Friday, January 28, 2011

Cut Shoeவும் கட்டாத நாயும்...(மொக்கையின் மிச்சம்...சொச்சம்...:))))

இந்த மொக்கையோட முதல் பாதி படிக்காம இதை படிச்சா, நாயும் புரியாது Cut Shoeவும் புரியாது...அதால மொதல்ல இங்க போய் படிச்சுட்டு வாங்க...

இனி...

அந்த நயவஞ்சகி கேட்ட கேள்வி இதான் "என்னடி ஆச்சு? உன் Ford Esteem நடுவழில நின்னுடுச்சா? எவ்ளோ பேரு சேந்து தள்ளினாங்க?" னு

அவள நான் மொறைச்ச மொறப்புல கண்ணகி மதுரைய எரிச்சப்ப கூட மொறசுருக்க மாட்டாக...

நான் என்ன கரகாட்டகாரன் செவப்பு காரா ஓட்டிட்டு வந்தேன்... அது நிக்கவும் நாலு பேரு சேந்து தள்ளவும்..... நான் வந்ததே ஓட்டை பஸ்சு... கோவம் வருமா வராதா சொல்லுங்க?

கௌண்டர் செந்தில்கிட்ட டென்ஷன் ஆனா மாதிரி நானும் "என்னை பாத்து ஏண்டி அந்த கேள்வி கேட்ட... என்னை பாத்து ஏன் கேட்ட... இத்தன பேரு இருக்கைல என்னை பாத்து கேக்கணும்னு உனக்கு ஏன் தோணுச்சு"னு எக்க சக்க டென்சனா திட்டினேன் மனசுக்குள்ள, மேடம் கிளம்பினப்புறம் மனசார திட்டலாம்னு காத்துட்டு இருந்தேன்

இன்னும் விட்டா... செந்தில் கௌண்டர்கிட்ட கேட்ட ரேஞ்சுக்கு "இதுக்கு முன்னாடி யாரு வெச்சு இருந்தாங்க"னு கேட்டுடுவாளோனு பயத்துல க்ளாஸ் கவனிக்கற சாக்குல அவளை அவாய்ட் பண்ணினேன்

அது மட்டுமில்லாம என்னோட நோட்ஸ்ஐ நம்பி பதினெட்டு பட்டி ஜனம் இருக்கே... அட நம்புங்கப்பா? நான் நல்லா படிக்கற பொண்ணு... அவங்க எல்லாரும் என் அலப்பறைய சகிச்சுட்டு என்னை கேங்ல சேத்துகிட்டதே அந்த Notesக்கு தான்னு ரெம்ப லேட்டா புரிஞ்சது தான் சோகம் (:

இன்னும் நம்பிக்கை வரலியோ... நீங்களும் ரங்க்ஸ் கட்சி தான் போல...

இப்படி தான் கல்யாணம் ஆனா புதுசுல ஒரு நாளு......(கொசுவத்தி.........)

எல்லா கணவன் மனைவியும் இந்த கட்டத்தை கண்டிப்பா சந்திச்சு இருப்பீங்க... அதாவது... நம்மள பத்தி இவளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு கணவனும்... இவருக்கு என்ன தெரியும்னு மனைவியும்... "நாங்கெல்லாம்.... " அப்படின்னு ஆரம்பிச்சு தங்களோட வீர தீர ப்ராதபத்த அளக்காத தம்பதி இருக்க முடியுமா?

நானும் அப்படிதான் ஒரு நாள் பீலா விட்டுட்டு இருந்தேன்... அப்போ பேச்சோட பேச்சா "எனக்கு எங்க காலேஜ்ல BEST OUTGOING STUDENT AWARD குடுத்தாங்க தெரியுமா?" னு என்னமோ ஆஸ்கர் வாங்கின ஏ.ஆர்.ஆர் ரேஞ்சுக்கு ஒரு பில்ட் அப் பண்ணினேன்

"பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்"னு இங்க ஒரு எண்டு கார்ட் போட்டா ரெம்ப பொருத்தமா இருக்கும்... ஹ்ம்ம்.... அதுக்கு ரங்க்ஸ் சொன்ன பதில கேட்டு, அன்னைக்கி நிறுத்தினவ தான், அவர்கிட்ட இந்த மாதிரி எதுவும் சொல்றதில்லைனு சபதமே எடுத்துட்டேன்...

அப்படி என்ன தான் சொன்னாருனு நீங்கெல்லாம் கேக்க ஆவலா இருப்பீங்க (ஏன்னா நான் பல்பு வாங்கின கதை ஆச்சே...)

அவர் சொன்னது இதான் "BEST OUTGOING STUDENT AWARD ஆ? ஏன் எப்பவும் காலேஜ்க்கு வெளிய தன் இருப்பியா? ஆனாலும் அவார்ட் வாங்குற அளவுக்கா?"

சொல்லுங்க நட்புகளே, இதுக்கு மேல ஒருத்தி பேசத்தான் முடியுமா? அந்த அவார்ட் எதுக்கு குடுத்தாங்கன்னு இன்னிக்கி வரைக்கும் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ண முயற்சிக்கலை... ஒருத்தி வாழ்க்கைல எத்தன பல்பு தான் வாங்கறது...

சரி இத விடுங்க... என் பல்புகள் என்னோட...நாம Cut Shoe மேட்டர்க்கு போவோம்....

Cut Shoe பத்தி நான் எதுவும் சொல்லலை இல்லையா? எந்த ராகு காலத்துல எனக்கு அப்படி ஒரு ஆசை வந்ததோ...

எனக்கு பொதுவா சிம்பிள் சாண்டல்ஸ் தான் விருப்பம்... Cut Shoe அவ்ளோ ஒத்து வராது... பர்த்டேக்கு என்ன வேணும்னு எங்க அம்மா கேக்க... அந்த நேரத்துல நாக்குல சனி வந்து சல்சா டான்ஸ் ஆடுச்சு போல இருக்கு...

"எனக்கு ரெட் கலர்ல வெல்வெட்ல ஸ்டோன்ஸ் வெச்ச கட் சூ வேணும்"னு சொன்னேன். அதிசயமா பொண்ணு கேக்கறாளேனு கடை கடையா என் கூட சுத்தி அதே போல ஒண்ணை ஒரு மாசம் முன்னாடியே வாங்கி தந்தாங்க...

ஆனா பர்த்டே அன்னிக்கி புது டிரஸ் போடறப்ப தான் போடுவேன்னு பீரோக்குள்ள வெச்சு பூட்டிட்டேன்... ("கருமம் கருமம் செருப்ப போய் பீரோல வெச்சுருக்கு... என்ன ஜென்மமோ?"னு எங்க பாட்டி பொலம்பினத நான் கண்டுக்கவே இல்ல)

அந்த அழகான கட் ஷூ, அப்புறம் புது டிரஸ் எல்லாம் போட்டுட்டு வந்தும் கூட 18ல ஒரு ப்ரூட்டஸ் கூட ஏன்னு கேக்கலயேனு அது வேற ஒரு எரிச்சல்...

அந்த கட் ஷூ லேசா கடிக்கற மாதிரி வேற ஒரு நமைச்சல்... அடிக்கடி ஷூவை கழட்டி விடறதும் போடறதுமா அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்

முதல் period க்ளாஸ் முடிஞ்சதும் பிரெண்ட்ஸ்கிட்ட க்ளு குடுத்து பாத்தேன் நைசா... ஆனாலும் எவளும் "ஏப்பி பர்த்டே" சொல்ற பாடா காணோம்... மேடம்கிட்ட பலப் வாங்கினத கிண்டல் பண்றதுலையே குறியா இருந்தாளுக... நன்றி கெட்ட உலகமடா இது? னு நானும் விட்டுட்டேன்...

ஒரு வழியா லஞ்ச் டைம் வந்தது... இந்த ப்ரூட்டஸ்களுக்குன்னு எங்க அம்மா வேற வடை கேசரி பார்சல் எல்லாம் பண்ணி இருந்தாங்க... ஏன் எதுக்குன்னு கேக்காம அதை உள்ள தள்ளுறதுலையே பிஸி எல்லாரும்... நானும் மனசு வெறுத்து போய் பேசாம விட்டுட்டேன்...

சாப்ட்டு முடிச்சதும் "வா வெளிய போலாம்" னு ரெண்டு பேரு, தசாவதாரம் பலராம் நாயுடு கோவிந்தராஜன் கமலை விசாரிக்க கூட்டிட்டு போன ரேஞ்சுல கூட்டிட்டு போய் ஒரு பத்து நிமிஷம் காலேஜ்ஐ சுத்த வெச்சு திரும்ப கூட்டிட்டு வந்தாளுக... கட் ஷூ குத்தற வலி வேற... சொன்னா "உனக்கேண்டி இதெல்லாம்?" னு ஒரு பலப் கிடைக்கும்னு பேசாம இருந்தேன்...

திரும்பி க்ளாஸ்க்கு வந்தா... அங்கே...ஆனந்த அதிர்ச்சி... கலர் பேப்பர் ஒட்டி... ஹாப்பி பர்த்டேனு எல்லாரும் கத்தி... ஒரு பெரிய கிப்ட் பார்சல்... கேக் வேற முன்னாடி டேபிள்ல மெழுகுவர்த்தி தகதகக்க... எனக்கு அப்படியே மயக்கம் வராத குறை தான்...

ச்சே... இந்த பாசக்கார புள்ளைகளயா திட்டினோம்னு வடிவேல் ரேஞ்சுக்கு ஒரே பீலிங் வேற... அது பைனல் இயர்ங்கறதால அந்த வருஷம் 18 பேரின் பர்த்டேவும் இப்படி தான் செய்யறதுன்னு 17 பட்டி நாட்டமைகளும் சேந்து எடுத்த முடிவாம்... என்னோடது மொதல் பர்த்டேங்கறதால சஸ்பென்ஸ் வெச்சாங்களாம் எனக்கு மட்டும்... ஸ்ஸ்ஸ்பப்பா....

எல்லாம் நல்லா முடிஞ்சுது... Happily ever after னு போடணும்னு தான் ஆசை... ஆனா.....

கட் ஷூ நமைச்சல் ஒரு ஸ்டேஜ்ல கட்டுக்கடங்காம போச்சு... பக்கத்துல இருந்தவ நான் நெளியரத பாத்துட்டு கேக்கவும் சொல்லிட்டேன்... வாயல கை வெச்சுட்டு உலக அழகி போட்டில ஐஸ்வர்யா ராய் ஜெய்ச்சப்ப குடுத்த அதே expression ... சிரிப்ப அடக்கராங்களாம் மேடம்... :(((

அதோட விட்டாளா...???  சத்தமா "ஏண்டி... யானை ஹெல்மெட் போட ஆசைபட்டா சரி... எறும்புக்கு அந்த ஆசை வரலாமான்னு?" அந்த டைம்ல இருந்த ஒரு மொக்க காமடிய எடுத்துவுட்டு க்ளாஸ் பூரா மேட்டரை பத்த வெச்சா...

அப்புறம் அக்கறையா என்ன ஏதுன்னு பாத்து ரெத்தமே வர தொடங்கி இருந்த நமைச்சலுக்கு பேன்ட் எய்ட் எல்லாம் போட்டு நல்லாத்தான் கவனிச்சாங்க... "நண்பிடிடிடிடி...."னு சொல்லலாம்னு அப்பவெல்லாம் தோணல... .

காலேஜ் முடிஞ்சு கிளம்பினப்ப ஆரம்பிச்சது அடுத்த ப்ராப்ளம்... ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து தான் மெயின் பஸ் ஸ்டாண்ட் வரணும்... நான் மெதுவா தான் நடப்பேன் என்னால முடியாதுன்னு ஏக அலப்பறை பண்ணி அன்ன நடை போட்டுட்டு வந்தேன்... முடியலையே, அம்மா அப்பானு அடிக்கடி சவுண்ட் வேற.... பொறந்த நாளும் அதுவுமா போய் தொலையட்டும்னு என் பிரெண்ட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க போல...

பாதி வழில வந்துட்டு இருந்தப்ப பாலு மகேந்திரா படத்துல எல்லாம் காட்டற மாதிரி என்னமோ சரியில்லைனு உள் மனசு சொல்லுச்சு... என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்... இதுல உள் மனசோட வார்னிங் எல்லாம் கண்டுக்கரதாவது... ஹ்ம்ம்...

திடீர்னு அங்க ஒரு நாய்...அதுவும் தெரு நாய்... எனக்கு இந்த பிராணி எல்லாம் செம அலர்ஜி... அது பாட்டுல சிவனேன்னு ரோடுல படுத்துட்டு இருந்தது... ஆனா எனக்கு ஜெர்க் ஆய்டுச்சு... நான் நின்னதும் "என்னடி ஆச்சு...?" னா ஒருத்தி...

"நா...நா...நா... " எனக்கு பேச்சே வர்ல

"சொல்றத ஒழுங்கா சொல்லி தொல"

"நாய்..."னு கத்தினேன்

"ஏண்டி திட்டற?" னு அவ வேற ... "உன்னை இல்லடி... நெஜமாவே அங்க பாரு... நாய்" னேன்

"அது எங்கயோ... தொட்டா விழுகற சோனி நாய்... அதுக்கு போய்... ஹா ஹா ஹா" னு எல்லாரும் கெக்க பிக்கனு சிரிப்பு...

"சோனி நாய் கடிச்சாலும் அதே 32 ஊசி தான் லூசுகளா" னேன் நான்... ஒருத்தியும் பயபட்ற பாடா காணோம்

இந்த நேரத்துல அந்த நாய் மெதுவா எந்திரிச்சது... அப்படியே எங்க பக்கம் நடக்க ஆரம்பிச்சது... அவ்ளோ தான் கால் வலி எல்லாம் எங்க போச்சுனே தெரியல... ஓடினாள் ஓடினாள் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள் ரேஞ்சுல நான் ஓட... அது தொரத்த... மத்த நாய்க (பிரெண்ட்ஸ் ) எல்லாம் சிரிக்க...

"24 hours கழிச்சு தான் சொல்ல முடியும்... இனி ஆண்டவன் மேல பாரத்த போடுங்க" னு ICU முன்னாடி நிக்கற சொந்தகாரங்ககிட்ட சொல்ற டாக்டர் மனநிலைக்கு நானும் வந்திருந்தேன்... திடீர்னு... யாரோ வழில போன ஒரு புண்ணியவான் வந்து அந்த நாய தொரத்தி விட்டாரு... அதே டாக்டர் டயலாக் "Its a miracle..." தான் அப்ப தோணுச்சு...

"நடக்கவே முடியாதாம் ஆனா ஓட முடியுமாம்... சூப்பர் இல்லடி" னு ஒருத்தி மாத்தி ஒருத்தி ஜாடை பேசி சிரிச்சுட்டே வந்தாளுக என் எனிமிஸ்... (இன்னும் என்ன பிரெண்ட்ஸ் வேண்டி கெடக்கு....)... நான் பதில் சொல்லாம மொறச்சுட்டே அன்னிக்கி ஓடுச்சு டைம்...

ஆனா இன்னைக்கி வரைக்கும் என் மனசுல நெருஞ்சி முள்ளா உறுத்தற சில கேள்விகள்:-

1 அந்த நாய்க்கு பிடிக்காம போனது என்னையா இல்ல ரெட் கட் ஷூவயா?

2 . கிராமத்து சினிமால எல்லாம் ஜல்லிக்கட்டு காளை தானே செவப்பு கலர் பாத்து டென்ஷன் ஆகும்... நாய் கூடவா இப்படி? அப்ப ஏன் பாரதிராஜா எந்த சினிமாலையும் இதை காட்டலை?

3 அத்தன பேரு இருக்கறப்ப எல்லாரையும் விட்டிட்டு அந்த நாய் ஏன் என்னை மட்டும் துரத்தணும்? இதன் பின்னணியில் இருக்கும் உள் நாட்டு சதி என்ன?

4. ஒருவேள நான் போன ஜென்மத்துல அந்த நாயாவும் அது நானாவும் இருந்து நான் அதை இதே போல துரத்தி இருப்பனோ? அதுக்கு தான் இப்ப பழி வாங்குதோ?

மைண்ட்வாய்ஸ் -  இதுக்கு மேல நீ ஒரு கேள்வி கேட்டா கூட நான் நாயா பேயா வந்து உன்ன தூரத்துவேன்...

அப்பாவி - ஒகே... மீ எஸ்கேப் நௌ... 

Tuesday, January 25, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 5)


பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4

இலையுதிர் காலம் முடியும் தருவாயில் முதல் செமஸ்டர் பரிட்சைகள் நெருங்கியது. நால்வரும் தினமும் மாலை நேரத்தில் ஸ்டீவின் அபார்ட்மென்ட்ல் குரூப் ஸ்டடி செய்வதென முடிவு செய்தனர்

நால்வரும் படிப்பில் நல்ல ஆர்வமுள்ளவர்களாய் இருந்ததால் சேர்ந்து படிப்பது உபயோகமான நேரமாய் ஆனது அவர்களுக்கு

சேர்ந்து படிப்பதும், இடையிடையே சிரிப்பும் விளையாட்டுமாய் சந்தோசமான நேரங்களாய் ஆனது. தினமும் ஸ்டீவ் வேண்டுமென்றே மீராவை கடைசியாய் அவளிடத்தில் விட சென்றான். அவளுடனான தனிமை தருணங்களை அவளும் நினைவில் கொள்ளும் விதத்தில் வம்பாய் பேசி சிரிக்க செய்தான்

அடுத்த வந்த வார இறுதியிலும் சேர்ந்து படிக்கலாம் என முடிவு செய்தனர்

காலை ஒம்பதரை மணி ஆன போதும் விடுமுறை நாள் என்பதால் கண்விழித்தும் சோம்பலாய் சும்மாவேனும் கண்மூடி படுத்திருந்தான் ஸ்டீவ்

கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, மூவரும் பதினோரு மணி போல் வருவதாய் தானே சொன்னார்கள் என யோசனையுடன் எழுந்து சென்றான்

கதவின் Eye-viewer வழியாய் பார்த்தவன் மீராவை கண்டதும் சோம்பல் காணாமல் போக உற்சாகமானான். ஆனால் அடுத்த நொடி, மீரா முன் இப்படி தூங்கி எழுந்த முகத்தோடு நிற்பதா என தயங்கி உள்ளே செல்ல நினைக்கவும் மறுபடியும் கதவு தட்டப்பட்டது

அவளை காக்க வைக்க மனமின்றி அப்படியே கதவை திறந்தான். "ஹாய் மீரா" எனவும், இப்போது தடுமாறுவது அவள் முறையானது

இரவு உடையும் கலைந்த தலையுமாய் அவனை பார்த்ததும் "ஓ சாரி ஸ்டீவ்... நீ இன்னும் தூங்கிட்டு இருப்பேன்னு நினைக்கல... நேரமே எழுந்துட்டேன், போர் அடிச்சது அதான் வந்துட்டேன்... நான் லாபில வெயிட் பண்றேன்... take your time" என அவள் elevator நோக்கி நடக்க தொடங்க

"இல்ல மீரா... இட்ஸ் ஒகே... நீ டிவி பாத்துட்டு இரு... I'll be in a minute" என அவள் பதிலுக்கு காத்திருக்காமல் விரைந்து ஒரு உடையை எடுத்து கொண்டு washroom உள் நுழைந்து கொண்டான்

அதற்கு மேல் மறுத்தால் பிகு செய்வதாய் தோன்றுமென மீரா எதுவும் கூறாமல் சென்று சோபாவில் அமர்ந்தாள்

அறையை சுற்றியும் பார்வையை சுழல விட்டவள் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நேர்த்தியை ரசித்தாள். அளவாய் வேண்டிய அளவு மட்டும் பொருட்களை வைத்து கொள்வதே அவளுக்கும் பிடிக்கும்

அழகுக்கென வெறுமெனே பொருட்களை வாங்கி இடத்தை அடைப்பதை எப்போதும் அவள் விரும்பியதில்லை. ஸ்டீவ் கூட அப்படியே வைத்திருந்தான்

தடுப்புகளற்ற ஒரே பெரிய அறை தான் மொத்த வீடும். இது போன்ற ஸ்டூடியோ அபார்ட்மென்ட் முறை கூட வசதி தான் என நினைத்தாள் மீரா

ஒரு மூலையில் படுக்கை, அப்போது தான் எழுந்தான் என கூற முடியாத படி நேர்த்தியாய் இருந்தது பெட் விரிப்புகள்

இடது பக்கம் சிறிய சமையல் மேடை.சமைப்பானோ என சந்தேகம் கொள்ளும்படி சுத்தமாய் இருந்தது, அதை சேர்ந்தாபோல் சிறிய பால்கனி, அதில் அழகாய் இரு மடக்கும் நாற்காலிகள் நடுவே சிறிய டீபாய் போல் ஒன்று

அறையின் மையத்தில் சோபா, அதன் முன் சற்று தள்ளி இருந்த சுவரை ஒட்டி சிறிய டேபிள் மீது டிவி. எங்கும் சிறு தூசு துரும்பை கூட காண முடியவில்லை என மனதிற்குள் பாராட்டினாள்

என்றேனும் சதீஷ் இப்படி மாறுவானோ என தோன்றிய நொடி, இதை கேட்டால் அவன் முகம் எப்படி கோபமாய் மாறும் என நினைத்ததும் சிரிப்பு வந்தது

சற்று நேரத்தில் ஸ்டீவ் வந்து மற்றொரு சோபாவில் அமர்ந்தான்

"ரியல்லி சாரி ஸ்டீவ்...தூக்கத்த கெடுத்துட்டேன்" என மீரா கூற

"நீ என் தூக்கத்த கெடுத்து ரெம்ப நாளாச்சு" என தோன்றியதை மனதிலேயே இருத்திக்கொண்டு "இட்ஸ் ஒகே மீரா... நான் தூங்கல... Just lazy rolling on bed...thats it" என்றான்

"ஓ... நீயும் சதீஷ் போலத்தானா...அவனும் இப்படி தான் முழிச்சுட்டாலும் ரெண்டு மணி நேரம் எழுந்துக்க மாட்டான்" என மீரா கூற

"இப்ப ரெம்ப அவசியம் அவன பத்தி" என பற்களை கடித்து முணுமுணுத்தான் ஸ்டீவ்

"என்ன?" என புரியாமல் மீரா கேட்க

"அ... ஒண்ணுமில்ல... great men are alike னு சொல்ல வந்தேன்" என சமாளித்தான்

"ம்... நெனப்பு தான்... நீங்க எல்லாம் கிரேட்ஆ இல்லையான்னு நாங்க தான் சொல்லணும்... நீங்களே சொல்லிக்கக்கூடாது" என சிரித்தாள்

"அப்படியா? சரி நான் கிரேட்ஆ இல்லையான்னு நீயே சொல்லேன்" என பேச்சை திசை திருப்பினான் ஸ்டீவ்

"ம்... எனக்கு உன்ன பத்தி பெருசா என்ன தெரியும்... as such you're okay" என குறும்பாய் சிரித்தாள்

அது போதுமே ஸ்டீவை பறக்க செய்ய. "ம்...ஒகே இந்த மட்டும் ஒத்துகிட்டியே போதும்" என அவனும் சிரித்தான்

"இட்டாலியன்ஸ் hospitality க்கு பேர் போனவங்கன்னு கேள்வி" என பூடகமாய் பேசினாள் மீரா

அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தபோதும் வேண்டுமென்றே "அப்படியா... அதுகென்ன இப்போ" என பேச்சை வளர்த்தான்

"ஒரு காபி கொடுக்க காசு கேப்ப போல இருக்கே, சரியான கஞ்சூஸ்" என முறைத்தாள்

"தூக்கத்த கெடுத்தல்ல, அதுக்கு பதிலா நீயே காபி போட்டு குடுப்பேன்னு நெனச்சேன்" என வேண்டுமென்றே சீண்டினான் ஸ்டீவ்

"சரி...நான் தொல்ல தான் உனக்கு... போறேன்... அவங்க வந்தப்புறம் போன் பண்ண சொல்லு... அப்புறம் வரேன்..." என அவள் எழுந்து கொள்ள

"காபி போட தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லு... இப்படி எல்லாம் எஸ்கேப் ஆக வேண்டாம் மீரா" என அவன் சத்தமாய் சிரிக்க

"உனக்கு தெரியுமா எனக்கு காபி போட தெரியாதுன்னு" என சிலிர்த்து எழுந்தாள்

அதற்காக தானே அவனும் வம்பு செய்தது, எனவே அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தவாறே வார்த்தைக்கு வார்த்தை வம்பு செய்தான்

"தெரிஞ்சா போட்டு குடு... அப்புறம் நம்பறேன்" என சீண்டினான்

"காபி வேணும்னா நேராவே கேளு... இப்படி trap பண்ண வேண்டாம்" என சிரித்து கொண்டே சமையல்  மேடையை நோக்கி சென்றாள்

தானும் அவளும் மட்டும் தனியாய் வீட்டில், அவள் ரெம்ப பழகியவள் போல் சமையல் மேடை அருகில் நின்று ஏதோ தேடி கொண்டிருக்க..., ஏதோ picture perefect என்பார்களே அது போல் என தோன்ற, ஸ்டீவ் அந்த தருணத்தை மனதில் பதிய செய்து கொள்ள முனைபவன் போல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்

அவள் அருகில் சென்று நின்றவன் "இதுக்கு முன்னாடி காபி போட்டு இருக்கியா மீரா?" என கேலியாய் கேட்க

"ஹலோ...எங்க வீட்டுல traditional பில்ட்டர் காபியே நான் போடுவேன்.... இதென்ன பெரிய விஷயம்... அது சரி உன்கிட்ட காபி மேக்கர் இல்லையா? காலைல அவசரத்துக்கு கஷ்டமில்ல?" என கேட்டாள்

"ஏன் அது இருக்குங்கற தைரியத்துல தான் காபி போட ஒத்துகிட்டயா?" என மேலும் சீண்டினான்

"ஏய்... " என அருகிலிருந்த Pan Cake செய்யும் Pan எடுத்து கொண்டு அவள் மிரட்டுவது போல் பார்க்க, உரிமையான அவளின் செய்கையில்  தன்னை மறந்து, அவளை விட்டு பார்வையை விலக்க முடியாதவனாய் நின்றான் ஸ்டீவ்

அன்று சினிமா பார்த்த தினம் பார்த்த அதே பார்வை போல் அது மீராவை உறுத்தியது. என்ன விதமான கண்கள் இவனுக்கு, ஊடுருவி எதையோ தேடுவது போல் என்ன பார்வையோ என நினைத்த மீரா தானும் ஏன் எதுவும் கூறாமல் அவனை பார்க்கிறோம் என்பதை உணரவில்லை

அவள் தன்னை ஆராய்வது போல் பார்ப்பதை உணர்ந்ததும் மனம் சிறகடிக்க "என்ன? உங்க தமிழ் சினிமா ஜோக்கர் ரோலுக்காவது தேறுவேனா?" என அவன் அவள் தன்னை பார்ப்பதை உணர்த்துவிட்டதை உணர்த்தும் விதமாய் கேலி செய்ய

அதை புரிந்து கொண்டு மீரா சமாளிப்பதாய் நினைத்து வேறு பக்கம் பார்த்த படி "நீ தான் என்ன கண் அசைக்காம பாத்த ஸ்டீவ்... நான் ஒண்ணும் உன்ன பாக்கல" என உளறினாள்

அதையும் அவன் தனக்கு சாதகமாக்கி கொண்டான் "அப்படியா... அழகா இருக்கறதை ரசிக்கறது தப்பா? Its not a sin in my religion" என எப்படி மடக்கினேன் பார் என்பது போல் சிரித்தான்

அவன் எதிர்பார்த்தது போலவே பெண்மைக்கே உரிய விதமாய் முகம் சிவக்க "எந்த நாட்டை சேர்ந்தவங்களா இருந்தாலும் நீங்க men எல்லாரும் ஒரே போல தான்" என முக சிவப்பை மறைக்க ஏதோ தேடுபவள் போல் பாவனை செய்தாள்

"ஒரே போலன்னா?" அவள் சொல்வது புரிந்தும் வேண்டுமென்றே அவள் முக சிவப்பை மீண்டும் பார்க்கும் ஆவலில் கேட்டான்

"ரெம்ப பேசினா காபில சுகர்க்கு பதிலா சால்ட் போட்டுடுவேன்" என அவள் மிரட்ட

"வாவ்... புது ரெசிபியா? patent வாங்கிடு மீரா" என கேலி செய்தான்

"ச்சு... போதும் வம்பு... நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லல" என இம்முறை பேச்சை மாற்றினாள் இவள்

"என்ன கேட்ட?" என்றான் நிஜமாகவே புரியாமல்

"ம்... பிரைன் damage ஆனவங்களுக்கு எப்படி MBA சீட் குடுத்தாங்கன்னு கேட்டேன்" என்றாள் குறும்பாய்

"ம்... சீட் குடுக்கரப்ப நல்லாத்தான் இருந்தது... அன்னிக்கி ஒரு அழகான பொண்ணு என் மேல புக்கை தூக்கி வீசினதுல இருந்து தான் இந்த டேமேஜ்" என அவன் இருபொருள் பட பேசினான்

அதை கேட்டதும் ஒரு கணம் பேசமுடியாமல் நின்றவள் அவன் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்ததும் இயல்பாய் பேச்சை மாற்றுவது போல் "காபி மேக்கர் இல்லையா? காலைல அவரசத்துக்கு கஷ்டமில்லயானு கேட்டேன்...நீங்க இட்டாலியான்ஸ் காபி பிரியர்கள் ஆச்சே... " என்றாள்

இதற்கு மேல் சிவக்க செய்யாதே என கெஞ்சுவது போன்ற பார்வையுடன் வேண்டுமென்றே அவள் பேச்சை மாற்றியதை உணர்ந்த ஸ்டீவ், மேலும் அவளை தவிக்க வைக்க மனமின்றி

"இல்ல மீரா... காபி மேக்கர் ஏதோ சரியா வொர்க் ஆகலை... நேத்து தான் தூக்கி போட்டேன்... வாங்கணும்... may be today... இந்த வாட்டி perfect espresso செய்யற மாதிரி நல்லதா வாங்கணும்னு யோசிச்சுட்டு இருக்கேன்..." என்றான்

தனக்கும்  espresso பிடிக்கும் என சொல்ல நினைத்தவள், அதை கூறினால் அதை தொட்டு மீண்டும் வம்பாய் ஏதேனும் பேசுவானோ என பயந்தவள் போல் "டீ போடறேன்" என்றுவிட்டு   எலெக்ட்ரிக்  கெட்டிலை  உயிர்பித்தாள் 

டீ தயாரானதும் சில நொடிகள் அங்கு மௌனம் நிலவியது

அதை பொறுக்காதவன் போல் "சதீஷ் அவ்ளோ சொன்னப்பவே யோசிச்சுருக்கணும்... இப்படி நானே போய் Trap ஆய்ட்டேன்" என அவன் பாவமாய் டீ மக்கை உயர்த்தி காட்டி கூற

"யு...." என கோபமாய் சோபாவில் இருந்த தலையணை அவன் மேல் வீசினாள். அதை அறிந்தவன் போல் அவன் நகர்ந்த போதும் சிறிது டீ  அவன் மேல் சிந்தியது

சட்டென முதல் நாள் நினைவு வர இருவரும் கண்களில் நீர் வர சிரித்தனர்

"சிரிக்கறப்ப you're a princess Meera...especially those dimples makes you an angel" என மனதில் தோன்றியதை மறைக்காமல் உரைத்தான் ஸ்டீவ்

மீராவை காணும் பலரும் அவள் கன்னக்குழி அழகு என கூறுவது இயல்பு தான் என்ற போதும் "ஒகே டீஸ் பண்ணினதுக்கும் இதுக்கும் சரியா போச்சு" என சமாளித்தாள்

அப்போதே ஒரு முடிவுக்கும் வந்திருந்தான் ஸ்டீவ். மீராவை நெருங்க வேண்டுமென்றால், அவள் தன்னிடம் உரிமையாய் பேச வேண்டுமெனில் இது போல் அவளிடம் பேச்சுக்கு பேச்சு வழக்காட வேண்டுமென...

ஆனால் அதுவே பின்னொரு நாளில் ஒரு விபரீதத்தை விளைவிக்க போவதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை...
                                                                 ********************

இப்படியே பேச்சும் சிரிப்புமாய் நேரம் கரைய கதவு தட்டப்படும் ஒலி கேட்க "ச்சே... அதுக்குள்ள வந்துட்டாங்களா?" என முணுமுணுத்தபடி சென்று கதவு திறந்தான் ஸ்டீவ்

எதிர்பார்த்தது போல் மதுவும் சதீஷ்ம் "ஹாய்" என்றபடி உள்ளே வந்தனர்

மீரா அங்கு இருப்பதை கண்ட சதீஷ் "ஹேய் மீரா... நீ எப்ப வந்த?" என கேட்க

"அ... இப்ப தான்... பத்து நிமிசமாச்சு" என தடுமாறிய குரலில் மீரா கூற, ஏன் பொய் சொல்கிறாள் என புரியாமல் ஸ்டீவ் அவளையே பார்த்தான்

வேண்டுமென்றே அவனை பார்ப்பதை தவிர்த்தாள் மீரா

மீரா சொன்ன பொய்யின் மறைபொருள் என்ன?
அவள் மனதை கொள்ளை கொண்டு விட்டானா ஸ்டீவ்?
விடை - இனி வரும் அத்தியாயங்களில்... 
 
சொன்னஒரு பொய்யில்
சொர்கத்தை கண்டேன்
நமக்கானரகசியம் இதுவென
நயமாய் உரைத்தாயோ!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

...

Thursday, January 20, 2011

Cut Shoeவும் கட்டாத நாயும்...(ஹையோ...ஹையோ...)இந்த தலைப்பை பாத்ததும் "என்னமோ பின் நவீனத்துவ எபக்ட்" போல உங்களுக்கு தோணும்...

 "அன்த சீன் ஏன்ட்டி லேதண்டி" னு தெலுகு சினிமால அடிக்கடி ஒரு டயலாக் வர்ற மாதிரி அப்படி எல்லாம் நீங்க என்னை பத்தி பெருசா நெனச்சுட வேண்டாம் (யாரும் நினைக்கலைங்கறது எனக்கும் தெரியும்... ஆனாலும் இப்படி பில்ட் அப்ல தானே நம்ம வண்டியே ஓடுது... ஹி ஹி)

இந்த நேரத்துல இன்னொரு மேட்டர் சொல்லியே ஆகணும்... அப்ப தான் என் மன பாரம் குறையும்... இந்த பின் நவீனத்துவம்னா சத்தியமா எனக்கு என்னனே தெரியாது... எல்லாரும் சொல்றாங்கன்னு என்னமோ catchy ஆ ஒரு வார்த்தை சிக்குச்சுனு நானும் அடிக்கடி யூஸ் பண்றது தான்... (யாரங்க "இதெல்லாம் ஒரு பொழப்பு" னு கா.தூ எல்லாம் செய்யறது... விடுங்க பாஸ் ப்ளாக்ல இதெல்லாம் சகஜமப்பா... சாதா'ரண'மப்பா...)

இந்த பதிவு இப்ப போடறதுக்கு முக்கிய காரணம், போன வாரம் ஒரு பிரெண்ட் என்கிட்ட கேட்டது தான் "என்ன உன் ப்ளாக் வர வர ரெம்ப சீரியஸ் போர்க்களம் மாதிரி ஆய்டுச்சு... ஒரே செண்டிமெண்டல் கதை கவிதை தான் வருது... நல்லாத்தான் இருக்கு (நிஜமா சொன்னா, நம்புங்க மக்களே), ஆனா ஒரு காமெடி போஸ்ட் போட்டு ரெம்ப நாளாச்சே" னு ரெம்ப பீல் பண்ணி கேட்டா அவ...

எனக்கு அப்படியே கர கரனு கண்ணுல தண்ணி வராத கொற தான்... ஏன்னா, நான் என்ன தான் பீல் பண்ணி எழுதினாலும் நம்மள காமெடி பீஸாவே பாக்குதே இந்த உலகம்னு நெனச்சுட்டு இருக்கறப்ப... "இல்ல இல்ல யு பீல் மீ பீல்"னு சொல்றாப்ல அந்த பிரெண்ட் மெசேஜ் பாத்து...ஹ்ம்ம்... சரி விடுங்க... பிழிஞ்சு காய போட்ட கதை எல்லாம் என்னத்துக்கு இப்ப...

மேற்சொன்ன காரணத்தினால் அந்த நேயர் (!!!) விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவு என்பதை தெரிவித்து கொள்கிறேன்... So, உங்க கொலவெறி எல்லாம் இந்த நேயர்க்கு forward பண்ணிடுங்க... don't kill the messanger...

சரி காமெடி போஸ்ட் போடணும்னு முடிவு பண்ணியாச்சு... பாதி மொக்கைய தேத்தினாலும் மீதி மேட்டர் வேணுமேனு யோசிச்சப்ப தான் புத்தருக்கு போதி மரத்துக்கு கீழ...கொஞ்சம் ஓவரா இருக்கோ... சரி வேண்டாம் விடுங்க... நம்ம லெவலுக்கு யோசிப்போம்... அம்பாசமுதரம் அம்பானிக்கு சூப்பர்மார்க்கெட் ஐடியா தோணின மாதிரி ஒரு விஷயம் பளிச்சுன்னு மின்னலா மனசுல வந்தது...

அது என்னனா, என் ப்ளாக் உலக சரித்தரத்தை (ஒகே ஒகே...) புரட்டி பாத்தப்ப அதிகம் ரசிக்கப்பட்ட போஸ்ட் எல்லாமும் என் சொந்த அனுபவங்கள் தான்... அதுலயும் நான் பல்பு வாங்கி இருந்தாலோ இல்ல கன்னா பின்னானு அடி வாங்கி இருந்தாலோ அந்த பதிவு ரெம்ப பேரால ரசிக்கப்பட்டு இருந்த உண்மை உணர்ந்தேன்

ஹ்ம்ம்... ஒருத்தன் கஷ்டம் ஒருத்தனுக்கு காமெடி... ஹ்ம்ம்... எல்லாம் குளோபல் வார்மிங் தான்... (கலி முத்தி போச்சுனே எத்தன நாளைக்கு தான் சொல்றது...ஹி ஹி)

சரி நம்ம அனுபவத்த சொல்வோம்னு முடிவு பண்ணியாச்சு.... இந்த சின்ன வயசுலேயே நம்ம (என்) வாழ்க்கைல எக்கசக்க அனுபவங்க இருக்கு...எதை சொல்ல எதை விடனு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு நான் எழுதினது தான், ஏழைக்கேத்த எள்ளுரண்டை போல அப்பாவிக்கேத்த ஆப் பாயில் இந்த போஸ்ட்... படிங்க சிரிங்க...(ப்ளீஸ்.......ப்ளீஸ்... சிரிச்சுடுங்க... இல்லேனா நான் அழுதுடுவேன்... அவ்வவ்...)

சரி மேட்டர்க்கு போவோம்...

இது என் வாழ்க்கைல நடந்த ஒரு சம்பவம்... "நடந்தா தான் சம்பவம் நடக்கலைனா சவம்.." என்னங்க நான் சொல்றது (ஆஹா...இதை அப்படியே டைரக்டர் "பேரரசு" கிட்ட சொல்லி இருந்தா அவரோட அடுத்த விஜய் படத்துல பஞ்ச் டயலாக்ஆ யூஸ் பண்ணி என்னையும் அவரோட அரசவை புலவியா சேத்து இருப்பாரே.. இப்படி மேட்டரை லீக் பண்ணிட்டனே... சரி உடுங்க... அததுக்கு ஒரு 'இது' வேணும்... அதென்ன 'இது'ன்னா, அதாங்க 'அது'...)

ஒகே மீ மொக்கை ஸ்டாப் நௌ...

அது என் வாழ்வில் ஒரு பொற்காலம்... அப்படின்னா முரளி வந்து "தஞ்சாவூரு மண்ணு எடுத்து..." சட்டி பானை செய்வாரான்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கறவங்கள தக்குடுகிட்ட சொல்லி அவங்க ஊரு யானை மேல ஏத்தி உட்டுடுவேன் ஆமா சொல்லிட்டேன்...

இங்க ஒரு மனுசி பீல் பண்ணி மேட்டர் சொல்றப்ப குறுக்க மறுக்க பேசிகிட்டு... ம்ம்ம்...

சரி ஏன் பொற்காலம்னு சொன்னேன்னா, அப்ப மூணு முடிச்சு எல்லாம் போடப்படாத காலம்...உடனே, "எது ரஜினி நடிச்ச 'மூணு முடிச்சா' அவ்ளோ ஓல்டா நீ?" னு நம்ம கழக கண்மணிகள் வந்து கும்முவாங்க... so let me make it clear...

இது ரஜினி "மூணு முடிச்சு" இல்ல, ரங்க்ஸ் போட்ட மூணு முடிச்சு...அதாவது "கல்யாணத்துக்கு முன்"... இப்ப மேட்டர் மனசிலாயோ?

அப்போ நான் பி.காம் பைனல் இயர்... "நீ மூணாப்பு கேஸ்னு இல்ல நெனச்சேன்... காலேஜ் எல்லாம் படிச்சயா நீ"னு ஒரு குரல் கேக்குதே... யாரது? வேண்டாம் அப்பறம் நான் "ஜில்லுனு ஒரு கந்தல்..." னு கதை ஆரம்பிச்சுடுவேன் சொல்லிட்டேன்...ஹ்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்...

நான் படிச்சது "Womens காலேஜ்", அதனால பசங்க domination எல்லாம் இல்லாம நாங்களே ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தோம்... (அந்த விவரம் எல்லாம் சொல்லி சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கர எண்ணமில்ல இப்ப). எங்க க்ளாஸ்ல அம்பது பொண்ணுங்க

(உன் ஒருத்தியவே சமாளிக்க முடியலியே..இது போல 50தா... அந்த பிரின்சிபாலுக்கு கோவில் கட்டி கும்பிடனும்... - மைண்ட்வாய்ஸ்)

அதுல எங்க கேங் ஒரு பெரிய கேங்... பதினெட்டு பேரு... பதினெட்டு பட்டிக்கு representatives ரேஞ்சுக்கு ஒண்ணு ஒண்ணும் செம அலப்பறை கேஸ்... அதாவது, என்னை தவிர...நான் அப்பவே அப்பாவி தான்...

"நல்லா சேந்து இருக்குதுக கேங்"னு எங்க HOD அடிக்கடி டென்ஷன் ஆவாங்க... அவ்ளோ நல்ல புள்ளைங்க நாங்க எல்லாம்... ஹி ஹி ஹி

காலேஜ் பைனல் இயர் க்ளாஸ் ஆரம்பிச்சு ஒரு நாலஞ்சு நாள் தான் ஆகி இருந்தது... அன்னிக்கி என்னோட "ஏப்பி பர்த்டே"... ஆஹா இன்னிக்கி நம்ம பிரெண்ட்ஸ் என்ன ரகளை பண்ண போறாங்களோனு கலர் கலர் கனவுகளோட க்ளாஸ்க்கு போனேன்...

 பொதுவா வாட்ச்மேன் எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே காலேஜ் வாசல்ல நிக்கற பொறுப்புள்ள அம்மணி தான் நான்...  காலேஜ்க்கு லேட்டா எல்லாம் போற பழக்கம் இல்ல... யாரு நம்ப போறீங்க? ஆனா சரித்தரம் உண்மைய தான் பதிவு செஞ்சுருக்கு யு சி...

அன்னிக்கி பொறந்த நாள் ஸ்பெஷலா எங்க அம்மா எனக்கு பிடிக்கும்னு கேசரி, வடை, பூரி, மசால்னு சூப்பர் மெனுவா செஞ்சு இருக்கவும் ஒரு புடி புடிச்சுட்டு கிளம்ப நேரமாகிடுச்சு...

பூரி / கேசரி முக்கியமா Cost Accounting க்ளாஸ் முக்கியமான்னு என் மனசுக்குள்ள சாலமன் பாப்பையா எல்லாம் இல்லாமையே பட்டிமன்றம் நடத்தினப்ப பூரி / கேசரி வென்றது என் குற்றமில்லை... என் நாக்கின் குற்றம், அறுசுவையா சமைச்ச என் அம்மாவின் குற்றம், அம்மா மனசை புண்படுத்த மனசில்லாத ஒரு பேதை (நானே) மனதின் குற்றம்...(ஸ்ஸ்ப்பா...பூரி ப்ளீஸ்... ச்சே... சோடா ப்ளீஸ்...)

நான் வர்றப்ப மேடம் அட்டெண்டென்ஸ் எடுத்துட்டு இருந்தாங்க... அநியாயத்துக்கு நம்ம பேரு தான் மொதல்லே வந்துடுமே (நண்பர்களே, இந்த காரணத்துக்காகவாச்சும் புள்ளைங்க பேரை பின்னாடி alphabet வர்ற மாதிரி வெயுங்க இனி மேலாச்சும்... இல்லேனா பேரு சொல்ற புள்ள கன்னா பின்னானு திட்டும் உங்கள)

ம்ம்... எனக்கு ஆப்சென்ட் போட்டாச்சு ஏற்கனவே...ஆப்சென்ட் தான் போட்டாச்சே பேசாமே திரும்பி வீட்டுக்கு போய் இன்னும் ரெண்டும் வடை / பூரிய உள்ள தள்ளும் வேலைய செஞ்சா என்னனு ஐடியா குடுத்த என் idle பிரைன்ஐ தட்டி அடக்கினேன்... 

"Excuse me mam ?" நான் பாவமா க்ளாஸ் வாசல்ல நிக்க, மேடம் திரும்பியே பாக்கல

உள்ள இருந்து அஞ்சாவது பட்டிக்கு சொந்தக்காரி (அதாங்க அந்த பதினெட்டு வானரத்துல ஒண்ணு) "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி"னு பல்ல காட்டி சிரிச்சா... "இருக்குடி மவளே உனக்கு இன்னிக்கி" னு மனசுல நெனச்சுட்டு மேடம்க்கு நாம கூப்ட்டது கேக்கல போலனு நெனச்சுட்டு "excuse me mam ?" னேன் மறுபடியும்...

மேடம் திரும்பி "மொதலே கேட்டது... அட்டெண்டன்ஸ் முடிக்கற வரை நின்னா தேஞ்சு போய்ட மாட்டே" னு ஒரு பர்த்டே ஸ்பெஷல் பல்பு குடுத்தாங்க... உள்ள இருந்து எட்டாவது பட்டி ஓனர் இப்ப "தேவையா இது தேவையா" னு வாயசச்சு வெறுப்பேத்தினா...

அப்புறம் ஒரு வழியா அட்டெண்டன்ஸ் எடுத்து முடிச்சதும் மேடம் "ஏன் லேட்டு?" னு ஆரம்பிச்சாங்க பஞ்சாயத்த...

நாம என்ன சொல்லுவோம், வழக்கம் போல "சாரி மாம் லேட் ஆய்டுச்சு" னு அப்பாவியா ஒரு லுக் விட்டேன், ஆனா "இதை போல எத்தன பாத்து இருக்கேன்"னு ஒரு லுக் விட்டாங்க அந்த மேடம்...ஹ்ம்ம்...

"லேட் ஆய்டுச்சுன்னு எனக்கும் தெரியும்...அதான் ஏன்னு கேட்டேன்" மறுபடியும் மேடம், அன்னிக்கி என்ன சண்டையோ வீட்டுலனு அவங்க ரங்கமணிய மனசார திட்டினேன் அந்த நிமிஷம்

இப்ப போல ப்ளாக் எழுதி அனுபவம் இருந்துருந்தா எதாச்சும் மொக்கை அடிச்சு தப்பிச்சு இருப்பேன்...ஹ்ம்ம்... அதான் இல்லையே, நம்ம பாஸ்டன் நாட்டமை டெம்ப்ளேட் கமெண்ட் போடற மாதிரி ஒரு டயலாக் விட்டேன் "பஸ் லேட் மேடம்" னேன், பின்ன கேசரி பூரி சாப்ட்டு லேட் ஆய்டுச்சுனு சபைல சொல்லவா முடியும்... ஹ்ம்ம்...

"நீ பஸ்க்கு லேட்டா வந்தேன்னு சொல்லு" னு மொறைசாங்க மேடம்... இப்படி எதாச்சும் இன்னும் ரெண்டு திட்டி விட்டுருந்தா கூட பரவால்ல, அடுத்து ஒரு டயலாக் சொன்னாங்க பாருங்க, அதான் எனக்கு பயங்கர பீலிங் ஆய்டுச்சு...

"உன்னை மாதிரி நல்லா படிக்கற (அட நம்புங்கப்பா) பொண்ணுகளே இப்படி பொறுப்பில்லாம க்ளாஸ்க்கு லேட்டா வந்தா என்ன அர்த்தம்?" னு மேடம் கேக்கவும் நான் அப்படியே கந்தலாகி கசிந்துருகி நிராயுதபாணியா நின்னேன்... (கொஞ்சம் ஓவர் பீலிங்கா இருக்கோ... சரி உடுங்க...)

இன்னும் சரியா சொல்லணும்னா, "நீங்க நல்லவரா கெட்டவரா"னு நாயகன் படத்துல கேக்கறப்ப நம்ம தலைவர் ஒரு expression குடுப்பாரே...அதே அதே... "அ...ஆ...ஆஆஆ....."னு வாய்ஸ் மட்டும் தான் இல்ல...  மியுட் பண்ணிட்டேன்... மேடம் ஆம்புலன்ஸ் கூப்ட்டுடா என்ன பண்றதுன்னு ஒரு பயம் தான்...

அந்த பதினெட்டு பரதேசில ஒன்னாச்சும் "இன்னிக்கி அவ பர்த்டே மேடம்"னு சொல்லி ஒரு அனுதாப அலை வீச செய்யுமானு நானும் எதிர்ப்பார்போட Hutch நாய்க்குட்டிய விடவும் விசுவாசமா ஒரு லுக்கு விட்டேன், ஆனா பழைய பகை எல்லாம் மனசுல வெச்சுட்டு மொறைக்கற சரத்குமார் சரண்ராஜ் மாதிரியே லுக்கு விட்டாளுக ஒரு ஒருத்தியும்

கடைசீல மேடமே மனசெறங்கி வந்து "சரி சரி...உள்ள வா..."னு மருமகளை அழைக்கும் பாசக்காரா மாமியாரா கூப்ட்டாங்க... நானும் வலது கால் எடுத்து வெச்சு என்ட்ரி குடுத்தேன்...

"மேடம் அட்டெண்டன்ஸ்..." னு நான் இழுக்கவும்... ஒரு மொறை மொறைச்சுட்டு "இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல... போடறேன் போ..." னாங்க... நான் அட்டெண்டன்ஸ்ல அவ்ளோ கவனமா இருந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு... அதை அப்புறமா சொல்றேன்...

க்ளாஸ்ல மூணு row ல பெஞ்சஸ் போட்டு இருக்கும்... அதுல ஜன்னல் பக்கத்துல இருக்கற முதல் row பூராவும் எங்க பதினெட்டு பட்டி ஆக்ரமிப்பு தான்... (வேடிக்கை பாக்க வசதின்னு மொத நாளே துண்டு போட்ட கேசுகலாச்சே... )

நான் எப்பவும் மொதல் பெஞ்சுல தான் இருப்பேன்... (கண்ணப்ப நாயனார் பிரச்சன தான் அதுக்கு காரணம்ங்கறத இப்ப வரைக்கும் சீக்ரட்டாவே மெயின்டீன் பண்ணிட்டு இருக்கேன்...ஹி ஹி ஹி). ஆனா மத்தவங்கள பொறுத்த வரை "படிப்ஸ்..." (ஹி ஹி ஹி... இந்த உலகம் இன்னுமா நம்மள நம்புது?)

போய் பெஞ்ச்ல உக்காந்ததும் பக்கத்துல இருந்தவகிட்ட "ஏண்டி நாயே... சும்மா முஸ்தபா முஸ்தபானு காலேஜ் டே பங்சன்ல கைய புடிச்சுட்டு வலிப்பு வந்தவ மாதிரி ஆடினா போதுமா... எதாச்சும் சொல்லி ஹெல்ப் பண்ணி இருக்கலாம்ல... நீங்கெல்லாம்னு பிரெண்ட்ஸ்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு" ஒரு பேப்பர்ல எழுதி (மேடம் முன்னாடி நிக்கறாங்களே) பக்கத்துல இருந்தவகிட்ட குடுத்தேன்...

அதுக்கு அவ "சாரி"னு சொல்லி இருந்தாலோ இல்ல வேற எதுனா திட்டி இருந்தாகூடா பரவாலைங்க, என்ன கேட்டா தெரியுமா அந்த நயவஞ்சகி...

என்ன கேட்டானு அடுத்த போஸ்ட்ல சொல்றேன்... இப்பவே பதிவு ரெம்ப பெருசா போய்டுச்சு... சும்மாவே திட்டுவீங்க... இப்படியே எழுதிட்டு இருந்தா அப்புறம் "பெரிய பதிவு பெரியாத்தா"னு நம்ம பேரு சரித்தரத்துல வந்துடும்...சோ மீ ஸ்டாப் நௌ...சி யு நெக்ஸ்ட் வீக்... பை பை...

பின்னூசி நோட்ஸ்:
"Cut Shoe வும் கட்டாத நாயும்..." தலைப்புக்கும் நீ போட்ட மொக்கைக்கும் என்ன சம்மந்தம்னு நாக்கு மேல பல்லு போட்டு நாலு பேராச்சும் கேக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன் "அந்த சம்மந்தம் எள்ளு எண்ணை எல்லாம் இனி தான் வரும்... பதிவு பெருசா போனதால தொடரும் போட்டுட்டேன்... ரைட்டோ?"

Disclaimer:
ஒரு விஷயம்... இந்த பதிவுல வர்ற "குளோபல் வார்மிங்" நான் ஏற்கனவே டுபுக்கு சார் ப்ளாக்ல ஒரு கமெண்ட்ல யூஸ் பண்ணி இருக்கேன் & "அப்பாவிக்கேத்த ஆப் பாயில்" என்னோட ப்ளாக்லையே யாருக்கோ கமெண்ட்க்கு பதில் போடறப்ப யூஸ் பண்ணி இருக்கேன். இதை எல்லாம் ஏன் இப்ப சொல்லி உயிர வாங்கறேனு நீங்க பொறுமையா (!!) கேப்பீங்க

எதுக்குன்னா யாரும் "ஏற்கனவே எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே... இந்த அப்பாவி காப்பி அடிச்சுட்டாளோ" னு தப்பா கிப்பா நினைச்சுட கூடாது பாருங்க... அதுக்குத்தான் ஒரு முன்னெச்சரிக்கை முனியம்மாவா சொல்லிட்டேன். (நீ இவ்ளோ நல்லவளானு யாரோ பீல் பண்ற மாதிரி இருக்கே... விடுங்க பாஸ்... நமக்குள்ள என்ன... ஹி ஹி)

அது என்னமோ மத்தவங்க ப்ளாக்ல கமெண்ட் போடறப்ப கற்பனை பொங்கி வழியும், பஞ்ச் பஞ்ச்ஆ உதிரும். நாம ஒரு போஸ்ட் போடலாம்னு உக்காந்தா உகாண்டா நாட்டு பிரதமர் பேரு தான் வருது... ஹ்ம்ம்... எல்லாம் குளோபல் வார்மிங்... (நோ டென்ஷன்... இன்னொரு வாட்டி இதை யூஸ் பண்ண மாட்டேன்... ஹா ஹா ஹா)

ஒகேஸ், டாட்டாஸ், பை பைஸ், சி யுஸ்............

மைண்ட்வாய்ஸ் - இருங்க இருங்க யாரும் போகாதீங்க... பதிவு அப்பவே முடிஞ்சதுன்னு உங்கள போலத்தான் நானும் நிம்மதி பெருமூச்சு விட்டேன்... ஆனா பின்னூசி நோட்ஸ்னு ஒரு மொக்கை போட்டா, அப்புறம் disclaimer... அடுத்து dinosaur னு எதாச்சும் போட்டாலும் போடுவா... எதுக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணி பாப்போம்...

அப்பாவி - ஹையோ ஹையோ...

(மொக்கை தொடரும்...)

Tuesday, January 18, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 4)

இப்படி ஜில்லுனு படம் போடலாமேன்னு ஐடியா குடுத்த கிருஷ்ணவேணிக்கு Special தேங்க்ஸ்

பகுதி 1   பகுதி 2   பகுதி 3

அன்று இரவு முழுக்க ஸ்டீவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை

திரும்ப திரும்ப "கோபம் சந்தோஷம் எதுனாலும் இவன்கிட்ட அப்படியே காட்டிடுவேன்" என அவள் கூறியதும் "நான் வந்தா தான் கனடா போவேன்னு அடம் பண்ணி சதி பண்ணி என்னை இங்க வர வெச்சது இவ தான்" என அவன் கூறியதுமே காதில் ஒலித்து தூக்கத்தை விரட்டியது

அவனிடம் மட்டுமே உணர்வுகளை மறைக்காமல் இயல்பாய் இருப்பேன் என அவள் கூறுவதன் அர்த்தம் என்ன? தான் வேறு அவன் வேறல்ல என சொல்லாமல் சொல்கிறாளோ

அவன் வந்தால் தான் இங்கு வருவேன் என்றாளாமே? அப்படி பிரிந்து இருக்க முடியாத உறவா?

ச்சே... என்ன அவஸ்தை இது? மனதுக்கு பிடித்த பெண்ணையும் கண் முன் காட்டி கூடவே இத்தனை சிக்கல்களுமா என தூக்கம் தொலைத்தான் ஸ்டீவ்

அவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன என அறியும் வரை தனக்கு இனி உறக்கம் இல்லை என நினைத்தான் ஸ்டீவ்

ஆனால் தன் மனதில் இது தான் என தீர்மானமாய் எதுவும் புரியாத போது மற்றவர்களின் உறவில் தலையிட என்ன உரிமை இருக்கிறது என ஒரு மனம் வாதம் செய்தது

இப்படி முன்னுக்கு பின் முரணாய் சிந்தித்து மனம் குழம்பியது தான் மிச்சமானது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான்

தான் இயல்பாய் இருப்பது எனவும் நடப்பது நடக்கட்டும் எனவும் தீர்மானித்தான்

_______________________________

நாட்கள் வேகமாய் நகர்ந்தன. வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகி இருந்தது. மீரா, மது, ஸ்டீவ், சதீஷ் நால்வரும் MBA வில் ஒரே பிரிவு பாடத்தை எடுத்து இருந்ததால் வகுப்பிலும் வெளியிலும் ஒன்றாகவே இருந்தனர்

குறுகிய நாளிலேயே அவர்களுக்குள் நெருங்கிய நட்பு உருவாகி இருந்தது. அவர்களில் ஒருவரை பார்த்தால் மற்ற மூவரையும் விசாரிக்கும் அளவுக்கு அவர்கள் நட்பு வகுப்பில் பிரபலமாகி இருந்தது

ஸ்டீவ் மீராவிடம் தான் அதிகம் ஈர்க்கப்படுவதை உணர்ந்தான், ஆனால் அதை தடுக்க எந்த முயற்சியும் செய்தானில்லை

சதீஷிடம் வன்மம் காட்டாமல் நட்பாய் இருக்க முடிந்ததே பெரிய சாதனையாய் தோன்றியது அவனுக்கு

அன்று வெள்ளிகிழமை, வகுப்புகள் முடிய மாணவர்கள் எல்லாம் அன்று இரவு எங்கு செல்வது, வார இறுதியில் என்ன செய்வது என சந்தோசமாய் திட்டமிட்டபடி நேரம் நகர்ந்து கொண்டு இருந்தது

"மூவி போலாமா எல்லாரும்?" என ஆரம்பித்தான் சதீஷ்

"ஐய... அது போர்" என்றாள் மீரா உடனேயே

"ஏய்... நான் என்ன படம்னே சொல்லல அதுக்குள்ள போர்னு சொல்ற... கொழுப்பு தான" என்றான் சதீஷ் கோபமாய்

"எனக்கு மூணு மணி நேரம் தியேட்டர்ல அடைஞ்சு இருக்கறது புடிக்காதுன்னு உனக்கு தெரியுமல்ல... அப்புறம் ஏன் கேட்டே?" என்றாள் அவளும் விடாமல்

வழக்கம் போல் மீரா அறியாமல் அவள் அபிநயத்தை ரசித்து கொண்டிருந்த ஸ்டீவ், விட்டால் இவர்கள் இருவரும் உரிமையுடன் சண்டை போட்டு தன் மனதை நோக செய்வார்கள் என்பதை கொஞ்ச நாள் அனுபவத்திலேயே உணர்ந்தவனாய் "அப்ப நான் ஒரு ஐடியா சொல்றேன்" என்றான் ஸ்டீவ்

"என்ன?" என்றனர் மற்ற மூவரும் ஒரே குரலில்

"விண்ணை தாண்டி வருவாயா ஒரிஜினல் DVD கிடைச்சது...எல்லாரும் என் அபார்ட்மென்ட் போய் பாக்கலாமா?" என ஸ்டீவ் முடிக்கும் முன்

"அது ரெம்ப ஓல்ட் மூவி...நான் பாத்தாச்சு" என சதீஷ் கூறியது காதிலேயே விழாதது போல்

"நீ பாத்துட்டியா மீரா?" என கேட்டான் ஸ்டீவ், அவள் பாத்திருக்கக்கூடாது என வேண்டியபடியே

"இல்ல ஸ்டீவ்... ஒரிஜினல் DVD வரட்டும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" என்றாள் உற்சாகமாய்

அவள் உற்சாகத்தை கண்டதும் அந்த கணம் ஸ்டீவ் விண்ணை தாண்டாமல் இருந்தது தான் அதிசயம் என அவனுக்கே தோன்றியது

"அப்ப சரி... பிளான் fixed ... நீ என்ன மது சொல்ற?" என ஸ்டீவ் திட்டமிட துவங்கினான்

"ஹலோ, நான் ஒருத்தன் பேசறது காதுல விழுதா இல்லையா உனக்கு?" என கோபமானான் சதீஷ்

"கூல் சதீஷ்... நம்ம த்ரிஷாவுக்காக இன்னொருவாட்டி அதை நீ பாக்க மாட்டியா என்ன?"

"நம்ம த்ரிஷாவா? டேய் ஸ்டீவ்... ஒரு தீவிர அனுஷ்கா ரசிகன பாத்து... என்ன வார்த்த சொன்ன நீ? ஆனாலும் ஒரு இத்தாலிக்காரன் த்ரிஷாவ  எல்லாம் ஞாபகம் வெச்சுக்கற அளவுக்கு தமிழ் சினிமா பாக்கறது கொஞ்சம் ஓவர்" என டென்ஷன் ஆனான் சதீஷ்

"என்ன மது என்ன யோசனை?" என ஸ்டீவ் பதட்டமானான், எப்படியும் இன்று சற்று அதிக நேரம் மீராவுடன் இருக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாதவனாய்

"இல்ல ஸ்டீவ்...அம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களான்னு..." என தயங்க

"டோன்ட் வொர்ரி மது... ஆண்ட்டிகிட்ட நான் பர்மிசன் வாங்கறேன்" என்றான் ஸ்டீவ்

ஸ்டீவ், மதுவிற்கு மட்டுமல்ல அவள் குடும்பத்தாருக்குமே ஐந்து வருடமாய் பழக்கமானவன் தான். உண்மையை மறைத்து பேசாத குணமும், கள்ளமில்லாமல் பழகும் தன்மையும் மதுவின் பெற்றோரிடம் ஸ்டீவ் நம்பிக்கைக்கு உரியவனாய் இருந்தான்

சொன்னது போல் மதுவின் அன்னையிடம் பத்து மணிக்குள் வீட்டிலே கொண்டு வந்து சேர்ப்பதாய் கூறி சம்மதம் வாங்கினான்

அதன் பின் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பாதவன் போல் செயல்பட்டான் ஸ்டீவ், சற்று நேரத்திலேயே நால்வரும் ஸ்டீவின் அபார்ட்மென்ட்ல் இருந்தனர்

அன்று தான் முதல் முறை ஸ்டீவின் அபார்ட்மென்ட் வருகிறாள் மீரா

"வாவ்... பேச்சிலர் ரூம் மாதிரி இல்ல...ரெம்ப நீட்டா வெச்சுருக்க ஸ்டீவ்" என்று மீரா புகழ

"தேங்க்ஸ் மீரா" என ஸ்டீவ் உற்சாகமானான்

"சில பேரு மாதிரி உள்ளே போகவே பயபட்ற மாதிரி ரூம் இல்ல உன்னுது" என்றாள் சதீஷை ஓரக்கண்ணால் பார்த்தவாறே

"ஏய்... திட்றதுன்னா நேரடியா திட்டு...அதென்ன ஓரப் பார்வை" என சீண்டினான் சதீஷ்

"வெவ்வவவ...பே...லூசு...." என்றாள் மீரா வேண்டுமென்றே அவனை வம்பிழுக்கும் தோரணையுடன்

இதற்கு மேல் இவர்களிடம் நின்றால் இவர்களின் உரிமையான ரகளையில் தன் பொறுமை போய்விடும் என  ஏதோ வேலை போல் பாவனையுடன் அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த சமையல் திட்டின் அருகில் சென்று நின்றான் ஸ்டீவ்

மது பால்கனியில் நின்று நகரத்தின் அழகை ரசித்து கொண்டிருந்தாள், அவளுக்கு உயரத்தில் இருந்து நகரத்தை பார்ப்பது எப்போதும் விருப்பம்

இப்போது மீரா சதீஷ் மட்டுமிருக்க "ஏய் மீரா... என்ன அதிசியமா? ஊர்லையே பிரெண்ட்ஸ் யார் வீட்டுக்கும் அவ்ளோ சீக்கரம் வர மாட்டியே...இன்னிக்கி என்ன?" என சன்ன குரலில் கேட்டான் சதீஷ்

அவன் கேள்வி புரிந்தவளாய் "சும்மா தான் சதீஷ்...just for a change" என்றாள் அவளும் மெல்லிய குரலில்

ஆனால் இவர்களின் சம்பாஷனை தெளிவாய் ஸ்டீவின் காதில் விழுந்தது

"யார் வீட்டுக்கும் செல்பவள் இல்லையாமே, தான் அழைத்ததும் மறுக்காமல் வருகிறாள் என்றால்... " என்ற நினைவே பறப்பது போல் இருந்தது அவனுக்கு

இந்த நிமிட சந்தோசத்திற்கு காரணமான சதீஷ் மீது முன்பிருந்த கோபமெல்லாம் காணாமல் போனது

சற்று நேரம் கழித்து மது அழைக்கும் குரல் கேட்க "என்ன மது?" என்றான்  ஸ்டீவ்

"என்னவா?  படம் போட போறயா இல்லையா?" என் கேலி செய்தாள்

"இதோ போடறேன்... அதுக்கு முன்னாடி...லெட்ஸ் ஆர்டர் பீட்சா... any preferences?" என மூவரையும் பார்த்து பொதுவாய் கேட்க

"எதுக்கு ஆர்டர் பண்ணனும்... மணி அஞ்சு தானே ஆச்சு... படம் பாத்துட்டு நாமளே சமைக்கலாமே" என்றாள் மீரா

"அம்மா தாயே... ஆள உடு... இதை நீ மொதலே சொல்லி இருந்தா நான் இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்" என்றான் சதீஷ்

நிஜமான பயம் சதீஷின் கண்களில் தெரிய, "அவ்ளோ மோசமா சமைப்பாளா மீரா?" என கேட்டான் ஸ்டீவ் அவள் முறைத்ததை ரசித்தவாறே, அதுவே அவள் தன்னை உரிமையாய் பார்க்கும் முதல் பார்வை என சிலாகித்தான்

"You too Steve...very bad...நான் போறேன்... உன் சினிமாவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்" என மீரா முகம் திருப்ப

"ஏய் ஏய்...சாரி மீரா... ஜஸ்ட் கிட்டிங்... நீயே குக் பண்ணு இன்னைக்கி... எப்படி இருந்தாலும் நான் சாப்பிடறேன்... ஒகே" என ஸ்டீவ் கூற, சத்தமாய் சிரித்தான் சதீஷ்

"எதுக்கு லூசு சிரிக்கற இப்ப?" என மீரா அவனை அடிக்க கை ஒங்க

"அவன் சொன்னத கேட்டியா மீரா? என்னமோ மரண வாக்குமூலம் மாதிரி....ஹா ஹா ஹா... எப்படி இருந்தாலும் சாப்பிடறேன்....ஹா ஹா அஹ" என சதீஷ் சிரிக்க அதற்கு மேல் அடக்க மாட்டாமல் ஸ்டீவ் மது இருவரும் கூட சிரிக்க

"All go to hell..." என கூறிவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தாள் மீரா

"ஏய்...என்ன மீரா இது? இதுக்கு போய் டென்ஷனா? வா... வந்து கிட்சன்ல பாரு.. வேற க்ராசரி எதுவும் வாங்கனுமா சொல்லு...ப்ளீஸ் மீரா" என ஸ்டீவ் அழைக்க அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க மனமின்றி எழுந்து வந்தாள் மீரா

"என் அருமை புரியாதவங்களுக்கு நான் சமைக்க மாட்டேன்...அந்த காஞ்ச ரொட்டி பீட்சாவே ஆர்டர் பண்ணிகோங்க" என சதீஷை பார்த்து கோபமாய் கூறி விட்டு சினிமா பார்க்க தயார் என்பது போல் சோபாவில் சென்று அமர்ந்தாள் மீரா

"அப்பாடா...இன்னிக்கி என் ராசி பலன் என்னனு பாக்கணும்.... அநேகமா கண்டம் விலகியதுனு இருக்கும்னு நினைக்கிறேன்" என சதீஷ் கூற சோபாவில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள் மீரா

"ஒகே ஒகே...கூல் டௌன்... ஏய் ஸ்டீவ் நீ சினிமா போடு... இல்லேனா இங்க ஒரு டெர்ரர் சினிமா லைவா ஓடும் போல இருக்கு" என எச்சரித்தாள் மது

ஒருவழியாய் "விண்ணை தாண்டி வருவாயா" வந்தது, சற்று நேரத்தில் ஆர்டர் செய்த பீட்சாவும் வந்தது. சினிமா ஸ்வாரஷ்யத்தில் உண்ணவும் மறந்தனர் நால்வரும்

காதல் பொங்கும் உணர்ச்சி மயமான காட்சி ஒன்றின் போது, தன்னை யாரோ உற்று நோக்குவது போல் உள்ளுணர்வு தோன்ற மீரா அந்த திசையில் பார்க்க, ஸ்டீவ் சட்டென பார்வையை விலக்கினான்

மீராவோ, ஏன் பார்த்தான் என குழம்பினாள்? அவன் எதேச்சையாய் தான் பார்த்தானோ, தான் தான் குழப்பி கொள்கிறேனோ என நினைத்தாள்

இது எதுவும் அறியாமல் சதீஷும் மதுவும் சினிமாவில் லயித்து இருந்தனர்

படம் முடிந்து சற்று நேர அரட்டைக்கு பின் கிளம்ப ஆயுத்தமானார்கள்

ஸ்டீவ் வேண்டுமென்றே முதலில் சதீஷை அவனிடத்தில் இறக்கிவிட்டு, பின் மதுவின் வீட்டிற்கு சென்றவன் இறுதியாய் மீராவை அவளிடத்திற்கு விட சென்றான்

சற்று நேரமேனும் அவளுடன் தனியே இருக்க அவன் மனம் விரும்பியது, ஆனால் தனியே விடப்பட்டதும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை

அவள் இறங்கும் இடமும் வந்தது, அதற்குள் வந்துவிட்டதே என கவலையானான் ஸ்டீவ்

அவள் இறங்க தானும் இறங்கி நின்றான். "தேங்க்ஸ் மீரா" என்றான்

"எதுக்கு?" என அவள் சிரிக்க

"இந்த சிரிப்புக்கு தான்" என சொல்ல தோன்றிய மனதை அடக்கி "நான் கூப்டதும் எங்க வீட்டுக்கு வந்ததுக்கு"

"இட்ஸ் ஒகே... நல்ல மூவி...தேங்க்ஸ் உனக்கு தான் ஸ்டீவ்"

"அதுக்கு தேங்க்ஸ் நீ டைரக்டர்க்கு தான் சொல்லணும்" என அவன் கூற அவள் அழகாய் சிரித்தாள்

"சரி...குட்நைட்" என அவள் கை அசைக்க

"ஏன் தூக்கம் வருதா?" என பேச்சை வளர்த்தான்

"இல்ல... லேட் ஆச்சே..." என்றாள்

"ம்ம்ம்...." என்றவனுக்கு அவளை சீண்டி பார்க்கும் ஆசை வந்தது, அந்த நினைவோடு ஒரு சிரிப்பு வெளிப்பட

"என்ன?" என்றாள் அவனுக்கு சிரிப்புக்கு விளக்கம் கேட்பது போல்

"ம்...இல்ல... நீ நெஜமாவே அவ்ளோ மோசமா குக் பண்ணுவியானு கேக்கலாம்னு நெனச்சேன்" என அவன் குறும்பாய் புன்னகைக்க

"அதுக்கு என்ன சிரிப்பு வேண்டி இருக்கு?" என முறைத்தாள்

"அப்போ தானே உன்னோட இந்த கோபத்த ரசிக்க முடியும்" என சொல்லும் தைரியமின்றி "ஹா ஹா ஹா" என வேண்டுமென்றே சிரித்தான்

"பேசாத போ....all men are same" என்றவள் "குட்நைட்" என ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு உள்ளே சென்றாள்

அவள் சென்ற பின்னும் சிறிது நேரம் அங்கிருந்து அசையவில்லை அவன். ஏதோ அவள் விட்டு சென்ற சிரிப்பை காவல் காப்பவன் போல் அவன் போன திசையே பார்த்து கொண்டு நின்றிருந்தான்

அந்த நாள் அவன் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் என தோன்றியது அவனுக்கு. சிறிதேனும் தன்னிடம் அவள் உரிமையுடன் உரையாடிய நாள் என எண்ணி எண்ணி மகிழ்ந்தான்

உன்கண்களை ரசிக்கவே
உனைகோபமுற தூண்டினேனடி
உன்கன்னக்குழி காணவே
உனைநகைக்க செய்தேனடி
உன்பழிக்கும் அதரத்தைபார்க்கவே
உனைசீண்டி பார்த்தேனடி
உன்உரிமையை அனுபவிக்கவே
உயிரையும் தருவேனடி!!!

அப்பாவி அப்டேட்:
கதை ஆமை வேகம் போகுதுன்னு சிலர் (ஒகே ஒகே பலர்... ha ha) அபிப்ராயம் சொல்லி இருந்தீங்க போன பதிவுல... நானும் அதை மறுக்கல... ஆனா இதை விட வேகம் போனா எதார்த்தமா இருக்காதுன்னு தோணுது... ஓவர் சினிமாத்தனமா இருக்குமோனு இருக்கு...

மொதல் சீன்ல சந்திச்சு, ரெண்டாவது சீன்ல மேரா பியார்னு சொல்லி,  மூணாவது சீன்ல டூயட் பாடி, நாலாவது சீன்ல வில்லன் என்ட்ரி, அஞ்சாவது சீன் கிளைமாக்ஸ், ஆறாவது சீன் வணக்கம் போட்டா நல்லாவா  இருக்கும் நீங்களே சொல்லுங்க... I may be wrong too...

ஆனா இனி கதை கொஞ்சம் வேகம் பிடிக்கும் அது மட்டும் சொல்ல முடியும் இப்போ

சரி இனி... உங்க கருத்த நீங்க சொல்லுங்க... I will improvise appropriately... Many thanks everyone for reading it thru...
 
(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

அடுத்த பகுதி படிக்க...


...

Thursday, January 13, 2011

அனல் மேலே பனித்துளி... (பொங்கல் சிறப்பு சிறுகதை) - 100 வது பதிவு


முன்குறிப்பு:
இது என்னோட 100 வது பதிவு... தொடர்ந்து என் பக்கத்தை படித்து வரும் உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த கதையில் வரும் கொங்கு கிராமத்து பேச்சு வழக்கு எனக்கு பெரிதாய் பரிச்சயம் இல்லை... இது போன்ற கிராமத்தில் நான் வாழ்ந்தவளும் இல்லை... கேள்வி ஞானமும் படித்ததும் தான்... தவறிருந்தால் சுட்டி காட்டுங்கள்... நன்றி

இனி கதை....

அன்று மிகவும் உற்சாகமாய் இருந்தான் சங்கர். ஒரு மாத இரவு பகல் பாராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியில் மிதந்து கொண்டிருந்தான்

அந்த பெரிய கிளயன்ட்டின் ப்ராஜெக்ட் ஒகே ஆனதில் தன் டீமில் நிறைய பேரின் வேலையை காப்பாற்றிய நிம்மதியில் இருந்தான்

அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாணத்தின் பணம் படைத்தவர்கள் வசிக்கும் இடத்தில், அரை ஏக்கரில் மாளிகையாய்  அமைந்த தன் வீட்டை நெருங்கும் போதே, அந்த மாற்றம் உறுத்தியது சங்கருக்கு

கார் சத்தம் கேட்டதும் garage கதவு திறந்து முன் வாசலில் வந்து நிற்கும் மனைவியை காணோம். காரை விட்டு இறங்கும் முன் "டாடி" என தாவும் மகளையும் காணோம்

காலிங் பெல் அடிக்கவும் வீட்டில் வேலை செய்யும் சீனப்பெண் வந்து கதவை திறந்தாள்

"Did Preethi and her mom went out?" என கேட்க

"No... up...room" என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்க முயன்றாள். அதை கேட்டதும் சங்கரின் முகத்தில் சற்று முன் இருந்த உற்சாகம் காணாமல் போனது. உள்ளே இருந்து கொண்டே ஏன் தான் வந்தும் கீழே வரவில்லை என குழம்பினான்

வேகமாய் படியேறினான். ஒவ்வொரு அறையாய் தேடியவன், வெளிப்புற terrace பெஞ்ச்ல் மனைவியும் மகளும் ஆளுக்கு ஒரு புத்தகத்தில் புதைந்திருப்பதை பார்த்ததும்

"ஹலோ மை ஸ்வீட் ஏஞ்செல்ஸ்" என இருவருக்கும் நடுவில் சென்று அமர்ந்தான்

மகள் அவனை விட்டு விலகி அமர "என்னாச்சுடி செல்லம்... அம்மா திட்டினாளா?" எனவும்

"வேண்டாம்... என்னை வம்பிளுக்காதீங்க சொல்லிட்டேன்" என்றாள் அவன் மனைவி செல்வி

"மம்மி...டாடிகிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னேன்ல... ஏன் பேசற?" என சீறினாள் சங்கரின் ஐந்து வயது செல்லம் ப்ரீத்தி

"ஏய் குட்டி வாலு... என்னடி அத்தன கோபம் இப்போ?" என வலுக்கட்டாயமாய் அவளை தூக்கி மடியில் இருத்த முயன்றான்,  திமிறினாள் ப்ரீத்தி

"என்ன செல்வி நீயாச்சும் சொல்லேன்... என்னாச்சு?" என பாவமாய் சங்கர் கேட்க அதற்கு மேல் செல்வியால் மௌனமாய் இருக்க இயலவில்லை

"இன்னிக்கி ப்ரீத்தி ஸ்கூல் chirstmas concert க்கு வரேன்னு சொன்னீங்கல்ல... பாவம் கொழந்த எவ்ளோ எதிர்பாத்துட்டு இருந்தா தெரியுமா? நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு மிஸ் Maddy கிட்ட கேட்டு அவ ப்ரோக்ராம் கூட கடைசிக்கு மாத்த சொன்னா கொழந்த" என கூறவும் சங்கர் குற்ற உணர்வில் தவித்தான்

"சாரி ப்ரீத்தி குட்டி... ஆபீஸ்ல..." என்றவனை பேச விடாமல் இடை மறித்தாள் ப்ரீத்தி

"ஐ ஹேட் யு டாடி... சும்மா பொய் சொல்லாத... ஜூலி டாடி உன் ஆபீஸ் தானே... அவர் எல்லாம் மொதலே வந்து அவளுக்கு மேக்அப் எல்லாம் போட ஹெல்ப் பண்ணினார்... நான் ஜூலி வீட்டுலையே பொறந்து இருக்கலாம்... ஐ ஹேட் யு ஐ ஹேட் யு ஐ ஹேட் யு" என அழுது கொண்டே அன்னையிடம் சென்றவள் "மம்மி எனக்கு பசிக்குது" என செல்வியின் மடியில் விழுந்தாள்

சங்கர் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்

கணவனின் அதிர்ச்சியை புரிந்தவளாய் "உங்களுக்காக தான் சாப்பிடாம வெயிட் பண்றோம்...வாங்க சாப்பிடலாம்" என பேச்சை மாற்றினாள் செல்வி

"நீங்க சாப்பிடுங்க... நான் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்... " என்றபடி நகர்ந்தான்

                                              ****************************

"நான் ஒரு நல்ல அப்பாவா இல்லையா செல்வி?" என அருகில் படுத்திருந்த மனைவியின் கையை பற்றி கன்னத்தோடு இழைத்து கொண்டே கேட்டான் சங்கர்

"என்னப்பா நீங்க? கொழந்த சொன்னத போய் பெருசு பண்ணிக்கிட்டு... காலைல எழுந்ததும் ஹாய் டாடினு கழுத்த கட்டிப்பா பாருங்க... அவ்ளோ தான் உங்க மகளோட கோபத்துக்கு ஆயுசு" என கணவனுக்கு ஆதரவாய் பேசினாள் செல்வி

"அவ கோபத்துக்காக சொல்லலடி... எனக்கே ரெம்ப குற்ற உணர்வா இருக்கு... நானெல்லாம் சின்னதுல ஒரு சின்ன விசயம் செஞ்சா கூட எங்க அப்பா ஊரே சொல்லுவாரு... ஒவ்வொரு விசயத்தையும் கவனிச்சு எவ்ளோ என்கரேஜ் பண்ணுவாரு தெரியுமா..."

"......." அவனே பேசி மன பாரம் குறைக்கட்டும் என நினைத்தவளாய் மௌனமாய் இருந்தாள் செல்வி

"எப்ப பாரு ஆபீஸ் ஆபீஸ்னு நான் ப்ரீத்தியோட டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல செல்வி... இன்னிக்கி ஸ்கூல்க்கு வரேன்னு சொன்னத கூட மறந்துட்டேன்...நெஜமா ரெம்ப கில்டியா இருக்கு... உங்கள வெளிய ஒரு அவுட்டிங் கூட்டிட்டு போய் கூட ஒரு மாசம் இருக்குமல்ல?" என்ற கணவனை ஆறுதலாய் பார்த்தவள் செல்வி

"நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?"

"என்ன?"

"பொங்கலுக்கு ஊருக்கு போலாமா? ரெம்ப நாளாச்சுங்க"

"ஏய் சொல்ல மறந்துட்டேன்... அம்மா இன்னைக்கி என் செல்லுக்கு கூப்ட்டாங்க..."

"தெரியும்... அதை இவ்ளோ நேரமா சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்து பொறுமை போய் நானே பேச்சை எடுத்தேன்" என கோபமாய் கூறினாள்

"உனக்கு யாருடி சொன்னா? என்னை உளவு பாக்க ஆபீஸ்ல ஆள் செட் பண்ணி இருக்கியா?" என மையலாய் புன்னகைத்தான்

"அது ஒண்ணு தான் கொறச்சல்... நான் ஊருக்கு போன் பண்ணினேன் இன்னிக்கி... அத்தை தான் சொன்னாங்க உங்ககிட்ட பேசினதா"

"ஓ... சாரி சொல்ல மறந்துட்டேன்"

"உங்களுக்கு ஆபீஸ் தவிர வேற என்ன தான் நெனப்புல இருக்கு... வீட்டுல இருக்கற கொஞ்ச நேரமும் டிவி முன்னால... எதாச்சும் பேசுங்கன்னா என்ன பேசறதுனு சலிச்சுபீங்க... இந்த மாதிரி போன் விசயம் கூட சொல்றதில்ல" என முறைத்தாள்

"என்னடி இதுக்கு போய் கோவிச்சுக்கற?"

"பின்ன கொஞ்சுவாங்களா?"

"ஓ... கொஞ்சலாமே... என் அத்தை பெத்த ரத்தினமே, எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்ல, செல்வி, என் செல்ல தமிழ்ச்செல்வி... அழகான பேருடி உனக்கு" என மனைவியின் இடையை சுற்றி அணைத்தான்

"போதுமே... நைட்ல இழைய வேண்டியது... காலைல எழுந்ததும் அழவெக்க வேண்டியது" என சலித்தாள்

"நான் எப்படா உன்ன அழவெச்சேன்?" என அவன் கேள்வியாய் நோக்க

"அப்ப இன்னிக்கி காலைல என்னை திட்டினது கூட நெனப்பில்லையா?" என முறைத்தாள்

"இன்னைக்கா?" என அவன் புரியாமல் விழிக்க

"சமாதானம் செய்யாட்டி கூட பரவாயில்ல... திட்டனதே நெனப்பில்லைனா... உங்கள திருத்தவே முடியாது" என அவன் கையை விலக்கி மறுபுறம் திரும்பி படுத்தாள்

"ஏய்... காலைல கெளம்பற அவசரத்துல எதாச்சும் டென்சனா பேசி இருப்பேன்... அதை போய் பெருசு படுத்துறியே கண்ணம்மா" என அவள் முகம் பற்றி திருப்பினான்

அவனின் பாவமான பார்வையில் சற்று மனம் நெகிழ "அப்ப நான் சொல்றத கேளுங்க... உங்களுக்கும் ஒரு சேன்ஜ் வேணும்... ப்ரீத்தியும் என்ஜாய் பண்ணுவா... இந்தியா போயிட்டு வரலாம் ப்ளீஸ்"

"எனக்கும் ஆசையா தான் இருக்கு செல்வி... ஆனா ஆபீஸ்..."

"ஆபீஸ் எப்பவும் தான்பா இருக்கு... நாம இப்படியே இருந்தா ப்ரீத்திக்கு நம்ம உறவு ஜனம், பேச்சுவழக்கு, கலாச்சாரம் எல்லாமும் அந்நியமாய்டும்னு பயமா இருக்குப்பா...ப்ளீஸ்" என கெஞ்சல் பார்வை பார்க்க,  அவள் கூற்றில் இருந்த நியாயமும் மனதில் பட, அதற்கு மேல் மறுக்க இயலாதவனாய்

"ஒகே... நீ சொல்றத நான் செய்ய முயற்சி பண்றேன்... அதுக்கு முன்னாடி நான் சொல்றத நீ செய்யணும்" என குறும்பாய் கண் சிமிட்டினான்

"என்ன?" என பதில் தெரிந்தே கேள்வி கேட்டாள் அவன் மனைவி

"அதான் கொஞ்ச நேரம் முன்னாடி கேட்டியே... கொஞ்சரதானு...அதை செய்" என சிரித்தான்

"ம்...மொதல்ல நான் சொன்னத நீங்க செய்ங்க... அப்புறம் நீங்க சொல்றத நான் செய்யறேன்... சரியா?" என அவன் தாடையை பற்றி கேலியாய் கூறினாள்

"ராட்சசி...." என அவளை பற்றி இருந்த பிடியை மேலும் இறுக்கினான்

                                        **************************************

சொந்த மண்ணில் கால் பட்டதும் ஒரு நாள் முழுக்க விமானத்தில் பயணம் செய்த அலுப்பு கூட பறந்து போனது சங்கருக்கு. இந்த பயணம் தன் வாழ்வையே திசை திருப்ப போவதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை

சொந்த ஊரை ரசிக்கும் ஆவலில் டாக்ஸி டிரைவரிடம் சற்று மெதுவாய் செல்லுமாறு பணித்தான்

அறுப்புக்கு காத்திருக்கும் பச்சை பசேல் வயல் வெளியும்...
பாசாங்கற்ற மனிதர்களின் முகமும்...
சிலு சிலுவென்ற காற்றும்...
தென்றலின் இசைக்கேற்ப நடனமாடும் மங்கை போல் தலை அசைக்கும் தென்னை மரங்களும்...
மடை நீரில் நடை பயிலும் நாரைகளும்...
வேட்டியை மடித்து கட்டி வரப்பில் எட்டி நடை போடும் உழைப்பாளிகளும்...
கண்டாங்கி சேலை முடிந்து தூக்கு சட்டி கையில் தொங்க கதை பேசி செல்லும் பெண்கள் கூட்டமும்...
ம்ம்மா என குரல் கொடுத்து தன் பசி உரைக்கும் கோமாதாவின் குரலும்...
கழுத்து மணி ஒலிக்க அவர்களின் முன் சென்று  கொண்டிருந்த  ரெட்டை  மாட்டு வண்டியும்...
செம்மண் குழைத்த வீடுகளும்...
சாணி மெழுகிய திண்ணைகளும்...
வாசல் கோலத்தில் நிறைந்த சாணி பிள்ளையார்கள் மேல் பூத்திருந்த பூசணிப் பூக்களும்...
பொங்கலுக்கென வெள்ளை சாயம் பூசி இருந்த தெருக்களும்...
தூரத்தில் ஒலித்த கோவில் மணி ஓசையும்...
நகரின் பரபரப்பற்ற சூழ்நிலையும்...பார்க்க பார்க்க தெவிட்டவில்லை சங்கருக்கு
செல்வி கூட தான் படித்த பள்ளி இது, விளையாடிய இடம் இது, தோழியின் வீடு இது என மகளிடம் சிறு பிள்ளை போல் குதூகலமாய் கூறி கொண்டே வந்தாள். ஆம், அவளும் அதே ஊரை சேர்ந்தவள் தான். சங்கரின் சொந்த அத்தை மகள் தான்

ப்ரீத்திக்கு எல்லாமே புதியதாய் தோன்றியது, உற்சாகமாய் கேள்வி கேட்டு கொண்டே வந்தாள். மூன்று ஆண்டுக்கு முன் வந்தபோது பார்த்த போதும், சிறு பிள்ளை என்பதால் அவளுக்கு நினைவில் பதியவில்லை

வீட்டின் முன் டாக்ஸி நின்றதும் வயதை மறந்து ஓடி வந்த அன்னையை கண்டதும் தன்னையும் அறியாமல் கண் பனித்தது சங்கருக்கு

"ராசா... சங்கரு... வந்துட்டியாப்பா? வா மருமகளே... ஆத்தி என்ன பெத்த ஆத்தி" என பேத்தியை முத்தத்தால் குளிப்பாட்டினாள் சரஸ்வதி, சங்கரின் அன்னை

சற்று மிரண்டு விலகிய மகளிடம் "ஏய் ப்ரீத்தி... அப்பத்தா டா...உன் அப்பத்தா" என்றான் சங்கர்

"அம்மா எப்படிமா இருக்கீக... மேலுக்கெல்லாம் சொகந்தான" தாயை கண்டதும் தாய் மண்ணின் பாஷை தானாய் வந்து ஒட்டி கொண்டது சங்கருக்கு

"எனக்கென்ன ராசா... சொகமா இருக்கேன்... நீ தான் முன்னைக்கு இப்ப இளச்சாப்ல இருக்க" என மகனின் தலை கோதினாள் பெற்றவள்

அந்த உயிர்ப்புள்ள காட்சி செல்வியின் கண்களை நிறைத்தது. தோளுக்கு மேல் வளர்ந்தாலும் என்ன, அன்னைக்கு என்றும் பிள்ளை தானே என தோன்றியது அந்த கணம்

அதற்குள் அவர்கள் வந்த சேதி அறிந்து சூழ்ந்து கொண்ட சங்கரின் தந்தையும், செல்வி வீட்டு ஜனமும், அக்கம் பக்க உறவுகளும் என அந்த இடமே உணர்ச்சிமயமாய் ஆனது

பின்பு உணவும் ஓய்வும் ஆனதும் வயலை காண மனைவி மகள் சகிதம், தந்தையையும் அழைத்து கொண்டு சென்றான் சங்கர்

"நம்ம ஊரு மாறவே இல்லீங்கப்பா..." என மகன் கூற

"ஆமாங்கண்ணு... மாத்தமில்லாத வர மாசில்ல...என்ன நான் சொல்றது" என தந்தை சிரித்தார்

"உண்ம தானுங்கப்பா"என ஆமோதித்தான் சங்கர்

வயலின் நடுவில் சென்று நின்றதும் பிரபஞ்சமே சொந்தமானது போல் உணர்ந்தான் சங்கர். ஒரு நாள் கூட இந்த உணர்வை அவன் வாழும் நகரத்தில் அனுபவத்ததில்லை என்பது உறைத்தது

"என்ன ராசா ரோசன... எந்த கோட்டைய புடிக்க" என தந்தை கேலியாய் கேட்க

"நெல் அறுப்பு எப்பங்கப்பா" என அதை பார்க்கும் ஆவல் கண்ணில் மின்ன கேட்டான் சங்கர்

"நம்முளுது சேத்து வயல் நேரடி வெதப்பு தான கண்ணு, ஐ.ஆர்.இருவது ரகம், இனி தான்... நோம்பி கழிஞ்சு அறுப்பு"

இது என்ன அது என்ன என கேள்வி கேட்ட மகளுக்கும் பதில் கூறி கொண்டே வந்தான் சங்கர்

செல்விக்கு, தான் இப்போது காணும் சங்கரும் பரபரப்பாய் சுழலும் கலிபோர்னியா சங்கரும் வேறு வேறு ஆளோ என தோன்ற ஆச்சிர்யமாய் கணவனை ரசித்தபடி வந்தாள். அவனை இத்தனை சந்தோசமாய் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதென தோன்றியது அவளுக்கு

ஊருக்குள் ஒரு சுற்று வரும் ஆவலில் தந்தையிடம் கூறி விட்டு மனைவி மகளை அழைத்து கொண்டு எட்டி நடை போட்டான் சங்கர்

கண்களை இடுக்கி பார்த்த ஒரு முதியவள் "ஆறது... நம்ம சரஸ்வதி மகன் சங்கரபாண்டியா... ராசா வந்துட்டியா? உங்காத்தா நீ வாரேன்னு ஊர் பூரா தண்டோரா அடிக்காத கொறதேன்...உன்ர பொண்டாட்டியா... அன்னிக்கி பாத்த மேனிக்கி அப்படியே இருக்கற போ... உன்ர மகளா இது... ஏன் இப்படி எலும்பும் தோலுமா இருக்குது புள்ள" என பொக்கை வாய் விரிய வெற்றிலை காவி படித்த ஈறுகள் ஜொலிக்க சிரித்தாள்

தன் முழுப்பெயர் சங்கரபாண்டி என்பதையே மறந்து போயிருந்த சங்கர் ஒரு கணம் பேச இயலாமல் நின்றான்

"ஆமாத்தா... சரஸ்வதி மகன் சங்கரபாண்டி தான்... சொகமா இருக்கீகளா?" என நேசமாய் முதியவளின் அருகில் திண்ணையில் அமர்ந்தான்

"இருக்கறன் ராசா... காடு வா வா ங்குது... வீடு போ போ ங்குது" என கூறியவளை இடை மறித்தது ஒரு குரல்

"சங்கரபாண்டி... நீ பொறந்த காலத்துல இருந்தே ஆத்தா இதத்தேன் சொல்லிக்கிட்டு கெடக்கு... காடும் வாங்கராப்ல காணோம்... வீடும் போங்கராப்ல இல்ல" என முதியவளின் மருமகள் சுந்தரி சிரிக்க முதியவள் கோபமாய் முகம் திருப்பினாள்

"ஹா ஹா... சொகமாங் அத்த... எங்க மச்சான்க ஆராயும் காணல" என வீட்டின் உள்நோக்கி பார்த்தான் சங்கர்

"நம்முளுது கரும்பு காடு தான ராசா... இப்பத்தான கிராக்கி கரும்புக்கு... சொசைட்டிக்கு போய் இருக்காக அல்லாரும்... வர்ற நேரந்தான்... இரு கண்ணு காப்பி தண்ணி எடுத்துட்டு வாறன்... உள்ள வா செல்வி... வா குட்டி பொண்ணே, அப்படியே அப்பன உரிச்சு வெச்சுருக்கா உன்ர மக...வா கண்ணு" என சுந்தரி உரிமையாய் அழைக்க

"இல்லீங் பெரிம்மா... பின்ன வாறம்... சும்மா அப்படியே ஊர ஒரு சுத்து பாக்கலாமுன்னு காலாற வந்தோம்" என செல்வி கூற

"அதுவுன்செரிதேன் சாவுகாசமா ஒருவேள சோருங்கராப்ல வாங்க கண்ணு" என கிராமத்து பாசம் மிளிர கூறினார் சுந்தரி

அதற்குள் ப்ரீத்தி தன் அன்னையின் காதில் ரகசியமாய் ஏதோ கேட்க "என்ன கேக்குது புள்ள?" என முதியவள் விசாரிக்க

"உங்க காதுல ஏன் இவ்ளோ பெரிய ஓட்டைனு கேக்கறா ஆத்தா" என சிரித்தாள் செல்வி

"அதுவா... இங்க வா சொல்லுறன்" என ப்ரீத்தியை அருகில் இருத்தி கொண்டவள் "அது... என்ற ராசா... அதான் என்ற புருஷன், என்ன கண்ணாலம் கட்டினப்ப பத்து பவுணுல தண்டட்டி போட்டாக... ஊரே மூக்குல வெரல வெச்சு பாத்தது... அந்த தண்டட்டி போட்டுதேன் காது இப்படி ஆகி போச்சு... அது சரி... பட்டணத்து சிங்காரி உனக்கென்ன தெரியும் தண்டட்டியும் அட்டிகையும்" என மீண்டும் பொக்கை வாய் சிரித்தது

அவள் கூரியதெதுவும் புரியாத போதும், ஏதோ மியூசியத்தில் அதிசியத்தை பார்ப்பதை போல் அந்த முதியவளை ரசித்தாள் ப்ரீத்தி. தனக்கும் முதியவளின் சிரிப்பு தொற்றிக்கொள்ள வாய் பொத்தி சிரித்தாள் ப்ரீத்தி

இளமையும் முதுமையும் சங்கமித்த அந்த காட்சியை படம் பிடிக்க இயலவில்லையே என வருந்தினான் சங்கர். இன்னும் கேமரா எதையும் பெட்டியைவிட்டே எடுக்கவில்லையே

அவர்களிடம் விடைபெற்று ஊர் மத்தியில் இருந்த கோவில் நோக்கி சென்றனர் மூவரும்

அன்று காப்பு கட்டு நாளுக்கு மும்முரமாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தன கோவிலில். சங்கரை பார்த்ததும் எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்

"அடடே... சங்கரு... நீ வாரன்னு ஆத்தா சொல்லிச்சு... எப்படி மச்சான் இருக்க? வா தங்கச்சி... புள்ள அப்படியே சங்கரு தான்" என்ற சங்கரின் சிறு வயது தோழன் முத்து, ப்ரீத்தியை ஆசையாய் தூக்கி கொண்டான்

"நல்லா இருக்கேண்டா முத்து... நீ எப்படி? தங்கச்சி புள்ளைக எல்லாம்?"

"அல்லாரும் சொகந்தான்... அவ ஆத்தா ஊட்டுல இருக்கா.. மூணாவது பொம்பள புள்ள... ரெண்டு மாசந்தான் ஆச்சு.. ஆத்தா சொல்லுச்சா?" என ஆவலாய் கேட்டான் முத்து

"அப்படியா? ரெண்டும் ஆம்பள புள்ளயா போச்சுன்னு நீ பொலம்பின நான் போன வாட்டி வந்தப்ப... ரெம்ப சந்தோஷம் முத்து... இன்னும் அம்மாகிட்ட உக்காந்து பேசவே இல்ல முத்து" என்றான் சங்கர்

"சரிப்பா... நோம்பி கழிஞ்சு நாளமத்தன நம்ம ஊட்டுக்கு ஒரு வா கரி சோறு உங்கராப்ல வா... தங்கச்சி, இவன் மறந்தாலும் நீ கூட்டிட்டு வாற... சரி தான" என உரிமையாய் செல்வியிடம் கூறினான் முத்து

"கண்டிப்பா வாரமுண்ணா" என்றாள் செல்வி அந்த அன்பில் நெகிழ்ந்தவளாய்

இப்படியாய் சிறு வயது தோழர்களையும், தூக்கி வளர்த்த உறவுகளையும் திகட்டாமல் பார்த்தும் பேசியும் அந்த நாள் கழிந்தது

                                        **************************************

சங்கரின் வீட்டில் அவன் வசதிக்கென கட்டப்பட்டிருந்த காரை மச்சு அறையில் (மாடி ரூம்) செல்வியுடன் பௌர்ணமி நெருங்கும் நிலவை ரசித்து கொண்டிருந்தான் சங்கர்

மனம் நிறைவாய் இருந்தது இருவருக்கும். சுற்றிய அலுப்பில் ப்ரீத்தி உறங்கி இருக்க, கணவனும் மனைவியும் கதை பேசி கொண்டிருந்தனர்

"என்ன தான் சொல்லுங்க... நம்மூரு நம்மூரு தான் இல்லியா?" என செல்வி கேட்க

"நிச்சியமா... அம்மா மடில படுத்து தூங்கற சுகம் தான் செல்வி இது" என மனைவியின் கன்னத்தில் செல்லமாய்  தட்டினான்

"ஆமாம்பா... நம்ம ப்ரீத்தி என்ன சொன்னா தெரியுமா கொஞ்சம் முன்னாடி... நாம இங்கயே இருந்துக்கலாம் மம்மி... இங்க வந்ததுல இருந்து டாடி என் கூடவே இருக்காரு... திட்டவே இல்ல... நெறய பேரு இருக்காங்க... அப்பத்தா எனக்கு கதை எல்லாம் சொன்னாங்க... அப்பிச்சி கரும்பு உரிச்சு குடுத்தாங்க... ஜாலியா இருக்கு மம்மினு சொல்றா. அவ சொல்றது நடந்தா சொகந்தான்" என பெருமூச்சு விட்டாள் செல்வி

"ஏய்... இது ப்ரீத்தி ஆசையா இல்ல என் பொண்டாட்டி ஆசையா... உண்மைய சொல்லு..." என மனைவியை சீண்டினான் சங்கர்

"எனக்கும் ஆச தான்... நெனச்சா ஆத்தா ஊட்டுக்கு போலாம்... அக்கா தங்கச்சிய பாக்கலாம்... நல்லது கெட்டதுல கலந்துக்கலாம்... ஊரும் உறவுமா வாழுற வாழ்க்கை சுகந்தானேப்பா....ஏன் உங்களுக்கு இல்லையா ஆச? வந்ததுல இருக்கு பாத்துட்டு தானே இருக்கேன்... ஐயா மொகத்துல நூறு வாட்ஸ் பல்பில்ல எரியுது" என மனைவி சீண்டுவது போல் கூற

"ஏய்... நீ இப்படி நம்ம பேச்சு வழக்குல பேசிக் கேட்டு எம்புட்டு நாளச்சு செல்வி... கல்யாணத்துக்கு முன்ன பேசின என் மொற பொண்ணு செல்வி முன்னாடி நிக்கராப்ல இருக்குடி" என மனைவியை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்

திருமணத்திற்கு முந்திய நாட்களை பற்றி பேசியதும் செல்வி வெட்கத்தில் முகம் சிவக்க "போங்க மாமா" என கணவனின் தோளில் முகம் புதைத்தாள்

"ஏய்... நீ என்ன மாமான்னு கூப்ட்டு எத்தன நாளாச்சுடி" என அவளை மேலும் சிவக்க வைத்தான்

"என்ன வம்பு பண்ணினது போதும்... நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல" என பேச்சை மாற்றினாள்

"என்ன?" என வேண்டுமென்றே அவளை பேச வைத்து கேட்கும் ஆவலில் அவன் கேட்க

"இங்கயே இருந்துரலாமா?" என ஆசையாய் கேட்ட மனைவியை பாவமாய் பார்த்தான்

வளர்ந்து செழித்த நாற்றை பிடுங்கி நட்டது போல் அவள் கொண்டாடும் ஊரில் இருந்து பிரித்து சென்று விட்டோமே என முதல் முறையாய் வருந்தினான்

"என்ன மாமா...? பேச்சே வர்ல"

"நீ மாமான்னு கூப்படற அழகுல மயங்கி நிக்கறேண்டி" என்றான்

"ச்சு... பதில் சொல்லுங்க" என சிணுங்கினாள்

"என்ன சொல்ல? நடக்கறதா பேசு செல்வி"

"ஏன் நடக்காது?"

"ஏய்... விளையாடறயா? எனக்கு நாத்து நடறதோ... களை எடுக்கறதோ என்ன தெரியும் சொல்லு... இங்க இருந்து என்னடி செய்யறது?"

"ஏன் மாமா? இங்க இருக்கறவக யாரும் பொழக்கிலியா? உங்க பிரெண்ட் முத்து அண்ணன் படிச்சுட்டு ரைஸ் மில்லு வெக்கலையா இங்கயே... இன்னிக்கி பாத்தோமே சுந்தரி பெரியம்மா... அவங்க மகன் கூட அடுத்த வெதப்புக்கு அப்பறம் சுகர் மில்லு ஆரம்பிக்க போறதா அத்த சொல்லிட்டு இருந்தாக"

"ஓ... மாமியாரும் மருமகளும் சேந்து தான் அட்டாக் பண்றீங்களா?" என சிரித்தான்

"இல்லப்பா... பேச்சு வாக்குல அத்த சொன்னதுதேன்... இங்கயே நாமளும் எதுனா தொழில் பண்ணிக்கலாமேப்பா" என கெஞ்சலாய் பார்த்தாள்

"செல்வி செல்லம்... அமெரிக்க வாழ்க்கைக்கு பழகின நமக்கு இது கொஞ்ச நாளுல சலிச்சுடும்மா... அந்த வசதி வாய்ப்ப மனசு எதிர்பார்க்கும்... அது மட்டுமில்ல ப்ரீத்தி படிப்பப்பத்தி யோசிச்சு பேசு"

"இங்க பாருங்க மாமா... மனமிருந்தா மார்கமுண்டு... என்ன பெரிய அமெரிக்கா பேரிக்கானு? இந்த மண்ணுல தான பொறந்து வளந்தோம்... அந்த வசதி வாய்ப்பெல்லாம் வெறும் வெளிப்பூச்சு தா... இன்னும் சரியா சொல்லணும்னா அனல் மேல இருக்கற பனித்துளி போல, அதுக்கு என்ன ஆயுசு சொல்லுங்க... ஒரு நொடில அனல்ல பனித்துளி கரைஞ்சு போறாப்ல அற்ப ஆயுசு சுகம் தான் அதெல்லாம்... இதான்ப்பா நம்ம இடம்.... ப்ரீத்தி ஸ்கூல் பத்தி என்ன... இப்ப பக்கத்து டவுன்லையே நல்ல நல்ல ஸ்கூல் எல்லாம் இருக்கு தெரியுமா?" என்ற மனைவியின் கூற்றில் இருந்த உண்மை சாட்டியடியாய் மனதில் விழ சற்று நேரம் அமைதியாய் சிந்தித்தான்

அவனுக்கும் கூட ஊரில் வந்து இறங்கியதில் இருந்து இதே சிந்தனையாய் தான் இருந்தது. அதிலும் வயோதிகம் நெருங்கும் பெற்றோரின் முகம் வேறு கண் முன் வந்து பயம் காட்டியது

இன்னும் எத்தன தான் சம்பாதிச்சாலும் தாய் மண்ணின் சுகத்திற்கு ஈடாகுமா? இங்கு காலூன்ற வேண்டிய மட்டும் தான் சம்பாதிதாயிற்றே. இன்னும் ஏன் அங்கு இருக்க வேண்டும்? என பல கேள்விகள் சங்கரின் மனதில் ஓடி கொண்டே இருந்தன

"ம்...சொல்லுங்க" என செல்வி மீண்டும் கேட்க

"ம்... நல்லா ஸ்கூல் விசயம் எல்லாம் கூட விசாரிச்சுட்டு தான் பேசறீங்களா அம்மணி?" என கேலி செய்தான்

"இன்னும் நீங்க பதில் சொல்லல மாமா" என்றாள் அதிலேயே குறியாய்

சற்று நேரம் எதுவும் பேசாமல் பல விசயங்களையும் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் "இப்படி மாமான்னு ஆசையா என் பொண்டாட்டி கேட்டா மாட்டேன்னு எப்படிடி சொல்ல" என சங்கர் குறும்பு சிரிப்புடன் கூற

"நெசமாவா?" என ஆனந்தத்தில் கணவனை கட்டிக்கொண்டாள் செல்வி

"செல்வி... உடனே இங்க வந்துற முடியாது. போய் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு ப்ரீத்தி ஸ்கூல் இயர் முடிஞ்சப்புறம் வருவோம் சரியா?"

"போதும் மாமா... நீங்க வர ஒத்துகிட்டதே போதும்" என அவள் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது
 
""செல்வி... ஆனா பின்னாடி நீ இந்த முடிவ நெனச்சு எப்பவும் வருந்தமாட்டியே?" என சங்கர் கேள்வியாய் நோக்க

"எனக்கென்ன பைத்தியமா?" என  கோபமாய் பார்த்தாள். கோபத்திலும்  ஜொலித்த மனைவியின் அழகிய முகத்தை ரசித்தவன்,

"இல்லையா பின்ன... என் மேல பைத்தியமா கட்டுனா மாமனத்தான் கட்டுவேன்னு நிக்கல" என பழைய கதையை கூறி கேலி செய்ய

"சீ.... போங்க மாமா... உங்களுக்கு எப்பவும் கேலி தான்..." என மனம் நிறைந்த சந்தோசத்தில் கணவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் செல்வி

காலையில் தன் பெற்றவர்களிடம் இந்த முடிவை கூறி அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்வை காணும் ஆவல் அப்போதே சங்கரின் நெஞ்சில் ஊற்றாய் பொங்கியது

தை பிறந்தது... அவர்கள் வாழ்வில் வழியும் பிறந்தது....

நமக்கும் ஒரு நாள் விடியும் என்ற கனவோடு
"பொங்கலோ பொங்கல்...."
"பொங்கலோ பொங்கல்...."
"பொங்கலோ பொங்கல்...."

மூணுகல்லு முட்டுகுடுத்து
மூணுபடி அரிசிபோட்டு
கும்மிபொங்கல் வெச்சசுகம்
குக்கர்பொங்கல் தந்திடுமா!!!

பின் குறிப்பு:
இந்த கதைல வந்த முடிவு எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம்னு இதை படிக்கற பலருக்கும் தோணும். ஆனா நிஜத்துல நிறைவேறாத கனவை என் கதைலயாச்சும் செய்வோம்னு ஒரு ஆசைல தான் இப்படி எழுதினேன்

இது வரை பொறுமையா படிச்ச உங்க எல்லோருக்கும் மிக்க நன்றி... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!!!


(முற்றும்...)
...

Tuesday, January 11, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 3)

Tuesday, January 04, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 2)

 பகுதி 1 படிக்க

கண்களா அவைகாந்தங்களா
கட்டியிழுக்கும் வித்தையை
கற்றதெங்கே இனியவளே!!!
 
மீரா தான் முதலில் சுதாரித்து "sorry... I'm extremely sorry..." என கூற

"அதையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாமே... எனக்கு புரியாம இருந்திருக்குமல்ல" என அழகு தமிழில் அவன் பேச

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய  மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்

சூழ்நிலை மறந்து அவளது அழகிய மருண்ட விழிகளை கண்ணிமைக்காமல் ரசித்தான் அவன்

"I... I...நா... நான்... வந்து..." என மீரா தடுமாறினாள்

இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழலில் எப்போதும் சிக்கியிராத நடுக்கம் அவள் குரலில் தெரிய "You...You...நீ...நீ...ம்... Speak out.. come on" என்றான் அவன் விடாமல், அப்போதும் அவளின் விழிகளை ரசித்தவனாய்

ஆனால் அவன் முகத்தில் இருந்து எதையும் படிக்க இயலாமல் தோற்றாள் மீரா

"Yes...?" என்றான் மீண்டும் அவள் விளக்கத்திற்கு காத்திருப்பவன் போல்

"அது...வந்து... என் பிரெண்ட் நீங்க இட்டாலியன்னு சொன்னதால...."

"சொன்னா... என்ன வேணா பேசலாமா?" என குற்றம் சாட்டுவது போல் கேட்க மீரா பேச இயலாமல் மௌனமானாள்

அவளது இயலாமை கோபமாய் சதீஸின் மேல் தாவியது. அவனை திரும்பி முறைத்தாள்

இன்று இவளிடம் என்ன மண்டகப்படி விழ போகிறதோ என பயந்தபடி நின்றிருந்தான் சதீஷ்

"ஹலோ... நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். உன் பிரெண்ட்கிட்ட சண்டை போடறது அப்புறம் இருக்கட்டும்... இன்னும் நான் கேட்டதுக்கு ஆன்சர் வரலியே" என்றான் அவன் விடாமல்

"ஐம் சாரி..." என்றாள் மீரா அதற்கு மேல் என்ன செய்வதென புரியாமல்

"சாரி கேட்டா... சொன்னதெல்லாம் இல்லேன்னு ஆய்டுமா? எப்படி எப்படி... அவனும் அவன் மூஞ்சியுமா? ம்...?" என விடமாட்டேன் என்பது போல் அவன் குரல் உயர்த்தி பேச

தன் மீது தவறென்பதால் பதில் பேச இயலாமல் தலை குனிந்தாள் மீரா, தலையை உயர்த்தி பார்த்திருந்தால் அவன் கண்களில் தெரிந்த கேலியை உணர்ந்திருப்பாள்

அவள் அமைதி அவனை மேலும் சீண்டி பார்க்க தூண்ட "ஹலோ... உன் பேர்...? மீரா ரைட்? உன் பிரெண்ட் அப்படி தான் கூப்ட மாதிரி இருந்தது... மீரா... பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு... பேச்சு தான் சரி இல்ல... என்ன பனிஷ்மன்ட் குடுக்கலாம் உனக்கு?" என அவன் யோசிப்பது போல் நெற்றியில் கை வைத்து கேட்க

தலை உயர்த்தியவளின் விழிகளில் நீர்  படலம் தெரிய,  அவனது பொய் கோபம் விலக "ஹேய்... மீரா..." என்றான் நிஜமான கரிசனையோடு

"நான் வேணும்னு சொல்லல... சும்மா விளையாட்டா... உங்களுக்கு பாஷை புரியாதுன்னு.... சாரி... " எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என பயம் காட்டிய கண்ணீருடன் அவள் கூற

"வாட் இஸ் திஸ் மீரா? நீ உன் பிரெண்ட்கிட்ட பேசினத பாத்து என்னமோ ரெம்ப கூல்னு நெனச்சு கொஞ்சம் வம்பு பண்ணலாம்னு பேசினா... இதுக்கு போய்..." என்றவன் டேபிள் மீது இருந்து டிஷ்யு பெட்டியை எடுத்து நீட்ட அப்போது தான், தான் அழுவதை உணர்ந்தவள் போல் அவசரமாய் கண்களை துடைத்தாள் மீரா

"Are we okay?" என அவன் கேட்க

"ம்..." என்றாள் மீரா இன்னும் மாறாத முகத்துடன்

அதே நேரம் "Hei... who is your new friends?" என்றபடி வந்தாள் ஒரு பெண்

"This is Meera...he is...." என அவன் விழிக்க

"ஒகே ஒகே... உனக்கு பொண்ணுங்க பேரு மட்டும் தான் மெமரில இருக்கும்னு எனக்கு தெரியும்" என அவள் கேலி செய்தாள்

"அட....நீங்களும் என் கட்சியா?" என சதீஷ் அவனிடம் கை குலுக்க சிரிப்பு அடங்க சற்று நேரம் ஆனது

மீரா இன்னும் சற்று சகஜமாக இயலாமல் இருந்தாள். அதை சரி செய்ய எண்ணியோ என்னவோ

"ஒகே... இவ்ளோ நடந்தப்புறம் நமக்குள்ள நீங்க வாங்க எல்லாம் எதுக்கு... " என்று அவன் கூற

"அதுக்கு மொதல்ல உங்க பேரு எங்களுக்கு தெரியணுமே" என்றான் சதீஷ் அப்பாவியாய், மீண்டும் ஒரு சிரிப்பு வெடித்தது அவ்விடம்

"ஒகே... I'm Stevenson, call me steve" என்றவன் மீராவின் முகத்தை காண, ஸ்டீவ் எதிர்பார்த்தது போலவே அவள் முகத்தில் ஒரு ஆச்சர்ய அலை தெரிந்தது

"And... she is my best friend Madhu" என தன் தோழியை அறிமுகம் செய்தான்

"Interesting... by the way... I'm Satish" என கை நீட்டினான் மதுவிடம் விளையாட்டாய்

"ஹலோ மிஸ்டர் சதீஷ்.... உங்க விளையாட்டெல்லாம் இந்த ஊரு அம்மணிககிட்ட வெச்சுகோங்க சார்... இந்த மது ரெம்ப பாத்தாச்சு" என அவளும் கேலி செய்ய சிரிப்பு சத்தம் ஓய சற்று நேரமானது

"அது சரி... என்னமோ நமக்குள்ள இவ்ளோ நடந்தப்புறம்னு பில்ட் அப் பண்ணின, என்ன ஸ்டீவ்?"

"அது வந்து மது..." என சதீஷ் ஏதோ கூற முயல

"நீ சொன்ன வரைக்கும் போதும்... பேசாம இரு" என்றாள் மீரா நிஜமான கோபத்துடன்

"வாவ்... அழகான பொண்ணுக கோபபட்டா கூட அழகு தான்னு இப்போ ஒத்துக்கறேன்" என ஸ்டீவ் கூற மீரா கோபம் மறந்து சிரித்தாள்

"ஆஹா... என்ன ஸ்டீவ் இது? இப்படி பப்ளிக்கா அப்ளிகேசன் போடறது not so cool..."

"Don't worry Madhu... உனக்கு வேணும்னாலும் அப்ளிகேசன் போட  ஆள்  ரெடி  பண்றேன்..." என ஸ்டீவ் கேலி செய்ய

"ஆள விடு சாமி" என அவள் நகர

"ஹேய் ஹேய்... வெயிட்... என்ன நடந்ததுன்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?" என நடந்தவற்றை ஸ்டீவ் கூற மது சத்தமாய் சிரித்தாள்

"எல்லாம் இந்த கொரங்கால வந்தது" என்றாள் மீரா சதீஷை முறைத்தவாரே

"சதீஷ் சொன்னதுல தப்பெதுவும் இல்ல மீரா... I'm an Italian..he was right" என ஸ்டீவ் கூற

"What?" என அதிர்ந்தனர் மீரா சதீஷ் இருவரும்

"ஏன்...? உங்க தமிழ் சினிமால எல்லாம் வர்ற மாதிரி இட்டாலியன் கூட பிரெண்ட் ஆகரதில்லைன்னு எதாச்சும் ப்ராமிஸ் இருக்கா?" என ஸ்டீவ் கேலி போல் கேட்க

"அதில்ல... பட்... நீங்க... தமிழ் எப்படி..இவ்ளோ fluentஆ ..."

"அதை நான் சொல்றேன் மீரா... ஸ்டீவ் என்ற ஸ்டீவென்சன் அவதரித்தது Italyல தான். ஸ்டீவோட அப்பா ஒரு Father .. "

"மது, எங்க அப்பா கூட பாதர் தான் மதர் இல்ல" என சதீஷ் டைமிங் காமெடி உதிர்க்க, மீரா அவனை முறைப்பதை பொருட்படுத்தாமல்

"ஹா ஹா ஹா... I like you man" என ஸ்டீவ் சதீஷ் தோளில் நட்பாய் கை போட

"ஐயோ... நான் அப்படிபட்டவன் இல்ல ஸ்டீவ்" என சதீஷ் விலகி நிற்க, அதற்கு மேல் அடக்கமாட்டாமல் மூவரும் சிரித்தனர்

"எங்க மீரா புடிச்ச இப்படி ஒரு பிரெண்ட்?"

"இது நான் தேடி புடிச்சதில்ல மது... தானா வந்து ஒட்டிகிட்டது"

"என்ன என்னை அது இதுங்கற... நான் என்ன ஆடா மாடா" என சதீஷ் குரல் உயர்த்தினான்

"ரெண்டும் தான்... உன் ஹிஸ்டரி மொத்தமும் எனக்கு தெரியும் ஞாபகம் வெச்சுக்கோ" என இயல்பாய் மீரா அவனிடம் எப்போதும் போல் வம்பாய் பேச, தன்னையும் அறியாமல் ஸ்டீவின் கண்கள் இருவரையும் அளவெடுப்பது போல் பார்த்ததை யாரும் கவனிக்கவில்லை

"நம்ம ஹிஸ்டரி அப்புறம் பேசலாம்... மொதல்ல இந்த இட்டாலிகாரன் ஹிஸ்டரி என்னனு சொல்லு மது... எனக்கு மண்டையே வெடிச்சுடும் இல்லேனா" என்றான் சதீஷ் பொறுமை இழந்தவனாய்

"நீ எங்க சொல்ல விடற சதீஷ்" என மது கேலி செய்ய

"ஒகே ஒகே... me silent ...சொல்லு சொல்லு" என சதீஷ் நல்ல பிள்ளை போல் அமைதியாய் நின்றான்

"ஸ்டீவுக்கு அஞ்சு வயசு இருக்கறப்ப அவங்க அப்பாவுக்கு Missionary மூலமா சென்னைல ஒரு கேத்தலிக் சர்ச்ல Father போஸ்டிங் கெடைச்சு இந்தியா போக வேண்டி வந்தது. அப்புறம் பத்து வருஷம் சென்னைவாசி தான் இவன். அப்போ தான் ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் கூட பேசி தமிழ் நல்லா கத்துகிட்டான. ஒரிஜினல் தமிழ் பொண்ணான என்னை விட நல்லாவே சுத்த தமிழ் பேசுவான். நானும் இவனும் இப்ப அஞ்சு வருசமா பிரெண்ட்ஸ் 11th gradeல இருந்து...  எங்க பாமிலியும் அப்போ தான் இங்க Canada immigrate ஆகி வந்தோம்"

"வாவ்... நம்பவே முடியல" என்றாள் மீரா இன்னும் ஆச்சிர்யம் விலகாமல்

"உண்மைய சொல்லணும்னா... எனக்கு தமிழ் லேங்குவேஜ் பிடிச்சு தான் கத்துகிட்டேன். வீட்டுக்கு தெரியாம தமிழ் எழுத க்ளாஸ் எல்லாம் கூட போய் இருக்கேன் சென்னைல இருந்தப்ப. இங்க வந்தப்புறமும் நெறைய தமிழ் புக்ஸ் தேடி தேடி படிப்பேன் just out of interest, ofcourse வீட்டுக்கு தெரியாமதான்"

"ஏன் உங்க வீட்டுல திட்டுவாங்களா?"

"ஆமா மீரா. எங்கப்பா strict Catholic Father. வீட்டுல மிலிட்டரி ரூல் தான். சென்னைல கேத்தலிக் ஸ்கூல்ல தான் சேத்து இருந்தாங்க என்னை. அப்பாவோட siblings (உடன் பிறப்புகள்) எல்லாம் கனடால இருந்ததால எப்படியும் இங்க வந்துடனும்னு முயற்சி பண்ணிட்டு இருந்தாரு. அதனால நான் பிரெஞ்சு கத்துக்கணும்னு ரெம்ப force பண்ணுவாரு"

"நீங்க தமிழ் பேசறது வீட்டுல தெரியுமா?"

"ம்... அம்மாவுக்கு தெரியும் மீரா. அப்பாவுக்கு தெரிஞ்சா நான் காலி" என ஸ்டீவ் சிரிக்க

"இங்க வந்து accustom ஆகறது கஷ்டமா இருக்கலையா உங்களுக்கு?"

"ஹேய்... மீரா... கால் மீ ஸ்டீவ்... வாங்க போங்க எல்லாம் வேண்டாம்"

"அது...சட்டுன்னு வர்ல...." என மீரா தயங்க

"இந்த மரியாதை தான் எனக்கு தமிழ்ல மொதல்ல கவர்ந்த விஷயம். இங்கிலீஷ்ல just you me தான் இருக்கு... "

"அம்மா தாயே... உன் பேட்டி எல்லாம் முடிஞ்சதா... எனக்கு பசி உயிர் போகுது" என சதீஷ் மயக்கம் வரும் போல் பாவனை செய்ய

"செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் சதீஷ்" என ஸ்டீவ் கூற, ஆச்சரியத்தில் சதீஷ் விழிக்க "திருக்குறள் கூட கொஞ்சம் தெரியும், தமிழ் க்ளாஸ்ல கத்துக்கிட்டது" என குறும்பாய் கண்ணடித்து சிரித்தான் ஸ்டீவ்

தன்னையும் அறியாமல் ஒரு கணம் மீராவின் பார்வை அவன் முகத்தில் பதிந்தது, அவன் சிரிப்பை ரசித்தது. அதே நேரம் அவனும் அவளை பார்க்க சட்டென பார்வையை விலக்கினாள் மீரா

இதை கவனிக்காத சதீஷ் "நான் அம்பேல்... மீரா இவன் மட்டும் நம்ம ஊரு டிவிகாரங்க கண்ணுலபட்டான் அவ்ளோ தான்... சாலமன் பாப்பையாவை தூக்கிட்டு இவனை காலைல ப்ரோக்ராம்ல போட்டு காசு பண்ணிடுவாங்க. கொஞ்சம் ஏமாந்தா வெள்ளை வள்ளுவர்னு இவனுக்கு மெரீனா பீச்ல சிலை வெச்சாலும் வெப்பாங்க... எப்படியோ ஒளிஞ்சு போங்க... நான் போய் ரொட்டிய அசை போடறேன்..."

"நீ அதுனு சொன்னது கரெக்ட் தான் மீரா" என நேரம் பார்த்து மது கேலி செய்ய, சதிஷின் முறைப்பை கண்டுகொள்ளாமல் மீரா சிரிக்க, அதை ஒரு ஜோடி கண்கள் ரகசியமாய் ரசித்தது

இனி...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)