழ்க... உன் கொற்றம் வாழ்க... இன்னும் என்னவெல்லாம் இருக்கோ (அதுக்கு மேல தெரில) எல்லாம் வாழ்க...

//பாஸ்டன் அங்கிள்//
ஹா ஹா ஹா ஹா...ஹி ஹி ஹி ஹி... ஹையோ ஹையோ...

//என்னோட ஃபுல் சப்போர்ட் உங்களுக்கு தான்//
அப்படி போடு கமெண்ட்அ...

அப்பாவி தங்கமணி said...

@ philosophy prabhakaran - நன்றிங்க

@ சுசி - கரெக்ட் கரெக்ட்...நாம சொல்றது எப்பவுமே கரெக்ட் தான் சுசி...இன்னிக்கி இவங்க இதை ஒத்துகிட்டு இருக்காங்க... ஹும்...

@ vanathy - தேங்க்ஸ் வாணி...

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - இனி தாங்க வரபோகுது... வர்ற செவ்வாய் முதல் ஆரம்பம்...

@ Gopi Ramamoorthy - திட்டரதுன்னா சத்தமா திட்டனும்... இப்படி smiley போட்டு திட்டறது நல்லா இல்ல சார்...(ஹா ஹா)

@ ஸ்ரீராம் - "ஓரம்பர" என்றால் "உறவுக்கரார்கள்"... எங்க ஊர் பாஷையோ...இருக்கலாம்... பாத்துட்டேன்...உங்க வேலைக்காரி பதிவு... சூப்பர்

அப்பாவி தங்கமணி said...

@ GEETHA ACHAL - ஆமா கீதா பாவம் அம்மா...பேசி மாட்டிகிட்டாங்க...

@ வெறும்பய - ஹா ஹா ஹா... ஏன் இந்த டென்ஷன் ஏன் இந்த கொலைவெறி ஏன் ஏன் ஏன்

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - ஹா ஹா...உங்களுக்கும் மைண்ட்வாய்ஸா? ஐயோ பாவம்... கதை அடுத்த வாரம் செவ்வாய் முதல் இதே ப்ளாக்ல் தொடங்கும்...நன்றிங்க

@ எஸ்.கே - நன்றிங்க

@ Arun Prasath - ஆஹா இப்பவேவா...பாருங்க பாருங்க...தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ middleclassmadhavi - அடபாவிங்களா...எல்லாருமே எனக்கு எதிராதானா? ஹும்...(ஹா ஹா)

@ ஹுஸைனம்மா - எஸ் எஸ்...சேம் ப்ளட்....நம்பிட்டோம் நம்பிட்டோம் நீங்க சொன்னா காரணத்த....ஒரு நாளுல அத்தனையும் தாங்குவீங்களானு நீங்களே யோசிச்சுகோங்க (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - நீ தானே தக்குடு சொன்னா...தம்பி இருக்க பயமேன் அக்கா ஸ்டார்ட் மீசிக்னு...இப்ப பேச்சை மாத்துறது நல்லாவா இருக்கு... இந்த அனன்யா கூட கூட்டணி வெச்சு நீயும் இப்படி ஆய்ட்ட... வெரி bad .... வெரி bad

//மிச்சத்தை 'மின்னல்' அனாமிகா வந்து தொடருவார்கள்//
ஏன் இந்த கொல வெறி மிஸ்டர் தக்குடு...

அப்பாவி தங்கமணி said...

@ Madhavan Srinivasagopalan - ஆமாங்க.. .(நீங்க வேலைக்காரி போஸ்ட்க்கு தானே சொன்னீங்க...என் தொடர்கதைக்கு இல்லியே...சும்மா ஒரு clarification ஹா ஹா)

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - எச்சூஸ் மி... சாப்பாட்டு நேரத்துல பதிவ படிச்சுட்டீன்களோ... ஹா ஹா...
//அப்படியே "ஜில்லுனு ஒரு இட்லி" எழுதுங்க//
ஆஹா... பாயிண்ட்ஐ எடுத்து குடுக்கறாங்களே... உண்மைய சொல்லுங்க யாரு ஆள் நீங்க... பாத்தா சுயேச்சை மாதிரி தெரிலயே...(ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - பாருங்க பாருங்க...நன்றிங்க (ஆஹா...ஓவராத்தான் பில்ட் அப் குடுத்துட்டனோ...)

@ VELU.G - எஸ்கேப்ஆ வரீங்களா ரெண்டுல ஒண்ணு சொல்லிட்டு போங்க அண்ணே...

@ Gayathri - நல்லா சொன்னா காயத்ரி...

அப்பாவி தங்கமணி said...

@ sriram -
////கமெண்ட் மட்டும் போடுறவன்// //"ஜில்லுனு ஒரு இட்லி"//
அருமையான பெயரய்யா உமது//
இப்ப புரியுது...உங்க ஆளா இவரு...இப்படி ஆள் வெச்சு அடிக்கறதெல்லாம் சரியானு நீங்களே யோசிங்க அண்ணா,...(ஹா ஹா)

//கல்லுன்னு ஒரு இட்லி” வேணா எழுதச் சொல்லலாம்//
நீங்க இந்த வர்றதுன்ன ஒரு வார்த்த சொல்லுங்க அண்ணா...எழுதரதென்ன செஞ்சே காட்டிடறேன்... ஹா ஹா

//கழகத்தில என்னோட வாரிசா ஒன்னை அறிவிக்கலாம்னு இருக்கேன்//
கழக உறுப்பினர்கள கேக்காம நீங்க இப்படி ஒரு அபாயகரமான முடிவு எடுக்கறது ஞாயம் இல்ல அண்ணா...

//புவனாக்கா உங்களுக்கு நாப்பது வயசுன்னு சொல்றாங்க//
எச்சூஸ் மி...14 னு சொல்றதுக்கு typo error ல 40 னு ஆய்டுச்சு யு நோ...

அப்பாவி தங்கமணி said...

@ புதுகை தென்றல் - தேங்க்ஸ் அக்கா...
ஆஹா...அங்கயும் அதே பாடா...கொடுமை தான் போங்க...

vgr said...

orambaraya? ennadu adu?

Kadal Kadaya? iduku munnadi ezhudinadum kadal kadai thane?

Kadai oda peruku copyright issue nu evanavadu case poda poran..pathu..:) 24/25 part irukuma?

Mahi said...

புவனா,உங்க போஸ்ட்டைப் படிக்க சில நிமிஷம்னா..கமெண்ட்ஸ்-ஐப் படிக்கப் பலநிமிஷம் ஆகுது! :):)

அந்த அளவுக்கு பயபுள்ளைக(நாங்க எல்லாரும்தான்..ஹிஹி) வெளுத்து வாங்கறோம்.எங்களுக்கெல்லாம் பாராட்டுக்கள்! (ஹிஹிஹிஹி) அத்தனைக்கும் சளைக்காம ஈடு கொடுக்கும் உங்களுக்கும்(போனா போகுது..)பாராட்டுக்கள்!!!! :) :)

யாரும் அடிக்க வரதுக்குமுன்னே மீ த எஸ்கேப்பூ!!!!!!!!

Mahi said...

/இந்த கதை நடக்கும் இடம் கனடா (Canada)../அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கத நடக்கப் போகுதா??? மணிக்கு எத்தனை மைல் வேகத்துல நடக்கப் போகுதுங்????

LK said...

உங்க மாமியார் சொன்னது உண்மைதான்.

அனாமிகா துவாரகன் said...

கதையா? யாராவது இந்த இவங்க பக்கத்தை BLOCK பண்ணுங்கப்பா. சப்பா

//மிச்சத்தை 'மின்னல்' அனாமிகா வந்து தொடருவார்கள்//
ஏன் இந்த கொல வெறி மிஸ்டர் தக்குடு...

அது! (நாம அஜித் விசிறியாக்கும்)

Ananthi said...

தொடர்கதையா.. கலக்குங்க.. தலைப்பே.. ஆர்வம் ஜாஸ்தி பண்ணுதே.. ;-))

priya.r said...

மைண்ட்வாய்ஸ் உன்னைய எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குடி செல்லம் !என்னா அறிவு ;என்னா திறமை என்னா கணிப்பு etc ....... இப்படி உன்னையே புகழ்ந்து கிட்டே போகலாம்
ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம் சொல்ற மாதிரி எப்படி அட்சர சுத்தமா சொல்ற !!
I LIKE YOU VERY MUCH MAA
Yours loving sister/priya

priya.r said...

@பொற்கொடி
உங்க கமெண்ட்ஸ் படித்து ரொம்ப ரசித்து சிரித்தேன் தேங்க்ஸ்

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

siva said...

appavi thangamani..

down down
appavi thangamani idle down down..

அப்பாவி தங்கமணி said...

@ VGR - ஓரம்பரனா சொந்தம் பந்தம்... (எங்க ஊர் பேச்சு வழக்குன்னு நினைக்கிறேன்...)
எஸ் எஸ்... எல்லாமும் அதே கதை தான்... காதல் பேருக்கு காபி ரைட் issue வந்தா ரீமேக்னு சொல்லிடலாம் vgr ....ஹா ஹா அஹ... 24 / 25 ஆ தெரியலைங்க...எல்லாம் நீங்க எல்லாம் குடுக்கற ஆதரவுல தானுங்க இருக்கு... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ஆஹா...கமெண்ட்ஸ் அவ்ளோ இருக்கா என்ன? தேங்க்ஸ் மகி... எல்லாம் உங்கள போல நட்பு வட்டம் தான்... சரி சரி உங்களுக்கு தான் அதிக பாராட்டுக்கள் ஒத்துக்கறேன்... பெரிய மனசு வெச்சு எனக்கும் கொஞ்சம் குடுத்ததுக்கு நன்றிங்க அம்மணி...


///இந்த கதை நடக்கும் இடம் கனடா (Canada)../அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கத நடக்கப் போகுதா??? மணிக்கு எத்தனை மைல் வேகத்துல நடக்கப் போகுதுங்???? //


கோயம்புத்தூர் குசும்பு தெறிக்குது பாருங்க அம்மணி...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஆமாம் கார்த்தி

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - block பண்ணுனு சொல்லிட்டு சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்கனு சொல்லுவஇல்ல அப்ப பேசிக்கறேன் உன்ன.. (அஜித் ரசிகையா நீ இந்த மேட்டர் அஜித்க்கு தெரியுமா அம்மணி...)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - தேங்க்ஸ் ஆனந்தி...இதான் நல்ல சிஸ்டர்க்கு அழகு...ஹா ஹா

@ Priya.r - அடப்பாவி...இப்படி same சைடு கோல் போடறது நல்லா இல்ல அக்கோய்...சொல்லிட்டேன் ஆமா...


@ tamil blogs - மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஏன் இந்த கொல வெறி மிஸ்டர் சிவா...grrrrrrrrrr

அனாமிகா துவாரகன் said...
This comment has been removed by the author.
அனாமிகா துவாரகன் said...

//புவனா,உங்க போஸ்ட்டைப் படிக்க சில நிமிஷம்னா..கமெண்ட்ஸ்-ஐப் படிக்கப் பலநிமிஷம் ஆகுது! :):)

அந்த அளவுக்கு பயபுள்ளைக(நாங்க எல்லாரும்தான்..ஹிஹி) வெளுத்து வாங்கறோம்.எங்களுக்கெல்லாம் பாராட்டுக்கள்! (ஹிஹிஹிஹி) அத்தனைக்கும் சளைக்காம ஈடு கொடுக்கும் உங்களுக்கும்(போனா போகுது..)பாராட்டுக்கள்!!!! :) :)
//

HA HA HA HA. உண்மை தான்.

அனாமிகா துவாரகன் said...

நான் அவர விட நன்னா அதுன்னு சொல்றேன்னு அவருக்கு ரொம்பவே குஷி ‍, தெரியுமோ நோக்கு. ஹி ஹி. நான் அது சொன்ன அழகப் பார்த்து அவர் கண்ணெல்லாம் ஜலம் கண்டுடுச்சு. ஹா ஹா ஹா ஹா.

அவர ஆஸ்ரேலியால ஒரு வாட்டி குடும்பமா வந்த போது பாத்திருக்கேன். நான் அவரோட படம் எடுக்காம போயிட்டேன்னு ரொம்ப கண் கலங்கினார். நாம யாரு. முடியவே முடியாதுன்னு சொல்லிட்டோம்ல. (ஹையோ என்னாலயே என் அலப்பறை தாங்க முடியல்ல.ஹா ஹா ஹா ஹா)

நான் வேற எங்க இடத்தில ஸ்நோ பெய்யும்னு புருடா விட்டா, நீங்க அப்படியே நம்பிட்டீங்களே நேத்து. நீங்க அவ்ளோ அப்பாவியாக்கா? எனக்கு கண்ல ஜலம் கண்டுடுச்சு இப்போ.

அனாமிகா துவாரகன் said...

ரஜினி கமல் போன்ற கிழவர்களுக்கு ரசிகையா இருப்பேன்னா நினைச்சீங்க. இருங்க உங்களுக்கு அந்திராஸ் அனுப்பறேன். இப்போ. இப்பவே அனுப்பறேன்.

priya.r said...

///இந்த கதை நடக்கும் இடம் கனடா (Canada)../அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கத நடக்கப் போகுதா??? மணிக்கு எத்தனை மைல் வேகத்துல நடக்கப் போகுதுங்???? //


@ மகி !

ஏனுங்! இப்படி ஒரு கேள்வி கேட்டிங் ! கதை நடக்க வில்லை ! ஓட போகுது ! பிச்சு கிட்டு ஓட போகுது !

@ அப்பாவி !

நூறு நாள் பிச்சு கிட்டு ஓட போகுது என்பதை தான் அப்படி சொன்னேன் ! ஹ ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Anamika - adipaavi...

@ Priya - akkoi neenga enna oodumnu sonnengannu enakku nallave theriyumunga ammani...(ha ha ha)

Harini Sree said...

intha post soooper!

அப்பாவி தங்கமணி said...

@ Harini Sree - Thanks Harini

Post a Comment