Wednesday, February 02, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 6)பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4    பகுதி 5

மீரா அங்கு இருப்பதை கண்ட சதீஷ் "ஹேய் மீரா... நீ எப்ப வந்த?" என கேட்க

"அ... இப்ப தான்... பத்து நிமிசமாச்சு" என தடுமாறிய குரலில் மீரா கூற, ஏன் பொய் சொல்கிறாள் என புரியாமல் ஸ்டீவ் அவளையே பார்த்தான்

வேண்டுமென்றே அவனை பார்ப்பதை தவிர்த்தாள் மீரா

தன்னுடன் இருந்த நேரத்தை அந்தரங்கமாய் நினைப்பதால் தானே அப்படி செய்தாள் என தோன்றவும் ஸ்டீவிர்க்கு அவள் சொன்ன பொய் சந்தோசத்தை கொடுத்தது

அந்த எண்ணம் வந்ததும் அவளை விட்டு பார்வையை விலக்குவது அவனுக்கு தண்டனை போல் தோன்றியது. ஆனாலும் மது கண்டுகொள்வாளோ என யோசனையுடன் பார்வையை விலக்கினான்

மௌனனத்தை கலைப்பது போல் "என்ன நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்துருக்கீங்க?" என மீரா மதுவை கேள்வியாய் நோக்கினாள்

பதில் சொல்லாமல் மதுவும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க "என்ன ரகசியம்?" என மீரா முறைக்கவும், சதீஷ்க்கு அவளை சீண்டி பார்க்க தோன்றியது

"ஆமா ஆமா... பரம ரகசியம்... உன்கிட்ட சொல்ல முடியாது...கரெக்ட் தானே மது" என சதீஷ் கூற இப்போது மீரா மதுவை முறைத்தாள்

"ஏய் சதீஷ்... நீ சிக்கரதுமில்லாம என்னையும் இந்த ராட்சசிகிட்ட மாட்டி விடறயா?" என்றாள் மது

"யாரு...நான் ராட்சசியா? மது...வர வர நீ இந்த லூஸ் கூட சேந்துட்டு என்னை வாருற" என கோபமாய் முகம் திருப்பினாள்

"சரி சரி... நோ டென்ஷன் மீரா... நான் எப்பவும் உனக்கு தான் பிரெண்ட்... இந்த லூசுக்கு இல்ல..." என மது சதீஷை காட்டி கூற

"தட்ஸ் குட்... சரி நீ எப்படி இவன் கூட வந்த" என்றாள் மீண்டும்

அந்த கேள்வி ஸ்டீவை எரிச்சலூட்டியது. அவர்கள் எப்படி வந்தால் இவளுக்கென்ன, இவள் ஏன் அதை விடாமல் விசாரிக்கிறாள் என கோபம் மூண்டது மனதில்

"அது நான் கரெக்டா subway ஸ்டேஷன் விட்டு வெளிய வரவும்..." என்றவளை இடை மறித்தான் சதீஷ்

"மது மது...என்ன மது... நமக்குள்ள உள்ள ஜென்டில்மேன் அக்ரீமென்ட்ஐ நீ மீர்றது சரி இல்ல" என்றான் சதீஷ்

"ஆமா பெரிய cross country treaty .. போ... மீரா அது நான் subway ஸ்டேஷன் விட்டு வெளிய வரவும் இவன் அங்க ஒரு பொண்ணுகிட்ட ஜொள்ளு விட்டுட்டு இருந்தான்... இழுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு" என மது கூறவும் மீரா சதீஷை முறைத்தாள்

"இல்ல மீரா... நான் சும்மா பேசிட்டு இருந்தேன்... infact அந்த பொண்ணு தான் பேசினா... பேசறவங்கள இக்னோர் பண்றது manners இல்ல தானே... அதான் ஜஸ்ட்...." என சதீஷ் முடிக்கும் முன்

"ச்சே... " மீரா கோபமாய் முகம் திருப்பினாள்

சொல்லவும் வேண்டுமா... அதை விட கோபமாய் இருந்தான் ஸ்டீவ். மீராவின் செய்கையில் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் மௌனமானான்

"சரி விடு மீரா... படிக்கலாமா? டைம் வேஸ்ட் ஆகுதே" என பேச்சை மாற்றினாள் மது

"மொதல்ல உங்க அம்மா குடுத்துவிட்ட fried ரைஸ் சாபிட்டுட்டு தெம்பா படிக்கலாமே மது... கரெக்ட் தானே ஸ்டீவ்" என வழக்கமான தன் குறும்பை ஆரம்பித்தான் சதீஷ்

அதற்குள் மீராவின் செல்போன் அலற "யார் இது?" என முணுமுணுத்து கொண்டே "ஹலோ" என்றாள் பேசியில்

"..."

"Yeah...this is Meera..."

"..."

"அது... ஆமா..."

"..."

"ம்...இல்ல அவன் அப்படி இல்ல..."

"..."

"ம்... ஆனா..."

"..."

"ஸ்டாப் இட்" என அவள் முகம் கோபமானது

"..."

"ச்சே....." என பேசியை கோபமாய் சோபாவில் வீசியவள், கட்டுக்கடங்காத கோபத்துடன் "நீ இந்த ஜென்மத்துல திருந்த மாட்ட... ச்சே... just get out of my sight" என கத்தினாள் சதீஷை பார்த்து

அவளை அத்தனை கோபமாய் இதன் முன் பார்த்திராத மதுவும் ஸ்டீவும் அதிர்ச்சியுடன் விழித்தனர்

"மீரா... என்னாச்சு மீரா... நான் என்ன...." என சதீஷ் திகைக்க

"அதானே... ஒண்ணு ரெண்டு தப்பு பண்ணினா எதுன்னு தெரியும்... கணக்கில்லாம பண்றவங்களுக்கு எப்படி நினைப்பு இருக்கும்" என்றாள் இன்னும் கோபம் குறையாமல்

இது நிஜமான கோபம் தான் என மீராவை அறிந்த சதீஷ் அதை உணர்ந்தவன் போல் மௌனமாய் நின்றான்

"என்ன மீரா? யாரு போன்ல" என மது மௌனத்தை உடைத்தாள்

சற்று நேரம் பதில் கூறாமல் இருந்தவள் "அந்த ப்ரியா... அதான் ப்ரியா தனசேகர்... எவ்ளோ கேவலமா பேசினா தெரியுமா..அவ... ச்சே... " என அதற்கு மேல் பேச இயலாதவள் போல் மீரா பால்கனியில் சென்று கைகளை தலைக்கு தாங்கி அமர்ந்தாள்

அவள் கோபமும் வேதனையுமாய் அமர்ந்திருந்ததை பார்த்ததும், மற்றதெல்லாம் மறந்து அவளை தோளில் சாய்த்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது ஸ்டீவிர்க்கு

கட்டுப்படுத்த முடியாதவனாய் அவளருகே சென்றவன் "என்ன மீரா? என்ன பிரச்சன? இந்த குளிர்ல வெளிய இருக்காத...உள்ள வா மொதல்ல" என்றான், அவளை தொட துடித்த கையை வலுவாய் தன் பேன்ட் பாக்கெட்டில் புதைத்தவாறே

அதற்குள் சதீஷ் "மீரா..." என சமாதானம் செய்ய முயன்றான்

"பேசாத சதீஷ்... " என சீறினாள்

அவனை புறக்கணித்து மதுவின் அருகில் வந்து அமர்ந்தவள் "அந்த ப்ரியாகிட்ட போய் வழிஞ்சுருக்கான் மது... அவ பெரிய மிஸ் வேர்ல்ட்னு அலட்டற கேஸ்... manners தெரியாதா உங்க ஊர் பசங்களுக்கு எனக்கு பாய் பிரெண்ட் இருக்கான்னு சொல்லியும் வழியறான்னு கேக்கறா...அவ ஆளுக்கு தெரிஞ்சா இவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுவானாம்... எனக்கு அட்வைஸ் பண்றா சொல்லி வெய்யினு... இன்னொரு வாட்டி இப்படி செஞ்சா ஆள் வெச்சு என்னை டீஸ் பண்ணுவாளாம்...இன்னும் கேவலமா என்ன என்னமோ... ச்சே" என அதை சொல்லவும் கூசுபவள் போல் சலித்தாள்

"ஆள் வெச்சு என்னை டீஸ் பண்ணுவாளாம்" என்ற வாசகத்தில் ஸ்டீவின் கைகள் கோபத்தில் இறுகியதை மது கவனித்தாள்

"இல்ல மீரா...நான்.. " என ஏதோ கூற முயன்ற சதீஷை பேசவிடவில்லை மீரா

"நான் நெறைய வாட்டி உன்கிட்ட சொல்லிட்டேன்... உன்னோட விளையாட்டுத்தனத்த விட்டுடுன்னு... எனக்கு தெரியும் நீ டைம் பாஸ்க்கு தான் இப்படி பண்றேன்னு... மத்தவங்களும் அதை விளையாட்டா எடுத்துக்கற வரை எதுவும் இல்ல... ஆனா கண்டவ எல்லாம் உன்னை அசிங்கமா பேசினா... " என ஒரு கணம் மௌனித்தவள் "என்னால தாங்க முடியல சதீஷ்... நான்..." இதற்கு மேல் பேசினால் அழுது விடுவோமோ என பயந்தவள் போல் நிறுத்தினாள் மீரா

அவளது பேச்சும் செய்கையும் சதீஷ்ற்கு குற்ற உணர்வை ஏற்படுத்த அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கைகளை பற்றி "ப்ளீஸ் மீரா... சாரிம்மா ப்ளீஸ்... you'll never hear anything like this again...சாரி மீரா... ப்ளீஸ்" எனவும்

"இது போல நெறைய வாட்டி சொல்லியாச்சு நீ" என்றாள் இன்னும் கோபம் குறையாத குரலில்

"இல்ல மீரா... உன்னை பாதிக்கற எதையும் நான் செய்ய மாட்டேன்னு உனக்கே தெரியுமே... உன்னை ஒருத்தி மோசமா பேசினப்புறம் நான் மறுபடி அந்த தப்ப செய்வனா சொல்லு... சாரி மீரா... ரியல்லி சாரி...ப்ளீஸ்..." என்றான்

நிஜமான வருத்தம் அவன் குரலில் தெரிய "இன்னொரு தரம் இப்படி ஒரு நியூஸ் என் காதுக்கு வந்தா thats it... I will never talk to you again in my life" என்றாள் தீர்மானம் போல்

"Meera please...don't say that...வேற என்ன வேணாலும் திட்டு... இது வேண்டாம் ப்ளீஸ்... " என்றான் சதீஷ் அவசரமாய், அவன் குரல் முற்றிலும் மாறி இருந்தது. எப்போதும் விளையாட்டாய் பேசும் சதீஷ் இவனா என மது ஆச்சிர்யமாய் பார்த்தாள்

ஒரு கணம் அவர்களுக்குள் இருந்த அந்த அன்பும் புரிதலும் கண்ட மது, இது வெறும் தோழமை தானா அல்லது அதற்கும் மேலான உறவா என முதல் முறையாய் ஒரு சந்தேக விதை விழுந்தது அவள் மனதில்

சில நாட்களாய் மீரா மீதான ஸ்டீவின் பார்வையை மது கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். ஒரு தோழியாய் ஸ்டீவிடம் எச்சரிக்க வேண்டுமோ என தோன்றியது. மனதில் ஆழ பதிந்த பின் விலகுவது இன்னும் வேதனை தானே, இப்போதே கூறுவது நல்லதோ என நினைத்தாள்

ஸ்டீவ் பற்றி மது நன்கு அறிந்திருந்தாள். நல்ல குணமும் உயர்ந்த எண்ணங்களும் கொண்டவன். அன்பால் எதையும் வெல்ல முடியும் என சொல்லி வளர்க்கப்பட்டவன்

ஆனால் தன் தீர்மானத்தில் பிடிவாதம் அதிகம் கொண்டவன், கோபமும் சற்று கூட. மீராவும் அதே போல் தானே என ஏனோ தோன்றியது அந்த கணம். அது தான் அவனை ஈர்ததோ என நினைத்தாள். இன்றைய அவசரமான சுயநல உலகில் நல்ல நட்பு அமைவது அத்தனை சுலபம் இல்லை எனும் போது நட்பால் பிணைக்கப்பட்ட நால்வருள் காதலால் பிளவு ஏற்படுமோ என பயந்தாள் மது

மதுவின் மனம் இப்படி யோசித்து கொண்டிருக்க, ஸ்டீவ் கோபத்தை இழுத்து பிடித்து கொண்டிருந்தான். சற்று முன் தன்னிடம் எனக்கே எனக்கானவள் போல் முகம் சிவந்து நின்ற மீரா இப்போது சதிஷின் கை கோர்த்து அன்னியோன்யமாய் அமர்ந்திருந்த காட்சி அவனை பைத்தியமாக்கியது

ஒன்று அவள் தேர்ந்த நடிகையாய் இருக்க வேண்டும் அல்லது தன் பார்வையில் தான் தவறோ என தன் மீதே சந்தேகம் வந்தது அவனுக்கு. சதீஷை அகற்றிவிட்டு அவளருகில் அமர வேண்டும் போல் தோன்றிய சிறுபிள்ளைதனமான தன் எண்ணத்தை ஒதுக்கினான்

அன்று இரவு அவன் முற்றிலும் உறங்கவில்லை. "கண்டவ எல்லாம் உன்னை அசிங்கமா பேசினா... என்னால தாங்க முடியல " என மீரா வேதனையுடன் கூறியதும் "உன்னை பாதிக்கற எதையும் நான் செய்ய மாட்டேன்னு உனக்கே தெரியுமே" என சதீஷ் நெகிழ்ந்ததும் ஸ்டீவை மிகவும் குழப்பியது

என்ன விதமான உறவு இது என அவனால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று காலை சதீசிடம் பொய் சொன்ன போது தன்னுடன் இருந்த நேரத்தை அந்தரங்கமாய் நினைப்பதால் தானே என நினைத்தது தவறோ என இப்போது தோன்றியது

ஒரு வேளை சதீஷ் அதை விரும்ப மாட்டான் என நினைத்து அவன் கோபத்தை தவிர்க்க தான் பொய் சொன்னாளோ என தோன்றியது. ஒரே சொல்லுக்கு இப்படி வேறு ஒரு பரிமாணம் இருப்பதை யோசிக்காதது தன் தவறு தான் என நினைத்தான்

இப்படி தான் எல்லாவற்றிலும் தவறான புரிதல் கொண்டு இருக்கிறேனோ என தன்னை தானே குற்றவாளியாக்கினான்

மீராவை விட்டு தான் சற்று விலகி இருப்பதே தனக்கு நல்லது என நினைத்தான். ஆனால் அதை செயல்படுத்துவது அத்தனை சுலபமாய் இருக்கபோவதில்லை என்பதை அறிந்தே இருந்தான்

அந்த நேரத்தில் கூட அவள் கோபமாய் நின்ற அந்த கணம் அவன் முன் வந்தது. கோபம் மனிதனை மிருகமாக்கும் என்பார்கள், ஆனால், கோபத்தில் சிவந்த கன்னங்களும், உணர்ச்சி ததும்பும் கண்களும், ஆவேசத்தில் படபடத்த இமைகளும், வார்த்தைகளை அடக்க உதடு கடித்து நின்ற பாவனையும், சூழ்நிலை மறந்து ஸ்டீவ் அவளை ரசித்தான் அப்போது

அந்த செய்கைக்கு இப்போது தன் மீதே கோபம் வந்தது. ஆனாலும் அந்த அழகிய முகத்தை கண்களை விட்டு அகற்ற முடியவில்லை அவனால்

முன்பொரு முறை நினைத்ததுண்டு, எப்படி தான் தன் பெற்றோர்கள் முப்பது ஆண்டு திருமண வாழ்க்கையை ரசிக்கிறார்களோ. ஒருவர் மேல் ஒருவருக்கு சலிப்பு வந்திடாதா என. இப்போது அவனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது

வெறும் இனகவர்ச்சி வேறு காதல் என்ற உணர்வு வேறு என அவனால் அந்த வித்தியாசத்தை அனுபவத்தில் உணர முடிந்தது. இன்னும் அவள் மனம் தன் வசம் வராத போதே இப்படி ஒரு உணர்வு என்றால் இன்னும் பரஸ்பர பகிர்தல் என்ற நிலை வரும் போதில்...அந்த நினைவே அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

இதை தான் soul mates என கூறப்படுவதோ என தோன்றியது. சற்று முன் அவளை விட்டு விலகி இருப்பதே தனக்கு நல்லது என நினைத்த தான் இப்போது யோசிக்கும் விதம் என்ன இது என தன்னை தானே கடிந்து கொண்டான்

அவளைவிட்டு சற்றேனும் விலகுவதே இருவருக்கும் நல்லது என நினைத்தான் மீண்டும் ஒரு முறை

அதை செயல்படுத்த சௌகரியமாய் தேர்வுகள் நெருங்கியது. நால்வரும் அவரவர் வேலையில் மூழ்கினர். அது முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வழமை போல் தன் பெற்றோர் வசிக்கும் Ottawa நகரம் செல்ல முடிவு செய்தான் ஸ்டீவ்

இந்த மூன்று வார பிரிவு தனக்கு மீராவிடமிருந்து தேவை என நினைத்தான், அவள் கண் முன் இருக்க தன் யோசிக்கும் சக்தியே மழுங்கி விடுவது போல் தோன்றியது. எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறினான். எனவே இந்த பிரிவு நிச்சியம் நல்லதே என நினைத்தான்

ஆனால் நடந்ததென்னவோ அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று...

யாதும்நீயென தோன்றசெய்து
யார்நீஎன கேட்கசெய்வதென்ன
காதலெனும் கண்ணாமூச்சியை
களிப்புடன்ஆட தயார்தான்
நீயும்நானும் மட்டுமே
நிற்கும்களம் அதுவெனில்!!!

இனி...

இந்த வாரம் ஆணி அதிகம்.. கொஞ்ச லேட் போஸ்ட்க்கு மன்னிக்கவும்... (யாரும் கேக்கலைங்கறது தனி மேட்டர்...:))))
 
அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

82 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

ஹைய்யா..மீ தி பர்ஸ்ட்!

மகி said...

குழப்புறீங்களே புவனா! யாரு,யாரை காதலிக்கிறாங்கன்னு அடுத்த எபிஸோட்ல க்ளியரா சொல்லிப்போடுங்க,சரியா?

அதெப்படியோ,நீங்க புதுசா போஸ்ட் பண்ணும்போது எனக்கு கரெக்ட்டா மூக்கு வேர்த்துப்போயுடுது! :)

kadar said...

mahi..... veetla oru velai kooda illay nu ninaikiren....lolz

பிரதீபா said...

இந்தக் கொளப்பி விடுறதுல தான் சுவாரஸ்யம் இருக்கு போல :)

Chitra said...

பிரதீபா சொன்னது…

இந்தக் கொளப்பி விடுறதுல தான் சுவாரஸ்யம் இருக்கு போல :)


.... அப்படித்தான் போல. :-)

மோகன்ஜி said...

ரெண்டு மாசம் அய்யப்ப சாமியா இருந்தேனா! இந்தக் காதல் மேட்டர்லாம் புரிபடலீங்க! நெஜமா இன்னொரு தரம் இதை படிக்கப் போறேன்!

Porkodi (பொற்கொடி) said...

oru alpa matterku edhuku meera ivlo scene podraa..? innum konjam strongana incident yosichurukalam, but anyway, meera and satish close nu solla vandhinga, sollitinga. rightu. (cut shoe matter vida idhu evlavo thevalai.. :P) vaanga poi aaniya pidunguvom.

priya.r said...

// இந்த வாரம் ஆணி அதிகம்.. கொஞ்ச லேட் போஸ்ட்க்கு மன்னிக்கவும்... (யாரும் கேக்கலைங்கறது தனி மேட்டர்...:))))//

எனக்கும் தான் டியர் ;ஆனா நேத்து பதிவு வரும் என்று நினைத்து ஏமாந்து தான் போனேன்.,
நாங்க கேட்கலைன்னாலும் நினைத்தோம் தானே :) :)

கதையா இது கதையா ;ஒரு நாடகம் அன்றோ நடக்குது !!

அதென்னவோ தெரியலை அப்பாவி !உன்ர கதைய படிகலன்னா சரியா தூக்கம் கூட வர மாட்டுக்குது :)

Porkodi (பொற்கொடி) said...

//உன்ர கதைய படிகலன்னா சரியா தூக்கம் கூட வர மாட்டுக்குது :) //

padicha? suthamave varaadhu! :D

கோவை ஆவி said...

கதை இப்போதான் செகண்ட் கியர் போட்டிருக்கு.. இந்த கதையில அப்பாவி டச் ஏதோ மிஸ்ஸிங் னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்போதான் தெரிஞ்சுது அது - கதையில வர்ற ட்விஸ்ட் னு ..

priya.r said...

ஹி ஹீ ;கொடி உங்க கதையை படிச்சா துககம் தான் வருது ..

priya.r said...

//சொல்லவும் விடுமா.. //

இதுக்கு அர்த்தம் என்ன அப்பாவி !

priya.r said...

//இந்த வாரம் ஆணி அதிகம்//

அப்பாவி நீங்க ஒன்னும் இந்த பதிவை சொல்லலையே ஹ ஹா

சரி அதை விடுங்க மீரா எப்போ ஆனித் தரமா தன் காதலை சொல்லுவா !

priya.r said...

//ஆனால் நடந்ததென்னவோ அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று... //

இது எதிர்பார்த்த ஒன்று !அடுத்த பதிவு ரெம்பா சஸ்பென்சா இருக்கும் போல

priya.r said...

//vaanga poi aaniya pidunguvom. //

அப்பாவி உங்களை சும்மா நட்பு ரீதியா தான் கூப்பிடறாங்க ! இதுக்கு போய் எதுக்கு இப்படி நடுங்கறீங்க..

அமைதிச்சாரல் said...

அப்பாவி.. யாரும் கேக்கலைன்னாலும் நெனைச்சோமில்ல. நேத்து உங்களுக்கு புரையேறியிருக்கணுமே :-))))))

கதை செண்டிமெண்ட் கியரில் போகுதா.. நடக்கட்டும் :-))

priya.r said...

அப்பாவி.. யாரும் கேக்கலைன்னாலும் நெனைச்சோமில்ல. நேத்து உங்களுக்கு புரையேறியிருக்கணுமே :-))))))//

இதை வைத்து அப்பாவி இரண்டு விதமா கதை திரைகதை எழுதுவாங்களே !

என்கு வந்த லட்ச கணக்கான விக்கலுக்கு நன்றி என்று சொல்லலாம்

லட்சோப லட்சம் வாசக வாசகிகளே உங்களை எல்லாம் நான் நினைக்கவே இல்லை !

மறந்தா தானே நினைக்க முடியும் என்றும் சொல்லலாம்........

Vasagan said...

\அன்று இரவு அவன் முற்றிலும் உறங்கவில்லை.\

Steve வை என்கிட்டே அனுப்பு
நான் கிளாஸ் எடுக்க ஆரம்பித்த உடன் துங்கிருவான் - இது அவனுக்கு நல்லது.

மீறி முழிசிருந்தால்.

மீரா கிட்ட பூரிக்கட்டை அடி நிச்சியம்.

அப்பாதுரை said...

இனக்கவர்ச்சி, காதல்னு கொஞ்சம் சுவாரசியத்தை எட்டிப்பாத்துட்டு காணாம போயிட்டா எப்டி? (காணாமப் போகலியா? தொடர்ந்து வருமா?)

முனியாண்டி said...

நான் பயங்கரமா உங்க கதைய எதிர்பாத்துக்கிட்டு இருந்தேன்.... கனடாவும் அமெரிக்காவும் பக்கம் பக்கம்தானே உங்களுக்கு என் எதிர்பார்ப்பு தெருஞ்ச்சுருக்குமுன்னு தப்பா நெஞ்ச்சுட்டேன்.... ஒரு மெயில்... ஒரு மெசேஜ்... சென்சுருக்கணும்.... நெறையாப் பேரு மனசுக்குள்ள நெனச்சுருப்பாங்கனு மனச தேத்திக்கங்க.

அப்பாதுரை said...

பூரிக்கட்டை அடி expression கேட்டு ரொம்ப நாளாச்சு.. நன்றி vasagan.

எல் கே said...

ஹ்ம்ம் //யாரும் கேக்கலைங்கறது தனி மேட்டர்...:))))//

போன பதிவு கமெண்ட்ஸ் பார்க்கவும்
//எல் கே சொன்னது…

இன்று போடப் படவேண்டிய அடுத்த பாகத்தை வெளியிடாத அப்பாவியை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனாமிகா, பிரியா, பொற்ஸ் ஆகியோர் சபைக்கு வந்த தட்டி கேட்கவும் ///

எல் கே said...

aaaavvvvv ....நான் அப்புறம் வரேன் பை

சௌந்தர் said...

"மீரா... என்னாச்சு மீரா... நான் என்ன...." என சதீஷ் திகைக்க ////

இருப்பா கொஞ்ச சஸ்பென்ஸ் வைச்சு சொல்றேன்

அவள் கோபமும் வேதனையுமாய் அமர்ந்திருந்ததை பார்த்ததும், மற்றதெல்லாம் மறந்து அவளை தோளில் சாய்த்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது ஸ்டீவிர்க்கு /////

எவன் எப்படி போனா என்ன இவனுக்கு அவன் வேலை நடக்கணும்.....

இந்த வாரம் ஆணி அதிகம்.. கொஞ்ச லேட் போஸ்ட்க்கு மன்னிக்கவும்... (யாரும் கேக்கலைங்கறது தனி மேட்டர்...:))))//////

ஹலோ ஹலோ நான் கொலைவெறியோடு உங்களை தேடிட்டு இருந்தேன்.....! என்னனு கேகுறிங்களா செவ்வாய் வந்து பார்த்தேன் அதான்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவை விட அதுக்கான் லீட் மெயில்ல அனுப்புனீங்களே.. அது கலக்கல்

sulthanonline said...

அடுத்து என்ன நடக்கப்போகுது? என்ற விறுவிறுப்பு உங்கள் கதையில் உள்ளது. செவ்வாய் அன்று பதிவு வரலன்னதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ஹி.. ஹி.. அடுத்த பதிவில சதீஷ் மீரா வின் relationship நட்பா,காதலா என்ற ஸ்டீவ் குழப்பத்தை தீர்த்து வைப்பிங்கன்னு நினைக்கிறேன்.இனி தாமதமாக பதிவு போட்டால் நாங்கள் கேட்போம்.

தங்கம்பழனி said...

ஒவ்வொரு பகுதியிலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிகொண்டே வருகிறீர்கள்.. ! என்ன நடக்கும்..?

Never give up said...

rombave edhipaathukittu irunthen, innum niraya ezhuthungalen
Geetha

vinu said...

. அன்று காலை சதீசிடம் பொய் சொன்ன போது தன்னுடன் இருந்த நேரத்தை அந்தரங்கமாய் நினைப்பதால் தானே என நினைத்தது தவறோ என இப்போது தோன்றியது

ஒரு வேளை சதீஷ் அதை விரும்ப மாட்டான் என நினைத்து அவன் கோபத்தை தவிர்க்க தான் பொய் சொன்னாளோ என தோன்றியது. ஒரே சொல்லுக்கு இப்படி வேறு ஒரு பரிமாணம் இருப்பதை யோசிக்காதது தன் தவறு தான் என நினைத்தான்
sonomulley sonnomulley; eppudi nammoda judgement ennaikumea miss aagaathupaaa;


இந்த வாரம் ஆணி அதிகம்.. கொஞ்ச லேட் போஸ்ட்க்கு மன்னிக்கவும்... (யாரும் கேக்கலைங்கறது தனி மேட்டர்...:))))


hello echukichumee thinamum vanthu eamaanthu ponavangalukkuthaan theariyum

middleclassmadhavi said...

Stats-ல பாத்தீங்களா, நேத்து எத்தனை தேடல்கள்னு?

பத்மநாபன் said...

பருவ வயதிற்கே உரித்தான மிதமிஞ்சிய பொஸஸ்வினஸ், சின்ன சின்ன அங்கிகரிப்புகள், விருப்பங்கள் , மனதுக்குள்ளே மூடி வைத்துக்கொள்ளும் ஆசைகள் என அழகாக படம் படித்துக் கொண்டே கதை நகர்கிறது...

அது சரி.... கம்பைன் ஸ்டடியில் காதலும் இனக்கவர்ச்சியும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிடுகிறது...இதையும் தாண்டி படிப்பில் வெற்றி பெறும் இந்த தலைமுறையினர் பாராட்டுக் குரியவர்கள் தான்...

சே.குமார் said...

எதிர்ப்பார்ப்பை உருவாக்கிகொண்டே வருகிறீர்கள்... Great.

MANO நாஞ்சில் மனோ said...

நானும் கூட வந்துட்டுதான் இருக்கேன்.....

siva said...

mee the first...

My days(Gops) said...

//சரி நீ எப்படி இவன் கூட வந்த//

kooda vaangura edathula bucket vaangitu cycle'la doubles vandhom..... nalla ketkuraangai ah question >......

//படிக்கலாமா? டைம் வேஸ்ட் ஆகுதே//
group study aaam :D.......

//ஒண்ணு ரெண்டு தப்பு பண்ணினா எதுன்னு தெரியும்... கணக்கில்லாம பண்றவங்களுக்கு எப்படி நினைப்பு இருக்கும்//

oh appa kandipaa tution teacher venum group study'ku.. ippadi thappu pannuraapla namma sathish..... too bad too bad....

//தன் தீர்மானத்தில் பிடிவாதம் அதிகம் கொண்டவன்//
ipavey next episode ah guess panna vachiteengaley.....

edhu eppadioh...

steve ah idhayam murali maadhiri "idhayamey idhayamey nu paada vachiraadheeenga... but

sathish kum steve'kum, kuchi pudi fight + katti pudi fight vachidunga..... also,

meera'kum, madhu'kum pipe adi sandai vachidunga paaavam.. appoh thaaan stroy la oru twist varum, sudhi serum.. ok akka? (bcom mudichi ipa thaan enakku 3yrs aagudhu... so neenga enakku akka thaaney?)

Jaleela Kamal said...

புவனா கொஞ்ச்ம் குழப்பி விட்டீங்க, யாரும் கேட்கலையா , நான் கேட்பேன் ஏன் நேற்று தொடர போடலன்னு.
நான் தேடி வந்து ஏமாந்துட்டு போனேன்.
நல்ல இருக்கு அடுத்த தொடரை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

அனாமிகா துவாரகன் said...

ஏய் புவனா, உன் மனசில என்னதான் நினைச்சுட்டு இருக்கே. ஹி ஹி.

அனாமிகா துவாரகன் said...

நாங்க எல்லாரும் அடிக்கடி எட்டிப் பார்த்திட்டே இருந்தோம். கதையில் இன்டரெஸ்ட் இல்லை. உங்கள கடிக்கத்தேன். ஹா ஹா ஹா.

வீடு வந்து சேர்ந்த போது எவ்வளவோ வேலை இருந்தும் காலையில எழுந்தோன முதல் வேலையா இங்க வந்து பார்த்தா, ஒரு மண்ணும் இல்ல. செம கடுப்பு. பக்கம் பக்கமா திட்டி mail எழுதி எங்கேயோ வச்சிருக்கேன். இருங்க, தேடி எடுத்து போடறேன்.

அனாமிகா துவாரகன் said...

//அன்பால் எதையும் வெல்ல முடியும் என சொல்லி வளர்க்கப்பட்டவன்//

God. Then why he wanted to beat up Sathes? Phew!

அனாமிகா துவாரகன் said...

அட பாவமே. வாசகன் மாம்ஸ் ப்ரொபஸரா? ஸாரி. எனக்கு உங்கள இன்னேல இருந்து தெரியாது. ஹா ஹா.

கார்த்தி ஸார்,
இதோ வந்திட்டேன்.நிறைய க்ளாஸ் கட் பண்ணிட்டேன். அதெல்லாம் நோட்ஸ் எழுதிட்டப்புறம் வந்து பேசறேன்.

அனாமிகா துவாரகன் said...

ப்ரியமான எனிமிக்கு,
ஐயாம் பாக்.

சந்தடி சாக்கில் என் பெயரை சுனாமிகான்னு மாத்தின எல்லோருக்கும் வந்து வச்சுக்கறேன்.

அட பொற்கொடிக்கா, உங்க பெயரை நான் கேடின்னு இல்ல இவ்ளோ நாளா படிச்சுட்டு இருக்கேன். ஸாரி.

Vasagan said...

சுனாமிகா
\அட பாவமே. வாசகன் மாம்ஸ் ப்ரொபஸரா? ஸாரி. எனக்கு உங்கள இன்னேல இருந்து தெரியாது. ஹா ஹா. \

உன்னை மாதிரி உங்கூர் அக்காஉம் சொல்லிட்டானா எவ்வளவு நல்லா இருக்கும். ஹா ஹா ஹா ஹா.

நீ தெரியாதுநு ஓடினாலும், நான் விடரமாதிரி இல்லை. உனக்கு ஒரு work ஒழுங்க போய் அப்பாவியின் போன பதிவில் கேட்ட 4 சரித்திர முக்கியதுவ கேள்வி களுக்கு பதில் கண்டுபிடித்து கொண்டு வா.
Hint: You can refer Journal of Nature-Nayalogy.

அப்பாடா சுனாமி கிட்ட இருந்து தப்பியாச்சு

அப்பாவி தங்கமணி said...

@ மகி - எஸ் எஸ்... யு தி பர்ஸ்ட் ப்ரைஸ்... கப்பு போஸ்ட்ல வரும்..:)))...ஆகட்டுமுங்க மகி... சொல்லிபோடரனுங்க அடுத்த போஸ்ட்ல...

//அதெப்படியோ,நீங்க புதுசா போஸ்ட் பண்ணும்போது எனக்கு கரெக்ட்டா மூக்கு வேர்த்துப்போயுடுது//
எல்லாம் ஒரு ஊர் பாசம் தானுங்க அம்மணி...என்ன நான் சொல்றது...தேங்க்ஸ் மகி... :)))

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - ஹா ஹா ...அப்படி தான் போல... நன்றிங்க பிரதீபா

@ Chitra - நீங்களும் அதேதான் சொல்றீங்களா... ஒகே ஒகே... தேங்க்ஸ் சித்ரா

@ மோகன்ஜி - வாங்க சாமி... மலைக்கு போயிட்டு வந்தாசுங்களா? படிங்க படிங்க... நன்றிங்க மோகன்ஜி

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - எது அல்பமான மேட்டர்? சதீஷ் இப்படி எல்லாம் செய்யறது தப்பில்ல... ஹா ஹா ஹா... you're right, I could've thought of a strong incident, but simple story, simple appavi, simple incident you see....okay okay... no tension kodi... thanks for your opinion... ஆணி பிடுங்கறதா? பாசமா கூப்ட்டு ஆணி அடிச்சுடுவியோனு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு அம்மணி... :)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//எனக்கும் தான் டியர் ;ஆனா நேத்து பதிவு வரும் என்று நினைத்து ஏமாந்து தான் போனேன்.,
நாங்க கேட்கலைன்னாலும் நினைத்தோம் தானே //
ஒகே நம்பறேன் அக்கோவ்... ஆமா எனக்கு விக்கலே நிக்கல...

//கதையா இது கதையா ;ஒரு நாடகம் அன்றோ நடக்குது//
எஸ் எஸ்... உலகமே ஒரு நாடக மேடை... நாமெல்லாம் பாத்திரங்கள்... அலுமின்ய பாத்திரம் அனாமிகா, பித்தள பாத்திரம் ப்ரியா, தங்க பாத்திரம் தங்கமணி(அப்பாவி)... ஹா ஹா ஹா... :)))

//அதென்னவோ தெரியலை அப்பாவி !உன்ர கதைய படிகலன்னா சரியா தூக்கம் கூட வர மாட்டுக்குது//
நிஜமாவா? நல்ல மீனிங்ல சொன்னீங்கன்னே நெனைச்சுக்கறேன் அக்கோவ்... ஹா ஹா ஹா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - நானே பூசி மெழுகி ஒப்பேத்தறேன்... இப்படியா டமால்ல கீழ தள்ளுவ கொடி... பல்பு மேல பல்பு போதுமடா சாமி... இந்த பல்பு பத்தி ரெம்ப பேசினா போட்டு தள்ளுவா கொடி...கதைல போட்டு தள்ளுவா கொடி... மீ எஸ்கேப்...:))

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - செகண்ட் கியர்ஆ? ஒகே... ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வந்து உங்கள சேரும், அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் அப்பாவியை சேரும்... ஹா ஹா... தேங்க்ஸ்ங்க ஆனந்த்

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//சொல்லவும் விடுமா.. // இதுக்கு அர்த்தம் என்ன அப்பாவி !//
அது சொல்லவும் வேண்டுமானு இருக்கணும்... ஹி ஹி... ஹான்ட் ஸ்லிப் ஆய்டுச்சு... உங்க கமெண்ட் பாத்ததும் கரெக்ட் பண்ணிட்டேன்... thanq அக்கோவ்...

//அப்பாவி நீங்க ஒன்னும் இந்த பதிவை சொல்லலையே ஹ ஹா//
கூடவே இருந்து குழிப்பறிக்கரதுன்னா இதனா? படுபாவி...

//சரி அதை விடுங்க மீரா எப்போ ஆனித் தரமா தன் காதலை சொல்லுவா//
நான் ஆணி எல்லாம் எடுத்தப்புறம் அவகிட்ட குடுப்பேன்...அப்புறம் அந்த ஆணிய வெச்சு தரமா சொல்லுவா... இந்த விளக்கம் போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா...:)))

//இது எதிர்பார்த்த ஒன்று !அடுத்த பதிவு ரெம்பா சஸ்பென்சா இருக்கும் போல//
அப்படியா? யாரு சொன்னாங்க... யாருப்பா இப்படி எல்லாம் புரளி கிளப்பி விடறது... ஹா ஹா ஹா..

//அப்பாவி உங்களை சும்மா நட்பு ரீதியா தான் கூப்பிடறாங்க ! இதுக்கு போய் எதுக்கு இப்படி நடுங்கறீங்க//
கொடிக்கு அப்படி ஒரு ஐடியா இல்லேனா கூட எடுத்து குடுப்பீங்க போல இருக்கே அம்மணி... ஏன் இந்த கொல வெறி அக்கோவ்? ஜஸ்ட் கி...ட்...டி..ங்... (கிட்டிங்னு ஒரே வோர்ட் தான்...நீங்க சொன்ன மேட்டர்ல கொஞ்சம் நடுங்கினதுல இப்படி வந்துடுச்சு...ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் -
//அப்பாவி.. யாரும் கேக்கலைன்னாலும் நெனைச்சோமில்ல. நேத்து உங்களுக்கு புரையேறியிருக்கணுமே//
ஆமா ஆமா...நேத்து பூரா தண்ணியே குடிக்க முடியலைனா பாருங்களேன்... :))))

//கதை செண்டிமெண்ட் கியரில் போகுதா.. நடக்கட்டும் :-)) //
எஸ் எஸ்... நன்னிஹை அக்கோவ்...

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - //இதை வைத்து அப்பாவி இரண்டு விதமா கதை திரைகதை எழுதுவாங்களே//
ப்ரியா, வர வர உங்களுக்கு கன்சல்டிங் பீஸ் குடுக்கணும்னு என் மனசாட்சி உறுத்தற அளவுக்கு ஐடியா குடுக்கறீங்க... வாழ்க வாழ்க...ப்ரியா வாழ்க...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//Steve வை என்கிட்டே அனுப்பு நான் கிளாஸ் எடுக்க ஆரம்பித்த உடன் துங்கிருவான் - இது அவனுக்கு நல்லது//
ஹா ஹா ஹா... பாவம் உங்க ஸ்டுடென்ட்ஸ்...:)))

//மீறி முழிசிருந்தால், மீரா கிட்ட பூரிக்கட்டை அடி நிச்சியம்//
ச்சே ச்சே...மீரா என்னை போல நல்ல பொண்ணு...அப்படி எல்லாம் செய்ய மாட்டா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - நிச்சியம் தொடர்ந்து வரும்... அதுக்கு தான் தொடர்கதை...ஹா ஹா... நன்றிங்க

@ முனியாண்டி - நம்பிட்டோம் நம்பிட்டோம்... ஹா ஹா... நீங்களே சொன்னது போல் மனச தான் தேத்திக்கணும்... :)))

@ அப்பாதுரை - //பூரிக்கட்டை அடி expression கேட்டு ரொம்ப நாளாச்சு.. நன்றி vasagan //
ஐயோ அவருக்கு experience எல்லாம் இல்லிங்க... அவர் சும்மா பேச்சுக்கு சொன்னாரு... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - பாத்தேன் பிரதர்... நன்னிஹை... :)))

//aaaavvvvv ....நான் அப்புறம் வரேன் பை//
ஒண்ணும் சொல்லாம போனா கனவுல கடோத்கஜன் தான் வருவாராம்... அப்புறம் உன் இஷ்டம்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - வாங்க சௌந்தர்... நெஜமாவா வந்தீங்க? ஒகே ஒகே... நன்றிங்கோ... :))))

@ சி.பி.செந்தில்குமார் - //பதிவை விட அதுக்கான் லீட் மெயில்ல அனுப்புனீங்களே.. அது கலக்கல்///
பதிவு தேறாதுனு சொல்லாம சொல்றீங்களோ... ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்... லீட் மெயில் பாத்து எதாச்சும் தேறும் வருவாங்கன்னு ஒரு நம்பிக்கைல தானுங்க அப்படி எழுதினேன்... :)))

@ sulthanonline - ரெம்ப நன்றிங்க... குழப்பத்தை தீர்த்து வெப்பேன்னு நம்பறீங்களா? நம்பினார் கெடுவதில்லை, இது அப்பாவியின் தீர்ப்பும் தான்... ஹா ஹா ஹா... இனி பதிவு போடலைனா கேப்பீங்களா? அப்ப ஒழுங்கா போட்டுடறேன்... மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - ரெம்ப நன்றிங்க...நடக்கறது தாங்க நடக்கும்... :)))

@ Never give up - வாவ்...தேங்க்ஸ்ங்க கீதா... இந்த எதிர்பார்ப்பு தான் எழுதுவதற்கு inspiration ... நன்றிங்க...

@ vinu - ஆஹா... என்ன ஒரு சந்தோஷம்... ஸ்டீவ் சாபம் உங்கள சும்மா விடாது வினோத்... ஹா ஹா ஹா... நெஜமா வந்து பாத்தீங்க...ஒகே நம்பறேன் நம்பறேன்.. :)))

அப்பாவி தங்கமணி said...

@ middleclassmadhavi - வாவ்...சூப்பர் ஐடியா...இருங்க பாக்றேன்...
செவ்வாய்கிழமை stats :-
Page loads - 381
Unique Visitors - 179
Returning Visitors - 99
மறுக்கா மறுக்கா கூட 99 பேரு வந்து போய் இருக்கீக... பாசக்கார நட்புகள புரிஞ்சுக்காம பேசிட்டேன்... பொது மன்னிப்பு கேட்டுகரனுங்க... :)))
தேங்க்ஸ் மாதவி... (உங்க பேரே அதானா..? ஜஸ்ட் அ கொஸ்டின்...)

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா...

//இந்த தலைமுறையினர் பாராட்டுக் குரியவர்கள் தான்//
இதை நானும் நினைப்பதுண்டு... :))

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ MANO நாஞ்சில் மனோ - ரெம்ப நன்றிங்க மனோ

@ siva - ஹலோ...ஊரே வந்துட்டு போனப்புறம் வந்து என்ன மீ தி பர்ஸ்ட்... மீ தி கஸ்ட்னு... :)))

அப்பாவி தங்கமணி said...

@ My days(Gops) -
//kooda vaangura edathula bucket vaangitu cycle'la doubles vandhom..... nalla ketkuraangai ah question >......//
சொந்த அனுபவமா கோப்ஸ்... ஜஸ்ட் அ கொஸ்டின் உங்களுக்கும்...நோ டென்ஷன்... :)))

நெறைய ஐடியா எல்லாம் குடுத்து இருக்கேங்க கதைக்கு...நன்றிங்க... எல்லாத்தையும் implement பண்ணிடுவோம்... ஹா ஹா ஹா...:)))...stunt மாஸ்டர்னு யாரை போடலாம்னு கொஞ்சம் ஐடியா சொல்லுங்க... நெறைய பேரை போட்டு தள்ளி நல்ல experience irukkara நம்ம பொற்கொடிய போடலாம்னு நெறைய பேரு சொல்றாங்க... உங்க அபிப்ராயம் என்னவோ...:)))

//bcom mudichi ipa thaan enakku 3yrs aagudhu... so neenga enakku akka thaaney?//
இது உண்மைனா நான் அக்கா தான்... ஆன நான் BCOM படிக்கற காலத்துல இருந்தே நீங்க பதிவு எழுதறதா ஒரு நியூஸ் வந்ததே...அது சும்மா வதந்தியோ... சும்மா... நோ டென்ஷன் பிரதர்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal - ரெம்ப நன்றிங்க ஜலீலா... தொடர்ந்து படிக்கறதுக்கும் வந்து தேடினத்துக்கும்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//ஏய் புவனா, உன் மனசில என்னதான் நினைச்சுட்டு இருக்கே. ஹி ஹி//
இந்த டயலாக் எல்லாம் ஹீரோ ஹீரோயன் தான் பேசணும்... வில்லி எல்லாம் ஏன் பேசறாங்கனு தெரியலயே... யோவ் assistant டைரக்டர்... டயலாக் பேப்பர் மாத்தி குடுத்துடியா என்ன?... :))))

//நாங்க எல்லாரும் அடிக்கடி எட்டிப் பார்த்திட்டே இருந்தோம். கதையில் இன்டரெஸ்ட் இல்லை. உங்கள கடிக்கத்தேன். ஹா ஹா ஹா//
அதானே பாத்தேன்...என்னடா பாசம் பொங்குதேனு... ப்ரூட்டஸ்...

//பக்கம் பக்கமா திட்டி mail எழுதி எங்கேயோ வச்சிருக்கேன். இருங்க, தேடி எடுத்து போடறேன்//
கிடைக்கவே கிடைக்காது அம்மணி... என்னை திட்டன ஈமெயில் எல்லாம் தானே அழிஞ்சு போய்டும்... ஹா ஹா ஹா... :)))

//God. Then why he wanted to beat up Sathes? Phew!//
அவனுக்குள ஒரு 5 % அனாமிகா இருக்கறதால... :))))

//அட பாவமே. வாசகன் மாம்ஸ் ப்ரொபஸரா? ஸாரி. எனக்கு உங்கள இன்னேல இருந்து தெரியாது. ஹா ஹா. //
சூப்பர் சூப்பர்... மீ ஹாப்பி ஹாப்பி...

//கார்த்தி ஸார், இதோ வந்திட்டேன்.நிறைய க்ளாஸ் கட் பண்ணிட்டேன். அதெல்லாம் நோட்ஸ் எழுதிட்டப்புறம் வந்து பேசறேன்//
நோட்ஸ் எல்லாம் எழுதுவீங்களா மேடம் நீங்க? ஹா ஹா ஹா... :))

//ப்ரியமான எனிமிக்கு,
ஐயாம் பாக்//
ப்ரியா அக்கா.. உங்களுக்கு எதிரி வெளில இல்ல... :))

//சந்தடி சாக்கில் என் பெயரை சுனாமிகான்னு மாத்தின எல்லோருக்கும் வந்து வச்சுக்கறேன்//
உண்மை சுடும்... ஒத்துக்கறேன் அனாமிகா... ஜெலுசில் வேணுமா மேடம்?....:))))

//அட பொற்கொடிக்கா, உங்க பெயரை நான் கேடின்னு இல்ல இவ்ளோ நாளா படிச்சுட்டு இருக்கேன். ஸாரி//
நான் ஒண்ணும் சொல்லலை... அடுத்த பலி நான் இல்லை... மீ எஸ்கேப்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//உன்னை மாதிரி உங்கூர் அக்காஉம் சொல்லிட்டானா எவ்வளவு நல்லா இருக்கும். ஹா ஹா ஹா ஹா. //
இந்த கமெண்ட் அவிக படிக்கணும்...அப்புறம் இருக்கு கச்சேரி... ஹா ஹா ஹா.... :)))

அன்னு said...

ஆஹா இந்த தடவை வெளிநாட்டு வில்லனா? நடத்துங்க நடத்துங்க. :))

எல் கே said...

@அனாமிகா

கவலை வேண்டாம் .. நானும் இங்கதான் இருக்கேன்.

///aaaavvvvv ....நான் அப்புறம் வரேன் பை////

ஓபென சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்.. நீயா கேட்கற.. அப்புறம் வருத்தப் படக் கூடாது... நல்ல தூக்கம் வருது இதைப் படிச்சிட்டு ... அதான்

vgr said...

enna solradune therla...

Rajeswari said...

கதையிலே திடீர்ர்த்திருப்பம்!
பார்த்துத்திருப்புங்க!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல சுவாரஸ்யமா போகும் போது.. தொடரும் போடுரதே வேலையா போச்சு உங்களுக்கு...

ஹ்ம்ம்ம். சரி அடுத்த வாரம் வரை வெயிட் பண்றேன்.. வேற என்ன பண்றது...

அச்சோ.. அந்த மீரா.. யார லவ் பண்றாங்க...?? இப்படி தொடரும் போட்டது படுத்துறீங்க... போங்க.. :-))

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ஹி ஹி... உங்க ஊர் பக்கம் தான் வில்லனுக்கு சொந்த ஊராம்... கேள்விப்பட்டத சொன்னேன்... அம்புட்டுதேன்... ஹா ஹா... :)))

@ எல் கே - avvvvvvvvvvvvvv.....

@ vgr - இட்ஸ் ஒகே... மனசுல வெச்சுக்க மாட்டேன் சொல்லிடுங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Rajeswari - சரிங்க... left turn சிக்னல் விழுந்ததும் தான் திருப்புவேன்... ஹா ஹா... நன்றிங்க ராஜேஸ்வரி

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க ஆனந்தி... அடுத்த வாரம் மிச்சத்த சொல்றேன்... :)

Charles said...

Interestig Story... wonderful flow... Plese spare some time to post regularly.. :) (Twice a week if possible) ...

அனாமிகா துவாரகன் said...

@ கார்த்தி சார்,
நீங்க சொல்ல சொல்ல சொந்த செலவில் சூனியம் வச்சுட்டேன். உங்களுக்கு இதப்படிச்சு தூக்கம் தான் வந்துச்சு. என்க்கு இவங்க கட் ஸு கதை படிச்சப்புறம், என்ன ஆச்சு தெரியுமா? படிச்சுட்டு இருந்தப்போ ட்ங்குன்னு ஒரு பாக்கிரவுன்ட் மியூச் கேட்டுச்சாம். வந்து பார்த்தா நா பேசறைஞ்ச மாதிரி இருந்தேனாம். பசங்க தண்ணி தெளிச்செல்லாம் பாத்து கூட நான் அசையவே இல்லையாம். அப்புறம் மந்திரவாதி கிட்ட கூடிப்போக வேண்டி ஆச்சு. வேப்பிலை அடிச்சு தான் என்னை நோமலுக்கு கொண்டுவந்தாங். அம்மாவேற இனிமே அ.த ப்லொக் படிக்காதேடா கண்ணான்னு சொல்லி இருக்காங்க. =)) (இதப் படிச்சு அப்பாவிக்கு பிளட் ப்ரஷர் 180/120 ஆச்சுதாம். அப்டியா?)

அனாமிகா துவாரகன் said...

ஐயய்யா. என்ன எல்லாரும் ரொம்ப சின்னப்புள்ள தனமா கேள்வி கேக்கறாங்க. ப்ரியமான தோழி பாக்கல. அத மாதிரி தான் சதீசும் மீராவும்.

பிரியாத வரம் வேண்டும் பாத்தியான்னு யாராவது கேட்டா கொன்னுபோடுவேன் கொன்னு.

ஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், யாருப்பா இந்த வினு. எங்கே இருக்காரு. கொஞ்சம் அட்ரஸ் கண்டு பிடிச்சு சொல்லுங்க. இன்னொருவாட்டி சதீசையும் மீராவையும் சேர்க்கற மாதிரி பேசினே, மவனே உன்னை உண்டு இல்லேன்னு பண்ணிடுவேன். ஒருமையில் சொல்ற டயலொக் தான் சினிமாவில சொல்றாங்க. சோ கண்டுக்காதீங்க வினு சார்.

அனாமிகா துவாரகன் said...

@பத்பநாபன் சார்,
இந்த கதை உங்கள ரொம்பவே யோசிக்க வைக்கறது போல =))

பொஸசிவ்னெஸ் பையன் அம்மாவுக்கு ரொம்பவே அதிகம் இருக்குன்னு கேள்வி. அதனால தான் மருமகளுடன் குடும்பி பிடி சண்டைன்னு கேள்வி. அவங்க இளைய தலைமுறையா? சும்மா ஒரு டவுட்டு தேன்.

மூணு வருசம் ஒன்னா கூட இருக்கற பசங்களில் யாராவது காதலிச்சா நான் எப்படி எடுத்துப்பேனு தெரியாது. பொஸசிவ்னென்ஸ் எல்லார் கிட்டயும் இருக்கு. நான் ஆஷை டாக்குன்னு கூப்பிடறேன்னு அபியோ அல்லது துவாவோ கூப்பிட்டாலே எனக்கு கோவம் வரும். இத்தனைக்கும் படிப்பு முடிஞ்சு போனா திருப்ப சந்திப்போமோ தெரியாது. பொஸசிவ்னெஸ் எல்லாம் ரொம்ப சகஜம் சார்.

இந்த அப்பாவி நம் இளைய தலைமுறையைப் பத்தி ரொம்ப தப்பு தப்பா சொல்லி வைக்கறாங்கனு நினைக்கிறேன். கர்ர்ர்ர்ர்ர்..

அனாமிகா துவாரகன் said...
This comment has been removed by the author.
அனாமிகா துவாரகன் said...

@ அடிப்பாவி தங்கமணி,

//நோட்ஸ் எல்லாம் எழுதுவீங்களா மேடம் நீங்க? ஹா ஹா ஹா... :))//

எங்க க்ளாசில மூணு பவர்பொயின்ட் ஸ்லைட் ஒரு கொலமிலும் அடுத்த கொலமில் லைன்ஸ்சும் போட்டு கொடுப்பாங்க. லெக்சரர் பேச பேச கட கடன்னு அந்த லைன்ஸ்ல நோட்ஸ் எழுதிக்கறது படிக்கற பிள்ளைங்களோட வழக்கம். சில பேர் ஹா ஹா ஹா.

5% அனாமிகாவா. அது ரொம்பவே அதிகமான டிசீஸ் ஆச்சே. அச்சச்சோ. 1% தான் மாக்சிமம் ஒருத்தர் பிளட்ல இருக்கலாம்.

அனாமிகா துவாரகன் said...

முதல்ல போர்க்கொடின்னு படிச்சேன். அப்புறம் எப்படியோ கேடினு படிச்சேன். என்ன பண்ணறது அவங்க தான் 001 ஆக வருவாங்கனு அப்போ தெரியாதே. நீங்க கோத்துவிடற வேலையை விட்டுடுங்க அம்மணீ.

அனாமிகா துவாரகன் said...

@ அடப்பாவி மை டேய்ஸ் கோப்ஸ்,
ஏனைய்யா உனக்கு இவ்ளோ வில்லத்தனம். ஆனாலும் உங்க சஜஷன்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

@ வாசகன் மாம்ஸ்,
முதல்ல அக்கா முடியாதுன்னு சொன்னப்போ தேவதாஸ் கணக்கா தாடி வைச்சுண்டு பாரு பாருன்னு கள்ளு கடை வாசலில் விழுந்து இருந்தீங்களாம்னு இல்ல புவனாக்கா சொன்னா? அப்டி இல்லையா? அசச்சோ. ஹா ஹா ஹா.

(எப்பூடி)

அவங்க நாலு க்வஸ்ஷனையும் என்னோட பி.எச்.டி ரிசேச் க்வஸ்ஷனா எடுத்தா, நாலு பேப்பரை ஈசியா சப்மிட் பண்ணலாம். அப்போ அதுக்கு ஆன்சரை கண்டுபிடிக்கறேன். இப்போ என்ன விட்டுடுங்கோ. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெறும்பய said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்

அருமையா இருக்கு.. காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்கு..

அப்பாவி தங்கமணி said...

@ Charles - Thanks a lot Charles, really appreciate your time...will try to post regularly... Thanks...:)

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - //ட்ங்குன்னு ஒரு பாக்கிரவுன்ட் மியூச் கேட்டுச்சாம். வந்து பார்த்தா நா பேசறைஞ்ச மாதிரி இருந்தேனாம்//
பேயரஞ்சா ட்ங்குன்னு மியூசிக்கா? ராம் கோபால் வர்மா சினிமா நெறைய பார்க்கும் பழக்கம் இருக்கோ... ஹா அஹ ஹா...:)

//வேப்பிலை அடிச்சு தான் என்னை நோமலுக்கு கொண்டுவந்தாங்//
உனக்கு கூட அதெல்லாம் வொர்க் அவுட் ஆகுதா...ஜஸ்ட் அ கொஸ்டின் அம்மணி...:)

//இதப் படிச்சு அப்பாவிக்கு பிளட் ப்ரஷர் 180/120 ஆச்சுதாம்//
இல்லையே... Systolic 120 / Diastolic 80 sound and healthy...ha ha ha...:)

//ப்ரியமான தோழி / பிரியாத வரம் வேண்டும்//
வேற எதுனா பாக்கி இருக்கா? grrrrrrrrrrrrrrr...........

//சோ கண்டுக்காதீங்க வினு சார்//
கரெக்ட்...நானும் அதே தான் சொல்றேன் வினு... போஸ்ட் படிச்சே மயக்கம் போடற பலசாலி சொல்றதெல்லாம் கண்டுக்காதீங்க...:)))

//5% அனாமிகாவா. அது ரொம்பவே அதிகமான டிசீஸ் ஆச்சே. அச்சச்சோ. 1% தான் மாக்சிமம் ஒருத்தர் பிளட்ல இருக்கலாம்//
ரெம்ப கரெக்ட்...அதுக்கு மேல இருந்தா பூமி தாங்காது தாயே...:))

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க

Post a Comment