Tuesday, January 11, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 3)பகுதி  1

பகுதி  2

"நீ அதுனு சொன்னது கரெக்ட் தான் மீரா" என நேரம் பார்த்து மது கேலி செய்ய, சதிஷின் முறைப்பை கண்டுகொள்ளாமல் மீரா சிரிக்க, அதை ஒரு ஜோடி கண்கள் ரகசியமாய் ரசித்தது

நால்வரும் சப்வே உணவகத்துள் நுழைந்து வேண்டியதை பெற்று கொண்டு அமர்ந்தனர்

இயல்பாய் அமர்வது போல் ஸ்டீவ் மீராவின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான். தான் ஏன் அப்படி செய்கிறோம் என அவனுக்குமே புரியவில்லை

பார்த்த நொடியில் ஒரு பெண்ணிடம் இப்படி ஒரு ஈர்ப்பு எப்படி சாத்தியம் என இன்னும் அவன் மனம் குழப்பத்தில் இருந்தது

போதாதற்கு இந்த சதீஷ் வேறு அவளிடம் மிகவும் உரிமையுள்ளவன் போன்ற பாவனை காட்டியது எரிச்சலை கூட்டியது

சற்று முன் வரை யாரென்றே அறியாத ஒரு பெண்ணிடம் யாரோ ஒருவன் உரிமையுள்ளவனாய் இருந்தால் தனக்கென்ன என ஒதுக்க மனம் வரவில்லை

இந்த உணர்வு ஸ்டீவிர்க்கு முற்றிலும் புதியதாய் இருந்தது. தனக்கு இப்படி தோன்றுகிறது என்றால் அவளிடமும் ஏதேனும் மறுதலிப்பு இருக்க வேண்டுமே என தோன்ற அப்போது தான் அவளை சரியாய் பார்த்தான் ஸ்டீவ்

அதிக வெளுப்பும் இல்லாமல் சிகப்பும் இல்லாமல் இடைப்பட்ட ஓர் நிறம், இவளுக்கென்ற படைக்கப்பட்ட பொருத்தமான நிறம் போல

பார்த்தவுடன் கவனத்தை ஈர்க்கும் பெரிய கண்கள். அதிகம் ஒப்பனை இல்லாத முகம் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தோன்றியது

பேசும் போது கண்கள் / கைகள் செய்யும் அபிநயம் காண கண் இரண்டு போதாதென தோன்றியது

பார்க்க அமைதியான தோற்றமென்றாலும் குறும்பு வழியும் கண்கள், அதுவும் தனக்கு மொழி தெரியாது என நினைத்து வம்பு பேசிய போது அவளறியாமல் சில கணங்கள் மட்டுமே அந்த குறும்பு வழியும் கண்களை பார்க்க கிடைத்தது

மது ஏதோ கேட்க சிறிது முறுவலித்த மீராவின் கன்னங்களில் இருபுறமும் அழகிய சிறு குழி பதிந்தது. எத்தனை பேரை சாய்த்தாளோ இதில் என தோன்றியதும் "ச்சே என்ன விதமான கற்பனை இது?" என தன்னையே கடிந்து கொண்டான் ஸ்டீவ்

சிரிக்கும் போது உதடுகள் மட்டுமின்றி அவள் கண்களும் சேர்ந்து சிரித்த அழகில் மயங்கி நின்றான்

நிச்சியம் எந்த பெண்ணை பற்றியும் தான் இப்படி ஆராய்ச்சி செய்ததில்லை என தோன்றியது ஸ்டீவிற்கு

இந்த ஊர் கலாசாரத்தின்படி பள்ளி / கல்லூரி நாட்களில் காபி டேட் / டின்னெர் டேட் என சில பெண்களுடன் பழகியவன் தான் என்றபோதும் ஏனோ இப்படி ஒரு உணர்வு எப்போதும் தோன்றியதில்லை

தந்தையின் கண்டிப்பான வளர்ப்பால் என்றும் வரம்பு மீறும் தைரியம் இருந்ததில்லை அவனுக்கு, இந்தியர்கள் போல் கலாச்சாரம் சார்ந்த மக்கள் தான் இத்தாலியர்களும்

தந்தையின் நினைவு வந்ததும் அந்த குளிரிலும் அவனுக்கு வியர்த்தது

கண்டிப்பான தந்தையின் முகம் கண் முன் வர, அவர் எதிரில் மீராவுடன் கை கோர்த்து நிற்பது போன்ற காட்சி கண் முன் விரிய, தன்னையும் அறியாமல் புன்னகைத்தான்

"ஏய் ஸ்டீவ்...என்ன முழிச்சுட்டே கனவா?" என மது கேலி செய்ய தன் உணர்வுக்கு வந்தான் ஸ்டீவ்

"ம்...என்ன மது?" என்றவன் சிரமத்துடன் மீராவிடமிருந்து பார்வையை விலக்கினான்

"ஒண்ணுமில்ல...சாப்பிடாம முழிச்சுட்டு இருக்கியேனு கேட்டேன்" எனவும்

"ம்...சாப்பிடறேன்" என்றான்

"எனக்கு தான் நம்ப முடியல மீரா இன்னும், கொஞ்சம் முன்னாடி ஸ்டீவை அப்படி எல்லாம் வம்பு பேசி இருப்பேன்னு... பாக்கறதுக்கு செம அமைதியான பொண்ணு மாதிரி இருக்க" என மது கேலி செய்ய, மீரா என்ன பதில் கூற போகிறாள் என அறிய ஆர்வமாய் காதை கூர்மயாக்கி, சாப்பிடும் பாவனை செய்து கொண்டிருந்தான் ஸ்டீவ்

"ஐயயோ... நீ இவ முகத்த பாத்து அப்படி தப்பான முடிவுக்கெல்லாம் வந்துடாதே மது... சரியான ராட்சசி இவ... உனக்கு தெரியாது" என்றான் சதீஷ் அவசரமாய்

"உன்ன..."என கையில் இருந்த ஸ்பூனை சதீஷ் மேல் வீசினாள் மீரா

"பாத்தியா...நான் சொன்னேன்ல... கோபம் வந்தா ஹிஸ்டீரியா பேஷன்ட் தான்... கைல கெடச்சத தூக்கி போடுவா... அப்படி தான் அப்போ கூட ஸ்டீவ் மேல புக்கை வீசினா...நீயே கேளு ஸ்டீவ்கிட்ட" என இது தான் சமயமென மீராவை வம்புக்கு இழுத்தான் சதீஷ்

"அப்படி எல்லாம் இல்ல மது... எல்லார்கிட்டயும் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன்... சதீஷ் சின்னதுல இருந்தே பழக்கம்ங்கறதால யாரோங்கர எண்ணம் வர்றதில்ல... கோபம் சந்தோஷம் எதுனாலும் இவன்கிட்ட அப்படியே காட்டிடுவேன்... மத்தவங்ககிட்ட கொஞ்சம் reserved தான் நான்" என மீரா தன்னிலை விளக்கம் கூற சாண்ட்விச் பிரட் தொண்டையில் சிக்கி புரை ஏறியது ஸ்டீவிற்கு

"ஏய் ஸ்டீவ்...என்னாச்சு...இந்தா தண்ணி குடி..." என மது அவன் தலையில் தட்ட, சற்று நேரமானது அவன் மூச்சு சீராக

"ஓ...சின்னதுல இருந்தே தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் கசின்ஸ்ஆ?" என மது மீண்டும் பேச்சை தொடங்க, "ஐயோ, இவள் ஏன் இவர்களின் உறவை எல்லாம் துருவி தன் நிம்மதியை கெடுக்கிறாள்" என மதுவின் மீது கோபம் வந்தது ஸ்டீவிற்கு

"இல்ல மது... சதீஷ் அப்பாவும் என் அப்பாவும் பெஸ்ட் பிரெண்ட்ஸ் சின்னதுல இருந்தே... அப்புறம் வளந்தப்புறம் பிசினஸ் பார்ட்னர்ஸ் கூட... இவன் என்னை விட சில மாதங்கள் தான் பெரியவன்... வீடும் அடுத்த அடுத்த ஸ்ட்ரீட் தான்... So, பொறந்ததுல இருந்தே விதியின் சதி ஒரே ஸ்கூல் ஒரே காலேஜ் இப்பவும் தொடருது" என மீரா கூற

"பொய் சொல்றா மது, நம்பாதே... நான் வந்தா தான் கனடா போவேன்னு அடம் பண்ணி சதி பண்ணி என்னை இங்க வர வெச்சது இவ தான்..." என சதீஷ் சலிப்பாய் கூறுவதை போல் கூறினாலும் அவன் குரலில் மீரா தன் மீது கொண்ட அன்பின் பெருமிதத்தை மறைக்க முடியவில்லை

அதை கண்டுகொண்ட ஸ்டீவின் கண்களுக்கு சதீஷ் பரம வைரியாய் தோன்றினான். இதுவரை வாழ்வில் யார் மீதும் இத்தனை துவேசமும் பொறாமையும் தோன்றியதில்லை என நினைத்தான்

அதே நேரம் இதில் சதீஷின் தவறு எதுவும் இல்லையே எனவும் தோன்றியது

இதற்கு மீரா என்ன பதில் சொல்லி வேதனையை கிளற போகிறாளோ என பார்த்திருக்க "அப்படியாச்சும் அவன் உருப்படட்டும்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்" என்றாள் சிரிப்புடன், சிரிக்கும் போது தான் எத்தனை அழகு இவள் என மீண்டும் தோன்றியது

அவளோடு சேர்ந்து மதுவும் சதீஷும் கூட சிரிக்க வேறு வழியின்றி தானும் நகைப்பது போல் நடித்தான் ஸ்டீவ்

அன்று இரவு முழுக்க ஸ்டீவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை

திரும்ப திரும்ப "கோபம் சந்தோஷம் எதுனாலும் இவன்கிட்ட அப்படியே காட்டிடுவேன்" என அவள் கூறியதும் "நான் வந்தா தான் கனடா போவேன்னு அடம் பண்ணி சதி பண்ணி என்னை இங்க வர வெச்சது இவ தான்" என அவன் கூறியதுமே காதில் ஒலித்து தூக்கத்தை விரட்டியது

அவனிடம் மட்டுமே உணர்வுகளை மறைக்காமல் இயல்பாய் இருப்பேன் என அவள் கூறுவதன் அர்த்தம் என்ன? தான் வேறு அவன் வேறல்ல என சொல்லாமல் சொல்கிறாளோ?

அவன் வந்தால் தான் இங்கு வருவேன் என்றாளாமே? அப்படி பிரிந்து இருக்க முடியாத உறவா?

ச்சே... என்ன அவஸ்தை இது? மனதுக்கு பிடித்த பெண்ணையும் கண் முன் காட்டி கூடவே இத்தனை சிக்கல்களுமா என தூக்கம் தொலைத்தான் ஸ்டீவ்

அவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன என அறியும் வரை தனக்கு இனி உறக்கம் இல்லை என நினைத்தான் ஸ்டீவ்

ஆனால் தன் மனதில் இது தான் என தீர்மானமாய் எதுவும் புரியாத போது மற்றவர்களின் உறவில் தலையிட என்ன உரிமை இருக்கிறது என ஒரு மனம் வாதம் செய்தது

இப்படி முன்னுக்கு பின் முரணாய் சிந்தித்து மனம் குழம்பியது தான் மிச்சமானது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான்
 
பார்த்தவிழி பார்த்தபடி
பரம்பொருளாய் ஆனதென்ன
எனையே நான்மறக்க
என்ன மாயம்செய்தாயோ!!!

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

அடுத்த பகுதி படிக்க...


...

87 பேரு சொல்லி இருக்காக:

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

வடை

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

என்ன இது கதை அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை.
steve க்கு மீரா மேல காதல் வந்துருச்சுன்னு எங்க எல்லோருக்கும் தெரியுமே.
இதுவும் ஒரு மெகா சீரியல் தான் போல.

சௌந்தர் said...

பார்க்க அமைதியான தோற்றமென்றாலும் குறும்பு வழியும் கண்கள், அதுவும் தனக்கு மொழி தெரியாது என நினைத்து வம்பு பேசிய போது அவளறியாமல் சில கணங்கள் மட்டுமே அந்த குறும்பு வழியும் கண்களை பார்க்க கிடைத்தது////

அட அட என்னாமா சொல்றிங்க சூப்பர் படத்தில் ஹிரோயின் காட்டுவது போல பாவம் ஸ்டீவ் அவன் தூக்கம் தினம் கெட்டு போகுது.....

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ஒருவரை நேசிக்க ஆரம்பித்தால் அவங்க என்ன செய்தாலும் ரசிப்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

அருள் சேனாபதி said...

கவிதையும் கலக்கல்

அனாமிகா துவாரகன் said...

//என்ன இது கதை அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை.
steve க்கு மீரா மேல காதல் வந்துருச்சுன்னு எங்க எல்லோருக்கும் தெரியுமே.
இதுவும் ஒரு மெகா சீரியல் தான் போல//

This is cheating. Write a new episode NOW!

அனாமிகா துவாரகன் said...

Yes yes. This is cheating. Write a new episode NOW!

priya.r said...

நல்ல பதிவு அப்பாவி !

அப்பாவி நீ ஒரு வல்லவி நல்லவி...உன்னை போல யாருமில்ல...
நாளும்(இன்னைக்கு செவ்வாய் ) தெரிந்தவ ;நானுறும்(புற நானுறு அக நானுறு ) தெரிந்தவ
அவ சிரிப்பு கதை எழுதறதில ஒரு பாக்கியம் ராமசாமி ;அவ காதல் கதை எழுதறதுல ஒரு ரமணி சந்திரன் ;கவிதைல ஒரு தாமரை !
அவ பயண கட்டுரை எழுதறதில ஒரு பொதிகை தென்றல் ;அவ சமையல் கட்டுரை எழுதினா அவளுக்கு நிகர் அவளே தான்;(ஏன்னா கேசரி பத்தி ஒரே ஒரு பதிவு மட்டுமே போட்டு பந்தா பண்ணி கிட்டு இருக்கா!! ) போதுமா !திருப்தியா !
பெருமாளே ! பொய் சொன்னதுக்கு இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுக்கோ !!

அனாமிகா துவாரகன் said...

Priyakka, Love you.

கோவை ஆவி said...

Going very slow!!

கல்பனா said...

சற்று முன் வரை யாரென்றே அறியாத ஒரு பெண்ணிடம் யாரோ ஒருவன் உரிமையுள்ளவனாய் இருந்தால் தனக்கென்ன என ஒதுக்க மனம் வரவில்லை //

செம கலக்கலான உணர்வு !!! ரொம்ப சில்லு னு இருக்கு லவ் ஸ்டோரி

எஸ்.கே said...

ரொம்ப ரசிச்சு எழுதறீங்க!

Porkodi(பொற்கொடி) said...

ரமணி சந்திரன் க்ளோன் வாழ்க வாழ்க!ன்னு கோஷம் போட்டுட்டு நான் உக்காந்துக்கிறேன்.

(நீங்க அதே மேட்டரை திருப்பி புது பதிவா போட்டா நானும் அதே கமெண்டை தான் போட்டாகணும்.. எ.கொ.ச.இ?)

அமைதிச்சாரல் said...

நான் கவிதையை மட்டும் படிச்சுக்கிறேன் :-))))

முனியாண்டி said...

ஒரு ஆணின் பார்வையில் இருந்து ஒரு பெண்ணை மிகவும் அழகாக வர்ணித்து இருகிங்க.

Mahi said...

நல்ல வர்ணணை புவனா! ஆனா கதை மெதுவா நகர்வது போலதான் இருக்கு! ;)

priya.r said...

@ OO7 Ana

Me too dear!

Yours
OO8
இப்படிக்கு பெயர் சொல்லாத பிரியா

Gayathri said...

hai kadhal sevvaila marandhuten,
enna akka mega serial mari kutti kuttiya solrenga jamnu namma priyamaanavale style la sollunga..

asaiya okkandu padikren blubidatheenga please

vinu said...

அதிக வெளுப்பும் இல்லாமல் சிகப்பும் இல்லாமல் இடைப்பட்ட ஓர் நிறம், இவளுக்கென்ற படைக்கப்பட்ட பொருத்தமான நிறம் போல

பார்த்தவுடன் கவனத்தை ஈர்க்கும் பெரிய கண்கள். அதிகம் ஒப்பனை இல்லாத முகம்

பேசும் போது கண்கள் / கைகள் செய்யும் அபிநயம் காண கண் இரண்டு போதாது

பார்க்க அமைதியான தோற்றமென்றாலும் குறும்பு வழியும் கண்கள், அதுவும் வம்பு பேசிய போது அவளறியாமல் சில கணங்கள் மட்டுமே அந்த குறும்பு வழியும் கண்கள்

மது ஏதோ கேட்க சிறிது முறுவலித்த மீராவின் கன்னங்களில் இருபுறமும் அழகிய சிறு குழி

சிரிக்கும் போது உதடுகள் மட்டுமின்றி அவள் கண்களும் சேர்ந்து சிரித்த அழகில்


ivolvuuuuuuuuuuuuu alagaavaa mathuvai padaippeenga. mathuvin alagil mayangiyathu steve mattumalla naangalumthaaaaaaaaaaaaaaan

தோழி பிரஷா said...

ரொம்ப ரசித்து எழுதுகின்றீர்கள்...

priya.r said...

@Mahi

எனக்கும் கூட அது தான் தோணிற்று மகி
இந்த அப்பாவி ப்ளைட் வேகத்தில் வேண்டாம்; குறைந்தது ஒரு கார் வேகத்தில் கதையை கொண்டு போலாம் !
ஏன் ரோடு ரோலர் வேகத்தில் கதையை கொண்டு போறாங்கன்னு !

priya.r said...

@ பொற்கொடி !
நீங்களே இப்படி சொன்னா எப்படி !
போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்க பாஸ் என்று நகைச்சுவை பின்னூட்டங்களை எழுதி எங்களை போன்றோர்க்கு ஒரு தூண்டு கோலாகவும் இருக்கிற நீங்களே இப்படி சொன்னா எப்படி (லேடி )பாஸ்!

priya.r said...

அனாமிகா ! ஒரு விசயத்துக்கு நீ எனக்கு அனுமதி கொடுத்தே ஆகோணும் !
எனக்கு கவிதைன்னா ரொம்ப புடிக்கும்
//பார்த்தவிழி பார்த்தபடி
பரம்பொருளாய் ஆனதென்ன
எனையே நான்மறக்க
என்ன மாயம்செய்தாயோ!!!//

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)
என்னமா எழுதறீங்க புவனா ! இது சொந்த கவிதையா ;இல்லை சுட்ட கவிதையா !
எதுவாக இருந்தாலும் பரவா இல்லை .,சூப்பர் வரிகள் !

priya.r said...

சொல்ல மறந்துட்டேன் அப்பாவி ! கவிதையோட அந்த கடைசி வரிகள் (ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)
என்னை தூங்க விட்டாமல் ரெம்ப டிஸ்டர்ப் செய்யுதுப்பா !
அந்த எதுகை மோனை! கடைசியில் முடியும் ம் என்ற அந்த இனிமையான எழுத்து !
ரெம்பா ரெம்பா நல்ல இருக்கு அப்பாவி., :)

priya.r said...
This comment has been removed by the author.
Krishnaveni said...

Appavi, ovvoru postukkum jillunu snow oda oru photo podunga

Porkodi(பொற்கொடி) said...

// நீங்களே இப்படி சொன்னா எப்படி (லேடி )பாஸ்! //

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. ஆமா நீங்க இப்பல்லாம் என் ப்லாக் பக்கம் வர்றது இல்லல்ல? அப்புறம் என்னத்துக்கு, நான் உங்க கூட டூ!

Balaji saravana said...

மீராவ பத்தி விவரிச்சது ரொம்ப அழகு! ;)

vgr said...

tsk..tsk..tsk...

kaadal mazhaiyil nanainthu
kaainthu vadinen
kasi rameswaram polamena
kappal thedugiren.

AT, ennama idu...romance'a pizhinju pizhinju thalreenga...

எல் கே said...

@போர்க்கொடி
வேணும்னா நான் சப்போர்ட் பண்றேன். நான் இங்க எண்ட கமென்ட் போட்டாலும் அப்பாவி எனக்கு ஒரு இட்லி பார்சல் பண்ணிடுவாங்க. சோ நான் அமைதியா இருக்கேன்

எல் கே said...

//ஏன் ரோடு ரோலர் வேகத்தில் கதையை கொண்டு போறாங்கன்னு ! //

hihi

பத்மநாபன் said...

காதலில் கசிதலும்...பொறாமை புகைச்சலும் உணர்வுகள்.... எழுத்தில் நன்றாக வருகிறது...

பார்த்த விழி கவிதையும் அம்சம்...

sultanonline said...

ரொம்ப slowவா போகுது ஒருtwist ஒருturning point இருந்தா கொஞ்சம்intresting இருக்கும்.ஏன்னா? மீரா மேல காதல் வந்ததை part 2ல சொல்லிடீங்க அதான் சொன்னேன்..!

ஆனந்தி.. said...

//பார்த்தவிழி பார்த்தபடி
பரம்பொருளாய் ஆனதென்ன
எனையே நான்மறக்க
என்ன மாயம்செய்தாயோ!!//

இதோடா...:))) இயல்பான நடையில் கொண்டு போறீங்க..போகட்டும்..போகட்டும் ரைட்..ஆமாம்..எப்போ ஸ்டாப் வரும் அப்பாவி பெண்ணே..:)))

தங்கம்பழனி said...

///பார்த்தவிழி பார்த்தபடி
பரம்பொருளாய் ஆனதென்ன
எனையே நான்மறக்க
என்ன மாயம்செய்தாயோ!!!/

விழியில் விழுந்து இதயம் நுழைந்து.. உயிரில் கலந்த உறவே.. வரிகளை ஞாபகப்படுத்துகிறது.. எழுத்தின் தன்மை ஏறு நடை போடுகிறது.. ! படித்தேன் ரசித்தேன்..வாழ்த்துக்கள்..! தொடருங்கள் தங்கமணி..!

Arun Prasath said...

கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிக்குது... அப்டியே மீரா steve பத்தி என்ன நெனைகரான்னு சொல்லிடலாமே

Lakshmi said...

மிக ரசனையான எழுத்து நடை.

சி.பி.செந்தில்குமார் said...

>>>பேசும் போது கண்கள் / கைகள் செய்யும் அபிநயம் காண கண் இரண்டு போதாதென தோன்றியது


i like it

சே.குமார் said...

கதை நல்லாப் போகுது. கடைசியில் வரும் கவிதை கலக்கல்.

ஹுஸைனம்மா said...

நீங்களும் எகஸாம்ல என்னைப்போல படிக்காமலே 30 பக்கம் எழுதுற ஆள்தானோ?

எக்ஸாம்ல, நீங்க ஏதாவது ஒரு பொருளை (எலெக்ட்ரானிக் அல்லது மெக்கானிக்கல் அல்லது கம்ப்யூட்டரை) எப்படி விவரிச்சுருப்பீங்கன்னு நினைச்சுப் பாத்துக்கிறேன்!!

தக்குடு said...

@ - ஹலோ இப்பிடி பாதாதி கேசம் வர்ணிச்சுண்டே இருந்தா போதுமா, சைக்கிள்ல போறவன் எல்லாம் உங்களை முந்திண்டு போறான், நடந்து போறவன் 2 அடி வேகமா நடந்தா உங்க கதையை overtake பண்ணிடலாம்//னு எல்லாம் நான் சொன்னாலும் அடுத்த பகுதிலையும் //மதுமிதாவா இல்லை மது இதழா? என்று மயங்கினான் ஸ்டீவ்//னு தான் கொண்டு போவேள்..;PP

@ VGR - எங்க ஊர் பக்கமெல்லாம் //டசக்கு டசக்கு டசக்கு டும் டும்!//னு ஒரு கோரஸ் உண்டு, உம்ம கமண்ட் பாத்ததும் அது ஞாபகம் வந்துடுத்து...:)

priya.r said...

யாரோ பதிவு ஜோசியராம் !நம்ம அப்பாவி கதையோட வெற்றிக்கும் நிறைய கமெண்ட்ஸ் வர்றதுக்கும் என்ன வழின்னு(படிப்பவர்களுக்கு அது வலி அப்படிங்கறது வேற விஷயம் !)கேட்டு இருக்காங்க !!அவங்க ஏதோ இப்படி சொல்லி இருப்பாங்க போல தெரியுது !

"கதைய இந்த தேதில வெளியிட போறேன்னு விளம்பர படுத்து ! அதிலேயே எதிர்பார்ப்பு எகிறுடும் !

அப்புறம் பதிவு போட்ட அப்புறம் ஒன்றிரண்டு நாட்கள் பின்னூட்டதுக்கு பதிலே போடாதே!! ஓரமா facebook இல இருந்து கிட்டு வாட்ச் பண்ணு ! முதல்லே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் வந்து பதில் கிடைக்காமல், வந்ததுக்கு இன்னும் பின்னூட்டங்கள் போட்டு

அதிலே நல்லா இருக்கும் கமெண்ட்ஸ் களுக்கு அவங்களே பதிலும் போட்டு இப்படி அப்படி ஒரு 40 , 50 , 60 தேறிடும் .,நீ அதுக்கு பதில் போட்டா அப்படியே 80 ௦, 100 ,120 தாண்டிடும் !! நீயும் பிரபலமாவே ! உன்ர கதையும் பிட்சுகிட்டு ஓடும் "

பின் குறிப்பு : அனாமிகா ஒன்னும் இந்த மேட்டரை தரலை ! தரலை !!

வெறும்பய said...

rompa nallaayirukku..

middleclassmadhavi said...

அடுத்த பகுதி எப்போ? ரெடியா? இல்லை, பகுதி-3 போல - தமிழ் ஸீரியல் போல ஓட்டப் போகிறீர்களா?.. ஸ்டீவின் தமிழ்ப் புலமை அபாரம்!!

அனாமிகா துவாரகன் said...

யோவ் பிரியாக்கா, நான் எதுவுமே சொல்லல. எதுக்கு கோத்து விடறீங்க. அவ்வ்வ்வ்வ்வ். நீங்க பிரண்டா எனிமியா? நேக்கு ஒரு டவுட்டு =((

priya.r said...

இல்லை கண்ணு ! அப்பாவி உன் மேல ஏதும் சந்தகமே பட கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் தானப்பா!
அப்பாவியை எதிர்த்து எந்த கமெண்ட்ஸ் வந்தாலும் உன் மேல தான் முதல்ல சந்தேக படறாங்க !
நான் உனக்கு தான் நண்பி ! நண்பி !

priya.r said...

@அனாமிகா
இன்னுமா ஏன் மேல சந்தேகம் போகலே !
நான் என்னைக்காவது உன்னைய சந்தேக பட்டு இருக்கேனா!
உன்னோட தோழி தான்! தோழி தான்!
இப்படிக்கு அப்பாவி அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - //வடை// - உங்களுக்கே...................
என்னங்க இது சேரன் எக்ஸ்பிரஸ்ஆ? கொஞ்சம் மெதுவாதான் போகும்... ஹா ஹா

@ சௌந்தர் - அப்படி தான் ஸ்டீவ் சொல்றார் சௌந்தர்... தேங்க்ஸ்

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ அருள் சேனாபதி - மிக்க நன்றிங்க

@ அனாமிகா துவாரகன் - ஹா ஹா... why டென்ஷன் அனாமிகா? டோன்ட் வொர்ரி... அடுத்த கதை மொத்தமா எழுதி பூக்கா வெளியிடுவோம்... டீலா? நோ டீலா? ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - எல்லாம் சொல்லிட்டு கடைசீல அதென்ன பெருமாள்கிட்ட ஒரு confession.... அது மட்டும் delete பண்ணிட்டேன் என் மைண்ட்ல இருந்து...So, சூப்பர் கமெண்ட்... ஹா ஹா ஹா

//கவிதைல ஒரு தாமரை//
இந்த மேட்டர் தாமரைக்கு தெரியுமா? பாத்து யாராச்சும் கேஸ் போட்டுட போறாங்க அக்கோவ்... ஜாமீன் எடுக்கற தூரத்துல கூட இல்ல நான்... ஹா ஹா

//ஏன்னா கேசரி பத்தி ஒரே ஒரு பதிவு மட்டுமே போட்டு பந்தா பண்ணி கிட்டு இருக்கா//
நான் என்ன வெச்சுகிட்டா வஞ்சன பண்றேன்... ஏழைக்கேத்த எள்ளுருண்டை, அப்பாவிகேத்த ஆப் பாயில்னு போகுது லைப்... ஹா ஹா ஹா...

//அவ பயண கட்டுரை எழுதறதில ஒரு பொதிகை தென்றல்//
அது யாரு பொதிகை தென்றல்... நெஜமாவே டவுட்...

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் - //Priyakka, Love you.// ஆஹா... டப்பு டப்புன்னு கட்சி மாறுதே இந்த பொண்ணு... சூப்பர்... ஹா ஹா

@ கோவை ஆவி - எஸ் எஸ்... சேரன் எக்ஸ்பிரஸ்க்கு தகவல் குடுத்து இருக்கேன்... இனி ஸ்பீட் எடுக்கும்... தேங்க்ஸ் ஆனந்த்

@ கல்பனா - ரெம்ப நன்றிங்க கல்பனா

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - ஆமாங்க... ரசிச்சா தான் எழுத முடியும்... நன்றி

@ Porkodi(பொற்கொடி) - this is chitti robo speaking... duplicate comment detected... grrr..grrr..grrr.... (ஏன்பா...கஷ்டப்பட்டு எழுதினா அதேனு சொல்றது என்ன அநியாயம் இது? இந்த நாட்டமை எங்க போனாரு? ஒரு தீர்ப்ப சொல்லுங்க யாராச்சும்...ஹா ஹா)

@ அமைதிச்சாரல் - ஏங்க? கதை அவ்ளோ கேவலமாவா இருக்கு? அவ்வ்வ்வவ்வ்வ்....

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - அப்பாடா... ஒருவழியா நான் யாராச்சும் சொல்லுவாங்களானு எதிர்பாத்த கமெண்ட்... மிக்க நன்றிங்க

@ Mahi - தேங்க்ஸ் மகி... இப்போ தானே ஆரம்பம்... இனி வேகம் எடுக்கும்... நன்றிப்பா...

@ priya.r - போச்சுடா... இதுல code language வேறயா? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - அடப்பாவி... மறந்துட்டயா? டூ bad காயத்ரி...
//jamnu namma priyamaanavale style la sollunga // ட்ரை பண்றேன் காயத்ரி... ஒரு வேள ஹீரோயன் பேரு காயத்ரி இருந்துருந்தா கதை களை கட்டி இருக்குமோ பிரியமானவளே போல... ஹா ஹா ...

@ vinu - ஆஹா... வினு... நீங்க மயங்கினதெல்லாம் சரி... ஆனா அது மது இல்ல மீரா... மது இன்னொருத்தி... குடும்பத்துல கொழபத்த உண்டு பண்ணிடுவீங்க போல இருக்கே... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா

@ தோழி பிரஷா - ரெம்ப நன்றிங்க தோழி

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//ஏன் ரோடு ரோலர் வேகத்தில் கதையை கொண்டு போறாங்கன்னு //
அது தான் கை வசம் இருக்கு... ஒரு flight இல்ல பஸ் ப்ரியா அக்கா வாங்கி குடுத்தப்பறம் அந்த வேகம் வரும்... ஹா ஹா ஹா

//எங்களை போன்றோர்க்கு ஒரு தூண்டு கோலாகவும் இருக்கிற நீங்களே இப்படி சொன்னா எப்படி (லேடி )பாஸ்!//
லேடி பாஸ்... ஹா ஹா ...சூப்பர்... பொற்கொடி உனக்கு ஏத்த பெயர்...

//இது சொந்த கவிதையா ;இல்லை சுட்ட கவிதையா//
அடபாவிங்களா... கஷ்டப்பட்டு கற்பனை குதிரைய தட்டி விட்டு எழுதினா, பெரிய ஒளவையார் ரேஞ்சுல சுட்ட கவிதையா சுடாத கவிதையானு? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....

//அந்த எதுகை மோனை! கடைசியில் முடியும் ம் என்ற அந்த இனிமையான எழுத்து! ரெம்பா ரெம்பா நல்ல இருக்கு அப்பாவி., :) //
இனியும் உங்கள நம்பறதா இல்லை நான்... ஒரே வஞ்சபுகழ்ச்சியா போச்சு வர வர இந்த அக்கா கமெண்ட்ஸ் எல்லாமும்... ஹா ஹா அஹ...

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - வாவ்...சூப்பர் ஐடியா வேணி... அடுத்த போஸ்ட்ல இருந்து செயல்படுத்திடறேன்...ரெம்ப தேங்க்ஸ்ப்பா...

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi(பொற்கொடி) -
//இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. //
ஹா ஹா ஹா... இதெல்லாம் சகஜமப்பா... சாதா"ரண"மப்பா...

//ஆமா நீங்க இப்பல்லாம் என் ப்லாக் பக்கம் வர்றது இல்லல்ல? அப்புறம் என்னத்துக்கு, நான் உங்க கூட டூ! //
அவங்க பொற்கொடி ப்ளாக் வராத விரதமாம்... ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்... நோ டென்ஷன்...

அப்பாவி தங்கமணி said...

@ Balaji saravana - ரெம்ப நன்றிங்க...

@ vgr - ஹி ஹி ஹி... ஏதோ என்னால ஆனது... உங்கள செலவில்லாம ராமேஸ்வரம் கூட்டிட்டு போகலாம்னு தான்... ஹா ஹா ஹா

@ எல் கே - கூட இருந்தே குழி பறிக்கும் ப்ரூட்டஸ்... grrrrrrrrrrrrrrrrr....(ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

@ sultanonline - கொஞ்சம் எதார்த்தமா எழுதணும்னு இப்படி எழுதினேங்க... இல்லேனா ரெம்ப சினிமாத்தனமா இருக்குமோனு தோணுது... உங்க கருத்துக்கு ரெம்ப நன்றி... இனி கொஞ்சம் வேகமா எழுத முயற்சி செய்யறேன்... நன்றி மீண்டும்... முதல் வருகைக்கும்...

@ ஆனந்தி.. - தேங்க்ஸ்ங்க ஆனந்தி... ஸ்டாப்??????? அப்படின்னா???????? (ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - ரெம்ப நன்றிங்க

@ Arun Prasath - நன்றிங்க... //அப்டியே மீரா steve பத்தி என்ன நெனைகரான்னு சொல்லிடலாமே// கண்டிப்பா அருண்... மீரா என்கிட்ட சொன்னதும் நானும் உங்ககிட்ட சொல்லிடறேன்... I'm just a mediator you know? ha ha ha

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க லக்ஷ்மிம்மா...

அப்பாவி தங்கமணி said...

@ சி.பி.செந்தில்குமார் - நன்றிங்க

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா -
//நீங்களும் எகஸாம்ல என்னைப்போல படிக்காமலே 30 பக்கம் எழுதுற ஆள்தானோ?//
ஹா ஹா ஹா...கரெக்டா கண்டுபுடிச்சுட்டீங்க அக்கா... same blood....

//எக்ஸாம்ல, நீங்க ஏதாவது ஒரு பொருளை (எலெக்ட்ரானிக் அல்லது மெக்கானிக்கல் அல்லது கம்ப்யூட்டரை) எப்படி விவரிச்சுருப்பீங்கன்னு நினைச்சுப் பாத்துக்கிறேன்!!//
இந்த வம்பே வேண்டாம்னு தான் நான் ஆர்ட்ஸ் குரூப் எடுத்தது... Art is got more scope to twindle and drag for pages you know... ha ha ha... இப்படி பலரும் கேக்கற வித்தியாசமான விளக்கங்கள் வெச்சே ஒரு பதிவு தேத்தலாமானு கூட ஒரு ஐடியா இருக்கு... ஹா ஹா ஹா... நோ டென்ஷன்...

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு -
//மதுமிதாவா இல்லை மது இதழா? என்று மயங்கினான் ஸ்டீவ்//னு தான் கொண்டு போவேள்..;ப
நான் எழுதறது இருக்கட்டும்... நீ என்ன கதையவே மாத்தற... ஸ்டீவ் லவ் பண்றது மீரானு தானே சொல்லிட்டு இருக்கேன்... நீ மதுவை உள்ளே இழுக்கறியே... பாத்து தக்குடு மீரா கேஸ் போட்டுட போறா... ஹா ஹா அஹ...
(ஒருவேள கதைல ரெம்ப மெய் மறந்து பேரு எல்லாம் confuse ஆகிடுச்சோ.. ஹா ஹா ஹா)

//@ VGR - எங்க ஊர் பக்கமெல்லாம் //டசக்கு டசக்கு டசக்கு டும் டும்!//னு ஒரு கோரஸ் உண்டு, உம்ம கமண்ட் பாத்ததும் அது ஞாபகம் வந்துடுத்து...:) //
அதென்ன //டசக்கு டசக்கு டசக்கு டும் டும்!//? கொஞ்சம் விளக்கமாதான் சொல்றது...? (ம்ம்ம்... எப்படி எல்லாம் கமெண்ட் கவுன்ட் ஏத்த வேண்டி இருக்கு... ஹா ஹா)

Your comment for last post still makes me laugh... ha ha

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//படிப்பவர்களுக்கு அது வலி அப்படிங்கறது வேற விஷயம் //
Again ப்ரியா ப்ரூட்டஸ்... grrrrrrr .....

//கதைய இந்த தேதில வெளியிட போறேன்னு விளம்பர படுத்து ! அதிலேயே எதிர்பார்ப்பு எகிறுடும்//
அக்கோவ்... ரகசியம் ரகசியமாத்தான் இருக்கணும்... இப்படி போட்டு உடைச்சா என்ன அர்த்தம்? (ஹா ஹா ஹா)

//அப்புறம் பதிவு போட்ட அப்புறம் ஒன்றிரண்டு நாட்கள் பின்னூட்டதுக்கு பதிலே போடாதே!! ஓரமா facebook இல இருந்து கிட்டு வாட்ச் பண்ணு ! முதல்லே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் வந்து பதில் கிடைக்காமல், வந்ததுக்கு இன்னும் பின்னூட்டங்கள் போட்டு//
ஐயையோ... இப்படி தொழில் ரகசியம் எல்லாம் புட்டு புட்டு வெக்கறாங்களே... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா? (chanceless கமெண்ட் அக்கா...still laughing ... ஹா ஹா ஹா)

//பின் குறிப்பு : அனாமிகா ஒன்னும் இந்த மேட்டரை தரலை ! தரலை//
நல்ல கூட்டணி... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க

@ middleclassmadhavi - அடுத்த பகுதி அடுத்த செவ்வாய்கிழமை... தமிழ் சீரியல் எல்லாம் இல்லிங்க... அதை விட கொஞ்சம் வேகமாய்... ஸ்டீவ்கிட்ட உங்க பாராட்டை சொல்லிடறேன்... தேங்க்ஸ்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - நல்ல டவுட் உனக்கு... ஹா ஹா ஹா...

@ priya.r -
//அப்பாவியை எதிர்த்து எந்த கமெண்ட்ஸ் வந்தாலும் உன் மேல தான் முதல்ல சந்தேக படறாங்க //
இதுக்கு பேரு தான் கோத்து விடறது... ஹா ஹா ஹா...சூப்பர் ப்ரியா அக்கா... நான் சொன்ன மாதிரியே செய்யற நீ... ஹா ஹா அஹ

Porkodi(பொற்கொடி) said...

appavi, naan enna panradhu, neenga kashta pattu ezhudradhu naala thaan padikarom!! ana story erumai maadu mela mazhai penja madhri konjam kooda soranaiye illama irukke!!! nagarthunga puhleeease! :)

Dubukku said...

அப்பாவி இன்னிக்குத் தான் பழசெல்லாம் படிச்சு முடிச்சேன். காதல் டயலாக்குலல்லாம் குளிச்சு முத்தெடுத்திருக்கீங்க போல. நல்லா இருக்கு நடத்துங்க :)) வாழ்த்துகள். அடுத்த கட்டத்துக்கு சீக்கிரம்...வெயிட்டிங்

RVS said...

//@ - ஹலோ இப்பிடி பாதாதி கேசம் வர்ணிச்சுண்டே இருந்தா போதுமா, சைக்கிள்ல போறவன் எல்லாம் உங்களை முந்திண்டு போறான், நடந்து போறவன் 2 அடி வேகமா நடந்தா உங்க கதையை overtake பண்ணிடலாம்//னு எல்லாம் நான் சொன்னாலும் அடுத்த பகுதிலையும் //மதுமிதாவா இல்லை மது இதழா? என்று மயங்கினான் ஸ்டீவ்//னு தான் கொண்டு போவேள்..;PP//
:-) ;-) ;-) ;p;p;p LOL...

தக்குடு உன் அலப்பறையை அப்பாவிகிட்ட காட்டணுமா... காதல் வெள்ளம் ஊற்றேடுக்கும்போது அணை போடாதே... கன்னக் குழிகளில் எத்தனை பேரை சாய்த்தாளோ அப்படின்னு மீராவின் கண்ணன் ஸ்டீவ் நினைக்கும்போது கிக்கா இல்லை. மெகா சீரியல் டீவில தான் பார்ப்பீங்களா.. (ஐயையோ சேம் சைட் கோல் போட்டுட்டேனா? ஸாரி!!! )
தொடரும் கார்டுக்கு முன்னாடி கவிதை வேறயா.. தாக்குங்க.. ;-)
நல்லா இருக்கு.. ரைட் ரைட்..

VELAN said...

Kathai Arumai

அனாமிகா துவாரகன் said...

//. நான் சொன்ன மாதிரியே செய்யற நீ... ஹா ஹா அஹ //

.இதோ பாருங்க இட்லி மாமி இந்த மாதிரியா ஸ்டேட்மென்டுக்கெல்லாம் நாங்க அசைய மாட்டோம். எங்களேயேவா? அஸ்கு புஸ்கு.

priya.r said...

கமெண்ட்ஸ் போட விடாமே இந்த அப்பாவி ப்ளாக் தகராறு பண்ணுது அனா

அனாமிகா துவாரகன் said...

அவங்களுக்கு நம்ம கம்ன்ட்ஸ் தானே ரேட்டிங். அப்புறம் எங்கள Block பண்ணுவாங்கனு நினைக்கறீங்க. ஹி ஹி ஹி

priya.r said...

//. நான் சொன்ன மாதிரியே செய்யற நீ... ஹா ஹா அஹ //

//.இதோ பாருங்க இட்லி மாமி இந்த மாதிரியா ஸ்டேட்மென்டுக்கெல்லாம் நாங்க அசைய மாட்டோம். எங்களேயேவா? அஸ்கு புஸ்கு.// நல்லா சொன்னே அனா .,தேங்க்ஸ்டா கண்ணா !

நாம மோதறது சாதாரண ஆளு கிட்டே இல்லே !

புஜ பல பராகிரமம் வாய்ந்த ,வல்லமை படைத்த ஒரு அதிசய பெண்ணிடம் என்பதை நாம ரெண்டு பேரும் மறக்க வேண்டாம்!!

priya.r said...

அவங்களுக்கு நம்ம கம்ன்ட்ஸ் தானே ரேட்டிங். அப்புறம் எங்கள Block பண்ணுவாங்கனு நினைக்கறீங்க. ஹி ஹி ஹி

ட்சேசே! நான் அப்பாவியை சொல்லலே ! என்ன நம்மை எதிர்த்தாலும் புவனா ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை (ஹலோ புவனா ! இந்த பேர்ல ஏற்கனவே RC கதை எழுதிட்டாங்க !நீ பாட்டுக்கு அடுத்த கதைக்கு தலைப்பு கிடைச்சாச்சுன்னு நினைச்சுக்க வேண்டாம் )

நான் ப்ளாக்லா தான் எதோ updates பிரச்சனை என்று சொன்னேன்பா

எல் கே said...

அனாமிகா / ப்ரியா
உங்க ரெண்டு பேருக்கும் நான் சப்போர்ட் பண்றேன்.

அனாமிகா துவாரகன் said...

கார்த்தி சார், உங்களுக்கு 009 என்ற கோட் தந்து கௌரவிக்கிறோம்.

அனாமிகா துவாரகன் said...
This comment has been removed by the author.
அமைதிச்சாரல் said...

அப்பாவி,.. அவங்க சாப்ட்டு முடிக்கிறவரை வேற என்னதான் பண்றது?? கூப்ட்டு ஒரு வாய் பர்கர் வாங்கி கொடுக்காம அரட்டை அடிச்சிட்டிருக்காங்க ;-))

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi(பொற்கொடி) - தங்கள் சித்தம் என் பாக்கியம்... யாரு அந்த பாக்கியம்னு கேப்பியோ? ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... Thanks for your comments...will improvise Kodi...

அப்பாவி தங்கமணி said...

@ Dubukku - வருக வருக... உங்க "...ள்ளி திரிந்த காலம்" பதிவெல்லாம் விட நான் என்னங்க குளிச்சு முத்தெடுக்கறது... ஹா ஹா அஹ... ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ RVS - ஆஹா... மீராவின் கண்ணன் ஸ்டீவ்... இது நல்லா இருக்கே... ஹா ஹா ஹா... தக்குடு சும்மா சொல்றது தான்... மீராவ பத்தி மினிமம் பத்து வாட்டி படிச்சு இருப்பார்...கரெக்ட் தானே தக்குடு... மெனி தேங்க்ஸ் RVS அண்ணா...

அப்பாவி தங்கமணி said...

@ VELAN - நன்றிங்க வேலன்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஹா ஹா ... ஒகே நோ டென்ஷன்...

@ priya.r - ஆஹா... அதான் இன்னிக்கி நெறைய கமெண்ட் இல்லையோ (ஹா ஹா )

@ அனாமிகா - அடப்பாவி நான் ஏன் உங்கள பிளாக் பண்ண போறேன்... ஹா ஹா ஹா

@ priya.r - ஹா ஹா ஹா...சூப்பர் ப்ரியா அக்கா...

@ எல் கே - அடப்பாவி... நீயெல்லாம் ஒரு பிரதர்? ப்ரூட்டஸ்...

@ அனாமிகா - LK க்கு code வேறயா? பெரிய நெட்வொர்க் form பண்றீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - இருங்க ஒரு பார்சல் அனுப்பறேன்... ஏன் ஓடறீங்க? நீங்க தானே கேட்டீங்க? ஹா ஹா ஹா...

Jaleela Kamal said...

ஜில்லுன்னு ரொம்ப ஜாலியா இருக்குபபா

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal - Many thanks

Post a Comment