Tuesday, January 18, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 4)

இப்படி ஜில்லுனு படம் போடலாமேன்னு ஐடியா குடுத்த கிருஷ்ணவேணிக்கு Special தேங்க்ஸ்

பகுதி 1   பகுதி 2   பகுதி 3

அன்று இரவு முழுக்க ஸ்டீவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை

திரும்ப திரும்ப "கோபம் சந்தோஷம் எதுனாலும் இவன்கிட்ட அப்படியே காட்டிடுவேன்" என அவள் கூறியதும் "நான் வந்தா தான் கனடா போவேன்னு அடம் பண்ணி சதி பண்ணி என்னை இங்க வர வெச்சது இவ தான்" என அவன் கூறியதுமே காதில் ஒலித்து தூக்கத்தை விரட்டியது

அவனிடம் மட்டுமே உணர்வுகளை மறைக்காமல் இயல்பாய் இருப்பேன் என அவள் கூறுவதன் அர்த்தம் என்ன? தான் வேறு அவன் வேறல்ல என சொல்லாமல் சொல்கிறாளோ

அவன் வந்தால் தான் இங்கு வருவேன் என்றாளாமே? அப்படி பிரிந்து இருக்க முடியாத உறவா?

ச்சே... என்ன அவஸ்தை இது? மனதுக்கு பிடித்த பெண்ணையும் கண் முன் காட்டி கூடவே இத்தனை சிக்கல்களுமா என தூக்கம் தொலைத்தான் ஸ்டீவ்

அவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன என அறியும் வரை தனக்கு இனி உறக்கம் இல்லை என நினைத்தான் ஸ்டீவ்

ஆனால் தன் மனதில் இது தான் என தீர்மானமாய் எதுவும் புரியாத போது மற்றவர்களின் உறவில் தலையிட என்ன உரிமை இருக்கிறது என ஒரு மனம் வாதம் செய்தது

இப்படி முன்னுக்கு பின் முரணாய் சிந்தித்து மனம் குழம்பியது தான் மிச்சமானது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான்

தான் இயல்பாய் இருப்பது எனவும் நடப்பது நடக்கட்டும் எனவும் தீர்மானித்தான்

_______________________________

நாட்கள் வேகமாய் நகர்ந்தன. வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகி இருந்தது. மீரா, மது, ஸ்டீவ், சதீஷ் நால்வரும் MBA வில் ஒரே பிரிவு பாடத்தை எடுத்து இருந்ததால் வகுப்பிலும் வெளியிலும் ஒன்றாகவே இருந்தனர்

குறுகிய நாளிலேயே அவர்களுக்குள் நெருங்கிய நட்பு உருவாகி இருந்தது. அவர்களில் ஒருவரை பார்த்தால் மற்ற மூவரையும் விசாரிக்கும் அளவுக்கு அவர்கள் நட்பு வகுப்பில் பிரபலமாகி இருந்தது

ஸ்டீவ் மீராவிடம் தான் அதிகம் ஈர்க்கப்படுவதை உணர்ந்தான், ஆனால் அதை தடுக்க எந்த முயற்சியும் செய்தானில்லை

சதீஷிடம் வன்மம் காட்டாமல் நட்பாய் இருக்க முடிந்ததே பெரிய சாதனையாய் தோன்றியது அவனுக்கு

அன்று வெள்ளிகிழமை, வகுப்புகள் முடிய மாணவர்கள் எல்லாம் அன்று இரவு எங்கு செல்வது, வார இறுதியில் என்ன செய்வது என சந்தோசமாய் திட்டமிட்டபடி நேரம் நகர்ந்து கொண்டு இருந்தது

"மூவி போலாமா எல்லாரும்?" என ஆரம்பித்தான் சதீஷ்

"ஐய... அது போர்" என்றாள் மீரா உடனேயே

"ஏய்... நான் என்ன படம்னே சொல்லல அதுக்குள்ள போர்னு சொல்ற... கொழுப்பு தான" என்றான் சதீஷ் கோபமாய்

"எனக்கு மூணு மணி நேரம் தியேட்டர்ல அடைஞ்சு இருக்கறது புடிக்காதுன்னு உனக்கு தெரியுமல்ல... அப்புறம் ஏன் கேட்டே?" என்றாள் அவளும் விடாமல்

வழக்கம் போல் மீரா அறியாமல் அவள் அபிநயத்தை ரசித்து கொண்டிருந்த ஸ்டீவ், விட்டால் இவர்கள் இருவரும் உரிமையுடன் சண்டை போட்டு தன் மனதை நோக செய்வார்கள் என்பதை கொஞ்ச நாள் அனுபவத்திலேயே உணர்ந்தவனாய் "அப்ப நான் ஒரு ஐடியா சொல்றேன்" என்றான் ஸ்டீவ்

"என்ன?" என்றனர் மற்ற மூவரும் ஒரே குரலில்

"விண்ணை தாண்டி வருவாயா ஒரிஜினல் DVD கிடைச்சது...எல்லாரும் என் அபார்ட்மென்ட் போய் பாக்கலாமா?" என ஸ்டீவ் முடிக்கும் முன்

"அது ரெம்ப ஓல்ட் மூவி...நான் பாத்தாச்சு" என சதீஷ் கூறியது காதிலேயே விழாதது போல்

"நீ பாத்துட்டியா மீரா?" என கேட்டான் ஸ்டீவ், அவள் பாத்திருக்கக்கூடாது என வேண்டியபடியே

"இல்ல ஸ்டீவ்... ஒரிஜினல் DVD வரட்டும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" என்றாள் உற்சாகமாய்

அவள் உற்சாகத்தை கண்டதும் அந்த கணம் ஸ்டீவ் விண்ணை தாண்டாமல் இருந்தது தான் அதிசயம் என அவனுக்கே தோன்றியது

"அப்ப சரி... பிளான் fixed ... நீ என்ன மது சொல்ற?" என ஸ்டீவ் திட்டமிட துவங்கினான்

"ஹலோ, நான் ஒருத்தன் பேசறது காதுல விழுதா இல்லையா உனக்கு?" என கோபமானான் சதீஷ்

"கூல் சதீஷ்... நம்ம த்ரிஷாவுக்காக இன்னொருவாட்டி அதை நீ பாக்க மாட்டியா என்ன?"

"நம்ம த்ரிஷாவா? டேய் ஸ்டீவ்... ஒரு தீவிர அனுஷ்கா ரசிகன பாத்து... என்ன வார்த்த சொன்ன நீ? ஆனாலும் ஒரு இத்தாலிக்காரன் த்ரிஷாவ  எல்லாம் ஞாபகம் வெச்சுக்கற அளவுக்கு தமிழ் சினிமா பாக்கறது கொஞ்சம் ஓவர்" என டென்ஷன் ஆனான் சதீஷ்

"என்ன மது என்ன யோசனை?" என ஸ்டீவ் பதட்டமானான், எப்படியும் இன்று சற்று அதிக நேரம் மீராவுடன் இருக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாதவனாய்

"இல்ல ஸ்டீவ்...அம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களான்னு..." என தயங்க

"டோன்ட் வொர்ரி மது... ஆண்ட்டிகிட்ட நான் பர்மிசன் வாங்கறேன்" என்றான் ஸ்டீவ்

ஸ்டீவ், மதுவிற்கு மட்டுமல்ல அவள் குடும்பத்தாருக்குமே ஐந்து வருடமாய் பழக்கமானவன் தான். உண்மையை மறைத்து பேசாத குணமும், கள்ளமில்லாமல் பழகும் தன்மையும் மதுவின் பெற்றோரிடம் ஸ்டீவ் நம்பிக்கைக்கு உரியவனாய் இருந்தான்

சொன்னது போல் மதுவின் அன்னையிடம் பத்து மணிக்குள் வீட்டிலே கொண்டு வந்து சேர்ப்பதாய் கூறி சம்மதம் வாங்கினான்

அதன் பின் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பாதவன் போல் செயல்பட்டான் ஸ்டீவ், சற்று நேரத்திலேயே நால்வரும் ஸ்டீவின் அபார்ட்மென்ட்ல் இருந்தனர்

அன்று தான் முதல் முறை ஸ்டீவின் அபார்ட்மென்ட் வருகிறாள் மீரா

"வாவ்... பேச்சிலர் ரூம் மாதிரி இல்ல...ரெம்ப நீட்டா வெச்சுருக்க ஸ்டீவ்" என்று மீரா புகழ

"தேங்க்ஸ் மீரா" என ஸ்டீவ் உற்சாகமானான்

"சில பேரு மாதிரி உள்ளே போகவே பயபட்ற மாதிரி ரூம் இல்ல உன்னுது" என்றாள் சதீஷை ஓரக்கண்ணால் பார்த்தவாறே

"ஏய்... திட்றதுன்னா நேரடியா திட்டு...அதென்ன ஓரப் பார்வை" என சீண்டினான் சதீஷ்

"வெவ்வவவ...பே...லூசு...." என்றாள் மீரா வேண்டுமென்றே அவனை வம்பிழுக்கும் தோரணையுடன்

இதற்கு மேல் இவர்களிடம் நின்றால் இவர்களின் உரிமையான ரகளையில் தன் பொறுமை போய்விடும் என  ஏதோ வேலை போல் பாவனையுடன் அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த சமையல் திட்டின் அருகில் சென்று நின்றான் ஸ்டீவ்

மது பால்கனியில் நின்று நகரத்தின் அழகை ரசித்து கொண்டிருந்தாள், அவளுக்கு உயரத்தில் இருந்து நகரத்தை பார்ப்பது எப்போதும் விருப்பம்

இப்போது மீரா சதீஷ் மட்டுமிருக்க "ஏய் மீரா... என்ன அதிசியமா? ஊர்லையே பிரெண்ட்ஸ் யார் வீட்டுக்கும் அவ்ளோ சீக்கரம் வர மாட்டியே...இன்னிக்கி என்ன?" என சன்ன குரலில் கேட்டான் சதீஷ்

அவன் கேள்வி புரிந்தவளாய் "சும்மா தான் சதீஷ்...just for a change" என்றாள் அவளும் மெல்லிய குரலில்

ஆனால் இவர்களின் சம்பாஷனை தெளிவாய் ஸ்டீவின் காதில் விழுந்தது

"யார் வீட்டுக்கும் செல்பவள் இல்லையாமே, தான் அழைத்ததும் மறுக்காமல் வருகிறாள் என்றால்... " என்ற நினைவே பறப்பது போல் இருந்தது அவனுக்கு

இந்த நிமிட சந்தோசத்திற்கு காரணமான சதீஷ் மீது முன்பிருந்த கோபமெல்லாம் காணாமல் போனது

சற்று நேரம் கழித்து மது அழைக்கும் குரல் கேட்க "என்ன மது?" என்றான்  ஸ்டீவ்

"என்னவா?  படம் போட போறயா இல்லையா?" என் கேலி செய்தாள்

"இதோ போடறேன்... அதுக்கு முன்னாடி...லெட்ஸ் ஆர்டர் பீட்சா... any preferences?" என மூவரையும் பார்த்து பொதுவாய் கேட்க

"எதுக்கு ஆர்டர் பண்ணனும்... மணி அஞ்சு தானே ஆச்சு... படம் பாத்துட்டு நாமளே சமைக்கலாமே" என்றாள் மீரா

"அம்மா தாயே... ஆள உடு... இதை நீ மொதலே சொல்லி இருந்தா நான் இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்" என்றான் சதீஷ்

நிஜமான பயம் சதீஷின் கண்களில் தெரிய, "அவ்ளோ மோசமா சமைப்பாளா மீரா?" என கேட்டான் ஸ்டீவ் அவள் முறைத்ததை ரசித்தவாறே, அதுவே அவள் தன்னை உரிமையாய் பார்க்கும் முதல் பார்வை என சிலாகித்தான்

"You too Steve...very bad...நான் போறேன்... உன் சினிமாவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்" என மீரா முகம் திருப்ப

"ஏய் ஏய்...சாரி மீரா... ஜஸ்ட் கிட்டிங்... நீயே குக் பண்ணு இன்னைக்கி... எப்படி இருந்தாலும் நான் சாப்பிடறேன்... ஒகே" என ஸ்டீவ் கூற, சத்தமாய் சிரித்தான் சதீஷ்

"எதுக்கு லூசு சிரிக்கற இப்ப?" என மீரா அவனை அடிக்க கை ஒங்க

"அவன் சொன்னத கேட்டியா மீரா? என்னமோ மரண வாக்குமூலம் மாதிரி....ஹா ஹா ஹா... எப்படி இருந்தாலும் சாப்பிடறேன்....ஹா ஹா அஹ" என சதீஷ் சிரிக்க அதற்கு மேல் அடக்க மாட்டாமல் ஸ்டீவ் மது இருவரும் கூட சிரிக்க

"All go to hell..." என கூறிவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தாள் மீரா

"ஏய்...என்ன மீரா இது? இதுக்கு போய் டென்ஷனா? வா... வந்து கிட்சன்ல பாரு.. வேற க்ராசரி எதுவும் வாங்கனுமா சொல்லு...ப்ளீஸ் மீரா" என ஸ்டீவ் அழைக்க அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க மனமின்றி எழுந்து வந்தாள் மீரா

"என் அருமை புரியாதவங்களுக்கு நான் சமைக்க மாட்டேன்...அந்த காஞ்ச ரொட்டி பீட்சாவே ஆர்டர் பண்ணிகோங்க" என சதீஷை பார்த்து கோபமாய் கூறி விட்டு சினிமா பார்க்க தயார் என்பது போல் சோபாவில் சென்று அமர்ந்தாள் மீரா

"அப்பாடா...இன்னிக்கி என் ராசி பலன் என்னனு பாக்கணும்.... அநேகமா கண்டம் விலகியதுனு இருக்கும்னு நினைக்கிறேன்" என சதீஷ் கூற சோபாவில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள் மீரா

"ஒகே ஒகே...கூல் டௌன்... ஏய் ஸ்டீவ் நீ சினிமா போடு... இல்லேனா இங்க ஒரு டெர்ரர் சினிமா லைவா ஓடும் போல இருக்கு" என எச்சரித்தாள் மது

ஒருவழியாய் "விண்ணை தாண்டி வருவாயா" வந்தது, சற்று நேரத்தில் ஆர்டர் செய்த பீட்சாவும் வந்தது. சினிமா ஸ்வாரஷ்யத்தில் உண்ணவும் மறந்தனர் நால்வரும்

காதல் பொங்கும் உணர்ச்சி மயமான காட்சி ஒன்றின் போது, தன்னை யாரோ உற்று நோக்குவது போல் உள்ளுணர்வு தோன்ற மீரா அந்த திசையில் பார்க்க, ஸ்டீவ் சட்டென பார்வையை விலக்கினான்

மீராவோ, ஏன் பார்த்தான் என குழம்பினாள்? அவன் எதேச்சையாய் தான் பார்த்தானோ, தான் தான் குழப்பி கொள்கிறேனோ என நினைத்தாள்

இது எதுவும் அறியாமல் சதீஷும் மதுவும் சினிமாவில் லயித்து இருந்தனர்

படம் முடிந்து சற்று நேர அரட்டைக்கு பின் கிளம்ப ஆயுத்தமானார்கள்

ஸ்டீவ் வேண்டுமென்றே முதலில் சதீஷை அவனிடத்தில் இறக்கிவிட்டு, பின் மதுவின் வீட்டிற்கு சென்றவன் இறுதியாய் மீராவை அவளிடத்திற்கு விட சென்றான்

சற்று நேரமேனும் அவளுடன் தனியே இருக்க அவன் மனம் விரும்பியது, ஆனால் தனியே விடப்பட்டதும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை

அவள் இறங்கும் இடமும் வந்தது, அதற்குள் வந்துவிட்டதே என கவலையானான் ஸ்டீவ்

அவள் இறங்க தானும் இறங்கி நின்றான். "தேங்க்ஸ் மீரா" என்றான்

"எதுக்கு?" என அவள் சிரிக்க

"இந்த சிரிப்புக்கு தான்" என சொல்ல தோன்றிய மனதை அடக்கி "நான் கூப்டதும் எங்க வீட்டுக்கு வந்ததுக்கு"

"இட்ஸ் ஒகே... நல்ல மூவி...தேங்க்ஸ் உனக்கு தான் ஸ்டீவ்"

"அதுக்கு தேங்க்ஸ் நீ டைரக்டர்க்கு தான் சொல்லணும்" என அவன் கூற அவள் அழகாய் சிரித்தாள்

"சரி...குட்நைட்" என அவள் கை அசைக்க

"ஏன் தூக்கம் வருதா?" என பேச்சை வளர்த்தான்

"இல்ல... லேட் ஆச்சே..." என்றாள்

"ம்ம்ம்...." என்றவனுக்கு அவளை சீண்டி பார்க்கும் ஆசை வந்தது, அந்த நினைவோடு ஒரு சிரிப்பு வெளிப்பட

"என்ன?" என்றாள் அவனுக்கு சிரிப்புக்கு விளக்கம் கேட்பது போல்

"ம்...இல்ல... நீ நெஜமாவே அவ்ளோ மோசமா குக் பண்ணுவியானு கேக்கலாம்னு நெனச்சேன்" என அவன் குறும்பாய் புன்னகைக்க

"அதுக்கு என்ன சிரிப்பு வேண்டி இருக்கு?" என முறைத்தாள்

"அப்போ தானே உன்னோட இந்த கோபத்த ரசிக்க முடியும்" என சொல்லும் தைரியமின்றி "ஹா ஹா ஹா" என வேண்டுமென்றே சிரித்தான்

"பேசாத போ....all men are same" என்றவள் "குட்நைட்" என ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு உள்ளே சென்றாள்

அவள் சென்ற பின்னும் சிறிது நேரம் அங்கிருந்து அசையவில்லை அவன். ஏதோ அவள் விட்டு சென்ற சிரிப்பை காவல் காப்பவன் போல் அவன் போன திசையே பார்த்து கொண்டு நின்றிருந்தான்

அந்த நாள் அவன் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் என தோன்றியது அவனுக்கு. சிறிதேனும் தன்னிடம் அவள் உரிமையுடன் உரையாடிய நாள் என எண்ணி எண்ணி மகிழ்ந்தான்

உன்கண்களை ரசிக்கவே
உனைகோபமுற தூண்டினேனடி
உன்கன்னக்குழி காணவே
உனைநகைக்க செய்தேனடி
உன்பழிக்கும் அதரத்தைபார்க்கவே
உனைசீண்டி பார்த்தேனடி
உன்உரிமையை அனுபவிக்கவே
உயிரையும் தருவேனடி!!!

அப்பாவி அப்டேட்:
கதை ஆமை வேகம் போகுதுன்னு சிலர் (ஒகே ஒகே பலர்... ha ha) அபிப்ராயம் சொல்லி இருந்தீங்க போன பதிவுல... நானும் அதை மறுக்கல... ஆனா இதை விட வேகம் போனா எதார்த்தமா இருக்காதுன்னு தோணுது... ஓவர் சினிமாத்தனமா இருக்குமோனு இருக்கு...

மொதல் சீன்ல சந்திச்சு, ரெண்டாவது சீன்ல மேரா பியார்னு சொல்லி,  மூணாவது சீன்ல டூயட் பாடி, நாலாவது சீன்ல வில்லன் என்ட்ரி, அஞ்சாவது சீன் கிளைமாக்ஸ், ஆறாவது சீன் வணக்கம் போட்டா நல்லாவா  இருக்கும் நீங்களே சொல்லுங்க... I may be wrong too...

ஆனா இனி கதை கொஞ்சம் வேகம் பிடிக்கும் அது மட்டும் சொல்ல முடியும் இப்போ

சரி இனி... உங்க கருத்த நீங்க சொல்லுங்க... I will improvise appropriately... Many thanks everyone for reading it thru...
 
(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

அடுத்த பகுதி படிக்க...


...

97 பேரு சொல்லி இருக்காக:

அப்பாவி தங்கமணி said...

Me the first... என்ன செய்யறது... எந்த ப்ளாக்லயும் வடை எடுக்க முடியல... சோ பொற்கொடி ஸ்டைல்ல சொந்த ப்ளாக்ல வடை எடுக்கறதுன்னு பிளான் பண்ணிட்டேன்... ஹா ஹா

சந்ரு said...

பகுதி 4 வாசித்துவிட்டேன் பகுதி 5 வரும் வரை காத்திருக்கிறேன்.

priya.r said...

Adapavi! Unagge ithu nalla iruggaa!ippadi engalai emaathidayee.,

பிரதீபா said...

ஹ்ம்ம். அந்தக் காலாத்துல நாங்கெல்லாம் .. (ஓல்டுக எல்லாம் அப்படித் தான் பேசுவாங்க) :)

priya.r said...

முதல் கமெண்ட் போடணும்னு வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா!
சரி ! கதை அருமை !கவிதை அதை விட அருமை !
ஸ்டீவ் இன் மன ஓட்டங்களை குறிப்பிட்டது போல மீராவின் மனதில் இருப்பதை வரும் வாரத்தில் எதிர்பார்க்கலாம் தானே !
சதீஷ் பத்தியும் அவன் மீராவை எப்படி நினைக்கிறான் என்பதும் கொஞ்சம் மர்மமாக தான் இருக்கு ! மொத்தத்தில் இளமை துள்ளல்
கதை முழுதும் இருக்கிறது ! தொடர வாழ்த்துக்கள் புவனா !

Porkodi (பொற்கொடி) said...

//சோ பொற்கொடி ஸ்டைல்ல சொந்த ப்ளாக்ல வடை எடுக்கறதுன்னு பிளான் பண்ணிட்டேன்...//

அலோ அதெல்லாம் ஒரு 2-3 வருஷம் முன்னாடி பண்ணின டெக்னிக்.. இந்த தடவை ஏதோ படிக்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியா இருக்கட்டுமேன்னு சொல்ல வந்தா என்ன பேசிக்கிட்டு இருக்க ராஸ்கல்.. ஒழுங்கா போயி தேவையில்லாத ஆணி எல்லாம் பிடுங்கு போ!

Porkodi (பொற்கொடி) said...

ஸ்டீவ் ஏன் இப்படி விக்ரமன் பட ஹீரோ போல ஃபீல் பண்றாப்புல? தமிழ் தெரியும்னாலும் கலாச்சரம், வளர்ப்பு எல்லாம் வேற மாதிரி காமிங்க அப்பாவி.. போன பகுதியை விட இது பெட்டரா தான் இருக்கு, விமர்சனத்தை நல்லா நோட் பண்ணியிருக்கீங்க! எப்போதும் போல எனக்கு கதையை விட கவிதை தான் பிடிச்சும் இருக்கு! ;)

vinu said...

kadhai enakku sariyaana vegaththula travell pannura maathirithaan theriyuthu;


but yaarum alurathu enakku pidikkaathu aamaaa ippavea sollitean

Porkodi (பொற்கொடி) said...

//ஆனா இதை விட வேகம் போனா எதார்த்தமா இருக்காதுன்னு தோணுது... ஓவர் சினிமாத்தனமா இருக்குமோனு இருக்கு... //

என்ன அ.த பயங்கர வெளிக்குத்தா இருக்கு?? நான் க்ரைம் எழுதறேன் அதுனால வேகமா போறேன், நீங்க நத்தை வேகத்துல போகாம மனுச வேகத்துல போங்கன்னு தானே சொன்னேன்.. அதுக்கு ஏன் இத்தனை ஃபீலிங்கு? ;)

முனியாண்டி said...

எனக்கு அப்படி தெரியல... எல்லாரும் உங்களோட அதே கண்கள் பாதிப்பில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த கதை இந்த களத்திற்கு தேவையான மிக சரியான வேகத்தில் மிக யதார்த்தமாக இருக்கிறது என்பது என் கருத்து.

தக்குடு said...

//ஸ்டீவ் சட்டென பார்வையை விலக்கினான்//

இந்த ஸ்டீவ் நம்ப மீராவை பாக்கும் போது பேக்ரவுண்ட்ல 'டடன்டடன்' 'டடன்டடன்' எல்லாம் சேர்க்க எதாவது வழி இருக்கானு கொஞ்சம் விசாரிங்கோ!...:)

//ஆனா இதை விட வேகம் போனா எதார்த்தமா இருக்காதுன்னு தோணுது... ஓவர் சினிமாத்தனமா இருக்குமோனு இருக்கு// ஒக்கே! ஒக்கே! லாஜிக் எல்லாம் நல்லா தான் இருக்கு, பொழச்சு போங்கோ!

மீரா சதிஷையும் பாக்கலை ஸ்டீவையும் பாக்கலை, ஏன்னா அவளோட ஸ்கூல் ப்ரண்டு பெங்களூர்ல இருக்கான்// இப்படி ஒரு திருப்பத்தோட கதை போகுமோ?..:PP

எஸ்.கே said...

கவிதை சூப்பர்! கதை வேகமில்லைதான்! ஆனாலும் நன்றாக உள்ளது!

அப்பாவி தங்கமணி said...

@ சந்ரு - நன்றிங்க

@ priya.r - ஹா ஹா ஹா... எப்படி நம்ம டெக்னிக்?

@ பிரதீபா - எந்த காலத்துல? ப்ளீஸ் சொல்லுங்க... எனக்கு பாட்டி தாத்தா கதைனா ரெம்ப பிடிக்கும்... (ஹா ஹா ஹா)

@ priya.r - நானும் இப்ப தான் முதல் கமெண்ட் போடறேன் அக்கா... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்... சூப்பர் விமர்சனம்... தேங்க்ஸ் ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) -
ஐ பொற்கொடி டென்ஷன் டென்ஷன்... மீ ஹாப்பி ஹாப்பி...

//ஒழுங்கா போயி தேவையில்லாத ஆணி எல்லாம் பிடுங்கு போ! //
இருக்கற ஆணிய பிடுங்கவே நேரத்த காணோம்...இதுல இல்லாததை எங்க போய்... ஹ்ம்ம்... FBல கமெண்ட் போட்டு கொல்ல மட்டும் நேரம் இருக்கோனெல்லாம் நோ கிராஸ் கொஸ்டின்ஸ்... ஒகே? ஒகே...

//ஸ்டீவ் ஏன் இப்படி விக்ரமன் பட ஹீரோ போல ஃபீல் பண்றாப்புல?//
ஏன்னா இட்டாலில கூட சக்ரமன் ஒரு டைரக்டர் படம் இப்படி தான் எடுக்கராராம்... ha ha... ஒகே ஜோக்ஸ் அபார்ட்....you got a point... will make note of it for upcoming episodes...கவிதை தான் பிடிச்சதா? ஒகே... எதாச்சும் ஒண்ணு பிடிச்சா சரி... thanks Kodi for your honest opinion

அப்பாவி தங்கமணி said...

@ vinu - உங்களுக்கு சரின்னு தோணுதா? அப்போ சரி...தேங்க்ஸ் வினு... என்னாது யாரும் அழக்கூடாதா? ஒகே ஒகே... கிளிசரின் ஆர்டர் கான்சல் பண்ணிடறேன்...ரைட்ஓ? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - ச்சே ச்சே...என்னப்பா கொடி... எந்த குத்தும் இல்லிங்க... just my thoughts... பீலிங் எப்பவும் இல்லை... நான் எல்லாம் பீல் பண்ணுவேன்னு நீ எப்படி நினைக்கலாம்...ஹா ஹா ஹா... I always value your opinion... thanks again...

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஹா ஹா ஹா... கரெக்டா சொன்னீங்க... அவ்ளோ பயப்படுத்திட்டேன் போல இருக்கு... ஹா ஹா... மிக்க நன்றி...

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு -
//இந்த ஸ்டீவ் நம்ப மீராவை பாக்கும் போது பேக்ரவுண்ட்ல 'டடன்டடன்' 'டடன்டடன்' எல்லாம் சேர்க்க எதாவது வழி இருக்கானு கொஞ்சம் விசாரிங்கோ!...:)//
கனவுல கூட அப்படி எதாச்சும் எபக்ட் சேர்க்க முடியுமான்னு கூட விசாரிக்கவா? ஹா ஹா ஹா... I know you will escape now...ha ha ha

//ஒக்கே! ஒக்கே! லாஜிக் எல்லாம் நல்லா தான் இருக்கு, பொழச்சு போங்கோ//
உங்க பெரிய மனசுக்கு நன்றிங்க அண்ணாத்த...

//மீரா சதிஷையும் பாக்கலை ஸ்டீவையும் பாக்கலை, ஏன்னா அவளோட ஸ்கூல் ப்ரண்டு பெங்களூர்ல இருக்கான்// இப்படி ஒரு திருப்பத்தோட கதை போகுமோ?..:PP //
அடப்பாவி...ஹா ஹா ஹா... இது கூட நல்ல ஐடியா தான்... ஐடியா எல்லாம் ஈமெயில்ல அனுப்பனும்... இப்படி பப்ளிக்ஆ சொன்னா எப்படி பிரதர் இம்ப்ளிமென்ட் பண்றது... ஹா ஹா அஹ...

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - நன்றிங்க எஸ்.கே

யாதவன் said...

போன பகுதிய விட இந்த பகுதி சுப்பெர கலக்குது

vgr said...

AT,

3 varam poruthen :) mudiala :)

"எனக்கு மூணு மணி நேரம் தியேட்டர்ல அடைஞ்சு இருக்கறது புடிக்காதுன்னு உனக்கு தெரியுமல்ல... அப்புறம் ஏன் கேட்டே?"
Canada laya? 3 mani nerama? Tamil pesum characters a vacheenga ok...avanga oru "Inception" pora mari vakka koodatho...angayum poyum "manmadam ambu" than ottanama?

"விண்ணை தாண்டி வருவாயா ஒரிஜினல் DVD கிடைச்சது..."..
enga Steve indian store montreal la avanuku migavum piditha frozen avial vangum bodu vangi irupane?

"இல்ல ஸ்டீவ்...அம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களான்னு..."
Madhu oda amma vera othukalaya...Canada la Masters padikara ponnu...amma..peru enna..kousalya va irukaname...anda amma othukuvangalonnu thane?

சொன்னது போல் மதுவின் அன்னையிடம் பத்து மணிக்குள் வீட்டிலே கொண்டு வந்து சேர்ப்பதாய் கூறி சம்மதம் வாங்கினான்.
Canada ponnu thane...appadiye Madhu kalai 5.30 manike ezhundu viduval...Meera kalai paniyil kolam podum azhagai rasithan Steve nu varaname...

ஆனா இதை விட வேகம் போனா எதார்த்தமா இருக்காதுன்னு தோணுது... ஓவர் சினிமாத்தனமா இருக்குமோனு இருக்கு...
nijamave va...this is not cinematic/dramatic?

Idanal nam solli kolla virumbuvadu enna vendral...kadai kalathai matravum..matravum..matravum..

Thangal ezhuthil kurai illai. Anaal :)

Vasagan said...

\நாட்கள் வேகமாய் நகர்ந்தன. வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகி இருந்தது.\

உன்மையில நீ அப்பாவிதான், உன்னுடைய Characters மாதிரி students யை 20 வருடங்களுக்கு முன்னால் நான் வேலைக்குள் சேரும் போது பார்த்தது. இப்போது எல்லாம் ஒரு வாரமே அதிகம்.

அனாமிகா... உங்க அக்காவிற்கு இதையெல்லாம் சொல்வது இல்லையா.

ஆனால் நம்ம ஊரை காட்டிலும் Toronto பரவாயில்லை. Especially our physics students no chance. Even on holidays they spent time in the lab.


Regarding story ... going well... Keep it up

Annan.

Balaji saravana said...

அழகா கதை நகருது :) இப்போ வரைக்கும் செம ஃபீலோட இருக்கு இதே மாதிரியே கடைசிவரைக்கும் இருக்கட்டும், நடுவுல ”லாலே லாலல லாலா “ பாட்டு போடுற மாதிரி ஆக்கிடாதீங்க ;)

அமைதிச்சாரல் said...

கதை யதார்த்தமா போகுதுப்பா..

அமைதிச்சாரல் said...

அப்பாவிக்கு இன்னிக்கி நெஜமாவே ஆணி இல்லியா!!.. ஆரம்பத்துலயே கமெண்டுக்கெல்லாம் பதில் சொல்றாங்க :-))))))))))))

அமைதிச்சாரல் said...

முந்தின எபிசோடையே கால்பங்குக்கு நெரப்பியிருக்காங்க.. இந்த டெக்னிக்கையெல்லாம் போர்க்கொடி, அனாமிகா என்ற சுனாமி போன்ற கண்மணிகளெல்லாம் இன்னும் கண்டுக்கலையா ;-)))

(அப்பாடி.. நான் கெளம்பறேன் :-))))))))))))

எல் கே said...

//ஓவர் சினிமாத்தனமா இருக்குமோனு இருக்கு... //

இப்பவும் அப்படிதான் இருக்கு

எல் கே said...

//அப்பாவிக்கு இன்னிக்கி நெஜமாவே ஆணி இல்லியா!!.. //

என்னிக்குமே அவங்களுக்கு ஆணி இல்லை

எல் கே said...

//கதை யதார்த்தமா போகுதுப்பா.. //

என்ன மாதிரி யதார்த்தம் ??

sulthanonline said...

கதை சூப்பரா போகுது..! அதுவும் அவர்கள் நால்வரும் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்படும் சம்பவங்களிலிருந்து காதல் வழிகிறது. நீங்க சொன்னது போல கதையில் வேகம் இருந்தால் சினிமாத்தனமாக இருக்கும் யதார்த்தம் இருக்காது என்று, சரிதான் காதல் கதைகளுக்கு வேகம் தேவையில்லை மெதுவாக சென்றால்தான் யதார்த்தம் இருக்கும் அதில் நாம் காதலை உணர முடியும். உங்கள் கதையில் அதை உணர முடிகிறது குறிப்பாக படம் ஆரம்பிப்பதிலிருந்து மீராவை வீட்டில் சென்று விட்டு பிறகு நடக்கும் சம்பவங்கள் வரை நன்றாக உள்ளது கவிதை சூப்பர் அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க

siva said...

meeeeeeee the first

present teacher.

vinu said...

பிறகு நடக்கும் சம்பவங்கள் வரை நன்றாக உள்ளது கவிதை சூப்பர் அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க


machchi athuthaan thalaippileyea solli irrukkaangalla every tuesdaynnu appuram eppudimaa seekiram podungannu keappeenga; venumunnaa namma thangamani akka storykkaaga vaaram 3 tuesday vara maathiri inimea naama weekdaysla change chenjuduvom..........


eppudiiiiiiiiiiiiiiii;


naangellam keelea irrunthea marathulea irrukura ilanila staraw pottu urunchuravanga........... he he he he [namakku eppavumea thaTperumai pidikkathungooooooooooooooooooo]

Porkodi (பொற்கொடி) said...

vgr, LOL!!!! :D

amaidhicharal, naan nallava, kutram kurai kandu pidika maten! ;)

ஆனந்தி.. said...

//உன்கன்னக்குழி காணவே
உனைநகைக்க செய்தேனடி //

superb thangs..:)

sulthanonline said...

இல்ல sir கதைய படிச்ச ஆர்வத்தில அடுத்த பதிவ சீக்கிரம் வந்தால் நல்லா இருக்கும்னு... நான் கொஞ்சம் ஆர்வக் கோளாறு ஹி.. ஹி..

வெங்கட் நாகராஜ் said...

நல்லாத்தானே போகுது கதை... தொடருங்க! ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கவிதை[!] வேறு. கலக்குங்க!

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.html

http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

தக்குடு said...

////அப்பாவிக்கு இன்னிக்கி நெஜமாவே ஆணி இல்லியா!!.. //

LK said - என்னிக்குமே அவங்களுக்கு ஆணி இல்லை .//

எப்பையாவது ஆணி பிடிங்கும் ஒரு ஆள் இதை சொல்லும் போது வேடிக்கையா தான் இருக்கு...:)

@VGR - தெளிய வச்சு, தெளிய வச்சு ATM-ai கலாய்ச்சுட்டு கடைசில 'எழுத்தில் குறை இல்லை ஆனால்'னு சொன்னீங்களே! அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு....:)

தக்குடு said...

//அடப்பாவி...ஹா ஹா ஹா... இது கூட நல்ல ஐடியா தான்// அந்த ஐடியாவை யூஸ் பண்ணினா அதுல ஒரு சான்ஸ் இருக்கு, என்னன்னா பெங்களூர் பார்ட்டியும் "உன் கன்னத்தில் குழியா, இல்லை இல்லை என் நெஞ்சத்தின் வலி அது!"னு காதல் சொட்ட சொட்ட ஒரு கவிதையோட மறுபடியும் "வாதாபி கணபதிம் பஜேஹம்!"னு கச்சேரியை நீங்க ஆரம்பிக்கலாம். கொஞ்சம் யோசிச்சு முடிவு சொல்லுங்க கதா! (கதா = கதாசிரியர்)..:)

சே.குமார் said...

கதை அருமை!
கவிதை அதைவிட அருமை !

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்குங்க....

பத்மநாபன் said...

உணர்வுகளின் ஊர்வலமா கதை நகர ஆரம்பித்துவிட்டது .இனி வேகம் எடுத்துவிடும் .. அந்த ஐஸ் பொடி கோலம் உங்க வீட்டு முன்னால போட்டு படம் எடுத்ததா ..நல்லா இருக்குது பனிக்கோலம்.

கோவை2தில்லி said...

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

middleclassmadhavi said...

//அவள் விட்டு சென்ற சிரிப்பை காவல் காப்பவன் போல் // கவிநயம் சொட்டுகிறது.. கீப் இட் அப்!

priya.r said...

//Me the first... என்ன செய்யறது... எந்த ப்ளாக்லயும் வடை எடுக்க முடியல... சோ பொற்கொடி ஸ்டைல்ல சொந்த ப்ளாக்ல வடை எடுக்கறதுன்னு பிளான் பண்ணிட்டேன்... ஹா ஹா//
நானே கேட்கலாம்ன்னு நினைச்சேன் ! நீங்க என்ன உங்க மனசில பொற்கொடி அப்படின்னு நினைப்பா ன்னு !
பின்ன என்னப்பா வர வர பின்னூட்டதிற்கு கூட சரியா பதிலே போட மாட்டுகிறீங்க ( இப்போ எங்க குட்டி பாஸ் பொற்கொடி கூட 2 பின்னூட்டம் போட்டா ஒன்றுக்கு பதில் போடறார்!)
இன்னும் என்னென்ன பொற்கொடி ஸ்டைல்ல பிளான் பண்ணரீங்களோ!

Porkodi (பொற்கொடி) said...

//இப்போ எங்க குட்டி பாஸ் பொற்கொடி கூட 2 பின்னூட்டம் போட்டா ஒன்றுக்கு பதில் போடறார்!//

enga enga?! namma veetuku vaanga pesi theerthukalam, ooruku munnadi namma sandaiya kamikka koodadhu! :D

Krishnaveni said...

Nalla karpanai valam ungalukku, eppadi iththanai kadai ezhuthareenga? nice picture, thanks a lot for mentioning my name

அப்பாவி தங்கமணி said...

@ யாதவன் - ரெம்ப நன்றிங்க யாதவன்

அப்பாவி தங்கமணி said...

@ vgr - எப்பா சாமி... மரண கலாய்ப்பு... ஹா ஹா ஹா... உங்ககிட்ட கோச்சிங் க்ளாஸ் எடுக்கலாம்னு இருக்கேன் கலாய்ப்பு specialist ஆகறதுக்கு...வாட் டூ யு சே? ஹா ஹா ஹா...
இவ்ளோ கேள்வி ஒரே நேரத்திலா? இருங்க ஒண்ணு ஒண்ணா பதில் சொல்றேன்...

//Canada laya? 3 mani nerama? Tamil pesum characters a vacheenga ok...avanga oru "Inception" pora mari vakka koodatho...angayum poyum "manmadam ambu" than ottanama?//
இருந்திருந்து உங்களுக்கு உதாரணம் சொல்ல inception தானா தோணனும்... ஹா ஹா... jokes apart... people here like to watch tamil movies in theaters...I've seen it...worst part is no interval here... all together full movie...

//enga Steve indian store montreal la avanuku migavum piditha frozen avial vangum bodu vangi irupane?//
frozen avial? where do u get this? Address please... ha ha ha... frozen அவியல் வாங்கறப்ப இல்ல... தமிழ் வீடியோ ஸ்டோர்ல தான் வாங்கினாராம் ஸ்டீவ்... விசாரிச்சுட்டேன்... அவன் தான் சின்னதுல இருந்தே தமிழ் பித்துனு சொன்னேனே சார் முன்னையே... அதான் தமிழ் சினிமா... ரைட்ஓ?

//Madhu oda amma vera othukalaya...Canada la Masters padikara ponnu...amma..peru enna..kousalya va irukaname...anda amma othukuvangalonnu thane?//
கௌசல்யா... எனக்கு ரெம்ப பிடிச்ச பேரு... அடுத்த கதைக்கு யூஸ் பண்ணிக்கறேன்... மிக்க நன்றி... ஹா ஹா... yes yes... கனடால மாஸ்டர்ஸ் படிக்கற பொண்ணே தான்... இங்க இருக்கற first generation immigrant parents இப்படி தான் சார் இருக்காங்க..முக்கியமா நம்ம மக்கள்... I've seen people moving close to kids university so that the kids don't have to stay in university residences... sometimes it feels like parents here are too orthodox than parents backhome, may be parents here are too scared as kids got more exposure to western culture here... At times, I feel bad for those kids who are caught inbetween first generation parents and outside society...

//kalai paniyil kolam podum azhagai rasithan Steve nu varaname...//
ha ha ha...chanceless bulb...

//nijamave va...this is not cinematic/dramatic? //
may be a bit...but its needed for the story, otherwise நமுத்து போன வடை ஆய்டுமே... ஹா ஹா ஹா

//Idanal nam solli kolla virumbuvadu enna vendral...kadai kalathai matravum..matravum..matravum..//
அப்படியா....? அப்படினா இவங்க நாலு பேருக்கும் (ஸ்டீவ், மீரா, சதீஷ், மது) உங்க influence ல IIT ல சீட் வாங்கி குடுங்க ... transfer பண்ணிடலாம்...ஹா ஹா ஹா...

//Thangal ezhuthil kurai illai. Anaal :) //
ம்ம்ம்... சொல்ல வந்ததை சொல்லிடுங்க... இவ்ளோ சொல்லியாச்சு... இனி என்ன? ஹா ஹா ஹா...

But really appreciate for putting in honest opinion... a chance to explain my views of it...thanks again VGR

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - வாங்க அண்ணா, இந்தியா ட்ரிப் எல்லாம் ஆச்சா? how is everyone back home?

//உன்மையில நீ அப்பாவிதான், உன்னுடைய Characters மாதிரி students யை 20 வருடங்களுக்கு முன்னால் நான் வேலைக்குள் சேரும் போது பார்த்தது. இப்போது எல்லாம் ஒரு வாரமே அதிகம்//
why? உங்க க்ளாஸ் அவ்ளோ போர் அடிக்குமா? ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... ஓ.. நீங்க physics ஆ? ஆள விடுங்க... எனக்கும் சயின்ஸ்க்கும் இந்தியாக்கும் கனடாக்கும் உள்ள தூரம்...

வாத்தியார் சார், நீங்களே சொல்லுங்க... இங்க MBA க்கு எவ்ளோளோளோளோ பீஸ் கட்டணும்... அதை கட்டிட்டு க்ளாஸ் போகாம எப்படி? உண்மைய சொல்லணும்னா நம்ம ஊர் விட இங்க கொஞ்சம் சீரியஸ்ஆவே படிக்கறாங்க பசங்கனு தோணுது... ஏன்னா நெறைய பேரு ஸ்டுடென்ட் லோன் தானே... Hope you agree...

//Regarding story ... going well... Keep it up //
thank you

அப்பாவி தங்கமணி said...

@ Balaji saravana - ரெம்ப நன்றிங்க... "லாலே லாலல லாலா" உங்களுக்கு அலர்ஜியோ? ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் -
//கதை யதார்த்தமா போகுதுப்பா.. //
இப்படி ஆரம்பிக்கரப்பவே ஏதோ ஆப்பு ரெடி ஆகுதுன்னு தெரிஞ்சு போச்சு...அடுத்த கமெண்ட்ல புரிஞ்சு போச்சு... ஹா ஹா ஹா...

//அப்பாவிக்கு இன்னிக்கி நெஜமாவே ஆணி இல்லியா!!.. ஆரம்பத்துலயே கமெண்டுக்கெல்லாம் பதில் சொல்றாங்க :-)))))))))))) //
ஆணி ஓவராகி மண்டை காஞ்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு அஞ்சு நிமிஷம் ப்ளாக் பக்கம் வந்தா ஆள் ஆளுக்கு கலாய்ப்பு... ஹ்ம்ம்... உலகமே நமக்கு எதிராத்தான் இருக்கு...ஹ்ம்ம்...

//முந்தின எபிசோடையே கால்பங்குக்கு நெரப்பியிருக்காங்க.. இந்த டெக்னிக்கையெல்லாம் போர்க்கொடி, அனாமிகா என்ற சுனாமி போன்ற கண்மணிகளெல்லாம் இன்னும் கண்டுக்கலையா ;-)))//
ஏனுங்க அக்கா இந்த கொல வெறி? ஒரு continuity க்கு போடறது என் குத்தமா உன் குத்தமா... இருங்க பார்சல் அனுப்பறேன்... ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - Life time brutus award goes to Mister Karthik....grrrrrrrrrrrrrrrrrr...........

@ sulthanonline - மிக்க நன்றிங்க

@ siva - முதல்ல இப்படி ஊருக்கு கடைசீல வந்து மீ தி first சொல்றவங்கள என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா சொல்லுங்க யாராச்சும்...ஹா ஹா ஹா (உங்களுக்கு ஆப்சென்ட் ஏற்கனவே போட்டாச்சு சிவா... டூ லேட்...)

அப்பாவி தங்கமணி said...

@ vinu - வாரத்துக்கு மூணு செவ்வாயா? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா தம்பி... ஹா ஹா ஹா... ஆமா ஆமா நல்லாவே தெரியுதே நீங்க தன்னலமற்றவர்னு... ஹா ஹா ஹா

@ Porkodi (பொற்கொடி) - avvvvvvvvvvvvvvvv......
//naan nallava, kutram kurai kandu pidika maten! ;) //
யாரோ நல்லவனு சொன்னீங்களே... யாருங்க அம்மணி அது?

@ ஆனந்தி.. - தேங்க்ஸ்ங்க ஆனந்தி

அப்பாவி தங்கமணி said...

@ sulthanonline - அட ராமா... நான் சார் இல்லிங்க... மேடம்... மேடம் கூட இல்லை... ஒரு சிறு பெண்... அவ்ளோ தான்... ஒகே... யாரும் அடிக்க வருமுன் மீ எஸ்கேப்...

@ வெங்கட் நாகராஜ் - ரெம்ப நன்றிங்க வெங்கட்

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஹா ஹா ஹா ஹா ஹா... தேங்க்ஸ் தக்குடு... நீ தான் தம்பி... தங்க கம்பி.. வாழ்க பல்லாண்டு...
ஆனா இன்னிக்கி உனக்கும் சேத்து வெச்சு VGR ...அதே அதே தெளிய வச்சு, தெளிய வச்சு ... ஹா ஹா ஹா

@ தக்குடு - தக்குடு நீ பேசாம ஒரு கவிதை ப்ளாக் ஆரம்பியேன்... உனக்குள்ள ரெம்ப திறமை ஒளிஞ்சுட்டு இருக்கு...பொறுத்தது போதும் பொங்கி விழு... ச்சே... எழு...LOL ...

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

@ MANO நாஞ்சில் மனோ - ரெம்ப நன்றிங்க

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா... அந்த படம் எல்லாம் எடுக்கற வரை நான் வெளிய நின்னா அப்புறம் என்னை படம் எடுத்து மாட்ட வேண்டி வரும்... ஹா ஹா ஹா... அது கூகிள்ல சுட்டது... ஆனா இந்த மாதிரி நானே எடுத்தா என்னனு இப்போ தோணுது... லெட் மீ ட்ரை.. ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - நன்றிங்க பிரெண்ட்

@ middleclassmadhavi - தேங்க்ஸ்ங்க

@ priya.r - அக்கா சூப்பர்...என்னை வாருற மாதிரி அப்படியே பொற்கொடிய கலாய்ச்சுட்டீங்க... இன்னும் நெறைய எதிர் பாக்குறேன் உங்ககிட்ட...ஹா ஹா அஹ... (நான் நல்லாதானே பின்னூட்டத்துக்கு பதில் போடுறேன்...சிலர் கிண்டலே பண்றாங்க... பதிவ விட நீ பின்னூட்டத்துக்கு போடற பதில் பெருசா இருக்கு வர வரனு ...ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... டோன்ட் panic கேடி...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... Its your idea right?...thanks for that too...

கோவை ஆவி said...

// விண்ணை தாண்டி வருவாயா ஒரிஜினல் DVD கிடைச்சது...//

ஒரிஜினல் DVD ரிலீஸ் பண்ணீட்டாங்களா??

கோவை ஆவி said...

// கதை ஆமை வேகம் போகுதுன்னு சிலர் (ஒகே ஒகே பலர்... ha ha) அபிப்ராயம் சொல்லி இருந்தீங்க..நானும் அதை மறுக்கல... ஆனா இதை விட வேகம் போனா எதார்த்தமா இருக்காதுன்னு தோணுது... //


நல்ல வேளை!! ஏதோ முயல் ஆமை கதை சொல்லப் போறீங்களோன்னு பயந்துட்டோமாக்கும்!!!

கோவை ஆவி said...

//லெட்ஸ் ஆர்டர் பீட்சா... //

என்னதான் தமிழ்நாட்டில் வளர்ந்திருந்தாலும் ஒரு இத்தாலியன் இட்டாலியன் டிஷ் தானே ஆர்டர் பண்ணுறான் பாருங்க!!

vinu said...

கோவை ஆவி சொன்னது…
//லெட்ஸ் ஆர்டர் பீட்சா... //

என்னதான் தமிழ்நாட்டில் வளர்ந்திருந்தாலும் ஒரு இத்தாலியன் இட்டாலியன் டிஷ் தானே ஆர்டர் பண்ணுறான் பாருங்க!!


intha pullaykulla imbuttu naalaa ennovo irrunthirukku paaren; [eppudiyellam kandupudikkuraanga; ayaaaa saami theyvameaaaaa]

வெறும்பய said...

ரொம்ப நல்லாயிருக்கு,....

கதைக்கு இந்த வெக்கம் தான் நல்லாயிருக்கு... உணர்வுகளை புரிந்து கொள்ளும்படியாக கதையுடன் நாமும் பயணிக்கும் படியா இருக்கு...

priya.r said...

Porkodi (பொற்கொடி) சொன்னது…

//இப்போ எங்க குட்டி பாஸ் பொற்கொடி கூட 2 பின்னூட்டம் போட்டா ஒன்றுக்கு பதில் போடறார்!//

//enga enga?! namma veetuku vaanga pesi theerthukalam, ooruku munnadi namma sandaiya kamikka koodadhu! :D //

தை பூச திருநாளான இன்று ,என் வீட்டுக்கு வா என்று சொல்லாமல் நம்ம வீட்டுக்கு வாங்க என்ற பாச அழைப்பு I FEEL HONOUREDPPA!

இதோ இதோ உங்களுக்கு பிடித்த வெஜ் ஐட்டம் எல்லாம் செய்து எடுத்து வந்து கிட்டே இருக்கேன் கொடி!
புவனா! அந்த அட்டிகை செட் எல்லாம் கொடுக்கறியா.,

கொடி வீட்டுக்கு போயிட்டு வந்து திருப்பி கொடுத்தடறேன் !

priya.r said...

@ priya.r - அக்கா சூப்பர்...என்னை வாருற மாதிரி அப்படியே பொற்கொடிய கலாய்ச்சுட்டீங்க... இன்னும் நெறைய எதிர் பாக்குறேன் உங்ககிட்ட...ஹா ஹா அஹ... (நான் நல்லாதானே பின்னூட்டத்துக்கு பதில் போடுறேன்...சிலர் கிண்டலே பண்றாங்க... பதிவ விட நீ பின்னூட்டத்துக்கு போடற பதில் பெருசா இருக்கு வர வரனு ...ஹா ஹா ஹா

@Appavi Thangs

ஹலோ ஹலோ ! ரெம்பா பெருமை பேசிக்க வேண்டாம் !

நான் போட்ட, போன பதிவுல 62 வது பின்னூட்டத்துக்கும் அதுக்கு முன்னாடிக்கு முன்னாடி போட்ட பதிவுல

154 வது பின்னூட்டத்துக்கும்( உலக புகழ் பெற போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இருவரின் சந்திப்பு நடந்த பதிவு !) நீ இந்த நிமிஷம் வரை பதில் போடலே !

இதே மைன்ட் வாய்ஸ் இருந்தா இப்படி எல்லாம் நடக்க விட்டுருக்குமா !

ஏண்டி ! போர்க்கொடி கிட்டே போட்டு கொடுக்கிறே !

நான் உன்னை மீன் பண்ணி தான் சொன்னேன்! புரிஞ்சுக்கோ புவனா ..........

priya.r said...

//நான் நல்லாதானே பின்னூட்டத்துக்கு பதில் போடுறேன்...சிலர் கிண்டலே பண்றாங்க... பதிவ விட நீ பின்னூட்டத்துக்கு போடற பதில் பெருசா இருக்கு வர வரனு ...ஹா ஹா ஹா//

உன்னோட பிளஸ் பாயிண்ட் ல அதுவும் ஒண்ணு புவனா ! பின்னூட்டம் போட்டவர்களுக்கு ரொம்பா சந்தோசமா இருக்கும்.

பழைய பதிவா இருந்தாலும்,புதிய பதிவா இருந்தாலும் ஒவ்வொரு பின்னோட்டதிர்க்கும் பதிலிடும் அந்த பண்பு சிறந்த ஒன்று.

இதை கவனித்து இது போல் தான் நாமும் இருக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்

வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்று ஒரே வரியில் சொல்லும்போது அல்லது எதுவும் சொல்லாமல் விடும் போது பின்னூட்டம் போடுபவர்களுக்கு நமது பின்னூட்டம் சரியில்லையோ அல்லது நாம் ஒருவேளை அழையா விருந்தாளியோ என்ற எண்ணம் கூட ஏற்படலாம் இல்லையா !

சாரி! முதல் தடவையா கொஞ்சம் உரிமை எடுத்து கொண்டு பேசிட்டேன் ., தவறு இருப்பின் மன்னிக்கவும் புவனா.

priya.r said...

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... டோன்ட் panic கேடி...

ஹய்யோ ! எனக்கு தாண்டி பயமா இருக்கு;நீ வேற சமயம் புரியாம கொடியை உசுபேத்தி விடறே!

கொடி வேற பேசி தீர்த்துக்கலாம் ன்னு சொல்லி இருக்காங்களா !

பேசிக்கலாம் அப்படின்னு சொல்லி இருக்கலாம்

தீர்த்துக்கலாம் ன்னு ஏன் சொல்லோனும்

நான் வேற பாஸ் ன்னு கூப்பிடறேனா

அவங்க வேற கிரைம் நோவேல் எல்லாம் சூப்பர்ரா எழுதறாங்களா

எல்லாம் இணைத்து பார்த்த எனக்கு தாண்டி panic ஆ இருக்கு....

எதுக்கும் பொது அறிவிப்பு கொடுத்துட்டு போறேன் !

எனக்கு ஏதாவது ஆச்சு ன்னா அதுக்கு அப்பாவி தங்கமணி தான் பொறுப்பு !

kadar said...

aaaaaaaaaavvvvvvvvv...... enaku thookam varuthu...naaliku coment podaren....aaaaaaaaaaaavvvvvvvvvv.......

எல் கே said...

@ப்ரியா
இதெல்லாம் சரி இல்லை. புவனாவை கலைகனும்னுதான் ஒப்பந்தம். இப்படி மாறக் கூடாது

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அடுத்த வாரம் கதை நான் சொல்றேன்.
மீரா அவங்க வீட்ல சமையல் பண்ணிட்டு எல்லோரையும் சாப்பிட கூப்புடுவா.
அங்க எல்லோரும் சேர்ந்து எந்திரன் படம் பாக்குறாங்க.

Vasagan said...

Vanthachu, All are good, but I missed them very much.

/உங்க க்ளாஸ் அவ்ளோ போர் அடிக்குமா? ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... ஓ.. நீங்க physicsஆ? ஆள விடுங்க... எனக்கும் சயின்ஸ்க்கும் இந்தியாக்கும் கனடாக்கும் உள்ள தூரம்.../

நான் பேச ஆரம்பித்தால் :

Wife: " dinner ku AT idly"

Daughter: "AT blog paravaiillai or Harish Where is Virthakiri CD."

Harish: "I am going to study, iinnum 3 masathula semester varuthu"

/kadar சொன்னது… aaaaaaaaaavvvvvvvvv...... enaku thookam varuthu...naaliku coment podaren....aaaaaaaaaaaavvvvvvvvvv....... /

My Student: "Repeatu"

Me: ஞே.....!.\ஏன்னா நெறைய பேரு ஸ்டுடென்ட் லோன் தானே... Hope you agree...\

100%

Porkodi said...

Priya, நீங்க கடைசியா போட்ட பதிவுல பதில் வரலைன்னா அது கேக்கறது நியாயம்.. பழைய பதிவுல கமெண்ட் போட்டா, அதை எப்படி தேடி அல்லது ஞாபகம் வெச்சு பதில் போடறது? எல்லாராலயும் முடியுமோ என்னவோ தெரியலை, ஆனா எனக்கு இயல்பாவே கொஞ்சம் மறதி அதிகம்னு எல்லாத்தையும் எழுதி வெச்சு செய்வேன்.. :( இதுல கதை எல்லாம் எழுத ரொம்ப நேரம் எடுக்கிறது! இதுக்கு மேல நான் ப்லாக்லே நேரம் செலவழிச்சா என்னோட‌ டேமேஜர் ஒரேடியா ப்லாக்கே எழுத சொல்லிடுவார்! அதுனால தான் இத்தனை கஷ்டம்.. கொஞ்சம் பொறுத்து அருளவும்!

Porkodi said...

//தீர்த்துக்கலாம் ன்னு ஏன் சொல்லோனும் //

ஏதோ அந்த மட்டும் பயம் இருந்தா சரிதேன்! முஹாஹாஹாஹா!

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி -
//ஒரிஜினல் DVD ரிலீஸ் பண்ணீட்டாங்களா??//
எஸ் எஸ்... இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு... ஹா ஹா

//நல்ல வேளை!! ஏதோ முயல் ஆமை கதை சொல்லப் போறீங்களோன்னு பயந்துட்டோமாக்கும்//'
வேணும்னா சொல்லுங்க....அதையும் என் ஸ்டைல்ல சொல்றேன்... ஹா ஹா ஹா

//என்னதான் தமிழ்நாட்டில் வளர்ந்திருந்தாலும் ஒரு இத்தாலியன் இட்டாலியன் டிஷ் தானே ஆர்டர் பண்ணுறான் பாருங்க!! //
புடிச்சீங்களே பாயிண்ட்... ஒருத்தர் கூட இதை நோட் பண்ணி சொல்லலியேனு ரெம்ப பீலிங்ல இருந்தேன்... நன்றி... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி சொல்றத கிண்டலா பண்றீங்க... இருங்க பார்சல் அனுப்பறேன்... ஹா ஹா ஹா

@ வெறும்பய - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//இதோ இதோ உங்களுக்கு பிடித்த வெஜ் ஐட்டம் எல்லாம் செய்து எடுத்து வந்து கிட்டே இருக்கேன் கொடி//
ஐயோ பாவம் பொற்கொடி...

//புவனா! அந்த அட்டிகை செட் எல்லாம் கொடுக்கறியா., //
ஓ...தர்ரனே... வாடகை வெறும் ஆயிரம் டாலர் மட்டுமே... டீலா? நோ டீலா? ஹா ஹா ஹா

//போன பதிவுல 62 வது பின்னூட்டத்துக்கும், 154 வது பின்னூட்டத்துக்கும்//
விஜயகாந்த் உங்களுக்கு சொந்தமா... இல்ல இப்படி statistics ல பின்றீங்களே அதான் கேட்டேன்... ஹா ஹா ஹா... நிஜமாவா? சாரி அப்படி மிஸ் பண்ண மாட்டேன் எப்பவும்... போய் பாக்கிறேன்...தேங்க்ஸ்

//நான் உன்னை மீன் பண்ணி தான் சொன்னேன்! புரிஞ்சுக்கோ புவனா .......... //
அதெல்லாம் நாங்க புரிந்தும் புரியாமலும் அப்படி தான் சமாளிப்போம்... becos' me appavi...ha ha ha

//சாரி! முதல் தடவையா கொஞ்சம் உரிமை எடுத்து கொண்டு பேசிட்டேன் ., தவறு இருப்பின் மன்னிக்கவும் புவனா//
எதுக்கு சாரி எல்லாம்... கூல் அக்கா கூல்...

//தீர்த்துக்கலாம் ன்னு ஏன் சொல்லோனும் //
குட் பாயிண்ட்... எதுக்கும் நல்ல செக்யூரிட்டி கூட போங்க...நான் வேணா வரவா? ஹா ஹா ஹா...

//எனக்கு ஏதாவது ஆச்சு ன்னா அதுக்கு அப்பாவி தங்கமணி தான் பொறுப்பு //
அடபாவிங்களா... கடசீல நான் தானா... ஹ்ம்ம்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ kadar - ஒகே... வந்து கமெண்ட் போடுங்க... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - அடப்பாவி... ஒப்பந்தம் வேறயா? எனக்கு தெரியாம behind the scenes என்ன நடக்குது இங்க...

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ஹா ஹா ஹா... உங்க அனுமானம் 5% கரெக்ட் 95% டீல்ல விட்டுடீங்க... ஹா ஹா ஹா... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - Yes, Me too always like that only. After coming back from vacation takes a while to come back to routine. This time it was a bit easier with the blog as a distraction....
ஆஹா... குடும்பமே சேந்து என்னை கலாய்க்கரீங்களா...அவ்வவ்வ்வ்வ்....

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi -
//என்னோட‌ டேமேஜர் ஒரேடியா ப்லாக்கே எழுத சொல்லிடுவார்//
கூடிய சீக்கரம் எனக்கு இதான் நிலைமைனு தோணுது... அவ்வ்வ்வவ்....

//ஏதோ அந்த மட்டும் பயம் இருந்தா சரிதேன்! முஹாஹாஹாஹா! //
பின்ன... அடுத்த பார்ட்ல எங்க பேருல ஒரு கேரக்டர் வெச்சு நீ போட்டு தள்ளிடுவேன்னு ஒரு பயம் தான் கொடி... ஹா ஹா ஹா...

kadar said...

inniku comment podalamnu vanthen. kathai maranthu pochu..... sari thirumba kathaya padichitu comment podalamnu ninaicchu padichitu irukum pothu.... aaaaaaaaaaaaaavvvvvvvvvvvvvv..... korrrrrrrrrrrrr.......... kor............

Dubukku said...

நல்லா எழுதியிருக்கீங்க :))
ரமணி சந்திரன் பாதிப்பு நிறைய இருக்கு போல இருக்கே உங்களுக்கு.

சௌந்தர் said...

கதை நல்லா தான் போகுது எனக்கு சதீஷ் தான் பிடித்து இருக்கான்....

"ஏய் ஏய்...சாரி மீரா... ஜஸ்ட் கிட்டிங்...////

அடி கடி அப்பாவி யூஸ் பண்ணற வார்த்தை

வடிவேலன் ஆர். said...

Indha kathai mudicha piragu pdf mathi unga blogla oru orama podunga ungalukku romba nalla perum innum kuutamum athikarikkum. ore varthaila sollanumna ungaka kathai romba nal kalichi arumaiyana kathal kathai padikkira effect. veliyoorla irukkuren athan tamila type pannamudiyala sorry

அப்பாவி தங்கமணி said...

@ kadar - இந்த ஜென்மத்துல படிக்கற எண்ணம் இல்லை... ஒகே...

அப்பாவி தங்கமணி said...

@ Dubukku - ஹா ஹா ... ஆஹா... நீங்களும் சொல்லிட்டீங்களா? அவங்க புக் ரெம்ப படிச்சு அப்படி ஆகிட்டேன் போல இருக்குங்க... நன்னிஹை...

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - ஹா ஹா ஹா... சூப்பர் கலாய்ப்பு... நடந்துங்க நடத்துங்க... எனக்கு ஒரு சான்ஸ் சிக்காமையா போகும்?

அப்பாவி தங்கமணி said...

@ வடிவேலன் ஆர். - வாவ்...ரெம்ப நன்றிங்க... உங்கள் வாழ்த்துக்கும் நல்ல ஐடியா குடுத்ததுக்கும்... நிச்சியம் செய்யறேன்... ரெம்ப நன்றி மீண்டும்...

அப்பாதுரை said...

நிறைய வரிகளில் கவிதை சாயல். காதல் கதையில் வேகம் வந்தால் வேறே கதையாயிடுமே?

அப்பாதுரை said...

பழைய பகுதிகளுக்கு link முகப்பில் கொடுக்குற மாதிரி, அடுத்த பகுதிக்கான linkம் அந்தந்தப் பதிவில் கொடுத்தால் தொடர்ந்து படிக்க வசதியா இருக்கும் :)

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க... நீங்க சொன்னது போல் அடுத்தடுத்த பகுதியின் லிங்க் இணைத்து விடுகிறேன்... மிக்க நன்றி...

Jaleela Kamal said...

பொதுவா கதை என்றாலே படிக்கமாட்டேன்.படிக்கமாட்டேன்னா நேரமின்மை காரணமும், பொருமையில்லாததும்.
சிலது ரொம்ப பிடிச்சிருந்தா படிப்பேன்

இந்த கிளைமேட்டுக்கு ஜிலு ஜிலுன்னு படிச்சி, எனக்கு ஜல்பே பிடித்துவிட்டது.

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal - ஆஹா....இது சூப்பர் காம்ப்ளிமென்ட்... ரெம்ப நன்றிங்க ஜலீலா...

//எனக்கு ஜல்பே பிடித்துவிட்டது//
அடுத்த பார்ட் படிச்சா ஜல்பு போயிடுமாம்... ஹா ஹா ஹா... நன்றிங்க

Jaleela Kamal said...

நெசமா தாம் பா போனவாரம் பிடித்த ஜல்பு இன்னும் விடல, அவ்வளவு ஜில் ஜில்

இன்று தான் மிளகு சூப் வைத்து குடித்து சரி பண்ணி இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal - Oh no... I hear flu & cold everywhere... take care Jaleela...

Anonymous said...

Incredible points. Sound arguments. Keep up the amazing work.
Review my site : additional info

Post a Comment