Thursday, February 24, 2011

ஊடலும்...ஊடல் நிமித்தமும்... (சிறுகதை)"அரவிந்த்..."

"ம்... என்ன குணா?"

"என்னடா ஆச்சு உனக்கு?" என்றான் குணா கவலையுடன் நண்பனை பார்த்தபடி

"ஒண்ணுமில்லையே...ஏன்?" என விழித்தான் அரவிந்த்

"இந்த ரிப்போர்ட் கொஞ்சம் பாரு...இதை இப்படியே நான் அப்லோட் பண்ணி இருந்தா நம்ம ரெண்டு பேர் சீட்டையும் கிழிச்சுருப்பான்" என நண்பன் கூற, கலவரமாய் ரிப்போர்ட்ஐ வாங்கி பார்த்த அரவிந்த் தான் செய்த பெரிய தவறு புரிய

"சாரிடா குணா.... கரெக்ட் பண்ணி தரேன்" எனவும்

"நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்...நானே செஞ்சுக்கறேன்... மொதல்ல வா என்னோட...ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்" எனவும் மறுப்பு கூறாமல் குணாவுடன் இணைத்து FoodCourtக்கு சென்றான் அரவிந்த்

இவர்கள் அமர்ந்த இரண்டு டேபிள் தள்ளி ஒரு இளைஞர் பட்டாளம் ஏதோ கலாட்டா செய்து சத்தமாய் சிரித்து கொண்டிருந்தனர்

"அதுல ஒருத்தனுக்கு கூட கல்யாணமாகலை...நிச்சியமா சொல்றேன்" என்றான் அரவிந்த், அந்த இளைஞர் பட்டாளத்தை ஏக்கமாய் பார்த்தபடி

அவன் கூறிய அர்த்தம் புரிந்த போதும், நண்பன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் பேச வைப்பது தான் சரியான மருந்து என புரிந்தவனாய், வேண்டுமென்றே "எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற" என்றான் குணா

"மனசு விட்டு சிரிக்கறான் பாரு ஓவ்வொருத்தனும்...அதுலயே தெரியுதே" என முறுவலித்தான் அரவிந்த்

"ஹா ஹா ஹா... ஏண்டா அரவிந்த்....நீயும் நானும் அப்ப சிரிக்கறதே இல்லையா?"

"சிரிப்போம்...ஆனா இப்படி சிரிக்க முடியாது... அரை செகண்ட் சிரிக்கறதுக்குள்ள...இவ்ளோ சிரிக்கறோமே இன்னிக்கி வீட்டுல என்ன ஆப்பு காத்துட்டு இருக்கோனு தோணாம போகாது" என்றான் நிஜமான வருத்தத்துடன்

"இப்ப என்னடா இவ்ளோ பீலிங் திடீர்னு... சொல்லலாம்னா சொல்லு...நான் கட்டாயப்படுத்தல அரவிந்த்"

சற்று தயங்கியவன் "உன்கிட்ட சொல்றதுக்கு என்ன குணா... வைஷ்ணவி எதுக்கு எடுத்தாலும் எதாச்சும் குற்றம் கண்டுபிடிச்சு சண்டை தான் தினமும்...ச்சே"

"டேய்...வைஷ்ணவி அமைதியான பொண்ணு... அவள கல்யணம் பண்ணிக்க நான் லக்கினு நீயே சொல்லி இருக்கியேடா"

"அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட வேஷத்துல ஏமாந்தது... ஆனா, அது எப்பட்றா பொண்ணு பாக்க போறப்ப அப்படி ஒரு ஒண்ணும் தெரியாத லுக்கு குடுத்து ஏமாத்தறாங்க... அப்புறம் கல்யாணம் ஆன புதுசுல கூட என்னா ஒரு ஆக்டிங்... அடசாமி.... அதிர்ந்து பேசாத பொண்ணுனு நானும் ஏமாந்துட்டேன்"

"ஹா ஹா ஹா" என குணா சிரிக்க

"என் பொழப்பு உனக்கு சிரிப்பா போச்சா" என முறைத்தான் அரவிந்த்

"அரவிந்த்... நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே, நீ சொல்றதுக்கு எல்லாம் பதில் பேசாம மனைவி சும்மா தலை ஆட்டணும்னா... தட்ஸ் நாட் ரைட்"

"நான் அப்படி சொல்லல குணா... ஒண்ணுமில்லாத பிரச்சனை எல்லாம் பெருசு பண்ணி கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போனா...அது சரியா"

"அம்மா வீட்டுக்கா? அப்படி என்னடா பெரிய பிரச்சன" என அதிர்ச்சியாய் குணா கேட்க

"எல்லாம் இந்த வெந்த டே வேகாத டே பண்ற கொடுமை தான்...எவன்டா கண்டுபிடிச்சான் இந்த வேலன்டைன்ஸ் டே கண்றாவி எல்லாம்...என் கைல கெடச்சான் செத்தான்" என அரவிந்த் உணர்ச்சி வசப்பட

"அது என்னடா பண்ணுச்சு உன்னைய...ஆமா அது முடிஞ்சு பத்து நாள் ஆச்சே... இப்ப என்ன தகராறு?" என சிரித்தான் குணா

"அதை கேளு மொதல்ல... நான் கிப்ட் வாங்கி தரல... ஆனா மேடம் அதை உடனே கேக்க மாட்டாங்களாம்... ஒரு வாரம் எனக்கு டைம் குடுத்து நானே என் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்க கிரேஸ் டைமாம் அது... அதுலயும் நான் செஞ்ச கொலை குத்தத்த ஒத்துக்காததால கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போயாச்சு"  என்றவனின் குரலில் கோபமும் வருத்தும் கலந்து ஒலித்தது

"ஹா ஹா... இதெல்லாம் கல்யாண வாழ்க்கைல சகஜம் அரவிந்த்... ஆமா நீ ஏண்டா கிப்ட் வாங்கல... தப்பு தானே அது"

"நீயும் வேற ஏண்டா? இல்ல நான் தெரியாமதான் கேக்கறேன்... வருஷம் பூரா சண்டை போட்டுட்டு அந்த ஒரு நாள் கிப்ட் வாங்கி குடுத்தா அன்பான புருஷன்னு அர்த்தமா"

"அப்படி ஏன் நினைக்கற... வருஷம் பூரா அன்பு இருக்கு தான்... ஆனா வருஷம் பூரா கிப்ட் வாங்கி குடுத்தா கட்டுபடி ஆகுமா...அதுக்கு தான் இந்த மாதிரி அந்த டே இந்த டேனு வெச்சு கிப்ட் குடுத்துக்கறதுனு நினையேன்... வெள்ளைகாரன்கிட்ட  இருந்து வந்ததுங்கற காரணத்துனாலேயே இந்த நாளை திட்டறவன் பாதி பேரு... மனசுல தேக்கி இருக்கற அன்பை ஒரு  விருப்பமான செயலால் / செய்கையால் வெளிப்படுத்த ஒரு நாள் கிடைச்சதுன்னு சந்தோசமா கொண்டாட வேண்டியது தானே... டேய்... நீ என்ன கிப்ட் தர்றேங்கறது இல்ல மேட்டர்... எதாச்சும் ஒண்ணு.... To express that you love your wife.... அதான் மேட்டர்" என்றான் குணா

"அதெல்லாம் சும்மா... போன வருஷம் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் வேலன்டைன்ஸ் டேனு அவளுக்கு பிடிச்ச கடைல அஞ்சாயிரம் ரூபாய்க்கு கிப்ட் கார்டு வாங்கி குடுத்தேன்... அதுக்கும் சண்டை தான்... அதான் இந்த வருஷம்... செலவு பண்ணியும் எதுக்கு சண்டைனு விட்டுட்டேன்" என்றான் அரவிந்த் சலிப்பாய்

"நீ பண்ணினது தப்பு அரவிந்த்... கிப்ட் கார்டுங்கறது மூணாவது மனுஷனுக்கு தர்றது...அதாவது உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாது உனக்கு பிடிச்சத வாங்கிக்கோனு சொல்றதா அர்த்தம்... ஆனா மனைவிக்கு பிடிச்சது என்னனு கண்டுபிடிச்சு எது அவளை சந்தோசப்படுத்தும்னு மெனக்கெட்டு தேடி வாங்கி, அது மூலமா நீ எனக்கு முக்கியம், நான் உன்னை புரிஞ்சுட்டேன்னு சொல்லாம சொல்ற விதமா ஒரு ரூபாய் கிப்ட்னாலும் அப்படி வாங்கி தர்றதுல இருக்கற சந்தோஷம் நீ தர்ற அஞ்சாயிரத்துல வைஷ்ணவிக்கு எப்படி வரும் சொல்லு? It is the thought you put into it counts not how much it costs, my friend" என குணா கூறவும், நண்பன் கூறிய கருத்தில் இருந்த உண்மை சுட மௌனமானான் அரவிந்த்

திருமணத்தின் பின் அரவிந்தின் முதல் பிறந்த நாளன்று, வைஷ்ணவி அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து கொண்டு, அவன் அம்மாவிடம் கேட்டு அவனுக்கு பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் சமைத்து, அவன் அறியாமல் அவனது நெருங்கிய நண்பர் குடும்பங்களை அழைத்து பார்ட்டி ஏற்பாடு செய்தது நினைவில் வந்தது அவனுக்கு

முதல் திருமண நாளன்று அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் அவன் மிகவும் மதிக்கும் மற்றும் ரசிக்கும் ஒரு மூத்த எழுத்தாளரை சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தாளே

அதுமட்டுமின்றி இந்த இரண்டு வருட திருமண வாழ்வில் சிறு சிறு செய்கையில், அக்கறையில் தன் மேலுள்ள அன்பை அவள் வெளிப்படுத்த என்றுமே தயங்கியதில்லையே என எல்லாமும் இப்போது நினைவில் வந்தது

அதெல்லாம் தனக்கு எத்தனை மகிழ்ச்சியை, நிறைவை  மற்றும் பெருமிதத்தை தந்தது என்பதை அவனால் மறுக்க இயலவில்லை. அந்த சந்தோசத்தை தான் ஏன் அவளுக்கு தர நினைக்கவில்லை

தரக்கூடாதென அவன் நினைத்ததில்லை, ஆனால் அப்படி மெனகெட வேண்டுமென ஏனோ உறைத்ததில்லை. மனைவி என்றால் "என் மனைவி தானே... யாரும் வெளி ஆள் இல்லையே... take it for granted" என பெரும்பான்மை ஆண்கள் போல் தானும் இருந்தது தவறென இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது

யாரோ முகம் தெரியாத வெள்ளைக்கார Clientக்காக English Accent மாற்றி பேச முடியும் போது, வேகாத வெய்யிலிலும் Management மீட்டிங் என கோட் சூட் அணிந்து வருத்தி கொள்ள முடிகிற போது, நமக்கே நமக்காய் வாழும் உறவாய் வாழ்நாள் முழுதும் உடன் வரும் துணையான மனைவிக்காக கொஞ்சம் மெனக்கெட்டால் என்ன குறைந்து போவேன் என தன்னை தானே கேட்டு கொண்டான் அரவிந்த்

அரவிந்த் அமைதியாய் சிந்தனையில் ஆழ்ந்ததை கண்ட குணா,  உணர்ந்து விட்டான் என புரிந்தவனாய் "என்ன அரவிந்த்? என்ன பலமான யோசனை?" என கேலியாய் கேட்க

 எதுவும் பேசாமல் மௌனமாய் சிரித்தான் அரவிந்த்

"சரி...கடைசியா ஒரே ஒரு கேள்வி உன்கிட்ட... கொஞ்ச நேரம் முன்னாடி அந்த கல்யாணமாகாத பசங்கள பாத்து பொறாமைபட்டையே... ஒரு வகைல நீயும் இப்ப பாச்சிலர் தானே...ஐ மீன் வைஷ்ணவி வீட்டுல இல்லாததால... அப்போ 'ஐ தங்கமணி என்ஜாய் ஜனகராஜ் மாதிரி' என்ஜாய் பண்றதை விட்டுட்டு ஏன் டென்ஷன்ஆ இருந்த?" என குணா குறுநகையுடன் வினவ

"அது... அதாண்டா எனக்கும் புரியல...ஹா ஹா" என மனம்விட்டு சிரித்தான் அரவிந்த்

நண்பனின் சிரிப்பில் அவன் மனமாற்றத்தை உணர்ந்து கொண்ட குணா "அது... விசு ஒரு படத்துல சொல்லுவாரே... இந்த பொண்டாடிக கூடவே இருந்தாலும் கஷ்டம்... கொஞ்ச நேரம் கண்ணுல படலைனாலும் கஷ்டம்னு... அதாண்டா அது" என குணா சிரித்தான்

அதை கேட்டதும், அரவிந்துக்கு அப்போதே வைஷ்ணவியை பார்க்க வேண்டும் போல் தோன்றியது

அன்று மாலை அலுவலகம் விட்டு நேரே வைஷ்ணவியின் அம்மா வீட்டுக்கு சென்றான் அரவிந்த்

அவன் சென்றதுமே ஆவலாய் வரவேற்றனர் வீட்டில் எல்லோரும். அவன் கருத்தில் எதுவும் பதியவில்லை. மருமகனின் கண்கள் தேடியதை உணர்ந்த வைஷ்ணவியின் அம்மா "வைஷ்ணவி மாடில இருந்தா மாப்ள... தலைவலின்னு படுத்துட்டா வந்ததும்... கூப்பிடறேன் இருங்க" எனவும்

"இல்லீங்க அத்த... டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்... நான் மேலேயே போய் பாத்துகறேன்" என பதிலுக்கு கூட காத்திராமல் விரைந்து சென்றான்

"வைஷு..." என்ற அழைப்பில் விதிர்த்து எழுந்தவள்

"அரவிந்த்..." எனும் முன்னே அவள் கண்ணில் நீர் துளிர்த்தது

இரண்டு நாள் பிரிவு அவளை இத்தனை பாதித்ததா என குற்ற உணர்வில் "சாரிடி...நான் தான் புரிஞ்சுக்காம..." என முடிக்கும் முன் அவன் தோளில் தலை சாய்த்து விசும்பினாள்

"ஏய்...வைஷு... என்னடா?"

"நேத்தே வருவீங்கன்னு எதிர்பாத்தேன்..." என அவள் தேம்ப

"அது...என் பிரெண்ட் குணா இருக்கானே..." என அரவிந்த்  நடந்ததை முழுதாய்  கூறும் முன்  இடைமறித்த வைஷ்ணவி

"எனக்கு தெரியும்... உங்க பிரெண்ட்ஸ் தான் எதாச்சும் பண்ணி உங்க மனச  கெடுத்து இருப்பாங்க" என கணவனை ஆசையாய் கட்டிகொண்டாள் வைஷ்ணவி. மனைவியின் அணைப்பில் பேச மறந்தவனாய் அவனும் அவளை  அணைத்து கொண்டான்(முற்றும்...)

Tuesday, February 22, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 9)
பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8

"மீரா Monday evening என்ன பிளான்... நாம எங்கயாச்சும் வெளிய போலாமா?" என காதலர் தினத்திற்கான திட்டத்தை செயல்படுத்த முனைந்தான் ஸ்டீவ்

அவளிடமிருந்து அப்படி ஒரு பதில் வருமென தெரிந்திருந்தால் கேட்டே இருக்க மாட்டேன் என அதன் பின் வருந்தினான்

"சாரி ஸ்டீவ்... சதீஷ் கேட்டான்... ஒகேனு சொல்லிட்டேன்" என்றாள் மீரா

மீரா கூறிய பதிலில் நிலை குலைந்தவன், கோபத்தில் அவள் மனம் புண்பட பேசி விடுவோமோ என அஞ்சியவன் போல் மௌனத்தை ஆயுதமாக்கினான் ஸ்டீவ்

"ஒகேனு சொன்னது டின்னர்க்கு மட்டும் தானா இல்லை வாழ்க்கைக்குமா?" என மனதில் தோன்றிய கேள்வியை கேட்க இயலாமல் முகம் இறுக நின்றான் ஸ்டீவ்

அவனின் முக இறுக்கத்திற்கான காரணம் புரியாத மீரா "ஸ்டீவ் என்னாச்சு?" என வினவ, அந்த நேரத்தில் கூட குழப்பத்தில் கோடிட்ட அவள் நெற்றியை, முடிச்சிட்ட புருவங்களை எப்படி தன்னால் ரசிக்க முடிகிறது என தன் மீதே கோபம் கொண்டான் ஸ்டீவ்

ஒருத்தி மீது மனம் பதிந்து விட்டால் அவளின் ஒரு ஒரு செய்கையையும் மனம் ரசிக்கும், அது தன்னை துன்புறுத்தும் செய்கை என்றாலும் கூட என எப்போதோ படித்த ஆங்கில கவிதை ஒன்று நினைவில் வந்து தொலைத்தது அவனுக்கு. அதை படித்த போது, இது என்ன பைத்தியகாரத்தனமான சிந்தாந்தம் என நண்பர்களிடம் வாதாடி இருக்கிறான் ஸ்டீவ்

ஆனால் அந்த நிலை தனக்கே வருமென அவன் நினைத்து கூட பார்த்ததில்லை. இப்போது யோசித்தபோது அதை எழுதியவன் நிச்சியம் அனுபவித்து தான் இதை எழுதி இருக்க வேண்டுமென தோன்றியது ஸ்டீவிர்க்கு

"ஸ்டீவ்...?" என மீராவின் அழைப்பில் சுயநினைவுக்கு வந்தவன், ஒரு முடிவுக்கு வந்தான். எதற்கு தினம் தினம் இந்த கொல்லும் அவஸ்தை, நேரடியாய் அவள் மனதில் உள்ளதை கேட்டு விடுவது தான் சரி என உறுதியாய் நினைத்தான்

அதே உறுதியுடன் "Can you give me a straight answer Meera?" என்றான் பொறுமை இழந்த குரலில்

"என்ன ஸ்டீவ்? கேளு" என்றாள் மீரா, எதுவும் புரியாத குழப்பம் மேலிட

"நீ சதீஷை லவ் பண்றயா?" என உதடு வரை வந்த வார்த்தைகளை வெகு பிரயத்தனப்பட்டு அவசரமாய் நிறுத்தினான் ஸ்டீவ்

"ஒருவேளை அவள் 'ஆமா நான் சதீஷை லவ் பண்றேன்' என்று கூறிவிட்டால் அதன் பின் என்ன இருக்கிறது. எதுவும் முடிவாய் அறியாத வரை மட்டுமேனும் சிறு நம்பிக்கையில் இருக்கலாம்" என மனதில் தோன்றியதும், ஸ்டீவ் அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாதவன் போல் அமைதியானான்

இது வரை தன் வாழ்வில் எந்த ஒரு விசயத்தையும் இப்படி கோழைத்தனமாய் தள்ளி போட்டதில்லை என தோன்றியதும், தன்னை கோழையாக்கிய மீராவின் மீது காதல் உள்ள அளவு கோபமும் தோன்றியது

இதையே வேறு யாரேனும் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவமாய் கூறி இருந்தால், மிக சுலபமாய் "என்ன இது? Too unpractical .... காதலிக்கறயா இல்லையான்னு கேட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தானே. ரெம்ப நாள் காத்திருந்து இல்லேன்னு சொல்லிட்டா அப்ப என்ன பிரயோஜனம்... This is all waste of time" என தானே குதர்க்கமாய் பேசி இருப்பேன் என நினைத்தான் ஸ்டீவ்

ஆனால் தனக்கு என வரும்போது தான், இல்லாத இலக்கணங்களும் நம்பிக்கைகளும் தோன்றி காதல் வேள்வியை முடியும் மட்டும் நீட்டிக்க சொல்கிறது என தோன்றியது ஸ்டீவிர்க்கு

உள்மனதுடன் போராடிய அவன் முகபாவனையில் இருந்து எதையும் உணர முடியாத மீரா "என்ன ஸ்டீவ்? ஏதோ கேக்கணும்னு..." என மீரா தயக்கத்துடன் நிறுத்த

"ஒண்ணுமில்ல... " என்றவனின் முகத்தில் இருந்த கோபமும் பதட்டமும் மீராவிற்கு ஏதோ பிரச்சனையோ என தோன்றியது

"ஸ்டீவ்... ஏன் இப்படி...ஏதோ கோபமா பேசற... எனக்கு ஒண்ணும் புரியல" என புரியாத பார்வை பார்க்க அது இன்னும் அவன் கோபத்தை வளர்த்தது

தன் கண்களில் வழியும் காதலை இவள் உணரவில்லை எனில் இவள் மனதில் தான் இல்லை என்று தானே அர்த்தம் என தோன்றியதும் மிகவும் சோர்வானான் ஸ்டீவ்

ஆனால் அதை அவள் வாய்வழியாய் கேட்க விரும்பாதவன் போல் மௌனமானான். சோர்வும் இயலாமையும் கோபமாய் உருவெடுத்தது

அத்தனை கோபத்திலும் கூட அவள் வருந்தும்படி பேசிவிட கூடாதென மிகவும் கட்டுப்படுத்தி நின்றான்

இன்னும் அவளருகில் நின்றால் தன்னால் இதே போல் பொறுமையாய் இருக்க முடியாது என உணர்ந்தவனாய் "ஒகே...அப்புறம் பாக்கலாம்" என அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்து விரைந்து சென்றான் ஸ்டீவ்

அவன் சென்று சிறிது நேரம் ஆகியும் மீரா குழப்பம் விலகாமல் நின்றாள். அவனின் கோபத்திற்கான காரணம் அறியாமல், அவன் கோபம் தன்னை ஏன் இத்தனை பாதிக்கிறது எனவும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள்

திடீரென சதீஷின் காரணமற்ற கோபமும் நினைவில் வந்தது. சில நாட்களாகவே சதீஷ் மறைமுகமாய் ஸ்டீவ் மீது காட்டும் வெறுப்பை அவள் உணராமல் இல்லை

பள்ளி நாட்கள் முதலே அது அவளுக்கு பழகியது தான். பள்ளி இறுதி வகுப்பில் உடன் பயின்ற மாணவன் ஒருவன் மீராவிடம் உரிமையாய் பேசியதற்கு சதீஷ் அவனை அடித்தது நினைவுக்கு வந்தது

அந்த சம்பவத்தில் மீரா சதீஷிடம் மிகவும் கோபம் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தாள். அப்போது இனிமேல் இது போல் நடந்து கொள்ளமாட்டேன் என பல முறை சதீஷ் மன்னிப்பு கேட்டபின் தான் மீரா அவனிடம் பழையபடி பேசினாள்

ஆனால் புதியதாய் சந்திக்கும் எவரிடமும், மீராவின் மீது அவனுக்கு மட்டுமே உரிமை அதிகம் என தன் செய்கையால் சதீஷ் நிலைநாட்ட தவறியதில்லை. என்ன வெறித்தனமான அன்போ என சில நேரம் சலிப்பு கூட வரும் மீராவிற்கு. ஆனால் சதீஷின் தூய்மையான அன்பில் அந்த சலிப்பும் கோபமும் மறைந்து விடும்

அன்று ஸ்டீவின் வீட்டிற்கு படிக்க சென்ற ஒரு நாளில் தான் எல்லோருக்கும் முன் ஸ்டீவின் வீட்டிற்கு சென்று அவனுடன் அரட்டை அடித்தது தெரிந்தால், தேவையின்றி சதீஷ் ஸ்டீவின் மீது வன்மம் வளர்க்கலாம் என தோன்றியதால் தான், அப்போது தான் அவளும் வந்ததாய் பொய் உரைத்தாள் மீரா

அதை பற்றி ஸ்டீவ் அதன் பின் கேட்டால் எப்படி சமாளிப்பது என கலங்கி கொண்டும் இருந்தாள், நல்லவேளை அவன் எதுவும் கேட்காமல் போக, மறந்து விட்டான் போலும் என நிம்மதியானாள்

ஏனோ ஸ்டீவும் சதீஷும் எதிரிகளாய் நிற்பதை அவளால் கற்பனை கூட செய்ய இயலவில்லை.அதற்கான காரணமும் அவளுக்கு புரியவில்லை

ஆனால் இன்று ஸ்டீவ் தன் மீது கோபம் கொண்டதற்கு என்ன காரணம் என்ற குழப்பம் அவளை தூங்க விடாமல் துரத்தியது. அதே நேரம் ஸ்டீவும் அவளின் நினைவில் உறக்கம் தொலைத்திருந்தான். ஆனால் சதீஷ் நிம்மதியான உறக்கத்தில் இருந்தான்

******************************************

அன்று வேலன்டைன்ஸ் டே. பல்கலைகழக வளாகம் சிகப்பு ரோஜாக்களாலும் சிரிப்பு ததும்பிய முகங்களாலும் நிறைந்து இருந்தது

மேற்கத்திய கலாசாரத்தில் அது காதலர் தினமாய் மட்டும் பார்க்கப்படவில்லை, அன்பை பரிமாறிக்கொள்ளும் தினமாய் தான் பார்க்கப்பட்டது. அதில் காதல் என்ற அன்பும் ஒருவகை மட்டுமே. எனவே காதல் ஜோடிகள் மட்டுமின்றி எல்லோரும் கையில் பூக்களுடனும் பரிசு பொருட்களுடனும் வலம் வந்தனர்

ஸ்டீவ் இந்த வருடத்தின் இந்த நாளை பற்றி நிறைய கற்பனை கொண்டிருந்தான். ஒன்று, இந்த நாளிற்கு முன்பே தன் மனதை மீராவிடம் கூறி ஜோடியாய் இந்த நாளை திட்டமிட்டு கொண்டாடுவது அல்லது இந்த நாளில் நிச்சியமாய் மனம் விட்டு மீராவிடம் பேசுவது என டிசம்பர் விடுமுறையில் ஊரில் இருந்தபோதே ஸ்டீவ் முடிவு செய்திருந்தான்

பல இரவுகள் அந்த கற்பனையில் லயித்தும் இருந்தான். ஆனால் அது எதுவும் நிறைவேறாதது மட்டுமின்றி அடிப்படையே ஆட்டம் கண்டு விடுமோ என அச்சமும் மனதில் தோன்றி அலைகழித்தது

அன்று வேண்டுமென்றே மீராவிடம் மட்டுமின்றி யாரிடமும் பேசுவதை தவிர்த்தான் ஸ்டீவ். வீட்டிலேயே இருந்து விடலாம் என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் அன்று மீராவை பார்க்காமல் இருக்கவும் மனம் ஒப்பவில்லை

"If you live to be a hundred, I want to live to be a hundred minus one day so I never have to live without you" A. A. Milne என்ற கவிஞன் எழுதிய வாசகம் கண் முன் வந்தது. இதை பாடமாய் படித்த பள்ளி பிராயத்தில் சிரிப்பும் விளையாட்டுமாய் இதை விமர்சித்ததும் நினைவில் வந்தது

எந்த நாட்டில் பிறந்தால் என்ன, எந்த மொழியை பேசினால் என்ன, எந்த நூற்றாண்டில் வாழ்ந்தால் தான் என்ன, காதல் என்ற உணர்வு ஆட்கொண்டு விட்டால் கிளியோபேட்ராவின் காதலன் ரோமானிய பேரசர் ஜூலியஸ் சீசரும் ஒன்றே, நம் ஊர் பார்வதியின் காதலன் தேவதாஸும் ஒன்றே

அன்று ஓரிருமுறை மீராவும் மதுவும் ஸ்டீவிடம் பேச முயற்சித்தும் அவன் நழுவினான். ஆனால் அன்று இரவு உணவுக்கு மீராவும் சதீஷும் சென்ற போது அவர்கள் அறியாமல் அவர்களை பின் தொடர்ந்தான்

இது தவறு, சிறிதும் நாகரீகமற்ற செயல் என அறிவு உணர்த்திய போதும், அதை கேட்கும் மனநிலையில் காதல் வயப்பட்ட ஸ்டீவின் மனம் இருக்கவில்லை. எனக்கு உரிமையானவளை பாதுகாக்கவே செல்கிறேன் என உறுத்திய மனதிற்கு சமாதானம் கூறிக்கொண்டான்

*****************************************

வடஇந்திய உணவு வகைகள் மீராவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் Chaats என்றழைக்கப்படும் வகை உணவுகளை விரும்பி உண்பாள்

அவளது விருப்பம் அறிந்த சதீஷ், பிரபலமான வடஇந்திய உணவகமான "Brar's Sweets & Restaurant"க்கு அழைத்து வந்திருந்தான். அங்கு buffet முறை மிகவும் பிரசித்தி பெற்றது. இனிப்புகளுக்கு முக்கியத்துவம் கொண்ட உணவகம் அது. Chaats வகைகளுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டிருக்கும்

அன்று "வேலன்டைன் டே" காரணமாய் சற்று கூட்டமும் கூடவே இருந்தது. எல்லா மேஜையின் மீதும் ஒரு சிறிய கண்ணாடி குவளையில் ஒற்றை சிகப்பு ரோஜா வைக்கப்பட்டு நேர்த்தியாய் அதே வண்ணத்தில் போடப்பட்டிருந்த மேஜை விரிப்புகள் ரசனையை தூண்டின

அறிந்தோ அறியாமலோ மீராவும் அதே சிவப்பு வண்ணத்தில், தங்கநிற  பட்டு நூலால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சல்வாரை அணிந்து இருந்தாள்

அதை கவனித்த சதீஷ் "என்ன மீரா ஒரே மேட்ச் மேட்ச்ஆ இருக்கே?" என கேலியாய் வண்ணத்தை காட்டி சிரிக்க "Seventh Sense Sathish..." என அவனோடு ஒத்து கேலி செய்தாள் அவளும்

சதீஷ் எதிர்பார்த்தது போல் சாட்ஸ் வகை உணவை தான் ரசித்து உண்டாள் மீரா. "நல்ல Chaat சாப்ட்டு எவ்ளோ நாள் ஆச்சு சதீஷ்...தேங்க்ஸ்" என அவள் நன்றியும் கூற அது அவனை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியது

ஆனால் அந்த இருவரின் மகிழ்ச்சி நிறைந்த முகங்கள், உணவகத்துக்கு வெளியே உறையும் பனியில் நின்று அவர்களை பார்த்து கொண்டிருந்த ஸ்டீவை அளவில்லா கோபத்தில் ஆழ்த்தியது

இது தான் சமயமென சதீஷ் பேச்சை துவங்கினான் "மீரா நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கலாமா?" என தயக்கமாய் நிறுத்தினான்

இது போல் சதீஷ் தன்னிடம் தயங்கியது இல்லை என்பதால் அவனை ஆச்சிர்யமாய் பார்த்த மீரா "என்ன?" என்பது போல் கேள்வியாய் நோக்கினாள்

அவளை நேரே பார்க்க இயலாதவன் போல் கண்ணாடி குவளையில் இருந்த ரோஜாவை கையில் எடுத்து ஆராயும் பாவனையுடன் பார்வையை பூவில் பதித்தபடி "அது....நீ யாரையாச்சும் லவ் பண்றயா?" என கேட்டான்

மீரா வியப்பும் சிரிப்புமாய் அவனை பார்த்தாள். அவளிடமிருந்து பதில் வராமல் போக சதிஷின் பார்வையும் இப்போது அவள் முகத்தில் நிலைத்தது

அவளின் முகத்தில் இருந்து எதையும் அறிந்து கொள்ள முடியாமல் "உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்" என உணர்த்துவது போல் தன் கையில் இருந்த ரோஜாவால் மெல்ல அவள் கையில் அடித்தான் சதீஷ்

அந்த காட்சி ஸ்டீவின் முகத்தில் அறைந்தது. அவர்கள் பேசுவது தன் காதில் விழாத போதும், சதீஷின் செய்கை பல விசயங்களை சொல்லாமல் சொல்வது போல் நினைத்தான்

அந்த நிமிடமே உள்ளே சென்று அவர்களை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தால் என்ன என்று கூட தோன்றியது

காதல், ஒருவனை கவிஞனாய் மட்டுமல்ல, சுயநலவாதியாய், சுயம் இழந்தவனாய், ஏன் அடிப்படை சபை நாகரீகம் மீறுபவனாய் கூட மாற்றும் என்பதை அன்று தான் உணர்ந்தான் ஸ்டீவ்

இனி...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்...)

அடுத்த பகுதி படிக்க

Thursday, February 17, 2011

நாலு பேரு நாலு விதமா...(ஹி ஹி ஹி)


தலைப்பை பாத்ததும் "என்னாச்சு அப்பாவி? உன் அலப்பறை தாங்க முடியாம எல்லாரும் கன்னா பின்னான்னு திட்டிட்டாங்களா?"னு சந்தோசமா துக்கம் விசாரிக்கற தோழிகளே, தோழர்களே, ப்ளாக் குல திலகங்களே...

இன்னும் சிலர் "எங்கயோ நல்லா அடி வாங்கி இருக்கா" அப்படின்னு சந்தோசமா நீங்க சிரிக்கறது நல்லாவே கேக்குது... ஆனால்... பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்னு இப்ப இங்க டயலாக் போட்டா எப்படி இருக்கும்...ஹா ஹா ஹா...

அப்படி எல்லாம் ஒண்ணும் யாரும் என்னை திட்டல... ஹி ஹி ஹி

வேற என்ன தான் நடந்ததுன்னு "நாலு பேரு நாலு விதமா... " னு என்னமோ சொல்றன்னு கேக்கறீங்களா... சொல்றேன் சொல்றேன்

நேத்தைக்கு ட்ரெயின் பிளாட்பார்ம்ல ட்ரெயின்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப....

(பின்ன ட்ரெயின் பிளாட்பார்ம்ல ப்ளைட்டுக்கா வெயிட் பண்ணுவாங்க - மைண்ட்வாய்ஸ்)

ஹேய்... மைண்ட்வாய்ஸ்... உஷ்...

என்ன சொல்லிட்டு இருந்தேன்... ஆங்... நேத்தைக்கு ட்ரெயின் பிளாட்பார்ம்ல ட்ரெயின்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப என்னை கடந்து போன சிலரோட பேச்சு என் காதுல விழுந்தது...

(காதே விழுந்துருந்தா புண்ணியமா போய் இருக்கும்... ஹும் - மைண்ட்வாய்ஸ்)

காதுல விழுந்தத கேட்டுட்டு ட்ரெயின்ல ஏறி ஜன்னலோர சீட் பிடிச்சு உக்காந்ததும் அப்படியே ஒரு கற்பனை... இந்த இடத்துல நீங்க மணிரத்னம் சினிமா சீன் போல ஒரு மெல்லிய வெளிச்சம், விதம் விதமான மனிதர்கள்னு கற்பனை பண்ணிக்கலாம்... தப்பில்ல

(இது வேறயா... நல்லவேள, மணிரத்னம் கேக்கற தூரத்துல இல்ல... இல்லேனா கொல கேஸ் ஆகி போயிரும்... - மைண்ட்வாய்ஸ்)

சரி அத உடுங்க... என் மனசுல தோணின கற்பனை என்னன்னா எந்த situation ல என்னை கடந்து போன மக்கள் அந்த டயலாக் பேசி இருப்பாங்கன்னு தான்...

அப்படியே ஒரு ரீல் சுத்துச்சு மனசுல... நான் தான் மனசுல பட்டதெல்லாம் உங்ககிட்ட ஷேர் பண்ணிகரவளாச்சே... அதுக்கு தானே ப்ளாக்... சரி சரி நோ டென்ஷன்...

முதல்ல என் காதுல விழுந்தத சொல்லிடறேன்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் கிளியரா சொல்லிடறேன்... நான் யார் பேசறதையும் ஒட்டு கேக்கல... நான் சிவனேன்னு நின்னுட்டு இருந்தேன்.. அவங்களா போற போக்குல பேசினது என் காதுல விழுந்தது, அப்புறம் என் கற்பனை குதிரை பறந்தது... இதுல என் தப்பு எதுவுமில்ல... சொல்லிட்டேன்... ஆமா...

ஒகே... மேட்டர்க்கு போவோம்

மொதல்ல காதுல விழுந்தது... ஒருத்தர் தனக்கு தானே பேசிகிட்டது, உன்னை மாதிரியானெல்லாம் கேட்டா அப்புறம் என் மைண்ட்வாய்ஸ்கிட்ட புடுச்சு குடுத்துடுவேன்

Actually, அவர் காதுலே எதையோ மாட்டிகிட்டு போன்ல பேசினார்னு அப்புறம் புரிஞ்சது... ஹி ஹி ஹி... போன்ல யார்கிட்டயோ தெலுகுல மாட்லாடிட்டு போனார்

வாட்? நீ எந்த ஊர்ல இருக்கேன்னு டென்ஷன் ஆகாதீங்க? கனடா ஒரு மல்டி-கல்சுரல் பிளேஸ்... எல்லா மக்களும் உண்டு...

"இக்கட்னே, டொரோண்டோலோ மாவாடு சதுவுகுண்டாடு... தரவாத்த...". இவ்ளோ தான் கேட்டது...அதுக்குள்ள அவர் கிராஸ் பண்ணி போய்ட்டார்

"என்னது மாவடுவா... என்ன ஊறுகாய் போட போறியா? என்னது திருவாத்தனா... என்னத்துக்கு திட்டற நீ இப்போ?" அப்படின்னு நீங்க டென்ஷன் ஆகரீங்கன்னா உங்களுக்கு ஜெமினி டிவி பரிச்சயம் இல்லைன்னு அர்த்தம்... உங்களுக்காக இதோ மொழி பெயர்ப்பு

"இங்கதான் டொரோண்டோல எங்க பையன் படிச்சுட்டு இருக்கான்... அப்புறம்.."  இதான் அவர் பேசினது

அவங்க conversation என்னவா இருந்துருக்கும்னு என்னோட கற்பனை: (தெலுகு பாவம் விட்டுடுவோம்... தமிழ்லயே கொல்றேன் ச்சே... சொல்றேன்...)

கிருஷ்ணா: ஹலோ பிரசாத், சௌக்கியமா?

பிரசாத்: சௌக்கியம் கிருஷ்ணா.. .அங்க எப்படி?

கிருஷ்ணா: எல்லாம் சௌக்கியம்... அப்புறம் இந்தியால இருக்கியா இல்ல ப்ராஜெக்ட்ஆ?

பிரசாத்: இந்தியால தான்... இப்ப ப்ராஜெக்ட் ஒண்ணும் பெருசா இல்ல... அப்புறம் பசங்க எங்க படிக்கறாங்க?

கிருஷ்ணா: இங்க தான் டொரோண்டோல எங்க பையன் படிச்சுட்டு இருக்கான்... அப்புறம் பொண்ணு வாட்டர்லூ யூனிவர்சிட்டில"

எப்படி நம்ம கற்பனை? ஹி ஹி ஹி...ஒரு எபக்ட்க்கு நானே பேர் எல்லாம் சேத்துட்டேன்... never mind...:)

அடுத்தது... இது ஒரு தொரசாணி அம்மணி... அதாங்க வெள்ளைகார லேடி... லேடினு சொல்ல முடியாது ஒரு காலேஜ் பொண்ணு போல இருந்தது... புல் மேக்கப், நேரா அழகி போட்டிக்கு போலாம்... கூட ஒரு பையன் அவன்கிட்ட அந்த பொண்ணு கோவமா பேசினது இதான்

"where the hell .....?" இவ்ளோ தான் காதுல விழுந்தது...அம்மணி ஓவர் fast ... அதுக்குள்ள நாலடி தள்ளி போய்டுச்சு... அப்புறம் ஒண்ணும் காதுல விழல...

அந்த அம்மணி "where the hell .....?"னு சொல்றத கேட்டதும் "Here it is ... Toronto" னு சொல்லணும்னு நாக்கு துடிச்சது... கண்ட்ரோல் பண்ணிகிட்டேன்

என்ன இருந்தாலும் "பொறந்த ஊர பழிச்சாலும் பொழைக்க வந்த ஊர பழிக்க கூடாது"னு பழமொழி இருக்கில்ல (இது யாரு சொன்ன பழமொழினு குறுக்கு கேள்வில்லாம் கேக்க கூடாது... அப்பப்ப தோணறத எடுத்து விடறது தான்... இதுக்கெல்லாம் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்ல போடறாப்ல reference லிஸ்ட் போடவா முடியும்... ஹி ஹி...)

சரி... அந்த அம்மணி ஏன் எதுக்கு அப்படி கோபமா பேசி இருக்கும்னு ஒரு கற்பனை


Rose : whats plans for weekend?

Jack : nothing much...you...?

Rose : mmm.... am thinking... shall we meet my parents this weekend?

Jack : aaa... I just remembered something.... actually I got other plans

Rose : you didn't say that when I asked before

Jack : I didn't remember

Rose : I know... you're trying to avoid my family (கோபமுகம்)

Jack : not really hon (சமாதான முயற்சி..)

Rose : then where the hell are you going?

இப்படி தான் இருக்கும்னு தோணுச்சு... சும்மா ஒரு மூவி எபக்ட்க்கு Rose / Jackனு சேத்துட்டேன்... டைடானிக் ரசிகர்கள் என்னை மன்னிப்பீர்களாக... How is my கற்பனை? கா.து எல்லாம் not allowed ...ஒகே? ஒகே...

அவ்ளோ தாங்க முடிஞ்சு போச்சு பதிவு...

நாலு பேரு நாலு விதமானு சொன்னியே ரெண்டு தானே சொன்னே இப்போனு கேக்கறீங்களா... ஹி ஹி ஹி

அது அப்படி டாபிக் நல்லா இருந்தது போட்டுட்டேன்... actually logically physically பூச்சிகொல்லி... ச்சே... ரைமிங் யோசனைல ஏதோ ஒளறிட்டேன் சாரி... நான் சொல்ல வந்தது என்னன்னா... இந்த டாபிக் logically ஒரு வகைல கரெக்ட் தான்

எப்படினா... டயலாக் ரெண்டு தான்னாலும் கிருஷ்ணா / பிரசாத் & Rose / Jack னு நாலு பேரு இருக்காங்களே... சோ நாலு பேரு நாலு விதமா பேசினாங்கங்கறது கரெக்ட் தானே... ஒகே ஒகே... கல்லெல்லாம் வீசறதுகுள்ள மீ எஸ்கேப்...

(மைண்ட்வாய்ஸ் - ஈஸ்வரா.... இவ கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா...  ஒட்டு கேட்டதுகெல்லாம் போஸ்ட் போடறா... நான் மட்டும் கனடா பிரதமரா இருந்தா அப்பாவி தங்கமணிய ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண சொல்லி ஆர்டர் போட்டுடுவேன்... வெளிய போனாதானே கற்பனை குதிரை பறக்குது ஓடுது எல்லாம்... அந்த ஆண்டவன் கூட இவகிட்ட இருந்து நம்மள காப்பாத்த முடியாது போல இருக்கு... ஹும்... )
 
...

Tuesday, February 15, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 8)


பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

அதே நேரம் நிஜமாகவே மீரா ஸ்டீவை நினைத்தாள்....

மது பெற்றோருடன் கலிபோர்னியாவில் அவள் சித்தி வீட்டிற்கு சென்றிருக்க, சதீஷ் மூன்று வார விடுமுறையை போக்க ஒரு கால் சென்டரில் வேலை பெற்றிருக்க, மீரா மற்ற மூவரும் இன்றி நேரத்தை கடத்தும் வழி தெரியாமல் திணறினாள்

சதீஷ் முன்பே கூறியது போல் தானும் அந்த கால் சென்ட்டர் வேலையை எடுத்து இருக்கலாமோ என இப்போது மனதிற்குள் புலம்பினாள். அவளுக்கு அது போன்ற ஒரே மாதிரியான வேலைகளில் விரைவில் சலிப்பு வந்துவிடுமென்பதால் சதீஷ் கேட்ட போது மறுத்து விட்டாள். தனியே நேரத்தை கொல்வது இத்தனை கடினம் என அவள் நினைத்திருக்கவில்லை

தொலைக்காட்சி பார்த்து சலித்து போக, புத்தகம் படித்தும் வெறுத்து போக, யாருக்கேனும் தொலைபேசியில் அழைக்கலாமா என நினைத்தாள். ஸ்டீவை பார்த்து இரண்டு நாட்கள் தான் ஆன போதும் ஏனோ ரெம்பவும் மிஸ் செய்வது போல் உணர்ந்தாள்

அவளுக்கே அது போல் நினைப்பது ஆச்சிர்யமாய் இருந்தது. ஸ்டீவ் குடும்பத்தினருடன் இருப்பான், இந்த நேரத்தில் அழைப்பது நிச்சியம் தொல்லையாகத்தான் தோன்றும், அதே நிலையில் தான் மதுவும் இருப்பாள், என தொலைபேசும் யோசனையை கை விட்டாள்.

வேலையில் இருக்கும் சதீஷை அழைத்து தொந்தரவு செய்யவும் மனமில்லாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள் சற்று நேரம். அந்த நேரம் செல்பேசி அழைக்க சந்தோசமாய் எடுத்தவள் "ஸ்டீவ் காலிங்" என டிஸ்ப்ளே வர இன்னும் உற்சாகமானாள்

"ஹாய் ஸ்டீவ்..." என மீராவின் உற்சாக குரல் கேட்டதும் ஸ்டீவிர்க்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. தன் குரல் கேட்க இத்தனை மகிழ்ச்சியா என மனம் சிறகடித்தது

"ஹேய் மீரா... என்ன இவ்ளோ எக்ஸ்சைட்மென்ட்?" என அவன் சிரிக்க

"செம போர்...யாரும் இல்ல... என்ன செய்யறதுன்னு தெரியாம மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன்... உன் கால் பாத்ததும் ஓவர் எக்ஸ்சைட் ஆய்ட்டேன்" என அவள் கூறவும் சற்று முன் பொங்கிய சந்தோஷம் போன இடம் தெரியவில்லை அவனுக்கு

ஆக, தனக்கான சந்தோஷம் இல்லை அது, நேரம் போக்க தெரியாமல் தவித்தவளுக்கு பேச்சு துணை கிடைத்ததும் வந்த ஒரு சின்ன வெளிப்பாடு தான் என புரியவும் ஸ்டீவ் கோபத்தில் பேச விருப்பமற்றவன் போல் மௌனமானான்

"என்ன ஸ்டீவ்? சைலண்ட் ஆய்ட்ட" எனவும்

செய்யறதெல்லாம் செஞ்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி அழகா கேள்வி கேக்கறதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை என எரிச்சல்பட்டான் ஸ்டீவ்

அவன் மௌனமாகவே இருக்க "ஸ்டீவ்...லைன்ல இருக்கியா?" என்றாள் சந்தேகமாய்

"நான் லைன்ல தான் இருக்கேன்... நீ தான் அப்ப அப்ப லைன் மாறிடரே" என்றான் இரட்டை அர்த்தம் தெனிக்க

"என்ன சொல்ற? ஒண்ணும் புரியல ஸ்டீவ்" என சிரித்தாள்

"புரிஞ்சாதான் பிரச்சினையே இல்லையே" என்றான் மீண்டும் பூடகமாய்

"ஐயோ கடவுளே... யாரும் பேசலைனு போர்னு நெனச்சா...நீ இப்போ புரியாம பேசி போர் அடிக்கற" என சிரித்தாள்

"ஆமா...நான் பேசினா உனக்கு போர் தான்...தனியா போர் அடிச்சுட்டு இரு...பை" என்றான் நிஜமான கோபத்துடன்

"ஏய் ஏய்...ஸ்டீவ்...ப்ளீஸ்... சமயம் பாத்து பழி வாங்காத... ப்ளீஸ்" என்ற கெஞ்சலில் அவன் கோபம் சற்று மட்டுப்பட்டது

"ம்...அவ்ளோ போர் அடிச்சும் கூட எனக்கு போன் பண்ணனும்னு உனக்கு தோணல இல்ல... நானெல்லாம் ஒரு லிஸ்ட்லையே இல்ல போல" என்றவனின் குரலில் கோபம் இன்னும் இருந்தது

"பிராமிசா நெனச்சேன்... பாமிலி கூட இருக்கறப்ப ஏன் தொந்தரவுன்னு தான் கூப்பிடல"

"நல்லாவே சமாளிக்கற மீரா..." என்றவனின் குரலில் இழையோடிய வருத்தம் அவளுக்கும் வருத்தமாய் இருந்தது

"அப்படியெல்லாம் இல்ல ஸ்டீவ்... அது சரி, உங்க வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க இப்போ?" என பேச்சை மாற்றினாள்

"ம்...ஒரு பெரிய கான்பரன்ஸ் ஹால் புல் ஆகற அளவுக்கு ஆள் இருக்கு...." என சிரித்தான்

"ஜாலி இல்ல... எனக்கும் அந்த மாதிரி பெரிய பாமிலி இருக்கணும்னு ஆசை தெரியுமா" எனவும் ஒரு கணம் பேச இயலாமல் நின்றான் ஸ்டீவ்.

இப்போது அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகளை அவனால் பார்க்காமலே உணர முடிந்தது. மெல்லிய ஏக்கத்தில் சுருங்கும் கண்கள், சிறிது குறும்பில் நெளியும் உதடுகள், உணர்வில் ததும்பும் கன்னங்கள் என அவன் கண் முன் விரிந்தது. அவளை பார்க்க வேண்டுமென்ற ஏக்கம் அவனை சூழ்ந்தது

"மீரா... நீ சரினு சொல்லு... இப்பவே நீயும் வந்து join பண்ணிக்கலாம் இங்க" என உட்பொருளுடன் கூறி சிரித்தான்

"ம்... tresspassing கேஸ்ல உள்ள தள்ளிடுவாங்க" என்றாள் சிரிப்போடு

புரிந்து சமாளிப்பாய் பேசுகிறாளா அல்லது புரியாமல் விகல்பமின்றி பேசுகிறாளா என குழம்பினான் ஸ்டீவ். ஏதோ பேசுகிறாளே, அந்த வரை சரி தான் என மகிழ்ந்தான்

"ஸ்டீவ்... நிஜமாவே உன்னை மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்றாள் மீரா திடீரென

"மீரா...?" என்றான் அவள் கூறியது தனக்கு சரியாய் கேட்கவில்லையோ என்ற சந்தேகத்தில்

"எஸ்... ரெண்டு நாள் தானே ஆச்சு பாத்து... But it feels like a long time...." என இன்ப அதிர்ச்சியை கொட்டினாள் ஸ்டீவ் மீது

இதையே அவள் நேரில் கூறி இருந்தால், அப்படியே அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்களில் பார்த்து, காதலை சொல்லி இருப்பேனே என மனதிற்குள் புலம்பினான்

சும்மாவே அவள் நினைவில் காற்றில் கோட்டோவியம் வரைபவன், இப்படி பேசக்கேட்டால் கேட்கவும் வேண்டுமா? தரையில் கால் பாவாத நிலை தான்

"grazie mille ... " என்றான் உணர்ச்சி பெருக்கோடு

"என்னது?" என்றாள் மீரா புரியாமல்

"ஓ...சாரி... thanks a lot னேன்...கொஞ்சம் ஓவர் எக்ஸ்சைட் ஆனா என்னையும் அறியாம தாய் மொழி வந்துடும்... ஐ மீன் இட்டாலியன்... ஹா ஹா" என அவன் சிரிக்க

"ஓ.... இப்படி ஒரு வீக்னஸ் இருக்கா உனக்கு... வேற என்னவெல்லாம் வீக்னஸ் இருக்கு... சீக்ரட் எல்லாம் சொல்லு பாக்கலாம்" என மீரா கேலியாய் கேட்க இது தான் சமயமென தானும் பேச்சை தனக்கு சாதகமாய் திசை திருப்பினான் ஸ்டீவ்

"ம்... உன்னைப்போல அழகான பொண்ணு இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எல்லாத்தையும் ஒளரிடுவேன்... அதுவும் ஒரு வீக்னஸ்" என சிரித்தான்

"ஓஹோ... அப்படி எத்தன பொண்ணுககிட்ட ஒளறி இருக்க" என்றவளின் குரலில் சிறிது பொறாமை கலந்து இருந்ததோ என தோன்றியது ஸ்டீவிர்க்கு. அந்த நினைவே அவனை பறக்க செய்தது

"இப்ப வரைக்கும் நீ மட்டும் தான்" என்றான் காதல் நிறைந்த  வார்த்தைகளாய்

ஆனால் அவளோ "ஐஸ் வெச்சது போதும்... உண்மைய சொல்லு... எவ்ளோ கேர்ள் பிரெண்ட்ஸ் இது வரைக்கும்" வெறும் வம்பு செய்யவும் மட்டுமின்றி, அறிந்து கொள்ளும் ஆவல் அவள் குரலில் தெரித்ததை அவன் கவனிக்க தவறவில்லை

அது புரிந்ததும் புது உற்சாகம் வர "ம்... ஸ்கூல் அண்ட் UG டேஸ்ல சும்மா காபி டேட்ஸ் தான்... சீரியசா யாரும் இல்ல" என்றான் சீண்டலாய்

அதற்கு பதிலாய் "அப்படினா இப்போ  சீரியசா யாரும் இருக்காங்களோ?" என கேட்பாள், அதை வைத்து பேச்சை வளர்க்கலாம் என நினைத்தான் ஸ்டீவ்

அவளோ "ம்... " என மௌனமானாள். அந்த நிமிட மௌனம் கூட அவனுக்கு அழகாகவே தோன்றியது. அந்த மௌனமான நிமிடத்தில் அவள் தன்னை பற்றி தான் யோசிக்கிறாள் என்ற எண்ணமே அந்த நேரத்தை மேலும் அழகாக்கியது

இந்த மௌனத்தை நேரில் காண முடிந்தால் அவள் என்ன நினைக்கிறாள் என ஓரளவேனும் யூகிக்க முடியுமே என மீண்டும் அவள் அருகாமைக்கான காரணம் தேடினான்

"மீரா... என்னை மிஸ் பண்ணினேன்னு நீ சொன்னது நிஜமா.... " என்றான், மீண்டும் அவள் அதை கூறி கேட்க வேண்டுமென்ற ஆசையில்

"நான் ஏன் பொய் சொல்ல போறேன்.. I really missed all three of you Steve" என இயல்பாய் அவள் கூறவும், தன்னை மட்டும் என கூறுவாள் என எதிர்பார்த்து ஏமாந்தவன்... "ச்சே இதற்கு கேட்காமலே இருந்து தொலைத்திருக்கலாம்" என எரிச்சலானான்

அந்த எரிச்சல் எல்லாம் மீண்டும் அவள் குரல் கேட்கும் வரை தான்

அதன் பின் தினமும் இருவரும் இது போல் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசுவது வாடிக்கை ஆனது

அன்றும் அதே போல் மீராவின் செல்போனுக்கு அழைத்தான் ஸ்டீவ். "சொல்லு ஸ்டீவ்...How are you?" என சதீஷ் குரல் கேட்க, கோபத்தில் போனை வைத்து விடலாமா என நினைத்தவன், தன் எண் பார்த்து "How are you?" என கேட்பவனிடம் முகம் திருப்புவது பண்பல்ல என தோன்ற

"Fine Sathish....and you?" என்றான் சம்பிரதாயமாய்

"Fine Fine.... கிறிஸ்துமஸ் எல்லாம் எப்படி போகுது?"

"ம்... Just the same..." பேசவே விருப்பமின்றி பேசினான், மனம் முழுக்க சதீசுக்கு இந்த நேரத்தில் மீராவின் அறையில் என்ன வேலை. அவள் சத்தமே கேட்கவில்லையே. தான் தினமும் இந்த நேரத்தில் போன் செய்வேன் என தெரிந்தும் அதை எடுப்பதை விட என்ன தான் செய்கிறாள் என, கோபம் அவள் மீது தாவியது

"அப்புறம்... மீராகிட்ட எதுனா சொல்லணுமா?" என சதீஷ் கேட்க, "அவகிட்ட சொல்ல எனக்கு தெரியும் நீ நடுவுல தேவை இல்லை" என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கினான் ஸ்டீவ்

"இல்ல... தினமும் இந்த டைம் பேசுவேன்...அதான் சும்மா கூப்டேன்" என வேண்டுமென்றே தனக்கும் மீராவுக்குமான நெருக்கத்தை சொல்ல முனைபவன் போல் கூறினான் ஸ்டீவ்

ஒரு நிமிடம் கனத்த மௌனம் நிலவியது. அவனே பேசட்டும் என ஸ்டீவ் பேசாமல் இருந்தான்

"ம்... நாங்க வெளிய கெளம்பிட்டு இருக்கோம்...மூவி போயிட்டு அப்படியே டின்னர்... மீராவை அப்புறம் பேச சொல்றேன்.. " என வேண்டுமென்றே கூறியது போல் விவரங்களை கூறிய சதீஷ், மீரா குளியல் அறையில் இருந்து வரும் அரவம் கேட்க "ஒகே ஸ்டீவ், டைம் ஆச்சு பை" என அவசரமாய் அழைப்பை துண்டித்தான்

"மீராவை என்கிட்ட பேச சொல்ல இவன் யாரு, ச்சே...எவ்ளோ திமிர் இருந்தா என்கிட்டயே மூவி டின்னர்னு டயலாக் விடுவான்... ச்சே..." என கோபத்தில் செல்போனை படுக்கை மீது வீசினான் ஸ்டீவ்

ஸ்டீவ் - சதீஷ் இருவருக்குள்ளும் ஒரு விதமான பனிப்போர் மூள துவங்கியதை இருவருமே உணர்ந்தனர். அது என்று வெடித்து சிதற போகிறது என்பது மீராவின் கையிலா அல்லது இவர்கள் இருவருள் ஒருவரின் கையிலா என இருவருக்கும் புரியவில்லை. ஆனால் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்ந்தனர்

இது எதையும் அறியாத மீரா உற்சாகமாய் வெளியே செல்ல கிளம்பி கொண்டிருக்க "அந்த ஸ்டீவ் எதுக்கு உனக்கு தினமும் போன் பண்றான்?" என்றான் சதீஷ் எரிச்சலாய்

"ஓ...ஸ்டீவ் போன் வந்ததா...குடு பேசிடறேன்" என்றாள் மீரா ஆர்வமாய்

"தல போற அவசரம் ஒண்ணுமில்ல... நான் கேட்டுட்டேன் அவன்கிட்ட... அவன் ஏன் தினமும் பேசறான்னு கேட்டனே .. பதிலே வர்ல" என்றான் மீண்டும் எரிச்சலாய்

"என்ன சதீஷ் கேள்வி இது...அது சரி, எதுக்கு நீ என் போன் அட்டென்ட் பண்ணின?"

"ஏன்? என்ன தப்பு?" என்றான் கோபமாய்

"ம்...அடுத்தவங்களுக்கு வர்ற போனை அட்டென்ட் பண்றது நல்ல manners இல்லை"

"அடுத்தவங்களுக்கு வர்ற போனை அட்டென்ட் பண்றது தப்பு தான்...ஆன உன் போனை நான் எடுக்கறது எந்த தப்புமில்ல" என சிடுசிடுத்தான்

"Stupid... என்னமோ கெளம்பிடுச்சு" என்றாள் மீரா கேலியாய்

"Thank you " என்றவனின் குரலிலும் சற்று முன் இருந்த சிடுசிடுப்பு மாறி கேலி வந்திருந்தது

************************************

அதன் பின் நாட்கள் வேகமாய் நகர்ந்தது. ஸ்டீவ் விடுமுறை முடிந்து வந்தபின் மீராவிடம் முன்னை விட சற்று நெருங்கியதை போல் உணர்ந்தான்

ஆனால் கிடைத்த சந்தர்பத்தில் எல்லாம் சதீஷ் அந்த நெருக்கத்தை விரும்பாததை மறைமுகமாய் உணர்த்தி கொண்டிருந்தான். ஸ்டீவ் அதை கண்டும் காணாதவன் போல் தன் எண்ணத்தில் குறியாய் இருந்தான்

இனி நாள் கடத்தாமல் தன் மனதில் உள்ளதை மீராவிடம் நேரடியாய் கேட்டு விட வேண்டுமென தீர்மானம் செய்தான் ஸ்டீவ். அதற்கேற்றாற்போல் காதலர் தினம் வந்தது, அதுவே சரியான தருணம் என நினைத்தான் ஸ்டீவ்

மீரா வருவதை தூரத்தில் இருந்தே கண்டுவிட்ட ஸ்டீவ் ஆர்வமாய் அவளை நோக்கி சென்றான்

"ஹாய் மீரா "

"ஹலோ...என்ன பாதி வழில வந்து ரிசீவ் எல்லாம் பண்ற ஸ்டீவ்?" என அவள் கேலியாய் சிரிக்க, அந்த சிரிப்பில் மயங்கி நின்றான் ஒரு நிமிடம்

அந்த கணம் சிரிப்பில் விளைந்த அவள் கன்னக்குழிகளை தொட்டுபார்க்க அவன் கைகள் கெஞ்சியது. சுற்றி உள்ள உலகம் மொத்தமும் மறைந்து அவனும் அவளும் மட்டுமே அங்கு இருப்பது போன்ற ஒரு நிலையை அவனுக்கு ஏற்படுத்தியது அந்த கணம்

இவள் சின்ன சிரிப்பு கூட தன்னை ஏன் இப்படி முடக்குகிறது? இவள் அழகு ஏன் தன்னை செயலற்றவனாக்குகிறது? இவளின் ஒரு ஒரு அசைவும் தன்னுள் ஏற்படுத்தும் பாதிப்பை இவர் உணர்கிறாளா?

அலங்காரமான அழகை அவன் நிறைய பார்த்தவன் தான், அது அவனுள் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. அமைதியான ஆடம்பரமற்ற இவளின் அழகு ஆராதிக்க வேண்டிய ஒன்று என நினைத்தான்

இவள் என்னவள் என்ற நினைவே என்னை மகிழ்ச்சியின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறதே என நினைத்தான்

அவனது நிலைத்த பார்வை குறுகுறுக்க "ஸ்டீவ்...என்ன?" என அவன் தவத்தை கலைத்தாள் மீரா

உணர்வின் தாக்கத்தில் மூழ்கி இருந்தவன், ஒருவாறு சமாளித்து "ம்... அது... மீரா Monday evening என்ன பிளான்... நாம எங்கயாச்சும் வெளிய போலாமா?" என காதலர் தினத்திற்கான திட்டத்தை செயல்படுத்த முனைந்தான் ஸ்டீவ்

அவளிடமிருந்து அப்படி ஒரு பதில் வருமென தெரிந்திருந்தால் கேட்டே இருக்க மாட்டேன் என அதன் பின் வருந்தினான் ஸ்டீவ்

மீரா கூறிய பதிலில் நிலை குலைந்தவன், கோபத்தில் அவள் மனம் புண்பட பேசி விடுவோமோ என அஞ்சியவன் போல் மௌனத்தை ஆயுதமாக்கினான்

இனி ..

பக்கம் வந்தபோது
பதறி விலகிநின்றாய்
விலகி நின்றபோதோ
விரைந்து அருகில்வந்தாய்!!!

உன்மனதில் நானென
உவகையுடன் நின்ற போதில்
அப்படி இல்லையென
ஆயாசமாய் உணரச்செய்தாய்!!!

(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்...)

அடுத்த பகுதி படிக்க

Thursday, February 10, 2011

காதலே... என் காதலே... (காதலர் தின சிறப்பு சிறுகதை...)"ஜனனி... செமையா பசிக்குது... என்ன செஞ்ச?" என்றவாறே வீட்டினுள் நுழைந்தான் கிருஷ்ணா

"இப்பதான் வந்தேன் கிருஷ்ணா... செம டையர்ட்..." என்றாள் ஜனனி

"பசிக்குது... சீக்கரம் எதாச்சும் செய்"

"எனக்கும் தான் பசிக்குது... நீ ஒரு நாள் செஞ்சு குடேன் கிருஷ்ணா... ப்ளீஸ்" என்றாள் சோம்பல் முறித்தவாறே

"ஒரு முடிவோட தான் இருக்கியா?" என்றான் பசியில் விளைந்த கோபத்துடன்

"ஆமா.." என்றாள் அவன் கோபத்தை கண்டுகொள்ளாமல்

"என்ன உன்னை நம்பிட்டு இருக்கேன்னு நெனச்சு strike பண்றயா?"

"இல்லையா? அப்ப நீயே செய்"

"Hei...its not rocket science... you know I can do it" என கேலிப்பார்வை  பார்த்தான்

"Really? Please carry on... I'm not in your way"

"எங்க அக்கா அப்பவே சொன்னா... என்னமோ ப்ளாக்ல கிறுக்கறா நானும் கிறுக்கறேன்ங்கற... இதெல்லாம் கறிக்கு உதவுமாடா கிருஷ்ணானு...நான் தான் கேக்கல... ச்சே" என்றான் சலிப்பாய்

"ஓஹோ... இதெல்லாம் வேறயா? என்ன சொன்ன... கிறுக்கினேனா? அந்த கிறுக்கலுக்கு தானே அன்னிக்கி...சூப்பர், awesome, அண்டாரசம்னு கமெண்ட் போட்ட....அப்ப நல்லா இருந்ததோ?"

"என்ன பண்றது? ஏதோ புதுசா கிறுக்க வந்திருக்கே லூசுன்னு பரிதாபம்... பேருக்கு ரெண்டு கமெண்ட் போட்டேன்... how nice / born genius னு நீ என் ப்ளாக்ல பீட்டர் விடல... எலிசபெத் ராணி பேத்தினு நெனப்பு... பின்னாடி தானே தெரிஞ்சுது பக்கா லோக்கல் பார்ட்டினு"

"தெரிஞ்சதல்ல... அப்ப ஏன் தினமும் சாட், SMS னு உயிர வாங்கின?"

"உன் ப்ளாக்ல போட்ட சமையல் குறிப்பெல்லாம் பாத்து வேற எதுக்கில்லைனாலும் சாப்பாட்டு பிரச்சனை வராதுனு நம்பி ரூட் போட்டேன்... பாச்சிலர் புத்தி... ஆனா அதெல்லாம் சும்மா எங்கயோ சுட்டு போட்ட போஸ்ட்னு இப்பதானே புரியுது"

"வேண்டாம்.. கோபத்த கிளறாத... நான் என்ன உன் சமையல்காரியா?"

"அத உடு... அதெப்படி... மூணு நிமிசத்தில் முப்பது சமையல்னு ஒரு போஸ்ட் போட்டியே... ச்சே... எத்தன பேரு அதை பாத்து உன்னை சமையல் ராணினு ஏமாந்து போய் இருப்பாங்க பாவம்...என் பாடு எனக்கில்ல தெரியும்"

"என்ன ஆச்சு உன் பாடு இப்ப... ஒரு நாள் டையர்ட்னு கொஞ்சம் உக்காந்தா இவ்ளோ பேச்சா...?"

"எல்லாம் என்னை சொல்லணும்... எங்க போச்சு புத்தி... ப்ளாக் படிச்சமா, மொக்க போஸ்ட்னாலும் ஆஹா ஓஹோனு நாலு கமெண்ட் போட்டமா, திருப்பி நாலு கமெண்ட் வாங்கினமானு இல்லாம இப்படியா ஒருத்தன் வாழ்கையவே அடமானம் வெப்பான்....ச்சே..."

"யாரு மொக்க போஸ்ட் போட்டா... தர்மஅடி வாங்கினதுல ஆரம்பிச்சு தர்மபாஸ் ஆன கதை வரைக்கும் மொக்கை போஸ்ட் போட்டது நானா... சாட்சாத் நீ...இந்த கிருஷ்ணா தானே..."

"அதுக்கு ச்சோ ஸ்வீட்... சோன்பப்டி மீட்னு நீ கமென்ட் போடல... இப்ப மொக்கையா? நீ மட்டும் என்ன... பட்டாம்பூச்சி புடிச்சேன் பறக்கவிட்டேன்னு... அதெலாம் ஒரு மேட்டர்னு லூசு மாதிரி எழுதல"

"வேண்டாம் கிருஷ்... டென்ஷன் பண்ணாத"

"ஏய்... எங்க அப்பா அம்மா அழகா கிருஷ்ணானு கடவுள் பேரு வெச்சு இருக்காங்க... ஏண்டி இப்படி கிருஷ்னு சுருக்கி கொல்ற?"

"ஓஹோ... நான் இப்ப கிருஷ்னு கூப்ட்டா கொல்ற மாதிரி இருக்கோ... ஒரு நாள் ஏதோ typo error ல தெரியாம nice post krishனு நான் கமெண்ட் போட்டதுக்கு அடுத்த நாள் நீ என்ன எழுதின?"

"என்ன எழுதினேன்?"

"என்னனு கூட ஞாபகம் இல்லையோ?
கிருஷ் -
அவள் அழைத்தபின் தான் தெரிந்தது
அழகிய பெயர் எனது என
கிருஷ்என அழைத்து
Crush என்மேல்என சொல்லாமல்சொன்னாளோ!!!
னு நீ மொக்கையா கவிதைங்கற பேருல கிறுக்கல"

"ஓ... இப்ப கிறுக்கல்னு தோணுதோ... இவ்ளோ அழகான ஒரு லவ் ப்ரோபோசல் நான் பாத்ததில்லைனு நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நீ சொல்லல..."

"உண்மையா சொன்னேன்னு நெனச்சேன்... இப்பதானே தெரியுது எல்லாம் பொய்னு" என்றாள் சீண்டலாய், அது அவன் கோபத்தை  அத்தனை  தூண்டுமென எதிர்பார்க்கவில்லை

"ஆமாண்டி எல்லாம் பொய் தான்...உன்னை லவ் பண்றேன்னது பொய்... பின்னாடியே சுத்தி சுத்தி வந்தது பொய்... ரசிச்சு ரசிச்சு பேசினது பொய்... அன்பு ஆசை காதல் கண்றாவி எல்லாமே பொய்" என்றான் தன் அன்பை பொய் என அவள் கூறிய கோபத்தில்

"ஓ...எல்லாமே பொய்யா?" என்றாள், அப்படி ஒரு கோபத்தை எதிர்பாராத அதிர்ச்சி அவள் குரலில் தெரிந்தது

ஆனாலும் மனம் இறங்காமல் "ஆமா...பொய் தான்... இப்ப என்ன செய்லாங்கற?"

"அப்ப நாம காதலிச்சது, கல்யாணம் பண்ணிகிட்டது...எல்லாமும் ஒரு மிஸ்டேக்னு சொல்ற... அப்படி தானே?" என்றாள் அந்நியமான குரலில். அது இன்னும் அவன் கோபத்தை தூண்டியது

"Not just a mistake...Himalayan Blunder" என கோபத்தில் வார்த்தைகளை விட்டான். அவளால் அந்த வார்த்தைகளை தாங்க இயலவில்லை

"அப்படினா பிரிஞ்சுடலாம்... மொத்தமா... " என்றாள் சட்டென

சென்ற தலைமுறையில் "பிரிஞ்சுடலாம்" என்ற வார்த்தை Unparlimentary Words என்பார்களே அது போல் இருந்தது. இன்று விளையாட்டுக்காக கூட அதிகம் பயன்பாட்டில் உள்ளது வருத்தமான ஒன்று. சில விளையாட்டுக்கள் விபரீதங்களிலும் முடிவதுண்டே... 

"What do you mean?"என்றான் கிருஷ்ணா அவள் சொன்னது புரியாதவன் போல்

"I mean divorce... தினம் தினம் இப்படி சின்ன சின்ன விசியத்துக்கெல்லாம் சண்டை போடறது விட இது மேல்... என்னமோ நான் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்ட மாதிரி பேச்சு... ச்சே... divorce...thats right...lets go on our seperate paths..." என்றாள்

"Very well said... நம்ம கல்யாணம் ஆகி இந்த ஒரு வருசத்துல.... நீ சொன்ன உருப்படியான ஒரு...." அவள் கண்களில் நீர் படலம் கண்டதும் சட்டென பேச்சை நிறுத்தினான்

ஒரு கணம் யோசனையாய் நோக்கியவன், அதற்கான காரணத்தை உணர்ந்ததும் தன்னையே சபித்து கொண்டான். சரியாய் திருமணமாகி ஒரு வருடமாக போகிறது அவர்களுக்கு இன்னும் நான்கு நாட்களில்

காதலர் தினம் அன்று தான் திருமணம் செய்வோம் என பெற்றோரிடம் பிடிவாதம் செய்து அதே நாளை மணநாளாய் குறித்தனர் கிருஷ்ணாவும் ஜனனியும்.போன வருடம் இந்த நேரம் திருமண நாளை எதிர்நோக்கி ஆர்வமும் காதலுமாய் காத்திருந்த தருணங்கள் இருவர் கண் முன்னும் நிழலாடியது

இந்த நேரத்தில் ஒன்றுமில்லாத சண்டையை இவ்வளவு தூரம் இழுத்து அவள் மனதை புண்படுத்தி விட்டோமே என வருந்தினான் கிருஷ்ணா. சமாதானம் செய்வோம் என்ற எண்ணத்துடன் அவன் "ஜனனி... " எனவும்

"போதும் கிருஷ்ணா... பேசின வரைக்கும் போதும்" என்றவள் கண்களில் திரையிட்ட நீரை அடக்கி, அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டாள்

விளையாட்டாய் ஆரம்பித்த விவாதம் இப்படி ஆகுமென இருவருமே நினைக்கவில்லை

"ச்சே... ஏன் இப்படி ஆகணும்? முதல் anniversary மறக்க முடியாத சர்ப்ரைஸ் குடுத்து அவள சந்தோசப்படுத்தனும்னு எப்படி எல்லாம் நெனச்சேன்... இப்படி ஆய்டுச்சே... எவ்ளோ பீல் பண்ணி இருப்பா... பாவம் என் ஜனனி... மொதல்ல சமாதானம் செய்யணும்...அழுதுட்டு இருப்பாளோ..." என அவன் நினைத்த அதே நேரத்தில்

"ச்சே... நான் தான் அவசரப்பட்டு பொய் அது இதுனு வார்த்தைய விட்டுட்டேன்... ரெம்ப பீல் பண்ணிதான் அவன் அப்படி பேசிட்டான்... போய் சாரி கேக்கணும்" என எழுந்தாள்

ஏதோ தயக்கம் தடுக்க அறைக்கதவில் சாய்ந்து நின்றாள். அதே தயக்கம் தடுக்க அவனும் கதவின் இந்த புறம் சாய்ந்து நின்றான்

அவர்கள் இடையே இருந்தது அந்த கதவு மட்டுமல்ல, தயக்கம், அதன் மற்றொரு பெயர் ஈகோ... எத்தனையோ குடும்பங்களை பிரித்து நிறுத்திய அதே ஈகோ இங்கும் தன் வேலையை காட்ட துவங்கியது

"நான் ஏன் சமாதானம் செய்யணும்...அவ தானே என் காதலை கூட பொய்னு சொன்னா... என்னதான்  சட்டுன்னு divorce னு எப்படி அவ வாய்ல வரலாம்... எவ்ளோ பிளான் வெச்சுருந்தேன் முதல் வெட்டிங் டேக்கு...எல்லாத்தையும் கெடுத்துட்டா ராட்சசி" என திட்டியவன் மற்றொரு அறையில் சென்று லேப்டாப்பில் மூழ்கினான்

"நான் எதுக்கு சாரி சொல்லணும்... எல்லாம் பொய்யாமே... சின்ன பிரச்சனைய பெருசாக்கினது அவன் தானே... எவ்ளோ கனவு கண்டிருப்பேன் முதல் கல்யாண நாளை பத்தி... எல்லாம் கெடுத்துட்டான் ராஸ்கல்" என திட்டியவள் அழுது சோர்ந்து போய் உறங்கினாள்

அடுத்து வந்த இரண்டு நாட்களும் ஒரே வீட்டில் இரு தீவுகளாய் வாழ்ந்தனர் இருவரும்

அன்று பிப்ரவரி 14 - காதலர் தினம் மட்டுமல்ல, அவர்களின் மணநாளும் கூட. கிருஷ்ணா அறையைவிட்டு வெளியே வந்த போதே ஜனனி கிளம்பி விட்டிருந்தாள்

"ஜடம்... சரியான அழுத்தம் பிடிச்சவ..." என திட்டி கொண்டே வேலைக்கு கிளம்பினான். ஆபீஸ் சென்றதும் தன் தமக்கையிடம் இருந்து வந்திருந்த ஈமெயில் பார்த்ததும் என்னமோ போல் ஆனான். அந்த ஈமெயில் ஜனனிக்கும் சேர்த்தே அனுப்பப்பட்டு இருந்தது

"டியர் கிருஷ்ணா / ஜனனி,
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அம்மா அப்பாவுக்கு பின் நான் ரெம்பவும் ரசிச்சு பாக்கற ஜோடி நீங்க தான். சில சமயம் நீங்க ஒருத்தர் மேல ஒருத்தர் காட்டுற அன்பை பாத்து கொஞ்சம் பொறாமை கூட வரும் என்னையும் அறியாம... :). இன்னும் உலகம் மொத்தத்தையும் பொறாமை கொள்ள செய்யும் படி, வாழ்க பல்லாண்டு உங்கள் காதல். மீண்டும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
என்றும் உங்கள் இருவரின் நலம் விரும்பும்,
ப்ரியா அக்கா" 
 
படித்ததும் ஜனனிக்கு கண்களில் நீர் நிறைந்தது. கிருஷ்ணாவிற்கோ அப்போதே ஜனனியை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. போனை கையில் எடுத்தவன் அவள் எண்ணை அழுத்த துவங்கினான். மீண்டும் ஏதோ யோசனையுடன் பாதியில் நிறுத்தினான்
 
இருவருக்கும் பழைய நினைவுகள் போட்டி போட்டுகொண்டு முன்னே வந்து நெஞ்சை அடைப்பது போல் தோன்றியது. இரண்டு வருடம் முன்பு இதே காதலர் தினத்தன்று தான் தன் மனதை ஜனனியிடம் வெளிப்படையாய் தெரிவித்தான் கிருஷ்ணா
 
சில பேச்சுகளின் போதும், தன் பதிவுகளிலும் குறிப்பாய் அவர்களுக்கு மட்டும் புரிந்த சங்கேத பாஷையில் உணர்த்தி இருந்தாலும் அன்று தான் உரிமையாய் அவள் கை பற்றி தன் காதலை கூறினான் கிருஷ்ணா. அதற்கே காத்திருந்தவள் போல் மௌன புன்னகையால் தன் சம்மதம் சொன்னாள் ஜனனி
 
அந்த நாளின் நினைவாய் அதே நாளில் அடுத்த வருடம் தங்கள் திருமணம் இருக்க வேண்டுமென அப்போதே முடிவு செய்தனர். ஒரு வருடம் காதலும் தவிப்புமாய் சுற்றி திரிந்த நினைவுகள் இருவரையும் ஆட்கொண்டது. பிரியா அக்காவின் மடல் இருவரின் மனநிலையையும் மாற்றியது
 
அதே நேரம் ஜனனியின் செல்பேசி அழைக்க, பேசியவள் முகம் மாறினாள்
 
*********************


ஜனனி வீட்டினுள் நுழைய, சமையல் அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. ஒரு கணம் பதறி நின்றாள். இத்தனை விரைவில் கிருஷ்ணா வந்திருக்க வாய்ப்பில்லையே என நினைத்த நொடி....

"ஹாய் ஜானு..." என கிருஷ்ணாவின் குரல் கேட்க, ஒரு கணம் பேச இயலாமல் அவனை பார்த்தாள்

பொதுவாய் ஜனனி என்று தான் அழைப்பான் கிருஷ்ணா, ஜானு என்ற அழைப்புகள் சிறப்பான தருணங்களில் மட்டுமே. கடைசியாய் அவன் எப்போது அப்படி அழைத்தான் என்று கூட நினைவில் இல்லை அவளுக்கு

இருவரும் மகிழ்வாய் அமர்ந்து பேசியும் தான் எத்தனை நாட்கள் ஆனது. இயந்திரகதியான வாழ்வில் எதை எல்லாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என இருவரும் ஒரே போல் நினைத்தனர் அந்த கணம்

மெதுவாய் அவளை நெருங்கி, அவள் கை பற்றி இதழ் பதித்தவன் "Happy Anniversary ஜானும்மா" என்றான் கண் நிறைந்த காதலோடு

ஜனனிக்கு சந்தோசத்தில் மனம் நிறைந்த போதும், அவன் மனம் புண்பட தான் பேசிய குற்ற உணர்வில் "I'm sorry Krishna...நான்..." என்றவளை பேச விடாமல் உதட்டில் விரல் வைத்து "உஷ்..." என்றான்

"No sorries and thanks between us... Did we not agree on that 2 years before the same day my love?" என அவன் கேட்க

"ம்..." என்றவள் பேச இயலாமல் ஒரு கணம் அவனை பார்த்தவள், அப்போது தான் அவனை சரியாய் பார்த்தவளாய் "என்ன இது? கை எல்லாம் என்னமோ..."

"அது என்னமோ இல்லடி... என் காதலிக்காக நான் பண்ண சமையல் கலையின் விளைவு" என அவன் குறும்பாய் பார்க்க

"ஏன் இந்த வேண்டாத வேலை, நல்ல நாளும் அதுவுமா" என அவள் கேலியாய் சிரிக்க

"என்ன நக்கலா? நான் என் பொண்டாட்டிய இம்ப்ரெஸ் பண்ணனும்னு அவ பழைய ப்ளாக் போஸ்ட்ல இருந்த ரெசிபி எல்லாம் தேடி எடுத்து பண்ணிட்டு இருக்கேன் யு நோ...?" என அவன் கண்ணடித்து சிரிக்க, அவள் எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

பேசவேண்டிய அவசியமின்றி, உணர்ச்சிமயமாய் அப்படியே நின்றனர் இருவரும். சற்று நேரத்திற்கு பின் "ஒரு நிமிஷம் ஜனனி" என அவளை விட்டு நகர்ந்து அறைக்குள் சென்று வந்தவன் கையில் ஏதோ மறைத்து வைத்து கொண்டு "என்ன கிப்ட்னு கண்டுபிடி பாக்கலாம்?" என்றான்

"ம்... தெரியல... குடு கிருஷ்ணா ப்ளீஸ்..." என அவன் கையில் இருந்ததை பறித்து கொள்ள முயன்றாள்

"No Way... guess பண்ணினா தான் கிப்ட்..." என அவன் கையை மேலும் மறைத்தான்

"ம்... என்ன....ஹும்... போ... எனக்கு வேண்டாம்...நீயே வெச்சுக்க..." என அவள் விளையாட்டாய் கோபித்துக்கொள்ள

"ஒகே ஒகே... கை நீட்டு" என்றவன் அவள் கையில் அதை வைக்க

"ஓ...வாவ்...ஏய்...கிருஷ்ணா... எப்படி..." என அவள் தடுமாற

"நோ டென்ஷன் செல்லமே... அன்னிக்கி ஷாப்பிங் மால்ல சுத்திட்டு இருந்தப்ப இதை நீ ரெம்ப ஆசையா பாத்தத கவனிச்சேன்... அப்பவே டிசைட் பண்ணிட்டேன்... இந்த டைமண்ட் ட்ராப்ஸ் தான் வெட்டிங் டேக்கு வாங்கணும்னு" என்றவன் "போடு...எப்படி இருக்குனு பாக்கலாம்" என்றான் ஆசையாய்

அவள் போட்டு காட்டவும் "இப்ப தான் இந்த கம்மலுக்கு தனி அழகு வந்திருக்கு நீ போட்டுகிட்டதும்" என ரசனையுடன் கூற

"நானும் உனக்கு ஒரு கிப்ட் கொண்டு வந்து இருக்கேன்...என்னனு சொல்லேன் கிருஷ்..." என கேள்வியாய் பார்க்க

"ம்... கைல ஒண்ணும் பார்சல் காணோம்... So, Bagல தான் இருக்கணும்... இந்த குட்டி ஹான்ட்பாக்ல என்ன இருக்கும்? ம்ம்ம்... . மூவி டிக்கெட்ஸ், எதாச்சும் கிப்ட் கார்டு, இல்லேனா மோதிரம்" அவள் இல்லை என தலை அசைக்கவும்

"ம்... வேற என்ன... எங்காச்சும் ட்ரிப் புக் பண்ணியா...?" என அவன் ஆர்வமாய் கேட்க

"இல்ல..." என மர்ம புன்னகை பூத்தாள்

"ப்ளீஸ்டி நீயே சொல்லேன்...ப்ளீஸ்..." என அவன் கெஞ்ச, மெல்ல அவன் கை பற்றி தன் வயிற்றில் வைத்தவள், மர்ம புன்னகை பூத்தாள்

ஒரு கணம் கேள்வியாய் அவளை பார்த்தவன், சட்டென புரிய "ஏய்... ஜானு... நீ... ஜானு...ஜானு..." என மகிழ்ச்சி கரை புரள அவளை அணைத்து முத்த மழை பொழிந்தான்

அவனால் பேசவும் இயவில்லை. சற்று மனம் சமன்பட்டதும் "எப்படி தெரியும்? செக் பண்ணினயா? என்ன சொன்னாங்க? அதான் கொஞ்ச நாளா டையார்ட் டையார்ட்னு சொல்றயா? அது புரியாம நான்...ச்சே" என அவனது கேள்விகளும், பரபரப்பும், தவிப்பும் அவன் அன்பை பறைசாற்ற, கண் நிறைந்தது ஜனனிக்கு

"ம்... திடீர்னு இன்னிக்கி காலைல தான் டவுட் வந்தது... அதான் நேரமே கெளம்பிட்டேன் செக் அப் போலாம்னு... கொஞ்சம் முன்னாடி தான் லேப்ல இருந்து போன் வந்தது... உடனே கிளம்பி வந்தேன்...கிப்ட் பிடிச்சு இருக்கா கிருஷ்?" என கேட்க

"என்னடி இப்படி கேக்கற... I'm in cloud nine... எப்படி சொல்றதுனே தெரியலடி... பறக்கற மாதிரி இருக்கு...தேங்க்ஸ்டி செல்லம்" எனவும்

"No sorries and thanks between us... Did we not agree on that 2 years before the same day my love?" என வேண்டுமென்றே அவன் கூறியதை இப்போது அவள் திருப்பி கேட்டு சிரிக்க

"உன்னை பேச விடறதே தப்பு..." என அவளை அணைத்து இதழ் பதித்தவன் "ஹாப்பி வேலண்டைன்ஸ் டே மை டியர்" என்றான்

காதல் அவர்களுக்குள் இருந்த ஈகோவை வென்றது... மகிழ்ச்சி திரும்பியது...

நாமும் ஈகோ என்ற மாய வலையை தகர்ப்போம்... வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடுவோம்...

Happy Valentines day to one and all...!!!

நாளும்நம் சண்டையில்
நீயேதான் வெல்கிறாய்
களிப்பில்சிரிக்கும் உன்கண்களை
காணவே வலியதோற்கிறேன்!!!

(முற்றும்...)

Tuesday, February 08, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 7)


பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6

அன்று தேர்வுகள் முடியும் கடைசி நாள். கிறிஸ்துமஸ்க்கு வீடு செல்லும் ஆர்வம் நிறைய பேரின் கண்களில் மின்னியது, தேர்வின் பரபரப்பையும் மீறி. ஆனால் ஸ்டீவ் "போகணுமா" என தவித்தான்

வீட்டில் உள்ளோருக்கு சில பரிசுகள் வாங்க வேண்டி இருந்தது, பெரும்பாலும் முன்பே வாங்கி இருந்தான். சிலது மட்டும் மறுநாள் வாங்கிய பின் ஊருக்கு செல்வதென முடிவு செய்திருந்தான். போவது என முன்பே முடிவு செய்தது தான் என்றாலும் ஏனோ முழுமனதும் அதை ஏற்கவில்லை

போன வருடம் வரை கிறிஸ்துமஸ்க்கு ஊருக்கு செல்லும் நாளுக்கு பல நாள் திட்டம் தீட்டுவான். இந்த முறை மீராவை பிரிந்திருக்க வேண்டிய காரணத்தால் எல்லாமும் இரண்டாம் பட்சமாய் தோன்றியது

மறுநாள் மதுவும் ஸ்டீவும் தான் ஷாப்பிங் சென்றனர். நால்வரும் செல்வதென தான் திட்டம் இருந்தது. அதற்குள் மீராவின் உறவினர் யாரோ டொரோண்டோவில், அவர்கள் இருவரையும் விருந்துக்கு அழைத்ததாய் அவள் தந்தை அங்கு செல்லுமாறு இந்தியாவில் இருந்து போன் செய்தார் என அவர்கள் வர இயலாது என்றனர்

ஸ்டீவிர்க்கு அவர்கள் உண்மையிலேயே உறவினர் வீட்டிற்கு தான் சென்றனரா என சந்தேகம் கூட வந்தது. காதல் வந்தால் இலவச இணைப்பாய் சந்தேகம் வருவது இயல்பு தானே

முன் தினமே மீராவிடமும் சதீஸிடமும் புது வருட வாழ்த்துகளை கூறி விடை பெற்றான் ஸ்டீவ். இந்த பிரிவை எண்ணி தான் தவிப்பது போல் மீராவின் மனத்திலும் ஏதேனும் பாதிப்பு இருக்குமோ என அவள் முகத்தில் இருந்து படிக்க முயன்று தோற்றான். சதீஷ் போலவே அவளும் இயல்பாய் விடை கொடுத்தாள்

ஸ்டீவ் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தை மது கவனிக்க தவறவில்லை. விடுமுறை முடிந்து வந்ததும் அவனிடம் இது பற்றி பேச வேண்டுமென நினைத்து கொண்டாள்

********************************************

ஒட்டாவா (Ottawa) மாநகரை விட்டு சற்று தள்ளி country sideல் இருந்த அந்த பெரிய வீட்டில், நீண்ட நாட்களுக்கு பின் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்த அந்த இனிய மாலை பொழுது, இன்னும் முழுமை பெறாதது போல் எல்லோரும் நொடிக்கொருமுறை வாசலை பார்த்த வண்ணம் இருந்தனர்

அனைவரின் எதிர்பார்ப்பை கண்ட ஸ்டீவின் தந்தை மைகேல் "See....I told you, your son will always be late" என்றார் கோபமாய் தன் மனைவி சிலியாவிடம். அவள் முகம் சட்டென வாடியது

மூன்று பெண் மூன்று ஆண் என ஆறு பிள்ளைகளை பெற்ற சிலியாவிற்கு கடைக்குட்டி ஸ்டீவ் தான் எப்போதும் செல்லம். மற்ற பிள்ளைகள் சமயத்தில் அதை குறை கூறுவதும் உண்டு. ஆனால் ஸ்டீவ் என்றால் அவர்களுக்கும் செல்லம் தான்

வளரும் பருவத்தில் வீட்டில் யார் செய்யும் தவறுகளுக்கும் இளையவனான ஸ்டீவ் மீது பழி போட்டு தந்தையிடம் மாட்டி வைத்தாலும் யாரையும் காட்டி கொடுக்காமல் மௌனமாய் திட்டுகளை வாங்கி நிற்பான். அதற்கே தந்தை அகன்றதும் எல்லாரும் அவனை தூக்கி செல்லம் கொண்டாடுவார்கள்

வளர்ந்த பின்னும் அந்த பாசம் அவர்களுக்குள் அப்படியே தான் இருந்தது. ஆனால், ஐந்தாவது பிள்ளைக்கு  பின் ஐந்து வருடம் கழித்து  எதிர்பாராத  பரிசாய் கிடைத்த ஸ்டீவ், கடவுள் அளிந்த அதிகபட்ச  பரிசாய்  எண்ணினாள்  சிலியா. 

மற்ற  பிள்ளைகள் வளர்ந்து விட்ட காரணத்தால், அவனை விளையாட்டில் சேர்த்து  கொள்ளாமல்  விலக்க, அன்னையே அவன் விளையாட்டு தோழியும் ஆனாள்

அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் வாசலில் ஸ்டீவின் கார் சத்தம் கேட்க "Steve is here" என்றபடி வேகமாய் வெளியே சென்றார் சிலியா, winter coat கூட அணியாமல்

அவன் வீட்டிற்குள் வரும் வரை கூட பொறுமை அற்றவளாய்,  "Steevi ..." என தோளுக்கு மேல்  இரண்டடி வளர்ந்த  பிள்ளையை  எட்டி நெற்றியில்  முத்தமிட்டாள் அன்னை

அன்னை தன் மீது கொண்ட அன்பை உணர்ந்தவனான ஸ்டீவ் "I love you Mamma..." என்றவன், அன்னை குளிரில் நடுங்குவதை உணர்ந்தவனாய் அணைத்து விரைவாய் உள்ளே அழைத்து வந்தான்

அடுத்து ஐந்து நிமிடத்தில் முன் அறையில் அவனை சுற்றி அண்ணன்கள் அக்காக்கள் குடும்பம் சகிதமாய், அவர்களின் வாரிசுகள் என அனைவரும் நிற்க பேச்சும் சிரிப்புமாய் வீட்டிற்கு அப்போது தான் உயிர் வந்தது போல் உணர்ந்தாள் சிலியா

தன் கணவன் அருகில் வந்து அமர்ந்தவள் "Mio figlio" என சிரித்து "My son... " என  இத்தாலியில் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அழுத்தமாய்  தன் மகன் என்றவள் "brings light to this house... brings life to this home..." என பெருமையாய் பார்த்தாள் சிலியா

கடைசி பிள்ளையான ஸ்டீவின் மீது தன் மனைவி கொண்ட கரை கடந்த அன்பை புரிந்த மைகேல் "Yeah, I can see you're 10 years younger than 10 minutes before" என மனைவியின் சந்தோசத்தை ரசித்தவாறே மெல்லிய குரலில் கூறி கேலியாய் சிரித்தார்

பிள்ளைகள் முன் கண்டிப்பான தந்தை பாத்திரத்தை ஏற்று சிடுசிடுவென இருக்கும் மைகேல், சிலியாவின் முன் தானே பிள்ளையாகி போவார். அவரின் பலம் பலவீனம் இரண்டும் சிலியா தான். கணவனின் கேலியை ரசித்த போதும் எதுவும் கூறாமல் மீண்டும் பிள்ளைகள் இருந்த முன் அறைக்கு சென்றாள் சிலியா

மற்ற பிள்ளைகள் விட சிலியா ஸ்டீவிர்க்கு அதிகம் சலுகை கொடுக்கிறாள் என அவனிடம் அதிக கண்டிப்பு காட்டுவார் மைகேல் எப்போதும். அன்னை தந்தை இருவரில் ஒருவரேனும் கண்டிப்பாய் இருக்கவேணுமென அவர் வளர்ந்த தலைமுறையின் கணக்கீடு

சிறு வயதிலேயே இத்தாலியில் இருந்து இந்தியா பின் கனடா என திட்டம் இருந்ததால் பிள்ளைகளிடம் பல மொழிகளை திணித்து குழப்ப வேண்டாமென பொதுவான ஆங்கில மொழியே வீட்டில் அதிகம் பேசப்பட்டது. இத்தாலி மொழியையும் பிள்ளைகள் சிறிது அறிந்தே இருந்தனர்

அதிலும் ஸ்டீவ் தன் அன்னை பேச விரும்புவாள் என நன்றாகவே கற்றுகொண்டான் ஆர்வமுடன். இயல்பிலேயே கற்கும் ஆர்வம் அவனிடம் அதிகம் இருந்ததும் ஒரு காரணம்

உடன் பிறந்தோருடன் அளாவல் முடிந்ததும் உள் அறைக்கு வந்தவன் "Hi dad..." என எதிர் சோபாவில் தன் அன்னையின் அருகில் அமர்ந்தான் ஸ்டீவ்

மகனை இரண்டு மாதங்களுக்கு பின் காணும் மகிழ்ச்சி தெறிந்த போதும் கண்டிப்பான தந்தை பாத்திரம் அதை எப்போதும் போல் வெளிக்காட்டவில்லை "Hi Steve... how are you?"

"Fine dad... And you?"

"Good... does your watch still shows 7pm?" என்றார் அவன் சொன்ன நேரத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டுபவராய்

"It was snowing...and holiday traffic...and..." என்ற ஸ்டீவை இடைமறித்த அவன் தந்தை "A good driver would forecast it all..." எனவும்

"Michael... he's just arrived... you'll have another 3 weeks with him to talk about that...can we have dinner now?" என மகனை காப்பாற்ற வந்தார் சிலியா

"I'm all apetite... " என எழுந்தார். அவரை தொடர்ந்து மற்றவர்களும் உணவு மேஜைக்கு சென்று அமர்ந்தனர்

ஆனால் ஸ்டீவ் அன்னையை தன் தோளில் உரிமையாய் சாய்த்து கொண்டவன் ஒரு ஒரு பதார்த்தமாய் பார்த்து "ஹ்ம்ம்" என முகர்ந்தே பசி தீர்த்து கொள்பவன் போல் "Mozzarella Sticks , Garlic Bread , Caesar Salad , Eggplant Parmigiana , Roasted Red Peppers , Pizzetto,Pasta..... Mom .... even my memory can't take more... smells delicious... home sweet home...I really envy dad...hmm" என்றான்

சிலியா நினைத்தாள், இதுதான் இவனுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் உள்ள வித்தியாசம் என. மற்றவர்களுக்கு இப்படி பேசி பெற்றவளை முகம் மலர செய்யத்தெரியாது. அதற்காய் பாசம் இல்லை என்றில்லை, இப்படி வாய் விட்டு சொல்லும் குணம் வாய்க்கவில்லை

"Thats my boy..." என மகனின் நெற்றியில் இதழ் பதித்தாள் அன்னை

"You mastered the art of flattering mom with words Steevi..." எப்போதும் போல் பேசியே அம்மாவை மயக்கி விடுவான் என கேலி செய்தனர் அவன் அக்காக்கள் மூவரும்

அந்த நிமிடம் "மீராவை என் பேச்சில் மயக்க முடிந்தால் நன்றாய் இருக்குமே" என ஏக்கம் துளிர்த்தது அவன் மனதில். அவளை நேற்று தானே பார்த்தேன, ஆனால் பல நாள் ஆனது போல் அப்போதே பார்க்க வேண்டும் என என்ன ஏக்கம் இது மனதில் என நினைத்தான்

தன்னை சுற்றி தனக்காக இத்தனை உறவுகள் இருந்தும் அவள் நினைவில் தான் திளைத்து நிற்பது அவனுக்கே ஏனோ குற்ற உணர்வை தூண்டியது

அவன் அன்னைக்கு என்றில்லை, எல்லோர்க்கும் பிரியமானவன் தான் அந்த வீட்டில். கடைசி அண்ணனின் ஒரு வயது பிள்ளை கார்லோ தொடங்கி முதல் அக்காவின் பெண் பத்து வயது ரீட்டா வரை குழந்தைகளுக்கு கூட ஸ்டீவ் எப்போதும் "ஸ்வீட் அங்கிள் ஸ்டீவ்" தான். குழந்தைகளுக்கு சமமாய் விளையாடி களிப்புற செய்வான் அவர்களை

மற்ற நேரத்தில் வேலை ஆட்களை சமைக்க அனுமதித்தாலும் இது போன்ற சமயங்களில் தன் மேற்பார்வையில் எல்லாவற்றயும் செய்ய விரும்புவாள் சிலியா. இந்த விசயத்தில் சென்ற தலைமுறை இந்திய அம்மாக்களும் இத்தாலிய அம்மாக்களும் ஒரு போல் தான்

மிகப்பெரிய buffet டேபிளில் வேலை ஆட்களால் பதார்த்தங்கள் எடுத்து வைக்கப்பட்டன. அந்த வீட்டை காணும் யாரும் ஒரு பாதிரியாரின் வீடென கூற இயலாது. பாதிரியாரின் வருமானத்தை மட்டும் நம்பி இருக்கும் குடும்பம் அல்ல அவர்களுடையது

இத்தாலியில் மிகப்பெரிய மர வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரியாய் இருந்தவர் சிலியாவின் தந்தை. அவர்களின் ஓரே மகள் சிலியா. இந்தியாவில் இருந்த போதே அடிக்கடி அங்கு சென்று தங்கி விடுவர்

கனடா வந்ததும் இனி அங்கு தான் இருப்பது என முடிவை மகள் சொன்னதும்  அவர்களும் இத்தாலி வியாபாரத்தை விற்றுவிட்டு இங்கு அதே தொழிலை மகளின் மேற்பார்வையில் நல்ல முறையில் தொடங்கினர்

அது சிலியாவின் திறமையால் அவள் பெற்றோரின் மறைவுக்கு பின்னும் பன்மடங்கு பெருகி சிலியாவின் பிள்ளைகள் ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்று நடத்தி வந்தனர் இப்போது. ஆனாலும் தலைமை பொறுப்பு இன்னும் சிலியாவிடம் தான் இருந்தது

ஆனால் இந்த வியாபார விஷயங்கள் எதிலும் சிலியாவின் கணவர் மைகேல் தன்னை சம்மந்தப்படுத்தி கொள்வதில்லை. தானுண்டு தன் சர்ச் பணிகள் உண்டென இருப்பார். வியாபாரத்தில் கொழிக்கும் அளவுக்கு மீறிய பணம் பிள்ளைகளை வழி தவறி போக செய்திடுமோ என்ற அச்சமும் அவரின் கண்டிப்புக்கு இன்னொரு காரணம்

ஐம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணும் அந்த பிரமாண்ட உணவு மேஜையில் குடும்பம் மொத்தமும் அமர்ந்து பேச்சும் சிரிப்புமாய் ஒரு வழியாய் உணவு முடிந்தது. அதன் பின் சம்பிரதாயமாய் ஹாலிடே வைன் அருந்தினர்

அதன் பின் பேச்சு Urn of Fate பற்றி ஆரம்பித்தது. இத்தாலிய சம்பிரதாயத்தில் Urn of Fate என்றழைக்கப்படுவது ஒரு பெரிய Ornamental Bowl போன்ற ஒன்று. அதில் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரு பரிசு வைக்கப்பட்டு இருக்கும், அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் ட்ரீ அருகில் வைப்பது போல்

சிறுபிள்ளைகள் உறக்கத்திற்கு அழும் நேரம் வரை நீண்டது பேச்சும் சிரிப்பும். அதன் பின் ஒவ்வொருவராய் உறங்க செல்ல, மீராவிற்கு அழைக்கலாமா என நினைத்தான் ஸ்டீவ். மணி பன்னிரண்டை நெருங்கி இருக்க, வேண்டாமென முடிவு செய்தவனாய் உறங்க சென்றான்

**************************************

அவர்கள் வீட்டின் பின் பக்கம் உள்ள இடத்தில் ஒரு சிறிய valley போன்ற செயற்கை அமைப்பில் ஐஸ் ஸ்கேடிங் செய்ய ஏதுவாய் இவர்களுக்கென அமைக்கப்பட்டு இருந்தது

மறுநாள் ஸ்டீவ் விழிக்கும் போதே அங்கு பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடும் குதூகல கூச்சல் கேட்டது. அதிலும் தன் மூத்த அண்ணனின் குரலே சத்தமாய் கேட்டது. "எப்போதும் போல்" என நினைத்து சிரித்தான் ஸ்டீவ்

தானும் தன் ஸ்கேடிங் உபகரணங்களை தேடி எடுத்து கொண்டு விரைந்தான் ஸ்டீவ். பிள்ளைகளுக்கு சரியாய், சற்று விளையாடி ஒய்ந்ததும் அங்கிருந்த திட்டில் அமர்ந்து குடும்பத்தின் மற்றவர்களின் கலாட்டாக்களை வேடிக்கை பார்த்தான்

நம் குடும்பத்தை மீரா எப்படி எடுத்து கொள்வாள் என அவன் எண்ணம் அவளிடம் சென்றது. ஒரு முறை பேச்சு வாக்கில் தனக்கு ஐந்து உடன் பிறந்தவர்கள் என ஸ்டீவ் கூற ஆச்சிர்யமாய் பார்த்தாள் மீரா

"ஜாலியா இருக்குமில்ல ஸ்டீவ்... ஒரே சண்டை கலாட்டா....ச்சே... I never had it...I'm a single child" என அவள் ஏக்க பார்வை பார்த்தது இப்போது கண் முன் தோன்றியது

அப்போதே வாய் வரை வந்தது வார்த்தைகள் "வா, அந்த சண்டையில் கலாட்டாவில் உன்னையும் ஒருத்தியாய் ஏற்று கொள்ள தவிக்கிறேன்" என, ஆனால் அவளை பார்த்தால் தான் வார்த்தைகள் காணாமல் போகின்றனவே என நினைப்பில் முறுவலித்தான்

"Who is that girl?" என அருகில் குரல் கேட்க "What?" என விதிர்த்து நிமிர்ந்தான் ஸ்டீவ்

"Tell me who is that girl? It will be our little secret for now..." என்றாள் ஸ்டீவின் முதல் அக்கா ஒலிவியா, தம்பியின் தோளில் கை போட்டு சிரித்தவாறே அவன் அருகில் அமர்ந்தாள்

"Who? What?" என புரியாமல் கேட்டான் ஸ்டீவ், தன் அம்மாவிடம் கூட இன்னும் கூறவில்லையே என நினைத்தவனாய்

"Steevi kiddo...its written all over your face that you're in love... I've found out last night itself at the dinner table...tell me who is she?" என ஒலிவியா தீர்மானம் செய்தவள் போல் கேட்க

"ச்சே...இப்படி முகத்தில் தெரியும் படியா உணர்ச்சியை காட்டினேன் நான்" என சமாளிக்க வழி தெரியாமல் திகைத்தான். ஒலிவியா ஸ்டீவை விட பன்னிரண்டு வயது மூத்தவள்

சிறுபிள்ளையாய் அவனை அதிகம் சீராட்டியவள் என்பதால் ஸ்டீவின் அசைவுகளை சுலபமாய் கண்டுபிடித்து விடுவாள். இப்போது அவன் திகைப்பையும் கண்டு கொண்டாள்

"Okay...you're not going to tell me now...so when would we know? is she one of your girlfriends from past?" என கேட்க, இல்லை என சொல்ல துடித்த நாவை கட்டுப்படுத்தியவன்

"Sis...nothing like that...give me a break..." என சிரித்தான், பார்வை தன் பொய்யை காட்டிகொடுத்து  விடுமோ என வேற எங்கோ பார்த்தபடி

"Okay then...Fish must make its way to market one day... I'll know it without sniffing then...." என அவள் சிரிக்க, அதற்கு மேலும் எதுவும் கூறாமல் இருக்க மனம் இல்லாதவனாய்

"Livvy..." என தயங்கியவன் (Oliviaவை Liv அல்லது Livvy என்று தான் சுருக்கி அழைப்பது வழக்கம் அவனுக்கு) "even she doesn't know yet" என்றான்

"What?" என திகைத்தாள் லிவ்வி "Steve...I can see you drowning in her memories even if you've a minute alone... how can you not tell her yet?" என்றாள்

"I will...I will...soon..." என்றான் தானும் தீர்மானம் செய்தவன் போல், அவன் முக வாட்டத்தை கண்ட லிவ்வி

"Will she be thinking about you now?" என வேண்டுமென்றே பேச்சை மாற்றினாள்

அவள் எதிர்பார்த்தது போலவே "I hope so..."என சிரித்தான் ஸ்டீவ்

அதே நேரம், Torontoவில் தன் அறையில் இருந்த மீரா, ஸ்டீவை தான் நினைத்து கொண்டிருந்தாள்....

இனி...
 
ஊரும்உறவும் உன்நினைவை
ஊமைக்காயமாய் மாற்றுமென
உனைவிட்டு விலகினேனடி
ஊடுபாவாய் அங்கும்நுழைவதேனோ!!!

முகத்தின் உணர்ச்சிகளை
மூத்தவள்கூட கண்டுகொண்டாள்
அறியவேண்டிய நீயோ
அந்நியபார்வையில் கொல்கிறாய்!!!

அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்...)

Friday, February 04, 2011

பிரசவ வைராக்கியம்...(சிறுகதை)
குறிப்பு:
இந்த கதை திண்ணை இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டது. உங்களிடம் இங்கு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. திண்ணையில் பார்த்து வாழ்த்து சொன்ன நட்புகளுக்கு மிக்க நன்றி...
 
"ஐ டாடி டாடி...டாடி வந்தாச்சு" என ஓடி வந்த செல்ல மகளை அள்ளி அணைத்தான் சிவா

"நேஹா குட்டி என்ன பண்ணின இன்னிக்கி?"

"ஒரே போர் டாடி... மம்மி நைநைனு ஒரே திட்டு" என மழலை குரலில் கொஞ்சலாய் கூற அதை அவன் ரசித்து சிரிக்க

"ஆமாண்டி மூணு வயசு கூட ஆகல... உனக்கு கூட என்னை பாத்தா அப்படித்தான் இளக்காரமா இருக்கும்... வீட்டுல பெரியவங்க எனக்கு மரியாதை குடுத்தாதானே கொழந்தைக்கு அந்த எண்ணம் வரும்" என எங்கோ பார்த்தபடி கோபமாய் கூறினாள் சோபாவில் அமர்ந்து இருந்த சிவாவின் மனைவி வித்யா

"என்ன வித்தி... கொழந்த சொன்னதுக்கு இப்படி கோவிச்சுக்கற" என சிரித்தவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள் வித்யா

அவளின் கோபத்திற்கான காரணம் என்னவென அறிந்தபடியால் மௌனமாய் சிரித்தான் சிவா

"டாடி... இன்னிக்கி பார்க் போலாமா...ப்ளீஸ்?" என நேஹா கெஞ்சலாய் கேட்க

"சரிடா செல்லம்... டாடி பிரெஷ் ஆய்ட்டு வர்றேன் அப்புறம் போலாம்... அதுவரைக்கும் குட்டி செல்லம் மம்மிய தொந்தரவு பண்ணாம வெளையாடணும் சரியா?"

"ஒகே டாடி" என சிவாவின் பிடியில் இருந்து இறங்கி வேகமாய் ஓடினாள் தன் பக்கத்துக்கு வீட்டு தோழிகளுடன் விளையாட

"ஏய் மெல்ல மெல்ல..." என்றான் சிவா பதறி

********************************************************************

உடை மாற்றி சமயலறைக்கு சென்றவன் வித்யா அடுப்படியில் நிற்க, பக்கவாட்டில் தெரிந்த அவள் முகத்தில் கோபம் சற்றும் குறையாமல் இருந்ததை உணர்ந்தான்

அவன் அங்கு நிற்பது தெரிந்தும் தெரியாதவள் போல் ஏதோ வேலை செய்யும் பாவனையில் இருந்தாள் வித்யா

சிவாவே மௌனத்தை உடைத்தான் "வித்தி... ஒரு காபி கெடைக்குமா?"

அவன் குரலில் இருந்த சோர்வு அவளை இளக செய்திருக்க வேண்டும்

எதுவும் பேசாமல் காபி டம்ளரை சமையல் அறையில் ஒரு புறம் போட்டிருந்த டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு விலகினாள்

விலகியவளை விடாமல் மென்மையாய் கரம் பற்றினான் சிவா. கோபமாய் அவனிடம் இருந்து கையை விடுவித்து கொண்டு நகர்ந்தாள்

இப்போது சமாதானம் செய்ய முயன்றால் மீண்டும் அதே பிரச்னையில் வந்து நிற்பாள் என புரிய எதுவும் பேசாமல் மௌனமாய் காபி அருந்தினான்

அதே நேரம் உள்ளே வந்த நேஹா "டாடி... இப்போ பார்க் போலாமா?" எனவும் மம்மிகிட்ட கேளு என்பது போல் ஜாடை காட்டினான் குழந்தையிடம் வித்யா அறியாமல்

"மம்மி... நீயும் வர்றியா பார்க் போலாம்"

"ஒண்ணும் தேவையில்ல... அப்பாவும் மகளும் தானே ஒரு கட்சி... நான் எதுக்கு நடுவுல வேண்டாதவ... " என வித்யா முகம் திருப்ப சிவா எதுவும் பேசாமல் நேஹவை அழைத்து கொண்டு வெளியேறினான்

********************************************************************

மௌனப்போராட்டம் இப்படியே மேலும் இரண்டு நாள் தொடர்ந்தது

கடந்த ஒரு வாரமாய் படுக்கை அறைக்குள் நுழைந்ததுமே முதுகு காட்டி படுப்பவள் இன்று கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்க விவாதம் செய்ய தயாராய் இருக்கிறாள் என புரிந்து கொண்டான் மனைவியை நன்கு அறிந்த சிவா

வேண்டுமென்றே படுத்து உறங்க முயற்சிப்பவன் போல் கண்ணை மூட, அவன் எதிர்பார்த்தது போலவே ஆரம்பித்தாள் வித்யா

"பேசாம இருந்தா அப்படியே கெடக்கட்டும் என்ன நஷ்டம்னு விட்டுடுவீங்க இல்ல" என கோபமாய் கையில் இருந்த புத்தகத்தை தூக்கி கீழே போட்டாள்

இதற்கு மேல் பேசாமல் இருந்தால் பூகம்பம் வெடிக்கும் என்பதை உணர்ந்த சிவா எழுந்து அமர்ந்தான்

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான், அவள் கோபமாய் முகத்தை திருப்ப மெல்ல அவள் கரங்களை பற்றியவன்

"நான் வந்து பேசினாலும் நீ பேசல... நான் என்ன செய்யட்டும்"

"அப்போ... நான் பேசாம போனா தொலையட்டும்னு விட்டுடுவீங்க அப்படிதானே"

"நான் எப்பம்மா அப்படி சொன்னேன்"

"சொன்னா தானா... அதான் செயல்ல காட்றீங்களே..."

"வித்துமா... இங்க பாரு... நீயே சமாதானம் ஆகட்டும்னு தான் அதிகம் பேசல... பேசினா இப்படி டென்ஷன் ஆவேன்னு தான்..." என அவன் முடிக்கும் முன்

"ஒகே... அப்போ இப்படியோ இருந்துகோங்க... எப்பவும்" என கையை உதறி விட்டு படுத்து கொண்டாள்

"வித்து ப்ளீஸ்... இங்க பாரு"

"ஒண்ணும் வேண்டாம்"

"பாத்தியா.. இதான் கெஞ்சினா மிஞ்சறது..." என சிவா குரலில் கோபம் காட்ட விசும்பினாள் வித்யா

அதற்கு மேல் தாங்கமாட்டாமல் அவளை அணைத்து கொண்டான். அவளும் பேசாமல் அப்படியே இருந்தாள்

"குட்டிமா... நான் தான் அன்னைக்கே இந்த பேச்சை எடுக்க வேண்டாம், என் முடிவுல மாற்றம் இல்லைன்னு சொன்னேன்ல... மறுபடியும் நீ தான் பிரச்சன பண்ணி டென்ஷன் ஆகற"

"நான் என்ன பிரச்சன பண்ணினேன்... இந்த முடிவுல எனக்கு விருப்பம் இல்ல... அதை சொல்ல எனக்கு உரிமை இல்லையா?"

"அப்படி இல்லடா... ப்ளீஸ்... சொன்னா புரிஞ்சுக்கோ"

"சொன்னா புரிஞ்சுக்கறேன்... எதுவும் சொல்லாம சும்மா வேண்டாம் வேண்டாம்னா நான் ஒத்துக்க மாட்டேன்"

"அதான் சொன்னேனே... நேஹா மட்டும் நமக்கு போதும் வித்யா... நம்ம மொத்த அன்பையும் அவளுக்கு மட்டும் குடுக்கணும். அதை பங்கு போட்டுக்க இன்னொரு குழந்தை வர்ரதுல எனக்கு உடன்பாடு இல்ல... அவ ஏங்கிடுவா"

"இது சுத்த பைத்தியக்காரத்தனம்... "

"நோ... ஐ அம் ப்ராக்டிகல்"

"அதெல்லாம் எனக்கு தெரியாது... நேஹா என்னை போல கூட பிறந்தவங்க இல்லாம ஒரு பிள்ளையா நிக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல"

"உன்னோட விருப்பத்துக்காக நேஹா வேதனைபட்ரதுக்கு அனுமதிக்க முடியாது" என அழுத்தமாய் அது தான் முடிவு என்பது போல் கூறினான்

"ஏன் இப்படி பிடிவாதம் பண்றீங்க... வீட்டுல ஒரே பொண்ணா மத்த வீட்டுல கூட பிறந்தவங்க கும்பலா சந்தோசமா இருக்கறதை நான் ஏக்கமா பாத்திருக்கேன்... இப்ப கூட நாம உங்க அம்மா அப்பாவை பாக்க ஊருக்கு போறப்ப உங்க அக்கா தங்கை அண்ணா கூட நீங்க கலாட்டா பண்றதையும் பாசமா நெகிழ்றதையும் ஏக்கமா பாக்கறவ நான்... அது உங்களுக்கே தெரியும்... அப்ப கல்யாணமான புதுசுல என்னோட ஏக்கத்தை பாத்துட்டு நீங்க என்ன சொன்னீங்க, உன் விருப்பபடி வீடு நெறைய பிள்ளைகள பெத்துக்கலாம்னு நீங்க சொன்னீங்களா இல்லையா?" என குற்றம் சாட்டுவது போல் வித்யா கேட்க பதில் பேசாமல் மௌனமானான் சிவா

"இப்படி எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்"

"இங்க பாரு வித்யா... ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் எனிதிங்... நேஹா போதும் நமக்கு" என்றான் தீர்மானமாய்

"முடியாது முடியாது முடியாது" என வித்யா கோபமாய் கத்த

"ஜஸ்ட் ஸ்டாப் இட் ஐ சே... " என அவளை பிடித்து உலுக்கினான் சிவா

"எனக்கு தெரியும் என்ன காரணம்னு...காசு செலவாய்டும்னு தானே... நான் வேணும்னா கொழந்த பொறந்த மூணாவது மாசமே வேலை தேடறேன்... கொழந்தைக்கு ஆகற செலவை நானே பாத்துக்கறேன்" எனவும்

"பைத்தியம் மாதிரி ஒளராத... நேஹா பொறக்கறதுக்கு முந்தியே உன்னை கம்பல் பண்ணி வேலைய விட சொன்னவன் நான்... எப்பவும் நான் காச பெருசா நெனச்சதில்ல... இன்னும் பத்து பிள்ளைகள நீ பெத்துகிட்டாலும் என்னால காப்பாத்த முடியும்"

"அப்ப வேற என்ன? ஓ... என் அழகு போயிடும்னா?" என வேண்டுமென்றே அவனை சீண்ட

"ஸ்டாப் யுவர் நான்சன்ஸ்... நீ இன்னொரு வாட்டி வலி படறத பாக்கற சக்தி எனக்கில்லடி... அதான் காரணம், போதுமா?" என்றவன் அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காதவன் போல் எழுந்து பால்கனியில் சென்று அமர்ந்தான்

அவனிடமிருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பாராத வித்யா அதிலிருந்து வெளியேவர சற்று நேரமானது

********************************************************************

பால்கனி ஊஞ்சலில் அவனருகே சென்று அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

அவன் கோபத்தை உணர்த்துவது போல் அவனுடைய சூடான மூச்சுக்காற்று நெற்றியில் பட "சாரி" என்றாள்

அவன் எதுவும் பேசவில்லை

"நீங்க சும்மா பிடிவாதம் பண்றீங்கன்னு தான் உங்கள ஒத்துக்க வெக்கறதுக்காக வேணும்னே காசுக்காக சொல்றீங்க, அழகு போய்டும்னு சொல்றீங்கன்னு வம்பு பண்ணினேன்... சாரி"

இப்போதும் அவன் எதுவும் பேசவில்லை

"காசும் அழகும் உங்களுக்கு பெருசில்லைன்னு எனக்கும் தெரியும்பா... ஆனா இப்படி ஒரு காரணம் எதிர்பாக்கல, சாரி... இன்னும் கோபமா?" என அவன் முகத்தை தன்புறம் திருப்பினாள்

பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அவன் கண்கள் கலங்கி இருந்தது தெரிய பதறினாள்

"என்னப்பா... என்னாச்சு... சாரி... நான்... " என விசும்ப அதற்கு மேல் தாங்காமல் அவளை சேர்த்து அணைத்தான்

சற்று நேரம் அப்படியே இருந்த வித்யா "நான் சொல்றத கோபபடாம கேப்பீங்களா?" எனவும்

"இன்னொரு கொழந்தைங்கறதை தவிர வேற என்ன சொன்னாலும் கேக்கறேன்" என்றான் சிவா

"ப்ளீஸ்பா... "

"வித்தி... ஏன் என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்கற"

"இல்லங்க..."

"ப்ளீஸ்... இன்னும் என்னால மறக்க முடியல... நீ வலில துடிச்சத கதறினத... ஐயோ... வேண்டாம்... போதும்... அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன் நமக்கு நேஹா மட்டும் போதும்னு" என அந்த நாள் நினைவில் அவன் உடல் நடுங்க

"நான்னா அவ்ளோ உயிரா சிவா?" என காதலுடன் வித்யா கேட்க

"அத நான் சொல்லித்தான் உனக்கு தெரியணுமா?" என கண் பனித்தான் சிவா

"என்னை விட அதிஷ்டசாலி யாருமில்ல சிவா... ஆனா... "

"ப்ளீஸ்...வேண்டாம் வித்தி... உன்ன கெஞ்சி கேக்கறேன்"

"ப்ளீஸ்பா நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க... என்னோட ஒரு நாள் வேதனைக்காக நம்ம நேஹா காலம் பூரா ஏக்கபடணுமா? நமக்கு பின்னாடி அவளுக்கு பிறந்து வீட்டு உறவுன்னு கூட பிறந்தவங்க வேணுங்க... ஆயிரம் பேரு இருந்தாலும் ஒரு கஷ்டம்னு வர்றப்ப உடன் பிறப்புகளோட தோள் பெரிய ஆதரவுப்பா... "

"நீ சொல்றதெல்லாம் சரின்னு எனக்கும் புரியுது வித்யா... எனக்கு கொழந்தை வேண்டாம்னு இல்லம்மா... ஆனா...."

"கொஞ்சம் யோசிச்சு பாருங்க... என்னோட ஒரு நாள் வலி பத்தி யோசிச்சு நேஹா வேண்டாம்னு இருந்திருந்தா நேஹா இல்லாத ஒரு வாழ்கைய உங்களால நெனைக்க முடியுதா" என கேட்க இல்லை என தலை அசைத்தான்

"அதே போல தான்... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்"  என வெகு நேர கெஞ்சலுக்கு பின்

"சரி... " என்றான் அப்போதும் அரைமனதாய்

"தேங்க்ஸ் தேங்க்ஸ்... தேங்க்ஸ் அ மில்லியன்" என கணவனை கட்டிக்கொண்ட வித்யா சத்தமாய் சிரித்தாள்

அவள் சிரிப்பு சிவாவை மகிழ்வித்தபோதும் வேண்டுமென்றே கோபம் போல் "இப்ப என்ன சிரிப்பு என்னை ஜெய்ச்சுட்டேனா?" என கேட்க

"ம்...இல்லப்பா... எங்க பாட்டி சொல்லுவாங்க... அந்த காலத்துல நெறைய கொழந்தைங்க பெத்துபாங்க தானே... ஆனா ஒரு ஒரு பிரசவத்தப்பவும் வலி படறப்ப பொண்ணுங்க இது தான் கடைசி இனி இல்லைன்னு வைராக்யமா சொல்லுவாங்களாம்... ஆனா அடுத்த வருசமே வயத்த தள்ளிட்டு பிரசவத்துக்கு  நிப்பாங்களாம்... அதை பிரசவ வைராக்கியம்னு அந்த காலத்துல கிண்டல் பண்ணுவாங்களாம்" என சிரிக்க

"இப்ப எங்க இது வந்தது" என ஆசையாய் மனைவியின் முன் நெற்றியில்  இதழ் பதித்தவாறே கேட்டான் சிவா

"ம்... அந்த காலத்துல மனைவிக்கு வந்த பிரசவ வைராக்கியம் இப்ப என் கணவனுக்கு வந்ததை நெனச்சு சிரிச்சேன்" என அவள் மீண்டும் சிரிக்க

"என்னை கிண்டலா பண்ற... உன்ன... என்ன பண்றேன் பார்... " என குழந்தையை தூக்குவது போல் அவளை தூக்கி கீழே போடுவது போல் பாவனை செய்ய அவனை இறுக பிடித்து கொண்டே சிரித்தாள் வித்யா

அவர்களின் அன்பை கண்டு வெட்கிய முழு நிலவு அந்த கணத்தை பதிவு செய்து மேகத்துள் மறைந்தது

(முற்றும்)
 ...

Wednesday, February 02, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 6)பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4    பகுதி 5

மீரா அங்கு இருப்பதை கண்ட சதீஷ் "ஹேய் மீரா... நீ எப்ப வந்த?" என கேட்க

"அ... இப்ப தான்... பத்து நிமிசமாச்சு" என தடுமாறிய குரலில் மீரா கூற, ஏன் பொய் சொல்கிறாள் என புரியாமல் ஸ்டீவ் அவளையே பார்த்தான்

வேண்டுமென்றே அவனை பார்ப்பதை தவிர்த்தாள் மீரா

தன்னுடன் இருந்த நேரத்தை அந்தரங்கமாய் நினைப்பதால் தானே அப்படி செய்தாள் என தோன்றவும் ஸ்டீவிர்க்கு அவள் சொன்ன பொய் சந்தோசத்தை கொடுத்தது

அந்த எண்ணம் வந்ததும் அவளை விட்டு பார்வையை விலக்குவது அவனுக்கு தண்டனை போல் தோன்றியது. ஆனாலும் மது கண்டுகொள்வாளோ என யோசனையுடன் பார்வையை விலக்கினான்

மௌனனத்தை கலைப்பது போல் "என்ன நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்துருக்கீங்க?" என மீரா மதுவை கேள்வியாய் நோக்கினாள்

பதில் சொல்லாமல் மதுவும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க "என்ன ரகசியம்?" என மீரா முறைக்கவும், சதீஷ்க்கு அவளை சீண்டி பார்க்க தோன்றியது

"ஆமா ஆமா... பரம ரகசியம்... உன்கிட்ட சொல்ல முடியாது...கரெக்ட் தானே மது" என சதீஷ் கூற இப்போது மீரா மதுவை முறைத்தாள்

"ஏய் சதீஷ்... நீ சிக்கரதுமில்லாம என்னையும் இந்த ராட்சசிகிட்ட மாட்டி விடறயா?" என்றாள் மது

"யாரு...நான் ராட்சசியா? மது...வர வர நீ இந்த லூஸ் கூட சேந்துட்டு என்னை வாருற" என கோபமாய் முகம் திருப்பினாள்

"சரி சரி... நோ டென்ஷன் மீரா... நான் எப்பவும் உனக்கு தான் பிரெண்ட்... இந்த லூசுக்கு இல்ல..." என மது சதீஷை காட்டி கூற

"தட்ஸ் குட்... சரி நீ எப்படி இவன் கூட வந்த" என்றாள் மீண்டும்

அந்த கேள்வி ஸ்டீவை எரிச்சலூட்டியது. அவர்கள் எப்படி வந்தால் இவளுக்கென்ன, இவள் ஏன் அதை விடாமல் விசாரிக்கிறாள் என கோபம் மூண்டது மனதில்

"அது நான் கரெக்டா subway ஸ்டேஷன் விட்டு வெளிய வரவும்..." என்றவளை இடை மறித்தான் சதீஷ்

"மது மது...என்ன மது... நமக்குள்ள உள்ள ஜென்டில்மேன் அக்ரீமென்ட்ஐ நீ மீர்றது சரி இல்ல" என்றான் சதீஷ்

"ஆமா பெரிய cross country treaty .. போ... மீரா அது நான் subway ஸ்டேஷன் விட்டு வெளிய வரவும் இவன் அங்க ஒரு பொண்ணுகிட்ட ஜொள்ளு விட்டுட்டு இருந்தான்... இழுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு" என மது கூறவும் மீரா சதீஷை முறைத்தாள்

"இல்ல மீரா... நான் சும்மா பேசிட்டு இருந்தேன்... infact அந்த பொண்ணு தான் பேசினா... பேசறவங்கள இக்னோர் பண்றது manners இல்ல தானே... அதான் ஜஸ்ட்...." என சதீஷ் முடிக்கும் முன்

"ச்சே... " மீரா கோபமாய் முகம் திருப்பினாள்

சொல்லவும் வேண்டுமா... அதை விட கோபமாய் இருந்தான் ஸ்டீவ். மீராவின் செய்கையில் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் மௌனமானான்

"சரி விடு மீரா... படிக்கலாமா? டைம் வேஸ்ட் ஆகுதே" என பேச்சை மாற்றினாள் மது

"மொதல்ல உங்க அம்மா குடுத்துவிட்ட fried ரைஸ் சாபிட்டுட்டு தெம்பா படிக்கலாமே மது... கரெக்ட் தானே ஸ்டீவ்" என வழக்கமான தன் குறும்பை ஆரம்பித்தான் சதீஷ்

அதற்குள் மீராவின் செல்போன் அலற "யார் இது?" என முணுமுணுத்து கொண்டே "ஹலோ" என்றாள் பேசியில்

"..."

"Yeah...this is Meera..."

"..."

"அது... ஆமா..."

"..."

"ம்...இல்ல அவன் அப்படி இல்ல..."

"..."

"ம்... ஆனா..."

"..."

"ஸ்டாப் இட்" என அவள் முகம் கோபமானது

"..."

"ச்சே....." என பேசியை கோபமாய் சோபாவில் வீசியவள், கட்டுக்கடங்காத கோபத்துடன் "நீ இந்த ஜென்மத்துல திருந்த மாட்ட... ச்சே... just get out of my sight" என கத்தினாள் சதீஷை பார்த்து

அவளை அத்தனை கோபமாய் இதன் முன் பார்த்திராத மதுவும் ஸ்டீவும் அதிர்ச்சியுடன் விழித்தனர்

"மீரா... என்னாச்சு மீரா... நான் என்ன...." என சதீஷ் திகைக்க

"அதானே... ஒண்ணு ரெண்டு தப்பு பண்ணினா எதுன்னு தெரியும்... கணக்கில்லாம பண்றவங்களுக்கு எப்படி நினைப்பு இருக்கும்" என்றாள் இன்னும் கோபம் குறையாமல்

இது நிஜமான கோபம் தான் என மீராவை அறிந்த சதீஷ் அதை உணர்ந்தவன் போல் மௌனமாய் நின்றான்

"என்ன மீரா? யாரு போன்ல" என மது மௌனத்தை உடைத்தாள்

சற்று நேரம் பதில் கூறாமல் இருந்தவள் "அந்த ப்ரியா... அதான் ப்ரியா தனசேகர்... எவ்ளோ கேவலமா பேசினா தெரியுமா..அவ... ச்சே... " என அதற்கு மேல் பேச இயலாதவள் போல் மீரா பால்கனியில் சென்று கைகளை தலைக்கு தாங்கி அமர்ந்தாள்

அவள் கோபமும் வேதனையுமாய் அமர்ந்திருந்ததை பார்த்ததும், மற்றதெல்லாம் மறந்து அவளை தோளில் சாய்த்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது ஸ்டீவிர்க்கு

கட்டுப்படுத்த முடியாதவனாய் அவளருகே சென்றவன் "என்ன மீரா? என்ன பிரச்சன? இந்த குளிர்ல வெளிய இருக்காத...உள்ள வா மொதல்ல" என்றான், அவளை தொட துடித்த கையை வலுவாய் தன் பேன்ட் பாக்கெட்டில் புதைத்தவாறே

அதற்குள் சதீஷ் "மீரா..." என சமாதானம் செய்ய முயன்றான்

"பேசாத சதீஷ்... " என சீறினாள்

அவனை புறக்கணித்து மதுவின் அருகில் வந்து அமர்ந்தவள் "அந்த ப்ரியாகிட்ட போய் வழிஞ்சுருக்கான் மது... அவ பெரிய மிஸ் வேர்ல்ட்னு அலட்டற கேஸ்... manners தெரியாதா உங்க ஊர் பசங்களுக்கு எனக்கு பாய் பிரெண்ட் இருக்கான்னு சொல்லியும் வழியறான்னு கேக்கறா...அவ ஆளுக்கு தெரிஞ்சா இவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுவானாம்... எனக்கு அட்வைஸ் பண்றா சொல்லி வெய்யினு... இன்னொரு வாட்டி இப்படி செஞ்சா ஆள் வெச்சு என்னை டீஸ் பண்ணுவாளாம்...இன்னும் கேவலமா என்ன என்னமோ... ச்சே" என அதை சொல்லவும் கூசுபவள் போல் சலித்தாள்

"ஆள் வெச்சு என்னை டீஸ் பண்ணுவாளாம்" என்ற வாசகத்தில் ஸ்டீவின் கைகள் கோபத்தில் இறுகியதை மது கவனித்தாள்

"இல்ல மீரா...நான்.. " என ஏதோ கூற முயன்ற சதீஷை பேசவிடவில்லை மீரா

"நான் நெறைய வாட்டி உன்கிட்ட சொல்லிட்டேன்... உன்னோட விளையாட்டுத்தனத்த விட்டுடுன்னு... எனக்கு தெரியும் நீ டைம் பாஸ்க்கு தான் இப்படி பண்றேன்னு... மத்தவங்களும் அதை விளையாட்டா எடுத்துக்கற வரை எதுவும் இல்ல... ஆனா கண்டவ எல்லாம் உன்னை அசிங்கமா பேசினா... " என ஒரு கணம் மௌனித்தவள் "என்னால தாங்க முடியல சதீஷ்... நான்..." இதற்கு மேல் பேசினால் அழுது விடுவோமோ என பயந்தவள் போல் நிறுத்தினாள் மீரா

அவளது பேச்சும் செய்கையும் சதீஷ்ற்கு குற்ற உணர்வை ஏற்படுத்த அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கைகளை பற்றி "ப்ளீஸ் மீரா... சாரிம்மா ப்ளீஸ்... you'll never hear anything like this again...சாரி மீரா... ப்ளீஸ்" எனவும்

"இது போல நெறைய வாட்டி சொல்லியாச்சு நீ" என்றாள் இன்னும் கோபம் குறையாத குரலில்

"இல்ல மீரா... உன்னை பாதிக்கற எதையும் நான் செய்ய மாட்டேன்னு உனக்கே தெரியுமே... உன்னை ஒருத்தி மோசமா பேசினப்புறம் நான் மறுபடி அந்த தப்ப செய்வனா சொல்லு... சாரி மீரா... ரியல்லி சாரி...ப்ளீஸ்..." என்றான்

நிஜமான வருத்தம் அவன் குரலில் தெரிய "இன்னொரு தரம் இப்படி ஒரு நியூஸ் என் காதுக்கு வந்தா thats it... I will never talk to you again in my life" என்றாள் தீர்மானம் போல்

"Meera please...don't say that...வேற என்ன வேணாலும் திட்டு... இது வேண்டாம் ப்ளீஸ்... " என்றான் சதீஷ் அவசரமாய், அவன் குரல் முற்றிலும் மாறி இருந்தது. எப்போதும் விளையாட்டாய் பேசும் சதீஷ் இவனா என மது ஆச்சிர்யமாய் பார்த்தாள்

ஒரு கணம் அவர்களுக்குள் இருந்த அந்த அன்பும் புரிதலும் கண்ட மது, இது வெறும் தோழமை தானா அல்லது அதற்கும் மேலான உறவா என முதல் முறையாய் ஒரு சந்தேக விதை விழுந்தது அவள் மனதில்

சில நாட்களாய் மீரா மீதான ஸ்டீவின் பார்வையை மது கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். ஒரு தோழியாய் ஸ்டீவிடம் எச்சரிக்க வேண்டுமோ என தோன்றியது. மனதில் ஆழ பதிந்த பின் விலகுவது இன்னும் வேதனை தானே, இப்போதே கூறுவது நல்லதோ என நினைத்தாள்

ஸ்டீவ் பற்றி மது நன்கு அறிந்திருந்தாள். நல்ல குணமும் உயர்ந்த எண்ணங்களும் கொண்டவன். அன்பால் எதையும் வெல்ல முடியும் என சொல்லி வளர்க்கப்பட்டவன்

ஆனால் தன் தீர்மானத்தில் பிடிவாதம் அதிகம் கொண்டவன், கோபமும் சற்று கூட. மீராவும் அதே போல் தானே என ஏனோ தோன்றியது அந்த கணம். அது தான் அவனை ஈர்ததோ என நினைத்தாள். இன்றைய அவசரமான சுயநல உலகில் நல்ல நட்பு அமைவது அத்தனை சுலபம் இல்லை எனும் போது நட்பால் பிணைக்கப்பட்ட நால்வருள் காதலால் பிளவு ஏற்படுமோ என பயந்தாள் மது

மதுவின் மனம் இப்படி யோசித்து கொண்டிருக்க, ஸ்டீவ் கோபத்தை இழுத்து பிடித்து கொண்டிருந்தான். சற்று முன் தன்னிடம் எனக்கே எனக்கானவள் போல் முகம் சிவந்து நின்ற மீரா இப்போது சதிஷின் கை கோர்த்து அன்னியோன்யமாய் அமர்ந்திருந்த காட்சி அவனை பைத்தியமாக்கியது

ஒன்று அவள் தேர்ந்த நடிகையாய் இருக்க வேண்டும் அல்லது தன் பார்வையில் தான் தவறோ என தன் மீதே சந்தேகம் வந்தது அவனுக்கு. சதீஷை அகற்றிவிட்டு அவளருகில் அமர வேண்டும் போல் தோன்றிய சிறுபிள்ளைதனமான தன் எண்ணத்தை ஒதுக்கினான்

அன்று இரவு அவன் முற்றிலும் உறங்கவில்லை. "கண்டவ எல்லாம் உன்னை அசிங்கமா பேசினா... என்னால தாங்க முடியல " என மீரா வேதனையுடன் கூறியதும் "உன்னை பாதிக்கற எதையும் நான் செய்ய மாட்டேன்னு உனக்கே தெரியுமே" என சதீஷ் நெகிழ்ந்ததும் ஸ்டீவை மிகவும் குழப்பியது

என்ன விதமான உறவு இது என அவனால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று காலை சதீசிடம் பொய் சொன்ன போது தன்னுடன் இருந்த நேரத்தை அந்தரங்கமாய் நினைப்பதால் தானே என நினைத்தது தவறோ என இப்போது தோன்றியது

ஒரு வேளை சதீஷ் அதை விரும்ப மாட்டான் என நினைத்து அவன் கோபத்தை தவிர்க்க தான் பொய் சொன்னாளோ என தோன்றியது. ஒரே சொல்லுக்கு இப்படி வேறு ஒரு பரிமாணம் இருப்பதை யோசிக்காதது தன் தவறு தான் என நினைத்தான்

இப்படி தான் எல்லாவற்றிலும் தவறான புரிதல் கொண்டு இருக்கிறேனோ என தன்னை தானே குற்றவாளியாக்கினான்

மீராவை விட்டு தான் சற்று விலகி இருப்பதே தனக்கு நல்லது என நினைத்தான். ஆனால் அதை செயல்படுத்துவது அத்தனை சுலபமாய் இருக்கபோவதில்லை என்பதை அறிந்தே இருந்தான்

அந்த நேரத்தில் கூட அவள் கோபமாய் நின்ற அந்த கணம் அவன் முன் வந்தது. கோபம் மனிதனை மிருகமாக்கும் என்பார்கள், ஆனால், கோபத்தில் சிவந்த கன்னங்களும், உணர்ச்சி ததும்பும் கண்களும், ஆவேசத்தில் படபடத்த இமைகளும், வார்த்தைகளை அடக்க உதடு கடித்து நின்ற பாவனையும், சூழ்நிலை மறந்து ஸ்டீவ் அவளை ரசித்தான் அப்போது

அந்த செய்கைக்கு இப்போது தன் மீதே கோபம் வந்தது. ஆனாலும் அந்த அழகிய முகத்தை கண்களை விட்டு அகற்ற முடியவில்லை அவனால்

முன்பொரு முறை நினைத்ததுண்டு, எப்படி தான் தன் பெற்றோர்கள் முப்பது ஆண்டு திருமண வாழ்க்கையை ரசிக்கிறார்களோ. ஒருவர் மேல் ஒருவருக்கு சலிப்பு வந்திடாதா என. இப்போது அவனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது

வெறும் இனகவர்ச்சி வேறு காதல் என்ற உணர்வு வேறு என அவனால் அந்த வித்தியாசத்தை அனுபவத்தில் உணர முடிந்தது. இன்னும் அவள் மனம் தன் வசம் வராத போதே இப்படி ஒரு உணர்வு என்றால் இன்னும் பரஸ்பர பகிர்தல் என்ற நிலை வரும் போதில்...அந்த நினைவே அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

இதை தான் soul mates என கூறப்படுவதோ என தோன்றியது. சற்று முன் அவளை விட்டு விலகி இருப்பதே தனக்கு நல்லது என நினைத்த தான் இப்போது யோசிக்கும் விதம் என்ன இது என தன்னை தானே கடிந்து கொண்டான்

அவளைவிட்டு சற்றேனும் விலகுவதே இருவருக்கும் நல்லது என நினைத்தான் மீண்டும் ஒரு முறை

அதை செயல்படுத்த சௌகரியமாய் தேர்வுகள் நெருங்கியது. நால்வரும் அவரவர் வேலையில் மூழ்கினர். அது முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வழமை போல் தன் பெற்றோர் வசிக்கும் Ottawa நகரம் செல்ல முடிவு செய்தான் ஸ்டீவ்

இந்த மூன்று வார பிரிவு தனக்கு மீராவிடமிருந்து தேவை என நினைத்தான், அவள் கண் முன் இருக்க தன் யோசிக்கும் சக்தியே மழுங்கி விடுவது போல் தோன்றியது. எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறினான். எனவே இந்த பிரிவு நிச்சியம் நல்லதே என நினைத்தான்

ஆனால் நடந்ததென்னவோ அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று...

யாதும்நீயென தோன்றசெய்து
யார்நீஎன கேட்கசெய்வதென்ன
காதலெனும் கண்ணாமூச்சியை
களிப்புடன்ஆட தயார்தான்
நீயும்நானும் மட்டுமே
நிற்கும்களம் அதுவெனில்!!!

இனி...

இந்த வாரம் ஆணி அதிகம்.. கொஞ்ச லேட் போஸ்ட்க்கு மன்னிக்கவும்... (யாரும் கேக்கலைங்கறது தனி மேட்டர்...:))))
 
அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)