Tuesday, January 25, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 5)


பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4

இலையுதிர் காலம் முடியும் தருவாயில் முதல் செமஸ்டர் பரிட்சைகள் நெருங்கியது. நால்வரும் தினமும் மாலை நேரத்தில் ஸ்டீவின் அபார்ட்மென்ட்ல் குரூப் ஸ்டடி செய்வதென முடிவு செய்தனர்

நால்வரும் படிப்பில் நல்ல ஆர்வமுள்ளவர்களாய் இருந்ததால் சேர்ந்து படிப்பது உபயோகமான நேரமாய் ஆனது அவர்களுக்கு

சேர்ந்து படிப்பதும், இடையிடையே சிரிப்பும் விளையாட்டுமாய் சந்தோசமான நேரங்களாய் ஆனது. தினமும் ஸ்டீவ் வேண்டுமென்றே மீராவை கடைசியாய் அவளிடத்தில் விட சென்றான். அவளுடனான தனிமை தருணங்களை அவளும் நினைவில் கொள்ளும் விதத்தில் வம்பாய் பேசி சிரிக்க செய்தான்

அடுத்த வந்த வார இறுதியிலும் சேர்ந்து படிக்கலாம் என முடிவு செய்தனர்

காலை ஒம்பதரை மணி ஆன போதும் விடுமுறை நாள் என்பதால் கண்விழித்தும் சோம்பலாய் சும்மாவேனும் கண்மூடி படுத்திருந்தான் ஸ்டீவ்

கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, மூவரும் பதினோரு மணி போல் வருவதாய் தானே சொன்னார்கள் என யோசனையுடன் எழுந்து சென்றான்

கதவின் Eye-viewer வழியாய் பார்த்தவன் மீராவை கண்டதும் சோம்பல் காணாமல் போக உற்சாகமானான். ஆனால் அடுத்த நொடி, மீரா முன் இப்படி தூங்கி எழுந்த முகத்தோடு நிற்பதா என தயங்கி உள்ளே செல்ல நினைக்கவும் மறுபடியும் கதவு தட்டப்பட்டது

அவளை காக்க வைக்க மனமின்றி அப்படியே கதவை திறந்தான். "ஹாய் மீரா" எனவும், இப்போது தடுமாறுவது அவள் முறையானது

இரவு உடையும் கலைந்த தலையுமாய் அவனை பார்த்ததும் "ஓ சாரி ஸ்டீவ்... நீ இன்னும் தூங்கிட்டு இருப்பேன்னு நினைக்கல... நேரமே எழுந்துட்டேன், போர் அடிச்சது அதான் வந்துட்டேன்... நான் லாபில வெயிட் பண்றேன்... take your time" என அவள் elevator நோக்கி நடக்க தொடங்க

"இல்ல மீரா... இட்ஸ் ஒகே... நீ டிவி பாத்துட்டு இரு... I'll be in a minute" என அவள் பதிலுக்கு காத்திருக்காமல் விரைந்து ஒரு உடையை எடுத்து கொண்டு washroom உள் நுழைந்து கொண்டான்

அதற்கு மேல் மறுத்தால் பிகு செய்வதாய் தோன்றுமென மீரா எதுவும் கூறாமல் சென்று சோபாவில் அமர்ந்தாள்

அறையை சுற்றியும் பார்வையை சுழல விட்டவள் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நேர்த்தியை ரசித்தாள். அளவாய் வேண்டிய அளவு மட்டும் பொருட்களை வைத்து கொள்வதே அவளுக்கும் பிடிக்கும்

அழகுக்கென வெறுமெனே பொருட்களை வாங்கி இடத்தை அடைப்பதை எப்போதும் அவள் விரும்பியதில்லை. ஸ்டீவ் கூட அப்படியே வைத்திருந்தான்

தடுப்புகளற்ற ஒரே பெரிய அறை தான் மொத்த வீடும். இது போன்ற ஸ்டூடியோ அபார்ட்மென்ட் முறை கூட வசதி தான் என நினைத்தாள் மீரா

ஒரு மூலையில் படுக்கை, அப்போது தான் எழுந்தான் என கூற முடியாத படி நேர்த்தியாய் இருந்தது பெட் விரிப்புகள்

இடது பக்கம் சிறிய சமையல் மேடை.சமைப்பானோ என சந்தேகம் கொள்ளும்படி சுத்தமாய் இருந்தது, அதை சேர்ந்தாபோல் சிறிய பால்கனி, அதில் அழகாய் இரு மடக்கும் நாற்காலிகள் நடுவே சிறிய டீபாய் போல் ஒன்று

அறையின் மையத்தில் சோபா, அதன் முன் சற்று தள்ளி இருந்த சுவரை ஒட்டி சிறிய டேபிள் மீது டிவி. எங்கும் சிறு தூசு துரும்பை கூட காண முடியவில்லை என மனதிற்குள் பாராட்டினாள்

என்றேனும் சதீஷ் இப்படி மாறுவானோ என தோன்றிய நொடி, இதை கேட்டால் அவன் முகம் எப்படி கோபமாய் மாறும் என நினைத்ததும் சிரிப்பு வந்தது

சற்று நேரத்தில் ஸ்டீவ் வந்து மற்றொரு சோபாவில் அமர்ந்தான்

"ரியல்லி சாரி ஸ்டீவ்...தூக்கத்த கெடுத்துட்டேன்" என மீரா கூற

"நீ என் தூக்கத்த கெடுத்து ரெம்ப நாளாச்சு" என தோன்றியதை மனதிலேயே இருத்திக்கொண்டு "இட்ஸ் ஒகே மீரா... நான் தூங்கல... Just lazy rolling on bed...thats it" என்றான்

"ஓ... நீயும் சதீஷ் போலத்தானா...அவனும் இப்படி தான் முழிச்சுட்டாலும் ரெண்டு மணி நேரம் எழுந்துக்க மாட்டான்" என மீரா கூற

"இப்ப ரெம்ப அவசியம் அவன பத்தி" என பற்களை கடித்து முணுமுணுத்தான் ஸ்டீவ்

"என்ன?" என புரியாமல் மீரா கேட்க

"அ... ஒண்ணுமில்ல... great men are alike னு சொல்ல வந்தேன்" என சமாளித்தான்

"ம்... நெனப்பு தான்... நீங்க எல்லாம் கிரேட்ஆ இல்லையான்னு நாங்க தான் சொல்லணும்... நீங்களே சொல்லிக்கக்கூடாது" என சிரித்தாள்

"அப்படியா? சரி நான் கிரேட்ஆ இல்லையான்னு நீயே சொல்லேன்" என பேச்சை திசை திருப்பினான் ஸ்டீவ்

"ம்... எனக்கு உன்ன பத்தி பெருசா என்ன தெரியும்... as such you're okay" என குறும்பாய் சிரித்தாள்

அது போதுமே ஸ்டீவை பறக்க செய்ய. "ம்...ஒகே இந்த மட்டும் ஒத்துகிட்டியே போதும்" என அவனும் சிரித்தான்

"இட்டாலியன்ஸ் hospitality க்கு பேர் போனவங்கன்னு கேள்வி" என பூடகமாய் பேசினாள் மீரா

அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தபோதும் வேண்டுமென்றே "அப்படியா... அதுகென்ன இப்போ" என பேச்சை வளர்த்தான்

"ஒரு காபி கொடுக்க காசு கேப்ப போல இருக்கே, சரியான கஞ்சூஸ்" என முறைத்தாள்

"தூக்கத்த கெடுத்தல்ல, அதுக்கு பதிலா நீயே காபி போட்டு குடுப்பேன்னு நெனச்சேன்" என வேண்டுமென்றே சீண்டினான் ஸ்டீவ்

"சரி...நான் தொல்ல தான் உனக்கு... போறேன்... அவங்க வந்தப்புறம் போன் பண்ண சொல்லு... அப்புறம் வரேன்..." என அவள் எழுந்து கொள்ள

"காபி போட தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லு... இப்படி எல்லாம் எஸ்கேப் ஆக வேண்டாம் மீரா" என அவன் சத்தமாய் சிரிக்க

"உனக்கு தெரியுமா எனக்கு காபி போட தெரியாதுன்னு" என சிலிர்த்து எழுந்தாள்

அதற்காக தானே அவனும் வம்பு செய்தது, எனவே அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தவாறே வார்த்தைக்கு வார்த்தை வம்பு செய்தான்

"தெரிஞ்சா போட்டு குடு... அப்புறம் நம்பறேன்" என சீண்டினான்

"காபி வேணும்னா நேராவே கேளு... இப்படி trap பண்ண வேண்டாம்" என சிரித்து கொண்டே சமையல்  மேடையை நோக்கி சென்றாள்

தானும் அவளும் மட்டும் தனியாய் வீட்டில், அவள் ரெம்ப பழகியவள் போல் சமையல் மேடை அருகில் நின்று ஏதோ தேடி கொண்டிருக்க..., ஏதோ picture perefect என்பார்களே அது போல் என தோன்ற, ஸ்டீவ் அந்த தருணத்தை மனதில் பதிய செய்து கொள்ள முனைபவன் போல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்

அவள் அருகில் சென்று நின்றவன் "இதுக்கு முன்னாடி காபி போட்டு இருக்கியா மீரா?" என கேலியாய் கேட்க

"ஹலோ...எங்க வீட்டுல traditional பில்ட்டர் காபியே நான் போடுவேன்.... இதென்ன பெரிய விஷயம்... அது சரி உன்கிட்ட காபி மேக்கர் இல்லையா? காலைல அவசரத்துக்கு கஷ்டமில்ல?" என கேட்டாள்

"ஏன் அது இருக்குங்கற தைரியத்துல தான் காபி போட ஒத்துகிட்டயா?" என மேலும் சீண்டினான்

"ஏய்... " என அருகிலிருந்த Pan Cake செய்யும் Pan எடுத்து கொண்டு அவள் மிரட்டுவது போல் பார்க்க, உரிமையான அவளின் செய்கையில்  தன்னை மறந்து, அவளை விட்டு பார்வையை விலக்க முடியாதவனாய் நின்றான் ஸ்டீவ்

அன்று சினிமா பார்த்த தினம் பார்த்த அதே பார்வை போல் அது மீராவை உறுத்தியது. என்ன விதமான கண்கள் இவனுக்கு, ஊடுருவி எதையோ தேடுவது போல் என்ன பார்வையோ என நினைத்த மீரா தானும் ஏன் எதுவும் கூறாமல் அவனை பார்க்கிறோம் என்பதை உணரவில்லை

அவள் தன்னை ஆராய்வது போல் பார்ப்பதை உணர்ந்ததும் மனம் சிறகடிக்க "என்ன? உங்க தமிழ் சினிமா ஜோக்கர் ரோலுக்காவது தேறுவேனா?" என அவன் அவள் தன்னை பார்ப்பதை உணர்த்துவிட்டதை உணர்த்தும் விதமாய் கேலி செய்ய

அதை புரிந்து கொண்டு மீரா சமாளிப்பதாய் நினைத்து வேறு பக்கம் பார்த்த படி "நீ தான் என்ன கண் அசைக்காம பாத்த ஸ்டீவ்... நான் ஒண்ணும் உன்ன பாக்கல" என உளறினாள்

அதையும் அவன் தனக்கு சாதகமாக்கி கொண்டான் "அப்படியா... அழகா இருக்கறதை ரசிக்கறது தப்பா? Its not a sin in my religion" என எப்படி மடக்கினேன் பார் என்பது போல் சிரித்தான்

அவன் எதிர்பார்த்தது போலவே பெண்மைக்கே உரிய விதமாய் முகம் சிவக்க "எந்த நாட்டை சேர்ந்தவங்களா இருந்தாலும் நீங்க men எல்லாரும் ஒரே போல தான்" என முக சிவப்பை மறைக்க ஏதோ தேடுபவள் போல் பாவனை செய்தாள்

"ஒரே போலன்னா?" அவள் சொல்வது புரிந்தும் வேண்டுமென்றே அவள் முக சிவப்பை மீண்டும் பார்க்கும் ஆவலில் கேட்டான்

"ரெம்ப பேசினா காபில சுகர்க்கு பதிலா சால்ட் போட்டுடுவேன்" என அவள் மிரட்ட

"வாவ்... புது ரெசிபியா? patent வாங்கிடு மீரா" என கேலி செய்தான்

"ச்சு... போதும் வம்பு... நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லல" என இம்முறை பேச்சை மாற்றினாள் இவள்

"என்ன கேட்ட?" என்றான் நிஜமாகவே புரியாமல்

"ம்... பிரைன் damage ஆனவங்களுக்கு எப்படி MBA சீட் குடுத்தாங்கன்னு கேட்டேன்" என்றாள் குறும்பாய்

"ம்... சீட் குடுக்கரப்ப நல்லாத்தான் இருந்தது... அன்னிக்கி ஒரு அழகான பொண்ணு என் மேல புக்கை தூக்கி வீசினதுல இருந்து தான் இந்த டேமேஜ்" என அவன் இருபொருள் பட பேசினான்

அதை கேட்டதும் ஒரு கணம் பேசமுடியாமல் நின்றவள் அவன் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்ததும் இயல்பாய் பேச்சை மாற்றுவது போல் "காபி மேக்கர் இல்லையா? காலைல அவரசத்துக்கு கஷ்டமில்லயானு கேட்டேன்...நீங்க இட்டாலியான்ஸ் காபி பிரியர்கள் ஆச்சே... " என்றாள்

இதற்கு மேல் சிவக்க செய்யாதே என கெஞ்சுவது போன்ற பார்வையுடன் வேண்டுமென்றே அவள் பேச்சை மாற்றியதை உணர்ந்த ஸ்டீவ், மேலும் அவளை தவிக்க வைக்க மனமின்றி

"இல்ல மீரா... காபி மேக்கர் ஏதோ சரியா வொர்க் ஆகலை... நேத்து தான் தூக்கி போட்டேன்... வாங்கணும்... may be today... இந்த வாட்டி perfect espresso செய்யற மாதிரி நல்லதா வாங்கணும்னு யோசிச்சுட்டு இருக்கேன்..." என்றான்

தனக்கும்  espresso பிடிக்கும் என சொல்ல நினைத்தவள், அதை கூறினால் அதை தொட்டு மீண்டும் வம்பாய் ஏதேனும் பேசுவானோ என பயந்தவள் போல் "டீ போடறேன்" என்றுவிட்டு   எலெக்ட்ரிக்  கெட்டிலை  உயிர்பித்தாள் 

டீ தயாரானதும் சில நொடிகள் அங்கு மௌனம் நிலவியது

அதை பொறுக்காதவன் போல் "சதீஷ் அவ்ளோ சொன்னப்பவே யோசிச்சுருக்கணும்... இப்படி நானே போய் Trap ஆய்ட்டேன்" என அவன் பாவமாய் டீ மக்கை உயர்த்தி காட்டி கூற

"யு...." என கோபமாய் சோபாவில் இருந்த தலையணை அவன் மேல் வீசினாள். அதை அறிந்தவன் போல் அவன் நகர்ந்த போதும் சிறிது டீ  அவன் மேல் சிந்தியது

சட்டென முதல் நாள் நினைவு வர இருவரும் கண்களில் நீர் வர சிரித்தனர்

"சிரிக்கறப்ப you're a princess Meera...especially those dimples makes you an angel" என மனதில் தோன்றியதை மறைக்காமல் உரைத்தான் ஸ்டீவ்

மீராவை காணும் பலரும் அவள் கன்னக்குழி அழகு என கூறுவது இயல்பு தான் என்ற போதும் "ஒகே டீஸ் பண்ணினதுக்கும் இதுக்கும் சரியா போச்சு" என சமாளித்தாள்

அப்போதே ஒரு முடிவுக்கும் வந்திருந்தான் ஸ்டீவ். மீராவை நெருங்க வேண்டுமென்றால், அவள் தன்னிடம் உரிமையாய் பேச வேண்டுமெனில் இது போல் அவளிடம் பேச்சுக்கு பேச்சு வழக்காட வேண்டுமென...

ஆனால் அதுவே பின்னொரு நாளில் ஒரு விபரீதத்தை விளைவிக்க போவதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை...
                                                                 ********************

இப்படியே பேச்சும் சிரிப்புமாய் நேரம் கரைய கதவு தட்டப்படும் ஒலி கேட்க "ச்சே... அதுக்குள்ள வந்துட்டாங்களா?" என முணுமுணுத்தபடி சென்று கதவு திறந்தான் ஸ்டீவ்

எதிர்பார்த்தது போல் மதுவும் சதீஷ்ம் "ஹாய்" என்றபடி உள்ளே வந்தனர்

மீரா அங்கு இருப்பதை கண்ட சதீஷ் "ஹேய் மீரா... நீ எப்ப வந்த?" என கேட்க

"அ... இப்ப தான்... பத்து நிமிசமாச்சு" என தடுமாறிய குரலில் மீரா கூற, ஏன் பொய் சொல்கிறாள் என புரியாமல் ஸ்டீவ் அவளையே பார்த்தான்

வேண்டுமென்றே அவனை பார்ப்பதை தவிர்த்தாள் மீரா

மீரா சொன்ன பொய்யின் மறைபொருள் என்ன?
அவள் மனதை கொள்ளை கொண்டு விட்டானா ஸ்டீவ்?
விடை - இனி வரும் அத்தியாயங்களில்... 
 
சொன்னஒரு பொய்யில்
சொர்கத்தை கண்டேன்
நமக்கானரகசியம் இதுவென
நயமாய் உரைத்தாயோ!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

...

80 பேரு சொல்லி இருக்காக:

பிரதீபா said...

1st

பிரதீபா said...

//க "என்ன? உங்க தமிழ் சினிமா ஜோக்கர் ரோலுக்காவது தேறுவேனா?" // - இந்தக் கேள்வி என்னம்மோ நீங்களே உங்களைப் பத்திக் கேட்ட மாதிரி இருந்திச்சுன்னா பாருங்களேன் !!

பிரதீபா said...

//especially those dimples makes you an angel// - அக்கா, இது மச்சான் உங்க கிட்ட சொன்னதா? இல்ல அப்படி சொல்ற மாதிரி இல்லியேங்கற ஏக்கத்துல எழுதினதா? ;)

பிரதீபா said...

//ஒரு மூலையில் படுக்கை, அப்போது தான் எழுந்தான் என கூற முடியாத படி நேர்த்தியாய் இருந்தது பெட் விரிப்புகள்// - சேம் ப்ளட்?

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாம் படிச்சிட்டேன் டயர்டா இருக்கு ஒரு டீ சொல்லுங்கப்பூ...

My days(Gops) said...

top 10 la vandhu attendance pottuten..............

அமைதிச்சாரல் said...

//இட்டாலியன்ஸ் hospitality க்கு பேர் போனவங்கன்னு கேள்வி//

என்னாது... இட்டாலியன்ஸ் எல்லோரும் பேர தொலைச்சிட்டு, hospitalல அட்மிட் ஆகியிருக்காங்களா :-)))))))

BalajiVenkat said...

naan italy poiruntha pothu... athu europela irukura mathiriye thonala.... it was entirely differnet from europe...
mind voice: ada cha .. enna thithu indha posta vittuttu vera ennalamo pesara....

ivanga posta pathi ennatha solrathu... kaathula poga thaan varuthu... chumma enna mathiri chinna pasangalukku ippadi thenozhugum kadal kadai sonna kadalu irundhu poga thaan varumey thavira kadaliya varuva...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

இவன் ரசிச்சு சொல்வதை மீரா ரசிப்பதால் அவளுக்கும் காதல் வந்துருச்சு.
குரூப் ஸ்டடி எப்படி படிப்பாங்கன்னு நமக்கு தெரியுதா,
இவங்க இப்படி படிக்கிறத பார்த்தா யாரும் MBA பாஸ் பண்ண மாட்டாங்க போல இருக்கு.

முனியாண்டி said...

வீட்டின் சுத்தம் நேர்த்தி குறித்த வரிகளில் உங்கள் வீடும் நேர்த்தியாக இருக்கும் என்று தோன்றியது. நம்புவோம். என் வீட்டு தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டு பார் பாடல் வைரமுத்து அவர் வீடு மாடியில் இருந்து தோட்டத்தை பார்த்து எழுதியதாக கேள்வி

Vasagan said...

காதல் வந்தால் பொய் வரும்

புத்திசாலி தனமா மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைபார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது அவர்கள் சொல்லும் பொய் அனைவரும் அறிந்த ரகசியம்.

ஹும் 22 வருசத்து முன்னால் செய்த தப்ப இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்-Me Call to India

இதுக்கு தான் AT blog yai படிக்ககூடாது-Wife from India over phone .

Porkodi (பொற்கொடி) said...

why is mokkai meera lying..??? ;)

Porkodi (பொற்கொடி) said...

Gops!! anna neenga first storya fulla padichitu vandhu vadaiya vaangungannaa... :P

priya.r said...

//அவளுடனான தனிமை தருணங்களை அவளும் நினைவில் கொள்ளும் விதத்தில் வம்பாய் பேசி சிரிக்க செய்தான்/
வம்பு பேச்சுகளை விவரித்து இருந்தால் கதைக்கு இன்னும் அழகு சேர்த்து இருக்கும்பா

//அதை புரிந்து கொண்டு மீரா சமாளிப்பதாய் நினைத்து வேறு பக்கம் பார்த்த படி "நீ தான் என்ன கண் அசைக்காம பாத்த ஸ்டீவ்... நான் ஒண்ணும் உன்ன பாக்கல" என உளறினாள்//

வாவ் ! உளறி கொட்டி கிளறி மூடினாள் யாபகம் வந்து ரசிக்க வைத்தது புவனா !

priya.r said...

//ஆனால் அதுவே பின்னொரு நாளில் ஒரு விபரீதத்தை விளைவிக்க போவதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை...//

ஏன் ஏன் நல்லா போய் கொண்டு இருக்கிற கதைக்கு ஏன் இப்படி ஒரு திருப்பம் ? நாட்டாமை தீர்ப்பை மாத்து!

priya.r said...

//மீரா சொன்ன பொய்யின் மறைபொருள் என்ன?
அவள் மனதை கொள்ளை கொண்டு விட்டானா ஸ்டீவ்?
விடை - இனி வரும் அத்தியாயங்களில்... //

ஏனுங்க அம்மணி ! இதென்ன கேள்வியும் நானே பதிலும் நானே டைப் ல
இருக்கு ! என்னவோ நடக்குது .,ம்ம்ம் நடக்கட்டும் ..நடக்கட்டும் ....

அமைதிச்சாரல் said...

//மீரா சொன்ன பொய்யின் மறைபொருள் என்ன?
அவள் மனதை கொள்ளை கொண்டு விட்டானா ஸ்டீவ்?
விடை - இனி வரும் அத்தியாயங்களில்...//

குற்றம்.. நடந்தது என்ன??ன்னு சீரியல்ல அனவுன்ஸ் பண்றமாதிரியே எஃபெக்ட் கொடுக்கறீங்களே அப்பாவி :-))

priya.r said...

//சொன்னஒரு பொய்யில்
சொர்கத்தை கண்டேன்
நமக்கானரகசியம் இதுவென
நயமாய் உரைத்தாயோ!!! //
கிளாசிக் அப்பாவி ;
சாகித்ய அகாடமி பரிசை தட்டி செல்லும் கவிதை
என்ன நாங்க சொன்ன பொய்யில் சொர்கத்தை கண்டீங்களா!! ஹ ஹா

சின்ன அம்மிணி said...

நல்லா போயிட்டிருக்கு அப்பாவி. எல்லாத்தையும் ஒரேமுட்டா படிச்சிட்டேன்:)

Porkodi (பொற்கொடி) said...

//எல்லாத்தையும் ஒரேமுட்டா படிச்சிட்டேன்:) //

idha ethana peru makkale nambaringa? ;-)

vgr said...

hmmmmmmmmmmmmmmmmmmm....

வெறும்பய said...

பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கே... காபியும் கதையும்..

எல் கே said...

அ(ட)ப்பாவி தங்கமணி இந்த வாரம் டீ குடிச்சதை தவிர்த்து வேற எதாவது சொன்னியா ?? நீ டிவிக்கு மெகாத் தொடர் எழுதித் தரலாம். கண்டிப்பா ஒத்துப்பாங்க. ட்ரை பண்ணு

sulthanonline said...

தொடர் நன்றாக உள்ளது super

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. எவ்வளவ் நீளம்?

சௌந்தர் said...

ம்ம்ம்ம் சூப்பர் என்ன இந்த இடத்தில் ஸ்டீவ்க்கு காபி போட்டு முடித்த வுடன் சதீஷ் வந்து இருக்கணும் அந்த காபியை சதீஷ் குடித்து இருக்கணும்....அப்படி வைத்து இருக்கலாம் ஆனா இந்த காபிகே ஒரு கதை னா இன்னும் டிபன் சாப்பாடு எல்லாம் இருக்கே அப்போ

Balaji saravana said...

ரைட்டு! :)

vinu said...

satheesu eppaa saami imbuttu appaaviyaa irrukiyeyaaa; i guess inth pullay meeraa unnnai dealingulla vudapporaaaaaaaaaa;


thambi steevu ippave manasai theathikko;

enga machaan sathisum-meeraavumthaan good pair; nee illea

அனாமிகா துவாரகன் said...

கொஞ்சம் டைம் கிடைச்சுது இன்டநெட் பார்க்க. உங்க பதிவை விட பதிவுக்கு வருகிற பின்னூட்டம் அதிகம்க்கா. படிச்சு முடிக்க முதல் மூச்சு வாங்குது.

அனாமிகா துவாரகன் said...

இத்தாலியன் பசங்களுக்குன்னு ஒரு சோஃபா ரூல் இருக்கு தெரியும்ல. பாத்து எழுதுங்க. சோபா அடிக்கடி இனி கதையில வரும்னு ஒரு கெஸ்ஸிங். அப்புறம் வாசகன் அங்கிள் வந்து நீ ஒங்க ஓல்டு ஜெனரேஷன் அக்காவுக்கு இதெல்லாம் சொல்லமாட்டியான்னு திட்டக் கூடாது பாருங்க.. எதுக்கு எனக்கு வில்லங்கம். முதல்லயே வோர்னிங் தந்துட்டேன்.

அனாமிகா துவாரகன் said...

@ சௌந்தர்,
எப்டீங்க. எப்டி இப்படி எல்லாம் உங்களால யோசிக்க முடியுது..சதீஸ் மட்டும் அந்த டீயை குடிச்சிருந்தா, ஸ்டீவ் அவனை கொலைபண்ணிட்டு ஜெயிலுக்கு போய் இருப்பான். கதையும் முடிஞ்சிருக்கும்.

@ சி.பி.செந்தில்குமார் ,
எதுக்குய்யா உங்களுக்கு இவ்ளோ வில்லங்கம் புடிச்ச வேலை. இப்படி எழுதினாலுமே இவங்க காபி மட்டும் தான் குடிக்கறாங்க. இதில் நீளத்தை கட் பண்ணினா, நாலு எபிசோட்டுக்கும் இந்த காப்பியை மட்டுமே குடிப்பாங்க.

எப்பயோ பார்த்த காமடி சீன் ஞாபகத்தில வருது. விவேக் சீரியல் எழுத்தாளர். மாடியில் இருந்து வருவதை மட்டும் அன்னைக்கு சீரியல காட்டச் சொல்லி இருப்பார். ஹையோ ஹையோ

அனாமிகா துவாரகன் said...

ஹல்லோ வினு,
ஜோக்குக்குன்னாலும் உன் தலையில இடி விழன்னு சினிமா டயலொக் சொல்ல முடியல. ஸ்டீவுக்குத் தான் மீரா. அதுக்காக சதீஸை போட்டுத்தள்ளவும் தயங்க மாட்டோம்.

ஸ்டீவ் மீரா ரசிகர் சங்கம்
ஆஸ்ரேலியா.
எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை.

அனாமிகா துவாரகன் said...

@ வாசகன் மாமோவ்,
ஏனுங்க, நீங்க தானே தொரத்தி தொரத்தி அக்காவை சட் அடிச்சீங்க. அப்புறம் தப்பு பண்ணிட்டேன்னு இங்க பெருமூச்சு விடறதெல்லாம் ஓவர். அக்கா ஊர் பொண்ணு இங்க வரும்னு தெரிஞ்சும் இப்படி எழுத எவ்ளோ தைரியம் வேணும். இருங்க, எல்லா வந்த வேலை எல்லாம் முடிச்சப்புறம் வந்து பேசறேன்.

@பிரியாமான எனிமிக்கும் பிரண்டுக்கும் நடுவில இருக்கும் பிரியாக்காவுக்கு,
உங்க புளொக்ல எதையும் பார்க்க முடியவில்லை.விருது பெற்றதற்கு நன்றி. இப்ப எனக்கு கிப்ட் எல்லாம் அனுப்ப வழி இல்லை. நீங்களே வெங்காய பகோடா செஞ்சு நான் அனுப்பினதா நினைச்சு சாப்பிட்டுக்கோங்கோ. சரியா?

அனாமிகா துவாரகன் said...

001 முதல் 009 வரை உள்ள எல்லா ரகசிய உறுப்பினர்களுக்கும் என் அன்பும் அனுதாபமும். (அனுதாபம் நான் இல்லாமல் நீங்க தனியா அ.த ஐ சமாளிக்க வேண்டி இருப்பதால்.) ஓக்கே பாய்.

Chitra said...

அனாமிகா துவாரகன் சொன்னது…

001 முதல் 009 வரை உள்ள எல்லா ரகசிய உறுப்பினர்களுக்கும் என் அன்பும் அனுதாபமும். (அனுதாபம் நான் இல்லாமல் நீங்க தனியா அ.த ஐ சமாளிக்க வேண்டி இருப்பதால்.) ஓக்கே பாய்.

.....ha,ha,ha,ha,ha....

RVS said...

அந்தக் கடைசி கவிதை எல்லா அத்தியாயத்திலும் எழுதறீங்களே... எப்டிங்க அது.. அட்டகாசமா வருது.. அப்புடியே அருவி மாதிரி கொட்டுது..
;-)

RVS said...

அப்பாவி... அனாமிகான்னு ஒரு புயல் சுத்தி சுத்தி அடிக்குதே..பின்னூட்டத்துல... ;-);-) ;-)

சே.குமார் said...

கதை அருமையா இருக்கு.
படிக்கும் போது சுவராஸ்யம் வந்து ஒட்டிக் கொள்கிறது.
கடைசியாய் வரும் கவிதை சூப்பர்.

சௌந்தர் said...

அனாமிகா துவாரகன் சொன்னது…
@ சௌந்தர்,
எப்டீங்க. எப்டி இப்படி எல்லாம் உங்களால யோசிக்க முடியுது..சதீஸ் மட்டும் அந்த டீயை குடிச்சிருந்தா, ஸ்டீவ் அவனை கொலைபண்ணிட்டு ஜெயிலுக்கு போய் இருப்பான். கதையும் முடிஞ்சிருக்கும்.////

@@@@@அனாமிகா துவாரகன் ஹலோ அனாமிகா அது காபி தானே ஓஹ உங்களுக்கு டீ தான் பிடிக்கும் போல. இந்த கதையை படித்தே மயக்கம் வந்து இருக்கும் அதான் டீ நினைப்பு ஓகே ஓகே....அவன் கொலை செய்யலைனாலும் நீங்களே செய்ய சொல்விங்க போல....அதுக்காக அப்பாவியை எதுவும் செய்ய கூடாது சரியா அவங்க அட்ரஸ் தரேன் அங்கே போய் உங்க வெறியை தீர்த்து கொள்ளுங்க

My days(Gops) said...

@ kodi //Gops!! anna neenga first storya fulla padichitu vandhu vadaiya vaangungannaa...//

full kadhai'um, padichitu varadhu'ku munaaadi, ennoda attendance 100'ku poirum... appuram vadai kidaikaaadhu, sollapona vadai'ah kasaki potta paper koooda kidaikaaadhu... he he he.. appuram namma adapaavi sorry appavi akka enakku idly kodupaaanga venavey venaaam.. idly ennaikum thambi thakkudu'ku thaaan :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

புவனா, ரொம்ப அழகா எழுதுறீங்க.. ஸ்டீவ்.. மீரா.. சந்திப்பை இதை விட அழகா சொல்லியிருக்க முடியாது.. நேரில் நடப்பது போல் உணர்வு வர வைக்குது உங்க எழுத்து...

//சொன்ன ஒரு பொய்யில்..
சொர்க்கத்தை கண்டேன்...//

கலக்கல்.. அடுத்த செவ்வாய் வர வெயிட் பண்றேன் ;)

நசரேயன் said...

//
//எல்லாத்தையும் ஒரேமுட்டா படிச்சிட்டேன்:) //

idha ethana peru makkale nambaringa? ;-)

//

நான் நம்பலை

பத்மநாபன் said...

கதை வர்ணனைகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து போய் க்கொண்டிருக்கிறது...

காலையில் எழுந்து தட்டுதடுமாறி காபி போட ஆரம்பிச்சு அது டீ யாக மாறி அதைக் குடித்து ..கூடவே ஒரு சஸ்பென்ஸ் வேறு.. இதைவிட வேகமா எப்படி மெகாத்தொடர் எழுதறது...

கீப் ஜில்லிங்....

Vasagan said...

@ வாசகன் மாமோவ்,
ஏனுங்க, நீங்க தானே தொரத்தி தொரத்தி அக்காவை சட் அடிச்சீங்க. அப்புறம் தப்பு பண்ணிட்டேன்னு இங்க பெருமூச்சு விடறதெல்லாம் ஓவர். அக்கா ஊர் பொண்ணு இங்க வரும்னு தெரிஞ்சும் இப்படி எழுத எவ்ளோ தைரியம் வேணும். இருங்க, எல்லா வந்த வேலை எல்லாம் முடிச்சப்புறம் வந்து பேசறேன்.

Aaha piriyamana enemykal varisaiyil onenu sernthutucha.

priya.r said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…

001 முதல் 009 வரை உள்ள எல்லா ரகசிய உறுப்பினர்களுக்கும் என் அன்பும் அனுதாபமும். (அனுதாபம் நான் இல்லாமல் நீங்க தனியா அ.த ஐ சமாளிக்க வேண்டி இருப்பதால்.) ஓக்கே பாய். //

ஆமாண்டி .,ரெம்ப கஷ்டமா இருக்கு ! 001 ம் முன்னை மாதிரி இல்லே!

நீயும் அப்பாவி கிட்டே அமௌன்ட் வாங்கிட்டு எஸ்கேப் ஆகி விட்டாய் என்று பிளாக் வழி செய்தி !

ஆனா நான் நம்பலேப்பா! :)

priya.r said...

//@பிரியாமான எனிமிக்கும் பிரண்டுக்கும் நடுவில இருக்கும் பிரியாக்காவுக்கு,//

Chellam ! We miss U de !என்னா அறிவு ! ஏன்னா தெளிவு !

உன்னை போய் உன்னை போய் இந்த ATM எப்படி தவறா கணிச்சா!!

priya.r said...

//Chitra சொன்னது…


அனாமிகா துவாரகன் சொன்னது…

001 முதல் 009 வரை உள்ள எல்லா ரகசிய உறுப்பினர்களுக்கும் என் அன்பும் அனுதாபமும். (அனுதாபம் நான் இல்லாமல் நீங்க தனியா அ.த ஐ சமாளிக்க வேண்டி இருப்பதால்.) ஓக்கே பாய்.

.....ha,ha,ha,ha,ha....//

@ சித்ரா

உங்களுக்கு ரகசிய உறுப்பினர் எண் 010 தரப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்!

@ 007

அப்பாவியோட மைன்ட் வாய்ஸ் க்கும் நம்ம டீம்ளில் சேர ஆசையாம் ! 011 கொடுக்கிறோம்ன்னு சொன்னதற்கு 111 தான் வேணும்னு

அப்பாவி மாதிரியே அடம் பண்ணுதுப்பா! இந்த நெம்பர் ருக்கும் நாமத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ ! :)

Vasagan said...

priya.r சொன்னது…

//Chitra சொன்னது…


அனாமிகா துவாரகன் சொன்னது…

001 முதல் 009 வரை உள்ள எல்லா ரகசிய உறுப்பினர்களுக்கும் என் அன்பும் அனுதாபமும். (அனுதாபம் நான் இல்லாமல் நீங்க தனியா அ.த ஐ சமாளிக்க வேண்டி இருப்பதால்.) ஓக்கே பாய்.

.....ha,ha,ha,ha,ha....//

@ சித்ரா

உங்களுக்கு ரகசிய உறுப்பினர் எண் 010 தரப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்!

@ 007

அப்பாவியோட மைன்ட் வாய்ஸ் க்கும் நம்ம டீம்ளில் சேர ஆசையாம் ! 011 கொடுக்கிறோம்ன்னு சொன்னதற்கு 111 தான் வேணும்னு

அப்பாவி மாதிரியே அடம் பண்ணுதுப்பா! இந்த நெம்பர் ருக்கும் நாமத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ ! :) \


ஒரே MI6 கூட்டமா இருக்கு . ஆனால் அப்பாவி கவலை படாதே நாம operation Entebbe கூட்டத்தை hire பன்னினுருவோம்.

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - yes yes... நீங்க தன் first பிரதீபா... சூப்பர்...

//இந்தக் கேள்வி என்னம்மோ நீங்களே உங்களைப் பத்திக் கேட்ட மாதிரி இருந்திச்சுன்னா பாருங்களேன் !! //
thanks for the compliment... இப்ப என்ன பண்ணுவீங்க... இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா

//அக்கா, இது மச்சான் உங்க கிட்ட சொன்னதா? இல்ல அப்படி சொல்ற மாதிரி இல்லியேங்கற ஏக்கத்துல எழுதினதா? ;) //
நோ கமெண்ட்ஸ்... (ஹா ஹா)

//சேம் ப்ளட்?//
என்ன ஓ positive ஆ? ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ MANO நாஞ்சில் மனோ - டீ தானே... மீராகிட்ட ஆர்டர் பண்ணிட்டேன்... அடுத்த எபிசொட்ல வரும்... வெயிட் பண்ணுங்க... ;)

@ My days(Gops) - அது சரி... கதைய படிச்சுபோட்டு கருத்த பதிவு பண்ணிடுங்க எசமான்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் -
//என்னாது... இட்டாலியன்ஸ் எல்லோரும் பேர தொலைச்சிட்டு, hospitalல அட்மிட் ஆகியிருக்காங்களா :-))))))) //
இல்ல... உங்கள அட்மிட் பண்றதா பத்தி பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்காங்களாம்... ஹா ஹா ஹா...சிரிப்பே கண்ட்ரோல் பண்ண முடியல அக்கா... உங்க diet chart அனுப்பி வெயுங்க... என்ன சாப்ட்டு இப்படி எல்லாம் எழுத வருதுனு செக் பண்ணனும்... ஹா ஹா ஹா

@ BalajiVenkat - ஹா ஹா ஹா... என் மைண்ட்வாய்ஸ் ஏற்கனவே விசாரணை பண்ணிடுச்சு... பொழச்சு போங்க...

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் -
//இவன் ரசிச்சு சொல்வதை மீரா ரசிப்பதால் அவளுக்கும் காதல் வந்துருச்சு//
அப்படிங்கறீங்களா? இருங்க மீராகிட்ட கேட்டு சொல்றேன்:)))

//குரூப் ஸ்டடி எப்படி படிப்பாங்கன்னு நமக்கு தெரியுதா//
அவ்ளோ சொந்த அனுபவமோ???? ஹா ஹா

//இவங்க இப்படி படிக்கிறத பார்த்தா யாரும் MBA பாஸ் பண்ண மாட்டாங்க போல இருக்கு//
செமஸ்டர் முடிஞ்சதும் marksheet பப்ளிஷ் பண்றேன்... பாத்துட்டு தீர்ப்ப சொல்லுங்க நாட்டாமை... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஆஹா...இப்படி எல்லாம் தப்பா நினைக்கலாமோ? ஹா ஹா...

@ Vasagan - உங்க சண்டைல சந்தடி சாக்குல என்னை பத்தின வம்பா... ஹா ஹா... ஓ... காதல் திருமணமா? அப்ப கொறை சொல்ல வழியே இல்ல... நல்லா சிக்கிட்டீங்க... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - அதே மொக்கைனு ஆச்சு? அது ஏன் crying னா? இரு கொடி... அதுகிட்டயே கேட்டு சொல்றேன் :))))

//Gops!! anna neenga first storya fulla padichitu vandhu vadaiya vaangungannaa //
நூத்துல ஒரு வார்த்தை... நானும் அதே தான் சொல்லி இருக்கேன்... :)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//வம்பு பேச்சுகளை விவரித்து இருந்தால் கதைக்கு இன்னும் அழகு சேர்த்து இருக்கும்பா//
இதுக்கே எக்கசக்க டேமேஜ் அக்கோவ்... இதுக்கு மேல இழுத்தா அடி வாங்க தெம்பில்ல... ஹா ஹா

//வாவ் ! உளறி கொட்டி கிளறி மூடினாள் யாபகம் வந்து ரசிக்க வைத்தது புவனா//
ஹா ஹா ஹ.... weekend ஒரு ரமணிச்சந்திரன் புக் படிச்சேன்... அதுல இந்த டயலாக் பாத்ததும் நீங்க இதை பத்தி முன்னாடி போட்ட கமெண்ட் தான் ஞாபகம் வந்தது... ஹா ஹா ஹா

//ஏன் ஏன் நல்லா போய் கொண்டு இருக்கிற கதைக்கு ஏன் இப்படி ஒரு திருப்பம் ? நாட்டாமை தீர்ப்பை மாத்து! //
நான் என்ன செய்யறது? அவங்க அஜித் (தல) லெட்டரை (எழுத்து) பிரம்மா எழுதிட்டாராம் ஏற்கனவே... ஹி ஹி

//ஏனுங்க அம்மணி ! இதென்ன கேள்வியும் நானே பதிலும் நானே டைப் ல
இருக்கு ! என்னவோ நடக்குது .,ம்ம்ம் நடக்கட்டும் ..நடக்கட்டும்//
படிக்கறதும் நானேனு ஆகாம இருந்தா சரி தான் அக்கா... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் -
//குற்றம்.. நடந்தது என்ன??ன்னு சீரியல்ல அனவுன்ஸ் பண்றமாதிரியே எஃபெக்ட் கொடுக்கறீங்களே அப்பாவி //

நீங்க சொன்னப்புறம் தான் ஞாபகம் வருது... இந்த எபிசொட் எழுதறதுக்கு முன்னாடி அந்த ப்ரோக்ராம் பாத்தேன் நெட்ல... அந்த influence போல இருக்கு... அடுத்த எபிசொட் எழுதறதுக்கு முன்னாடி உங்க ப்ளாக் பக்கம் வரலாம் இருக்கேன்...(யாரு கொறை சொன்னாலும் உங்க மேல போட்டுடலாமே... ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//கிளாசிக் அப்பாவி ;//
நன்றி நன்றி நன்றி

//சாகித்ய அகாடமி பரிசை தட்டி செல்லும் கவிதை//
இது கொஞ்சம் ஓவரு ஐ சே... :))

//என்ன நாங்க சொன்ன பொய்யில் சொர்கத்தை கண்டீங்களா!! ஹ ஹா//
அதானே பாத்தேன்... ப்ரியா டௌன் டௌன்...

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மிணி - நன்றிங்க சின்ன அம்மணி...

@ //Porkodi (பொற்கொடி) சொன்னது…idha ethana peru makkale nambaringa? ;-) //
நான் நம்பறேன் நான் நம்பறேன்... எழுதினா நானாச்சும் நம்பணுமே... (அநியாயத்துக்கு ஒரு ஆள் கூட நம்பறேன்னு சொல்லல... அவ்வ்வ்வ்...)

@ vgr - இட்ஸ் ஒகே.. திட்ட வந்தத திட்டிடுங்க... மனசுல வெச்சுக்க வேண்டாம்... நானும் மனசுல வெச்சுக்க மாட்டேன்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - நன்னிஹை

@ எல் கே - டீ கடைசீல தானே குடிச்சாங்க...அதுக்கு முன்னாடி எவ்ளோளோளோளோளோ.......... நடந்தது... (ஸ்டீவ் பெட் ரூம்ல இருந்து வாசலுக்கு நடந்தது உட்பட... :)))... டிவி சான்ஸ் மட்டும் வாங்கி குடு... உன் பேரை காப்பாத்தறேன்... :))))

@ sulthanonline - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ சி.பி.செந்தில்குமார் - இதுவே நீளமா? அது சரி... சரிங்க அடுத்த வாட்டி கொஞ்சம் சின்னது பண்ணிடறேன்... :)))

@ சௌந்தர் - எனக்கு படம் எடுக்கற சான்ஸ் கெடச்சா உங்களுக்கு வில்லன் ரோல் confirmed ... ஹா ஹா ஹா... என்னா ஒரு வில்லத்தனம்? ஹா ஹா... டிபன் சாப்பாடு மெனு என்ன வேணும்னு இப்பவே சொல்லிடுங்க அப்ப தானே அடுத்த எபிசொட் போட முடியும் :)))))

@ Balaji saravana - அப்படியா? நெறைய பேரு ராங்னு சொல்றாங்களே பாலாஜி :))))

@ vinu - அது எப்படி சதீஷையும் டீல்ல உட்டுட்டு, ஸ்டீவ்கிட்ட வேற மனச தேத்த சொல்றீங்க... என்ன பிளான்? சொல்லுங்க வினு.... :))))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//கொஞ்சம் டைம் கிடைச்சுது இன்டநெட் பார்க்க. உங்க பதிவை விட பதிவுக்கு வருகிற பின்னூட்டம் அதிகம்க்கா. படிச்சு முடிக்க முதல் மூச்சு வாங்குது//
நல்லா மூச்சு வாங்கு..காசா பணமா? அதை விடு... போன மேட்டர் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?

//இத்தாலியன் பசங்களுக்குன்னு ஒரு சோஃபா ரூல் இருக்கு தெரியும்ல//
அம்மா தாயே... நீ வில்லாதி வில்லி... மீ எஸ்கேப்... :)))

//சதீஸ் மட்டும் அந்த டீயை குடிச்சிருந்தா, ஸ்டீவ் அவனை கொலைபண்ணிட்டு ஜெயிலுக்கு போய் இருப்பான். கதையும் முடிஞ்சிருக்கும்//
அடபாவிங்களா... எல்லாரும் சேந்து என் கதைக்கு ஆப்பு வெக்க தான் பிளான்ஆ? அவ்வவ்வ்வ்வ்....

//நாலு எபிசோட்டுக்கும் இந்த காப்பியை மட்டுமே குடிப்பாங்க//
இது கூட நல்ல ஐடியா தான்... தேங்க்ஸ் அனாமிகா

//எப்பயோ பார்த்த காமடி சீன் ஞாபகத்தில வருது. விவேக் சீரியல் எழுத்தாளர். மாடியில் இருந்து வருவதை மட்டும் அன்னைக்கு சீரியல காட்டச் சொல்லி இருப்பார். ஹையோ ஹையோ //
மாடில இருந்து வர்றத அவ்ளோ சுலபமா என்ன? ஒரு எபிசொட்ல முடிச்சதே பெரிய விஷயம் :)))))

//அதுக்காக சதீஸை போட்டுத்தள்ளவும் தயங்க மாட்டோம்//
எப்பா... வெறும் வில்லினு நெனச்சேன்... கொலைகாரி??????

//ஸ்டீவ் மீரா ரசிகர் சங்கம்//
வாழ்க...வளர்க உங்கள் திருப்பணி... :))))

//எல்லா வந்த வேலை எல்லாம் முடிச்சப்புறம் வந்து பேசறேன்//
அண்ணா...எஸ்கேப் ஆய்டுங்க... :))

//பிரியாமான எனிமிக்கும் பிரண்டுக்கும் நடுவில இருக்கும் பிரியாக்காவுக்கு//
ஹா ஹா அஹ...சூப்பர்...

//நீங்களே வெங்காய பகோடா செஞ்சு நான் அனுப்பினதா நினைச்சு சாப்பிட்டுக்கோங்கோ//
ப்ரியா நீங்க millionaireனு சொல்லவே இல்ல... :))))

//001 முதல் 009 வரை உள்ள எல்லா ரகசிய உறுப்பினர்களுக்கும் என் அன்பும் அனுதாபமும். (அனுதாபம் நான் இல்லாமல் நீங்க தனியா அ.த ஐ சமாளிக்க வேண்டி இருப்பதால்.) ஓக்கே பாய்//
போற போக்குல பத்த வெச்சுட்டு போறதுன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. இதானா அது? நல்லாலாலாலா இரு அம்மணி.....

அப்பாவி தங்கமணி said...

@ Chitra - நீங்களுமா சித்ரா... ???????

@ RVS - ஆஹா... நெஜமாவா சொல்றீங்க? (அப்படியே maintain பண்ணு அப்பாவி... )...ரெம்ப நன்றிங்க... அது அப்படியே flow ல வர்றது தானுங்க... மிக்க நன்றி :))))

//அப்பாவி... அனாமிகான்னு ஒரு புயல் சுத்தி சுத்தி அடிக்குதே..பின்னூட்டத்துல... ;-);-) ;-) //
அது புயல் இல்லைங்க RVS... பூகம்பம்... எல்லாரும் எஸ்கேப்...........................

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் -
//அதுக்காக அப்பாவியை எதுவும் செய்ய கூடாது சரியா அவங்க அட்ரஸ் தரேன் அங்கே போய் உங்க வெறியை தீர்த்து கொள்ளுங்க//

எப்படி இப்படி எல்லாம்... இந்த பக்கம் அக்கானு டயலாக் விட்டுட்டு அந்த பக்கம் மர்டர் பிளான்?????? என்னா ஒரு வில்லத்தனம்?????

அப்பாவி தங்கமணி said...

@ My days(Gops) - நீங்க படிச்சுட்டு வாங்க ஸ்பெஷல் வடை செஞ்சு வெக்கறேன்... (ஓடாதீங்க கோப்ஸ்.....) இட்லி உங்களுக்கு கண்டிப்பா வருது இருங்க... சந்தடி சாக்குல அடப்பாவியா....அவ்வ்வ்வவ்...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ரெம்ப தேங்க்ஸ் ஆனந்தி...

@ நசரேயன் - ரெம்ப நாள் கழிச்சு அப்பாவி ப்ளாக் பக்கம் வர்றமே... நல்லதா நாலு வார்த்தை சொல்லுவோம்னு ஒரு கரிசன இருக்கா? அவ்வவ்வ்வ்வ்....

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - அதானே... தேங்க்ஸ் அண்ணா (அண்ணா இப்படியே maintain பண்ணிடுங்க... இல்லேனா ஊர் பேரு போய்டும்... ஹ்ம்ம்.... :))))

@ Vasagan - பகலில் பக்கம் பாத்து பேசுங்க...அனாமிகா இருக்கற ஊர்ல அதையும் பேசாதீங்க... :))))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - யாரு 001 னு மறந்தே போச்சு... ஒரு revision குடுங்க அக்கோவ்... :))))))

//உன்னை போய் உன்னை போய் இந்த ATM எப்படி தவறா கணிச்சா//
எக்கோவ்...என்னதிது? நான் பாட்டுல சிவனேன்னு இருக்கேன்.... இந்த சுனாமிகிட்ட மாட்டி விடறது நியாமா?????

//சித்ரா - உங்களுக்கு ரகசிய உறுப்பினர் எண் 010 தரப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்//
நல்லா சேத்துராங்கய்யா செட்டு... (((((:

//அப்பாவியோட மைன்ட் வாய்ஸ்க்கும் நம்ம டீம்ளில் சேர ஆசையாம் ! 011 கொடுக்கிறோம்ன்னு சொன்னதற்கு 111 தான் வேணும்னு//
அது... உங்களுக்கு நாமம் போடற ஐடியால சொல்லி இருக்கும்... இப்பவே சொல்லிட்டேன்... அது என்னாட்டம் அப்பாவி இல்ல... நெஜமாவே அடப்பாவி... சிக்கிட்டு சீக்கி அடிக்க போறீங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//ஒரே MI6 கூட்டமா இருக்கு . ஆனால் அப்பாவி கவலை படாதே நாம operation Entebbe கூட்டத்தை hire பன்னினுருவோம்//
அது என்னங்க.... எட்டப்பி கூட்டமா? ச்சே Entebbe ?????

Krishnaveni said...

This time picture looks great, nice story and kavithai, keep going

Vasagan said...

Operation entebbe - by Mossad.
Check this link.
http://www.operationentebbe.com/

A famous rescue mission carried out by the Israel Defense Forces (IDF) at Entebbe Airport in Uganda.

During NCC camping time one of the officers used to tell this story.

vinu said...

அனாமிகா துவாரகன் சொன்னது…
ஹல்லோ வினு,
ஜோக்குக்குன்னாலும் உன் தலையில இடி விழன்னு சினிமா டயலொக் சொல்ல முடியல. ஸ்டீவுக்குத் தான் மீரா. அதுக்காக சதீஸை போட்டுத்தள்ளவும் தயங்க மாட்டோம்.

ஸ்டீவ் மீரா ரசிகர் சங்கம்
ஆஸ்ரேலியா.
எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை


vinu - அது எப்படி சதீஷையும் டீல்ல உட்டுட்டு, ஸ்டீவ்கிட்ட வேற மனச தேத்த சொல்றீங்க... என்ன பிளான்? சொல்லுங்க வினு.... :))))


satheesai dealil udakkaaranam meera sonna poi; athai steve advanceaaga eduthukkollumbothu; meera satheesidam ithuvaraiyilum eathyum maraiththathu illai enbathaal, indru avanai viduththu munnamea thaan ingu vanthu vittathay maraykkum vithamaaga oru kuTra unarchiyin velippadaagavum intha nigalvai kaana iyalum enbathaal; sathisum-eeraavumea jodi servaargal endru koorinen; athuvum illamal, intha episodil, meera and steeve similar thoughts udayavargal endru pala idangalil varuvathaalum; meeraavin paarvaiyil satheesu evvaaru avalin palakkangalukku muranpattavn endru koori irruppathaalum, [ethir ethir thuruvangal ondrai ondru eerkum] satheesh- meeraa jodi steve-meera jodiyaykkaatilum suvaiyaaga irrukum enbathu enathu ennam; avvalavea he he he he he he he he

அப்பாதுரை said...

காபி episode மாதிரி சின்னச் சின்ன கொக்கிகள் போடுறது ரசிக்கும்படி இருக்கு. ஒரு வட்டத்துக்குள்ளயே சுத்துற மாதிரி இருக்கே?

Mahi said...

:)

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
mobile :+919043194811

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...

@ Vasagan - ஐயோ...இப்படி வேற இருக்கா?

@ Vinu - ஆஹா... தீசிஸ் எழுதற ரேஞ்சுக்கு ஆராய்ச்சி... சூப்பர் வினு...தேங்க்ஸ்... (நானே இவ்ளோ யோசிக்கல பிரதர்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - நன்றிங்க... அடுத்த வாட்டி location மாத்திடறேன்... அதைதானே வட்டம்னு சொன்னீங்க... ஜஸ்ட் கிட்டிங்... :)))

@ Mahi - வேணாம்... திட்டீருங்க... இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்னு புரியலியே அம்மணி... ஹா ஹா:)))

@ vinu - வாவ்... கிரேட் நியூஸ்... தேங்க்ஸ் for ஷேரிங்...

அப்பாதுரை said...

வட்டம்னு சொன்னது.. subtextலயே கதையை நகத்துறீங்களேனு தோணிச்சு.

Madhuram said...

Bhuvana, just now got time to read all the parts. It's really very good (at least for youth like me!) I think LK, Kodi ku ellam romba vayasayiduchunu ninaikiren, that's why they are not able to enjoy the narration. Enakku romba pidichirukku. Naama ellam endrum padhinaaru.

அப்பாவி... அனாமிகான்னு ஒரு புயல் சுத்தி சுத்தி அடிக்குதே..பின்னூட்டத்துல...

Adhu anamika illa, sunamika!

Jaleela Kamal said...

படத்துடன் நேற்று இங்கு அடித்த காற்றும் சேர்த்து சிலு சிலுன்னு இருக்கு.

Jaleela Kamal said...

இதோடு அடுத்த செவ்வாயா?
இடையில் ஒரு செக் வேர வச்சி இருக்கீங்க

அப்பாவி தங்கமணி said...

@அப்பாதுரை - நீங்க முதல் முறை சொன்ன போதே புரிந்ததுங்க... ஜஸ்ட் for fun அப்படி சொன்னேன்... மிக்க நன்றி...

@ Madhuram - வாவ்... மது... ரெம்ப சந்தோஷம் உங்க கமெண்ட் பாத்து... எவ்ளோ நாள் ஆச்சு... I guess you must be handful with kuttis now... ha ha ha... எப்படி எப்படி??? நாம எல்லாம் யூத்து???? ஹா ஹா ஹா... Porkodi is going to haunt you for this comment... well said...sunamikaa...ha ha... Lets plan to meet sometime...take care Madhu

@ Jaleela Kamal - சிலு சிலுனு தொடர்ந்து வீசும்... இன்னும் ரெண்டு மாசம் winter இருக்கே... ஹா ஹா... நன்றிங்க... நாளைக்கு அடுத்த பார்ட் போட்டுடறேன்...

Post a Comment