Tuesday, February 08, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 7)


பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6

அன்று தேர்வுகள் முடியும் கடைசி நாள். கிறிஸ்துமஸ்க்கு வீடு செல்லும் ஆர்வம் நிறைய பேரின் கண்களில் மின்னியது, தேர்வின் பரபரப்பையும் மீறி. ஆனால் ஸ்டீவ் "போகணுமா" என தவித்தான்

வீட்டில் உள்ளோருக்கு சில பரிசுகள் வாங்க வேண்டி இருந்தது, பெரும்பாலும் முன்பே வாங்கி இருந்தான். சிலது மட்டும் மறுநாள் வாங்கிய பின் ஊருக்கு செல்வதென முடிவு செய்திருந்தான். போவது என முன்பே முடிவு செய்தது தான் என்றாலும் ஏனோ முழுமனதும் அதை ஏற்கவில்லை

போன வருடம் வரை கிறிஸ்துமஸ்க்கு ஊருக்கு செல்லும் நாளுக்கு பல நாள் திட்டம் தீட்டுவான். இந்த முறை மீராவை பிரிந்திருக்க வேண்டிய காரணத்தால் எல்லாமும் இரண்டாம் பட்சமாய் தோன்றியது

மறுநாள் மதுவும் ஸ்டீவும் தான் ஷாப்பிங் சென்றனர். நால்வரும் செல்வதென தான் திட்டம் இருந்தது. அதற்குள் மீராவின் உறவினர் யாரோ டொரோண்டோவில், அவர்கள் இருவரையும் விருந்துக்கு அழைத்ததாய் அவள் தந்தை அங்கு செல்லுமாறு இந்தியாவில் இருந்து போன் செய்தார் என அவர்கள் வர இயலாது என்றனர்

ஸ்டீவிர்க்கு அவர்கள் உண்மையிலேயே உறவினர் வீட்டிற்கு தான் சென்றனரா என சந்தேகம் கூட வந்தது. காதல் வந்தால் இலவச இணைப்பாய் சந்தேகம் வருவது இயல்பு தானே

முன் தினமே மீராவிடமும் சதீஸிடமும் புது வருட வாழ்த்துகளை கூறி விடை பெற்றான் ஸ்டீவ். இந்த பிரிவை எண்ணி தான் தவிப்பது போல் மீராவின் மனத்திலும் ஏதேனும் பாதிப்பு இருக்குமோ என அவள் முகத்தில் இருந்து படிக்க முயன்று தோற்றான். சதீஷ் போலவே அவளும் இயல்பாய் விடை கொடுத்தாள்

ஸ்டீவ் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தை மது கவனிக்க தவறவில்லை. விடுமுறை முடிந்து வந்ததும் அவனிடம் இது பற்றி பேச வேண்டுமென நினைத்து கொண்டாள்

********************************************

ஒட்டாவா (Ottawa) மாநகரை விட்டு சற்று தள்ளி country sideல் இருந்த அந்த பெரிய வீட்டில், நீண்ட நாட்களுக்கு பின் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்த அந்த இனிய மாலை பொழுது, இன்னும் முழுமை பெறாதது போல் எல்லோரும் நொடிக்கொருமுறை வாசலை பார்த்த வண்ணம் இருந்தனர்

அனைவரின் எதிர்பார்ப்பை கண்ட ஸ்டீவின் தந்தை மைகேல் "See....I told you, your son will always be late" என்றார் கோபமாய் தன் மனைவி சிலியாவிடம். அவள் முகம் சட்டென வாடியது

மூன்று பெண் மூன்று ஆண் என ஆறு பிள்ளைகளை பெற்ற சிலியாவிற்கு கடைக்குட்டி ஸ்டீவ் தான் எப்போதும் செல்லம். மற்ற பிள்ளைகள் சமயத்தில் அதை குறை கூறுவதும் உண்டு. ஆனால் ஸ்டீவ் என்றால் அவர்களுக்கும் செல்லம் தான்

வளரும் பருவத்தில் வீட்டில் யார் செய்யும் தவறுகளுக்கும் இளையவனான ஸ்டீவ் மீது பழி போட்டு தந்தையிடம் மாட்டி வைத்தாலும் யாரையும் காட்டி கொடுக்காமல் மௌனமாய் திட்டுகளை வாங்கி நிற்பான். அதற்கே தந்தை அகன்றதும் எல்லாரும் அவனை தூக்கி செல்லம் கொண்டாடுவார்கள்

வளர்ந்த பின்னும் அந்த பாசம் அவர்களுக்குள் அப்படியே தான் இருந்தது. ஆனால், ஐந்தாவது பிள்ளைக்கு  பின் ஐந்து வருடம் கழித்து  எதிர்பாராத  பரிசாய் கிடைத்த ஸ்டீவ், கடவுள் அளிந்த அதிகபட்ச  பரிசாய்  எண்ணினாள்  சிலியா. 

மற்ற  பிள்ளைகள் வளர்ந்து விட்ட காரணத்தால், அவனை விளையாட்டில் சேர்த்து  கொள்ளாமல்  விலக்க, அன்னையே அவன் விளையாட்டு தோழியும் ஆனாள்

அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் வாசலில் ஸ்டீவின் கார் சத்தம் கேட்க "Steve is here" என்றபடி வேகமாய் வெளியே சென்றார் சிலியா, winter coat கூட அணியாமல்

அவன் வீட்டிற்குள் வரும் வரை கூட பொறுமை அற்றவளாய்,  "Steevi ..." என தோளுக்கு மேல்  இரண்டடி வளர்ந்த  பிள்ளையை  எட்டி நெற்றியில்  முத்தமிட்டாள் அன்னை

அன்னை தன் மீது கொண்ட அன்பை உணர்ந்தவனான ஸ்டீவ் "I love you Mamma..." என்றவன், அன்னை குளிரில் நடுங்குவதை உணர்ந்தவனாய் அணைத்து விரைவாய் உள்ளே அழைத்து வந்தான்

அடுத்து ஐந்து நிமிடத்தில் முன் அறையில் அவனை சுற்றி அண்ணன்கள் அக்காக்கள் குடும்பம் சகிதமாய், அவர்களின் வாரிசுகள் என அனைவரும் நிற்க பேச்சும் சிரிப்புமாய் வீட்டிற்கு அப்போது தான் உயிர் வந்தது போல் உணர்ந்தாள் சிலியா

தன் கணவன் அருகில் வந்து அமர்ந்தவள் "Mio figlio" என சிரித்து "My son... " என  இத்தாலியில் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அழுத்தமாய்  தன் மகன் என்றவள் "brings light to this house... brings life to this home..." என பெருமையாய் பார்த்தாள் சிலியா

கடைசி பிள்ளையான ஸ்டீவின் மீது தன் மனைவி கொண்ட கரை கடந்த அன்பை புரிந்த மைகேல் "Yeah, I can see you're 10 years younger than 10 minutes before" என மனைவியின் சந்தோசத்தை ரசித்தவாறே மெல்லிய குரலில் கூறி கேலியாய் சிரித்தார்

பிள்ளைகள் முன் கண்டிப்பான தந்தை பாத்திரத்தை ஏற்று சிடுசிடுவென இருக்கும் மைகேல், சிலியாவின் முன் தானே பிள்ளையாகி போவார். அவரின் பலம் பலவீனம் இரண்டும் சிலியா தான். கணவனின் கேலியை ரசித்த போதும் எதுவும் கூறாமல் மீண்டும் பிள்ளைகள் இருந்த முன் அறைக்கு சென்றாள் சிலியா

மற்ற பிள்ளைகள் விட சிலியா ஸ்டீவிர்க்கு அதிகம் சலுகை கொடுக்கிறாள் என அவனிடம் அதிக கண்டிப்பு காட்டுவார் மைகேல் எப்போதும். அன்னை தந்தை இருவரில் ஒருவரேனும் கண்டிப்பாய் இருக்கவேணுமென அவர் வளர்ந்த தலைமுறையின் கணக்கீடு

சிறு வயதிலேயே இத்தாலியில் இருந்து இந்தியா பின் கனடா என திட்டம் இருந்ததால் பிள்ளைகளிடம் பல மொழிகளை திணித்து குழப்ப வேண்டாமென பொதுவான ஆங்கில மொழியே வீட்டில் அதிகம் பேசப்பட்டது. இத்தாலி மொழியையும் பிள்ளைகள் சிறிது அறிந்தே இருந்தனர்

அதிலும் ஸ்டீவ் தன் அன்னை பேச விரும்புவாள் என நன்றாகவே கற்றுகொண்டான் ஆர்வமுடன். இயல்பிலேயே கற்கும் ஆர்வம் அவனிடம் அதிகம் இருந்ததும் ஒரு காரணம்

உடன் பிறந்தோருடன் அளாவல் முடிந்ததும் உள் அறைக்கு வந்தவன் "Hi dad..." என எதிர் சோபாவில் தன் அன்னையின் அருகில் அமர்ந்தான் ஸ்டீவ்

மகனை இரண்டு மாதங்களுக்கு பின் காணும் மகிழ்ச்சி தெறிந்த போதும் கண்டிப்பான தந்தை பாத்திரம் அதை எப்போதும் போல் வெளிக்காட்டவில்லை "Hi Steve... how are you?"

"Fine dad... And you?"

"Good... does your watch still shows 7pm?" என்றார் அவன் சொன்ன நேரத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டுபவராய்

"It was snowing...and holiday traffic...and..." என்ற ஸ்டீவை இடைமறித்த அவன் தந்தை "A good driver would forecast it all..." எனவும்

"Michael... he's just arrived... you'll have another 3 weeks with him to talk about that...can we have dinner now?" என மகனை காப்பாற்ற வந்தார் சிலியா

"I'm all apetite... " என எழுந்தார். அவரை தொடர்ந்து மற்றவர்களும் உணவு மேஜைக்கு சென்று அமர்ந்தனர்

ஆனால் ஸ்டீவ் அன்னையை தன் தோளில் உரிமையாய் சாய்த்து கொண்டவன் ஒரு ஒரு பதார்த்தமாய் பார்த்து "ஹ்ம்ம்" என முகர்ந்தே பசி தீர்த்து கொள்பவன் போல் "Mozzarella Sticks , Garlic Bread , Caesar Salad , Eggplant Parmigiana , Roasted Red Peppers , Pizzetto,Pasta..... Mom .... even my memory can't take more... smells delicious... home sweet home...I really envy dad...hmm" என்றான்

சிலியா நினைத்தாள், இதுதான் இவனுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் உள்ள வித்தியாசம் என. மற்றவர்களுக்கு இப்படி பேசி பெற்றவளை முகம் மலர செய்யத்தெரியாது. அதற்காய் பாசம் இல்லை என்றில்லை, இப்படி வாய் விட்டு சொல்லும் குணம் வாய்க்கவில்லை

"Thats my boy..." என மகனின் நெற்றியில் இதழ் பதித்தாள் அன்னை

"You mastered the art of flattering mom with words Steevi..." எப்போதும் போல் பேசியே அம்மாவை மயக்கி விடுவான் என கேலி செய்தனர் அவன் அக்காக்கள் மூவரும்

அந்த நிமிடம் "மீராவை என் பேச்சில் மயக்க முடிந்தால் நன்றாய் இருக்குமே" என ஏக்கம் துளிர்த்தது அவன் மனதில். அவளை நேற்று தானே பார்த்தேன, ஆனால் பல நாள் ஆனது போல் அப்போதே பார்க்க வேண்டும் என என்ன ஏக்கம் இது மனதில் என நினைத்தான்

தன்னை சுற்றி தனக்காக இத்தனை உறவுகள் இருந்தும் அவள் நினைவில் தான் திளைத்து நிற்பது அவனுக்கே ஏனோ குற்ற உணர்வை தூண்டியது

அவன் அன்னைக்கு என்றில்லை, எல்லோர்க்கும் பிரியமானவன் தான் அந்த வீட்டில். கடைசி அண்ணனின் ஒரு வயது பிள்ளை கார்லோ தொடங்கி முதல் அக்காவின் பெண் பத்து வயது ரீட்டா வரை குழந்தைகளுக்கு கூட ஸ்டீவ் எப்போதும் "ஸ்வீட் அங்கிள் ஸ்டீவ்" தான். குழந்தைகளுக்கு சமமாய் விளையாடி களிப்புற செய்வான் அவர்களை

மற்ற நேரத்தில் வேலை ஆட்களை சமைக்க அனுமதித்தாலும் இது போன்ற சமயங்களில் தன் மேற்பார்வையில் எல்லாவற்றயும் செய்ய விரும்புவாள் சிலியா. இந்த விசயத்தில் சென்ற தலைமுறை இந்திய அம்மாக்களும் இத்தாலிய அம்மாக்களும் ஒரு போல் தான்

மிகப்பெரிய buffet டேபிளில் வேலை ஆட்களால் பதார்த்தங்கள் எடுத்து வைக்கப்பட்டன. அந்த வீட்டை காணும் யாரும் ஒரு பாதிரியாரின் வீடென கூற இயலாது. பாதிரியாரின் வருமானத்தை மட்டும் நம்பி இருக்கும் குடும்பம் அல்ல அவர்களுடையது

இத்தாலியில் மிகப்பெரிய மர வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரியாய் இருந்தவர் சிலியாவின் தந்தை. அவர்களின் ஓரே மகள் சிலியா. இந்தியாவில் இருந்த போதே அடிக்கடி அங்கு சென்று தங்கி விடுவர்

கனடா வந்ததும் இனி அங்கு தான் இருப்பது என முடிவை மகள் சொன்னதும்  அவர்களும் இத்தாலி வியாபாரத்தை விற்றுவிட்டு இங்கு அதே தொழிலை மகளின் மேற்பார்வையில் நல்ல முறையில் தொடங்கினர்

அது சிலியாவின் திறமையால் அவள் பெற்றோரின் மறைவுக்கு பின்னும் பன்மடங்கு பெருகி சிலியாவின் பிள்ளைகள் ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்று நடத்தி வந்தனர் இப்போது. ஆனாலும் தலைமை பொறுப்பு இன்னும் சிலியாவிடம் தான் இருந்தது

ஆனால் இந்த வியாபார விஷயங்கள் எதிலும் சிலியாவின் கணவர் மைகேல் தன்னை சம்மந்தப்படுத்தி கொள்வதில்லை. தானுண்டு தன் சர்ச் பணிகள் உண்டென இருப்பார். வியாபாரத்தில் கொழிக்கும் அளவுக்கு மீறிய பணம் பிள்ளைகளை வழி தவறி போக செய்திடுமோ என்ற அச்சமும் அவரின் கண்டிப்புக்கு இன்னொரு காரணம்

ஐம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணும் அந்த பிரமாண்ட உணவு மேஜையில் குடும்பம் மொத்தமும் அமர்ந்து பேச்சும் சிரிப்புமாய் ஒரு வழியாய் உணவு முடிந்தது. அதன் பின் சம்பிரதாயமாய் ஹாலிடே வைன் அருந்தினர்

அதன் பின் பேச்சு Urn of Fate பற்றி ஆரம்பித்தது. இத்தாலிய சம்பிரதாயத்தில் Urn of Fate என்றழைக்கப்படுவது ஒரு பெரிய Ornamental Bowl போன்ற ஒன்று. அதில் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரு பரிசு வைக்கப்பட்டு இருக்கும், அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் ட்ரீ அருகில் வைப்பது போல்

சிறுபிள்ளைகள் உறக்கத்திற்கு அழும் நேரம் வரை நீண்டது பேச்சும் சிரிப்பும். அதன் பின் ஒவ்வொருவராய் உறங்க செல்ல, மீராவிற்கு அழைக்கலாமா என நினைத்தான் ஸ்டீவ். மணி பன்னிரண்டை நெருங்கி இருக்க, வேண்டாமென முடிவு செய்தவனாய் உறங்க சென்றான்

**************************************

அவர்கள் வீட்டின் பின் பக்கம் உள்ள இடத்தில் ஒரு சிறிய valley போன்ற செயற்கை அமைப்பில் ஐஸ் ஸ்கேடிங் செய்ய ஏதுவாய் இவர்களுக்கென அமைக்கப்பட்டு இருந்தது

மறுநாள் ஸ்டீவ் விழிக்கும் போதே அங்கு பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடும் குதூகல கூச்சல் கேட்டது. அதிலும் தன் மூத்த அண்ணனின் குரலே சத்தமாய் கேட்டது. "எப்போதும் போல்" என நினைத்து சிரித்தான் ஸ்டீவ்

தானும் தன் ஸ்கேடிங் உபகரணங்களை தேடி எடுத்து கொண்டு விரைந்தான் ஸ்டீவ். பிள்ளைகளுக்கு சரியாய், சற்று விளையாடி ஒய்ந்ததும் அங்கிருந்த திட்டில் அமர்ந்து குடும்பத்தின் மற்றவர்களின் கலாட்டாக்களை வேடிக்கை பார்த்தான்

நம் குடும்பத்தை மீரா எப்படி எடுத்து கொள்வாள் என அவன் எண்ணம் அவளிடம் சென்றது. ஒரு முறை பேச்சு வாக்கில் தனக்கு ஐந்து உடன் பிறந்தவர்கள் என ஸ்டீவ் கூற ஆச்சிர்யமாய் பார்த்தாள் மீரா

"ஜாலியா இருக்குமில்ல ஸ்டீவ்... ஒரே சண்டை கலாட்டா....ச்சே... I never had it...I'm a single child" என அவள் ஏக்க பார்வை பார்த்தது இப்போது கண் முன் தோன்றியது

அப்போதே வாய் வரை வந்தது வார்த்தைகள் "வா, அந்த சண்டையில் கலாட்டாவில் உன்னையும் ஒருத்தியாய் ஏற்று கொள்ள தவிக்கிறேன்" என, ஆனால் அவளை பார்த்தால் தான் வார்த்தைகள் காணாமல் போகின்றனவே என நினைப்பில் முறுவலித்தான்

"Who is that girl?" என அருகில் குரல் கேட்க "What?" என விதிர்த்து நிமிர்ந்தான் ஸ்டீவ்

"Tell me who is that girl? It will be our little secret for now..." என்றாள் ஸ்டீவின் முதல் அக்கா ஒலிவியா, தம்பியின் தோளில் கை போட்டு சிரித்தவாறே அவன் அருகில் அமர்ந்தாள்

"Who? What?" என புரியாமல் கேட்டான் ஸ்டீவ், தன் அம்மாவிடம் கூட இன்னும் கூறவில்லையே என நினைத்தவனாய்

"Steevi kiddo...its written all over your face that you're in love... I've found out last night itself at the dinner table...tell me who is she?" என ஒலிவியா தீர்மானம் செய்தவள் போல் கேட்க

"ச்சே...இப்படி முகத்தில் தெரியும் படியா உணர்ச்சியை காட்டினேன் நான்" என சமாளிக்க வழி தெரியாமல் திகைத்தான். ஒலிவியா ஸ்டீவை விட பன்னிரண்டு வயது மூத்தவள்

சிறுபிள்ளையாய் அவனை அதிகம் சீராட்டியவள் என்பதால் ஸ்டீவின் அசைவுகளை சுலபமாய் கண்டுபிடித்து விடுவாள். இப்போது அவன் திகைப்பையும் கண்டு கொண்டாள்

"Okay...you're not going to tell me now...so when would we know? is she one of your girlfriends from past?" என கேட்க, இல்லை என சொல்ல துடித்த நாவை கட்டுப்படுத்தியவன்

"Sis...nothing like that...give me a break..." என சிரித்தான், பார்வை தன் பொய்யை காட்டிகொடுத்து  விடுமோ என வேற எங்கோ பார்த்தபடி

"Okay then...Fish must make its way to market one day... I'll know it without sniffing then...." என அவள் சிரிக்க, அதற்கு மேலும் எதுவும் கூறாமல் இருக்க மனம் இல்லாதவனாய்

"Livvy..." என தயங்கியவன் (Oliviaவை Liv அல்லது Livvy என்று தான் சுருக்கி அழைப்பது வழக்கம் அவனுக்கு) "even she doesn't know yet" என்றான்

"What?" என திகைத்தாள் லிவ்வி "Steve...I can see you drowning in her memories even if you've a minute alone... how can you not tell her yet?" என்றாள்

"I will...I will...soon..." என்றான் தானும் தீர்மானம் செய்தவன் போல், அவன் முக வாட்டத்தை கண்ட லிவ்வி

"Will she be thinking about you now?" என வேண்டுமென்றே பேச்சை மாற்றினாள்

அவள் எதிர்பார்த்தது போலவே "I hope so..."என சிரித்தான் ஸ்டீவ்

அதே நேரம், Torontoவில் தன் அறையில் இருந்த மீரா, ஸ்டீவை தான் நினைத்து கொண்டிருந்தாள்....

இனி...
 
ஊரும்உறவும் உன்நினைவை
ஊமைக்காயமாய் மாற்றுமென
உனைவிட்டு விலகினேனடி
ஊடுபாவாய் அங்கும்நுழைவதேனோ!!!

முகத்தின் உணர்ச்சிகளை
மூத்தவள்கூட கண்டுகொண்டாள்
அறியவேண்டிய நீயோ
அந்நியபார்வையில் கொல்கிறாய்!!!

அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்...)

80 பேரு சொல்லி இருக்காக:

அனாமிகா துவாரகன் said...

Hey Vadai is for me

அனாமிகா துவாரகன் said...

Its 4.30 am here. I just got up. காலையிலேயே உங்க பதிவில தான் கண் முழிக்கனுமா? ஆண்டவா? இருங்க படிச்சுட்டு வரேன். வரமால் கூட போவேன்.

அனாமிகா துவாரகன் said...

டு பி ஒனெஸ்ட். ரொம்பவே ஹோம் வேர்க் செய்து எழுதி இருக்கிறீங்க. கண் முன்னாலே கற்பனையில் ஸ்டீவ் வீடும் , குடும்பமும் அழகாகவே தோன்றுகிறார்கள். வெல் ரிட்டின். வடை எனக்கே இப்படியான ஒரு பதிவில கிடச்சதுக்கு சந்தோஷம். கதை நகரல. ஆனாலும், கண்முன்னே படமாகத் தோன்றுவது போல எழுதினதுக்கு பாராட்டுக்கள். சத்தியாமா இந்த பின்னூட்டத்தை நான் தேன் எழுதினேன்.

கோவை ஆவி said...

கதை செகண்ட் கியர்லேருந்து மறுபடியும் பர்ஸ்ட் கியருக்கு போயிடுச்சு.. ஆனா ஒரு இத்தாலியன் வீட்டுக்கு சாப்பிடப் போன பீல் கிடைச்சுது. இத்தாலிய நண்பர்கள் யாரும் இருக்காங்களா உங்களுக்கு??

Anonymous said...

nice description leaving somethings to imagination...btw is he "frowning" or "drowning" ? :)

Krishnaveni said...

"Mio figlio".........do you know italian language? nice write up, a writer should know everything.....your story writing shows that you are a great writer, keep up the good work thangam

அமைதிச்சாரல் said...

அசத்திட்டீங்க அப்பாவி :-))

எஸ்.கே said...

Nicely going....

Chitra said...

ஜில்லுனு மட்டும் இல்லை, இப்போ Toronto வில் below freezing .....ல தொடரும்! :-)

முனியாண்டி said...

சரியான வேகத்திலும் பாதையிலும் பயணிக்கிறது.... சுவாரஸ்யம் கூடிகொண்டே போகிறது.

vgr said...

Well..again...like i just said...:)

enakuu, munnayum pinnayum irukum comments'ai parunga...

enna sorladunu puriala..:)

அப்பாதுரை said...

'will she be thinking about you now' - புத்திசாலித்தனமான கோணம். நன்று. (எனக்கும் கதையைப் பத்த வைக்க எதுனா வேணுமோனு தோணுது - ஐமீன் கதை வேகத்தைக் கூட்ட :)

அப்பாதுரை said...

ஆமா... அவங்க வூட்ல பேசினத மட்டும் இங்கில்ஸ்ல எய்திகிறங்களே?

Vasagan said...

Thankaimani
Busy... attendance only comments after reading the post.

எல் கே said...

ஒரு விஷயம் பாராட்டிடறேன் நெறைய ஹோம் வொர்க் பண்ணி இருக்க. அதுக்கு வாழ்த்துக்கள் ...

எல் கே said...

@அனாமிகா

கழகத்துக்கு துரோகம் பண்ற இதெல்லாம் சரி இல்ல, ஒரு கமென்ட் பாராட்டி போட்ட ரெண்டு கமென்ட் வாரணும்

வெறும்பய said...

எப்பங்க அடுத்த பாகம் வரும்....

எல் கே said...

//எப்பங்க அடுத்த பாகம் வரும்..../ adutha tuesday

சௌந்தர் said...

இந்த கதையோட தமிழ் டப்பிங்க எப்போ வரும்.....

Jaleela Kamal said...

mm அடுத்து மீராவின் நினைவலையை பார்ப்ப்போம்.

Vasagan said...

நமது ஊரில் பிழைப்புக்காக வேறு வேறு இடங்களில் இருந்தாலும் பண்டிகை நாளில் அண்ணன் தம்பி அக்கா தங்கை எல்லாரும் ஒன்று கூடி சந்தோசமாக இருப்பதை இங்கு உள்ள ஒரு குடும்பத்தில் இருப்பது போல் அழகாக எழுதி உள்ளாய்.

\எல் கே சொன்னது…

@அனாமிகா

கழகத்துக்கு துரோகம் பண்ற இதெல்லாம் சரி இல்ல, ஒரு கமென்ட் பாராட்டி போட்ட ரெண்டு கமென்ட் வாரணும்\

கார்த்திக். சுனாமி அ.ஆ.சங்கத்துல சேர்ந்தாச்சு.

\மீராவின் உறவினர் யாரோ டொரோண்டோவில்\

Steve program க்கு வேட்டு வச்ச உறவினர் வேற யாரும் இல்லை நம்ம அப்பாவி தான் அந்த உறவினர்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அதே நேரம், Torontoவில் தன் அறையில் இருந்த மீரா, ஸ்டீவை தான் நினைத்து கொண்டிருந்தாள்....///

...அவ்வ்வ்வ்... இது உங்களுக்கே நல்லா இருக்கா????????

என்னமா கதைய கொண்டு.. போயி.. கடைசியில... இப்படி கட் பண்ணிட்டீங்களே....................


ஸூஊஊஊஊஊஊ
போங்கப்பா... உங்க கூட டூ... :(

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///காதல் வந்தால் இலவச இணைப்பாய் சந்தேகம் வருவது இயல்பு தானே///

....சின்ன சின்ன விஷயம் கூட.. விடாம அழகா சொல்லி இருக்கீங்க..

ரொம்ப நல்லா போகுது பா. ;-))

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப அழகாப் போகிறது. டிஃபரண்ட் ஆங்கிள். திஸ் இஸ் அ நௌ ஸ்டோரி!!!
த்ரில்ல்ஸ் அண்ட் ஸ்பில்ஸ்.

siva said...

கடைசியா தமிழ் டப்பிங்ல ஒரு இங்கிலீஷ் பிலிம் பாக்றது போல இருக்கு

கதை எங்கே

ஒரு இத்தாலிக்கு நம்ம இந்திய பொண்ண கொடுப்பதை வன்மையாக எங்கள் சங்கம் கண்டிக்கிறது

ஒரு இத்தாலி சமாளிக்க முடியல..(நோ பொலிடிக்ஸ்..பொதுவா சொன்னேன் )

நல்ல இருக்குங்க அடுத்த போஸ்ட் கொஞ்சம் fast....ப்ளீஸ்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

இத்தாலிய பாரம்பரியத்தை சொல்வதால் இது அரசியல் கலந்த கதை என்ப்று கூறி வன்மையாக கண்டிக்கிறேன்.
jokes apart, மிகவும் சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது.

காதல் செவ்வாய், உண்மையிலேயே நாள் இளமையுடன் இருக்க வைக்கிறது.

தொடருங்கள் சகோ.

குறிப்பு: ரொம்ப இழுத்துக்கிட்டே போகுதே, கண்ணித்தீவு மாதிரி இருக்காதுல்ல??

Arun Prasath said...

அதே நேரம், Torontoவில் தன் அறையில் இருந்த மீரா, ஸ்டீவை தான் நினைத்து கொண்டிருந்தாள்....//

ஆகா அப்டியா சேதி... சரி மீரா சதீஷ் உறவு என்ன... தெளிவா தெரிலயே

ஹுஸைனம்மா said...

ஸ்டீவ் அப்பா பாதிரியார் ஆச்சே, அப்ப சோனியா குடும்பத்தைத் தெரியுமாமா?

//குறிப்பு: ரொம்ப இழுத்துக்கிட்டே போகுதே, கண்ணித்தீவு மாதிரி இருக்காதுல்ல?? //

அபுநிஹான், நீங்க, அப்பாவி பிளாக்ல படிக்கிற மொத கதையா இது? அதான் அப்பாவியா இப்புடி கேட்டிருக்கீஹ!!

எனக்கு இந்தக் கதையைப் படிச்சதும், இப்ப ஆர்யா நடிச்சு ஒரு படம் வந்துதே.. “வாம்மா துரையம்மா..” பாட்டு வருமே.. அது ஞாபகம் வருது!!

இந்த இத்தாலி பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சுக்கிறதுக்காக உங்க இட்டாலியன் கொலீகை என்ன பாடு படுத்திருப்பிங்கன்னு நெனச்சா... பாவம் அந்த இட்டாலியன் கொலீக்!! ;-))))))))))))

சே.குமார் said...

சரியாக பயணிக்கிறது. தொடருங்கள் சகோ.

பத்மநாபன் said...

இத்தாலிக்காரர்களும் பாசக்காரர்களாக இருக்கிறார்களே ..அதை கதையில் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்...

மீராவுக்குள் மனமாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டது ...இனி ஸ்டீவ் + மீரா ஜில் கூட ஆரம்பிக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

adadaa நான் லேட்டா?

தங்கம்பழனி said...

எனக்கும் கூட பத்நாபன் சொன்னதுபோலத்தான் நினைக்கத்தோன்றுகிறது..! அப்படித்தானே ஸ்டீவ்,மீரா..?

RVS said...

டெம்ப்ளேட் கமென்ட்.. நல்லா இருக்குங்க.. (நடுவுல ரெண்டு மூணு பார்ட் மிஸ் பண்ணிட்டேன். அதனாலதான்... ) ;-)

Anonymous said...

//"I love you Mamma..."//

I missed you mamma என்று போட்டிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.

- Ana

Anonymous said...

ஹல்லோ. வாசு மாமு (வாசகன் ரொம்ப பெரியசா இருக்கு) நாங்க எல்லாம் எதிர் கட்சின்னாலும், நல்லதை நல்லதுன்னு தான் சொல்லுவோம். ஹா ஹா ஹா.
-Ana

vinu said...

no no no; i can't accept meeraa and steve; please please pleaseeeeeeeeeeeeeeeee enga machaan satheesay fealil vittudaaatheeengoooooooooooooooooow

priya.r said...

Ringraziamenti per il bhuvana dell'alberino..

gradisco il vostro senso del bhuvana di

narration........

tutto il la cosa migliore !

priya.r said...

புவனா ! கடந்த ஆறு பதிவுகளையும் முன் கதை சுருக்கமாக இவ்வளவு தான் போட முடியும்

மீரா ,சதீஷ் ,ஸ்டீவ் ,மது நால்வரும் டொரோண்டோ வில் உள்ள கல்லூரியில் பட்ட படிப்பு படிக்க சேர்ந்து இருக்கிறார்கள்
ஸ்டீவ் மீரா மேல் பார்த்த முதல் பார்வையிலே காதல் வயப்பட்டு விடுகிறான் .,அவ்வளவு தான் !!!!!

இந்த சின்ன விசயத்தை வைத்து ஆறு பதிவாக கதை திரைகதை வசனம் எழுத உன்னால் மட்டுமே முடியும் ......

priya.r said...

ஆனா இந்த பதிவு ஒரு விதி விலக்கு ! கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்னு தோணுது

உன்னை பாராட்டினா சங்கத்துக்கு வேற பதில் சொல்லோனும் !

priya.r said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
Hey Vadai is for me //

நோக்கு விஷயம் தெரியாதா ! இப்போ எல்லாம் முதலில் வரும் அம்மணிக்கு வடை கிடையாதாம் ;தங்கமணி braand இட்லியாம்//அனாமிகா துவாரகன் சொன்னது…

Its 4.30 am here. I just got up. காலையிலேயே உங்க பதிவில தான் கண் முழிக்கனுமா? ஆண்டவா? இருங்க படிச்சுட்டு வரேன். வரமால் கூட போவேன். //


படவா ராஸ்கல் ! உன்னை படிக்க அனுப்பி வைத்தா அலாரம் வைத்து எழுந்து பதிவை படிசுகிட்டு இருக்கிறே !


செமேஸ்டர்ல கம்மியா மார்க் மட்டும் வரட்டும் ! பின்னி புடுவேன் பின்னி!!!!!!!!!!!!

இதெல்லாம் பெரியவங்க படிக்கிற கதை ! சின்ன பிள்ளையா லட்சணமா காமிக்ஸ் மட்டும் நீ படிக்கோணும் ! ரைட்டா :) :)

அப்பாதுரை said...

ஹுஸைனம்மா சோனியா கமென்ட் சிரிப்பு வெடி.

Vasagan said...

இதெல்லாம் பெரியவங்க படிக்கிற கதை ! சின்ன பிள்ளையா லட்சணமா காமிக்ஸ் மட்டும் நீ படிக்கோணும் ! ரைட்டா :) :)

ஹா ஹா ஹா.
நல்லா சொன்னீங்க, சரி நான் படிக்கலாமா எனக்கு எப்பவும் காலேஜ் போற வயசுதான்.

அன்னு said...

அப்பாவி,
தமிழ்ல எழுதினா எல்லாரும் ஓட்டுவாய்ங்கன்னு இத்தாலில பஞ்ச் டயலாகெல்லாமா? நடத்துங்க... நடத்துங்க... முழு கதையுமே இத்தாலில போகாம இருந்தா சரி. ஆமா ஸ்டீவ் வீட்டுல எல்லாரும் சைவமா....அடடா... அப்ப கல்யாணத்துல பிரியாணி கிடைக்காதுன்னு சொல்லுங்க. (அந்த பலகாரங்கள்ல உங்களுக்கு எதுவெல்லாம் சய்ய வரும்னு தனியா மெயில் எழுதுங்க..!!)

:)

சுசி said...

அடுத்த செவ்வாய் வரை நானும் நினைச்சுட்டு இருக்கேன் :)

எல் கே said...

//(அந்த பலகாரங்கள்ல உங்களுக்கு எதுவெல்லாம் சய்ய வரும்னு தனியா மெயில் எழுதுங்க..!!) //

இட்லியே செய்ய மாட்டங்களாம் இதுல இத்தாலி பலகாரமா ? அன்னு ஏன்மா இப்படி ??

priya.r said...

//(அந்த பலகாரங்கள்ல உங்களுக்கு எதுவெல்லாம் சய்ய வரும்னு தனியா மெயில் எழுதுங்க..!!)

நான் என்ன வைச்சுகிட்டு வஞ்சனையா பண்ணறேன் என்று தான் அப்பாவியிடம் இருந்து மெயில் வரும் .,ஐயோ .. ஐயோ....!

priya.r said...

//இதெல்லாம் பெரியவங்க படிக்கிற கதை ! சின்ன பிள்ளையா லட்சணமா காமிக்ஸ் மட்டும் நீ படிக்கோணும் ! ரைட்டா :) :)//

ஹா ஹா ஹா.
//நல்லா சொன்னீங்க, சரி நான் படிக்கலாமா எனக்கு எப்பவும் காலேஜ் போற வயசுதான். //

படிங்க படிங்க .,விதி வலியதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க !

ஆனா ஒன்னு ! உங்களுக்கு அப்பாவியின் பதிவுகளை படித்து ஏதாவது ஆகிட்டா அப்பாவியோ அப்பாவின் தங்கமணியின் ப்லோக்கோ
பொறுப்பு எடுத்து கொள்ளாது என்பதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.,(ஏன் அப்பாவி .,இந்த வரிகளை நீ ஏன் தலைப்பு பகுதியில் போட கூடாது!)

Balaji saravana said...

செம ரைட்டிங்! ரொம்ப ரசிச்சேன் சகோ! :) நிறைய உழைச்சிருக்கீங்க !

priya.r said...

அப்பாவி .,எதுக்காக வெயிட் பண்ணறே! பதில் கொடுக்க ஆரம்பிக்கலாமே !
முக்கியமான அம்மணி யாராவது வரணுமா என்ன !

priya.r said...

என்ன கொடியோட கமெண்ட்ஸ் இன்னும் வரலையா
எதுக்கும் அருவிக்கு இந்த பக்கமா நின்னு அந்த பக்கமா அழைத்து பாரேன் .,
கவனிச்சியா ! அந்த சந்தியா மாமி மருமக காயத்ரியும் கொஞ்ச நாளா கமெண்ட்ஸ் போட காணோம்.....
ஒரு நடை போய் பார்த்துட்டு வரலாமா !!
ஹய் எனக்கு 50 (சவரன் ) கிடைச்சுருச்சு

எல் கே said...

/ஏன் அப்பாவி .,இந்த வரிகளை நீ ஏன் தலைப்பு பகுதியில் போட கூடாது!)
//

repeeeeeetttttii

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - எஸ் எஸ், வடை உனக்கே... படிச்சுட்டு வராமல் கூட போவேன்னு சொல்லிட்டு அப்புறம் வந்து இப்படி ஆனந்த கண்ணீர் வரவெச்சுட்டியே அனாமிகா... ஆனா ஹானஸ்ட்ஆ சொன்னதுக்கு தேங்க்ஸ் அம்மணி...

//சத்தியாமா இந்த பின்னூட்டத்தை நான் தேன் எழுதினேன்//
இன்னும் நம்ப முடியாம தான் பாத்துட்டு இருக்கேன்... ஹா ஹா.. தேங்க்ஸ்..:)

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - இத்தாலிய நண்பர்கள் யாரும் இல்லிங்க ஆனந்த். ஒரு கலீக் இருக்காங்க... ரெம்ப பரிச்சயம் இல்ல... பட் கொஞ்சம் படிச்சுருக்கேன் இட்டாலியன் culture பத்தி சும்மா ஒரு ஆர்வத்துல... :)

@ பெயரில்லா - Really thank you for noticing that typo error... good god, single alphabet totally changed the meaning...ha ha... corrected it as soon as you commented.... thanks again... :)

@ Krishnaveni - ஐயோ இல்லங்க வேணி... இட்டாலியன் language எல்லாம் தெரியாது... asusual கூகிள் தான்... But I know a few words though... learnt just out of ஆர்வ கோளாறு... ஹா ஹா...:)... எல்லாம் தெரியும்னு இல்லப்பா... கற்றது கைமண் அளவே.... not being modest at all... Thanks a lot Veni... :)

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க அக்கோவ்....:)

@ எஸ்.கே - நன்றிங்க

@ Chitra - எஸ் எஸ்... கொடுமைக்கு freezing .... அதுவும் இன்னைக்கு செம கொடுமைய இருக்கு போங்க... Are u in Toronto too?.... thanks Chitra...

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி- நன்றிங்க

@ vgr - ha ha ha... I totally understand your stand...no problem...:)))))

@ அப்பாதுரை - நன்றிங்க... பத்தவெக்கனுமா? ஒகே... ஒரு load டீசல் ஆர்டர் பண்ணிடுவோம்... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்... will push the accelerator in coming episodes...:))

//ஆமா... அவங்க வூட்ல பேசினத மட்டும் இங்கில்ஸ்ல எய்திகிறங்களே? //
ஏன்னா? அவங்களுக்கு இங்கிலீஷ் தானே தெரியும்... மீரா, மது, சதீஷ் கூட தான் ஸ்டீவ் தமிழ்ல பேசுறான்... ஆஹா... நானே ஒரு நிமிஷம் confuse ஆய்ட்டேன் எதாச்சும் தப்பாய்டுசோனு ... ஹா ஹா... :)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - டீச்சர்க்கே attendance ஆ? ஹா ஹா... தேங்க்ஸ்ங்க... :)))

@ எல் கே - நன்றி சாரே... (இன்னைக்கி snow கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது... ஹா ஹா...:))))

//கழகத்துக்கு துரோகம் பண்ற இதெல்லாம் சரி இல்ல, ஒரு கமென்ட் பாராட்டி போட்ட ரெண்டு கமென்ட் வாரணும்//
ஒரு நிமிஷம் சந்தோசப்பட விட மாட்டியே... ப்ரூட்டஸ்.... grrrrrrrrrrrrrr............

@ வெறும்பய - நிஜமாதான் கேக்கறீங்களா? ஜஸ்ட் கிட்டிங்... நன்றிங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - //எப்பங்க அடுத்த பாகம் வரும்..../ adutha tuesday //
நன்னிஹை... :)))

@ சௌந்தர் - //இந்த கதையோட தமிழ் டப்பிங்க எப்போ வரும்//
அது என்ன மேட்டர்னா சௌந்தர்... ஒரு தமிழ் டீச்சர் தேடிட்டு இருக்காங்களாம்... நான் உங்க பேரை தான் சொல்லி இருக்கேன்... சீக்கரம் தகவல் வரும்... நீங்க போய் அவங்களுக்கு தமிழ் கத்து குடுத்தப்புறம் அவங்க தமிழ்ல பேசுவாங்க... ரைட்ஓ? எப்பூடி????? ...... :)))))

@ Jaleela Kamal - சரிங்க கேட்டு சொல்றேன் மீராகிட்ட...ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்ங்க ஜலீலா..:)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - இட்டாலியன்ஸ் கூட அப்படியே தாங்க... உங்களுக்கு தெரிஞ்சு irukkume... you're here for a very long time...

//கார்த்திக். சுனாமி அ.ஆ.சங்கத்துல சேர்ந்தாச்சு//
சொல்லவே இல்ல... :)))

//Steve program க்கு வேட்டு வச்ச உறவினர் வேற யாரும் இல்லை நம்ம அப்பாவி தான் அந்த உறவினர்//
ச்சே ச்சே... அந்த பாவாத நான் செய்யலப்பா... நீங்க தானோன்னு எனக்கு டவுட் இருக்கு... :)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) -
//இது உங்களுக்கே நல்லா இருக்கா????????//
நல்லா இருக்குனு தான் ஒருத்தர் ரெண்டு பேரு சொர்லாங்க ஆனந்தி... ஹா ஹா...

//என்னமா கதைய கொண்டு.. போயி.. கடைசியில... இப்படி கட் பண்ணிட்டீங்களே//
அலாட் பண்ணின ஸ்லாட்க்கு மேல எழுதினா வம்பாய்டுமே ஆனந்தி... :)

//போங்கப்பா... உங்க கூட டூ... :( //
ஐயையோ... நோ நோ... இதோ திரும்பி பாக்கறதுக்குள்ள செவ்வாய் வந்துடும் அடுத்த பார்ட்ம் வந்துடும்...அழக்கூடாது.... உங்களுக்காக ஸ்டீவ்கிட்ட சொல்லி அவங்க ஊரு குச்சி மிட்டாய் வாங்கி அனுப்பறேன்... ஒகே... :))))

//....சின்ன சின்ன விஷயம் கூட.. விடாம அழகா சொல்லி இருக்கீங்க//
ரெம்ப நன்றிங்க ஆனந்தி... :)))

அப்பாவி தங்கமணி said...

@ siva - அடப்பாவிங்களா... அவ்ளோ கேவலமாவா இருக்கு?

//கதை எங்கே //
பீட்சா சாப்பிட போய் இருக்கு...வரும்...:)

//ஒரு இத்தாலிக்கு நம்ம இந்திய பொண்ண கொடுப்பதை வன்மையாக எங்கள் சங்கம் கண்டிக்கிறது//
யாதும் ஊரே யாவரும் கேளிர்னு ஸ்டீவ் சொல்றானே... :)

//ஒரு இத்தாலி சமாளிக்க முடியல..(நோ பொலிடிக்ஸ்..பொதுவா சொன்னேன்)//
ஹா ஹா ஹா...:)

//நல்ல இருக்குங்க அடுத்த போஸ்ட் கொஞ்சம் fast....ப்ளீஸ்//
சரிங்க... நன்றிங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஆஹா... அரசியலா? ஹா ஹா.. நன்றிங்க... ச்சே ச்சே... கன்னித்தீவு அளவுக்கு போகாது...அதை விட ஒரு ரெண்டு வாரம் முன்னாடியே முடிச்சுடறேன்...ஹா ஹா... :)))

@ Arun Prasath - //சரி மீரா சதீஷ் உறவு என்ன... தெளிவா தெரிலயே// - Thats the million dollar kostin Arun... சீக்கரம் சொல்றேன்... நன்றிங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா -
//ஸ்டீவ் அப்பா பாதிரியார் ஆச்சே, அப்ப சோனியா குடும்பத்தைத் தெரியுமாமா?//
இல்லை... உங்களை தான் ரெம்ப தெரியும்னார்... ரெம்ப விசாரிச்சாங்க.... :))))

//அபுநிஹான், நீங்க, அப்பாவி பிளாக்ல படிக்கிற மொத கதையா இது? அதான் அப்பாவியா இப்புடி கேட்டிருக்கீஹ//
ஏதோ ஒருத்தர் ரெண்டு பேரு பழைய சரித்தரம் தெரியாம வந்து போறது புடிக்கலையா உங்களுக்கு... ஏன் இந்த கொல வெறி? ஹா ஹா ஹா....

//எனக்கு இந்தக் கதையைப் படிச்சதும், இப்ப ஆர்யா நடிச்சு ஒரு படம் வந்துதே.. “வாம்மா துரையம்மா..” பாட்டு வருமே.. அது ஞாபகம் வருது//
சென்னைபட்டணம் நானே... செம மூவி அது... எனக்கு ரெம்ப பிடிச்சது...

//இந்த இத்தாலி பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சுக்கிறதுக்காக உங்க இட்டாலியன் கொலீகை என்ன பாடு படுத்திருப்பிங்கன்னு நெனச்சா... பாவம் அந்த இட்டாலியன் கொலீக்//
அந்த இட்டாலியன் கலீக் அவ்ளோ பழக்கம் இல்ல... சும்மாவே ஹாய் ஹலோ ரகம் தான்... இதுல நான் கதை காரணம்னு எதுனா கேட்டு அது நம்மள பாத்தாலே தெரிச்சு ஓடற மாதிரி ஆய்டும்னு பயந்துட்டு விட்டுட்டேன்... எப்பவும் போல் கூகிள் தான் துணை அக்கா.. :)))))

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

@ பத்மநாபன் - இத்தாலிக்காரர்கள் நம்மள விடவும் பாசக்கார பயபுள்ளைக அண்ணா... நன்றிங்க... :)

@ சி.பி.செந்தில்குமார் - ஆமாங்க... ஆனா லேட்டஸ்ட்ஆ வந்ததுக்கு நன்னிஹை... :)

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - இருங்க அவங்ககிட்டயே கேட்டு சொல்றேன்... நன்றிங்க... :)

@ RVS - ஹா ஹா ஹா... ஒகே ஒகே... :)

@ அனாமிகா -
லவ் யு விட மிஸ் யு பெருசா... நீயே சொல்லேன்... ஜஸ்ட் கிட்டிங்... :)

//நல்லதை நல்லதுன்னு தான் சொல்லுவோம்//
ச்சே ச்சே ச்சே... சூப்பர்...:)))))

@ vinu - என் கைல ஒண்ணும் இல்லிங்க... அது மீரா கைல தான் இருக்கு... :))))))))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ஹா ஹா ஹா... சூப்பர் அக்கா... கலக்கற ப்ரியா... thank you, thank you, thank you

//மீரா ,சதீஷ் ,ஸ்டீவ் ,மது நால்வரும் டொரோண்டோ வில் உள்ள கல்லூரியில் பட்ட படிப்பு படிக்க சேர்ந்து இருக்கிறார்கள். ஸ்டீவ் மீரா மேல் பார்த்த முதல் பார்வையிலே காதல் வயப்பட்டு விடுகிறான் .,அவ்வளவு தான் !!!!!//
அடப்பாவி... ஆறு எபிசொட்ஐ ஆறு லைன் கூட இல்லாம இப்படி பண்ணிட்டியே ப்ரியா... broooooooooootas .....

//இந்த சின்ன விசயத்தை வைத்து ஆறு பதிவாக கதை திரைகதை வசனம் எழுத உன்னால் மட்டுமே முடியும்//
இது வேறயா? இதுக்கு முன்னாடி சொன்னதே மேல்...

//ஆனா இந்த பதிவு ஒரு விதி விலக்கு ! கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்னு தோணுது//
தோணும் தோணும்...

//உன்னை பாராட்டினா சங்கத்துக்கு வேற பதில் சொல்லோனும்//
ஒரு முடிவோட தான் இருக்கீக...ஹ்ம்ம்...

//நோக்கு விஷயம் தெரியாதா ! இப்போ எல்லாம் முதலில் வரும் அம்மணிக்கு வடை கிடையாதாம் ;தங்கமணி braand இட்லியாம்//
அடுத்த வாரம் ஒரு போஸ்ட் போடறேன்... அப்பறம் சொல்றேன் இதுக்கெல்லாம் பதில்... :))))

//படவா ராஸ்கல் ! உன்னை படிக்க அனுப்பி வைத்தா அலாரம் வைத்து எழுந்து பதிவை படிசுகிட்டு இருக்கிறே !//
ஹலோ ப்ரியா மேடம், என்னோட பதிவை படிச்சு அந்த பொண்ணு எவ்ளோ பொது அறிவு மேட்டர் எல்லாம் தெரிஞ்சுக்குது தெரியுமா...? எந்த புக்ல இருக்கு இந்த மாதிரி நல்ல நல்ல விஷயம் எல்லாம்... (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - நீங்களுமா?....:)))

@ Vasagan -
//சரி நான் படிக்கலாமா எனக்கு எப்பவும் காலேஜ் போற வயசுதான்//
ஆமா ஆமா இந்த ஊர்ல retirement கிடையாது... professor எண்பது வயசுலயும் காலேஜ் தான் போறார்... :)))))

@ அன்னு - ஹலோ... ரகசியம் ரகசியமாத்தான் இருக்கணும்... இப்படியே பப்ளிக்கா சொல்றது... :))

//அந்த பலகாரங்கள்ல உங்களுக்கு எதுவெல்லாம் சய்ய வரும்னு தனியா மெயில் எழுதுங்க//
ஏன்...இல்ல ஏன்-கறேன்?????? நீங்க எங்க வீட்டுக்கு வாங்க...அப்ப செஞ்சே குடுக்கறேன்... இப்ப சொல்ல மாட்டேன்... ஹா ஹா...:))))

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - அவ்ளோ நாள் நெனச்சா ஜலதோஷம் வந்துடும்... காய போட்டுடுங்க சுசி... :)))

@ எல் கே - //இட்லியே செய்ய மாட்டங்களாம் இதுல இத்தாலி பலகாரமா ? அன்னு ஏன்மா இப்படி//
ஹலோ இத்தாலி இட்லி கூட செய்வேன்...உனக்கு தெரியுமா... :)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - //நான் என்ன வைச்சுகிட்டு வஞ்சனையா பண்ணறேன் என்று தான் அப்பாவியிடம் இருந்து மெயில் வரும் .,ஐயோ .. ஐயோ//
நல்லாதான் சேந்து இருக்கீங்க செட்டு..... ப்ரூட்டஸ்களா....grrrrrrrrrrrrrrrrrrrrrrr...........

//ஏன் அப்பாவி .,இந்த வரிகளை நீ ஏன் தலைப்பு பகுதியில் போட கூடாது!//
போடாட்டி என்ன...அதை ஒரு ஒரு பதிவுலயும் சொல்றதுக்கு தான் உங்க கட்சி தொண்டர் படை இருக்கே... (எப்படி ப்ரியா இப்படி எல்லாம்.... ஹா ஹா ஹா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Balaji saravana - ரெம்ப நன்றிங்க பாலாஜி... :)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//முக்கியமான அம்மணி யாராவது வரணுமா என்ன//
ஆமாம் ப்ரியா... MP / MLA / வட்டம் / மாவட்டம் எல்லாம் வரணும்... ஹா ஹா... :) இதோ போட்டுட்டேன் பதில்...:)

//என்ன கொடியோட கமெண்ட்ஸ் இன்னும் வரலையா//
நானும் வழி மேல விழி வெச்சு பாக்கறேன்...ஆளே காணோம்... ஆணி அதிகம் போல இருக்கு...

//கவனிச்சியா ! அந்த சந்தியா மாமி மருமக காயத்ரியும் கொஞ்ச நாளா கமெண்ட்ஸ் போட காணோம்//
கவனிச்சேன் கவனிச்சேன்... எனக்கு உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... :)))

//ஒரு நடை போய் பார்த்துட்டு வரலாமா//
ஓ... ஒரு நடை போறதுக்கு ஒரு வருஷம் ஆய்டும் எனக்கு... :)

//ஹய் எனக்கு 50 (சவரன் ) கிடைச்சுருச்சு//
எனக்கு?????

@ எல் கே - grrrrrrrrrrrrrrrrrr..............

Charles said...

கதையில் சற்று தோய்வு ஏற்பட்டது போல உள்ளது. இருந்தாலும் உங்களுடைய உழைப்பு பாரட்டத்தக்கது. நிறைய வீட்டுபாடம் செய்துளீர்கள் போல? வாழ்த்துக்கள்.

அனாமிகா துவாரகன் said...

//படவா ராஸ்கல் ! உன்னை படிக்க அனுப்பி வைத்தா அலாரம் வைத்து எழுந்து பதிவை படிசுகிட்டு இருக்கிறே !//
அட பாவி அக்கா, கிட்டத்தட்ட 2 வாரத்துக்கு மேல் க்ளாஸ் கட்பண்ணிட்டேன்னு காலையில எழுந்து படிக்க உக்காந்தா இப்டியா திட்டுவே? ஆக்சுவலி யூ சி, காலையில் காபி குடிக்கறப்போ நியூஸ் படிக்க உக்காந்தேனா, எப்டியோ கை தவறி இவங்க புளொக் பக்கம் போயிட்டேன். சரி நம்மக்கு தான் சனி தலையில் ஏறி ஒக்காந்து டிஸ்கோ ஆடுதே. என்ன பண்ணறது. படிச்சுட்டு போயிட்டேன்.

//செமேஸ்டர்ல கம்மியா மார்க் மட்டும் வரட்டும் ! பின்னி புடுவேன் பின்னி!!!!!!!!!!!!//
நான் கம்மியா எழுதினாலும் ப்ரொபசர் எல்லாம் நிறைய மார்க் போட்டு கொடுக்கறாங்க. பெயிலானா அப்புறம் இன்னொரு வருஷம் இவள சமாளிக்கனுமேன்னு பயத்திலேயே மார்க்க அள்ளி அள்ளி கொடுக்கறாங்க. ஹா ஹா.

//இதெல்லாம் பெரியவங்க படிக்கிற கதை ! சின்ன பிள்ளையா லட்சணமா காமிக்ஸ் மட்டும் நீ படிக்கோணும் ! ரைட்டா :) :)//
இவங்க கதையாவது பரவாயில்லை, காமிக்ல அரை குறையா பொண்ணுங்க ட்ரெஸ் போட்டு லிப் கிஸ் எல்லாம் அடிக்கறாங்க. அத படிக்கலாமா? ஹா ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

எக்சுஸ்மி! பொது அறிவு மேட்டர் ? அது என்னக்கா? இட்லி செய்யறது எப்படீன்னா? இல்ல காதல் காதல்னு மொக்கை போடறது எப்படின்னா?

ஓ உங்களுக்கு ஒன்னு தெரியுமோ, அபி கூட இரண்டு இட்டாலியன் பிசாசுங்க படிக்கறாங்க. அதுங்க சொன்ன டிப் என்ன தெரியுமா? இத்தாலி பையன இம்பிரஸ் பண்ணனும்ன்னா அவங்க அம்மாவ கைக்குள்ள போடற வித்தை தெரிஞ்சிருக்கனுமாம். சோ, மீரா அவங்க அம்மாவ இம்பிரஸ் பண்ணறதை ஒரு நாலு எபிசோட்டுக்கு எடுத்து விடுங்கோ. சரியா.

அனாமிகா துவாரகன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கறப்போ ஐ மிஸ்ட்டு யூ சோ மச்ன்னு தான் கட்டிப்பாங்க. ஐ லவ் யூன்னு கட்டிக்கறதில்லை. கதையில் ஐ மிஸ்ட்டு யூ சோ மச் போட்டு படிச்சா ரொம்ப நல்லா இருந்துது.

இராஜராஜேஸ்வரி said...

நல்லதொரு குடும்பமாக இத்தாலியக் குடும்பம் கண்முன் நிற்கிறது. பாராட்டுக்கள்.

அப்பாவி தங்கமணி said...

@ Charles - ரெம்ப நன்றிங்க சார்லஸ்..:)

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//என்ன பண்ணறது. படிச்சுட்டு போயிட்டேன்//
பேசு பேசு...நீ படிக்கற க்ரூப் அப்படி... எனக்கு எதிரா பேசறதுகுன்னே ஆண்டவன் அனுப்பின க்ரூப்....grrrrrrrrrrrrr...

//பெயிலானா அப்புறம் இன்னொரு வருஷம் இவள சமாளிக்கனுமேன்னு பயத்திலேயே மார்க்க அள்ளி அள்ளி கொடுக்கறாங்க//
அப்ப அப்ப உண்மை கூட பேசற அனாமிகா... ஹா ஹா ஹா

//எக்சுஸ்மி! பொது அறிவு மேட்டர் ? அது என்னக்கா? இட்லி செய்யறது எப்படீன்னா? இல்ல காதல் காதல்னு மொக்கை போடறது எப்படின்னா?//
இல்லையா பின்ன?....:)))

//சோ, மீரா அவங்க அம்மாவ இம்பிரஸ் பண்ணறதை ஒரு நாலு எபிசோட்டுக்கு எடுத்து விடுங்கோ. சரியா//
பேசாம இருக்கறவளுக்கு ஐடியா குடுக்க வேண்டியது...அப்புறம் வம்பு பண்ண வேண்டியது...யு..........................grrrrrrrrrrr....

//கதையில் ஐ மிஸ்ட்டு யூ சோ மச் போட்டு படிச்சா ரொம்ப நல்லா இருந்துது//
பாயிண்ட் நோடேட் அம்மணி.... :))))

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - ரெம்ப நன்றிங்க ராஜேஸ்வரி... :)

asiya omar said...

கதை ரொம்ப அருமையாக இருக்கு,தொடர்ந்து வருவேன்.எழுத்து அட்டகாசமாய் இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

@ asiya omar - Thanks Asiya...:)

Post a Comment