Friday, January 28, 2011

Cut Shoeவும் கட்டாத நாயும்...(மொக்கையின் மிச்சம்...சொச்சம்...:))))

இந்த மொக்கையோட முதல் பாதி படிக்காம இதை படிச்சா, நாயும் புரியாது Cut Shoeவும் புரியாது...அதால மொதல்ல இங்க போய் படிச்சுட்டு வாங்க...

இனி...

அந்த நயவஞ்சகி கேட்ட கேள்வி இதான் "என்னடி ஆச்சு? உன் Ford Esteem நடுவழில நின்னுடுச்சா? எவ்ளோ பேரு சேந்து தள்ளினாங்க?" னு

அவள நான் மொறைச்ச மொறப்புல கண்ணகி மதுரைய எரிச்சப்ப கூட மொறசுருக்க மாட்டாக...

நான் என்ன கரகாட்டகாரன் செவப்பு காரா ஓட்டிட்டு வந்தேன்... அது நிக்கவும் நாலு பேரு சேந்து தள்ளவும்..... நான் வந்ததே ஓட்டை பஸ்சு... கோவம் வருமா வராதா சொல்லுங்க?

கௌண்டர் செந்தில்கிட்ட டென்ஷன் ஆனா மாதிரி நானும் "என்னை பாத்து ஏண்டி அந்த கேள்வி கேட்ட... என்னை பாத்து ஏன் கேட்ட... இத்தன பேரு இருக்கைல என்னை பாத்து கேக்கணும்னு உனக்கு ஏன் தோணுச்சு"னு எக்க சக்க டென்சனா திட்டினேன் மனசுக்குள்ள, மேடம் கிளம்பினப்புறம் மனசார திட்டலாம்னு காத்துட்டு இருந்தேன்

இன்னும் விட்டா... செந்தில் கௌண்டர்கிட்ட கேட்ட ரேஞ்சுக்கு "இதுக்கு முன்னாடி யாரு வெச்சு இருந்தாங்க"னு கேட்டுடுவாளோனு பயத்துல க்ளாஸ் கவனிக்கற சாக்குல அவளை அவாய்ட் பண்ணினேன்

அது மட்டுமில்லாம என்னோட நோட்ஸ்ஐ நம்பி பதினெட்டு பட்டி ஜனம் இருக்கே... அட நம்புங்கப்பா? நான் நல்லா படிக்கற பொண்ணு... அவங்க எல்லாரும் என் அலப்பறைய சகிச்சுட்டு என்னை கேங்ல சேத்துகிட்டதே அந்த Notesக்கு தான்னு ரெம்ப லேட்டா புரிஞ்சது தான் சோகம் (:

இன்னும் நம்பிக்கை வரலியோ... நீங்களும் ரங்க்ஸ் கட்சி தான் போல...

இப்படி தான் கல்யாணம் ஆனா புதுசுல ஒரு நாளு......(கொசுவத்தி.........)

எல்லா கணவன் மனைவியும் இந்த கட்டத்தை கண்டிப்பா சந்திச்சு இருப்பீங்க... அதாவது... நம்மள பத்தி இவளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு கணவனும்... இவருக்கு என்ன தெரியும்னு மனைவியும்... "நாங்கெல்லாம்.... " அப்படின்னு ஆரம்பிச்சு தங்களோட வீர தீர ப்ராதபத்த அளக்காத தம்பதி இருக்க முடியுமா?

நானும் அப்படிதான் ஒரு நாள் பீலா விட்டுட்டு இருந்தேன்... அப்போ பேச்சோட பேச்சா "எனக்கு எங்க காலேஜ்ல BEST OUTGOING STUDENT AWARD குடுத்தாங்க தெரியுமா?" னு என்னமோ ஆஸ்கர் வாங்கின ஏ.ஆர்.ஆர் ரேஞ்சுக்கு ஒரு பில்ட் அப் பண்ணினேன்

"பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்"னு இங்க ஒரு எண்டு கார்ட் போட்டா ரெம்ப பொருத்தமா இருக்கும்... ஹ்ம்ம்.... அதுக்கு ரங்க்ஸ் சொன்ன பதில கேட்டு, அன்னைக்கி நிறுத்தினவ தான், அவர்கிட்ட இந்த மாதிரி எதுவும் சொல்றதில்லைனு சபதமே எடுத்துட்டேன்...

அப்படி என்ன தான் சொன்னாருனு நீங்கெல்லாம் கேக்க ஆவலா இருப்பீங்க (ஏன்னா நான் பல்பு வாங்கின கதை ஆச்சே...)

அவர் சொன்னது இதான் "BEST OUTGOING STUDENT AWARD ஆ? ஏன் எப்பவும் காலேஜ்க்கு வெளிய தன் இருப்பியா? ஆனாலும் அவார்ட் வாங்குற அளவுக்கா?"

சொல்லுங்க நட்புகளே, இதுக்கு மேல ஒருத்தி பேசத்தான் முடியுமா? அந்த அவார்ட் எதுக்கு குடுத்தாங்கன்னு இன்னிக்கி வரைக்கும் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ண முயற்சிக்கலை... ஒருத்தி வாழ்க்கைல எத்தன பல்பு தான் வாங்கறது...

சரி இத விடுங்க... என் பல்புகள் என்னோட...நாம Cut Shoe மேட்டர்க்கு போவோம்....

Cut Shoe பத்தி நான் எதுவும் சொல்லலை இல்லையா? எந்த ராகு காலத்துல எனக்கு அப்படி ஒரு ஆசை வந்ததோ...

எனக்கு பொதுவா சிம்பிள் சாண்டல்ஸ் தான் விருப்பம்... Cut Shoe அவ்ளோ ஒத்து வராது... பர்த்டேக்கு என்ன வேணும்னு எங்க அம்மா கேக்க... அந்த நேரத்துல நாக்குல சனி வந்து சல்சா டான்ஸ் ஆடுச்சு போல இருக்கு...

"எனக்கு ரெட் கலர்ல வெல்வெட்ல ஸ்டோன்ஸ் வெச்ச கட் சூ வேணும்"னு சொன்னேன். அதிசயமா பொண்ணு கேக்கறாளேனு கடை கடையா என் கூட சுத்தி அதே போல ஒண்ணை ஒரு மாசம் முன்னாடியே வாங்கி தந்தாங்க...

ஆனா பர்த்டே அன்னிக்கி புது டிரஸ் போடறப்ப தான் போடுவேன்னு பீரோக்குள்ள வெச்சு பூட்டிட்டேன்... ("கருமம் கருமம் செருப்ப போய் பீரோல வெச்சுருக்கு... என்ன ஜென்மமோ?"னு எங்க பாட்டி பொலம்பினத நான் கண்டுக்கவே இல்ல)

அந்த அழகான கட் ஷூ, அப்புறம் புது டிரஸ் எல்லாம் போட்டுட்டு வந்தும் கூட 18ல ஒரு ப்ரூட்டஸ் கூட ஏன்னு கேக்கலயேனு அது வேற ஒரு எரிச்சல்...

அந்த கட் ஷூ லேசா கடிக்கற மாதிரி வேற ஒரு நமைச்சல்... அடிக்கடி ஷூவை கழட்டி விடறதும் போடறதுமா அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்

முதல் period க்ளாஸ் முடிஞ்சதும் பிரெண்ட்ஸ்கிட்ட க்ளு குடுத்து பாத்தேன் நைசா... ஆனாலும் எவளும் "ஏப்பி பர்த்டே" சொல்ற பாடா காணோம்... மேடம்கிட்ட பலப் வாங்கினத கிண்டல் பண்றதுலையே குறியா இருந்தாளுக... நன்றி கெட்ட உலகமடா இது? னு நானும் விட்டுட்டேன்...

ஒரு வழியா லஞ்ச் டைம் வந்தது... இந்த ப்ரூட்டஸ்களுக்குன்னு எங்க அம்மா வேற வடை கேசரி பார்சல் எல்லாம் பண்ணி இருந்தாங்க... ஏன் எதுக்குன்னு கேக்காம அதை உள்ள தள்ளுறதுலையே பிஸி எல்லாரும்... நானும் மனசு வெறுத்து போய் பேசாம விட்டுட்டேன்...

சாப்ட்டு முடிச்சதும் "வா வெளிய போலாம்" னு ரெண்டு பேரு, தசாவதாரம் பலராம் நாயுடு கோவிந்தராஜன் கமலை விசாரிக்க கூட்டிட்டு போன ரேஞ்சுல கூட்டிட்டு போய் ஒரு பத்து நிமிஷம் காலேஜ்ஐ சுத்த வெச்சு திரும்ப கூட்டிட்டு வந்தாளுக... கட் ஷூ குத்தற வலி வேற... சொன்னா "உனக்கேண்டி இதெல்லாம்?" னு ஒரு பலப் கிடைக்கும்னு பேசாம இருந்தேன்...

திரும்பி க்ளாஸ்க்கு வந்தா... அங்கே...ஆனந்த அதிர்ச்சி... கலர் பேப்பர் ஒட்டி... ஹாப்பி பர்த்டேனு எல்லாரும் கத்தி... ஒரு பெரிய கிப்ட் பார்சல்... கேக் வேற முன்னாடி டேபிள்ல மெழுகுவர்த்தி தகதகக்க... எனக்கு அப்படியே மயக்கம் வராத குறை தான்...

ச்சே... இந்த பாசக்கார புள்ளைகளயா திட்டினோம்னு வடிவேல் ரேஞ்சுக்கு ஒரே பீலிங் வேற... அது பைனல் இயர்ங்கறதால அந்த வருஷம் 18 பேரின் பர்த்டேவும் இப்படி தான் செய்யறதுன்னு 17 பட்டி நாட்டமைகளும் சேந்து எடுத்த முடிவாம்... என்னோடது மொதல் பர்த்டேங்கறதால சஸ்பென்ஸ் வெச்சாங்களாம் எனக்கு மட்டும்... ஸ்ஸ்ஸ்பப்பா....

எல்லாம் நல்லா முடிஞ்சுது... Happily ever after னு போடணும்னு தான் ஆசை... ஆனா.....

கட் ஷூ நமைச்சல் ஒரு ஸ்டேஜ்ல கட்டுக்கடங்காம போச்சு... பக்கத்துல இருந்தவ நான் நெளியரத பாத்துட்டு கேக்கவும் சொல்லிட்டேன்... வாயல கை வெச்சுட்டு உலக அழகி போட்டில ஐஸ்வர்யா ராய் ஜெய்ச்சப்ப குடுத்த அதே expression ... சிரிப்ப அடக்கராங்களாம் மேடம்... :(((

அதோட விட்டாளா...???  சத்தமா "ஏண்டி... யானை ஹெல்மெட் போட ஆசைபட்டா சரி... எறும்புக்கு அந்த ஆசை வரலாமான்னு?" அந்த டைம்ல இருந்த ஒரு மொக்க காமடிய எடுத்துவுட்டு க்ளாஸ் பூரா மேட்டரை பத்த வெச்சா...

அப்புறம் அக்கறையா என்ன ஏதுன்னு பாத்து ரெத்தமே வர தொடங்கி இருந்த நமைச்சலுக்கு பேன்ட் எய்ட் எல்லாம் போட்டு நல்லாத்தான் கவனிச்சாங்க... "நண்பிடிடிடிடி...."னு சொல்லலாம்னு அப்பவெல்லாம் தோணல... .

காலேஜ் முடிஞ்சு கிளம்பினப்ப ஆரம்பிச்சது அடுத்த ப்ராப்ளம்... ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து தான் மெயின் பஸ் ஸ்டாண்ட் வரணும்... நான் மெதுவா தான் நடப்பேன் என்னால முடியாதுன்னு ஏக அலப்பறை பண்ணி அன்ன நடை போட்டுட்டு வந்தேன்... முடியலையே, அம்மா அப்பானு அடிக்கடி சவுண்ட் வேற.... பொறந்த நாளும் அதுவுமா போய் தொலையட்டும்னு என் பிரெண்ட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க போல...

பாதி வழில வந்துட்டு இருந்தப்ப பாலு மகேந்திரா படத்துல எல்லாம் காட்டற மாதிரி என்னமோ சரியில்லைனு உள் மனசு சொல்லுச்சு... என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்... இதுல உள் மனசோட வார்னிங் எல்லாம் கண்டுக்கரதாவது... ஹ்ம்ம்...

திடீர்னு அங்க ஒரு நாய்...அதுவும் தெரு நாய்... எனக்கு இந்த பிராணி எல்லாம் செம அலர்ஜி... அது பாட்டுல சிவனேன்னு ரோடுல படுத்துட்டு இருந்தது... ஆனா எனக்கு ஜெர்க் ஆய்டுச்சு... நான் நின்னதும் "என்னடி ஆச்சு...?" னா ஒருத்தி...

"நா...நா...நா... " எனக்கு பேச்சே வர்ல

"சொல்றத ஒழுங்கா சொல்லி தொல"

"நாய்..."னு கத்தினேன்

"ஏண்டி திட்டற?" னு அவ வேற ... "உன்னை இல்லடி... நெஜமாவே அங்க பாரு... நாய்" னேன்

"அது எங்கயோ... தொட்டா விழுகற சோனி நாய்... அதுக்கு போய்... ஹா ஹா ஹா" னு எல்லாரும் கெக்க பிக்கனு சிரிப்பு...

"சோனி நாய் கடிச்சாலும் அதே 32 ஊசி தான் லூசுகளா" னேன் நான்... ஒருத்தியும் பயபட்ற பாடா காணோம்

இந்த நேரத்துல அந்த நாய் மெதுவா எந்திரிச்சது... அப்படியே எங்க பக்கம் நடக்க ஆரம்பிச்சது... அவ்ளோ தான் கால் வலி எல்லாம் எங்க போச்சுனே தெரியல... ஓடினாள் ஓடினாள் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள் ரேஞ்சுல நான் ஓட... அது தொரத்த... மத்த நாய்க (பிரெண்ட்ஸ் ) எல்லாம் சிரிக்க...

"24 hours கழிச்சு தான் சொல்ல முடியும்... இனி ஆண்டவன் மேல பாரத்த போடுங்க" னு ICU முன்னாடி நிக்கற சொந்தகாரங்ககிட்ட சொல்ற டாக்டர் மனநிலைக்கு நானும் வந்திருந்தேன்... திடீர்னு... யாரோ வழில போன ஒரு புண்ணியவான் வந்து அந்த நாய தொரத்தி விட்டாரு... அதே டாக்டர் டயலாக் "Its a miracle..." தான் அப்ப தோணுச்சு...

"நடக்கவே முடியாதாம் ஆனா ஓட முடியுமாம்... சூப்பர் இல்லடி" னு ஒருத்தி மாத்தி ஒருத்தி ஜாடை பேசி சிரிச்சுட்டே வந்தாளுக என் எனிமிஸ்... (இன்னும் என்ன பிரெண்ட்ஸ் வேண்டி கெடக்கு....)... நான் பதில் சொல்லாம மொறச்சுட்டே அன்னிக்கி ஓடுச்சு டைம்...

ஆனா இன்னைக்கி வரைக்கும் என் மனசுல நெருஞ்சி முள்ளா உறுத்தற சில கேள்விகள்:-

1 அந்த நாய்க்கு பிடிக்காம போனது என்னையா இல்ல ரெட் கட் ஷூவயா?

2 . கிராமத்து சினிமால எல்லாம் ஜல்லிக்கட்டு காளை தானே செவப்பு கலர் பாத்து டென்ஷன் ஆகும்... நாய் கூடவா இப்படி? அப்ப ஏன் பாரதிராஜா எந்த சினிமாலையும் இதை காட்டலை?

3 அத்தன பேரு இருக்கறப்ப எல்லாரையும் விட்டிட்டு அந்த நாய் ஏன் என்னை மட்டும் துரத்தணும்? இதன் பின்னணியில் இருக்கும் உள் நாட்டு சதி என்ன?

4. ஒருவேள நான் போன ஜென்மத்துல அந்த நாயாவும் அது நானாவும் இருந்து நான் அதை இதே போல துரத்தி இருப்பனோ? அதுக்கு தான் இப்ப பழி வாங்குதோ?

மைண்ட்வாய்ஸ் -  இதுக்கு மேல நீ ஒரு கேள்வி கேட்டா கூட நான் நாயா பேயா வந்து உன்ன தூரத்துவேன்...

அப்பாவி - ஒகே... மீ எஸ்கேப் நௌ... 

88 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

ஹைய்யோ,ஹைய்யோ!! கட்ஷூவும் கட்டாத நாயும் சூப்பருங்க புவனா! சிரிச்சி,சிரிச்சு,கண்ணுல தண்ணி வரல,ரத்தக்கண்ணீரே வருது! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Mahi said...

BTW,நீங்க எந்த காலேஜின்னு கண்டுபுடிச்சிட்டேன்! ;)

Chitra said...

அந்த நாய்க்கு பிடிக்காம போனது என்னையா இல்ல ரெட் கட் ஷூவயா?


......சரியான கேள்வி.... பதில் தெரிஞ்சுதா? செம காமெடியா எழுதி இருக்கீங்க....

முனியாண்டி said...

கேள்வி எல்லாம் சரிதான் பதில் சொன்னா கோபம் வரும் தான் யோசிக்கிறேன்.......

அமைதிச்சாரல் said...

ஓ..அந்த மிச்சசொச்ச கட்ஷூவோட போட்டோவைத்தான் ப்ரேம் போட்டு மாட்டியிருக்கீங்களா :-))

எஸ்.கே said...

//பாதி வழில வந்துட்டு இருந்தப்ப பாலு மகேந்திரா படத்துல எல்லாம் காட்டற மாதிரி என்னமோ சரியில்லைனு உள் மனசு சொல்லுச்சு... என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்... இதுல உள் மனசோட வார்னிங் எல்லாம் கண்டுக்கரதாவது... ஹ்ம்ம்... //

மைண்ட் வாய்ஸ் பேச்சை கேட்கறதே இல்லை போல இன்னைக்கு வரைக்கும்!:-))

செ.சரவணக்குமார் said...

நான் உங்கள பாலோ பண்றேன். எனவே புது பதிவு பற்றிய மெய்ல் அனுப்ப வேண்டாம் ப்ளீஸ்.

Vasagan said...

ஆஹா பிள்ளை முக்கியமான 4 கேள்வி கேட்ருக்கு. அதனாலே cancer cellyai பார்க்கிறது பத்தியெல்லாம் மெதுவா யோசிகிலாம் முடிவு எடுத்துட்டேன்.

பதில் வெகு விரைவில்.

நீ மட்டும் தானா நாங்களும் தொடரும் போடுவோம்.

Porkodi (பொற்கொடி) said...

சிரிச்சு சிரிச்சு முடியல அ.த.. எப்படி இப்படிலாம்? சரி பிடிங்க உங்க நெருஞ்சுமுள் கேள்விகளுக்கு பதிலை

1. நீங்க போட்டுருந்ததால அந்த ரெட் கட்ஷூவையும் பிடிக்கலையாம்.

2.ஏன்னா அதெல்லாம் ராம‌நாராயணன் ஜில்லா. பாரதிராஜா காமிக்கற வானம் பார்த்த‌ தெக்கத்தி பூமில எங்கேருந்து வரும் நாய்?

3. உங்களை பார்த்த உடனே பூர்வ ஜென்மம் நினைவு வந்துடுச்சாம்.

4. போன ஜென்மத்துல நீங்களும் சோனியும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கறதுக்கு ஜஸ்ட் முன்னாடி உங்கப்பா வந்து சோனியை கொன்னுட்டாராம். அடுத்த ஜென்மத்துல நான் ரெட் கட் ஷூ போட்டுட்டு வர்ற அன்னிக்கு நீ வெயிட் பண்ணு நாம கல்யாணம் பண்ணியே தீர்றோம்னு வாக்கு குடுத்தீங்களாம்.. குடுத்த வாக்கை காப்பாத்தாம போயிடுச்சே என் ஆசை கண்மணின்னு ஒரே அழுகையாம்.

நன்றி: நாய்பாஷை அறிந்த பக்கத்து வீட்டு ஆவி அமுதா.

மகி said...

//4. போன ஜென்மத்துல நீங்களும் சோனியும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கறதுக்கு ஜஸ்ட் முன்னாடி உங்கப்பா வந்து சோனியை கொன்னுட்டாராம். அடுத்த ஜென்மத்துல நான் ரெட் கட் ஷூ போட்டுட்டு வர்ற அன்னிக்கு நீ வெயிட் பண்ணு நாம கல்யாணம் பண்ணியே தீர்றோம்னு வாக்கு குடுத்தீங்களாம்.. குடுத்த வாக்கை காப்பாத்தாம போயிடுச்சே என் ஆசை கண்மணின்னு ஒரே அழுகையாம்.// haahhaa! superrrrrrrrrrr!

Vasagan said...

அண்ணன்கள் தக்குடு, L K, அக்காக்கள் பிரியா, போர்க்கொடி, அனாமிகா எல்லாரும் submit பண்ணும் தீசிஸ் சை வைத்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி இந்த வருட நோபெல் prize வாங்கிரனும்.

பத்மநாபன் said...

இந்த மாதிரி கதைகள் இருக்கறதுனால , அம்முணி அப்பாவிதான்னு நம்பவேண்டியிருக்கு....இதுல அப்பாவித்தனம் நெம்பவே சிரிக்க வச்சுருச்சு..

vanathy said...

ரெட் கலர் மாடுகளுக்கு ஆகாது. இப்ப தான் தெறிஞ்சுகிட்டேன் நாய்க்கும் பிடிக்காதுன்னு.

Vasagan said...

அந்த கட் ஷூ லேசா கடிக்கற மாதிரி வேற ஒரு நமைச்சல்

உன்னை விடவா.

Dubbuku , தக்குடு, அப்பாவி உங்களை எல்லாம் பார்த்து பொறாமையாக இருக்கிறது.

எப்படி உங்களால் நகைசுவையாய் சிந்திக்க, எழுத முடிகிறது.

Vasagan said...

\Porkodi (பொற்கொடி) சொன்னது…

1. நீங்க போட்டுருந்ததால அந்த ரெட் கட்ஷூவையும் பிடிக்கலையாம்.

2.ஏன்னா அதெல்லாம் ராம‌நாராயணன் ஜில்லா. பாரதிராஜா காமிக்கற வானம் பார்த்த‌ தெக்கத்தி பூமில எங்கேருந்து வரும் நாய்?

3. உங்களை பார்த்த உடனே பூர்வ ஜென்மம் நினைவு வந்துடுச்சாம்.

4. போன ஜென்மத்துல நீங்களும் சோனியும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கறதுக்கு ஜஸ்ட் முன்னாடி உங்கப்பா வந்து சோனியை கொன்னுட்டாராம். அடுத்த ஜென்மத்துல நான் ரெட் கட் ஷூ போட்டுட்டு வர்ற அன்னிக்கு நீ வெயிட் பண்ணு நாம கல்யாணம் பண்ணியே தீர்றோம்னு வாக்கு குடுத்தீங்களாம்.. குடுத்த வாக்கை காப்பாத்தாம போயிடுச்சே என் ஆசை கண்மணின்னு ஒரே அழுகையாம்.

நன்றி: நாய்பாஷை அறிந்த பக்கத்து வீட்டு ஆவி அமுதா.\

Reviewer comment:

Very good work. I recommend for direct publication in Nature-Naayalogy no need for any further revision.

authors : போர்க்கொடி and பக்கத்து வீட்டு ஆவி அமுதா.

Vijay @ இணையத் தமிழன் said...

ரொம்ப நகைச்சுவையா எழுதி இருக்கீங்க ,
வாழ்த்துக்கள்

Porkodi (பொற்கொடி) said...

வாசகன், உங்களுக்கும் எனக்கும் தான் வாய்க்கா தகராறு கூட இல்லையே.. ஏன் சார் இப்படி கொலவெறியோட போர்க்கொடினு கூப்பிடுறீங்க..?

தெய்வசுகந்தி said...

ஹா ஹா ஹா கண்ணுல தண்ணியே வந்துருச்சுங்க அப்பாவி! இந்த best outgoing student award அ சொல்லி நானும் ஒரு பல்ப் வாங்கியிருக்கேன்.

Vasagan said...

போர்க்கொடி (பொற்கொடி)

நான் காரணம் இல்லை Gmail கன்வெர்ட்டர் ( Porkodi என்று type செய்து பார்) . சரி Google சொன்னா எங்கப்பன் பெருமாளே சொன்ன மாதரின்னு போட்டுட்டன். அது சரி கூக்லேக்கே உன்னை பத்தி தெரிங்கிருகே. யார் எழுதிபோற்றுபா ?

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. இந்த மாதிரிலாம் ஏதாவது அக்கப்போர் வரும்னு தான் அடைப்புக்குறி எல்லாம் போட்டு ட்ரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன்.. அப்புறம் எதுக்கு கூகிள்? மறந்துரணும் சரியா? (நான் கூட நீங்க வேற சொல்றீங்கன்னு பயந்துட்டேன் ஹிஹி)

Vasagan said...

Porkodi (பொற்கொடி) சொன்னது…

சரின்னு சொல்லாம் நு பார்த்தால்
உம்மாச்சி சொன்ன மாதரி செய்யலேநு கண்ணை குத்திருசீனா.

போர்க்கொடி க்கு என்ன எவ்வளு அழகான, அருமையான பொருத்தமான பெயர தெரிது.

\நான் கூட நீங்க வேற சொல்றீங்கன்னு பயந்துட்டேன்\

சரி சரி நம்பிட்டேன்

ஸ்ரீராம். said...

ஒரே ஜிரிப்பு... பொற்கொடி (முதல்)கமெண்ட்டும் ரசித்தேன்.

எல் கே said...

இப்படிலாம் சொன்னா நீங்க அப்பாவின்னு நாங்க நம்புவோமா ???


//. Cut Shoe அவ்ளோ ஒத்து வராது.//

இதுக்கு பேருதான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறது

//எனக்கு ரெட் கலர்ல வெல்வெட்ல ஸ்டோன்ஸ் வெச்ச கட் சூ வேணும்//

ஸ்டோன் ரொம்ப முக்கியமா ??

//ஏன் எதுக்குன்னு கேக்காம அதை உள்ள தள்ளுறதுலையே பிஸி எல்லாரும்//

அதெல்லாம் நீதான் பண்ணேன்னு சொல்லி இருக்கணும். ஒருத்தரும் தொட்டு இருக்க மாட்டங்க

//"ஏண்டி... யானை ஹெல்மெட் போட ஆசைபட்டா சரி... எறும்புக்கு அந்த ஆசை வரலாமான்னு?//

செம செம செம

௧. இதில் என்ன சந்தேகம். உன்னை மட்டும்தான்

போர்ஸ் சொன்ன மாதிரி ரெண்டும் வேற வேற ஏரியா

ஏன்னா , நீ மட்டும்தான் ஓடின . அமைதியா இருந்திருந்தா ஒன்னும் ஆகி இருக்காது

இல்லை அதை கடிச்சிருப்ப அதான் இந்தப் பழிவாங்கல்

Vasagan said...

Porkodi
ஜப்பான்ல இற்க்கும் போது உனக்கு தமிழும்(ரஜினி தமிழ் ) தெரியலே இங்கிலிஷும் தெரியலே தைவான் போய் Mandarin ல பேசு ன்னு அனுபிட்டானுக. அங்கே நான் Mandarin கத்துகிற வேகத்த பார்த்து அங்குள்ள தமிழ் சை Mandarin அறிங்கர்கள் நமக்கு போட்டி யான்னு நீ கனடா போ மகனே அங்கு உன் தங்கை ஒருத்தி இருக்கான்னு நாடு கடத்திடானுக. சரிதான்னு google ஆண்டவரை பிரார்தித்து வாழ்கை யை ஓடிட்டு இர்ருக்கன. அதுனாலே பொற்கொடி சீ தப்பு போர்க்கொடி இதுஎல்லாம் கண்டுகிடதே.

(கடவுளே இப்போ நான் போட்ட comment எல்லாம் எத்தனை தப்பு இருக்கு. இதுக்கு எல்லாம் மக exercise வாங்கிடுவளே. ) இதுதான் சொந்த செலவுல suuniyama.
(to subi: kutti translate akirathu thappu thappa aakirathu ennudayia thappu illai)

Vasagan said...

Lk
I want answers for four important questions raised by Thankaimani.

ηίαפּάʞиίнτ ™ said...

"Its a miracle..." anju nimisham latea vanthiruntha ungala kaapathirukka mudiyathu :)

BalajiVenkat said...

//// நான் உங்கள பாலோ பண்றேன். எனவே புது பதிவு பற்றிய மெய்ல் அனுப்ப வேண்டாம் ப்ளீஸ். ///// haha chumma Indha mokka postukulam mail annupi thaniyavum imsa paduthathangrrar :P

BalajiVenkat said...

///இல்லை அதை கடிச்சிருப்ப அதான் இந்தப் பழிவாங்கல்//// kadikka vandha nayaye ATM thirumbha kaduchatha.... Andha naaikku enna aacho ethacho.... Nai kaducha 16 oosi... ATM kaducha oosiye kidayathey....

தங்கம்பழனி said...

//("கருமம் கருமம் செருப்ப போய் பீரோல வெச்சுருக்கு... என்ன ஜென்மமோ?"னு எங்க பாட்டி பொலம்பினத நான் கண்டுக்கவே இல்ல// சில அனுபவங்கள் வாழ்விலும் இதுபோல் நடக்கத்தான் செய்கிறது..!

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்..................முடியலை.....

kadar said...

நாலு பக்கம் கமென்ட்ஸ் எழுதினாழும் kadar - நன்றி னு மட்டும் தான் சொல்ல போர.. அதுனால பெருசா ஒன்னும் சொல்ரதுக்கு இல்லை கட் ஷூ போட்டுகிட்டு நாயிகிட்ட தப்பிச்சி ஓடுரது ஏற்கனவே எதிர் பார்த்தது தான். அப்பறம்...

@மஹி - அரே ராமா... அரே கிருஷ்ணா..... என்ன கொடுமை ஸார் இது... நாங்கள்ளாம் அவங்க படிச்ச ஸ்கூல யே கண்டு புடிச்சிட்டு அமைதியா நல்ல பிள்ளை யா இருக்கோம். நீ என்னபா தங்கமணி கேங்க விட அலப்பறை பண்ணுறியே...... சும்ம இரு தம்பி......போயி என்னா ஹயர் ஸெகன்டரி ஸ்கூலுனு கண்டு புடி......

@ பொற்கொடி - கமென்ட் எழுத சொன்னா.... இங்க ஒரு கதை எழுதிட்டியே பா.... ரொம்ப பெரிய ஆளா இருகியே...

priya.r said...

ஒரு நல்ல செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவை கலந்த படத்தை பார்த்த நிறைவு சிரிப்பும் தான்.,கலக்கிட்டே கண்ணாம்மா ! S.SUPERP!

இருந்தாலும் சங்கத்துக்காகவும் நாலு வார்த்தை !

//ஆனா இன்னைக்கி வரைக்கும் என் மனசுல நெருஞ்சி முள்ளா உறுத்தற சில கேள்விகள்:-//

ஒரு முள் மொக்கை யாகிறது ! DIRECTION BY அப்பாவி

//1 அந்த நாய்க்கு பிடிக்காம போனது என்னையா இல்ல ரெட் கட் ஷூவயா? //

பாஸ் .......

//2 . கிராமத்து சினிமால எல்லாம் ஜல்லிக்கட்டு காளை தானே செவப்பு கலர் பாத்து டென்ஷன் ஆகும்... நாய் கூடவா இப்படி? அப்ப ஏன் பாரதிராஜா எந்த சினிமாலையும் இதை காட்டலை?//
மொக்கை பதிவை கூட மக்கள் ஏத்துக்குவாங்க! ஆனா மொக்கை படத்தை ஏத்துக்குவாங்களா!

//3 அத்தன பேரு இருக்கறப்ப எல்லாரையும் விட்டிட்டு அந்த நாய் ஏன் என்னை மட்டும் துரத்தணும்? இதன் பின்னணியில் இருக்கும் உள் நாட்டு சதி என்ன? //
ஒன்னும் தெரியாதவங்கலாட்டம் என்ன கேள்வி கேட்கறாங்க பாருங்க ......எல்லாம் நம்ம விதி !
அப்பாவி ! நீ முதல் முதல்லா செய்த இட்லியை அந்த நாய்க்கு 2 நாள் முன்னாடி போட்டு இருக்கவே கூடாது ;அதை சாப்பிட்டு தான் இப்படி அந்த நாய் ஆய்டுச்சாம் !

//4. ஒருவேள நான் போன ஜென்மத்துல அந்த நாயாவும் அது நானாவும் இருந்து நான் அதை இதே போல துரத்தி இருப்பனோ? அதுக்கு தான் இப்ப பழி வாங்குதோ?//
அந்த நாய்க்கு எழுத படிக்க தெரியுமோ என்னவோ !அப்போ அடுத்த ஜென்மத்திலும் இது தொடருமோ !


இந்த நாலு கேள்வி கேட்டதுக்கு பேசாம எங்களை நாலு அடி வைத்து இருக்கலாம் அப்பாவி !

ஹுஸைனம்மா said...

யக்கா, நீங்க ஓடினீங்களே, அப்ப உங்களைவிட வேகமா முன்னாடி ஒரு பொண்ணு ஓடிகிட்டிருந்தா பாத்தீங்களா? அது நாந்தான்!! நீங்க நாய்க்குப் பயந்து, நான்....

;-))))))))

mohamed said...

நல்லா எழுதுறங்கப்பா மொக்கையை

mohamed said...

என்னோட மைலுக்கு உங்களோட மொக்கையை அனுப்புவும் amd.faizal@yahoo.com

Mahi said...

/@மஹி - அரே ராமா... அரே கிருஷ்ணா..... என்ன கொடுமை ஸார் இது... நாங்கள்ளாம் அவங்க படிச்ச ஸ்கூல யே கண்டு புடிச்சிட்டு அமைதியா நல்ல பிள்ளை யா இருக்கோம். நீ என்னபா தங்கமணி கேங்க விட அலப்பறை பண்ணுறியே...... சும்ம இரு தம்பி......போயி என்னா ஹயர் ஸெகன்டரி ஸ்கூலுனு கண்டு புடி....../அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! காதர் அண்ணே,மஹி தம்பியில்ல,தங்கச்சி!

தங்கமணி கேங்குன்னு தனியா ஒரு கேங் இருக்குதா என்ன? நாங்க எல்லாரும் ஒரே கேங்குன்னு இல்ல நினைச்சிட்டு இருக்கேன்? நீங்க என்ன புதுகதை சொல்றீங்க?

நல்லபுள்ளைங்க அமைதியாத்தேன் இருக்கும்,எங்க கேங்ல ஜாயின் பண்ணிட்டீங்க போல? பேச ஆரம்பிச்சிட்டீங்க?!!

Vasagan said...

நெருஞ்சி முள் கேள்விகளும்- பதில்களும்

சோனி இடம் உங்கள் கேள்விகளை சங்கத்து சார்பாக கேட்டதற்கு அவர் பகர்ந்த பதில்

வணக்கம் சோனி அவர்களே, AT அவர்கள் உலகம் புகழ்ந்த மொக்கை அரசி என்பது உங்களுக்கு தெரியும் அவர்கள் 4 கேள்விகள் உங்களை பற்றி கேட்டுள்ளார்கள், நீங்கள் பொறை தேடும் பொன்னான நேரத்திலும் சிரிது நேரம் ஓதுக்கி பதில் கூறியதுக்கு நன்றி.

௧ . அந்த நாய்க்கு பிடிக்காம போனது என்னையா இல்ல ரெட் கட் ஷூவயா?

லொள் லொள் லொள்

௨. கிராமத்து சினிமால எல்லாம் ஜல்லிக்கட்டு காளை தானே செவப்பு கலர் பாத்து டென்ஷன் ஆகும்... நாய் கூடவா இப்படி? அப்ப ஏன் பாரதிராஜா எந்த சினிமாலையும் இதை காட்டலை?

லொள் :'-(

௩. அத்தன பேரு இருக்கறப்ப எல்லாரையும் விட்டிட்டு அந்த நாய் ஏன் என்னை மட்டும் துரத்தணும்? இதன் பின்னணியில் இருக்கும் உள் நாட்டு சதி என்ன?
.......ம்ம்ம் லொள்
௪. ஒருவேள நான் போன ஜென்மத்துல அந்த நாயாவும் அது நானாவும் இருந்து நான் அதை இதே போல துரத்தி இருப்பனோ? அதுக்கு தான் இப்ப பழி வாங்குதோ?

கர்ர் கர்ர் கர்ர் லொள் லொள் லொள் கர்ர் லொள் லொள்

நாங்களும் மொக்கை போடுமுலே

அப்பாதுரை said...

நாயாக நாயில்லை தாயே

சே.குமார் said...

நகைச்சுவையா எழுதி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்.

Balaji saravana said...

:)))))))))

vinu said...

எனக்கு எங்க காலேஜ்ல BEST OUTGOING STUDENT AWARD குடுத்தாங்க தெரியுமா?"


me too ; me toooooooooooooooooo

தக்குடு said...

ஹலோ பெஸ்ட் அவுட்கோயிங்கு ஸ்டூடன்ட்டு!

மறுபடியும் பார்ட் 1-க்கு லிங்கு குடுக்கர்த்துக்கு என்னா தைரியம் உங்களுக்கு? புதுசா யாராவது வந்திருந்தா தயவு செய்து பார்ட் 1 பக்கம் போக வேண்டாம்.(அருவிக்கரைல எழுதி வச்சிருக்கும் அபாய அறிவிப்பு மாதிரி படிக்கவும்).

ச்சே....! இவ்ளோ துரத்தினதுக்கு அட்லீஸ்ட் ஒரு செல்லக் கடியாவது கடிச்சு இருக்க வேண்டாமோ!!..:P சரி விடுங்கோ அந்த சோனி நாயோட ஆயுசு கெட்டி!..:)

தக்குடு said...

@ saravanan - //நான் உங்கள பாலோ பண்றேன். எனவே புது பதிவு பற்றிய மெய்ல் அனுப்ப வேண்டாம் ப்ளீஸ்.//

மீ விழுந்து விழுந்து சிரிச்சுபையிங்! உங்க கமண்ட் படிக்கும் போது கவுண்டமணியோட " நாராயணா! கொசுத் தொல்லை தாங்க முடிலடா" டையலாக் எனக்கு ஞாபகத்துக்கு வரவே இல்லை!!..:)))


@ வாசகன் - சார், //Dubbuku , தக்குடு, அப்பாவி உங்களை எல்லாம் பார்த்து பொறாமையாக இருக்கிறது//

டுபுக்கு & அடப்பாவி தங்கமணி நகைச்சுவை ஓக்கே, இதுக்கு நடுல இந்த சுண்டெலியோட பேரை சொல்லி என்னை வச்சு காமெடி பண்ணர மாஆஆஆதிரி இருக்கே??..:)) கருத்துக்கு நன்னிஹை!

Dubukku said...

:)))) நல்லா எழுதியிருக்கீங்க.. "புவனா ஒரு கேள்விக்குறி" பட டைட்டில் இன்னிக்கு தாங்க ஜஸ்டிஃபை ஆகியிருக்கு :))

உங்க முந்தின ஜில்லுன்னு ஒரு காதல் நல்லா இருக்கு. ஆபிஸுலேர்ந்து கமெண்ட முடியல...அந்த ப்ளாகர் கமெண்ட் லிங்க் தடை பண்ணியிருக்காங்க :((

வாசகர் - நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஓ..அந்த மிச்சசொச்ச கட்ஷூவோட போட்டோவைத்தான் ப்ரேம் போட்டு மாட்டியிருக்கீங்களா :-)//

அதே தானாங்க.. புவனா? ;-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//1 அந்த நாய்க்கு பிடிக்காம போனது என்னையா இல்ல ரெட் கட் ஷூவயா? //

...நிச்சயமா அந்த கட் ஷூவாத் தான் இருக்கணும்.. அதான் படத்துல இருக்கே.. அந்த கடி கடிச்சு வச்சிருக்கு

//2 . கிராமத்து சினிமால எல்லாம் ஜல்லிக்கட்டு காளை தானே செவப்பு கலர் பாத்து டென்ஷன் ஆகும்... நாய் கூடவா இப்படி? அப்ப ஏன் பாரதிராஜா எந்த சினிமாலையும் இதை காட்டலை?//

...அதானே... நியாயமான கேள்வி... டோன்ட் வொர்ரி.. கேட்ருவோம்


///3 அத்தன பேரு இருக்கறப்ப எல்லாரையும் விட்டிட்டு அந்த நாய் ஏன் என்னை மட்டும் துரத்தணும்? இதன் பின்னணியில் இருக்கும் உள் நாட்டு சதி என்ன? //

... ஹா ஹா.. அதுக்கு உங்க மேல என்ன காண்டோ... முன்ஜென்ம பகையாய் இருக்கும்..

///4. ஒருவேள நான் போன ஜென்மத்துல அந்த நாயாவும் அது நானாவும் இருந்து நான் அதை இதே போல துரத்தி இருப்பனோ? அதுக்கு தான் இப்ப பழி வாங்குதோ? ///

.......ஹி ஹி ஹி.. முந்தின பதில்-ல சொல்லிட்டேன்..

///மைண்ட்வாய்ஸ் - இதுக்கு மேல நீ ஒரு கேள்வி கேட்டா கூட நான் நாயா பேயா வந்து உன்ன தூரத்துவேன்... ///

...இது அப்படி இல்ல புவனா.. இதுக்கு மேல இங்க ஒரு நிமிஷம் நின்னீங்க.......... ;-)

அப்படி இருந்திருக்கணும்... :-))

நல்லா இருக்குங்க.. ரசித்து சிரிச்சேன்.. தேங்க்ஸ்..

கமால் -அன்பின் உச்சம் said...

sema story pa.... vilundhu vilundhu sirichathula adiye patturuchu.....

ippadikku...

unnai pol oruvan....

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ரத்தக்கண்ணீரா??? ஹா ஹா ஹா... அடி பலமோ மகி... :)))) காலேஜ் கண்டுபிடுச்சுட்டீங்களா...? சூப்பர்... நானும் உங்க காலேஜ் கண்டுபிடிச்சுட்டேன்... அந்த க்ளு என்னனு ஞாபகம் வந்துடுச்சு... ஹா ஹா...
(BTW, உங்க ரசம் ரெசிபி weekend பண்ணினேன்... came out nice... ரசம் விரும்பாதவர் கூட சாப்பிட்டார்... தேங்க்ஸ் மகி...:))

@ Chitra - நன்றிங்க சித்ரா... பதில்தாங்க இன்னும் தெரியல :)

@ முனியாண்டி - ஹா ஹா ஹா... அதெல்லாம் வராது... தைரியமா சொல்லுங்க...

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - உங்களுக்கு மட்டும் இப்படி இப்படி எல்லாம் கொஸ்டின் தோணுதுங்கறது தான் என்னோட அஞ்சாவது கேள்வி... ஹா ஹா ஹா... சூப்பர் அக்கா

@ எஸ்.கே - கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க... :))

@ செ.சரவணக்குமார் - நன்றிங்க சரவணகுமார். அது என்னோட ப்ளாக்ல் sign up செய்தவர்களுக்கு default ஆக அனுப்பப்படும் ஈமெயில்... உங்களை அதில் இருந்து விலக்கி இருக்கிறேன்... இனி வராது என நினைக்கிறேன்... மீண்டும் வந்தால் தெரியபடுத்துங்கள்... மிக்க நன்றி...

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - நீங்க physics professor னு சொன்னதா நினைவு... "கான்செர் செல்"???? ஐயயோ நீங்க தான் அந்த சினிமால வர்ற ப்ரொபசரா... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...

//நீ மட்டும் தானா நாங்களும் தொடரும் போடுவோம்// ஆஹா... இப்படி எல்லாம் பழி வாங்க கூடாது....

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... ROFTL கொடி... சிரிச்சு சிரிச்சு....அதுலயும் அந்த நாலாவது பதில் சூப்பர்... ரெம்ப பழைய தமிழ் சினிமா பாத்தா எபக்ட் போல... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்... (ஆவி அமுதாவுக்கும் தேங்க்ஸ் சொல்லிடுங்க மேடம்...)

@ மகி - நானும் அதே தான் மகி... ஹா ஹா ஹா ஹானு நிறுத்தவே இல்ல...

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - ஆஹா... சூப்பர் தீசிஸ்... எனக்கு ராயல்டி ஒண்ணும் இல்லையா... ?? :)))

@ பத்மநாபன் - ஹி ஹி... இல்லைனாலும் நான் அப்பாவி தானுங்க அண்ணா... நன்றிங்க... :))

@ vanathy - ஆஹா... என்னோட பதிவு educative ஆ கூட இருக்குனு சொல்ல வரீங்கன்னு புரியுது வானதி... மிக்க நன்றி... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//உன்னை விடவா. //
ஹா ஹா ஹா... என்னை விட கொஞ்சம் கம்மி தான்... :))

//Dubbuku , தக்குடு, அப்பாவி உங்களை எல்லாம் பார்த்து பொறாமையாக இருக்கிறது//
ஆஹா.... ஜாம்பவான்கள் லிஸ்ட்ல என்னை சேத்து டீங்களே ... கேஸ் போட போறாங்க குடும்பமா வந்து... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் அ லாட்...

//Reviewer comment: Very good work. I recommend for direct publication in Nature-Naayalogy no need for any further revision //
சூப்பர் ப்ரொபசர் சார்... நன்றி நன்றி நன்றி... :)) Nature-Naayalogy - ஹா ஹா ஹா ஹா....

அப்பாவி தங்கமணி said...

@ Vijay @ இணையத் தமிழன் - ரெம்ப நன்றிங்க விஜய்

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... அப்ப வேற யாரு கூட வாய்க்கா தகராருங்க அம்மணி... :))

@ தெய்வசுகந்தி - நீங்களுமா? காய்ச்சமரம் கல்லடி படறது வாஸ்துவம் தானுங்க அக்கா... (இது இப்படி இருக்கு)... ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - கரெக்டுங்க ப்ரொபசர் sir...

@ Porkodi (பொற்கொடி) - நான் டைப் பண்றப்பவும் நெறைய வாட்டி இப்படி தான் வரும்... உன்கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன்... பாவம் சின்ன பொண்ணு (!!!) வருதப்படும்னு விட்டுட்டேன்... :)))

@ Vasagan - சூப்பர்....

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - நன்றிங்க...

@ எல் கே -
//இப்படிலாம் சொன்னா நீங்க அப்பாவின்னு நாங்க நம்புவோமா ???//
இல்லைனாலும் நான் அப்பாவிதான்னு உன்னை தவிர எல்லாரும் நம்புவாங்க :)))

//ஸ்டோன் ரொம்ப முக்கியமா ??//
பின்ன... அந்த ஷூவுக்கு அழகே அதானே... ஹ்ம்ம்... அதை பாத்து தான் நாய் மெரண்டுடுச்சோனு கூட ஒரு டவுட் இருக்கு... :))

//அதெல்லாம் நீதான் பண்ணேன்னு சொல்லி இருக்கணும். ஒருத்தரும் தொட்டு இருக்க மாட்டங்க //
அப்பவெல்லாம் கிட்சன் எந்த மூலைலனு கூட கண்டுக்கமாட்டேன்... அதெல்லாம் ஒரு வசந்த காலம்... ஹ்ம்ம்...

//இல்லை அதை கடிச்சிருப்ப அதான் இந்தப் பழிவாங்கல்//
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr....

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - மககிட்ட நல்லா திட்டு வாங்க வாழ்த்துக்கள்... :))))

//Lk - I want answers for four important questions raised by Thankaimani//
அதைதான் LK லாஸ்ட் நாலு வரில சொல்லி இருக்கார் (நம்பர் போடலைங்க..)

அப்பாவி தங்கமணி said...

@ ηίαפּάʞиίнτ ™ - அதே அதே... ஹா ஹா...:)))

@ BalajiVenkat - எனக்கு உங்க மேல தான் சந்தேகம்... ஏதோ சதியோனு? ( ஹா ஹா...)

//Nai kaducha 16 oosi... ATM kaducha oosiye kidayathey.... //
ப்ரூட்டஸ் கட்சில சேந்தாச்சா? சரி சரி... elephant க்கு ஒரு காலம் வந்தா mouse க்கு ஒரு காலம் வரும் பாஸ்... :))

@ தங்கம்பழனி - சரியா சொன்னீங்க... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ MANO நாஞ்சில் மனோ - அவ்ளோ முடியலையா? ஹா ஹா... :)))

@ kadar - நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//ஒரு நல்ல செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவை கலந்த படத்தை பார்த்த நிறைவு சிரிப்பும் தான்.,கலக்கிட்டே கண்ணாம்மா ! S.SUPERP!//
நன்றிங்க அக்கோவ்...

//இருந்தாலும் சங்கத்துக்காகவும் நாலு வார்த்தை !//
அதானே பாத்தேன்... grrrrrrrrrrrrr....

//ஒரு முள் மொக்கை யாகிறது ! DIRECTION BY அப்பாவி //
புதுமுகம் ப்ரியா நடிக்கும்.... :))))

//பாஸ் .......//
இல்ல பெயில்... answer சொல்லலைனா பெயில் தானே மேடம்... :)))

//மொக்கை பதிவை கூட மக்கள் ஏத்துக்குவாங்க! ஆனா மொக்கை படத்தை ஏத்துக்குவாங்களா//
இருங்க பாரதிராஜா ரசிகர்கள் உங்க வீட்டை முற்றுகை இட போறாங்களாம்... ஹா ஹா.. :)))

//அப்பாவி ! நீ முதல் முதல்லா செய்த இட்லியை அந்த நாய்க்கு 2 நாள் முன்னாடி போட்டு இருக்கவே கூடாது ;அதை சாப்பிட்டு தான் இப்படி அந்த நாய் ஆய்டுச்சாம் //
அதை போட்டு இருந்தா அது இப்படி ஓடி இருக்குமா? அதான் மிஸ் பண்ணிட்டேன்... ஹா ஹா ஹா... :))

//அந்த நாய்க்கு எழுத படிக்க தெரியுமோ என்னவோ !அப்போ அடுத்த ஜென்மத்திலும் இது தொடருமோ //
ஆமா எங்க ஊரு நாய் கூட PHD பட்டதாரி தான்... :))

//இந்த நாலு கேள்வி கேட்டதுக்கு பேசாம எங்களை நாலு அடி வைத்து இருக்கலாம் அப்பாவி//
உங்க ஆசைய நான் நிறைவேத்தாம விடுவேனா அக்கா... சீக்கரம் நிறைவேற்றப்படும்... ஹா அஹ அஹ... :))))

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஓ... நீங்க தானா அது... ????? நான் கூட வேற .......:)))))

@ mohamed - நன்றிங்க மொஹம்மத்... நிச்சியம் அனுப்பறேன்... நன்றிங்க...

@ Mahi - ரெம்ப கரெக்டா சொன்னீங்க மகி... நாம எல்லாம் ஒரே gang தான்... தேங்க்ஸ்ங்க மகி

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//நீங்கள் பொறை தேடும் பொன்னான நேரத்திலும்//
ஹா ஹா ஹா...சூப்பர்..

//லொள் லொள் லொள்//
ஆஹா... லொள் லொள்ல இவ்ளோ modulation ஆ? அட அட அட... :))))

//நாங்களும் மொக்கை போடுமுலே//
செம மொக்கை... ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - ஹா ஹா ஹா... சூப்பர்... :)))

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

@ Balaji saravana - :))))))))))))))

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ஆஹா... நெறைய இருக்கோம் போல இருக்கே நாம... ஒரு சங்கம் ஆரம்பிச்சுருவோம்... ஹா ஹா... :)))

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு -
//அருவிக்கரைல எழுதி வச்சிருக்கும் அபாய அறிவிப்பு மாதிரி படிக்கவும்//
ஹா ஹா ஹா... சூப்பர்... (ஆனாலும் ப்ரூட்டஸ்... )

//ச்சே....! இவ்ளோ துரத்தினதுக்கு அட்லீஸ்ட் ஒரு செல்லக் கடியாவது கடிச்சு இருக்க வேண்டாமோ!!..:P சரி விடுங்கோ அந்த சோனி நாயோட ஆயுசு கெட்டி!..:) //
அடப்பாவி... தம்பி பித்தள கம்பி தான் இனிமே... :((((( (அந்த நாய் உன்னை தான் தேடிட்டு இருக்காம்... சற்று முன் கிடைத்த தகவல் இது... :))))

//மீ விழுந்து விழுந்து சிரிச்சுபையிங்! உங்க கமண்ட் படிக்கும் போது கவுண்டமணியோட " நாராயணா! கொசுத் தொல்லை தாங்க முடிலடா" டையலாக் எனக்கு ஞாபகத்துக்கு வரவே இல்லை!!..:)))//
அதே வேற ஒருத்தர் "mohamed சொன்னது… " ஈமெயில் அனுப்புங்கனு கேட்டாரே அது உன் கண்ணுல பட்டே இருக்காதே... நீ ப்ரூட்டஸ் கட்சில காசு வாங்கிட்டேன்னு வதந்தி வந்தப்ப நான் நம்பலை... இப்ப நம்பறேன்... :))))

//டுபுக்கு & அடப்பாவி தங்கமணி நகைச்சுவை ஓக்கே, இதுக்கு நடுல இந்த சுண்டெலியோட பேரை சொல்லி என்னை வச்சு காமெடி பண்ணர மாஆஆஆதிரி இருக்கே??..:)) கருத்துக்கு நன்னிஹை//
ஆஹா... என்னே பணிவு.. என்னே modesty .. :))))) (ஜஸ்ட் கிட்டிங்... )

அப்பாவி தங்கமணி said...

@ Dubukku - ஹா ஹா ஹா... ஒகே... ஜஸ்டிஃபை பண்ணினதால எனக்கு "ஜஸ்டிஸ் அப்பாவி" பட்டம் குடுப்பேன்னு ஒத்தை காலுல எல்லாம் நிக்க கூடாதுங்க இப்பவே சொல்லிட்டேன்... :))))

//உங்க முந்தின ஜில்லுன்னு ஒரு காதல் நல்லா இருக்கு. ஆபிஸுலேர்ந்து கமெண்ட முடியல...அந்த ப்ளாகர் கமெண்ட் லிங்க் தடை பண்ணியிருக்காங்க :((//
நன்றிங்க... :))

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - இல்லீங்க... அது ராசி இல்லைன்னு அன்னைக்கே கெணத்துல தூக்கி போட்டுட்டேன்... (அப்படி ஒரு கோவம் அன்னைக்கி... ஹா ஹா... )

//அதுக்கு உங்க மேல என்ன காண்டோ... முன்ஜென்ம பகையாய் இருக்கும்//
உங்களுக்கு இப்படி இந்த மேட்டர் தெரியும்... முன் ஜென்மத்துல உங்க சொந்தமோ... ஜஸ்ட் கிட்டிங்பா... :)))

//இதுக்கு மேல இங்க ஒரு நிமிஷம் நின்னீங்க.......... ;-) அப்படி இருந்திருக்கணும்... :-)).//
சூப்பர்...எனக்கு தோணாம போச்சே... இதுக்கு தான் பெரியவங்ககிட்ட கேக்கனுங்கறது... ஹா ஹா... :))))

//நல்லா இருக்குங்க.. ரசித்து சிரிச்சேன்.. தேங்க்ஸ்.. //
ரெம்ப நன்றிங்க ஆனந்தி

அப்பாவி தங்கமணி said...

@ கமால் - ஹா ஹா ... ரெம்ப நன்றிங்க... :))

vinu said...

அப்பாவி தங்கமணி சொன்னது…
@ vinu - ஆஹா... நெறைய இருக்கோம் போல இருக்கே நாம... ஒரு சங்கம் ஆரம்பிச்சுருவோம்... ஹா ஹா... :)))


ada nijamaathaanungoooo

@2003[best out going; best NSS, best student of the year]

nammaku intha vilambaramellam pidikkaathungooooooooo

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////அதுக்கு உங்க மேல என்ன காண்டோ... முன்ஜென்ம பகையாய் இருக்கும்//

உங்களுக்கு இப்படி இந்த மேட்டர் தெரியும்... முன் ஜென்மத்துல உங்க சொந்தமோ... ஜஸ்ட் கிட்டிங்பா... :)))//

அட நீங்க வேற.. நா சொன்னதுக்கு அர்த்தம் அது இல்ல..

போன ஜென்மத்துல.. அத கல்லு விட்டு அடிசிருப்பீங்க.. அந்த காண்டுல... உங்கள துரத்தி இருக்கும்னு நினச்சேன்.. ;-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எது எப்படிப் போனாலும், கடி வாங்காம தப்பிச்ச உங்க பெருமையா பாராட்டியே ஆகணும்.. :-))

Vasagan said...

\நீங்க physics professor னு சொன்னதா நினைவு... "கான்செர் செல்"???? \

Medical Physics- imaging and nanotech specialization.

\ஐயயோ நீங்க தான் அந்த சினிமால வர்ற ப்ரொபசரா... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...\

ஹா ஹா ஹா Entha cinema? Nan avalava padam parkamaaden.

Last movie seen in theater is hum aapke hain kaun two times ... first time with my wife second time with all my family members nearly 15 + 6 ticket because of Madhuri.

Last movie seen on DVD is Thasavatharam.

Krishnaveni said...

super comedy post, ithu maathiri neraya podunga

kadar said...

@Ananthi

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
31 ஜனவரி, 2011 10:25 am

why ananthi why??? who did this???

My days(Gops) said...

idhuku thaaan red color la stone vacha cut shoe vaanga koodadhu'nu.... stone over glittering ah irundhu irukum...... dog'ku adhu bother ah irundhu irukum.... aaamah, ungala yaaru oda sonnadhu? cut shoe ah kalati ongi oru podu pottu irukanum... miss panniteeengaley akka.... herafter appadi oru nilamai vandha, unga kai aaala sencha idly ah reserve ah vachi irunga.. vogay?

My days(Gops) said...

@kodi:- //போன ஜென்மத்துல நீங்களும் சோனியும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கறதுக்கு ஜஸ்ட் முன்னாடி உங்கப்பா வந்து சோனியை கொன்னுட்டாராம். அடுத்த ஜென்மத்துல நான் ரெட் கட் ஷூ போட்டுட்டு வர்ற அன்னிக்கு நீ வெயிட் பண்ணு நாம கல்யாணம் பண்ணியே தீர்றோம்னு வாக்கு குடுத்தீங்களாம்.. குடுத்த வாக்கை காப்பாத்தாம போயிடுச்சே என் ஆசை கண்மணின்னு ஒரே அழுகையாம்//

eppadi ippadi elaaam? over ah ulaikireenga'nu ninaikiren.... sssssbaaaaaaa

btw, andha aaavi amudha va ila aandal ah?

Mahi said...

/உங்க ரசம் ரெசிபி weekend பண்ணினேன்... came out nice... ரசம் விரும்பாதவர் கூட சாப்பிட்டார்.../எனக்கு அதே ரமணிசந்திரன் கதை ஞாபகம் வர்ரதை தவிர்க்கமுடீல புவனா!!;) :)
ரசம் வைத்து மறக்காமல் சொன்னதுக்கு தேங்க்ஸ்,தேங்க்ஸ்!

எல் கே said...

இன்று போடப் படவேண்டிய அடுத்த பாகத்தை வெளியிடாத அப்பாவியை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனாமிகா, பிரியா, பொற்ஸ் ஆகியோர் சபைக்கு வந்த தட்டி கேட்கவும்

kadar said...

எல் கே......

நல்ல வேளை போடலை தப்பிச்சிட்டோம்னு அவங்கள்ளாம் சந்தோஷப்பட்டுக்கிட்டு, பார்ட்டி வச்சி கொண்டாடிட்டு இருக்காங்களாம்.

kadar said...

போனவாரம் குடிச்ச டீ கிளாஸ இந்த வாரம் கழுவி வச்சிற்றான் ஸ்டீவ். இதுக்கு போயி டென்சன் ஆறீங்களே எல்.கே

எல் கே said...

/போனவாரம் குடிச்ச டீ கிளாஸ இந்த வாரம் கழுவி வச்சிற்றான் ஸ்டீவ். இதுக்கு போயி டென்சன் ஆறீங்களே எல்.கே //

hahaha ... sari namma kadai pakkam varamaatteengala neenga??

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ஹா ஹா ஹா... ஒகே நம்பிட்டேன்... உங்களுக்கு விளம்பரம் பிடிக்காது...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஹா ஹா ஹா... எனக்கு மொதலே புரிந்தது... சும்மா கலாய்ச்சேன் ஆனந்தி... தேங்க்ஸ்ங்க... :))

//எது எப்படிப் போனாலும், கடி வாங்காம தப்பிச்ச உங்க பெருமையா பாராட்டியே ஆகணும்.. :-))//
ஆனந்தி வாழ்க வாழ்க... :))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//Medical Physics- imaging and nanotech specialization.//
ஓ... இதுல இப்படியெல்லாம் வேற இருக்கா... தேங்க்ஸ்ங்க சொன்னதுக்கு... பெரிய படிப்பெல்லாம் படிச்சு இருக்கீங்க போல இருக்கு... சூப்பர்...

//Entha cinema?//
Absent Minded Professor னு பழைய காமெடி படம்... ஜஸ்ட் கிட்டிங்... நோ டென்ஷன்... ஹா ஹா...

//Last movie seen in theater is hum aapke hain kaun two times ...//
அடப்பாவமே... என்ன கொடும இது? இந்த ஊர்ல எப்படி பொழுது போகுது உங்களுக்கு...

//first time with my wife second time with all my family members nearly 15 + 6 ticket //
படத்துல வர்றது தான் பெரிய குடும்பம்னு நெனச்சேன்... உங்களுது அதை விட பெரிய குடும்பம் போல இருக்கே...சூப்பர்.. :)))

//because of மாதுரி//
அது சரி....:))

//Last movie seen on DVD is தசாவதாரம்//
I guess you're not into movies. I used to be like that back home. Here, movies are the only as well last resort....:))))

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... (இதே போல போஸ்ட்னா இன்னும் நெறைய நாய் துரத்தல் அனுபவத்துக்கு வாழ்த்தரீங்களா...ஜஸ்ட் கிட்டிங் வேணி... ஹா ஹா... :))))

அப்பாவி தங்கமணி said...

@ Kadar - //why ananthi why??? who did this???//
அவங்களே அவங்க duplicate கமெண்ட்ஐ delete பண்ணிட்டாங்க... Thanks

அப்பாவி தங்கமணி said...

@ My days(Gops) -
//stone over glittering ah irundhu irukum...... dog'ku adhu bother ah irundhu irukum.... //
அப்ப உங்கள போல யாரும் விவரமானவங்க யாரும் பக்கத்துல இருந்துருந்தா இந்த சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் (நீங்களும் இந்த போஸ்ட்ல இருந்து தப்பிச்சு இருக்கலாம்... ஹா ஹா)

//cut shoe ah kalati ongi oru podu pottu irukanum...//
அதுக்குள்ள அதை என்னை போட்ருசுன்னா... 32 ஊசி இல்ல போடணும் பாஸ்... அவ்வ்வ்வ்....

//miss panniteeengaley akka.... //
இனி நேரு மாமா, காந்தி தாத்தா மட்டும் தான் பாக்கி...எதுக்கா? என்னை அக்கானு கூப்பிடறதுக்கு... இதெல்லாம் அநியாயம் கோப்ஸ்... ஹ்ம்ம்... காலம் தான் பதில் சொல்லும்... :))))

//eppadi ippadi elaaam? over ah ulaikireenga'nu ninaikiren.... sssssbaaaaaaa //
ரெம்ப சரி... ROFTL கமெண்ட் by கொடி... :)))))

//btw, andha aaavi amudha va ila aandal ah? //
உங்க பாயிண்ட்ல நீங்க தெளிவா இருக்கீங்க... அப்படி அது அண்டாளா இருந்தா என்ன கேக்கறதா உத்தேசம்? வாங்கின அல்வா பத்தலைனு சொல்ல போறீங்களோ... ஹா ஹா ஹா ஹா... (கொடி... வந்து பதில் சொல்லுங்க... இன்னும் ஆண்டாள் ஸ்டோரி முடியல... ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ எல் கே - ஹா ஹா ஹா... இதோ போட்டுடறேன்... நௌ...

Post a Comment