Thursday, December 23, 2010

ஆசை ஆசை இப்பொழுது... (சிறுகதை)


"ஜெனிபர் டைம் ஆச்சு... கெட் அப் கெட் அப்" என ஜேம்ஸ் தனது ஏழு வயது மகளை எழுப்ப முயன்று கொண்டு இருந்தான்

"ப்ளீஸ் டாடி... ஒன் மினிட்..." என மீண்டும் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள் ஜெனிபர்

"ஜெனி...கெட் அப் ஐ சே... இப்ப எழுந்துக்க போறயா இல்லையா?" என மிரட்டும் தெனியில் கூற சிணுங்கி கொண்டே எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள் ஜெனிபர்

சற்று நேரத்தில் குளித்து உடை மாற்றி சாப்பாட்டு மேஜை முன் வந்து அமர்ந்தவளின் முகம் வாடிப்போனது

அதை உணர்ந்தும் உணராதவன் போல் ஜேம்ஸ் "ம்... சாப்புடு... உன்ன ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு நான் போகணும்...குய்க் குய்க்... " என துரிதபடுத்தினான்

"தினமும் இதே பிரட் டோஸ்ட் ஆம்லேட்... ஐ ஹேட் இட்.." என ஜெனிபர் முகம் திருப்ப

"இங்க பாரு...என்னால இதான் செய்ய முடியும்... ஒழுங்கா சாப்டு" என கடுமையான குரலில் கூறி விட்டு தன் தட்டை காலி செய்ய முயன்றான் ஜேம்ஸ்

"அம்மா இருந்தப்ப டெய்லி டெய்லி Pancake, சாண்ட்விச்னு வேற வேறயா செய்வாங்க" என பெற்றவளின் நினைவில் ஜெனிபர் கண்களில் நீர் நிறைய கூற ஜேம்ஸின் நெஞ்சில் வேதனை மேல் எழும்பியது

முயன்று மறக்க நினைக்கும் நினைவுகளை தன் மகள் நினைவுப்படுத்த துக்கம் கோபமாய் உருவெடுத்தது

"ஜெனி... அம்மா இனி இல்ல... ஒகே? Try to accept that... உனக்கு நெறைய வாட்டி சொல்லிட்டேன்... இந்த மாதிரி காலைல நேரத்துல பேசாதேன்னு... சாப்ட்டா சாப்பிடு இல்லேனா பட்டினி கெட" என கோபமாய் கூற

"ஐ ஹேட் யு... ஐ ஹேட் யு.. ஐ ஹேட் யு டாடி" என அழுது கொண்டே உள்ளே ஓடினாள்

மகளின் அந்த வார்த்தை மேலும் துக்கத்தை கூட்ட, ஒன்றரை ஆண்டுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி தன்னை நிராதரவாய் விட்டு போன காதல் மனைவியின் மேல் இப்படி விட்டு சென்றாயே என கோபம் துளிர்த்தது

உணர்வுகளுக்கு கூட காலை பரபரப்பில் நேரமில்லை என உணர்ந்தவனாய் மகளை அழைக்க சென்றான்

"ஜெனி... வா டைம் ஆச்சு போலாம்" என்ற அழைப்பில் ஜெனி மேலும் முறுக்கிக் கொள்ள, கவிழ்ந்து படுத்து இருந்த மகளை கட்டாயமாய் தோள் பற்றி திருப்ப அவள் விசும்பினாள்

குழந்தையின் அழுகை ஜேம்சை மேலும் பலவீனப்படுத்தியது, குற்ற உணர்வில் மகளை அள்ளி அணைத்து கொண்டான்

"சாரி ஜெனி... வெரி சாரி... இனிமே அப்படி திட்ட மாட்டேன்... டாடி செல்லம் தானே நீ.. போற வழில சப்வே சாண்ட்விச் வாங்கிக்கலாம் சரியா...சாரி ஜெனி..." என பலவாறு சமாதானம் செய்த பின் சற்று முகம் தெளிந்தாள்

ஜெனியை பள்ளியில் விட்டுவிட்டு அவசரமாய் அலுவலகத்துள் நுழைந்தவனை வரவேற்பில் இருந்த விக்டோரியா "ஹாய் ஜேம்ஸ்" என உற்சாகமாய் விளிக்க "ஹாய்.." என்று விட்டு விலகினான்

விக்டோரியாவின் பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தும் அறியாதவன் போல் மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்

சில மாதங்களாய் நடக்கும் மௌன நாடகம் தான் அது. மறைமுகமாக தன் மேல் விருப்பம் இருப்பதை விக்டோரியா உணர்த்தியும் மனைவியின் நினைவை மறக்க முடியாத ஜேம்ஸ் விக்டோரியாவின் காதலை ஒதுக்கினான்

இந்த அமெரிக்க கலாசாரத்தில் மறுமணம் என்பது மிக சகஜமான ஒன்று என்ற போதும் ஏனோ அவன் மனம் ஒப்பவில்லை

அவனது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் கூட சொல்லி பார்த்து சலித்து, விட்டுவிட்டனர்

"அம்மா இனி இல்ல... Try to accept that" என மகளிடம் கூறியவன் தன்னால் மட்டும் அது முடிகிறதா என கேட்டு கொள்ள முனையவில்லை

ஜெனிக்கு இனி பெற்றவளின் நினைவு அதிகம் வராமல் இருக்கும் படி நடந்து கொள்ள வேண்டுமென நினைத்து கொண்டான் ஜேம்ஸ்

மாலை பள்ளிக்கு அவளை அழைக்க செல்ல, அன்று காலையில் கடுமையாய் தான் நடந்து கொண்ட நினைவே இல்லாதவள் போல் "டாடி.." என ஓடி வந்து கட்டி கொண்ட மகளை அணைத்து உச்சி முகர்ந்தான் ஜேம்ஸ்

இவள் மட்டும் இல்லையென்றால் தன் மனைவி சாராவின் மறைவு தன்னையும் வீழ்த்தி இருக்குமென நினைத்து கொண்டான்

"டாடி டாடி...soooooo much snow daddy... இன்னிக்கி நம்ம வீட்டுல Snow Man செய்யலாமா... ப்ளீஸ் டாடி" என அழகாய் கெஞ்ச அந்த கெஞ்சலில் அப்படியே கரைந்தான்

"ஒகே குட்டிமா... வி வில் டூ இட்..."

"ஐ லவ் யு டாடி" என கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்

அப்படியே அம்மாவை போல கோபம் என்றாலும் காதல் என்றாலும் அதீதமாய் என நினைத்தான் ஜேம்ஸ்

ஜெனியை காருக்குள் அமர்த்தி சீட் பெல்ட் போட முயல "நானே போட்டுக்கறேன் டாடி... you go and drive safe" என பெரிய மனுசி போல் கூற ஒரு கணம் சாராவே அருகில் நிற்பது போல் உணர்ந்தான் ஜேம்ஸ்

அன்று மாலை முழுவதும் ஸ்னோ மேன் செய்யும் வேலையே விளையாட்டாய் நேரத்தை விழுங்கியது

"வாவ்... சூப்பர் ஸ்னோ மேன் இல்ல டாடி"

"ஆமா ஜெனி... குட் ஜாப்" என அவள் உற்சாகத்தில் தானும் கலந்து கொண்டான் ஜேம்ஸ்

"டாடி கிறிஸ்துமஸ்க்கு நாம தாத்தா பாட்டி பாக்க போறோம் தானே"

"ஆமா ஜெனி... பாட்டி நேத்து போன் பண்ணினாங்க இல்லையா..."

"பாட்டிக்கு என்ன கிப்ட் டாடி?" என மகள் கேட்டதும் தான், தான் பரிசுகள் வாங்க வேண்டுமென்பதையே மறந்து விட்டதை உணர்ந்தான் ஜேம்ஸ்

சாரா இருந்த வரை எல்லோருக்கும் பரிசுகளை அவளே தேர்வு செய்து விடுவாள், மிக உற்சாகமாய் பண்டிகைக்கு தயாராவாள் என மனைவியின் நினைவில் லயித்தான் ஜேம்ஸ்

ஒருவழியாய் ஜெனியை பள்ளி பாடம் செய்வித்து உண்ண செய்து தூங்க வைத்தான்

மகளின் அறையை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் ஒரு வெறுமை வந்து ஒட்டி கொண்டதை உணர்ந்தான் ஜேம்ஸ்

பகலின் ஓட்டத்தில் உணரப்படாத தனிமை இரவானதும் தன்னை சூழ்வதை சில நாட்களாய் உணர்ந்தான், விக்டோரியாவின் காதல் பார்வை தன்னை அசைக்க தொடங்கி இருப்பதே அதற்கு காரணமோ என ஒரு கணம் தோன்றியது

விக்டோரியா அருமையான பெண் தான். ஆனால் ஏனோ முழு மனதாய் இன்னொரு பெண்ணை துணையாய் ஏற்க மனம் ஒப்பவில்லை

ஜெனியை முன்னிட்டு இப்படி நினைக்கிறேனோ என தோன்றியது ஜேம்சுக்கு

********
மறுநாள் பள்ளியில் மகளை இறக்கி விட்டு "பை பேபி... சி யு.." என அவன் கிளம்ப முயல

"டாடி டாடி..." என அழைத்தாள் ஜெனி

"என்ன ஸ்வீட்டி?"

"இந்த லெட்டர் போஸ்ட் பண்ணிடறீங்களா?"

"லெட்டரா?" என புருவம் உயர்த்தினான் ஜேம்ஸ், இவளுக்கு லெட்டர் எழுத தெரியும் என்பதே புதிர் என்பது போல்

"ஆமா டாடி... லெட்டர் டு Santa Claus... எங்க க்ளாஸ்ல எல்லாரும் எழுதறாங்க... கிறிஸ்துமஸ் அப்போ சேன்டா கிளாஸ்கிட்ட லெட்டர் எழுதி ரிக்வஸ்ட் பண்ணினா அவர் கண்டிப்பா குடுப்பார்னு மிஸ் லாரா (ஆசிரியை) சொன்னாங்க"

"ஓ..." என புரிந்தவனாய் "சரி குடு நான் போஸ்ட் பண்ணிடறேன்" என வாங்கினான்

"மறக்காம போஸ்ட் பண்ணிடு டாடி... ஆபீஸ் வேலைல மறந்துடாதே... லேட் ஆனா சேன்டா பிஸி ஆய்டும் யு நோ" என அழகாய் அபிநயித்து கூற அந்த அழகில் தன்னை மறந்தவன்

"ஒகே ஜெனி குட்டி... இப்பவே போஸ்ட் பண்ணிடறேன்...சரியா..."

"ம்..பை டாடி..." என பள்ளிக்குள் ஓடினாள் ஜெனி

தானும் இது போல் சிறு வயதில் பெற்றோர் ரகசியமாய் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் வைக்கும் பரிசை சேண்ட்டா தான் கொடுத்தது என நம்பியதை எண்ணி இதழில் முறுவல் பூத்தது

அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் வேலையாய் ஜெனி கொடுத்த கடிதத்தை எடுத்தான் ஜேம்ஸ்

அவள் அதில் கேட்டிருப்பதை வாங்கி கொடுத்து சேன்ட்டாஸ் கிப்ட் என அவள் மகிழ்வதை காண ஆவலானான்

அந்த கடிதம்.....

Dear Santa Claus,

My name is Jennifer

I know about you. So I'm going to say about me. I am seven years old and I go to Glen Park School. My best friend is Sandy. I love Ice Skating. I love my daddy a lot

My teacher is Miss Laura and she is really nice. I am very excited about Christmas

I have a question to ask you. How many elves do you have to help you? If you need help, let me know

For Christmas, I need a gift. I know you only can give me that gift. I miss my mommy so much. I need my mommy or someone who can love me like my mommy. My daddy miss my mommy too. So please give this gift and make me and my daddy happy

I won't forget to leave you some milk and cookies on Christmas Eve

Your friend,
Jeni

கடிதத்தை படித்ததும் கட்டுப்படுத்த இயலாமல் அழுதான் ஜேம்ஸ். இந்த பிஞ்சு உள்ளத்தில் இத்தனை ஏக்கமா?

தன் வேதனையை அறியாமல் பிடிவாதம் செய்கிறாளே என பல முறை நினைத்தது பொய் என நிரூபித்து விட்டாள் தன் மகள் என நினைத்தான் ஜேம்ஸ்

அதை உணர்ந்ததால் தானே "My daddy miss my mommy too. So please give this gift and make me and my daddy happy" என எழுத முடிந்தது

கடவுளே இத்தனை அருமையான பிள்ளையுடன் வாழும் அதிர்ஷ்டத்தை என் சாராவிடமிருந்து ஏன் பறித்தாய் என அழுதான்

சற்று நேரம் அதே நினைவில் இருந்தவன், ஒரு முடிவுக்கு வந்தான்

*******

மாலை ஜெனி வீட்டு பாடம் செய்து கொண்டிருக்க ஜேம்ஸ் சமையல் அறையில் வேலையாய் இருந்தான்

அழைப்பு மணி சத்தம் கேட்க, விரைந்து சென்று கதவை திறந்தவன் "ஹாய் விக்டோரியா... உள்ள வா" என புன்னகையுடன் வரவேற்றான் ஜேம்ஸ்

சிறிது நேர அளாவளுக்கு பின் "ஜெனி இவங்க யாருன்னு தெரியுமா?" என விக்டோரியாவை கை காட்டி கேட்க

"ம்... உங்க பிரெண்ட்..." என இயல்பாய் ஜெனி கூற அவளை எடுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டவன்

"எஸ், என் பிரெண்ட் தான்... சரி, நீ சேண்ட்டாகிட்ட என்ன கிப்ட் கேட்ட?"

"ம்ம்... அது சீக்ரட்" என்றாள்

"ம்... ஆனா சேண்ட்டா நேத்து எனக்கு போன் பண்ணுச்சே"

"ஓ...ரியலி... என்ன சொல்லுச்சு டாடி சேண்ட்டா" என கண்களில் ஆர்வம் மின்ன ஜெனி கேட்க

"ம்... நீ சேண்ட்டாகிட்ட கேட்ட கிப்ட் இவங்க தான்னு சொல்லுச்சு" என புன்னகையுடன் ஜேம்ஸ் விக்டோரியாவை கை காட்ட மகிழ்ச்சியில் அந்த சின்ன கண்கள் பளபளத்தது
எதுவும் புரியாமல் விழித்த விக்டோரியாவின் நிலைமை புரிந்த ஜேம்ஸ் "நீ சேண்ட்டாகிட்ட என்ன கேட்டேன்னு இப்பவாச்சும் சொல்லு ஜெனி"

"மம்மி வேணும்னு கேட்டேன்" என ஜெனி கூற விக்டோரியாவின் கண்கள் ஆனந்தத்தில் நிறைந்தது

மாலை கிளம்பும் முன் "விக்டோரியா, நைட் டின்னர்க்கு என் வீட்டுக்கு வர முடியுமா? என் குட்டி தேவதைய சந்திக்கணும்னு ரெம்ப நாளா கேட்டுட்டு இருக்கியே" என்று ஜேம்ஸ் கூற நடப்பது கனவா நிஜமா என நம்ப இயலாமல் விழித்தாள் விக்டோரியா, ஆனால் இப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருக்குமென அவள் கனவிலும் நினைக்கவில்லை

அவளின் தவிப்பு புரிந்த ஜேம்ஸ் மகளை ஒரு கையால் மடியில் இருத்தி கொண்டே வா என விக்டோரியாவை நோக்கி மறு கை நீட்ட அதற்கே காத்திருந்தவள் போல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்

ஜெனியும் சேண்ட்டாவிற்கு நன்றி கூறி தன் புது அம்மாவை கட்டிகொண்டாள்

And they lived happily ever after...

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்....

...

73 பேரு சொல்லி இருக்காக:

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல உணர்வு பூர்வமான கதை...குட் ஜாப் .. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Porkodi (பொற்கொடி) said...

good god LK!!!!!!!

Porkodi (பொற்கொடி) said...

approvala!!!!!!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்பவே நெகிழவைத்த கதை. தாய்ப்பாசத்துக்காக ஏங்கும் ஒரு தேவதையின் கடிதம் படித்து கலங்கியது ஜேம்ஸ் மட்டுமல்ல....

நல்ல கதை. என் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள் புவனா மேடம்.

Porkodi (பொற்கொடி) said...

ஹாஹா..!! என்ன அப்பாவி இது எழுதினா பிதாமகன் ரேஞ்சுக்கு சோகத்தை பிழியறீங்க.. இல்லன்னா காமெடி பண்றீங்க! ட்விஸ்ட் எல்லாம் இல்லாம plain jane கதைன்னாலும் படிக்க சூப்பரா இருந்துது..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

sweet

மோகன்ஜி said...

உருகியிருக்கீங்க தங்கமணி மேடம்! கிருஸ்துமஸ் வாழ்த்துகள்!!

மின்மினி RS said...

கதை ரொம்ப நல்லாருக்கு. என் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள்.

Vasagan said...

Dear Thangaimani,

Great, you narrate the emotions nicely. To day I am going to India to see my family members, your story reminds my daughter.

Merry Christmas and Happy New Year to you and Govind.
Annan.

முனியாண்டி said...

Short story is too good. Happy Christmas and new year.

Nithu Bala said...

nalla kathai:-)

பலே பாண்டியா said...

சீசன் கதை!! நல்ல ஒன்று

பிரதீபா said...

அழகான கதை.. நீங்களும் ஸ்நோமேன் செஞ்சிருப்பீங்க போல !! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

குட்டிக் கதை..சூப்பர்.. குழந்தை விஷ் நிறைவேறியதில், ஹாப்பி.. :-))

vgr said...

Cliché :)

Good post! nu sollama povena :)

-vgr

philosophy prabhakaran said...

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கதை அருமை.... உங்களுக்கும் மெர்ரி கிறிஸ்மஸ்...

கோவை ஆவி said...

ட்விஸ்ட்டே இல்லையே....எல்லா genre லயும் ஒரு கலக்கு கலக்குறீங்க!!

Arul Senapathi said...

Very nice, very touching story!!!

ANKITHA VARMA said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சூப்பர் கதையை படிக்கிறேன். நன்று

Balaji saravana said...

ஆஹா! கிறிஸ்மஸ் மகிழ்ச்சி மாதிரியே சந்தோசம் நிறைகிறது கதை முடிவில்! :)

siva said...

வாவ் டச்சிங்

siva said...

Dear santo..

(i read this blog very nice..)

this small story very very cute..

then

am also ask one gift from you.

my name siva.

you know me..

i want to read your post (ஜில்லுனு ஒரு
காதல்..)weekly three times.

i knew you are the one writing this story santo.

please post this story then we will happy..
me and all others blogers.

thank you.i hope i will get it..

mery x mas santo (appavi)
(sorry for spelling mistakes.)

your friend
siva

சி.பி.செந்தில்குமார் said...

கடஹியும் ஸ்டில்லும் மனதைக்கவர்ந்தது

சி.பி.செந்தில்குமார் said...

சாரி கதையும் ஸ்டில்லும் நல்லாருக்கு

சந்ரு said...

நல்ல கதை அழகாக எழுதி இருக்கிங்க.

வெறும்பய said...

அருமையான கதை உணர்வுகளை உரிமையை சொல்லுகிறது..

உங்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்....

அனாமிகா துவாரகன் said...

Dear Santa Claus,

My name is Ana.

I know about you. So I'm going to say about me. I am 16 years old and I go to MU. My best friend is Brandy . I love eating. I hate my enemy AT a lot.

My tutor is C and he is really nice. I am very excited about Christmas.

I have a question to ask you. How many elves do you have to help you? If you need help, let me know.

For Christmas, I need a gift. I know you only can give me that gift. I want this AT to finish the story in a couple of months. Other bloggers cannot wait too. So please give this gift and make me and my the bloggers happy.

I won't forget to leave you some milk and cookies on Christmas Eve.

Your friend,
Ana

அனாமிகா துவாரகன் said...

இங்க இங்கன்னு சில வார்த்தைகளை டிலீட் பண்ண மறந்துட்டேன். கரெக்ட் பண்ணி படிச்சுக்கோங்க அடப்பாவி அக்கா.

அனாமிகா துவாரகன் said...

ஒரு சென்டென்ஸ் முடிந்தா Full-stop வைக்கணும். இங்க லெட்டரில ஃபுல் ஸ்டொப்பே இல்ல.

அனாமிகா துவாரகன் said...

சரி சரி ஒத்துக்கறேன் அழகான கதை. இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

sriram said...

ரெண்டாவது நல்ல கதை. என்ன சொல்லறேன்னு புரியும்னு நினைக்கிறேன். நல்லா இருக்கு, இது மாதிரி நெறய எழுதுங்க.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எஸ்.கே said...

ஆஹா! அழகானா உணர்வூட்டமிக்க கதை! மிக இனிமை!

தங்கம்பழனி said...

ஜெனியின் கடிதம் உருக வைத்துவிட்டது... வாழ்த்துக்கள்..!

அமைதிச்சாரல் said...

அழகான கதை..

திவா said...

ம்ம்ம்ம் ஓகே! பாஸ் மார்க்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

வேகமாய் நகர்ந்த, moving story

RVS said...

வசனத்திலேயே அனைத்தையும் சொன்னது அருமை.. பிஞ்சு மனதின் ஏக்கங்களை அழகாக வெளிக்கொண்டு வந்துருக்கீங்க.. ரொம்ப நல்ல ஸ்டோரி.. எங்களுக்கு கிறிஸ்த்துமஸ் பரிசு.. நன்றி ;-)

Krishnaveni said...

very nice story

பிரியமுடன் ரமேஷ் said...

கதை நல்லா இருந்தது.. ஆனா குழந்தை.. அம்மா திரும்பவும் வேனும்னு சான்டாகிட்ட கேக்கறது.. சரி.. அம்மா அல்லது அம்மா மாதிரி அன்பு செலுத்துற ஒருத்தர் வேணும்னு அம்மாவுக்கு ஆல்டர்னேட் வச்சு எந்தக் குழந்தையாவது கேக்குமா.. அது மட்டும்தான் கொஞ்சம் நெருடலா இருந்ததுங்க.. மத்தபடி.. சூப்பரா எழுதிருக்கீங்க..

கோவை2தில்லி said...

கதை ரொம்ப உருக்கமா இருந்தது. தாயன்புக்காக ஏங்குகிற குழந்தை, கடிதம் எல்லாமே நல்லா இருந்தது. கிறுத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

vinu said...

as usual blasting performance

geetha santhanam said...

nice story and well written. merry christmas

ஸ்ரீராம். said...

உணர்வுபூர்வமான கதை. சுவாரஸ்யம் குறையாமல் படிக்க வைத்தீர்கள். குழந்தை புது அம்மாவை ஏற்றுக் கொள்வதும் உண்டு. என் அம்மா போல இல்லை என்று ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் உண்டு. கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு மகிழ்ச்சியான முடிவுடன் நல்ல கதை.

பாரதி வைதேகி said...

அழகான கதை. உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - தேங்க்ஸ் கார்த்திக்... (மழை வரும் இன்னிக்கி...இல்ல இல்ல ஸ்னோ வரும்...ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி -
//என்ன அப்பாவி இது எழுதினா பிதாமகன் ரேஞ்சுக்கு சோகத்தை பிழியறீங்க.. இல்லன்னா காமெடி பண்றீங்க! ட்விஸ்ட் எல்லாம் இல்லாம plain jane கதைன்னாலும் படிக்க சூப்பரா இருந்துது//

Thanks Porkodi for your compliment...அதுவா.... Multiple personality rightorder (not disorder note this)... இது அம்பி அவதாரம் எடுத்தப்ப எழுதினது... (கேசரிகாரர் இல்ல...), காமெடி அந்நியன் அவதாரம் எடுக்கறப்ப எழுதறது.. இப்ப ஒகேவா? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ரெம்ப நன்றிங்க....உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - தேங்க்ஸ்மா... how u been? long time no see..

@ மோகன்ஜி - ரெம்ப நன்றிங்க மோகன்ஜி

அப்பாவி தங்கமணி said...

@ மின்மினி RS - தேங்க்ஸ் மின்மினி...

@ vasagan - ரெம்ப நன்றிங்க அண்ணா... ஊருக்கு போறீங்களா? என்ஜாய்... Have a great holiday. Thanks for your wishes to me and Govind. Our wishes to your family too...Bye

@ முனியாண்டி - தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து

@ பலே பாண்டியா - ரெம்ப நன்றிங்க பாண்டியன்

@ பிரதீபா - தேங்க்ஸ் பிரதீபா... நாங்க இந்த வருஷம் ஸ்னோ மேன் செய்யலப்பா...

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ்ங்க ஆனந்தி... எனக்கும் சந்தோஷம் தான்

@ vgr - ரெம்ப நன்றிங்க vgr

@ philosophy prabhakaran - நன்றிங்க பிரபாகரன்

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - ஆஹா... உங்கள விடவா கலக்குறோம்... தேங்க்ஸ் ஆனந்த்

@ Arul Senapathi - ரெம்ப நன்றிங்க அருள்

@ ANKITHA VARMA - ரெம்ப நன்றிங்க Ankitha ... saw your profile..impressed.. thanks for your first visit to my blog... happy holidays (nice to know you live in canada too)

அப்பாவி தங்கமணி said...

@ Balaji saravana - நன்றிங்க பாலாஜி

@ siva - தேங்க்ஸ் சிவா... ஹா ஹா ஹா... உங்க லெட்டர் சேண்ட்டாக்கு போஸ்ட் பண்ணிடறேன் சார்... அவரு பாத்து செய்வாரு... ஹா ஹா (ஸ்கூல் காலேஜ்ல நல்லா காப்பி அடிச்சு பழக்கம்னு புரிஞ்சு போச்சு... ஹா ஹா)

@ சி.பி.செந்தில்குமார் - ரெம்ப நன்றிங்க செந்தில்

அப்பாவி தங்கமணி said...

@ சந்ரு - ரெம்ப நன்றிங்க சந்ரு

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஹா ஹா அஹ.... இப்ப அநியாயத்துக்கு காப்பி அடிப்பியா நீ... ஹா ஹா... காலேஜ்ல கூட இப்படி தானோ... ஹா ஹா...

//ஒரு சென்டென்ஸ் முடிந்தா Full-stop வைக்கணும். இங்க லெட்டரில ஃபுல் ஸ்டொப்பே இல்ல//
அட இந்த ஊர்ல அப்படி தான்ப்பா எழுதறாங்க...american way I guess... நானும் இங்க வந்த புதுசுல டூ மச் grammer அப்புறம் எல்லா punctuation marks யூஸ் பண்ணிட்டு தான் இருந்தேன்... after sometime realised it is better to be a roman in rome...ha ha...(wow...thats thought provoking ha ha)

//சரி சரி ஒத்துக்கறேன் அழகான கதை. இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்//
ம்ம்....அது... ஹா ஹா (உனக்கும் மை விஷேஸ் அனாமிகா...)

அப்பாவி தங்கமணி said...

@ sriram - ரெம்ப தேங்க்ஸ்ங்க ஸ்ரீராம்... Yes Yes I know...ஏன் //ரெண்டாவது நல்ல கதை//னு சொல்றீங்கன்னு நல்லாவே புரியுது... sure will try to write more in this zoner... thanks again

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - ரெம்ப நன்றிங்க

@ தங்கம்பழனி - ரெம்ப தேங்க்ஸ்ங்க

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ திவா - அப்பாடா... இன்னிக்கி தான் உங்ககிட்ட பாஸ் மார்க் வாங்கி இருக்கேன்... ரெம்ப நன்றிங்க...

@ வெங்கட் நாகராஜ் - ரெம்ப நன்றிங்க வெங்கட்

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

அப்பாவி தங்கமணி said...

@ RVS - ரெம்ப நன்றிங்க... பரிசாய் இதை சொன்னதற்கு மிக்க நன்றி

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...

அப்பாவி தங்கமணி said...

@ பிரியமுடன் ரமேஷ் - நன்றிங்க ரமேஷ்
//அம்மா அல்லது அம்மா மாதிரி அன்பு செலுத்துற ஒருத்தர் வேணும்னு அம்மாவுக்கு ஆல்டர்னேட் வச்சு எந்தக் குழந்தையாவது கேக்குமா.//

இங்க உள்ள பிள்ளைகள் அப்படி மனநிலையோட இருக்கறதை பாத்து இருக்கேங்க ரமேஷ்... இந்த ஊரை மையமா வெச்சு எழுதினதால அப்படி எழுதினேன்... நீங்க சொன்னது ரெம்ப சரி... நம்ம கலாச்சாரத்துல இது கொஞ்சம் நெருடலாத்தான் தெரியும் எனக்கும்... நன்றி மீண்டும்

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - ரெம்ப நன்றிங்க... டில்லிலையும் கிறிஸ்துமஸ் களை கட்டுதா?நம்ம ஊருக்கு போறீங்களா லீவ்க்கு?

@ vinu - Thanks Vinu... thats very kind of u...

@ geetha santhanam - நன்றிங்க கீதா...

@ ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க அண்ணா

அப்பாவி தங்கமணி said...

@ பாரதி வைதேகி - ரெம்ப நன்றிங்க பாரதி... Also thanks for your first visit to my blog

ஸாதிகா said...

அருமையான கதை.இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

AN.SHARAPUDEEN said...

எல்லாருக்கும் வணக்கம் ...மொத்தத்துல நல்லருக்கு அம்புட்டுதான்..

vanathy said...

super story!

Mahi said...

டைமிங்-ஆன கதை,நல்ல முடிவு! :)

Matangi Mawley said...

Beautiful story... romba emotional-a irunthathu!
naanum chinna vayasula Santa-ku letter ezhuthinen... :) nerayaa choicolates venum-nu.. enga veettu veppa maraththila next day morning chocolates thongichchu! :D

சே.குமார் said...

நெகிழ வைத்த கதை.

Gunabalan said...

wow...very nice

அப்பாவி தங்கமணி said...

@ ஸாதிகா - நன்றிங்க ஸாதிகா... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

@ AN.SHARAPUDEEN - ரெம்ப நன்றிங்க

@ vanathy - தேங்க்ஸ் வாணி

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி...

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி... ஹா ஹா ஹா... வேப்பமரத்துல சாக்லேட் சூப்பர்... ஹா ஹா... thanks for sharing your memories

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ Gunabalan - ரெம்ப நன்றிங்க

தக்குடுபாண்டி said...

அடப்பாவி அக்கா, நான் தான் கட்டக்கடைசி போலருக்கு! நல்ல நாள்லயே பீலிங்க்ஸ்ல பின்னி பெடல் எடுப்பேள், இந்த கதைல கேக்கவா வேணும்!..:) ஜெனி,விக்டோரியா,ஜேம்ஸ் கதாபாத்திரம் எல்லாமே இயல்பான நயத்தோட வெளிவந்து இருக்கு. பெரிய கோவிலை பிரமிப்போட பாக்கும் சாதாரணமானவன் மாதிரி ஓரமா இருந்து பாக்கறேன்!...:)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - yes you're the last one to comment...grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

mmm...neram thaan...thanks for your comment VVIP

Post a Comment