Thursday, January 20, 2011

Cut Shoeவும் கட்டாத நாயும்...(ஹையோ...ஹையோ...)இந்த தலைப்பை பாத்ததும் "என்னமோ பின் நவீனத்துவ எபக்ட்" போல உங்களுக்கு தோணும்...

 "அன்த சீன் ஏன்ட்டி லேதண்டி" னு தெலுகு சினிமால அடிக்கடி ஒரு டயலாக் வர்ற மாதிரி அப்படி எல்லாம் நீங்க என்னை பத்தி பெருசா நெனச்சுட வேண்டாம் (யாரும் நினைக்கலைங்கறது எனக்கும் தெரியும்... ஆனாலும் இப்படி பில்ட் அப்ல தானே நம்ம வண்டியே ஓடுது... ஹி ஹி)

இந்த நேரத்துல இன்னொரு மேட்டர் சொல்லியே ஆகணும்... அப்ப தான் என் மன பாரம் குறையும்... இந்த பின் நவீனத்துவம்னா சத்தியமா எனக்கு என்னனே தெரியாது... எல்லாரும் சொல்றாங்கன்னு என்னமோ catchy ஆ ஒரு வார்த்தை சிக்குச்சுனு நானும் அடிக்கடி யூஸ் பண்றது தான்... (யாரங்க "இதெல்லாம் ஒரு பொழப்பு" னு கா.தூ எல்லாம் செய்யறது... விடுங்க பாஸ் ப்ளாக்ல இதெல்லாம் சகஜமப்பா... சாதா'ரண'மப்பா...)

இந்த பதிவு இப்ப போடறதுக்கு முக்கிய காரணம், போன வாரம் ஒரு பிரெண்ட் என்கிட்ட கேட்டது தான் "என்ன உன் ப்ளாக் வர வர ரெம்ப சீரியஸ் போர்க்களம் மாதிரி ஆய்டுச்சு... ஒரே செண்டிமெண்டல் கதை கவிதை தான் வருது... நல்லாத்தான் இருக்கு (நிஜமா சொன்னா, நம்புங்க மக்களே), ஆனா ஒரு காமெடி போஸ்ட் போட்டு ரெம்ப நாளாச்சே" னு ரெம்ப பீல் பண்ணி கேட்டா அவ...

எனக்கு அப்படியே கர கரனு கண்ணுல தண்ணி வராத கொற தான்... ஏன்னா, நான் என்ன தான் பீல் பண்ணி எழுதினாலும் நம்மள காமெடி பீஸாவே பாக்குதே இந்த உலகம்னு நெனச்சுட்டு இருக்கறப்ப... "இல்ல இல்ல யு பீல் மீ பீல்"னு சொல்றாப்ல அந்த பிரெண்ட் மெசேஜ் பாத்து...ஹ்ம்ம்... சரி விடுங்க... பிழிஞ்சு காய போட்ட கதை எல்லாம் என்னத்துக்கு இப்ப...

மேற்சொன்ன காரணத்தினால் அந்த நேயர் (!!!) விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவு என்பதை தெரிவித்து கொள்கிறேன்... So, உங்க கொலவெறி எல்லாம் இந்த நேயர்க்கு forward பண்ணிடுங்க... don't kill the messanger...

சரி காமெடி போஸ்ட் போடணும்னு முடிவு பண்ணியாச்சு... பாதி மொக்கைய தேத்தினாலும் மீதி மேட்டர் வேணுமேனு யோசிச்சப்ப தான் புத்தருக்கு போதி மரத்துக்கு கீழ...கொஞ்சம் ஓவரா இருக்கோ... சரி வேண்டாம் விடுங்க... நம்ம லெவலுக்கு யோசிப்போம்... அம்பாசமுதரம் அம்பானிக்கு சூப்பர்மார்க்கெட் ஐடியா தோணின மாதிரி ஒரு விஷயம் பளிச்சுன்னு மின்னலா மனசுல வந்தது...

அது என்னனா, என் ப்ளாக் உலக சரித்தரத்தை (ஒகே ஒகே...) புரட்டி பாத்தப்ப அதிகம் ரசிக்கப்பட்ட போஸ்ட் எல்லாமும் என் சொந்த அனுபவங்கள் தான்... அதுலயும் நான் பல்பு வாங்கி இருந்தாலோ இல்ல கன்னா பின்னானு அடி வாங்கி இருந்தாலோ அந்த பதிவு ரெம்ப பேரால ரசிக்கப்பட்டு இருந்த உண்மை உணர்ந்தேன்

ஹ்ம்ம்... ஒருத்தன் கஷ்டம் ஒருத்தனுக்கு காமெடி... ஹ்ம்ம்... எல்லாம் குளோபல் வார்மிங் தான்... (கலி முத்தி போச்சுனே எத்தன நாளைக்கு தான் சொல்றது...ஹி ஹி)

சரி நம்ம அனுபவத்த சொல்வோம்னு முடிவு பண்ணியாச்சு.... இந்த சின்ன வயசுலேயே நம்ம (என்) வாழ்க்கைல எக்கசக்க அனுபவங்க இருக்கு...எதை சொல்ல எதை விடனு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு நான் எழுதினது தான், ஏழைக்கேத்த எள்ளுரண்டை போல அப்பாவிக்கேத்த ஆப் பாயில் இந்த போஸ்ட்... படிங்க சிரிங்க...(ப்ளீஸ்.......ப்ளீஸ்... சிரிச்சுடுங்க... இல்லேனா நான் அழுதுடுவேன்... அவ்வவ்...)

சரி மேட்டர்க்கு போவோம்...

இது என் வாழ்க்கைல நடந்த ஒரு சம்பவம்... "நடந்தா தான் சம்பவம் நடக்கலைனா சவம்.." என்னங்க நான் சொல்றது (ஆஹா...இதை அப்படியே டைரக்டர் "பேரரசு" கிட்ட சொல்லி இருந்தா அவரோட அடுத்த விஜய் படத்துல பஞ்ச் டயலாக்ஆ யூஸ் பண்ணி என்னையும் அவரோட அரசவை புலவியா சேத்து இருப்பாரே.. இப்படி மேட்டரை லீக் பண்ணிட்டனே... சரி உடுங்க... அததுக்கு ஒரு 'இது' வேணும்... அதென்ன 'இது'ன்னா, அதாங்க 'அது'...)

ஒகே மீ மொக்கை ஸ்டாப் நௌ...

அது என் வாழ்வில் ஒரு பொற்காலம்... அப்படின்னா முரளி வந்து "தஞ்சாவூரு மண்ணு எடுத்து..." சட்டி பானை செய்வாரான்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கறவங்கள தக்குடுகிட்ட சொல்லி அவங்க ஊரு யானை மேல ஏத்தி உட்டுடுவேன் ஆமா சொல்லிட்டேன்...

இங்க ஒரு மனுசி பீல் பண்ணி மேட்டர் சொல்றப்ப குறுக்க மறுக்க பேசிகிட்டு... ம்ம்ம்...

சரி ஏன் பொற்காலம்னு சொன்னேன்னா, அப்ப மூணு முடிச்சு எல்லாம் போடப்படாத காலம்...உடனே, "எது ரஜினி நடிச்ச 'மூணு முடிச்சா' அவ்ளோ ஓல்டா நீ?" னு நம்ம கழக கண்மணிகள் வந்து கும்முவாங்க... so let me make it clear...

இது ரஜினி "மூணு முடிச்சு" இல்ல, ரங்க்ஸ் போட்ட மூணு முடிச்சு...அதாவது "கல்யாணத்துக்கு முன்"... இப்ப மேட்டர் மனசிலாயோ?

அப்போ நான் பி.காம் பைனல் இயர்... "நீ மூணாப்பு கேஸ்னு இல்ல நெனச்சேன்... காலேஜ் எல்லாம் படிச்சயா நீ"னு ஒரு குரல் கேக்குதே... யாரது? வேண்டாம் அப்பறம் நான் "ஜில்லுனு ஒரு கந்தல்..." னு கதை ஆரம்பிச்சுடுவேன் சொல்லிட்டேன்...ஹ்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்...

நான் படிச்சது "Womens காலேஜ்", அதனால பசங்க domination எல்லாம் இல்லாம நாங்களே ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தோம்... (அந்த விவரம் எல்லாம் சொல்லி சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கர எண்ணமில்ல இப்ப). எங்க க்ளாஸ்ல அம்பது பொண்ணுங்க

(உன் ஒருத்தியவே சமாளிக்க முடியலியே..இது போல 50தா... அந்த பிரின்சிபாலுக்கு கோவில் கட்டி கும்பிடனும்... - மைண்ட்வாய்ஸ்)

அதுல எங்க கேங் ஒரு பெரிய கேங்... பதினெட்டு பேரு... பதினெட்டு பட்டிக்கு representatives ரேஞ்சுக்கு ஒண்ணு ஒண்ணும் செம அலப்பறை கேஸ்... அதாவது, என்னை தவிர...நான் அப்பவே அப்பாவி தான்...

"நல்லா சேந்து இருக்குதுக கேங்"னு எங்க HOD அடிக்கடி டென்ஷன் ஆவாங்க... அவ்ளோ நல்ல புள்ளைங்க நாங்க எல்லாம்... ஹி ஹி ஹி

காலேஜ் பைனல் இயர் க்ளாஸ் ஆரம்பிச்சு ஒரு நாலஞ்சு நாள் தான் ஆகி இருந்தது... அன்னிக்கி என்னோட "ஏப்பி பர்த்டே"... ஆஹா இன்னிக்கி நம்ம பிரெண்ட்ஸ் என்ன ரகளை பண்ண போறாங்களோனு கலர் கலர் கனவுகளோட க்ளாஸ்க்கு போனேன்...

 பொதுவா வாட்ச்மேன் எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே காலேஜ் வாசல்ல நிக்கற பொறுப்புள்ள அம்மணி தான் நான்...  காலேஜ்க்கு லேட்டா எல்லாம் போற பழக்கம் இல்ல... யாரு நம்ப போறீங்க? ஆனா சரித்தரம் உண்மைய தான் பதிவு செஞ்சுருக்கு யு சி...

அன்னிக்கி பொறந்த நாள் ஸ்பெஷலா எங்க அம்மா எனக்கு பிடிக்கும்னு கேசரி, வடை, பூரி, மசால்னு சூப்பர் மெனுவா செஞ்சு இருக்கவும் ஒரு புடி புடிச்சுட்டு கிளம்ப நேரமாகிடுச்சு...

பூரி / கேசரி முக்கியமா Cost Accounting க்ளாஸ் முக்கியமான்னு என் மனசுக்குள்ள சாலமன் பாப்பையா எல்லாம் இல்லாமையே பட்டிமன்றம் நடத்தினப்ப பூரி / கேசரி வென்றது என் குற்றமில்லை... என் நாக்கின் குற்றம், அறுசுவையா சமைச்ச என் அம்மாவின் குற்றம், அம்மா மனசை புண்படுத்த மனசில்லாத ஒரு பேதை (நானே) மனதின் குற்றம்...(ஸ்ஸ்ப்பா...பூரி ப்ளீஸ்... ச்சே... சோடா ப்ளீஸ்...)

நான் வர்றப்ப மேடம் அட்டெண்டென்ஸ் எடுத்துட்டு இருந்தாங்க... அநியாயத்துக்கு நம்ம பேரு தான் மொதல்லே வந்துடுமே (நண்பர்களே, இந்த காரணத்துக்காகவாச்சும் புள்ளைங்க பேரை பின்னாடி alphabet வர்ற மாதிரி வெயுங்க இனி மேலாச்சும்... இல்லேனா பேரு சொல்ற புள்ள கன்னா பின்னானு திட்டும் உங்கள)

ம்ம்... எனக்கு ஆப்சென்ட் போட்டாச்சு ஏற்கனவே...ஆப்சென்ட் தான் போட்டாச்சே பேசாமே திரும்பி வீட்டுக்கு போய் இன்னும் ரெண்டும் வடை / பூரிய உள்ள தள்ளும் வேலைய செஞ்சா என்னனு ஐடியா குடுத்த என் idle பிரைன்ஐ தட்டி அடக்கினேன்... 

"Excuse me mam ?" நான் பாவமா க்ளாஸ் வாசல்ல நிக்க, மேடம் திரும்பியே பாக்கல

உள்ள இருந்து அஞ்சாவது பட்டிக்கு சொந்தக்காரி (அதாங்க அந்த பதினெட்டு வானரத்துல ஒண்ணு) "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி"னு பல்ல காட்டி சிரிச்சா... "இருக்குடி மவளே உனக்கு இன்னிக்கி" னு மனசுல நெனச்சுட்டு மேடம்க்கு நாம கூப்ட்டது கேக்கல போலனு நெனச்சுட்டு "excuse me mam ?" னேன் மறுபடியும்...

மேடம் திரும்பி "மொதலே கேட்டது... அட்டெண்டன்ஸ் முடிக்கற வரை நின்னா தேஞ்சு போய்ட மாட்டே" னு ஒரு பர்த்டே ஸ்பெஷல் பல்பு குடுத்தாங்க... உள்ள இருந்து எட்டாவது பட்டி ஓனர் இப்ப "தேவையா இது தேவையா" னு வாயசச்சு வெறுப்பேத்தினா...

அப்புறம் ஒரு வழியா அட்டெண்டன்ஸ் எடுத்து முடிச்சதும் மேடம் "ஏன் லேட்டு?" னு ஆரம்பிச்சாங்க பஞ்சாயத்த...

நாம என்ன சொல்லுவோம், வழக்கம் போல "சாரி மாம் லேட் ஆய்டுச்சு" னு அப்பாவியா ஒரு லுக் விட்டேன், ஆனா "இதை போல எத்தன பாத்து இருக்கேன்"னு ஒரு லுக் விட்டாங்க அந்த மேடம்...ஹ்ம்ம்...

"லேட் ஆய்டுச்சுன்னு எனக்கும் தெரியும்...அதான் ஏன்னு கேட்டேன்" மறுபடியும் மேடம், அன்னிக்கி என்ன சண்டையோ வீட்டுலனு அவங்க ரங்கமணிய மனசார திட்டினேன் அந்த நிமிஷம்

இப்ப போல ப்ளாக் எழுதி அனுபவம் இருந்துருந்தா எதாச்சும் மொக்கை அடிச்சு தப்பிச்சு இருப்பேன்...ஹ்ம்ம்... அதான் இல்லையே, நம்ம பாஸ்டன் நாட்டமை டெம்ப்ளேட் கமெண்ட் போடற மாதிரி ஒரு டயலாக் விட்டேன் "பஸ் லேட் மேடம்" னேன், பின்ன கேசரி பூரி சாப்ட்டு லேட் ஆய்டுச்சுனு சபைல சொல்லவா முடியும்... ஹ்ம்ம்...

"நீ பஸ்க்கு லேட்டா வந்தேன்னு சொல்லு" னு மொறைசாங்க மேடம்... இப்படி எதாச்சும் இன்னும் ரெண்டு திட்டி விட்டுருந்தா கூட பரவால்ல, அடுத்து ஒரு டயலாக் சொன்னாங்க பாருங்க, அதான் எனக்கு பயங்கர பீலிங் ஆய்டுச்சு...

"உன்னை மாதிரி நல்லா படிக்கற (அட நம்புங்கப்பா) பொண்ணுகளே இப்படி பொறுப்பில்லாம க்ளாஸ்க்கு லேட்டா வந்தா என்ன அர்த்தம்?" னு மேடம் கேக்கவும் நான் அப்படியே கந்தலாகி கசிந்துருகி நிராயுதபாணியா நின்னேன்... (கொஞ்சம் ஓவர் பீலிங்கா இருக்கோ... சரி உடுங்க...)

இன்னும் சரியா சொல்லணும்னா, "நீங்க நல்லவரா கெட்டவரா"னு நாயகன் படத்துல கேக்கறப்ப நம்ம தலைவர் ஒரு expression குடுப்பாரே...அதே அதே... "அ...ஆ...ஆஆஆ....."னு வாய்ஸ் மட்டும் தான் இல்ல...  மியுட் பண்ணிட்டேன்... மேடம் ஆம்புலன்ஸ் கூப்ட்டுடா என்ன பண்றதுன்னு ஒரு பயம் தான்...

அந்த பதினெட்டு பரதேசில ஒன்னாச்சும் "இன்னிக்கி அவ பர்த்டே மேடம்"னு சொல்லி ஒரு அனுதாப அலை வீச செய்யுமானு நானும் எதிர்ப்பார்போட Hutch நாய்க்குட்டிய விடவும் விசுவாசமா ஒரு லுக்கு விட்டேன், ஆனா பழைய பகை எல்லாம் மனசுல வெச்சுட்டு மொறைக்கற சரத்குமார் சரண்ராஜ் மாதிரியே லுக்கு விட்டாளுக ஒரு ஒருத்தியும்

கடைசீல மேடமே மனசெறங்கி வந்து "சரி சரி...உள்ள வா..."னு மருமகளை அழைக்கும் பாசக்காரா மாமியாரா கூப்ட்டாங்க... நானும் வலது கால் எடுத்து வெச்சு என்ட்ரி குடுத்தேன்...

"மேடம் அட்டெண்டன்ஸ்..." னு நான் இழுக்கவும்... ஒரு மொறை மொறைச்சுட்டு "இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல... போடறேன் போ..." னாங்க... நான் அட்டெண்டன்ஸ்ல அவ்ளோ கவனமா இருந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு... அதை அப்புறமா சொல்றேன்...

க்ளாஸ்ல மூணு row ல பெஞ்சஸ் போட்டு இருக்கும்... அதுல ஜன்னல் பக்கத்துல இருக்கற முதல் row பூராவும் எங்க பதினெட்டு பட்டி ஆக்ரமிப்பு தான்... (வேடிக்கை பாக்க வசதின்னு மொத நாளே துண்டு போட்ட கேசுகலாச்சே... )

நான் எப்பவும் மொதல் பெஞ்சுல தான் இருப்பேன்... (கண்ணப்ப நாயனார் பிரச்சன தான் அதுக்கு காரணம்ங்கறத இப்ப வரைக்கும் சீக்ரட்டாவே மெயின்டீன் பண்ணிட்டு இருக்கேன்...ஹி ஹி ஹி). ஆனா மத்தவங்கள பொறுத்த வரை "படிப்ஸ்..." (ஹி ஹி ஹி... இந்த உலகம் இன்னுமா நம்மள நம்புது?)

போய் பெஞ்ச்ல உக்காந்ததும் பக்கத்துல இருந்தவகிட்ட "ஏண்டி நாயே... சும்மா முஸ்தபா முஸ்தபானு காலேஜ் டே பங்சன்ல கைய புடிச்சுட்டு வலிப்பு வந்தவ மாதிரி ஆடினா போதுமா... எதாச்சும் சொல்லி ஹெல்ப் பண்ணி இருக்கலாம்ல... நீங்கெல்லாம்னு பிரெண்ட்ஸ்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு" ஒரு பேப்பர்ல எழுதி (மேடம் முன்னாடி நிக்கறாங்களே) பக்கத்துல இருந்தவகிட்ட குடுத்தேன்...

அதுக்கு அவ "சாரி"னு சொல்லி இருந்தாலோ இல்ல வேற எதுனா திட்டி இருந்தாகூடா பரவாலைங்க, என்ன கேட்டா தெரியுமா அந்த நயவஞ்சகி...

என்ன கேட்டானு அடுத்த போஸ்ட்ல சொல்றேன்... இப்பவே பதிவு ரெம்ப பெருசா போய்டுச்சு... சும்மாவே திட்டுவீங்க... இப்படியே எழுதிட்டு இருந்தா அப்புறம் "பெரிய பதிவு பெரியாத்தா"னு நம்ம பேரு சரித்தரத்துல வந்துடும்...சோ மீ ஸ்டாப் நௌ...சி யு நெக்ஸ்ட் வீக்... பை பை...

பின்னூசி நோட்ஸ்:
"Cut Shoe வும் கட்டாத நாயும்..." தலைப்புக்கும் நீ போட்ட மொக்கைக்கும் என்ன சம்மந்தம்னு நாக்கு மேல பல்லு போட்டு நாலு பேராச்சும் கேக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன் "அந்த சம்மந்தம் எள்ளு எண்ணை எல்லாம் இனி தான் வரும்... பதிவு பெருசா போனதால தொடரும் போட்டுட்டேன்... ரைட்டோ?"

Disclaimer:
ஒரு விஷயம்... இந்த பதிவுல வர்ற "குளோபல் வார்மிங்" நான் ஏற்கனவே டுபுக்கு சார் ப்ளாக்ல ஒரு கமெண்ட்ல யூஸ் பண்ணி இருக்கேன் & "அப்பாவிக்கேத்த ஆப் பாயில்" என்னோட ப்ளாக்லையே யாருக்கோ கமெண்ட்க்கு பதில் போடறப்ப யூஸ் பண்ணி இருக்கேன். இதை எல்லாம் ஏன் இப்ப சொல்லி உயிர வாங்கறேனு நீங்க பொறுமையா (!!) கேப்பீங்க

எதுக்குன்னா யாரும் "ஏற்கனவே எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே... இந்த அப்பாவி காப்பி அடிச்சுட்டாளோ" னு தப்பா கிப்பா நினைச்சுட கூடாது பாருங்க... அதுக்குத்தான் ஒரு முன்னெச்சரிக்கை முனியம்மாவா சொல்லிட்டேன். (நீ இவ்ளோ நல்லவளானு யாரோ பீல் பண்ற மாதிரி இருக்கே... விடுங்க பாஸ்... நமக்குள்ள என்ன... ஹி ஹி)

அது என்னமோ மத்தவங்க ப்ளாக்ல கமெண்ட் போடறப்ப கற்பனை பொங்கி வழியும், பஞ்ச் பஞ்ச்ஆ உதிரும். நாம ஒரு போஸ்ட் போடலாம்னு உக்காந்தா உகாண்டா நாட்டு பிரதமர் பேரு தான் வருது... ஹ்ம்ம்... எல்லாம் குளோபல் வார்மிங்... (நோ டென்ஷன்... இன்னொரு வாட்டி இதை யூஸ் பண்ண மாட்டேன்... ஹா ஹா ஹா)

ஒகேஸ், டாட்டாஸ், பை பைஸ், சி யுஸ்............

மைண்ட்வாய்ஸ் - இருங்க இருங்க யாரும் போகாதீங்க... பதிவு அப்பவே முடிஞ்சதுன்னு உங்கள போலத்தான் நானும் நிம்மதி பெருமூச்சு விட்டேன்... ஆனா பின்னூசி நோட்ஸ்னு ஒரு மொக்கை போட்டா, அப்புறம் disclaimer... அடுத்து dinosaur னு எதாச்சும் போட்டாலும் போடுவா... எதுக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணி பாப்போம்...

அப்பாவி - ஹையோ ஹையோ...

(மொக்கை தொடரும்...)

114 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

மீ த ஃபர்ஸ்ட்!!!! :)))))

மகி said...

காமெடி போஸ்ட் சூப்பர் புவனா!

அது என்னமோ மத்தவங்க ப்ளாக்ல கமெண்ட் போடறப்ப கற்பனை பொங்கி வழியும், பஞ்ச் பஞ்ச்ஆ உதிரும்.ஆனா இன்னைக்குன்னு பாருங்க,எதுமே தோணமாட்டேங்குது.. உகாண்டா நாட்டு பிரதமர் பேரு தான் வருது... ஹ்ம்ம்... எல்லாம் குளோபல் வார்மிங்!! அப்பறமா வரேன்.ஹிஹிஹி!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

வடை

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அருமையான கதை, அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

எஸ்.கே said...

உண்மை சம்பவமோ கதையோ! ஆனா ரசிக்கற மாதிரி காமெடியா எழுதறீங்க! தேங்க்ஸ்!

Vijay @ இணையத் தமிழன் said...

"பெரிய பதிவு பெரியாத்தா", இது நல்லா இருக்கே ?!
சும்மா உள்லோலங்காட்டி க்கு ..

:)

Krishnaveni said...

சும்மா முஸ்தபா முஸ்தபானு காலேஜ் டே பங்சன்ல கைய புடிச்சுட்டு வலிப்பு வந்தவ மாதிரி ஆடினா போதுமா... eppadi ippadi ezhuthareenga? super comedy, siruchchu mudiyala:)

முனியாண்டி said...

மொக்கை நல்லாத்தான் இருந்தது.

Porkodi said...

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் மாதிரி கனடாவின் வடிவேலு! :)

சுசி said...

புவனாஆஆஆஆஆஆஆஆஆஆஆ.. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. என்னா மொக்கைடா சாமி..

ரொம்ப சிரிச்சேன்.. அசத்துங்க நீங்க.

Philosophy Prabhakaran said...

ரொம்ப மொக்கையா இருந்துச்சு.... ஸ்க்ரோல் பண்ணிட்டேன் :)

Dubukku said...

அப்பாவி நீங்க சன் டீவில வேலை பார்க்கலாம்...நானும் மேட்டர் வரும் மேட்டர் வரும்ன்னு படிச்சிக்கிட்டே வரேன்...ஒரே அட்வர்டைஸ்மென்ட்டா போட்டு தாக்குறீங்க :)) முக்கியமான விஷயம் வரும் போது பதிவு நீளமாயிடிச்சு அடுத்த பதிவுல சொல்றேன்னு அதுகப்புறம் ஒரு அரைப் பக்கம் எழுதி இருகீங்க ஆனா நல்லா தான் எழுதியிருக்கீங்க :))

யாதவன் said...

கலக்கலான படைப்பு

http://kavikilavan.blogspot.com/

வல்லிசிம்ஹன் said...

அப்பாவி இப்படிக்கூட மொக்கை எழுதலாம்னு வகுப்பு எடுத்து இருக்கீங்க. நல்லாவே இருக்கு:)
ஆனா சிரிப்பு வருது ஆதனால இதை நான் மொக்கைன்னு ஒத்துக்க மாட்டேன்!!

Vasagan said...

\இந்த பின் நவீனத்துவம்னா\
\அதை அப்புறமா சொல்றேன்... \

அட இது தான் பின் நவீனத்துவம்மா?

அப்பாடா இப்பதான் AT blog பிள்ளையா லக்ஷ்சனமாய் இருக்கு.

ஸ்ரீராம். said...

ஏங்க.... என்னை மாதிரி நாய் நேசனை இந்த மாதிரி தலைப்பை வைத்து ஏமாற்றலாமா...இப்போதான் இதயம் பேத்துகிறது பதிவில் நாய்ப் பதிவு படித்து வருகிறேன்...! காமெடி சரளமாக வருகிறது உங்களுக்கு...

எல் கே said...

டிஸ்கி போட்டதுக்கு மிச்ச பதிவையும் போட்ருக்கலாம். உன்னை நாய் கடிச்சதுல தப்பே இல்ல

Gopi Ramamoorthy said...

:-)

Rajesh said...

Room pottu yosipeengaloooo.....ada sami...mudiyala...

Rajesh said...

CSC la irundhappa ippadiyellam theramayaa neenga illayeee....idhukku thaan kadal kadandhu velaikku pogadheengannu appave sonnen.

கோவை ஆவி said...

காமெடி எல்லாம் நல்லா இருந்தது. ஆனா இப்ப என்ன சொல்ல வரீங்க???

பாலா said...

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா முடியல... :))))))

Balaji saravana said...

செம மொக்க :)) யூ கண்டினியுவ்.. வீ ஃபாலோ..

vinu said...

அட கொடுமையே அம்புட்டு தூரம் கமேன்ன்டு போட்டதை காணோம்

vinu said...

//ஆனா ஒரு காமெடி போஸ்ட் போட்டு ரெம்ப நாளாச்சே" னு ரெம்ப பீல் பண்ணி கேட்டா அவ...//

நீங்க போஸ்ட்டுன்னு ஒன்னை போடுறது அதை இம்புட்டு பேரு வந்து படிக்குறது அதையும் தாண்டி கமேன்டுன்னு ஒன்னை வேலை மெனக்கெட்டு போடுரதுமே பெரிய காமெடி; இதிலே தனி ஆவர்த்தனம் வேறயா முடியலே முடியலே.............

//நான் என்ன தான் பீல் பண்ணி எழுதினாலும் நம்மள காமெடி பீஸாவே பாக்குதே இந்த உலகம்னு //

public public

//அது என்னனா, என் ப்ளாக் உலக சரித்தரத்தை (ஒகே ஒகே...) புரட்டி பாத்தப்ப அதிகம் ரசிக்கப்பட்ட போஸ்ட் எல்லாமும் என் சொந்த அனுபவங்கள் தான்... அதுலயும் நான் பல்பு வாங்கி இருந்தாலோ இல்ல கன்னா பின்னானு அடி வாங்கி இருந்தாலோ அந்த பதிவு ரெம்ப பேரால ரசிக்கப்பட்டு இருந்த உண்மை உணர்ந்தேன்//

இந்த சின்ன மேட்டரு புரிய உங்களுக்கு இம்புட்டு நாளா அச்சு...மாப்பு இது எதோ காமெடி பீசு போல இர்ருகுபா...........ஹி ஹி ஹி

///எல்லாம் குளோபல் வார்மிங் தான்... (கலி முத்தி போச்சுனே எத்தன நாளைக்கு தான் சொல்றது...ஹி ஹி///

இதுக்கு பேருதான் பின் நவீனத்துவமா #டபுட்டு

//அப்பாவிக்கேத்த ஆப் பாயில் இந்த போஸ்ட்...//

ஒரு கட்டிங்கை போட்டுட்டு போஸ்ட் எழுத உக்காந்தா மனசு இப்புடிதா ஆப் பாயில் மேலே சுத்தி சுத்தி வரும்

//"லேட் ஆய்டுச்சுன்னு எனக்கும் தெரியும்...அதான் ஏன்னு கேட்டேன்" //

ஒரு பழம் இங்க இர்ருக்கு இன்னொரு பழம் எங்கே............

///அப்பாவி - ஹையோ ஹையோ... ///
இப்படிக்கு வரிக்கு வரி கவுண்டர் கொடுப்போர் சங்கம்,
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
[போலிகளை நம்பாதீர்]

கவுண்டர் தொடரும்.............. x-(

அமைதிச்சாரல் said...

//என்ன கேட்டா தெரியுமா அந்த நயவஞ்சகி... //

ஸ்பெல்லிங் புரியலைன்னு மேம் கிட்டயோ, உங்ககிட்டயோ வாசிக்கச்சொல்லி கேட்டுக்கிட்டாங்களா :-))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாம் குளோபல் வார்மிங் தான்:)

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

மொக்கையம்மா நல்லாயிருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

ஹய்யோ ஹய்யோ ஆத்தாடி இவ்வளவு நீளமா......

vinu said...

பெரிய கமன்ட் போட்டு பலிக்கு பலி வாங்குவோர் சங்க

yow manguni பலிக்கு பலி naala tamil pulamaiyaa umakku

தங்கம்பழனி said...

என்னம்மா.. கொன்னிருக்கீங்க.. யப்போவ் ..!

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் சொன்னது…

என்னைய பெரிய, பெரிய பாடமெல்லாம் (திருக்குறள் ) படிக்க சொல்றானுகன்னுதான் , பக்கத்து ஸ்கூல் வாத்தியார் (எங்க ஸ்கூல் வாத்தியார் எல்லாத்துக்கும் ஏற்கனவே மண்டை உடைந்து இருந்தது) மண்டைய உடைச்சிட்டு பிளைட் ஏறி வித்அவுட்டுல (அட டிரஸ் போட்டு இருந்தேங்க ) அமேரிக்கா போயி ஒரே சாங்குல அங்க கஷ்ட்டப் பட்டு உழைச்சு , முன்னேறி மிகப்பெரிய பிச்சைக்காரனா மாறி , அப்புறம் இந்தியாவ வல்லரசா மாத்தியே ஆகணும்கிற வெறில திரும்பி வந்து , ........... (இருங்க கொஞ்சம் சோடா குடிச்சுக்கிர்றேன் ) ............... இம்ம்ம்மம்ம்ம்ம் ...... என்ன சொன்னேன் ? (இம் னொன்ன சொன்ன , ஒழுங்கா விசயத்துக்கு வாடா ) சரி , சரி திட்டாதிங்க .........

இம் திரும்ப வந்து முதல்ல பதிவுலகத்த திருத்துவோமின்னு காலங்காத்தால வந்து உட்காந்தா ......... எவ்ளோ பெரிய பதிவு (தக்காளி இதுல தொடரும் வேற) ........... பஸ்ட்டு உங்கள காமடி பதிவு எழுதச்சொன்ன அந்த பிரண்ட கொளுத்தணும், அப்புறம் உங்க 18 பாட்டியோட 18 நாட்டா"மி"கள் (ஏம்பா நாட்டாமைக்கு பெண்பால் நாட்டாமி தானே ?) ,அந்த பூரி, மேம் எல்லாத்தையும் சேத்து திருத்துறதுக்கு பதிலா பேசாம நான் திருந்தி மறுபடியும் படிப்பறிவில்லாதவனா மாரிடலாம்ம்னு முடிவுக்கு வந்துட்டேன் .


இப்படிக்கு
பெரிய கமன்ட் போட்டு பழிக்குப்பழி வாங்குவோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

vinu சொன்னது… பெரிய கமன்ட் போட்டு பலிக்கு பலி வாங்குவோர் சங்க

yow manguni பலிக்கு பலி naala tamil pulamaiyaa umakku////

ஹி.ஹி.ஹி........... நாங்க வேனும்ன்னுதான் போட்டோம்

(அடப்பாவி இப்படியா பப்ளிக்ல அசிங்கப்படுத்துவ ???? நல்லா........................வே இரு )

பத்மநாபன் said...

சர வெடியா இருந்துச்சு .... முதல்லேயே இது சூப்பர் டூப்பரா போகும்ன்னு முடிவாயிட்டதனால 18 பட்டி பதிவு ,பின்னூசி..குண்டூசி ..டிஸ்கு எல்லாம் ரசிச்சு சிரிச்சாச்சு ...

ஆனந்தி.. said...

கலக்கிபுட்டிங்க தங்ஸ்..:)

கோவை2தில்லி said...

காமெடி கலக்கலா இருந்தது. ஸ்டார்ட் மியூஸிக் : ))))))

priya.r said...

// "அன்த சீன் ஏன்ட்டி லேதண்டி" னு தெலுகு சினிமால அடிக்கடி ஒரு டயலாக் வர்ற மாதிரி//
தயவு செய்து விட்டுடு தாயே ! தெலுகு பிழைச்சிட்டு போகட்டும்.,

//நேரத்துல இன்னொரு மேட்டர் சொல்லியே ஆகணும்... அப்ப தான் என் மன பாரம் குறையும்... //
அப்ப படிகறவங்களுக்கு மன பாரம் அதிகமாகுமா !

// அந்த நேயர் (!!!) விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவு என்பதை தெரிவித்து கொள்கிறேன்... So, உங்க கொலவெறி எல்லாம் இந்த நேயர்க்கு forward பண்ணிடுங்க... don't kill the messanger...//
எண்ணம் மட்டும் நல்லா இருந்தா போதாது !பதிவும் அப்படி இருக்கோணும் !
உன்ர friend கிட்டே ஒரே ஒரு கேள்வி
ஹலோ மேடம் ! நீங்க அப்பாவியை வைத்து காமடி கீமடி பண்ணலையே ...........

priya.r said...

//இது என் வாழ்க்கைல நடந்த ஒரு சம்பவம்... "நடந்தா தான் சம்பவம் நடக்கலைனா சவம்.." என்னங்க நான் சொல்றது (ஆஹா...இதை அப்படியே டைரக்டர் "பேரரசு" கிட்ட சொல்லி இருந்தா அவரோட அடுத்த விஜய் படத்துல பஞ்ச் டயலாக்ஆ யூஸ் பண்ணி என்னையும் அவரோட அரசவை புலவியா சேத்து இருப்பாரே.. இப்படி மேட்டரை லீக் பண்ணிட்டனே... சரி உடுங்க... அததுக்கு ஒரு 'இது' வேணும்... அதென்ன 'இது'ன்னா, அதாங்க 'அது'...)//

கூட இந்த பஞ்ச் டயலாக்கும் சேர்த்துக்கோ !

நின்னா நான் அரிசி ! நடந்தா நான் மாவு ! பாஞ்சா நான் இட்லி !!

ஒகே மீ மொக்கை ஸ்டாப் நௌ...//

இப்படி தான் அப்போ அப்போ ஆறுதலா சொல்றே ! அப்புறம் இன்று ரொக்கம் நாளை கடன் அப்படின்னு சொல்ற மாதிரி திரும்பவும் மொக்கை ஆரம்பிட்சுக்கிரே !!

Ponchandar said...

( )-இருக்கிறதை விட்டுட்டு படிச்சா நல்லாதே இருக்கு......

priya.r said...

//அது என் வாழ்வில் ஒரு பொற்காலம்... அப்படின்னா முரளி வந்து "தஞ்சாவூரு மண்ணு எடுத்து..." சட்டி பானை செய்வாரான்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கறவங்கள தக்குடுகிட்ட சொல்லி அவங்க ஊரு யானை மேல ஏத்தி உட்டுடுவேன் ஆமா சொல்லிட்டேன்... //

அடப்பாவி ! உன்னோட வேலை தானா! உன் அரசவை புலவர் தக்குடு அனாமிக ப்ளோக்குக்கு வந்து .,தமது அரசி(!)பக்தியை காண்பித்து உன் புகழ் பாடி, என்னை வசை பாடிவிட்டு சென்று இருக்கிறார் !அதுவும் எனது இளவல் குட்டிராணி அனாமிகா சபையில் இல்லாத நேரத்தில் !
இது பற்றி உனது வெள்ளை அறிக்கை தேவை அம்மணி !!

//இங்க ஒரு மனுசி பீல் பண்ணி மேட்டர் சொல்றப்ப குறுக்க மறுக்க பேசிகிட்டு... ம்ம்ம்...
தோடா ! போடறது மொக்கை ; இதிலே அதிகாரமா மிரட்டல் வேறு ; சரி சரி ஸ்டார்ட் (மொக்கை) மியூசிக்//

Gayathri said...

ஹய்யோ ஹய்யோ ...விஷயத்த சொல்லுங்கோ அக்கா...

நல்ல சிரிச்சேன்

S.Menaga said...

இப்படி போட்டு அநியாயத்துக்கு எங்களை கொன்னுருக்கீங்க,யம்மா தாங்க முடியல....

priya.r said...

// Porkodi சொன்னது…

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் மாதிரி கனடாவின் வடிவேலு! :) //


கொடி!என்ன உங்க reaction கம்மியா இருக்கு! இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம்!

Priya said...

நல்லா ரசிக்கிற மாதிரி எழுதிருக்கிங்க!ம்ம்.. சீக்கிரம் தொடருங்க:)

அருள் சேனாபதி said...

very nice.

Porkodi said...

//கொடி!என்ன உங்க reaction கம்மியா இருக்கு! இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம்!//

indha mokkaila irundhu uyir thapichadhe periya vishayam, idhula idhuku mela epdinga react panradhu?

vinu said...

48

அப்பாவி தங்கமணி said...

@ மகி - எஸ் எஸ்... யு தி first .... தேங்க்ஸ் மகி... ஹா ஹா ஹா... நல்லாவே கலாய்க்கறீங்க அம்மணி... ஹா ஹா ஹா...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - நன்றிங்க... ஆனா இது கதை இல்ல... என் வாழ்க்கைல நடந்த சம்பவம்னு சொன்னேனே... அடப்பாவமே போஸ்ட் படிக்காமையே கமெண்ட் போட்டீங்களா? ஹ்ம்ம்... எவ்ளோ பேரு இப்படி...? ஹா ஹா ஹா

@ எஸ்.கே - அப்போ கற்பனைனு சொன்னா நம்புவீங்களா? ஆஹா... மொதலே தெரியாம போச்சே... கதைனு கதை விட்டு இருக்கலாமே... சரி விடுங்க ... ஜஸ்ட் கிட்டிங்... மிக்க நன்றி படிச்சதுக்கும் பாராட்டுக்கும்...

அப்பாவி தங்கமணி said...

@ Vijay @ இணையத் தமிழன் - ஹா ஹா ஹா... இதான் இப்படி தான் நான் அடிக்கடி சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறேன்... ஹா ஹா ...தேங்க்ஸ்ங்க...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... I'm glad you enjoyed this post...

@ முனியாண்டி - ஹா ஹா... நன்றிங்க

vinu said...

49

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi - ஆஹா...அது சரி... இந்த கமெண்ட் மட்டும் அவர்கிட்ட காட்ட மாட்டேன்... ஹா ஹா...
(ஆனா என்ன ஒன் லைன் கமெண்ட்? பொற்கொடி மாதிரி இல்லையே? பேரு வேற ''Porkodi (பொற்கொடி)''ல இருந்து வெறும் "Porkodi" னு மாறிடுச்சு... அச்சச்சோ யாரோ திருடிட்டாங்க... "கொடி start immediately... your ID is in danger" ... ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க சுசி

@ Philosophy Prabhakaran - நிஜமா ஸ்க்ரோல் பண்ணினீங்களா? நம்பிட்டோம்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Dubukku -
//நானும் மேட்டர் வரும் மேட்டர் வரும்ன்னு படிச்சிக்கிட்டே வரேன்...ஒரே அட்வர்டைஸ்மென்ட்டா போட்டு தாக்குறீங்க//
நானும் மேட்டர் சொல்லணும் சொல்லணும்னு தாங்க பாத்தேன்... ஆனா விளம்பரதாரர் இல்லாம வண்டி ஓட்ட முடியாதே... அதான்... ஹா ஹா அஹ... மிக்க நன்றி... சன் டிவில வேலை ட்ரை பண்ணி பாக்கறேன் (உங்க பேரு சொல்லி... ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ யாதவன் - ரெம்ப நன்றிங்க யாதவன்

@ வல்லிசிம்ஹன் - ரெம்ப நன்றிங்க வல்லிம்மா... ரெம்ப சந்தோஷம் நீங்க இப்படி சொன்னதுல

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - அண்ணா, முந்தி எல்லாம் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தீங்க... இப்ப கலாய்ககர கட்சில மெம்பெர் ஆய்ட்டீங்க... too bad (ஹா ஹா ஹா)

//அப்பாடா இப்பதான் AT blog பிள்ளையா லக்ஷ்சனமாய் இருக்கு//
இது ஒகே... நன்னிஹை :-)

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - ஆஹா... உங்களுக்கும் அந்த பிராணி அவ்ளோ இஷ்டமா? எனக்கு பேர் சொல்லக்கூட பயம்... இதயம் பேத்துகிறது நானும் நேத்து படிச்சேன்ங்க... கலக்கலா எழுதி இருக்கார்...

//காமெடி சரளமாக வருகிறது உங்களுக்கு//
Thats a great compliment...thank you

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - நாய் கடிச்சதா... நான் எப்ப அப்படி சொன்னேன்... விட்டா நீ வாடகைக்கு நாய் வாங்கி ஏற்பாடு பண்ணுவ போல இருக்கே... ஹா ஹா ஹா

@ Gopi Ramamoorthy - :-)

vinu said...

50thu eppudi naangalum oru half adichamullea

அப்பாவி தங்கமணி said...

@ Rajesh - Oh my god...is this you? is this really you? நம்பமுடியவில்லை... வில்லை...வில்லை... ஹா ஹா ஹா

என்ன அதிசியம் இது? ஈமெயில்ல மட்டுமே விமர்சனம் சொல்றவர்... திடீர்னு ப்ளாக்ல கமெண்ட் போட எப்படி தோணுச்சு... ரியல் surprise ....thank you friend...

//CSC la irundhappa ippadiyellam theramayaa neenga illayeee....idhukku thaan kadal kadandhu velaikku pogadheengannu appave sonnen//
CSC ல இருந்தப்ப students கேள்வி கேட்டா பதில் தெரியாம மானம் போகுமேங்கற பயத்துல visual basic / oracle ல மூழ்கி இருந்தேன்... இப்போ oracle ல ஒரு SQL tag கூட போட தெரியாத ஞானசூனியம் ஆயாச்சு. வேற என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப தான் ப்ளாக் சிக்குச்சு... இப்ப என் ப்ளாக் படிக்கறவங்க சிக்கிட்டாங்க... ஹா ஹா ஹா...

கடல் கடந்து வரமாட்டேன்னு தான் சொன்னேன்... எல்லாரும் சேந்து பிளான் பண்ணி தொரத்தி விட்டுட்டு இப்ப பேசுங்க... ஹ்ம்ம் .... (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - கோவைங்கற பேரை ID லையே வெச்சுட்டு இப்படி எல்லாம் கலாய்க்கலாமா என்னை? என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கும் புரியலையா? எனக்கும் தான் புரியல, ஆனா கேள்வி கேட்டேனா? ஹா ஹா ஹா...

@ பாலா- முடியலையா? ஆமாங்க எனக்கும் தான்... ஹா ஹா ஹா

@ Balaji saravana - நன்றி நன்றி நன்றி...

அப்பாவி தங்கமணி said...

@ vinu -
//அட கொடுமையே அம்புட்டு தூரம் கமேன்ன்டு போட்டதை காணோம்//
எம்புட்டு தூரம் போட்டீக... ஒரு அம்பது கிலோ மீட்டர் இருக்குமா? ஹா ஹா

//தனி ஆவர்த்தனம் வேறயா//
தனி ஆவர்த்தனம் இல்லேனா கச்சேரி களை கட்டுமா சொல்லுங்க? அதான்... ஹா ஹா

//public public //
ஒகே ஒகே

//இந்த சின்ன மேட்டரு புரிய உங்களுக்கு இம்புட்டு நாளா அச்சு//
நான் தான் அப்பாவி ஆச்சே... ஹா ஹா

//இதுக்கு பேருதான் பின் நவீனத்துவமா #டபுட்டு //
அந்த கண்றாவி தான் என்னனே தெரியலைனேனே... ஹா ஹா

//ஒரு கட்டிங்கை போட்டுட்டு போஸ்ட் எழுத உக்காந்தா மனசு இப்புடிதா ஆப் பாயில் மேலே சுத்தி சுத்தி வரும் //
அடபாவிங்களா...

//ஒரு பழம் இங்க இர்ருக்கு இன்னொரு பழம் எங்கே............ //
you got the point...ha ha ha

//கவுண்டர் தொடரும்.............. x-( //'
மொக்கையும் தொடரும்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - நல்லவேள நீங்க என் க்ளாஸ் இல்ல... ஹா ஹா ஹா... நன்னிஹை அக்கோவ்...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - நீங்களுமா அக்கா? ஹா ஹா ஹா

@ அமுதா கிருஷ்ணா - நன்றிங்க அமுதா

அப்பாவி தங்கமணி said...

@ MANO நாஞ்சில் மனோ - இன்னும் இருக்குங்க... அதான் தொடரும் போட்டுட்டேன்... இதுக்கே பயந்தா எப்படி? ஹா ஹா

@ vinu - ஹா ஹா அஹ...

@ தங்கம்பழனி - ரெம்ப டேமேஜ் ஆகிடுச்சோ... ஹா ஹா.. நன்றிங்க

vinu said...

hello appavi ungalai yaaru ippo onlinukku varchchonna aniyaayamaa ippudi ennoda 50thu vadaiyay pudingiteengalea; ithu ungalukkea niyaayamaa;

naan unga pechchu kaaaaaaaaaaaaaa! X-(

அப்பாவி தங்கமணி said...

@ மங்குனி அமைச்சர் -
// எங்க ஸ்கூல் வாத்தியார் எல்லாத்துக்கும் ஏற்கனவே மண்டை உடைந்து இருந்தது//
இனிமே உங்க ப்ளாக்க்கு ஹெல்மெட் இல்லாம வர மாட்டேன்... என்னத்துக்கு வம்பு... ஹா ஹா

ஸ்ஸ்ஸ்பப்பா... உங்க சரித்தரம் மங்கம்மா சரித்திரத்த விட பெருசா இருக்கும் போலேயே... ஹா ஹா ஹா...

//தக்காளி இதுல தொடரும் வேற//
சொன்னது தான் சொன்னீங்க... வெங்காயம்னு சொல்லி இருக்கலாமே... ஒரு மதிப்பா இருக்கும்... ஹி ஹி...

//உங்கள காமடி பதிவு எழுதச்சொன்ன அந்த பிரண்ட கொளுத்தணும்//
நண்பி... எஸ்கேப் ஆய்டு...

//அப்புறம் உங்க 18 பாட்டியோட 18 நாட்டா"மி"கள் (ஏம்பா நாட்டாமைக்கு பெண்பால் நாட்டாமி தானே ?) ,அந்த பூரி, மேம் எல்லாத்தையும் சேத்து திருத்துறதுக்கு பதிலா பேசாம நான் திருந்தி மறுபடியும் படிப்பறிவில்லாதவனா மாரிடலாம்ம்னு முடிவுக்கு வந்துட்டேன்//
நல்ல முடிவு... இவர திருத்தறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு பதிவு போட வேண்டி இருக்கு... ஒகே ஒகே... எனக்கு பாராட்டு விழா எல்லாம் வேண்டாம்... ஹி ஹி ஹி...

//பெரிய கமன்ட் போட்டு பழிக்குப்பழி வாங்குவோர் சங்கம் //
என்னை விட நீங்க பெரிய கமெண்ட் போடுங்க...அப்போ தோல்விய ஒத்துகொள்கிறேன்... ஹா ஹா ஹா

//அடப்பாவி இப்படியா பப்ளிக்ல அசிங்கப்படுத்துவ ???? நல்லா........................வே இரு //
நண்பேண்டா..... (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க அண்ணா

@ ஆனந்தி.. - மெனி தேங்க்ஸ் ஆனந்தி

@ கோவை2தில்லி - உங்கள விடவா? எல்லாம் நம்ம ஊர் ராசினு நினைக்கிறேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//தயவு செய்து விட்டுடு தாயே ! தெலுகு பிழைச்சிட்டு போகட்டும்//
ஹா ஹா ஹா... ஒகே ஒகே...

//அப்ப படிகறவங்களுக்கு மன பாரம் அதிகமாகுமா ! //
அதானே நோக்கம்... இன்னுமா புரியல? அக்கா அக்கா... நீ ரெம்பவே அப்பாவி தான்... ஹா ஹா ஹா

//எண்ணம் மட்டும் நல்லா இருந்தா போதாது !பதிவும் அப்படி இருக்கோணும் //
அப்படி எல்லாம் யாரும் என்கிட்ட சொல்லவே இல்லையே... இது என்ன புதுசா? பதிவு நல்லா இருக்கணுமாமே? அதெல்லாம் நடக்கற காரியமா? ஆனாலும் உங்களுக்கு ரெம்ப சோக்கு அக்கோவ்...

//உன்ர friend கிட்டே ஒரே ஒரு கேள்வி - ஹலோ மேடம் ! நீங்க அப்பாவியை வைத்து காமடி கீமடி பண்ணலையே//
நீங்க கேட்டப்புறம் தான் எனக்கு அந்த சந்தேகம் வருது அக்கோவ்... இருங்க அவள மொதல்ல கிராஸ் கொஸ்டின் பண்ணி பாக்குறேன்... ஹா ஹா

//நின்னா நான் அரிசி ! நடந்தா நான் மாவு ! பாஞ்சா நான் இட்லி //
Just can't stop laughing... ha ha ha ... நீங்க காமெடி போஸ்ட் எல்லாம் போட்டுடாதீங்க அம்மணி... என்ர மார்க்கெட் போயிரும்... ஹா ஹா ஹா...

//இப்படி தான் அப்போ அப்போ ஆறுதலா சொல்றே ! அப்புறம் இன்று ரொக்கம் நாளை கடன் அப்படின்னு சொல்ற மாதிரி திரும்பவும் மொக்கை ஆரம்பிட்சுக்கிரே //
இந்த சின்ன சின்ன ஆறுதல் சொல்லித்தான் படிக்கறவங்கள கடைசி வரை படிக்க வெக்க முடியும்... எப்படி நம்ம டெக்னிக்? ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Ponchandar - நன்றிங்க

@ priya.r - //அடப்பாவி ! உன்னோட வேலை தானா//
ஐயையோ... நான் ஒண்ணும் சொல்லலப்பா... அதிசியமா தக்குடு எனக்கு சப்போர்ட் பண்ணி ஒரு கமெண்ட் மொதல் வாட்டி... நான் வெள்ளை அறிக்கை வேற விடணுமா... வெல்ல அறிக்கை வேணா தரேன்... எத்தன கிலோ வேணும்... ஹி ஹி

@ Gayathri - ஹா ஹா ... தேங்க்ஸ் காயத்ரி... விசயத்த அடுத்த வாரம் சொல்றேன் சிஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ S.Menaga - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் மேனகா...

@ priya.r -
//கொடி!என்ன உங்க reaction கம்மியா இருக்கு! இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம்//
நானும் அதே தான் கேட்டேன்... மேடம் என்ன பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம்...

@ Priya - ரெம்ப நன்றிங்க ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ அருள் சேனாபதி - நன்றிங்க... "Arul Senapathi" , "அருள் சேனாபதி" யா மாறின பின்ன இந்த பக்கம் அதிகம் காணோமே...

@ Porkodi - ஹி ஹி ஹி... அடி பலமோ? ஹா ஹா ஹா

@ vinu - yes 48... you're awarded 100 marks in counting exam...ha ha ha

அப்பாவி தங்கமணி said...

@ vinu - //hello appavi ungalai yaaru ippo onlinukku varchchonna aniyaayamaa ippudi ennoda 50thu vadaiyay pudingiteengalea; ithu ungalukkea niyaayamaa //

ஹா ஹா ஹா... வட போச்சே... ஒகே ஒகே... நோ டென்ஷன்... நூறாவது வடைக்கு பிளான் பண்ணுங்க பிரதர்...கண்டிப்பா கிடைக்கும்... நான் அத்தன பேமஸ் எல்லாம் இல்ல...

vinu said...

me 75thuuuuuuuuuuuu

vinu said...

just missu ippo correctaa pottutanaaa 75thu

vinu said...

thirumbavum miss aachu appavi ingittu oru kedaa vettuthaan; sollitean ippo correctaa sollurean me the 75thuuuuuuuuuuuuuuuuu

vinu said...

aang correctaa vuttu koduththathukku nandri match mazai vanthu delay aayuduchchu so naan thoongapp porean; have a great week end; ippo ungalukku naan good afternoon sollanumaa; illay naan thoongap porathaala good night sollitu poganumaa he he he#doubttu

ஹேமா said...

தங்கம்ஸ்...சீக்கிரமா அடுத்த பதிவு !

எல் கே said...

/நான் எப்ப அப்படி சொன்னேன்... விட்டா நீ வாடகைக்கு நாய் வாங்கி ஏற்பாடு பண்ணுவ போல இருக்கே..//

வேண்டாம் நாய் பாவம்

Vasagan said...

@ Vasagan - அண்ணா, முந்தி எல்லாம் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தீங்க... இப்ப கலாய்ககர கட்சில மெம்பெர் ஆய்ட்டீங்க... too bad (ஹா ஹா ஹா)
மாப்பிளையை கலாய்ககலாம் என்று பார்த்தால் அவர் ஏற்கனவே உன்னை மதரி நல்ல பிள்ளை கிட்ட மாடிட்டு முழிச்சு கிட்டு இருக்கிறார்.

ஆனாலும் என் support உனக்குதான்.

Vasagan said...

இப்போ சமையலில் முன்னேற்றமாலே புளி இல்லாம புளியோதரை எல்லாம் செயிரம்லே.

Mahi said...

புவனா,உங்கள "ஹாஹா தங்கமணி"ன்னுதான் கூப்பிடப்போறேன் இனி! அத்தனை ஹாஹா போட்டிருக்கீங்க,கமெண்ட் ரிப்ளைல! :)

CSC-ல வொர்க் பண்ணீங்களா புவனா? எந்தக்காலம்?!!(ஐ மீன் இயர்,நோ செகண்ட் தாட்ஸ்,ஹிஹி) கோவைல பெண்கள் கல்லூரி..ம்ம்.N? K? or A? ;)

பத்மா said...

யப்பா தாங்கலடா சாமி !
சீக்கிரம் அடுத்த பாகம் ........

kadar said...

u r great in one way bhuvana... considering the comments. (mind voice domination rombave kurachiteenga... dats good....)

அதுல எங்க கேங் ஒரு பெரிய கேங்... பதினெட்டு பேரு... பதினெட்டு பட்டிக்கு representatives ரேஞ்சுக்கு ஒண்ணு ஒண்ணும் செம அலப்பறை கேஸ்... அதாவது, என்னை தவிர...நான் அப்பவே அப்பாவி தான்...

"நல்லா சேந்து இருக்குதுக கேங்"னு எங்க HOD அடிக்கடி டென்ஷன் ஆவாங்க... அவ்ளோ நல்ல புள்ளைங்க நாங்க எல்லாம்... ஹி ஹி ஹி

attendance vaanka kenjikitu irukaratha paatha ithu school mathiri illa theriyuthu... athum internal mark kooda illama...

என்னோட "ஏப்பி பர்த்டே"... ஆஹா இன்னிக்கி நம்ம பிரெண்ட்ஸ் என்ன ரகளை பண்ண போறாங்களோனு கலர் கலர் கனவுகளோட க்ளாஸ்க்கு போனேன்...

birthday ya mudija alavuku maraichi vachipanga namma college la (therinju pochunaaa thanniku mattume poidum purse, watch..ellam... ithula ponnu payyannu ella vithiyasam illa... adikirathu ennavo pasanga than.. anaa kasuvankarathu ponnungakitayumthan)

அன்னிக்கி பொறந்த நாள் ஸ்பெஷலா எங்க அம்மா எனக்கு பிடிக்கும்னு கேசரி, வடை, பூரி, மசால்னு சூப்பர் மெனுவா செஞ்சு இருக்கவும் ஒரு புடி புடிச்சுட்டு கிளம்ப நேரமாகிடுச்சு...

epdinalum b'day elarukum therinju pochu... friends ku 2 vada kesari ellam kondupoga mateenkala???

"Excuse me mam ?" நான் பாவமா க்ளாஸ் வாசல்ல நிக்க, மேடம் திரும்பியே பாக்கல

irunthalum college a intha alavuku asinga paduthi iruka koodathu nu ninaikireen...

மேடம் திரும்பி "மொதலே கேட்டது... அட்டெண்டன்ஸ் முடிக்கற வரை நின்னா தேஞ்சு போய்ட மாட்டே" னு ஒரு பர்த்டே ஸ்பெஷல் பல்பு குடுத்தாங்க

antha medam neenga ninnu asinga paduthinathavida kevala paduthitanga...(school teacheraa irupangalo...)

நானும் எதிர்ப்பார்போட Hutch நாய்க்குட்டிய விடவும்

romba arumayana timing sense writing......

அப்பாவி தங்கமணி சொன்னது…
@ Porkodi - ஹி ஹி ஹி... அடி பலமோ? ஹா ஹா ஹா

kodiya pathi ethuna sonneenganna kadupaiduven...avlothan.... (ethuku solrenna inthe blogs layee ennayum mathichi pesura oree aalu kodi than....)

apram appavi kovamellam poiducha emmela??? (ennnoda comments ku reply ellam panrenkale athan keten)


nangalum perusaaaaa poduvomla......

kadar said...

அதுக்கு அவ "சாரி"னு சொல்லி இருந்தாலோ இல்ல வேற எதுனா திட்டி இருந்தாகூடா பரவாலைங்க, என்ன கேட்டா தெரியுமா அந்த நயவஞ்சகி...

enna ketu irupa.... nee romba nallavaaa... evlo thittinalum thanguvannu ninaichen... nee apdi illayaanu ketu irupalo oruvelai????

தக்குடு said...

யக்கா, மொக்கை போதுமா!! சச்சினுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான், அவரு 100 போடர்த்துக்கு முன்னாடி 96-லேந்து 4 ஓவர் மட்டை போட்டு அப்புறம் 100 போடுவார், நீங்க 100 post போட்டதுக்கு அப்புறம் மொக்கை போடறீங்க! அவ்ளோதான் வித்தியாசம்..:)

ஹுஸைனம்மா said...

ரெண்டு வரில சொல்லக்கூடிய சம்பவத்தை, ரெண்டு பதிவாக்கிட்டீங்க. உங்ககிட்ட டியூஷன் படிக்கணுமே, ஃபீஸ் இல்லாம.

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ஒகே 75 வடை உங்களுக்கே... நன்றி நன்றி நன்றி

@ ஹேமா - அடுத்த வாரம் போட்டுடறேன்... நன்றிங்க

@ எல்.கே - ஹா ஹா ஹா...சிரிக்காம இருக்க முடியல...சூப்பர் டைமிங்

@ Vasagan - அது.... நன்றி நன்றி நன்றி... புலி இல்லாம கூட செய்றேன்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ஹா ஹா ஹா... நன்றி மகி... ஆமாங்க மகி, படிச்ச படிப்பு (சாப்ட்வேர்) டச் விடாம இருக்கணும்னு பார்ட் டைம் staff ஆ இருந்தேன் கொஞ்ச நாள்... அது எந்தகாலம் எல்லாம் சீக்ரட்... ஹா ஹா...

//கோவைல பெண்கள் கல்லூரி..ம்ம்.N? K? or A? ;) //
மூணுமே இல்லப்பா... "R" சிலர் "S" சொல்றதுண்டு... ஹா ஹா அஹ...வெச்சேனே மூளைக்கு வேலை... என்ஜாய்.....மகி...

அப்பாவி தங்கமணி said...

@ பத்மா - ஹா ஹா அஹ... தேங்க்ஸ்ங்க அக்கா

@ Kadar - நன்றி

@ தக்குடு - ஹா ஹா ஹா... நல்ல கம்பாரிசன்... எப்படி தான் இப்படி எல்லாம் தோணுதோ... நன்னிஹை

@ ஹுஸைனம்மா - ஃபீஸ் இல்லாம பீவர் கூட ப்ரீ இல்ல அக்கோவ்... சோ இந்த கைல பீஸ் அந்த கைல மேட்டர்...ஹா ஹா ஹா... யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க... நன்றி...

தெய்வசுகந்தி said...

ஹா ஹா ஹா!!

kadar said...

எனக்கென்னவோ
A மதிரி தெரிது..... btw போகோ சேனெல் லாம் பாப்பீஙலா நீங்க??? இல்ல சும்மா தான் கேட்டேன்....

My days(Gops) said...

//என்னமோ பின் நவீனத்துவ எபக்ட்" போல உங்களுக்கு தோணும்//

nalla vaikiraangaiah thalaipai...... appadi thaan enakku thonudhu....

My days(Gops) said...

//நடந்தா தான் சம்பவம் நடக்கலைனா சவம்//

nalla solluraangaiah detailu... corner'la ninnu kittu ippadi elaaam yosipeeengalo?

My days(Gops) said...

/ஆனா சரித்தரம் உண்மைய தான் பதிவு செஞ்சுருக்கு யு சி... //

i no see.... saritharathai konjam kaaatunga plz...

My days(Gops) said...

//பின்னாடி alphabet வர்ற மாதிரி வெயுங்க இனி மேலாச்சும்//

male'ku pinaadi vaikalam, female'ku munaaadi thaan vaikanum.. coz, ladies first always.... he he he.. naangalum yosipom la...

My days(Gops) said...

//அதுல ஜன்னல் பக்கத்துல இருக்கற முதல் row பூராவும் எங்க பதினெட்டு பட்டி ஆக்ரமிப்பு தான்.//

avlo peria bench ah? 18 seater bench ah unga college enga irundhu senchitu vandhaanga?

My days(Gops) said...

97 ivlo naal kalichi vandhu iruken... oru century pottutu povom...

My days(Gops) said...

98. mind voice'kum ungalukum daily oru peria poratamey nadakum pola... mmmmmmm...

My days(Gops) said...

adutha post ah podunga..... cut shoe and kattadha dog... cut shoe'a dog chase pannucha ila, cut shoe dog'a chase pannucha'nu paarpom

My days(Gops) said...

100 potaachi.... apaavi thangamani special oru thattu thataaadha idli sambar parcel panni thambi thakkudu'ku parcel plz....

vanathy said...

ஸ்நோவில் விழுதீங்க போல இருக்குன்னு சந்தோஷமா படிக்க ஆரம்பிச்சேன். சப்பென்று ஆகிவிட்டது. ஹிஹி
நல்லா இருக்கு பதிவு, அப்பாவி அக்கா.

சே.குமார் said...

ரசிக்க வைக்கும் அனுபவ எழுத்து.

திவா said...

//ப்ளாக்ல இதெல்லாம் சகஜமப்பா... சாதா'ரண'மப்பா...)//
பதிவை படிச்சா இது சாதா'ரண'மா இல்லையே? ஸ்பெஷல் ரணமா இல்லே இருக்கு! :-))

தக்குடு said...

//oru thattu thataaadha idli sambar parcel panni thambi thakkudu'ku parcel plz..// yooov gopsssu, y this kolai veri? neenga vanthu cmmt pootathukku punishment yenekka. avvvvvvvvvvv!....:)

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்ங்க அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ My days(Gops) -
//nalla vaikiraangaiah thalaipai...... appadi thaan enakku thonudhu.... //
thanks for sharing your thoughts... ஹி ஹி ஹி

//nalla solluraangaiah detailu... corner'la ninnu kittu ippadi elaaam yosipeeengalo?//
இல்லிங்க நடு சென்ட்டர்ல (ரெண்டும் ஒண்ணு தான்னு காலம் காலமா சொன்னாலும்) நின்னுட்டு யோசிச்சு தான் இப்படி ஆகி போச்சு... அடுத்த வாட்டி corner'ல நின்னு யோசிச்சுட்டு பாத்து அதையும் போஸ்ட்ஆ போடறேன்... நன்றி உங்கள் ஐடியாவுக்கு... ஹா ஹா ஹா

//i no see.... saritharathai konjam kaaatunga plz... //
அந்த சரித்தரம் இன்னும் இந்த ப்ளாக்ல் பதிய படலை... அடுத்த பதிவுல சொல்றனுங்க...

//male'ku pinaadi vaikalam, female'ku munaaadi thaan vaikanum.. coz, ladies first always.... he he he.. naangalum yosipom la... //
இதுல மட்டும் லேடீஸ் first னு ரெம்ப பெருந்தன்மையா விட்டு குடுத்துடுவீங்களே... நல்ல மனசு தான் கோப்ஸ் உங்களுக்கு... ஹா ஹா

//avlo peria bench ah? 18 seater bench ah unga college enga irundhu senchitu vandhaanga? //
ஸ்ஸ்ஸ்பப்பா... உங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த தப்பெல்லாம் சரியா கண்ணுல மாட்டுதோ... அதாவது... அந்த வரிசை பூராவும்... column னு சொல்லவந்து எப்படியோ மிஸ் ஆகி row னு போட்டு உங்ககிட்ட மாட்டிகிட்டேன்... ஹா ஹா... (உங்கள selection committee ல சேத்துக்க போறாங்களாம்...அப்படியா? ஹா ஹா)

//97 ivlo naal kalichi vandhu iruken... oru century pottutu povom... //
இவ்ளோ நாள் எங்க போனீங்க அத சொல்லுங்க மொதல்ல...

//98. mind voice'kum ungalukum daily oru peria poratamey nadakum pola... mmmmmmm... //
அந்த கொடுமய ஏன் கேக்குறீங்க?

//adutha post ah podunga..... cut shoe and kattadha dog... cut shoe'a dog chase pannucha ila, cut shoe dog'a chase pannucha'nu paarpom //
இந்த வாரம் போட்டுடறேன்... உங்க ஆர்வத்துக்கு (!!!) நன்னிஹை

//100 potaachi.... apaavi thangamani special oru thattu thataaadha idli sambar parcel panni thambi thakkudu'ku parcel plz....//
சூப்பர்... நூறு போட்டாச்சா? அதுக்கென்ன நீங்க சொன்னபடி தக்குடுக்கு பார்சல் அனுப்பிட்டா போச்சு... (விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லனு பப்ளிக் statement இங்கயே சொல்லிடறேன்... ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - என்னை snowல விழுந்தீங்கன்னு நெனச்சேன்னு சொன்னது கூட ஒகே... கடசியா என்னதது??? நான் அக்காவா? ப்ளாக் கூறும் நல்லுலகமே... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா... உங்க ஊர்ல அடுத்த வாரம் snow கொட்டோகொட்டுன்னு கொட்டனும்னு நான் வேண்டிக்கறேன்... (இந்த வாரம் எல்லா பக்கமும் கொஞ்சம் temperature raise ஆகுதுன்னு forecast பாத்துட்டேன்... அதான் நெக்ஸ்ட் வீக்... ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

@ திவா - எனக்கு சாதா'ரண'ம்னு சொன்னேன்... படிக்கறவங்களுக்கு என்னனு அவங்க அவங்களே சொல்லிக்குவாங்க... ஹா ஹா ஹா... நன்றிங்க...

@ தக்குடு - ஹா ஹா ஹா... டேக் இட் ஈஸி பாலிசி தக்குடு... (LIC பாலிசினு மறைமுகமா சொன்னதா நீ நெனச்சா கம்பேனி பொறுப்பில்ல யு சி... ஹா ஹா ஹா)

My days(Gops) said...

@thakuddu:- oru plate idli'ku imbuttu bayama..... mmmmmmmm ... andha bayam irukattum....

அப்பாவி தங்கமணி said...

@ My days(Gops) - Gops...indha bayathula thaan en vandiyum oodudhu... ha ha ha

The Kid said...

aamam...ungalukku "kara karannu" kannula thanni varuma?

lol!

அப்பாவி தங்கமணி said...

@ The Kid - y this kostin? Maraimuga mirattal onnum illaye :))))

Krish said...

veanaam, veanaam, azhudhuduvean.

அப்பாவி தங்கமணி said...

@ Krish - ha ha...:)

Post a Comment