Thursday, December 16, 2010

நான் சொல்வதெல்லாம் உண்மை...


மைண்ட்வாய்ஸ்: என்னத்துக்கு இப்ப இந்த பில்ட் அப்பு

அப்பாவி: ஏய்... வேண்டாம்...இன்னைக்கி மட்டும் என்கிட்ட வம்பு பண்ணாத...வம்பாய்டும் ஆமா...

மைண்ட்வாய்ஸ்: ஐ...அப்பாவி டென்ஷன் டென்ஷன் ...மீ ஹாப்பி ஹாப்பி...

அப்பாவி: வேண்டாம் சொன்னா கேளு

மைண்ட்வாய்ஸ் : சரி சரி மேட்டர் என்னனு சொல்லு

அப்பாவி: அது...வந்து...  தமிழ்மணம் இருக்கில்ல...அதுல அவார்ட்ஸ் இருக்கில்ல...அதுக்கு நான் மூணு பதிவுகள nominate பண்ணி இருக்கேன்... அந்த மூணு பதிவை படிச்சு... 26 ந்தேதிகுள்ள உங்கள் பொன்னான வாக்குகளை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்... (voting instructions at the end of this post)

மைண்ட்வாய்ஸ் : ஹையோ ஹயோ...உன் காமெடி சென்சுக்கு ஒரு அளவே இல்லையா...நீ?????? விருதுக்கு?????  ஹா ஹா ஹா

அப்பாவி: வேண்டாம்... நல்லதுக்கில்ல... நெசமாத்தான் சொல்றேன்...

மைண்ட்வாய்ஸ் : ஏன் இந்த கொல வெறி திடீர்னு?

அப்பாவி: சும்மா நானும் ஒரு பதிவர்னு வேற எப்படி தான் prove பண்றது

மைண்ட்வாய்ஸ் : ஹா ஹா ஹா... அது சரி...எந்த நம்பிக்கைல இதுல எல்லாம் கலந்துக்கற

அப்பாவி: இங்க பாரு மைண்ட்வாய்ஸ்...ஜெயக்கறது தோக்கறது மேட்டர் இல்ல... participation is what matters னு பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் சொல்லி இருக்காங்க தெரியுமா?

மைண்ட்வாய்ஸ் : அது அவங்க பெரிய ஆளுங்களுக்காக சொன்னது.. உனக்கு ஏன் அது?

அப்பாவி: இந்த அப்பாவி இதுக்கு மேலயும் அப்பாவியா இருக்கனுமா இல்லையாங்கறது உன்கிட்ட தான் இருக்கு

மைண்ட்வாய்ஸ்: சரி சரி... மெரட்டாதே... சரி நீ இதுல ஜெய்ச்ச்சா மக்களுக்கு என்ன நல்லது எல்லாம் செய்வ அதை சொல்லு மொதல்ல

அப்பாவி: அடப்பாவி... இதென்ன பொது தேர்தல் வாக்குறுதி ரேஞ்சுக்கு பேசற

மைண்ட்வாய்ஸ் : தேர்தல்னு வந்துட்டா பொது தேர்தல் என்ன தனி தேர்தல் என்ன எல்லாம் ஒண்ணு தான் யு சி?

அப்பாவி: எல்லாம் நேரம் தான்

மைண்ட்வாய்ஸ் : சரி...நானே கேக்கறேன்... ஒட்டுமொத்த பதிவுலகம் சார்பா

அப்பாவி: உன்னை யாரு இப்ப representative ஆ appoint பண்ணினது

மைண்ட்வாய்ஸ் :இதான் மொதல் கோரிக்கை...தமிழ் பதிவர்னு பேரு வெச்சுட்டு இப்படி வாக்கியத்துக்கு நாலு வார்த்தை ஆங்கிலத்துல போட்டு கொல்லக்கூடாது

அப்பாவி: ம்...நேரம் தான்...அப்புறம்?

மைண்ட்வாய்ஸ் : சும்மா சும்மா பாத்தது கேட்டது எல்லாம் பதிவு போட்டு எங்க பொன்னான நேரத்த நீ வீணடிக்கரத நாங்க வன்மையா கண்டிக்கறோம்...

அப்பாவி: நீ சொல்லி முடி நான் அப்புறம் பேசறேன்

மைண்ட்வாய்ஸ் : ம்...இதே மாதிரி எப்பவும் மத்தவங்க பேசறதுக்கு டைம் குடுக்கணும்...சும்மா நீயே பேசிட்டு இருக்க கூடாது... அப்புறம் 100 எபிசோடு கதை எல்லாம் தடை விதிக்கணும்னு நீயே ஒரு சட்டம் கொண்டு வரணும்...

அப்பாவி: அய்யயோ... என் பொழப்பு எப்படி நடக்கறது அப்புறம்

மைண்ட்வாய்ஸ் : இன்னும் பத்து பக்க கோரிக்கை மனு எங்க சங்கம் சார்பா வரும்... அதுல நீ கையெழுத்து போட்டா அப்புறம் உனக்கு வோட்டு போடறதா இல்லையான்னு நாங்க முடிவு பண்றோம்

அப்பாவி: அது சரி...என்னமோ சங்கம்னியே...என்னாதது?

மைண்ட்வாய்ஸ் : அப்பாவியால் பாதிக்கப்பட்ட அபலைகள் சங்கம்

அப்பாவி: அடப்பாவி...

மைண்ட்வாய்ஸ் :உன் பேர சொன்னதுக்கு நன்றி...

அப்பாவி: பேசு பேசு... உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்...

மைண்ட்வாய்ஸ் : இங்க பாரு...அந்த பத்து பக்க கோரிக்கைல முக்கியமா விசயமே... வோட்டு போட்டப்புறம் எனக்கு எதாச்சும் அடிகிடி பாட்டா நீ தான் பொறுப்புனு இருக்கும்...அதுலயும் நீ கையெழுத்து போடணும்...

அப்பாவி: நான் nomination திருப்பி வாங்கிகறேன்..நீ போ

மைண்ட்வாய்ஸ் :ச்சே ச்சே...என்னதிது... முன் வெச்ச காலை பின் வெக்காத பரம்பரைனு நெனச்சேனே உன்னை (இப்படி ஏத்தி உட்டு தான் நம்ம மேட்டர சாதிச்சுக்கணும்... ஹா ஹா)

அப்பாவி: என்ன என்னமோ முணுமுணுக்கற...

மைண்ட்வாய்ஸ் : அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீ என்ன முடிவு பண்ணின அதை சொல்லு

அப்பாவி: என்ன சொல்றது? சிக்கியாச்சு... மீள முடியுமா இனி... அன்பார்ந்த ப்ளாக் உலக திலகங்களே... திலகிகளே... நான் சொல்வதெல்லாம் உண்மை...உண்மை தவிர வேறில்லை..

மைண்ட்வாய்ஸ் : இரு இரு... இந்த டயலாக் எல்லாம் அரசியலுக்கு வந்து ஊழல் பண்ணி மாட்டி கோர்ட்க்கு கூட்டிட்டு போறப்ப சொல்ல வேண்டியது...இப்பவே அவசரப்பட்டு சொல்லாதே

அப்பாவி: படுபாவி...ஆரம்பத்துலையே இப்படியா...வெளங்கிடும்...

மைண்ட்வாய்ஸ் :எல்லாம் வெளங்கும்.. நான் கேக்கறேன் உனக்கு வோட்டு இரு...

ஹாய் ஹாய் ஹாய்....எல்லாரும் சௌக்கியமா... என்ன மேட்டர்னா நம்ம அப்பாவி இருக்கே... அதாங்க பதிவு போட்டே கொல்லுமே...அதே அதே... அந்த அப்பாவி தங்கமணி தமிழ்மணம் அவார்ட்ஸ்ல கலந்துக்குதாம்...

உங்க சார்பா நானே கோரிக்கை எல்லாம் போட்டுடறேன்... ஒரு முக்கியமான மேட்டர்... உங்களுக்கு மட்டும் சொல்றேன்... அந்த பத்து பக்க கோரிக்கைல இனி மாசத்துக்கு ஒரு பதிவு தான் போடணும்கரதை சின்ன சின்ன எழுத்துல போட்டு இருக்கேன்

அவ எப்படியும் அவ சோடாபுட்டி கண்ணாடி வெச்சு அதை படிக்க போறதில்ல... கையெழுத்து போட்டுடுவா...இதை விட்டா நமக்கு நல்ல சான்சே கிடைக்காது

அதனால உங்க வோட்டை போனா போகுதுன்னு போட்டுடுங்க...அப்புறம் நமக்கு விடுதலை விடுதலை விடுதலை தான் யு சி...

ஒகே டாட்டா பை பை...மறக்காம 26 ந்தேதிக்குள்ள வோட்டு போட்டு தொரத்தி விட்டுடுங்க... ஹா ஹா ஹா... அப்புறம் இருக்கு கச்சேரி நம்ம அப்பாவிக்கு... அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மைண்ட்வாய்ஸ்
 
Dear Friends,
Vote only if you like these 3 posts... not for me... (நெனப்பு தான்...ஹா ஹா அஹ)
Thanks,
Appavi Thangamani

Voting Instructions:-
 1. ’tamilmaNam Awards2010 - Voting Invitation from tamilmaNam.NET’ உங்களுக்கு இந்த சப்ஜெக்ட்ல ஒரு ஈமெயில் வந்து இருக்கும்...அதுல இருக்கற லிங்க் கிளிக் பண்ணுங்க. You can see a page titled "தமிழ்மணம் விருதுகள் 2010 பதிவருக்கான வாக்குச்சீட்டு"

2. In that first category is "பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)". Just below you'll see "இந்த பிரிவுக்கு வாக்களிக்க இங்கே கிளிக்கவும்" . If you click that a page will open showing all the nominations for awards

3. In that page, you need to find out mine listed as உருகுதே மருகுதே... (சிறுகதை) - அப்பாவி தங்கமணி. To vote for that, click vote button at the end of same row. Once you click vote, this page will close and your selection will show up on the main page under the category you selected. To read the post click this link உருகுதே மருகுதே

4. Likewise, to vote for other 2 nominations here are the topics:-
- பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்
முட்டை ஆம்லேட் தத்துவம்... (சைவம் தான் அசைவம் இல்ல...எல்லாரும் தைரியமா படிக்கலாம்)
- பிரிவு: பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
அம்மாவும் நானும்... (இது அந்த அம்மா இல்ல...எங்க அம்மா...)

...

48 பேரு சொல்லி இருக்காக:

பதிவுலகில் பாபு said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

வார்த்தை said...

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க......எப்ப தெருவீங்க.....எப்டி தருவீங்க....

SenthilMohan said...

எனக்கு மெயில் வரல... :(

priya.r said...

மைண்ட்வாய்ஸ் முதல் முதலா ஒரு கோரிக்கை வைத்து இருக்கே
உனக்காக உனக்காக மட்டும் தான் நீ சொல்ற மாதிரி செய்யறேன்
போன பதிவில உன்னை பாராட்டினதுக்கு அந்தஅப்பாவி கடன்காரி என்ன சொல்லி திட்டினாங்க தெரியுமா!:(
எல்லாம் உனக்காக நம்ம சங்கத்துக்காக தான் பொருத்து போறேன்

LK said...

//அப்பாவி கடன்காரி//
இந்தப் பெயர் நல்லா இருக்கு ப்ரியா

//அப்பாவியால் பாதிக்கப்பட்ட அபலைகள் சங்கம்/./

உண்மை உண்மை

//அப்பாவி: அடப்பாவி...

மைண்ட்வாய்ஸ் :உன் பேர சொன்னதுக்கு நன்றி... //

நீயே உன் பேரை சொல்றியே

மாசத்துக்கு ஒன்னே அதிகம் மைன்ட் வாய்ஸ்

LK said...

2 votes potruken

vanathy said...

அப்பாவி, வெற்றிபெற வாழ்த்துக்கள். நானும் அனுப்பினேன். ஆனா இப்படியெல்லாம் தோணவே இல்லைப்பா. அனுப்பியதோடு என் வேலை முடிஞ்சுதுன்னு இருக்கேன். உங்களுக்கு வோட்டு போடுறேன்.

Porkodi (பொற்கொடி) said...

//அந்த பத்து பக்க கோரிக்கைல இனி மாசத்துக்கு ஒரு பதிவு தான் போடணும்கரதை சின்ன சின்ன எழுத்துல போட்டு இருக்கேன் //

sorry i can't sign.. :D

கோவை ஆவி said...

எனக்குm மெயில் வரல...

தக்குடுபாண்டி said...

சாரி அடப்பாவி அக்கா! ஓட்டு எல்லாம் போடர்த்துக்கு 18 வயசு ஆகி இருக்கனும்னு சொல்லிட்டா,அதுக்கு இன்னும் 5 வருஷம் ஆகும் . (பாஸ்டன் நாட்டாமையே இன்னும் 2 வருஷம் கழிச்சிதான் ஓட்டு போட முடியும்னா பாத்துக்கோங்கோளேன்!)...:) வெற்றி பெற வாழ்த்துக்கள்!..:)

Vasagan said...

Dear Thangaimani,
உன்னுடய வாசகர்கள் Vote போடமுடியாதா. முடியும் என்றால் எப்படி?. My email id: sankar@ryerson.ca.
அண்ணன்.

Krishnaveni said...

All the very best Thangam,

philosophy prabhakaran said...

பதிவை படிக்க ஆரம்பிச்சதும் மொக்கைன்னு தெரிஞ்சுபோச்சு... இருப்பினும் செய்தி என்ன என்பதை மட்டும் தெரிந்துக்கொண்டதால் வாழ்த்துக்கள்... :) :) :)

sriram said...

//பாஸ்டன் நாட்டாமையே இன்னும் 2 வருஷம் கழிச்சிதான் ஓட்டு போட முடியும்னா பாத்துக்கோங்கோளேன்//
தக்குடு கோந்தே, இதுக்கு உன் வாயில சக்கரை டப்பாவையே கவிழ்க்கணும். இந்த அடப்பாவி ஆண்டியும் கேடி ஆண்டியும் பண்ற அலப்பறை தாங்கலை, நீதான் கண்டிப்பா என் கழக வாரிசு.

அடப்பாவி ஆண்டி : வெற்றி பெற வாழ்த்துக்கள். ஓட்டு போட வயசில்லாட்டியும் கள்ள ஓட்டாவது போட்டுடறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தாராபுரத்தான் said...

போட்டுட்டா போகுது..

Balaji saravana said...

ரைட்டு ஓட்டு போட்டுர்றேன் :)

வெறும்பய said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

Porkodi (பொற்கொடி) said...

@Boston Sriram: sorry boss, நான் இன்னும் பிறக்காததினால் பதில் பேச முடியாதாம்.. மன்னிச்சுக்கோங்க! :)

Porkodi (பொற்கொடி) said...

//பதிவை படிக்க ஆரம்பிச்சதும் மொக்கைன்னு தெரிஞ்சுபோச்சு//

நீங்க போன பதிவுல வந்த‌ பன்னிக்குட்டி ராம்சாமியோட அப்பாவி போலருக்கு.. ஏங்க இந்த ப்லாகுக்கு வரும் போதே தெரியாதாக்கும்? நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய..

புதுகைத் தென்றல் said...

மைண்ட் வாய்ஸ் ஓவரா போச்சு. :))

அவர்கள் படத்து ஜூனியரைப்போல.ம்ம்ம் நடக்கட்டும். ஓட்டு போட்டா பிரியாணி பொட்டலத்தோட பைசா எம்புட்டு தருவீங்கன்னு சொன்னா யோசிக்கலாம்!!!

:)))

siva said...

:)

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

இட்லி கதையை போட்டிக்கு அனுப்பி இருக்கலாமே.
பரிசு உங்களுக்கு தான்,என்ன பரிசு கொடுக்க தான் யாரும் இருக்க மாட்டாங்க.

மதுரை பாண்டி said...

All the best..

VELU.G said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Gayathri said...

vazhthukkal kandippa podren akka

Priya said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

B வைதேகி said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

Mahi said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் புவனா!

சிவகுமாரன் said...

நான் தமிழ் மணத்திலேயே உறுப்பினர் இல்லையே ஒட்டு போடலாமா.

Nithu Bala said...

Vazhthukal Bhuvana:-)

siva said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் புவனா!

ஹுஸைனம்மா said...

பலரிடமிருந்தும் ஆஃபர் வந்திருக்கு; உங்களோடதும் கிளியரா சொல்லிட்டீங்கன்னா, ஓட்டு போடுறது பத்தி சீக்கிரம் முடிவெடுக்க வசதியாருக்கும். சொல்லிட்டேன்!!

vgr said...

Good Luck!

அப்பாவி தங்கமணி said...

@ பதிவுலகில் பாபு - நன்றிங்க பாபு

@ வார்த்தை - ஹா ஹா ஹா... வார்த்தை இப்படி பப்ளிக்கா வார்த்தைய விடலாமோ சொல்லுங்க... அதெல்லாம் அரசியல்ல ரகசியம் இல்லியோ...

@ SenthilMohan - போஸ்ட் போடாம வெறும் ப்ளாக் வெச்சு இருக்கறவங்களுக்கு வராதுங்க சார்... (ஹா ஹா ஹா..). உங்களுக்கு தமிழ்மணத்துல அக்கௌன்ட் இல்லையோ?

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - இதைதான் எதிரி வெளில இல்லைன்னு சொல்றது போல... அக்காவா லட்சணமா எனக்கு பிரசாரம் பண்றத விட்டுட்டு...இதுல நான் கடன்காரியோ? ஹா ஹா ஹா

@ LK - அதானே இன்னும் சொல்லலியேனு பாத்தேன்... நீ மட்டும் நாளுக்கொரு பதிவு போடுவது ஞாயமா மிஸ்டர் கார்த்திக்? ஹா ஹா... வோட்டுக்கு நன்றிங்க அண்ணே

@ vanathy - தேங்க்ஸ் வாணி... எனக்கும் லேட்டாதான் தோணுச்சுப்பா... தேங்க்ஸ் வாணி

அப்பாவி தங்கமணி said...

@ porkodi - ஆஹா...இவ்ளோ அன்பா என் மேல...நான் மாசத்துக்கு ஒரு பதிவு போடறது பத்தாதுன்னு நீயாச்சும் புரிஞ்சுகிட்டயே...வாழ்க வாழ்க... (ரெம்ப பில்ட் அப் பண்றானோ...எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்)

@ கோவை ஆவி - தமிழ்மணம்ல உங்களுக்கு அக்கௌன்ட் இல்லையோ?

@ தக்குடு - ஏன் இந்த கொல வெறி மிஸ்டர் தக்குடு? அதென்ன ஸ்ரீராம் தாத்தாவையும் உன்னோட சேத்துட்ட... அப்ப நீயும் தாத்தாவா? அப்ப சரி...

அப்பாவி தங்கமணி said...

@ vasagan - நன்றிங்க, வாசகர்களும் வோட்டு போடலாங்க.. ஆனா 27 ம் தேதி முதல் போடலாம்... மிக்க நன்றி மீண்டும்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ philosophy prabhakaran - இதுக்கு நேரடியாவே திட்டி இருக்கலாம்... (ஹா ஹா அஹ)... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ sriram - போனா போகுதுன்னு அண்ணானு கூப்டேன்... இனிமே பொற்கொடி சொல்ற மாதிரி தாத்தா தான் உங்களுக்கு பொருத்தமான பேர்... ஹா ஹா ஹா

@ தாராபுரத்தான் - நன்றிங்க

@ Balaji saravana - நன்றிங்க பாலாஜி


@ வெறும்பய - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ porkodi - அது சரி...

//ஏங்க இந்த ப்லாகுக்கு வரும் போதே தெரியாதாக்கும்?//
இப்படி same சைடு கோல் போடறது நல்லாவா இருக்கு... இல்ல தெரியாமதான் கேக்கறேன்...

நாம ஒரு அணியா நின்னாத்தானே ஆகும்... இல்லேனா இந்த ஸ்ரீராம் தாத்தாவும் அவர் assistant தக்குடுவும் இப்ப தான் ப்ரீ.கே.ஜி போறோம்னு சொல்ற கொடுமை எல்லாம் கேக்க வேண்டி வரும் யு நோ... யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு... ஹும்... (ஸ்ஸ்ஸ்ப்பா... சோடா ப்ளீஸ்...ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ புதுகை தென்றல் - ஹா ஹா ஹா...ஹைதராபாத்காரங்களே பிரியாணி கேட்டா நாங்க என்ன செய்ய சொல்லுங்க? ஹா ஹா ஹா... (பேச்சோட பேச்சா வோட்ட போட்டு உட்டுடுங்க அக்கோவ்...)

@ siva - தேங்க்ஸ்

@ எஸ்.கே - நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - என்னத்துக்கு வம்பு nomination திருப்பி அனுப்பிடுவாங்களோனு தான் இட்லி மேட்டரை அனுப்பலை.. ஹா ஹா ஹா...

@ மதுரை பாண்டி - தேங்க்ஸ்ங்க

@ Velu.G - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - நன்றிங்க

@ அமைதிச்சாரல் - நன்றிங்க

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா

@ B வைதேகி - நன்றிங்க வைதேகி

@ Mahi - தேங்க்ஸ் மகி

அப்பாவி தங்கமணி said...

@ சிவகுமாரன் - வாசகர்கள் 27 ம் தேதிக்கு மேல போடலாம்னு நினைக்கிறேங்க... நன்றி

@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து

@ siva - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹா ஹா ஹா... உங்களுக்கு பிரியாணி தர முடியாது... வேணும்னா இட்லி பார்சல் அனுப்பவா? ஒகே ஒகே.. நோ டென்ஷன்... ஹா ஹா ஹா

@ vgr - நன்றிங்க

Post a Comment