Thursday, December 30, 2010

உன்னை ஒன்று கேட்பேன்... (சிறுகதை)


"என்னங்க..." என மித்ரா பாசமாய் அழைக்க

"என்னடி? அதிசியமா இன்னிக்கி நல்ல மூட்ல இருக்க?" என தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார் மித்ராவின் கணவன் பிரகாஷ்

"அப்போ தினம் ராட்சசி மாதிரி இருக்கேனா?" என மித்ரா டென்ஷன் ஆக

"ச்சே ச்சே...அதை எப்படி என் வாயால சொல்லுவேன்" என பிரகாஷ் மனைவியை சீண்டினான்

மித்ராவின் பார்வையில் BP ஏறுவதை உணர்ந்த பிரகாஷ், இதுக்கு மேல அவள டென்ஷன் பண்ணினா சொந்த செலவுல சோமாலியாவுக்கு போன கதைதான்னு உஷார் ஆனார்

"சொல்லு மித்து... என்ன மேட்டர்?" என பேச்சை மாற்றினார்

"அது... நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேப்பேன்...நீங்க உண்மையான honest ஆன பதில் சொல்லணும் சரியா?" என மித்ரா கேட்கவும் இப்போ பிரகாஷ்க்கு BP ஏறிடுச்சு

பிரகாஷின் கற்பனை தாறுமாறாக ஓடியது... ஐயையோ... இயர் எண்டு பார்ட்டில ஒரு பெக் அடிச்ச விசயம் லீக் ஆய்டுச்சோ...ச்சே ச்சே இருக்காது... யாரும் சொல்லி இருக்க சான்ஸ் இல்ல... ஒருவேள இந்த ஆனந்த் அவன் wife கிட்ட ஒளறி அவ இவகிட்ட வத்தி வெச்சுருப்பாளோ...ச்சே இதுக்கு தான் இந்த மனைவிகள பிரெண்ட்ஸ் ஆகவே விட கூடாது...ச்சே ச்சே அதெல்லாம் இருக்காது...

ஒருவேள... போன வாரம் இவ பிரெண்ட் வீட்டு மொக்கை பார்ட்டிஐ அவாய்ட் பண்ண ஆபீஸ் வேலைனு சொல்லிட்டு சினிமா போனேனே...எவனாச்சும் பாத்து போட்டு குடுத்து இருப்பானோ... இல்லையே...அதுக்கு தானே அந்த டப்பா தியேட்டர் போனேன்... யாரும் பாத்திருக்க சான்ஸ் இல்ல...

வேற என்ன... ஐயையோ... அதே தான்... அதே தான்... புது அசிஸ்டன்ட் தீபிகா பாவம் மழைல பஸ்க்கு வெயிட் பண்றான்னு லிப்ட் குடுத்த மேட்டரே தான்... மேம்பாலம் கிராஸ் பண்றப்ப யாரோ பாக்கற மாதிரி ஒரு உள்ளுணர்வு தோணுச்சு... ஒரு வைட் மாருதி கிராஸ் பண்ணுச்சே... அட ராமா இவ சித்தப்பா பையன் அருண் கார் வைட் மாருதி தானே... போச்சு... இன்னிக்கி நான் காலி... பேசாம நானே சரண்டர் ஆகறது பெட்டர்...

இப்படி பிரகாஷ் என்ன என்னமோ யோசிச்சுட்டு இருக்க "என்னங்க...எத்தன வாட்டி கூப்பிடறது...என்ன யோசனை அப்படி?" என ஆழம் பார்த்தாள் மித்ரா

"அது...மித்து...என் மேல எந்த தப்புமில்ல...அன்னைக்கி என்ன ஆச்சுனா... ஒரே மழை...பாவம் பஸ் வேற வர்ல... மத்தபடி..." என்றவனை இடைமறித்தாள் மித்ரா

"என்ன சம்மந்தம் இல்லாம என்ன என்னமோ ஒளர்றீங்க? என்ன மழை? என்ன பஸ்?" என மித்ரா சிபிஐ ரேஞ்சுக்கு கேள்விகளை அடுக்க

"அடக்கடவுளே...இவ வேற ஏதோ சொல்ல வந்தா போல இருக்கே... நானே தான் சூனியம் வெச்சுகிட்டனா? ஐயோ...."என மனதிற்குள் புலம்பினான் பிரகாஷ்

"அ... அது... ஆமா நீ என்ன சொல்ல வந்த...அத சொல்லு மொதல்ல..."என பேச்சை மாற்றினான்

ஒரு கணம் யோசனையாய் நோக்கிய மித்ரா, தான் கேட்க வந்ததை கேட்கும் ஆவலில் பிரகாஷ் narrow escape ஆனார்

"அது... உண்மைய சொல்லணும் சரியா?" என மீண்டும் பீதியை கிளப்பினாள் மித்ரா

"நான் எப்ப டி உன்கிட்ட பொய் சொல்லி இருக்கேன்" என ஆஸ்கர் நாயகன் ஆனார் பிரகாஷ்

"சரி...நெஜமா சொல்லுங்க... நான் இப்போ எளைசுட்டேனா இல்ல குண்டாய்டேனா?" என கேள்வி குண்டை தூக்கி போட

"அடிப்பாவி... இதுக்கு நீ நாலு நாளைக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்லி இருந்தா கூட நல்லா இருந்துருக்கும்" என ஜெர்க்கனார் பிரகாஷ்

"என்னது..." என மித்ரா டென்ஷன் ஆக

"சரி சரி...என்ன கேட்ட இன்னொரு தரம் கேளு" என பூகம்பம் வரும் நேரத்தை கொஞ்சம் தள்ளி போட முயன்றார் பிரகாஷ்

"நான் முன்னைக்கு இப்போ எளைசுட்டேனா இல்ல குண்டாய்டேனானு கேட்டேன்"

"ஒரு வாரம் முன்னாடி கூட இந்த கேள்வி கேட்டியேடி" என பாவமாய் ஒரு பார்வையை வீசினார் பிரகாஷ்

"அது ஒரு வாரம் முன்னாடி... அப்போதைக்கு இப்போ என்ன மாற்றம்னு சொல்லுங்க"

"ஹும்... போன வாரம் ஊருக்கு பேசினப்ப எங்கம்மா ஜாதகத்துல கண்டம்னு சொல்றாங்கடா பாத்து இருன்னு இதைதான் சொல்லுச்சோ..." என பிரகாஷ் முணுமுணுக்க

"ஓ...என்னை பாத்தா கண்டமா தெரியுதா..." என மித்ரா கண்ணை கசக்க ஆயுத்தமாக

"ச்சே... ச்சே... அப்படி சொல்வேனா கண்மணி..." என பிரகாஷ் ஒரு ரொமாண்டிக் லுக் விட

"ஐஸ் வெச்சது போதும்...பதில் சொல்லுங்க..."

"அது வந்தும்மா... ஒரு வாரத்துல என்ன மாறும் நீயே சொல்லு" என தப்பிக்க பார்த்தார்

"ஏன் மாறாது? இல்ல ஏன் மாறாதுங்கறேன்.. நான் டையட் இருக்கேன் ஒரு வாரமா"

"ஓ...அப்படியா? சொல்லவே இல்ல...என்ன பண்ணின...?" என ஆர்வமாய் கேட்பது போல் பேச்சை மாற்றினார் பிரகாஷ்

"இந்த பேச்சை மாத்தறதேல்லாம் எனக்கும் புரியும்... பதில் சொல்லுங்க மொதல்ல..." என மித்ரா கறாராய் சொல்லவும், ஒரு முடிவுக்கு வந்த பிரகாஷ்

"இங்க பாருடி... எளைச்சுட்டேன்னு சொன்னா பொய் சொல்றீங்கனு கண்ண கசக்குவ... குண்டாய்டேன்னு சொன்னா வேற வினையே வேண்டாம்... ப்ளீஸ் மித்து... வேற எதாச்சும் கேளேன்... ப்ளீஸ்"

"அப்போ... நான் குண்டாய்டேன்னு சொல்றீங்க இல்ல?" என மித்ரா  பரிதாமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க

ஆஹா இவ மொறச்சா கூட பெட்டர் இப்படி பாவமா பாத்தா புலி பதுங்குதுன்னு அர்த்தம்னு அனுபவத்தில் உணர்ந்த பிரகாஷ், "நான் எப்பம்மா அப்படி சொன்னேன்?" என டிரியல் ஆனார்

"இப்ப சொன்னீங்களே...குண்டாய்டேன்னு சொன்னா வேற வினையே வேண்டாம்னு"

"எளைச்சுட்டேன்னு சொன்னா பொய் சொல்றீங்கனு கண்ண கசக்குவனு கூடத்தான் சொன்னேன்..."

"சரி விடுங்க...நான் குண்டு தான்... உங்களுக்கு மேல் வீட்டு மேனாமினிக்கி ரூபா தான் கண்ணுக்கு அழகா தெரிவா.. என்னை எல்லாம் பாத்தா இப்படி தான் இளக்காரமா இருக்கும்" என இன்ஸ்டன்ட் fountain உற்பத்தியானது கண்ணில்

"ஒகே.. ஸ்டேஜ் 2 வந்தாச்சு(அழுகை படலம்) இனி உஷாரா பேசணும்" என புரிந்த பிரகாஷ்

"ச்சே ச்சே...அப்படி இல்லடி செல்லம்... ஒரு மேட்டர் சொல்லட்டுமா? இப்ப நம்ம குஷ்பூவ எடுத்துக்கோ..." எனவும், மித்ரா அழுகைய நிறுத்தி முறைக்க

"ஐயோ...அப்படி எல்லாம் பாக்காத... சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்... குஷ்பு ஒல்லியானா பாக்க சகிக்குமா? சிலர் குண்டா இருக்கறது தான் அழகு... அப்படி தான் நீயும்" என ஒரு பிரச்சனையை முடித்த சந்தோசத்தில் பிரகாஷ் பெருமூச்சு விட்டார்

ஆனால் இனி தான் விபரீதம் என்பது புரியாமல்... (!!!)

"ஓ...அப்ப நான் குண்டுன்னு முடிவா சொல்றீங்க?" என மித்ரா கொக்கி போட தான் தெளிவாய் சிக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த பிரகாஷ் தப்பிக்க வழி புரியாமல் திருதிருவென விழித்தார்

"அப்படி இல்லடி..." என சமாளிக்க முயல

"ஆனா இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்" என்றாள்  மித்ரா  தீர்மானமாய்

"அடிப்பாவி...மனசாட்சியே இல்லாம பேசுறியே..." என டென்ஷன் ஆன பிரகாஷ், ஒரு கணம் யோசித்தவர் "ஓ... நான் உன்னை சந்தோசமா வெச்சுருக்கரதால தான் குண்டா இருக்கேனு பாராட்டுரயா...தேங்க்ஸ்டி செல்லம்" என பிரகாஷின் முகத்தில் பல்பு எரிந்தது

"இல்ல... ரெம்ப Stress ஆனா கூட வெயிட் போடுவோம்னு recent statistics சொல்லுது you know?" என பிரகாஷின் முக பல்பை அணைத்து அவருக்கு பல்பு வழங்கினாள் மித்ரா

"நேரம்டி...எல்லாம் நேரம்..."

"இங்க பாருங்க...இன்னிக்கி தேதி என்ன? டிசம்பர் 31... விடிஞ்சா 2011 .... இப்ப சொல்றேன் கேட்டுகோங்க... என்னோட New Year Resolution இதான். நான் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த வெயிட்க்கு வந்து காட்றேன்...challenge ?" என மித்ரா கூற

"இதே சபதம் தான போன வருசமும் எடுத்த?"னு கிராஸ் கொஸ்டின் கேக்கற அளவுக்கு பிரகாஷ் லூசு இல்லையே... அனுபவப்பட்ட கணவன் ஆச்சே...ஹா ஹா  ஹா

"சூப்பர் மித்து... நீ சொன்னா சொன்ன மாதிரி செய்வே... குட் லக்... ஹாப்பி நியூ இயர்" என எஸ்கேப் ஆனார் பிரகாஷ்

என்னங்க நீங்களும் New Year Resolution எல்லாம் எடுத்தாச்சா? குட் லக் டு யு டூ... ஹாப்பி நியூ இயர்...

என்னோட resolution என்னவா? நான் என்னங்க பெருசா ஆசைப்படப்போறேன்...  மென்மேலும் நெறைய பதிவுகள் போட்டு எல்லாரையும் உயிர வாங்கணும், அவ்ளோ தான்... ஹா ஹா ஹா

Hope you enjoyed this story... Lets start 2011 with a little laugh and stay that way all year long... Happy New Year to all...

...

54 பேரு சொல்லி இருக்காக:

முனியாண்டி said...

அப்ப நடக்கடும்....புத்தாண்டு வாழ்த்துகள்

Porkodi (பொற்கொடி) said...

jillunu oru idli enga?

பிரதீபா said...

உங்களுக்கும் உங்க மைன்ட்வாய்சுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !! :)

எல் கே said...

அப்பாவி , உன் வாழ்க்கையில் நடந்ததை இப்படி அழகாய் கதையாக சொல்லி உள்ளாய். நல்லா இருக்கு,.

உனக்கும், உன் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பா மெயின் வாய்ஸ்க்கு


அனாமிகா எங்கமா இருக்க சீக்கிரம் வா

siva said...

நல்ல அழகான
கதையும்
கருத்தும்
சபதமும்
எடுத்து
புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்க

நல்ல இருக்கு
நீங்க சிறந்த கதை ஆசிரியர்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

priya.r said...

ஹய்! மித்ரா பேரும் பேச்சும் சூப்பர் ! பிரகாசின் மன ஓட்டத்தை சொன்ன விதம் அருமை
நல்ல பதிவு !

நன்றி..... உங்களுக்கும் எங்களுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வரும் நாட்களில் உங்களுடைய படைப்புகள் மக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று
புத்தக வடிவிலும் வெளியிட பட வேண்டும் என்று வாழ்த்துகிறோம் !

BalajiVenkat said...

Sondha kadhayala irukku... :P Pavam rangs ... :(

ATM aangila puthandu nalvaazhthukkal ..... :)

பத்மநாபன் said...

டைலாக்ல்யே கதையை அழகா நகத்திட்டு வந்துட்டிங்க....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

வசன நடையில் கதையை நகர்த்திய விதம் அழகு

Vasagan said...

ஐயோ பாவம் எங்க வீட்டு மாப்பிள்ளை:(!

அனாமிகா ATku காய்ச்சல் (துளிர்) விட்டு போய்ச்சு என்ன என்று கவனி:))

Happy New year to you, Govind and all friends.
Annan.

அனாமிகா துவாரகன் said...

//அப்பாவி , உன் வாழ்க்கையில் நடந்ததை இப்படி அழகாய் கதையாக சொல்லி உள்ளாய். நல்லா இருக்கு,.//

எனக்கும் ஆரம்பத்தில இருந்தே இந்த டவுட்டு தேன். ஏன்க்கா, அடுத்த வருஷமும் இதே ரெசலூசன் தான் செய்யப் போறே.கோவிந்த் மாமா தான் பாவம். ஆமா, இந்த தீபிகா மாட்டர் அப்புறம் என்னாச்சு. மாமாவ உருட்டு கட்டையால விலாசினீங்களா இல்லயா? அல்லது இன்னும் கேக்காம மறந்திட்டேளா?

(ஏதோ என்னால ஆனது. ஹா ஹா ஹா)

@ கார்த்தி சார், வந்துட்டேன்ல.

பிரஷா said...

அழகான கதை.. புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

deja vu...!!
புன்னகையுடன் புத்தாண்டு வாழ்த்துகள்

அமைதிச்சாரல் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

தி. ரா. ச.(T.R.C.) said...

2011 புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். நல்லாவே இருக்கு உங்க கதை. ஹ்ம்ம்ம் நம்ப வீட்டுலேயும்தான் இப்படி பேச்சு இருக்கும் ஆனா அதை இப்படி கதையா கோ(ர்)வையா சொல்லத் தெரியலையே. அப்பாவி அக்கா கிட்டே கத்துக்கனும்

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

இதெல்லாம் படிச்சா கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

கதை அருமை புவனா:))!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

தெய்வசுகந்தி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

vgr said...

funny aga irundadu AT. New year wishes. nijamave neenga kushboo gunda? ellarum solradu unmaya?

BalajiVenkat said...

//// இதெல்லாம் படிச்சா கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு.
/// இதுலாம் சப்ப  மேட்டர்... உங்களுக்கு கோர்வையா பொய் சொல்ல தெரிஞ்சுருந்தலே போதும்.. அப்புறம் சொன்ன பொய்ய மறக்காம இருக்க இப்பயே நிறைய வல்லாரை கீரைய நிறைய எடுத்துக்கோங்க .... அப்படியும் இல்லேன்னா atm அடுத்த பதிவுல தங்கமணிகள சமாளிகர்து எபடின்னு ஒரு பதிவு போட சொல்றேன் படுச்சி தெரிஞ்சுகோங்க ... 

அக்காவ உங்கள நம்பி சொல்லிருக்கேன்  காப்பாத்துங்க  ஆமாம்

Guna said...

Nice.... Wish You A Very Happy New Year

ஸ்ரீராம். said...

நான் கூட இந்த வருஷம் ஒரு ரெசொல்யூஷன் எடுத்துருக்கேன்...இனி எந்த புத்தாண்டு சபதமும் எடுக்கறதில்லைன்னு...!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வெறும்பய said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Kousalya said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

இனியவன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

vinu said...

mealea sonna elllorudya commentsum ripeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeetu

ஸாதிகா said...

நல்ல கருத்தாழமிக்க கதை தங்கமணி.

சி.பி.செந்தில்குமார் said...

ஓக்கே புது வருஷத்துக்கு பதிவு போடலையா?

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Mahi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புவனா!

kadar said...

God: உன்னை ஒன்று கேட்பேன்.... enna varam vendum.... intha varudathirku..... ondree ondru kelu....
Appavi Thangamani: intha kadar mattum enna tension pannama vaaya moodikitu iruntha pothum....

(but nijamave god will grant u one of your bigger wish) HAPPY NEW YEAR...

சே.குமார் said...

நல்லா இருக்கு.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோவை ஆவி said...

Happy New Year!!!

kadar said...
This comment has been removed by the author.
தக்குடு said...

sirukadhai-nu pottathukku bathila 'sondha kadainu' poottu irukkalaam...:)

@ VGR - kushboo yellam namba akka kitta kooda nikka mutiyaathu!..:))

மகாதேவன்-V.K said...

அருமையான கதை
வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - தேங்க்ஸ்ங்க... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

@ Porkodi (பொற்கொடி) - சூடாவே இட்லிக்கு வழிய காணோம்....இதுல ஜில்லுனு ஒரு இட்லியா? ஹா ஹா அஹ...ஒகே ஒகே... நோ டென்ஷன்... பார்ட் 2 நாளைக்கு வரும்... தேங்க்ஸ்

@ பிரதீபா - நன்றிங்க...மைண்ட்வாய்ஸ்கிட்டயும் சொல்லிடறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - அடப்பாவி... கதை எழுதினா நிஜம்ங்கற... நிஜத்த சொன்னா கதைங்கற... மொதல்ல நல்ல டாக்டரை பாரு... ஹா ஹா ஹா... உனக்கும் ஹாப்பி நியூ இயர்...

@ siva - தேங்க்ஸ்... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

@ priya.r - அச்சச்சோ... யாரோ ப்ரியா அக்கா ஐடி ய hack பண்ணிட்டாங்க போல இருக்கே... இவ்ளோ சூப்பர் கமெண்ட் வர்றது சந்தேகமா இருக்கே... ஹா ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங் அக்கா...thanks a lot your heartfelt wishes...wishing you a great year too...

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - ஹலோ... சொந்த கதை எல்லாம் இல்லீங்க... கற்பனை தான்... அட நம்புங்கப்பா... நன்றிங்க... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

@ பத்மநாபன் - நன்றிங்க... உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

@ சி.பி.செந்தில்குமார் - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - ஆஹா... நீங்களுமா? ஹாப்பி நியூ இயர் உங்களுக்கும்...மிக்க நன்றி

@ அனாமிகா - அடிப்பாவி... எவ்ளோ நாளா இந்த ஆசை உனக்கு? ச்சே ச்சே...இது சொந்த கதை இல்லை இல்லை இல்லை... தீபிகாவும் இல்ல பூமிகாவும் இல்ல... நீயா introduce பண்ணி விடாம இருந்தா சரி... ஹா ஹா ஹா

@ பிரஷா - நன்றிங்க பிரஷா.... உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - மிக்க நன்றிங்க

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கா.-.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ தி. ரா. ச.(T.R.C.) - அடப்பாவமே... நீங்களாச்சும் நம்புங்க அங்கிள்... இது கற்பனை கதை தான்... போற வழில உங்க வீட்டுலயும் இது நடக்குதுன்னு confession வேற பண்ணிட்டு போயிட்டீங்க... ஹா ஹா ஹ...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - அது சரி... இதுக்கே பயந்தா எப்படிங்க? ஹா ஹா ஹா

@ ராமலக்ஷ்மி - ரெம்ப நன்றிங்க அக்கா... உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - நன்றிங்க அக்கா... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

@ VGR - நன்றிங்க... நீங்களும் நம்பலையா? இது நிஜமல்ல கதை... கதை கதை மட்டுமே... ஸ்ஸ்ஸ்பப்பா...

@ BalajiVenkat - பாலாஜி ரெம்ப தெளிவா தான் யோசிக்கறீங்க... ஹா ஹ ஹா... ஐடியா வேணா நான் குடுக்கறேன்... பின்னாடி அடி தடி வந்தா நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Guna - நன்றிங்க...

@ ஸ்ரீராம் - சூப்பர் சபதம்... ஹா ஹா ஹா...நன்றிங்க உங்கள் வாழ்த்துக்கு

@ வெறும்பய - நன்றிங்க... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ Kousalya - நன்றி தோழி

@ இனியவன் - நன்றிங்க உங்கள் வாழ்த்துக்கு

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மிம்மா...

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ஹா ஹா ஹா...அது சரி... தேங்க்ஸ்

@ ஸாதிகா - கிண்டல் பண்றீங்களோ...? ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க

@ சி.பி.செந்தில்குமார் - அதாங்க இது....? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ சிவகுமாரன் - கவிதையாய் வாழ்த்து சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ சே.குமார் - நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - தேங்க்ஸ்ங்க ஆனந்த்

@ தக்குடு - அடப்பாவி... நீயாச்சும் சப்போர்ட் பண்ணுவேன்னு பாத்தேன்... உனக்கு எவ்ளோ சப்போர்ட் பண்ணினேன் நான் நேத்து... ஹ்ம்ம்...

@ மகாதேவன்-V.K - ரெம்ப நன்றிங்க

ஆனந்தி.. said...

தங்கள் நகைச்சுவையின் விசிறி ஆகி விட்டேன்...புத்தாண்டு சுகமாகட்டும் இனிய தோழி தங்கமணிக்கு..:)))

அப்பாவி தங்கமணி said...

@ ஆனந்தி.. - wow...thats a great compliment Ananthi... thanks a lot... happy new year to you too..

logu.. said...

kadavuleyyyyyyy

அப்பாவி தங்கமணி said...

@ Logu - enna aachunga? kadavula koopidareenga? avlo kodumayaa irukkaa? ha ha ha... happy new year

Post a Comment